Dinamani - திருப்பூர் - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3079547 கோயம்புத்தூர் திருப்பூர் மூலனூர் அருகே வெடிமருந்து கிடங்கை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, January 20, 2019 01:28 AM +0530
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே வெடிமருந்து கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலனூரை அடுத்த பிச்சக்கல்பட்டியில் தனியார் வெடிமருந்து சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் வெடிமருந்துகள் தரம் பிரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தக் கிடங்கால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, நுரையீரல் நோய்த்தொற்று, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி வெடிமருந்து கிடங்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மூலனூர் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/மூலனூர்-அருகே-வெடிமருந்து-கிடங்கை-அகற்ற-வலியுறுத்தி-ஆர்ப்பாட்டம்-3079547.html
3079408 கோயம்புத்தூர் திருப்பூர் காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Sunday, January 20, 2019 12:55 AM +0530
மத்திய அரசின் அரசு ஊழியர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் முதன்மை செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு முன்னாள் படை வீர்கள் விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மத்திய அரசின் அரசு ஊழியர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் முதன்மை செவிலியர்கள், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில், முன்னாள் படை வீரர்களுக்கு முதன்மை செவியர்கள் பணியில் 8 இடங்களும், ஆய்வக உதவியாளர் பணியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதள முகவரி மூலமாக வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/காலிப்-பணியிடங்களுக்கு-முன்னாள்-படை-வீரர்கள்-விண்ணப்பிக்கலாம்-3079408.html
3079406 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Sunday, January 20, 2019 12:55 AM +0530
திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவகத்தில் நடைபெற்றது. இதில், சாலை பாதுகாப்பு மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், நிஃப்ட்- டீ கல்லூரி பேராசிரியர் முத்துபாரதி, திருப்பூர் நரம்பியல் மருத்துவமனை மருத்துவர் வளவன் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
மேலும் காவல் துறை வாகனங்கள் மற்றும் காவலர்களின் சொந்த வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/திருப்பூரில்-காவல்-துறை-சார்பில்-சாலை-பாதுகாப்பு-விழிப்புணர்வுக்-கூட்டம்-3079406.html
3079405 கோயம்புத்தூர் திருப்பூர் மக்கள் பிரச்னை தொடர்பாக தொடர் இயக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு DIN DIN Sunday, January 20, 2019 12:55 AM +0530
மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்கு மாவட்டங்களில் தொடர் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான முகாம் திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட நடுத்தர, சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அத்துடன் கோவை மாநகரில் அந்நிய நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகப் பொறுப்பை ஒப்படைத்து மக்கள் தலையில் கடும் சுமையை திணிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் மீதும் தொடர் இயக்கங்களை நடத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், என்.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
மேலும், மக்களவை தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில்,கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/மக்கள்-பிரச்னை-தொடர்பாக-தொடர்-இயக்கம்-மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட்-கட்சி-முடிவு-3079405.html
3079404 கோயம்புத்தூர் திருப்பூர் முதலிபாளையம், நல்லூர், ஊத்துக்குளியில் ஜனவரி 22 இல் மின் தடை DIN DIN Sunday, January 20, 2019 12:54 AM +0530
திருப்பூர் முதலிபாளையம், நல்லூர் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 22) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. 
மின் தடை ஏற்படும் பகுதிகள்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.லே அவுட், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார்பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சானார்பாளையம், முத்தணனம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு. 
ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில்...: அதேபோல ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின் தடை ஏற்படும் பகுதிகள்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், களவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டம்பாளையம், பழனிக்கவுண்டனண்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், செங்கப்பள்ளி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/முதலிபாளையம்-நல்லூர்-ஊத்துக்குளியில்-ஜனவரி-22-இல்-மின்-தடை-3079404.html
3079403 கோயம்புத்தூர் திருப்பூர் அமமுக பொதுக்கூட்டம் DIN DIN Sunday, January 20, 2019 12:54 AM +0530
வெள்ளக்கோவிலில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.எஸ்.சண்முகராஜு தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் நகரச் செயலாளர் ர.கணேசன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் எம்.வி.சண்முகராஜ், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் வி.பி.இளங்கோ, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சி.என்.எஸ்.வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு, அமைப்புச் செயலாளர்கள் கே.ஜி.சண்முகம், என்.கே.பி.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
ஒன்றிய இணைச் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/அமமுக-பொதுக்கூட்டம்-3079403.html
3079402 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயம் அருகே வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு DIN DIN Sunday, January 20, 2019 12:54 AM +0530
காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள வாய்க்கால் மேடு அருகே பிஏபி கிளை வாய்க்காலில் ஆண் சடலம் ஓன்று தண்ணீரில் மிதப்பதாக காங்கயம் கிராம நிர்வாக அலுவலர் சொக்கர் காங்கயம் போலீஸில் சனிக்கிழமை புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ 
இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம். இறந்து நான்கு அல்லது ஐந்து 
நாள்கள் இருக்கும் என்பதால் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இவர் கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குளிக்கும்போது 
தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/காங்கயம்-அருகே-வாய்க்காலில்-ஆண்-சடலம்-மீட்பு-3079402.html
3079400 கோயம்புத்தூர் திருப்பூர் மூலனூர் அருகே வெடிமருந்து கிடங்கை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, January 20, 2019 12:52 AM +0530
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே வெடிமருந்து கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலனூரை அடுத்த பிச்சக்கல்பட்டியில் தனியார் வெடிமருந்து சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் வெடிமருந்துகள் தரம் பிரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தக் கிடங்கால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, நுரையீரல் நோய்த்தொற்று, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி வெடிமருந்து கிடங்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மூலனூர் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/மூலனூர்-அருகே-வெடிமருந்து-கிடங்கை-அகற்ற-வலியுறுத்தி-ஆர்ப்பாட்டம்-3079400.html
3079399 கோயம்புத்தூர் திருப்பூர் உதவித் தொகை பெற படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Sunday, January 20, 2019 12:52 AM +0530 திருப்பூர் மாவட்டத்தில் படித்து முடித்து 5 ஆண்டுகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற வரும் பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பதிவு செய்து எந்த வேலையும் கிடைக்காத இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாவதவர்களுக்கு ரூ.200, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 600, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த உதவித் தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
மேலும், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடித்து 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராகவும், முற்றிலும் வேலை இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் உள்ள நபர்கள் இணையம் வழியாகவே அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்து வரும் பிப்ரவரி மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும், இணையதளத்திலும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை திருப்பூர் மாவட்டத்தில் தகுதியுடைய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/உதவித்-தொகை-பெற-படித்த-இளைஞர்கள்-விண்ணப்பிக்கலாம்-3079399.html
3079398 கோயம்புத்தூர் திருப்பூர் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்ய அழைப்பு DIN DIN Sunday, January 20, 2019 12:52 AM +0530
விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் தங்களது அலைபேசி, செல்லிடப் பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும் என என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவிநாசி மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அவிநாசி மின் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 2000 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2008 டிசம்பர் 31ஆம் தேதி வரை விவசாய மின் இணைப்பு வேண்டிவிண்ணப்பித்தவர்களது விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்களது அலைபேசி, செல்லிடப் பேசி எண்கள் தேவைப்படுகிறது. எனவே, அலைபேசி, செல்லிடப் பேசி எண்களை அவிநாசி மங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/விவசாய-மின்-இணைப்புக்கு-விண்ணப்பித்தவர்கள்-செல்லிடப்பேசி-எண்ணை-பதிவு-செய்ய-அழைப்பு-3079398.html
3079397 கோயம்புத்தூர் திருப்பூர் அரசு கலைக் கல்லூரியில் மரங்களுக்குத் தீ வைப்பு : அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் பேராசிரியர்  DIN DIN Sunday, January 20, 2019 12:52 AM +0530
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டிருந்த மரங்களுக்கு மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் மயக்கமடைந்தார். 
திருப்பூர் கல்லூரி சாலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விடுதிக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சார்பில் வேம்பு, கொய்யா, புங்கன், சந்தனம், ஈட்டி, இலுப்பை என பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவுக்கு அப்துல் கலாம் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களுக்கு மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்துள்ளனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த தகவலின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான மோகன்குமார் மற்றும் மாணவர்கள் சம்பவ இடத்தை சனிக்கிழமை காலை பார்வையிட்டனர். 
அப்போது மரங்கள் எரிந்து சேதமடைந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் மோகன்குமார் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் அவரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
இந்த சம்பவம் காரணமாக கல்லூரி வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மரங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/அரசு-கலைக்-கல்லூரியில்-மரங்களுக்குத்-தீ-வைப்பு--அதிர்ச்சியில்-மயங்கி-விழுந்தார்-பேராசிரியர்-3079397.html
3079396 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயத்தில் முதல் முறையாக ரேக்ளா போட்டி இன்று நடக்கிறது DIN DIN Sunday, January 20, 2019 12:51 AM +0530
காங்கயத்தில் முதல் முறையாக ரேக்ளா போட்டி எனும் மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) நடைபெற உள்ளது.
காங்கயம் ரேக்ளா குழு என்ற அமைப்பின் சார்பில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ரேக்ளா போட்டி நடைபெற உள்ளது. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பந்தய தூர அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தையொட்டி குதிரைப்பள்ளம் சாலை என்ற கிராமச் சாலையில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொள்ளவுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என காங்கயம் ரேக்ளா குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/காங்கயத்தில்-முதல்-முறையாக-ரேக்ளா-போட்டி-இன்று-நடக்கிறது-3079396.html
3079395 கோயம்புத்தூர் திருப்பூர் பழைய இரும்பு கிடங்கில் தீ DIN DIN Sunday, January 20, 2019 12:51 AM +0530
திருப்பூர் அருகே உள்ள பழைய இரும்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர் வஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (30), இவர் வஞ்சிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் பழைய இரும்பு கிடங்கு வைத்துள்ளார். இவர் பேப்பர், பழைய இரும்பு பொருள்களை விலைக்கு வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பக்கியராஜின் கிடங்கில் வெள்ளிக்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
இதுகுறித்த தகவலின்படி அங்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைத்தனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
விபத்து குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/20/பழைய-இரும்பு-கிடங்கில்-தீ-3079395.html
3079061 கோயம்புத்தூர் திருப்பூர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது DIN DIN Saturday, January 19, 2019 08:09 AM +0530 திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையம் அருகே பிஏபி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: 
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த நல்லகாளிபாளையம் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் இரு பெண்கள் கடந்த புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். 
இதில் ஒரு பெண்ணுக்கு சுமார் 70 வயதும், மற்றொரு பெண்ணுக்கு சுமார் 35 வயதும் இருக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இருவரது புகைப்படங்களையும் மற்ற காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. அவர் உடுமலையை அடுத்த எரிசனாம்பட்டியைச் சேர்ந்த ஆறுச்சாமி மனைவி திருமாத்தாள் (75) என்பது தெரியவந்தது. இவர் காணாமல் போனதாக கடந்த புதன்கிழமை தளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மற்றொரு பெண்ணைக் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/வாய்க்காலில்-சடலமாக-மீட்கப்பட்ட-பெண்ணின்-அடையாளம்-தெரிந்தது-3079061.html
3079060 கோயம்புத்தூர் திருப்பூர் ஜனவரி 19 மின்தடை  DIN DIN Saturday, January 19, 2019 08:09 AM +0530 காங்கயம்
காங்கயம், ஜன.18: காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/ஜனவரி-19-மின்தடை-3079060.html
3079059 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் நாளை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் DIN DIN Saturday, January 19, 2019 08:08 AM +0530 திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஃப்ரண்ட்லைன் அகாதெமி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) நடைபெற உள்ளது. 
 9, 13, 17 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் பொது பிரிவுகளில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மற்றும் பொது பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சார்பில் ஏப்ரல்,  மே மாதங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 500 ரொக்கம் வழங்கப்படுகிறது.  இத்துடன் ஸ்ரீ சதாசிவம் நினைவு சுழற்கோப்பை வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 96266-31032 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/திருப்பூரில்-நாளை-மாவட்ட-அளவிலான-சதுரங்க-போட்டிகள்-3079059.html
3079058 கோயம்புத்தூர் திருப்பூர் குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ஜனவரி 21 இல் தேரோட்டம் DIN DIN Saturday, January 19, 2019 08:08 AM +0530 திருப்பூர், மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.  அதேபோல் நிகழாண்டுக்கான தேரோட்டத் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து,  நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பரிவேட்டையும், புதன்கிழமை சிறப்பு பூஜைகளும், நடைபெற உள்ளன.  மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேரோட்டத் திருவிழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/குழந்தை-வேலாயுதசாமி-கோயிலில்-ஜனவரி-21-இல்-தேரோட்டம்-3079058.html
3079057 கோயம்புத்தூர் திருப்பூர் சாலை விபத்தில் இளைஞர் சாவு DIN DIN Saturday, January 19, 2019 08:08 AM +0530 திருப்பூரில் டிடிபி மில் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். 
திருப்பூர், பெரியார் காலனியை அடுத்த நடராஜ் லே அவுட்டில் வசித்து வருபவர் முத்துசாமி.  இவரது மகன் அருண்குமார் (22). இவர் இருசக்கர வாகனத்தில் டிடிபி மில் சாலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.  
அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். 
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/சாலை-விபத்தில்-இளைஞர்-சாவு-3079057.html
3079056 கோயம்புத்தூர் திருப்பூர் லெனின் நினைவு தினம்: 400 இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த முடிவு DIN DIN Saturday, January 19, 2019 08:07 AM +0530 சோவியத் யூனியனை உருவாக்கிய லெனினின் 95 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்ட்தில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 21) 400 இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. 
இதுதொடர்பாக அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: 
சோஷலிச அரசை உருவாக்கிய லெனின் 95ஆவது ஆண்டு நினைவு தினம் வரும் திங்கள்கிழமை உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய உலகில் நிலவும் பிரச்னைகளுக்கு சோஷலிசம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.  ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் லெனினின் 95 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வரும் திங்கள்கிழமை 400 இடங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. மேலும், திருப்பூரில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் லெனின் நினைவு தின சிறப்புப் பேரவை நடைபெறுகிறது. 
இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் சிறப்புரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/லெனின்-நினைவு-தினம்-400-இடங்களில்-நினைவஞ்சலி-நிகழ்ச்சி-நடத்த-முடிவு-3079056.html
3079055 கோயம்புத்தூர் திருப்பூர் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தர்னா DIN DIN Saturday, January 19, 2019 08:07 AM +0530 திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த தர்னாவுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தர்னா குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் களைய வேண்டும்.  2003 ஆம் ஆண்டுக்குப்  பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.  21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 
அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னா நடைபெறுகிறது என்றனர். இதில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜான் கிறிஸ்துராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஞானசேகர் உள்பட  400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/ஜாக்டோ--ஜியோ-அமைப்பினர்-தர்னா-3079055.html
3079054 கோயம்புத்தூர் திருப்பூர் நாளை செம்மை நகர் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Saturday, January 19, 2019 08:07 AM +0530 வெள்ளக்கோவில் செம்மை நகர் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20)  நடைபெறுகிறது.
 லக்கமநாயக்கன்பட்டி சிவாலய அர்ச்சகர் எல்.டி.செந்தில்நாத சிவாச்சாரியார், வெள்ளக்கோவில் சோழீஸ்வரர் கோயில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
 கோபுரக் கலசங்கள் ஸ்தாபனம், புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வரும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. 
கும்பாபிஷேகத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/நாளை-செம்மை-நகர்-பெரிய-விநாயகர்-கோயில்-கும்பாபிஷேகம்-3079054.html
3079053 கோயம்புத்தூர் திருப்பூர் அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி காயம் DIN DIN Saturday, January 19, 2019 08:06 AM +0530 திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தந்தை படுகாயமடைந்தனர். 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், போயம்பாளையம் கிழக்கு நஞ்சப்பா நகரில் வசித்து வருபவர் பாபு. கூலித் தொழிலாளி. இவரது மகள் சர்மிஸ்ரீ (15). இவர், அவிநாசி சாலை காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்த நிலையில்,  சர்மிஸ்ரீ, பள்ளிக்குச் செல்வதற்காக தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தார்.  
போயம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது,  நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சர்மிஸ்ரீ, பாபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.  அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/19/அரசுப்-பேருந்து-மோதி-பள்ளி-மாணவி-காயம்-3079053.html
3078553 கோயம்புத்தூர் திருப்பூர் பொங்கல் கிரிக்கெட் போட்டி: உடுமலை அவதார் அணி சாம்பியன் DIN DIN Friday, January 18, 2019 08:29 AM +0530 பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த 5 நாள்களாக உடுமலையில் நடைபெற்று வந்த மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடுமலை அவதார் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 
உடுமலை பிராட்மேன் கிரிக்கெட் கிளப் மற்றும் உடுமலை சிவாணி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 25  அணிகள் கலந்து கொண்டன. 20 ஓவர்கள் அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
இதில் அவதார் கிரிக்கெட் கிளப் அணியும்,  உடுமலை எம்எஸ்எம் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் உடுமலை எம்எஸ்எம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைக் குவித்தது. இதன் பின்னர் ஆடிய உடுமலை அவதார் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ர ன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 
இந்தப் போட்டியைக் கான ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேதாஜி மைதானத்தில் கூடி யிருந்தனர். நிறைவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற உடுமலை அவதார் கிரிக்கெட் கிளப் அணிக்கு கோப்பையும், ரொ க்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பெற்ற உடுமலை எம்எஸ்எம் அணிக்கு ரன்னர் கோப்பையும் ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்ப ட்டது. 
மேலும், உடுமலை பிஎம்சிசி அணி மூன்றாம் இடத்தையும், க்ரவுண்ட் பிரண்ட்ஸ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இதுபோக தொடர் ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பிராட்மேன் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் டி.பாலகுமார், தாஸ்ராஜன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/பொங்கல்-கிரிக்கெட்-போட்டி-உடுமலை-அவதார்-அணி-சாம்பியன்-3078553.html
3078552 கோயம்புத்தூர் திருப்பூர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா DIN DIN Friday, January 18, 2019 08:29 AM +0530 திருப்பூரில்...
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில்  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102 பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள எம்ஜிஆர்சிலைக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), அவைத் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தெற்குத் தொகுதியில்: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், சந்திராபுரம், சந்தைபேட்டை, நல்லூர், அரசு மருத்துவமனை, குமரன் வணிக வளாகம் ஆகிய 6 அம்மா உணவகங்களில் அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தலைமையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கருவம்பாளையம் மணி உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர். 
வடக்குத் தொகுதியில்:  வடக்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட பெருமால்லூர் நால் ரோடு பகுதியில் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் ஆர். சாமிநாதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ். எம். பழனிசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் சரஸ்வதி ராக்கியண்ணன்,  பாசறை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலனூரில்...
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் எம்ஜிஆர் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அதிமுக ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். கட்சியின் பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணியம், தொழிலதிபர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 விழாவில், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் கருப்பண்ணவலசு முத்துக்குமார், வேலாம்பூண்டி வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலையில்...
உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் கே.ம னோகரன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
இதேபோல உடுமலை ஒன்றியத்தில் முக்கோணம், தளி உள்ளிட்ட கிராமங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். மேலும், மடத்துக்குளம் வட்டத்தில் வேடபட்டி, துங்காவி உள்ளிட்ட கிராமங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கா ளீஸ்வரன், வழக்குரைஞர் அணி இணைச் செயலாளர் மு.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


சேவூரில்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
 சேவூர் கைகாட்டியில் மலர் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அதிமுக கொடியேற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு,  அதிமுக ஒன்றியச் செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி, பொறுப்பாளர் சி.எஸ்.மனோகரன், சின்னக்கன்னு, தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/எம்ஜிஆர்-பிறந்த-நாள்-விழா-3078552.html
3078551 கோயம்புத்தூர் திருப்பூர் தாராபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் சாவு DIN DIN Friday, January 18, 2019 08:28 AM +0530 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் 3 வயதுச் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி (62). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது மனைவி ஜோதிமணி, மாமனார் நாச்சிமுத்து (75), பேரன் செல்வமித்ரன் (3) ஆகியோருடன் உடுமலையில் உள்ள இளைய மகள் வீட்டுக்கு காரில் புதன்கிழமை சென்றுள்ளார்.
பின்னர், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். காரை முத்துசாமி ஓட்டிச் சென்றார். இவர்களது கார் கொண்டரசம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, செல்வமித்ரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
நீரில் மூழ்கி இருவர் சாவு: நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்தவர் பென்ஸ்டிபன் (26). இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள புதிய அமராவதி ஆற்றுப்பாலம் அருகே புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தாராபுரம் மேற்கு தாசர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் நல்லவநாயக்கன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் புதன்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/தாராபுரம்-அருகே-சாலை-விபத்தில்-3-பேர்-சாவு-3078551.html
3078550 கோயம்புத்தூர் திருப்பூர் கலாசாரப் பேரவை சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் DIN DIN Friday, January 18, 2019 08:28 AM +0530 தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை சார்பில்,  பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தைப்பொங்கல் திருநாளையொட்டி  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  பரதம், சிலம்பம், கும்மி, சலங்கை,  ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், மண்ணிசைப் பாடல், பண்ணும்-பரதமும் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   
"தமிழரின் சீர்மிகு பண்பாடும்-கலாசாரமும்' என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர்  விஜய் கிருஷ்ணராஜ்  பேசினார்.  நிகழ்ச்சிக்கு,  தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவைத் தலைவர் கா.நடராசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் அ.சி.பழனிசாமி, நா.சுப்பிரமணியன், க.செ.வெங்கடாசலம், சு.கோவிந்தப்பன், கு.மாரப்பன், செ.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 
விழாவில்,  தமிழரின் கலாசாரமான வேட்டியை நாடுமுழுவதும் பிரபலப்படுத்தி வரும் திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் அ.ரா.நாகராஜுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியை பொறுப்பாளர்கள் பரணி, அ.பழனிசாமி, ந.முருகேசன், மு.மாணிக்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/கலாசாரப்-பேரவை-சார்பில்-பாரம்பரிய-கலைநிகழ்ச்சிகள்-3078550.html
3078549 கோயம்புத்தூர் திருப்பூர் தொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு வியாபாரப் பெயர் குறியீடு: ஏஇபிசி நன்றி DIN DIN Friday, January 18, 2019 08:27 AM +0530 தொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வியாபாரப் பெயர் குறியீடு (ஹெச்எஸ்என் குறியீடு) வழங்கியதற்கு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) நன்றி தெரிவித்துள்ளது. 
இது குறித்து திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளி பொருள்கள் பாரம்பரிய ஜவுளி பொருள்கள் என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தப் பொருள்களுக்கு வியாபாரப் பெயர் குறியீடு வழங்கக் கோரி ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில்,  மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 207 தொழில்நுட்ப ஜவுளி பொருள்கள் அடையாளம் காணப்பட்டு வியாபாரப் பெயர் குறியீடு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் நன்றி தெரிவித்துள்ளார்.  வியாபாரக் குறியீடு வழங்கப்பட்டுள்ள 207 பொருள்களில் திருப்பூரில் இருந்து 12 பொருள்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. 
துப்பாக்கி குண்டு துளைக்காத ஆடைகள், தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் ஆடைகள், நரம்புச் சுருளால்  பாதிக்கப்பட்டவர்கள் அணியும் ஆடைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் அடங்கும்.
வியாபாரக் குறியீடு வழங்கியுள்ளதால் ஏற்றுமதித் தொழில் மேலும் வளர்ச்சியடையும். தற்போது இந்தப் பொருள்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த வியாபாரக் குறியீடு மூலமாக ஏற்றுமதியின் மதிப்பு வரும் காலங்களில் அதிகரிக்கும். ஆகவே, ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/தொழில்நுட்ப-ஜவுளி-பொருள்களுக்கு-வியாபாரப்-பெயர்-குறியீடு-ஏஇபிசி-நன்றி-3078549.html
3078548 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயம் அருகே மேய்ச்சல் காட்டில் தீ DIN DIN Friday, January 18, 2019 08:26 AM +0530 காங்கயம் அருகே மேய்ச்சல் காட்டில் பற்றி எரிந்த நெருப்பு தீயணைப்புத் துறையினரால் அணைக்கப்பட்டது.
காங்கயம் அருகே, பழையகோட்டை சாலையில் சத்திரவலசு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மேய்ச்சல் காடு உள்ளது. கடந்த மாதத்தில் சோளப் பயிர் அறுவடை செய்த பின்னர், வளர்ந்துள்ள புற்களை மாடுகள் மேய்ந்து வருகின்றன. மேலும் தற்போது மழை இல்லாததால் புற்கள் ஆங்காங்கு காய்ந்து, வறண்ட நிலையில் கணப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் புற்களில் புகைந்து, தீப் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த, பழனிக்குச் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காங்கயம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வழியாக சென்ற நபர்களில் யாரோ புகைத்து விட்டு, அப்பகுதியில் சிகரெட்டை அணைக்காமல் போட்டுவிட்டு  சென்றதால், தீப் பற்றியதாகத் தெரிகிறது. இது குறித்து காங்கயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/காங்கயம்-அருகே-மேய்ச்சல்-காட்டில்-தீ-3078548.html
3078547 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு DIN DIN Friday, January 18, 2019 08:25 AM +0530 காங்கயம் அருகே, திமுக பிரமுகரின் வீட்டில் திருடர்கள் புகுந்து வைர நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் பவித்ரவள்ளி. இவரது வீடு காங்கயம் அருகே, ஈரோடு செல்லும் சாலையில் வரதப்பம்பாளையம் கிராமத்தில் உள்ளது. 
இந்த நிலையில், பவித்ரவள்ளியும், அவரது கணவர் ஹரியும் வெளியூர் சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தனர். பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல்கள், ரூ.10 ஆயிரம் பணம், ஸ்கூட்டி வாகனம் ஆகியன திருடுபோனது தெரிய வந்தது.
தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/காங்கயம்-அருகே-திமுக-பிரமுகர்-வீட்டில்-நகை-பணம்-திருட்டு-3078547.html
3078546 கோயம்புத்தூர் திருப்பூர் விடுமுறை நாளில் மது விற்பனை: 41 பேர் கைது DIN DIN Friday, January 18, 2019 08:25 AM +0530 திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 41 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1, 087 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.  
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில்  மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், அவிநாசி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 798 மது பாட்டில்கள்களை பறிமுதல் செய்தனர். 
அதேபோல், திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 19 பேரை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 289 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டு, மொத்தமாக 1087 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/விடுமுறை-நாளில்-மது-விற்பனை-41-பேர்-கைது-3078546.html
3078545 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா: 25 ஆயிரம் பேர் பங்கேற்பு DIN DIN Friday, January 18, 2019 08:25 AM +0530 உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் அமைந்துள்ளது இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆல்கொண்டமால் கோயில். இந்த கோயிலில்  ஆண்டுதோறும் பொங்கல் விழா மூன்று நாள்கள் வெகு விமரிசையாக கொண்டா டப்படும். இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது.
கால்நடைகளைக் காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடை களின் பாலினால் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது  ஆண்டாண்டு  காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை,  பாலாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்திருந்தனர். குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மண் உருவத்தாலான கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பால் அபிஷேகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபட்டனர். 
விவசாயிகள், பொதுமக்கள் பலர் கன்று குட்டிகளை தானம் செய்தனர்.  விழாவையொட்டி பொதுமக்களுக்காக ராட்டினம், சர்க்கஸ், என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளும், சாலையின் இருமருங்கிலும் நூற்றுக்கணக்கான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் உடுமலை, பல்லடம், திருப்பூர், பழனி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/18/உடுமலை-ஆல்கொண்டமால்-கோயிலில்-பொங்கல்-விழா-25-ஆயிரம்-பேர்-பங்கேற்பு-3078545.html
3077914 கோயம்புத்தூர் திருப்பூர் நூலகத்தில் பொங்கல் விழா DIN DIN Thursday, January 17, 2019 08:18 AM +0530 காங்கயத்தில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே உள்ள இந்த நூலகத்தில் வாசகர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தைத் திருநாள் குறித்தும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் காங்கயம் தமிழ் சங்கத்தின் தலைவர் மு.தணிகாசலம், காரல் மார்க்ஸ் நூலகத்தின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், திருமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. 
இதில், தமிழ்த் தேசிய மகளிர் மன்ற செயலாளர் தமிழ்க்கொடி, நூலகப் பொறுப்பாளர் தாமரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/நூலகத்தில்-பொங்கல்-விழா-3077914.html
3077913 கோயம்புத்தூர் திருப்பூர் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் பொங்கல் விளையாட்டு DIN DIN Thursday, January 17, 2019 08:18 AM +0530 திருமுருகன்பூண்டி காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் கமிட்டி, தியாகி குமரன் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் 3ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். தியாகி குமரன் நற்பணி மன்ற செயலாளர் யோகநாதன், தியாகி குமரன் நற்பணி மன்ற நிர்வாகி ராமு (எ) ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு  நெசவாளர் காலனியில் உள்ள அனைத்து வீடுகள் முன்பும் பெண்கள் வண்ணக் கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.  
இதைத் தொடர்ந்து  சிறுவர், சிறுமிகளுக்கு ஓட்டப் பந்தயம், சாக்குப் போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, ஸ்கிப்பிங், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், லெமன் ஸ்பூன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல், உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது.  இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகி குமரன் நற்பணி மன்ற தலைவர் சங்கர், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/காமாட்சி-அம்மன்-நெசவாளர்-காலனியில்-பொங்கல்-விளையாட்டு-3077913.html
3077912 கோயம்புத்தூர் திருப்பூர் திருமணமான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Thursday, January 17, 2019 08:17 AM +0530 வெள்ளக்கோவிலில் திருமணமான இளம்பெண்தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம் சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கரண்டாம்பாளையத்தை அடுத்த வேலப்பம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் மோனிஷா (22). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு வாரங்கள் ஆகிறது. 
இந்நிலையில் காமராஜபுரம் கணவர் வீட்டில் தனியாக இருந்த மோனிஷா மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.  தாராபுரம் கோட்டாட்சியர், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/திருமணமான-இளம்பெண்-தூக்கிட்டுத்-தற்கொலை-3077912.html
3077911 கோயம்புத்தூர் திருப்பூர் ஸ்டவ் வெடித்து தொழிலாளி சாவு DIN DIN Thursday, January 17, 2019 08:17 AM +0530 வெள்ளக்கோவில் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் சக்திவேல் (35), கூலித் தொழிலாளி. 
இவர் கடந்த 13 ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு, மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி சுமதி வெளியே சென்று விட்டார். 
குளிக்க வெந்நீர் வைப்பதற்காக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பில் காற்றடித்து தீக்குச்சியால் சக்திவேல் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து மண்ணெண்ணெய் சிதறி உடல் முழுவதும் தீப்பற்றியது. 
காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/ஸ்டவ்-வெடித்து-தொழிலாளி-சாவு-3077911.html
3077910 கோயம்புத்தூர் திருப்பூர் சேவூர் அருகே பூப் பறிக்கும் நிகழ்ச்சி DIN DIN Thursday, January 17, 2019 08:16 AM +0530 தைப்பொங்கல் திருவிழாவையொட்டி சேவூர் அருகே பழைமை மாறாமல் நடைபெற்ற பூப்பறிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமனோர் பங்கேற்றனர். 
தை பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கலான புதன்கிழமை சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி ராமியம்பாளையத்தில் ஊர் பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்தனர். பிறகு வீடுகளில் செய்த முருக்கு, இனிப்பு வகைகள், பொறி கடலை, கரும்பு ஆகிய உணவு பண்டங்களை கொண்டு வந்து உணவு பொருள்களை நடுவே வைத்து கும்மி அடித்து பாட்டுப் பாடினர். பின் அவரவர்கள் செய்து கொண்டு வந்த கார, இனிப்பு வகைகளை மற்றவர்களுடன் அமர்ந்து  உண்டு மகிழ்ந்தனர்.  
பூ பறிக்கும் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/சேவூர்-அருகே-பூப்-பறிக்கும்-நிகழ்ச்சி-3077910.html
3077909 கோயம்புத்தூர் திருப்பூர் சாலை விபத்தில் இளைஞர் சாவு DIN DIN Thursday, January 17, 2019 08:16 AM +0530 வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
மூலனூர் சாலையில் உள்ள சுப்பிரமணியக்கவுண்டன்வலசைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் எஸ்.கனகராஜ் (27).
இவர் மோட்டார் சைக்கிளில் புதுப்பை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் சாலை தங்கமேடு அருகே எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/சாலை-விபத்தில்-இளைஞர்-சாவு-3077909.html
3077908 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் திருவள்ளுவர் கோயில் திறப்பு DIN DIN Thursday, January 17, 2019 08:16 AM +0530 திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு திருப்பூரில் செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்டது.
திருவள்ளுவரின் 2050 ஆவது அவதார நாள், மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு, திருப்பூர் மாநகராட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவு, திருப்பூர் மக்கள் மாமன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆகியவற்றின் நினைவாக டைமண்ட் திரையரங்கம் அருகே உள்ள எழுத்தறிவாலயம் பொது நூலகத்தில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டு வந்தது. 
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொங்கல் பண்டிகையான செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்டது. தவத்திரு பூண்டி சுந்தரராச அடிகளார் கோயிலைத் திறந்து வைத்தார். 
இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் நான்கரை அடி உயர சிலையை  திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மக்கள் மாமன்றத்தின் தலைவர் சுப்பிரமணியம், சிறப்பு ஆலோசகர் ஆனந்தகுமார் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/திருப்பூரில்-திருவள்ளுவர்-கோயில்-திறப்பு-3077908.html
3077907 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் பெண் சடலம் மீட்பு DIN DIN Thursday, January 17, 2019 08:15 AM +0530 திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் உள்ள கோயில் அருகே  35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் சடலத்தை தெற்கு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை, என்.ஆர்.கே. புரம் 2 வது ரயில்வே கேட் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே பெண்ணின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கலாம். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/திருப்பூரில்-பெண்-சடலம்-மீட்பு-3077907.html
3077906 கோயம்புத்தூர் திருப்பூர் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை DIN DIN Thursday, January 17, 2019 08:15 AM +0530 வெள்ளக்கோவில் அருகே பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடை அடுத்துள்ள வேலம்பாளையம் பிரிவருகே அடிக்கடி பாலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டதால் நீண்ட நேரம் கரும்புகை சூழ்ந்து புதன்கிழமை காலை அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 
பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த தீ வைக்கும் சம்பவத்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வேறு எங்கோ வீணாகும் பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு இரவு நேரத்தில் எடுத்து வரப்பட்டு, பின்னர் தீ வைக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/பிளாஸ்டிக்-பாலித்தீன்-பொருள்களை-எரிப்பவர்கள்-மீது-நடவடிக்கை-தேவை-3077906.html
3077905 கோயம்புத்தூர் திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம் DIN DIN Thursday, January 17, 2019 08:15 AM +0530 காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 12ஆம் தேதி துவங்கியது. வீரகாளியம்மன் மலைக் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணியளவில் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பகல் 12 மணிக்கு கொடி ஏற்றுதலும் நடந்தது. மதியம் 1 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள  நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி எழுந்தருளல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வரும் 21ஆம் தேதி காலை10 மணிக்கு துவங்குகிறது. 22ஆம் தேதி திருத்தேர் மலையை வலம் வந்து கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்படும். பின்னர்  மூன்றாம் நாள் 23ஆம் தேதி தேர் நிலையை அடையும். இந்த 3 நாள்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவர். வரும் 30ஆம் தேதி தேர்த் திருவிழா நிறைவடைகிறது.கொடி ஏற்றத்தை முன்னிட்டு சிவன்மலை முருகன் மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.ஹர்சினி, உதவி ஆணையர் கண்ணதாசன், அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/சிவன்மலை-சுப்பிரமணிய-சுவாமி-கோயில்-தைப்பூசத்-திருவிழா-கொடியேற்றத்துடன்-துவக்கம்-3077905.html
3077904 கோயம்புத்தூர் திருப்பூர் முதுமலையில் யானை பொங்கல் கொண்டாட்டம் DIN DIN Thursday, January 17, 2019 08:15 AM +0530 முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பப்காடு யானைகள் முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. இதில் புதிய  வரவாக சமயபுரத்தில் இருந்து வந்த கோயில் யானை மசினியும் இடம் பெற்றுள்ளது.  இங்கு புதன்கிழமை மாலை யானை பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் 9 யானைகள் மட்டுமே பங்கேற்றன. இந்த யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பொங்கல் மற்றும் வழக்கமான உணவுகளுடன் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. 
எளிமையாக நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறப்பு உணவுகளை முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் புஷ்பாகரன் வழங்கினார். தெப்பக்காடு  யானைகள் முகாமில் 24 யானைகள் இருந்தும் குறைந்த அளவிலேயே யானைகள் பங்கேற்றதற்கு மஸ்து (பாலியல் உணர்வு) பிரச்னையே காரணம் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதேபோல, இந்த  பொங்கல் விழா நிகழ்ச்சியில் மசினி யானையும் பங்கேற்கவில்லை. அதற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தனி இடத்தில் வைத்து அதற்கு சிகிச்சையளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
யானை பொங்கல் விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி  கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தெப்பக்காட்டில் குவிந்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/முதுமலையில்-யானை-பொங்கல்-கொண்டாட்டம்-3077904.html
3077903 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் சமத்துவப் பொங்கல் விழா DIN DIN Thursday, January 17, 2019 08:14 AM +0530 திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில்  சாமுண்டிபுரத்தில் 22ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க., திலீபன் மன்றம் சார்பில் சாமுண்டிபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஒரே நேரத்தில் இந்து, கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமிய பெண்கள் 500 பேர் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். 
முன்னதாக, முளைப்பாரி ஊர்வலமும், பூர்ண கும்ப மரியாதை நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து பெண்கள் பங்கேற்ற கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், மதிமுக மாநகர் மாவட்ட தலைவர் ஆர். நாகராஜ், மாவட்ட செயலாளர் சிவபாலன், அவைத் தலைவர் துரைசாமி, முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலப் பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் தமிழர் பேரவை சார்பில் 27 ஆம் ஆண்டு பொங்கல் விழா வெள்ளியங்காட்டில் நடைபெற்றது. திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள கலைஞர் நினைவுத் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/திருப்பூரில்-சமத்துவப்-பொங்கல்-விழா-3077903.html
3077902 கோயம்புத்தூர் திருப்பூர் கஞ்சா, மது விற்பனை செய்த 6 பேர் கைது DIN DIN Thursday, January 17, 2019 08:14 AM +0530 திருப்பூர் மாநகர் பகுதியில் கஞ்சா, மதுபானம் விற்பனை செய்ததாத 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 76 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருமாள் கோயில் முன்  சுரேஷ் (39), கஞ்சா விற்பனை செய்த போது தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல், 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட வஞ்சிபாளையம் மதுபானக் கடை,  பி.என்.சாலை, பூங்கா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்த பழனிச்சாமி(58), கார்த்திகேயன்(44), வடிவேல்(38), சசிகுமார்(25) உட்பட 5 பேரை மது விலக்கு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 76 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/கஞ்சா-மது-விற்பனை-செய்த-6-பேர்-கைது-3077902.html
3077901 கோயம்புத்தூர் திருப்பூர் பொங்கலை ஒட்டி சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் DIN DIN Thursday, January 17, 2019 08:14 AM +0530 பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறையால் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்திமலை. பொங்கல் விடுமுறையை ஒட்டி ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்துடன் புதன்கிழமை இங்கு வந்திருந்தனர். இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 
பின்னர் திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா இவைகளை கண்டு களித்தனர். இதை ஒட்டி திருமூர்த்தி மலையில் உள்ள கடைகளி ல் வியாபாரம் மும்முரமாக நடந்தது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமராவதி அணை:
பொங்கல் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்ட அமராவதி அணைப் பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் இங்குள்ள முதலைப் பண்ணையை பார்வையிட்டனர். பின்னர் அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவர் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அமராவதி அணையின் மேல்புறத்துக்குச் சென்ற மக்கள் அணையின் அழகை கண்டு ரசித்தனர். பின்னர் படகுத் துறையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.  
சின்னாறு வனப் பகுதி:
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு வனப் பகுதிக்கு கார், வேன் மற்றும் இர ண்டு சக்கர வாகனங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இங்குள்ள பூங்கன் ஓடைப்பகுதியில் குவிந்த சுற்றுலாப் பய ணிகள் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த அழகிய புள்ளி மான்கள் மற்றும் யானைகளை நேரில் பார்த்து பரவசம் அடைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/பொங்கலை-ஒட்டி-சுற்றுலாத்-தலங்களில்-குவிந்த-மக்கள்-3077901.html
3077900 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூர் அருகே வாய்க்காலில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு DIN DIN Thursday, January 17, 2019 08:13 AM +0530 திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையம் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் இருந்து இரு பெண்களின் சடலத்தை காவல் துறையினர் புதன்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நல்லகாளிபாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இரு பெண்களின் சடலம் மிதப்பதை அப்பகுதியினர் புதன்கிழமை மாலை பார்த்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி அவிநாசிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் வாய்க்காலில் மிதந்த இரு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து நடத்திய விசாரணையில், ஒரு பெண்ணுக்கு சுமார் 55 வயதும், மற்றொரு பெண்ணுக்கு சுமார் 30 வயதும் இருக்கலாம் என்று தெரியவந்தது. எனினும் இருவரின் பெயர், முகவரி மற்றும் இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/திருப்பூர்-அருகே-வாய்க்காலில்-இரு-பெண்களின்-சடலங்கள்-மீட்பு-3077900.html
3077899 கோயம்புத்தூர் திருப்பூர் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை வலியுறுத்தி விவசாயிகள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் DIN DIN Thursday, January 17, 2019 08:13 AM +0530 உடுமலை வட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். 
உடுமலை நகரில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் வைத்து விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடி னர். இந்த மாட்டுப் பொங்கலை ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் பொங் கலாக கொண்டாடுவதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளர் பரமசிவம் கூறியதாவது:
பிஏபி திட்டம் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. விவாயிகள் அனைவருக்கும் வாழ்வாதாரமாக விள ங்கும் பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கொங்கு மண்டல விவசாயிகளுக்கு இதன் மூலம் பெரும் பலன் கிடைக்கும்.
ஆகையால் இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலை ஆனைமலையாறு-நல்லாறு திட்ட விழிப்புணர்வு பொங்கலாக கொண்டாடி வருகிறோம். இந்த செய்தி தமிழக அரசுக்கும் எட்டும் வகையில் கிராமங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/ஆனைமலையாறு---நல்லாறு-திட்டத்தை-வலியுறுத்தி-விவசாயிகள்-மாட்டுப்-பொங்கல்-கொண்டாட்டம்-3077899.html
3077898 கோயம்புத்தூர் திருப்பூர் விருக்ஷா பள்ளியில் பொங்கல் விழா DIN DIN Thursday, January 17, 2019 08:13 AM +0530 திருப்பூர் வீரபாண்டி பிரிவில் உள்ள விருக்ஷா சர்வதேசப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி நிர்வாக இயக்குநர் டி.கேவிந்தராஜன், பள்ளி தாளாளர் எஸ்.இராஜலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோலாட்டம், சிலம்பாட்டம், கும்பி, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இவ்விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/விருக்ஷா-பள்ளியில்-பொங்கல்-விழா-3077898.html
3077897 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் 3 நாள்கள் திருவிழா தொடங்கியது DIN DIN Thursday, January 17, 2019 08:12 AM +0530 உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கலை ஒட்டி 3 நாள்கள் நடைபெறும் விழா புதன்கிழமை தொடங்கியது.
இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழர் திருநாள் விழா மூன்று நாள்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதுவதால் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். 
இந்நிலையில் முதல் நாள் விழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன . இதைத் தொடர்ந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பம், குடும்பமாக மாட்டு வண்டிகளில் வியாழக்கிழமை கோயிலுக்கு வருவர். அப்போது அவர்கள் மண் உருவத்தாலான கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பால் அபிஷேகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபடுவர். விவசாயிகள் பலர் கன்று குட்டிகளை தானம் செய்வர். 
இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உடுமலை, பல்லடம், திருப்பூர், பழனி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/உடுமலை-ஆல்கொண்டமால்-கோயிலில்-3-நாள்கள்-திருவிழா-தொடங்கியது-3077897.html
3077896 கோயம்புத்தூர் திருப்பூர் கண்வலி கிழங்கு திருடிய 2 பேர் கைது DIN DIN Thursday, January 17, 2019 08:12 AM +0530 வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் கண்வலி கிழங்கு திருடிய 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 இங்குள்ள நால்ரோடு தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராதாமணி (44). இவர் நான்கு ஏக்கர் பரப்பளவில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்துள்ளார். 
இங்கிருந்து இரவு நேரத்தில் அடிக்கடி கிலோ கணக்கில் கண்வலி கிழங்கு திருடு போயுள்ளது.
இந்தக் கிழங்கு சந்தையில் ஒரு கிலோ ரூ.800 க்கு விலை போவது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ராதாமணியும், அவருடைய மாமனார் வடிவேல் இருவரும் தோட்டத்துக்குச் சென்ற போது, நால்ரோடு பழனிக்கவுண்டன்வலசு காலனியைச் சேர்ந்த முத்துசாமி மகன் சதீஷ்குமார் (22), பழனிசாமி மகன் மணிவேல் (30) இருவரும் கண்வலி கிழங்குகளைத் திருடிக் கொண்டிருந்தது தெரிந்தது. 
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து 22 கிலோ கண்வலி கிழங்கு பறிமுதல் செய்யப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/17/கண்வலி-கிழங்கு-திருடிய-2-பேர்-கைது-3077896.html
3077126 கோயம்புத்தூர் திருப்பூர் சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா DIN DIN Tuesday, January 15, 2019 06:06 AM +0530 காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா,   வீரகாளியம்மன் கோயிலில் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இந்நிலையில், வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதியுலா சிவன்மலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேரில்  வீரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/சிவன்மலையில்-வீரகாளியம்மன்-தேர்-திருவீதி-உலா-3077126.html
3077125 கோயம்புத்தூர் திருப்பூர் ஐயப்ப சுவாமி கோயிலில் அஷ்டாபிஷேகம் DIN DIN Tuesday, January 15, 2019 06:05 AM +0530 வெள்ளக்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் அஷ்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மகர ஜோதி தரிசன சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/ஐயப்ப-சுவாமி-கோயிலில்-அஷ்டாபிஷேகம்-3077125.html
3077124 கோயம்புத்தூர் திருப்பூர் சட்ட விரோதமாக மது விற்பனை: 23 பேர் கைது DIN DIN Tuesday, January 15, 2019 06:05 AM +0530 திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக  மது விற்பனை செய்த 23 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 346 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் சேவல் சண்டையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி உத்தரவிட்டிருந்தார். இதன்படி அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் தனிப் படையினர் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 346 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
அதே போல், உடுமலை காவல் எல்லைக்கு உள்பட்ட சுண்டக்காம்பாளையத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த இரு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/சட்ட-விரோதமாக-மது-விற்பனை-23-பேர்-கைது-3077124.html
3077123 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் இரு சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு DIN DIN Tuesday, January 15, 2019 06:05 AM +0530 திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த இரு சாய ஆலைகளின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை துண்டித்தனர்.
திருப்பூரில் பிரிண்டிங், டையிங் (சாய ஆலைகள்) தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் சாயக் கழிவுகளை அருகில் உள்ள ஓடை, நொய்யல், சாக்கடைகளில் கலந்துவிடுவதாக அடிக்கடி புகார் எழுந்துவருகிறது.
இது குறித்து விசாரணை நடத்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிப்பது வழக்கம்.
இந்த நிலையில், இடுவம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இரு சாய ஆலைகள் சாயமேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதன்படி, அதிகாரிகள் விசாரணை நடத்தி இரு ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும், முறைகேடாக சாயக்  கழிவுகளை வெளியேற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/திருப்பூரில்-இரு-சாய-ஆலைகளின்-மின்-இணைப்பு-துண்டிப்பு-3077123.html
3077122 கோயம்புத்தூர் திருப்பூர் பள்ளிகளில் பொங்கல் விழா DIN DIN Tuesday, January 15, 2019 06:04 AM +0530 பிளாட்டோஸ் அகாதெமி, வேலவன் மெட்ரிக் பள்ளிகளில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது. 
திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் அகாதெமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளியின் நிர்வாக இயக்குநர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  பள்ளி மாணவர்களின் கும்மி,  ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர் மீராதேவி பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில், பள்ளி அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பலவஞ்சிபாளையத்தில் உள்ள வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில்,  பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/பள்ளிகளில்-பொங்கல்-விழா-3077122.html
3077121 கோயம்புத்தூர் திருப்பூர் பெண் மந்திரவாதியைக் கத்தியால்  குத்திய மூலிகை விற்பனையாளர் கைது DIN DIN Tuesday, January 15, 2019 06:04 AM +0530 பல்லடம் அருகே கரைப்புதூரில் பெண் மந்திரவாதியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மூலிகை விற்பனையாளரை பல்லடம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் புவனேஸ்வரி (39). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூரில் வசித்து வருகிறார்.
தனது கணவர் செல்வராஜைப் பிரிந்து கடந்த சில வருடங்களாகத் தனியாக வசித்துவரும் இவர், சாமியாடியும், குறிசொல்லியும், பில்லி, சூனியம் உள்ளிட்ட மாந்திரீக வேலைகளையும் செய்து வந்துள்ளார். அவருக்குத் தேவையான மூலிகைகளை விருதுநகர் மாவட்டம், சதுரகிரியைச் சேர்ந்த குமரகுரு (45) சேகரித்துக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்த புவனேஸ்வரியுடன் குமரகுரு திங்கள்கிழமை காலை தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில், புவனேஸ்வரியை குமரகுரு சிறு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரி அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த பல்லடம் போலீஸார், புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பல்லடம் அருள்புரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த குமரகுருவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் 
அடைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/பெண்-மந்திரவாதியைக்-கத்தியால்--குத்திய-மூலிகை-விற்பனையாளர்-கைது-3077121.html
3077120 கோயம்புத்தூர் திருப்பூர் அலகுமலை வலுப்பூரம்மன் கோயில் தேரோட்டம் DIN DIN Tuesday, January 15, 2019 06:03 AM +0530 பல்லடம் அருகேயுள்ள அலகுமலை சேமலைக்கவுண்டம்பாளையம் வலுப்பூரம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை சேமலைக்கவுண்டம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வலுப்பூரம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கிராம சாந்தியுடன் ஜனவரி 11ஆம் தேதி துவங்கியது. அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், கொடியேற்றம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.
தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு திருப்பணிக் குழு தலைவர் சின்னுக் கவுண்டர் முன்னிலை வகித்தார். தேரோட்டத்தை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் வடம் பிடித்து தொடக்கிவைத்தார்.
இதில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் அலகுமலை வி.எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.சிவாச்சலம், பல்லடம் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சிதம்பரம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹர்சினி, செயல் அலுவலர் தீபா உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/அலகுமலை-வலுப்பூரம்மன்-கோயில்-தேரோட்டம்-3077120.html
3077119 கோயம்புத்தூர் திருப்பூர் தொமுச சார்பில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதவி DIN DIN Tuesday, January 15, 2019 06:03 AM +0530 பணியின்போது மின் விபத்துகளில் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமப்பட்டு வரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஆடைகள், பொங்கல் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 
திருப்பூர் போயம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூர் மாவட்ட தொமுச செயலாளர் அ.சரவணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.ரங்கசாமி முன்னிலை வகித்தார். 
இதில், திருப்பூர் மாவட்டத்தில் மின் விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 70 பேரின் குடும்பத்தினருக்கு வேட்டி-சட்டை, அரிசி, வெல்லம், நெய், சிறுபருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சங்க செயலாளர் சானை ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், மின்வாரிய தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/தொமுச-சார்பில்-மின்-வாரிய-ஒப்பந்த-தொழிலாளர்களுக்கு-உதவி-3077119.html
3077118 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Tuesday, January 15, 2019 06:03 AM +0530 வெள்ளக்கோவில் அருகே தார் சாலை போட்டுத் தர வேண்டும்  என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில்-மூலனூர் சாலையில் உள்ள கரட்டுப்பாளையத்தில் இருந்து கோல்டன் நகர் வழியாக செம்மாண்டம்பாளையம் சாலை வரை 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலையில் தார் சாலை போடுவதற்காக ஜல்லிக் கற்கள் போடப்பட்டு, கடந்த பல மாதங்களாக தார் சாலை போடப்படாமல் உள்ளது. சாலையில் தார்ச் சாலை போடுவதற்காக ஜல்லிக் கற்கள் போடப்பட்டு சாலை பெயர்ந்து கிடக்கிறது.  இந்தச் சாலையைப் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கடந்து வருகின்றனர்.  
நகராட்சி மின் மயானத்துக்குச் செல்லும் முக்கியப் பாதையாகவும்,  தினமும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இச் சாலையில் சென்று வருகின்றன.
எனவே இந்தச் சாலையை தார் சாலையாகப் போட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/வெள்ளக்கோவில்-அருகே-தார்-சாலை-அமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3077118.html
3077117 கோயம்புத்தூர் திருப்பூர் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே லட்சியம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் DIN DIN Tuesday, January 15, 2019 06:02 AM +0530 நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
பொங்கலை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கோட்ட அளவிலான மாநாடு, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தென் பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார்.
இதில்  மோகன் பாகவத் பேசியதாவது: 1940க்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆர்.எஸ்.எஸ். கிளை தொடங்கப்பட்டது. 1970க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது. 2010க்குள் அனைத்து ஒன்றியப் பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ். தொடர்பே இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
சூரியனை வழிபடுவது, பசுவை வழிபடுவது, இயற்கையை வழிபடுவது என்பதெல்லாம் நமது தொன்றுதொட்ட பாரம்பரியம். அதை ஒட்டியே நாம் பொங்கல் திருவிழா, காணும் பொங்கல் திருவிழாக்களைக் கொண்டாடி வருகிறோம்.
இந்த விழா நேரத்தில், நமது சமுதாயத்தில் உள்ள தேவையற்ற குறைபாடுகளை நீக்க, நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதி ஏற்க வேண்டும்.
சமுதாயத்தில் நம்பிக்கையான நல்ல சூழலை உருவாக்குவதே நமது பணி. அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டு, நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தென் தமிழக அமைப்பாளர் செந்தில்குமார்,  இணை அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/ஆக்கப்பூர்வமான-மாற்றத்தை-உருவாக்குவதே-லட்சியம்-ஆர்எஸ்எஸ்-தலைவர்-மோகன்-பாகவத்-3077117.html
3077116 கோயம்புத்தூர் திருப்பூர் மாநகராட்சி லாரி மோதி இளைஞர்கள் இருவர் சாவு DIN DIN Tuesday, January 15, 2019 06:02 AM +0530 திருப்பூரில், மாநகராட்சி குப்பை லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற  இளைஞர்கள் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஊரக போலீஸார் கூறியதாவது: 
திருப்பூர், ஊரக காவல் நிலையத்திற்கு உள்பட்ட செரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவரது நண்பர் செல்வராஜ் (30). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். 
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வராஜும், பிரகாஷும் திருப்பூர், தாராபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது கே.செட்டிபாளையம் பேருந்துநிறுத்தம் அருகே, பின்னால் வந்த மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்குரிய  லாரி அவர்கள் மீது மோதியது. இதில்,  செல்வராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  பிரகாஷ் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பிரகாஷும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/மாநகராட்சி-லாரி-மோதி-இளைஞர்கள்-இருவர்-சாவு-3077116.html
3077115 கோயம்புத்தூர் திருப்பூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: ருத்ரவேணி பாலிடெக்னிக் சிறப்பிடம் DIN DIN Tuesday, January 15, 2019 06:02 AM +0530 கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்பட்ட மண்டல அளவிலான குழு மற்றும் தட களப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இக் கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் குழுப் பிரிவில்  ஹேண்ட் பால் போட்டியில் மூன்றாம் இடமும்,  கோ-கோ போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர். ஆடவர் பிரிவில் கிரிக்கெட்டில் 4 இடமும் பெற்றனர்.
தட களப் போட்டியில், விஜய் கார்த்திக் 110 மீ. தடை தாண்டி ஓடுதல் போட்டியில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும் பெற்றார். 
ஜெகவிஷ்ணு குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும்,  வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றார். 
மாணவி பிரேமலதா வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும், 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடமும், 400 மீ. தொடர் ஓட்டப்  போட்டியில் மூன்றாம் இடமும்  பெற்றார்.
மஞ்சுளாதேவி 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடமும், 400 மீ. தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றார். தட களப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நால்வரும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில் கல்லூரி இயக்குநர் சுமதி கிருஷ்ணபிரசாத், ஆலோசகர் ஜெ.மஞ்சுளா, விளையாட்டுத் துறை இயக்குநர் பி.வெள்ளைச்சாமி, டீன் எம்.இராமநாதன், முதல்வர் எம்.கண்ணன் உள்ளிட்டோர் மாணவர்களைப் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/15/மண்டல-அளவிலான-விளையாட்டுப்-போட்டி-ருத்ரவேணி-பாலிடெக்னிக்-சிறப்பிடம்-3077115.html
3076523 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் திருவள்ளுவர் திருக்கோயில் நாளை திறப்பு DIN DIN Monday, January 14, 2019 02:27 AM +0530 திருப்பூர் மக்கள் மன்றம் சார்பில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) நடைபெற உள்ளது.
திருவள்ளுவரின் 2,050ஆவது அவதார நாள், மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு, திருப்பூர் மாநகராட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு, திருப்பூர் மக்கள் மன்றத்தின் வெள்ளி விழா ஆகியவற்றின் நினைவாக டைமண்ட் திரையரங்கம் அருகே உள்ள எழுத்தறிவாலயம் பொது நூலகத்தில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. 
இதன் திறப்பு விழா வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. 
இதையடுத்து, செம்மொழித் தமிழன்னைக்கு மலர் வணக்கம், திருவள்ளுவர், காந்தியடிகளுக்கு மலர் வணக்கம், திருப்பூர் புண்ணிய பூமிக்கு மலர் வணக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது நாளாக, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி புதன்கிழமை காலை முதல் மாலை வரையில் திருவள்ளுவரை மலர் தூவி வணங்க திருப்பூர் மக்கள் மன்ற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/திருப்பூரில்-திருவள்ளுவர்-திருக்கோயில்-நாளை-திறப்பு-3076523.html
3076522 கோயம்புத்தூர் திருப்பூர் ஊதியூர் நூலகத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்க கோரிக்கை DIN DIN Monday, January 14, 2019 02:26 AM +0530 ஊதியூரில் உள்ள நூலகத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காங்கயம் அருகே,  ஊதியூர் மலை அடிவாரத்தில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு சுற்றுச் சுவர் இல்லை.இதனால் நூலகத்துக்கு பின்புறம் உள்ள காலியிடத்தை அப்பகுதி மக்கள் சிலர் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
 இதனால், நூலகத்துக்குள் துர்நாற்றம் வீசுவதால் இங்கு படிக்க வரும் வாசகர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, 
இந்த கிளை நூலகத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/ஊதியூர்-நூலகத்துக்கு-சுற்றுச்-சுவர்-அமைக்க-கோரிக்கை-3076522.html
3076520 கோயம்புத்தூர் திருப்பூர் "விசைத்தறித் தொழிலைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' DIN DIN Monday, January 14, 2019 02:25 AM +0530 விசைத்தறித் தொழிலைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தாததால் நஷ்டத்தில்  தொழிலை நடத்தி வருகிறோம். தொழிலை விரிவுபடுத்த வேண்டி வங்கிகளில் கடன் வாங்கிய விசைத்தறியாளர்கள் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.  கடன் தொகைக்காக வங்கி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். தறிகளை விற்பனை செய்தாவது கடனை அடைக்கலாம் என்றால் அவற்றை வாங்க யாரும் முன் வரவில்லை.  அதனால் ரூ.1 லட்சத்துக்கும் மேல் மதிப்புடையத் தறிகளை பழைய இரும்பு விலைக்கு விற்கும் நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இது பற்றி முதல்வர், அமைச்சர்கள், சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்கள், தொழிலாளர் நலத் துறை, தொழில் துறை, ஆகியோரிடம்  பல முறை மனு அளித்தும் விசைத்தறியாளர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.  எனவே,  அழிந்து வரும் விசைத்தறித் தொழிலைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/விசைத்தறித்-தொழிலைக்-காப்பாற்ற-அரசு-நடவடிக்கை-எடுக்க-வேண்டும்-3076520.html
3076519 கோயம்புத்தூர் திருப்பூர் பொங்கல் விடுமுறை: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 02:25 AM +0530 பொங்கல் பண்டிகையை ஒட்டி  திருப்பூரில் ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் பண்டிகை நாள்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும், மதுரை, திருச்சி, தேனி, கும்பகோணம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் திருப்பூரில் தங்கியுள்ளனர். 
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் ஜனவரி 17ஆம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளன. இதையடுத்து, சொந்த ஊர்களுக்குச் செல்ல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் நிலையம், திருப்பூர் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/பொங்கல்-விடுமுறை-ரயில்-பேருந்து-நிலையங்களில்-அலைமோதிய-மக்கள்-கூட்டம்-3076519.html
3076518 கோயம்புத்தூர் திருப்பூர் 2137 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அமைச்சர் வழங்கினார் DIN DIN Monday, January 14, 2019 02:24 AM +0530 2137 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூளவாடி, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவனூர்புதூர், ஜல்லிபட்டி, எலையமுத்தூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது அதிமுக அரசு. அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு  இலவச மடிக்கணினி, மிதிவண்டி  உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, 2137 மாணவ, மாணவிகளுக்கு 79 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன், திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவர்  கே.மனோகரன், துறை அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/2137-மாணவர்களுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்-அமைச்சர்-வழங்கினார்-3076518.html
3076516 கோயம்புத்தூர் திருப்பூர் சேவூரில் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 02:24 AM +0530 அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவிநாசி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அ.ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி,அவைத் தலைவர் சின்னக்கன்னு, விவசாய அணி ஒன்றிய துணைச் செயலாளர் பி.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணக்குமார், கிளைச் செயலாளர் எஸ்.மனோகரன், பொறுப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/சேவூரில்-வடக்கு-ஒன்றிய-அதிமுக-நிர்வாகிகள்-கூட்டம்-3076516.html
3076515 கோயம்புத்தூர் திருப்பூர் பெண்ணிடம் வழிப்பறி: இளைஞர் கைது DIN DIN Monday, January 14, 2019 02:24 AM +0530 திருப்பூரில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதி அருகே பணி முடிந்து இளம் பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணின் கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் சப்தத்தைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தனர். 
பின்னர் அவரை திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
அங்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பதும், இவர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/பெண்ணிடம்-வழிப்பறி-இளைஞர்-கைது-3076515.html
3076514 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் கேபிள் ஒளிபரப்பு துண்டிப்பு DIN DIN Monday, January 14, 2019 02:23 AM +0530 வெள்ளக்கோவில் பகுதியில் கேபிள் டிவி ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.
 இப்பகுதியில் இரண்டு நிறுவனங்கள் மூலம் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சாதாரண முறையில் ஒளிபரப்பு நடந்து வந்த நிலையில், தற்போது செட்டாப் பாக்ஸ் மூலம் இரு நிறுவனங்களும் புதிதாக இணைப்புகளை வழங்கி வருகின்றன.
 இவர்களிடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக மற்றவரின் கேபிள் ஒயர்கள் அடிக்கடி மர்ம நபர்களால் வெட்டிச் சேதப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
 இந்நிலையில் தற்போது வெள்ளக்கோவில் பகுதியில் 6,500 டிவிக்களில் கேபிள் ஒளிபரப்பு நின்றுபோனது. மூன்று நாள் பொங்கல் விடுமுறையில் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/வெள்ளக்கோவிலில்-கேபிள்-ஒளிபரப்பு-துண்டிப்பு-3076514.html
3076513 கோயம்புத்தூர் திருப்பூர் பொங்கல் பண்டிகை:  காதர்பேட்டையில் குவிந்த பொதுமக்கள் DIN DIN Monday, January 14, 2019 02:23 AM +0530 திருப்பூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் வாங்க காதர்பேட்டை, புதுமார்க்கெட் வீதியில் பொதுமக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முக்கியப் பண்டிகை காலங்களில் காதர்பேட்டையில் பின்னலாடைகளின் விற்பனை சூடுபிடிக்கும்.  இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் வாங்க கடந்த சனிக்கிழமை முதலே பொதுமக்களின் கூட்டம் காதர் பேட்டையில் அதிகரித்துக் காணப்பட்டது. 
மேலும், சிறப்பு தள்ளுபடியில் ரெடிமேட் ஆடைகள், முன்னணி நிறுவனங்களின் இரண்டாம் தர பின்னலாடைகளை இளைஞர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.  
காளான் போல முளைத்துள்ள சாலையோரக் கடைகள் 
பொங்கல் பண்டிகையை ஒட்டி காதர்பேட்டை, புதுமார்க்கெட் வீதி, பல்லடம் சாலை, மங்கலம் சாலை பகுதிகளில் மழைக்கு முளைக்கும் காளான்களைப்போல் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளன. 
இதில், ரூ.50 முதல் குழந்தைகளுக்கும், ரூ.100 முதல் பெரியவர்களுக்கும் பின்னலாடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதே வேளையில், முன்னணி நிறுவனங்களின் ஷோரூம்களிலும் பொங்கல் விற்பனை சூடுபிடித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/பொங்கல்-பண்டிகை--காதர்பேட்டையில்-குவிந்த-பொதுமக்கள்-3076513.html
3076512 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் கேபிள் ஒளிபரப்பு துண்டிப்பு DIN DIN Monday, January 14, 2019 02:23 AM +0530 வெள்ளக்கோவில் பகுதியில் கேபிள் டிவி ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.
 இப்பகுதியில் இரண்டு நிறுவனங்கள் மூலம் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சாதாரண முறையில் ஒளிபரப்பு நடந்து வந்த நிலையில், தற்போது செட்டாப் பாக்ஸ் மூலம் இரு நிறுவனங்களும் புதிதாக இணைப்புகளை வழங்கி வருகின்றன.
 இவர்களிடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக மற்றவரின் கேபிள் ஒயர்கள் அடிக்கடி மர்ம நபர்களால் வெட்டிச் சேதப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
 இந்நிலையில் தற்போது வெள்ளக்கோவில் பகுதியில் 6,500 டிவிக்களில் கேபிள் ஒளிபரப்பு நின்றுபோனது. மூன்று நாள் பொங்கல் விடுமுறையில் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/வெள்ளக்கோவிலில்-கேபிள்-ஒளிபரப்பு-துண்டிப்பு-3076512.html
3076510 கோயம்புத்தூர் திருப்பூர் பொருள்காட்சியில் பொதுமக்கள் கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 02:22 AM +0530 பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி திருப்பூரில் டிராகன் பொருள்காட்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. 
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் பிரகல்யா  என்டர்டெயின்மென்ட்  நிறுவனம் சார்பில்  டிராகன், டைனோசர் பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  
பொருள்காட்சியின் முகப்பில் கண்களில் இருந்து தீயைக் கக்கியபடி டிராகன் நிற்பதும், அரங்கில் முட்டையில் இருந்து டைனோசர் வெளிவருவது, பறப்பது போன்றவை சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 
மேலும் வாட்டர் போட், பேய் வீடு, ஜெயின்ட் வீல், டிராகன் ரயில் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
வீட்டு உபயோகப் பொருள்கள்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்காட்சியானது வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரையில் நாள்தோறும் மாலை 4 முதல் 10 மணிவரையில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/பொருள்காட்சியில்-பொதுமக்கள்-கூட்டம்-3076510.html
3076509 கோயம்புத்தூர் திருப்பூர் "பக்தி இருந்தால் இறைவன் நம்முடன் இருப்பார்' DIN DIN Monday, January 14, 2019 02:22 AM +0530 பக்தி இருந்தால் இறைவன் நம்முடன் இருப்பார் என்று திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடம் ஆதீனம் சுந்தரராசு அடிகளார் பேசினார்.
பல்லடம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மார்கழி உற்சவம் என்னும் தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் பல்லடம் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 
இதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்லடம் தமிழ்ச் சங்க தலைவர் இரா.கண்ணையன் தலைமை வகித்தார். 
சமூக ஆர்வலர் ஆ.அண்ணாதுரை, கிராம நிர்வாக அலுவலர்(ஓய்வு) பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திருவாசக தேன் எனும் தலைப்பில் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடம் ஆதீனம் சுந்தரராசு அடிகளார் பேசியதாவது.
ஆங்கில மோகம் காரணமாக திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட சிறப்பு மிக்க நூல்கள் குறித்து இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விட்டது. 
பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பெற்றோர் நேரம் ஒதுக்கி அன்பாக பேச வேண்டும்.  அதே சமயம் கண்டிப்பையும் காட்ட வேண்டும். இறை பக்தி நம்மிடம் இருந்தால் இறைவன் நிச்சயம் நம்முடன் இருப்பார். நம் நாட்டிலுள்ள கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.  இந்த கோயில்களை அரசு பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றார். 
அம்மன் பெருமை எனும் தலைப்பில் திருநாவுக்கரசர் சுவாமிகள் திருமடம் செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள் பேசியது:
ஆன்மிக சொற்பொழிவுகள் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். வாழ்க்கையில் தடம் மாறிச் செல்லாமல் இருக்கவே முன்னோர் ஆன்மிக கருத்துகளை விதைத்து சென்றுள்ளனர். மனதை ஒருநிலைபடுத்தி வழிபட்டால் நினைக்கும் எண்ணங்கள் நிறைவேறும் என்றார். மந்திரமாவது நீர் எனும் தலைப்பில், சிவனடிச் செல்வர் புத்தரச்சல் ஆறுமுகம் பேசியது: 
இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயர்களிடம் செங்கோல் வாங்கும்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. மந்திரங்களுக்கு நம் முன்னோர் அவ்வளவு மதிப்பளித்தனர். திருநீரு என்பதற்கு காப்பு என்று பொருள். சைவர்கள் 16 இடங்களில் திருநீரு பூசுவர். உடலிலுள்ள பித்த நீரை வெளியேற்றும் தன்மை திருநீருக்கு உண்டு. இறை பக்தியுடன் திருநீரு பூசினால் தீவினைகள் அகலும் என்றார்.  
திருவள்ளுவம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை கௌதமன் பேசியது: 
உலக மொழிகளில் தமிழ் மொழி தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. ஆங்கில மோகத்தால் தமிழுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருக்கக்கூடாது. 
சிறப்பு வாய்ந்த முதுமொழியான தமிழை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு நல்ல முறையில் உணர்த்தி போதிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு திருக்குறள் வாங்கிக் கொடுத்து அதனை தினந்தோறும் படித்து விளக்கம் கூற வேண்டும் என்றார். தமிழ் சங்கத்தின் சார்பில் மார்கழி உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/பக்தி-இருந்தால்-இறைவன்-நம்முடன்-இருப்பார்-3076509.html
3076507 கோயம்புத்தூர் திருப்பூர் இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் சாவு DIN DIN Monday, January 14, 2019 02:22 AM +0530 நத்தக்காடையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், வாகனத்தை ஓட்டி வந்த இருவருமே உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (32).  சென்னிமலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் புளூமெட்டல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் முத்தூரில் இருந்து நால்ரோடுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் நத்தக்காடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பழையகோட்டைப்புதூர் அருகே ஊஞ்சமரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம் (65), செல்லம்மாள் (58). இருவரும் சென்னிமலையில் உள்ள அவர்களது பேத்தி வீட்டுக்குச் சென்றுவிட்டு,  இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மதியம் 1.15 மணியளவில், நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில், பழையகோட்டைப்புதூர் அருகே சாலை வளைவில் இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த செல்லம்மாளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காங்கயம் போலீஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/14/இருசக்கர-வாகனங்கள்-மோதல்-2-பேர்-சாவு-3076507.html
3076061 கோயம்புத்தூர் திருப்பூர் நொய்யல் ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுத்த 9 பேருக்கு நோட்டீஸ் DIN DIN Sunday, January 13, 2019 03:31 AM +0530
சென்னிமலை அருகே இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு சென்ற 9 பேருக்கு பொதுப் பணித் துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக் கழிவுகள் அதிக அளவில் கலந்ததால், அணையைச் சுற்றியுள்ள பகுதி, அணை நீர் சென்ற நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் மாசுபட்டன. அதன் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த சில வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 
நொய்யல் ஆற்றுப் பகுதியில் மின் மோட்டார்களை வைத்து இரவு, பகலாக குழாய்கள் மூலமாக சிலர் தங்களது வயல்களுக்கும், கிணறுகளுக்கும் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்தத் தண்ணீரில், திருப்பூர் சாயக் கழிவுகள் கலந்துள்ளதால் ஏற்கெனவே சாயக் கழிவாக இருந்த கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை மேலும் மாசுபட்டு குடிநீருக்கு அவதிப்பட நேரிடும் என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
கிணற்று மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் இருந்து குழாய் வழியாக சாயக்கழிவு கலந்த தண்ணீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலத்தொழுவு கிராமத்தில் உள்ள வெங்கமேடு ஊர் பொதுமக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 
அதன்பேரில், சென்னிமலை பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் சபரிநாதன் மூலம் நொய்யல் ஆற்றில் இருந்து கிணற்று மின் இணைப்பைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பாக தண்ணீர் எடுத்ததாகக் கூறி, ஒரத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், கொடுமணல் பகுதியைச் சேர்ந்த 3 பேருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
மேலும், ஒரத்துப்பாளையம் நீர்பரப்பு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் கிணற்று மின் இணைப்பு மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் மேற்கண்ட 9 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னிமலை மின் வாரிய உதவி பொறியாளருக்கும் பொதுப் பணித் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/நொய்யல்-ஆற்றில்-முறைகேடாக-தண்ணீர்-எடுத்த-9-பேருக்கு-நோட்டீஸ்-3076061.html
3076060 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடம் அருகே ஆட்டுக்கிடா வண்டி சவாரி DIN DIN Sunday, January 13, 2019 03:30 AM +0530
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் பொங்கல் விழாவில் ஆட்டுக் கிடா வண்டி சவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
கணபதிபாளையத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் முருகவேல் ஆட்டுக் கிடாவை கொம்பன் என்று பெயரிட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ஆட்டுக் கிடாவுக்கு தான் சாப்பிடும் உணவு வகைகளை வழங்கி பழக்கம் செய்துள்ளார். ஆடு என்றாலே அது பழங்கள், பசும்புல்,தலை இலைகளை தாவரங்களைதான் சாப்பிடும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் முருகவேல் வளர்க்கும் ஆட்டுக் கிடா சிக்கன் பிரியாணி, முட்டை, புரோட்டா, இட்லி, தோசை உள்ளிட்டவற்றை சாப்பிடுகிறது. இதன் கொம்புகள் நீளமாக உள்ளது. இதில் மணி கட்டப்பட்டுள்ளது.
குதிரை வண்டி, மாட்டு வண்டிபோல் ஆட்டுக் கிடா வண்டியை ரூ. 20 ஆயிரம் செலவில் தயார் செய்துள்ளார் முருகவேல். இதன் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முருகவேல் வண்டியில் அமர்ந்து கட்டளையிட பயிற்சி கொடுக்கப்பட்டதைபோல் ஆட்டுக் கிடா வண்டி சாலையில் ஓடியது. இதைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/பல்லடம்-அருகே-ஆட்டுக்கிடா-வண்டி-சவாரி-3076060.html
3076059 கோயம்புத்தூர் திருப்பூர் பேருந்து - கார் மோதல்: இருவர் சாவு DIN DIN Sunday, January 13, 2019 03:30 AM +0530
பல்லடம், வெங்கிட்டாபுரத்தில் அரசுப் பேருந்து - கார் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். 
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஸ்ரீராம் (25), பிரகாஷ் (35), நவநீதகிருஷ்ணன் (26) ஆகியோர். இவர்கள் மூவரும், பணி சம்பந்தமாக காரில் பொள்ளாச்சி நோக்கி சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர். 
பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஸ்ரீராம், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
கால் முறிவு அடைந்த நவநீதகிருஷ்ணனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/பேருந்து---கார்-மோதல்-இருவர்-சாவு-3076059.html
3076058 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூர் ரயில் நிலையத்தில் பெண் சடலம் மீட்பு DIN DIN Sunday, January 13, 2019 03:30 AM +0530
திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த பெண் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த பெண்ணுக்கு சுமார் 55 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/திருப்பூர்-ரயில்-நிலையத்தில்-பெண்-சடலம்-மீட்பு-3076058.html
3076041 கோயம்புத்தூர் திருப்பூர் சித்த மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை DIN DIN Sunday, January 13, 2019 03:25 AM +0530
தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மு.தணிகாசலம் தலைமை வகித்தார். 
மலேசிய அமைப்பாளர் கருடமலைச் சித்தர் அழகர்சாமி, மாவட்டச் செயலர் மு.த.சங்கர் சித்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 
இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மா உள்ளிட்ட மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் மாற்றுமுறை மருத்துவம் என்று கூறி வருகின்றன. இது வருந்தத்தக்கது. மேற்கண்ட மருத்துவ முறைகளை மாற்றுமுறை மருத்துவம் என அழைக்காமல், இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகள் எனக் குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மொரீஷஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் வாழும் தமிழர்களும் சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம் படிக்க விரும்பும் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, உலகம் முழுவதும் சித்த மருத்துவம் வளர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், இந்த இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.மணியன், கொள்கை பரப்புச் செயலர் கி.ஆறுமுகம், மக்கள் தொடர்பாளர் ஜாகீர் உசேன், செயற்குழு உறுப்பினர் பர்கத் நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/சித்த-மருத்துவக்-கல்லூரிகளில்-வெளிநாட்டுத்-தமிழர்களுக்கு-20-சதவீத-இடஒதுக்கீடு-சித்த-மருத்துவப்-பாது-3076041.html
3076040 கோயம்புத்தூர் திருப்பூர் ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்: வட்டாட்சியரிடம் புகார் மனு DIN DIN Sunday, January 13, 2019 03:25 AM +0530
ஊதியூரில் கோயில் நில ஆக்கிரமிப்புப் பிரச்னையால் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடைய இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் கலவரக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் காங்கயம் துணை வட்டாட்சியரிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
இந்த முன்னணி அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலில் விளக்கு ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அங்கு திரண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது கலவரம் ஏற்றப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 50 பேர் மீது ஊதியூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிய கலவரக்காரர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பொறுப்பாளர் ப.கண்ணுசாமி, ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவையின் நிறுவனத் தலைவர் அ.சு. பவுத்தன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தின் காங்கயம் பகுதி நிர்வாகி வி.என்.சுந்தரம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/ஊதியூரில்-கலவரத்தில்-ஈடுபட்டவர்களை-கைது-செய்ய-வேண்டும்-வட்டாட்சியரிடம்-புகார்-மனு-3076040.html
3076039 கோயம்புத்தூர் திருப்பூர் கீரனூரில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் DIN DIN Sunday, January 13, 2019 03:25 AM +0530
காங்கயத்தை அடுத்த கீரனூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீரனூர் ஊராட்சியில் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் தலைமை வகித்தார்.
மாநில இளைஞர் அணிச் செயலர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2009ஆம் ஆண்டுக்கு பின் விவசாயிகளுக்கு வழங்கப்படாத இலவச மின் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். 
கீரனூர் ஊராட்சி திமுக பொறுப்பாளர் எஸ்.விஸ்வநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் குணபாலன், ஈஸ்வரமூர்த்தி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சக்திவடிவேல், பாப்பினி ஊராட்சி முன்னாள் தலைவர் பி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/கீரனூரில்-திமுக-ஊராட்சி-சபைக்-கூட்டம்-3076039.html
3076038 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 19 இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் DIN DIN Sunday, January 13, 2019 03:24 AM +0530
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. 
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் நடைபெறவுள்ளது. 
இக்குறைதீர்க்கும் நாள் முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்க உள்ளனர். 
முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் வள்ளிபுரம், திருப்பூர் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு வட்டத்தில் வேலம்பட்டி கிராமம், ஊத்துக்குளி வட்டத்தில் புஞ்சைத்தளவாய்பாளையம், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, உடுமலைப்பேட்டை வட்டத்தில் ராவணாபுரம் , மடத்துக்குளம் வட்டத்தில் வேடப்பட்டி, தாராபுரம் வட்டத்தில் காங்கேயம்பாளையம், காங்கயம் வட்டத்தில் சிவன்மலை ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 
இதில் கூட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/திருப்பூர்-மாவட்டத்தில்-ஜனவரி-19-இல்-பொது-விநியோகத்-திட்ட-சிறப்பு-குறைதீர்-முகாம்-3076038.html
3076036 கோயம்புத்தூர் திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் பொங்கல் விழா DIN DIN Sunday, January 13, 2019 03:24 AM +0530
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல நிகழாண்டும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோலப் போட்டி, பொங்கல் போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன், துணை முதல்வர் ஏ. தயாளராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஆ. மதன், ரத்தினகுமார், நூலகர் எஸ்ஏ.முத்துபாரதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/நிஃப்ட்-டீ-கல்லூரியில்-பொங்கல்-விழா-3076036.html
3076035 கோயம்புத்தூர் திருப்பூர் மதுபானக் கடைகளுக்கு ஜனவரி 16 இல் விடுமுறை DIN DIN Sunday, January 13, 2019 03:24 AM +0530 திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், பார்கள் ஆகியவற்றுக்கு வரும் புதன்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
ஆகவே, உத்தரவை மீறி அன்றைய தினம் மதுவிற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/13/மதுபானக்-கடைகளுக்கு-ஜனவரி-16-இல்-விடுமுறை-3076035.html
3075390 கோயம்புத்தூர் திருப்பூர் கேஜிபிவி பள்ளியில் பொங்கல் விழா DIN DIN Saturday, January 12, 2019 05:07 AM +0530 வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் பெரமியம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கல்வி அமைப்பின் நிர்வாகி தூயவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நஸ்ருதீன், ஆசிரியர் பயிற்றுநர்கள் வெங்கடேசன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் தீபா செய்திருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/கேஜிபிவி-பள்ளியில்-பொங்கல்-விழா-3075390.html
3075389 கோயம்புத்தூர் திருப்பூர் அவிநாசியில் நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி சாவு DIN DIN Saturday, January 12, 2019 05:04 AM +0530 அவிநாசியில் நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார்.
அவிநாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52). கட்டடத் தொழிலாளி.  இவர் அவிநாசி தாமரைக்குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். 
இது குறித்து தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/அவிநாசியில்-நீரில்-மூழ்கி-கட்டடத்-தொழிலாளி-சாவு-3075389.html
3075388 கோயம்புத்தூர் திருப்பூர் கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு DIN DIN Saturday, January 12, 2019 05:04 AM +0530 திருப்பூரில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 87ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூரில் கொடிகாத்த குமரனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இதில், குமரன் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகிகள், பள்ளி மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
அவர் உயிர்நீத்த இடத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/கொடிகாத்த-குமரன்-நினைவு-தினம்-அனுசரிப்பு-3075388.html
3075387 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம் DIN DIN Saturday, January 12, 2019 05:04 AM +0530 திருப்பூர் அரசுப் பள்ளிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தைப் பறைசாற்றும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நிகழாண்டும் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
இந் நிலையில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகைக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.  எனவே திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பண்டிகைக்கு முன் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாணவர்கள் பொங்கல் வைத்தும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். 
இதில், திருப்பூர், காதர்பேட்டையில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பள்ளிக்கு வந்தனர். மேலும்,  பாரம்பரிய விளையாட்டுகளான உரியடித்தல், கபடி, பூப்பறித்தல், கும்மியாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பே சிறப்பு ஆசிரியர்கள் வைத்து ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், நகர்ப்புற மாணவர்களிடையே மறைந்து வரும் தமிழர்களின் கலாசாரமான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக பள்ளிக் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு தல் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால், மாணவர்கள் பண்டையத் தமிழ் பாரம்பரியத்தை தெரிந்துகொள்வதோடு மாணவர்களின் மன அழுத்தமும் குறையும் என்றார். 
அதேபோல்,  திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கலாசார உடையான சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், வண்ண கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டனர். 
இதேபோல், காதர்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை கொண்டாடினர். அதே போல், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தாய்த்தமிழ் பள்ளி உள்ளிட்ட  திருப்பூர் மாநகரில் பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஃபிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் பொங்கல் விழா
திருப்பூரை அடுத்த பெருந்தொழுவில் உள்ள ஃபிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில்  சமத்துவ பொங்கல் தின விழா கொண்டப்பட்டது. 
இதில், மாணவர்கள் வேட்டி, சட்டைகளிலும், மாணவிகள் பட்டு ஆடைகள் அணிந்து பங்கேற்றனர். நொண்டி, கயிறு இழுத்தல், பச்சக் குதிரை போன்று
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.  இவ்விழாவில்,  பள்ளித் தாளாளர் சிவசாமி, பள்ளிச் செயலாளர் சிவகாமி, மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/திருப்பூரில்-அரசுப்-பள்ளிகளில்-பொங்கல்-விழா-கோலாகலம்-3075387.html
3075386 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் சைனிக் பள்ளி ஆண்டு விழா DIN DIN Saturday, January 12, 2019 05:03 AM +0530 உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் 56ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஹெச்.எஸ்.சிதானா தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தே.அன்பு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 
இதைத் தொடர்ந்து மாணவர்களின் உடல் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்வி, விளையாட்டுத் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்தமாக சிறந்த இல்லத்துக்கான பரிசு பல்லவன் இல்லத்திற்கு  வழங்கப்பட்டது.  இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/உடுமலையில்-சைனிக்-பள்ளி-ஆண்டு-விழா-3075386.html
3075385 கோயம்புத்தூர் திருப்பூர் அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்லக் கோரி 20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் ரயில்வேயிடம் ஒப்படைப்பு DIN DIN Saturday, January 12, 2019 05:03 AM +0530 திருவனந்தபுரம்-மதுரை விரைவு ரயில், உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, பெறப்பட்ட  20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் மதுரை கோட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்-மதுரை வரை இயங்கிக் கொண்டிக்கும் அமிர்தா விரைவு ரயில் பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ஆனால் உடுமலையில் இந்த ரயில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயில் உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
உடுமலை வட்டம் 40 கி.மீ. சுற்றளவு கொண்டது. அருகில் மடத்துக்குளம் வட்டம் உள்ளது. இப் பகுதிகளில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் மூணாறு, சின்னாறு, திருமூர்த்திமலை, அமராவதி அணை ஆகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
உடுமலை வட்டத்தில் ஏராளமான காகித ஆலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நார்  தொழிற்சாலைகள், 
ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன. எனவே அமிர்தா விரைவு ரயில், உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, உடுமலை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு வந்தன.
இந்நிலையில் பொதுமக்களிடம் 20 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட்டு, முதல் தவணையாக மதுரை கோட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல வலியுறுத்தி பெறப்பட்ட 20 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள், முதல்கட்டமாக மதுரையில் உள்ள மண்டல அலுவலக கோட்ட செயல் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இது குறித்த மனுவும் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட மேலாளர், அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தில்லியில் உள்ள ரயில்வே போர்டு அந்த அறிவிப்பை வெளியிட உள்ளது என்றார்.
மேலும் கோவை-பொள்ளாச்சி பயணிகள் ரயிலை பழனி வரை நீட்டிக்க வேண்டும். கோவை-சென்னை விரைவு ரயிலை உடுமலை, பழனி, திருச்சி வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் மேலாளரிடம் அளிக்கப்பட்டது. இதுபோக உடுமலை ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்துக்கு அனுமதி வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தப்பட்டது என்றார்.
உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.கிருஷ்ணன் உடனிருந்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/அமிர்தா-விரைவு-ரயில்-உடுமலையில்-நின்று-செல்லக்-கோரி-20-ஆயிரம்-கையெழுத்துப்-பிரதிகள்-ரயில்வேயிடம்-ஒப்-3075385.html
3075384 கோயம்புத்தூர் திருப்பூர் பள்ளபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிர்ப்பு DIN DIN Saturday, January 12, 2019 05:02 AM +0530 திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல் கண்காணிப்பாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து திருப்பூர், சாமளாபுரம் பேரூராட்சி பள்ளப்பாளையம் பகுதி பொதுமக்கள், காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
பள்ளபாளையம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் வீதி, சர்ச் வீதி, அண்ணா வீதி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவர், இப்பகுதியில் உள்ள கடைவீதி, பேருந்து நிறுத்தம், பள்ளி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் காலை,  இரவு நேரங்களில் மது விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து மது விற்பனை செய்து வரும் முருகேசனிடம் கேட்டால், அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதைக் கண்டித்து ஜனவரி 6ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அந்த நபரைக் கைது செய்வதாக மங்கலம் காவல் துறையினர் உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/பள்ளபாளையத்தில்-சட்டவிரோத-மது-விற்பனைக்கு-எதிர்ப்பு-3075384.html
3075383 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்ன DIN DIN Saturday, January 12, 2019 05:02 AM +0530 வெள்ளக்கோவிலில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பிரபாகர் தலைமை வகித்தார். 
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர்  பாலசுப்பிரமணியம்,  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் பாபு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் துவங்க உத்தரவிட்டுள்ளது. இந்த மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக உபரி இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்த முடிவு செய்துள்ளதை தவிர்க்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவையும் கைவிட வேண்டும்.  25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை மூடும் முடிவை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 120 பேர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/வெள்ளக்கோவிலில்-ஜாக்டோ---ஜியோ-கூட்டமைப்பினர்-ஆர்ப்பாட்டம்ன-3075383.html
3075382 கோயம்புத்தூர் திருப்பூர் நான்கு ஓவன் பைகளுக்கு ரூ.2  ஆயிரம் அபராதம்: வியாபாரிகள் அதிர்ச்சி DIN DIN Saturday, January 12, 2019 05:01 AM +0530 திருப்பூரில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நான்கு நான் ஓவன் பைகளை  மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள தேநீர் விடுதிகள், காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சிக்  கடைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருப்பூரில் 22 டன் பறிமுதல்:  இதில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஜனவரி 1 முதல் 10 ஆம் தேதி வரையில் 22 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வில் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஒரு சில பகுதிகளில் அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
நான்கு நான் ஓவன் பைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: இந் நிலையில், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்லடம் சாலையில்வெள்ளிக்கிழமை  ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள தேநீர் விடுதியில் இருந்து தடை செய்யப்பட்ட நான்கு நான் ஓவன் பைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த தேநீர் விடுதி உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இந்த விடுதியின் அருகில் செயல்பட்டு வந்த மற்றொரு உணவகத்தில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:
நாங்கள் பொதுமக்களுக்குபிளாஸ்டிக் பைகளில்  பொருள்கள் வழங்குவதில்லை. அதே வேளையில், கடைகளில் மீதம் உள்ள பிளாஸ்டிக் பைககளை குப்பைகளில் போடுவதற்காக வைத்திருந்தோம். அந்த பிளாஸ்டிக் பைகளில் நான்கு பைகளை பறிமுதல் செய்து விட்டு ரூ.2 ஆயிரம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றனர். 
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருக்க வேண்டாம் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்களை திருப்பி ஒப்படைக்க ஒரு வாரம் அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் பிறகும் கடைகளில் வைத்திருக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சோதனை மூலம் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறோம். இந்த சோதனை மேலும் சில நாள்களுக்குத் தொடரும் என்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/நான்கு-ஓவன்-பைகளுக்கு-ரூ2--ஆயிரம்-அபராதம்-வியாபாரிகள்-அதிர்ச்சி-3075382.html
3075381 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் 41 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் DIN DIN Saturday, January 12, 2019 05:01 AM +0530 திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 41 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய கிளைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகின்றது. 
இந் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு 471 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார். 
இதன்படி திருப்பூர் மண்டலத்தில் இருந்து 41 புதிய பேருந்துகளின் சேவையை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில்,  திருவண்ணாமலை, திருச்சி, வெள்ளக்கோவில், கோவை, சத்தியமங்கலம், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 41 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
 77 ஆயிரம் மகளிருக்கு 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்துகளில்,  திருப்பூர் மண்டலத்தில் 41 புதிய பேருந்துகள் ரூ. 10 கோடி மதிப்பில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டைப் பொருத்தவரையில் 146 விண்ணப்பங்கள் அனுமதிக்காக வந்துள்ளன. அதில், 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என்றார். 
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ. நடராஜன், திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண் குமார்,  முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலப் பொது மேலாளர் (தொழில்நுட்பம்)  வீரமணி, துணை மேலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/திருப்பூரில்-41-புதிய-பேருந்துகள்-சேவை-தொடக்கம்-அமைச்சர்-உடுமலை-கே-ராதாகிருஷ்ணன்-தொடங்கிவைத்தார்-3075381.html
3075380 கோயம்புத்தூர் திருப்பூர் யுனிவர்சல் பள்ளியில் பொங்கல் விழா DIN DIN Saturday, January 12, 2019 05:00 AM +0530 பல்லடம் சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா, ஆண்டு விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். விழாவை ஒட்டி பள்ளி மைதானத்தில், மாணவர்களின் பெற்றோர் பொங்கல் வைத்தனர்.  1000 மாணவிகளின் கும்மி ஆட்டம்,  500 மாணவர்களின் ஒயிலாட்டம் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாணவர்களின் பறை இசை, சிலம்பம், கராத்தே, யோகா, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
விழாவில் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி, பல்லடம் கல்வி மாவட்ட அலுவலர் கே.பி.கனகமணி, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.முத்துசாமி, வழக்கறிஞர் பி.மோகன் ஆகியோர்  பங்கேற்றுப் பேசினர். விழாவில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  இதில் ஆயிரக்கணக்கான மாணவ,  மாணவிகளின் பெற்றோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/யுனிவர்சல்-பள்ளியில்-பொங்கல்-விழா-3075380.html
3075379 கோயம்புத்தூர் திருப்பூர் மக்காச்சோளத்தில் படைப் புழு தாக்குதல்: நிவாரணம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை DIN DIN Saturday, January 12, 2019 05:00 AM +0530 படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனு விவரம்:
தமிழகத்தில் திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை,  ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பொங்கலூர், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. 
இந்நிலையில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அப்போது வேளாண்துறை பரிந்துரைத்த பூச்சி மருந்துகள் செயல் விளக்க அடிப்படையில் விவசாயிகள் மக்காளச்சோளப் பயிரில் மருந்து தெளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பூச்சி மருந்துக்கான செலவு கூடுதலாகியுள்ளது.
இந்நிலையில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் திருப்பூர் மாவட்டம் விடுபட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/மக்காச்சோளத்தில்-படைப்-புழு-தாக்குதல்-நிவாரணம்-வழங்க-முதல்வருக்கு-கோரிக்கை-3075379.html
3075378 கோயம்புத்தூர் திருப்பூர் அவிநாசி, பல்லடத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, January 12, 2019 05:00 AM +0530 அவிநாசியில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அவிநாசி வட்டக்கிளை பொறுப்பாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இதில் அரசுஅறிவித்துள்ள மழலையர் பள்ளிக்கு புதிய ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். பணியில் உள்ள இடைநிலை ஆசிரியரை கூடுதல் பணிக்கு அமர்ந்தக் கூடாது. தொடக்கப்  பள்ளியை, மேல்நிலைப் பள்ளியுடன் இணைக்கக் கூடாது. இதனால் கிராமப் புற மானவர்களுக்கு கல்வி பாதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.   ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ், ராமகிருஷ்ணன், வினேத், கருப்பன், ரங்கசாமி உள்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
பல்லடத்தில்...: பல்லடத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில்  ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு கேட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில்  இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை ஒழிக்கும் அரசின் செயலை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு பணிமாற்ற ஆணை வழங்கக்கூடாது. இடைநிலை ஆசிரியர்களில் இளையோரை வேறு ஒன்றியங்களில் எல்.கே.ஜி.,  யு.கே.ஜி. பணிக்கு மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை தகுதி இறக்கம் செய்து மேல்நிலைப் பள்ளி கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வதைக் கைவிட வேண்டும்.  உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தொடக்க நிலை வகுப்புகளுக்கு பணியமர்த்தக் கூடாது. 
15க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகள், 4ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதை நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்புச் செயலாளர் வீ.பரமசிவம் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் கல்வி மாவட்டச் செயலாளர் ஆ.செல்வம், தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் வட்டாரத் தலைவர் இர.நடராஜன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அ.ராஜப் பிரியா, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பல்லடம் பொருளாளர் மை.லூக்காஸ், பல்லடம் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/அவிநாசி-பல்லடத்தில்-ஜாக்டோ-ஜியோ-அமைப்பினர்-ஆர்ப்பாட்டம்-3075378.html
3075377 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் 5,963 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் DIN DIN Saturday, January 12, 2019 04:59 AM +0530 திருப்பூரில் இரண்டு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட 5 அரசு பள்ளிகளில் பயின்று வரும் 5, 963 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கே.எஸ்.சி. பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, பழனியம்மாள் பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 922 பேர், நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் 824 பேர், ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 2420 பேர், பழனி அம்மாள் பள்ளி மாணவிகள் 1, 208 பேர் என மொத்தம் 5, 374 பேருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில், முன்னாள் மண்டலத் தலைவர் முத்துசாமி, கண்ணப்பன்,  ராஜகோபால், சடையப்பன், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அதேபோல் திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட குமார் நகர்,  பிஷப் உபகாரசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் 282 பேர், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 307 பேர் என மொத்தம் 589 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார்.
 இதில், முன்னாள் மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், பகுதி கழகச் செயலாளர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் , தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/12/திருப்பூரில்-5963-மாணவர்களுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்-3075377.html
3074759 கோயம்புத்தூர் திருப்பூர் ஊதியூர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்து முன்னணியினர், தனியார் நிறுவன ஆதரவாளர்கள் மோதல் DIN DIN Friday, January 11, 2019 07:06 AM +0530 காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பால் பண்ணை நிறுவன ஆதரவாளர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் புகழ்பெற்ற உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்தக் கோயிலுக்கு அப்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. 
இந்த நிலையில், காங்கயம்-  குண்டடம் சாலையில், கருக்கம்பாளையம் பிரிவு அருகில் ஊதியூர் மலை அடிவாரத்தில் பெரிய அளவிலான பால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை பிரபல தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. 
இதற்கான கட்டடப் பணிகள் நடந்து வந்த நிலையில், சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, கட்டுமானப் பணி நடக்கும் இடம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் கட்டடப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆயினும் கட்டுமானப் பணியை தனியார் நிறுவனம் தொடர்ந்தது.
அதையடுத்து, இந்து முன்னணி அமைப்பினர் அந்த இடத்தை 2017 நவம்பரில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஓர் ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டன. அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன், கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  எனவே, கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணியினர், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரன் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கோயில் நிலத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்க வலியுறுத்தி, ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது.  அதே நேரம், ஊதியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பால் நிறுவன ஆதரவாளர்கள் மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வழிபடப் போவதாகவும் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்தே ஊதியூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைலாசநாதர் கோயில் முன்பு திரண்டிருந்தனர். உத்தண்ட வேலாயுதசாமி கோயில் அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் திரண்டிருந்தனர்.  அங்கு இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி குணசேகரன், காங்கயம் டிஎஸ்பி செல்வம் தலைமையிலான போலீஸார் அவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினர். ஆனால், பால் பண்ணை நிறுவன ஆதரவாளர்கள் தாராபுரம்- ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்து முன்னணியினரும் மறியல் செய்யவே  அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இருதரப்பினரையும் காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரனும் போலீஸாரும் சமாதானப்படுத்தினர். அப்போது காங்கயம், திருப்பூர் பகுதியிலிருந்து வந்த இந்து முன்னணியினர் ஊதியூர் பேருந்து நிறுத்தத்தைக் கடந்தபோது, அங்கு நின்றிருந்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டினர்.
இதுதொடர்பாக இரண்டு தரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக, ஊதியூர் பகுதியில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. கயல்விழி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jan/11/ஊதியூர்-கோயில்-நில-ஆக்கிரமிப்பு-விவகாரம்-இந்து-முன்னணியினர்-தனியார்-நிறுவன-ஆதரவாளர்கள்-மோதல்-3074759.html