மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

உலக அடையாளமாக மாறியுள்ள ’மேக் இன் இந்தியா’ திட்டத்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும், டிஜிட்டல்
மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்


டோக்கியா: உலக அடையாளமாக மாறியுள்ள ’மேக் இன் இந்தியா’ திட்டத்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும், டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியாவின் தரம் உயர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியா-ஜப்பான் இடையிலான 13-ஆவது வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து 110 கி.மீ. தொலைவில் மவுண்ட் ஃபியூஜி உள்ளிட்ட மலைச் சிகரங்கள் அமைந்துள்ள யாமனாஷியில் உள்ள விடுதியில் இரவு தங்கினார். இயற்கை எழில் நிறைந்த அந்த விடுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பிரதமர் மோடியை வரவேற்றார். 

அங்குள்ள தோட்டத்தில் உலாவியபடி தலைவர்கள் இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், அந்த விடுதியில் பிரதமர் மோடிக்கு மதிய உணவு அளித்து ஷின்ஸோ அபே உபசரித்தார்.

பின்னர், டோக்கியோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் வாழ் இந்தியர்களிடம் மோடி உரையாற்றினார். அப்போது,  கிரிக்கெட், இந்திய கலாச்சாரம், இந்திய உணவுகளை ஜப்பானுக்கு கற்றுக் கொடுத்த இந்தியர்கள், உலகின் ஒவ்வொரு மூலைக்கும் தீபாவளி பண்டிகையின் போது தோன்றும் வெளிச்சம் போல  உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என புகழாரம் சூட்டினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களால், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். தற்போது, இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பில், உலகளவில் பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல, மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறியுள்ளது. அந்த திட்டம் மூலம் மோட்டார் வாகனம் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பின் முனையமாக இந்தியா மாறி வருகிறது. உலக நாடுகளுக்கும் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. 

பிராட்பேண்ட் அனைத்து கிராமங்களையும் சென்றடைந்துள்ளது. இந்தியாவில் சிறிய குளிர்பானத்தின் விலையை விட 1 ஜிபி டேட்டாவின் விலை மிக குறைவு. இந்தியாவில் 100 கோடி மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. மனிதகுலத்திற்கான சேவைக்காக இந்தியாவின் முயற்சிகளை, சேவைகளைக் கண்டு உலமே பாராட்டுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொள்கைகள், பொது நலத்திட்டத்திற்காக செய்யப்படும் சேவை என பாராட்டி வருவதாக கூறினார்.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை மோடி முன்மொழிந்த மோடி, 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர் அனுப்பும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இது வெற்றிகரமாக முடிந்தால்,ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவற்றிற்குப் பிறகு, இந்த சாதனையை அடைந்த நான்காவது நாடாக இந்தியா மாறும் என்றார்.

"கடந்த ஆண்டு நமது விஞ்ஞானிகள் 100 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தனர். சந்திரயான் மற்றும் மங்கல்யான் செயற்கைக்கோள்களை மிகக் குறைந்த செலவில் உற்பதத்தி செய்து அனுப்பினோம். 2022 ஆம் ஆண்டுக்குள் ககனயனை விண்வெளிக்கு அனுப்புவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இது அனைத்து பணிகளிலும் இந்தியர்களே ஈடுபட்டு வருகிறார் என்றார்.

மேலும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ஜப்பான் முழு மனதுடன் ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட மோடி, சுவாமி விவேகானந்தரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் அந்நாடு ஆதரித்ததாக பெருமிதம் தெரிவித்த மோடி,   இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமது மூலம் ஒன்று தான். இந்துக்கடவுகள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்று தான் என மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com