ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள்!

அமெரிக்கா வழங்கும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை அமைப்பு

அமெரிக்கா வழங்கும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 ஹெச்-1பி விசா மூலமாக சுமார் 4, 19, 000 பேர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். அதில் 3,09, 986 பேர் இந்தியர்கள். அதற்கு அடுத்த படியாக சீன நாட்டை சேர்ந்தவர்கள் 47,172 பேர் பணிபுரிகின்றனர். கனடா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 1 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக பணியாற்றுகின்றனர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவானோர் பணியாற்றுகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 மேலும், அந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வேலை செய்பவர்களில், பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் தெரிய வந்துள்ளது.
 அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலமாக வேலை பார்க்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 லட்சம் பேரில் வெறும் 63 ஆயிரம் பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் மட்டுமே இந்த பாலின வேறுபாடு அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேறுபாடு சீனாவைச் சேர்ந்தவர்களிடம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சீன நாட்டில் இருந்து 45 சதவீத பெண்களும், 55 சதவீத ஆண்களும் அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலமாக பணியாற்றுகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மட்டுமே அதிகமான பெண்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 அண்மையில், ஹெச்-1பி விசா முறையில் மாற்றத்தை கொண்டு வரப் போவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com