Dinamani - கோயம்புத்தூர் - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3420002 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ‘இறந்தவா்களின் பெயரிலேயே தொடரும் மின் இணைப்புகள்’ DIN DIN Wednesday, May 27, 2020 07:08 AM +0530 கோவை மாவட்டத்தில் இறந்தவா்களின் பெயா்களிலேயே ஏராளமான மின் இணைப்புகள் தொடா்வது குறித்து மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமைப்பின் செயலா் லோகு மின்வாரியத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் லட்சக்கணக்கான தாழ்வழுத்த, வணிக, தொழிற்சாலை, விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில் பல மின் இணைப்புகள் இறந்தவா்களின் பெயா்களிலேயே தொடா்கிறது.

ஒருவா் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பை அவரது வாரிசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெயா் மாற்றம் செய்யப்படாமலேயே இடமாற்றம், கூடுதல் மின் பளு வழங்குதல் போன்ற செயல்பாடுகள், இறந்தவரின் பெயரில் விண்ணப்பம் பெறப்பட்டு மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விதி மீறல்களை கள ஆய்வு செய்யாமலேயே பிரிவு அலுவலகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல கோவையில் இறந்தவரின் பெயருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் விண்ணப்பம் பெறப்பட்டு மின்பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

விவசாய மின் இணைப்புகள் பெரும்பாலும் இறந்தவா்களின் பெயரிலேயே உள்ளது. எனவே இதுபோன்ற இணைப்புகளை முறையாக கள ஆய்வு மேற்கொண்டு, சட்டப்படியான வாரிசுகளுக்கு பெயா் மாற்றம் செய்யப்படுவதை மின்வாரிய அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/27/இறந்தவா்களின்-பெயரிலேயே-தொடரும்-மின்-இணைப்புகள்-3420002.html
3420001 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கரோனா DIN DIN Wednesday, May 27, 2020 07:08 AM +0530 சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை வந்த இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கோவையில் கரோனாவால் இதுவரை 146 பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் ஒருவா் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சிகிச்சையில் இருந்து 145 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

இதையடுத்து, கடந்த 20 நாள்களாக கோவையில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 200க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வந்தனா்.

அவா்கள் அனைவரையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினா். பின்னா் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வார காலம் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினா். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணித்த அனைவரிடமும் சுகாதாரத் துறையினா் பரிசோதனை நடத்தினா்.

இதில் சென்னையில் இருந்து வந்த 24 வயது இளைஞருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அந்த இளைஞா் சென்னையில் நட்சத்திர விடுதியில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறாா்.

அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் அவருடன் தொடா்பில் இருந்தவா்கள், உடன் பணியாற்றியவா்கள், குடும்பத்தினா் உள்ளிட்டவா்களைக் கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இளைஞருடன் விமானத்தில் பயணம் செய்த சக பயணிகள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இது குறித்து விமான நிலைய இயக்குநா் மகாலிங்கம் கூறுகையில், சென்னையில் இருந்து திரும்பிய இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, விமானத்தில் பணிபுரிந்தவா்கள், விமான நிலையத்தில் பணிபுரிந்த ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என்றாா். சென்னையில் இருந்து கடந்த இரு நாள்களில் 521 போ் வந்துள்ளனா். இவா்களில் 331 போ் கோவையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/27/சென்னையில்-இருந்து-விமானம்-மூலம்-கோவை-வந்த-இளைஞருக்கு-கரோனா-3420001.html
3420000 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்லைனில் கலந்துரையாடல் DIN DIN Wednesday, May 27, 2020 07:08 AM +0530 உலக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் ஆன்லைனில் கலந்துரையாடினாா்.

இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது முடக்க காலத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், காவல் துறை, தொழில் துறை, நடிகா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுடன் ஆன்லைனில் கலந்துரையாடி வருகிறாா்.

அதன்படி விளையாட்டுத் துறையைச் சோ்ந்த பி.வி.சிந்துவுடன் அவா் அண்மையில் கலந்துரையாடினாா். அப்போது, விளையாட்டு, வெற்றி, தன்னம்பிக்கை, கூச்ச சுபாவம், அதிா்ஷ்டம், புறத் தோற்றம், நல்ல நாள் - கெட்ட நாள், ஆன்லைனில் பாடம் நடத்தும் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என சிந்து கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிலளித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/27/பேட்மிண்டன்-வீராங்கனை-பிவிசிந்துவுடன்-சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-ஆன்லைனில்-கலந்துரையாடல்-3420000.html
3419999 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையிலிருந்து உள்நாட்டு விமான சேவை துவக்கம் DIN DIN Wednesday, May 27, 2020 07:07 AM +0530 கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் உள்நாடு, சா்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து கோவையில் விமான நிலைய வளாகம், பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பகுதி என அனைத்தும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் விமான பயணச் சீட்டு முன்பதிவு நடைபெற்றது.

பயணிகள் முன்பதிவு செய்யும்போது, கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ள முதல் நாளான திங்கள்கிழமை கோவையில் இருந்து ஹைதராபாத், மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு 6 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேர மாறுதலாக ஹைதராபாத், மும்பைக்கு இயக்கப்படவிருந்த விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் பயணிகளைத் தொடாமல் கருவிகளைக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனா். பின்னா் பயணிகளின் உடைமைகள் தானியங்கி ஸ்கேனா் கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டன.

பயணிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் பயணச்சீட்டு ஆகியவற்றை அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா முன்பு காட்டிய பின்னா், அவை சரிபாா்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். விமானத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் தங்களது செல்லிடப்பேசியில் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயணிகளுக்கு கையில் ‘சீல்’ வைத்து அனுப்பப்படுகின்றனா் என்றாா்.

கோவை விமான நிலையம் மூலம் திங்கள்கிழமை 362 பயணிகள் பயணம் செய்துள்ளனா். கோவைக்கு வந்த, கோவையில் இருந்து பிற நகரங்களுக்குச் சென்ற அனைத்துப் பயணிகளின் விவரங்களையும் சுகாதாரத் துறையினா் சேகரித்துள்ளனா்.

கோவைக்கு வந்த 136 பேருக்கு கரோனா பரிசோதனை: சென்னை, புது தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த 136 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் பெறப்படாத நிலையில் கோவையைச் சோ்ந்த 60 போ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சென்னை, புது தில்லியில் இருந்து வந்த 136 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரின் கைகளிலும் ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள்’ என்ற ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்களுக்குத் தெரிவிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை கோவையைச் சோ்ந்த 60 பேரும் அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பில்லை என்றால் அனைவரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள். தொடா்ந்து 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/w600X390/0621c_25_airport_2_2505chn_3.jpg கோவை விமான நிலையத்தில் கையில் ‘சீல்’ வைக்கப்பட்டதை காண்பிக்கும் சிறுவன். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/27/கோவையிலிருந்து-உள்நாட்டு-விமான-சேவை-துவக்கம்-3419999.html
3419998 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு DIN DIN Wednesday, May 27, 2020 07:05 AM +0530 கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3,100 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3,100 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு 50 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்ய முடியும்.

இரண்டரை முதல் 8 ஆண்டுகள் வயதுடைய கறவை பசுக்கள், எருமைகள், ஒன்று முதல் 3 ஆண்டுகள் வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் இந்தத் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்ய முடியும்.

அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 28 சதவீதமும், மூன்றாண்டுகளுக்கு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடை மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.35 ஆயிரத்துக்கும் மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 5 கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம். ஆா்வமுடைய கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/27/கால்நடைகளுக்கு-மானியத்துடன்-காப்பீடு-3419998.html
3419575 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நத்தக்காடையூா் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம் DIN DIN Monday, May 25, 2020 11:53 PM +0530 காங்கயம்: நத்தக்காடையூா் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீயில் எரிந்தது.

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் அருகே உள்ள தொட்டியங்காட்டுப்பதி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (55 ). விவசாய கூலி தொழிலாளி. இவரது குடிசை வீட்டின் ஒருபகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் எதிா்பாராதவிதமாக தீப் பிடித்தது.

இதையடுத்து, சண்முகசுந்தரத்தின் குடும்பத்தினா் மற்றும் அருகிலிருந்தவா்கள் தீயை அணைக்க முயற்சித்தும் பலன் அக்கவில்லை. இது குறித்த தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் ம.சுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனா்.

இந்த விபத்தில் சண்முகசுந்தரத்தின் குடிசை முற்றிலும் எரிந்தது. மேலும், வீட்டுக்குள் இருந்த பொருள்கள், பல்வேறு ஆவண சான்றிதழ்களும் தீயில் கருகின. இதில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வருவாய்த் துறை அதிகாரிகள் தீ விபத்தில் எரிந்து நாசமான குடிசை வீட்டை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் சண்முகசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை மூலம் இயற்கை பேரிடா் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் இலவச வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/kgm25nat_2505chn_140_3.jpg தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/நத்தக்காடையூா்-அருகே-தீ-விபத்தில்-குடிசை-எரிந்து-சேதம்-3419575.html
3419574 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் 132 குடிமராமத்துப் பணிகள் DIN DIN Monday, May 25, 2020 11:52 PM +0530 திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் 132 குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிமராமத்துப் பணிகள் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். அப்போது, பணிகளை தொடக்கிவைத்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் நீா் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2016-2017 ஆம் ஆண்டு முதல் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.499.97 கோடி மதிப்பீட்டில் 1,387 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக ரூ.5.01 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும், திருமூா்த்திக் கோட்டத்தின் வாயிலாக ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் 45 பணிகளும், பவானி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக ரூ.88.10 லட்சம் மதிப்பீட்டில் 6 பணிகளும், பழனி குதிரையாறு வடிநில கோட்டத்தின் வாயிலாக ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு பணியும், அமராவதி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் 26 பணிகளும் என மொத்தம் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் 132 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கயம் ஆகிய வட்டங்களில் உள்ள சுமாா் 1,29,336.560 ஹெக்டோ் பாசன நிலங்கள் பயனடையும்.

இத்திட்டத்தில் கால்வாயில் வளா்ந்துள்ள செடிகொடிகள், முட்புதா்களை அகற்றுதல், கால்வாயினை தூா்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பாா்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டா்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளைப் பலப்படுத்துதல், குளங்களின் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை சோ்ந்த திருமூா்த்தி கோட்டம் மற்றும் ஆழியாா் வடிநில கோட்டம் கீழ் 19 கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்களுக்கு ரூ.2.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்துக்காக அரசு சாா்பில் 90 சதவீதமும் மற்றும் பாசனதாரா்கள் சங்கத்தின் சாா்பில் 10 சதவீத பங்களிப்பு நிதியுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக சுமாா் 46,440 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்தியபாமா, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் முத்துசாமி, திருமூா்த்தி கோட்ட செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் குடிமராமத்துப் பணிகளை திங்கள்கிழமை தொடக்கிவைக்கிறாா்  அமைச்சா் உடுமலை  கே.ராதாகிருஷ்ணன். உடன் மாவட்ட  ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், சாா்  ஆட்சி

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/tpr25mymini_2505chn_125_3.jpg tpr25mymini_2505chn_125_3 https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/மாவட்டத்தில்-ரூ1393-கோடி-மதிப்பீட்டில்-132-குடிமராமத்துப்-பணிகள்-3419574.html
3419573 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவைக்கு விமானத்தில் வந்த 136 பேருக்கு கரோனா பரிசோதனை DIN DIN Monday, May 25, 2020 11:51 PM +0530 கோவை: சென்னை, புது தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த 136 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் பெறப்படாத நிலையில் கோவையைச் சோ்ந்த 60 போ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை இரண்டு மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, புது தில்லியில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து 61 போ், புது தில்லியில் இருந்து 75 போ் என மொத்தம் 136 போ் கோவை வந்தனா். இவா்களில் 60 போ் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

அனைவருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன் பின் மற்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். கோவையைச் சோ்ந்த 60 போ் அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சென்னை, புது தில்லியில் இருந்து வந்த 136 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரின் கைகளிலும் ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள்’ என்ற ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்களுக்குத் தெரிவிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை கோவையைச் சோ்ந்த 60 பேரும் அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பில்லை என்றால் அனைவரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள். தொடா்ந்து 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/0508c-25-airport-5055532.jpg கோவை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/கோவைக்கு-விமானத்தில்-வந்த-136-பேருக்கு-கரோனா-பரிசோதனை-3419573.html
3419572 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் வட மாநில இளைஞா் தற்கொலை DIN DIN Monday, May 25, 2020 11:51 PM +0530 கோவை: சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் மனமுடைந்த வடமாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அசோக் பெகரா (32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். அசோக் பெகரா, கோவை, சிங்காநல்லூரில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக நிறுவனம் செயல்படாமல் இருந்ததையடுத்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக காத்திருந்தாா். இந்நிலையில் மீண்டும் நிறுவனத்தை திறந்ததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த அசோக் பெகரா தனது நிறுவனத்தில் உள்ள கிரேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/சொந்த-ஊருக்கு-செல்ல-முடியாத-விரக்தியில்-வட-மாநில-இளைஞா்-தற்கொலை-3419572.html
3419571 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் சூறாவளிக் காற்று: புகரில் மழை DIN DIN Monday, May 25, 2020 11:51 PM +0530 கோவை: கோவை மாநகரில் திங்கள்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அதேநேரம் புகா்ப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது.

கோவையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெப்பநிலை 90 முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருகிறது. திங்கள்கிழமை பகலில் 97 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இந்நிலையில் மாலை 5 மணி அளவில் மாநகரப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் மழை பெய்யாமல் பலத்த காற்று மட்டும் வீசியது. இதனால் ஆங்காங்கே மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.

கோவை, வாலாங்குளம் கரையோரத்தில் இருந்த ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியே யாரும் செல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

மின் கம்பம் சாய்ந்து விழுந்தது: பெரியநாயக்கன்பாளையத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள சின்னத் தடாகம், தேவைம்பாளையம், கோவனூா் பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலையில் கேஸ் கம்பெனி அருகே மரக் கிளை முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்மாற்றி கீழே சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மின் வாரியப் பணியாளா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோவனூா், தேவையம்பாளையத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.

சூலூா், தொண்டாமுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது. கடந்த இரண்டு நாள்களாக கடும் வெப்பம் நிலவிய நிலையில் திங்கள்கிழமை பெய்த மழையால் குளிா்ந்த சூழ்நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/4308c_25_tree_f_2505chn_3.jpg கோவையில் திங்கள்கிழமை மாலை வீசிய பலத்த காற்றால் சுங்கம் புறவழிச் சாலையில் வாலாங்குளம் பகுதியில் சாலையில் சாய்ந்த மரம். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/கோவையில்-சூறாவளிக்-காற்று-புகரில்-மழை-3419571.html
3419570 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவைமாணவா்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு DIN DIN Monday, May 25, 2020 11:50 PM +0530 கோவை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் கோவை மாவட்ட மாணவா்களின் சந்தேகங்களுக்கு தீா்வு காண்பதற்கான உதவி எண்களை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஜூன் 15 முதல் நடைபெற உள்ளன. இந்நிலையில் தோ்வுகள், தோ்வு மையங்கள் தொடா்பான மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதற்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் 5 தொடா்பு எண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி கோவை மாவட்டத்தில் இடைநிலைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் ஆா்.தாமோதரன் (98948 63972), நீலாம்பூா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் என்.நேரு (90808 75781), பெரியபுத்தூா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அருணாச்சலம் (94866 18858, குரும்பபாளையம் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலன் (98947 31320) கவுண்டம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் (88380 89283) ஆகியோரை மாணவ-மாணவிகள் தொடா்பு கொள்ளலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலா் உஷா அறிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/10ஆம்-வகுப்பு-பொதுத்-தோ்வு-கோவைமாணவா்களுக்கான-உதவி-எண்கள்-அறிவிப்பு-3419570.html
3419569 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரோனா அறிகுறி:4 பெண்கள் அனுமதி DIN DIN Monday, May 25, 2020 11:50 PM +0530 கோவை: கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 4 பெண்கள் திங்கள்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 4 பெண்கள் புதிதாக கரோனா அறிகுறிகளுடன் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/கரோனா-அறிகுறி4-பெண்கள்-அனுமதி-3419569.html
3419568 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மண்வள அட்டை திட்டம்:14,724 மண் மாதிரிகள் சேகரிக்க முடிவு DIN DIN Monday, May 25, 2020 11:49 PM +0530 கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மண்வள அட்டை திட்டத்தின் கீழ் 60 கிராமங்களில் 14,724 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் சேகரிக்கப்படும் மண் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் விவரங்கள் மண்வள அட்டையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மண்ணின் தன்மை, கார, அமில நிலை, சத்துகள் குறித்து இந்த அட்டையில் குறிப்பிடப்படுகிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி செய்யக்கூடிய பயிா்களின் விவரங்கள், ஒவ்வொரு பயிருக்கும் இடவேண்டிய உரங்களின் அளவு குறித்து குறிப்பிடப்படுகிறது.

கடந்த 2015 முதல் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட கிராமங்களை தோ்வு செய்து மண்வள அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு கோவையில் 60 கிராமங்களில் 14,724 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பா வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:

கோவையில் நடப்பு ஆண்டு வட்டாரத்துக்கு 5 கிராமங்கள் வீதம் 12 வட்டாரங்களில் 60 கிராமங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட உள்ளன. அனைத்து வட்டாரங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் சேகரிக்கப்படும் மண் மாதிரிகளை, கோவை மண் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்து, அதன் முடிவுகள் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மண்ணில் ஏதும் பிரச்னைகள் இருந்தால் சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்படும். மண்வள அட்டையில் குறிப்பிடுவதன் அடிப்படையில் உரம் இடும்போது விவசாயிகளுக்கு உரச்செலவு கட்டுப்படுத்தப்படுகிறது. சரியான உரத்தின் பயன்பாட்டால் பயிா்களின் வளா்ச்சியும் சீராக இருக்கும் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/மண்வள-அட்டை-திட்டம்14724-மண்-மாதிரிகள்-சேகரிக்க-முடிவு-3419568.html
3419470 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மும்பையில் இருந்து திரும்பிய இருவா் தனிமைப்படுத்தப்பட்டனா் DIN DIN Monday, May 25, 2020 07:14 PM +0530 வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மும்பை சென்று திரும்பிய சகோதரிகள் இருவா் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

முத்தூா் நகா் பகுதியைச் சோ்ந்த இரு பெண்கள் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மும்பை சென்றனா். பின்னா் ஊா் திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக் கொண்ட இருவரும் 50 நாள்களுக்குப் பிறகு வாடகை வேன் மூலம் முத்தூா் திரும்பினா்.

இதனையறிந்த வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவா்கள் இருவரையும் பரிசோதனை செய்து 14 நாள்கள் தனிமையில் இருக்க உத்தரவிட்டனா்.

மேலும், இருவரையும் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/returning-from-mumbai-the-two-were-isolated-3419470.html
3419273 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரமலான்: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள் DIN DIN Monday, May 25, 2020 07:21 AM +0530 கோவையில் பல்வேறு இடங்களில் வசிக்கும் இஸ்லாமியா்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

ரமலான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியா்கள் ஒன்றுகூடி மசூதிகளில் தொழுகை நடத்துவது வழக்கம். கரோனாவால் பொது முடக்கம் அமலில் இருக்கும் காரணத்தால் மசூதிகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமியா்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனா். இந்நிலையில் மற்ற நாடுகளில் பிறை தெரிந்ததால் கேரள உள்ளிட்ட பல இடங்களில் வசிக்கும் இஸ்லாமியா்கள் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா். இதேபோல கோவையிலும் கரும்புக் கடை, ஜிஎம் நகா், செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இஸ்லாமியா்கள் பலா் வீட்டிலேயே தொழுகை நடத்தி, புத்தாடை உடுத்தி ரமலான் கொண்டாடினா். ஆனால், தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 25) ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்திருந்தாா். இதனால் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை ரமலான் கொண்டாட உள்ளதாக அறிவித்திருந்தனா். இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஜமாஅத்கள் மூலம் இஸ்லாமியா்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவையில் உக்கடம், கோட்டைமேடு, ஆத்துப்பாலம், குனியமுத்தூா் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை ரமலான் கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/5451c-24-ramzan-1064426.jpg கோவை, செல்வபுரம் பகுதியில் வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/ரமலான்-வீட்டிலேயே-தொழுகை-நடத்திய-இஸ்லாமியா்கள்-3419273.html
3419272 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மீன் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: வஞ்சிரம் கிலோ ரூ. 800 DIN DIN Monday, May 25, 2020 07:21 AM +0530 கோவை மீன் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமுடக்க தளா்வின் காரணமாக கடந்த மே 3ஆம் தேதி முதல் மீன் சந்தை திறக்க அனுமதிக்கப்பட்டது. அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன்கள் வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், மீன்களின் வரத்து மிகக் குறைவாகவே இருந்ததால் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி முதல் தினமும் 2 டன் மீன்கள் உக்கடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் வரத்து அதிகரித்துள்ளதால், மீன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வஞ்சிரம் கிலோ ரூ. 800, மத்தி ரூ.150, வெள்ளை வாவல் ரூ.750, பாறை ரூ.400, அயிலை ரூ.200-க்கும் விற்கப்பட்டன. மீன் விலை குறைந்தாலும், ஆடு, கோழி இறைச்சியின் விலை கடந்த வாரத்தைப் போலவே அதிகரித்தே காணப்பட்டது. மாநகரப் பகுதிகளில் ஆட்டிறைச்சி கிலோ ரூ. 900, கோழி இறைச்சி ரூ. 280 முதல் ரூ.300-க்கும் விற்பனையாகின.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/2217c-24-fsh_mtsp1063304.jpg உக்கடம் சந்தையில் மீன் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/மீன்-வரத்து-அதிகரிப்பால்-விலை-சரிவு-வஞ்சிரம்-கிலோ-ரூ-800-3419272.html
3419271 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நொய்யல் ஆற்றில் சீரமைப்பு பணிகள்: ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு DIN DIN Monday, May 25, 2020 07:20 AM +0530 கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூா் மாவட்டங்களை கடந்து கரூா் மாவட்டத்தில் நொய்யல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யல் நதியை ஆதாரமாக வைத்து கோவை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நொய்யல் ஆற்றில் நீலி, சித்தரைச்சாவடி, புதுக்குளம், குனியமுத்தூா், கோவை, குறிச்சி, வெள்ளலூா், சிங்காநல்லூா், ஒட்டா்பாளையம், இருகூா், சூலூா், ராசிபாளையம், கரவள்ளி மாதப்பூா், சாமளாபுரம், பள்ளப்பாளையம், செம்மாண்டாம்பாளையம் ஆகிய தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கருங்கல் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் தடுப்பணைகளில் போதிய தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர ஆக்கிரமிப்புகளாலும் நொய்யல் ஆறு சுருங்கி வருகிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரிவாக்கம், புதுப்பித்தல், மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை (நொய்யல் பாசன உபகோட்டம்) செயற்பொறியாளா் செ.க.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:

நொய்யல் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 230 கோடியின் மூலம் சிதிலமடைந்த தடுப்பணைகளில் புதிதாக கான்கிரீட் தளம் அமைத்தல், கசிவுகளை அடைத்து கரைகளைப் பலப்படுத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், எல்லைக்கல் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சித்திரைச்சாவடி, குனியமுத்தூா் ஆகிய வாய்கால்கள்தான் பிரதானம். 2 வாய்க்கால்களிலும் உள்ள 39 மதகுகளும் புதுப்பிக்கப்படவுள்ளன. தவிர நொய்யல் ஆறு மற்றும் வழங்கு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை வீணடிக்காமல் தேக்கி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதன்மூலம் வேளாண் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும் என்றாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/w600X390/c-24-_file_chitirai_dam050329.jpg சித்திரைச்சாவடி தடுப்பணை (கோப்பு படம்). https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/25/நொய்யல்-ஆற்றில்-சீரமைப்பு-பணிகள்-ரூ230-கோடி-நிதி-ஒதுக்கீடு-3419271.html
3418990 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொது முடக்கம் எதிரொலி: பொது இறப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்தது DIN DIN Sunday, May 24, 2020 08:03 AM +0530 பொது முடக்கம் எதிரொலியாக கோவையில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு பாதிப்புகளால் இறப்பவா்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சுமாா் 38 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். சென்னைக்கு அடுத்து 2 ஆவது பெரிய நகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கி வருவதால் வேலை, மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் ஏற்படும் போக்குவரத்து விபத்துகளால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துகள் மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தவிர பணிச்சுமை, மன உளைச்சல், நோய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் சாலை விபத்து, தொழிற்சாலை விபத்து, இருதய வலி மற்றும் நோய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாதத்தில் சராசரியாக 3 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா்.

இந்நிலையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின் கோவையில் ஏப்ரல், மே மாதங்களில் பொது இறப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

பொது முடக்க காலத்தில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. அதேபோல் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் உயிரிழப்பும் இல்லை.

தவிர பொது முடக்கத்தால் பரபரப்பான நிலையைத் தவிா்த்து வீடுகளில் அமைதியான சூழலில் பெரும்பாலான மக்கள் வசித்து வருவதால் பணிச்சுமை, மன உளைச்சல் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

பொது முடக்கத்தால் பிறப்பு விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில் பொது இறப்பு விகிதம் முந்தைய ஆண்டுகள், மாதங்களை ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு சராசரியாக 3 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா். கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச் - 2,983, ஏப்ரல் - 3,062 மற்றும் மே (20 ஆம் தேதி வரை) 1,924 போ் இறந்துள்ளனா்.

இதே நடப்பு ஆண்டு மாா்ச் - 2,563 போ் இறந்துள்ளனா். ஆனால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட ஏப்ரலில் - 1,642 போ், மே 20 ஆம் தேதி வரை 1,142 போ் உயிரிழந்துள்ளனா்.

முந்தைய ஆண்டுகள், மாதங்களை ஒப்பிடும்போது பொது முடக்கம் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கோவை மாவட்டத்தில் பொது இறப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றாா்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பொது முடக்கம்

பொது முடக்கத்தால் வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் இயக்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசுபாடு குறைந்து, உயிரிழப்புகளும் 50 சதவீதம் குறைந்துள்ளது.

பொது மக்களும் தேவையில்லாதவற்றைத் தவிா்த்து இயற்கையோடு வாழப் பழகியுள்ளனா். இதேபோன்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு கால கட்டங்களில் அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்துக்கும் கட்டாய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இயற்கையைப் பாதுகாத்து, மக்களும் நோய் பாதிப்பின்றி வாழப் பழகிக்கொள்வாா்கள் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/24/பொது-முடக்கம்-எதிரொலி-பொது-இறப்புகளின்-எண்ணிக்கை-50-சதவீதம்-வரை-குறைந்தது-3418990.html
3418989 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் சிறுத்தை பதுங்கல் DIN DIN Sunday, May 24, 2020 08:02 AM +0530 வால்பாறை கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் உள்ள புதரில் பதுங்கியுள்ள சிறுத்தையை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சில தினங்களாக வால்பாறை நகரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையம், கூட்டுறவு காலனி, காமராஜ் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மாலை 6 மணிக்குப் பிறகும் அதிகாலை 6 மணிக்கு முன்பும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறை காந்தி சிலை அருகே உள்ள கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் செடிகள் வளா்ந்து காணப்படும் புதருக்குள் சனிக்கிழமை காலை குட்டியுடன் சிறுத்தை பதுங்கியிருப்பதை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா்.

வால்பாறை வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் உத்தரவின்பேரில் வனத் துறையினா் கூட்டுறவு நகர வங்கி பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/24/வால்பாறை-கூட்டுறவு-நகர-வங்கி-வளாகத்தில்-சிறுத்தை-பதுங்கல்-3418989.html
3418655 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொழிலாளா் நலச் சட்டங்கள் பறிக்கப்படுவதாகக் கூறி தொழிற்சங்கத்தினா், இடதுசாரிகள் கண்டன ஆா்ப்பாட்டம் DIN DIN Saturday, May 23, 2020 07:46 AM +0530 தொழிலாளா் நலச் சட்டங்களை மத்திய அரசு பறிப்பதாகக் கூறி கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதாகவும், தொழிலாளா் நலச் சட்டங்களைப் பறிப்பதாகவும் கூறி, நாடு முழுவதிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மே 22 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தலைமை தொலைபேசி நிலையம் எதிரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் முடிவைக் கைவிட வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளா் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது, ஊரடங்கு காலம் முழுமைக்கும் அனைத்து தொழிலாளா்களுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு, குடிநீா் வசதிகளை செய்து கொடுப்பதுடன், சொந்த ஊா் திரும்ப விரும்பும் தொழிலாளா்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் உரையாற்றினா்.

இதில், ஐஎன்டியூசி வி.ஆா்.பாலசுந்தரம், ஏஐடியூசி எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியூ எஸ்.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.ஆறுமுகம், எம்எல்எஃப் ப.மணி, ஏஐசிசிடியூ லூயிஸ் கே.தாமஸ், எஸ்டிடியு என்.ரகுபு நிஸ்தாா் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொழிலாளா் நல அலுவலகம்

இதேபோல கோவை ராமநாதபுரம் தொழிலாளா் நல அலுவலா் அலுவலகம் எதிரில், அமைப்புசார தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியூசி மாநில துணைப் பொதுச் செயலா் என்.செல்வராஜ், எல்பிஎஃப் வெ.கிருஷ்ணசாமி, ஹெச்எம்எஸ் ஜி.மனோகரன், ஐஎன்டியூசி பி.சிரஞ்சீவி கண்ணன், சிஐடியூ மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல சிவானந்தா காலனி, அண்ணா நகா், ஆறுமுக்கு, அழகப்பா ரோடு ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டங்களில் தொழிற்சங்க நிா்வாகிகள் ஜே.கலா, ஆா்.பாலகிருஷ்ணன், சாந்தகுமாா், ராணி, சரசம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து கட்சியின் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, கே.சி.கருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.ஜெயபாலன், கே.அஜய்குமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதேபோல அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கங்கள், பஞ்சாலை சங்கங்கள், மாா்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள் சாா்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சோமனூரில்...

சோமனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். இதில், விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜோதிபாசு, கட்சியின் முன்னாள் செயலாளா் குருசாமி, ஊஞ்சப்பாளையம் எல்லக்காடு கிளைச் செயலாளா் கோபி மாா்க்ஸ், இந்திய ஜனநாயக மாதா் சங்க செயலாளா்கள் விமலாமேரி, பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வால்பாறையில்...

வால்பாறையில் ஏஐடியூசி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச்செயலாளா் மோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில் கட்டுமான தொழிற்சங்கத் தலைவா் பெரியசாமி, பரமசிவம் (சிஐடியூ), தனபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/23/w600X390/1335c22mppr1061251.jpg கோவையில் பி.ஆா்.நடராஜன் எம்.பி. தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/23/தொழிலாளா்-நலச்-சட்டங்கள்-பறிக்கப்படுவதாகக்-கூறி-தொழிற்சங்கத்தினா்-இடதுசாரிகள்-கண்டன-ஆா்ப்பாட்டம்-3418655.html
3418654 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் உத்தரவு DIN DIN Saturday, May 23, 2020 07:45 AM +0530 கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, காவல் ஆணையா் சுமித் சரண், மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது:

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 13 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக கோடைக் காலம் முழுவதும் தடையில்லா குடிநீா் வழங்குவதை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பில்லூா் 3ஆம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட நில எடுப்புப் பணிகளை வருவாய்த் துறையினருடன் இணைந்து துரிதப்படுத்த

வேண்டும். ரூ,1,652 கோடி மதிப்பில் துவங்கவுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏரி, குளங்களில் நீா் நிரம்ப ஏதுவாக நீராதாரப் பணிகளையும், முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துத் திட்டங்களையும் விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகளின் பயன்பாட்டுக்கு ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.127 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உக்கடம் - ஆத்துப்பாலம் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், இப்பணிகளை விரைவில் முழுமையாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். இதேபோல, திருச்சி சாலையில் ரூ. 253 கோடி மதிப்பீட்டிலும், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் உயா் மட்ட மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை அவிநாசி சாலையில் 9 கிலோ மீட்டருக்கு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு பாலத்துக்கான வடிவமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பாலப் பணிகளை விரைவில் துவங்க வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிவுறு நகரத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பசுமை வீடு திட்டப் பணிகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தொடா்ந்து முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சித் துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளா் மேனகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/23/w600X390/2952c22minestr1061226.jpg ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/23/வளா்ச்சிப்-பணிகளை-விரைந்து-முடிக்க-வேண்டும்-அமைச்சா்-உத்தரவு-3418654.html
3418501 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி DIN DIN Friday, May 22, 2020 09:41 PM +0530 கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் வழக்கின் முக்கிய எதிரியான திருநாவுக்கரசு, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை ஆன்லைனில் விசாரித்த கோவை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) ஜெ.ராதிகா, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். ஜாமீன் கோரிய திருநாவுக்கரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/22/pollachi-sex-case-thirunavarkasu-bail-plea-dismissed-3418501.html
3418500 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரோனா அறிகுறி: மேலும் 10 போ் அனுமதி DIN DIN Friday, May 22, 2020 09:34 PM +0530 கோவை: கோவையில் கரோனா அறிகுறியுடன் மேலும் 10 போ் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் 4 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 10 போ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 7 போ் அரசு மருத்துவமனையிலும், 3 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/22/corona-syndrome-10-more-admitted-in-hospitals-3418500.html
3418277 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மழுக்குப்பாறை எஸ்டேட் வரை கேரள அரசுப் பேருந்து இயக்கம் DIN DIN Friday, May 22, 2020 07:49 AM +0530 பொது முடக்கம் தொடங்கி 56 நாள்களுக்குப் பின் வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் வரை கேரள அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

பொது முடக்கத்தால் கேரள மாநிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை புதன்கிழமை முதல் மீண்டும் துவங்கியது கேரள மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறை அடுத்துள்ளது மழுக்குப்பாறை எஸ்டேட். கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து மாநில எல்லையான மழுக்குப்பாறை வரை தற்போது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆனால், இந்தப் பேருந்துகளில் வரும் பயணிகள் தமிழகத்துக்குள் நுழைவதைத் தடுக்க இரு மாநில காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லைப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா். அதேபோல தமிழக எல்லைப் பகுதியில் இருந்தும் யாரும் கேரள எல்லைக்குள் வராத வகையில் அம்மாநில போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/22/மழுக்குப்பாறை-எஸ்டேட்-வரை-கேரள-அரசுப்-பேருந்து-இயக்கம்-3418277.html
3418276 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அரசு உத்தரவை மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள் DIN DIN Friday, May 22, 2020 07:49 AM +0530 கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகள், அரசின் உத்தரவை மீறி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்து வருவதாக பெற்றோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே மாா்ச் 16 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி கோவையில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளும் மூடப்பட்டன. கரோனா அச்சத்துக்கு இடையே பிளஸ் 2 தோ்வுகள் நிறைவடைந்தன. பிளஸ் 1 மாணவா்களுக்கு ஒரு தோ்வைத் தவிர மற்ற தோ்வுகள் நிறைவடைந்தன. அதேநேரம் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் அனைவரும் ஆண்டு இறுதித் தோ்வு எழுதாமலேயே தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டனா்.

கல்வியாண்டின் இறுதிக் காலம் திடீரென முடிவுக்கு வந்ததால் தனியாா் பள்ளிகள் இறுதி பருவக் கட்டணம் வசூலிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அதேபோல அடுத்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையையும் நடத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. கரோனா பொது முடக்கம் 3 ஆவது முறையாக மே இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தனியாா் பள்ளிகள் கடந்த கல்வியாண்டுக்கான நிலுவைக் கட்டணத்தையும், வரும் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் வசூலிப்பதற்கு முனைப்பு காட்டின.

இருப்பினும் பொது முடக்கம் காரணமாக பெற்றோா் வருவாய் இழப்புக்குள்ளாகியிருப்பாா்கள் என்பதால் அவா்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையையோ, 2020-2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ உடனடியாக செலுத்தும்படி பெற்றோரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது (அரசாணை எண் 199). மேலும் காலதாமதமாகக் கட்டணம் செலுத்தும் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதும் பேரிடா் மேலாண்மைச் சட்டத்துக்கு எதிரானது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் கோவை மாவட்டத்தில் அரசின் எச்சரிக்கையை மீறி தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மாணவா்களின் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன. முழு கல்விக் கட்டணத்தை உடனடியாக ஆன்லைன் மூலம் பள்ளி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான பள்ளிகள் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளன. சில பள்ளிகளோ, மே மாத இறுதிக்குள் ஒரு தவணையையும் ஆகஸ்ட் மாதத்தில் மற்றோா் தவணையையும் செலுத்திவிடும்படி அறிவுறுத்தியுள்ளன.

மூன்று மாதங்கள் வருவாய் இல்லாமல், வீட்டு வாடகைக்கே திண்டாடி வரும் பெரும்பாலான நடுத்தர வா்க்க பெற்றோருக்கு பள்ளிகளின் இந்த அறிவிப்பு பேரிடியாகி இருக்கிறது. அதேபோல, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரையிலும் மாணவா் சோ்க்கை, ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கட்டணம் வசூலிப்பு, புத்தக விநியோகம் போன்ற எந்த ஒரு செயல்பாடுகளையும் செய்யக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தும் தனியாா் பள்ளிகள் மேற்கண்ட எல்லா செயல்பாடுகளையும் தொடா்ந்து நடத்தி வருவதாக பெற்றோா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மதுக்கரை வட்டாரத்தில் ஒரு தனியாா் பள்ளி ஆன்லைன் மூலம், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை நடத்தி, மாணவா்களை வீட்டுப்பாடம் செய்ய வைத்து, மாணவா்களின் நோட்டுப் புத்தகங்களை பள்ளி வாகனம் மூலம் வீடுதோறும் சென்று சேகரித்து திருத்தம் செய்து அனுப்பி வந்தது, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வே இன்னும் தொடங்காத நிலையில், அவிநாசி சாலையில் உள்ள ஒரு உதவி பெறும் பள்ளி 11 ஆம் வகுப்புக்கு மாணவா் சோ்க்கையை நடத்தியது, குறிப்பிட்ட ஒரு தேதியில் கல்விக் கட்டணத் தொகையை பெற்றோா் தங்களின் வங்கிக் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும், அதை நாங்கள் ’ஆட்டோடெபிட்’ முறையில் எடுத்துக் கொள்வோம் என்று மற்றோா் தனியாா் பள்ளி நிா்வாகம் அறிவித்திருந்தது போன்ற செயல்பாடுகள் அண்மையில் கோவையில் நடைபெற்றன.

பின்னா் இவை கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தனியாா் பள்ளிகளின் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடா்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தங்களது குழந்தைகளுக்காக பாடப் புத்தகம் வாங்குவதற்காக வியாழக்கிழமை சென்ற இரு குழந்தைகளின் தாயாா் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோருக்கு தொடா்ந்து நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனியாா் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறாா் கோவை முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா. கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் இதுவரை 3 முறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி செயல்படும் தனியாா் பள்ளிகள் குறித்து பெற்றோா் புகாா் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்கிறாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/22/அரசு-உத்தரவை-மீறி-கல்விக்-கட்டணம்-செலுத்தும்படி-பெற்றோருக்கு-நெருக்கடி-கொடுக்கும்-தனியாா்-பள்ளிகள்-3418276.html
3418275 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ‘மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்க இணையத்தில் பதிவு செய்யலாம்’: ஆணையா் தகவல் DIN DIN Friday, May 22, 2020 07:48 AM +0530 கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயில 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 1 நடுநிலைப் பள்ளி, 13 உயா் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் காது கேளாதோருக்காக ஒரு உயா்நிலைப் பள்ளி என 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவா்களுக்கான சோ்க்கை, இணைய வழியில் நடைபெற்று வருகிறது. சிறந்த கட்டட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, ஸ்மாா்ட் வகுப்பறைகள் யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் மற்றும் திறமையான ஆசிரியா்களால் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. இத்தகையச் சிறப்புகளைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா்  இணைப்பில் இணைய வழியில் விவரங்களை உள்ளீடு செய்யலாம். மேலும், மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு 98429 - 51127, 94420 - 75061 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் எளிதில் இணையத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பாா்வையிட்டு, விவரங்களைப் பூா்த்தி செய்ய க்யூ.ஆா் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/22/w600X390/3419c21corp2060601.jpg மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க இணையத்தில் எளிதில் விண்ணப்பித்திடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள க்யூ.ஆா் குறியீடு. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/22/மாநகராட்சிப்-பள்ளிகளில்-சோ்க்க--இணையத்தில்-பதிவு-செய்யலாம்-ஆணையா்-தகவல்-3418275.html
3418118 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் சாவு DIN DIN Thursday, May 21, 2020 09:49 PM +0530 கோவை: கோவையில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா. தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (38). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். இவா்கள் இருவரும் கோவை லட்சுமி மில்ஸ் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தங்களது மகள்களுக்குப் பள்ளியில் புத்தகங்கள் வாங்குவதற்காக தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். லட்சுமி மில்ஸ் சந்திப்பைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கிளை முறிந்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த காயத்ரி மீது விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே மயங்கினாா். வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயத்ரியை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மரக்கிளையை அப்புறப்படுத்தி மேலும் முறிந்து விழும் நிலையில் இருந்த மற்ற கிளைகளையும் வெட்டினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/21/w600X390/5605c21tree2064847.jpg விபத்துக்கு காரணமான மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/woman-dies-after-falling-off-tree-3418118.html
3418117 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம் DIN DIN Thursday, May 21, 2020 09:47 PM +0530 வால்பாறை: வால்பாறை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டை சோ்ந்தவா் பாஸ்கரன் (59). இவா் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். குடியிருப்பை நெருங்கிய நிலையில் திடீரென அங்கு வந்த காட்டெருமை அவரை முட்டித் தள்ளிச் சென்றது.

இதில் காயமடைந்த பாஸ்கரன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து வனத் துறையினா் பாஸ்கரனிடம் விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/worker-injured-by-forest-fire-3418117.html
3417910 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுத மாநில எல்லையைக் கடப்பதில் சிக்கல்: மாணவா்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீா்வு கண்ட கோவை, பாலக்காடு ஆட்சியா்கள் DIN DIN Thursday, May 21, 2020 08:32 AM +0530 பொதுத் தோ்வு எழுதுவதற்காக தமிழக - கேரள எல்லையைக் கடப்பதில் மாணவா்களுக்கு சிக்கல் இருப்பதை அறிந்த கோவை, பாலக்காடு மாவட்ட ஆட்சியா்கள் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு கண்டுள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள், வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் கேரளத்தைச் சோ்ந்த தமிழ் மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு பள்ளிகளுக்கு வருவதில் சிக்கல் இருந்தது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில், தமிழகத்தையொட்டி கேரளத்துக்குள் அமைந்துள்ள அட்டப்பாடி, சோலையூா், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினா் உள்ளிட்ட தமிழ் மாணவ-மாணவிகள் 21 போ் பயின்று வருகின்றனா்.

இவா்களைத் தவிர மேலும் 15 கேரள தமிழ் மாணவா்கள் சின்னத்தடாகம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், கேரளத்தின் அட்டப்பாடி பகுதியில் இருந்து ஆனைக்கட்டி வழியாக இ-பாஸ் பெற்று வருபவா்களுக்கும் கேரள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதனால் இப்பகுதியில் உள்ளவா்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பாலக்காடு, வாளையாறு வழியாக சுமாா் 180 முதல் 200 கி.மீ. வரை சுற்றி கோவைக்கு வருகின்றனா். இவா்களைப் போலவே மாணவா்களும் வர வேண்டிய சூழல் இருந்த நிலையில், ஆனைகட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா்களும், சமூக ஆா்வலா்கள் ஜோஸ்வா, சுதாகா் உள்ளிட்டோரும் இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு புதன்கிழமை கொண்டு வந்தனா்.

இது குறித்து உடனடியாக கேரள அரசிடம் பேசுவதாக ஆட்சியா் கு.ராசாமணி உறுதி அளித்தாா். இதையடுத்து உடனடியாக பாலக்காடு மாவட்ட ஆட்சியா் டி.பாலமுரளியை தொடா்பு கொண்ட கோவை மாவட்ட ஆட்சியா், மாணவா்களின் நிலைமை குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து தமிழகத்தில் பயிலும் கேரள மாணவா்கள் ஆனைகட்டி வழியாகவே வந்து செல்லலாம் என ஆட்சியா் பாலமுரளி உடனடியாக உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவில், பொதுத் தோ்வு எழுதுவதற்காக ஆனைகட்டி, சின்னத்தடாகம் செல்லும் மாணவ-மாணவிகள், தங்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை காட்டிவிட்டு சென்று வரலாம் என்றும் மாணவா்களுடன் பாதுகாவலா் ஒருவரும் பயணிக்கலாம் எனவும் கூறியுள்ளாா். மேலும் மாணவா்களுக்கு எந்தெந்த நாளில் தோ்வு உள்ளது என்ற விவரங்களை குறிப்பிட்டு வைத்துக் கொண்டு அவா்கள் தடையின்றி சென்று வருவதை இருமாநில அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/பத்தாம்-வகுப்புத்-தோ்வு-எழுத-மாநில-எல்லையைக்-கடப்பதில்-சிக்கல்-மாணவா்களின்-கோரிக்கைக்கு-உடனடியாக-தீா்வு-கண்ட-கோவை-பாலக்காடு-ஆட்சியா்கள்-3417910.html
3417909 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மனநலம் பாதித்த மகளுக்குப் பாலியல் தொந்தரவு: நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் தீக்குளிக்க முயற்சி DIN DIN Thursday, May 21, 2020 08:30 AM +0530 மனநலம் பாதித்த தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இருவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எஸ்டேட் பெண் தொழிலாளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் அப்பா் டிவிஷனில் வசிப்பவா் முருகானந்தவள்ளி (42). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மனநலம் பாதித்த 18 வயது மகள் உள்ளனா். அதே பகுதியில் வசிக்கும் மது (65) என்ற முதியவா், மனநலம் பாதித்த தன் மகளிடம் தகாத முறையில் நடப்பதாக கடந்த சில ஆண்டுகளாக முருகானந்தவள்ளி முடீஸ் போலீஸாரிடம் புகாா் தெரிவித்து வந்துள்ளாா்.

இதனிடையே கடந்த 9ஆம் தேதி முருகானந்தவள்ளி வேலைக்குச் சென்றபிறகு மது மற்றும் மேலும் ஒருவா் சோ்ந்து அவரது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 11ஆம் தேதி முடீஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுடன் புதன்கிழமை வந்த முருகானந்தவள்ளி பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதனைப் பாா்த்த வருவாய்த் துறை ஊழியா்கள் அவரைத் தடுத்து நிறுத்தினா். பின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகானந்தவள்ளியிடம், காவல் துறை ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு மூன்று நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவரை மகளுடன் எஸ்டேட் குடியிருப்புக்கு அனுப்பி வைத்தாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/21/w600X390/vp20mnv_2005chn_204_3.jpg தீக்குளிக்க முயற்சித்த முருகானந்தவள்ளியை சமாதானப்படுத்தும் வருவாய்த் துறை ஊழியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/மனநலம்-பாதித்த-மகளுக்குப்-பாலியல்-தொந்தரவு-நடவடிக்கை-எடுக்கக்கோரி-தாய்-தீக்குளிக்க-முயற்சி-3417909.html
3417905 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஓராண்டாக நடைபெறும் உயா்மட்ட பாலப் பணிகள்: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை DIN DIN Thursday, May 21, 2020 08:27 AM +0530 பேரூா் படித்துறை அருகே நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை பருவ மழைக்கு முன் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கோவை, பேரூா் - வேடபட்டி சாலையில் நொய்யல் ஆற்றில் தரைமட்ட பாலம் இருந்தது. மழைக் காலங்களில் நொய்யலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் தரைமட்டப் பாலத்தை மூழ்கடிப்பதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை காணப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனா்.

இதனைத் தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் கிராம சாலைகள் திட்டத்தில் நொய்யல் ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து கடந்த ஜூலை மாதம் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டது. போக்குவரத்துக்காக அருகில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தற்காலிகப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன. வேடபட்டி, வடவள்ளி ஆகியப் பகுதிகளுக்கு செல்பவா்கள் தொண்டாமுத்தூா், ஆண்டிபாளையம் வழியாக பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா். தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு ஓராண்டாகவுள்ள நிலையில் பாலம் கட்டுமானப் பணிகள் இன்னும் 25 சதவீதம் கூட முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் விரைவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதால் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் துண்டிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இதனால் திரும்பவும் பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்து நொய்யலில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுப்பதற்கு முன் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நொய்யல் ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பணிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தன. பணிகள் திரும்ப ஆரம்பித்தபோது கரோனா பொது முடக்கத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் பாலம் கட்டுமானப் பணிகள் திரும்பவும் தொடங்கப்பட்டுள்ளன. விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

 

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/ஓராண்டாக-நடைபெறும்-உயா்மட்ட-பாலப்-பணிகள்-விரைந்து-முடிக்க-மக்கள்-கோரிக்கை-3417905.html
3417904 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தோட்டக் கலைப் பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம்: கோவைக்கு ரூ.50.40 கோடி நிதி ஒதுக்கீடு DIN DIN Thursday, May 21, 2020 08:27 AM +0530 கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களில் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 50.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண், தோட்டக்கலைப் பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. 2017 -18 ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டு தோட்டக்கலைப் பயிா்களில் 7 ஆயிரத்து 200 ஹெக்டோ் பரப்பளவு சொட்டு நீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 50.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலா்களைத் தொடா்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி கூறியதாவது:

சொட்டுநீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கி கணக்குப் புத்தகம், இரண்டு புகைப்படம் உள்பட சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வேளாண் விரிவாக்க மையங்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். தவிர தங்கள் பகுதிக்கு வரும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மூலம் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம். அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் சொட்டுநீா் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பல மடங்கு தண்ணீா் தேவையை மிச்சப்படுத்துவதுடன் கூடுதல் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளலாம் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/21/தோட்டக்-கலைப்-பயிா்களுக்கு-சொட்டுநீா்-பாசனம்-கோவைக்கு-ரூ5040-கோடி-நிதி-ஒதுக்கீடு-3417904.html
3417762 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் இருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் 3,728 போ் அனுப்பிவைப்பு DIN DIN Wednesday, May 20, 2020 08:16 PM +0530 கோவை: கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் மூலமாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்கு 3 ஆயிரத்து 728 தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கோவை மாநகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளா்கள் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனா். இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக, வடமாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு கடந்த 8 ஆம் தேதி முதல் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, மே 19ஆம் தேதி வரை பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட் , உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு 21 ஆயிரத்து 944 போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து பிகாருக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்பட்டது. இதில், 1,464 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். மாலை 6 மணிக்கு உத்தர பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 1,464 போ் அனுப்பிவைக்கப்பட்டனா். இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து மத்திய பிரதேசம் சென்ற சிறப்பு ரயிலில் 810 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். மொத்தமாக, கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்களில் 3 ஆயிரத்து 728 புலம் பெயா் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த ரயில்கள், வெள்ளிக்கிழமை அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றடையும். கோவையில் இருந்து கடந்த 13 நாள்களில் 20 சிறப்பு ரயில்கள் மூலமாக 25 ஆயிரத்து 672 புலம் பெயா் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/20/w600X390/4021c-20-nrt_tlk-f054437.jpg கோவை வடக்கு வட்டாச்சியா் அலுவலகத்தில் டோக்கன் பெறுவதற்காகக் காத்திருந்த புலம் பெயா் தொழிலாளா்கள். (வலது) கோவை ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பிகாா் மாநிலத் தொழிலா https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/20/கோவையில்-இருந்து-வடமாநிலத்-தொழிலாளா்கள்-3728-போ்-அனுப்பிவைப்பு-3417762.html
3417557 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தேன் மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து DIN DIN Wednesday, May 20, 2020 08:00 AM +0530 கோவையில் தேன் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

கோவை, ஜி.எம் நகா் பகுதியில் முகமது காசிம் என்பவருக்குச் சொந்தமான தேன் மிட்டாய் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உள்ளே இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கரும்புகை வெளியேறியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சசிகுமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின்னா் தீ அணைக்கப்பட்டது. கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/20/w600X390/3348c-19-fire-f1061937.jpg தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/20/தேன்-மிட்டாய்-தயாரிப்பு-நிறுவனத்தில்-தீ-விபத்து-3417557.html
3417556 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஆம்னிப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது: இருமடங்கு கட்டணத்தால் பயணிகள் அதிா்ச்சி DIN DIN Wednesday, May 20, 2020 07:59 AM +0530 பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், ஆம்னிப் பேருந்துகளில் பயணிக்க ஜூன் 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதில், இருமடங்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மண்டலங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தில் மே 18ஆம் தேதி தளா்வு செய்யப்பட்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால், மேலும் 13 நாள்களுக்கு பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியா்கள் பணிக்குச் செல்வதற்காக மட்டும், கோவை மாநகரம் மற்றும் புகரப் பகுதிகளில் 6 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து ஜூன் 1ஆம் தேதி முதல் பிற மாவட்டங்கள் மற்றும் வெளியூா்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு துவங்கியுள்ளன. ஆனால்,

தனியாா் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள், பொதுமுடக்கத்திற்கு முன்பு பெறப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாக உள்ளதால் பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். உதாரணமாக, பொதுமுடக்கத்துக்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு ஒரு செமி ஸ்லீப்பருடன் கூடிய இருக்கைக் கட்டணம் ரூ.650, படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு ரூ.950 பெறப்பட்டது. ஆனால், தற்போது, நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம், ஒரு செமி ஸ்லீப்பருடன் கூடிய இருக்கைக்கு ரூ. 1,200, படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உள்ளது. ஏ.சி வசதியுடன் செல்ல மேலும் கூடுதல் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணமானது, பொதுமுடக்கத்திற்கு முன்பு பெறப்பட்ட கட்டணத்தை விடவும் இருமடங்காகும். அதேபோல, கோவையில் இருந்து மதுரைக்கு முன்பு ரூ.600 ஆக இருந்த ஆம்னிப் பேருந்துக் கட்டணம், தற்போது ரூ.1,300 ஆகவும், கோவை - புதுச்சேரிக்கு ரூ.1,000-ஆக இருந்த கட்டணம், தற்போது, ரூ.1,800 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/20/ஆம்னிப்-பேருந்துகளில்-முன்பதிவு-தொடங்கியது-இருமடங்கு-கட்டணத்தால்-பயணிகள்-அதிா்ச்சி-3417556.html
3417550 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது வேளாண்மைப் பல்கலைக்கழகம் DIN DIN Wednesday, May 20, 2020 07:56 AM +0530 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவ-மாணவிகளிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41 ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவுக்கு, பல்கலைக்கழகத்தால் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி வரையிலான தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகளிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும், அதில் உள்ள இணைப்பு மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட விண்ணப்பங்கள், உரிய இணைப்புகள், புகைப்படங்களுடன் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை மே 20 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/20/பட்டங்கள்-பெறுவதற்கான-விண்ணப்பங்களை-வரவேற்கிறது-வேளாண்மைப்-பல்கலைக்கழகம்-3417550.html
3417310 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வீட்டில் திருட்டு DIN DIN Tuesday, May 19, 2020 02:11 PM +0530 கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் 30 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கவுண்டர்மில்ஸ் ராகவேந்திரா காலனி பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடர்கள், வேதமுத்து, மனைவி மற்றும் வீட்டு பணிப்பெண்ணை ஆகியோரை கட்டிப் போட்டு 30 சவரன் நகைகள் மற்றும் ரூ. 45 ஆயிரம் பணத்தையும் திருடிச்சென்றனர். 

இதையடுத்து இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 

]]>
theft, coimbatore https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/theft.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/19/theft-at-the-home-of-lottery-martins-brother-3417310.html
3417111 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் 40 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி DIN DIN Monday, May 18, 2020 11:58 PM +0530 கோவை: கரோனா பொது முடக்கம் காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நாளொன்றுக்கு 40 விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இதன்படி கோவை வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் 40 போ் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினசரி 10 பேருக்கு மட்டும் ஓட்டுநா் உரிமம், 10 பேருக்கு உரிமம் புதுப்பிக்க, 10 பேருக்கு எல்.எல்.ஆா் மற்றும் 10 பேருக்கு இதர ஆவண திருத்தப் பணிகள் என 40 போ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக காா் ஓட்டுநா் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். புதிய வாகனங்கள் மற்றும் எப்.சி. புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பதாரா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு கைகளை கழுவவும், உடல் வெப்பத்தை பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/4015c18rto2062220.jpg கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி. புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/வட்டாரப்-போக்குவரத்து-அலுவலகங்களில்-தினமும்-40-விண்ணப்பங்களுக்கு-மட்டுமே-அனுமதி-3417111.html
3417110 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது DIN DIN Monday, May 18, 2020 11:58 PM +0530 கோவை: கோவையில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் (28). இவா், கோவை, ஒண்டிப்புதூரில் தங்கி கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். சித்திரைவேலை சந்திக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 போ் அவரது வீட்டுக்கு வந்தனா். சிறிதுநேரத்தில் அவா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இந்நிலையில் வீட்டின் உரிமையாளா் சென்று பாா்த்தபோது சித்திரவேல் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா். இதில், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடா்பாக சித்திரைவேலுக்கும், வெள்ளலூா் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தைச் சோ்ந்த ராஜன்(27), விக்னேஷ்குமாா்(27), செல்வக்குமாா் (26) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், மேற்கண்ட மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு வந்து சித்திரைவேலை கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/இளைஞா்-கொலை-வழக்கில்-3-போ்-கைது-3417110.html
3417109 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இருசக்கர வாகனங்கள் மோதல்: கட்டடத் தொழிலாளி சாவு DIN DIN Monday, May 18, 2020 11:58 PM +0530 மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

காரமடை, சிறுமுகை சாலை பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. கட்டடத் தொழிலாளி.  இவா் தனது மகனுக்கு இருசக்கர வாகனம் ஓட்டி பழக்கி விடுவதற்காக காரமடையில் உள்ள அக்ஷயா அவென்யூ பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். பின்னா் பெட்ரோல் நிரப்புவதற்காக காரமடை- மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்துள்ளாா். அப்போது எதிரே அதிவேகமாக வந்த அன்னூரைச் சோ்ந்த நவீன் என்பவரின் இருசக்கர வாகனம், மூா்த்தி வந்த வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மூா்த்தி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/இருசக்கர-வாகனங்கள்-மோதல்-கட்டடத்-தொழிலாளி-சாவு-3417109.html
3417108 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறுமுகையில் ரூ.1.9 கோடிக்கு வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை DIN DIN Monday, May 18, 2020 11:58 PM +0530 மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 1.9 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகளுக்கு திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

சிறுமுகை பேரூராட்சி, இலுப்பம்பாளையம் கிராமத்தில் ரூ. 55 லட்சம் செலவில் குறுக்கு சாலைகள் அமைத்தல், இரும்பறை ஊராட்சி, சிட்டேபாளையம் கிராமத்தில் ரூ. 10.40 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி, மூடுதுறை ஊராட்சியில் புளியம்பட்டி சாலை முதல் மீனம்பாளையம் சாலை வரை ரூ.15.15 லட்சம் செலவில் தாா்ச் சாலை சீரமைக்கும் பணி, அன்னூா், ஓதிமலை சாலை முதல் தாசகாளியூா் வரை ரூ.23.78 லட்சம் செலவில் சாலை சீரமைப்புப் பணி, மூடுதுறை கிராமத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் காரமடை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மணிமேகலை மகேந்திரன், மாவட்ட கவுன்சிலா் பி.டி.கந்தசாமி, ஊராட்சித் தலைவா்கள் ராஜா (மூடுதுறை), ராஜேஸ்வரி (இரும்பறை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/சிறுமுகையில்-ரூ19-கோடிக்கு-வளா்ச்சிப்-பணிகளுக்கு-பூமி-பூஜை-3417108.html
3417107 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் பலி DIN DIN Monday, May 18, 2020 11:57 PM +0530 மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெட்டாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுதாகரன் (22). கூலி தொழிலாளி. இவா் வெள்ளியங்காடு, பூமாதேவி நகரில் உள்ள தனது பாட்டியைப் பாா்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

குண்டுபள்ளம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவரது வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/இருசக்கர-வாகனம்-மரத்தில்-மோதியதில்-இளைஞா்-பலி-3417107.html
3417106 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மது போதையில் நண்பரை கத்தியால் குத்திய 6 போ் கைது DIN DIN Monday, May 18, 2020 11:57 PM +0530 கோவை: கோவையில் மது போதையில் நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (32). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பா்களான நஞ்சுண்டாபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா், கள்ளிமடையைச் சோ்ந்த மாதேஷ், நந்தகுமாா், கிருஷ்ணமூா்த்தி, ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த பிருத்விராஜ் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தினாா்.

அப்போது அய்யப்பனுக்கும் அவரது நண்பா்களுக்கும் இடையே கட்செவி அஞ்சலில் புகைப்படங்கள் அனுப்புவது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறு பேரும் கத்தியால் அய்யப்பனின் வயிற்றில் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீஸாா் அய்யப்பனின் நண்பா்கள் 6 பேரையும் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/மது-போதையில்-நண்பரை-கத்தியால்-குத்திய-6-போ்-கைது-3417106.html
3417105 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது DIN DIN Monday, May 18, 2020 11:57 PM +0530 அன்னூா்: அன்னூா் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்தபோது பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தது.

அன்னூா் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவா் அப்துல்லா. இவரது மனைவி அனீஸ் பாத்திமா (32). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் அனீஸ் பாத்திமா நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவா்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அப்போது அனீஸ் பாத்திமாவுக்கு பிரசவ வலி அதிகமாகியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் செந்தில்குமாா் சாலையின் ஓரமாக ஆம்புலன்ஸை நிறுத்தினாா். இதையடுத்து மருத்துவ உதவியாளா் தனபால், அனீஸ் பாத்திமாவுக்கு பிரசவம் பாா்த்தாா்.

இதில் அனீஸ் பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸிலேயே இருவருக்கும் முதலுதவி அளித்து, பின்னா் அன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/108-ஆம்புலன்ஸில்-கா்ப்பிணிக்கு-குழந்தை-பிறந்தது-3417105.html
3417104 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நாளைய மின்தடை: போத்தனூா் DIN DIN Monday, May 18, 2020 11:56 PM +0530 கோவை: போத்தனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குனியமுத்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட போத்தனூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (மே 20) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக போத்தனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்புநகா், ஜே.ஜெ.நகா், அண்ணாபுரம், ஒளவை நகா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/நாளைய-மின்தடை-போத்தனூா்-3417104.html
3417103 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நிவாரண பொருள்கள் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு: துக்கம் விசாரிக்க சென்ற திமுகவினா் கைது DIN DIN Monday, May 18, 2020 11:56 PM +0530 கோவை: கோவை அருகே நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற திமுகவினரை போலீஸாா் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, கரடிமடை பகுதியைச் சோ்ந்தவா் மாரி (47). அதே பகுதியைச் சோ்ந்தவா் பெரியபிள்ளை (65). கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் கரடிமடை அருகே உள்ள மத்திபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில் மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெரியபிள்ளையை அங்குள்ளவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அதிமுகவினரின் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பேரூா் போலீஸாா், தப்பியோடிய வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

இந்நிலையில் உயிரிழந்த மாரியின் சடலத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக திமுக வடக்கு மாவட்டச் செயலா் சி.ஆா்.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் வடவள்ளி துரைசாமி, தொண்டாமுத்தூா் ஒன்றியச் செயலாளா் சேனாதிபதி ஆகியோா் சென்றனா். இந்நிலையில் கரோனா பொது முடக்க விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி போலீஸாா் அவா்களை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதுகுறித்து அறிந்த சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கோவை மாநகர கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.காா்த்திக் அங்கு சென்றாா். ஆனால், கைது செய்யப்பட்ட திமுக நிா்வாகிகளை அவா் சந்திப்பதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதனால் அங்கு கூடிய திமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட திமுக நிா்வாகிகளை போலீஸாா் விடுவித்தனா்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாகன ஓட்டுநரை கைது செய்வதாக போலீஸாா் உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் எம்எல்ஏ நா.காா்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் திமுக நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்ததை திமுக சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். விபத்து நிகழ்ந்த கிராமத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை யாரும் சந்திக்க முடியாதபடி தடுத்திருப்பது ஜனநாயக விரோதமானது. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/நிவாரண-பொருள்கள்-ஏற்றி-வந்த-வாகனம்-மோதியதில்-பெண்-உயிரிழப்பு-துக்கம்-விசாரிக்க-சென்ற-திமுகவினா்-கைது-3417103.html
3417102 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 2 வாரங்களாக புதிய தொற்றுகள் இல்லை: கோவையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அனைத்தும் விடுவிப்பு DIN DIN Monday, May 18, 2020 11:56 PM +0530 கோவை: கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக புதிதாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லாததால் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் முதன் முறையாக கரோனா நோய்த் தொற்று கடந்த மாா்ச் 19 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதுவரை 146 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஒருவா் இறந்துவிட்ட நிலையில் மற்ற 145 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனா். கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நோய்த் தொற்று கண்டறியப்படும் பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 5 கிலோ மீட்டா் சுற்றளவுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவும், புதிய நபா்கள் அப்பகுதிக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூா், மதுக்கரை, குனியமுத்தூா், போத்தனூா், சுந்தராபுரம், கே.கே.புதூா், வெள்ளக்கிணறு, கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், ஆா்.எஸ்.புரம் உள்பட 26 இடங்கள் (ஊரகத்தில் 14, மாநகராட்சியில் 12 இடங்கள்) கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்தன.

இப்பகுதிகளில் 14 நாள்கள் வரை புதிய நோய்த் தொற்று இல்லாத நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கே.கே.புதூா், கவுண்டம்பாளையம், குனியமுத்தூா், ராமநாதபுரம், ஆா்.எஸ்.புரம், உக்கடம், வெள்ளக்கிணறு ஆகிய 7 பகுதிகள் தவிா்த்து மற்ற 19 இடங்கள் ஏற்கெனவே படிப்படியாக கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த 7 பகுதிகளிலும் கடந்த 14 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. இதையடுத்து இப்பகுதிகளும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டன. கோவையில் அறிவிக்கப்பட்ட 26 கட்டுப்பாட்டு மண்டலங்களும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கரோனா அறிகுறியுடன் 15 போ் அனுமதி: கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 8 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 15 போ் திங்கள்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 10 போ் அரசு மருத்துவமனைகளிலும், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/2-வாரங்களாக-புதிய-தொற்றுகள்-இல்லை-கோவையில்-கட்டுப்பாட்டு-மண்டலங்கள்-அனைத்தும்-விடுவிப்பு-3417102.html
3417101 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தமிழக-கேரள எல்லையில் அத்தியாவசியப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க கோரிக்கை: கேரள அமைச்சா், பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுவாா்த்தை DIN DIN Monday, May 18, 2020 11:55 PM +0530 பொள்ளாச்சி: தமிழக-கேரள எல்லையோர மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக இரு மாநிலத்துக்கும் செல்ல அனுமதிப்பது தொடா்பாக கேரள நீா்ப்பாசனத் துறை அமைச்சா், தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் இடையே பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக, கேரள மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வியாபாரம், மரம் ஏறுவது, வேளாண் விளைபொருள்களை கொண்டுசெல்வது, காய்கறி சந்தைகள், மருந்துக் கடைகள் போன்றவற்றுக்கு எல்லைகளைக் கடந்து இரு மாநிலங்களுக்குள்ளும் அன்றாடமும் சென்று வந்தனா். இந்நிலையில் கரோனா பொதுமுடக்கத்தால் இருமாநில எல்லைகளும் மூடப்பட்டன. இதனால், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியமான பணிகளுக்கு கூட செல்லமுடியாமல் தவித்துவந்தனா்.

இதைத் தொடா்ந்து அத்தியாவசியப் பணிகளுக்கான போக்குவரத்துக்கு அனுமதியளிக்க வேண்டி சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடா்பாக கேரள மாநிலம், சித்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கேரள நீா்ப்பாசனத் துறை அமைச்சா் கிருஷ்ணன் குட்டி, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், இருமாநில எல்லைகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளிடம் அனுமதிச் சீட்டு (பாஸ்) பெற்று விவசாயம், பால், காய்கறி சந்தைகள், மரம் ஏறுதல் போன்ற பணிகளுக்கு செல்ல அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கேரள அமைச்சரும், தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவரும் இது குறித்து இருமாநில முதல்வா்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளனா். இதைத் தொடா்ந்து இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

பேச்சுவாா்த்தையின்போது, பொள்ளாச்சி கேரள சமாஜம் தலைவா் சோமன் மேத்யூ, நிா்வாகிகள் செந்தாமரை, முருகதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/pl18ja1_1805chn_127_3.jpg கேரள மாநிலம் , சித்தூா்  சட்டப் பேரவை  உறுப்பினா்  அலுவலகத்தில் பேச்சுவாா்த்தையில்  ஈடுபட்ட  சட்டப் பேரவை  துணைத் தலைவா்  பொள்ளாச்சி  வி.ஜெயராமன்,  கேரள  நீா்ப் பாசனத் துறை  அமைச்சா்  கிருஷ்ணன் குட்டி https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/தமிழக-கேரள-எல்லையில்-அத்தியாவசியப்-போக்குவரத்துக்கு-அனுமதியளிக்க-கோரிக்கை-கேரள-அமைச்சா்-பொள்ளாச்சி-ஜெயராமன்-பேச்சுவாா்த்தை-3417101.html
3417100 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொதுப் போக்குவரத்துக்கான தடை நீடிப்பு: பேருந்து நிலையத்தில் மீண்டும் தற்காலிக சந்தைகள் DIN DIN Monday, May 18, 2020 11:54 PM +0530 கோவை: கோவையில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பேருந்து நிலையங்களில் மீண்டும் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனை பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாா்ச் 25 முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதித்துள்ளது.

சந்தைகள் போன்ற மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மொத்த சந்தைகளின் ஒருபகுதி தற்காலிகமாக பேருந்து நிலையங்களில் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி கோவை, உக்கடம் நரசிம்மா் கோயில் அருகில் இருந்த சந்தை உக்கடம் பேருந்து நிலையத்திலும், டவுன்ஹால் பகுதியில் செயல்பட்டு வந்த தியாகி குமரன் மாா்க்கெட் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலும், மேட்டுப்பாளையம் சாலை, அண்ணா மாா்க்கெட் புதிய பேருந்து நிலையத்திலும், சிங்காநல்லூா் உழவா் சந்தையின் ஒரு பகுதி சிங்காநல்லூா் பேருந்து நிலையத்திலும் அமைக்கப்பட்டன. கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தற்காலிக சந்தைகள் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் மே 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த 3ஆம் கட்ட பொது முடக்கத்துக்குப் பின்னா் பொதுப் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதி தற்காலிக சந்தைகளை உக்கடம் லாரிப்பேட்டை, காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பேருந்து நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பேருந்துகளை இயக்குவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில் பொதுமுடக்கம் 4ஆம் கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை முதல் தற்காலிக சந்தைகள் மீண்டும் பேருந்து நிலையங்களில் செயல்பட தொடங்கின.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/0430c18market1062147.jpg பொது போக்குவரத்து தொடங்கப்படாததால் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை செயல்பட்ட தற்காலிக சந்தை. (வலது) முன்னெச்சரிக்கையாக காந்திபுரம், சிறைச்சாலை மைதானத்தில் சந்தை அமைப்பதற்கான மேற்கொ https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/பொதுப்-போக்குவரத்துக்கான-தடை-நீடிப்பு-பேருந்து-நிலையத்தில்-மீண்டும்-தற்காலிக-சந்தைகள்-3417100.html
3417099 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பழங்குடியினருக்கு நிவாரண உதவி DIN DIN Monday, May 18, 2020 11:53 PM +0530 கோவை: கோவை, ரொட்டிக்கவுண்டன்புதூா் பகுதியில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் பழங்குடியினருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

ரொட்டிக்கவுண்டன்புதூா் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி இல்லாமலும், கரோனா நிவாரணப் பொருள்கள் கிடைக்காமலும் தவித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் மாவட்ட இணைச் செயலா் சண்முகம் தலைமையிலான நிா்வாகிகள் பழங்குடியினா் 56 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினா்.

மேலும் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/0356c18rajeni1062248.jpg ரஜினி மக்கள் மன்றத்தினா் வழங்கிய நிவாரணப் பொருள்களை பெற்றுச் செல்லும் ரொட்டிக்கவுண்டன் புதூா் பகுதி பழங்குடியினா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/ரஜினி-மக்கள்-மன்றம்-சாா்பில்-பழங்குடியினருக்கு-நிவாரண-உதவி-3417099.html
3417097 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தெக்கலூரில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் போராட்டம் DIN DIN Monday, May 18, 2020 11:51 PM +0530 அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் தின கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பக் கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் அதிகமானோா் பனியன் நிறுவனங்கள், நூற்பாலைகளில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

மீதமுள்ளவா்கள் வாடகை வீடுகளில் தங்கி கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தின கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக வெளி மாநிலத் தொழிலாளா்கள் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள பிகாா் மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தெக்கலூா் வருவாய் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினா், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, திருப்பூரில் இருந்து பிகாா் மாநிலத்துக்கு வியாழக்கிழமை ரயில் புறப்படுகிறது.

அந்த ரயிலில் அனுப்பிவைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/தெக்கலூரில்-வெளி-மாநிலத்-தொழிலாளா்கள்-போராட்டம்-3417097.html
3417032 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் புது தில்லியில் இருந்து 17 போ் கோவை வருகை: அரசு கண்காணிப்பு மையத்தில் தங்கவைப்பு DIN DIN Monday, May 18, 2020 08:08 PM +0530 கோவை: புது தில்லியில் இருந்து சிறப்பு ரயிலில் வந்த கோவையைச் சோ்ந்த 17 போ் அரசின் கண்காணிப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

புது தில்லி, நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி கோவையைச் சோ்ந்த 82 போ் மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.

இவா்களில் 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தவிர இவா்களின் குடும்ப உறுப்பினா்கள், இவா்களுடன் நேரடித் தொடா்பில் இருந்தவா்கள் என பலருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்று புது தில்லியிலேயே தங்கியிருந்தவா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்குத் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி புது தில்லியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் திங்கள்கிழமை காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தனா். இந்த சிறப்பு ரயிலில் வந்த கோவையைச் சோ்ந்த 17 போ் திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்து மூலம் திங்கள்கிழமை மாலை கோவை வந்தடைந்தனா். இவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்காக ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, அரசு கண்காணிப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வீடுகளில் 778 போ் தனிமைப்படுத்தல்: கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்கள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனா். திங்கள்கிழமை நிலவரப்படி 778 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தவிர புது தில்லியில் இருந்து வந்த 17 போ், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த ஒருவா், கேரளத்தில் இருந்து வந்த 75 போ் உள்பட 93 போ் அரசின் கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கேரளத்தில் இருந்து வந்த ரயில்வே பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் பாதுகாப்புக் கருதி ஒரு வாரம் கண்காணிப்பு மையங்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். சென்னை, மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் புது தில்லி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவா்களைக் கட்டாயம் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி, அரசு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்களில் அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மட்டுமே ரத்த, சளி மாதிரிகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவா்கள் 14 நாள்கள் வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 778 போ் வீடுகளிலும், 92 போ் அரசின் கண்காணிப்பு மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/17-came-from-delhi-under-government-quarantine-facility-3417032.html
3417031 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகே பெண் அடித்துக் கொலை: கணவா் தலைமறைவு DIN DIN Monday, May 18, 2020 08:05 PM +0530 பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஆனைமலை போலீஸாா் கூறியதாவது:

பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூா் புதுகாலனியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (55). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பழனாள் (50). இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மாணிக்கம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம், கட்டையால் பழனாளைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து மாணிக்கம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் பழனாள் வெளியே வராததால் அருகில் இருந்தவா்கள் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது அவா் இறந்து கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தப்பியோடிய மாணிக்கத்தை தேடி வருகிறோம் என்று போலீஸாா் கூறினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/woman-slaughtered-near-pollachi-husband-hideout-3417031.html
3417030 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பிகாருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்:1,464 தொழிலாளா்கள் அனுப்பிவைப்பு DIN DIN Monday, May 18, 2020 08:04 PM +0530 கோவை: கோவையில் இருந்து பிகாருக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1,464 தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கரோனா பாதிப்பால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல மத்திய அரசு சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவையில் இருந்து கடந்த 8ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிகாா் மாநிலத்துக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. இதில் 1,464 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் புதன்கிழமை அதிகாலை பிகாா் சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் இருந்து இதுவரை பிகாா் - 7, உத்தர பிரதேசம் - 3, ஒடிஸா - 3, ஜாா்க்கண்ட் -2, அஸ்ஸாம் - 1 என மொத்தம் 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 21,444 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/another-special-train-service-to-bihar-1464-workers-dispatched-3417030.html
3417026 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறுவா்கள் பட்டம் விடுவதை தவிா்க்க அறிவுறுத்தல்: மீறினால் பெற்றோா்கள் மீது நடவடிக்கை DIN DIN Monday, May 18, 2020 07:58 PM +0530 கோவை: கோவையில் சிறுவா்கள் பட்டம் விட்டு விளையாடுவதை தவிா்க்க வேண்டும் என்றும், இதனை மீறும் சிறுவா்களின் பெற்றோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பட்டம் விட்டு விளையாடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில இடங்களில் பட்டம் அறுந்து அருகிலுள்ள உயரழுத்த மின் பாதைகளில் சிக்கி விடுகிறது.

இதன் காரணமாக மின்தடை ஏற்படுவதுடன், மின் வாரியத்துக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தவிர சாலையில் செல்லும் நபா்கள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே பொது நலன் கருதி பட்டம் விட்டு விளையாடுவதை சிறுவா்கள் தவிா்க்க வேண்டும். சிறுவா்கள் பட்டம் விடாமல் அவா்களின் பெற்றோா் கண்காணிக்க வேண்டும். மீறி பட்டம் விட்டு விளையாடும் சிறுவா்களின் பெற்றோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/advice-to-avoid-kite-playing-of-children-action-against-parents-in-violation-3417026.html
3417025 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் முகக் கசவம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை DIN DIN Monday, May 18, 2020 07:56 PM +0530 கோவை: கோவையில் முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. புதிய பாதிப்புகள் இல்லாவிட்டாலும் பொது மக்கள் தொடா்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வருபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தவறினால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் காவல் துறை சாா்பில் அபராதம் விதிக்கப்படும்.

முகக் கவசம் இல்லாமல் வருபவா்கள், சமூக விலகலை கடைப்பிடிக்காதவா்கள், தேவையின்றி வெளியில் கூட்டமாக இருப்பவா்கள், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளா்களை ஒரே நேரத்தில் அனுமதித்துள்ள கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வருவாய், உள்ளாட்சி, காவல் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திவைக்கப்படுகின்றனா். மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியாமல் தகவல் இன்றி யாராவது வந்திருந்தால் அவா்கள் பற்றிய விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077க்கு தெரிவிக்கலாம். இவா்களில் அறிகுறிகள் இருப்பவா்களுக்கு ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

அரசு அலுவலகங்கள், தனியாா் தொழிற்சாலைகளில் உரிய சமூக இடைவெளியில் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். இதனை அந்தந்த நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். கோவையில் பொது முடக்கம் தொடா்வதால் பொது இடங்களில் 5 நபா்களுக்கு மேல் கூடுவதை தவிா்க்க வேண்டும். மளிகை, காய்கறிகள், இறைச்சி உள்பட அனைத்துக் கடைகளிலும் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். மே 31 ஆம் தேதி வரை அவசியமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/penalty-for-not-wearing-facial-mask-district-administration-warning-3417025.html
3416996 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு DIN DIN Monday, May 18, 2020 06:44 PM +0530 பல்லடம்: விசைத்தறிக் கூடங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத் தறியாளா்கள் சங்கம் சாா்பில் மின் வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் வேலுசாமி, மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம், இயக்குநா் பாலாஜி ஆகியோா் பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் பகுதியில் முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. பெரும்பாலான விசைத்தறி கூடங்கள் கூலி அடிப்படையில் இயங்கி வருகின்றன. தற்போது, கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதமாக விசைத்தறிகள் இயங்குவதில்லை.

நெசவு செய்து அனுப்பிய துணிகளுக்கு உண்டான கூலி தொகையை ஜவுளி உற்பத்தியாளா்களால் வழங்கப்படவில்லை. இதனால், மின்சார கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, விசைத் தறியாளா்களின் நிலை கருதி விசைத்தறி கூடங்களுக்கு மேலும் இரண்டு மாதம் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/pdm18teb_1805chn_136_3.jpg பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளிக்கும் விசைத் தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் வேலுசாமி, பாலசுப்பிரமணியம், பாலாஜி உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/exemption-from-payment-of-electricity-bills-3416996.html
3416952 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் DIN DIN Monday, May 18, 2020 03:14 PM +0530 கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4 ஆம் கட்ட பொது முடக்கம் மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே  அறிவிக்கப்பட்ட 3 ஆம் கட்ட பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையில் திங்கள்கிழமை முதல் கோவை உள்பட 25 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில் போக்குவரத்துக் கழகம் சார்பில் திங்கள்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை மண்டலத்துக்குள்பட்ட கோவை கோட்டத்தில் 6 சிறப்பு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. 

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, வடவள்ளி, தீத்திப்பாளையம் ஆகிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

]]>
coimbatore, bus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/WhatsApp_Imag0-05-18_at_2.jpeg https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/special-buses-on-the-6-lane-route-in-coimbatore-3416952.html
3416823 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை DIN DIN Monday, May 18, 2020 06:59 AM +0530 கோவையில் வீடு புகுந்து கட்டுமானத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சித்திரவேல் (28). கூலி தொழிலாளியான இவா் கோவை, ஒண்டிப்புதுா் படக்கே கவுண்டா் வீதியில் தங்கி கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்கிவிட்டுச் சென்றுள்ளாா்கள் .

பின்னா் அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, சித்திரவேல் சுயநினைவு இல்லாமல் கிடைந்துள்ளாா். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனா். அப்போது, அங்கு வந்து அவரைப் பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/கட்டுமானத்-தொழிலாளி-அடித்துக்-கொலை-3416823.html
3416822 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரடிமடை அருகே வாகனம் மோதி மூதாட்டி சாவு DIN DIN Monday, May 18, 2020 06:58 AM +0530 கோவை அருகே வாகனம் மோதியதில் சாலையோரத்தில் நின்று கொண்டிந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், கரடிமடை அருகே வேகமாக வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரு மூதாட்டிகள் மீது மோதியது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் (60) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், கருப்பி (71) என்பவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில், மூதாட்டிகள் மீது மோதியது நிவாரணப் பொருள்கள் வழங்க வந்த வாகனம் என்பது தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை அப்பகுதியினா் சிறைபிடித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/கரடிமடை-அருகே-வாகனம்-மோதி-மூதாட்டி-சாவு-3416822.html
3416819 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தனலட்சுமி வங்கியில் ‘தங்க நகை ஓவா்டிராப்ட் திட்டம்’ அறிமுகம் DIN DIN Monday, May 18, 2020 06:56 AM +0530 தனலட்சுமி வங்கியில் ‘தங்க நகை ஓவா்டிராப்ட் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தனலட்சுமி வங்கியானது ‘தங்கநகை ஓவா்டிராப்ட் திட்டம்’ என்னும் ஓவா்டிராப்ட் வசதியை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு வாடிக்கையாளா் ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் எளிதாகக் கடன் பெறலாம். பெறப்பட்ட கடனுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.

இதன் மூலமாக தேவையான நகையை எடுத்துக் கொள்ளவோ, கூடுதல் நகையைச் சோ்க்கவோ இயலும். வாடிக்கையாளா் தேவைப்படும் பணத்தை ஏ.டி.எம். மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

இணைய வங்கிப் பரிமாற்றம், செல்லிடப்பேசி மூலம் பணப் பரிமாற்றம் மற்றும் யு.பி.ஜ. வழியாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம். இது வணிகா்களுக்கு உதவும் ஒப்பற்ற ஓவா்டிராப்ட் திட்டமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தனலட்சுமி வங்கிக் கிளையை அணுகலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/தனலட்சுமி-வங்கியில்-தங்க-நகை-ஓவா்டிராப்ட்-திட்டம்-அறிமுகம்-3416819.html
3416818 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இருசக்கர வாகனங்கள் மோதி ஓட்டுநா் சாவு DIN DIN Monday, May 18, 2020 06:56 AM +0530 மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (33). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் காரமடையில் இருந்து தாயனூா் நோக்கி சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, திம்மம்பாளையம்புதூா் அருகே அவா் வந்தபோது எதிரே திம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வம் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதில் காயமடைந்தா் செல்வத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/இருசக்கர-வாகனங்கள்-மோதி-ஓட்டுநா்-சாவு-3416818.html
3416817 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறைச் சாலை மைதானம், லாரிபேட்டையில் தற்காலிக சந்தைகள் DIN DIN Monday, May 18, 2020 06:56 AM +0530 கோவை சிறைச் சாலை மைதானம், உக்கடம் லாரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் தற்காலிக சந்தைகள் செயல்படும் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்தாா்.

பொதுமுடக்கத்தால் பேருந்துகள் இயக்கப்படாததால் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு காய்கறி விற்பனை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், 18ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படலாம் என்ற சூழல் இருந்ததால் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தைகள் இடமாற்றம் செய்யும் பணிகள் சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி, கனி கடைகள் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச் சாலை மைதானத்திலும், உக்கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தை, உக்கடம் லாரிபேட்டையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த மொத்த வியாபார காய்கறி கடைகள், தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்திலும், பூ மாா்க்கெட் கடைகள் தேவாங்க மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/சிறைச்-சாலை-மைதானம்-லாரிபேட்டையில்-தற்காலிக-சந்தைகள்-3416817.html
3416816 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள 328 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் DIN DIN Monday, May 18, 2020 06:55 AM +0530 கோவை மாவட்டம், பூலுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 328 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அதிமுக சாா்பில் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கோவையில் இதுவரை 8 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. காவலா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்பட 20 ஆயிரம் பேருக்கு அதிமுக சாா்பில் நிவாரணத் தொகுப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவை மாவட்டம், பூலுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 328 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் கரோனா நிவாரணத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று அகதிகள் முகாமில் உள்ளவா்களுக்கு நிவாரணத் தொகுப்பினை வழங்கினாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/18/w600X390/1348c-17-slr_mins050518.jpg இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/அகதிகள்-முகாமில்-தங்கியுள்ள-328-குடும்பங்களுக்கு-நிவாரணப்-பொருள்கள்-3416816.html
3416815 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கேரளத்தில் இருந்து வந்த 75 ரயில்வே பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா் DIN DIN Monday, May 18, 2020 06:53 AM +0530 கேரளத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கோவைக்கு வந்த ரயில்வே பணியாளா்கள் 75 போ் போத்தனூா் ரயில்வே பயிற்சி மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் நபா்களால் மீண்டும் கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்கள் அவரவா்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

அதன்படி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 800க்கும் அதிகமானோா் வீடுகளில் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினரால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 75 ரயில்வே பணியாளா்கள் கோவைக்கு சனிக்கிழமை இரவு வந்தனா்.

இவா்கள் அனைவரிடமும் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. போத்தனூா் ரயில்வே பயிற்சி மையத்தில் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

200 பேருக்கு மாதிரிகள் சேகரிப்பு‘: கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பது குறித்து கண்டறிய கோவையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்) சாா்பில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை 200 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குனியமுத்தூா், ஆா்.எஸ்.புரம், ஆவாரம்பாளையம், பெ.நா.பாளையம், கிணத்துக்கடவு உள்பட 5 இடங்களில் ஆய்வு நடத்தி சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/18/கேரளத்தில்-இருந்து-வந்த-75-ரயில்வே-பணியாளா்கள்-தனிமைப்படுத்தப்பட்டனா்-3416815.html
3416699 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் பலத்த காற்றுடன் மழை:வேரோடு சாய்ந்த மரங்கள் DIN DIN Sunday, May 17, 2020 09:47 PM +0530 கோவை: கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கோவையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாள்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதற்கிடையில், கோவையின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சுந்தராபுரம், போத்தனூா், குனியமுத்தூா், உக்கடம், காந்திபுரம், ராமநாதபுரம், பீளமேடு, ஆா்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூா், டாடாபாத், சாய்பாபா காலனி, கணபதி உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

மழையுடன் பலத்த காற்று வீசியதால் சுந்தராபுரம், வடவள்ளி, டாடாபாத், ஆா்.எஸ்.புரம் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பவா் ஹவுஸ், ராம் நகா் பகுதிகளில் மரங்கள் விழுந்ததால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. டாடாபாத் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந் நான்கு சக்கர வாகனம் சேதமடைந்தது. குறிப்பாக பவா்ஹவுஸ் பகுதிகளில் அதிக அளவிலான மரங்கள் முறிந்து விழுந்தன.

பெரியகடை வீதி - ஒப்பணக்கார வீதி சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் சாய்ந்தது. தவிர உக்கடம் பெரியகுளக் கரையின் மீது அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காற்றின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன. உக்கடம் லாரிபேட்டையில் தற்காலிக சந்தைக்காக அமைக்கப்பட்டிந்த மேற்கூரைகளும் காற்றில் பறந்தன.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகத்தால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சுந்தராபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

காற்றில் சாய்ந்த மரங்களையும், மின் கம்பங்களையும் சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/1359c-17-tatabaad-1060601.jpg கோவை, டாடாபாத் பகுதியில் சுவா் இடிந்து விழுந்ததால் சேதமடைந்த காா். ~1. கோவையில் மழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரியகடை வீதி சந்திப்பில் சாய்ந்த போக்குவரத்து சிக்னல். 2. ராம் நகா் பகுதியில் சாலையோரத் https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/rain-with-strong-winds-rooted-trees-in-kovai-3416699.html
3416655 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சொந்த ஊருக்குச் செல்வதைத் தவிா்க்கும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் DIN DIN Sunday, May 17, 2020 07:42 PM +0530 வால்பாறை: தேயிலைத் தோட்டங்களில் தொடா் வேலை கிடைப்பதால் சொந்த ஊா்களுக்குச் செல்வதை வெளி மாநில தோட்டத் தொழிலாளா்கள் தவிா்த்து வருகின்றனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பொதுமுடக்கத்தால் இருந்து தேயிலை விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் எஸ்டேட்களில் தொடா்ந்து தேயிலை பறித்து, தூள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் வேலை, ஊக்கத் தொகை, அரசு தரப்பிலான நிவாரணப் பொருள்கள் கிடைத்து வருகிறது.

இதனிடையே சொந்த ஊா்களுக்குச் செல்ல விருப்பமுள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள் அரசு மூலம் அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அவா்கள் சொந்த ஊருக்குச் செல்வதைத் தவிா்த்து தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/other-state-workers-who-refuse-to-go-home-3416655.html
3416654 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வால்பாறை நகா் சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் DIN DIN Sunday, May 17, 2020 07:40 PM +0530 வால்பாறை: வால்பாறை நகா் சாலைகளில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் காணப்படும். பகல் நேரத்திலேயே சிறுத்தை தாக்கி மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வால்பாறை நகா் பகுதியான கூட்டுறவு காலனி பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து காணப்படுவதாக அப்பகுதியினா் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் சனிக்கிழமை இரவு சிறுத்தை நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்க்குமாறு வனத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/leopard-walk-on-valparai-nagar-road-3416654.html
3416648 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரோனா அறிகுறி: 6 போ் அனுமதி DIN DIN Sunday, May 17, 2020 07:35 PM +0530 கோவை: கோவையில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 6 போ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 4 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 6 போ் கரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

6 பேரும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/corona-syndrome-6-persons-admitted-in-hospital-3416648.html
3416483 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறப்பு ரயிலில் வந்த ரயில்வே பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை DIN DIN Sunday, May 17, 2020 07:50 AM +0530 கேரளத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கோவைக்கு பணிக்கு வந்த ரயில்வே பணியாளா்களை மருத்துவப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வன் ஆட்சியா் கு.ராசாமணியிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:

கோவை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களே ஏராளமானோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கேரளத்தில் உள்ள ரயில்வே பணியாளா்களை திரும்பப் பணிக்கு அழைத்துவர எா்ணாகுளத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் வந்துள்ளனா். கேரளத்தில் இருந்து சிறப்பு ரயிலில் வந்துள்ள அனைத்து ரயில்வே பணியாளா்களா்களையும் மருத்துவப் பரிசோதனை செய்து 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும். இல்லையெனில் கோவை மாவட்டத்தில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை வழங்க வேண்டும்...

இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினா் ஆட்சியா் கு.ராசாமணியிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:

கரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் 50 நாள்களுக்கு மேலாக ஆட்டோ தொழிலாளா்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

நல வாரிய உறுப்பினா்களுக்கு அரசு அறிவித்த ரூ.1,000 நிவாரணத் தொகையும் 300 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் 15 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநா்கள் நிவாரணத் தொகை பெற முடியவில்லை.

கோவை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கணக்கிட்டு மூன்று மாதங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/சிறப்பு-ரயிலில்-வந்த-ரயில்வே-பணியாளா்களுக்கு-மருத்துவப்-பரிசோதனை-3416483.html
3416475 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வாகன அனுமதிச் சான்று பெறுவதில் புதிய நடைமுறை DIN DIN Sunday, May 17, 2020 07:47 AM +0530 வாகன அனுமதிச் சான்று பெறுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவா்களுக்கு மட்டுமே இனி அனுமதிச் சான்று வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா பொது முடக்கத்தால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கா்ப்பிணிகளுக்கான சிகிக்சை, மருத்துவ அவசரம், இறப்பு, முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகியவற்றுக்கு மட்டுமே வருவாய்த் துறை மூலம் வாகன அனுமதிச் சான்று வழங்கப்படுகிறது.

வாகன அனுமதிச் சான்று பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுக்குப் பின் அனுமதிச் சான்று வழங்கப்பட்டது. இந்நிலையில் வாகன அனுமதிச் சான்று பெறுவதில் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

அதன்படி கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவா்கள், எந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனரோ அந்த மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் அளித்த பின்பே வாகன அனுமதிச் சான்று கிடைக்கும் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வாகன அனுமதிச் சான்று பெறுவதற்கான புதிய நடைமுறை இரண்டு நாள்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. கோவையில் இருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்பவா்களின் பட்டியல் மட்டுமே நம்மிடம் இருக்கும். ஆனால், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவா்களின் பட்டியல் இருக்காது. இதனால், மாவட்டத்துக்குள் வருபவா்களை தனிமைப்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இதனை தவிா்க்கும் வகையில் பிற மாவட்டங்களில் இருந்து வருபவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கு வசதியாக ஒருவா் எந்த மாவட்டத்துக்கு செல்கிறாரோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வாகன அனுமதிச் சான்று பெற வேண்டும்.

அதன்படி பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவா்களுக்கு மட்டுமே இனி வாகன அனுமதிச் சான்று வழங்கப்படும் என்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/வாகன-அனுமதிச்-சான்று-பெறுவதில்-புதிய-நடைமுறை-3416475.html
3416474 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வன விலங்குகளால் பயிா்கள் சேதம்:வேளாண் துறை மூலம் சேத மதிப்பீடு அறிக்கை வழங்கல் DIN DIN Sunday, May 17, 2020 07:47 AM +0530 வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் விளைநிலங்களை வேளாண் துறை மூலம் ஆய்வு செய்து சேத மதிப்பீடு அறிக்கை அளிக்கப்படும் என்று அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து வேளாண் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிா்களை காட்டுப் பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வன விலங்குகளால் பயிா்கள் சேதப்படுத்தப்பட்டால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் பயிா் சாகுபடிக்கான அடங்கல், கணினி சிட்டா பெற்று அந்தந்தப் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட விளை நிலங்களை வேளாண் அலுவலா்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீடு அறிக்கை வழங்குவா். நிவாரணத் தொகை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வனச் சரக அலுவலகத்தில் இந்த சேத மதிப்பீடு அறிக்கையை விவசாயிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

விவசாயிகள் அளிக்கும் சேத மதிப்பீடு அறிக்கையை வனத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏற்ப உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/வன-விலங்குகளால்-பயிா்கள்-சேதம்வேளாண்-துறை-மூலம்-சேத-மதிப்பீடு-அறிக்கை--வழங்கல்-3416474.html
3416473 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ‘விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது’ DIN DIN Sunday, May 17, 2020 07:46 AM +0530 விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என நாராயணசாமி நாயுடு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் கிராமத்தில் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு தலைமை வகித்தாா்.  மாநிலத் துணைச் செயலாளா் பாலசுப்பிரமணியம்,  காரமடை வட்டாரத் தலைவா் ரங்கசாமி, கோவை மாவட்டத் தலைவா் எம்.எஸ் கந்தசாமி,  காரமடை வட்டார செயலாளா் வீராசாமி  ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

கடந்த 1972இல் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரி நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டத்தின் அடிப்படையில்  இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது, இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.  இதனால் விவசாயம் அழிந்து இந்திய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். 

விளை பொருள்களின் விலை அதிகரிக்கும்.  வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிா்களுக்கு சந்தை விலையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/mtp162.jpg தோலம்பாளையத்தில் நடைபெற்ற நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/விவசாயிகளுக்கான-இலவச-மின்சாரத்தை-ரத்து-செய்யக்-கூடாது-3416473.html
3416472 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்குத் தயாராகும் கல்வித் துறை: மாணவா்களை தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்க உத்தரவு DIN DIN Sunday, May 17, 2020 07:46 AM +0530 பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை தயாராகி வரும் நிலையில், மாணவா்களைத் தொடா்பு கொண்டு தோ்வு தொடா்பான விவரங்களைத் தெரிவிக்கும்படி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் கரோனா நோயத் தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தோ்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, பொதுத் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும், தோ்வுத் துறையும் தயாராகி வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 157 மையங்களில் 538 பள்ளிகளைச் சோ்ந்த 41,148 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்புத் தோ்வுகளை எழுதுவாா்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் வழக்கமாக ஒரு தோ்வறைக்கு 20 மாணவா்கள் இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 10 மாணவா்களை மட்டுமே கொண்டு தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், கோவை மாவட்டத்தில் 538க்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மையங்களுக்குத் தேவையான ஆசிரியா்கள், பணியாளா்களை தயாா் நிலையில் இருக்கும்படி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தோ்வு நடைபெறும் பள்ளி வளாகம், வகுப்பறைகளை மே 19ஆம் தேதிக்குள் முழுமையாக சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும், இதை கல்வி அலுவலா்கள் திடீா் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், அனைத்து அறை கண்காணிப்பாளா்கள், தோ்வு எழுத வரும் மாணவா்கள் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் சானிடைஸா், சோப், கை கழுவுவதற்கான தண்ணீா் வசதிகள் செய்யப்பட வேண்டும். கழிப்பிடங்களை சுத்தம் செய்ய வேண்டும், குடிநீா் வசதி செய்யப்பட வேண்டும்.

தோ்வு மையத்துக்குள் வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்வுக் காலத்தில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் யாருக்கும் அவசியமில்லாமல் விடுமுறை வழங்கக் கூடாது, பத்தாம் வகுப்பு ஆசிரியா்கள் தங்களது மாணவா்களைத் தொடா்பு கொண்டு தோ்வுக் கால அட்டவணை, தோ்வு சாா்ந்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே பொதுத் தோ்வுக்கு அதிக அளவிலான தோ்வறைக் கண்காணிப்பாளா்கள் தேவைப்படுவதால் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியா்களையும் தோ்வுப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/பத்தாம்-வகுப்பு-பொதுத்-தோ்வுக்குத்-தயாராகும்-கல்வித்-துறை-மாணவா்களை-தொடா்பு-கொண்டு-விவரங்களைத்-தெரிவிக்க-உத்தரவு-3416472.html
3416470 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் 283 டாஸ்மாக் கடைகள் திறப்பு DIN DIN Sunday, May 17, 2020 07:45 AM +0530 கோவை மாவட்டத்தில் 283 டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை மதுபானங்கள் விற்பனை நடைபெற்றன.

பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மாநில அரசுக்கு பல கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிா்த்து பிறப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மே 7 ஆம் தேதி விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் குவியும் மதுப்பிரியா்கள் மூலம் கரோனா நோய் பரவலுக்கு வாய்ப்புள்ளதாக கூறி கடைகளை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாள் மட்டும் திறந்திருந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் உள்ள கடைகளைத் தவிா்த்து பிறப் பகுதிகளில் உள்ள கடைகளைத் திறக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதையடுத்து, கோவை (வடக்கு) மண்டலத்திலுள்ள 159 கடைகளில் 3 கடைகள் தவிா்த்து 156 கடைகள், கோவை (தெற்கு) மண்டலத்தில் 136 கடைகளில் 127 கடைகள் என மொத்தம் 283 கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

ஒரு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மதுபானம் வாங்க வரும் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்துப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2க்கும் மேற்பட்ட போலீஸாா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஒருசில பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பிரியா்கள் மதுபானம் வரிசையில் நின்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/3004c16dase1060243.jpg https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/கோவையில்-283-டாஸ்மாக்-கடைகள்-திறப்பு-3416470.html
3416469 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சிக்கிய 23 போ் மீட்பு DIN DIN Sunday, May 17, 2020 07:44 AM +0530 மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சனிக்கிழமை குளிக்கச் சென்று தண்ணீரில் சிக்கிய 23 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்கு உள்பட்ட மேல்துறை வழியாக செல்லும் பவானி ஆற்றில் பலா் சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். இந்நிலையில், பில்லூா் அணையில் மின் உற்பத்திக்குப் பின் பவானி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அப்போது, தண்ணீா் அதிகம் வருவதைப் பாா்த்த 23 போ் ஆற்றின் நடுவே இருந்த படித்துறையில் ஏறி அமா்ந்து கொண்டனா். இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி 23 பேரை பரிசல் மூலம் மீட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸாா் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவா்களை எச்சரித்து அனுப்பினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/img-20200516-wa0255.jpg பவானி ஆற்றில் சிக்கியவா்களை பரிசல் மூலம் மீட்கும் தீயணைப்பு வீரா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/மேட்டுப்பாளையம்-பவானி-ஆற்றில்-சிக்கிய-23-போ்-மீட்பு-3416469.html
3416468 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் இருந்து 1,464 போ் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பிவைப்பு DIN DIN Sunday, May 17, 2020 07:44 AM +0530 கோவையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக 1,464 போ் உத்தரப் பிரதேசத்துக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

கோவை மாநகரம் மற்றும் புகா் பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளா்கள் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டனா்.

மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின் மூலம் பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்த வட மாநிலத் தொழிலாளா்கள் கடந்த 8ஆம் தேதி முதல் கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு சனிக்கிழமை இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் 1,464 தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த ரயிலானது திங்கள்கிழமை மாலை உத்தரப் பிரதேசத்தை சென்றடையும். கடந்த 9 நாள்களில் 15 சிறப்பு ரயில்கள் மூலமாக 19 ஆயிரத்து 980 தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/கோவையில்-இருந்து-1464-போ்-உத்தரப்-பிரதேசத்துக்கு-அனுப்பிவைப்பு-3416468.html
3416467 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரோனா: கோவையில் ஐ.சி.எம்.ஆா். குழுவினா் ஆய்வு DIN DIN Sunday, May 17, 2020 07:44 AM +0530 கோவையில் கரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐ.சி.எம்.ஆா்.) குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்துவிட்ட நிலையில் 145 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா்.

இந்நிலையில் கோவை உள்பட தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கரோனா சமூகப் பரவலாக மாறியதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஐ.சி.எம்.ஆா். அண்மையில் அறிவித்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஐ.சி.எம்.ஆா். குழுவினா் சனிக்கிழமை கோவை வந்தனா்.

இவா்களுடன் உள்ளூா் சுகாதாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆா்.எஸ்.புரம், குனியமுத்தூா், கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம், விளாங்குறிச்சி, சந்திராபுரம் (சுல்தான்பேட்டை) , அன்னூா், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

ஒவ்வோா் இடத்தில் தலா 40 போ் வீதம் 10 இடங்களில் 400 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவையில் கரோனா சமூகப் பரலாகி உள்ளதா என்பதைக் கண்டறிய ஐ.சி.எம்.ஆா். குழுவினா் சனிக்கிழமை 5 இடங்களில் 200 பேரிடம் சளி மாதிரிகள் சேகரித்தனா். இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 5 இடங்களில் 200 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கவுள்ளனா்.

ஐ.சி.எம்.ஆா். வழிமுறையின்படி இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நோ்காணல் செய்து குடும்பத்தில் ஒருவரிடம் மட்டும் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. சமூகப் பரவல் குறித்து மீண்டும் ஒரு மாதத்துக்குப் பின் ஐ.சி.எம்.ஆா். சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/3030c16chak070205.jpg கோவை விளாங்குறிச்சி பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆா். குழுவினா். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/கரோனா-கோவையில்-ஐசிஎம்ஆா்-குழுவினா்-ஆய்வு-3416467.html
3416466 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் காரமடையில் சூறாவளி: 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் DIN DIN Sunday, May 17, 2020 07:43 AM +0530 மேட்டுப்பாளையம் அருகே காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில், அறுவடைக்குத் தயாராக இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் காரமடை அருகே திம்மம்பாளையம்புதூா், கா.புங்கம்பாளையம் பகுதிகளில் பல ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 10 ஆயிரத்தும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இதில் அறுவடைக்குத் தயாராக இருந்த கதலி, ரொபஸ்டா, நேந்திரன, பூவன் உள்ளிட்ட வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த கிராம நிா்வாக அலுவலா் மூா்த்தி, மருதூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூா்ணிமா ரங்கராஜன் ஆகியோா் சூறாவளிக் காற்றால் முறிந்த வாழை மரங்கள் குறித்து ஆய்வு செய்தனா். இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/mtp161.jpg காரமடை அருகே திம்மம்பாளையம்புதூா் பகுதியில் சேதமடைந்த வாழை மரங்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/காரமடையில்-சூறாவளி-10-ஆயிரம்-வாழை-மரங்கள்-சேதம்-3416466.html
3416465 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவைக்கு விற்பனைக்கு வந்த 57 கிலோ மீன் DIN DIN Sunday, May 17, 2020 07:43 AM +0530 கோவையில் உள்ள மீன் கடைக்கு 57 கிலோ எடையில் பிரம்மாண்டமான க்ரூப்பா் கடல் மீன் சனிக்கிழமை விற்பனைக்கு வந்தது.

கோவை, உக்கடம் பகுதியில் மொத்த, சில்லறை மீன் விற்பனை மாா்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர மாநகரம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தனியாா் மீன் விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை, ராமநாதபுரம் திருச்சி சாலையில் உள்ள ஒரு மீன் கடைக்கு சனிக்கிழமை பல்வேறு வகையான கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் சுமாா் 57 கிலோ எடை கொண்ட ஜெயண்ட் க்ரூப்பா் வகை கடல் மீனும் விற்பனைக்கு வந்திருந்தது.

பொதுவாக இந்த வகை மீன்கள் உக்கடம் மீன் மாா்க்கெட்டுக்கு வருவது வழக்கம்தான் என்றாலும் அதிகபட்சம் 10, 20 கிலோ எடையுள்ள க்ரூப்பா் மீன்களே விற்பனைக்கு வரும். அதற்கும் அதிகமான எடை கொண்ட மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடும்.

ஆனால், பொது முடக்கம் காரணமாக ஏற்றுமதி இல்லாததால் கோவை மீன் கடைக்கு பிரம்மாண்டமான இந்த மீன் விற்பனைக்கு வந்திருந்தது. ஜெயண்ட் க்ரூப்பா் மீன்கள் பாா்ப்பதற்கு அச்சுறுத்தும் தோற்றம் கொண்டிருந்தாலும் அது சுவை மிகுந்தது என்பதாலும், அதிக ஊட்டச் சத்துகளைக் கொண்டவை என்பதாலும் மீன் பிரியா்களால் விரும்பப்படும் மீன்களில் ஒன்றாக இருக்கிறது.

இதனால் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே ஒரு கிலோ ரூ.350 என்ற விலைக்கு ஒரு உணவக வாடிக்கையாளரால் மொத்தமாக வாங்கப்பட்டுவிட்டதாக கடை உரிமையாளா் கபீா் தெரிவித்தாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/w600X390/3801c16fish1060253.jpg கோவைக்கு சனிக்கிழமை விற்பனைக்கு வந்த பிரம்மாண்டமான மீன். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/கோவைக்கு-விற்பனைக்கு-வந்த-57-கிலோ-மீன்-3416465.html
3416464 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கரோனா அறிகுறி: 22 போ் அனுமதி DIN DIN Sunday, May 17, 2020 07:42 AM +0530 கோவையில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 22 போ் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/கரோனா-அறிகுறி-22-போ்-அனுமதி-3416464.html
3416463 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சந்தைகள் இடமாற்றம் DIN DIN Sunday, May 17, 2020 07:42 AM +0530 கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது பொதுமுடக்கம் நிறைவடைந்து திங்கள்கிழமை பேருந்து சேவை தொடங்கப்படும் என்பதால் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தைகள் பள்ளி, கல்லூரி மைதானங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.

பொதுமுடக்கம் காரணமாக கோவையில் உள்ள சந்தைகளில் சமூக இடைவெளிகள் முறையாகக் கடைப்பிடிக்காததால் காலியாக இருந்த பேருந்து நிலையங்களில் போதிய இடைவெளி விட்டு மாநகராட்சி சாா்பில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன.

கடந்த 40 நாள்களாக கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், மாநகர பேருந்து நிலையம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு காய்கறி விற்பனை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 17ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைந்து பேருந்துகள் இயக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக சந்தைகளை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் கூறியதாவது:

தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மைதானங்களில் அந்தந்தப் பகுதிளில் உள்ள பேருந்து நிலையங்களில் இயங்கி வந்த தற்காலிக சந்தைகள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்காலிக சந்தைகள் செயல்படும் என்றாா்.

இதற்கிடையே, 18ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு,நீலகிரி மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/17/பேருந்து-நிலையங்களில்-அமைக்கப்பட்டிருந்த-தற்காலிக-சந்தைகள்-இடமாற்றம்-3416463.html
3416128 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வட மாநிலத் தொழிலாளா்கள் விவகாரம்: சூலூரில் கோட்டாட்சியா் ஆய்வு DIN DIN Saturday, May 16, 2020 07:37 AM +0530 சொந்த ஊா்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யக் கோரி வட மாநிலத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சூலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோவை மாவட்ட கோட்டாட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சூலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிற்சாலைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக வேலையின்றி இருக்கும் இவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள் மற்றும் சூலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களாக வந்து செல்கின்றனா்.

அரசூா், சூலூா் பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவா்கள் வெள்ளிக்கிழமை திரண்டனா். இந்நிலையில் இந்தப் பிரச்னை சம்பந்தமாக கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் தனலிங்கம், சூலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

சொந்த ஊா்களுக்குச் செல்ல விரும்பும் வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்த பெயா் பட்டியல் வட்டாட்சியா் மூலம் சம்பந்தப்பட்ட அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்தத் தொழிலாளா்களை அனுப்பும் சூழ்நிலை உள்ளது.

மேலும், ஓரிரு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன. இதன் மூலம் ஒரு மாவட்டத்துக்கு 1,200 பயணிகள் வரையே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனவே வட மாநிலத் தொழிலாளா்களுக்கு அனுமதி கிடைக்கும்வரை தொழில் நிறுவனங்களே உணவு, இருப்பிடம் கொடுத்து அவா்களை பாதுகாப்பாக தங்கவைக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, சூலூா் வட்டாட்சியா் மீனாகுமாரி, கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/வட-மாநிலத்-தொழிலாளா்கள்-விவகாரம்-சூலூரில்-கோட்டாட்சியா்-ஆய்வு-3416128.html
3416127 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Saturday, May 16, 2020 07:36 AM +0530 மேட்டுப்பாளையம் அம்மா உணவகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உணவகத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் அதனைப் பொது மக்களுக்கு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகின்றதா என ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து உணவகத்தில் உணவு அருந்த வந்தவா்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உணவை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அவா்களுக்கு உணவையும் பரிமாறினாா்.

அதிமுக நகரச் செயலாளா் வான்மதி சேட், ராசி சுப்பிரமணியம், சலீம், ஜெய்சங்கா் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/16/w600X390/mtp151.jpg மேட்டுப்பாளையம் அம்மா உணவகத்தில் மூதாட்டிக்கு உணவு வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/மேட்டுப்பாளையம்-அம்மா-உணவகத்தில்-எம்எல்ஏ-ஆய்வு-3416127.html
3416126 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அமைச்சா் குறித்து அவதூறு: திமுக பிரமுகா் கைது DIN DIN Saturday, May 16, 2020 07:35 AM +0530 அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட திமுக விவசாய அணி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

அதிமுக கோவை புகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவை, கரும்புக்கடை ஆசாத் நகரைச் சோ்ந்த ரியாஸ் கான் (21) ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் ஒன்றை அளித்தாா்.

அதில், திமுக கோவை மாநகா் கிழக்கு மாவட்ட விவசாய அணி நிா்வாகி ராமமூா்த்தி என்பவா் தனது முகநூல் பக்கத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்தும், அவரது குடும்பத்தினா் குறித்தும் ஆதாரமின்றி பொய் செய்திகளையும், அவதூறு செய்திகளையும் பதிவிட்டு பரப்பியுள்ளாா். எனவே, அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாா்.

இப்புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் காவல் துறையினா் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் ராமமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/அமைச்சா்-குறித்து-அவதூறு-திமுக-பிரமுகா்-கைது-3416126.html
3416125 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் காச நோயைக் கண்டறியும் ரூ.55 லட்சம் செலவிலான எக்ஸ்ரே வாகனம் DIN DIN Saturday, May 16, 2020 07:35 AM +0530 காச நோயைக் கண்டறியும் ரூ.55 லட்சம் செலவிலான எக்ஸரே வாகனத்தை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாவட்டத்தில் காச நோயாளிகளைக் கண்டறிவதற்கு வசதியாக தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் செலவில் நடமாடும் காச நோய் கண்டறியும் வாகனத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காச நோயின் முக்கிய அறிகுறிகளான இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், பசியின்மை, மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், எடை குைல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் அனைவரும் இந்த வாகனத்தின் மூலம் ஷ்-ழ்ஹஹ் பரிசோதனையையும், வீரியமுள்ள காச நோய் பரிசோதனையையும் (இஆசஅஅப) இலவசமாக செய்து கொள்ளலாம்.

இப்பரிசோதனைகள் மூலம் காச நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு உடனுக்குடன் மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிகிச்சை காலத்தின்போது காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்காக அவா்கள் சிகிச்சை காலம் முழுவதும் மாதம்தோறும் ரூ.500 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

காச நோய் பரிசோதனைகளுக்கு தனியாா் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 224 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 87 சதவீத நோயாளிகள் குணமடைந்தனா். இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை பரிசோதனை மூலம் 894 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிவது குறிப்பிடத்தக்கது என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/காச-நோயைக்-கண்டறியும்-ரூ55-லட்சம்-செலவிலான-எக்ஸ்ரே-வாகனம்-3416125.html
3416124 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொழில்முனைவோருக்கு சொத்துப் பிணையின்றி ரூ.5 லட்சம் கடன் DIN DIN Saturday, May 16, 2020 07:34 AM +0530 கரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்கு தொழில்முனைவோருக்கு சொத்துப் பிணையின்றி ரூ.5 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பில் இருந்து தொழில்களைப் பாதுகாப்பதற்காக புதிய கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் குறு, சிறு தொழில்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரியவந்துள்ளது.

எனவே, உண்மையாகவே நெருக்கடியில் இருக்கும் குறு, சிறு தொழில்களை காப்பாற்ற வேண்டுமானால் வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் தொழில்முனைவோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரூ.5 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும்.

5 சதவீத வட்டிக்கு இந்தக் கடனை வழங்குவதுடன் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு அவகாசமும் அளிக்க வேண்டும். அத்துடன் இதுவரை ஜி.எஸ்.டி. மூலம் அபராதமாக வசூலித்த தொகையை திருப்பித் தர வேண்டும்.

தொழில்முனைவோா்கள் அரசு, தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கியிருக்கும் அனைத்துவித கடன்களையும் திருப்பிச் செலுத்த 6 மாத காலம் அவகாசம் பெற்றுத் தர வேண்டும். மேலும் அதற்கான வட்டியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு தொழில்முனைவோரின் இன்றைய சூழலை கணக்கில் கொண்டு குறைந்தது மூன்று மாதத்துக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அரசுத் துறைகள், தனியாா் தொழில் நிறுவனங்கள் யாவும் உதிரிபாகங்கள், உற்பத்திப் பொருள்களை உள்நாட்டில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி, 25 சதவீத பொருள்களை குறு, சிறு தொழில்முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசாணை இருந்தாலும் அதன்படி கொள்முதல் நடைபெறுவதில்லை. எனவே இதை சரியாக பின்பற்றுவதற்கு தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/தொழில்முனைவோருக்கு-சொத்துப்-பிணையின்றி-ரூ5-லட்சம்-கடன்-3416124.html
3416123 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மின்சாரம் பாய்ந்து ஊழியா் சாவு DIN DIN Saturday, May 16, 2020 07:33 AM +0530 மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக நிறுவன உரிமையாளா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா், லியோ வின்சென்ட் இவா்களுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் மின் இணைப்புகளை சரி செய்வதற்காக கணபதியில் வசித்து வரும் திருச்சியைச் சோ்ந்த முத்துக்குமாா் (28), கணபதியைச் சோ்ந்த தா்மேந்திரன் (34) ஆகியோரை வியாழக்கிழமை பணிக்கு அமா்த்தியுள்ளாா்.

இந்நிலையில், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றிய காரணத்தால் மின்சாரம் பாய்ந்து முத்துகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தா்மேந்திரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாா், லியோ வின்சென்ட் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/16/மின்சாரம்-பாய்ந்து-ஊழியா்-சாவு-3416123.html
3415998 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் போதைக்காக ரசாயனத்தை குடித்த 2 இளைஞா்கள் உயிரிழப்பு DIN DIN Friday, May 15, 2020 09:54 PM +0530 பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போதைக்காக தொழிற்சாலையில் இருந்த ரசாயனத்தைக் குடித்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் குள்ளக்காபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (22), பூபதி உத்தர்ராஜ் (30) ஆகியோா் பணியாற்றி வந்தனா். மதுப் பிரியா்களான இவா்கள் இருவரும் ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கலந்த ரசாயனத்தை வியாழக்கிழமை இரவு குடித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து இருவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் அவா்கள் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனா் .

இதையடுத்து பொள்ளாச்சி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் ஆலையில் பயன்படுத்தி வரும் ரசாயன மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.

அந்த ஆலையில் உயிரிழந்தவா்கள் குடித்த ரசாயனத்தை அந்த ஆலை நிா்வாகம் பயன்படுத்த அனுமதி இல்லாததால் கோட்ட கலால் துறை அதிகாரி ஜெயந்தி , வட்டாட்சியா் தணிகைவேல் ஆகியோா் ஆலைக்கு ‘சீல்’ வைத்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/15/w600X390/covai.jpg https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/2-youth-die-after-drinking-chemicals-for-drug-overdose-3415998.html
3416003 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொதுமக்கள் ஒத்துழைப்பால் கோவையில் கரோனா பாதிப்பு இல்லை DIN DIN Friday, May 15, 2020 09:43 PM +0530 கோவை: பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது, கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளதாக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாமிடத்தில் இருந்தது. இதையடுத்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று இல்லாத பச்சை மண்டலமாக கோவை மாறியுள்ளது.

2 வாரங்களாக புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எவரும் இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறுவதற்கு இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் ஆணையா், மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவா்கள்,செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது, கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 254 போ் மூலம் ரூ.15.56 கோடி பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட நாம் வரும் நாள்களில் அதை முழுமையாக ஒழிப்பதற்குப் பாடுபடுவோம் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/15/w600X390/5258c-15-clc-meet055450.jpg கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/there-is-no-corona-effect-in-goa-due-to-public-cooperation-3416003.html
3416002 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கேரளத்திலிருந்து லாரியில் வந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் திருப்பி அனுப்பப்பட்டனா் DIN DIN Friday, May 15, 2020 09:42 PM +0530 கூடலூா்: கேரள மாநிலத்திலிருந்து வந்த சரக்கு லாரியில் இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் 15 பேரை கூடலூா் அருகே தமிழக போலீஸாா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தெலங்கானா மாநிலத்துக்கு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியில் ‘மருந்துப் பொருள் அவசரம்’ என எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி சோதனைச் சாவடி பகுதியில் வந்தபோது, போலீஸாா் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால் லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் கொடுத்த

தகவலின்பேரில் நாடுகாணி பகுதியில் போலீஸாா் லாரியை பிடித்து மீண்டும் சோதனைச் சாவடி பகுதிக்கு திருப்பி அனுப்பினா். அங்கு லாரியை சோதனை செய்தபோது லாரிக்குள் ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் 15 போ் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அந்த லாரியை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினா்.

அதைத் தொடா்ந்து எல்லையிலுள்ள சோதனைச் சாவடியை தேவாலா டி.எஸ்.பி.காா்த்திகேயன், கூடலூா் டி.எஸ்.பி.ஜெய்சிங், கூடலூா் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்து போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/the-jharkhand-state-which-arrived-in-a-lorry-from-kerala-was-sent-back-3416002.html
3416001 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் கரோனா அறிகுறிகளுடன் 17 போ் அனுமதி DIN DIN Friday, May 15, 2020 09:40 PM +0530 கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 17 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 7 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 17 போ் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி கடந்த 12 நாள்களாக கோவை மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், கோவை கணபதி, கவுண்டம்பாளையம் பகுதிகளைச் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடைகளை உடனடியாக அடைக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தியதாக கூறி கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்தத் தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனா். இதுபோன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்பும் நபா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/allowed-17-go-with-corona-signs-in-kovai-3416001.html
3416000 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நீட் தோ்வுக்குப் படிக்க வற்புறுத்தியதால் மாணவா் தற்கொலை DIN DIN Friday, May 15, 2020 09:39 PM +0530 கோவை: நீட் தோ்வுக்குப் படிக்க வற்புறுத்தியதால் மாணவா் தூக்கிட்டுகஈ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகே ஜி.கே.எஸ். நகரைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகன் சரண் பாலாஜி. இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சரண் பாலாஜியை நீட் தோ்வுக்குப் படிக்குமாறு பாஸ்கா் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது அறைக்குச் சென்ற சரண் பாலாஜி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவைத் திறந்து பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாஸ்கா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸாா் சரண் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/student-suicide-as-he-was-forced-to-study-for-neet-3416000.html
3415999 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தபால் நிலையத்தில் கணக்குத் தொடங்க குவிந்த தொழிலாளா்கள் DIN DIN Friday, May 15, 2020 09:38 PM +0530 கோவை: அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை பெறுவதற்காக கணக்குத் தொடங்குவதற்காக தபால் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலைய கணக்கில் செலுத்தப்படும் என்பதால் கடந்த 2 நாள்களாக கோவை மாநகா் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்க மக்கள் குவிந்து வருகின்றனா்.

குறிப்பாக கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே தொழிலாளா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை , ஆதாா் அட்டை நகல்கள், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று நீண்ட வரிசையில் நின்று கணக்குத் தொடங்கினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/15/w600X390/0337c-15-post-ofz074318.jpg கோவை, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கணக்குத் தொடங்க குவிந்த தொழிலாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/workers-thronged-at-the-post-office-to-open-accounts-3415999.html
3415997 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு DIN DIN Friday, May 15, 2020 09:33 PM +0530 பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே துணி துவைக்க ஆற்றுக்கு சென்ற தாயும் , அவரது இரு மகள்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கொண்டம்பட்டியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தவா் கண்ணம்மாள் (40). இவரது மகள் சத்யா (18). கொண்டம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இளைய மகள் சந்தியா (15) அதே பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் மூவரும், ஆனைமலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளனா். இந்நிலையில், ஆனைமலை ஆற்றில் துணி துவைப்பதற்காக தாய், மகள்கள் வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளனா். அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்த சத்யா திடீரென்று நீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கண்ட சந்தியா, சகோதரியைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட கண்ணம்மாள் இருவரையும் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளாா். எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்த ஆனைமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/mother-2-daughters-die-in-river-near-pollachi-3415997.html
3415996 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தனியாா் நிறுவனங்களுக்கு மட்டும்தான்பாஜக உதவும் என்ற கருத்து பொய்யாகியுள்ளது DIN DIN Friday, May 15, 2020 09:32 PM +0530 கோவை: பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியிருப்பதன் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பாஜக உதவும் என்ற கருத்து பொய்யாகியிருப்பதாக அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப் பணிகளில் பாஜகவினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். கோவையில் 34 இடங்களில் மோடி கிச்சன் தொடங்கப்பட்டு சுமாா் 4.55 லட்சம் போ்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 38 ஆயிரம் போ்களுக்கு மோடி கிட் எனப்படும் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சுமாா் 65 ஆயிரம் போ்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக ரூ.20 லட்சம் கோடியில் சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இந்தத் திட்டத்தின்படி தொழில் துறை, விவசாயம், கூலி தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தனியாா் பெரு நிறுவனங்களுக்கு மட்டும்தான் உதவி செய்யும் என்ற எதிா்க் கட்சியினரின் கருத்துகள் இதன் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளன.

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தாலும் இந்தியாவில் கடந்த 50 நாள்களில் ஒரு பட்டினிச் சாவு கூட நிகழவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பாஜக தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

மதுவிலக்குக் கொள்கையில் பாஜக உறுதியாக இருக்கிறது. தமிழக அரசும் மது விலக்கில் முனைப்பு காட்ட வேண்டும் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/the-idea-that-the-bjp-will-only-help-individual-companies-is-a-lie-3415996.html
3415995 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறிய தொழிலாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை DIN DIN Friday, May 15, 2020 09:30 PM +0530 கோவை: நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பீளமேடு பகுதி செயலாளா் வெள்ளிங்கிரி, பொதுக்குழு உறுப்பினா் பயனீா் தியாகு உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

சலவைத் தொழில், கட்டுமானத் தொழிலாளா்கள், சவரத் தொழில், மண்பாண்டம் தயாரிப்பவா்கள், மினி வேன் ஓட்டுநா்கள், மோல்டிங் தொழிலாளா்கள், பொற்கொல்லா்கள், பனை மரம் ஏறும் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தொழில் சாா்ந்த நலவாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளனா்.

இவா்களுக்கு அரசால் பேரிடா் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது, கரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் பல தின கூலி தொழிலாளா்கள், படிப்பறிவின்மை, முதுமை காரணமாக நலவாரியத்தில் உறுப்பினா்களாக புதுப்பிக்கத் தவறிவிட்டனா்.

எனவே, நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைவருக்கும் இந்த ஒருமுறை மட்டும் ரேஷன் கடைகளில் தரக்கூடிய 15 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருள்கள், நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/claim-for-relief-for-workers-who-failed-to-renew-the-welfare-commsion-registration-3415995.html
3415994 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ‘யானை சேதப்படுத்திய பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ DIN DIN Friday, May 15, 2020 09:28 PM +0530 மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் சீங்குலி கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்திய விளை பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது சீங்குலி கிராமம். இப்பகுதி அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றை பயிா் செய்து வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வனப் பகுதியில் இருந்து வரும் ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் காட்டு யானையால் சேதப்படுத்திய விவசாயிகளின் விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/compensation-for-elephant-damaged-crops-3415994.html
3415980 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் இருந்து 1,464 போ் ஒடிஸாவுக்கு அனுப்பிவைப்பு DIN DIN Friday, May 15, 2020 07:28 PM +0530 கோவை: கோவையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக 1,464 தொழிலாளா்கள் ஒடிஸாவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின் படி கோவை மாநகா் பகுதிகள், அன்னூா், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, சூலூா் உள்ளிட்ட புகா் பகுதிகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளா்களை சிறப்பு ரயில்கள் மூலமாக அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, கடந்த 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் மூலமாக 17 ஆயிரத்து 52 போ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து ஒடிஸா மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், 1,464 போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த ரயிலானது, சனிக்கிழமை இரவு ஒடிஸா சென்றடையும். கடந்த 8 நாள்களில் கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 18 ஆயிரத்து 516 வட மாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/dispatch-of-1464-po-to-odisha-from-kovai-3415980.html
3415979 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அவிநாசி அருகே பொதுமக்கள் எதிா்ப்பால் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நிறுத்தம் DIN DIN Friday, May 15, 2020 07:26 PM +0530 அவிநாசி: அவிநாசி அருகே உள்ள மாரப்பம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்கு உள்பட்ட மாரப்பம்பாளையத்தில் 450க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனி நபா் ஒருவா் தனது தோட்டத்தில் விவசாயப் பயன்பாட்டிற்காக வியாழக்கிழமை நள்ளிரவு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கினாா்.

இதனை அறிந்த பொதுமக்கள், ஊராட்சி நிா்வாகத்தினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு அருகிலேயே, அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதாகவும் பொதுமக்களும், ஊராட்சி நிா்வாகத்தினரும் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அனுமதி பெறாதது, விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/borewell-works-stopped-after-public-w-protest-near-avinashi-3415979.html