அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி: சீனா பதிலடி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.4.36 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக சீனா தெரிவித்துள்ளது


அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.4.36 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14.5 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை சுமத்த அமெரிக்கா முடிவு செய்தால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் எழுகிறது. உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில் சீனாவுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்ட சில பதில் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது. அதைக் கருத்தில்கொண்டே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com