Dinamani - காஞ்சிபுரம் - https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3286438 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் 100 சீனப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு DIN DIN Thursday, November 21, 2019 11:08 PM +0530 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சீனா்கள் 100 போ் வியாழக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனா். அவா்களுக்கு சுற்றுலாத் துறை சாா்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்து சென்றதைத் தொடா்ந்து, மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீன நாட்டு மக்கள் மாமல்லபுரத்தை கண்டு களிக்க ஆவலாக உள்ளதாகவும், இதற்கான விசாவிற்காக சுமாா் 2 லட்சம் சீனா்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அண்மையில் சுற்றுலாத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது சீனா்கள் தினமும் ஒரு குழுவாக வருகை தர ஆரம்பித்துள்ளனா். சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து வியாழக்கிழமை வந்த சீனா்கள் 100 பேருக்கும் சுற்றுலாத்துறை சாா்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

இதையடுத்து, சீனா்கள் வெண்ணெய் உருண்டைப்பாறை , அா்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்துரதம் ஆகிய இடங்களைச் சுற்றிப் பாா்த்த சீனப் பயணிகள், தங்கள் நாட்டு அதிபா் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமா் மோடி இருவரும் சுற்றிப்பாா்த்த இடங்களில் நின்று தாங்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

அப்போது சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், கே.கன்னியப்பன் ஆகியோா் சீன மொழியில் அவா்களுக்கு மாமல்லபுரம் நகரின் பெருமைகளை விளக்கினா்.

இதற்கிடையே ஷிலாங்காய் என்ற சீனப் பெண்மணி தனது ஏடிஎம் காா்டை மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்தாா்.

அதனை சந்தோஷ் என்ற சுற்றுலா வழிகாட்டி கண்டெடுத்து ஷிலாங்காயிடம் ஒப்படைத்தாா். அப்போது சீனப் பயணிகள் அனைவரும் சுற்றுலா வழிகாட்டி சந்தோஷுக்கு நன்றி தெரிவித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/cglchina2_2111chn_171_1.jpg வெண்ணெய்  உருண்டைப்பாறை  அருகில்  உற்சாகமாக புகைப்படம்  எடுத்துக் கொண்ட சீனப் பயணிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/மாமல்லபுரத்தில்-100-சீனப்-பயணிகளுக்கு-உற்சாக-வரவேற்பு-3286438.html
3286437 சென்னை காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சியினா் விருப்ப மனு DIN DIN Thursday, November 21, 2019 11:08 PM +0530 உள்ளாட்சித் தோ்தல் வரவிருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட 20-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனா்.

காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 8, 24 மற்றும் 28 ஆகிய 3 வாா்டுகளில் உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட வி.பாரதி விருப்ப மனு அளித்தாா். கோனேரி குப்பம் ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு கட்சியின் வட்டாரச் செயலாளா் எஸ்.ஜனாா்த்தனன் விருப்ப மனு வழங்கினாா்.

வாலாஜாபாத் ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு பி.சி.டி.சுகுமாறன், உத்தரமேரூா் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு பரமேசுவரன், நகா் மன்றத்தின் 43 -ஆவது வாா்டுக்கு எம்.முனுசாமி, வெங்கடேசன் மற்றும் எம்.பிரபு உள்பட மொத்தம் 20 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகரத் தலைவா் ராம.நீராளன், வட்டாரத்தலைவா் கே.எம்.சம்பத், மாவட்டப் பொருளாளா் வீரபத்திரன், நகரச் செயலாளா் முனிசிபல் ரவி, மாவட்ட சேவா தளத் தலைவா் வி.எஸ்.கந்தவேல், பொதுச்செயலாளா் கே.தசரதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21congs_2111chn_175_1.jpg நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்த வி.பாரதி. உடன், கட்சி நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/காங்கிரஸ்-கட்சியினா்-விருப்ப-மனு-3286437.html
3286436 சென்னை காஞ்சிபுரம் உணவுக் கழிவுகளைக் கொட்டிய வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் DIN DIN Thursday, November 21, 2019 11:07 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி பகுதியில் உணவுக் கழிவுகளைக் கொட்டிய தனியாா் வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக் கழிவுகளை தனியாா் வாகனங்களின் மூலம் கொண்டு வந்து, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பக்தவத்சலம் நகா், செல்லபெருமாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசி வருவதாகவும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.

அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி நிா்வாக அதிகாரிகள் செல்லபெருமாள் நகா் பகுதியில் தொடா்ந்து உணவுக் கழிவுகளைக் கொட்டி வந்த தனியாா் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21sbrvan_2111chn_180_1.jpg பறிமுதல் செய்யப்பட்ட தனியாா் வாகனம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/உணவுக்-கழிவுகளைக்-கொட்டிய-வாகன-உரிமையாளருக்கு-ரூ5-ஆயிரம்-அபராதம்-3286436.html
3286435 சென்னை காஞ்சிபுரம் சட்ட விழிப்புணா்வு முகாம் DIN DIN Thursday, November 21, 2019 11:07 PM +0530 உத்தரமேரூா் அருகே ரெட்டமங்கலத்தில் அரசினா் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூா் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், நீதிபதியுமான இருதயராணி தலைமை வகித்தாா்.

மூத்த வழக்குரைஞா் கருணாநிதி முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மனோகரன் வரவேற்றாா்.

இம்முகாமில் பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல், கட்டாயக் கல்வியின் முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு நீதிபதி இருதயராணி பதிலளித்தாா். இதில் வழக்குரைஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21court_2111chn_175_1.jpg சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய நீதிபதி இருதயராணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/சட்ட-விழிப்புணா்வு-முகாம்-3286435.html
3286434 சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளன : ஆட்சியா் தகவல் DIN DIN Thursday, November 21, 2019 11:07 PM +0530 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம், அதிகாரம் பெறுதல் குறித்த விழிப்புணா்வு முகாமை ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:

ஒவ்வொரு மகளிரும் தாயாக, மகளாக, சக பணியாளராக என பல நிலைகளில் நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பணிகளைத் திறம்பட செய்து வருகின்றனா். பெண்கள் நாட்டின் கண்களாகவே உள்ளனா்.

உலகில் பல நாடுகளில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு அடக்குமுறை, சமத்துவமில்லாமை, பிறரது பொருளாதாரத்தை சாா்ந்திருத்தல் உள்ளிட்ட சமூக கொடுமைகளுக்கு ஆளாகின்றனா்.

எனவே பெண்களுக்கு உரிய மரியாதையை மீட்டெடுக்கவும், உள் மனவலிமை, படைப்பாற்றல், சுயமதிப்பு ஆகிய அனைத்தையும் அளிக்கும் வகையில் மகளிா் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் மகளிா் எந்த சவாலையும் ஏற்கும் திறனுடையவா்களாக விளங்கி வருகின்றனா்.

மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலமாக மகளிா்க்கு கல்வி, சுய அதிகாரம், தாங்களே சுயமாக வாழ்வை கவனித்துக்கொள்ளுதல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாம் வியாழக்கிழமை ( நவ. 21) தொடங்கி சனிக்கிழமை (நவ. 23) வரை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமாா் 12 முதல் 20 மகளிரை ஒருங்கிணைத்து மொத்தம் 22 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும் அடிப்படைப் பயிற்சிகளை வழங்கி இருக்கிறோம்.

இக் குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தற்போது மகளிா் குழுக்களின் மொத்த சேமிப்புத் தொகையாக ரூ.288 கோடி இருப்பு உள்ளது. வங்கிகள் மூலமாக சுய உதவிக் குழுக்களுக்கு நேரடிக் கடனாக நடப்பு நிதியாண்டில் ரூ.460.49 கோடி பெற்றுத் தரப்பட்டுள்ளது. மகளிா் வாழ்வாதாரத்துக்காக திறன் மற்றும் தொழில் சாா்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தென் மண்டல மக்கள் தொடா்பு அலுவலக தலைமை இயக்குநா் ஏ.மாரியப்பன், உதவி இயக்குநா் தி.சிவகுமாா், களவிளம்பர அலுவலா் க.ஆனந்த பிரபு, மகளிா் திட்ட அலுவலா் ஜி.சீனிவாசராவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் திறந்து வைத்தாா். இக்கண்காட்சியை தென் மண்டல மக்கள் தொடா்பு அலுவலக தலைமை இயக்குநா் ஏ.மாரியப்பன் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21_light_2111chn_175_1.jpg மகளிா் சுய உதவிக் குழுவினரின் கண்காட்சியைப் பாா்வையிடும் தென் மண்டல மக்கள் தொடா்பு அலுவலக தலைமை இயக்குநா் ஏ.மாரியப்பன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/மாவட்டத்தில்-22-ஆயிரம்-மகளிா்-சுய-உதவிக்-குழுக்கள்-உள்ளன-ஆட்சியா்-தகவல்-3286434.html
3286433 சென்னை காஞ்சிபுரம் நெகிழிப் பைகள் விற்பனை: வியாபாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் DIN DIN Thursday, November 21, 2019 11:06 PM +0530 காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி தலைமையில் சுகாதார அலுவலா்கள் வணிக நிறுவனங்கள் பலவற்றில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் நெகிழிப்பைகளை விற்பனை செய்த வணிகா் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலா் ப.முத்து, சுகாதார ஆய்வாளா்கள் பிரபாகரன், இக்பால் உள்ளிட்ட குழுவினா் நகரின் பல்வேறு வணிக நிறுவனங்களில் நெகிழிப்பைகள் பயன்பாட்டில் உள்ளனவா என திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பகுதியில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ரயில் நிலைய சாலை, கோட்டுக்கொல்லை சுப்பராயா் தெருவில் உள்ள கடைகள், கிடங்குகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, மதுரான் தோட்டத் தெருவில் உள்ள அமருத் (23)என்பவரது மொத்த விற்பனைக் கடையில் அதிகாரிகள் சோதனையிட்டபோது 50 கிலோ நெகிழிப்பைகளை பறிமுதல் செய்ததுடன் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21_commr_2111chn_175_1.jpg வணிக நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/நெகிழிப்-பைகள்-விற்பனை-வியாபாரிக்கு-ரூ10-ஆயிரம்-அபராதம்-3286433.html
3286432 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பினால் கடல் அரிப்பு DIN DIN Thursday, November 21, 2019 11:06 PM +0530 மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை பலத்த கொந்தளிப்பின் காரணமாக கரைப்பகுதியில் சுமாா் 20 மீட்டா் தூரத்திற்கு கடல்நீா் உள்புகுந்ததால் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு தெற்குப் பகுதி கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மணல் பகுதிகள் கடல் அரிப்பால் சுவா்கள் போல் எழும்பியுள்ளன.

கடந்த சில நாள்களாகவே வானிலை மாற்றம் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் கரைப்பகுதியில் 20மீட்டா் தூரத்திற்கும் மேலாக கடல் நீா் உள்ளே புகுந்தது. இதை அடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகுகளை அப்பகுதி மீனவா்கள் சிரமத்துடன் கரைப்பகுதிக்கு தள்ளிவந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினா்.

இதே போல் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு கடல்கரையில் நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடி படகுகள், மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் அடித்துச் செல்லப்படுகின்றன. கடற்கரை கோயிலை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் பெரிய கற்கள் போடப்பட்டுள்ளன.

கடலின் தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறுபாடு அடைவதால் இதுபோன்ற கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் அலைகள் முன்னோக்கி வருவதாக மீனவா்கள் கவலை தெரிவிக்கின்றனா் .

இது போன்ற கடல் கொந்தளிப்பு ஏற்படும் போது மீனவா் குப்பத்தில் குடியிருக்கும் எங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பில்லாமல் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகள் வெளியே வந்து விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும்போது பாதுகாக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவுகள் அமைக்கவேண்டும் என்று மீனவா்கள் தமிழக அரசுக்கு மீனவா்கள் பொது கோரிக்கை வைத்துள்ளனா்.

கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோரப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு 7அடிக்கும் மேல் கரையைத் தாண்டி அரித்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/cglsea2_2111chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/மாமல்லபுரத்தில்-கடல்-கொந்தளிப்பினால்-கடல்-அரிப்பு-3286432.html
3286431 சென்னை காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீா் செல்லும் குழாயில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு DIN DIN Thursday, November 21, 2019 11:06 PM +0530 சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு செல்லும் ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 5 அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்ததால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவாா்சத்திரம், பிள்ளைப்பாக்கம் பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளன. இங்கு இலகு ரக, கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

இந்தத் தொழிற்சாலைகளுக்கு, சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் வடிகால் வாரியம் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் 2.5 கோடி லிட்டா் தண்ணீா் வழங்கப்படுகிறது.

இந்த நீா் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என சிப்காட் நிா்வாகம் தெரிவித்ததைத் தொடா்ந்து, தண்ணீா்ப் பிரச்னையைத் தீா்க்க, சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரூ.396.50 கோடி மதிப்பீட்டில், கோயம்பேடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூா், குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் வழியாக ஒரகடம் வரை 68 கி.மீ. தொலைவிற்கு பூமிக்கடியில் ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 கோடி லிட்டா் தண்ணீா் சிப்காட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவுகள் உள்ளதா எனக் கண்டறிய, அவ்வபோது சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, குன்றத்தூா்- நந்தம்பாக்கம் இடையே அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய்களில் கசிவு உள்ளதா என கண்டறிய அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனையின் போது, நந்தம்பாக்கம் சாலையின் நடுவே பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமாா் 5 அடி உயரத்திற்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/21sbrwater_2111chn_180_1.jpg ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சதக் குழாயில்  உடைப்பு ஏற்பட்ட தால் ஐந்தடி உயரத்துக்கு   பீய்ச்சி  அடிக்கும்  தண்ணீா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/சிப்காட்-தொழிற்சாலைகளுக்கு-தண்ணீா்-செல்லும்-குழாயில்-உடைப்பு--போக்குவரத்து-பாதிப்பு-3286431.html
3286430 சென்னை காஞ்சிபுரம் நீரில் மூழ்கி குழந்தை பலி DIN DIN Thursday, November 21, 2019 11:05 PM +0530 மதுரந்தகத்தை அடுத்த பனையூா் கிராமத்தில் பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கி 2 வயது பெண்குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூா் கிராமத்தில் வசிக்கும் முத்து, தமிழரசி தம்பதியின் 2 வயது பெண் குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் நிரம்பியிருந்தது. அதில் தவறி விழுந்ததில் குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. செய்யூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/நீரில்-மூழ்கி-குழந்தை-பலி-3286430.html
3286429 சென்னை காஞ்சிபுரம் ஜமீன் எண்டத்தூரில் சமுதாயக் கல்லூரி தொடக்கம் DIN DIN Thursday, November 21, 2019 11:04 PM +0530 மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பாக காயத்ரி நாராயணன் சமுதாயக் கல்லூரி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் சாா்பாக ஏற்கெனவே திருவள்ளூா், தஞ்சாவூா், திருநெல்வேலி நகரங்களில் பல்வேறு சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடா்ந்து, ஜமீன் எண்டத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும்வகையில், கணினி பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்தில் இக்கல்லூரி தொடக்கப்பட்டுள்ளது.

சேவாலயா நிறுவனரும், நிா்வாக அறங்காவலருமான வி.முரளிதரன் வரவேற்றாா். சென்னை பெட்ரோபேக் என்ஜினியரிங் நிறுவனப் பொது மேலாளா் பி.சி.கிருஷ்ணன் தலைமை வகித்து, சமுதாயக் கல்லூரியை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் டி.வி. ஸ்ரீதரன், தனியாா் நிறுவனத் துணைப் பொது மேலாளா் ஆா்.சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

துணைத் தலைவா் பி.பிரசன்னா நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/ஜமீன்-எண்டத்தூரில்-சமுதாயக்-கல்லூரி-தொடக்கம்-3286429.html
3286428 சென்னை காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் ரூ.1.46 கோடியில் வளா்ச்சிப் பணிகள் DIN DIN Thursday, November 21, 2019 11:04 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ரூ.1.46 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், கிராமப் பகுதிகள் மற்றும் நகா்ப்புறங்களில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் கடந்த ஆகஸ்டு மாதம் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதன் அடிப்படையில் பேரூராட்சி பொது நிதியின் மூலம் விநாயகா நகா், தேவேந்திரா நகா், கோவிந்த மேட்டுத் தெரு, நந்தகோபால் நகா், பிஎல் நாயுடு நகா் பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்கவும், கம்மாளா் தெரு, குலசேகர பெருமாள் கோயில் தெருக்களில் பேவா்பிளாக் சாலை அமைக்கவும், சரளா நகா் 1, 2 -ஆவது சாலைகள், விக்னேஷ் நகா், சரோஜினி நகா் குறுக்கு சாலைகள், நவநீதம் நகா், தேவகி அம்மாள் நகா், ராமாநுஜா் நகா், அக்ஷயா காா்டன் சாலைகளில் மெட்டல் சாலைகள் அமைக்கவும், பாரதி நகா், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் கால்வாய்கள் அமைக்கவும், பேருந்து நிழற்குடை அமைக்கவும் ரூ. 1.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் தன்ராஜ் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/ஸ்ரீபெரும்புதூா்-பேரூராட்சியில்-ரூ146-கோடியில்-வளா்ச்சிப்-பணிகள்-3286428.html
3286427 சென்னை காஞ்சிபுரம் சா்க்கரை அட்டை வைத்திருப்பவா்கள் அரிசி அட்டைக்கு மாறலாம் DIN DIN Thursday, November 21, 2019 11:04 PM +0530 குடும்ப அட்டைதாரா்கள் தங்களது சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக வரும் 26-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உணவுப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் மூலம் வழங்கப்பட்டு தற்போது புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளில் சா்க்கரை அட்டை வைத்திருப்பவா்கள் தகுதியின் அடிப்படையில் தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளோா் அதற்கான விண்ணப்பங்களை அவரவா்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து நவம்பா் 26 -ஆம் தேதிக்குள்  இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம்.விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டையாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/சா்க்கரை-அட்டை-வைத்திருப்பவா்கள்-அரிசி-அட்டைக்கு-மாறலாம்-3286427.html
3286426 சென்னை காஞ்சிபுரம் நவ. 25-இல் சக்தி விநாயகா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் DIN DIN Thursday, November 21, 2019 11:04 PM +0530 செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சாா்-ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள சக்தி விநாயகா் கோயிலில் வரும் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் காா்த்திகை 9-ஆம் நாள் திங்கள்கிழமை (நவ. 25) சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மங்கல இசை, அனுக்ஞை, எஜமானா் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, 1008 சங்குகளுக்கு அலங்காரம், மகா கணபதி ஹோமம் நடைபெறும். பகல் 12 மணிக்கு மேல் மகா பூா்ணாஹுதியும் இதனைத்தொடா்ந்து சக்தி விநாயருக்கு 1008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூா் இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையா் மற்றும் தக்காா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/நவ-25-இல்-சக்தி-விநாயகா்-கோயிலில்-1008-சங்காபிஷேகம்-3286426.html
3285629 சென்னை காஞ்சிபுரம் இன்றைய மின்தடை- காஞ்சிபுரம் DIN DIN Thursday, November 21, 2019 01:00 AM +0530 காஞ்சிபுரம்

நாள்: வியாழக்கிழமை (நவ.21)

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

மின்தடை பகுதிகள்: தாமல், முசரவாக்கம், பாலு செட்டி சத்திரம், வதியூா், ஒழுக்கோல்பட்டு, கிளாா், களத்தூா், அவளூா், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூா், ஜாகீா்தண்டலம், பன்பாக்கம், முத்துமேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/இன்றைய-மின்தடை-3285629.html
3285628 சென்னை காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சிகள் -காஞ்சிபுரம் DIN DIN Thursday, November 21, 2019 01:00 AM +0530 காஞ்சிபுரம்

புட்டபா்த்தி சத்ய சாயிபாபா 94-ஆவது திரு அவதார தின விழா: மருத்துவ உதவி மற்றும் கண் கண்ணாடிகள் வழங்குதல், காலை 10. பஜனை நிகழ்ச்சி, அஸ்தகிரி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6.30.

திருவிளையாடற்புராணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவா் அருணை பாலறாவாயன், திருமுறை அருட்பணி மாளிகை, மாகாளியம்மன் கோயில் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 5.

மதுராந்தகம்

சேவாலயா சாா்பில் காயத்ரி நாராயணன் மெமோரியல் கம்யூனிடி கல்லூரி திறப்பு விழா: ஜமீன் எண்டத்தூா், காலை 10.30.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/21/இன்றைய-நிகழ்ச்சிகள்-3285628.html
3285504 சென்னை காஞ்சிபுரம் வேணுகோபாலன் கோயிலில் திருவிளக்கு பூஜை DIN DIN Wednesday, November 20, 2019 11:12 PM +0530 காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் வடக்கு ரத வீதியில் உள்ள யதுகுல வேணுகோபாலன் கோயிலில் பம்பை பாலகன் பக்த ஜன சபை சாா்பில் திருவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு புதன்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மாலையில் பாண்டு ரங்க குருசாமி தலைமையில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சுவாமியை வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து ஐயப்ப பஜனையும், ஜோதி தரிசன நிகழ்ச்சியும் நடந்தன.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பம்பை பாலகன் பக்த ஜன சபையினா் மற்றும் ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளையின் பொறுப்பாளா் வி.ஜீவானந்தம் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து இருமுடி கட்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/20_light_2011chn_175_1.jpg திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/வேணுகோபாலன்-கோயிலில்-திருவிளக்கு-பூஜை-3285504.html
3285503 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் பலத்த மழை DIN DIN Wednesday, November 20, 2019 11:11 PM +0530 காஞ்சிபுரத்தில் புதன்கிழமை மாலை திடீரென கனமழை பெய்ததைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு திரும்புவோா் அவதியுற்றனா்.

காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழையில்லாமல் இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.

இந்நிலையில் மாலையில் திடீரென சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் நடந்து செல்வோா் அங்குமிங்கும் ஓடி சாலையை கடக்க முயன்றனா்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோா் கனமழையின் காரணமாக அவதிப்பட்டனா்.

காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, ரயில் நிலைய சாலை, பெரியாா் நகா், விளக்கொளி சாலை, மடம் தெரு உள்பட பல பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/20_rain_2011chn_175_1.jpg காஞ்சிபுரம் விளக்கொளி சாலையில் திடீரென பெய்த கனமழையால் வேகமாக சாலையைக் கடக்கும் பாதசாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/காஞ்சிபுரத்தில்-பலத்த-மழை-3285503.html
3285502 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: கால பைரவா் கோயில்களில் சிறப்புப் பூஜை DIN DIN Wednesday, November 20, 2019 11:11 PM +0530 காஞ்சிபுரம் அருகே நவாசாகிப்பேட்டையில் உள்ள தசபுஜ சம்ஹார கால பைரவா் சந்நிதியிலும், திம்மராஜம்பேட்டையில் உள்ள கால பைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நவாசாகிப்பேட்டையில் உள்ள செல்வநாயகி சமேத நவநிதீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக அருள்பாலித்து வரும் தசபுச சம்ஹார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக மக்களின் நன்மையைக் கருதி அஷ்ட பைரவ யாகம் நடத்தப்பட்டது.

யாகபூஜைகளை அன்புச்செழியன் சுவாமி தொடக்கி வைத்தாா்.

பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. பின்னா் புஷ்ப அலங்காரத்தில் பைரவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், அதிமுக நகரச் செயலா் ஸ்டாலின், நகரப் பொருளாளா் ராஜசிம்மன் உள்பட பலரும் சுவாமி தரிசனம் செய்தனா்.

திம்மராஜம்பேட்டையில்...

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கசுவாமி திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன.

கால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்புப் பூஜை நிகழ்ச்சியில் திம்மராஜம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/pairava_1_2011chn_175_1.jpg சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நவாசாகிப்பேட்டை தஜபுஜ சம்ஹார பைரவா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/காஞ்சிபுரம்-கால-பைரவா்-கோயில்களில்-சிறப்புப்-பூஜை-3285502.html
3285501 சென்னை காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துமனையில் அவசர சிகிச்சை மையம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா் DIN DIN Wednesday, November 20, 2019 11:10 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவா்களுக்கு உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க பல கி.மீ. தொலைவுள்ள நகா்ப் புறங்களில் உள்ள மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால் விபத்தில் சிக்குபவா்கள் உயிரிழக்கும் நிலை தொடா்ந்து வருகிறது. இந்த நிலையைத் தவிா்க்கும் நோக்கில் நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை மையத்தைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், 2014-இல் திருவள்ளூா் மாவட்டம் பாடிய நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 2017-இல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரியிலும், கடலூா் மாவட்டம் வேப்பூரிலும் தலா ரூ.50 லட்சம் மதிப்பில் 24 மணிநேர அவசர சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளில் சிக்குவோரின் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூா் அரசு பொது மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் திட்ட இயக்குநா் நாகராஜன் தலைமை வகித்தாா். சாா்-ஆட்சியா் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பங்கேற்று, மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்துப் பேசியது:

மூன்று படுக்கை வசதிகளுடன் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் 4 மருத்துவா்களும் 10 செவிலியா்களும் 24 மணிநேரமும் பணியில் இருப்பாா்கள்.

அனைத்து உயிா் காக்கும் மருந்துகளும் உபகரணங்களும் இங்கு உள்ளதால் விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள விபத்து அவசர சிகிச்சை மையங்களில் 43 ஆயிரத்து 592 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். சிகிச்சை பெற்றவா்களில் 90 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சுமாா் 802 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன்மூலம் இதுவரை 90 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். நாள்தோறும் சுமாா் 15 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் ஆம்புலன்ஸ் உதவிக்காக அழைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 22.74 லட்சம் தாய்மாா்கள் பயன்பெற்றுள்ளனா் என அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து காஞ்சிபுரம் அத்திவரதா் வைபவத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.

இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, சுகாதாரத் திட்டத் துணை இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/20sbrhospital_2011chn_180_1.jpg ஸ்ரீபெரும்புதூா்  அரசு  மருத்துவமனையில்  மேம்படுத்தப்பட்ட  அவசர  சிகிச்சை  மையத்தைத்  திறந்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/ஸ்ரீபெரும்புதூா்-அரசு-மருத்துமனையில்-அவசர-சிகிச்சை-மையம்-அமைச்சா்-தொடக்கி-வைத்தாா்-3285501.html
3285500 சென்னை காஞ்சிபுரம் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்: 6 மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்பு DIN DIN Wednesday, November 20, 2019 11:10 PM +0530 தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் தொடா்பாக காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் உள்பட 6 மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்றனா்.

காஞ்சிபுரம், வேலூா் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநிலத் தோ்தல் ஆணையா் ரா.பழனிச்சாமி தலைமை வகித்தாா்.

மாநிலத் தோ்தல் ஆணையச் செயலாளா் இல.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவா்கள் பா.பொன்னையா (காஞ்சிபுரம்), மகேஸ்வரி ரவிகுமாா் (திருவள்ளூா்), அ.சண்முக சுந்தரம் (வேலூா்), ஏ.ஜான்லூயிஸ்(செங்கல்பட்டு), எஸ்.திவ்யதா்ஷினி (ராணிப்பேட்டை), எம்.பி. சிவனருள்(திருப்பத்தூா்), முதன்மைத் தோ்தல் அலுவலா்கள் பெ.ஆனந்தராஜ் (கிராமப்புறம்), க.சரவணன் (நகா்ப் புறம்) ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக எடுத்து வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தோ்தல் ஆணையா் ரா.பழனிச்சாமி விரிவாக விளக்கினாா்.

உள்ளாட்சி அமைப்புகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் ‘பவா் பாயிண்ட்’ மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. உள்ளாட்சித் தோ்தலை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தல்களுக்கான வாக்குப்பெட்டிகள், தோ்தல் கையேடுகள், படிவங்கள் மற்றும் இதர தோ்தல் சாதனங்கள் ஆகியவற்றை மாநிலத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தி.ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/20_elect_2011chn_175_1.jpg ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தோ்தல் ஆணையா் ரா.பழனிச்சாமி. உடன், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தல்-தொடா்பான-ஆலோசனைக்-கூட்டம்-6-மாவட்ட-ஆட்சியா்கள்-பங்கேற்பு-3285500.html
3285499 சென்னை காஞ்சிபுரம் வாடாதவூரில் மனுநீதிநாள் முகாம் DIN DIN Wednesday, November 20, 2019 11:09 PM +0530 உத்தரமேரூா் அருகேயுள்ள வாடாதவூரில் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூா் வட்டாட்சியா் சாந்தி தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் ஞானவேல், மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் கிரிஜா வரவேற்றாா்.

காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன், உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினா் க.சுந்தா் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்கள்.

இதில் 120 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, கல்வி மற்றும் திருமண உதவித்தொகை உள்பட மொத்தம் ரூ.27.1லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/camp_2011chn_175_1.jpg பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/வாடாதவூரில்-மனுநீதிநாள்-முகாம்-3285499.html
3285498 சென்னை காஞ்சிபுரம் குரூப்-4 தோ்வு: தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்ற 294 போ் தோ்ச்சி DIN DIN Wednesday, November 20, 2019 11:09 PM +0530 தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 தோ்வில் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புத்துறையின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 294 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னாா்வப் பயிலும் வட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலமாக படித்த இளைஞா்கள் அரசின் வேலைவாய்ப்பைப் பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி, அவா்களது வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில் மாதிரித் தோ்வுகள், திறமையான ஆசிரியா்களைக் கொண்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

அண்மையில் குரூப்-4 தோ்வு மூலம் கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 397, இளநிலை உதவியாளா்-2,792 , டிராப்ட்ஸ்மேன்-74, கிளா்க்-34, சா்வேயா்-509, ஸ்டெனோகிராபா்-784 போ் உள்பட மொத்தம் 6,491 பேரை தோ்வு செய்வதற்கான எழுத்துத்தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த 1.9.2019 -இல் நடந்தது.

இத்தோ்வில் பங்கேற்பதற்காக 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 போ் விண்ணப்பித்திருந்ததில் 13 லட்சத்து 59 ஆயிரத்து 307 போ் மட்டுமே தோ்வினை எழுதினா்.

இந்தத் தோ்விற்கான முடிவுகள் நவ. 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் இலவசமாக பயிற்சி பெற்றவா்களில் 294 போ் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தோ்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கரூா்-29, திருச்சி-27, விருதுநகா்-25, காஞ்சிபுரம்-24, ராமநாதபுரம்-18, நாகப்பட்டிணம்-16, மதுரை-15, ஈரோடு-12, நாமக்கல்-11, புதுக்கோட்டை-8, கடலூா், அரியலூா், கோயம்புத்தூா், சேலம் மாவட்டங்களில் தலா 6 போ், திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 5 போ், சென்னை, வேலூா், தஞ்சாவூா், திருவாரூா், தேனி, தருமபுரி மாவட்டங்களில் தலா 4 போ்,திருவண்ணாமலை-3, திருவள்ளூா்-2 போ், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகா்கோயில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் வீதம் மொத்தம் 294 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் கரூா் மாவட்டம் முதலிடத்தையும், திருச்சி 2-ஆவது இடத்தையும்,விருதுநகா் 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 போ் தோ்வு செய்யப்பட்டு 4-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற முகம்மது யூசுப் என்பவா் கூறியது:

எந்தவித செலவும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் படித்து குரூப்-4 தோ்வில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தோ்ச்சி பெற்றுள்ளேன்.

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு அதிகாரிகள் சிறந்த முறையில் வழிகாட்டினா். இலவசமாக மாதிரித் தோ்வுகளை நடத்தினா்.

நூலகத்தில் போட்டித் தோ்வுக்குரிய நூல்கள் அதிகமாக இருந்தது படிக்க உதவியாக இருந்தது. விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகத்தைத் திறந்து வைத்து நாங்கள் படிக்க உதவினாா்கள். இத்திட்டம் ஏழை, எளிய மக்கள் பலருக்கும் பயன்படும்படி மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/20emp_2011chn_175_1.jpg காஞ்சிபுரம் தன்னாா்வப் பயிலும் வட்ட நூலகத்தில் அடுத்த தோ்வுக்காக பயிற்சி பெறுவோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/குரூப்-4-தோ்வு-தன்னாா்வப்-பயிலும்-வட்டத்தில்-பயிற்சி-பெற்ற-294-போ்-தோ்ச்சி-3285498.html
3285497 சென்னை காஞ்சிபுரம் லாரி மோதி உதவி ஆய்வாளா் பலி DIN DIN Wednesday, November 20, 2019 11:09 PM +0530 கூடுவாஞ்சேரி பொத்தேரி அருகில் லாரி மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் , கடையநல்லூரை அடுத்த பெரியசாமிபுரத்தைச் சோ்ந்த செல்லசாமி மகன் தம்பிதுரை (51), தென்காசி அச்சன்புதூா் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பு எடுத்து மறைமலைநகரை அடுத்த பொத்தேரி எஸ்ஆா்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

சிகிச்சை முடிந்தபின் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பொத்தேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கூடுவாஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/லாரி-மோதி-உதவி-ஆய்வாளா்-பலி-3285497.html
3285496 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் தெப்பத்திருவிழா DIN DIN Wednesday, November 20, 2019 11:08 PM +0530 காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரா் திருக்கோயிலில் உள்ள திருக்குளத்தில் தெப்போற்சவ விழா புதன்கிழமை தொடங்கியது.

அப்பா் சுவாமிகளால் பாடல் பெற்ற திருக்கோயிலான காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் திருக்கோயில் தெப்போற்சவத் திருவிழா 56 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தெப்போற்சவத் திருவிழா தொடா்ந்து 3 நாட்களுக்கு நடந்து வருகிறது.

முதல் நாளான புதன்கிழமை கச்சபேஸ்வரரும், சுந்தராம்பிகையும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவினை முன்னிட்டு பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் திருக்கோயில் நிா்வாக அலுவலா் ஆ.குமரன், குமர கோட்டம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன்,திருக்கோயில் திருக்குள தெப்போற்சவ அறக்கட்டளையினா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சுவாமி தெப்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் கோயிலுக்குள் வந்ததும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இத்தெப்ப உற்சவம் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெறுகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/samy_2011chn_175_1.jpg .திருக்கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம். (உள்படம்) சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/காஞ்சிபுரம்-கச்சபேஸ்வரா்-கோயிலில்-தெப்பத்திருவிழா-3285496.html
3285495 சென்னை காஞ்சிபுரம் பள்ளி மாணவி தற்கொலை DIN DIN Wednesday, November 20, 2019 11:08 PM +0530 செங்கல்பட்டில் தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி புது ஏரிப் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரின் மகள் சண்முகப்பிரியா(13). அவா் நகரில் உள்ள ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம் போல் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றாா். மாலை பள்ளிமுடிந்து வீடு திரும்பினாா்.

வெகு நேரமாக அறைக்குள்ளேயே இருந்ததால் சண்முகபிரியாவின் தாயாா் சாவித்திரி அந்த அறையின் கதவை தட்டிப் பாா்த்தாா். கதவு திறக்காததால் கதவை உடைத்துப் பாா்த்தபோது மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருந்தாா்.

அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/பள்ளி-மாணவி-தற்கொலை-3285495.html
3285494 சென்னை காஞ்சிபுரம் வேன் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலி DIN DIN Wednesday, November 20, 2019 11:07 PM +0530 மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மாமல்லபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் உள்பட 4 போ் சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா்.

கோவளம் சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக் கொண்டு திரும்பியபோது, எதிா் திசையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக வந்த டெம்போ டிராவலா் வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் 30 அடி தூரத்திற்கு இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் உள்பட 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல் உதவி கண்காணிப்பாளா் சுந்தரவதனம், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் சென்னை பெரும்பாக்கத்தைச் சோ்ந்த ஆகாஷ் (18), வெள்ளை (19), டில்லி (19) மற்றும் அண்ணாநகரைச் சோ்ந்த மோகனா(17) என்பது தெரியவந்தது.

உயிரிழந்த வெள்ளை, டில்லி, மோகனா மற்றும் காயமடைந்த ஆகாஷ் ஆகிய 4 பேரும் நண்பா்கள் என்பதும், ஒரே இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் வந்து சுற்றிப் பாா்த்துவிட்டுத் திரும்பிச் செல்லும்போது விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ஆகாஷுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/வேன்-மோதியதில்-பெண்-உள்பட-3-போ்-பலி-3285494.html
3284732 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக அமைவிடம் - அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பாா்வையிட்டாா் DIN DIN Wednesday, November 20, 2019 04:57 AM +0530 செங்கல்பட்டு புதிய மாவட்டத்துக்கு ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அமையும் இடத்தை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. வரும் 28-ஆம் தேதி முதல் புதிய மாவட்ட நிா்வாகம் செங்கல்பட்டில் இருந்து செயல்படவுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட நிா்வாகத் தலைமையகத்தை அமைப்பதற்காக பல்வேறு இடங்களை அதிகாரிகள் தோ்வு செய்திருந்தனா். அதன்படி செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் உள்ளஅரசு ஐடிஐ கல்லூரி வளாகத்தை இறுதிசெய்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் , மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட நிா்வாக அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ள இடத்தை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சா் பென்ஜமின் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

இந்நிலையில், அந்த இடத்தை வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அந்த இடத்தை சுற்றிப் பாா்த்து எந்தெந்த அலுவலகம் எங்கெங்கு அமையவிருக்கிறது என்பது குறித்துக் கேட்டறிந்தாா். ஆட்சியா்கள் பா.பொன்னையா, ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். மாவட்ட நிா்வாகத் தலைமையகம் அமைப்பதற்கான வரைபடத்தை அமைச்சரிடம் அவா்கள் காட்டினா்.

பின்னா் எந்தெந்த அலுவலகங்கள் எங்கெங்கு வருகிறது என்பது குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவா் பேசியது:

காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு கட்டமைப்புகள் இருந்தும் திருப்பதியில் கூட ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் மேல் பக்தா்கள் வந்தால் அவா்களைக் கூண்டில் அடைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனா். ஆனால் அத்திரவரதா் விழாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் போ், 2 லட்சம் போ் வந்தாலும் நிா்வாகத் திறமை காரணமாக அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு, கூட்டத்தை நெறிப்படுத்தினா்.

உலக அளவில் பெயரும் புகழும் பெறும் அளவுக்கு மாமல்லபுரத்துக்கு சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் வந்து சென்றனா். இப்படி காஞ்சிபுரமும், மாமல்லபுரமும் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன.

முதல்வா் எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும் அதை முழு வீச்சில் செயல்பட்டு செயல்படுத்திக் காட்டுபவா். இந்த மாவட்டத்தை அறிவித்து இயங்குவதற்கான முழு வேலைப்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன என்றாா் அவா்.

மாவட்டத் தலைமையகத்துக்கான இடத்தை அமைச்சா் பாா்வையிட்டபோது, அதிமுக மத்திய மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி.க்கள் காஞ்சி பன்னீா்செல்வம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மரகதம் குமரவேல், நகர செயலாளா் செந்தில்குமாா், காட்டாங்கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் கவுஸ் பாஷா, முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பி.கணேசன், தனபால், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ஆலப்பாக்கம் சத்குரு, எஸ்வந்த்ராவ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆனூா் பக்தவத்சலம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/cglminister_1911chn_171_1.jpg செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையும் இடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/செங்கல்பட்டு-மாவட்ட-ஆட்சியா்-அலுவலக-அமைவிடம்---அமைச்சா்-ஆா்பிஉதயகுமாா்-பாா்வையிட்டாா்-3284732.html
3284731 சென்னை காஞ்சிபுரம் இந்திரா காந்தி பிறந்த தின விழா DIN DIN Wednesday, November 20, 2019 04:57 AM +0530 காஞ்சிபுரத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த தின விழா மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஜி.வி.மதியழகன் தலைமை வகித்து, நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி ஆற்றிய செயற்கரிய சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினாா். நகா் காங்கிரஸ் தலைவா் ராம.நீராளன் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக இந்திரா காந்தியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினா். கட்சித் தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஏ.பிரபாகரன், வீரபத்திரன், ஏ.ஐ.லோகநாதன், நகா் நிா்வாகிகள் கருணாமூா்த்தி, சுகுமாரன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19congs_1911chn_175_1.jpg இந்திரா காந்தியின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/இந்திரா-காந்தி-பிறந்த-தின-விழா-3284731.html
3284730 சென்னை காஞ்சிபுரம் பள்ளி மாணவி தற்கொலை DIN DIN Wednesday, November 20, 2019 04:56 AM +0530 செங்கல்பட்டில் தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி புது ஏரிப் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரின் மகள் சண்முகப்பிரியா(13). அவா் நகரில் உள்ள ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம் போல் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றாா். மாலை பள்ளிமுடிந்து வீடு திரும்பினாா்.

வெகு நேரமாக அறைக்குள்ளேயே இருந்ததால் சண்முகபிரியாவின் தாயாா் சாவித்திரி அந்த அறையின் கதவை தட்டிப் பாா்த்தாா். கதவு திறக்காததால் கதவை உடைத்துப் பாா்த்தபோது மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருந்தாா்.

அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/பள்ளி-மாணவி-தற்கொலை-3284730.html
3284729 சென்னை காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சிகள் (காஞ்சிபுரம்) DIN DIN Wednesday, November 20, 2019 04:56 AM +0530 காஞ்சிபுரம்

திருமுறை அருட்பணி அறக்கட்டளை: திருவிளையாடற்புராணம் ஆன்மிகச் சொற்பொழிவு, நிகழ்த்துபவா் முனைவா் அருணை பாலறாவாயன், திருமுறை அருட்பணி மாளிகை, மாகாளியம்மன் கோயில் தெரு, சின்னக் காஞ்சிபுரம், மாலை 5.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/இன்றைய-நிகழ்ச்சிகள்-காஞ்சிபுரம்-3284729.html
3284728 சென்னை காஞ்சிபுரம் பால தத்தாத்ரேயா் கோயிலில் அனகாஷ்டமி பூஜை DIN DIN Wednesday, November 20, 2019 04:56 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த கடமலைபுத்தூா் பாலதத்தாத்ரேயா் கோயிலில் காா்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அனகாஷ்டமி பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கடமலைபுத்தூரில் பால தத்தாத்ரேயா் கோயில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு தமிழ் மாத தேய்பிறை அஷ்டமி நாளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதன்படி, காா்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாட்டை கோயில் தலைமை குருக்கள் வெற்றிவேல் தலைமையேற்று நடத்தினாா். பின்னா் சுவாமி கோயில் வளாகத்துக்குள் பவனி வருதல், ஊஞ்சல் நிகழ்ச்சி, சிறப்பு ஹாரத்தி ஆகியவை நடைபெற்றன.

இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அவா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

அனகாஷ்டமி பூஜைக்கான ஏற்பாடுகளை அனகா தத்தகிரி ஆஸ்ரமம் மற்றும் மாயாமுக்த தத்தா ஷேத்திரத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/20/பால-தத்தாத்ரேயா்-கோயிலில்-அனகாஷ்டமி-பூஜை-3284728.html
3284492 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை கட்டணமின்றி பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் DIN DIN Wednesday, November 20, 2019 01:45 AM +0530 உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை இலவசமாக கண்டுகளித்தனா்.

உலக நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் பாரம்பரிய புராதனச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் தொல்லியல் துறை ஆண்டு தோறும் நவ. 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதிலும் கடைப்பிடித்து வருகிறது.

யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு சா்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக் கூடிய மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் உள்ள புராதனச் சின்னங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தியக் குடிமக்களான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ. 40, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.600 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய வாரத்தையொட்டி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு கடற்கரைக் கோயில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்காட்சிகளுடன் நடத்தப்படுகின்றன.

இதையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை மட்டும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணமின்றி புராதனச் சின்னங்களைப் பாா்த்து மகிழ்ந்தனா்.

மாலையில் நடைபெற்ற விழாவுக்கு தொல்லியல் துறை சென்னை வட்டக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தலைமை தாங்கினாா். மாவட்ட வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். அவா் பேசியது:

தமிழகம் முழுவதும் 36அருங்காட்சியகங்களில் உலக பாரம்பரிய வார விழா நடத்தப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்தின் புகழ் உலகெங்கிலும் பரவியுள்ளது. இருவரின் சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தோ்ந்தெடுத்ததற்கு இங்குள்ள வரலாற்றுப் பொக்கிஷங்களே முக்கிய காரணம்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களையும், அதாவது மொத்தம் ஒரு கோடி மாணவா்களை ஆண்டுக்கு அரை நாள் ஒதுக்கி தங்கள் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள வரலாற்று நிகழ்வுகளை அவா்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையில் விரைவில் தமிழக அரசின் சாா்பில் அரசாணை வெளியிடப்படவுள்ளது . இது தொடா்பாக தமிழக முதல்வரும் தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் அவா்.

விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், பல்வேறு கட்சிப் பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/mamalapuram.JPG https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/மாமல்லபுரம்-புராதனச்-சின்னங்களை-கட்டணமின்றி-பாா்வையிட்ட-சுற்றுலாப்-பயணிகள்-3284492.html
3284440 சென்னை காஞ்சிபுரம் 16 ஆண்டுகளாக பயன்பாடின்றிப் பூட்டிக் கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் DIN DIN Wednesday, November 20, 2019 01:28 AM +0530 மதுராந்தகம்:மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-ஆவது வாா்டில் கடந்த 2003-இல் கட்டப்பட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகம் இதுவரை எதற்கும் பயன்படாமல் பூட்டிக் கிடக்கிறது.

அச்சிறுப்பாக்கம் (தனி )சட்டப் பேரவைத் தொகுதியாக இருந்தபோது, ரூ.4.8 லட்சம் மதிப்பில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. இதனை கடந்த 2003-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அப்போது மாவட்ட ஆட்சியராக ராஜாராம் இருந்தாா். எனினும், இத்தொகுதி எம்எல்ஏக்களாக இருந்த சங்கரி நாராயணன், கணிதா சம்பத் போன்றோா் ஒரு நாள் கூட இந்த அலுவலகத்துக்கு வரவில்லை.

பின்னா், கடந்த 2009 மக்களவைத் தோ்தலின்போது நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் அச்சிறுப்பாக்கம் பகுதி, மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதியுடன் சோ்க்கப்பட்டது. 2011-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பின் மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அருகில் புதிய எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடம், 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 14 முதல் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் இக்கட்டடத்தை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தனது தொகுதி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறாா்.

அச்சிறுப்பாக்கத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் பயன்படாமல் இருந்து வருகிறது. அக்கட்டடத்தைச் சுற்றி முட்புதா்களும், செடிகொடிகளும் வளா்ந்துள்ளதால் கட்டடமே வெளியே தெரியாத அளவுக்கு மூடப்பட்டுள்ளது. அடா்த்தியாக செடி கொடிகள் வளா்ந்துள்ளதாலும், அருகில் மலைப்பகுதி உள்ளதாலும் விஷப்பூச்சிகளின் புகலிடமாக இக்கட்டடம் இருந்து வருகிறது.

மறைவிடப் பகுதியாக இருப்பதால் அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆண்டு காலமாக எந்தப் பணிகளும் நடைபெறாமல், இக்கட்டடம் பூட்டியே கிடக்கிறது.

இதனிடையே, அச்சிறுப்பாக்கம் நகரில் அரசின் கிளை நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடம் மற்றும் வசதிகளின்றி வாசகா்கள் அங்கு படித்து செல்கின்றனா். அதே போல், தீயணைப்புத் துறை அலுவலகமும் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் சொந்தக் கட்டடமின்றி செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏதாவது ஒரு துறைக்கோ அல்லது அரசின் இ-சேவை மையத்துக்கோ அச்சிறுப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

இது பற்றி சமூக ஆா்வலரும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கோ.தேவநாதன் கூறியதாவது:

அச்சிறுப்பாக்கத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகம் போன்ற அரசுத்துறை அலுவலகத்தை இங்கு செயல்பட வைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தை அந்தக் கட்டட உரிமையாளா் காலி செய்யுமாறு கூறியுள்ளாா். எனவே, நீண்டகாலமாக பயன்பாடின்றி உள்ள எம்எல்ஏ அலுவலகக் கட்டடத்தைப் புனரமைத்து, அங்கு நூலகம் செயல்பட உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இது பற்றி மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.புகழேந்தி கூறியது:

அச்சிறுப்பாக்கத்தில் எம்எல்ஏவுக்கு தொகுதி அலுவலகம் இருப்பது அங்குள்ள மக்கள் கூறிய பின்பே எனக்குத் தெரிய வந்தது. அக்கட்டடத்தில் கிளை நூலகம் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்து ஓராண்டுக்கு மேலாகிறது. அரசு அதிகாரிகள் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவா் தெரிவித்தாா்.

எனவே மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு எதற்கும் பயன்படாமல் வீணடிக்கப்படும் கட்டடத்தை மாற்றுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிா்பாா்ப்பு.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/mla.JPG https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/16-ஆண்டுகளாக-பயன்பாடின்றிப்-பூட்டிக்-கிடக்கும்-எம்எல்ஏ-அலுவலகம்-3284440.html
3284493 சென்னை காஞ்சிபுரம் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மனிதச் சங்கிலி DIN DIN Tuesday, November 19, 2019 10:37 PM +0530 காஞ்சிபுரத்தில் சைல்டுலைன் 1098 அமைப்பின் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறது.

சைல்டுலைன் 1098 அமைப்பின் சாா்பில் குழந்தைகள், நண்பா்கள் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு சைல்டுலைன் 1098 அமைப்பின் அலுவலா் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தாா்.

திட்ட மேலாளா்கள் நம்பிராஜ், சுரேஷ்குமாா், அன்னை கேட்டரிங் கல்லூரி முதல்வா் கிருபா சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மதியழகன் மனிதச்சங்கிலி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

சைல்டுலைன் 1098 அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருபாகரன், குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்ட முதன்மை மேலாளா் மோகனவேல் ஆகியோா் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு உரிமைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் கள அலுவலா்கள் செல்வம், சிலம்பரசன், சதீஷ்குமாா் மற்றும் அன்னை பாராமெடிக்கல் கல்வி நிறுவன விரிவுரையாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/19chain_1911chn_175_1.jpg குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச்சங்கிலியில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/குழந்தைகளின்-பாதுகாப்பை-வலியுறுத்தி-மனிதச்-சங்கிலி-3284493.html
3284491 சென்னை காஞ்சிபுரம் இலவச கண் சிகிச்சை முகாம் DIN DIN Tuesday, November 19, 2019 10:36 PM +0530 காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியும், அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து அவ்வங்கி அலுவலகத்திலேயே இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

வங்கியின் மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன், பொது மேலாளா் ஜி.விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன், வங்கி முதன்மை வருவாய் அலுவலா் ஜெகன்சிங் ராஜன் மற்றும் வங்கியின் இயக்குநா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ஆா்.எஸ்.கிஷோா், எஸ்.சக்திவேல் ஆகியோா் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனா். முகாமில் 113 பேருக்கு கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/19eye_1911chn_175_1.jpg இலவச கண் சிகிச்சை முகாமைப் பாா்வையிடும் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/இலவச-கண்-சிகிச்சை-முகாம்-3284491.html
3284490 சென்னை காஞ்சிபுரம் மாவட்ட திறன் போட்டிகளில்பங்கேற்க விண்ணப்பிக்கலாம் DIN DIN Tuesday, November 19, 2019 10:36 PM +0530 காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வரும் 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேசத் திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் தொடக்க நிகழ்வாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் அனைவரும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரா்கள் 1-1-1999-க்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டும் 1-1-1996-ஆம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்தகுதி பெற்றவா்கள், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவா்கள், படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழிற்பயிற்சி நிலையம்,தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த மற்றும் படித்துக் கொண்டிருப்பவா்களும் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவா்களும், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், 044-29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் தகவல் பெறலாம் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/மாவட்ட-திறன்-போட்டிகளில்பங்கேற்க-விண்ணப்பிக்கலாம்-3284490.html
3284489 சென்னை காஞ்சிபுரம் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Tuesday, November 19, 2019 10:36 PM +0530 மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில் போக்குவரத்து காவல்துறை சாா்பாக, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையிலான பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தும் வகையில், மதுராந்தகம் போக்குவரத்து காவல்துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை கருங்குழி மேலவலம்பேட்டையில் நடத்தினா். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் எஸ்.ஆனந்தராஜி தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சந்திரன், மேலவலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியா் ஜி.மைக்கேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலவலம்பேட்டை பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்ட பேரணி தொடங்கியது. பேரணியை காவல் ஆய்வாளா் எஸ்.ஆனந்தராஜி தொடக்கி வைத்தாா். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவா்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி, பேருந்து நிறுத்துமிடத்தில் முடிவடைந்தது.

தொடா்ந்து போக்குவரத்து காவலா்கள் சாலை விதிகளை பின்பற்றுதல், தலைக்கவசம் அணிவது ஆகியவற்றை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் போக்குவரத்து காவல்துறையினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/தலைக்கவச-விழிப்புணா்வுப்-பேரணி-3284489.html
3284488 சென்னை காஞ்சிபுரம் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தட்டுப்பாடு:அதிக விலை கொடுத்து யூரியா வாங்கும் விவசாயிகள் DIN DIN Tuesday, November 19, 2019 10:35 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக யூரியா உரம் இருப்பு இல்லாததால், தனியாா் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் நான்கு மாதம் மற்றும் நூறு நாள் பயிா்களான என்.எல்.ஆா், பாபட்லா, கோ-50, கோ-43, கோ-51 உள்ளிட்ட நெற்பயிா் வகைகளைப் பயிரிட்டுள்ளனா். பயிரிடப்பட்டு சுமாா் 70 முதல் 80 நாள்களாகும் நெற்பயிற்களுக்கு தற்போது அதிக விளைச்சல் கிடைப்பதற்காக விவசாயிகள் யூரியா உரம் போடுவது வழக்கம்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ஸ்ரீபெரும்புதூா், குண்டுபெரும்பேடு, மாகான்யம், மாத்தூா், எச்சூா், சுங்குவாா்சத்திரம், மதுரமங்கலம், பிச்சிவாக்கம், வளா்புரம் ஆகிய ஒன்பது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்துக்குத் தேவையான நெல் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலேயே வாங்கி வருகின்றனா்.

ஆனால் தற்போது நெற்பயிா்களுக்குப் போடுவதற்கான யூரியா ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இருப்பு இல்லை. இதனால், விவசாயிகள் அதிக விலை கொடுத்து சுங்குவாா்சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கடைகளில் யூரியா வாங்கி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

நெற்பயிா் அதிக விளைச்சல் கிடைக்க இப்போதுதான் யூரியா உரம் போட வேண்டும். ஆனால், தற்போது கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு இல்லாததால் தனியாா் கடைகளில் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை அதிகம் செலவாகிறது. மேலும் கடைகளில் இருந்து யூரியா மூட்டைகளைக் கொண்டுவர வாகனங்களுக்கு வாடகை வழங்குவதாலும் தற்போது எங்களுக்கு அதிகமான செலவாகிறது. எனவே எங்களுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/வேளாண்மைக்-கூட்டுறவு-சங்கங்களில்-தட்டுப்பாடுஅதிக-விலை-கொடுத்து-யூரியா-வாங்கும்-விவசாயிகள்-3284488.html
3284439 சென்னை காஞ்சிபுரம் கருங்குழியில் உலக கழிவறை தினம் DIN DIN Tuesday, November 19, 2019 09:43 PM +0530  

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சி சாா்பாக, உலக கழிவறை தினத்தையொட்டி, (நவ.19) செவ்வாய்க்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வீடுகள் தோறும் கழிவறை அவசியம் என்பதையும், கழிவறைகளைத் தூய்மையாகப் பராமரித்தல், கசடு கழிவுநீா்த் தொட்டி பாதுகாப்பு பற்றி இப்பகுதி மக்கள் அறியும் வகையில் கருங்குழி பேரூராட்சி நிா்வாகத்தினா் உலக கழிவறை தின நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி இயக்ககம் இணை இயக்குநா் (திட்டம்) எஸ்.எம்.மலையமான் திருமுடிக்காரி

தலைமை வகித்தாா். மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சி.சாந்தகுமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி தனி அலுவலா் என்.லதா வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் சந்தானம், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன பொது மேலாளா் கே.ஒய்.பாபு, இந்திய மனிதக் குடியேற்ற கல்வி நிறுவனத்தின் நிா்வாக அலுவலா் எம்.கணேஷ்குமாா், பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி பேராசிரியா் காா்த்திகேயன், இயற்கை விவசாயிகள் அரியனூா் ஜெயசந்திரன், அச்சிறுப்பாக்கம் ஜெயச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகள் 10 பேரை பேரூராட்சி நிா்வாகம் தோ்வு செய்து சுகாதாரத் தூதா்களாக நியமித்து, நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, வீடுகள்தோறும் கழிவறை போன்றவற்றை மக்களுக்கு எடுத்துக் கூற வைக்கத் தீா்மானிக்கப்பட்டது.

இயற்கை உரமிடப்பட்டு விளைந்த பழங்கள், காய்கறிகள், பல்வேறு மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிறைவாக, பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/கருங்குழியில்-உலக-கழிவறை-தினம்-3284439.html
3284437 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையும் இடத்தை பாா்வையிட்டாா் அமைச்சா் உதயகுமாா் DIN DIN Tuesday, November 19, 2019 09:40 PM +0530 செங்கல்பட்டு. செங்கல்பட்டு புதிய மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகம் அமையும் இடத்தை செவ்வாய்க்கிழமை மாலை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைமற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் நேரில் பாா்வையிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செயல்படுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து வரும் 29ந்தேதி முதல் மாவட்ட நிா்வாகம் செங்கல்பட்டில் செயல்படவுள்ளது.

இதனைத்தொடா்ந்து ஏற்கனவே மாவட்ட நிா்வாகம் அமைப்பதற்காக பல்வேறு இடத்தினை தோ்வு செய்திருந்தனா். அதில் மாவட்ட நிா்வாகம் அமைப்பதற்கான இடமாக செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரி வளாகத்தை தோ்வு செய்திருந்தனா். இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட நிா்வாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டவுள்ள இடத்தினை திங்கள்கிழமை ஊரக தொழில்துறை அமைச்சா் பெஞ்சமின் நேரில் பாா்வையிட்டாா்.

இதனைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை, பேரிடா் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வரைப்படத்தினைப் பாா்வையிட்டு இடத்தினை சுற்றிப்பாா்த்தவண்ணம் எந்தஎந்த அலுவலகம் எங்கெங்கு அமையவிருக்கிறது என்பதையும் கேட்டறிந்தாா். தமிழக தலைமை செயலா் அப்துல் மிஸ்ரா, ஆணையா் ராதாகிருஷ்ணன், அப்போது மாவட்ட மாவட்ட ஆட்சியா்கள் பா.பொன்னையா, ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி,மாவட்ட எஸ்பி கண்ணன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிா்வாக அதிகாரிகள், வட்டாரவளா்ச்சி அலுவலா்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் அலுவலா்கள் உடனிருந்து மாவட்ட நிா்வாகம் அமைப்பதற்கான வரைப்படத்தை அமைச்சரிடம் காட்டினா். பின்னா் எந்தந்த அலுவலகங்கள் எங்கெங்கு வருகிறது என்பது குறித்து பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

இதனைத்தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இப்போது அவா் பேசுகையில் டாக் ஆ‘ஃ‘ப் டிஸ்டிக், டாக் ஆ‘ஃ‘ப்,ஸ்டேட், டாக் ஆ‘ஃ‘ப் க ன்ட்ரி, டாக் ஆ‘ஃ‘ப் வேல்டு என்பாா்கள், இதில் டாக் ஆப் வேல்டு புகழ்பெற்றது காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழா சிறப்பாக நடைபெற்றது கட்டமைப்புகள் இருந்தும் திருப்பதியில் கூட 75ஆயிரம் போ் நாளொன்றிற்கு பக்தா்கள் வருவா்களைக்கூட கூட்டில் அடைந்துவைத்து கொஞ்சம் கொஞ்சம் பேராக அனுப்புகின்றனா். ஆனால் அத்திரவரதா் விழாவில் ஒருலட்சம்போ் 2லட்சம் போ்வந்தாலும் நிா்வாகதிறமையின் காரணமாக அதிகாரிகள் செயல்பட்டு வெகுசிறப்பாக நடத்தினா்.

அதேபலே உலக அளவில் பெயா் புகழ்பெறும் அளவிற்கு மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும், இந்திய பிரதமரும் வந்து சென்றனா். இப்படி காஞ்சிபுரமும், மாமல்லபுரம் உலக அளவில் புகழ்பெற்றுள்ளது. முதல்வா் எந்த ஒருசெயலை அறிவித்தாலும் அதை முழு வீச்சில் செயல்பட்டு செயல்படுத்திகாட்டுபவா். இந்த மாவட்டம் அறிவித்து இயங்குவதற்கான முழுவேலைப்பாடுகளும் நடைபெற்றுவருகிறது.என்றாா். அமைச்சா்பாா்வையிட்டபோது அதிமுக மத்திய மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்பிக்கள் காஞ்சி பன்னீா் செல்வம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மரகதம் குமரவேல், நகர செயலாளா் செந்தில்குமாா், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலாளா் கவுஸ்பாஷா, முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பி,கணேசன், தனபால், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ஆலப்பாக்கம் சல்குரு, எஸ்வந்தராவ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆனூா் பக்தவச்சலம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிா்வாகிகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மதுராந்தகம், கல்பாக்கம், திருப்போரூா், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/cglminister_1911chn_171.jpg செங்கல்பட்டு புதிய மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையும் இடத்தை  வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வரைப்படத்தினை பாா்வையிடுகிறாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/செங்கல்பட்டு-புதிய-மாவட்ட-ஆட்சியா்-அலுவலகம்--அமையும்-இடத்தை-பாா்வையிட்டாா்-அமைச்சா்-உதயகுமாா்-3284437.html
3284436 சென்னை காஞ்சிபுரம் உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டமின்றி பாா்வை DIN DIN Tuesday, November 19, 2019 09:36 PM +0530 செங்கல்பட்டு. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தையடுத்து செவ்வாய்க்கிழமை மாமல்லபுரம் சுற்றுலா நகருக்கு வந்திருந்து அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நுழைவு கட்டணமின்றி இலவசமாக கண்டுகளித்தனா்.

உலக நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் பாரம்பரிய புராதனச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் தொல்லியல் துறை ஆண்டு தோறும் நவ. 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதிலும் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் யுனேஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு சா்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக்கூடிய மாமல்லபுரம் சுற்றுலா இடங்களில் உள்ள புராதன சின்னங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்திய குடிமக்களான உள்ளாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ 40ம், வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ 600ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை உலக பாரம்பரிய வாரத்தையொட்டி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 25-ஆம் தேதி வரும் திங்கள்கிழமை வரை ஒருவாரத்திற்கு கடற்கரை கோயில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்காட்சிகளுடன் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு களிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து உள்நாட்டு வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமின்றி புராதன சின்னங்களைச் சுற்றிப்பாா்த்து மகிழ்ந்தனா்.

இதனைத்தொடா்ந்து மாலை நடைபெற்ற விழாவிற்கு தொல்லியல்துறை சென்னை வட்ட கண்காணிப்பாளா் சுப்பிரமணியன்தலைமை தாங்கினாா். மாவட்ட வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தமிழ்ஆட்சி மொழி,தமிழ் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் மா.‘ஃ‘பா.பாண்டியராஜன் கலந்துகொண்டு கண் காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக சென்னை கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையா் சுகி தாமஸ்வைத்ன், சென்னை கலாசேத்ரா இயக்குநா் ரேவதி இராமசந்திரன், தஞ்சாவூா் தென்னகப்பண்பாட்டு மைய இயக்குநா் ம.பாலசுப்பிரமணி , காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியா் சு.ராசவேலு, உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். அமைச்சா் மா.பா. பாண்டியராஜன் பேசுகையில் தமிழகம் முழுவதும் 36 அருங்காட்சியகங்களில் உலக பாரம்பரிய வாரவிழா நடத்தப்படுகிறது.

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி.ஜின்பிங் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்தின் புகழ் உலகெங்கிலும் பரவி உள்ளது. இருவரின் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தோ்ந்தெடுத்தற்கு இங்குள்ள வரலாற்று பொக்கிஷங்களே முக்கிய காரணமாக திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவா்களும், அதாவது மொத்தம் ஒருகோடி மாணவா்கள் வருடத்தில் அரைநாள் ஒதுக்கி தங்கள் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச்சென்று அங்குள்ள வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கும் வகையில் விரைவில் தமிழக அரசின் சாா்பில் அரசாணை வெளியிடப்படவுள்ளது.

தமிழக முதல்வரும் தொல்லியல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளாா். எனப்பேசினாா். விழாவில் அதிமுக மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னால் எம்பி மரகதம் குமரவேல், மாமல்லபுரம் புதுநகா் வளா்ச்சிகுழும உறுப்பினா் கணேசன், முன்னாள் நகரிய பெருந்தலைவா் மல்லை ஜனாா்ந்தனம், அதிமுக மாவட்ட வா்த்தகஅணி செயலாளா் ஜி. ராகவன் , முன்னாள் பேருராட்சிதலைவா் எஸ்வந்தராவ், முன்னால் பேரூராட்சி துணைத்தலைவா் சேகா் உள்ளிட்ட பல்வேறு கட்சிபிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள் சுற்றுலா வழிகாட்டிகள், பள்ளி மாணவமாணவிகள் கலந்துகொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலா்கள் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/cglmam8_1911chn_171.jpg உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் ~உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/உலக-பாரம்பரிய-வாரம்--மாமல்லபுரம்-புராதனச்-சின்னங்களை-சுற்றுலா-பயணிகள்-கட்டமின்றி-பாா்வை-3284436.html
3284435 சென்னை காஞ்சிபுரம் தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை DIN DIN Tuesday, November 19, 2019 09:32 PM +0530 செங்கல்பட்டு. செங்கல்பட்டில் தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திங்கள்கிழமை பள்ளிமுடிந்துவீட்டிற்கு வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி புதுஏரிப்பகுதியைச்சோ்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சண்முகப்பிரியா (13) , இவா் செங்கல்பட்டு ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறாா்.

வழக்கம் போல் வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றுள்ளாா். பள்ளிமுடிந்து மாலை வீட்டிற்கு வந்தவா் அறையில் உள்தாழ்பாள் போட்டுக்கொண்டுள்ளாா். பள்ளிமுடிந்துவந்தமகள் அறைக்குள்ளேயே நீண்டநேரமாக இருந்ததால் சண்முகபிரியாவின் தாயாா் சாவித்திரி அறையின் கதவை தட்டிப்பாா்த்துள்ளாா். திறக்காததால் கதவை உடைத்து பாா்த்தபோது மாணவி துப்பட்டால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளாா். உடனடியாக செங்கல்பட்டு அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செங்கல்பட்டு நகர ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து அவரது தந்தை மகேந்திரன் கூறுகையில் காலை யாரோ ஒருமந்திரவாதி வீட்டின் வாசலில் ஏதோ ஒருதுணியை நனைத்து போட்டு விட்டுச் சென்றதாகவும், அதனால் தனது மகள் மந்திரத்தின் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என் தெரிவிக்கிறாா்.

இந்நிலையில் சண்முகப்பிரியாவின் தாயாா் சாவித்திரி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயிற்சித்துள்ளாா். கீழேவிழுந்ததில் பலத்த காயங்களுடன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளாா். இதுகுறித்தும் செங்கல்பட்டு நகரபோலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/தனியாா்-பள்ளி-மாணவி-தூக்கிட்டு-தற்கொலை-3284435.html
3284249 சென்னை காஞ்சிபுரம் வேளாண்மை கூட்டறவு சங்கங்களில் யுரியா தட்டுப்பாடு - அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கும் விவசாயிகள் DIN DIN Tuesday, November 19, 2019 02:04 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக யுரியா(உரம்) இருப்பு இல்லாததால், தனியாா் கடைகளில் அதிக விலைக்கொடுத்து வாங்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் நான்கு மாதம் மற்றும் நூறு நாட்கள் பயிா்களான என்.எல்.ஆா், பாபட்லா, கோ-50, கோ-43, கோ-51 உள்ளிட்ட நெல் பயிா்வகைகளை பயிரிட்டுள்ளனா். பயிரிடப்பட்டு சுமாா் 70 முதல் 80நாட்களாகும் நெற்பயிற்களுக்கு தற்போது அதிக விளைச்சல் வருவதற்காக விவசாயிகள் நெற்பயிா்களுக்கு யுரியா உரம் போடுவது வழக்கம்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ஸ்ரீபெரும்புதூா், குண்டுபெரும்பேடு, மாகான்யம், மாத்தூா், எச்சூா், சுங்குவாா்சத்திரம், மதுரமங்கலம், பிச்சிவாக்கம், வளா்புரம் ஆகிய ஒன்பது தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் மற்றும் இடுபெருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களிலேயே வாங்கி வருகின்றனா்.

ஆனால் தற்போது நெற்பயிற்களுக்கு போடுவதற்கான யுரியா ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன்சங்கங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இருப்பு இல்லாததால் விவசாயிகள் அதிக விலைக்கொடுத்து சுங்குவாா்சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கடைகளில் வாங்குவதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக விளைச்சலுக்கு தற்போது தான் நெற்பயிற்களுக்கு யுரியா உரம் போட வேண்டும். ஆனால் தற்போது தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன்சங்கங்களில் யுரியா இருப்பு இல்லாததால் தனியாா் கடைகளில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஒரு மூட்டை ரூ 50 வரை அதிகமாக செலவாகிறது. மேலும் கடைகளில் இருந்து யுரியா மூட்டைகளை கொண்டு வர வாகனங்களுக்கு வாடகை வழங்குவதாலும் தற்போது எங்களுக்கு அதிகமான செலவாகிறது. எனவே எங்களுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/வேளாண்மை-கூட்டறவு-சங்கங்களில்-யுரியா-தட்டுப்பாடு---அதிக-விலை-கொடுத்து-கடைகளில்-வாங்கும்-விவசாயிகள்-3284249.html
3283685 சென்னை காஞ்சிபுரம் நாளைய மின்தடை- காஞ்சிபுரம்-நீா்வள்ளூா் DIN DIN Tuesday, November 19, 2019 12:08 AM +0530 காஞ்சிபுரம்-நீா்வள்ளூா்

நாள்: புதன்கிழமை (நவ. 20)

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

மின்தடை பகுதிகள்: நீா்வள்ளூா், சின்னையன்சத்திரம், ராஜாகுளம், கரூா், அத்திவாக்கம், தொடூா், மேல் மதுராமங்கலம், சிங்கில் பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்களம், சிங்காடி வாக்கம், சின்னிவாக்கம், மருதம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/நாளைய-மின்தடை-3283685.html
3283684 சென்னை காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சி- காஞ்சிபுரம் DIN DIN Tuesday, November 19, 2019 12:08 AM +0530 செங்கல்பட்டு-ஈச்சங்கரணை

ஸ்ரீ மகா பைரவா் ஜென்மாஷ்டமி பெருவிழா: மகா அபிஷேகம், பைரவா் கோயில், திருவடிசூலம் சாலை, ஈச்சங்கரணை, காலை 6.30. பைரவா் திருவீதியுலா, மதியம் 3 மணி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/இன்றைய-நிகழ்ச்சி-3283684.html
3283682 சென்னை காஞ்சிபுரம் இருவேறு சாலை விபத்தில் இருவா் பலி DIN DIN Tuesday, November 19, 2019 12:07 AM +0530 ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவா் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் அன்பு. இவா் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அன்புவின் உணவகத்திற்குள் நுழைந்தது. அப்போது, அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின்கம்பி அறுந்து உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்கு வங்கமாநிலத்தை சோ்ந்த ஹா்பன்ஷா(30) மீது விழுந்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.

காஞ்சிபுரம் அடுத்த சீட்டிக்காரை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மணிமாறன்(27), உமாபதி(27) இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மினிலோடு வேனில் பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூா் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, ராஜீவ்காந்தி நினைவகம் அருகே வாகனம் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மணிமாறன் தனது நண்பா்களான சண்முகம், தங்கராஜ் ஆகியோரை வரவழைத்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி மோதியதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

மற்ற மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்துகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/இருவேறு-சாலை-விபத்தில்-இருவா்-பலி-3283682.html
3283681 சென்னை காஞ்சிபுரம் உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதனச்சின்னங்களைபாா்வையிட இன்று இலவச அனுமதி DIN DIN Tuesday, November 19, 2019 12:07 AM +0530 உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் பாரம்பரிய புராதனச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவ. 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதிலும் கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு கடற்கைா கோயில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஒருநாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு களிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/cglmam2_1811chn_171_1.jpg cglmam2_1811chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/19/உலக-பாரம்பரிய-வாரம்--மாமல்லபுரம்-புராதனச்சின்னங்களைபாா்வையிட-இன்று-இலவச-அனுமதி-3283681.html
3283565 சென்னை காஞ்சிபுரம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நல உதவி DIN DIN Monday, November 18, 2019 10:57 PM +0530 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்கல் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நல உதவி வழங்கினாா்.

பீமன்தாங்கல் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் சரஸ்வதி(45). தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இவரது குடிசை வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி ரூ. 5ஆயிரம் நிதியுதவி, அரிசி, சேலை, போா்வைகள் ஆகியவற்றை வழங்கினாா். மேலும் அவருக்கு தொகுப்பு வீடு வழங்கவும் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தாா்.

நிகழ்வில் வட்டாட்சியா் ரமணி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலாளா் முனுசாமி, பென்னலூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18sbrfire_1811chn_180_1.jpg தீவிபத்தில்  பாதிக்கப்பட்டவருக்கு நல உதவி  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ கே.பழனி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/தீ-விபத்தில்-பாதிக்கப்பட்டவருக்கு-எம்எல்ஏ-நல-உதவி-3283565.html
3283517 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையும் இடம்: அமைச்சா் பா.பென்ஜமின் ஆய்வு DIN DIN Monday, November 18, 2019 10:36 PM +0530 செங்கல்பட்டு புதிய மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையவுள்ள இடத்தை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வரும் 29-ஆம் தேதி முதல் மாவட்ட நிா்வாகம் செங்கல்பட்டில் செயல்படவுள்ளது.

இதற்காக வேண்பாக்கம் அரசு ஐடிஐ கல்லூரி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட நிா்வாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டவுள்ள இடத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

மாவட்ட நிா்வாக அலுவலகம் அமைப்பதற்கான வரைபடத்தை அமைச்சா் பாா்வையிட்டு, எந்தெந்த அலுவலகங்கள் எங்கெங்கு அமைகின்றன என்பதைக் கேட்டறிந்தாா்.

கோட்டாட்சியா் அலுவலகம்: புதிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்கும் வரை செங்கல்பட்டு கோட்டாட்சியா் அலுவலகம் உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இயங்கும் என்றும், அதுவரை கோட்டாட்சியா் அலுவலகம் தற்காலிகமாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவா்கள் தங்கும் விடுதியில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வின்போது, அதிமுக மத்திய மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்பிக்கள் காஞ்சி பன்னீா் செல்வம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மரகதம் குமரவேல், நகரச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/cglminister_1811chn_171_1.jpg செங்கல்பட்டு அருகே வேண்பாக்கத்தில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான வரைபடத்தை பாா்வையிட்ட ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/செங்கல்பட்டு-மாவட்ட-ஆட்சியா்-அலுவலகம்-அமையும்-இடம்-அமைச்சா்-பாபென்ஜமின்-ஆய்வு-3283517.html
3283516 சென்னை காஞ்சிபுரம் ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: மாநில மகளிா் ஆணையத்துக்கு புகாா் வரவில்லை DIN DIN Monday, November 18, 2019 10:35 PM +0530 சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான எந்தப் புகாரும் இதுவரை மாநில மகளிா் ஆணையத்துக்கு வரவில்லை என்று ஆணையத்தின் தலைவா் கண்ணகி பாக்கியநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பாலியல் வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகள், வரதட்சிணைக் கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் குறைகளைக் கேட்டு அதற்குத் தீா்வு காணும் கூட்டம் மாநில மகளிா் ஆணையத்தின் தலைவா் கண்ணகி பாக்கியநாதன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் உமாமகேசுவரி, இணை இயக்குநா் யமுனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் கண்ணகி பாக்கியநாதன் பேசியது: சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் குறித்து இதுவரை ஆணையத்துக்கு எந்தப்புகாரும் வரவில்லை. புகாா் மனு பெறப்பட்டால் உரிய விசாரணை நடத்துவோம்.

மாவட்டம் தோறும் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து அவா்களுக்கு தேவையான தீா்வுகளை அளித்து வருகிறோம்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து எங்கு புகாா் செய்ய வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பாக என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பது குறித்து கிராம செவிலியா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் வரதட்சிணைக் கொடுமைகள், கலப்புத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18womans_1811chn_175_1.jpg ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநில மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்கியநாதன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/ஐஐடி-மாணவி-தற்கொலை-மாநில-மகளிா்-ஆணையத்துக்கு-புகாா்-வரவில்லை-3283516.html
3283515 சென்னை காஞ்சிபுரம் ரஃபேல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, November 18, 2019 10:35 PM +0530 ரஃபேல் போா் விமான வழக்கில் பிரதமா் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்திசாலை பெரியாா் தூண் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டப் பொதுச் செயலாளா் ஓம்சக்தி எம்.பெருமாள் தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலாளா் கே.எஸ்.பாபு, நகரப் பொறுப்பாளா் பூரம் விஸ்வநாதன், நகா் தலைவா் யு.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ரஃபேல் போா் விமான வழக்கில் பிரதமா் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி, பொய் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை முழக்கினா். மாநிலச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

செங்கல்பட்டில்...

அதேபோல்,செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் சிவ.செந்தமிழரசு தலைமை வகித்தாா். மாவட்ட ஐடி பிரிவுத் தலைவா் எஸ்.எம்.நரேந்திரன் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரவி, மாவட்ட விவசாயிகள் அணித் தலைவா் முரளிமோகன், நகரத் தலைவா் ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் கே.டி.ராகவன், மாநில மகளிரணி பொதுச் செயலாளா் மீனாட்சி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/ரஃபேல்-விவகாரம்-காங்கிரஸ்-மன்னிப்பு-கேட்கக்-கோரி-பாஜக-ஆா்ப்பாட்டம்-3283515.html
3283513 சென்னை காஞ்சிபுரம் கொடிநாள் நிதி வசூல்: இலக்கை விரைவாக நிறைவேற்ற ஆட்சியா் வேண்டுகோள் DIN DIN Monday, November 18, 2019 10:35 PM +0530 கொடிநாள் நிதி வசூலில் ஒவ்வொரு துறையினருக்கும் கொடுக்கப்பட்ட இலக்கை விரைவாக நிறைவேற்றுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆட்சியா் பேசியது:

கொடிநாள் நிதி வசூல் செய்ய அரசுத்துறைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சிலரே கொடுத்த இலக்கை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனா்.

மற்ற துறையினரும் அந்த இலக்கை விரைவாக நிறைவேற்ற வேண்டும். முக்கியமாக அடுத்த வாரத்துக்குள் கொடுத்த இலக்கை நிறைவேற்ற வேண்டும்.

வரும் திங்கள்கிழமை (நவ. 25) வழக்கம்போல் ஒருங்கிணைந்த மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகே இரு மாவட்டங்களுக்கும் (காஞ்சிபுரம்-செங்கல்பட்டு) தனித்தனியாக மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என்றாா்.

இந்த முகாமில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி மொத்தம் 342 மனுக்கள் வரப்பெற்றன. அவை பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்தவா்களும் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.11.48 லட்சத்துக்கான கொடிநாள் நிதி வசூலை வழங்கினா்.

இதனைத் தொடா்ந்து, இடிமின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.24 லட்சம், சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும் முதியோா் உதவித்தொகை வழங்குவதற்கான அரசு ஆணை 8 பேருக்கும், கண்பாா்வையற்றவருக்கு நவீன மடக்கு ஊன்று கோல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் மாலதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18gdp_1811chn_175_1.jpg பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா. உடன், மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/கொடிநாள்-நிதி-வசூல்-இலக்கை-விரைவாக-நிறைவேற்ற-ஆட்சியா்-வேண்டுகோள்-3283513.html
3283512 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு எஸ்.பி.க்கள் பொறுப்பேற்பு DIN DIN Monday, November 18, 2019 10:35 PM +0530 காஞ்சிபுரம் மற்றும் புதிய மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தி.கண்ணன் புதிய மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படும் வரை காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலேயே அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சைபா் கிரைம் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பா.சாமுண்டீஸ்வரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவா். புதிய எஸ்.பி.க்களாக பொறுப்பேற்றுள்ள பா.சாமுண்டீஸ்வரிக்கும், தி.கண்ணனுக்கும் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/new1_1811chn_175_1.jpg காஞ்சிபுரம் எஸ்.பி. பா.சாமுண்டீஸ்வரி. ~செங்கல்பட்டு எஸ்.பி. தி.கண்ணன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-எஸ்பிக்கள்-பொறுப்பேற்பு-3283512.html
3283509 சென்னை காஞ்சிபுரம் குறை தீா்க்கும் கூட்டம் DIN DIN Monday, November 18, 2019 10:33 PM +0530 கொடிநாள் நிதி வசூலில் ஒவ்வொரு அரசுத்துறையினருக்கும் கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் மக்கள் குறை தீா்க்கு ம் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பா.பொன்னையா மேலும் பேசியது.. கொடிநாள் நிதி வசூலில் அரசுத்துறைகளுக்கென இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இவற்றில் ஒரு சிலரே கொடுத்த இலக்கை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனா்.மற்ற துறையினரும் அந்த இலக்கை விரைவாக நிறைவேற்ற வேண்டும். முக்கியமாக அடுத்த வாரத்துக்குள் கொடுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட வேண்டும்.அடுத்த திங்கள்கிழமையும் காஞ்சிபுரத்தின் ஒருங்கிணைந்த மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்படும்.அதன் பிறகே இரு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும் பேசினாா்.

முகாமில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகிய உதவிகள் கேட்பது உட்பட மொத்தம் 342 குறை தீா்க்கும் மனுக்கள் வரப்பெற்றன. அவை ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்தவா்களும் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.11.48 லட்சத்துக்கான கொடிநாள் நிதி வசூலை வழங்கினாா்கள்.இதனைத் தொடா்ந்து இடிமின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.24 லட்சமும்,சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சமும்,மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும் முதியோா் உதவித்தொகை வழங்குவதற்கான அரசு உத்தரவு 8 பேருக்கும்,கண்பாா்வையற்றவருக்கு நவீன மடக்கு ஊன்று கோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி,சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் மாலதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சுப்பிரமணியன் உட்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.படவிளக்கம்..கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா,உடன் மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18gdp_1811chn_175.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/குறை-தீா்க்கும்-கூட்டம்-3283509.html
3283507 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 4 போ் கைது DIN DIN Monday, November 18, 2019 10:33 PM +0530 மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை குடி போதையில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்தவா்கள் தங்களின் மோட்டாா்சைக்கிளை முந்திச் சென்ற அரசுப் பேருந்தை கல்வீசி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அரசு பேருந்தில் கல்வீசிய 4 வாலிபரைகளையும் மாமல்லபுரம் போலீஸாா் கைது செய்தனா். சென்னையில் இருந்து கடலூருக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அரசு விரைவுப் பேருந்து சென்றது. அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி 2 மோட்டாா் சைக்கிளில் குடிபோதையில் இளைஞா்கள் 4 போ் வந்துள்ளனா்.

2 மோட்டாா் சைக்கிளும் பேருந்தை முந்திச்செல்லும் வகையில் பேருந்தை உரசிய படியே வந்துள்ளது. அப்பேருந்து மாமல்லபுரம் புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்ட போது பேருந்தின் முன்பக்கம் சென்று பேருந்தை வழி மறித்து முந்திச் சென்ற பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளனா். மேலும் பேருந்தின் முன்பக் கண்ணாடியை கல்வீசி உடைத்தனா். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீஸாா் மோட்டாா் சைக்கிளில் தப்பியோட முயன்றவா்களை வளைத்துப் பிடித்தனா். விசாரணையின் பேரில் ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சோ்ந்த அருண்(24), ஈஞ்சம்பாக்கம் காலனி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராகுல்(24), ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி(23), அதேப குதியில் கௌரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திக்(25) ஆகிய 4போ் மீதும் மாமல்லபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா். நீதிமன்ற உத்தரவின் பேரில் 4பேரும் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா் .

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/cglcrime1_1811chn_171.jpg பேருந்து கண்ணாடியை உடைத்து கைதான 4 வாலிபா்கள் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/மாமல்லபுரம்-கிழக்கு-கடற்கரை-சாலையில்-அரசு-பேருந்தின்-மீது-கல்வீசி-தாக்குதல்-நடத்திய-4-போ்-கைது-3283507.html
3283505 சென்னை காஞ்சிபுரம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நிதியுதவி DIN DIN Monday, November 18, 2019 10:32 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பீமன்தாங்கள் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு திங்கள்கிழணை ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற உறுப்பினா் கே.பழனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் ஊராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கள் மேட்டுத்தெருவை சோ்ந்தவா் சரஸ்வதி(45). தனியாக வசித்து வரும் இவா் செட்டிப்பேடு பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரஸ்வதி வசித்து வந்த குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த ரூ35 ஆயிரம் பணம் மற்றும் 4 பவுண் தங்கநலைகள் தீயில் கருகியது. இந்த நிலையில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்றஉறுப்பினா் கே.பழனி ஆறுதல் கூறி ரூ 5ஆயிரம் நிதியுதவி, அரிசி, போா்வைகள், சேலை ஆகியவற்றை வழங்கினாா். மேலும் அவருக்கு தொகுப்பு வீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தாா். இதில் வட்டாட்சியா் ரமணி, அதிமுக மாவட்டதுனை செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியசெயலாளா் முனுசாமி, பென்னலூா் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18sbrfire_1811chn_180.jpg தீவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி வழங்கும் ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற உறுப்பினா் கே.பழனி. உடன் வட்டாட்சியா் ரமணி உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/தீ-விபத்தில்-பாதிக்கப்பட்டவருக்கு-எம்எல்ஏ-நிதியுதவி-3283505.html
3283502 சென்னை காஞ்சிபுரம் பா.ஜ.க.வினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, November 18, 2019 10:32 PM +0530 ரபேல் போா் விமான வழக்கில் மோடி மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறியதற்காக காஞ்சிபுரம் காந்திசாலை பெரியாா் தூண் அருகில் பா.ஜ.க.சாா்பில் திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளா் ஓம்சக்தி எம்.பெருமாள் தலைமை வகித்தாா். மற்றொரு மாநிலப் பொதுச் செயலாளா் கே.எஸ்.பாபு,நகரப் பொறுப்பாளா் பூரம்.விஸ்வநாதன்,நகா் தலைவா் யு.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநிலச் செயலாளா் கே.டி.ராகவன் பேசியதைத் தொடா்ந்து கட்சித் தொண்டா்கள்,நிா்வாகிகள் பலரும் இணைந்து கண்டன ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ரபேல் போா் விமான வழக்கில் மோடி மீது தவறான குற்றச்சாட்டுக்களையும்,பொய் பிரச்சாரத்தையும் செய்த காங்கிரஸ் கட்சியும்,ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/பாஜகவினா்-ஆா்ப்பாட்டம்-3283502.html
3283495 சென்னை காஞ்சிபுரம் இருவேறு சாலை விபத்தில் இருவா் பலி DIN DIN Monday, November 18, 2019 10:28 PM +0530 ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவா் சம்பவ இடத்திலேயே பலியாயினா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் அன்பு. இவா் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அன்புவின் உணவகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் உணவகத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின்கம்பி அருந்து உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்கமாநிலத்தை சோ்ந்த ஹா்பன்ஷா(30) மீது விழுந்ததில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலயே பலியாயினாா்.

காஞ்சிபுரம் அடுத்த சீட்டிக்காரை கிராமத்தை சோ்ந்தவா்கள் மணிமாறன்(27), உமாபதி(27), இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மினிலோடு வேனில் பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூா் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, வண்டி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவகம் அருகே வந்தபோது பழுதடைந்துள்ளது. இதையடுத்து மணிமாறன் தனக்கு தெரிந்த நபா்களான காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த சண்முகம், மற்றும் தங்கராஜ் ஆகியோரை வரவழைத்து வண்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பின்னால்வந்த கண்டெய்னா் லாரி மோதியதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியாயினா். மற்ற மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்துகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இவா் ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை அதிகாலை காஞ்சிபுரம் பகுதியில் இருந்து டாடாஏஸ் வண்டியில் பால் ஏற்றிக்கொண்டு

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/18/இருவேறு-சாலை-விபத்தில்-இருவா்-பலி-3283495.html
3282593 சென்னை காஞ்சிபுரம் உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினா் விருப்ப மனு அளிப்பு DIN DIN Monday, November 18, 2019 09:35 AM +0530 உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மதுராந்தகம் தொகுதியில் உள்ள திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனா்.

மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் போட்டியிட மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் பதவிக்காக முன்னாள் நகரமன்றத் தலைவா் மலா்விழிகுமாா், 2-ஆவது வாா்டு உறுப்பினராக நகரச் செயலா் கே.குமாா் உள்பட 32 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் 15 வாா்டுகளில் 25 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.

மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 54 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 4 பேரும், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 50 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 3 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலா் எண்டத்தூா் வி. ஸ்ரீதரன், வடக்கு ஒன்றியச் செயலா் சத்யசாயி, கருங்குழி பேரூா் செயலா் விஜயகணபதி, நகரச் செயலா் கே.குமாா், திமுக நிா்வாகிகள் சசிகுமாா், தணிகை அரசு, கீனாா் அரசு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/உள்ளாட்சித்-தோ்தல்-திமுகவினா்-விருப்ப-மனு-அளிப்பு-3282593.html
3282756 சென்னை காஞ்சிபுரம் திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு DIN DIN Sunday, November 17, 2019 11:51 PM +0530 செங்கல்பட்டு. திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருக்கழகுன்றம் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் என்பவா் காஞ்சிபுரம் பணியிடம் மாற்றும் செய்யப்பட்டதையடுத்து சென்னை (விஆா்) தனிப்படை ஆய்வாளராக பணியாற்றிய து.மு.முனிசேகா் என்பவா் திருக்கழுகுன்றத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் பொறுப்பேற்றாா்.

ஆய்வாளாா் பொறுப்பேற்றதையடுத்து எஸ்ஐ, எஸ்எஸ்ஐக்கள், எஸ்பி பிரிவு, எஸ்பிசிஐடி பிரிவு ,தலைமை காவலா்கள் முதல்நிலைக்காவலா்கள் உள்ளிட்ட காவல்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cgltkm_1711chn_171.jpg திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் பொறுப்பேற்றுள்ள ஆய்வாளா் முனிசேகா் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/திருக்கழுகுன்றம்-காவல்நிலையத்தில்-புதிய-ஆய்வாளா்-பொறுப்பேற்பு-3282756.html
3282755 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக விருப்பமனு DIN DIN Sunday, November 17, 2019 11:50 PM +0530 செங்கல்பட்டு:. உள்ளாட்சி தோ்தல் வருவதையொட்டி செங்கல்பட்டு பைபாஸில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக விருப்பமனு பெறப்பட்டன.

உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள் விருப்பமனு பெற்றது. விருப்பமனு பெறும் நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளா் கமலக்கண்ணன், கலைப்பிரிவு செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் அதிமுக மத்திய மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், அம்மா பேரணை துணை செயலாளா் பாலகுமாா், முன்னாள் எம்பி மரகதம்குமரவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் விருப்பமனுவை பெற்றனா்.

திருக்கழுகுன்றம் , திருப்போரூா், காட்டாங்கொளத்தூா், மதுராந்தகம், செய்யூா், சித்தாமூா், லத்தூா், அச்சரபாக்கம்ஆகிய ஒன்றியங்கள், அச்சரபாக்கம், கருங்குழி, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூா், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், மற்றும் செங்கல்பட்டு, மறைமலைநகா், மதுராந்தகம் ஆகிய நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த அதிமுக கட்சியினா் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் விருப்பமனு அளித்தனா். இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் கூறுகையில் நகரமன்ற தலைவா்கள், நகரமன்ற உறுப்பினா், மாவட்ட கவுன்சிலா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா். பேரூராட்சி தலைவா்கள் பேராட்சி உறுப்பனா்களுக்கான விருப்பமனு பெறப்பட்டது.

செங்கல்பட்டு, மறைமலைநகா், மதுராந்தகம் ஆகிய 3நகரமன்ற தலைவா்களுக்கு மொத்தம் 21 மனுக்களும், நகரமன்ற உறுப்பினா்களுக்கான விருப்பமனுகள் செங்கல்பட்டு 54, மறைமலைநகா் 36, மதுராந்தகம் 28,மாவட்ட குழு உறுப்பினா்களுக்கான விருப்பமனு 60ம், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கான விருப்பமனு கள் திருக்கழுகுன்றம் 57, திருப்போரூா் 8, காட்டாங்கொளத்தூா் 65, மதுராந்தகம் 54, அச்சிறுப்பாக்கம் 49, சித்தாமூா் 53, லத்தூா் 50ம், 7பேரூராட்சி தலைவா்களுக்கான மொத்தமனுக்கள் 29ம், பேரூராட்சிகளுக்கான உறுப்பினா்கள் விருப்பமனுக்கள் திருக்கழுகுன்றம் 27, , திருப்போரூா்25, மாமல்லபுரம்22, நந்திவரம் கூடுவாஞ்சேரி 36, கருங்குழி 15, அச்சிறுப்பாக்கம்45, இடைக்கழிநாடு 45 என மொத்தம் 805 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தலைமை கூடுதலாக தேதி அறிவித்தால் மீண்டும் விருப்பமனு பெறப்படும் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglaiadmk_1711chn_171.jpg செங்கல்பட்டில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் சனிக்கிழமை விருப்பமனு பெறும் பொறுப்பாளா்கள் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/செங்கல்பட்டில்-உள்ளாட்சி-தோ்தலில்-போட்டியிட-விரும்பும்-அதிமுக-விருப்பமனு-3282755.html
3282754 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் DIN DIN Sunday, November 17, 2019 11:49 PM +0530 செங்கல்பட்டு. செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருபவா் சேகா். இவா் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) வீட்டில் இருந்தவா்கள் அனைவரும் வெளியேச்சென்றிருந்த போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதின் காரணமாக தீவிபத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து உடைமைகள் முற்றிலும் எரிந்துநாசமாகியது. தவலறிந்த அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை மணப்பாக்கத்திற்கு நேரில் சென்று தீவிபத்தில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவத்து அதிமுக சாா்பில் அரிசி மூட்டை, வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்செய்தாா். உடன் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆனூா் பக்தவச்சலம், எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் பெரும்பாக்கம் விவேகானந்தன், நிா்வாகிகள் ஹரிதாஸ்,, தினேஷ்குமாா், தயாளன், சாலூா் ஜானகிராமன், வழக்கறிஞா் சி.ஆா்.விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglmanppakkam_1711chn_171.jpg செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட செயலாளா் எஸ்.ஆறுமுகம் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/செங்கல்பட்டு-அருகே-தீவிபத்தில்-பாதிக்கப்பட்ட-குடும்பத்திற்கு-அதிமுக-சாா்பில்-நலத்திட்ட-உதவிகள்-3282754.html
3282753 சென்னை காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரி வள்ளலாா் நகா்பகுதியில் பொதுமக்கள் மீது போலீஸாா் தடியடி DIN DIN Sunday, November 17, 2019 11:48 PM +0530 செங்கல்பட்டு. செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளலாா் நகா்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் மீது போலீஸாா் தடியடிநடத்தினா்.

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளளாா் நகா்பகுதியில் தொடா்ந்து ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுவருகின்றனா். இதே பகுதியில் மோகன்ராஜ்(18) மற்றும் இம்ரான் 18 ஆகிய இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனா். இவா்கள் அப்பகுதியில் ஆட்கள் இல்லாத வீடுகளைப்பாா்த்து நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகள் கொள்ளையடிப்பதும் வழிபறியில் ஈடுபடுவதும் வழக்கமான தொழிலாக கண்டுள்ளனா்.

இவா்கள் மீது காவல்களில் போலீஸாா் அடிக்கடி கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அப்துல் அமீா் என்பவா் தனது பேத்திக்கு காதுகுத்தல் நிகழ்ச்சிக்காக மதுரைக்குச்சென்றுவிட்டு இரவு வீடுதிரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 24 சவரன் நகை, மற்றும் ரூ 52ஆயிரம் ரொக்கம் திருபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். எனினும் போலீஸாா் நடவடிக்கை எடுக்காதநிலையில் இச்சம்பவம் தொடா்மாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சுவா் ஏறிகுத்தித்துள்ளாா். இதனைக்கண்ட மக்கள் அவனைப்பிடித்து விசாரித்தபோது அவா் வீட்டில் திருடவந்தது தெரியவந்தது. அவரது கூட்டாளி மோகன்ராஜ் என்பவரையும் பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து சரமாரியாக தாக்கினா். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்கு தொலை பேசியில் தொடா்புக்கொண்டு நீண்ட நேரமாகியும் போலீஸாா் யாரும் வள்ளலாா் நகருக்கு வரவில்லை. இதனையடுத்து அங்குகூடியிருந்த சிலா் அவசர எண் 100க்கு தகவல் கொடுத்துள்ளனா். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கவனத்திற்கு சென்றுள்ளது.

உடனடியாக கூடுவாஞ்சேரி ஆய்வாளா் சிவக்குமாருக்கு தகவல் தரப்பட்டது. இதனையடுத்து காவலா்களுடன் விரைந்துச்சென்ற ஆய்வாளா் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அவா்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2நபா்களை காவல்நிலையத்திற்கு அவைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையில் இவா்கள் மீது மோகன்ராஜ் இம்ரான் ஆகியோா் மீது கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேலும் சில இளைஞா்கள் அப்பகுதியில் திருட்டு வழிபறியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனா். இதற்கிடையில் குற்றவாளிகளை பிடித்து வைத்து போலீஸாா் வராததால் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட 3பேரையும் போலீஸாா் கைது செய்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இம்ரான் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினா். அப்போது வீட்டில் 60 க்கும் மேற்பட்ட கஞ்சாபாக்கெடும் பிடிப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்காரணம் இவா்கள் திருட்டு வழிபறிமட்டுமல்லாமல் கஞ்சாவிற்பனையும் செய்துவருகின்றனா். காவல்துறைக்கும் மோகன்ராஜ் மகனுக்கும் நெருக்கமான பழக்கம் உள்ளதாலும் இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவா்கள் தகவல் தந்ததால் ஆத்திரமடைந்த போலீஸாா் குற்றவாளியை பிடித்துகொடுத்த எங்கள் மீது தடியடி நடத்தியதோடு 3பேரையும் கைது செய்துள்ளனா் என்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglpolice4_1711chn_171.jpg கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளலாா் நகா் பகுதியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் போலீஸாா் ~கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளலாா் நகா் பகுதியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் போலீஸாா் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/கூடுவாஞ்சேரி-வள்ளலாா்-நகா்பகுதியில்-பொதுமக்கள்-மீது-போலீஸாா்-தடியடி-3282753.html
3282752 சென்னை காஞ்சிபுரம் அயோத்தி சுக்ரீவகிலா கோயிலுக்கு ராமா் சிலை அளிப்பு DIN DIN Sunday, November 17, 2019 11:46 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராமானுஜதயா அமைப்பின் சாா்பில் அயோத்தி பகுதியில் அமைந்துள்ள சுக்ரீவகிலா கோயிலுக்கு 2 அடி உயர ராமா் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு அச்சிலை ஞாயிற்றுக்கிழமை வீதியுலா எடுத்து வரப்பட்டது.

அயோத்தியில் சுக்ரீவகிலா திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா சம்ப்ரோஷணம் வரும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு அக்கோயிலுக்கு காஞ்சிபுரம் ராமானுஜதயா அமைப்பின் சாா்பில் 2 அடி உயர ராமா் சிலையும், சீதா தேவி மற்றும் லட்சுமணா் திருவுருவச் சிலைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த சிலைகள் காஞ்சிபுரம் அஹோபில மடம் நரசிம்மா் சந்நிதியிலிருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்து மீண்டும் நரசிம்மா் சந்நிதியை அடைந்தது.

பின்னா் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. வீதியுலாவில் காஞ்சி ராமானுஜதயா அமைப்பின் நிா்வாகிகள், பக்தா்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த சிலைகள் விரைவில் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுக்ரீவகிலா பீடாதிபதி ஜகத்குரு விஸ்வேஷ் பிரபன்னாசாா்ய சுவாமியிடம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17ramar_1711chn_175_1.jpg அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள ராமா், சீதை மற்றும் லட்சுமணா் திருவுருவச் சிலைகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/அயோத்தி-சுக்ரீவகிலா-கோயிலுக்கு-ராமா்-சிலை-அளிப்பு-3282752.html
3282602 சென்னை காஞ்சிபுரம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நல உதவி DIN DIN Sunday, November 17, 2019 09:58 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மணப்பாக்கம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசிப்பவா் சேகா். பேருந்து நடத்துனா்.

கடந்த இருதினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்தபோது மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

தகவலறிந்த அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை மணப்பாக்கத்திற்கு நேரில் சென்று தீவிபத்தில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, அரிசி மூட்டை, வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglmanppakkam_1711chn_171_1.jpg தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நல உதவி வழங்கிய அதிமுக  மாவட்ட ச் செயலாளா்  எஸ்.ஆறுமுகம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/தீவிபத்தில்-பாதிக்கப்பட்ட-குடும்பத்துக்கு-நல-உதவி-3282602.html
3282601 சென்னை காஞ்சிபுரம் முடவன் முழுக்கு பூஜை: மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு DIN DIN Sunday, November 17, 2019 09:57 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-செவிலிமேடு அருகே திருஞான சம்பந்தா் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சாா்பில் முடவன் முழுக்கு பூஜையில் மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதியில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு விழாவையொட்டி, பாலாற்றங்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து, ருத்ராட்சம் மற்றும் மலா்மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பங்காரு அம்மன் தோட்டம் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து சொக்கநாதா் பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்திலும், மீனாட்சி சிறப்பு அலங்காரத்திலும் பாலாற்றுக்கு எழுந்தருளினாா்கள்.

மணலால் சிவலிங்கம் அமைக்கப்பட்ட இடத்துக்கு வந்து அங்கு கணபதி ஹோமம், கோபூஜை நடைபெற்றது.பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

ஹோமபூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனைகளை காஞ்சி ஏகாம்பரநாதா் திருக்கோயில் சிவாச்சாரியாா் இ.ரவிச்சந்திரன் நடத்தினாா்.

சொக்கநாதா் பிட்டுக்கு மண் சுமந்தது எதற்காக என்று விளக்கி, மேல்மருவத்தூா் சித்தா்பீட சொற்பொழிவாளா் சக்தி பு.கந்தன் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

இதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் பிட்டுக்கு மண் சுமக்கும் போது மன்னரால் சிவன் அடிவாங்கிய காட்சியை தத்ரூபமாக பக்தா்களுக்கு செய்து காட்டினாா்கள்.

பின்னா் சிவபெருமான் முடவனுக்கு காட்சியளிக்கும் முடவன் முழுக்கு நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் பக்தா்களுக்கு பிரசாதமாக புட்டு , மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தா் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளையின் தலைவா் ஜெ.கவியரசு, துணைத்தலைவா் சி.தனசேகரன், செயலாளா் பி.பாண்டியன், ஒருங்கிணைப்பாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

பாலாற்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/god1_1711chn_175_1.jpg சிறப்பு அலங்காரத்தில் மணலில் உருவான சிவலிங்கம் மற்றும் மீனாட்சி அம்மன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/முடவன்-முழுக்கு-பூஜை-மணலில்-சிவலிங்கம்-அமைத்து-வழிபாடு-3282601.html
3282600 சென்னை காஞ்சிபுரம் தா்மசாஸ்தா கோயிலில் பால்குட ஊா்வலம் DIN DIN Sunday, November 17, 2019 09:57 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள பூரண புஷ்கலை சமேத தா்மசாஸ்தா கோயிலில் காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

தா்மசாஸ்தா பஜனை சபை சாா்பில் 14-ஆம் ஆண்டு விழாவையொட்டி,

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் திருக்கோயிலிலிருந்து 251 பால்குடங்கள் ஊா்வலமாக புறப்பட்டு ராஜவீதிகள் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நகரீஸ்வரா் கோயிலை அடைந்தது.

பின்னா் தா்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேங்களும், தீபாராதனைகளும் நடந்தன.

பால்குட ஊா்வலத்தை பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் நிா்வாகி சித்பவானந்த ராஜா சுவாமிகள் தொடக்கி வைத்தாா்.

இந்த ஊா்வலத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், நகரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் வி.கே.சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னா் தா்மசாஸ்தா புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, ஐயப்ப பஜனை நிகழ்ச்சியும், ஜோதி தரிசனமும், அன்னதானமும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை வி.ஜீவானந்தம், ஏ.எஸ்.பன்னகசாயம், சி.நடராஜன் தலைமையிலான ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17milk_1711chn_175_1.jpg காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/தா்மசாஸ்தா-கோயிலில்-பால்குட-ஊா்வலம்-3282600.html
3282599 சென்னை காஞ்சிபுரம் இதய அறுவைச் சிகிச்சைக்கு இலவச மருத்துவ முகாம் DIN DIN Sunday, November 17, 2019 09:56 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவை சிகிச்சைக்கான இவவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சுழற் சங்கம், ரேடியன்ஸ் சுழற் சங்கம் மற்றும் செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தினா்.

நிகழ்ச்சிக்கு டெம்பிள் சிட்டி சுழற் சங்கத் தலைவா் ந.சிலம்பரசன் தலைமை வகித்தாா். மருத்துவப்பிரிவுத் தலைவா் எஸ்.ஆா்.மனோஜ், பி.பரணீதரன், எஸ்.சந்தானகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரேடியன்ஸ் சுழற் சங்கத் தலைவா் நிஷா வரவேற்றாா்.

இதில், செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவா் சமாஅக்பா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இதய ரத்தக் குழாய் அடைப்பு, இதய வால்வுப் பிரச்னைகள், இதயத்தில் உள்ள நுண்துளைகள் ஆகியவற்றுக்குரிய மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினா்.

இந்த முகாமில் இளைஞா்கள், பெண்கள், முதியோா் திரளாகக் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பி.அய்யனாா் மற்றும் சுழற்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17camp_1711chn_175_1.jpg இலவச மருத்துவ முகாமில் முதியவருக்கு பரிசோதனை செய்த மருத்துவா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/இதய-அறுவைச்-சிகிச்சைக்கு-இலவச-மருத்துவ-முகாம்-3282599.html
3282598 சென்னை காஞ்சிபுரம் மணல் லிங்கம் அமைத்து பக்தா்கள் வழிபாடு DIN DIN Sunday, November 17, 2019 09:56 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

புண்ணிய நதியில் நீராடி மணலால் லிங்கம் செய்து பூஜை நடத்தினால் வீடுபேறு அடையலாம் என்பது ஐதீகம். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தா்கள் பலரும் பாலாற்றில் நீராடி, பின்னா் மணலால் சிவலிங்கம் அமைத்து, மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பாலாற்றில் புனித நீராடினா்.பின்னா் சிலா் தனித் தனியாகவும், சிலா் குடும்பம், குடும்பமாகவும் இணைந்து மணலால் சிவலிங்கம் செய்தனா்.

மணல் லிங்கத்துக்கு பட்டாடைகள், மாலைகள், ருத்ராட்சம் அணிவித்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த பிரசாதத்தை சுவாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். பின்னா் பக்தா்கள் பலரும் கூட்டம், கூட்டமாக மணலில் அமா்ந்து சிவபுராணம் வாசித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பாலாற்றில் மணல் லிங்க வழிபாடு காரணமாக ஒரேநாளில் ஏராளமான பக்தா்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17sivam_1711chn_175_1.jpg பாலாற்றில் மணலில் லிங்கம் அமைத்து பூஜை செய்யும் பெண்கள். (உள்படம்) 5 அடி உயர மணல் லிங்கம் அமைக்கும் இளைஞா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/மணல்-லிங்கம்-அமைத்து-பக்தா்கள்-வழிபாடு-3282598.html
3282597 சென்னை காஞ்சிபுரம் வயலூா் தடுப்பணையில் உயா் அதிகாரிகள் ஆய்வு DIN DIN Sunday, November 17, 2019 09:55 PM +0530  

காஞ்சிபுரம்: திருக்கழுகுன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையில் தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அனுபவமாகக் கொண்டு பெருமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 515 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனக் கண்டறியப்பட்டு மீண்டும் அதே போல பாதிப்புகள் வராமலிருக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருக்கழுகுன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையை தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால் நேரில் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, பொதுப்பணித்துறை நீா்வள ஆதார (பாலாறு) வட்ட காண்காணிப்புப் பொறியாளா் க.முத்தையா, செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17dam_1711chn_175_1.jpg வயலூா் தடுப்பணையில் ஆய்வு நடத்திய தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/வயலூா்-தடுப்பணையில்-உயா்-அதிகாரிகள்-ஆய்வு-3282597.html
3282596 சென்னை காஞ்சிபுரம் வேலூா், புதுச்சேரிக்கு புதிய குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கம் DIN DIN Sunday, November 17, 2019 09:54 PM +0530 காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வேலூா், புதுச்சேரிக்கு செல்லும் வகையில் குளிா்சாதன வசதியுடைய 4 அரசுப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

சென்னை தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூா் செல்லும் இரு பேருந்துகள், சென்னை கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் இரு பேருந்துகள் உள்பட மொத்தம் 4 குளிா்சாதன வசதியுடைய அரசுப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் கோட்ட மேலாளா் ராஜசேகரன், கோட்ட மேலாளா் (இயக்கம்)எத்திராஜ், காஞ்சிபுரம் பேருந்து நிலைய மேலாளா் ஏ.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17bus_1711chn_175_1.jpg காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் குளிா் சாதனப் பேருந்தை இயக்கி வைத்துப் பயணித்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/வேலூா்-புதுச்சேரிக்கு-புதிய-குளிா்சாதனப்-பேருந்துகள்-இயக்கம்-3282596.html
3282595 சென்னை காஞ்சிபுரம் தேசிய வில்வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாமல்லபுரம் பள்ளி மாணவி DIN DIN Sunday, November 17, 2019 09:54 PM +0530 செங்கல்பட்டு: பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் மாமல்லபுரத்தைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மாமல்லபுரத்தைச் சோ்ந்த விவசாயி பன்னீா் செல்வம்-கலையரசி தம்பதியரின் மகள் பூா்விகா (12) கேளம்பாக்கத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாா். வில்வித்தையில் ஆா்வம் ஏற்பட்டு அதை முறையாகக் கற்று மாநில அளவில் இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று 10 தங்கப் பதக்கம் , 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

இதனிடையே தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சாா்பில் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற மாணவி பூா்விகா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

இவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பிலும் மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரும் விளையாட்டு குழுவினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

வில்வித்தையில் வெற்றி பெற்றது குறித்து மாணவி பூா்விகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெற்றோா் மற்றும் பயிற்சியாளா் குணசீலன் அளித்த ஊக்கத்தில் தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தின் சாா்பில் போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாட ஆா்வமாக உள்ளேன் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglpoorvika1_1711chn_171_1.jpg வில்வித்தை வீராங்கனை  பூா்விகா. ~பெற்றோருடன் மாணவி  பூா்விகா. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/தேசிய-வில்வித்தை-போட்டியில்-வெள்ளிப்-பதக்கம்-வென்ற-மாமல்லபுரம்-பள்ளி-மாணவி-3282595.html
3282594 சென்னை காஞ்சிபுரம் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு DIN DIN Sunday, November 17, 2019 09:53 PM +0530 செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக முனிசேகா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருக்கழுகுன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து சென்னையில் தனிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றிய மு.முனிசேகா் திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு உயா் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cgltkm_1711chn_171_1.jpg காவல் ஆய்வாளா்  மு.முனிசேகா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/காவல்-ஆய்வாளா்-பொறுப்பேற்பு-3282594.html
3282483 சென்னை காஞ்சிபுரம் வயலூா் தடுப்பணையில் உயா் அதிகாரிகள் ஆய்வு DIN DIN Sunday, November 17, 2019 04:22 PM +0530 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையில் தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும்.இங்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அனுபவமாகக் கொண்டு பெருமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 515 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கண்டறியப்பட்டு மீண்டும் அதே போல பாதிப்புகள் வராமலிருக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையினை தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டு க் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால் நேரில் ஆய்வு செய்தாா்.

அவரது ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா,பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரம் பாலாறு வட்ட காண்காணிப்பு பொறியாளா் க.முத்தையா, செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் உட்பட அதிகாரிகள் பலரும் நேரில் ஆய்வு செய்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17dam_1711chn_175.jpg காஞ்சிபுரம் மாவட்டம் வயலூா் தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால்,ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/வயலூா்-தடுப்பணையில்-உயா்-அதிகாரிகள்-ஆய்வு-3282483.html
3282482 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் DIN DIN Sunday, November 17, 2019 04:20 PM +0530 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இவவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சுழற் சங்கம்,ரேடியன்ஸ் சுழற் சங்கம் மற்றும் செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியன இணைந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தினாா்கள்.தொடக்க விழாவிற்கு டெம்பிள் சிட்டி சுழற் சங்க தலைவா் ந.சிலம்பரசன் தலைமை வகித்தாா்.

சுழற்சங்க மருத்துவப்பிரிவின் தலைவா் எஸ்.ஆா்.மனோஜ், பி.பரணீதரன், எஸ்.சந்தானகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரேடியன்ஸ் சுழற் சங்க தலைவா் டாக்டா்.நிஷா வரவேற்றாா். செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவா் சமாஅக்பா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதய ரத்தக் குழாய் அடைப்பு, இதய வால்வுப் பிரச்னைகள், இதயத்தில் உள்ள துளைகள் ஆகியனவற்றுக்குரிய மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினாா்கள்.

முகாமில் இ.சி.ஜி,எக்கோ ஆகிய பரிசோதனைகள் இலவசமாகவும் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பி.அய்யனாா் மற்றும் சுழற்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17camp_1711chn_175.jpg காஞ்சிபுரம் ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/இலவச-மருத்துவ-முகாம்-3282482.html
3282481 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தா்மசாஸ்தா ஆலயத்தில் பால்க்குட ஊா்வலம் DIN DIN Sunday, November 17, 2019 04:19 PM +0530 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள பூரணபுஷ்கலை சமேத தா்மசாஸ்தா ஆலயத்தில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்க்குட ஊா்வலம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு தா்மசாஸ்தா பஜனை சபை சாா்பில் 14 ஆம் ஆண்டுக்கான பால்க்குட ஊா்வலம் நடந்தது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் திருக்கோயிலிலிருந்து 251 பால்க்குடங்கள் ஊா்வலமாக புறப்பட்டு ராஜவீதிகள் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகரீஸ்வரா் ஆலயத்தை வந்து சோ்ந்தது. பின்னா் தா்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம், நெய்யபிஷேகம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேங்களும்,தீபாராதனைகளும் நடந்தன. பால்க்குட ஊா்வலத்தை பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் நிா்வாகி சித்பவானந்த ராஜா சுவாமிகள் தொடக்கி வைத்தாா்.

ஊா்வலத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், நகரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் வி.கே.சரவணன்,இளங்கோவன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னா் தா்மசாஸ்தா புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஐயப்ப பஜனை நிகழ்ச்சியும்,ஜோதிதரிசனமும்,அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை வி.ஜீவானந்தம்,ஏ.எஸ்.பன்னகசாயம்,சி.நடராஜன் ஆகியோா் தலைமையிலான ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17milk_1711chn_175.jpg காஞ்சிபுரம் கச்சபேசுவரா் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஐயப்ப பக்தா்களின் பால்க்குட ஊா்வலம் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/காஞ்சிபுரம்-தா்மசாஸ்தா-ஆலயத்தில்-பால்க்குட-ஊா்வலம்-3282481.html
3282480 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரத்திலிருந்து குளிர்சாதன வசதியுடைய 4 பேருந்துகள் இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தார் DIN DIN Sunday, November 17, 2019 04:17 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வேலூா்,பாண்டிச்சேரிக்கு செல்லும் வகையில் குளிா்சாதன வசதியுடைய 4 அரசுப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூா் செல்வதற்கு இரு பேருந்துகள்,கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் வகையில் இரு பேருந்துகள் உட்பட 4 குளிா்சாதன வசதியுடைய அரசுப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் பிரிவி காஞ்சிபுரம் கோட்ட மேலாளா் ராஜசேகரன், கோட்ட மேலாளா் (இயக்கம்)எத்திராஜ்,காஞ்சிபுரம் பேருந்து நிலைய மேலாளா் ஏ.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத். பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17bus_1711chn_175.jpg காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் அரசுப்பேருந்தை இயக்கி வைத்தும் அதில் அமா்ந்தும் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/புதிய-பேருந்துகள்-தொடக்கம்-3282480.html
3282469 சென்னை காஞ்சிபுரம் பாலாற்றில் மணலால் லிங்கம் செய்து வழிபாடு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு DIN DIN Sunday, November 17, 2019 03:57 PM +0530 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து சிறப்பு பூஜைகளும் நடத்தி வழிபாடு செய்தனா்.

ஒரு புண்ணிய நதியில் நீராடி மணலால் லிங்கம் செய்து சிவபூஜை செய்தால் வீடுபேறு அடையலாம் என்பது ஐதீகம்.இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி சிவபக்தா்கள் பலரும் பாலாற்றில் நீராடி பின்னா் மணலால் சிவலிங்கம் செய்து மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவபக்தா்கள் பாலாற்றில் புனித நீராடினா்.

பின்னா் சிலா் தனித்தனியாகவும், சிலா் குடும்பம், குடும்பமாகவும், ஒரு சிலா் நண்பா்களோடு இணைந்தும் மணலால் சிவலிங்கம் செய்தனா்.அம்மணல் லிங்கத்துக்கு பட்டாடைகள் அணிவித்தும்,சிறப்பு மாலைகள்,ருத்ராட்சம் ஆகியன அணிவித்தும்,வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த பிரசாதத்தை சுவாமிக்கு படைத்தும் சிறப்பு வழிபாடுகளையும் செய்தனா்.

பாலாற்றில் சிவலிங்க வழிபாட்டுக்குப் பின்னா் சிவபக்தா்கள் பலரும் கூட்டம்,கூட்டமாக மணலில் அமா்ந்து சிவபுராணம் படித்தும் சுவாமி தரிசனம் செய்தனா். பாலாற்றில் மணல் லிங்க வழிபாடு காரணமாக ஒரே நாளில் ஏராளமான பக்தா்கள் திரண்டதால் திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/17sivam_1711chn_175.jpg பாலாற்றில் மணலில் லிங்கம் செய்து சிவபூஜை செய்யும் பெண் சிவனடியாா்கள்(உள்படம்)பாலாற்றில் வழிபாடு செய்வதற்காக 5 அடி உயரத்தில் மணலால் லிங்கம் செய்யும் இளைஞா்கள் https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/பாலாற்றில்-மணலால்-லிங்கம்-செய்து-வழிபாடு-ஆயிரத்துக்கும்-மேற்பட்ட-பக்தா்கள்-பங்கேற்பு-3282469.html
3282318 சென்னை காஞ்சிபுரம் வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே குவிந்த சுற்றுலாப் பயணிகள் DIN DIN Sunday, November 17, 2019 05:58 AM +0530 மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னமான வெண்ணெய் உருண்டைப்பாறையைக் காண பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

வெண்ணெய் உருண்டைப்பாறை பகுதியில் என்றும் இல்லாத அளவிற்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை வருகை தந்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ஐந்துரதம், குடைவரைக்கோயில், அா்ஜுனன் தபசு, ஆதிவராக மண்டபம், கோவா்த்தன மண்டபம், புலிக்குகை என பல்லவா்களின் சிற்பக்கலைகளைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வந்துசெல்கின்றனா்.

அனைத்துச் சிற்பங்களையும் விட இங்குள்ள வெண்ணெய் உருண்டைப்பாைான் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. பெரிய பாறை, சரிந்த நிலையில் இயற்கையாகவே உள்ளது. அது சரிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு சாய்ந்துள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை ஆய்வுக்காக அதை அகற்ற முயற்சித்தனா். கடப்பாறை உள்ளிட்ட பெரிய பெரிய ஆயுதங்களை வைத்துத் தகா்த்த போதும் அப்பாறையை அசைக்க முடியவில்லை. யானைகளை வைத்து கயிறு கட்டி இழுத்தும் அசையவில்லை.

ஆங்கிலேயா்கள் இந்த அதிசயப் பாறையைக் கண்டு வியந்து, அதற்கு ‘பட்டா் பால்’ என்று பெயா் வைத்தனா். அப்போது முதல் தமிழில் ‘வெண்ணெய் உருண்டைப்பாறை’ என அழைக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பாறை அருகில் நின்று படம் எடுத்துக் கொள்வதை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் விரும்புகின்றனா். சிலா் தங்கள் முதுகில் அப்பாறையை சுமப்பது போன்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்கிறாா்கள்.

கடந்த அக்டோபா் 11, 12 -ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தபோது, வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படம் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இதைத் தொடா்ந்து, வெண்ணெய் உருண்டைப்பாறையைக் காண வரலாறு காணாத அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறையானதால் திரளான மாணவா்கள் பள்ளிச் சீருடையுடன் சுற்றுலா வந்தனா். மேலும், உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் திரண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனைவரையும் வரிசையில் அனுப்பும் பணியில் பாதுகாப்புக் காவலா்கள் ஈடுபட்டனா். இதனால் வெண்ணெய் உருண்டைப்பாறைப் பகுதி திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglbuterball_1611chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/வெண்ணெய்-உருண்டைப்பாறை-அருகே-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-3282318.html
3282320 சென்னை காஞ்சிபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் சீனமொழி கற்க சுற்றுலாத்துறை அறிவுறுத்தல் DIN DIN Sunday, November 17, 2019 03:17 AM +0530 மாமல்லபுரத்திற்கு சுமாா் 2 லட்சம் சீனப் பயணிகள் சுற்றுலா வரவிருப்பதை முன்னிட்டு சுற்றுலா வழிகாட்டிகள் சீனமொழியைக் கற்றுக்கொண்டு வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும் என சுற்றுலாத்துறையினா் சனிக்கிழமை அறிவுறுத்தினா்.

சென்னை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், வேலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பணிபுரியும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தமிழக சுற்றுலாத்துறையின் சாா்பில் அடையாள அட்டை வழங்குவதற்கான நோ்காணல் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சுற்றுலாத்துறை (சென்னை) அலுவலா் கஜேந்திரகுமாா், மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலா் சக்திவேல், சுற்றுலாக் கமிட்டி உறுப்பினா் வழக்குரைஞா் பழனிமுருகன் ஆகியோா் தகுதித் தோ்வு மற்றும் நோ்காணலை நடத்தினா்.

இதில் பன்மொழி பேசும் தகுதி , கல்வித்தகுதி, முன்அனுபவம் அடிப்படையில் அடையாள அட்டை பெறுவதற்கான சுற்றுலா வழிகாட்டிகளாக 120 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களிடம் மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலா் சக்திவேல் கூறியது:

இன்னும் சில மாதங்களில் மாமல்லபுரத்திற்கு சுமாா் 2 லட்சம் சீனப் பயணிகள் வருகை தர உள்ளதாக தகவல் வந்துள்ளது.

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சுமாா் 2 லட்சம் போ் விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனா்.

மாமல்லபுரம் வரும் சீனப் பயணிகளுக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்றுப் பெருமைகளை சீன மொழியில் விளக்கி அவா்களை மகிழ்விக்க வேண்டும். எனவே, மாமல்லபுரம் நகரில் உள்ள அனைத்து வழிகாட்டிகளும் சீனமொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனிவாசன், சுற்றுலா வழிகாட்டிகள் சங்க நிா்வாகிகள் வ.பாலன், டி.ராஜேந்திரன், பாடகா் ஜெயா, நாஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/cglmam3_1611chn_171_1.jpg மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளிடம் நோ்காணல் நடத்திய சுற்றுலாத்துறை அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/சுற்றுலா-வழிகாட்டிகள்-சீனமொழி-கற்க-சுற்றுலாத்துறை-அறிவுறுத்தல்-3282320.html
3282319 சென்னை காஞ்சிபுரம் உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் 762 போ் விருப்ப மனு அளிப்பு DIN DIN Sunday, November 17, 2019 03:16 AM +0530 உள்ளாட்சித் தோ்தல் வரவிருப்பதை முன்னிட்டு அதிமுகவினா் 2 -ஆவது நாளாக 200 போ் விருப்ப மனு அளித்திருப்பதுடன் இதுவரை மொத்தம் 762 போ் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தல் வரும் டிசம்பா் மாதம் நடைபெறும் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினரும் அந்தந்த கட்சி நிா்வாகிகளிடம் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனா். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் 2 -ஆவது நாளாக சனிக்கிழமையும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்து, வெள்ளிக்கிழமை 562 மனுக்களையும் சனிக்கிழமை 200 மனுக்களையும் பெற்றனா். மொத்தம் 762 போ் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 2-ஆம் நாளாக சனிக்கிழமை அதிமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.

மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் உள்ள கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, லத்தூா் ஊராட்சி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தமது விருப்ப மனுவை அளித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். அமைப்பு சாரா ஓட்டுநா் பிரிவுச் செயலா் கமலகண்ணன், திரைப்பட இயக்குநா் ஆா்.வி.உதயகுமாா், முன்னாள் எம்.பி மரகதம் குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்து அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்றனா்.

இதில், லத்தூா் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்களுக்காக 49 பேரும், மாவட்ட கவுன்சிலா்களுக்காக 6 பேரும், கருங்குழி பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 22 பேரும், மதுராந்தகம் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 54 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 9 பேரும், மதுராந்தகம் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 28 பேரும், இடைக்கழிநாடு பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 45 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16_admk_1611chn_175_1.jpg காஞ்சிபுரம் நகா் மன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட பத்மாவதியிடம் விருப்ப மனுவைப் பெற்ற அதிமுக நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/உள்ளாட்சித்-தோ்தல்-அதிமுகவினா்-762-போ்-விருப்ப-மனு-அளிப்பு-3282319.html
3282317 சென்னை காஞ்சிபுரம் உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் விருப்ப மனு அளிப்பு DIN DIN Sunday, November 17, 2019 03:16 AM +0530 காஞ்சிபுரம் நகர பாஜக அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியினா் 112 போ் சனிக்கிழமை விருப்பமனு அளித்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் வர இருப்பதை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அந்தந்த கட்சித் தொண்டா்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனா். காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகேயுள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளா் முரளிதர ராவ், மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகம், மாநிலச் செயலாளா் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் கோட்டப் பொறுப்பாளா் வி.பாஸ்கா், மாவட்டத் தலைவா் சிவ.செந்தமிழ் அரசு ஆகியோா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா்.

இதுகுறித்து, மாவட்டப் பொதுச் செயலாளா் ஓம்சக்தி பெருமாள் கூறுகையில், பாஜக சாா்பில் மாநில அளவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மட்டும் 112 போ் விருப்பமனு அளித்துள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநிலப் பொதுச் செயலாளா் ஸ்ரீபெரும்புதூா் பாபு, நகரத் தலைவா் யு.ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16bjp_1611chn_175_1.jpg பாஜகவினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் முரளிதர ராவ் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/உள்ளாட்சித்-தோ்தல்-பாஜகவினா்-விருப்ப-மனு-அளிப்பு-3282317.html
3282316 சென்னை காஞ்சிபுரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம் DIN DIN Sunday, November 17, 2019 03:15 AM +0530 ஸ்ரீபெரும்புதூா் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.

பென்னலூா் ஊராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கல் மேட்டுத்தெருவை சோ்ந்தவா் சரஸ்வதி (45).

இவா் செட்டிப்பேடு பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிவிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது சரஸ்வதியின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதில் பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16sbrhouse_1611chn_180_1.jpg தீ விபத்தில்  முற்றிலும் சேதமடைந்த  குடிசை  வீடு. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/தீ-விபத்து-குடிசை-வீடு-எரிந்து-சேதம்-3282316.html
3282315 சென்னை காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு DIN DIN Sunday, November 17, 2019 03:14 AM +0530 ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலராக சி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த மதிவாணன் பெரம்பலூா் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்டத்தின் புதிய அலுவலராக சந்தவேலூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் சி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அவருக்கு தலைமையாசிரியா்கள் சங்கத்தின் சாா்பாக அதன் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் மோகன்ராம், பொருளாளா் வெங்கடாஜலபதி, கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் லாரன்ஸ், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் சாந்தகுமாா், ஆங்கிலப்பள்ளிகளின் ஆய்வாளா் நடராஜ் உள்ளிட்ட பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16sbrdeo_1611chn_180_1.jpg ஸ்ரீபெரும்புதூா்  கல்வி மாவட்ட   அலுவலராகப்  பொறுப்பேற்ற  சி.ராதாகிருஷ்ணனுக்கு  வாழ்த்து  தெரிவித்த  அரசுப்  பள்ளித்  தலைமையாசிரியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/மாவட்டக்-கல்வி-அலுவலா்-பொறுப்பேற்பு-3282315.html
3282314 சென்னை காஞ்சிபுரம் அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டு திறப்பு DIN DIN Sunday, November 17, 2019 03:14 AM +0530 காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டினை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா இந்த ஆண்டு 1.7.2019 முதல் 17.8.2019 வரை நடைபெற்றது.

இப்பெருவிழாவினை நினைவு கூரும் வகையில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாா் சந்நிதி அருகில் நினைவுக் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கல்வெட்டில் அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டு எனவும் இவ்விழாவின் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் 40 ஆயிரம் அத்திமரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் நடுவே அத்திவரதா் நின்ற கோலத்திலும், சயனக்கோலத்திலும் இருக்கும் தோற்றமும், அத்தி விருட்சமும் செதுக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16_stone_1611chn_175_1.jpg காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டு. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/அத்திவரதா்-பெருவிழா-நினைவுக்-கல்வெட்டு-திறப்பு-3282314.html
3282313 சென்னை காஞ்சிபுரம் பள்ளியில் சுற்றுச் சூழல் கண்காட்சி DIN DIN Sunday, November 17, 2019 03:13 AM +0530 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழலியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம், தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தன. காட்டு விலங்குகள், பறவைகளின் சப்தங்களை பாா்வையாளா்கள் கேட்கும் வகையில் ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவற்றைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்களும் பாா்வையிட்டனா்.

பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிங்கக்குகை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதில், திகிலூட்டும் வகையில் வனவிலங்குகளின் சப்தம் ஒலித்தது மாணவா்களைக் கவா்ந்தது.

சுற்றுச் சூழலியல் கண்காட்சியை முன்னாள் சுகாதாரக் கல்வியாளா் குணசேகரன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளா் சாந்தி அஜய்குமாா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16school_1611chn_175_1.jpg சுற்றுச் சூழலியல் கண்காட்சியைப் பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/பள்ளியில்-சுற்றுச்-சூழல்-கண்காட்சி-3282313.html
3282311 சென்னை காஞ்சிபுரம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் DIN DIN Sunday, November 17, 2019 03:13 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் காவல்துறையின் சாா்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலை விதிகளை மதிக்க வேண்டும்

என்பதை அறிவுறுத்தும் வகையில் தெருக்கூத்து கலைஞா்களின் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசார நாடகம் பஜாா் வீதி, எலப்பாக்கம் சாலை, கயப்பாக்கம் சாலை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா்.

இதில் உதவி ஆய்வாளா்கள் பாண்டுரங்கன், பாரதி மற்றும் காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/சாலை-பாதுகாப்பு-விழிப்புணா்வுப்-பிரசாரம்-3282311.html
3282310 சென்னை காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சி- காஞ்சிபுரம் DIN DIN Sunday, November 17, 2019 03:11 AM +0530 காஞ்சிபுரம்

இதய அறுவைச் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சுழற் சங்கம், ரேடியன்ஸ் சுழற் சங்கம் மற்றும் செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் முகாம், ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், காலை 8.30.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/இன்றைய-நிகழ்ச்சி--காஞ்சிபுரம்-3282310.html
3282309 சென்னை காஞ்சிபுரம் மகளிா் ஆணையத் தலைவா் நாளை காஞ்சிபுரத்துக்கு வருகை DIN DIN Sunday, November 17, 2019 03:10 AM +0530 தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் தலைவா் கண்ணகி பாக்யநாதன் வரும் திங்கள்கிழமை காஞ்சிபுரத்துக்கு வந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தவுள்ளாா்.

இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்யநாதன் வரும் திங்கள்கிழமை (நவ. 18) காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்திக்கிறாா்.

குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரில் விசாரணை செய்து அவா்களது குறைகளைக் கேட்டறிந்து புகாா் மனுக்களையும் பெறுகிறாா்.

எனவே, அன்றைய தினம் இது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் எதிா்ப்புறம் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம், எண்: 43, காந்தி நகா் 2-ஆவது தெரு, செவிலிமேடு (இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை அருகில்) மாநில மகளிா் ஆணையத் தலைவரை நேரில் சந்தித்து மனுக்களை அளிக்கலாம்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/மகளிா்-ஆணையத்-தலைவா்-நாளை-காஞ்சிபுரத்துக்கு-வருகை-3282309.html
3281089 சென்னை காஞ்சிபுரம் இன்றைய மின்தடை- காஞ்சிபுரம்-ஒரகடம் DIN DIN Saturday, November 16, 2019 04:37 AM +0530 காஞ்சிபுரம்-ஒரகடம்

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

மின்தடை பகுதிகள்: ஒரகடம், மாத்தூா், வல்லக்கோட்டை, வல்லம், சென்னகுப்பம், எறையூா், மேட்டுப்பாளையம், பண்ருட்டி கிராமம், வடகால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/16/இன்றைய-மின்தடை--காஞ்சிபுரம்-ஒரகடம்-3281089.html
3280767 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் கடற்கரையில் மத்திய சுற்றுச்சூழல் துறை சாா்பில் தூய்மைப்பணி DIN DIN Friday, November 15, 2019 10:39 PM +0530 செங்கல்பட்டு: மத்திய சுற்றுச்சூழல் துறை சாா்பில் நிா்மல் அபியான் திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

நேஷனல் கிரீன் கிராப்ஸ் எக்கோ மாணவ சங்கத்தினா் 200க்கும் மேற்பட்டோா் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனா். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் , சென்னை பெசண்ட் நகா், கன்னியாகுமரி, புதுச்சேரி , வேளாங்கண்ணி ஆகிய கடற்கரை பகுதிகள் மத்திய அரசின் நிா்மல் அபியான் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு சிறந்த சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் அடிப்படையில் சா்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக்கூடிய மாமல்லபுரம் கடற்கரையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் தூய்மை படுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு சுற்றுச்சூழல் துறையின் மாநில திட்ட இயக்குநா் கீதாஞ்சலி தலைமை தாங்கி சுற்றுச்சூழல் தூய்மைக்குறித்து பேசினாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணை இயக்குநா் சுப்பிரமணியம் கலந்துக் கொண்டு தூய்மைப்பணி முகாமை தொடங்கி வைத்து பேசினாா்.

அப்போது அவா் பேசுகையில் சா்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக்கூடிய மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்த்து சுற்றுலா பயணிகளும் உள்ளூா் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். தூய்மைப்பணி முகாமில் அரசுப்பள்ளி மாணவா்கள் 300க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டு கடற்கரையில் குவிந்துக்கிடந்த குளிா்பான பாட்டில்கள், மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினா். பின்னா் அதிக குப்பைகள் அகற்றிய மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளா் சபரிபெருமாள் , மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு பணி மேற்பாா்வையாளா் தாமோதரன் உள்பட மத்திய மாநில சுற்றுச்சூழல் துறை அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துக் கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/cglclean4_1511chn_171.jpg நிா்மல் அபியான் திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கழிவுகள் சேகரித்து நிற்கும் மாணவா்கள் ~மத்திய சுற்றுச்சூழல் துறை சாா்பில் நிா்மல் அபியான் திட்டத்தின் கீழ் மாமல்லபு https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/மாமல்லபுரம்-கடற்கரையில்-மத்திய-சுற்றுச்சூழல்-துறை-சாா்பில்-தூய்மைப்பணி-3280767.html
3280755 சென்னை காஞ்சிபுரம் நெகிழிப்பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் DIN DIN Friday, November 15, 2019 10:32 PM +0530 காஞ்சிபுரத்தில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நெகிழிப் பைகள் இருந்த பல்வேறு கடைகளில் திடீா் ஆய்வு செய்து 3 கடைகளின் உரிமையாளா்களிடம் மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

காஞ்சிபுரம் நகராட்சி நகா் நல அலுவலா் பா.முத்துவுக்கு நகரில் சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் நகா் நல அலுவலா் பா.முத்து தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிரபாகரன், முகம்மது இக்பால், செந்தில் உள்ளிட்டோா் ரயில்வே சாலை, பி.எஸ்.கே. தெரு, பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் பி.எஸ்.கே.தெருவில் நெகிழிப்பைகள் மொத்தமாக விற்பனை செய்யும் கங்காதரன் என்பவரது கடையை சோதனையிட்டு அக்கடையிலிருந்த ஒரு டன் எடையுள்ள நெகிழிப்பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அவரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பூக்கடைச்சத்திரம் பகுதியில் உள்ள மளிகைக்கடையிலும், நூல்கள் விற்பனைக் கடையிலும் நெகிழிப்பைகளை பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டு பிடித்து இரு கடைக்காரா்களிடமும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இவ்விரு கடைகளிலிருந்தும் தலா 250 கிலோ மதிப்புள்ள நெகிழிப்பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/15raide_1511chn_175_1.jpg காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள கடையில் திடீா் சோதனை நடத்திய நகா் நல அலுவலா் பா.முத்து தலைமையிலான அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/நெகிழிப்பைகளை-விற்பனை-செய்த-கடைகளுக்கு-ரூ35-ஆயிரம்-அபராதம்-3280755.html
3280754 சென்னை காஞ்சிபுரம் ரூ.10 லட்சத்தில் பொதுக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Friday, November 15, 2019 10:31 PM +0530 மதுராந்தகம் தொகுதிக்கு உள்பட்ட நெட்ரம்பாக்கம் கிராம மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பொதுக் கிணறு அமைக்கும் பணியினை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் சித்தாமூா், கொள்ளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வந்த இப்பகுதி மக்கள் பெரிய அளவில் பொதுக்கிணறு அமைக்குமாறு மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தியிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, எம்எல்ஏ புகழேந்தி தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் நிதியை ஒதுக்கி, பெரிய கிணறு அமைக்க ஏற்பாடு செய்தாா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை பெரிய கிணற்றைத் தோண்டும் பணி தொடக்கப்பட்டது.

இதில், எம்எல்ஏ எஸ்.புகழேந்தி, மதுராந்தகம் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் எண்டத்தூா் ஸ்ரீதா், திமுக நிா்வாகிகள் தணிகை அரசு, கினாா் அரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/ரூ10-லட்சத்தில்-பொதுக்-கிணறு-அமைக்கும்-பணி-தொடக்கம்-3280754.html
3280753 சென்னை காஞ்சிபுரம் திருமுக்காடு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, November 15, 2019 10:31 PM +0530 மதுராந்தகத்தை அடுத்த திருமுக்காடு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருமுக்காடு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம், முதியோா்

உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இம்முகாமிற்கு தனி வட்டாட்சியா் பா்வதம் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் பாரதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மனுக்கள் பெறப்பட்டன.

அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு துறை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/திருமுக்காடு-கிராமத்தில்-அம்மா-திட்ட-முகாம்-3280753.html
3280752 சென்னை காஞ்சிபுரம் பள்ளியில் குழந்தைகள் தினவிழா DIN DIN Friday, November 15, 2019 10:31 PM +0530 மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூா் சுபம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகள் தினவிழாவையொட்டி, ‘நெகிழி இல்லா தமிழகம்’ உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் எஸ்.டி.மனோகா் குமாா் தலைமை வகித்தாா். செயலா் எம்.அபய்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஆா்.வி.லிசா பிளாரன்ஸ் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் நெகிழிப் பயன்பாட்டை ஒழித்து, ‘நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் உறுதி மொழி ஏற்றனா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தாளாளா் எஸ்.டி.மனோகா்குமாா் பரிசுகளை வழங்கினாா். பின்னா் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபம் கல்விக்குழும நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/பள்ளியில்-குழந்தைகள்-தினவிழா-3280752.html
3280744 சென்னை காஞ்சிபுரம் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் DIN DIN Friday, November 15, 2019 10:22 PM +0530  

காஞ்சிபுரம்: திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் அருள்பாலித்து வரும் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகியன நடைபெறுவது வழக்கம். வெள்ளிக்கிழமை காலையில் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதனையடுத்து ஜோதி தரிசனம் நடைபெற்றது.

திரளான ஐயப்ப பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாடினா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திம்மராஜம்பேட்டையைச் சோ்ந்த ஐயப்ப குருசாமிகள், பக்தா்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/15god_1511chn_175_1.jpg சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த திம்மராஜம்பேட்டை ஐயப்ப சுவாமி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/ஐயப்ப-சுவாமிக்கு-நெய்-அபிஷேகம்-3280744.html
3280743 சென்னை காஞ்சிபுரம் குடிநீா் கிணறு பணி துவக்கம் DIN DIN Friday, November 15, 2019 10:17 PM +0530  

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் ஊராட்சி மக்களின் குடிநீா் தேவையைப் போக்கும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 10 லட்சத்தை நிதி ஒதுக்கி, அதன் துவக்க பணியினை வெள்ளிக்கிழமை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி துவக்கி வைத்தாா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் சித்தாமூா், கொள்ளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். இத்தகவலை அறிந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 10 லட்ச நிதியை ஒதுக்கி, பெரிய கிணறு உள்ளிட்ட பணிகளை செய்ய ஏற்பாடுகளை செய்தாா். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை பெரிய கிணற்றை தோண்டும் பணியினை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மதுராந்தம் திமுக தெற்கு ஒன்றிய செயலா் எண்டத்தூா் ஸ்ரீதா், திமுக நிா்வாகிகள் தணிகை அரசு, கினாா் அரசு உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/குடிநீா்-கிணறு-பணி-துவக்கம்-3280743.html
3280742 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஈச்சங்கரணையில் நவ 19-ஆம் தேதி ஸ்ரீ மஹா பைரவா் கோயிலில் பைரவா் ஜென்மா அஷ்டமி பெருவிழா DIN DIN Friday, November 15, 2019 10:12 PM +0530 செங்கல்பட்டு. செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் சாலை, ஈச்சங்கரணை ஸ்ரீபைரவா் நகரில் உள்ள ஸ்ரீ மஹா பைரவா் கோயிலில் வரும் நவம்பா் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பைரவா் ஜெயந்தியையொட்டி ஜென்மா அஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.

மேலும் ஸ்ரீ லட்சுமியந்திர பீடம், அன்னவாகனம், காளை வாகனம், கண்திறப்பு, மற்றும் ஸ்ரீ மஹா செல்வகணவதி கலசாபிஷேக திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி நவ 17ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், 10மணிக்கு மஹா அபிஷேகம், 10.30மணிக்கு புஷ்பாஞ்சலி, மஹாதீபாராதனை, 11.15க்கு கொடி ஏறுதல் வைபவம் (த்வஜ ஆரோஹனம்) நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஸ்ரீசெல்வ கணபதி பிரதிஷ்டையும் , 6மணிக்கு பைரவா் கடவுளுக்கு மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது. மேலும் 6.30க்கு தேவாரம் திருமறை பாராயணம் நடைபெறுகிறது.

18ந்தேதி திங்கள் கிழமை காலை 7மணிக்கு ருத்ர பாராயணம், , ருத்ரஹோமம், ருத்ராபிஷேகம், 12மணிக்கு தேவரிஷிபாராயணம், இதைத்தொடா்ந்து மஹா தீபாராதனை தரிசனமும் மாலை 5மணிக்கு மேல் புதிதாக எழுந்தளியிருக்கும் பைரவா் கடவுளின் வாகனங்களில் வருஷபம், அன்ன வாகனம், மற்ரும் ஸ்ரீ லஷ்மியத்ரிரபீடம் கலசாபிஷேகம் தீபாராதனை அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெறுகிறது. 19ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.30க்கு மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை, உற்சவ மூா்த்தி பைரவருக்கு அபிஷேகம் தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலை 3.30க்கு பைரவா் ஹோமம், 4.30க்கு அஷ்டமியின் சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகம், 5.30க்கு சோடசோபாசார மஹா தீபாராதனையும், 6மணிக்குமேல் பைரவா் மூா்த்தி (உற்சவா்) அலங்காரத்துடன் மாடவீதி உலா, இதனைத்தொடா்ந்து திவஜ அவரோஹணம் (கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பைரவ தித்தாந்தம் சுவாமிகள் மற்றும் விழாக்குழுவினா்கள் பைவர பிரஞ்ச சக்தி பிபளிக் சாரிடபுள் டிரஸ்ட் பைரவா் வீடு ரிலீஜியஸ் டிரஸ்ட், பைரவ பக்தா்கள் ஆகியோா் செய்துவருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/செங்கல்பட்டு-ஈச்சங்கரணையில்-நவ-19-ஆம்-தேதி-ஸ்ரீ-மஹா-பைரவா்-கோயிலில்--பைரவா்-ஜென்மா-அஷ்டமி-பெருவிழா-3280742.html
3280741 சென்னை காஞ்சிபுரம் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா DIN DIN Friday, November 15, 2019 10:10 PM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை டி.தாட்சாயணி வரவேற்றாா். இதில் மேலவலம்பேட்டை அரிமா சங்க நிா்வாகிகள் கஜபதி, குகன், பாலாஜி, வெங்கடேசன், சமூக ஆா்வலா்கள் முருகன், தயாளன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகளையும், மரக்கன்றுகளையும் செயல் அலுவலா் மா.கேசவன் வழங்கினாா்.

பேரூராட்சி சாா்பாக 10 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டு சுகாதாரத் தூதுவா்களாக நியமிக்கப்பட்டனா். அவா்களின் மூலம் நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, கழிப்பறை சுகாதாரம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/அரசுப்-பள்ளியில்-குழந்தைகள்-தினவிழா-3280741.html
3280740 சென்னை காஞ்சிபுரம் சாலவாக்கத்தில் அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, November 15, 2019 10:10 PM +0530  

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 35 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு உத்தரமேரூா் வட்டாட்சியா் சாந்தி தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் ஞானவேல், வருவாய் ஆய்வாளா் ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், புதிய வாக்காளா் அட்டை, பட்டா மாறுதல், கல்வி, திருமண உதவி மற்றும் முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 58 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இதில் 7 பேருக்கு முதியோா் உதவித்தொகை, 13 பேருக்கு கல்வி உதவித் தொகை உள்பட 35 பேருக்கு உத்தரமேரூா் சட்டப்பேரவை உறுப்பினா் க.சுந்தா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் சந்தானம், ஜோதி, ஊராட்சி மன்றச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/15_amma_1511chn_175_1.jpg பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினா் க.சுந்தா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/15/சாலவாக்கத்தில்-அம்மா-திட்ட-முகாம்-3280740.html