தப்பி ஓடிய கைதிகள்; துரத்திப் பிடித்த நீதிபதி: நீதிமன்ற அறையில் ருசிகரம் (விடியோ இணைப்பு) 

அமெரிக்காவில் நீதிமன்ற அறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை, நீதிபதியே துரத்திப் பிடித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
தப்பி ஓடிய கைதிகள்; துரத்திப் பிடித்த நீதிபதி: நீதிமன்ற அறையில் ருசிகரம் (விடியோ இணைப்பு) 

வாஷிங்டன்: அமெரிக்காவில் நீதிமன்ற அறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை, நீதிபதியே துரத்திப் பிடித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திற்கு உட்பட்ட செஹாலிஸ் நகர நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய டேனர் ஜேக்கப்சன் மற்றும்  கோடே ஹோவர்ட்  என்ற இரு விசாரணை கைதிகள்  ஆஜர்படுத்தப்பட்டனர். 

விசாரணையின் நடுவே திடீரென நீதிமன்ற அறையில் இருந்து கைதிகள் இருவரும் தப்பியோடினர். இதனால் நீதிமன்ற அறையில் பதற்றம் ஏற்பட்டது. அனைவரும் ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்தனர். 

துளியும் தாமதிக்காத நீதிபதி பசார்ட்  தனது நீதிபதி அங்கியை கழற்றி விட்டு கைதிகளைத்  துரத்திக் கொண்டு ஓடினார். இரு கைதிகளிலொருவரான ஜேக்கப்சன் வேகமாக ஓடிய நிலையில் மற்றொருவர் ஹோவர்ட் கொஞ்சம் மெதுவாக ஓடினார். 

எனவே அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் நீதிபதி பாசார்ட் வளைத்துப் பிடித்தார். அதே சமயம் சுதாரித்த காவலர்கள் ஜேக்கப்சனை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் மடக்கிப் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தைல் வைரலாகப் பரவி  வருகின்றன  

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com