இந்திய கப்பற்படைக்கு ராக்கெட்டுகள் வாங்க இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம்  

இந்திய கப்பல்படைக்கு ராக்கெட்டுகள் வாங்குவதற்காக இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 
இந்திய கப்பற்படைக்கு ராக்கெட்டுகள் வாங்க இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம்  

டெல் அவிவ்: இந்திய கப்பல்படைக்கு ராக்கெட்டுகள் வாங்குவதற்காக இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் நாட்டின் ராணுவ தளவாட நிறுவனங்களுடன் இந்தியா நெருங்கிய தொடர்பினை மேற்கொண்டுவருகிறது. ராணுவ தளவாடங்கள் தொடர்பான பல்வேறு பெரிய அளவிலான ஒப்பந்தங்களையும் அந்நிறுவனங்களுடன் இந்தியா செயல்படுத்தியுள்ளது. 

இஸ்ரேலின் மிக பெரிய விண்வெளி மற்றும் ராணுவ நிறுவனம் ஆக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் (ஐபி ஏ.ஐ.) என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது இந்திய கப்பற்படையில் உள்ள 7 கப்பல்களுக்கான ராக்கெட்டுகளை வழங்க உள்ளது.  இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் தரையில் இருந்து விண்ணில் சென்று நீண்ட தொலைவை தாக்கும் பாரக் 8 ரக வகையை சேர்ந்தவை.

இதற்காக ரூ.5,684.53 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இன்று இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தானது. 

இந்த திட்டத்திற்கான முக்கிய கூட்டுத் தயாரிப்பு நிறுவனம் ஆக இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com