வர்த்தகப் போர் பதற்றம்: அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்தையைத் தொடங்கின.
வர்த்தகப் போர் பதற்றம்: அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்தையைத் தொடங்கின.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சீன இறக்குமதிப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதால் அதிகரித்து வரும் பதற்றைத் தணிப்பதற்கா இரு நாடுகளும் பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
 எனினும், அண்மைக் காலமாக அந்தப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மைக்கேல் பாம்பேயோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆகியோர், சீனாவின் முக்கிய உயரதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 ஆர்ஜென்டீனாவில் இந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கின்றனர்.
 அப்போது, மாநாட்டின் இடையே இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.
 அதற்கு முன்னோட்டமாக, சீன அதிகாரிகளுடன் மைக்கேல் பாம்பேயேயும், ஜிம் மேட்டிஸும் ஆலோசனை நடத்தியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
 அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வருகிறார்.
 இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வருகிறது.
 இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com