இந்திய எரிசக்தித் துறையில் மாற்றம் செய்யப்படுகிறது: தர்மேந்திர பிரதான்

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலியத்துறையின் பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய எரிசக்தித் துறையில் மாற்றம் செய்யப்படுகிறது: தர்மேந்திர பிரதான்

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலியத்துறையின் பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஹெச்பிசிஎல், ஐஓசிஎல், பிபிசில், ஓஎன்ஜிசி, ஓஐல், ஈஐல் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் கலந்துகொண்டன. 

இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 4 வருடங்களாக இந்தியாவில் எரிசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் உள்ள எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

எரிவாயு தொடர்பாக சீரான பொருளாதார நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவின் எரிசக்தி தேவையில் சிறிய பகுதியை மட்டுமே இயற்கை எரிவாயு பூர்த்தி செய்து வருகிறது. நாடு முழுவதுமுள்ள எரிவாயு கட்டமைப்பு தொடர்பாக 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

முன்னதாக, கர்நாடக மாநிலம் படூரில் எரிசக்தி கிடங்கு அமைப்பது தொடர்பாக இந்தியா, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com