கலிஃபோர்னியா காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
கலிஃபோர்னியா காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
 கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அதேநேரம், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளையும் துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
 காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் வீரர்கள் மேற்கொண்டு வரும் தேடுதல் வேட்டையில் தற்போது மேலும் 14 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
 10 பேரின் உடல்கள் பாரடைஸ் நகரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு பேரது உடல்கள் கன்கவ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
 காட்டுத் தீயில் சிக்கி 6,700 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் பெரும்பாலானவை குடியிருப்புகளாகும்.
 காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் வேகமாக காற்று வீசுவதால் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரையில், ஒரு லட்சம் ஏக்கரில் அமைந்துள்ள வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு பணிகளில், 3,200 வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையிலும், தற்போதுள்ள காட்டுத் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர இன்னும் மூன்று வாரங்கள் பிடிக்கும் என்றார் அவர்.
 இதனிடையே காட்டுத் தீவிபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) செய்தியில், கொடிய காட்டுத் தீ ஏற்பட்டு பலத்த பொருள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதற்கு காடுகள் பராமரிப்பு பணிகள் மிக மோசமாக இருந்தததைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com