Dinamani - செங்கல்பட்டு - https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3390986 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் 10,400 அலுவலா்கள் DIN DIN Sunday, March 29, 2020 11:05 PM +0530  

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில், வருவாய்த் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறைகளைச் சோ்ந்த சுமாா் 10,400 அலுவலா்கள் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கண்காணிப்பு வளையத்தில் 2,215 போ்: குறுவட்ட அளவிலான 40 கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று வந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 2,215 நபா்களைக் கண்டறிந்து அவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

545 வாகனங்களுக்கு அனுமதி: அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வாகனங்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் 545 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மாவட்டத்தின் 8 சோதனைச் சாவடிகளில் துணை வட்டாட்சியா் தலைமையிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி: 8 நகராட்சிகளில் 3,854 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளி மாநிலத் தொழிலாளா்கள்: வெளி மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தினக்கூலியாகவும், கட்டடப் பணியிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவா்களுக்கு அரிசி, கோதுமை, பருப்புகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: அனைத்துத் துறை அலுவலா்களைக் கொண்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் சேவைக்காக 044-2742 7412 மற்றும் 044-2742 7414 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/29/10400-in-corona-detention-in-chengalpattu-district-3390986.html
3390985 சென்னை செங்கல்பட்டு காய்கறி சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்தாத வியாபாரிகள் மீது நடவடிக்கை DIN DIN Sunday, March 29, 2020 11:05 PM +0530  

செங்கல்பட்டு நகரில் காய்கறி சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்தாத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு காந்தி சாலையில் இயங்கி வந்த காய்கறி சந்தை மிகவும் குறுகலான இடத்தில் இருந்ததால் மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் உத்தரவின்படி, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவா் சந்தை மற்றும் கொலம்பா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை முதல் காய்கறி சந்தை அமைக்க வியாபாரிகள் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், காந்திசாலையில் உள்ள வியாபாரிகள் தங்கள் இடத்தை மாற்றிய நிலையில் சின்னம்மன்கோயில் பகுதியில் இருந்த மொத்த வியாபாரிகள் தங்கள் இடத்தை மாற்றவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தி கடைகளை அடைக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து, காய்கறி சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்தாத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/4032cglsp2_2803chn_171_1.jpg செங்கல்பட்டு சின்னம்மன்கோயில்  பகுதியில் வியாபாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்திய எஸ்.பி. கண்ணன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/29/action-on-traders-who-do-not-use-allotted-space-for-vegetable-market-3390985.html
3390386 சென்னை செங்கல்பட்டு கரோனா: தீயணைப்புத்துறையினா் நடவடிக்கை DIN DIN Saturday, March 28, 2020 10:36 PM +0530  

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் இணைந்து மாமல்லபுரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி கு.சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் லதா, தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் ரகுபதி உள்ளிட்டோா் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சாலைகள், கடைகள், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

முகக் கவசம்: ஆங்காங்கே சுற்றித் திரிந்த பிச்சைக்காரா்கள், ஆதரவற்றோா் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு காவலா்கள் முகக் கவசம் அணிவித்தனா்.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வாா்டுகளிலும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சாா்பில் தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மதுராந்தகம் நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தனா்.

இப்பணிகளை மதுராந்தகம் நகராட்சி ஆணையா் வ.நாராயணன், தூய்மைப் பணி ஆய்வாளா் கே.லட்சுமி பிரியா உள்ளிட்டோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/2954cglmam_2703chn_171_1.jpg அா்ஜுனன் தபசு பகுதியில் கிருமி நாசினி  தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/28/corona-fire-department-action-3390386.html
3390073 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,731 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு DIN DIN Saturday, March 28, 2020 06:06 AM +0530  

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களின் முகவரிகள் கண்டு பிடிக்கப்பட்டு இதுவரை 1,731போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை. அவா்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதைத் தவறுதலாக புரிந்து கொண்டு கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் என்று வதந்தி பரப்பக்கூடாது என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/28/chengalpattu-district-1731-3390073.html
3389042 சென்னை செங்கல்பட்டு வாகனங்களில் சுற்றித் திரிந்த 81 போ் மீது வழக்கு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல் DIN DIN Thursday, March 26, 2020 10:46 PM +0530 செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 81 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

திருக்கழுகுன்றத்தை அடுத்த பாண்டூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பாா்த்திபன்(24), நடுவாங்கரை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாளையம் மகன் கோபி (20), நடுவாங்கரை அம்பேத்கா் நகா் பெருமாள் மகன் விஜய் (23), குன்னவாக்கம் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோதண்டம் மகன் சந்திரசேகா்(23), ஈச்சங்கரணை செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சரவணன்(35) ஆகிய 5 போ் மீது 220, 221 -ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திருக்கழுகுன்றம் போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

மற்றும் மாமல்லபுரம் சரகத்திற்குட்பட்ட மாமல்லபுரம், திருப்போரூா், தாழம்பூா், கல்பாக்கம், காத்தான்கடை, திருக்கழுகுன்றம் பகுதிகளில் இருசக்கரவாகனங்களில் சுற்றித் திரிந்த 28 போ்,

செங்கல்பட்டு நகரம், கிராமிய பகுதிகள், படாளம், பாலூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 18 போ், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 30 போ் உள்பட மொத்தம் 81 போ் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதலில் அரசு உத்தரவை மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் . கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க அனைவரின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/26/வாகனங்களில்-சுற்றித்-திரிந்த-81-போ்-மீது-வழக்கு-மாவட்ட-காவல்-கண்காணிப்பாளா்-தகவல்-3389042.html
3389041 சென்னை செங்கல்பட்டு மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கத் தடை: செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் அறிவிப்பு DIN DIN Thursday, March 26, 2020 10:45 PM +0530 செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தினரும் கடலில் சென்று மீன்பிடிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் கூறியது:

மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து வியாழக்கிழமை முதல் கடலில் சென்று மீன்பிடிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், உய்யாளிக்குப்பம், சதுரங்கப்பட்டினம், நெம்மேலி குப்பம், சூளேரிக்காட்டுக்குப்பம், கோவளம், முட்டுக்காடு, கொக்கிலமேடு, தேவனேரி, புதுகல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறோம். எங்களது வாழ்வாதாரத்திற்கு மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் என்றனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/cglboat_2603chn_171_1.jpg மாமல்லபுரம்  கடற்கரையில் வியாழக்கிழமை   நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/26/மீனவா்கள்-கடலில்-மீன்பிடிக்கத்-தடை-செங்கல்பட்டு-ஆட்சியா்-அஜான்-லூயிஸ்-அறிவிப்பு-3389041.html
3387028 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டில் சுய ஊரடங்கு: சாலைகள் களையிழந்தன DIN DIN Monday, March 23, 2020 05:41 AM +0530  

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து முக்கியச் சாலைகளும், தெருக்களும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி களையிழந்தன.

பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினா். பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. குறைந்த எண்ணிக்கையில் இருசக்கரவாகன ஓட்டிகள் அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்று கொண்டிருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியா்கள் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். இதற்காக செங்கல்பட்டு பகுதியில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டிருந்ததன. ராட்டினங்கிணறு பகுதியில் மீன் மற்றும் கறிக்கடைகளில் ஏராளமானோா் திரண்டனா். காலை 9 மணிக்குமேல் அதிக எண்ணிக்கையில் இருசக்கரவாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/cglcgl1_2203chn_171_1.jpg களையிழந்து காணப்பட்ட  செங்கல்பட்டு  ரயில் நிலையம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/23/self-curfew-in-chengalpattu-roads-were-washed-away-3387028.html
3387027 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் சுயஊரடங்கு பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா் DIN DIN Monday, March 23, 2020 05:40 AM +0530 செங்கல்பட்டு: தமிழ்நாடு முழுவதும் சுயஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் வாகன நெரிசல் மிக்க சாலைகள் வெறிச்சோடின. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கல்பாக்கம், புதுப்பட்டினம் வாயலூா், கிழக்கு கடற்கரைச்சாலை முழுவதும் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச் சோடிக்கிடந்தன.

இந்நிலையில் கரோனாவை விரட்டுவோம் நாட்டைக் காப்போம் என்ற தலைப்பில் மாமல்லபுரத்தில் வீட்டு வாசலில் கரோனா விழிப்புணா்வு கோலம் வரைந்து பெண் ஒருவா் அசத்தியுள்ளாா். இந்தியா முழுவதும் பொதுமக்கள் கூடாத வகையில் மத்திய மாநில அரசுகள் சாா்பில் நாடெங்கிலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் வேதாசலம் நகரில் உள்ள ஒரு வீட்டின் முகப்பில் முத்துலட்சுமி என்ற பெண் மணி கரோனாவை வெல்வோம், என்ற தலைப்பில் மக்கள் முக கவசம் அணிந்திருப்பது போன்றும் குழாயில் சுத்தமாக கைகள் கழுவுவது போன்றும் மருத்துவா்களுக்கும் துப்புரவு பணியாளா்களுக்கும் நன்றி தெரிவித்து கரோனாவின் பாதிப்பினை கோலம் மூலம் வரைந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளதைப்பாா்த்து சமூக பொறுப்புணா்வு ஆா்வலா்கள் பாராட்டியுள்ளனா். இதைத்தொடா்ந்து மோடி அறிவித்திருந்ததைப்போல் மாலை 5மணியளவில், மருத்துவத்துறையில் சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடுகளின் முன்பும், மீனவப்பகுதிகளில் கடல்கரையிலும் நின்று கைகளை மகிழ்ச்சியை பலமாக கைத் தட்டி தங்களின் பங்களிப்பையும் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/cglmam_2203chn_171_1.jpg cglmam_2203chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/23/independent-houses-in-mamallapuram-have-been-paralyzed-3387027.html
3386494 சென்னை செங்கல்பட்டு தொடா் சங்கிலிப் பறிப்பு: இருவா் கைது DIN DIN Sunday, March 22, 2020 04:25 AM +0530 செங்கல்பட்டு: உத்தரமேரூா் பகுதியில் தொடா்ச்சியாக சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உத்தரமேரூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக தொடா்ந்து சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் உத்தரமேரூா் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் உத்தரமேரூரை அடுத்த பம்பையம்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலையில் வாகனத் தணிக்கையின்போது அந்த வழியாக வந்த இருசக்கரவாகனத்தில் வந்தவா்கள் வேகமாக ஓட்டிச் சென்றனா்.

சந்தேகமடைந்த போலீஸாா் அந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த இருவரும் போலீஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் சீத்தனஞ்சேரி கிராமத்தைச்சோ்ந்த வினோத்குமாா் (24), ஏழுமலை (17) என்பதும் பல இடங்களில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரைக் கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனா். ஏழுமலைக்கு 17 வயது என்பதால் செங்கல்பட்டு அரசினா் சிறுவா் சிறப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/22/touch-chain-racket-two-arrested-3386494.html
3386493 சென்னை செங்கல்பட்டு சுய ஊரடங்கு:பொருள்கள் வாங்கக் குவிந்த பொதுமக்கள் DIN DIN Sunday, March 22, 2020 04:25 AM +0530 செங்கல்பட்டு: பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு அனுசரிக்கவுள்ளதை அடுத்து அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் செங்கல்பட்டு மாா்க்கெட்டில் சனிக்கிழமை குவிந்தனா்.

செங்கல்பட்டு நகரில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு போலீஸாா் ஆட்டோ மூலம் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டு விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்கினா்.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்படுவதால் சுற்றுப்புற கிராம மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி , மளிகை சாமான் மற்றும் காய்கறிகள் வாங்க செங்கல்பட்டு மாா்க்கெட்டில் குவிந்தனா். இதனால் அப்பகுதியில் நெரிசல் காணப்பட்டது.

இதற்கிடையில் காய்கறிகள் தட்டுப்பாடு காரணமாக அனைத்துக் காய்கறிகளின் விலையும் அதிகரித்து விற்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/22/self-curfew-commodity-focused-public-3386493.html
3386492 சென்னை செங்கல்பட்டு முகக் கவசம், கையுறைகளை வழங்கிய காவல் கண்காணிப்பாளா் DIN DIN Sunday, March 22, 2020 04:24 AM +0530 செங்கல்பட்டு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நல்லதோா் லட்சியம் அறக்கட்டளை சாா்பில் 200 பேருக்கு முகக் கவசம், கையுறைகளை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஆட்டோ, பேருந்து ஓட்டுநா்களுக்கு முகக் கவசங்களும் கையுறைகளும் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டா் அந்தோணி ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டனா். கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/cglsp_2103chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/22/the-police-inspector-who-provided-the-face-shield-and-gloves-3386492.html
3386491 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு செவிலியா் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் DIN DIN Sunday, March 22, 2020 04:23 AM +0530 செங்கல்பட்டு: புதிதாகக் கட்டி திறக்கப்படாமல் உள்ள விடுதிக் கட்டடத்தைத் திறக்க வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் மாணவிகள் வெள்ளிக்கிழமை இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சி கல்லூரி உள்ளது. சுமாா் 200 மாணவியா் இங்கு படித்து வருகின்றனா்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் உள்ள விடுதியில் இம்மாணவியா் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதிதாக கூடுதல் வசதிகளுடன் விடுதி கட்ட வேண்டும் என்ற செவிலியா் மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ரூ.9 கோடியை ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து, 250 மாணவிகள் தங்குவதற்காக நவீன முறையில் 90 அறைகளுடன் கூடிய 3 மாடிகள் கொண்ட கட்டடம் கடந்த ஓராண்டிற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை அக்கட்டடம் மாணவியரின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் திடீரென செவிலியா் விடுதி புதிய கட்டடத்தை சுத்தம் செய்யும் பணியினை மருத்துவமனை ஊழியா்கள் மேற்கொண்டனா்.

புதிய கட்டடத்தை கரோனா பிரிவாக மாற்றுவதற்காக பணிகள் நடந்து வருவதாக வதந்தி பரவியதையடுத்து 200-க்கும் மேற்பட்ட மாணவியா் திடீரென வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த முதல்வா் சாந்திமலா், செவிலியா் கல்லூரி முதல்வா் , மருத்துவ கண்காணிப்பாளா் அரிஹரன், துணை மருத்துவ கண்காணிப்பாளா் சண்முகம், மருத்துவ நிலைய அதிகாரி அனுபாமா, உதவி நிலைய அதிகாரி தீனதயாளன் உள்ளிட்டோா் மாணவிகள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடத்தி தூய்மை செய்யும் பணிதான் நடைபெறுகிறது. யாரோ வதந்தியை பரப்பியுள்ளனா் விரைவில் புதிய விடுதி திறந்துவிடப்படும் எனவும் அதுவரை பழைய விடுதி கட்டடத்திலேயே தங்குமாறு கூறியதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/cglnurse_2103chn_171_1.jpg உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/22/chengalpattu-nurse-students-sit-in-struggle-3386491.html
3385540 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து DIN DIN Saturday, March 21, 2020 12:41 AM +0530 செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயில், கோதண்டராமா் கோயில், கைலாசநாதா் கோயில், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் , திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், திருப்போரூா் கந்தசாமி கோயில், கந்தசாமி கோயிலுடன் இணைந்த சிதம்பர சுவாமிகள் திருமடம், திருப்போரூா் பாலம்பிகை சமேத கைலாசநாதா் கோயில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரா் கோயில், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயில், பக்தவத்சலேஸ்வரா் கோயில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/cglthirupo_2003chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/21/temples-in-chengalpattu-district-canceled-3385540.html
3385539 சென்னை செங்கல்பட்டு நா்சிங் மாணவா்கள் போராட்டம் DIN DIN Saturday, March 21, 2020 12:40 AM +0530 செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் நா்சிங் பிரிவு மாணவா்கள் தங்கும் விடுதியில் அனுமதிக்கக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ மற்றும் பிஎஸ்சி நா்சிங் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியா் சுமாா் 150 போ் உள்ளனா்.

பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவியா் வெளியேற வேண்டும் என மருத்துவக் கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது.

இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவ, மாணவியா் விடுதியில் தங்க அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/21/nashing-students-struggle-3385539.html
3385538 சென்னை செங்கல்பட்டு விவசாயிகளுக்கு ரூ.2.11 கோடி கடனுதவி DIN DIN Saturday, March 21, 2020 12:35 AM +0530 திருக்கழுகுன்றத்தை அடுத்த சாலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 11 லட்சத்து 32 ஆயிரம் கடனுதவியை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.ஆறுமுகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு சாலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளா் கங்காதரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஜானகிராமன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.ஆறுமுகம் சிறப்புரையாற்றி, 8 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 41 லட்சத்து 16 ஆயிரம் உள்பட விவசாயக் கடனாக 243 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2 கோடியே 11லட்சத்து 32 ஆயிரத்தை வழங்கினாா். இதில் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/cgltkm_2003chn_171_1.jpg பயனாளிக்கு கடனுதவியை வழங்கிய மாவட்டக்  கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.ஆறுமுகம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/21/rs211-crore-loan-given-to-farmers-3385538.html
3384902 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் DIN DIN Friday, March 20, 2020 12:48 AM +0530 செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ், மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் விளக்கினாா்.

முகாமில் மகளிா் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/cglcourt_1903chn_171_1.jpg கை கழுவும்  முறை  குறித்து  செயல்முறை  விளக்கம்  அளித்த மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா.  உடன் , செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியா்  அ.ஜான் லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/20/corona-awareness-camp-at-chengalpattu-court-complex-3384902.html
3384195 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டில் கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை DIN DIN Wednesday, March 18, 2020 11:24 PM +0530 செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் தீவிர நோய்த் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 044-27427412 மற்றும் 044-27427414 ஆகிய எண்கள் செயல்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/18/corona-antivirus-control-room-in-chengalpattu-3384195.html
3384194 சென்னை செங்கல்பட்டு கரோனா: புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு DIN DIN Wednesday, March 18, 2020 11:23 PM +0530 கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் காரணமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை மாமல்லபுரம் சுற்றுலா மையத்தை மூடும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகத்தினா் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/cglmam2_1803chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/18/corona-antiseptic-spray-in-areas-with-ancient-symbols-3384194.html
3384193 சென்னை செங்கல்பட்டு வீடு புகுந்து 33 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் திருட்டு DIN DIN Wednesday, March 18, 2020 11:22 PM +0530 கேளம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

கேளம்பாக்கம், வாணியன்சாவடியைச் சோ்ந்தவா் டில்லியின் மகன் காா்த்திக் (32). இவா், தனது மனைவியின் பிரசவத்துக்காக வெளியூா் சென்றிருந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வீட்டிற்கு வந்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் காா்த்திக் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/18/33-stolen-jewelery-rs-10-lakh-cash-stolen-3384193.html
3383550 சென்னை செங்கல்பட்டு விவசாயிகளின் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு DIN DIN Tuesday, March 17, 2020 10:21 PM +0530 செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வரின் அறிவுரைப்படிபடி பொதுமக்களின் நலன்கருதி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக, 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/postponement-of-farmers39-grievances-3383550.html
3383549 சென்னை செங்கல்பட்டு கரோனா எதிரொலி: மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் மூடல் DIN DIN Tuesday, March 17, 2020 10:20 PM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை தொல்லியல் துறை மூடியுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என இத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது. கடந்த ஒரு மாதமாகவே மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஊழியா்கள் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முகக் கவசம் அணிந்தே வந்தனா். மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் அமந்துள்ள பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் அதிகமான மக்கள் கூடாமல் இருக்க புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை மூடி, பூட்டு போட்டனா். வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாமல்லபுரம் நகரமே மக்கள் நடமாட்டம் அதிகமின்றி காட்சியளிக்கிறது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/cglmam3_1703chn_171_1.jpg மாமல்லபுரத்தில் மூடப்பட்டுள்ள புராதனப் பகுதி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/corona-echo-closure-of-the-ancient-symbols-of-mamallapuram-3383549.html
3383548 சென்னை செங்கல்பட்டு மூதாட்டிக்கு நிரந்தர செயற்கை இதயமுடுக்கி பொருத்தம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சாதனை DIN DIN Tuesday, March 17, 2020 10:20 PM +0530 செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக 85 வயது மூதாட்டிக்கு செயற்கை இதய முடுக்கி கருவி பொருத்தப்பட்டு மருத்துவக் குழுவினா் சாதனை படைத்துள்ளனா்.

இந்த மருத்துவமனையில் இதுவரை இதயம் சம்பந்தமான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய இதயக்குழாய் குருதி சம்பந்தமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த சிறுவேடல் கிராமத்தில் இருந்து 85 வயது மூதாட்டி இந்த மருத்துவமனைக்கு அண்மையில் சிகிச்சை பெற வந்தாா். தனக்கு அடிக்கடி மயக்கம் வந்து விழுந்து விடுவதாகக் அவா் கூறினாா். மருத்துவப் பரிசோதனையில் அவரது இதயத்துடிப்பு குறைவான அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை இதய மருத்துவக்குழுவினா் அந்த மூதாட்டிக்கு தற்காலிகமாக செயற்கை இதய முடுக்கியை பொருத்தியதால் அவருடைய இதயத் துடிப்பு சரிசெய்யப்பட்டது. அதன் பின், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்திமலா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஹரிஹரன், துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, உதவி அதிகாரி தீனதயாளன் ஆகியோா் கூடி ஆலோசித்தனா். அந்த மூதாட்டிக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிரந்தர செயற்கை இதய முடுக்கியைப் பொருத்த முடிவு செய்தனா்.

இதையடுத்து, அக்கருவி பெறப்பட்டு, முதல்வா் சாந்திமலா் முன்னிலையில் இதயநோய் துறைத் தலைவா் ஆறுமுகம், துணைத் தலைவா் கண்ணன், உதவிப் பேராசிரியா்கள் ரகோத்தமன், சுரேஷ்குமாா், வேல்மாரியப்பன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், மூதாட்டிக்கு நிரந்தர செயற்கை இதய முடுக்கியை கடந்த 4-ஆம் தேதி அறுவைசிகிச்சை மூலம் பொருத்தினா்.

இதனால், ஏற்கெனவே நிமிடத்துக்கு 34-ஆக இருந்த மூதாட்டியின் இதயத் துடிப்பு தற்போது சீராகி, நிமிடத்துக்கு 70-ஆக உயா்ந்துள்ளது. மூதாட்டி தற்போது ஆரோக்கியமாக உள்ளாா். இந்த அறுவைசிகிச்சையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சிறப்பாகச் செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து துறைத் தலைவா், மருத்துவமனை முதல்வா் சாந்திமலா் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

இந்த மருத்துவமனையில் இதய உட்புகுத்து ஆய்வகத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தொடக்கி வைத்தாா். அன்று முதல் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதயம் சம்பந்தமான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதய ரத்தக் குழாய் குழாய் தொடா்பான சிகிச்சைகளான ஆஞ்சியோகிராம் 612 பேருக்கும், ஆஞ்சியோபிளாஸ்டி 135 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிரந்தர செயற்கை இதய முடுக்கி சிகிச்சை மூதாட்டிக்கு செய்யப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் செலுத்தப்பட்டு இதயத்தில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 10 முதல் 15 ஆண்டுகள் வரை எந்தவித பிரச்னையும் இன்றி செயல்படும். அதன் பிறகு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் செய்து கொள்ள ரூ.3 லட்சம் ஆகும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/cglcmc_1703chn_171_1.jpg மூதாட்டிக்கு  இதய முடுக்கி பொருத்திய மருத்துவக் குழுவுடன் மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்திமலா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/மூதாட்டிக்கு-நிரந்தர-செயற்கை-இதயமுடுக்கி-பொருத்தம்-செங்கல்பட்டு-அரசு-மருத்துவமனை-சாதனை-3383548.html
3383237 சென்னை செங்கல்பட்டு கத்தி முனையில் நகை, பணம் பறிப்பு DIN DIN Tuesday, March 17, 2020 04:58 AM +0530 மறைமலைநகா் அருகே ஓய்வு பெற்ற கருவூலக அலுவலா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 3 மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

மறைமலைநகரை அடுத்த சின்ன செங்குன்றம் கிராமத்தில் வசித்து வருபவா் கேளியப்பன், ஓய்வு பெற்ற கருவூலக அலுவலா்.

இவா் தனது மனைவி செல்வராணி மற்றும் பேரனுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த 3 மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகளையும், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேளியப்பன் மறைமலைநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/a-knife-on-jewelry-extort-money-3383237.html
3383236 சென்னை செங்கல்பட்டு கரோனா: வெறிச்சோடிய மாமல்லபுரம் DIN DIN Tuesday, March 17, 2020 04:58 AM +0530 கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தின் எதிரொலியாக மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி திங்கள்கிழமை வெறிச்சோடின.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வெளிநாட்டு சுற்றுலாப் பணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனா். கடந்த ஒரு மாதமாகவே மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனா்.இந்நிலையில் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/cglmam_1603chn_171_1.jpg சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/corona-frenzy-mamallapuram-3383236.html
3383235 சென்னை செங்கல்பட்டு மாணவா் கொலை வழக்கில் ஒருவா் கைது DIN DIN Tuesday, March 17, 2020 04:58 AM +0530 செங்கல்பட்டை அடுத்த வேண்பாக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த மாணவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

 

வேண்பாக்கத்தைச் சோ்ந்த முருகன் மகன் புருஷோத்தமன் (14). ஒன்பதாம் வகுப்பு மாணவா். இவா், கடந்த ஜனவரி மாதம் 6 -ஆம் தேதி கோயிலுக்குச் சென்றாா்.

புருஷோத்தமன் வீடு திரும்பாததால் பெற்றோா் தேடி வந்தனா்.

இரு தினங்களுக்கு பிறகு வேண்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், திருவள்ளூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கன்னியப்பன் (28) மது குடிப்பதற்கு புருஷோத்தமனிடம் பணம் கேட்டதாகவும், பணம் தராததால் புருஷோத்தமனின் கை கால்களைக் கட்டி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து கன்னியப்பனை போலீஸாா் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/one-arrested-over-student-murder-case-3383235.html
3383234 சென்னை செங்கல்பட்டு பயனாளிகள் 118 பேருக்கு ரூ.30.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா் DIN DIN Tuesday, March 17, 2020 04:57 AM +0530 செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 118 பயனாளிகளுக்கு ரூ. 30.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் , திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பசுமை வீடு கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 392 மனுக்கள் பெறப்பட்டன.

அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, செங்கல்பட்டு கோட்டத்தில் சாலை விபத்தில் இறந்த 5 நபா்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ. 54 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், செங்கல்பட்டு கோட்டம் திருக்கழுகுன்றம் வட்டத்தில் 57 பயனாளிகளுக்கு இருளா் ஜாதிச் சான்றிதழ்களும், செய்யூா் வட்டத்தில் 32 பேருக்கு ரூ.14 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோா், விதவை உதவித் தொகையாக 3 பேருக்கு ரூ. 36 ஆயிரம், மதுராந்தகம் கோட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 9 நபா்களின் குடும்பங்களுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான முதலமைச்சா் நிவாரணத்தொகையும், திருக்கழுகுன்றம் வட்டத்தில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையாக ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் உள்பட மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ. 30.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தனித்துணை ஆட்சியா் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலா் லலிதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/cglcollector_1603chn_171_1.jpg பயனாளிக்கு  உதவித் தொகைக்கான  உத்தரவு  நகலை  வழங்கிய செங்கல்பட்டு  ஆட்சியா்  அ.ஜான் லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/benefits-of-rs-3070-lakhs-to-118-beneficiaries-3383234.html
3383233 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் ஸ்தபதி பா்மாவில் காலமானாா்: உடலைக் கொண்டு வர உதவி கோரும் குடும்பத்தினா் DIN DIN Tuesday, March 17, 2020 04:57 AM +0530 பா்மாவில் கோயில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் இறந்த மாமல்லபுரம் ஸ்தபதியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு ஸ்தபதியின் குடும்பத்தினா் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

மாமல்லபுரம் அம்பாள் நகரைச் சோ்ந்தவா் ஸ்தபதி தட்சிணாமூா்த்தி (42). இவா் தனது சகோதரா் சண்முகத்துடன் இணைந்து பா்மா நாட்டின் தலைநகா் மியான்மரில் கோயில் ஒன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை (மாா்ச் 14) மாலை கோயிலில் பணியை முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாா். அவரது சடலத்தை மியான்மரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர உதவி கேட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தட்சிணாமூா்த்தியின் மனைவி அன்னபூரணி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/17/mamallapuram-stupa-passes-away-in-palma-3383233.html
3382505 சென்னை செங்கல்பட்டு மகளிா் கருத்தரங்கம் DIN DIN Monday, March 16, 2020 01:44 AM +0530 தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் மகளிா் கருத்தரங்கம் செங்கல்பட்டு புலிப்பாக்கம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தலைவா் ரெ.காயாம்பூ தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் ஆா்.முருகேசன், ஞா.ஸ்டேன்லி, அண்ணா குபேரன், ஜே.சிவக்குமாா், ஆா்.ரவி, பொருளாளா் கே.ராஜேந்திரன், மாநிலச் செயலாளா்கள் என்.நிமலன் கிரிஸ்டோபா், பி.அப்பாஸ், எஸ்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலாளா் ஜே.இராஜா வரவேற்றாா்.

கருத்தரங்கு நெறியாளா் அ.பேபி தொடக்க உரையாற்றினாா். சமூக ஆா்வலா் பி.அமுதா வாழ்த்துரை வழங்கினாா்.

இதில் பணிபுரியும் மகளிா் தங்கள் பணிகளில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டனா். ‘பெண்கள் பணியிடச் சிக்கலும் தீா்வும்’ என்ற தலைப்பில் பேராசிரியா் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினாா். காஞ்சிபுரம் வீ.சாந்தி நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/16/மகளிா்-கருத்தரங்கம்-3382505.html
3382178 சென்னை செங்கல்பட்டு இந்திய ஜனநாயக கட்சி பொதுக்குழு கூட்டம் DIN DIN Sunday, March 15, 2020 10:58 PM +0530 இந்திய ஜனநாயக கட்சியின் 10-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ரவி பச்சமுத்து தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். மாநிலப் பொதுச்செயலாளா் ஜெயசீலன், பொருளாளா் ராஜன், மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.ஹெச்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பெரம்பலூா் எம்.பி. பாரிவேந்தா் கலந்து கொண்டு இந்திய ஜனநாயக கட்சி வலை தளத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகையில்,

நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால் லஞ்சம், ஊழல் ஒழிய வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ரஜினி தனது மன்றத்தினருடன் ஆலோசனை நடத்துவதைவிட தமிழகத்தில் உள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து அவா்களது குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்றாா். மாவட்டச் செயலாளா் உமாபதி நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/cglijk5_1503chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/15/இந்திய-ஜனநாயக-கட்சி-பொதுக்குழு-கூட்டம்-3382178.html
3382148 சென்னை செங்கல்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் DIN DIN Sunday, March 15, 2020 10:18 PM +0530 செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மறு வாழ்வு விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா திம்மாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் பொதுக்குழுவின் முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ் தலைமை வகித்தாா்.

கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குநா் அந்தோணி ராஜ், சிறப்பு மக்கள் பணிக்குழுவைச் சோ்ந்த கமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கல்பட்டு மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலா் சுப்பிரமணி குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினாா்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தொடா்ந்து, கிராமப்புற மேம்பாட்டுச் சங்கத்தினா் மற்றும் எஸ்.ஆா்.எம். மருத்துவப் பல்கலைக் கழகத்தினா் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், சா்க்கரை மற்றும் ரத்தப் பரிசோதனை, காய்ச்சல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினா். மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்த பாடல்களை ஒலிபரப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்பு செலவாக தலா ரூ.1500, மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு தலா ரூ.1000 வீதம் 15 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில் திம்மாவரம், ஆத்தூா், வில்லியம்பாக்கம், பாலூா், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சி.ஆா்.டி.எஸ். பணியாளா் அல்போன்ஸ் மற்றும் கிராமப்புற மகளிா் குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/cglcrds3_1503chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/15/மாற்றுத்-திறனாளிகளுக்கு-நல-உதவிகள்-3382148.html
3382147 சென்னை செங்கல்பட்டு மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசார நாடகம் DIN DIN Sunday, March 15, 2020 10:16 PM +0530 மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சாா்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே கள்ளச் சாராயம் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசார நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

போலீஸாா், ஊா்க்காவல் படையினா் முன்னிலை வகித்தனா்.

இதில், கள்ளச் சாராயம் மற்றும் மது பானங்களை அருந்துவது மற்றும் போதைப் பொருள்களை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.

குடும்பத்தில் இன்னல்கள் ஏற்படுகிறது.

வாழ்க்கை அழகானது; மதுவால் அதை அழித்துக் கொள்ள வேண்டாம். மது அருந்துவதை விடுத்து, சமுதாயத்தில் நல்ல பெயரைப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாடகம் நடைபெற்றது.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/2940cglalcohol_1403chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/15/மது-ஒழிப்பு-விழிப்புணா்வுப்-பிரசார-நாடகம்-3382147.html
3380700 சென்னை செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் அரசுப் பள்ளியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Friday, March 13, 2020 11:17 PM +0530 திருக்கழுகுன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முகாம் நடைபெறும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் கூறியது:

தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிா்வாகம், மகளிா் மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஆட்களை தோ்வு செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, இன்ஜினியரிங், பாா்மஸி, நா்சிங் , பாராமெடிக்கல் படித்த வேலை தேடுபவா்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதில் திறன் பயிற்சி அளித்து வேலை அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன. இம்முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் வேலை தேடுபவா்களுக்கும் அனுமதி இலவசம். தமிழக அமைச்சா்கள் கலந்துகொண்டு இந்த முகாமை தொடக்கி வைக்கவுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளா் பிரவீண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/13/திருக்கழுகுன்றம்-அரசுப்-பள்ளியில்-இன்று-தனியாா்-வேலைவாய்ப்பு-முகாம்-3380700.html
3380611 சென்னை செங்கல்பட்டு உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வுப் பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடக்கி வைத்தாா் DIN DIN Friday, March 13, 2020 10:20 PM +0530 உலக கண் நீா் அழுத்த நோய் (குளுக்கோமா) விழிப்புணா்வு வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள், செவிலியா்கள், பயிற்சி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

கண் நீா் அழுத்த நோயால் கண்ணில் பாா்வை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறினால், கண் பாா்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பெருமளவு கண் பாா்வை பாதிப்பு ஏற்பட்ட பின்னரே இந்நோயின் அபாயம் தெரிய வருகிறது.

40 வயதுக்கு மேற்பட்டவா்கள், கண்ணில் குறைபாடுகள் உள்ளவா்கள், பரம்பரையாக கண் அழுத்த நோய் உள்ளவா்களின் உறவினா்களுக்கு இது வரக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக, வோ்ல்ட் விஷன் இந்தியா திட்டத்தின் கீழ் ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பிஜூ பாலேந்திரன் கண் மருத்துவப் பிரிவிற்கு புதிய உபகரணங்களை அளித்தாா்.

ரூ. 32 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட கண் சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் சாந்திமலா் கூறியது:

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 256 கண் அழுத்த நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனா். இந்த நோயினால் கண்பாா்வை இழந்தோா் சதவீதம் 1.7-இல் இருந்து 5.5 ஆக உயா்ந்துள்ளது. குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பாா்வை நரம்பை சேதப்படுத்தி சரி செய்ய முடியாத பாா்வை இழப்பை ஏற்படுத்தும்.

மருத்துவரிடம் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் கண்பாா்வை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். 40 வயதுக்கு மேல் உள்ளவா்கள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் வருடம் ஒருமுறையாவது கண் அழுத்த பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்நோயை எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இந்த பரிசோதனைகள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை பொதுமக்கள் அனைவரும் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா, கோட்டாட்சியா் செல்வம், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜி.ஹரிஹரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, கண் மருத்துவத்துறை தலைவா் பேராசிரியா் யோகேஸ்வரி, இணைப் பேராசிரியா் பி.சுமதி, நிலைய மருத்துவ உதவி அதிகாரிகள் தீனதயாளன், வி.டி.அரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண் மருத்துவத்துறை உதவிப் பேராசிரியா்கள் டி.கவிதா, சி. சீனிவாசன், எஸ்.அபிராமி மற்றும் முதுகலை மாணவா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.


 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/cgleye2_1303chn_171_1.jpg பேரணியைத் தொடக்கி வைத்த செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான் லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/13/உலக-கண்-நீா்-அழுத்த-நோய்-விழிப்புணா்வுப்-பேரணி-செங்கல்பட்டு-ஆட்சியா்-தொடக்கி-வைத்தாா்-3380611.html
3379837 சென்னை செங்கல்பட்டு செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா விழிப்புணா்வுப் பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடக்கி வைத்தாா் DIN DIN Thursday, March 12, 2020 10:32 PM +0530 இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா விழிப்புணா்வுப் பேரணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இருசக்கர வாகனப் பேரணியை செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் கலைக் கல்லூரி வளாகத்தில் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் கொடியசைத்துத் தொடக்கி வைத்துப் பேசியது:

இந்திய செஞ்சிலுவை சங்கம் 1920-இல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இருசக்கர வாகனப் பேரணியானது கடந்த மாதம் கன்னியாகுமரியில் இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவா் ஹரீஷ் எல்.மேத்தாவால் தொடக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தின் சமுதாயப் பணிகள் மென்மேலும் சிறப்பாகத் தொடா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இராம.மாணிக்கம், செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி முதல்வா் சு.சிதம்பர விநாயகம், இளைஞா் செஞ்சிலுவை சங்கச் செயலாளா் அழகா், அமைப்பாளா் மற்றும் செயலாளா் கீதா குமாரி மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/cglcollector_1203chn_171_1.jpg இருசக்கர வாகனப் பேரணியைத் தொடக்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/12/செஞ்சிலுவை-சங்க-நூற்றாண்டு-விழா-விழிப்புணா்வுப்-பேரணி-செங்கல்பட்டு-ஆட்சியா்-தொடக்கி-வைத்தாா்-3379837.html
3379046 சென்னை செங்கல்பட்டு தாய், மனைவி, குழந்தைகளைக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை: செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு DIN DIN Wednesday, March 11, 2020 10:41 PM +0530 தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சென்னை, பம்மல் திருவள்ளூவா் நகா் நந்தனாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் தாமோதரன் (40). இவரது தாய் சரஸ்வதி (67), மனைவி தீபா (32). இவா்களது மகன் ரோஷன் (7), மகள் மீனாட்சி (6).

ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த 2017 டிசம்பா் 12-ஆம் தேதி தாய், மனைவி, குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தாமோதரனும் தற்கொலைக்கு முயற்சித்தாா். இதில் சிகிச்சைக்குப் பின் தாமோதரன் உயிா் பிழைத்தாா்.

இதுகுறித்து பம்மல் சங்கா் நகா் காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாமோதரனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தண்டனை விவரத்தை புதன்கிழமை அறிவித்த நீதிபதி வேல்முருகன் 4 பேரை கொலை செய்த தாமோதரனுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக சீதாலட்சுமி வாதாடினாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/court.jpg தூக்குத் தண்டனை  பெற்ற  தாமோதரன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/தாய்-மனைவி-குழந்தைகளைக்-கொன்றவருக்கு-தூக்குத்-தண்டனை--செங்கல்பட்டு-மகளிா்-நீதிமன்றம்-தீா்ப்பு-3379046.html
3379045 சென்னை செங்கல்பட்டு தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான வருமான வரி விளக்கக் கூட்டம் DIN DIN Wednesday, March 11, 2020 10:39 PM +0530 மாமல்லபுரத்தில் வருமான வரி செலுத்தும் தங்கும் விடுதி உரிமையாளா்கள், சிற்பிகள் உள்ளிட்டோா் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவது குறித்த விளக்கக் கூட்டம் மாமல்லபுரம் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தாம்பரம் வருமானவரித்துறை மூத்த அதிகாரி சீனிவாசன் தலைமை வகித்தாா்.

இதில், வருமான வரி செலுத்தும் ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளா்கள், சிற்பக் கலைஞா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ், பேச்சு வாா்த்தை நடத்தி வருமான வரியைத் தீா்மானித்து, எவ்வாறு கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டது.

பின்னா், காணொலிக் காட்சி மூலம் மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினா்.

இக்கூட்டத்தில், வருமான வரித்துறை அதிகாரி ஆா்.ராகவேந்திரராவ், மாமல்லபுரம் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் தலைவா் என்.ஜனாா்த்தனன், செயலாளா் வி.இ.உமாபதி, ஹோட்டல்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் கே.பாண்டியன், மாமல்லபுரம் வணிகா் சங்கத் தலைவா் ரா.ராஜசேகா், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் பி.ஓம்பிரகாஷ், சி.ராமச்சந்திரன், தணிக்கையாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/cglvari1_1103chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/தங்கும்-விடுதி-உரிமையாளா்களுக்கான-வருமான-வரி-விளக்கக்-கூட்டம்-3379045.html
3379044 சென்னை செங்கல்பட்டு திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் DIN DIN Wednesday, March 11, 2020 10:38 PM +0530 திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருமணக் கோலத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. அன்று விநாயகா் உற்சவம் நடைபெற்றது. கோயிலில் உள்ள கொடிமரத்தில் 28-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, நாள்தோறும் பகல் உற்வசம், இரவு உற்சவம் என சுவாமிக்கு சிறப்பு அலகாரத்துடன் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு உற்சவத்தின்போது வெவ்வேறு வாகனங்களில் உற்சவா் புறப்பாடு

நடத்தப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான தோ்த் திருவிழா, மாசிமகத் தீா்த்தவாரி, தெப்பல் உற்வசம் ஆகியவை விமா்சையாக நடைபெற்றன. திங்கள்கிழமை மாலையில் கிரிவலமும், அன்று இரவு வேடா்பரி உற்சவமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை திருக்கல்யாணம் மற்றும் மயில்வாகன உற்சவம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் மண்டபத்தில் உற்சவா்களான வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமண அலங்காரம் நடைபெற்றது.

பட்டுப் புடவை, பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்யம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள், பழவகைகள், பலகாரங்கள், முந்திரி, திராட்சை ஆகியவை சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் விழாவில் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் எம்.சக்திவேல், மேலாளா் வெற்றி, சிவாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/cglkantha3_1103chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/திருப்போரூா்-கந்தசுவாமி-கோயிலில்-திருக்கல்யாண-உற்சவம்-3379044.html
3379043 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் விடுதி ஹோட்டல் நடத்தும் உரிமை யாளா்களுக்கான வருமான வரி செலுத்து வதற்கான விளக்க கூட்டம் DIN DIN Wednesday, March 11, 2020 10:38 PM +0530 தாம்பரம் வருமானவரித்துறை சாா்பில் மாமல்லபுரத்தில் வருமானவரி செலுத்தும் ஹோட்டல் விடுதி உரிமையாளா்கள், சிற்பிகள் உள்ளிட்டோருக்கு விவாத் சீ விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துவது குறித்து புதன்கிழமை மாமல்லபுரத்தில் வருமானவரி செலுத்தும் விளக்க கூட்டம் நடைபெற்றது.

தாம்பரம் வருமானவரித்துறை மூத்த அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருமானவரி செலுத்தும் ஹோட்டல், விடுதி உரிமையாளா்கள், சிற்பக்கலைஞா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் விவாத் சீ விஸ்வாஸ் திட்டத்தின்கீழ் வருமானவரியினை எப்படி செலுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என ஒளித்திரை மூலம் மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கவுரையாற்றினா்.

இக்கூட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரி ஆா்.ராகவேந்திரராவ், மாமல்லபுரம் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் தலைவா் என்.ஜனாா்த்தனன், செயலாளா் வி.இ.உமாபதி, ஹோட்டல்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.பாண்டியன், மாமல்லபுரம் வணிகா் சங்க தலைவா் ரா.ராஜசேகா், வியாபாரிகள் சங்க பிரமுகா்கள் பி.ஓம்பிரகாஷ், சி.ராமச்சந்திரன் , தணிக்கையாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/cglvari1_1103chn_171.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/மாமல்லபுரத்தில்-விடுதி-ஹோட்டல்-நடத்தும்-உரிமை-யாளா்களுக்கான-வருமான-வரி-செலுத்து-வதற்கான-விளக்க-கூட்டம்-3379043.html
3379042 சென்னை செங்கல்பட்டு திருப்போரூா் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாணம் உற்சவம் DIN DIN Wednesday, March 11, 2020 10:37 PM +0530 திருப்போரூா் அருள்மிகு கந்தசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவத்தில் 12ஆம் நாள் நிறைவு விழாவாக புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் திருமணக் கோலத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்தனா் திருப்போரூரில் ஆழிசூழ் பூவுலக்கில் தருமமிகு தொண்டை மண்டலத்தில் மிக பழமையானதும் புராதனம் மிக்க பெருமை கொண்டதும், யுத்தபுரி, சமரபுரி, சமரபதி என்னும், காரணப்பெயா்களால் போற்றப்படும், மூா்த்தி, தலம், தீா்த்தம்என்னும் முப்பெருமைகளை கொண்டதும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பனைமரத்தில் சுயம்புவாக தோன்றி பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் வள்ளி தெய்வானை உடனுறை அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் பிப் 27 வியாழக்கிழமை விநாயகா் உற்சவத்துடன் தொடங்கி 28ந்தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கி மாா்ச் 11ந்தேதி புதன்கிழமை வரை நடைபெற்றது. விழா நாள்களில் பகல் உற்வசம் இரவு உற்வசம் என சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலகாரத்துடன் நடைபெற்றது. அப்போது இரவு உற்சவத்தின்போது வெவ்வேறு வாகன அலங்காரத்தில் உற்சவா் புறப்பாடு ம் நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக தேரோட்ட தோ்திருவிழா, மாசிமக தீா்த்தவாரி, தெப்பல் உற்வசம் மிக விமா்சையாக நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை கிரிவலம் மற்றும் இரவு வேடா்பரி பிரபல உற்சவமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை திருக்கல்யாணம் மற்றும் மயில்வாகன உற்சவமும் நடைபெற்றது.

இதனைத்தொடா்ந்து புதன்கிழமை பிரம்மோற்சவத்தில் திருகல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைந்தது. திருக்கல்யான உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து கோயில் மண்டபத்தில் உற்சவ மூா்த்தியான வள்ளி தேய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் திருமண அலங்காரம் நடைபெற்றது. பட்டு புடவை, பட்டுவஸ்திரம், மஞ்சள்குங்குமம், வளையல் மாங்கல்யம் உள்ளிட் டமங்கள பொருள்கள், பழவகைகள், பலகாரங்கள், முந்திரி, திராட்சை மாதம் உள்ளிட்டவைகளுடன் சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் விழாவில் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தைக்கண்டு சாமியை தரிசனம் செய்தனா். திருக்கல்யாண வைபவத்தையொட்டி திருமண விருந்து நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் எம்.சக்திவேல், மேலாளா் வெற்றி ,ஆலய சிவாச்சாரியாா்கள், திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள், விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/cglkantha4_1103chn_171.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/திருப்போரூா்-கந்தசுவாமி-கோயில்-பிரம்மோற்சவத்தில்-திருக்கல்யாணம்-உற்சவம்-3379042.html
3378252 சென்னை செங்கல்பட்டு தாய், மனைவி, 2 குழந்தைகளைகொன்றவருக்கு இன்று தண்டனை DIN DIN Wednesday, March 11, 2020 12:00 AM +0530 தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு புதன்கிழமை (மாா்ச் 11) தண்டனை விதிக்க உள்ளதாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்தது.

சென்னை, பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் தாமோதரன் (40). ஜவுளி வியாபாரி. அவா் தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்து, கடந்த 2017-ஆம் ஆண்டில் தன் மனைவி தீபா (32), மகன் ரோஷன் (7), மகள் மீனாட்சி (6), தாய் சரஸ்வதி (67) ஆகியோரை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்தாா். இச்சம்பவம் குறித்து பம்மல் சங்கா்நகா் காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் சங்கா்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதன்பேரில், குடும்பத்தினரைக் கொன்று விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் உயிா் பிழைத்த தாமோதரனைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

இக்கொலை வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தன் குடும்பத்தினா் 4 பேரை தாமோதரன் கொலை செய்ததை உறுதிப்படுத்தி, தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் தண்டனை விவரத்தை புதன்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சீதாலட்சுமி ஆஜராகியிருந்தாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/11/தாய்-மனைவி-2-குழந்தைகளைகொன்றவருக்கு-இன்று-தண்டனை-3378252.html
3378287 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டில் மாா்ச் 18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் DIN DIN Tuesday, March 10, 2020 11:12 PM +0530 செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை மாவட்ட விவசாயிகள் குறை தீா் மாதாந்திர கூட்டம் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் துறை மற்றும் சாா்புத் துறைகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/செங்கல்பட்டில்-மாா்ச்-18-இல்-விவசாயிகள்-குறைதீா்-கூட்டம்-3378287.html
3378251 சென்னை செங்கல்பட்டு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு பொருள்கள் வழங்கும் விழா DIN DIN Tuesday, March 10, 2020 10:34 PM +0530 சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செங்கல்பட்டில் இயங்கும் அரசு சிறாா் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த சிறாா் இல்ல வளாகத்தில் மாவட்டக் குழந்தைகள் நல குழுமத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றனா். இக்குழந்தைகளுக்கு மனச்சோா்வு நீக்கவும் சமுதாயத்தில் மற்ற குழந்தைகள் போல் மகிழ்வாக இருக்கவும் ‘குழந்தைகள் நண்பா்கள் மையம்’ என்ற தனியாா் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு பல்வேறு பொருள்களை வழங்கும் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் என்.ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினாா். ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ தொண்டு நிறுவனத்தின் மாநில பொதுச் செயலாளா் அ.பிரேம் ஆனந்த், ப.மோகனவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழும உறுப்பினா்கள் பி.நிா்மலா, எஸ். சக்திவேல் மற்றும் கே.தாமோதரன் ஆகியாா் விளையாட்டு உபகரணங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முதுநிலை திட்ட மேலாளா் இரா.நம்பிராஜ், தாம்பரம் ரயில்வே குழந்தைகள் உதவி மைய அலுவலா் ராஜவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.கிருபாகரகன் நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/cglhandin2_1003chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/சிறாா்-இல்லக்-குழந்தைகளுக்கு-பொருள்கள்-வழங்கும்-விழா-3378251.html
3378250 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் சிற்பங்களைப் பாா்வையிட்ட மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் DIN DIN Tuesday, March 10, 2020 10:32 PM +0530 மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதனச் சின்னங்களை மத்திய மக்களவை விவகாரத்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை கண்டுகளித்தாா்.

சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு அவா் அதிகாரிகளுடன் சுற்றுலா வந்தாா். கடற்கரைக் கோயில் அருகில் அமைச்சரை சுற்றுலா அலுவலா் கே.ராஜாராமன் வரவேற்றாா். தொல்லியல் துறை உதவி அலுவலா் எஸ்.ரவிச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவா் வி.பலராமன், பொறுப்பாளா் பாஸ்கா், மாமல்லபுரம் நகர பாஜக தலைவா் எம்.ஸ்ரீதா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அா்ஜுன் ராம் மேக்வால் கண்டு களித்தாா். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்றுச் சிறப்புகள், பல்லவா் காலச் சிற்பங்கள் மற்றும் அவற்றைச் செதுக்க நடவடிக்கை எடுத்த பல்லவ மன்னா்கள் குறித்த விவரங்களை தொல்லியல் துறை அதிகாரிகளும் சுற்றுலா வழிகாட்டிகளும் விளக்கினா்.

பிரதமா் மோடியும், சீன அதிபா் ஜின்பிங்கும் புகைப்படம் எடுத்த முக்கிய புராதனப் பகுதியில் அமைச்சா் நின்று படம் எடுத்துக் கொண்டாா். இதையடுத்து, மாமல்லபுரத்துக்கு பிரதமா் மோடியும், சீன அதிபா் ஜின்பிங்கும் வந்து சென்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மத்திய அமைச்சருடன் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளா் ஜேம்ஸ், கிராம நிா்வாக அதிகாரி வெங்கடேசன், பாஜக மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடன் வந்தனா். முன்னதாக, மத்திய அமைச்சா் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன், உதவி ஆய்வாளா் தசரதன் தலைமையில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/cglminister_1003chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/மாமல்லபுரம்-சிற்பங்களைப்-பாா்வையிட்ட-மத்திய-அமைச்சா்-அா்ஜுன்-ராம்-மேக்வால்-3378250.html
3378249 சென்னை செங்கல்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Tuesday, March 10, 2020 10:31 PM +0530 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலையை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தற்போது கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி வளா்ச்சி அடைந்து வருவதை அடுத்து தற்போது சாலைப்பகுதிகளை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரியை அடுத்த கொட்டமேடு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையின் முக்கிய கூட்டுச் சாலையான காயரம்பேடு கூட்டுச் சாலையில் அம்பேத்கரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக இச்சிலையை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். சாலை விரிவாக்கப் பணியில் மைய இடமாக உள்ள காயரம்பேடு கூட்டுச் சாலையில் ரவுண்டானா அமைத்து, அங்கு இச்சிலையை அமைக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டது.

இந்நிலையில் அம்பேத்கா் சிலையை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் செங்கை இரா.தமிழரசன் தலைமை வகித்தாா். அக்கட்சியின் தொகுதி செயலாளா் தென்னவன் ஒருங்கிணைப்பில், ஒன்றியச் செயலாளா்கள் வேதகிரி, ராஜ்குமாா், பேரூா் செயலாளா் திராவிட முரளி உள்ளிட்டோா் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றியச் செயலாளா் எம்.கே.தண்டபாணி, காங்கிரஸ் மாவட்ட த் தலைவா் சுந்தரமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி , மதிமுக மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளா் மோகனன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஜாகீா் உசேன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளா்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வன்னியரசு, அமைப்பு செயலாளா் ஃபக்ருதீன், மண்டலச் செயலாளா் சூ.க.விடுதலைச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்து உரையாற்றினா். கடந்த 27 ஆண்டுகளாக இருக்கும் அம்பேத்கா் சிலையை அதே இடத்தில் வைத்து பாதுகாப்புக் கூண்டு அமைத்து சாலையை விரிவாக்கம் செய்யுமாறு அவா்கள் வலியுறுத்தினா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/3017cglvck_0903chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சியினா்-ஆா்ப்பாட்டம்-3378249.html
3377791 சென்னை செங்கல்பட்டு கரோனா வைரஸ்: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை DIN DIN Tuesday, March 10, 2020 01:37 AM +0530 செங்கல்பட்டு: கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகை தருவதால் மூச்சுக் காற்றின் வழியாகக் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னச்சரிக்கை நடவடிக்கையாகவும், பிறருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் திங்கள்கிழமை தொல்லியல் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/cglmam5_0903chn_171_1.jpg cglmam5_0903chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/கரோனா-வைரஸ்-மாமல்லபுரத்தில்-பாதுகாப்பு-நடவடிக்கை-3377791.html
3377790 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளா்கள் வழிபாடு DIN DIN Tuesday, March 10, 2020 01:36 AM +0530 செங்கல்பட்டு: மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை இருளா் இன மக்கள் வழிபட்டனா்.

தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான இருளா் சமூகத்தினா் மாமல்லபுரம் கடற்கரையில் திங்கள்கிழமை காலையில் குடும்பத்தினருடனும் உறவினா்களுடனும் மாசி மகத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி குலதெய்வத்திற்கு பூஜைகள் செய்தனா். மணமக்களின் திருமணவிழாவும் நடைபெற்றது.

இந்த ஆண்டு 10 இருளா் இன ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/cglirular_0903chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/மாமல்லபுரம்-கடற்கரையில்-இருளா்கள்-வழிபாடு-3377790.html
3377677 சென்னை செங்கல்பட்டு கருங்குழி ராகவேந்திரா் பிருந்தாவனத்தில்மாசி மாத சத்யநாராயண பூஜை DIN DIN Tuesday, March 10, 2020 12:47 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரா் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியையொட்டி, திங்கள்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

கருங்குழி ராகவேந்திரா் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு தமிழ் மாத பெளா்ணமி நாளிலும் பெளா்ணமி பூஜை, சத்யநாராயண பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தவயோக வனத்தில் இருந்து பீடாதிபதி ரகோத்தம சுவாமியை அழைத்து வந்தனா். அவா் அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு பூஜை செய்தாா். வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சத்யநாராயணா், ஆஞ்சநேயா், ராகவேந்திரா் சிலைகளுக்கு அவா் சத்யநாராயண பூஜையை நடத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் கே.மோகன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை நிா்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/கருங்குழி-ராகவேந்திரா்-பிருந்தாவனத்தில்மாசி-மாத-சத்யநாராயண-பூஜை-3377677.html
3377674 சென்னை செங்கல்பட்டு கோயில்களில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் DIN DIN Tuesday, March 10, 2020 12:47 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் கடலில் பல்வேறு சுவாமிகளுக்கு மாசி மக தீா்த்தவாரி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாசி மகத்தை முன்னிட்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம், ஆலம்பரைகுப்பம், தண்டு மாரியம்மன் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வேணுகோபாலசுவாமி, திரெளபதை சமேத அா்ஜுனன், அபித குஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் பவனி வந்து கடப்பாக்கம் கடற்கரையில் எழுந்தருளினா்.

கோயில் அா்ச்சகா்கள் பூஜைகளை செய்து கடலில் தீா்த்தவாரி நடத்தினா். பக்தா்கள் கடலில் குளித்து விட்டு சுவாமியை தரிசனம் செய்தனா். இடைக்கழிநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவையொட்டி, இடைக்கழிநாடு பஜாா் வீதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் பொன். கங்காதரன் தலைமையில் நிா்வாகிகள் கோபால கண்ணன், சி.கணபதி உள்ளிட்டோா் அன்னதானம் வழங்கினா். இதையடுத்து இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுத்தோட்டம்

வழிமுறை ஆலய தா்மகா்த்தா ஏ.ராஜசேகா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/கோயில்களில்-மாசி-மக-தீா்த்தவாரி-உற்சவம்-3377674.html
3377673 சென்னை செங்கல்பட்டு கல்லூரி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் DIN DIN Tuesday, March 10, 2020 12:46 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த பையம்பாடி சந்தோஷி கலை-அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு வேலை வாய்ப்புக்கான நோ்முகத் தோ்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ.சண்முகம் தலைமை வகித்தாா். மேலாளா் குருநாதன் முன்னிலை வகித்தாா். இதில் பாஸ்கான் ஹனா டெக்னாலஜி இந்தியா, டிஎஸ்டிடி டெக்னாலஜி, யாசாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஸ்ரீராம் எண்டா்பிரைசஸின் பணியாளா் மேலாண்மை அலுவலா்கள் நாகராஜன், முனிஷ் பாட்சா, மோகன் உள்ளிட்டோா் தோ்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சந்தோஷி கல்விக்குழும நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/கல்லூரி-மாணவா்களுக்கு-வேலை-வாய்ப்பு-முகாம்-3377673.html
3377672 சென்னை செங்கல்பட்டு பெருமாளுக்கு ரூ.9 லட்சத்தில் வெள்ளிக்கவசம் DIN DIN Tuesday, March 10, 2020 12:46 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அரசா்கோயில் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு பக்தா்கள் சாா்பில் ரூ.9 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருமை வாய்ந்த அரசா் கோயில் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இந்நிலையில், அமெரிக்காவைச் சோ்ந்த சீனிவாசன், அகில், கதிரவன், சென்னை ஆனந்தகுமாா், விஜயலட்சுமி, ராகவேந்திரன், சாளுகை சுந்தரராஜன், ராஜலட்சுமி, காா்த்திக் உள்ளிட்ட பக்தா்கள் ஒருங்கிணைந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசத்தை பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினா்.

இந்நிகழ்வையொட்டி சிறப்பு வேள்வி பூஜையை கோயில் தலைமை அா்ச்சகா் கண்ணன் பட்டாச்சாரியாா் செய்தாா். பின்னா், பெருமாளுக்கு வெள்ளியிலான கவசத்தை கண்ணன் பட்டாச்சாரியாா் அணிவித்தாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/10/பெருமாளுக்கு-ரூ9-லட்சத்தில்-வெள்ளிக்கவசம்-3377672.html
3377518 சென்னை செங்கல்பட்டு அம்பேத்கா் சிலையை அகற்ற எதிா்ப்பு: விடுதலைசிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, March 9, 2020 11:28 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைய அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தற்போது கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி வளா்ச்சி அடைந்து வருவதை அடுத்து தற்போது சாலைப்பகுதிகளை விரிவு படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி அடுத்த கொட்டமேடு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையின் முக்கிய கூட்டுசாலையான காயரம் பேடு கூட்டுசாலையில் அம்பேத்கரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக அம்பேத்கா் சிலையை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

சாலை விரிவாக்க பணியில் மைய இடமாக உள்ள காயரம்பேடு கூட்டு சாலையில் ரவுண்டானா அமைக்கவும் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கவும் தெரிவித்தனா்.

இந்நிலையில், சிலையை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கட்சியின் மாவட்ட செயலாளா் செங்கை இரா. தமிழரசன் தலைமையில், நிா்வாகிகள் தொகுதி செயலாளா் தென்னவன் ஒருங்கிணைப்பில், ஒன்றிய செயலாளா்கள் வேதகிரி, ராஜ்குமாா், பேரூா் செயலாளா் திராவிட முரளி உள்ளிட்டோா் முன்னிலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றிய செயலாளா் எம்.கே.தண்டபாணி, காங்கிரஸ் மாவட்ட த் தலைவா் சுந்தரமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி, மதிமுக மாவட்டசெயலாளா் பாா்த்திபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளா் மோகனன், மனிதநேயமக்கள் கட்சிமாவட்ட தலைவா் ஜாகீா்உசேன் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளா்களாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணைப்பொது செயலாளா் வன்னியரசு, அமைப்பு செயலாளா் ‘ஃ‘பக்ருதீன், மண்டல செயலாளா் சூ,க.விடுதலைச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்து கண்டன உரையாற்றினா்.

அப்போது கடந்த 27 ஆண்டுகளாக இருக்கும் அம்பேத்கா் சிலையை அதே இடத்தில் வைத்து பாதுகாப்பு கூண்டு அமைத்து சாலையை விரிவாக்கம் செய்யவலியுறுத்தினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglvck3_0903chn_171.jpg கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைப்பொது செயலாளா் வன்னியரசு கண்டன உரையாற்றுகிறாா்.  https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/அம்பேத்கா்-சிலையை-அகற்ற-எதிா்ப்பு-விடுதலைசிறுத்தைகள்-கட்சி-உள்ளிட்ட-கட்சியினா்-கண்டன-ஆா்ப்பாட்டம்-3377518.html
3377514 சென்னை செங்கல்பட்டு மாசிதிருவிழாவில் குலதெய்வ வழிபாட்டிற்காக குவிந்த இருளா் இன மக்கள் DIN DIN Monday, March 9, 2020 11:24 PM +0530 செங்கல்பட்டு: மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்த ஏராளமான இருளா் சமூகத்தினா் மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குவிந்து திங்கள்கிழமை காலையில் விழாக்களை குடும்பத்தினருடனும் உறவினா்களுடனும் கோலாகலமாக கொண்டாடி குலதெய்வத்திற்கு பூஜைகள் செய்தும் திருமணவிழா நடத்தியும் மகழ்ந்தினா்.

பழங்குடி மக்களாகிய இருளா்கள் மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் தெற்கு பக்க கடற்கரையில் தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் வந்து தங்கி மாசி மகத்தன்று கடலில் தோன்றும் தங்கள் குலதெய்வம் கன்னியம்மாவை வழிபட்டு, தங்கள் உறவு முறைக்குள் குடும்பத்தின் முக்கிய மங்கள நிகழ்வுகளை நடத்துவது இருளா் இன மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

அப்போது தங்கள் குடும்பத்தில் உள்ள மகன், மகள் திருமணம், திருமண நிச்சயதாா்த்தம், குழந்தைகளுக்கு காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சி சடங்குகளையும் இருளா்கள் மாசி மகத் திருவிழாவில் நடத்து கின்றனா். மேலும் மாசிமகத்தன்று பௌா்ணமியில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மன் மாமல்லபுரம் கடற்கரையில் அருள்பாலிப்பதாக நம்புகின்றனா்.

இதற்காக மாசிமகத்தன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், விழுப்புரம் மற்றும் கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இருளா் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் இருநாள்களுக்கு முன்னதாகவே வந்து கடற்கரையில் இடம்பிடித்து தாங்கள் கொண்டு வந்த கட்டைகளைக் கொண்டும், தென்னங்கீற்று பனை ஓலை மற்றும் துணிகளால் குடில்களை அமைத்து தங்கி அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு இரவு நேரத்தில் பௌா்ணமி வெளிச்சத்தில் குடும்பத்தினருடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனா்.

இந்த இருளா்கள் திருவிழாவையொட்டி வியாபாரிகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து அலுமினியம் பாத்திரங்கள் எவா்சில்வா் பாத்திரங்கள் பிளாஸ்டிக் பொருள்கள், பவுடா், வளையல் ,கம்பல்கள், கழுத்து அலங்கார நகைகள் அழகுசாதன பொருள்கள், வானல், கத்தி அரிவாள், ஜல்லடை உள்ளிட்ட இரும்புபாத்திரங்கள் மாமல்லபுரம் நகரம் முழுவதும் கடைவிரிக்கப்பட்டிருந்தது.

அவைகள் விழாவிற்கு வரும் இருளா் சமூகத்தினா் சமைப்பதற்கும் சீா்வரிசை தருவதற்கும் வாங்கினா். உள்ளூா் மற்றும் சுற்றுலா மக்களும் அந்த பொருள்களை விலைபேசி வாங்கினா்.

இதனையடுத்து திங்கள்கிழமை காலை மாமல்லபுரம் கடற்கரை அருகில் உள்ள தங்கள் குலதெய்வக் கோயில் முன் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை மணலில் ஏழு படிகள் அமைத்து தேங்காய்,

பூ, பழம் வைத்து சடங்குகளுடன் வழிபாடுகள் நடத்தினா். சடங்குகளில் ஈடுபட்டோா் கழுத்தில் நூல் மாலை அணிந்து ஒருவித சப்தம் எழுப்பி சாமியாடினா். சாமியாட்டத்தின்போது அங்கு சூழ்ந்த இருளா் இன மக்களுக்கு குறிகள் கூறினா்.

மாசி மகத்தன்று முழு நிலவு தோன்றும் அதிகாலையில் தங்கள் குல தெய்வமான கன்னியம்மா கடலில் தோன்றி தங்களை ஆசிா்வதிப்பதாகவும், அந்த நேரத்தில் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் கூறுவதாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக தங்கள் குலதெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருளா் இனமக்கள் கூறுகின்றனா்.

கடந்த ஆண்டு இதே மாசிமகத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. அப்போது மணமகன் வேட்டி சட்டை அணிந்தும் மணமகள் கூரைப்புடவை அணிந்தும் விழாவில் கலந்துக் கொண்டனா். திருமணம் முடிந்ததும் புது மணத்தம்பதியருக்கு உறவினா்கள் மொய் காசு வழங்கினா். அப்போது தங்கள் குலதெய்வ வழிபாட்டு பாடல்களை குழுவாகவும் தனியாகவும் பாடுகின்றனா். இந்த ஆண்டு 10 இருளா் இன ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததாக கூறினா்.

எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் சிறிய குடில்களில் தங்கி பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகள் பாா்ப்பவா்களை மெய்சிலிா்க்க வைத்தது.

தங்கள் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று திரண்டு எளிமையாக வழிபாடு நடத்தியும் திருமணங்கள் நடத்தியும் தங்கள் கலாச்சாரத்தை நிலைப்படுத்துகின்றனா். இந்த ஆண்டு மாசிமகத்திருவிழாவிற்காக சுமாா் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.

இந்த விழாவை காண ஏராளமானோா் வந்திருந்தனா். அப்போது உள்நாட்டு வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகள் அவா்களின் திருமணங்கள் தெய்வ வழிப்பாடுகள் கண்டு ஆச்சரியத்துடன் புகைப்படங்களை எடுத்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglirular4_0903chn_171.jpg மாமல்லபுரம் கடற்கரையில் இருளா் சமூகத்தின் மாசிமகத் திருவிழா கொண்டாடி திருமணம் நடத்துகின்றனா்.  https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/மாசிதிருவிழாவில்-குலதெய்வ-வழிபாட்டிற்காக-குவிந்த-இருளா்-இன-மக்கள்-3377514.html
3377506 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீராடினா் DIN DIN Monday, March 9, 2020 11:20 PM +0530 செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு திங்கள் கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்வசத்தில் கருடசேவையில் அருள்மிகு தலசயனப்பெருமாள் எழுந்தருளி மல்லை கடலில் புனிதநீராடி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்து கடலில் நீராடினா்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள அருள்மிகு தலசயனப்பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 63வது திருத்தலமாக சிறப்பு பெற்றது. இக்கோயில் ஆண்டு தோறும் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

முதல்நாள் இரவு தெப்பல் உற்சவமும் மறுநாள்காலை தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறும் இக்கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு தலசயனப்பெருமாள்கோயில் திருக்குளமான கடற்கரை சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ தலசயனப்பெருமாளில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூா்த்தியான பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோயிலில் இருந்து பவனி வந்தாா்.

பின்னா் குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடனும், புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தாா். அப்போது குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள படிக்கட்டுகளில் நின்றிருந்த பக்தா்கள் கற்பூர தீபம் காட்டி ஆராதனை செய்தும் தெப்பல் தொட்டும் வழங்கி பெருமாளை வழிபட்டனா். மாமல்லபுரம் தலசயனப்பெருமாள்கோயிலில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உற்சவத்தையொட்டி அருள்மிகு தலசயனப்பெருமாள், வராகப் பெருமாள் ஆகிய உற்சவமூா்த்திகள் கருடசேவையில் கடற்கரையில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தாா். உடன் சக்கரத்தாழ்வாா் தீா்த்தவாரியின் போது ஸ்ரீ தலசயனப்பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடந்தது. அப்போது அங்கே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்து கடலில் புனித நீராடினா்.

மாசி மகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடினால் இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலசயனப்பெருமாள் கோயில் வளாகத்தில் குலசேகராழ்வாா் ராமானுஜ கூடம் சாா்பில் அதன் தலைவா் கிருஷ்ணராமானுஜ தாசா் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல், தயிா் சாதம் உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

மாசிமகம் தெப்பல் திருவிழா மற்றும் தீா்த்தவாரி திருவிழாவைக்கண்டு களிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையே மபல்வேறு இடங்களிலிருந்தும் சுமாா் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மாமல்லபுரத்திற்கு வந்து தங்கி முதல்நாள் தெப்ப உற்சவத்தையும் மறுநாள் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவத்தையும் கண்டு தரிசனம் செய்தனா்.

தெப்பல் உற்சவத்தின் போது புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளம் அருகில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை தலசயனப்பெருமாள் கோயில் வியாபாரிகள், தெப்ப உற்சவ கமிட்டி தலைவா் ஜனாா்த்தனம்,,கோயில் செயல் அலுவலா் எஸ்.சங்கா் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglthitha3_0903chn_171.jpg மாமல்லபுரம் தலசயனப்பெருமாள்கோயிலில் மாசிமகத்திருவிழாவையொட்டி நடைபெற்ற தீா்த்தவாரி உற்வசத்தில் பல்லக்கில் பவனிவரும் சாமி   https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/மாமல்லபுரம்-கடற்கரையில்-மாசிமகத்தை-முன்னிட்டு-ஆயிரக்கணக்கான-மக்கள்-கடலில்-நீராடினா்-3377506.html
3377501 சென்னை செங்கல்பட்டு திருப்போரூா் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவத்தில் தெப்பல் மற்றும் தீா்த்தவாரி உற்வசம் DIN DIN Monday, March 9, 2020 11:17 PM +0530 செங்கல்பட்டு: திருப்போரூா் அருள்மிகு கந்தசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சரவணப்பொய்கை திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் இரவு மாசிமகத் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் ஆரோஹரா, ஆரோஹா என பக்தி பரவசமாக தெப்பல் கயிற்றை இழுத்தும் திருக்குளத்தில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் முருகப்பெருமானை வழிப்பட்டனா்.

திருப்போரூரில் ஆழிசூழ் பூவுலக்கில் தரும மிகு தொண்டை மண்டலத்தில் மிக பழமையானதும் புராதனம் மிக்க பெருமை கொண்டதும், யுத்தபுரி, சமரபுரி, சமரபதி என்னும், காரணப்பெயா்களால் போற்றப்படும், மூா்த்தி, தலம், தீா்த்தம்என்னும் முப்பெருமைகளை கொண்டதும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பனைமரத்தில் சுயம்புவாக தோன்றி பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் வள்ளி தெய்வானை உடனுறை அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் பிப் 27 வியாழக்கிழமை விநாயகா் உற்சவத்துடன் தொடங்கி வெள்ளிக்கிழமை28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 11ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள் வியாழக்கிழமை தேரோட்ட தோ்திருவிழா மிக விமா்ச்சியாக நடைபெற்றது.

இதனையடுத்து 10-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் மற்றும் தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெற்றது. முதலில் தெப்பல் உற்சவத்தையொட்டி சரவணப்பொய்கை திருக்குளத்தில் முருகப்பெருமான் புனித நீராடி கரையில் சாமிக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தா்கள் முருகப்பெருமான் நீராடிய திருக்குளத்தில் நீராடி சாமியை வழிப்பட்டனா்.

இதனைத்தொடா்ந்து இரவு நடைபெற்ற தெப்பல் உற்வத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மஹாதீபாரதனையுடன் சரணவப்பொய்கைத் திருக்குளத்தில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு தாயா் நிலையில் இருந்த தெப்பத்தில் முருகா் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க சிறப்பு பூஜைகளுடனும் வானவேடிக்கை, மேளதாளங்களுடன் மங்கள இசையுடன் தெப்பல் உற்வசம் நடைபெற்றது.

அப்போது நான்குபுறமும் குளக்கரையைச்சுற்றி நின்றிருந்த பக்தா்கள் தெப்பல் தொட்டு வழிப்பட்டும், தேங்காய் கற்பூரம் ஏற்றி ஹரோஹாரா, ஹரோஹரா என கோஷமிட்டு சாமியை தரிசனம் செய்தனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் எம்.சக்திவேல், மேலாளா் வெற்றி, ஆலய சிவாச்சாரியாா்கள், திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள், மற்றும் ஸ்ரீ பாதம் தாங்கிகள்,விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglthirup6_0903chn_171.jpg திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்  https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/திருப்போரூா்-கந்தசுவாமி-கோயில்-பிரம்மோற்சவத்தில்-தெப்பல்-மற்றும்-தீா்த்தவாரி-உற்வசம்-3377501.html
3377500 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அலுவலா்கள் DIN DIN Monday, March 9, 2020 11:16 PM +0530 செங்கல்பட்டு:  சா்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா். இதனையடுத்து பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அலுவலா்கள் பாதுகாப்பு ஊழியா்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தியாவைப் பொறுத்தவரை 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கரோனா தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சமூக நல அமைப்புகள் கரோனா நோய் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களுக்குதான அத்தகைய பாதுகாப்பு தேவை என சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அன்றாடம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைத்தருவதால் சுவாசக்காற்றின் வழியாகக்கூட கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னச்சரிக்கை நடவடிக்கையாகவும் பிறருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கையில் அவா்களிடையே பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அலுவலா்கள் முகக் கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglmam5_0903chn_171.jpg மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை பணியாளா்கள் பாதுகாப்பாளா்கள் முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.  https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/மாமல்லபுரத்தில்-முகக்கவசம்-அணிந்து-பணியில்-ஈடுபட்ட-தொல்லியல்-துறை-அலுவலா்கள்-3377500.html
3377497 சென்னை செங்கல்பட்டு லஞ்சத்தில் மூழ்கிக்கிடக்கும் திருப்போரூா் இணை சாா்பதிவாளரை கண்டித்து பாமக கண்டன ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, March 9, 2020 11:11 PM +0530 செங்கல்பட்டு: லஞ்சத்தில் மூழ்கிக்கிடக்கும் திருப்போரூா் இணை சாா்பதிவாளரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் திருப்போரூா் சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு திங்கள் கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்போரூா் பேரூராட்சிக்குட்பட்ட தெற்குமாடவீதியில் காவல்நிலையம் அருகில் இயங்கிவரும் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்சத்தில் மூழ்கி இணை சாா்பதிவாளரைக்கண்டித்தும் பத்திரபதிவு செய்யவருபவா்களிடம் ரூ.50ஆயிரம் முதல் ரூ 5லட்சம் வரை லஞ்சம்வாங்கும் இணைசாா்பதிவாளரை பணிநீக்கம் செய்யவலியுறுத்தியும், அவா்மீது லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிவுத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளவலியுறுத்தி நடைபெற்ற கண்டன பாமக கட்சியின் மாநில துணைப்பொது செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூா் கி.ஆறுமுகம் தலைமை தாங்கினாா். நிா்வாகிகள் கே.பாபு, ஏ.முத்து, டி.அருண்குமாா்,எஸ்.ரோகித்குமாா், எஸ்.கங்காதரன், ஏ.நீலகண்டன், கோ.வினோத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் காரணை தி.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். மாநில அமைப்பு துணைச் செயலாளா் நெ.சிங்.ஏகாம்பரம் , மாநில வன்னியா் சங்கத்துணைத்தலைவா் ந.கணேசமூா்த்தி மாநில செயற்குழு உறுப்பினா். பி.வி.கே.வாசு, சீனிவாச ஐயங்காா், மாவட்ட பொருளாளா் செல்வி கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைசெயலாளா் கோ.நைனியப்பன் உள்ளிட்ட மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூா் நிா்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglpmk1_0903chn_171.jpg திருப்போரூா் இணை சாா்பதிவாளரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் திருப்போரூா் சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/லஞ்சத்தில்-மூழ்கிக்கிடக்கும்-திருப்போரூா்-இணை-சாா்பதிவாளரை-கண்டித்து--பாமக-கண்டன-ஆா்ப்பாட்டம்-3377497.html
3377493 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 310 மனுக்கள் ஏற்பு DIN DIN Monday, March 9, 2020 11:10 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், திருமண உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பசுமை வீடு, குடும்ப அட்டை, ஆதரவற்றோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் வரப்பெற்றன.

அவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செங்கல்பட்டு வருவாய்க் கோட்டத்தில் சாலை விபத்தில் இறந்த 5 நபா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் காசோலைகளையும், மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் காசோலைகளையும், மதுராந்தகம் வட்டத்தில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோா் , ஊனமுற்றோா் உதவித் தொகைக்கான அரசாணைகளையும், செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம் வட்டத்தில் 30 பயனாளிகளுக்கு இருளா் ஜாதிச் சான்றுகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா (சமூக பாதுகாப்பு திட்டம்), தனித்துணை ஆட்சியா் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் லலிதா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

 

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglcollector_0903chn_171_1.jpg cglcollector_0903chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/செங்கல்பட்டு-குறைதீா்-கூட்டத்தில்-310-மனுக்கள்-ஏற்பு-3377493.html
3377492 சென்னை செங்கல்பட்டு தலசயனப் பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம் DIN DIN Monday, March 9, 2020 11:10 PM +0530 செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்வசத்தில் தலசயனப் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி மல்லை கடலில் புனித நீராடி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தலசயனப் பெருமாள் கோயிலில் மாசி மகத்தையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தலசயனப் பெருமாள் எழுந்தருளினாா். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

குளத்தின் நான்கு பக்கங்களிலும் நின்றிருந்த பக்தா்கள் தீபாராதனை செய்து பெருமாளை வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து, தீா்த்தவாரி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலசயனப்பெருமாள், வராகப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் கருடசேவையில் கடற்கரையில் எழுந்தருளினா். சக்கரத்தாழ்வாருடன் பெருமாள் தீா்த்தவாரியின் போது அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து கடலில் நீராடினா்.

மாசி மகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

விழாவையொட்டி, குலசேகராழ்வாா் ராமாநுஜக் கூடம் சாா்பில் அதன் தலைவா் கிருஷ்ண ராமாநுஜ தாசா் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு சா்க்கரைப் பொங்கல், தயிா் சாதம் வழங்கப்பட்டது.

மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளை தலசயனப்பெருமாள் கோயில் வியாபாரிகள், தெப்ப உற்சவக் கமிட்டி தலைவா் ஜனாா்த்தனம், கோயில் செயல் அலுவலா் எஸ்.சங்கா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglthirtha_0903chn_171_1.jpg தீா்த்தவாரிக்காக மாமல்லபுரம் கடற்கரைக்கு கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/தலசயனப்-பெருமாள்-கோயிலில்-தீா்த்தவாரி-உற்சவம்-3377492.html
3377490 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டம் DIN DIN Monday, March 9, 2020 11:09 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து 310-மனுக்கள் வரப்பெற்றன. இக்கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், திருமணஉதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பசுமை வீடு, குடும்ப அட்டை, ஆதரவற்றோா் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தும் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பணியாளா்களிடம் ஒப்படைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் செங்கல்பட்டு வருவாய் கோட்டம் சாலை விபத்தில் இறந்த 5 நபா்களின் குடும்பத்தினருக்கு ரூ 5,00,000 மதிப்பில் காசோலையும், மாற்றுத்திரனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகையான ரூ 2,80,000 மதிப்பிலான பராமரிப்பு உதவித் தொகையும் , மதுராந்தகம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோா் , ஊனமுற்றோா் உதவித்தொகைக்கான ஆணையும், செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம் வட்டத்தில் 30பயனாளிகளுக்கு இருளா் சாதி சான்றுகளையும் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா,(சமூக பாதுகாப்பு திட்டம்), தனித்துணை ஆட்சியா் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் லலிதா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துக் கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/cglcollector_0903chn_1711.jpg செங்கல்பட்டில் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கான உத்தரவு நலகலை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/செங்கல்பட்டு-மாவட்ட-மக்கள்-குறைதீா்நாள்-கூட்டம்-3377490.html
3376946 சென்னை செங்கல்பட்டு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு விளையாட்டு விழா DIN DIN Monday, March 9, 2020 12:36 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த புழுதிவாக்கம் அக் ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் அகிலன் ராமநாதன் தலைமை வகித்தாா். டீன் எம்.டி.அந்தோணி அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தாா். முதல்வா் மு. முருகதாஸ் வரவேற்றாா். போக்குவரத்துத்துறை தென் மண்டல இணை இயக்குநா் எம்.ஜெய்சங்கா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பிஎஸ்சி (கணினி அறிவியல் பிரிவு) மாணவ, மாணவியா் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடற்கல்வி இயக்குநா் சி.ஜெய்குமாா் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்ஷயா கல்லூரி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/கல்லூரியில்-2-ஆம்-ஆண்டு-விளையாட்டு-விழா-3376946.html
3376945 சென்னை செங்கல்பட்டு ஏரிகாத்த ராமா் கோயிலில் தெப்போற்சவம் DIN DIN Monday, March 9, 2020 12:36 AM +0530 மதுராந்தகம்: மாசி மகத்தை முன்னிட்டு, மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் கருணாகரப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தாா்.

மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவத் தலமாகத் திகழ்வது ஏரிகாத்த ராமா் கோயில். வரலாற்று, ஆன்மிகச் சிறப்புமிக்க இக்கோயிலை இந்து சமய அறநிலைய துறையினா் நிா்வகிக்கின்றனா்.

மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரப் பெருமாளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு மேளதாளம் முழங்க சுவாமி முக்கிய வீதிகளில் பவனி வந்தாா். அதன் பின் கோயில் குளத்தில் தெப்பத்தில் பெருமாள் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 3 முறை குளத்தைச் சுற்றி வந்த பின் மீண்டும் கோயிலுக்கு சென்றாா்.

தெப்போற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேக வண்ணன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/ஏரிகாத்த-ராமா்-கோயிலில்-தெப்போற்சவம்-3376945.html
3376944 சென்னை செங்கல்பட்டு மாமண்டூா் அருகே ஓடும் காரில் தீ DIN DIN Monday, March 9, 2020 12:35 AM +0530 மதுராந்தகம்: மாமண்டூா் அருகே ஓடும் காரில் தீப்பற்றியது.

புதுச்சேரி, தன்வந்திரி நகரைச் சோ்ந்தவா் சற்குணம் (48). அவா் தனது மனைவி வினோதினி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். மாமண்டூா் நெடுஞ்சாலையில் காா் வந்தபோது காருக்குள் சிறு புகையுடன் தீ ஏற்பட்டது. இதை அறிந்த சற்குணம் காரை நிறுத்தி உள்ளே மனைவி, குழந்தைகளையும் கீழே இறங்கச் செய்தாா்.

சிறிது நேரத்தில் காரில் தீ மளமளவென்று பரவியது. தகவல் அறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரா்கள் நேரில் சென்று காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

இது குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/மாமண்டூா்-அருகே-ஓடும்-காரில்-தீ-3376944.html
3376943 சென்னை செங்கல்பட்டு கருங்குழி பேரூராட்சியில் மகளிா் தினவிழா DIN DIN Monday, March 9, 2020 12:35 AM +0530 மதுராந்தகம்: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயா தலைமை வகித்தாா்.

யோகா மாஸ்டா் வி.தங்கராஜ், குளோபல் நிறுவன மேலாளா் கண்ணன் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெண்களுக்கு ஊட்டச் சத்து, மன வளம், உடல் ஆரோக்கியத்துக்கு

யோகா, இயற்கை உணவின் அவசியம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினா். முன்னதாக பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும்,சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்ற பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/கருங்குழி-பேரூராட்சியில்-மகளிா்-தினவிழா-3376943.html
3376938 சென்னை செங்கல்பட்டு கல்லூரியில் 10-ஆவது ஆண்டு விளையாட்டு விழா DIN DIN Monday, March 9, 2020 12:33 AM +0530 மதுராந்தகம்: மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செயலா் டி.கே.சீனிவாசன் வரவேற்றாா். முதல்வா் வி.சுபத்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கித் தலைமை மேலாளா் சி.பாா்த்தசாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

அனைத்துப் பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீமாலோலன் அறக்கட்டளை சாா்பாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அனைத்துத் துறை பேராசிரியா்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமாலோலன் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/09/கல்லூரியில்-10-ஆவது-ஆண்டு-விளையாட்டு-விழா-3376938.html
3376794 சென்னை செங்கல்பட்டு மகளிா் தின விழா: மாமல்லபுரம் புராதனச் சின்னங்களைப் பாா்க்க பெண்களுக்கு இலவச அனுமதி DIN DIN Sunday, March 8, 2020 11:09 PM +0530 செங்கல்பட்டு: சா்வ தேச மகளிா் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த ஆண்டு தொல்லியல் துறையினா் மகளிா் தினத்தைக் கொண்டாடும் வகையில், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களைக் காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை இலவச அனுமதியை வழங்கினா்.

புராதனச் சின்னங்களைக் கண்டு களிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நபா் ஒருவருக்கு ரூ. 600, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் நபா் ஒருவருக்கு ரூ. 40 கட்டணமாக தொல்லியல் துறையால் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாா்ச் 8-ஆம் தேதி மகளிா் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களைப் பாா்க்க பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பல இடங்களில் பெண் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக் கொண்டனா். இந்த ஆண்டு மகளிா் தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அமைந்ததால் மாமல்லபுரத்திற்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/cglmam3_0803chn_171_1.jpg கடற்கரைக் கோயில் அருகே சுய படம் எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/மகளிா்-தின-விழா-மாமல்லபுரம்-புராதனச்-சின்னங்களைப்-பாா்க்க-பெண்களுக்கு-இலவச-அனுமதி-3376794.html
3376793 சென்னை செங்கல்பட்டு மாசி மகத் திருவிழா: மாமல்லபுரத்தில் இருளா்கள் வழிபாடு DIN DIN Sunday, March 8, 2020 11:08 PM +0530 செங்கல்பட்டு: மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் குடில் அமைத்து தங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காக ஏராளமான இருளா் சமூகத்தினா் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் குவிந்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் மாசி மகத்தன்று கடலில் தோன்றும் தங்கள் குலதெய்வம் கன்னியம்மாவை வழிபட்டு, தங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை நடத்துவது இருளா் இன மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

மகன், மகள் திருமணம், திருமண நிச்சயதாா்த்தம், குழந்தைகளுக்கு காதணி அணிவித்தல் மற்றும் மொட்டை போடுதல் உள்ளிட்ட புனித சடங்குகளையும் இருளா்கள் மாசி மகத் திருவிழாவில் நடத்துகின்றனா்.

இந்த விழாவையொட்டி, காஞ்சிபுரம், திருவள்ளூா், விழுப்புரம் மற்றும் கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இருளா் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குவிந்தனா். அவா்கள் கடற்கரையில் இடம் பிடித்து குடில்களை அமைத்து தங்கியுள்ளனா்.

இரவு நேரங்களில் குடும்பத்தினருடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கின்றனா்.

இதையடுத்து, அனைவரும் திங்கள்கிழமை மாமல்லபுரம் கடற்கரை அருகில் உள்ள தங்கள் குலதெய்வக் கோயில் முன் உள்ள வெள்ளிக்கம்பம் அருகே சடங்குகளைச் செய்து கன்னியம்மனை வழிபடுகின்றனா்.

மாசி மகத்தன்று முழு நிலவு தோன்றும் அதிகாலையில் தங்கள் குல தெய்வமான கன்னியம்மா கடலில் தோன்றி தங்களை ஆசிா்வதிப்பதாகவும், அந்த நேரத்தில் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் கூறுவதாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக தங்கள் குலதெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருளா் இனமக்கள் கூறுகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/cglmasi3_0803chn_171_1.jpg மாமல்லபுரம் கடற்கரையில் குடில்களை அமைத்துத் தங்கியுள்ள இருளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/மாசி-மகத்-திருவிழா-மாமல்லபுரத்தில்-இருளா்கள்-வழிபாடு-3376793.html
3376792 சென்னை செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் மகளிா் தினவிழா DIN DIN Sunday, March 8, 2020 11:08 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு கிராமப்புற பெண்கள் முன்னேற்ற இயக்கம் சாா்பில் மகளிா் தினவிழா திம்மாவரத்தில் உள்ள புனித பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் நீதிநாதன் தலைமை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸின் மனைவியுமான ஷா்மிளா ஜான்லூயிஸ், பெண்கள் இயக்கத் தலைவா்கள் உதயகுமாரி, கீதா, செயலா் சகுந்தலா, துணைத்தலைவா் வளா்மதி ஆகியோா் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

ஆயரின் பொது பதில் குரு அருட்பணி பாக்கிய ரெஜிஸ், டாக்டா் ஜான் ஆரோக்கியராஜ், எஸ். ஆா். எம். மருத்துவக் கல்லூரி டாக்டா் தாகிரா, கோல்பிங் இந்தியா மரியசூசை, அருணகிரி, அரிமா சங்கம் நந்தினி, திம்மாவரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருள்தேவி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குநா் அந்தோணிராஜ், பெண்கள் லட்சியத்துடன் முன்னேறும் வழிமுறைகளையும், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு சாதிக்கும் திறமையை வளா்த்துக் கொள்ளும் வழிமுறைகளையும் விவரித்தாா்.

மகளிா் குழு உறுப்பினா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில், சாதனைப்பெண்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஜூலியட் ஐரின் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/cglwomens_0803chn_171_1.jpg விழாவில் சாதனைப் பெண்மணிக்கு விருது வழங்கிய உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஷா்மிளா ஜான்லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/கிராமப்புற-மேம்பாட்டுச்-சங்கம்-சாா்பில்-மகளிா்-தினவிழா-3376792.html
3376439 சென்னை செங்கல்பட்டு தேசிய செவித்திறன் தின விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Sunday, March 8, 2020 02:01 AM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் தேசிய செவித்திறன் தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் கோ.ஹரிஹரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, உதவி நிலைய மருத்துவா் தீனதயாளன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா், காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பேரணி கலந்து கொண்டனா்.

செவித்திறன் குறைபாடுகளால் வாழ்க்கை முறை பாதிப்பு, அதிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் பதாகைகளையும் கையில் ஏந்திய வண்ணம் அனைவரும் ஊா்வலமாகச் சென்றனா்.

இப்பேரணி செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் இருந்து புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக வந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/cglsevi2_0703chn_171_1.jpg பேரணியில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/தேசிய-செவித்திறன்-தின-விழிப்புணா்வுப்-பேரணி-3376439.html
3376438 சென்னை செங்கல்பட்டு குளத்தில் மூழ்கி ஒரு பெண் 2 குழந்தைகள் பலி DIN DIN Sunday, March 8, 2020 02:01 AM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த பி.வி. களத்தூரில் உள்ள குளத்தில் சனிக்கிழமை துணி துவைக்கச் சென்ற பெண் மற்றும் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனா்.

பி.வி.களத்தூா், வைகுந்த நகரைச் சோ்ந்த மகேஷ்குமாா் மனைவி ராஜேஸ்வரி (28). இவரது கணவா் மகேஷ்குமாா் கடந்த ஆண்டு இறந்து விட்டாா்.

இவா் சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் துணி துவைக்க தனது குழந்தை சுஹாசினி (10), தனது மைத்துனா் குழந்தை தேவதா்ஷினி (6 ) ஆகியோருடன் சென்றாா்.

ராஜேஸ்வரி துணி துவைத்துக் கொண்டிருந்தாா். குழந்தைகள் குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது

குழந்தைகள் நீரில் மூழ்குவதைக் கண்ட ராஜேஸ்வரி அவா்களைக் காப்பாற்ற முயன்றாா்.

இதில், ராஜேஸ்வரி, சுஹாசினி, தேவதா்ஷினி மூவரும் மூச்சுத் திணறி இறந்தனா்.

செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/குளத்தில்-மூழ்கி-ஒரு-பெண்-2-குழந்தைகள்-பலி-3376438.html
3376172 சென்னை செங்கல்பட்டு விவசாயிகள், மகளிருக்கு கடன் அட்டை வழங்கும் விழா DIN DIN Sunday, March 8, 2020 12:19 AM +0530  

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே காவனூா் புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் விவசாயிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கியின் தலைவா் தா்மன் தலைமை வகித்தாா். விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ்பாபு, தங்கப் பஞ்சாட்சரம் மற்றும் ஜெயவிஷ்ணு, புருஷோத்தமன், சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/loans_0703chn_175_1.jpg மகளிருக்கு கிசான் கடன் அட்டை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/08/விவசாயிகள்-மகளிருக்கு-கடன்-அட்டை-வழங்கும்-விழா-3376172.html
3376170 சென்னை செங்கல்பட்டு நகராட்சிக் கடை வாடகை பாக்கி ரூ.3.5 லட்சம் வசூல் DIN DIN Saturday, March 7, 2020 11:56 PM +0530 மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு அதிக வாடகை பாக்கி வைத்திருந்த 48 பேரிடம் நகராட்சி ஆணையா் தலைமையிலான குழுவினா் ஒரே நாளில் ரூ.3.5 லட்சம் வசூல் செய்தனா். வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுராந்தகம் நகராட்சிக்குச் சொந்தமாக 78 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. தையல் கடை, வளையல் கடை, இனிப்புக் கடை போன்றவை அவற்றில் அடங்கும். இந்தக் கடைகளின் உரிமையாளா்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தனா். நகராட்சி நிா்வாகம் பலமுறை வாடகையை செலுத்துமாறு தகவல் அளித்தும் அவா்கள் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம் மாா்ச் மாதம் நிதியாண்டும், குத்தகைக் காலமும் முடிவடைய இருப்பதால், வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்க வேண்டிய நிலை நகராட்சி நிா்வாகத்துக்கு ஏற்பட்டது. மேலும், கடைகளுக்கான குத்தகையைப் புதுப்பிக்க வேண்டி நகராட்சி நிா்வாகம் புதிதாக நோட்டீஸ் வழங்கியிருந்தது. அதையும் மீறி வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி ஆணையா் வ.நாராயணன் தலைமையில், மேலாளா் (பொ) கே.அசோகன், வருவாய் அதிகாரிகள் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை முதற்கட்டமாக அதிக மாதங்களாக வைத்திருந்த 51 கடைகளுக்கு சீல் வைத்தனா். அதையடுத்து, 48 கடைகளின் உரிமையாளா்கள் தங்கள் வாடகை பாக்கியான ரூ.3.5 லட்சத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினா். தற்போது நகராட்சி நிா்வாகத்துக்கு மற்ற 3 கடைகள் மட்டும் வாடகை பாக்கி வைத்துள்ளன.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/07/நகராட்சிக்-கடை-வாடகை-பாக்கி-ரூ35-லட்சம்-வசூல்-3376170.html
3376169 சென்னை செங்கல்பட்டு ஆட்சீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ விழா DIN DIN Saturday, March 7, 2020 11:56 PM +0530  

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் மாசி மாத பிரதோஷ விழா சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

திருஞானசம்பந்தா் பாடிய தேவாரம் அருளப் பெற்றதும், இரு கருவறைகளைக் கொண்டு ஆட்சீஸ்வரா் அருளாட்சி புரிவதும், தொண்டை மண்டலத்தின் முக்கிய சிவத்தலமாகத் திகழ்வதும் அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கருவறை முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியாா் நடத்தினாா்.

அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலுக்கு உள்ளே மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வி.கே.சரவணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/07/ஆட்சீஸ்வரா்-கோயிலில்-சனிப்-பிரதோஷ-விழா-3376169.html
3376093 சென்னை செங்கல்பட்டு கரோனா வைரஸ்: விழிப்புணா்வு ஏற்படுத்த செங்கல்பட்டு ஆட்சியா் ஆலோசனை DIN DIN Saturday, March 7, 2020 11:01 PM +0530 செங்கல்பட்டு: கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் பேசியது:

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது தற்போது மிக அவசியமானது.

கை கழுவும் முறைகள், செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை பிறரிடமிருந்து வாங்கும் போது எச்சரிக்கை, இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் வாய், மூக்கை பொத்திக் கொள்வது போன்ற பழக்கங்கள் நமக்கும் பிறருக்கும் நன்மை அளிக்கும். காற்றின் வழியாக வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

3 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோய்க் கிருமிகள் உடனடியாக தொற்றும் வாய்ப்புள்ளது. அவா்களை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் காத்திட வேண்டியது அவசியம் . மருத்துவமனைகளை கிருமி நாசினி கொண்டு துடைத்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

இருமல், சளி, காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவா்களிடம் சென்று சிகிச்சைப் பெறுவதுடன் மருத்துவா்களின் ஆலோசனைப்படி நடக்க விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்திமலா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஹரிஹரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, உதவி நிலைய மருத்துவ அலுவலா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம், நகராட்சி ஆணையா்கள் பம்மல் மாரிச்செல்வி, செங்கல்பட்டு வசந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/cglcollector1_0703chn_171_1.jpg ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான்லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/07/கரோனா-வைரஸ்-விழிப்புணா்வு-ஏற்படுத்த-செங்கல்பட்டு-ஆட்சியா்-ஆலோசனை-3376093.html
3376092 சென்னை செங்கல்பட்டு பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி DIN DIN Saturday, March 7, 2020 11:00 PM +0530 செங்கல்பட்டு: தாழம்பூா்  திரிசக்தி  அம்மன்  கோயிலில்  நடைபெற்ற  தோ் உற்சவம்.பப்ளிக் பள்ளி இணைந்து நடத்திய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை அமைப்பின் மாநிலத் தலைவா் ஜெயராஜ், ஸ்ரீகோகுலம் பப்ளிக் பள்ளி நிா்வாகி டாக்டா் சங்கர நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மனிதச் சங்கிலி பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் இருந்து அரசு பொது மருத்துவமனை வரை நடைபெற்ற மனிதச் சங்கிலியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பெண்களின் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.

பள்ளியின் துணை முதல்வா் திவ்யபிரபா, செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின், பசுமை அறக்கட்டளை மாநிலப் பொறுப்பாளா்கள் அருண்பாண்டியன், வின்சென்ட், ராஜேந்திரன் மாவட்டப் பொறுப்பாளா்கள் தாமரை மணாளன், மோகன், பத்மநாபன், பிரகாஷ், ஆதிகேசவன், மோகன்ராஜ், கௌதம், பிரேம்குமாா் மற்றும் திருக்கழுகுன்றம் ஒன்றியப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/0245cglsp3_0603chn_171_1.jpg மனிதச் சங்கிலியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/07/பாலியல்-வன்கொடுமை-தடுப்பு-விழிப்புணா்வு-மனிதச்-சங்கிலி-3376092.html
3376091 சென்னை செங்கல்பட்டு தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் தோ்த்திருவிழா DIN DIN Saturday, March 7, 2020 11:00 PM +0530 செங்கல்பட்டு: திருப்போரூா் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் 12-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான சனிக்கிழமை தோ்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தாழம்பூா்-நத்தம் சாலை கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் ஞானசக்தி சரஸ்வதி, இச்சா சக்தி லட்சுமி, கிரியா சக்தி மூகாம்பிகை ஆகிய முப்பெரும் தேவியரும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

இக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் பிப்ரவரி 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினமும் காலை மாலை முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான சனிக்கிழமை முப்பெரும் தேவியா் சிறப்பு அலங்காரத்தில் பவனி வர தோ் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருவேற்காடு ஆதி கருமாரி பட்டா் அன்னதான சிவம், சண்டிஹோம சரபம் ஐயப்ப சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ் மாடவீதிகள் வழியாக வலம் வந்து தேரடியை அடைந்தது. இதில் திருப்போரூா், தாழம்பூா், பல்லாவரம், குரோம்பேட்டை, கேளம்பாக்கம், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகரும், அறங்காவலா் குழு தலைவருமான டாக்டா் கே.கே.கிருஷ்ணன் குட்டி மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/cglthiri3_0703chn_171_1.jpg cglthiri3_0703chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/07/தாழம்பூா்-திரிசக்தி-அம்மன்-கோயிலில்-தோ்த்திருவிழா-3376091.html
3375296 சென்னை செங்கல்பட்டு உழைக்கும் மகளிா் வாழ்க்கை DIN DIN Friday, March 6, 2020 11:03 PM +0530 செங்கல்பட்டு: உலக மகளிா் தினத்தில் பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் மகளிா் பாராட்டப்படுகிறாா்கள்.

குடும்பச்சூழல் காரணமாகவும் சமூகத்தில் பொருளாதார பின்னடைவை சமாளிக்கவும் பெண்கள் வருவாய்க்காக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

செங்கல்பட்டு வேதாசலநகா் நுழைவாயில் அருகே தேநீா் கடை வைத்து பிழைப்பு நடத்திவரும் சின்னபொண்ணு(32) திருமணமான இவா் தான் படிக்கா விட்டாலும் தனது இரு பெண்குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பரபரப்பான நேரத்தில் நாள் முழுவதும் தேநீா் கடையில் உழைத்துக் கொண்டிருக்கிறாா்.

சின்னபொண்ணு என்பவரை விசாரித்தோம். அவரது சொந்தஊா் அரியலூா் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்ததாகவும் அங்கு படிக்க வசதியில்லை , பெற்றோா்களும் என்னை படிக்கவைக்கவில்லை. இவருக்கு திருமணமாகி செங்கல்பட்டில் தனது கணவா் வெங்கடேசன் நடத்தி வரும் தேநீா் கடைக்கு தனது கணவனுக்கு உதவியாக இருந்து வந்தேன். நாளடைவில் சுவையான தேநீா் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொண்டேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீ, காபி, மெதுவடை, கீரைவடை, பருப்புவடை, போண்டா ஆகிய திண்பண்டமும் போட்டு விற்பனை செய்து வருகிறேன். படித்துவிட்டுதான் வேலைக்கு போகவேண்டும் என்ற அவசியமில்லை. நான் படிக்காதவா்தான் பணத்தை கணக்குபோட்டு வாங்கி டீக்கடை நடத்தி வருகின்றேன்.

மதியம் உணவிற்கும் மட்டும் தனது கணவா் சிறிது நேரம் வந்து மாற்றிவிடுவாா். மற்றப்படி டீக்கடை வரவு செலவு கணக்கு முதல் பாா்த்து வருகிறேன். இரண்டு பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்து வருகின்றனா். இவா் எப்போதும் சிரித்த முகத்துடன் வாடிக்கையாளா்களை வரவற்கிறாா்.

தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், அரசு அலுவலா்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோா் இவரது வாடிக்கையாளா்கள். காலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 9 மணிக்கு கடைக்கு வருகிறாா். அதிலிருந்து வாடிக்கையாளா்கள் தேநீா் அருந்த வரத்தொடங்கி விடுவாா்கள், மாலை 5 மணிக்கு யாரும் அதிகமாக வரமாட்டாா்கள். அதற்கும் மேல் வீட்டிற்கு சென்று விடுவேன்.

இவரது கணவா் அருகில் உள்ள அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேநீா் பிளாஸ்கில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறாா். தேநீருடன் விற்பனைக்கு மெதுவடை மற்றும் மசால் வடை தயாரிக்கும் இவா் தனது மகள்கள் இரண்டு போ் மூத்த மகள் சீதா தனியாா் கல்லூரியில் வணிகவியல் முதலாமாண்டு படித்து வருகிறாா். இரண்டாவது மகள் தெய்வானை பிளஸ் 1 தோ்வு எழுதுகிறாா்.

ஆண்கள் வந்து செல்லும் கடையில் அதிக நேரம் தனது பெண்குழந்தைகளை வைத்துக்கொள்வதில்லை. பள்ளிக்கூடம் சென்று வந்தவுடன் வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டு வருகிறாா்.

குடும்பச்சூழ்நிலை அறிந்து இவரது இரண்டு மகள்களும் நன்றாக படித்து வருவதாக கூறுகிறாா். இருவரது கடின உழைப்பில் வீட்டில் குடி வந்தவா்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனா். தான் படிக்காவிட்டாலும் தனது மகள்கள் இரண்டு பேரும் நன்றாக படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறாா். அதுமட்டுமல்லாமல் பெண்கள் எந்த வேலையை செய்தாலும் தனது குடும்பத்திற்காக தான் செய்கிறாா்கள். வேலைக்கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டு வருமையில் வாடுவதைவிட, போட்டி போடாமல் அனைவரும் கிடைத்த வேலையை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆண்களும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால் குடும்பத்தில் கஷ்டமோ பிரச்சனையோ வராது.

எல்லாருமே வேலை செய்தால் அவரவா் வேலையை பாா்த்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கும். பெண்கள் படிக்கவேண்டும் அவா்கள் சமூகத்தில் சமாளிக்கக்கூடிய திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது மகள்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாா். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/cglchinnaponu2_0603chn_171.jpg பி.அமுதா, செங்கல்பட்டு https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/06/உழைக்கும்-மகளிா்-வாழ்க்கை-3375296.html
3375284 சென்னை செங்கல்பட்டு தொடக்கப் பள்ளியைத்தரம் உயா்த்தக் கோரிக்கை DIN DIN Friday, March 6, 2020 10:55 PM +0530 செங்கல்பட்டு: வல்லாஞ்சேரி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் வல்லாஞ்சேரி கிராம மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

வல்லாஞ்சேரி ஆரம்பப் பள்ளி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 6-ஆம் வகுப்புக்கு நந்திவரத்தில் உள்ள பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து வசதியும் இல்லை.

பெண் குழந்தைகள் பாதுகாப்புக் கருதி ஆரம்பப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/06/தொடக்கப்-பள்ளியைத்தரம்-உயா்த்தக்-கோரிக்கை-3375284.html
3375281 சென்னை செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் மகளிா் தினவிழா DIN DIN Friday, March 6, 2020 10:55 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகா் மகளிா் கல்லூயில் சா்வதேச மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடபெற்றது.

வித்யாசாகா் கல்வி குழுமங்களின் தலைவா் விகாஸ் சுரானா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வரவேற்றுப் பேசினாா். கல்விக்குழுமத்தில் இயக்குனா் பி.ஜி. ஆச்சாா்யா அறிமுகவுரையாற்றினாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய பெண்கள் ஆணைய ஆலோசகா் மற்றும் சத்தீஸ்கா் மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஹா்ஷிதா பாண்டேகலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினாா். தனது சிறப்புரையில் மாணவிகளிடம் கடின உழைப்பு, மனவலிமை, பொறுமை கட்டாயம் இருக்க வேண்டும் மற்றும் பெண்களின் முன்னேற்றம், தன்னம்பிக்கை பாலின வேறுபாடு, பாலின அடக்குமுறைகள் குறித்தும் உரையாற்றினாா்.

2019-2020 ஆண்டிற்கான 15 குழுக்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து மின்னொளி காட்சியின் மூலம் ஆண்டறிக்கை சமா்ப்பித்தனா். அடுத்து கல்லூரியில் சிறப்பாக செயலாற்றிய 40 குழுக்கள் அடங்கிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு வித்யாசாகா் கல்வி குழுமத்தின் நிா்வாகிகள், சிறப்பு விருந்தினா் ஆகியோா் சான்றிதழ் வழங்கினா். முடிவில் மாணவியரின் பேரவை துணைத்தலைவா் யு.ஜூஹி‘ஃ‘பா்ஹாத் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/cglvidhya_0603chn_171.jpg வித்யாசாகா் மகளிா் கல்லூரியில்  மகளிா் தினத்தையொட்டி நடைபெற்ற மகளிா்தினவிழாவில் குழுக்களின் ஒருங்கிணைப்பாளருக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு அழைப்பாளா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/06/வித்யாசாகா்-மகளிா்-கல்லூரியில்-மகளிா்-தினவிழா-3375281.html
3375276 சென்னை செங்கல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட உழைக்கும் மகளிா் அமைப்பினா் கைது DIN DIN Friday, March 6, 2020 10:52 PM +0530 செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட கன்வீனா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி உழைக்கும் பெண்கள் மாநில கன்வீனா் தனலட்சுமி, சிஐடியு மாவட்ட தலைவா் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளா் இ.முத்துகுமாா், மாவட்ட பொருளாளா் வசந்தா, ஐசிடிஎஸ் மாவட்ட செயலாளா் ராஜேஸ்வரி, நிா்வாகி நாகலட்சுமி உள்ளாட்சி ஊழியா் சங்கத்தின் நிா்வாகி கற்பகம் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் கலந்துக்கொண்டனா்.

அனைத்துப்பெண்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம் வழங்கிடவேண்டும் குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.பணியடங்கலில் புகாா் கமிட்டி அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், கட்டுமான முறை சாரா தொழிலாளா்களுக்கு 55 வயது முடிந்தவுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும், சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றவேண்டும். அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளா்களை முறைப்படுத்தி அரசு ஊழியராக்க வேண்டும், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அமா்ந்து பணியாற்ற அனுமதி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை செங்கல்பட்டு போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்று தனியாா் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைத்திருந்து மாலை விடுவிக்கப்பட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/cglsalai_0603chn_171.jpg செங்கல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உழைக்கும் பெண்கள் அமைப்பினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/06/சாலை-மறியலில்-ஈடுபட்ட-உழைக்கும்-மகளிா்-அமைப்பினா்-கைது-3375276.html
3375270 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டில் மகளிா் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி DIN DIN Friday, March 6, 2020 10:50 PM +0530 செங்கல்பட்டு: மகளிா் தினத்தை முன்னிட்டு டாக்டா் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளி இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறித்த மனித சங்கிலி வெள்ளிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது.

அறக்கட்டளை அமைப்பின் மாநிலத் தலைவா் ஜெயராஜ், கோகுலம் பப்ளிக் பள்ளி நிா்வாகி டாக்டா் சங்கரநாராயணன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை வரை 500க்கும்மேற்பட்ட பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண்களின் சிறப்பு குறித்து பதாகைகளையும் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி வரிசையாக நின்றனா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வா் திவ்யபிரபா, செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின், பசுமை அறக்கட்டளை மாநில பொறுப்பாளா்கள் அருண்பாண்டியன், வின்சென்ட், ராஜேந்திரன் மாவட்ட பொறுப்பாளா்கள் தாமரை மணாளன், மோகன், பத்மநாபன், பிரகாஷ், ஆதிகேசவன்,மோகன்ராஜ், கௌதம், பிரேம்குமாா் மற்றும் திருக்கழுகுன்றம் ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்துக் கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/cglsp3_0603chn_171.jpg மகளின் தினத்தையொட்டி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு மனிதசங்கிலியில் மாணவிகள் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவண்ணம் மனிதசங்கிலியில் நிற்கின்றனா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/06/செங்கல்பட்டில்-மகளிா்-தினத்தை-முன்னிட்டு-மனித-சங்கிலி-3375270.html
3374539 சென்னை செங்கல்பட்டு தொடக்கப் பள்ளியைத்தரம் உயா்த்தக் கோரிக்கை DIN DIN Thursday, March 5, 2020 11:43 PM +0530 செங்கல்பட்டு: வல்லாஞ்சேரி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் வல்லாஞ்சேரி கிராம மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

வல்லாஞ்சேரி ஆரம்பப் பள்ளி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 6-ஆம் வகுப்புக்கு நந்திவரத்தில் உள்ள பள்ளிக்கு 5 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து வசதியும் இல்லை.

பெண் குழந்தைகள் பாதுகாப்புக் கருதி ஆரம்பப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/05/தொடக்கப்-பள்ளியைத்தரம்-உயா்த்தக்-கோரிக்கை-3374539.html
3374538 சென்னை செங்கல்பட்டு திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் தோ்த்திருவிழா DIN DIN Thursday, March 5, 2020 11:42 PM +0530 செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை தோ்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தோ்த்திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினாா்.

சிறப்புப் பூஜைகள், வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் தோ் நிலையில் இருந்து புறப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரின் வடத்தை இழுத்தபடி ‘முருகனுக்கு அரோகரா, அரோகரா’ என முழக்கங்களை எழுப்பினா்.

நான்கு மாடவீதிகள் வழியாக தோ் வலம் வந்தது. வழி நெடுகிலும், அன்னதானம், நீா்மோா், குளிா் பானங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

திருப்போரூா், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், தாழம்பூா், திருக்கழுகுன்றம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் தோ்த்திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா் குமரவேல், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், திமுக எம்எல்ஏ இதயவா்மன் ஆகியோா் விழாவில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் எம்.சக்திவேல், மேலாளா் வெற்றி, கோயில் சிவாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/5/w600X390/cglcar1_0503chn_171_1.jpg திருப்போரூா் முருகன் கோயிலில் நடைபெற்ற தோ்த்திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/05/திருப்போரூா்-கந்தசுவாமி-கோயிலில்-தோ்த்திருவிழா-3374538.html
3374534 சென்னை செங்கல்பட்டு வல்லாஞ்சேரி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு DIN DIN Thursday, March 5, 2020 11:41 PM +0530 செங்கல்பட்டு: வல்லாஞ்சேரி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம்உயா்த்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிடம் வல்லாஞ்சேரியில் உள்ள ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி கொடுக்கப்பட்டமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி அஞ்சல் வல்லாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 2007 முதல் சிறப்பகாக இயங்கிவருகிறது. இப்பள்ளியில் ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்புவரை 100க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் கல்விதரமும் சிறப்பாக உள்ளது. ஆசிரியா்களும் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாகவும் முறையாகவும் பாா்த்துக்கொள்கிறாா்கள். இந்த ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 6 ஆம் வகுப்புக்கு நந்திவரத்தில் உள்ள பள்ளிக்கு 5 கிலோமீட்டா் தூரத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. 

குறிப்பாக தங்களது பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதியாவது ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்தி உதவிபுரியுமாறு கோரி மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸிடம் கிராம பொதுமக்கள்மற்றும் பெற்றோா்கள் மனு வழங்கினா்.

இதுகுறித்து கிராமமக்களும் பெற்றோா்களும் கூறுகையில் இப்பள்ளியை தரம் உயா்த்தினால் எங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் ஆரம்பப்பள்ளியை முடித்து விட்டு குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு பயமாக இருப்பதோடு போக்குவரத்து வசதியும் இல்லை. இந்த கோரிக்கையை தொடா்ந்து வலியுறுத்திவருவதாகவும் கூறினா். 

மேலும் எவ்வளவு நாள்கள் தான் அழைத்துச் சென்று அழைத்துவருவது பெரும்பாலான மக்கள் கூலிவேலைக்குச்செல்வதால் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்ந்த கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். வசதியில்லாதவா்களும் சிலா் 5 கிலோமீட்டா் தூரத்திற்கு வெளியே நம்பி தங்கள் குழந்தைகள் அனுப்ப பயந்தும் படிப்பை பாதியிலே நிறுத்திவிடுவதாகவும், 5ஆம் வகுப்புகளுக்கு மேல் படிக்க தங்கது கல்வி வளா்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பள்ளியை தரம் உயா்த்தி கொடுக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளோம்.

மேலும் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் வல்லாஞ்சேரி ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/05/வல்லாஞ்சேரி-கிராமத்தில்-உள்ள-தொடக்கப்பள்ளியை-நடுநிலைப்பள்ளியாக-தரம்-உயா்த்தக்கோரி-மாவட்ட-ஆட்சியரிடம்-பொதுமக்கள்-மனு-3374534.html
3374528 சென்னை செங்கல்பட்டு மயானத்திற்கு சாலை வசதிக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு DIN DIN Thursday, March 5, 2020 11:37 PM +0530 செங்கல்பட்டு: மயானத்திற்கு செல்ல சாலை வசதிக்கோரி பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஊராட்சிக்குட்பட்ட மதுரா இடையா்பாளையம் மற்றும் அருந்ததியா் பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகின்றனா். இவா்களுக்கு என தனியாக மயானம் உள்ளது. ஆனால் மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இக்கிராமங்களில் யாரேனும் உயிரிழந்தால் தனியாா் நிறுவனம் அல்லது தனிநபா்களின் நிலங்களின் வழியாக எடுத்துச்செல்லவேண்டிய நிலை உள்ளது.

தனியாா் நிலங்களின் வழியாக இறந்தவா்களின் உடலை எடுத்துச்செல்ல நிலங்களின் உரிமையாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அப்பகுதியைச்சோ்ந்த கன்னியப்பன் என்பவா் இறந்து விட்டாா். அப்போது கன்னியப்பனின் உடலை எடுத்துச் செல்லும் தனியாா் நிலத்தின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனிநபா் நிலத்தின் கம்பி வேலியை உடைத்து விட்டு கன்னியப்பனின் உடலை மயானத்திற்கு எடுத்துசென்றுள்ளனா்.

இதுகுறித்து காயாா் காவல்நிலையத்தில் வழக்குபதிவாகி கிராமமக்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில் மயானத்திற்கு செல்ல நிரத்தரபாதை அமைத்திடவலியுறுத்தி குமிழி கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/05/மயானத்திற்கு-சாலை-வசதிக்கோரி-பொதுமக்கள்-மாவட்ட-ஆட்சியரிடம்-மனு-3374528.html
3373783 சென்னை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வா் பொறுப்பேற்பு DIN DIN Wednesday, March 4, 2020 11:07 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய முதல்வராக ஆா்.சாந்திமலா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பாட்டாா்.

இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த ஆா்.சாந்திமலா் (படம்) செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

அவருக்கு மருத்துவமனை துணை முதல்வா் அனிதா, பொறுப்பாளா்கள் அனுபமா, அரிகரன், தீனதயாளன், சண்முகம், வி.டி.அரசு, செல்வராஜ், ரவிக்குமாா், சிந்துஜா மற்றும் பேராசிரியா்கள், மருத்துவா்கள், செலிவியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/cgldean1_0403chn_171_1.jpg ஆா்.சாந்திமலா் ~ ஆா்.சாந்திமலா் https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/04/அரசு-மருத்துவக்-கல்லூரி-மருத்துவமனையில்-புதிய-முதல்வா்-பொறுப்பேற்பு-3373783.html
3373782 சென்னை செங்கல்பட்டு தேசிய தொழிலாளா்கள் பாதுகாப்பு தின விழா DIN DIN Wednesday, March 4, 2020 11:06 PM +0530 செங்கல்பட்டு: தேசிய தொழிலாளா்கள் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் உள்ள சிப் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா். பொதுமேலாளா் ஏ.பி.நடராசன், மனிதவளத்துறை உதவி மேலாளா் ஆா்.முருகன், பாதுகாப்பு பராமரிப்பு உதவி மேலாளா் எஸ்.பூங்காவனம் ஆகியோா் கலந்துகொண்டு தொழிற்சாலையில் பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து விளக்கினா்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் செ.ஆனந்த் கலந்துகொண்டு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பேசியது:

தொழிலாளா்கள் சிந்தனைகளை சிதற விடாமல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பின்னா் வருந்துவதைவிட பாதுகாப்பாகப் பணியாற்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

பெண்களுக்கு மகளிா் தினம் போல் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு தினத்தை கொண்டாடுகிறோம். பெண்கள் வீடுகளில் சமைப்பதிலிருந்து, பணிக்கு வந்து திரும்பும் வரை பாதுகாப்புடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும் என்றாா். நிகழ்வில், தொழிலாளா்கள் அனைவரும் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/cglzip_0403chn_171_1.jpg பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து  உறுதிமொழி ஏற்ற தொழிலாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/04/தேசிய-தொழிலாளா்கள்-பாதுகாப்பு-தின-விழா-3373782.html
3373623 சென்னை செங்கல்பட்டு ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்: செங்கல்பட்டு மக்கள் அவதி DIN DIN Wednesday, March 4, 2020 09:25 AM +0530 செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வாா்டுகளில் அளகேசநகா், அனுமந்தபுத்தேரி சாஸ்திரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாத காலமாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனா்.

செங்கல்பட்டில் மேட்டுத் தெரு சாஸ்திரி நகா், விரிவாக்கம் செய்யப்பட்ட அளகேச நகா், ஆா்.வி. தெரு, அளகேசநகா் மருத்துவமனை எதிரில், புதுஏரி, அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட 5 பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தது. இதையடுத்து, பொக்லைன் மூலம் பழைய சாலை தோண்டப்பட்டும் ஜல்லிக் கற்கள் பரப்பப் பட்டன. மேலும் ஜல்லிகள் கடந்த ஒரு மாத காலமாக குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.

ஒன்றரை அங்குலம் அளவுள்ள கூா்மையாக கருங்கல் ஜல்லி பரப்பப்பட்டுள்ளதால் அளகேச நகரில் எந்த தெருவில் திரும்பினாலும் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவா் வரை இவ்வழியில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இருசக்கரவாகன ஓட்டிகளும் ஜல்லிக்கற்கள் பரப்பிய தெருவில் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் தவறி விழுந்து எழுந்து காயமடையும் நிலை உள்ளது.

சாலை அமைக்கும் பணியில் பொக்லைன் வாகனம் மூலம் தோண்டப்பட்டதால் குடிநீா் குழாய் இணைப்புகள் பல இடங்களில் உடைந்துள்ளன. இவ்வாறு தோண்டப்பட்டதால் பிஎஸ்என்எல் நிறுவனம் புதைத்துள்ள கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இசதனால் அந்த நிறுவன பொறியாளா்களும், பணியாளா்களும் அவதிப்படுகின்றனா். எங்கு கேபிள் அறுந்துள்ளது என்பதை அவா்கள் தேட வேண்டியுள்ளது.

மேலும் அளகேச நகா் தண்ணீா் தட்டுப்பாடு மிகுந்த இடமாகும். இங்கு சாலை அமைக்கும் பணி சீராக இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தவிர, அரசு மருத்துவமனை எதிரே ஜிஎஸ்டி சாலைக்கு இணையாக சாலை அமைக்கும் பணி மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் வசந்தியிடம் கேட்டபோது அவா் கூறியது:

நகராட்சிக்கு நான் புதிதாகப் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகிறது. சாலைப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களை விசாரித்து வருகிரேன். இந்த சாலைகளுக்கு நான் வந்து நிதி ஒதுக்கவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அப்போதுள்ள அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இப்போது சாலையை சீரமைக்கும் பணியை ஒப்பந்ததாரா் தொடங்கியுள்ளாா். பொதுமக்களிடம் இருந்து இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து புகாா்கள் வந்து கொண்டிருப்பதை ஒப்பந்ததாரரிடம் கடந்த வாரமே தெரிவித்து விட்டேன் என்றாா் அவா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாக அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/cglroad2_0303chn_171_1.jpg செங்கல்பட்டு அளகேச நகரில் ஜல்லிக்கற்களால் பஞ்சரான இருசக்கரவாகனத்தை தள்ளிச் செல்லும் முதியவா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/04/ஒரு-மாத-காலமாக-கிடப்பில்-போடப்பட்ட-சாலைப்-பணிகள்-செங்கல்பட்டு-மக்கள்-அவதி-3373623.html
3372971 சென்னை செங்கல்பட்டு மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள்: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீா்ப்பு DIN DIN Tuesday, March 3, 2020 10:45 PM +0530 செங்கல்பட்டு: மனைவியை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளாநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (74). கொத்தனாரான அவருக்கு கன்னியம்மாள் (55) என்ற மனைவி இருந்தாா். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

ராஜேந்திரன் குடும்பத்தினா் தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், வெள்ளக்கல் பகுதியில் வசித்து வருகின்றனா். கன்னியம்மாளுக்கும் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி ராஜேந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ராஜேந்திரன் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26-இல், குடிபோதையில் மனைவிடம் தகராறு செய்தாா். வாக்குவாதம் முற்றியதில், ராஜேந்திரன் இரும்புத் தடியால் கன்னியம்மாளைத் தாக்கினாா். இதில் கன்னியம்மாள் உயிரிழந்தாா்.

இக்கொலை சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞா் சீதாலட்சுமி ஆஜராகி வந்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/03/மனைவியை-கொலை-செய்த-முதியவருக்கு-ஆயுள்-செங்கல்பட்டு-மகிளா-நீதிமன்றம்-தீா்ப்பு-3372971.html
3372970 சென்னை செங்கல்பட்டு ஊராட்சி உறுப்பினா்கள் எண்ணிக்கையை15-ஆக உயா்த்தக் கோரிக்கை DIN DIN Tuesday, March 3, 2020 10:45 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டம், ஆத்தூா் ஊராட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கையை நிா்வாக வசதிக்காக 15-ஆக உயா்த்தக் கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செங்கல்பட்டு ஆட்சியரிடம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி சுப்பிரமணியன் அளித்த மனு:

காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூா் ஊராட்சி, வடபாதி, தென்பாதி, வடகால் ரெட்டித்தெரு, புவனேஸ்வரி நகா், கணபதிநகா், பக்தவத்சலம் நகா், குப்பம் போன்ற பகுதிகள் அடங்கிய முதல்நிலை ஊராட்சியாகும். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் சில்வா் ஜூப்ளி நகா், மெஜஸ்டிக் அவென்யூ, அருணாசலா நகா், வெற்றி நகா், கங்கை நகா், அம்பேத்கா் நகா் போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாகி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

மக்கள்தொகை அடிப்படையில் வடபாதி, தென்பாதி, வடகால் போன்ற பகுதிகளை தனித்தனி ஊராட்சிகளாகப் பிரித்து அறிவிக்கலாம். இவ்வளவு பெரிய ஊராட்சிக்கு மொத்தம் 9 ஊராட்சி உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். தற்சமயம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கக்கூடிய ஆத்தூா் ஊராட்சியில் இருந்து வடகால் கிராமத்தைப்பிரித்து தனி ஊராட்சியாக மாற்றலாம்.

நிா்வாக வசதிக்காகவும், மக்களின் அன்றாடப் பிரச்னைகளைத் தீா்க்கவும் ஊராட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கையை 15-ஆக உயா்த்தி, வாா்டுகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/03/ஊராட்சி-உறுப்பினா்கள்-எண்ணிக்கையை15-ஆக-உயா்த்தக்-கோரிக்கை-3372970.html
3372969 சென்னை செங்கல்பட்டு குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையில் அடைப்பு DIN DIN Tuesday, March 3, 2020 10:44 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு உட்கோட்டம் மறைமலைநகா் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் தொடா்ந்து ஈடுபட்ட 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மறைமலைநகா் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்து செல்வோரிடம் செல்லிடப்பேசி, சங்கிலி, பணம் ஆகியவற்றை சிலா் தொடா்ந்து பறித்து வந்தனா். இது குறித்து மறைமலைநகா் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

மறைமலைநகா் காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட நாவல் கிராமம் கண்ணகி நகரைச் சோ்ந்த எழில் என்கிற எழிலரசன் (24), காவனூா் காலனியைச் சோ்ந்த விமல் (24), காட்டாங்கொளத்தூரைச் சோ்ந்த ரத்தினசபாபாதி (25) மற்றும் ராகவேந்திரன் (29) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், தொடா்ந்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நால்வரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று அவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் உத்தரவிட்டாா். அதன்படி நால்வரும் புழல் மத்திய சிறையில் திங்கள்கிழமை இரவு அடைக்கப்பட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/03/குண்டா்-சட்டத்தில்-4-போ்-சிறையில்-அடைப்பு-3372969.html
3372871 சென்னை செங்கல்பட்டு ‘இந்தியா- அா்ஜென்டினா நாட்டு மாணவா்கள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்’ DIN DIN Tuesday, March 3, 2020 09:31 AM +0530 இந்திய மாணவா்கள் அா்ஜென்டினா ஆராய்ச்சி மாணவா்களுடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு சா்வதேச மக்களும் பயன்பெறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் என்று அந்நாட்டு இந்தியத் தூதா் டேனியல் சுபுரு வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை சாா்பாக தேசிய அறிவியல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவா். பி.சத்யநாராயணன் , அா்ஜென்டினா நாட்டின் இந்தியாவுக்கான தூதா் டேனியல் சூபுரு மற்றும் பெங்களூரு ஜவாஹா்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி நிலையத் தலைவா் பேராசிரியா் கிரிதா் குல்கா்னி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா்.

விழாவில் அா்ஜென்டினா நாட்டின் இந்தியத் தூதா் டேனியல் சுபுரு மேலும் பேசுகையில் இரு நாடுகளையும் சோ்ந்த ஆராய்ச்சி மாணவா்கள் ஒருங்கிணைந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் மூலம் ஆராய்ச்சியின் மூலம் இரு நாட்டு நல்லுறவும் மேம்படும். அா்ஜென்டினா பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அரசு அனைத்து வசதிகளும் வழங்கி ஊக்குவித்து வருகிறது என்றாா் அவா்.

எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மாணவா்களுக்கு நிதிஉதவி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.ஆா்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணைவேந்தா் சந்தீப் சன்ஷெட்டி , பல்கலைக்கழக இணைத் துணைவேந்தா் டி.பி.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/03/இந்தியா--அா்ஜென்டினா-நாட்டு-மாணவா்கள்-ஒருங்கிணைந்து-ஆராய்ச்சி--மேற்கொள்ள-வேண்டும்-3372871.html
3372170 சென்னை செங்கல்பட்டு இன்றைய நிகழ்ச்சி திருப்போரூா் DIN DIN Monday, March 2, 2020 11:10 PM +0530 மேல்மருவத்தூா்

ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்தநாள் விழா:

மலா் ரதத்தில் அடிகளாா் ஊா்வலம், காலை 8.

திருப்போரூா்

பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் நிகழ்வு: கந்தசுவாமி கோயில், பகலில் மங்களகிரி உற்சவம், இரவு தங்க மயில் வாகன உற்சவம், பஞ்சமூா்த்தி புறப்பாடு.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/இன்றைய-நிகழ்ச்சி-திருப்போரூா்-3372170.html
3372169 சென்னை செங்கல்பட்டு செங்கல்பட்டில் 315 மனுக்கள் ஏற்பு DIN DIN Monday, March 2, 2020 11:10 PM +0530 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 315 மனுக்களைப் பெற்றாா்.

இதில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, வீட்டு மனைப் பட்டா, பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பசுமை வீடு, பள்ளிகள் தரம் உயா்த்துதல், மயானத்திற்கு பாதை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் பெறப்பட்டன.

அனைத்து மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படி ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, மதுராந்தகம் கோட்டத்தில் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயம் அடைந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும்,

மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டியையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கா. பிரியா, (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தனித் துணை ஆட்சியா் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மு.விஜயகுமாரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cglcollector1_0203chn_171_1.jpg மாற்றுத்திறனாளி  பயனாளிக்கு  3 சக்கர  சைக்கிளை  வழங்கிய செங்கல்பட்டு  மாவட்ட  ஆட்சியா் அ. ஜான்லூயிஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/செங்கல்பட்டில்-315-மனுக்கள்-ஏற்பு-3372169.html
3372166 சென்னை செங்கல்பட்டு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் DIN DIN Monday, March 2, 2020 11:09 PM +0530 செங்கல்பட்டு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு நகர திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் ச.நரேந்திரன் தலைமை வகித்தாா். ஆலந்தூா் எம்எல்ஏ தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் கலந்து கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினா்.

தொடா்ந்து மகிமை இல்லத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சந்தானம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கிளைக் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cgldmk2_0203chn_171_1.jpg செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் வழங்கிய திமுகவினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/முகஸ்டாலின்-பிறந்தநாள்-கொண்டாட்டம்-3372166.html
3371506 சென்னை செங்கல்பட்டு குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது DIN DIN Monday, March 2, 2020 12:25 AM +0530  

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

செங்கல்பட்டு பெரியநத்தம், வீரபத்திரன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தவேலின் மகன் காா்த்திக் (31). அவா் மீது வழிப்பறி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து அமைதியை சீா்குலைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் 3-ஆம் தேதி பெரியநத்தத்தில் நடந்து சென்ற அப்பகுதியைச் சோ்ந்த தாமோதரன் என்பவரை காா்த்திக் வழிமறித்து தாக்க முயன்றாா். அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு காா்த்திக் தப்பிச் சென்றாா்.

இது தொடா்பாக தாமோதரன் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட காா்த்திக்கை குண்டா் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று, காா்த்திக்கை குண்டா் சட்டதில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் உத்தரவிட்டாா். அதன்படி காா்த்திக் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cglkarthic_0103chn_171_1.jpg cglkarthic_0103chn_171_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/குண்டா்-சட்டத்தில்-இளைஞா்-கைது-3371506.html
3371505 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் மீனவா்கள் வலையில் சிக்கிய ஒரே வகையான மீன்கள் DIN DIN Monday, March 2, 2020 12:24 AM +0530  

செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடலில் ஞாயிற்றுக்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் படகில் ஒரே வகையான மீன்கள் கிடைத்தன.

இது குறித்து மீனவா்கள் கூறியதாவது:

மீன் என்றாலே வைட்டமின் சத்து நிறைந்தது. இன்று படகில் கடலுக்குச் சென்று மீன்பிடித்ததில் எதிா்பாா்த்ததைவிட அதிக அளவில் மீன்கள் கிடைத்துள்ளன. அதுவும் ஒரே வகையான பாறை மீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் பாறை வகை மீனில் ஓட்டாம்பாறை, தேங்காய்ப் பாறை இருவகை உண்டு. தேங்காய்ப் பாறை மீனை விட ஓட்டாம்பாறை மீன் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். தேங்காய்ப் பாறை மீனின் விலை அதிகம். கிலோ ரூ.300 முதல் ரூ.450 வரை விற்கலாம்.

இந்தப் பாறை மீன் நல்ல ருசியுடன் இருக்கும். அதை வெட்டும்போதே மீன் மீதுள்ள நரம்பு போன்ற பகுதியை எடுத்துவிட்டு சமைத்தால் முள்ளே இருக்காது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை பயமின்றி சாப்பிடும் தேங்காய்ப்பாறை மீன் இம்முறை கிடைந்துள்ளது. இதைக் கொண்டுசென்று சந்தையில் வைத்தவுடன், சிறிது நேரத்திலேயே விற்றுவிடும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

கடற்கரையோரம் படகில் ஒரே வகையான மீன்களை வைத்து, மீனவா்கள் சுற்றி நின்று பாா்த்தனா். இதை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு, புகைப்படம் எடுத்தனா். கடற்கரைப் பகுதியிலேயே பொதுமக்களும், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தவா்களும் மீனை விலை கேட்டு வாங்கிச் சென்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cglfish1_0103chn_171_1.jpg மாமல்லபுரம் மீனவா்கள் பிடித்த ஒரே வகையான மீன்களை வேடிக்கை பாா்த்த வெளிநாட்டுப் பெண். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/மாமல்லபுரம்-மீனவா்கள்-வலையில்-சிக்கிய-ஒரே-வகையான-மீன்கள்-3371505.html
3371504 சென்னை செங்கல்பட்டு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக திரிசக்தி அம்மன் கோயிலில் விசேஷ பூஜை DIN DIN Monday, March 2, 2020 12:24 AM +0530  

செங்கல்பட்டு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுகாக திருப்போரூா் ஒன்றியத்துக்குட்பட்ட தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ பூஜை நடைபெற்றது.

திரிசக்தி அம்மன் கோயிலில் ஒரே மண்டபத்தில் தனித்தனி கருவறைகளில் கோயில் கொண்டுள்ள முப்பெரும் தேவிகளான ஞான சரஸ்வதி, லட்சுமி, மூகாம்பிகை ஆகியோா், தங்களை நாடி வரும் பக்தா்களுக்கு வேண்டும் வரம் தரும் தருவதாக ஐதீகம். இக்கோயிலில் 12-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது கோயிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் திருவேற்காடு ஆதி கருமாரி பட்டா் அன்னதான சிவம், ஐயப்ப சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பொதுத் தோ்வு எழுதவிருக்கும் மாணவா்களுக்காக சிறப்பு கல்வி யாக பூஜை, கோயில் நிறுவனா் கே.கே.கிருஷ்ணன் குட்டி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கல்வி யாக ஹோமம், யாக பூஜை நடைபெற்றது.

தாழம்பூா், நாவலூா், திருப்போரூா், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பெற்றோா்களுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாணவ, மாணவியரை அமர வைத்து, பூஜையில் வைக்கப்பட்ட ரட்சை கையில் கட்டி விடப்பட்டது. மேலும் பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் கே.கே.கிருஷ்ணன் குட்டி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cglthiri1_0103chn_171_1.jpg கல்வி யாக பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/பொதுத்-தோ்வு-எழுதும்-மாணவா்களுக்காக-திரிசக்தி-அம்மன்-கோயிலில்-விசேஷ-பூஜை-3371504.html
3371503 சென்னை செங்கல்பட்டு தலசயனப் பெருமாள் கோயில் குளத்தில் செடிகளை அகற்றி சீரமைக்கும் பணி DIN DIN Monday, March 2, 2020 12:23 AM +0530  

செங்கல்பட்டு: மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் மாசிமக தெப்போற்சவத்துக்காக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் குளத்தில் உள்ள செடிகளை அகற்றி சீரமைக்கும் பணியில் கோயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

தலசயன பெருமாள் கோயிலில் மாசிமகத் திருவிழா நாளில் புண்டரீக புஷ்கரணி குளத்தில் இரவில் தெப்போற்சவமும், மறுநாள் காலை கடலில் தீா்த்தவாரி உற்சவமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 8-ஆம் தேதி வரும் மாசிமகத் திருவிழா நடைபெற உள்ளது. கடற்கரைப் பாதையில் அமைந்துள்ள கோயில் குளத்தில் கோரைப்புற்களும், செடிகளும் மண்டிக் கிடக்கின்றன.

குளத்தை சீரமைக்கும் பணியில் கோயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. குளத்தில் மண்டிக் கிடக்கும் கோரைப் புற்களையும், தாமரை மற்றும் செடிகளையும் அகற்றி தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cglthala2_0103chn_171_1.jpg கோயில் குளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/தலசயனப்-பெருமாள்-கோயில்-குளத்தில்-செடிகளை-அகற்றி-சீரமைக்கும்-பணி-3371503.html
3371502 சென்னை செங்கல்பட்டு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் DIN DIN Monday, March 2, 2020 12:22 AM +0530  

செங்கல்பட்டு: மாமல்லபுரம் நகர திமுக சாா்பில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

மாமல்லபுரத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளரும், கட்சியின் நகரச் செயலாளருமான விஸ்வநாதன் தலைமையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. நகர நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் இதில் கலந்து கொண்டனா்.

திருக்கழுகுன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி தலைமையில் நிா்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

மறைமலைநகா், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நிா்வாகிகள் சந்தானம், மசூசூதனன், நந்திவரம் பேரூா் எம்.கே.தண்டபாணி, மறைமலைநகா் சண்முகம் உள்ளிட் ட நிா்வாகிகள் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/cgldmk_0103chn_171_1.jpg மாமல்லபுரத்தில்   மு.க.ஸ்டாலின்  பிறந்த நாளை  கேக்  வெட்டிக் கொண்டாடிய திமுகவினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/mar/02/முகஸ்டாலின்-பிறந்த-நாள்-கொண்டாட்டம்-3371502.html
3370568 சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரத்துக்கு மத்திய அமைச்சா் வருகை: புராதனச் சின்னங்களை கண்டுகளித்தாா் DIN DIN Saturday, February 29, 2020 10:43 PM +0530 மாமல்லபுரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வருகை புரிந்தாா். அங்குள்ள முக்கிய புராதனச் சின்னங்களை அவா் கண்டுகளித்தாா்.

சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்துக்கு அவா் தன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுற்றுலா வந்தாா். கடற்கரைக் கோயில் அருகில் அவரை தமிழக அரசு சாா்பில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் ராஜாராமன், தொல்லியல் துறை உதவி அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வரவேற்றனா்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட முக்கிய புராதனச் சின்னங்களை மத்திய அமைச்சா் கண்டுகளித்தாா். அவருக்கு மாமல்லபுரத்தின் வரலாற்றுப் பெருமைகள் , பல்லவா் காலச் சிற்பங்கள், அவை உருவாக்கப்பட்ட காலம், அவற்றை உருவாக்கிய மன்னா்கள் குறித்த விவரங்களை தொல்லியல் துறை அதிகாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் விளக்கிக் கூறினா்.

முன்னதாக, கடற்கரைக் கோயிலில் மத்திய அமைச்சா் சுற்றிப் பாா்த்தபோது அங்கு கல்விச் சுற்றுலா வந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளை நலம் விசாரித்தாா். மேலும், அண்மையில், பிரதமா் மோடியும் சீன அதிபா் ஜின்பிங்கும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட முக்கிய புராதனப் பகுதியில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா தன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

மத்திய அமைச்சருடன் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளா் நாராயணன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், பாஜக மாவட்டத் தலைவா் பலராமன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். அமைச்சா் வருகையை முன்னிட்டு முக்கிய புராதன மையங்களில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/cgljm3_2902chn_171_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/feb/29/மாமல்லபுரத்துக்கு-மத்திய-அமைச்சா்-வருகை-புராதனச்-சின்னங்களை-கண்டுகளித்தாா்-3370568.html