சிங்கப்பூர் தீபாவளி பட்டாசு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

தீபாவளியன்று தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
சிங்கப்பூர் தீபாவளி பட்டாசு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

தீபாவளியன்று தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிபிரசாந்த் (18), எல்விஸ் ஜேவியர் ஃபெர்னாண்டஸ் (25), ஜீவன் அர்ஜுன் (28), அழகப்பன் சிங்காரம் (54) ஆகிய 4 பேர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 ஏற்கெனவே, இதே குற்றச்சாட்டின் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் மீது கடந்த புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 பண்டிகைகளின்போது சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிப்பதற்கு சிங்கப்பூரில் கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com