வங்கதேச பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட 19 பேருக்கு தூக்கு 

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில்,  முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்  மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  
வங்கதேச பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட 19 பேருக்கு தூக்கு 

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில்,  முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்  மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

கடந்த 2004-ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இவர் தலைநகர் டாக்காவில் உள்ள வங்கபந்து மைதானத்தில் பேரணி ஒன்றை நடத்தினார். இந்தப் பேரணியில் எதிர்பாராதவிதமாக தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 24 பேர் மரணமடைந்தனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பின் விளைவாக ஷேக் ஹசீனாவுக்கு கேட்கும் திறனில் சிறிது குறைபாடு ஏற்பட்டது. 

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுத்போஸமான் மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்டோர் மீதுகுற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வந்தது. 

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்  மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

புதனன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முன்னாள் அமைச்சர்கள் லுத்போஸமான் மற்றும் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அவரது முன்னாள் அரசியல் செயலர் ஹாரிஸ் சவுத்ரி உள்ளிட்ட  19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 11 பேருக்கும் இந்த வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக், இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாரிக் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சவுத்ரி ஆகியோருக்கு தண்டனையை உயர்த்தி மரண தண்டனை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com