தீவிரவாத அமைப்பு நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் கலந்து கொண்டதால் சர்ச்சை 

தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 
தீவிரவாத அமைப்பு நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் கலந்து கொண்டதால் சர்ச்சை 

இஸ்லாமாபாத்: தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்படுபவர் தீவிரவாதி ஹபீஸ் சையத். இவர் 'ஜமாஅத் உத் தவா' என்னும் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இதன் வழியாக இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இந்த அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

ஞாயிறன்று இஸ்லாமாபாத்தில் தீவிரவாதி ஹபீஸ் சையத்.   தலைமையில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது.  இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பாகிஸ்தான்  பாதுகாப்பு, காஷ்மீர், இந்தியாவின் மிரட்டல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

ஒருபுறம் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், மறுபுறம் இத்தகைய அமைப்பு ஒன்றின் கூட்டத்திற்கு தனது அமைச்சர் பங்கேற்று இருப்பதை அனுமதித்து உள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com