சிங்கப்பூர் துணை பிரதமருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சிங்கப்பூர் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு துணை பிரதமர் டியோ சீ ஹீயனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும்
சிங்கப்பூர் துணை பிரதமருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சிங்கப்பூர் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு துணை பிரதமர் டியோ சீ ஹீயனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அப்போது அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
 இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுட்டுரையில் (டுவிட்டர்) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. துணைப் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்.ஜி. எங்ஹென்னையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து உரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்த நிகழ்வு இரு தரப்பு உறவையும் அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நிலையிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்மலா சீதாராமன் சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிûஸ நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக மலேசிய அமைச்சர் முகமது பின் சாபு, ஆஸ்திரேலிய அமைச்சர் கிரிஸ்டோபர் பைன், பிலிப்பின்ஸ் அமைச்சர் டெல்ஃபின் லோரன்ஸானா, வியத்நாம் அமைச்சர் கோ சுவான் லிச் உள்ளிட்டோரையும் அன்றைய தினம் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
 இந்நிலையில், மாநாட்டில் பயங்கரவாதம் தொடர்பாக சனிக்கிழமை அவர் உரையாற்றினார். அதன் பின்னர் ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அனைவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அது மிகவும் கண்டனத்துக்குரியது. எத்தகைய காரணத்தைக் கூறி நியாயம் கற்பித்தாலும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. அதனை முற்றிலுமாக வேரறுப்பது அவசியம்.
 பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பதாக உறுதியளித்த சர்வதேச நாடுகள் அனைத்தும் அதனைச் செயல்படுத்த முன்வர வேண்டும். உலகளாவிய ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆசியான் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்புகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com