அரசியல் சாசனத்தை மாற்றுவேன்: ஷின்ஸோ அபே

இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்க ஆளுகையின் கீழ் உருவாக்கப்பட்ட ஜப்பானின் அரசியல் சாசனைத்தை மாற்றியமைக்கப் போவதாக அந்த நாட்டுப்
அரசியல் சாசனத்தை மாற்றுவேன்: ஷின்ஸோ அபே


இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்க ஆளுகையின் கீழ் உருவாக்கப்பட்ட ஜப்பானின் அரசியல் சாசனைத்தை மாற்றியமைக்கப் போவதாக அந்த நாட்டுப் பிரதமர் ஷின்ஸோ அபே உறுதியளித்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அவர், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் 3-ஆவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பார். அவருக்கு, லிபரல் ஜனநாயகக் கட்சியின் 70 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் சாசனத்தை மாற்றியமைக்கும் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அணு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்த பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று ஜப்பானில் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com