பிலிப்பின்ஸை நெருங்கும் மங்குட் புயல்!: பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பின்ஸை மங்குட் புயல் நெருங்கி வருவதையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புயல் அச்சத்தால் வீடுகளை பலப்படுத்தும் பொதுமக்கள்.
புயல் அச்சத்தால் வீடுகளை பலப்படுத்தும் பொதுமக்கள்.


பிலிப்பின்ஸை மங்குட் புயல் நெருங்கி வருவதையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிலிப்பின்ஸை நோக்கி மங்குட் புயல் வேகமாக நடந்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது பலத்த வேகத்தில் காற்று வீசுவதோடு, அதிக மழைப்பொழிவும் இருக்கும். இது பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிலிப்பின்ஸின் வடக்கு கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் ஏற்கெனவே தங்களது வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மங்குட் புயல் சனிக்கிழமை பிலிப்பின்ஸை தாக்கும் என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் இதுவரையில் இல்லாத அளவில் வலுவான புயலாக மங்குட் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிலிப்பின்ஸில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கிய ஹய்யன் புயலுக்கு 7,350 பேர் உயிரிழந்தனர். தற்போது அதேபோன்றதொரு புயல் உருவாகியிருப்பது பிலிப்பின்ஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com