துளிகள்...

அமெரிக்க அரசின் மருத்துவ சேவை மையத்தின் தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் மூலம் ஊடுருவிய மர்ம நபர்கள், அதிலிருந்த 75,000 பேரது
துளிகள்...

அமெரிக்கா
 அமெரிக்க அரசின் மருத்துவ சேவை மையத்தின் தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் மூலம் ஊடுருவிய மர்ம நபர்கள், அதிலிருந்த 75,000 பேரது மிகவும் முக்கியமான ரகசிய தகவல்களைத் திருடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சிரியா: அமெரிக்க கூட்டுப் படை
 சிரியாவின் ஹாஜின் நகரில் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 ஐ.எஸ். பயங்கரவாதிகளும், அமெரிக்க ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
 ஜப்பான்
 புதன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து உருவாக்கிய "பெபிகொலம்போ' விண்கலம், சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 7 ஆண்டுகள் பயணித்து புதன் கிரகத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
 சீனா
 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஜி600 ரக மிதக்கும் விமானத்தின் சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக சனிக்கிழமை நிறைவு செய்தது. இந்த விமானம்தான் வானிலும், நீரிலும் செலுத்தக்கூடிய உலகின் மிகப் பெரிய விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com