Dinamani - நீலகிரி - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3117286 கோயம்புத்தூர் நீலகிரி இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்: அழிந்து வரும் குருவி இனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, March 20, 2019 08:07 AM +0530 உலக சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20 ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில்,  அழிந்து வரும் குருவி இனங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி  பேராசிரியர் மணிவண்ணன், பறவைகள் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் ரியாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:       
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். 55 சதவீதம் வனப் பகுதிகளைக் கொண்ட  இப்பகுதியில் யானை, கரடி, மான், புலி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் எண்ணிலடங்கா பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் தற்போது சில பறவை இனங்களைக் காண்பது அரிதாகி வருகின்றது. இதில் சிட்டுக் குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. செல்லிடப் பேசிக் கோபுரங்களில் இருந்து வரும் கதிர் வீச்சே இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. 
இதனால் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சப்தம் கேட்பது குறைந்து வருகிறது.  கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கூரை வேய்ந்த வீடுகள் இருந்ததால், இதில் சிறு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது  பெரும்பாலான  வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள்  கான்கிரீட்  கட்டடங்களாய் மாறிவிட்டதால் இவை அழிவை  நோக்கி  சென்று  கொண்டிருக்கின்றன என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/இன்று-உலக-சிட்டுக்-குருவிகள்-தினம்-அழிந்து-வரும்-குருவி-இனங்களைப்-பாதுகாக்க-வலியுறுத்தல்-3117286.html
3117285 கோயம்புத்தூர் நீலகிரி "நீலகிரி தொகுதியில் போட்டியிடுவோர் உதகையில் இரு இடங்களில் மனு தாக்கல் செய்யலாம்' DIN DIN Wednesday, March 20, 2019 08:07 AM +0530 நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோர் உதகையில் இரு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் கடந்த 18 ஆம் தேதி  வரை ரூ. 1. 42 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் மூலம் ரூ.16 லட்சத்து 80, 510 விடுவிக்கப்பட்டுள்ளது. உதகையில் பொதுத்துறை வங்கி ஒன்றின் வாகனத்திலிருந்து ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டதற்கு விதிமுறை மீறப்பட்டதே காரணம்.
சாலைகள், நடைபாதைகள் மற்றும் கூட்டம் நடத்தும் இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு கண்டிப்பாக தற்காலிக அனுமதி பெற வேண்டும். ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட வாகனங்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்த  உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளராக மும்பை வருமான வரித் துறை ஆணையர் கிப் ஜெல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் தேர்தல் செலவினம் தொடர்பான பணிகளைக் கண்காணிப்பார் என்றார்.
இக்கூட்டத்தில் குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதகை கோட்டாட்சியர் அருண் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/நீலகிரி-தொகுதியில்-போட்டியிடுவோர்-உதகையில்இரு-இடங்களில்-மனு-தாக்கல்-செய்யலாம்-3117285.html
3117284 கோயம்புத்தூர் நீலகிரி பேராசிரியையிடம் நகைப் பறிப்பு DIN DIN Wednesday, March 20, 2019 08:06 AM +0530 கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பேராசிரியையின் வீட்டுக் கதவை தட்டி, 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிபவர் நிர்மலா. இவரது சொந்த ஊர் கொளப்பள்ளி. இவர், பணி நிமித்தமாக காரணமாக கல்லூரி அருகே வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு நிர்மலாவின் வீட்டுக் கதவை தட்டும் சப்தம் கேட்டதால் அவர் கதவைத் திறந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/பேராசிரியையிடம்-நகைப்-பறிப்பு-3117284.html
3117282 கோயம்புத்தூர் நீலகிரி "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு DIN DIN Wednesday, March 20, 2019 08:06 AM +0530 நீலகிரி மாவட்டத்தில், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஆப்பிரிக்கன் கெளுத்தி' வகை மீன் வளர்ப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தடை விதிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக  அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இதனால் இந்த வகை மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாதது. மேலும், இவ்வகை மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரிலும்  இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.
இம் மீன்கள், நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் வகை மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் வகை அழியும் அபாயம் உள்ளது. 
 இந்த வகை மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது.
அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று, பிற வகை மீன்களை அழித்து விடுவதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களைத் தவிர வேறு எந்த வகை மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகிவிடும். இதனால், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் போய்விடும்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனை மீறி, மத்திய, மாநில அரசுகளால்  தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது, வளர்ப்பது, இருப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால்,  அவற்றை முற்றிலும் அழித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட  மீன்களை மட்டுமே மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/ஆப்பிரிக்கன்-கெளுத்தி-மீன்-வளர்ப்புக்குத்-தடை-நீலகிரி-மாவட்ட-ஆட்சியர்-அறிவிப்பு-3117282.html
3117281 கோயம்புத்தூர் நீலகிரி வாகனச் சோதனை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் ரூ.12 லட்சம் பறிமுதல் DIN DIN Wednesday, March 20, 2019 08:06 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.1.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை உள்ளிட்ட 37 குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் திங்கள்கிழமை இரவு வரை உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 9 பேரிடமிருந்து ரூ. 84 லட்சத்து 79,420,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 32 பேரிடமிருந்து  ரூ.53 லட்சத்து 82,900,  குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 35,000 என மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 97,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 
 இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.67,180,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 பேரிடமிருந்து ரூ.10 லட்சத்து 38,450 , குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 5 ஆயிரத்து 630 பறிமுதல் செய்யப்பட்டது. 
இத்தொகையையும் சேர்த்து உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.85 லட்சத்து 46,600, கூடலூர் சட்டப் பேரவைத்  தொகுதியில் ரூ. 64 லட்சத்து 21,350, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.4.35 லட்சம் என  மொத்தம் ரூ. 1 கோடியே 54  லட்சத்து 2,950 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகைகளில் செவ்வாய்க்கிழமை இரவு வரை உதகை தொகுதியில் ரூ. 6 லட்சத்து 51,610,  கூடலூர் தொகுதியில் ரூ. 8 லட்சத்து 89,000, குன்னூர் தொகுதியில் ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 80,510 விடுவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/வாகனச்-சோதனை-நீலகிரி-மக்களவைத்-தொகுதியில்-ரூ12-லட்சம்-பறிமுதல்-3117281.html
3117280 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 2 பொதுத்தேர்வு: கடைசி நாள் தேர்வில் 288 பேர் பங்கேற்கவில்லை DIN DIN Wednesday, March 20, 2019 08:05 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி நாள் தேர்வுகளில் 288 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 38 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வெழுதத் தகுதியுடைய 4,010 பேரில் 3,722 பேர் தேர்வெழுதினர். 
 உயிரியல் தேர்வில் 1,632 பேரில் 1,545 பேர் தேர்வெழுதியுள்ளனர். தாவரவியல் தேர்வில் 1,332 பேரில் 1,231 பேர் தேர்வெழுதினர். வரலாறு பாடத்தில் 551 பேரில் 495 பேர் எழுதினர். வணிகக் கணிதம் பாடத்தில் 175 பேரில் 173 பேர் தேர்வெழுதினர். அலுவலக மேலாண்மை பாடத்தில் 165 பேரில் 139 பேர் தேர்வெழுதினர். கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் 155 பேரில் 139 பேர் தேர்வெழுதினர். 16 பேர் தேர்வெழுதவில்லை.
 தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டிலும் உயிரியல் பாடத்தில் 9 பேரில் 7 பேர் தேர்வெழுதினர். தாவரவியல் பாடத்தில் 7 பேரில் 6 பேர் தேர்வெழுதினர். வரலாறு பாடத்தில் 73 பேரில் 70 பேர் தேர்வெழுதினர். அலுவலக மேலாண்மை பாடத்தில் தேர்வெழுத வேண்டிய ஒருவரும் வரவில்லை. வணிக கணிதம், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய தலா ஒருவர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று 26 பேர் தேர்வெழுதினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/பிளஸ்-2-பொதுத்தேர்வு-கடைசி-நாள்-தேர்வில்-288-பேர்-பங்கேற்கவில்லை-3117280.html
3117279 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் சிவன் மலையில் இன்று பௌர்ணமி கிரிவலம் DIN DIN Wednesday, March 20, 2019 08:05 AM +0530 நீலகிரி மாவட்டம், கூடலூர் சிவன் மலையில் புதன்கிழமை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
பௌர்ணமியை முன்னிட்டு, கூடலூர், நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன் மலையில் கிரிவலம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் சிவன்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடி, மலையைச் சுற்றி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்வர். 
அதைத் தொடர்ந்து, உலக அமைதிக்காகவும், நோயுற்றவர்கள் நலம் பெறவும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் ஆர்.நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/கூடலூர்-சிவன்-மலையில்-இன்று-பௌர்ணமி-கிரிவலம்-3117279.html
3117278 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்கு வந்த காட்டுப் பூனைக்குட்டி DIN DIN Wednesday, March 20, 2019 08:05 AM +0530 கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வழிதவறி வந்த காட்டுப் பூனைக்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பூனைக் குட்டியைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதனை சிறுத்தைக் குட்டி என நினைத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அதனை மீட்டுப் பார்வையிட்டனர். அதில், பிறந்து ஆறு மாதங்களே ஆன காட்டுப் பூனைக் குட்டி என்பதும், வழி தவறி குடியிருப்புப் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது.
இதனைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும், மீட்கப்பட்ட காட்டுப் பூனைக்குட்டியை இரவு நேரத்தில் வனப் பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூடலூர் வனச் சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/20/கூடலூர்-அருகே-குடியிருப்புப்-பகுதிக்கு-வந்த-காட்டுப்-பூனைக்குட்டி-3117278.html
3116652 கோயம்புத்தூர் நீலகிரி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை மார்ச் 27-க்கு ஒத்திவைப்பு DIN DIN Tuesday, March 19, 2019 07:57 AM +0530 கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 இந்த வழக்கில் தொடர்புடைய சயன், கோவை மத்திய சிறையில் துன்புறுத்தப்படுவதாக அவரது வழக்குரைஞர் புகார் தெரிவித்தார். 
 கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொலை  மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
 இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள சயன், மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ் சாமி ஆகியோரும், ஜாமீனில் வெளியே உள்ள ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், உதயகுமார், சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோரும் ஆஜராகினர்.
 அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சயன் உள்ளிட்ட 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும், இவ்வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும் சயன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். 
 இந்நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள 5 பேரையும் ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்ததோடு, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனவும், வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மட்டும் ஆஜராகி வாதிடலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.   அப்போது சயன் தரப்பு வழக்குரைஞர் ஆனந்த், சயனிடம் பேச அனுமதி கேட்டார். அதற்கு நீதிமன்றத்திற்குள்ளேயே பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வழக்குரைஞர் ஆனந்தன், கோவை மத்திய சிறையில் தன்னைத் துன்புறுத்துவதாக சயன் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன் எனவும் தெரிவித்தார்.  இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பால நந்தகுமாரும் ஆஜரானார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/கொடநாடு-கொலை-கொள்ளை-வழக்கு-விசாரணை-மார்ச்-27-க்கு-ஒத்திவைப்பு-3116652.html
3116632 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. போட்டி DIN DIN Tuesday, March 19, 2019 07:49 AM +0530 நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மக்களவை முன்னாள் உறுப்பினர் சேவூர் எம்.தியாகராஜன் (59) அறிவிக்கப்பட்டுள்ளார்.
 அவிநாசி வட்டம், சேவூர் அருகே உள்ள முதலிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த இவர், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை மாரன், தாயார் பட்டாள்.
 மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு யுவராஜ், மதன்ராஜ், ஜெயராஜ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். தியாகராஜன், 1978 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 1990 இல் கிளை செயலாளர்,  1993- 1998 அவிநாசி ஒன்றிய ஜெயலலிதா பேரவை  ஒன்றிய துணைச் செயலாளர், 1998-2008 வரை ஒருங்கிணைந்த புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.
 2011 முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட பொருளாளராக உள்ளார்.
 அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 1998 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/நீலகிரியில்-அதிமுக-சார்பில்-முன்னாள்-எம்பி-போட்டி-3116632.html
3116631 கோயம்புத்தூர் நீலகிரி திமுக சார்பில் 3ஆவது முறையாக களம் காணும் ஆ.ராசா DIN DIN Tuesday, March 19, 2019 07:48 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆ. ராசா (56). பிஎஸ்சி., எம்எல். படித்து வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். மனைவி பரமேஸ்வரி, மகள் மயூரி. 
 ஆ.ராசா, கடந்த 1996, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 
 நீலகிரி மக்களவைத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், கடந்த 2009 ஆம் ஆண்டில் இத் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 கடந்த 2014ம் ஆண்டு நீலகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனிடம் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது 3-ஆவது முறையாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசில் ஊரக தொழில் துறை இணை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
 2009 இல் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, மீண்டும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக சில மாதங்கள் பதவி வகித்தார். ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், தனது பதவியை ராஜிநாமா செய்ய நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/திமுக-சார்பில்-3ஆவது-முறையாக-களம்-காணும்-ஆராசா-3116631.html
3116630 கோயம்புத்தூர் நீலகிரி குண்டாடா அரசுப் பள்ளி மாணவர்கள் கள ஆய்வுப் பயணம் DIN DIN Tuesday, March 19, 2019 07:48 AM +0530 கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, இயற்கை சூழலை அறிந்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை கள ஆய்வுப் பயணம் சென்றனர்.
 இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆசிரியை மல்லிகா ஆகியோர் தலைமையில் 30 மாணவ, மாணவிகள் இப்பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.  கட்டபெட்டு பகுதியில் இப்பயணத்தை கோத்தகிரி வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தொடங்கிவைத்தார். 
இப்பயணத்தின்போது,  1941ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட “ரேலியா’ அணைக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அணையின் பயன்பாடு, சிறப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அணையை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குச் சென்ற மாணவர்கள் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பல்லுயிர் சூழலைக் கண்டு  ரசித்தனர்.
  அதைத் தொடர்ந்து, பெட்டுமந்து பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்குச் சென்று தோடர் இன மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்க, வழக்கங்கள், அவர்கள் பேசும் மொழி குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.  மேலும், வனப் பகுதியில் காட்டெருமை, கருங்குரங்கு, அணில் உள்ளிட்ட உயிரினங்களையும் பார்வையிட்டனர். மாணவர்களின் கள ஆய்வுப் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத் துறையினர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/குண்டாடா-அரசுப்-பள்ளி-மாணவர்கள்-கள-ஆய்வுப்-பயணம்-3116630.html
3116629 கோயம்புத்தூர் நீலகிரி அமமுக சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி போட்டி DIN DIN Tuesday, March 19, 2019 07:47 AM +0530 நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 
இவர், திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 4.12.1951 இல் பிறந்த ராமசாமி 1977 இல் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியராகவும், பின்னர், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட உணவு விநியோக அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.
1979 முதல் 1982 வரை நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும்,  சார் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து மத்திய அரசின் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி, மகாராஷ்டிர மாநில ஒதுக்கீட்டில் அம்மாநிலத்தில் சோலாப்பூர் சார் ஆட்சியர், பண்டிட்பூர் சார் ஆட்சியர் மற்றும் சதாரா மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.
 இடையில் சிறிது காலம் புதுச்சேரியில் மத்திய அரசு செயலராகவும் இருந்துள்ளார். இறுதியாக மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/அமமுக-சார்பில்-ஓய்வுபெற்ற-ஐஏஎஸ்-அதிகாரி-போட்டி-3116629.html
3116628 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் 11 பேரிடமிருந்து ரூ.12.50 லட்சம் பறிமுதல் DIN DIN Tuesday, March 19, 2019 07:47 AM +0530 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கூடலூர் தொகுதியில் தேர்தல் கண்காணிப்புப் பறக்கும் படையினர் உள்ளிட்ட சிறப்புக் குழுக்களின் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 11 பேரிடமிருந்து ரூ.12 லட்சத்து 47,900 கைப்பற்றப்பட்டது.
 உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை இரவு வரை 9 பேரிடமிருந்து ரூ.84 லட்சத்து 79,420-ம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 பேரிடமிருந்து ரூ.53 லட்சத்து 82,900-ம், குன்னூர் சட்டப்பேரவைத்  தொகுதியில் 3 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 35,000-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 97,320 கைப்பற்றப்பட்டது.
 இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ரொக்கத்தில் திங்கள்கிழமை இரவு வரையிலும்  உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 4 வழக்குகளில் 6 லட்சத்து 51, 510-ம்,  கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 6 வழக்குகளில் ரூ. 8 லட்சத்து 80,000-ம், குன்னூர் தொகுதியில் 2 வழக்குகளில்  ரூ.1 லட்சத்து  40,000-ம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 80,510 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/கூடலூரில்-11-பேரிடமிருந்து-ரூ1250-லட்சம்-பறிமுதல்-3116628.html
3116627 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர், பந்தலூரில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் DIN DIN Tuesday, March 19, 2019 07:47 AM +0530 கூடலூரில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை சார்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டுநாயக்கர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை, நடனத்துடன் வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், வாக்களிக்க பணம் பெறாமல் நேர்மையுடனும், தைரியத்துடனும் வாக்களிக்க வேண்டும். 
நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பேருந்து பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
பந்தலூரில் விழிப்புணர்வுப் பிரசாரம்:  பந்தலூர் பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பந்தலூர் தாலுகாவிலுள்ள ரிச்மண்ட் 
எஸ்டேட் தொழிலாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோட்டாட்சியர் ராஜ்குமார் விளக்கம் அளித்தார். 
தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/கூடலூர்-பந்தலூரில்-100-சதவீதம்-வாக்களிக்க-வலியுறுத்தி-விழிப்புணர்வுப்-பிரசாரம்-3116627.html
3116626 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 1 பொதுத்தேர்வு: 304 பேர் பங்கேற்கவில்லை DIN DIN Tuesday, March 19, 2019 07:46 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் 304 பேர் பங்கேற்கவில்லை.
புதிய பாடத் திட்டத்தின் கீழ் உயிரியல் தேர்வெழுத வேண்டிய 1,397 பேரில் 1,369 பேரும், தாவரவியல் தேர்வெழுத வேண்டிய 1,280 பேரில் 1,249 பேரும், வரலாறு பாடத்தில் 514 பேரில் 497 பேரும், அடிப்படை மின்னியல் தேர்வெழுத வேண்டிய 13 பேரில் 12 பேரும்,  அடிப்படை மின்னணுவியல் தேர்வெழுத  வேண்டிய 13 பேரில் 12 பேரும், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 20 பேரில் 19 பேரும், அலுவலக மேலாண்மை பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 166 பேரில் 158 பேரும் தேர்வெழுதினர். 
தனித்தேர்வர்களில் வரலாறு பாடத்தில் 40 பேரில் 38 பேரும், வணிகக் கணித பாடத்தில் 159 பேரும் தேர்வெழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பொருத்தமட்டில் கல்வித்துறையினர் வழங்கும் சலுகைகளைப் பெற்று 31 பேர் தேர்வெழுதியுள்ளனர்.
அதேபோல், பழைய பாடத் திட்டத்தின் கீழ் உயிரியல் பாடத்தில் 96 பேருக்கு 64 பேரும், தாவரவியல் பாடத்தில் 73 பேருக்கு 65 பேரும், வரலாறு பாடத்தில் 100 பேருக்கு 50 பேரும், பொது வணிகவியல் மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய தலா இருவரும் வரவில்லை.
மின் இயந்திரங்களும், சாதனங்களும் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 7 பேரும், அலுவலக மேலாண்மை பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 10 பேரும், அலுவலக மேலாண்மையும், தத்துவங்களும் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 17 பேரும் வரவில்லை.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/19/பிளஸ்-1-பொதுத்தேர்வு-304-பேர்-பங்கேற்கவில்லை-3116626.html
3115949 கோயம்புத்தூர் நீலகிரி கார் கவிழ்ந்து இளைஞர் சாவு DIN DIN Monday, March 18, 2019 07:10 AM +0530 உதகை அருகே கார் கவிழ்ந்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.   உதகை அருகேயுள்ள முள்ளிகூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது காரில் உதகை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது,  வழியில் முத்தொரை பாலடா பகுதியில்  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், கார்த்திக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.    இது தொடர்பாக உதகை ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/18/கார்-கவிழ்ந்து-இளைஞர்-சாவு-3115949.html
3115948 கோயம்புத்தூர் நீலகிரி நெல்லிக்கரையில் வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள் DIN DIN Monday, March 18, 2019 07:09 AM +0530 கூடலூரை அடுத்த முதுமலை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களை சனிக்கிழமை சேதப்படுத்தின. 
   முதுமலை ஊராட்சியிலுள்ள நெல்லிக்கரை கிராமத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/18/நெல்லிக்கரையில்-வாழைத்-தோட்டத்தை-சேதப்படுத்திய-யானைகள்-3115948.html
3115947 கோயம்புத்தூர் நீலகிரி உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு நிதி உதவி DIN DIN Monday, March 18, 2019 06:59 AM +0530 பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதியில் உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
   பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி சுங்கம் பகுதியில் வசித்து வந்த புகைப்பட கலைஞர் மணி கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு கூடலூர், பந்தலூர் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் பந்தலூர் தாலுகா தலைவர் நெளஷாத் தலைமையில் மாவட்டச் செயலாளர் அஜிலால், கூடலூர் தாலுகா செயலாளர் பத்மநாபன், உறுப்பினர்கள் லாரன்ஸ், பிரசாந்த்,சித்திக் ஆகியோர் நிதி உதவியை வழங்கினர். மணியின் மனைவி  கலாவிடம் ரூ. 32 ஆயிரம் வழங்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/18/உயிரிழந்த-புகைப்படக்-கலைஞரின்-குடும்பத்துக்கு-நிதி-உதவி-3115947.html
3115946 கோயம்புத்தூர் நீலகிரி 83 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் DIN DIN Monday, March 18, 2019 06:59 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஒட்டுமொத்த கள ஆய்வில் 83 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ. 1.82 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
  உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிப் பகுதிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை  தவிர்ப்பது, பொது இடங்களில்  குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் 
பொருட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மண்டல  அலுவலர்களால் ஒட்டு மொத்த கள ஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வின்போது,  சுமார் 83 கிலோ எடையிலான பிளாஸ்டிக்  பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அபராதத் தொகையாக ரூ.1.82 லட்சம் வசூலிக்கப்பட்டது.
  இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், இனிவரும் காலங்களில் வியாபாரிகள்,  பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமலும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமலும்  தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு 
அளிக்க வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/18/83-கிலோ-பிளாஸ்டிக்-பொருள்கள்-பறிமுதல்-3115946.html
3115945 கோயம்புத்தூர் நீலகிரி மக்களவைத் தேர்தல்: மாவட்டத்தில் ரூ.1.30 கோடி பறிமுதல் DIN DIN Monday, March 18, 2019 06:58 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மேற்கொண்ட வாகனச் சோதனைகளில் ரூ. 1.60 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
   நீலகிரி மாவட்டத்தில்  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 20 பேரிடமிருந்தும்,  உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 9 பேரிடமிருந்தும்,  குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் மூவரிடமிருந்தும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  உதகையில் ஒரு பொதுத் துறை வங்கியின் சார்பில் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கமும் அடங்கும். சனிக்கிழமை இரவு வரை உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 84 லட்சத்து 79, 420, கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 41 லட்சத்து 35,000, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 3 லட்சத்து 35,000 என மாவட்டத்தில்  மொத்தம் ரூ.1 கோடியே, 29 லட்சத்து 49,920 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
 உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 14,390 மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட 
இத்தொகைகளில் சனிக்கிழமை இரவு வரை மொத்தம் ரூ. 6 லட்சத்து 90,510 விடுவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை  பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/18/மக்களவைத்-தேர்தல்-மாவட்டத்தில்-ரூ130-கோடி-பறிமுதல்-3115945.html
3115337 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Sunday, March 17, 2019 03:01 AM +0530
 நீலகிரி மாவட்டத்திலுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா  சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள மேலூர் அரசு தொடக்கப் பள்ளி, தூதூர்மட்டம் அரசு நடுநிலைப் பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில்  அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு  வசதிகள் குறித்தும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர் நகராட்சியிலுள்ள வண்டிசோலை நடுநிலைப் பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலக வாக்குச் சாவடி மையம், ஓட்டுப்பட்டறை சி.எஸ்.ஐ. துவக்கப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/17/நீலகிரி-மாவட்டத்தில்-பதற்றமான-வாக்குச்-சாவடிகளில்-ஆட்சியர்-ஆய்வு-3115337.html
3115336 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் பறக்கும்  படையினர் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல் DIN DIN Sunday, March 17, 2019 03:01 AM +0530
கூடலூரில் முறையான ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சனிக்கிழமை பறிமுதல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூடலூரில் உள்ள கேரளம் மற்றும் கர்நாடக எல்லைகளில் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தொரப்பள்ளம் பகுதியில் ஊரக வளர்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலர் சிவசண்முகம் தலைமையில் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.  அதில் உரிய ஆவணமில்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்து, கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பணம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/17/கூடலூரில்-பறக்கும்--படையினர்-சோதனை-ரூ1-லட்சம்-பறிமுதல்-3115336.html
3115335 கோயம்புத்தூர் நீலகிரி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Sunday, March 17, 2019 03:01 AM +0530
கூடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் வருவாய்த் துறை சார்பில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கூடலூர் கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். வட்டாட்சியர் ரவி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ராஜகோபாலபுரம் பகுதியில் துவங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/17/வாக்காளர்-விழிப்புணர்வுப்-பேரணி-3115335.html
3114589 கோயம்புத்தூர் நீலகிரி எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டும் பணி தீவிரம் DIN DIN Saturday, March 16, 2019 07:13 AM +0530 மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்ப்படும் எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டும் பணியை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  உதகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எரிவாயு சேமிப்புக் கிடங்கில் எரிவாயு உருளையில் ஓட்டு போடுங்க என்ற வாசகம் அடங்கிய வில்லையை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலையொட்டி மாவட்டத்தில் 18 பறக்கும் படையும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எல்லைப் பகுதி மாவட்டங்களான கேரள மாநிலம், வயநாடு, கர்நாடக மாநிலம், குண்டல்பேட் பகுதியில் இருந்து தேர்தல் நேரத்தில் ஆயுதம், பணம், மதுபானம் கடத்தி வருவதை  கண்காணிக்க இப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக 4 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பது என வயநாடு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 18 தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையின் போது முறையான ஆவணங்கள்  இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.ஒரு கோடியே  16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்    செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/16/எரிவாயு-உருளைகளில்-வாக்காளர்-விழிப்புணர்வு-வில்லைகள்-ஒட்டும்-பணி-தீவிரம்-3114589.html
3114588 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் ரூ.11.69 லட்சம் பறிமுதல் DIN DIN Saturday, March 16, 2019 07:13 AM +0530 கூடலூரில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.11 லட்சத்து 69 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கர்நாடக எல்லை முதல் கேரள எல்லை வரை ஐந்து குழுக்களாகப் பிரிந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில், வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ரூ.11 லட்சத்து 69 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரான கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/16/கூடலூரில்-ரூ1169-லட்சம்-பறிமுதல்-3114588.html
3114587 கோயம்புத்தூர் நீலகிரி அனைவரும் வாக்களிக்கக் கோரி மாணவர்களிடம் விழிப்புணர்வு DIN DIN Saturday, March 16, 2019 07:13 AM +0530 அனைவரும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்று வலியறுத்தி மாணவர்கள் இடையே மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 உதகையில் உள்ள புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா, குடும்பத்தில் உள்ள அனைவரையும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களிடம் ஒப்புகைச் சீட்டு வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/16/அனைவரும்-வாக்களிக்கக்-கோரி-மாணவர்களிடம்-விழிப்புணர்வு-3114587.html
3114586 கோயம்புத்தூர் நீலகிரி 25இல் அஞ்சலக வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, March 16, 2019 07:12 AM +0530 அஞ்சலக வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மார்ச் 25 ஆம் தேதி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
 அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகிறது. இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கான வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
 மேலும் இதே நாளில் அஞ்சலகச் சேவையின் முன்னேற்றம் கருதி வாடிக்கையாளர்களின் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அஞ்சலக சேவை தொடர்பான புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாகவோ, அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் என்ற விலாசத்துக்கு மார்ச் 23 ஆம் தேதிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/16/25இல்-அஞ்சலக-வாடிக்கையாளர்கள்-குறைதீர்-கூட்டம்-3114586.html
3114585 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 2 பொதுத் தேர்வு: நீலகிரி மாவட்டத்தில் 188 பேர் எழுதவில்லை DIN DIN Saturday, March 16, 2019 07:12 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 188 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உதகை மண்டலத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி வெள்ளிக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில்  மொத்தம் 3,531 பேரில் 3,348 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.183 பேர் தேர்வு எழுதவில்லை. அரசியல் அறிவியல் பாடத்தில் மொத்தம் 39 பேரில் 34 பேர் தேர்வு எழுதினர். 5 பேர் எழுதவில்லை.
தனித் தேர்வர்வகளில் கணினி அறிவியல் பாடத் தேர்வில் மொத்தம் 7 பேரில் 6 பேர் தேர்வு எழுதினர். அரசியல் அறிவியல் பாடத் தேர்வில் மூன்று பேரில் இருவர் மட்டுமே எழுதினர்.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்றோர் மொத்தம் 26 மாணவர்கள். அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம்,சொல்வதை எழுதுபவர,மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தேர்வு எழுதியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தகுதியுடைய 3,570 பள்ளி மாணவர்களில் 3382 பேர் தேர்வு எழுதினர்.188 பேர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/16/பிளஸ்-2-பொதுத்-தேர்வு-நீலகிரி-மாவட்டத்தில்-188-பேர்-எழுதவில்லை-3114585.html
3114238 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் வாகனச் சோதனையில் ரூ. 3.80 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 15, 2019 08:58 AM +0530 கூடலூரில் வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றிக் கொண்டுவரப்பட்ட ரூ. 3.80 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
 தேர்தல் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியர்கள் முஜிபுர் ரகுமான், மகேஷ்வரி ஆகியோர் தமிழக-கேரள எல்லையான நாடுகாணி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளத்தில் இருந்து கர்நாடகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றிக் கொண்டுவரப்பட்ட ரூ. 3.20 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
  மற்றொரு வாகனத்தில் வந்த கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியைச் சேர்ந்த கந்தனிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையான ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் தேர்தல் அலுவலரான கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிறகு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/கூடலூரில்-வாகனச்-சோதனையில்-ரூ-380-லட்சம்-பறிமுதல்-3114238.html
3114237 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் தனியார் உறைவிடப் பள்ளியில் மகாராஷ்டிர மாநில மாணவி தற்கொலை DIN DIN Friday, March 15, 2019 08:58 AM +0530 உதகையில் உள்ள தனியார் சர்வதேச உறைவிடப் பள்ளியில் மாணவி  தற்கொலை செய்துகொண்டார்.
  உதகையில், முத்தொரை பாலடா பகுதியில் தனியார் சர்வதேசப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, வெளிநாடுகள்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த மாணவி 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.  இந்நிலையில், இந்த மாணவி விடுதியிலுள்ள தனது அறையில் யாருமில்லாத நேரத்தில் குளியலறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உதகை ஊரக காவல் நிலையத்திற்குத்  தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீஸார், மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் உள்ளூர் பாதுகாவலர்களிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 
   இது குறித்து போலீஸார் கூறியதாவது:
 இந்த மாணவி  உதகைக்கு வந்ததிலிருந்தே யாரிடமும் பழகாமல் இருந்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தாரும் மாணவியிடம் தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளனர்.  இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனர்.
  இது குறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/உதகையில்-தனியார்-உறைவிடப்-பள்ளியில்-மகாராஷ்டிர-மாநில-மாணவி-தற்கொலை-3114237.html
3114166 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஜயந்தி விழா DIN DIN Friday, March 15, 2019 08:42 AM +0530 உதகையில்  ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 424ஆவது ஜயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 
உதகையில் பாம்பேகேசில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராகவேந்திர சுவாமி திருக்கோயிலில் ராகவேந்திரரின் 424ஆவது ஜயந்தி விழாவும்,  9ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழாவும் புதன்கிழமை  விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.
இதையொட்டி, கோயில் அர்ச்சகர் சத்தியநாராயணா தலைமையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சார்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதையடுத்து, மின் அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. கோயிலில் இருந்து சுவாமி திருவீதி உலா புறப்பாடு தொடங்கி, மார்க்கெட் வீதி, பேருந்து நிலையம், கடைவீதி, காபி ஹவுஸ் சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில்  நிர்வாகிகள் ஆடிட்டர் கணேஷ்,  ராஜன், கங்காதரன், ஜனார்த்தனன், கெம்பராஜ் உள்ளிட்ட விழாக் குழுவினர்  செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/உதகையில்-ஸ்ரீராகவேந்திர-சுவாமிகள்-ஜயந்தி-விழா-3114166.html
3114164 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் டி.டி.கே. சாலையில் புதர்களில் திடீர் தீ DIN DIN Friday, March 15, 2019 08:42 AM +0530 குன்னூர் டி.டி.கே. சாலையில் உள்ள புதர்களில் திடீரென வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்த நிலையில்,  தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
குன்னூரில் கடந்த மாதம் நிலவிய பனிபொழிவுக்குப் பின் வனங்களில் புற்கள், செடிகள் கருகி வனத் தீ  ஏற்படும் அபாயம் உருவானது. தற்போது பனிப் பொழிவு  குறைந்து  வெயிலின் தாக்கம்  அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனங்களில்  புற்கள், செடிகள் கருகத் துவங்கியுள்ளன. 
வறட்சி அதிகரித்து வரும் நிலையில், வன  விலங்குகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதிகளில் தீத் தடுப்புக் கோடுகள் அமைத்துத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் டி.டி.கே. சாலைப் பகுதியில்  காய்ந்த புதர்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனே, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரிஆர்.மோகன் தலைமையில்  தீயணைப்பு  வீரர்கள் சென்று ஒரு மணி நேரம்  போராடி  தீயை அணைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/குன்னூர்-டிடிகே-சாலையில்-புதர்களில்-திடீர்-தீ-3114164.html
3114165 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் டி.டி.கே. சாலையில் புதர்களில் திடீர் தீ DIN DIN Friday, March 15, 2019 08:42 AM +0530 குன்னூர் டி.டி.கே. சாலையில் உள்ள புதர்களில் திடீரென வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்த நிலையில்,  தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
குன்னூரில் கடந்த மாதம் நிலவிய பனிபொழிவுக்குப் பின் வனங்களில் புற்கள், செடிகள் கருகி வனத் தீ  ஏற்படும் அபாயம் உருவானது. தற்போது பனிப் பொழிவு  குறைந்து  வெயிலின் தாக்கம்  அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனங்களில்  புற்கள், செடிகள் கருகத் துவங்கியுள்ளன. 
வறட்சி அதிகரித்து வரும் நிலையில், வன  விலங்குகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதிகளில் தீத் தடுப்புக் கோடுகள் அமைத்துத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் டி.டி.கே. சாலைப் பகுதியில்  காய்ந்த புதர்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனே, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரிஆர்.மோகன் தலைமையில்  தீயணைப்பு  வீரர்கள் சென்று ஒரு மணி நேரம்  போராடி  தீயை அணைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/குன்னூர்-டிடிகே-சாலையில்-புதர்களில்-திடீர்-தீ-3114165.html
3114163 கோயம்புத்தூர் நீலகிரி லாரி - கார் மோதல்: இளைஞர் சாவு DIN DIN Friday, March 15, 2019 08:41 AM +0530 உதகையில், தலைக்குந்தாஅருகே லாரி மீதுகார் மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
  உதகை அருகே ஏக்குணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப் மகன் முகமது சித்திக் (42). இவர் தனது காரில் தலைக்குந்தா வழியாக வியாழக்கிழமை உதகைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில், சிட்கோ பகுதி சாலை வளைவில் எதிரே வந்து கொண்டிருந்த லாரியும், இந்த காரும் மோதிக் கொண்டன. இவ்விபத்தில் அடிபட்ட முகமது சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது குறித்து உதகை நகர மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/லாரி---கார்-மோதல்-இளைஞர்-சாவு-3114163.html
3114162 கோயம்புத்தூர் நீலகிரி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Friday, March 15, 2019 08:41 AM +0530 வாக்களிப்பதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரப் பேரணி மஞ்சூர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை நோக்கி தேர்தல்  ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மஞ்சூர் பாரதியார் பெண்கள் உயர் நிலைப்பள்ளி  மாணவிகள், ஆசிரியர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடை பெற்றது. பேரணியில் குந்தா வருவாய் ஆய்வாளர் ராமசுப்பு,  கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜன், ஊழியர்கள்  ஐயப்பன், மணிகண்டன், சிவசங்கரன்,  பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மஞ்சூர் மேல் பஜாரில் இருந்து வட்டாட்சியர்அலுவலகம் வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/வாக்காளர்-விழிப்புணர்வுப்-பேரணி-3114162.html
3114161 கோயம்புத்தூர் நீலகிரி போலீஸார் தாக்கியதாக இளைஞர் புகார் DIN DIN Friday, March 15, 2019 08:41 AM +0530 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி காந்தி நகரைச் சேர்ந்த இளைஞரை விசாரணைக்கு வரவழைத்து போலீஸார் தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்தி நகரைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (40). சத்தியசீலனுக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், இவரது மனைவி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்தியசீலன் மீது புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து,  விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட சத்தியசீலனை ஆண் காவலர்கள் மூன்று தாக்கினராம். இதில், அவருக்கு தோல்பட்டையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து பணத்தை போலீஸார் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.   தன்னைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி.,  மண்டல காவல் துறைத் தலைவர்,  தமிழக காவல் துறைத் தலைவர் ஆகியோருக்கு சத்தியசீலன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/போலீஸார்-தாக்கியதாக-இளைஞர்-புகார்-3114161.html
3114160 கோயம்புத்தூர் நீலகிரி உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் DIN DIN Friday, March 15, 2019 08:40 AM +0530 நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்  சம்பந்தமாக ஏதேனும் மறுப்புத் தெரிவிப்பவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச் சாவடி வரைவுப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மாவட்ட ஊராட்சி அலுவலகம்,  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்,  ஊராட்சி அலுவலகங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச் சாவடி வரைவு பட்டியல்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட தேர்தல்  நடத்தும் அலுவலர்களால் 14ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை அல்லது மறுப்புகளை தெரிவிக்க விரும்பினால்   சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/15/உள்ளாட்சித்-தேர்தல்-வரைவு-வாக்காளர்-பட்டியல்-வெளியீடு-ஆட்சேபணைகளைத்-தெரிவிக்கலாம்-3114160.html
3112674 கோயம்புத்தூர் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் மயிலுடன் செல்ஃபி எடுத்து  விளையாடிய சுற்றுலாப் பயணி DIN DIN Thursday, March 14, 2019 11:02 AM +0530 கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வந்த மயிலுடன் செல்ஃபி எடுத்து கேரள சுற்றுலாப் பயணி விளையாடியுள்ளார்.

  நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு பகுதியில் கேரள சுற்றுலா பயணி ஒருவர், சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். அப்போது, சாலையோரமாக வந்த மயிலுடன் செல்ஃபி எடுத்து விளையாடியுள்ளார். நீண்ட நேரமாக சுற்றுலாப் பயணி அதே இடத்தில் இருந்துள்ளார். இருப்பினும், வனத் துறையினரோ நெடுஞ்சாலை ரோந்துப் படையினரோ அந்தப் பகுதிக்கு வரவில்லை.

காட்டுத் தீயால் எரிந்து வனங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், உணவு, குடிநீர் தேடி விலங்குகள் சாலையோரங்களுக்கு வரும் நிலையில், இதுபோல புகைப்படம் எடுத்து விளையாடுபவர்களின் உயிருக்கே வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வனத் துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/முதுமலை-புலிகள்-காப்பகத்தில்-மயிலுடன்-செல்ஃபி-எடுத்து-விளையாடிய-சுற்றுலாப்-பயணி-3112674.html
3113282 கோயம்புத்தூர் நீலகிரி காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் DIN DIN Thursday, March 14, 2019 03:35 AM +0530 குன்னூர் அருகே  குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட மணியாபுரம் தேயிலை தோட்டத்தில்  வேலை செய்து கொண்டிருந்த முதியவரை காட்டுடெருமை தாக்கியதில் புதன் கிழமை படுகாயம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் உள்ளிட்டப் பகுதிகளில்  காட்டெருமைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே தோட்ட வேலைகளுக்குச்  சென்று வரும் நிலை உள்ளது. வேலைக்குச் செல்பவர்கள் வனப் பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்குச் செல்லும் போது காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளால் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.
குன்னூர் அருகே  குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட மணியாபுரம் தேயிலை தோட்டத்தில் கோபால் (61) என்ற முதியவர் பணி செய்துகொண்டிருந்தார். 
அப்போது அவரை காட்டெருமை  தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இந்த சம்பவம் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 
இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/காட்டெருமை-தாக்கியதில்-முதியவர்-படுகாயம்-3113282.html
3113281 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 93 லட்சம் பறிமுதல் DIN DIN Thursday, March 14, 2019 03:35 AM +0530 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் 3 நாள்களில் ரூ.93.24 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு தேசிய வங்கியின் சார்பில் ஏடிஎம் மையத்தில் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சமும் அடங்கும்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வாகனத் தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உரிய ஆவணங்களின்றியும், உரிய ஆதாரங்களின்றியும் கொண்டு செல்லப்படும் ரொக்கம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. 
நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு தேசிய வங்கியிலிருந்து ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.79 லட்சத்து 99 ஆயிரத்து 420  இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இத்தொகையை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற சோதனையில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில்  இரண்டு  பகுதிகளில்  ரூ.4.20 லட்சமும், கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 இடங்களில் ரூ.5.30 லட்சமும் கைப்பற்றப்பட்டன. 
இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 420 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தொகை முழுதும் உதகையில் உள்ள மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. வங்கியின் ரொக்கம்  உள்ளிட்ட எந்த தொகையும் புதன்கிழமை இரவு வரையிலும் விடுவிக்கப்படவில்லை.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/நீலகிரி-மாவட்டத்தில்-3-நாள்களில்-ரூ-93-லட்சம்-பறிமுதல்-3113281.html
3113280 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 2 பொதுத் தேர்வு: 397 பேர் எழுதவில்லை DIN DIN Thursday, March 14, 2019 03:35 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 6,645 பேர் மட்டுமே புதன்கிழமை தேர்வு எழுதினர். 397 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 
வேதியியல் பாடத்தில் தேர்வு எழுத தகுதியுடைய 3606 மாணவர்களில் 3429 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 177 பேர் தேர்வு எழுதவில்லை. கணக்குப்பதிவியல் பாடத்தில் தேர்வு எழுத வேண்டிய 3398 பேரில் 3193 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 215 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.  
புவியியல் பாடத்தில் தேர்வு எழுத  வேண்டிய 38 பேரில் 33 பேர் தேர்வு எழுதினர். 5 பேர் எழுதவில்லை. 
 தனித் தேர்வர்களில் வேதியியல் பாடத்தில் தேர்வு எழுத வேண்டிய 33 பேரில் 27 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  6 பேர் தேர்வு எழுதவில்லை.  கணக்குப்பதிவியல் பாடத்தில் 121 பேரில் 110 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 11 பேர் தேர்வு எழுதவில்லை. 
அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 26 மாணவர்கள் தேர்வெழுதினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/பிளஸ்-2-பொதுத்-தேர்வு-397-பேர்-எழுதவில்லை-3113280.html
3113279 கோயம்புத்தூர் நீலகிரி ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Thursday, March 14, 2019 03:34 AM +0530 கூடலூரில் ஊட்டச் சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நிறைவு பெற்றன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 8ஆம் தேதி பிரதமரின் போஷன் பக்வாடா என்ற தலைப்பில் பல்வேறு ஊட்டச் சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றன. ஜீ.டி.எம்.ஓ. பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆர்.சரஸ்வதி விளக்கமளித்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் ராஜேஸ்வரி, குகனேஸ்வரி, ராஜம்மாள், ஆர்.திருச்செல்வி, நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/ஊட்டச்சத்து-விழிப்புணர்வுப்-பேரணி-3113279.html
3113278 கோயம்புத்தூர் நீலகிரி பந்தலூர் கிளை நூலகத்தில் நிகழ்ச்சி DIN DIN Thursday, March 14, 2019 03:34 AM +0530 பந்தலூர் கிளை நூலகத்தில் வாசிப்போம் நேசிப்போம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், கிளை நூலகம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். 
மகாத்மாக காந்தி பொது சேவை மைய தலைவர் நெளஷாத், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரீதா, நூலக உதவியாளர் மூர்த்தி, நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியில் 50 மாணவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/பந்தலூர்-கிளை-நூலகத்தில்-நிகழ்ச்சி-3113278.html
3113277 கோயம்புத்தூர் நீலகிரி உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ. 5.30 லட்சம் பறிமுதல் DIN DIN Thursday, March 14, 2019 03:34 AM +0530 கூடலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தியாகு, சத்தியசீலன், மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர் கூடலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
தொரப்பள்ளி பகுதியில் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தியபோது, கேரள மாநிலம், மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதியிலிருந்து வந்த லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3 லட்சத்து 30 ஆயிரம், பால்மேடு பகுதியில் நடைபெற்ற சோதனையில் ரூ.70 ஆயிரம், அதே பகுதியில் மற்றொரு லாரியிலிருந்து ரூ.1.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/உரிய-ஆவணமின்றி-கொண்டுவந்த-ரூ-530-லட்சம்-பறிமுதல்-3113277.html
3113276 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Thursday, March 14, 2019 03:34 AM +0530 குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான  இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காந்திப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அதிகரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி,   கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கேத்திபாலாடா அரசு உயர்நிலைப் பள்ளி, என்.எஸ்.அய்யா பள்ளி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எல்லநள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சாய்வு தளம், குடிநீர், கழிப்பிடம், மின்வசதி, உட்கட்டமைப்பு வசதி போன்ற வசதிகள் உள்ளனவா என மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
உடனடியாக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், குன்னூர் வட்டாட்சியர் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/14/குன்னூரில்-வாக்குச்சாவடி-மையங்களில்-ஆட்சியர்-ஆய்வு-3113276.html
3112673 கோயம்புத்தூர் நீலகிரி பந்தலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய யானைகள் DIN DIN Wednesday, March 13, 2019 07:17 AM +0530 பந்தலூரை அடுத்துள்ள கையுண்ணி பகுதியில் தோட்டத்துக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த யானைகள் பயிர்களைச்  சேதப்படுத்தின. 
பந்தலூர் அருகே கையுண்ணி பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த யானைகள், அப்பகுதியிலுள்ள விவசாயி ஏலியாஸின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தின.  வனப் பகுதிக்குள் இருந்து வரும் யானைகள், விவசாயிகளின் தோட்டங்களுக்குள் அடிக்கடி புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/பந்தலூர்-அருகே-தோட்டத்துக்குள்-புகுந்து-பயிர்களைச்-சேதப்படுத்திய-யானைகள்-3112673.html
3112672 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் வாகனச் சோதனைகளில்  ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் DIN DIN Wednesday, March 13, 2019 07:17 AM +0530 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ. 10.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக்  குழு,  கணக்குக் குழுவினர் உள்ளிட்ட 26 குழுக்களைச் சேர்ந்தோர் தீவிர கண்காணிப்பிலும், வாகனச் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையின்போது கேத்தி பகுதியில் முத்துகணேஷ்  என்பவரிடமிருந்து ரூ.1.60 லட்சம், அதே பகுதியில் சந்திரபோஸ் என்பவரிடமிருந்து ரூ.2.40 லட்சம்  என மொத்தம்  ரூ.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 
   இதையடுத்து,  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகன சோதனைகளில்  ரூ. 6 லட்சத்து 5,510 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதில், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 2 பேரிடமிருந்து 
ரூ. 2 லட்சத்து 91,510,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் இருவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 19,000ம்,  குன்னூர் சட்டப் பேரவைத்  தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 95,000 கைப்பற்றப்பட்டது.  இரு தினங்களில் மொத்தம் ரூ.10 லட்சத்து 23,420 ரொக்கம்  கைப்பற்றப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/நீலகிரி-மாவட்டத்தில்-வாகனச்-சோதனைகளில்--ரூ-10-லட்சம்-ரொக்கம்-பறிமுதல்-3112672.html
3112671 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Wednesday, March 13, 2019 07:16 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி உதகை நகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான  இன்னசென்ட்  திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
   உதகையில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் கல்வியியல்  கல்லூரி, புனித  தெரேசா உயர்நிலைப் பள்ளி,   ஸ்ரீஓம்பிரகாஷ் தொடக்கப் பள்ளி, ஆர்.கே.புரம் நகராட்சி ஆரம்பப் பள்ளி, ஹோபார்ட்  நடுநிலைப் பள்ளி, மெயின் பஜார் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான சாய்வு தளம் போன்ற வசதிகள் உள்ளனவா என்று மாவட்ட  ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தேவையான  வசதிகளை  உடனடியாக ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
 உதகை நகர்மன்ற ஆணையர் நாராயணன், நகர்மன்றப் பொறியாளர் ரவி, வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/உதகையில்-வாக்குச்-சாவடி-மையங்களில்-ஆட்சியர்-ஆய்வு-3112671.html
3112670 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 1 தேர்வு:மாவட்டத்தில் 452 பேர் எழுதவில்லை DIN DIN Wednesday, March 13, 2019 07:16 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் புதிய, பழைய பாடத் திட்டங்களில் தேர்வெழுத வேண்டிய மாணவர்களில் 452 பேர் தேர்வெழுதவில்லை.
 நீலகிரி மாவட்டத்திலுள்ள 38 தேர்வு மையங்களில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 தேர்வை தகுதியுடைய 7,052 பேரில் 6,905 பேர் எழுதினர். 147 பேர் தேர்வெழுத வரவில்லை. செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற கணிதத் தேர்வில் தேர்வெழுத தகுதியுடைய 1,995 பேரில் 1,970 பேர் தேர்வெழுதினர். 25 பேர் தேர்வெழுத வரவில்லை.  விலங்கியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 1,252 பேரில் 1,222 பேர் தேர்வெழுதினர். 30 பேர் தேர்வெழுதவில்லை.  வணிகவியல் பாடத்தில் தேர்வெழுத தகுதியுடைய 3,555 பேரில் 3,477 பேர் தேர்வெழுதினர். 78 பேர் தேர்வெழுதவில்லை.  விவசாயப் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 250 பேரில் 236 பேர் மட்டும் தேர்வெழுதினர். 14 பேர் தேர்வெழுதவில்லை. 
  பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டிய 483 பேரில் 178 பேர் மட்டும் தேர்வெழுதினர்.  305 பேர் தேர்வெழுதவில்லை. கணிதத் தேர்வு எழுத வேண்டிய 140 மாணவர்களில் 79 பேர் மட்டும் தேர்வெழுதினர். 61 பேர் தேர்வெழுதவில்லை.  விலங்கியல் பாடத்தில் தேர்வெழுத தகுதியுடைய 63 பேரில் 4 பேர் மட்டும் தேர்வெழுதினர். 59 பேர் தேர்வெழுத வரவில்லை. வணிகவியல் பாடத்தில் தேர்வெழுத  தகுதியுடைய 243 பேரில் 89 பேர் மட்டும் தேர்வெழுதினர். 154 பேர் தேர்வெழுதவில்லை. விவசாயம் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 37 பேரில் 6 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 31 பேர்  தேர்வெழுதவில்லை.
 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மொழிப்பாட விலக்கு மற்றும் சொல்வதை எழுதுபவர் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று 31 பேர் தேர்வெழுதினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/பிளஸ்-1-தேர்வுமாவட்டத்தில்-452-பேர்-எழுதவில்லை-3112670.html
3112669 கோயம்புத்தூர் நீலகிரி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் DIN DIN Wednesday, March 13, 2019 07:16 AM +0530 முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள பொக்காபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை இரவு  நடைபெற்றது.
   இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் நாகராஜ் உள்ளிட்டோர் வடம் பிடித்துத் தொடங்கிவைத்தனர். பின்னர் விடியவிடிய  அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுடன்  தேர்த் திருவிழா நிறைவு பெற்றது.
   தேர்த் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளிலிருந்தும், கேரளம், கர்நாடகத்தில்இருந்தும்  ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டனர்.  பொக்காபுரம் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், பறக்கும் கேமராக்கள் ( டிரோன் கோமராக்கள்)  மூலமாகவும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உதகை, கோவை, மேட்டுப்பாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கல்லட்டி மலைப் பாதை வழியாக குறிப்பிட்ட வாகனங்கள் 
மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தெப்பக்காடு, தொரப்பள்ளி சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு  இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்ல  அனுமதிக்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/பொக்காபுரம்-மாரியம்மன்-கோயில்-தேரோட்டம்-3112669.html
3112668 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர், கோத்தகிரியில் பறக்கும் படையினர் விடியவிடிய சோதனை DIN DIN Wednesday, March 13, 2019 07:15 AM +0530 குன்னூர், கோத்தகிரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
மக்களவைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம்  கொடுப்பவர்கள், பணத்தை வாங்குபவர்களுக்கு ஓராண்டு வரை   சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், குன்னூர், கோத்தகிரியில் பறக்கும் படை  தாசில்தார் தலைமையில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விடியவிடிய  சோதனை நடைபெற்றது. 
இது குறித்து பறக்கும் படை தாசில்தார் கண்ணதாசன் கூறியதாவது:
உரிய ஆவணங்கள் இன்றி ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பணத்துக்கான உரிய சான்றுகளை  வழங்கினால் மட்டுமே பணம் திரும்ப வழங்கப்படும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/குன்னூர்-கோத்தகிரியில்-பறக்கும்-படையினர்-விடியவிடிய-சோதனை-3112668.html
3112667 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் படகர் இன உப்புஹட்டுவ பண்டிகைக் கொண்டாட்டம் DIN DIN Wednesday, March 13, 2019 07:15 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் 400 ஊர்களில் வசிக்கும் படகர் இன மக்களின் உப்புஹட்டுவ  பண்டிகை  திங்கள்கிழமை  கொண்டாடப்பட்டது. 
 நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படகர் இன மக்கள் உப்புஹட்டுவ பண்டிகையை ஒட்டி,  ஒன்றிணைந்து உப்பு ,  பச்சைக் கடலை, புல் வகைகளை கொண்டு வந்து ஆற்றில் கரைத்து, அதிலிருந்து தண்ணீரை மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொட்டியில்  ஊற்றி மாடுகளுக்குத் தண்ணீரை கொடுத்தனர். 
அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு பின்பு காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கவட்டை இலை, நெறிச் செடிகளை  வீட்டிற்குக் கொண்டு சென்று  அதை வீட்டின்  முற்றத்தில்  தொங்கவிட்டனர். இதன் மூலம்  நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பது  ஐதீகம். மாடுகள்  உப்புத் தண்ணீர் குடிப்பதால் அவை மேய்சலுக்கு  எங்கு சென்றாலும் வீட்டுக்குத்  திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் 
இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டுகிறது. 
மேலும், வீட்டில் பாயாசம் வைத்து ஊர் பொதுமக்களைக் கூப்பிட்டு  அதைக் கொடுப்பார்கள். படகர்களின்  சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில்  இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/13/நீலகிரி-மாவட்டத்தில்-படகர்-இன-உப்புஹட்டுவ-பண்டிகைக்-கொண்டாட்டம்-3112667.html
3112167 கோயம்புத்தூர் நீலகிரி ரெப்கோ வங்கி சார்பில் இலவச குடிநீர்த் தொட்டிகள் DIN DIN Tuesday, March 12, 2019 07:52 AM +0530 ரெப்கோ வங்கி சார்பில் கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி மைத்துக்கு குடிநீர்த் தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
 கூடலூர் தொழிற் பயிற்சி மையத்துக்கு குடிநீர்த் தொட்டி வேண்டும் என பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று ரெப்கோ வங்கியின் கீழ் இயங்கும் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி மைய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குடிநீர்த் தொட்டிகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளையின் அறங்காவலர் வே.கிருஷ்ணகுமார், பிரதிநிதி ந.சக்திவேல், பேரவை பிரதிநிதி ஞானப்பிரகாசம், சுப்பிரமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ், மாதையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/12/ரெப்கோ-வங்கி-சார்பில்-இலவச-குடிநீர்த்-தொட்டிகள்-3112167.html
3112166 கோயம்புத்தூர் நீலகிரி கேத்தி அருகே வாகனச் சோதனையில் ரூ.1.60 லட்சம் பறிமுதல் DIN DIN Tuesday, March 12, 2019 07:51 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி கேத்தி அருகே வாகனச் சோதனையின் போது காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.60 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 163 மண்டல அளவிலான குழுக்களும், 18 பறக்கும் படை குழுக்கள் சார்பில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், கேத்தி அருகே பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவர் வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 
 அந்தக் காரில் ரூ.1.60 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இதையடுத்து, பறக்கும் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஒரு வாகன தரகர் என்றும், வாகனம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார். 
 ஆனால், அந்தத் தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளமாறு கூறிய பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதகை  கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/12/கேத்தி-அருகே-வாகனச்-சோதனையில்-ரூ160-லட்சம்-பறிமுதல்-3112166.html
3112165 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 2 பொதுத் தேர்வு: நீலகிரி மாவட்டத்தில் 380 பேர் எழுதவில்லை DIN DIN Tuesday, March 12, 2019 07:51 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 380 பேர் பங்கேற்கவில்லை.
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 38 தேர்வு மையங்களில் திங்கள்கிழமை தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வில் பங்கேற்க வேண்டிய 6,928 பேரில், 6,548 பேர் மட்டுமே பங்கேற்றனர். 380 பேர் தேர்வு எழுதவில்லை.
 இதில் இயற்பியல் தேர்வில் 175 பேரும், பொருளியல் தேர்வில் 192 பேரும், பொது இயந்திரவியல் தேர்வில் 3 பேரும், மின்னணு சாதனங்கள் தேர்வில் 3 பேரும், மின் இயந்திரங்களும், சாதனங்களும் தேர்வில் 7 பேரும் என மொத்தம் 380 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 
 தனித்தேர்வர்கள் பிரிவில் இயற்பியல் தேர்வில் 4 பேரும், பொருளியல் தேர்வில் 9 பேரும் பங்கேற்கவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு வழங்கும் கூடுதல் ஒரு மணி  நேரம், மொழிப்பாட விலக்கு மற்றும் சொல்வதை எழுதுவோர் போன்ற சலுகைகளைப் பெற்று 26 பேர் தேர்வு எழுதினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/12/பிளஸ்-2-பொதுத்-தேர்வு-நீலகிரி-மாவட்டத்தில்-380-பேர்-எழுதவில்லை-3112165.html
3112164 கோயம்புத்தூர் நீலகிரி தேர்தல் பிரசாரங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம்: ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா DIN DIN Tuesday, March 12, 2019 07:50 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தையொட்டி தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதத்துடன் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
 உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
 இதையடுத்து, மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். 
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவைத் தொகுதி. மேலும் இந்த தொகுதிக்குள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,  திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலையொட்டி 1,611 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் 684 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. தேர்தல் பணிகளில் 7,732 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணிக்கு என 163 மண்டல அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 4 பேர் இடம் பெற்றிருப்பர்.
 இதேபோல, 36 பறக்கும் படை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 18 குழுக்கள் நீலகிரி மாவட்டத்திலும், 18 குழுக்கள் சமவெளிப் பகுதிகளிலும் இயங்கும். மக்களவைத் தொகுதியில் 124 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 வாக்காளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பது தொடர்பான புகார்களை 1950 என்ற அல்லது 18004250034 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல, வாக்காளர்கள் தங்களது வாக்குச்சீட்டு தொடர்பான சந்தேகங்களையும் இந்த எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்தல் பிரசாரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
 பொதுமக்கள் தாங்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாகனச் சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தலைமையிலான குழுவிடம் ஆவணங்களைக் காட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறியதாவது:
 தேர்தல் பணியில் உள்ளூர் போலீஸார் 1,240 பேருடன், 5 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க் காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல், தீயணைப்புத் துறை மற்றும் வனத் துறையினரும் ஈடுபடவுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/12/தேர்தல்-பிரசாரங்களில்-பிளாஸ்டிக்-பொருள்களை-பயன்படுத்தினால்-அபராதம்-ஆட்சியர்-இன்னசென்ட்-திவ்யா-3112164.html
3111203 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: ஆட்சியர் DIN DIN Monday, March 11, 2019 12:54 AM +0530 உதகை அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடக்கி வைத்துப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் மொபைல் வாகனங்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 மேலும் பேருந்து நிலையங்கள்,  ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றுடன் 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ தேவாலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராமப் பகுதிகளில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில்  42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் எஸ்.பொற்கொடி தலைமையில் சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/11/உதகையில்-42558-குழந்தைகளுக்கு-போலியோ-சொட்டு-மருந்து-ஆட்சியர்-3111203.html
3111202 கோயம்புத்தூர் நீலகிரி ஆமைக்குளத்தில் காமன் கூத்து DIN DIN Monday, March 11, 2019 12:54 AM +0530
கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் 28ஆவது ஆண்டு காமன் கூத்து திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ளஆமைக்குளம் பகுதியில் புராதன காமன் பண்டிகை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் ரதி, மன்மதன் பங்கேற்ற காட்சிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு புராதன கலை நிகழ்ச்சிகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன. இந்த காமன் பண்டிகையை தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் தொடர்ந்து 28 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/11/ஆமைக்குளத்தில்-காமன்-கூத்து-3111202.html
3111201 கோயம்புத்தூர் நீலகிரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் DIN DIN Monday, March 11, 2019 12:54 AM +0530 ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவர் த.சுப்பிரமணி தலைமை வகித்தார். 
கூட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். 
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே  மத்திய அரசு வழங்கவேண்டும். ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/11/ஓய்வு-பெற்ற-அரசு-ஊழியர்-சங்க-பொதுக்குழு-கூட்டம்-3111201.html
3111200 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் - உதகை சாலை விரிவாக்கப் பணி: கோடை சீசனுக்குள் நிறைவேற்ற எதிர்பார்ப்பு DIN DIN Monday, March 11, 2019 12:53 AM +0530
குன்னூர் - உதகை இடையே தேசிய  நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப்  பணியை கோடை சீசனுக்குள் நிறைவேற்றப்படுமா என்ற எதிபார்ப்பு பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
குன்னூர் -  உதகை சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சாலையை விரிவாக்கம் செய்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் செல்ல கால்வாய் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்தப் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. 
இந்த சாலை உதகைக்குச் செல்லும் மிக முக்கியமான சாலை என்பதால் இதன் விரிவாக்கப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.    
மே மாதம் உதகையில் நடைபெறும்  கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர் என்பதால் இந்த சாலை விரிவாக்கப் பணிகளை அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/11/குன்னூர்---உதகை-சாலை-விரிவாக்கப்-பணி-கோடை-சீசனுக்குள்-நிறைவேற்ற-எதிர்பார்ப்பு-3111200.html
3111198 கோயம்புத்தூர் நீலகிரி பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம் தொடக்கம் DIN DIN Monday, March 11, 2019 12:53 AM +0530
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் ஒவ்வொரு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதைப்போலவே நெலாக்கோட்டை  ஊராட்சிக்கு உள்பட்ட பாட்டவயல்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பந்தகாப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மல்லேசன் பயிற்சியாளராக பங்கேற்று பயிற்சியளித்தார். 
இம்முகாமில் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/11/பள்ளி-மேலாண்மைக்-குழு-பயிற்சி-முகாம்-தொடக்கம்-3111198.html
3111096 கோயம்புத்தூர் நீலகிரி வங்கிகள் அலைகழிப்பதாக தோட்டத் தொழிலாளர் புகார் DIN DIN Sunday, March 10, 2019 05:45 AM +0530
வங்கிக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான சேவை வழங்காமல் வங்கி ஊழியர்கள் அலைகழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு, சிஜடியூ தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் பரமசிவம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட, வால்பாறை தாலுக்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியத்தை தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகின்றனர்.
வால்பாறையில் மொத்தம் மூன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த மூன்று வங்கிகள் மூலம் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை எடுக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் எடுக்க செல்வதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. வங்கிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் குறைகளைத் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்து வருகின்றனர்.
இதனால், தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வால்பாறையில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு சேவை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/வங்கிகள்-அலைகழிப்பதாக-தோட்டத்-தொழிலாளர்-புகார்-3111096.html
3111049 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு DIN DIN Sunday, March 10, 2019 05:29 AM +0530 குன்னூர் நகராட்சிக்கு 23 வார்டில் பல்நோக்கு கட்டடம் திறப்பு  நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட 23 வார்டில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இல்ல விஷேசங்களுக்கு தனியார் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து விழாக்களை     நடத்துவது மிகுந்த சிரமமாக இருந்ததால் இப்பகுதியில் பல்நோக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 
இதையடுத்து குன்னூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சமும், நகராட்சி நிதியில் இருந்து ரூ. 3 லட்சமும் சேர்த்து ரூ. 10 லட்சம்  மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. இதை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு சனிக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அண்ணா தோட்டத் தொழிற்சங்க மாநில செயலாளர் பி. ஜெயராமன்,  முன்னாள் பால் வாரியத்  தலைவர் எல்.மணி,  நகர மன்றத் தலைவர் டி. சரவணக்குமார், நகர அவைத் தலைவர் நிர்மல்சந்த் ஜெயின், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் ஒய். சத்தார்,  நகர அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/குன்னூரில்-பல்நோக்கு-கட்டடம்-திறப்பு-3111049.html
3111048 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம், கடன் வழங்கும் விழா DIN DIN Sunday, March 10, 2019 05:29 AM +0530
பந்தலூர் தொல் பழங்குடியினர் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் மசினகுடியில் உள்ள மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஆகிய இரு சங்கங்களின்  சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம் மற்றும் கடன் வழங்கும் விழா நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் லோகநாதன் பேசியதாவது:
கூட்டுறவு சங்கத்தின் உண்மையான முதலாளிகள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்தான். சங்கம் ஈட்டும் லாபத்தில் பங்குதாரர்களுக்கு 14 சதவீதம் ஈவுத்தொகை வழங்கப்படுகிறது. பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீலகிரி மாவட்டத்தில் மூன்று பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
வனத்துக்குள் கிடைக்கும் சிறுவனப் பொருள்களான தேன், புளி, கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், சீமார் புல் போன்றவற்றை மலைவாழ் மக்கள் உறுப்பினர்களைக் கொண்டு சேகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு  வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை தவறாமல் திருப்பி செலுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/நீலகிரி-மாவட்ட-கூட்டுறவு-ஒன்றியத்தின்-சார்பில்-உறுப்பினர்-கல்வித்-திட்டம்-கடன்-வழங்கும்-விழா-3111048.html
3111047 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் திடீர் மழை DIN DIN Sunday, March 10, 2019 05:29 AM +0530
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை ஒரு  மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை  திடீரென பலத்த மழை பெய்யத் துவங்கியது. 
ஒரு  மணிநேரம் விடாது பெய்த மழையின் காரணமாக சாலையோரத்தில் உள்ள கால்வாய்களில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. இதனால் கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 மாதத்துக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/குன்னூரில்-திடீர்-மழை-3111047.html
3111046 கோயம்புத்தூர் நீலகிரி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா: இரவு நேரத்திலும் வாகனங்களுக்கு அனுமதி DIN DIN Sunday, March 10, 2019 05:29 AM +0530
பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி தெப்பக்காடு சாலையில் மசினகுடி மற்றும் தொரப்பள்ளி சோதனைச் சாவடிகள் வழியாக இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள மசினகுடி பகுதியில் சோலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) வரை திருவிழா நடைபெறவுள்ளது. 
இதனால் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாள்களில் மசினகுடி மற்றும் தொரப்பள்ளி சோதனைச் சாவடிகள் வழியாக பொதுமக்கள் இரவு நேரத்திலும் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/பொக்காபுரம்-மாரியம்மன்-கோயில்-திருவிழா-இரவு-நேரத்திலும்-வாகனங்களுக்கு-அனுமதி-3111046.html
3111045 கோயம்புத்தூர் நீலகிரி பாட்டவயல் அரசுப் பள்ளி ஆண்டு விழா DIN DIN Sunday, March 10, 2019 05:28 AM +0530
பந்தலூர் அடுத்துள்ள பாட்டவயல் அரசு பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தலூர் வட்டத்தில் உள்ள பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுநர் செல்வராணி விழாவை துவக்கி வைத்தார். பள்ளியின் மேலண்மைக் குழு உறுப்பினர் ஆனந்தஜோதி கொடியேற்றினார்.
முன்னதாக பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பொருள்களை கல்விச் சீராக கிராம மக்கள் வழங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தக்காப்பு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லேஸ், பிதர்க்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரீட்டா, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் மரியம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/பாட்டவயல்-அரசுப்-பள்ளி-ஆண்டு-விழா-3111045.html
3111044 கோயம்புத்தூர் நீலகிரி ரஃபேல் ஊழலை மறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு DIN DIN Sunday, March 10, 2019 05:28 AM +0530
 ரஃபேல் விமான ஒப்பந்தம் சம்மந்தமான கோப்புகளைக் காணவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கும் மத்திய அரசு, அந்த ஊழலை மறைக்க முயற்சிக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கூடலூர் காந்தி திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தமிழக செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தம் சம்மந்தமான கோப்புகளைக் காணவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கும் மத்திய அரசு, அந்த ஊழலை மறைக்க முயற்சிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமான ஒரு ஒப்பந்தத்தின் கோப்புகளை பாதுகாக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி எப்படி நாட்டை பாதுகாப்பார் என்றார்.
கட்சி நிர்வாகி கோஷிபேபி பேசுகையில், பிரிவு 17 நிலத்தில் கட்டப்பட்டிருந்த தனியார் கட்டடத்தை உயர் நீதிமன்ற விதியையும் மீறி இடித்து மாவட்ட ஆட்சியர் சர்வாதிகாரிபோல் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். கூட்டத்தில் கேரள மாநில காங்கிரஸ் செயலாளர் வித்யா பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். 
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிவா, மொய்துப்பா, ரபி, நாடுகாணி ராஜேந்திரன், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் செய்தலவி, நெல்லியாளம் நகரத் தலைவர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/ரஃபேல்-ஊழலை-மறைக்க-முயற்சிக்கிறது-மத்திய-அரசு-காங்கிரஸ்-குற்றச்சாட்டு-3111044.html
3111043 கோயம்புத்தூர் நீலகிரி இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு விருது: தேசிய பசுமைப் படை நிகழ்ச்சியில் அறிவிப்பு DIN DIN Sunday, March 10, 2019 05:28 AM +0530   நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என உதகையில் நடைபெற்ற  தேசிய பசுமைப்படை நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் அறிவித்தார்.
தேசிய பசுமைப்படை அமைப்பின் சார்பில் மாவட்ட அளவில் அனைத்து பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து செயல்படுத்தவுள்ள இயற்கை விவசாயம் நம் வீட்டுத் தோட்டத்தில் என்ற கருத்தின் அடிப்படையில் மண்ணைத் தொடுவோம், நீலகிரியின் உயிர்ச்சூழலை காப்போம்' என்ற செயல் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இக்கருத்தரங்கை தொடக்கி வைத்து நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் பேசியதாவது:
நமது மூதாதையர்களின் விவசாய முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியே இயற்கை விவசாயமாகும்.  
இத்திட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுடன் அனைத்து ஆசிரியர்களும் இணைய வேண்டும். இனி ஆண்டுதோறும் இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படும்.  இதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசினர் தாவரவியல் பூங்காவில் உள்ள அலுவலகத்தில் பள்ளிகளின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கியதோடு, அனைத்து மாணவர்களுக்கும் காரனேசன் நாற்றுகளையும் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் சிபிஆர் சுற்றுச்சூழல் மையத்தின் கள அலுவலர் குமாரவேலு, கூடலூர் பசுமைப் படை பொறுப்பாசிரியர் ராபர்ட், தேசிய பசுமைப் படையின் குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் ஆகியோர் பேசினர். 
நீலகிரி இயற்கை விவசாய சங்கச் செயலர் ராமதாஸ் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/இயற்கை-விவசாயத்தில்-சிறப்பாக-செயல்படும்-பள்ளிகளுக்கு-விருது-தேசிய-பசுமைப்-படை-நிகழ்ச்சியில்-அறிவிப்-3111043.html
3111042 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் கல்லூரியில் 824 மாணவர்களுக்கு பட்டம் DIN DIN Sunday, March 10, 2019 05:28 AM +0530
கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 824 மாணவ, மாணவியருக்கு  சனிக்கிழமை பட்டம் வழங்கப்பட்டது.
கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வனிதா தலைமை வகித்து முதுகலை மற்றும் இளங்கலையில் தகுதி பெற்ற  824 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கிப் பேசினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் வே.சுரேஷ், கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.திராவிடமணி, அனைத்து துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/10/கூடலூர்-கல்லூரியில்-824-மாணவர்களுக்கு-பட்டம்-3111042.html
3110146 கோயம்புத்தூர் நீலகிரி காவல் துறை, ஜீப் ஓட்டுநர்கள் இணைந்து  தூய்மைப் பணி மேற்கொள்ள முடிவு DIN DIN Saturday, March 9, 2019 08:06 AM +0530 மசினகுடி காவல் துறையினரும், ஜீப் ஓட்டுநர்களும் இணைந்து பொக்காபுரம் திருவிழா காலத்தில் சாலையோரமுள்ள கழிவுகளை அகற்றும் பணிக்கு தன்னார்வலர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை சாலையோரம் வீசிவிட்டுச் செல்வர். 
மசினகுடி காவல் நிலைய ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பன்னீர் செல்வன், சம்பத்குமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் விஜயன் மற்றும் மசினகுடியைச் சேர்ந்த ஜீப் ஓட்டுநர்கள் 40 பேர் ஆகியோர் ஊராட்சிப் பணியாளர்களுடன் இணைந்து இந்தக் கழிவுகளை அகற்றும் தன்னார்வ குழுவில் இடம் பெற்றுள்ளனர். 
அவர்களுக்கு தொப்பி, பனியன், காலனி உள்ளிட்ட உடைகள் வழங்கப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் மாவநல்லா முதல் மசினகுடி வரை உள்ள வனச் சாலையோரம் உள்ள கழிவுகளை இந்தக் குழு அகற்றும் பணியில் ஈடுபடும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/காவல்-துறை-ஜீப்-ஓட்டுநர்கள்-இணைந்து--தூய்மைப்-பணி-மேற்கொள்ள-முடிவு-3110146.html
3110145 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில்  ரூ. 50 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம் DIN DIN Saturday, March 9, 2019 08:05 AM +0530 குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் ரூ. 50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
குன்னூர் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கண்டோன்மென்ட் போர்டு செயல்பட்டு வருகிறது. இதில் 7 வார்டுகள்  உள்ளன. வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய  அளவில் உள்ள  62 கண்டோன்மென்ட்களில்  சிறந்த கண்டோன்மென்ட் ஆக குன்னூர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில்  கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள 7 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம்  தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா    கண்டோன்மென்ட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். 
 நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா,  நீலகிரி மாநிலங்களவை  உறுப்பினர்  கே. ஆர். அர்ஜுணன்,  குன்னூர் சட்டப் பேரவை  உறுப்பினர்  சாந்தி ராமு,  கண்டோன்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார், பிரிகேடியர் பங்கஜ் பி. ராவ், கர்னல் பி. பி. பெர்க்கர், பொறியாளர் சுரேஷ், சுகாதாரப்  பணி  மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கண்டோன்மென்ட்  நியமனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/குன்னூர்-வெலிங்டன்-கன்டோன்மென்ட்-பகுதியில்--ரூ-50-கோடியில்-பாதாள-சாக்கடை-திட்டம்-தொடக்கம்-3110145.html
3110144 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் மகளிர் தின விழா உற்சாகக் கொண்டாட்டம் DIN DIN Saturday, March 9, 2019 08:05 AM +0530 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் மகளிரை கெளரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின்  சார்பில் நடைபெற்ற கூட்டு நிகழ்ச்சி அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மிகவும் தைரியமானவர்கள், வலிமையானவர்கள். மாவட்டத்தில் மக்கள் தொகையில் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்பது பெருமைக்குரியது என்றார்.
தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், போஷான் பக்வாடா கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த ஆட்சியர், உறுதிமொழி ஏற்ற பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு அரங்கை பார்வையிட்டார். பின், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஓட்டுப் போட வாங்க' என்ற குறுந்தகட்டை வெளியிட்டதோடு, அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அந்த  குறும்படத்தை பார்வையிட்டார். 
அதேபோல, பெண் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேடயங்களை வழங்கிய பின்னர், சுற்றுச்சூழல் துறை மற்றும் அருளகம் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மகளிர் திட்டத்தின் சார்பில் 14 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 76 லட்சம்  மதிப்பிலான கடனுதவிகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன் மற்றும் குன்னூர் சட்டப் பேரவை  உறுப்பினர் ராமு ஆகியோர் முன்னிலையில் ஆட்சியர் வழங்கியதோடு,  நீலகிரியின் பாரம்பரிய நடனமான படகர் மற்றும் தோடரின மக்களின் நடனத்திலும் கலந்து கொண்டார்.
முன்னதாக  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை  மாற்ற அனைவரும் ஒன்றாக கை கோர்ப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியையும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியையும் ஆட்சியர்  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.   
இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பாபு, மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணிய சாம்ராஜ், சமூக நலத்துறை அலுவலர் புஷ்பலதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசு கலைக் கல்லூரியில்...: உதகை அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மகளிர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முருகன் (பொறுப்பு ) தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தோடரினத்தின் பிரதிநிதி வாசமல்லி, கல்லூரி பேராசிரியர்கள் லூர்துமேரி மற்றும் முனைவர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்ச்சியில்  பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கும் மாவட்ட ஆட்சியரின் முயற்சிகளுக்கு உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்களும், கல்லூரி ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பது எனவும், மது இல்லாத நீலகிரியை உருவாக்குவது எனவும் மாணவியர், பேராசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/உதகையில்-மகளிர்-தின-விழா-உற்சாகக்-கொண்டாட்டம்-3110144.html
3110143 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 1 பொதுத் தேர்வு: ஆங்கிலம் தேர்வை 489 பேர் எழுதவில்லை DIN DIN Saturday, March 9, 2019 08:05 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தேர்வில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 142 மாணவர்களும், பழைய பாடத் திட்டத்தின் கீழ்  347 மாணவர்களும் தேர்வு எழுதவில்லை.
பிளஸ் 1 ஆங்கிலப் பாடத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வேண்டிய 7171 மாணவர்களில் 7029 பேர்  மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 142 பேர் தேர்வு எழுதவில்லை.  அதேபோல, மாவட்டத்தில் உள்ள 38 தேர்வு மையங்களில் பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வேண்டிய 558 பேரில் 211 பேர் மட்டும் தேர்வெழுதினர்.  347 பேர் தேர்வு எழுதவில்லை. 
 தனித் தேர்வர்களில் தேர்வு எழுத வேண்டிய 95 பேரில் 86 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  9 பேர்  தேர்வில் பங்கேற்கவில்லை.  அதேபோல, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று 31 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/பிளஸ்-1-பொதுத்-தேர்வு-ஆங்கிலம்-தேர்வை-489-பேர்-எழுதவில்லை-3110143.html
3110142 கோயம்புத்தூர் நீலகிரி ஓவேலியில் யானை தாக்கி  விவசாயி சாவு DIN DIN Saturday, March 9, 2019 08:04 AM +0530 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள எல்லமலை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பிரேம்குமார் (32). இவர் வழக்கம்போல் தனது வாழைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென தோட்டத்துக்குள் நுழைந்த யானை, பிரேம்குமாரை தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார்.
அருகிலுள்ளவர்கள் யானையை விரட்டி விட்டு வனத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். வனத் துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/ஓவேலியில்-யானை-தாக்கி--விவசாயி-சாவு-3110142.html
3110141 கோயம்புத்தூர் நீலகிரி தொழிற்சாலையில் தீ: உடல் கருகி முதியவர் சாவு DIN DIN Saturday, March 9, 2019 08:04 AM +0530 கோத்தகிரி அருகே  வெஸ்ட்புரூக் பகுதியில் தைலம் காய்ச்சும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உடல் கருகி உயிரிழந்தார். 
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி (58). இவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே வெஸ்ட்புரூக் பகுதியில் தைல தொழிற்சாலையில் தைலம் காய்ச்சும் பணியில்  ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தீப் பற்றி எரிந்தது. இதில் தைலம் காய்ச்சும் ஷெட் முழுவதும் தீ மளமளவென பரவியதில் புகை  மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபியால் வெளியே வர முடியவில்லை. 
சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் தீ எரிவதைப் பார்த்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.  இதையடுத்து அங்கு வந்த தீணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின் உள்ளே சென்றுபார்த்தபோது உடல் முழுவதும் எரிந்த  நிலையில் கோபியின் சடலம் கிடந்தது.  
இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/09/தொழிற்சாலையில்-தீ-உடல்-கருகி-முதியவர்-சாவு-3110141.html
3109331 கோயம்புத்தூர் நீலகிரி சிறப்பு அதிரடிப் படையுடன் மோதல்: மாவோயிஸ்டு சாவு; எல்லையில் கண்காணிப்பு தீவிரம் DIN DIN Friday, March 8, 2019 02:31 AM +0530 நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப் படைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் புதன்கிழமை இரவு ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். காயமடைந்த மற்றவர்கள் வனப் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர். இதனால் தமிழக - கேரள எல்லையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லையை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி வனத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு புதன்கிழமை இரவு சென்ற மாவோயிஸ்டுகள் அங்குள்ள ஊழியர்களை மிரட்டினர். தகவலறிந்த "கேரள தண்டர்போல்ட்' எனப்படும் சிறப்புஅதிரடிப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். 
அப்போது அங்கு மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் காயங்களுடன் வனப் பகுதிக்குள் ஓடித் தப்பினர். துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ஜலீல், கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழக எல்லையில் உள்ள கூடலூர் வனப் பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதால், தமிழக வனப் பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், தமிழக - கேரள எல்லையில் உள்ள பாட்டவயல், அம்பலமூலா, நம்பியார்குன்னு, சோலாடி, கீழ்  நாடுகாணி, கிளன்ராக் ஆகிய பகுதியில் பாதுகாப்பை போலீஸார் பலப்படுத்தியுள்ளனர். காயமடைந்த மாவோயிஸ்டுகள் தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்களா என்பது குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/சிறப்பு-அதிரடிப்-படையுடன்-மோதல்-மாவோயிஸ்டு-சாவு-எல்லையில்-கண்காணிப்பு-தீவிரம்-3109331.html
3109330 கோயம்புத்தூர் நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம் DIN DIN Friday, March 8, 2019 02:31 AM +0530 உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் 7 நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கியது. 
உதகை அருகேயுள்ள மேல்கவ்வட்டி கிராமத்தில் இம்முகாமை கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தொடக்கி வைத்தார். முதல் நாளில் அங்குள்ள கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதையடுத்து  தூய்மை இந்தியா விழிப்புணர்வும், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தொடர்ந்து வரும்  நாட்களில்  எய்ட்ஸ் விழிப்புணர்வு,  மது ஒழிப்பு விழிப்புணர்வு, வாக்களிப்பதன் முக்கியத்துவம்,  பெண் உரிமைகள்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியருக்கென ஆளுமைத் திறன் தொடர்பான கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன. தினந்தோறும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    
தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஊர் தலைவர் ராமன், கிராம நிர்வாகிகள் பாஸ்கரன், நடராஜன், ராமலிங்கம் ஆகியோருடன் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டக் குழுவின் சார்பில் எபினேசர், விலங்கியல் துறை இணை பேராசிரியர் ஜெயபாலன்,  உதவி பேராசிரியர் விஜய் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலர்கள் ரவி, கண்ணபிரான்,  பிரவீணா  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/உதகை-அரசு-கலைக்-கல்லூரி-மாணவர்களுக்கு-நாட்டு-நலப்பணித்-திட்ட-முகாம்-தொடக்கம்-3109330.html
3109329 கோயம்புத்தூர் நீலகிரி பிரிவு -17 நிலத்தில் கட்டிய கட்டடத்தை இடித்தது சட்ட விரோதம்: எம்.எல்.ஏ. DIN DIN Friday, March 8, 2019 02:30 AM +0530 கூடலூரில் பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்ட தனிநபரின் கட்டத்தை காவல் துறையின் பலத்தை பயன்படுத்தி இடித்தது சட்டவிரோதம் என்று கூடலூர் திமுக எம்.எல்.ஏ. திராவிடமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் உள்ள காலம்புழா சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி போலீஸாரின் துணையோடு வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அதிகாலை சட்ட விரோதமாக இடித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. 
பிரிவு-17 நிலத்தில் வாழும் மக்களை வெளியேற்றமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துவிட்டு பின் கட்டடத்தை இடித்துள்ளனர். அதிமுக அரசின் வாக்குறுதி பொய்யாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர் கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/பிரிவு--17-நிலத்தில்-கட்டிய-கட்டடத்தை-இடித்தது-சட்ட-விரோதம்-எம்எல்ஏ-3109329.html
3109328 கோயம்புத்தூர் நீலகிரி வரும் 10இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 42,558 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க முடிவு DIN DIN Friday, March 8, 2019 02:30 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் 10ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நாடு முழுவதும் வரும் 10ஆம் தேதி நடக்கிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாமுக்காக நீலகிரி மாவட்டத்தில் 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இப்பணிக்கு மொபைல் வாகனங்களும்  பயன்படுத்தப்படும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,  மார்க்கெட்  பகுதிகள், சோதனைச் சாவடிகள், 29 கோயில்கள்,  52 கிறிஸ்தவ தேவாலயங்கள், 6 மசூதிகள் மற்றும் 30 முக்கிய சுற்றுலா மையங்களிலும் சொட்டு மருந்து மையங்கள் செயல்படும். உதகை நகரப் பகுதியில் சொட்டு மருந்து வழங்குவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதால் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உள்பட்ட  அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு  மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/வரும்-10இல்-போலியோ-சொட்டு-மருந்து-முகாம்-42558-குழந்தைகளுக்கு-சொட்டு-மருந்து-வழங்க-முடிவு-3109328.html
3109327 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, March 8, 2019 02:30 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நடைபெறுகிறது.
உதகை வட்டத்தில் கப்பத்தொரை சமுதாயக் கூடத்திலும்,  குன்னூர் வட்டத்தில் தாம்பட்டி சமுதாயக் கூடத்திலும்,  கோத்தகிரி வட்டத்தில் ஓம் நகர் சமுதாயக் கூடத்திலும்,  குந்தா வட்டத்தில் மெரிலேண்டு சமுதாயக் கூடத்திலும், கூடலூர்  வட்டத்தில் முதுகுளி ஊராட்சி அலுவலக வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  
முகாம் காலை 10 மணிக்கு துவங்குகிறது. இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/நீலகிரி-மாவட்டத்தில்-இன்று-அம்மா-திட்ட-முகாம்-3109327.html
3109326 கோயம்புத்தூர் நீலகிரி அரசு துவக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள் DIN DIN Friday, March 8, 2019 02:29 AM +0530 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி ஆரோட்டுப்பாறை அரசு துவக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை கல்விச் சீர் வழங்கினர்.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி ஆரோட்டுப் பாறையில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்விச் சீர் வழங்க முடிவு செய்தனர். 
அதன்படி, பள்ளிக்குத் தேவையான பீரோ, மேஜை , நாற்காலிகள், வாட்டர் பில்டர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வாங்கி அதை ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளி ஆசிரியர்களிடம் கல்விச் சீராக வழங்கினர். 
இதில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/அரசு-துவக்கப்-பள்ளிக்கு-கல்விச்-சீர்-வழங்கிய-கிராம-மக்கள்-3109326.html
3109325 கோயம்புத்தூர் நீலகிரி முதுமலை வனப் பகுதியில் தீ மூட்டியவர் கைது DIN DIN Friday, March 8, 2019 02:29 AM +0530 முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் தீ மூட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குள் அண்மையில் ஏற்பட்ட தீ, தமிழகத்தில் முதுமலை புலிகள்  காப்பகத்துக்குள்ளும் புகுந்ததில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்து சாம்பலாயின. 
இதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தீத்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ரோந்துப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் மசினகுடி வனச் சரகத்தின் சார்பில் வனச் சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத் துறையினர் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவனல்லா பகுதியில் வனத்துக்குள் ஒரு நபர் தீ மூட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். 
உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மசினகுடியைச் சேர்ந்த பாப்பன் என்பவரது மகன் சுந்தரம் (45) என்பதும், கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக இப்பகுதியில் தீ மூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து அவரை உடனடியாக மசினகுடி வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்த வனத் துறையினர் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/முதுமலை-வனப்-பகுதியில்-தீ-மூட்டியவர்-கைது-3109325.html
3109324 கோயம்புத்தூர் நீலகிரி பிளஸ் 2 பொதுத் தேர்வு: 462 பேர் எழுதவில்லை DIN DIN Friday, March 8, 2019 02:29 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 462 பேர் வியாழக்கிழமை தேர்வு எழுதவில்லை. 
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 38 தேர்வு மையங்களில் தேர்வு எழுத தகுதியுடைய பள்ளி மாணவர்கள் 7,431 பேரில் 6,969 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 462 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கணிதப் பாடத்துக்கு நடைபெற்ற தேர்வில் 2,281 பேரில் 2,197 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 84 பேர் தேர்வு எழுதவில்லை. விலங்கியல் பாடத்தில் தேர்வு எழுத வேண்டிய 1,317 பேரில் 1,218 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 99 பேர் எழுதவில்லை. 
வணிகவியல் பாடத்தில் 3,533 பேரில் 3,303 பேர் மட்டும் தேர்வு எழுதியுள்ளனர். 230 பேர் எழுதவில்லை. விவசாயப் பாடத்தில் 300 பேரில் 251 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 49 பேர் எழுதவில்லை. 
தனித்தேர்வர்களைப் பொறுத்தமட்டில் கணிதத் தேர்வில் தேர்வெழுத வேண்டிய 54 பேரில் 34 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 20 பேர் தேர்வு எழுதவில்லை. வணிகவியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 104 பேரில் 101 பேர் எழுதியுள்ளனர். 3 பேர் தேர்வு எழுதவில்லை. 
விலங்கியல் பாடத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 13 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.  அதேபோல,  மாற்றுத்திறனாளி மாணவர்களில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம்,  சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று  26 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/08/பிளஸ்-2-பொதுத்-தேர்வு-462-பேர்-எழுதவில்லை-3109324.html
3108775 கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடக்கம்: 143 பேர் தேர்வெழுதவில்லை DIN DIN Thursday, March 7, 2019 03:08 AM +0530
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற மொழிப் பாடத் தேர்வில் 143 பேர் பங்கேற்கவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் இத் தேர்வுகள் நடைபெற்றன. புதிய பாடத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 7,179 பேரில் 7,036 பேர் தேர்வெழுதினர். 143 பேர் தேர்வெழுதவில்லை.
தமிழ் பாடத் தேர்வில் மொத்தம் தேர்வெழுத வேண்டிய 6,516 பேரில் 6,379 பேர் தேர்வெழுதினர். 137 பேர்  தேர்வெழுதவில்லை. மலையாளப் பாடத்தில் 237 பேரில் 236 பேர் தேர்வெழுதினர்.
பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 332 பேரில் 327 பேர்  தேர்வெழுதினர். ஹிந்தி பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 94 பேரும் தேர்வெழுதினர்.
தனித் தேர்வர்களைப் பொருத்தவரை தமிழ்த் தேர்வில் தேர்வெழுத வேண்டிய 55 பேரில் 53 பேர் தேர்வெழுதினர்.  மலையாளம் தேர்வில் 14 பேரில் 13 பேர் தேர்வெழுதினர்.
மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொருத்தவரை கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர், மொழிப் பாட விலக்கு உள்ளிட்ட அரசின் சலுகைகளைப் பெற்று 31 பேர் தேர்வெழுதினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/07/மாவட்டத்தில்-பிளஸ்-1-பொதுத்-தேர்வுகள்-தொடக்கம்-143-பேர்-தேர்வெழுதவில்லை-3108775.html
3108774 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் சிவ ஜெயந்தி விழா DIN DIN Thursday, March 7, 2019 03:08 AM +0530
கூடலூரில் 83ஆவது சிவ ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நடைபெற்ற இவ் விழாவை கூடலூர் துணைக் கண்காணிப்பாளர் ஜெய்சிங் கொடியேற்றி துவக்கிவைத்தார். 
தொடர்ந்து நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியை பிரம்மகுமாரிகள் அமைப்பின் நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்வரி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். 
கூடலூர் பொறுப்பாளர் ரேணுகா, லண்டன் பொறுப்பாளர் சங்கர், வங்கி ஊழியர் சங்க நீலகிரி மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், பாஸ்கரன் மற்றும்  பொதுமக்கள், பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த சகோதரிகள், பா.ஜ.க. நிர்வாகி செறுமுள்ளி சந்திரன், வழக்குரைஞர் பி.எம்.பரசுராமன், டி.கே.நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/07/கூடலூரில்-சிவ-ஜெயந்தி-விழா-3108774.html
3108773 கோயம்புத்தூர் நீலகிரி உதகை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு DIN DIN Thursday, March 7, 2019 03:08 AM +0530
உதகை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.71 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
தூனேரி ஊராட்சிக்குட்பட்ட மொரடக்கம்பை பகுதியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பசுமை வீட்டையும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.29.9 லட்சம் மதிப்பில் அம்பேத்கர் காலனி பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணிகள், வீடுகள் பழுது பார்க்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.27.3  லட்சம் மதிப்பில் எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட பேரகல் பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணியையும், இடுஹட்டியில் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீர்க் குழி அமைக்கும் பணியையும், ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெல்மனஹாடா முதல் கனாகம்பை வரை ரூ.63 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்படுத்தப்பட்ட சாலை பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதேபோல, கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.21.4 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கோழிப் பண்ணையையும், ரூ.2.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு உரம் தயாரிக்கும் கூடங்களையும், கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18.2 லட்சம் மதிப்பில் கக்குச்சி முதல் கனாகம்பை வரை முடிக்கப்பட்ட சாலைப் பணியையும், சட்டப் பேரவை  உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் கூக்கல் ஊராட்சியில் நடைபெற்று வரும் நியாய விலைக் கடை கட்டும் பணியையும் ஆட்சியர்  நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
மேலும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும்  ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்  திட்ட இயக்குநர் பாபு, உதவிப் பொறியாளர் செந்தில் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/07/உதகை-ஊராட்சிப்-பகுதிகளில்-வளர்ச்சிப்-பணிகள்-ஆட்சியர்-ஆய்வு-3108773.html
3108772 கோயம்புத்தூர் நீலகிரி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம் DIN DIN Thursday, March 7, 2019 03:08 AM +0530
கிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.
சாம்பல் புதன் நிகழ்விலிருந்து புனித வெள்ளி வரையிலான 40 நாள்களில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் தவக்காலம்  புதன்கிழமை தொடங்கியது. கடந்த வருடத்தில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை கொடுக்கப்பட்ட காய்ந்த பழைய குருத்தோலைகளை எரித்து  சாம்பலாக்கி, அந்த சாம்பலை மந்திரித்து அனைவரின் நெற்றியிலும் பூசி தவக்காலத்தை தொடங்கிவைத்தனர்.
இதையொட்டி, உதகையில் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் அருட்திரு ஸ்தனிஸ்லாஸ் தலைமையிலும்,  ஃபிங்கர்போஸ்ட் புனித திரேசன்னை ஆலயத்தில் பங்குத் தந்தையர்கள் அருட்திரு அமல்ராஜ், ரொனால்டு பிரபு, கிறிஸ்துராஜா ஆகியோர் தலைமையிலும், உதகை புனித மரியன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை வின்சென்ட், குருக்கள் அடைக்கலம் மற்றும் ஜோசப் சந்தோஷ் ஆகியோர் தலைமையிலும், குருசடி திருத்தலத்தில் அருட்திரு அமிர்தராஜ் தலைமையிலும் தவக்கால துவக்கத்தின் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த 40 நாள்களிலும் தவக்கால சிந்தனைகளாக சிறப்பு வழிபாடுகளும்,  தவக்கால வெள்ளிக்கிழமைகளில்  அனைத்து ஆலயங்களிலும்  சிலுவைப் பாதையும்  நடைபெறும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/07/கிறிஸ்தவர்களின்-தவக்காலம்-தொடக்கம்-3108772.html
3108409 கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டந்தோறும்  அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை DIN DIN Wednesday, March 6, 2019 09:47 AM +0530 மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்துவது என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் மருத்துவத்துறையில் தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. குறிப்பாக, கர்ப்பிணிகள் பராமரிப்பு, குழந்தைகள் பிறப்பு,  இறப்பு விகிதாசாரத்தில் முன்னோடியாக உள்ளோம்.
இதன்காரணமாக இந்திய அளவில், தமிழகத்துக்கு 2ஆவது இடம் அளித்து வேண்டிய நிதியுதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்த கர்ப்பிணி பெண்களுக்கான அம்மா பெட்டகத் திட்டகத்தை மேம்படுத்தி,   3 மற்றும் 5 ஆவது மாதங்களில் பெட்டகம் வழங்கி,  கர்ப்பிணி மற்றும் கருவில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்தையும் பேணும் வகையில் அம்மா பெட்டகம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், தமிழகத்தில் 
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் சரியான எடையுடனும், ஆரோக்கியமாகவும் பிறக்கும்.
நிகழாண்டு 508 முதுகலை மருத்துவப் படிப்புகளை பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. குறிப்பாக பட்டய மருத்துவப் படிப்புகளையெல்லாம் முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகளாக மாற்றம் செய்து மருத்துவக் கல்வியில் முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி,ஆண்டுக்கு ஒரு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. 
இந்த வகையில் திருவண்ணாமலை, சிவகங்கை, கரூர் மாவட்டங்களின் தொடர்ச்சியாக மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/06/மாவட்டந்தோறும்--அரசு-மருத்துவக்-கல்லூரி-ஏற்படுத்த-நடவடிக்கை-3108409.html
3108408 கோயம்புத்தூர் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை சாவு DIN DIN Wednesday, March 6, 2019 09:47 AM +0530 கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது  வனத் துறைக்குத் திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச் சரகத்தில் யானை இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலர் காந்தன், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் பிரேத பரிசோதனை செய்தார். இறந்தது சுமார் 35 வயதுடைய ஆண் யானை என்றும், கூடுதல் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/06/முதுமலை-புலிகள்-காப்பகத்தில்-ஆண்-யானை-சாவு-3108408.html
3108369 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் ஏல மையத்தில் ரூ. 9 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை DIN DIN Wednesday, March 6, 2019 09:22 AM +0530 குன்னூர் ஏல மையத்தில் ரூ. 9 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்கோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் முக்கியத் தொழிலாகத் தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள், குன்னூர் கூட்டுறவு ஏல மையம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை விலைக்கு வாங்குகின்றனர். குன்னூரில் கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1 ஆம் தேதிகளில் நடந்த ஏலத்தில்  9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது.  
இதில் இலை ரகம் 6 லட்சத்து 23 ஆயிரம் கிலோ, டஸ்ட் ரகம் 3 லட்சத்து 66 ஆயிரம் கிலோவாக இருந்தது. இந்த  ஏலத்தில் 9 லட்சத்து 12 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனையானது.  இதன் மதிப்பு ரூ.9 கோடியே 16 லட்சம் ஆகும். இது 93 சதவீத விற்பனை ஆகும்.
சி.டி.சி. தேயிலைத் தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.272,  ஆர்தோடக்ஸ் தேயிலைத் தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.262 என ஏலம் போனது. 
சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ. 90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ. 130 முதல் ரூ. 140 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ. 85 முதல் ரூ. 90 வரையும், உயர் வகை ரூபாய் ரூ. 128 முதல் ரூ. 145 வரையும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.2 விலை உயர்ந்து  காணப்பட்டது.  அடுத்த ஏலம் வருகிற 7, 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வருகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/06/குன்னூர்-ஏல-மையத்தில்-ரூ-9-கோடிக்கு-தேயிலைத்-தூள்-விற்பனை-3108369.html
3107057 கோயம்புத்தூர் நீலகிரி தங்கும் விடுதியில் புகுந்த மலைப் பாம்பு DIN DIN Monday, March 4, 2019 08:00 AM +0530 கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மலைப் பாம்பு புகுந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு லைட்பாடி குடியிருப்பு அருகே உள்ள லாக்ஹவுஸ் தங்கும் விடுதியில் மலைப் பாம்பு புகுந்ததாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனத் துறையினர் மலைப் பாம்பைப் பிடித்து சான்ட்ரோடு வனப் பகுதியில் விட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/04/தங்கும்-விடுதியில்-புகுந்த-மலைப்-பாம்பு-3107057.html
3107056 கோயம்புத்தூர் நீலகிரி பொக்காபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா: 8 ஆம்தேதி தொடக்கம் DIN DIN Monday, March 4, 2019 08:00 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் அமைந்துள்ள  பொக்காபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொண்டாட்டங்கள் மார்ச் 8 ஆம்தேதி தொடங்குகின்றன. 
இதுதொடர்பாக அந்தக் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொக்காபுரத்தில் நடைபெறவுள்ள ஆண்டு தேர்த் திருவிழா நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம், கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். 
இக்கோயிலின் இந்த ஆண்டுக்கான திருவிழா கொண்டாட்டங்கள் மார்ச்  8 ஆம்தேதி  (வெள்ளிக்கிழமை) நடைதிறப்புடன் தொடங்குகின்றன. தொடர்ந்து 9 ஆம்தேதி அம்மனுக்கு திருவிளக்கேற்றல், அபிஷேக நிகழ்ச்சிகளும், 10 ஆம்தேதி கங்கை பூஜை நிகழ்ச்சிகளும்,  11 ஆம்தேதி இரவு அம்மன் தேரோட்ட நிகழ்ச்சியும்  நடைபெற உள்ளன.
இறுதி நாள்  நிகழ்ச்சியாக மாவிளக்கு பூஜையுடன் ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் மார்ச் 12 ஆம்தேதி  நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/04/பொக்காபுரம்-அருள்மிகு-மாரியம்மன்-கோயில்-தேர்த்-திருவிழா-8-ஆம்தேதி-தொடக்கம்-3107056.html
3106601 கோயம்புத்தூர் நீலகிரி கொடநாடு எஸ்டேட் விவகாரம்: சயன், மனோஜுக்கு 2 நாள் நீதிமன்ற காவல்: மார்ச் 4 இல் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு DIN DIN Sunday, March 3, 2019 09:18 AM +0530 கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரையும் 2 நாள் நீதிமன்றத் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு, இருவரையும் மார்ச் 4ஆம் தேதி மீண்டும் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
 கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள்  தொடர்பாக சயன், மனோஜ், தீபு, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி,  உதயன், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டிருந்த ஒரு ஆவணப்படத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் வழக்கின் திசையே மாறி விடும் என்பதால் சயன் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட  அரசு வழக்குரைஞர்  பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த வழக்கு பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சயன், மனோஜ் ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாயினர். இதையடுத்து இருவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் பிடிப்பதற்காக 3 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 
இந்நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் அருகே புதுக்காடு பகுதியில் பதுங்கியிருந்த  சயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் இருவரும் உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மாவட்ட நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும்  சனிக்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 
இதன்படி சயன், மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது நடைபெற்ற விசாரணையில், சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இருவரையும் கைது செய்யக் கூடாது என வழக்குரைஞர்கள் ரவிகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் வாதாடினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்குரைஞர் பால நந்தகுமார், இவர்கள் இருவரும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகாதது தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரிலேயே தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதால் பிரதான வழக்குக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி வடமலை,  சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் 2 நாள் நீதிமன்றக் காவல் வழங்கியும்,  இப்பிரச்னையின் பிரதான வழக்கு மார்ச் 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால் அன்றைய தினமே இவர்கள் இருவரும் மீண்டும்  உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அதையடுத்து இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/கொடநாடு-எஸ்டேட்-விவகாரம்-சயன்-மனோஜுக்கு-2-நாள்-நீதிமன்ற-காவல்-மார்ச்-4-இல்-மீண்டும்-ஆஜர்படுத்த-உத-3106601.html
3106600 கோயம்புத்தூர் நீலகிரி வேலைவாய்ப்பை உருவாக்கி முன்னேறுங்கள்: இந்திய பார்மஸி கவுன்சில் தலைவர் அறிவுரை DIN DIN Sunday, March 3, 2019 09:18 AM +0530 மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் வேலை தேடுவோராக மட்டுமின்றி வேலைவாய்ப்பு அளிப்போராகவும் உயர வேண்டும் என உதகை அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஜேஎஸ்எஸ் உயர்கல்வி, ஆராய்ச்சி மைய துணைவேந்தரும், இந்திய பார்மஸி கவுன்சிலின் தலைவருமான  பி.சுரேஷ் கூறினார். 
உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு முடித்த 649 மாணவ, மாணவியருக்குப் பட்டம் வழங்கும் விழா உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜேஎஸ்எஸ் உயர்கல்வி, ஆராய்ச்சி மைய துணைவேந்தரும், இந்திய பார்மஸி கவுன்சிலின் தலைவருமான  பி.சுரேஷ் பேசியதாவது:
படிப்பை முடித்தவர்கள் ஏதாவது ஒரு துறையில் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், தொழில் முனைவோராகவும் மாற வேண்டும். குறிப்பாக, சுற்றுலா மாவட்டமான  நீலகிரியில் சுற்றுலாத் துறை தொடர்பான ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா தொடர்பாக தனி வலைதளம் ஒன்றை  உருவாக்கிஅதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்து வேலைவாய்ப்புப் பெறலாம்.
குறிப்பாக, ஊட்டி சாக்லேட், ஊட்டி வர்க்கி போன்ற பிரத்யேகமான பொருள்களுக்கு வெளிநாடுகளில்  சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இவற்றை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த முடியும். அதேபோல, உதகையில் குடியிருப்புகளை வைத்துக்கொண்டு வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளைப் பராமரித்தல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். இதுபோன்ற பணிகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வில் முன்னேறலாம்.  
சுற்றுலாத் துறையிலும் இயற்கை சார்ந்த சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, குழந்தைகளுக்கான சுற்றுலா, இயற்கை விழிப்புணர்வு சுற்றுலா போன்றவற்றிலும் ஈடுபடலாம். தோல்வி எண்ணத்தைக் கைவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மற்றவர்கள் பேசும் கருத்துகளைக் கேட்டு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்றார். 
இந்த நிகழ்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், பரமேஸ்வரி, சிவசங்கரன் ஆகியோருடன் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/வேலைவாய்ப்பை-உருவாக்கி-முன்னேறுங்கள்-இந்திய-பார்மஸி-கவுன்சில்-தலைவர்-அறிவுரை-3106600.html
3106585 கோயம்புத்தூர் நீலகிரி பாஜக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி DIN DIN Sunday, March 3, 2019 09:12 AM +0530 கூடலூரில் பாஜக இளைஞரணி சார்பில் மத்திய அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க இருசக்கர வாகனப் பேரணி மேல்கூடலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண இல்லம் அருகில் துவங்கியது. பேரணிக்கு பாஜக மாவட்டச் செயலாளர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்,பாஜக நகரத் தலைவர் கே.ரவிகுமார், பொதுச் செயலாளர் சிபி, தொகுதி இணை பொறுப்பாள எச். மதுசூதனன், சுதீஷ், மாநில குழு உறுப்பினர் பி.எம்.பரசுராமன் உள்பட 250க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பேரணி, சுங்கம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, எருமாடு, பாட்டவயல், பிதர்க்காடு, தேவர்சோலை வழியாக கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து ஊர்கள் வழியாகச் சென்று மீண்டும் கூடலூரை வந்தடைந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/பாஜக-இளைஞரணி-சார்பில்-இருசக்கர-வாகனப்-பேரணி-3106585.html
3106584 கோயம்புத்தூர் நீலகிரி கேத்தி பாலாடாவில் ஓடையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை DIN DIN Sunday, March 3, 2019 09:12 AM +0530 கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
குன்னூர் அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பலர் விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக கேத்தி பாலாடா பகுதியில் ஓடை உள்ளது. 
தற்போது வறட்சி நிலவுவதால் ஓடையில் நீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயத்துக்குப் போதுமான தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஓடையை தூர்வாரினால் மழை காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்க வசதியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/கேத்தி-பாலாடாவில்-ஓடையை-தூர்வார-விவசாயிகள்-கோரிக்கை-3106584.html
3106583 கோயம்புத்தூர் நீலகிரி மேபீல்டு செல்லும் சாலையோரம் முள்புதரை அகற்றக் கோரிக்கை DIN DIN Sunday, March 3, 2019 09:11 AM +0530 கூடலூர் அடுத்துள்ள மேபீல்டு செல்லும் சாலையோரம் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தேவர்சோலையை அடுத்துள்ள 9ஆவது மைல் பகுதியில் இருந்து மேபீல்டு பகுதிக்குச் செல்லும் சாலையின் இரு புறமும் முள்புதர்கள் மூடிக்கிடப்பதால் வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. எனவே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலையோரம் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/மேபீல்டு-செல்லும்-சாலையோரம்-முள்புதரை-அகற்றக்-கோரிக்கை-3106583.html
3106582 கோயம்புத்தூர் நீலகிரி மசினகுடி பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் DIN DIN Sunday, March 3, 2019 09:11 AM +0530 மசினகுடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
மசினகுடி பகுதியில் உள்ள தொட்டிலிங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கன். இவர் திண்ணையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைக்கும் முன் வீட்டிலிருந்த பொருள்கள் மற்றும் கூரை எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து மசினகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/mar/03/மசினகுடி-பகுதியில்-வீடு-தீப்பிடித்து-எரிந்து-சேதம்-3106582.html