அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப் புகழ் பெற்ற டைம்' வார இதழின் உரிமையாளரான மெரடித் கார்ப்பரேஷனிடமிருந்து, அந்தப் பத்திரிகையை தொழிலதிபர் மார்க் பெனியாஃப் என்பவரும், அவரது மனைவியும் கூட்டாக வாங்கியுள்ளனர்.
90 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க அந்தப் பத்திரிகை, 19 கோடி டாலருக்கு (சுமார் ரூ.1,377 கோடி) கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்' பத்திரிகையின் உரிமையாளராக ஆனாலும்,
அந்தப் பத்திரிகையின் அன்றாட அலுவல்களிலோ, கொள்கை முடிவுகளிலோ தாம் தலையிடப் போவதில்லை என்று பெனியாஃப் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.