ரஃபேல் ஒப்பந்தத்தின் போது நான் அதிபராக இல்லை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் போது நான் அதிபராகவே இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
ரஃபேல் ஒப்பந்தத்தின் போது நான் அதிபராக இல்லை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் போது நான் அதிபராகவே இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் மேக்ரோன் கூறுகையில்,

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் என்பது பிரான்ஸ் நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். இது இரு நாடுகளின் அரசின் திட்டம். இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தையே நானும் பிரதிபலிக்க விரும்புகிறேன். 

ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போத நான் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் முழுமையான விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபெற்றுள்ளது என்பது தெரியும். இந்த ஒப்பந்தம் இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலானது. 

இது இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டு நடவடிக்கை. எனவே இது எனக்கு மிகவும் முக்கியமான கூட்டு நடவடிக்கை ஆகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com