ராக்கெட்டில் பழுது ஏற்பட்ட சம்பவம்: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைத்தது ரஷியா

இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து
ராக்கெட்டில் பழுது ஏற்பட்ட சம்பவம்: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைத்தது ரஷியா

இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷியா நிறுத்திவைத்துள்ளது.
 இதுகுறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறிதாவது:
 கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுகணை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான தற்போதைய ரஷியாவின் அனைத்து திட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 அந்த சம்பவம் தொடர்பான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, வேறு வீரர்கள் குழு பின்னர் அனுப்படலாம். வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி 3 வீரர்களை விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும், பொருள்களை மட்டும் ஏற்றிச் செல்லும் ஆளில்லா விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த மாதம் 31-ஆம் தேதி அனுப்பப்படும் என்றார் அவர்.
 ரஷிய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினையும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேகையும் ஏற்றிக் கொண்டு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக் கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ராக்கெட்டின் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த ராக்கெட்டிலிருந்த விண்வெளி ஓடம் தனியாகப் பிரிந்து மீண்டும் பூமிக்கு திரும்பியது.
 இதையடுத்து, அவசரமாக தரையிறங்கிய அந்த விண்வெளி ஓடத்திலிருந்து இரு விண்வெளி வீரர்களையும் மீட்புக் குழுவினர் காயமின்றி பத்திரமாக மீட்டனர்.
 ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது.
 இந்தச் சூழலில், விண்வெளி வீரர்களுடன் அந்த மையம் அனுப்பிய ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு அது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com