அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் டிரம்ப் - கிம் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான இரண்டாவது சந்திப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் டிரம்ப் - கிம் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான இரண்டாவது சந்திப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அணு ஆயுதங்களைக் கைவிடும் வடகொரியாவின் நடவடிக்கைகளை உறுதி செய்ய அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் இடையே 2-ஆவது சந்திப்பை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 பெரும்பாலும் அந்தச் சந்திப்பு, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கக் கூடும் என்றார் அவர்.
 தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
 இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
 அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே இரண்டு முறை சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com