பிரிட்டனின் காவல் துறையில் பணியாற்ற, அதிக அளவில் முஸ்லிம் பெண்களைக் கவரும் நோக்கில் புத்தம் புதிய சீருடையை அந்த நாட்டு அதிகாரிகள் வடிவமைத்துள்ளனர்.
பெண் போலீஸாருக்கு இதுவரை இருந்தது போன்ற அரைக் கை கொண்ட இறுக்கமான உடையாக இல்லாமல், இந்தப் புதிய சீருடை தளர்வாகவும்,
முழு கைகளையும் மறைக்கும் வகையிலும் வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சீருடையை காவல் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் அதிகாரி ஒருவர் வடிவமைத்ததாக வெஸ்ட் யோர்க்ஷைர் போலீஸார் தெரிவித்தனர்.