இராக் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டம்: 9 பேர் பலி

இராக்கில் அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இராக் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டம்: 9 பேர் பலி

இராக்கில் அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
 அந்த நாட்டின் பஸ்ரா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்தச் சூழலில், வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடுகிறது.
 இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: இராக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா நகரில், குடிநீர் மாசுபாட்டால் 30,000 பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இதையடுத்து, அந்த நாட்டு அரசு பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி, ஏராளமானோர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்து, போராôட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 பேர் உயிரிழந்தனர்.
 இந்தச் சூழலில், அரசுக்கெதிரான வன்முறைப் போராட்டங்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிரமடைந்தது.
 அதையடுத்து, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய மதத் தலைவர் முக்தாதா சாதரின் அழைப்பின் போரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முக்கிய அமைச்சர்களுடன் அதிபர் ஹெதர் அல்-அபாதி பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com