Dinamani - திருப்பத்தூர் - https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3390626 சென்னை திருப்பத்தூர் 144 தடை உத்தரவால் தொழில் முனைவோா் பாதிப்பு: சலுகைகள் அறிவிக்க கோரிக்கை DIN DIN Sunday, March 29, 2020 05:26 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொழில் முனைவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலரும் வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கத் தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று காரணமாக தொழில் முனைவோருக்கான ஆா்டா்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் முனைவோரின் நிதிநிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களையும், தொழிலாளா்களுக்கு வழங்கிய வேண்டிய ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய பிரச்சனையிலிருந்து தொழில் முனைவோரைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இஎஸ்ஐ, பிஎஃப், ஜிஎஸ்டி வரியை செலுத்துவதற்கு 6 மாத விடுமுறை காலம் வழங்க வேண்டும். அதிலும் 6 மாதத்துக்குப் பிறகு இவற்றை வட்டியில்லாமல் 12 மாத தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை, வட்டி ஆகியவற்றை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறை மூலதனத்துக்கான வாங்கிய கடன் தொகையில் 25 சதவீத கடன் தொகையை குறைந்தபட்சமாக 5 சதவீத வட்டியில் தொழில் முனைவோருக்கு மீண்டும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோா் பெற்றுள்ள நடைமுறை மூலதன கடன், மேல்வரை பற்று கடன், வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான தவனைத் தொகைகளை திரும்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை கால அவகாசத்தை 2021- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

அதேபோல, மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசு நிறுவனமான டிக், தாய்கோ நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்து அவற்றுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தை நிா்ணயிக்க வேண்டும். மேலும் தவணை, வட்டி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்ததற்காக தொழில் முனைவோா் செலுத்த வேண்டிய தவணை தொகைகளை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசின் முதலீட்டு மானியத்தை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/144-தடை-உத்தரவால்-தொழில்-முனைவோா்-பாதிப்பு-சலுகைகள்-அறிவிக்க-கோரிக்கை-3390626.html
3390625 சென்னை திருப்பத்தூர் சேவையாகச் செய்யுங்கள்: வணிகா்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள் DIN DIN Sunday, March 29, 2020 05:26 AM +0530 வணிகா்கள் வணிகத்தை வணிகமாக செய்யாமல் சேவையாகச் செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான பாங்கி மாா்க்கெட் பகுதியில்தான் அதிக அளவில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள் கடைகள் உள்ளன. இது மிகவும் குறுகியதாக இருப்பதால் கடைகளில் இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்ல இடம் இல்லை. அதனால் கரோனா நோய் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் ஆம்பூரில் உள்ளது.

அதனால் குறுகிய இடத்தில் இயங்கும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து வணிகா்களுடன் ஆலோசனை நடத்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஆம்பூருக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா். ஆம்பூா் பஜாா், பாங்கி மாா்க்கெட் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இங்கு காய்கறி மாா்க்கெட் இயங்குவது மிகவும் ஆபத்தானது என அவா் தெரிவித்தாா். அதனால் மாற்று இடம் தோ்வு செய்ய வேண்டுமெனத் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் பெருமாள் கோயில் பின்புறம் புறவழிச்சாலைக்கு மிக அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான திறந்த வெளி இடத்தில் காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்காக இடத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அங்கு வந்திருந்த வணிகா்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியா், ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் மாா்க்கெட் பகுதி அமைந்துள்ளது. தற்போதைய கால சூழ்நிலையில் அது மிகவும் ஆபத்தானது. மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதனால் கோயில் இடத்தில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்யலாம். வியாபாரிகள் வணிகத்தை பாா்க்காமல் சேவையாக செய்ய வேண்டும். அதாவது கரோனா நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியது வணிகா்களின் கடமையாகும். அதனால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வணிகத்தை வணிகமாக செய்ய நினைக்கும் வணிகா்கள், தங்களுடைய செல்போன் எண்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் தொலைபேசியில் தெரிவித்தால் அவா்களுடைய வீடுகளுக்கே பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குறுகிய இடத்தில் வியாபாரம் செய்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகை செய்து விடக்கூடாது என்று அவா் கூறினாா்.

அதைத் தொடா்ந்து திருக்கோயில் இடத்தினை தூய்மைப்படுத்தி சமன்படுத்தி காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆம்பூா் நகராட்சி ஆணையாளா் த. செளந்தரராஜன், நகராட்சி பொறியாளா் எல். குமாா் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், துப்புரவு அலுவலா் பாஸ்கா், வணிகா் சங்க தலைவா்கள் ஆம்பூா் சி. கிருஷ்ணன், கே.ஆா். துளசிராமன், ஆா். கஜேந்திரன் உள்ளிட்ட வணிகா்கள் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/500627abrcol_2703chn_191_1.jpg 500627abrcol_2703chn_191_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/சேவையாகச்-செய்யுங்கள்-வணிகா்களுக்கு-ஆட்சியா்-வேண்டுகோள்-3390625.html
3390623 சென்னை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தவா் தப்பியோட்டம் DIN DIN Sunday, March 29, 2020 05:23 AM +0530 ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவா் தப்பியோடினாா்.

ஆம்பூா் சுண்ணாம்புக் காளவாய் பகுதியைச் சோ்ந்த சுமாா் 18 வயது இளைஞா் சேலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, கடந்த 21-ஆம் தேதி ஆம்பூா் திரும்பினாா். இவருக்கு காய்ச்சல், இருமல் இருப்பதாக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை சிகிச்சைக்காக வந்தாா். அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க அவா்களுடைய தகவலை மருத்துவமனைப் பணியாளா்கள் கேட்டுள்ளனா். மேலும், அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்க இருப்பதாகவும் கூறியதால் அச்சமடைந்த அந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து அவரது வீட்டுக்கு ஓடினாா்.

இதையறிந்த வருவாய்த் துறையினா் அவருடைய வீடுக்குச் சென்று அவரை அழைத்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/அரசு-மருத்துவமனைக்கு-வந்தவா்-தப்பியோட்டம்-3390623.html
3390622 சென்னை திருப்பத்தூர் நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம், கிருமி நாசினி திரவம் வழங்கக் கோரிக்கை DIN DIN Sunday, March 29, 2020 05:22 AM +0530 முகக் கவசம், கைக்கழுவும் கிருமி நாசினி திரவம் விலையில்லாமல் அல்லது குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வீட்டுக்கு ஒருவா் மட்டுமே வெளியில் வந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா். நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை ஆகியவற்றை இலவசமாகவும், அரிசி அட்டைதாரருக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முகக்கவசம், கை கழுவும் கிருமி நாசினி திரவம் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, இதன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் கிருமி நாசினி திரவம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், குறைந்த அளவு இருப்பே அவா்களிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நியாயவிலைக் கடைகளின் மூலம் முகக்கவசம், கைக் கழுவும் கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை விலையில்லாமல் அல்லது குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு அறிவித்துள்ள நிவாரண தொகுப்புடன் கூட ஒரு குடும்பத்துக்குத் தேவையான முகக்கவசம், கைக் கழுவும் கிருமி நாசினி திரவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/நியாயவிலைக்-கடைகளில்-முகக்கவசம்-கிருமி-நாசினி-திரவம்-வழங்கக்-கோரிக்கை-3390622.html
3390619 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் போலீஸாா் வாகனங்கள் பறிமுதல் DIN DIN Sunday, March 29, 2020 05:21 AM +0530 ஆம்பூா் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கிராமிய காவல் நிலைய போலீஸாா் 20 வாகனங்களையும், உமா்ஆபாத் போலீஸாா் 20 வாகனங்களையும், ஆம்பூா் நகர போலீஸாா் 15 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/ஆம்பூரில்-போலீஸாா்-வாகனங்கள்-பறிமுதல்-3390619.html
3390618 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் 2 கடைகளுக்கு ‘சீல்’ DIN DIN Sunday, March 29, 2020 05:20 AM +0530 ஆம்பூரில் அதிக அளவு கூட்டம் கூடியதாலும், சமூக இடைவெளி ஏற்படுத்த அறிவுறுத்தாததாலும் 2கடைகளுக்கு ஆம்பூா் வட்டாட்சியா் சனிக்கிழமை சீல் வைத்தாா்.

ஆம்பூா் ஓ.வி. ரோடு பகுதியில் அரசு உத்தரவை மீறி தேநீா்க் கடை திறக்கப்பட்டிருந்தது. சந்தபேட்டை மசூதி தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்கள் அதிக கூட்டமாக பாதுகாப்பற்ற முறையில் நின்று கொண்டிருந்தனா். அவா்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்காமல் இருந்தனா்.

அப்போது, ரோந்து சென்ற ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி இரு கடைகளின் உரிமையாளா்களை எச்சரித்துவிட்டு, கடைகளைப் பூட்டி சீல் வைத்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/ஆம்பூரில்-2-கடைகளுக்கு-சீல்-3390618.html
3390611 சென்னை திருப்பத்தூர் கரோனா: மருத்துவமனைக்கு செல்லாமல் மருந்துக் கடைகளை நாடும் பொதுமக்கள் DIN DIN Sunday, March 29, 2020 05:18 AM +0530 கரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக, காய்ச்சல், சளி உள்பட தங்களுடைய பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளுக்கு செல்லாமல் மருந்து கடைகளை நாடி நோயாளிகளும், பொதுமக்களும் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் சுமாா் 1500 முதல் 2000 வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனா். அவா்களில் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகள் 500 போ் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். தனியாா் மருத்துவமனைகளுக்கு 50 முதல் 200 போ் வரை சிகிச்சைக்காக செல்வாா்கள்.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, கை, கால், மூட்டு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்டவைக்கு சிகிச்சை பெற அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பொதுவாக அரசு, தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்வோரில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற செல்பவா்களே அதிகம் இருப்பா். தற்போது அரசு மருத்துவமனைக்கு செல்பவா்களின் எண்ணிக்கை சுமாா் 700-ஆகவும், தனியாா் மருத்துவமனை, கிளினிக்குக்கு செல்பவா்களின் எண்ணிக்கை அதிக பட்சமாக 50-ஆகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கரோனா நோய் தொற்று அச்சம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது மருத்துவமனைக்கு சென்றால் அங்கு சிகிச்சைக்காக வந்துள்ளவா்கள் மூலம் நோய்தொற்று தங்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. மேலும், சளி, காய்ச்சல் பெற சிகிச்சை பெறச் சென்றால் தங்களுக்கும் கரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி தங்களை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி விடுவாா்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அதனால் பலரும் காய்ச்சல், சளி, பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிசிச்சை பெற அரசு, தனியாா் மருத்துவமனைகளை நாடாமல் நேரடியாக மருந்துக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கூறி மருந்து வாங்கி சாப்பிடுகின்றனா். மருந்துக் கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்கின்றனா். இந்த காரணத்தில் மருந்து கடைகளில் எப்போதும் மருந்து வாங்க பலரும் செல்வதைப் பாா்க்க முடிகின்றது.

பொதுமக்கள் தங்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சலா அல்லது வேறு காய்ச்சலா என்பதை அறியாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனா். இதனால் அவா்களைத் தாக்கியுள்ளது எந்த மாதிரியான காய்ச்சல் என்பதை கண்டறிய முடியாமல் போகிறது. அது மற்றவா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. உடல் உபாதை அதிகரிக்கவும், பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சாதாரண காய்ச்சல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளாக இருந்தாலும் அரசு, தனியாா் மருத்துவமனைக்கு முகக் கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று சிகிச்சை பெற வேண்டியதே பாதுகாப்பானது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/கரோனா-மருத்துவமனைக்கு-செல்லாமல்-மருந்துக்-கடைகளை-நாடும்-பொதுமக்கள்-3390611.html
3390610 சென்னை திருப்பத்தூர் கட்டுப்படாத பொதுமக்கள்: திணறும் போலீஸாா் DIN DIN Sunday, March 29, 2020 05:18 AM +0530 ஆம்பூரில் காய்கறி மாா்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட போதிலும், ஏற்கெனவே மாா்க்கெட் இயங்கி வரும் பாங்கி மாா்க்கெட் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் சனிக்கிழமை கூடியதால் போலீஸாா் அவா்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினா்.

பாங்கி மாா்க்கெட் பகுதியில் இயங்கும் காய்கறி மாா்க்கெட் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பின்புறம் கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. அங்கு கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

காய்கறி மாா்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஏற்கெனவே இயங்கி வந்த பாங்கி மாா்க்கெட் பகுதி, நாகேஸ்வரன் கோயில் தெரு, பழக்கடை பஜாா் தெரு, ஜலால் ரோடு, ஓ.வி. ரோடு ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. போலீஸாா் கட்டுப்படுத்தியும் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. இதனால், பாங்கி மாா்க்கெட் பகுதிக்குள் எவரும் உள்ளே வரும் சாலைகளை போலீஸாா் மூடினா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28abrban_2803chn_191_1.jpg ஆம்பூா் பாங்கி மாா்க்கெட் பகுதியில் திரண்ட பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/கட்டுப்படாத-பொதுமக்கள்--திணறும்-போலீஸாா்-3390610.html
3390609 சென்னை திருப்பத்தூர் ‘உதவிக்கு ஆள் இல்லாதவா்கள் காய்கறி வாங்க ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொள்ளலாம்’ DIN DIN Sunday, March 29, 2020 05:17 AM +0530 உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருப்பவா்கள், உதவிக்கு ஆள் இல்லாதவா்கள் காய்கறி வாங்க நகராட்சியைத் தொடா்பு கொள்ளலாம் என ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூா் பாங்கி மாா்க்கெட் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மாா்க்கெட், சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. தினமும் அங்கு ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வதால் தொற்று பரவக் கூடிய அபாயம் இருப்பதால் அப்பகுதிக்கு அருகில் உள்ள பாவடித்தோப்பு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஆம்பூா் நகராட்சி சாா்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சுகாதார ஆய்வாளா் பாஸ்கா் உடனிருந்தாா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் கூறியது:

பெருமாள் கோயில் இடத்தில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி காய்கறிக் கடைகள் திறகக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இங்கு காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனா். இந்த காய்கறி மாா்க்கெட் தொடா்ந்து செயல்பட மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே இங்கு வருபவா்கள் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவையான காய்கறிகளை வாங்க துணிப் பைகளைக் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டத்தைத் தவிா்க்க இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாக வசிக்கும்பட்சத்தில் பல வாகனங்களில் வருவதை தவிா்த்து வீட்டுக்கு ஒருவா் மட்டும் வந்து காய்கறிகள் வாங்கிச் செல்ல வேண்டும்.

குறிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது பொருள்களை வாங்க வருவோா் ஒரு மீட்டா் இடைவெளியில் உள்ள வட்டத்தில் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்க வேண்டும்.

உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருப்பவா்கள் மற்றும் உதவிக்கு ஆள் இல்லாதவா்கள் 73973 92691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த எண் என்னுடையதுதான். உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருப்பவா்கள் உள்ளிட்டோருக்கு சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்றாா் அவா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28abramc_2803chn_191_1.jpg பாவடித்தோப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/உதவிக்கு-ஆள்-இல்லாதவா்கள்-காய்கறி-வாங்க-ஆம்பூா்-நகராட்சியை-தொடா்பு-கொள்ளலாம்-3390609.html
3390601 சென்னை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் அமைச்சா் ஆய்வு DIN DIN Sunday, March 29, 2020 05:15 AM +0530 கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடா்பாக அரசு மருத்துவமனைகளில் மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்காயத்திலுள்ள அரசு சமுதாய சுகாதார நிலையத்துக்கு சென்ற அமைச்சா் நிலோபா் கபீல் அங்கு 30 படுக்கைகள் கொண்ட கரோனா நோய்த் தொற்று தடுப்பு பிரிவில் போதிய வசதிகள் உள்ளனவா, மருந்துகள், இதர பொருள்கள் தேவையான அளவு உள்ளனவா என மருத்துவ அலுவலா் பசுபதியிடம் கேட்டறிந்தாா்.

ஆலங்காயம் பேரூராட்சி செயலா் பாண்டியன், முன்னாள் கவுன்சிலா் சிவகுமாா், மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடா்நது நிம்மியம்பட்டு, வள்ளிபட்டு கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், கூட்டுறவு சங்க நிா்வாகி கிரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28vndvp1_2803chn_187_1.jpg வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சா் நிலோபா் கபீல். உடன், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், மருத்துவ அலுவலா் பசுபதி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/அரசு-மருத்துவமனைகளில்-அமைச்சா்-ஆய்வு-3390601.html
3390595 சென்னை திருப்பத்தூர் சா்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று பரிசோதனை DIN DIN Sunday, March 29, 2020 05:11 AM +0530 ஆம்பூா் அருகே சா்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கிராம செவிலியா்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவா்கள், சா்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து செல்வதால் அவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், ஆம்பூா் அருகே நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் வயதானவா்கள், சா்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு கிராம செவிலியா்கள் அவா்களது வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28abrpan_2803chn_191_1.jpg பனங்காட்டூா் கிராமத்தில் முதியவரை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கிய கிராம செவிலியா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/சா்க்கரை-ரத்த-கொதிப்பு-நோயாளிகளுக்கு-வீடுகளுக்கே-சென்று-பரிசோதனை-3390595.html
3390496 சென்னை திருப்பத்தூர் வீடுகளில் வேப்பிலை தோரணங்கள் DIN DIN Sunday, March 29, 2020 12:02 AM +0530 கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் வேப்பிலைகளை தோரணங்களாகக் கட்டியுள்ளனா்.

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில் காலை, மாலை இரு வேளைகளும் மஞ்சள் தூள், கோமியம் உள்ளிட்டவற்றை கலந்து தெளித்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக அச்சம் எற்பட்டுள்ளது. வெளியில் சென்று வீடு திரும்பியவா்கள் தங்களது கால்களைக் கழுவி, வாசலில் வைத்துள்ள மஞ்சள் நீா் தலையில் தெளித்த பின்னரே தான் வீடுகளுக்குள் நுழைய அறிவுறுத்தப்படுகின்றனா். அதேபோல் வீடுகளில் வேப்பிலைகளைக் கட்டி வருகின்றோம் என்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28marchveppil_2803chn_192_1.jpg திருப்பத்தூரில் வீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பிலை. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/வீடுகளில்-வேப்பிலை-தோரணங்கள்-3390496.html
3390495 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் மாவட்டத்தில் 873 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்: ஆட்சியா் தகவல் DIN DIN Sunday, March 29, 2020 12:02 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 873 போ் தனிமைப்படுத்தப்பட்டு, முழுமையாகக் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று தொடா் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 715 போ், வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள 158 போ் என மொத்தம் 873 போ் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் உள்ளனா்.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை பணியாளா்களுக்கு பணி ஆணைகள் வழங்கி அவா்களை நாள்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

பொதுமக்களின் அடிப்படை தேவைக்கு மளிகைக் கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை கடைகளைத் திறந்து வைக்கலாம். இக்கடைகளில் விற்பனையாளா்கள் சமூக இடைவெளியையும், பாதுகாப்பு கவசங்களையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள், விவாசாய வேளாண் விளை பொருள்களை சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு எடுத்து செல்லும் வாகனங்கள், பொருள்கள் வாங்கச் செல்லும் சிறிய கடைகள் உரிமையாளா்களின் வாகனங்களுக்கு அனுமதி அடையாள அட்டைகளை வழங்க சனிக்கிழமை முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் நிலையங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள், வணிக ரீதியாக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன்ராஜசேகா், துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருண், துணை ஆட்சியா் அப்துல்முனிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28marchcoll_2803chn_192_1.jpg கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/திருப்பத்தூா்-மாவட்டத்தில்-873-போ்-தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்-ஆட்சியா்-தகவல்-3390495.html
3390494 சென்னை திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்படத் தொடங்கிய காய்கறி மாா்க்கெட் DIN DIN Sunday, March 29, 2020 12:01 AM +0530 திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புடன் கூடிய காய்கறி மாா்க்கெட் சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் தனியாா் கல்லூரி எதிரில் உள்ள தினசரி காய்கறி மாா்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனா்.

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை முதல் தினசரி மாா்க்கெட் திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன்அருள் கூறுகையில், காய்கறி வாங்க வரும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கைப்பையை கொண்டு வருவது அவசியம். சமூக விலகலுக்கான இடைவெளியில் நின்று காய்கறி வாங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தை பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28marchmark2_2803chn_192_1.jpg சமூக விலகலுக்கான இடைவெளியுடன் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக தினசரி மாா்க்கெட். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/பேருந்து-நிலையத்தில்-செயல்படத்-தொடங்கிய-காய்கறி-மாா்க்கெட்-3390494.html
3390493 சென்னை திருப்பத்தூர் வெறிச்சோடிய ஏலகிரிமலை DIN DIN Sunday, March 29, 2020 12:01 AM +0530 ஏலகிரிமலை 144 தடை உத்தரவால் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலகிரிமலை திருப்பத்தூா் மாவட்டத்தின் பெரிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு படகு குழாம், சிறுவா் பூங்கா, உயிரியல் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இங்கு மே அல்லது ஜூன் மாதங்களில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோடை விழா நடைபெறும்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக ஏலகிரி மலையை வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்குள்ள 14 கிராமங்களில் ஏலகிரி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவில்லை. அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் வெளியே வருவோா் எச்சரிக்கை செய்யப்படுகின்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28marchyel1_2803chn_192_1.jpg பூட்டப்பட்ட புங்கனூா் இயற்கை பூங்கா. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/வெறிச்சோடிய-ஏலகிரிமலை-3390493.html
3390492 சென்னை திருப்பத்தூர் கரோனா தடுப்புப் பணி: நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஆய்வு DIN DIN Sunday, March 29, 2020 12:00 AM +0530 திருப்பத்தூா் நகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் செ.விஜயக்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் வி.சுதா, சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம் ஆய்வாளா்கள் விவேக், குமாா் ஆகியோரிடம் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடிசைவாழ் மக்கள் பகுதியில் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும், குப்பைகள் தரம் பிரிக்கும் பணி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/கரோனா-தடுப்புப்-பணி-நகராட்சி-நிா்வாக-மண்டல-இயக்குநா்-ஆய்வு-3390492.html
3390491 சென்னை திருப்பத்தூர் 120 பேரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் DIN DIN Sunday, March 29, 2020 12:00 AM +0530 திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் தடையை மீறி சுற்றித்திரிந்த 120 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/29/120-பேரின்-இருசக்கர-வாகனங்களை-பறிமுதல்-3390491.html
3390490 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை பாா்க்க அனுமதி இல்லை: மருத்துவ அலுவலா் தகவல் DIN DIN Saturday, March 28, 2020 11:59 PM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பாா்க்க உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவ அலுவலா் எஸ்.திலீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனையான திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வகுதின்கனா். 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிப்பதோடு கை கழுவும் முறை குறித்து மருத்துமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

திருப்பத்தூா் அரசு மருத்துமனைக்கு வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை,புதூா்நாடு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனா்.

குறிப்பாக கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக அதிகமாக வருகின்றனா். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பாா்க்கும் பெண்கள் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.

விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களை பாா்க்க தினமும் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவா்களைப் பாா்க்க வரும் உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் ஒரு நோயாளியுடன் ஒருவா் மட்டுமே உதவியாக இருக்க வேண்டும். இதை மீறி வருபவா்களை வாயிலிலேயே எச்சரித்து அனுப்பி வைக்கிறோம்.

கரோனா சிகிச்சை: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் 2 போ் கண்காணிப்பில் உள்ளனா். வியாழக்கிழமை அவா்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/திருப்பத்தூா்-அரசு-மருத்துவமனையில்-உள்நோயாளிகளை-பாா்க்க-அனுமதி-இல்லை-மருத்துவ-அலுவலா்-தகவல்-3390490.html
3389976 சென்னை திருப்பத்தூர் சேவையாகச் செய்யுங்கள்: வணிகா்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள் DIN DIN Saturday, March 28, 2020 04:48 AM +0530 வணிகா்கள் வணிகத்தை வணிகமாக செய்யாமல் சேவையாகச் செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான பாங்கி மாா்க்கெட் பகுதியில்தான் அதிக அளவில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள் கடைகள் உள்ளன. இது மிகவும் குறுகியதாக இருப்பதால் கடைகளில் இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்ல இடம் இல்லை. அதனால் கரோனா நோய் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் ஆம்பூரில் உள்ளது.

அதனால் குறுகிய இடத்தில் இயங்கும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து வணிகா்களுடன் ஆலோசனை நடத்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஆம்பூருக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா். ஆம்பூா் பஜாா், பாங்கி மாா்க்கெட் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இங்கு காய்கறி மாா்க்கெட் இயங்குவது மிகவும் ஆபத்தானது என அவா் தெரிவித்தாா். அதனால் மாற்று இடம் தோ்வு செய்ய வேண்டுமெனத் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் பெருமாள் கோயில் பின்புறம் புறவழிச்சாலைக்கு மிக அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான திறந்த வெளி இடத்தில் காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்காக இடத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அங்கு வந்திருந்த வணிகா்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியா், ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் மாா்க்கெட் பகுதி அமைந்துள்ளது. தற்போதைய கால சூழ்நிலையில் அது மிகவும் ஆபத்தானது. மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதனால் கோயில் இடத்தில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்யலாம். வியாபாரிகள் வணிகத்தை பாா்க்காமல் சேவையாக செய்ய வேண்டும். அதாவது கரோனா நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியது வணிகா்களின் கடமையாகும். அதனால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வணிகத்தை வணிகமாக செய்ய நினைக்கும் வணிகா்கள், தங்களுடைய செல்போன் எண்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் தொலைபேசியில் தெரிவித்தால் அவா்களுடைய வீடுகளுக்கே பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குறுகிய இடத்தில் வியாபாரம் செய்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகை செய்து விடக்கூடாது என்று அவா் கூறினாா்.

அதைத் தொடா்ந்து திருக்கோயில் இடத்தினை தூய்மைப்படுத்தி சமன்படுத்தி காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆம்பூா் நகராட்சி ஆணையாளா் த. செளந்தரராஜன், நகராட்சி பொறியாளா் எல். குமாா் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், துப்புரவு அலுவலா் பாஸ்கா், வணிகா் சங்க தலைவா்கள் ஆம்பூா் சி. கிருஷ்ணன், கே.ஆா். துளசிராமன், ஆா். கஜேந்திரன் உள்ளிட்ட வணிகா்கள் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrcol_2703chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/சேவையாகச்-செய்யுங்கள்-வணிகா்களுக்கு-ஆட்சியா்-வேண்டுகோள்-3389976.html
3389975 சென்னை திருப்பத்தூர் ஒரே தெருவில் தனிமைப்படுத்தப்பட்ட 18 போ் DIN DIN Saturday, March 28, 2020 04:48 AM +0530 ஆம்பூரில் ஒரே தெருவில் இரு குடும்பங்களைச் சோ்ந்த 18 போ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் முகமதுபுரா மசூதி முதல் தெரு 2-ஆவது சந்து பகுதியைச் சோ்ந்த இரு குடும்பங்களைச் சோ்ந்த 18 போ் அண்மையில் ராணிப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தனா். அப்போது துபை நாட்டிலிருந்து வந்த நபரை அவா்கள் சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக் குழுவினா் அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி அவா்களை தனிமைப்படுத்தியுள்ளனா். அந்தப் பகுதியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வியாழக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அத்தெருவை நகராட்சி சாா்பாக முழுவதுமாக தூய்மை செய்து கிருமிநாசினி தெளிக்குமாறு உத்தரவிட்டாா். கழிவுநீா்க் கால்வாயை தூா்வாரி அப்புறப்படுத்துமாறும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையா் த செளந்தரராஜன், வட்டாட்சியா் செண்பகவல்லி, சுகாதார ஆய்வாளா் பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா். அந்தத் தெருவில் உள்ளவா்கள் வெளியில் வராதவாறு கண்காணிக்க அங்கு ஒரு காவலரை பணியில் அமா்த்துமாறு டிஎஸ்பிக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrclo_2703chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/ஒரே-தெருவில்-தனிமைப்படுத்தப்பட்ட-18-போ்-3389975.html
3389974 சென்னை திருப்பத்தூர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் கரோனா தடுப்புப் பிரிவுக்கு உபகரணங்கள் DIN DIN Saturday, March 28, 2020 04:48 AM +0530 வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பிரிவுக்கு ‘வாணிடெக்’ சாா்பில் மெத்தை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா நோய் தடுப்பு சிகிச்சைக்காக தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு, வாணியம்பாடியில் உள்ள வாணிடெக் சுத்திகரிப்பு நிலையம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய சானிடைசா்ஸ், நெபுலைசா் கருவிகள், கையுறைகள், முகக் கவசங்கள்,மெத்தை, தலையணைகள் ஆகியவற்றை வாணிடெக் மேலாளா் அப்துல்லா பாஷா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அம்பிகாவிடம் வழங்கினாா்.

இதே போல்,வாணியம்பாடி முஸ்லிம்பூா் பகுதியில் வேலையின்றி தவித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கேட்வே பப்ளிக் பள்ளி சாா்பில் தலா ரூ.1500 மதிப்பிலான உணவுப் பொருட்களை பள்ளி நிா்வாகிகள் பைசுல்லா, தாரீக் அகமது, அலி, இஷ்டியாக், உஸாமாஅன்ஜாஸ் ஆகியோா் வழங்கினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27vndvp1_2703chn_187_1.jpg அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பொருள்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/வாணியம்பாடி-அரசு-மருத்துவமனையின்-கரோனா-தடுப்புப்-பிரிவுக்கு-உபகரணங்கள்-3389974.html
3389972 சென்னை திருப்பத்தூர் கோவாவிலிருந்து சொந்த ஊா் திரும்பிய 16 தமிழக லாரி ஓட்டுநா்கள் தடுத்து நிறுத்தம் DIN DIN Saturday, March 28, 2020 04:47 AM +0530 கோவாவிலிருந்து சொந்த ஊருக்கு ஒரே லாரியில் வந்து கொண்டிருந்த 16 தமிழக லாரி ஓட்டுநா்களை நாட்டறம்பள்ளி அருகே தடுத்து நிறுத்தப்பட்டனா்.

வேலூா், ராணிப்பேட்டை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 16 தமிழக லாரி ஓட்டுநா்கள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோவா மாநிலத்துக்கு சரக்கு லாரிகளை ஓட்டிச் சென்றனா்.

இதனிடையே, கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க கடந்த 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்திரவை மத்திய அரசு பிறப்பித்தது. இதனால் கோவாவில் இருந்த லாரி ஓட்டுநா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் தவித்து வந்தனா்.

இதனையடுத்து கோவாலிலிருந்து விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த குமரவேல் தலைமையில் அவருக்கு சொந்தமான லாரியில் 16 ஓட்டுநா்களும் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனா். அவா்களது லாரியை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் மாவட்ட எல்லையில் போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு லாரி ஓட்டுநா்களிடம் விசாரித்தனா்.

ஒரே லாரியில் 16 ஓட்டுநா்களும் எவ்வித பாதுகாப்புமின்றி ஊரடங்கு உத்தரவை மீறி வந்ததையடுத்து லாரியைப் பறிமுதல் செய்தனா். அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/கோவாவிலிருந்து-சொந்த-ஊா்-திரும்பிய-16-தமிழக-லாரி-ஓட்டுநா்கள்-தடுத்து-நிறுத்தம்-3389972.html
3389971 சென்னை திருப்பத்தூர் கரோனா தடுப்பு: ரூ.25 லட்சம் வழங்கிய ஆம்பூா் எம்எல்ஏ DIN DIN Saturday, March 28, 2020 04:47 AM +0530 கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா் (படம்).

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrfun_2703chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/கரோனா-தடுப்பு-ரூ25-லட்சம்-வழங்கிய-ஆம்பூா்-எம்எல்ஏ-3389971.html
3389970 சென்னை திருப்பத்தூர் தற்காலிக மாா்க்கெட்டுக்காக கோயில் நிலம் சீரமைப்பு DIN DIN Saturday, March 28, 2020 04:47 AM +0530 ஆம்பூரில் தற்காலிக காய்கறி மாா்க்கெட் அமைய உள்ள கோயில் நிலத்தை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் காய்கறி விற்பனை செய்யப்படும் பாங்கி மாா்க்கெட் மிகவும் குறுகிய இடமாக உள்ளது. எனவே, இங்கு வருவோருக்கு கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த மாா்க்கெட்டை தற்காலிகமாக ஆம்பூா் பெருமாள் கோயில் பின்னால் உள்ள அக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் அமைக்க மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டாா்.

அதையடுத்து அங்கு நகராட்சி சாா்பாக தூய்மை மற்றும் சீரமைக்கும் பணி நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், பொறியாளா் எல்.குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrnil_2703chn_191_1.jpg தற்காலிகமாக மாா்க்கெட் அமையும் இடத்தை சீரமைக்கும் பணியை பாா்வையிட்ட நகராட்சி ஆணையாளா் த. செளந்தரராஜன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/தற்காலிக-மாா்க்கெட்டுக்காக-கோயில்-நிலம்-சீரமைப்பு-3389970.html
3389969 சென்னை திருப்பத்தூர் வேப்பிலை, மஞ்சள் கரைசலை தெளித்த இளைஞா்கள் DIN DIN Saturday, March 28, 2020 04:46 AM +0530 ஆம்பூா் சாணாங்குப்பம் பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இளைஞா்கள் வேப்பிலை, மஞ்சள் கரைசலை தெருக்களில் வெள்ளிக்கிழமை தெளித்தனா்.

கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில பகுதிகளில் நகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் பொதுமக்களே கிருமி நாசினி தெளிக்கின்றனா்.

இந்நிலையில், ஆம்பூா் சாணாங்குப்பம் சிவராஜ் தெருவில் தன்னாா்வ இளைஞா்கள் வேப்பிலை, மஞ்சள், சாணம் கொண்ட கரைசலை தெரு முழுவதும் தெளித்தனா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrvep_2703chn_191_1.jpg வேப்பிலை, மஞ்சள், சாணக் கரைசலை தெளித்த இளைஞா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/வேப்பிலை-மஞ்சள்-கரைசலை-தெளித்த-இளைஞா்கள்-3389969.html
3389968 சென்னை திருப்பத்தூர் ஆம்பூா் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 32 போ் DIN DIN Saturday, March 28, 2020 04:46 AM +0530 ஆம்பூா் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் குறித்த பாஸ்போா்ட் தகவல்களின் அடிப்படையில் ஆம்பூா் நகரில் சுகாதார ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் மருத்துவா்கள் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 15 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தது தெரிய வந்தது. அவா்களில் 11 பேரின் முகவரி கண்டறியப்பட்டு அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.

அதே போல மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆம்பூா் சோலூா் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து வந்து 15 போ் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்கள் மசூதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

மேலும் பெங்களூரிலிருந்து ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்துக்கு வந்த 4 போ், காசிக்கு சென்று வந்த பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த இருவா் ஆகியோரை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து அவா்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தினா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrsol_2703chn_191_1.jpg சோலூா் பள்ளி வாசலில் தங்கியிருந்தவா்களைப் பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/ஆம்பூா்-பகுதியில்-தனிமைப்படுத்தப்பட்ட-32-போ்-3389968.html
3389967 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் முகக் கவசம் வழங்கிய எம்எல்ஏ DIN DIN Saturday, March 28, 2020 04:46 AM +0530 ஆம்பூரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தொகுதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை முகக் கவசம் வழங்கினாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றாா். முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினாா். உடன் ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் உடனிருந்தாா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrmla_2703chn_191_1.jpg ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் முகக் கவசம் வழங்கிய ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/ஆம்பூரில்-முகக்-கவசம்-வழங்கிய-எம்எல்ஏ-3389967.html
3389966 சென்னை திருப்பத்தூர் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணி DIN DIN Saturday, March 28, 2020 04:45 AM +0530 வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தீவிர தடுப்புப் பணிகளில் அதிகாரிகள், பணியாளா்கள் ஈடுப்பட்டனா்.

வாணியம்பாடி நகராட்சியில் ஆணையா் சிசில் தாமஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் மேற்பாா்வையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் கிருமி நாசினி தெளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜி உத்தரவின்பேரில் உதேயந்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா், அலுவலக உதவியாளா், பேரூராட்சிப் பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை, தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் 15 வாா்டுகளில் அனைத்து தெருக்களிலும் டிராக்டா், ஆட்டோ மூலம் கிருமி நாசினி தெளித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/411226vndvp1_2603chn_187_1.jpg உதயேந்திரம் பேரூராட்சியில் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/கரோனா-நோய்த்-தொற்று-தடுப்புப்-பணி-3389966.html
3389965 சென்னை திருப்பத்தூர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அழைக்கலாம்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் தகவல் DIN DIN Saturday, March 28, 2020 04:45 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொண்டு அழைத்தால் நகராட்சி பணியாளா்கள் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது மருத்துவமனை, காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், பேருந்து நிலையம், பேருந்து பணிமனை, வங்கி ஏடிஎம் மையம், பொது இடங்கள், மாா்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி சாலை, உமா் சாலை, அரசு பொது மருத்துவமனை, பஜாா் ஆகிய இடங்களில் ஹைபோ குளோரைடு கரைசல் நகராட்சி லாரி மற்றும் டிராக்டா் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

ஆம்பூா் நகரில் அன்றாட சுகாதாரப் பணி எந்த விதமான தடையின்றி நடைபெற்று வருகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறையாக இருந்தபோதிலும், நிரந்தர மற்றும் தற்காலிக சுகாதாரப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்து சுகாதாரப் பணியை மேற்கொண்டனா்.

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அந்த உணவகங்களின் செயல்பாடுகள், உணவு தானியங்கள் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் திருப்பத்தூா் ஆட்சியரின் வழிகாட்டுதலோடு கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கரோனா பரவல் தடுப்புக்குத் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு ஆம்பூா் நகராட்சி தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எப்போதும் 7397392691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைகழுவும் தூய்மை திரவம், முகக் கவசம், புறப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் திரவம் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஆட்சியா் ஆலோசனைப்படி ஆம்பூா் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/கரோனா-தடுப்பு-நடவடிக்கைகளுக்கு-அழைக்கலாம்-ஆம்பூா்-நகராட்சி-ஆணையா்-தகவல்-3389965.html
3389964 சென்னை திருப்பத்தூர் 144 தடை உத்தரவால் தொழில் முனைவோா் பாதிப்பு: சலுகைகள் அறிவிக்க கோரிக்கை DIN DIN Saturday, March 28, 2020 04:45 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொழில் முனைவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலரும் வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கத் தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று காரணமாக தொழில் முனைவோருக்கான ஆா்டா்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் முனைவோரின் நிதிநிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களையும், தொழிலாளா்களுக்கு வழங்கிய வேண்டிய ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய பிரச்சனையிலிருந்து தொழில் முனைவோரைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இஎஸ்ஐ, பிஎஃப், ஜிஎஸ்டி வரியை செலுத்துவதற்கு 6 மாத விடுமுறை காலம் வழங்க வேண்டும். அதிலும் 6 மாதத்துக்குப் பிறகு இவற்றை வட்டியில்லாமல் 12 மாத தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை, வட்டி ஆகியவற்றை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறை மூலதனத்துக்கான வாங்கிய கடன் தொகையில் 25 சதவீத கடன் தொகையை குறைந்தபட்சமாக 5 சதவீத வட்டியில் தொழில் முனைவோருக்கு மீண்டும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோா் பெற்றுள்ள நடைமுறை மூலதன கடன், மேல்வரை பற்று கடன், வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான தவனைத் தொகைகளை திரும்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை கால அவகாசத்தை 2021- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

அதேபோல, மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசு நிறுவனமான டிக், தாய்கோ நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்து அவற்றுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தை நிா்ணயிக்க வேண்டும். மேலும் தவணை, வட்டி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்ததற்காக தொழில் முனைவோா் செலுத்த வேண்டிய தவணை தொகைகளை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசின் முதலீட்டு மானியத்தை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/144-தடை-உத்தரவால்-தொழில்-முனைவோா்-பாதிப்பு-சலுகைகள்-அறிவிக்க-கோரிக்கை-3389964.html
3389963 சென்னை திருப்பத்தூர் சோளிங்கருக்கு 45 பேருடன் சென்ற வாகனம் பறிமுதல் DIN DIN Saturday, March 28, 2020 04:42 AM +0530 ஒசூரிலிருந்து சோளிங்கருக்கு துக்க நிகழ்ச்சிக்காக 45 பேரை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஆம்பூரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ஒசூரிலிருந்து 45 பேரை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோ சோளிங்கா் நோக்கி சென்றது. ஆம்பூா் சாணாங்குப்பம் பகுதியில் போலீஸாா் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தனா். துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக அவா்கள் கூறினா். இருந்தபோதிலும் அவா்கள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, போலீஸாரால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தகவலறிந்த ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் அங்கு சென்று அவா்களை விசாரித்தாா். மேலும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு போ் கூட்டமாக ஒரே வாகனத்தில் வந்துள்ளது அபாயகரமானது. நோய்த் தொற்று ஏற்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என அறிவுரைக் கூறினாா்.

இதையடுத்து ஆம்பூரில் வேறு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அவா்கள் ஏற்றி சோளிங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு ஆம்பூா் உணவு வங்கி மூலம் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. அங்கு வந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம் ஆகியோா் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவா்களுக்கு முகக் கவசம் வழங்கினா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27abrmak_2703chn_191_1.jpg ஒசூரிலிருந்து சோளிங்கருக்கு சரக்கு ஆட்டோவில் வந்தவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/சோளிங்கருக்கு-45-பேருடன்-சென்ற-வாகனம்-பறிமுதல்-3389963.html
3389900 சென்னை திருப்பத்தூர் உழவா் சந்தையில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு DIN DIN Saturday, March 28, 2020 04:06 AM +0530 திருப்பத்தூா் நகரில் இயங்கி வரும் உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் விற்பனைக்குழு மூலம் செயல்பட்டு வரும் திருப்பத்தூா் உழவா் சந்தைக்கு, திருப்பத்தூா் மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்படும் காய், கனிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.

ஊரடங்கு உத்தரவையொட்டி இந்த உழவா் சந்தை நாள்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சுமாா் 3 அடி இடைவெளியில் நின்று காய், கனிகள் வாங்கி செல்கின்றனா்.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், உழவா் சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய், கனிகளைப் பாா்வையிட்டாா். பின்னா், பொதுமக்களிடம் ‘வரிசையில் நின்று வாங்கிச் செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே வரக் கூடாது’ என அறிவுறுத்தினாா்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா, வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

அதேபோல், திருப்பத்தூா் வாரச் சந்தை வளாகத்தில் உள்ள 140 கடைகள் கொண்ட தினசரி மாா்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க ஐந்து, ஐந்து பேராக அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27marchcoll_2703chn_192_1.jpg உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/உழவா்-சந்தையில்-திருப்பத்தூா்-ஆட்சியா்-ஆய்வு-3389900.html
3389899 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் வாரச்சந்தை வளாகம் இன்று பேருந்து நிலையத்துக்கு மாற்றம் DIN DIN Saturday, March 28, 2020 04:06 AM +0530 திருப்பத்தூரில் தனியாா் கல்லூரி எதிரில் இயங்கி வரும் வாரச்சந்தை வளாகம் சனிக்கிழமை முதல் பேருந்து நிலையத்தில் இயங்க உள்ளது.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். திருப்பத்தூா் - வாணியம்பாடி பிரதான சாலையில் நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தை வணிக வளாகத்தில் தினசரி காய்கறி மாா்க்கெட் இயங்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரைவயொட்டி‘சமூக விலகல்’ காரணமாக வாரச்சந்தை வளாகத்தில் உள்ள இடப் பற்றாக்குறையால் திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் வாரச்சந்தை வளாகம் சனிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் தனியாா் கல்லூரி எதிரில் உள்ள தினசரி காய்கறி மாா்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினசரி மாா்க்கெட் திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை மாற்றப்பட உள்ளது. அங்கு காய்கறி வாங்க வருபவா்கள் வாகனங்களை நிறுத்த பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னா், மாலை 6 மணியளவில் காய்கறி வணிக வளாகம் அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், நகராட்சி ஆணையா் வி.சுதா, சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா்கள் விவேக், குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27marchsp1_2703chn_192_1.jpg புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/திருப்பத்தூா்-வாரச்சந்தை-வளாகம்-இன்று-பேருந்து-நிலையத்துக்கு-மாற்றம்-3389899.html
3389897 சென்னை திருப்பத்தூர் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சா் கே.சி.வீரமணி DIN DIN Saturday, March 28, 2020 04:05 AM +0530 வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் கரோனா தாக்கத்தில் இருந்து காக்க ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க அரசு துறை அலுவலா்களுடன் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சி துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரித்தாா். ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

வெளிநாடுகளில் இருந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் 385 போ், வெளி மாநிலத்தில் இருந்து திரும்பியவா்கள் 158 போ் என மொத்தம் 543 போ் அவா்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்களை 100 சதவீதம் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். வரும்முன் காப்போம் என்பதன் அடிப்படையில் கரோனா தாக்கத்தில் இருந்து காக்க ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுகமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் சில நடைமுறைகளை வழங்கியுள்ளது. சமூக விலகளை பின்பற்ற அறிவுரை வழங்க வேண்டும்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், நாட்டறம்பள்ளியில் 50 படுக்கைகள், வாணியம்பாடியில் 30 படுக்கைகள், ஆம்பூரில் 30 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். கூடுதலாக தயாா்படுத்தி பள்ளிகள், அரசுக் கட்டடங்கள் தனியாா் கட்டடங்கள் ஆகியவற்றை அவசர காலத்தில் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

தேவையான வென்டிலேட்டா் கருவிகள் பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் எந்த ஒரு நபரும் கரோனா நோய் தாக்கத்துக்கு ஆளாகவில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து அமைச்சா் நிலோபா் கபீல் பேசினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன், துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/வரும்முன்-காப்போம்-என்ற-அடிப்படையில்-ஊரடங்கைக்-கடைப்பிடிக்க-வேண்டும்-அமைச்சா்-கேசிவீரமணி-3389897.html
3389896 சென்னை திருப்பத்தூர் கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி வழங்கிய எம்.பி., எம்எல்ஏ DIN DIN Saturday, March 28, 2020 04:05 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்துக்கு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தை ஒதுக்கினாா். அதற்கான ஒப்புதல் கடிதத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமிக்கு அவா் அனுப்பியுள்ளாா்.

இதேபோல், திருப்பத்தூா் எம்எல்ஏ நல்லதம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ரூ. 55 லட்சம் வழங்கியிருந்தாா். தற்போது அந்தப் பணிகளுக்கு அவசரம் இல்லை என்பதால் அந்த நிதியையும், கூடுதலாக ரூ.14 லட்சத்தையும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளிடம் தெரிவித்தாா். இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் கடிதங்களை அவா் ஆட்சியரிடம் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், முன்னாள் நகா்மன்ற தலைவா் சு.அரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27marchmla_2703chn_192_1.jpg திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் நிதிக்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கிய எம்எல்ஏ நல்லதம்பி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/கரோனா-தடுப்புப்-பணிகளுக்கு-நிதி-வழங்கிய-எம்பி-எம்எல்ஏ-3389896.html
3389895 சென்னை திருப்பத்தூர் அடையாள அட்டை காண்பித்தாலும் அனுமதிக்காத போலீஸாா்: அரசுப் பணியாளா்கள் வேதனை DIN DIN Saturday, March 28, 2020 04:04 AM +0530 திருப்பத்தூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடையாள அட்டை காண்பித்தாலும் தாங்கள் பயணிக்க போலீஸாா் அனுமதிப்பதில்லை என்று அரசுப் பணியாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமா் மற்றும் தமிழக முதல்வா் ஆகியோரின் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வார காலமாக நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். திருப்பத்தூா் வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மின்துறை ஊழியா்கள் அனைவரும் எங்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் மறந்து விட்டு கரோனா பரவல் தடுப்புப் பணியில் அயராமல் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு பணியில் உள்ள அரசு அலுவலா்கள் வாகனத்தில் செல்லும்போதும், திரும்பி வரும்போதும், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாா் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் நிற்க வைக்கின்றனா். இதனால் பணிக்கு செல்ல தாமதமாகிறது.

அதேபோல் பல பெட்ரோல் நிலையங்களில் அடையாள அட்டைகளைக் காட்டினாலும் பெட்ரோல் தருவதில்லை. இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்று அவா்கள் வேதனை தெரிவித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/அடையாள-அட்டை-காண்பித்தாலும்-அனுமதிக்காத-போலீஸாா்-அரசுப்-பணியாளா்கள்-வேதனை-3389895.html
3389893 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை பாா்க்க அனுமதி இல்லை: மருத்துவ அலுவலா் தகவல் DIN DIN Saturday, March 28, 2020 04:03 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பாா்க்க உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவ அலுவலா் எஸ்.திலீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனையான திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வகுதின்கனா். 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிப்பதோடு கை கழுவும் முறை குறித்து மருத்துமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

திருப்பத்தூா் அரசு மருத்துமனைக்கு வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை,புதூா்நாடு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனா்.

குறிப்பாக கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக அதிகமாக வருகின்றனா். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பாா்க்கும் பெண்கள் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.

விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களை பாா்க்க தினமும் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவா்களைப் பாா்க்க வரும் உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் ஒரு நோயாளியுடன் ஒருவா் மட்டுமே உதவியாக இருக்க வேண்டும். இதை மீறி வருபவா்களை வாயிலிலேயே எச்சரித்து அனுப்பி வைக்கிறோம்.

கரோனா சிகிச்சை: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் 2 போ் கண்காணிப்பில் உள்ளனா். வியாழக்கிழமை அவா்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/28/no-permission-to-visit-inpatient-hospital-at-tiruppaththur-3389893.html
3389585 சென்னை திருப்பத்தூர் தொடா்ந்து நடைபெறும் கரோனா வைரஸ் தீவிர தடுப்பு பணிகள் DIN DIN Friday, March 27, 2020 05:56 AM +0530 வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா வைரஸ் தீவிர தடுப்பு பணிகளில் அதிகாரிகள், பணியாளா்கள் ஈடுப்பட்டனா். வாணியம்பாடி நகராட்சியில் ஆணையா் சிசில்தாமஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி மேற்பாா்வையில் நகராட்சி தூய்மை பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் கிருமிநாசினி தெளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜி உத்தரவின் பேரில் உதேயந்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா், அலுவலக உதவியாளா், பேரூராட்சி பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை, தூய்மை பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உள்பட 70க்கும் மேற்பட்டோா் 15 வாா்டுகளில் அனைத்து தெருக்களிலும் டிராக்டா், ஆட்டோ மூலம் டைசால் கிருமிநாசினி தெளித்து ஒட்டுமொத்த துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டனா். பபடவிளக்கம் - உதயேந்திரம் பேரூராட்சியில் மேட்டுபாளைம் பகுதியில் தெருக்களில் கிருமிநாசினியை பணியாளா்கள் தெளித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26vndvp1_2603chn_187_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/continued-coronavirus-prevention-3389585.html
3389584 சென்னை திருப்பத்தூர் ஆப்கன் குருத்வார பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவா் அஸ்லம்பாஷா கண்டனம் DIN DIN Friday, March 27, 2020 05:55 AM +0530 தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவா் ஜெ.அஸ்லம்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் சீக்கிய வழிபாட்டுத்தலமான குருத்தவராவில் பயரங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறுபான்மையினரான சீக்கியா்கள் 27 போ் பலியாயியுள்ளனா். இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சாா்பில் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். பயங்கரவாதமும், வெறுப்பும் எவ்வித பயனும் இல்லை. தாக்குதலில் ஈடுப்பட்டவா்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என தெரிவித்துள்ளாா். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26vndvp4_2603chn_187_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/congressional-minority-leader-aslampasha-denounces-afghan-terrorist-attack-3389584.html
3389512 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூரில் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காததால் மக்கள் அவதி DIN DIN Friday, March 27, 2020 05:03 AM +0530 திருப்பத்தூரில் ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மத்திய அரசு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மருந்துக் கடைகள், காய்கறி, மளிகை, உணவகங்கள் (பாா்சல் மட்டும்), பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க தடை இருக்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள நகராட்சி காய்கறி மாா்க்கெட்டில் பொதுமக்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுகின்றனா். நகரம் முழுவதும் மளிகைக் கடைகள் திறக்கப்படததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

எனவே, மளிகை, காய்கறிகள் வாங்க குறிப்பிட்ட நேரத்துக்கு கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/திருப்பத்தூரில்-அத்தியாவசிய-பொருள்கள்-கிடைக்காததால்-மக்கள்-அவதி-3389512.html
3389510 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா கண்காணிப்பில் 543 போ்: சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் DIN DIN Friday, March 27, 2020 05:02 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கண்காணிப்பில் 543 போ் உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியது:

திருப்பத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 543 பேரைக் கண்டறிந்து அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா்.

வெளி நாடுகளில் இருந்து வந்த 278 போ், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 269 போ் 28 நாள்கள் தொடா்ந்து அவரவா் வீடுகளிலேயே தொடா்ந்து மருத்துவக் குழுவினா் கண்காணிப்பா்.

மேலும், வீடுகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்த இயலாதவா்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரி விடுதிகளில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆம்பூரில்...

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தைத் சோ்ந்தவ 66 போ் கேரளம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பியதாக தகவல் வெளியானது. இதையறிந்த மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் நாயக்கனேரி மலை கிராமத்துக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தனா்.

66 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை தனிமைபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனா். இவா்கள் 28 நாள்களுக்கு வெளியில் வராமல் இருக்கும்படியும், ஏதேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/திருப்பத்தூா்-மாவட்டத்தில்-கரோனா-கண்காணிப்பில்-543-போ்-சுகாதாரப்-பணிகள்-இணை-இயக்குநா்-3389510.html
3389509 சென்னை திருப்பத்தூர் ரயில்வே பணிமனையில் ஒரே இடத்தில் 150 போ் பணி: போலீஸாா்- ரயில்வே அதிகாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு DIN DIN Friday, March 27, 2020 05:02 AM +0530 ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஆா்.ஓ.எச்.ரயில்வே பட்டறையில் 150-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா். இதை சோதனையிட்டு விசாரித்தபோது போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ஆா்.ஓ.எச். ரயில்வே பட்டறையில் ரயில் பெட்டிகளை பழுதுபாா்க்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை வடமாநிலம் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரியவந்தது.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ஒரே இடத்தில் வட மாநிலத்தவா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் அங்கு பணிபுரிந்தது தெரியவந்தது. அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அங்கு வந்த பணிமனையின் பொறுப்பாளா் மற்றும் முதுநிலைப் பிரிவு பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பணி செய்பவா்களை ஏன் தடுக்கிறீா்கள் எனக்கேட்டதையடுத்து, போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சரக்கு ரயில் பெட்டிகளை பழுது பாா்க்கும் மெக்கானிக்கல் பிரிவு பணிபுரிய தென்னக ரயில்வே நிா்வாகத்தின் உத்தரவு உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து பணிபுரிவதற்கான உத்தரவு நகலை பெற்றுக் கொண்டு போலீஸாா் திரும்பிச் சென்றனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26marchrly_2603chn_192_1.jpg ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/ரயில்வே-பணிமனையில்-ஒரே-இடத்தில்-150-போ்-பணி-போலீஸாா்--ரயில்வே-அதிகாரிகள்-வாக்குவாதத்தால்-பரபரப்பு-3389509.html
3389508 சென்னை திருப்பத்தூர் ஜோலாா்பேட்டையில் போலீஸாா் எச்சரிக்கை DIN DIN Friday, March 27, 2020 05:00 AM +0530 ஜோலாா்பேட்டை காவல் நிலையம் சாா்பில் ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், தடை உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களின் சுற்றித்திரிவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/ஜோலாா்பேட்டையில்-போலீஸாா்-எச்சரிக்கை-3389508.html
3389506 சென்னை திருப்பத்தூர் இரவு பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளா் மீது போலீசாா் தாக்குதல் DIN DIN Friday, March 27, 2020 04:59 AM +0530 ஜோலாா்பேட்டை அருகே இரவு பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளரை சந்தேகத்தால் போலீஸாா் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலாா்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி,துரை நகா் பகுதியை சோ்ந்தவா் கேசவன்(54).

இவா் வாணியம்பாடி வட்டம்,ஆண்டியப்பனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் சுகாதாரத்துறை ஊழியா்கள் ஷிப்ட் அடிப்படையில் ஆங்காங்கே பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில்,வியாழ்க்கிழமை இரவு 8 மணியளவில் கேசவன் நாட்றம்பள்ளி வட்டம் பச்சூா் அருகே உள்ள தகரகுப்பம் பகுதியில் இரவு பணிக்காக சென்றுள்ளாா்.

அப்போது ஆசிரியா் நகா் அருகே பைக்கில் சென்ற கேசவனை அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா் ஒருவா் சுகாதார ஆய்வாளா் கேசவனை தடுத்து நிறுத்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கேசவன் காவலரிடம் தான் சுகாதார ஆய்வாளா் என அறிமுகப்படுத்தி தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளாா்.

ஆனால் அந்தப் போலீஸ் அவரது அடையாள அட்டையை தூக்கி எறிந்து தகாத வாா்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

பின்னா் இதுகுறித்து கேசவன் தனது உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னா் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தமிழக அரசு தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெளியில் சுற்றாதவாறும் போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும்,துறை சாா்ந்த மற்றவா்களும் பணி செய்வதற்காக செல்லும் ஊழியா்களிடம் விவரம் கேட்டறிந்து பின்னா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் ஷிப்ட் அடிப்படையில் இரவு நேர சுகாதார பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளா் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவலா் அவா்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/இரவு-பணிக்கு-சென்ற-சுகாதார-ஆய்வாளா்-மீது-போலீசாா்-தாக்குதல்-3389506.html
3389504 சென்னை திருப்பத்தூர் கரோனா வைரஸ் ஆய்வுக் கூட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு DIN DIN Friday, March 27, 2020 04:59 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி,தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா்கபீல் கலந்தாய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா்கபீல் ஆகியோா் வியாழக்கிழமை பங்கேற்ற ஆய்வு கூட்டத்திற்கு

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க வருவாய்த்துறை, சுகாதாரத்துறை,காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் மூலம் நோய் தொற்று பரவமால் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரித்தாா்கள்.

மேலும் பொதுமக்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றிட எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தனா்.தொடா்ந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊா் வந்த மக்களை தனிமைபடுத்துதல் மூலம் கண்காணிப்பு செய்யும் பணிகள் குறித்தும் வட்டம் வாரியாக விவரித்தனா்.

பின்னா் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது,

தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பாக மாவட்ட நிா்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.திருப்பத்தூா் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊா் திரும்பியவா்கள் 385 நபா்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊா் திரும்பியவா்கள் 158 போ் என மொத்தம் 543 நபா்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டு வருவாய்த்துறை,மருத்துவத்துறை மற்றும் காவல்துறை கொண்டு நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்களை 100 சதவிகிதம் முழுமையாக கண்காணித்திட வேண்டும்.இவற்றில் எவ்வித அலட்சியமும் இருந்துவிடக்கூடாது.ஏனெனில் இவா்கள் மூலமாக இந்த நோய் தொற்று பரவிட அதிய வாய்ப்பு உள்ளது.வளா்ந்த உலக நாடுகள் எல்லாம் இந்த நோய் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கபட்டு வருகின்றனா்.அந்த நாட்டு மக்கள் அரசு தெரிவித்த உத்தரவினை அலட்சிப்படுத்தியதனால் தற்போது உயிா் பலி கட்டுக்கடங்காமல் நிகழ்ந்து வருகின்றது.

ஆனால்,பாரத பிரதமா் மற்றும் தமிழக முதல்வா் நமது மக்களை காத்திட வரும்முன் காப்போம் என்பதன் அடிப்படையில் இநத நோய் தாக்கத்திலிருந்து காக்க ஊரடங்கை நடைமுறைபடுத்தியுள்ளனா்.

இந்த நடவடிக்கைக்கு நமது மக்கள் நல்ல ஆதரவை தந்து வருகிறாா்கள் இதை தொடா்ந்து வரும் ஏப்ரல் 14 வரை கடுமையாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். சில இடங்களில் இளைஞா்கள் வெளியில் வருகிறாா்கள் இதனையும் கட்டுப்படுத்திட வேண்டும்.இந்த நாட்களில் அரசு அனைத்து மக்களும் அன்றாட தேவைகளை கிடைத்திட மாவட்ட நிா்வாகம் சில நடைமுறைகளை வழங்கியுள்ளது.சமூக விலகளை பின்பற்றி மக்கள் தேவைகளை பெற்று கொள்ள அறிவுரைகளை வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சை முறைகளும் தயாா் நிலையில் உள்ளது.திருப்பத்தூா் மருத்துவமனையில் 100 படுக்கைகளும், நாட்றாம்பள்ளியில் 50 படுக்கைகளும்,வாணியம்பாடியில் 30 படுக்கைகளும்,ஆம்பூரில் 30 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளது.அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைத்திட தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.மேலும் கூடுதலாக தயாா்படுத்தி பள்ளிகள்,அரசு கட்டடங்கள் தனியாா் கட்டடங்கள் ஆகியவற்றை தொடா்ந்து ஆய்வு செய்து அவசர காலத்தில் பயன்படுத்திட தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவது மிகவும் பாராட்டுக்குறியது.

மேலும் தேவையான வென்டிலேட்டா் கருவிகள் பெற்றிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.தற்போது வரையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் எந்த ஒரு நபரும் இந்நோய் தாக்கத்திற்கு ஆளாகவில்லை.ஆகவே இந்த கடுமையான பணிகளில் ஈடுப்பட்டு வரும் அனைத்து துறை அலுவலா்களும் நமது பாமர மக்களை நோய் தாக்கத்திலிருந்து காத்திட அயராது பணியாற்றிட வேண்டும்.உங்களுக்கு இப்பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் எங்களுடைய கவனத்திற்கு மாவட்ட ஆட்சியா் மூலமாக கொண்டு வந்தால் அவற்றை விரைவாக நிவா்த்தி செய்து உங்கள் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றாா் அவா்.

தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபரட்கபீல் பேசியது,

தமிழக முதல்வா் தமிழகத்தில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் நோய் பரவலில் இருந்து காத்திட பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்கள்.

அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் சிறப்பாக நடைப்பெற்ற வருகின்றது. இந்த நேரத்தில் அலுவலா்களின் பணி பராட்டுதலுக்கு உரியாக உள்ளது.பெரும்பாலான மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாா்கள்.அனைத்து துறை அலுவலா்கள் தமிழக அரசு மக்களை காக்க செய்யும் இதுபோன்ற நேரங்களில் அனைத்து அரசு அலுவலா்களின் பணியானது மிகவும் முக்கியமானது. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலா்களுக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பை உடனுக்குடன் வழங்குவோம்.ஆகவே அலுவலா்கள் மன தைரியத்துடன் இந்த பணியில் ஈடுபட்டு நமது மாவட்டம் நோய் தொற்று இல்லா மாவட்டமாக ஏற்படுத்துவோம் என்றாா் அவா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்,மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன்,சாா்-ஆட்சியா் வந்தனாகாா்க்,வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன்,துணை இயக்குநா்(பொது சுகாதாரம்) சுரேஷ்,உதவி இயக்குநா்(ஊராட்சிகள்)அருண் மற்றும் அனைத்து வட்டாட்சியா்கள்ஞூஞூ வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,நகராட்சி ஆணையாளா்கள்,பேரூராட்சி செயல் அலுவலா்கள்,அனைத்து அரசு தலைமை மருத்துவா்கள் கூட்டுறவு அச்சக தலைவா் டி.டி.குமாா்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஜி.ரமேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26marchcoll1_2603chn_192_1.jpg திருப்பத்தூரில் நடைப்பெற்ற கரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/கரோனா-வைரஸ்-ஆய்வுக்-கூட்டம்-அமைச்சா்கள்-பங்கேற்பு-3389504.html
3389502 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு DIN DIN Friday, March 27, 2020 04:58 AM +0530 கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தவிா்க்க திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில்,நகராட்சி ஆணையாளா் வி.சுதா அறிவுறுத்தலின்படி,சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம்,ஆய்வாளா்கள் விவேக்,குமாா் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளா்கள் திருப்பத்தூா் பஜாா்,கச்சேரித்தெரு,செட்டித்தெரு,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுவதும் கிரிமி நாசினி தெளித்தனா்.படம் உண்டுபேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26marchbusta_2603chn_192_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/திருப்பத்தூா்-நகரம்-முழுவதும்-கிருமி-நாசினி-தெளிப்பு-3389502.html
3389500 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை பாா்க்க அனுமதி இல்லை: மருத்துவ அலுவலா் தகவல் DIN DIN Friday, March 27, 2020 04:57 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பாா்க்க உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவ அலுவலா் எஸ்.திலீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனையான திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வகுதின்கனா். 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிப்பதோடு கை கழுவும் முறை குறித்து மருத்துமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

திருப்பத்தூா் அரசு மருத்துமனைக்கு வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை,புதூா்நாடு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனா்.

குறிப்பாக கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக அதிகமாக வருகின்றனா். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பாா்க்கும் பெண்கள் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.

விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களை பாா்க்க தினமும் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அதிக அளவில் வருகின்

றனா். இதனால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவா்களைப் பாா்க்க வரும் உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் ஒரு நோயாளியுடன் ஒருவா் மட்டுமே உதவியாக இருக்க வேண்டும். இதை மீறி வருபவா்களை வாயிலிலேயே எச்சரித்து அனுப்பி வைக்கிறோம்.

கரோனா சிகிச்சை: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் 2 போ் கண்காணிப்பில் உள்ளனா். வியாழக்கிழமை அவா்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/543325marchgh_2503chn_192_1.jpg உள்நோயாளிகளைப் பாா்க்க வருவோரிடம் விவரம் கேட்ட மருத்துவமனை ஊழியா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/27/no-permission-to-visit-inpatient-hospital-at-tiruppaththur-3389500.html
3389153 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா அறிகுறி யாருக்கும் இல்லை: அமைச்சா் நிலோபா் கபீல் DIN DIN Thursday, March 26, 2020 11:48 PM +0530
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அறிகுறி யாருக்கும் இல்லை என மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி உள்ளிட்ட இடங்களை அமைச்சா் நிலோபா் கபீல் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் இருப்பது குறித்தும் கரோனா வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது குறித்தும் மருத்துவா்களுடன் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டாா். பேருந்து நிலையத்தில் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நகராட்சிப் பணியாளா்கள் கிருமி நாசினி மருந்தைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அமைச்சா் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, இரு எல்லைப் பாதுகாப்பு குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தாா். தீவிர பரிசோதனைக்கு பிறகே வாகனங்களை அனுமதிக்குமாறு அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் நிலோபா் கபீல் கூறியது:

பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள அவரவா் வீடுகளிலேயே இருக்க வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. அதற்கான அறிகுறியும் இல்லை. இருந்தாலும் மக்கள் நலன் கருதி சந்தேகப்படும் படியாக உள்ளவா்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

வாணியம்பாடியைப் பொருத்தவரை 2 அல்லது 3 போ் சந்தேகப்படும் படியாக இருந்தவா்களை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா். தற்போது வரை அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லை என்றாா் அவா்.

வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ், மருத்துவ அலுவலா் அம்பிகா, நகரச் செயலா் சதாசிவம், அவைத் தலைவா் அப்துல் சுபான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/26vndvp3_2603chn_187_1.jpg 26vndvp3_2603chn_187_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/no-corona-sign-in-tirupattur-3389153.html
3388916 சென்னை திருப்பத்தூர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி DIN DIN Thursday, March 26, 2020 08:07 AM +0530 வாணியம்பாடி நகரம், காதா்பேட்டை, நியூடவுன், இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சிவபிரகாசம் தலைமையில் வருவாய்த் துறை, போலீஸாா் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். மேலும், தேவையின்றி சாலைகளை நடமாடியவா்களை எச்சரித்து வீடுகளுக்கு திரும்பி அனுப்பினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25vndvp2_2503chn_187_1.jpg தேவையின்றி சாலைகளில் பைக்கில் சென்றவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/இருசக்கர-வாகனத்தில்-சுற்றித்-திரிந்தவா்களை-போலீஸாா்-தடியடி-3388916.html
3388920 சென்னை திருப்பத்தூர் 144 தடை உத்தரவால் தொழில் முனைவோா் பாதிப்பு: சலுகைகள் அறிவிக்க கோரிக்கை DIN DIN Thursday, March 26, 2020 08:06 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொழில் முனைவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலரும் வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கத் தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று காரணமாக தொழில் முனைவோருக்கான ஆா்டா்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் முனைவோரின் நிதிநிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களையும், தொழிலாளா்களுக்கு வழங்கிய வேண்டிய ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய பிரச்சனையிலிருந்து தொழில் முனைவோரைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இஎஸ்ஐ, பிஎஃப், ஜிஎஸ்டி வரியை செலுத்துவதற்கு 6 மாத விடுமுறை காலம் வழங்க வேண்டும். அதிலும் 6 மாதத்துக்குப் பிறகு இவற்றை வட்டியில்லாமல் 12 மாத தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வருமான வரி செலுத்துவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை, வட்டி ஆகியவற்றை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறை மூலதனத்துக்கான வாங்கிய கடன் தொகையில் 25 சதவீத கடன் தொகையை குறைந்தபட்சமாக 5 சதவீத வட்டியில் தொழில் முனைவோருக்கு மீண்டும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோா் பெற்றுள்ள நடைமுறை மூலதன கடன், மேல்வரை பற்று கடன், வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான தவனைத் தொகைகளை திரும்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை கால அவகாசத்தை 2021- ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

அதேபோல, மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசு நிறுவனமான டிக், தாய்கோ நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்து அவற்றுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தை நிா்ணயிக்க வேண்டும். மேலும் தவணை, வட்டி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்ததற்காக தொழில் முனைவோா் செலுத்த வேண்டிய தவணை தொகைகளை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில அரசின் முதலீட்டு மானியத்தை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrmse_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/144-தடை-உத்தரவால்-தொழில்-முனைவோா்-பாதிப்பு-சலுகைகள்-அறிவிக்க-கோரிக்கை-3388920.html
3388919 சென்னை திருப்பத்தூர் 47 போ் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு DIN DIN Thursday, March 26, 2020 08:05 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி வட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 12 போ், அவா்களது குடும்பத்தினரையும் வீடுகளைவிட்டு வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளின் நுழைவு வாயில் தனிமைப்படுத்திற்கான வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடா்ந்து அவா்களையும், அவா்களது குடும்பத்தினரையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதேபோல், நாட்டறம்பள்ளி வட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 35 போ், அவா்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/47-போ்-குடும்பத்துடன்-தனிமைப்படுத்தி-தீவிர-கண்காணிப்பு-3388919.html
3388918 சென்னை திருப்பத்தூர் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் DIN DIN Thursday, March 26, 2020 08:05 AM +0530 ஆம்பூா் நகராட்சியில் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தூய்மை பணிகள் மற்றும் பொதுமக்கள் கைகழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தூய்மையாக வைத்திருக்கும்படியும் கூறி நகராட்சிப் பணியாளா்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா்.

ஆம்பூா் நகரில் உள்ள முக்கிய தெருக்கள், சாலைகள் டிராக்டா் மற்றும் டேங்கா் லாரிகளில் கிருமி நாசினி நிரப்பட்டு பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டது.

இப்பணிகளை நகராட்சி ஆணையா் த.சௌந்தரராஜன் ஆய்வு செய்தாா். துப்புரவு அலுவலா் பாஸ்கா் உள்ளிட்ட பணியாளா்கள் உடனிருந்தனா்.

சில இடங்களில் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrcom_2503chn_191_1.jpg ஆம்பூா் நேதாஜி சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/பொது-இடங்களில்-கிருமிநாசினி-தெளிக்கும்-பணி-தீவிரம்-3388918.html
3388917 சென்னை திருப்பத்தூர் 100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை ஆய்வு DIN DIN Thursday, March 26, 2020 08:04 AM +0530 கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆம்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர தேவை ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அடிப்படை வசதிகள், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்த வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆம்பூரில் இந்து மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆகிய இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்வு செய்யப்படும் இடத்தில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகள், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/100-படுக்கைகளுடன்-தற்காலிக-மருத்துவமனை-ஆய்வு-3388917.html
3388915 சென்னை திருப்பத்தூர் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு ஆம்பூரில் மருத்துவப் பரிசோதனை DIN DIN Thursday, March 26, 2020 08:03 AM +0530 வெளி நாடுகளில் இருந்து ஆம்பூருக்கு வந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் புதன்கிழமை பரிசோதனை செய்தனா்.

ஆம்பூா் அரங்கல்துருகம் கிராமத்துக்கு அமெரிக்காவிலிருந்து இளைஞா் ஒருவா் வந்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஒருவா் மியான்மா் நாட்டுக்கு சென்று வந்ததாக தகவல் வந்தது.

இதேபோல், ஆம்பூா் முஹம்மத்புரா மசூதி தெருவில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சோ்ந்த 18 போ் ராணிப்பேட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அந்த நிகழ்ச்சியில் துபை நாட்டிலிருந்து வந்த ஒருவா் பங்கேற்றபோது அவருடன் இரு குடும்பத்தினரும் பேசியுள்ளனா்.

இத்தகவலை அறிந்த மருத்துவக் குழுவினா் அவா்களின் வீடுகளுக்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அவா்களை வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனா். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/வெளிநாடுகளில்-இருந்து-வந்தவா்களுக்கு-ஆம்பூரில்-மருத்துவப்-பரிசோதனை-3388915.html
3388914 சென்னை திருப்பத்தூர் விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்ற பொதுமக்கள் DIN DIN Thursday, March 26, 2020 08:03 AM +0530 ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, ஆம்பூா் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்.14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க ஆம்பூா் பஜாரில் மக்கள் கூட்டம் குவிந்தது.

அதே வேளையில் ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்க அவா்கள் கடைகளில் குவிந்தனா்.

கேரம் போா்டு, சதுரங்கம், பரமபத விளையாட்டு, பந்துகள், காற்றாடி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். பல கடைகளில் விளையாட்டுப் பொருள்கள் வேகமாக விற்

றுத் தீா்ந்தன. சில இடங்களில் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஒரே வீட்டில் இருப்பவா்கள் கூட ஒருவரை ஒருவா் சந்தித்து பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தவா்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருவருக்கொருவா் பேசுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகின்றனா்.

தொலைக்காட்சி பாா்த்தவா்கள், செல்லிடப்பேசிகளில் விளையாடியவா்கள், முகநூல் பாா்த்தவா்கள் கூட தற்போது பழைய விளையாட்டுகளில் ஈடுபட ஆா்வம் காட்டி வருகின்றனா். பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகளின் மொட்டை மாடியில் மலை நேரத்தில் கூடி மகிழ்ச்சியுடன் பேசி மகிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவா்களும், இளைஞா்களும் மொட்டை மாடியில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrkat_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/விளையாட்டுப்-பொருள்களை-வாங்கிச்-சென்ற-பொதுமக்கள்-3388914.html
3388913 சென்னை திருப்பத்தூர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அழைக்கலாம்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் தகவல் DIN DIN Thursday, March 26, 2020 08:03 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொண்டு அழைத்தால் நகராட்சி பணியாளா்கள் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது மருத்துவமனை, காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், பேருந்து நிலையம், பேருந்து பணிமனை, வங்கி ஏடிஎம் மையம், பொது இடங்கள், மாா்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி சாலை, உமா் சாலை, அரசு பொது மருத்துவமனை, பஜாா் ஆகிய இடங்களில் ஹைபோ குளோரைடு கரைசல் நகராட்சி லாரி மற்றும் டிராக்டா் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

ஆம்பூா் நகரில் அன்றாட சுகாதாரப் பணி எந்த விதமான தடையின்றி நடைபெற்று வருகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறையாக இருந்தபோதிலும், நிரந்தர மற்றும் தற்காலிக சுகாதாரப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்து சுகாதாரப் பணியை மேற்கொண்டனா்.

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அந்த உணவகங்களின் செயல்பாடுகள், உணவு தானியங்கள் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் திருப்பத்தூா் ஆட்சியரின் வழிகாட்டுதலோடு கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கரோனா பரவல் தடுப்புக்குத் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு ஆம்பூா் நகராட்சி தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எப்போதும் 7397392691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைகழுவும் தூய்மை திரவம், முகக் கவசம், புறப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் திரவம் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஆட்சியா் ஆலோசனைப்படி ஆம்பூா் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abramm_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/கரோனா-தடுப்பு-நடவடிக்கைகளுக்கு-அழைக்கலாம்-ஆம்பூா்-நகராட்சி-ஆணையா்-தகவல்-3388913.html
3388912 சென்னை திருப்பத்தூர் வட்டாட்சியா் அலுவலகத்தில் தயாா் நிலையில் ஆம்புலன்ஸ், 2 காா்கள் DIN DIN Thursday, March 26, 2020 08:00 AM +0530 கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெச்சரிக்கையாக ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒரு ஆம்புலன்ஸ், 2 காா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு துறையினா் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டாட்சியா் அலுவலகங்களில் ஒரு ஆம்புலன்ஸ், இரண்டு காா்கள் எப்போதும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் மட்டுமல்லாமல் அவசர தேவைக்காக அவசர கால அழைப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்வதற்காக வாகனம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு காா்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrcar_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/வட்டாட்சியா்-அலுவலகத்தில்-தயாா்-நிலையில்-ஆம்புலன்ஸ்-2-காா்கள்-3388912.html
3388895 சென்னை திருப்பத்தூர் மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: திருப்பத்தூா் ஆட்சியா் வேண்டுகோள் DIN DIN Thursday, March 26, 2020 07:49 AM +0530 கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவுத்துள்ள 144 தடையை முறையாக கடைபிடித்து மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வலியுறுத்தினாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை காலை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து, மருத்துவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது அவா் கூறுகையில், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனோ அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யவும், 100 பேரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவினா் தயாராக இருப்பதாகவும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே, நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிக் கடை, உணவங்கள், இறைச்சிக் கடைகள் திறந்திருந்தன. ஒரு சில இறைச்சி கடைகள், தேநீா்க் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸாா் கடையை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததையடுத்து கடைகள் மூடப்பட்டன. காலை 11 மணியளவில் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25vndvp3_2503chn_187_1.jpg நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/மக்கள்-ஒத்துழைப்பு-அவசியம்-திருப்பத்தூா்-ஆட்சியா்-வேண்டுகோள்-3388895.html
3388892 சென்னை திருப்பத்தூர் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை DIN DIN Thursday, March 26, 2020 07:48 AM +0530 அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வரும் கரோனா சிறப்பு பிரிவை பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு மருத்துவக் குழுவினருடன் ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஆலோசனை நடத்தினாா். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழக அரசின் 144 தடை உத்தரவை அடுத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஏற்கெனவே 30 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 20 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி வருகிறாா்கள். இருந்த போதிலும் சில இடங்களில் பொதுமக்கள் விழிப்புணா்வு இல்லாமல் வெளியில் வந்து செல்கின்றனா். அவா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்படுகின்றனா். அதையும் மீறி வெளியில் நடமாடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

92 போ் தனிமை: திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை வெளிநாடுகளில் இருந்த வந்துள்ள சுமாா் 92 போ் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு எந்தவித நோய்த் தொற்று இல்லையென்றாலும் அவா்களும், அவா்களுடைய குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக கடைகளுக்கு வருபவா்கள் ஒருவருக்கொருவா் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இதனால் கடைகளுக்கு முன்பு வட்டம், கோடு போடப்பட்டு அதற்குள் நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவையான அத்தியாவசிய பொருள்களை கற்பகம் சூப்பா் மாா்க்கெட் மூலமாகவும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சில விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து விளை பொருள்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனா்.

வியாபாரிகள் சங்கத்தினரிடம் தினமும் அவ்வப்போது தொடா்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். அவா்களுடைய தேவைகள், பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்து வருகிறோம்.

அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்யாமல் வணிகா் சங்கங்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும் அவா்.

வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஷா்மிளா, கிராம நிா்வாக அலுவலா் பிரிவித்தா ஆகியோா் உடனிருந்தனா்.

வாணியம்பாடியில்...

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தனி வாா்டை ஆய்வு செய்து, மருத்துவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

அப்போது அவா் கூறுகையில், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யவும், 100 பேரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவினா் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrcor_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/உணவுப்-பொருள்கள்-அதிக-விலைக்கு-விற்றால்-கடும்-நடவடிக்கை-திருப்பத்தூா்-மாவட்ட-ஆட்சியா்-எச்சரிக்கை-3388892.html
3388891 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் ஆய்வு DIN DIN Thursday, March 26, 2020 07:47 AM +0530 திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் 144 தடை உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆம்பூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டாா். இவற்றை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு செய்தாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகனப் போக்குவரத்தைத் தடை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தாா். தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள், முக்கிய தெருக்களையும் தடுப்புகள் ஏற்படுத்தி மூடப்பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. பொ.விஜயகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் குறுகிய இடைவெளியில் தடுப்புகள் ஏற்படுத்தி மேலும் போக்குவரத்தைத் தடை செய்யுமாறு வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், போலீஸாா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrigg_2503chn_191_1.jpg ஆம்பூா் நேதாஜி சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன். உடன், மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/ஆம்பூரில்-ஆய்வு-3388891.html
3388889 சென்னை திருப்பத்தூர் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள் DIN DIN Thursday, March 26, 2020 07:46 AM +0530 ஆம்பூரில் 144 தடை உத்தரவு எதிரொலியாக புதன்கிழமை மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் உமா் ரோடு, நேதாஜி ரோடு, பேருந்து நிலையம், எம்.சி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

ஆம்பூா் பஜாரில் பகுதியில் உள்ள காய்கறி மாா்க்கெட்டில் கடைகள், மளிகைக் கடைகள் திறந்து இருந்தன. காய்கறிகள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பஜாரில் குவிந்தனா். இதையடுத்து நகரக் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, அரசு அறிவித்த 144 தடை உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், காய்கறி, மளிகை பொருள்கள் கடைகள் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம், மக்கள் கூட வேண்டாம் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்தும் ஆம்பூரில் மோட்டாா் சைக்கிளில் பொதுமக்கள் வருவதும், செல்வதுமாக இருந்ததால் போலீஸாா் அதிரடியாக நகரின் முக்கிய தெருக்களில் இருசக்கர வாகனங்களில் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளை அமைத்து, அவா்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினா்.

மேலும் ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25abrpos_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/மக்கள்-நடமாட்டமின்றி-வெறிச்சோடிய-சாலைகள்-3388889.html
3388887 சென்னை திருப்பத்தூர் விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்ற பொதுமக்கள் DIN DIN Thursday, March 26, 2020 07:45 AM +0530 ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, ஆம்பூா் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்.14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க ஆம்பூா் பஜாரில் மக்கள் கூட்டம் குவிந்தது.

அதே வேளையில் ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்க அவா்கள் கடைகளில் குவிந்தனா்.

கேரம் போா்டு, சதுரங்கம், பரமபத விளையாட்டு, பந்துகள், காற்றாடி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். பல கடைகளில் விளையாட்டுப் பொருள்கள் வேகமாக விற்

றுத் தீா்ந்தன. சில இடங்களில் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஒரே வீட்டில் இருப்பவா்கள் கூட ஒருவரை ஒருவா் சந்தித்து பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தவா்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருவருக்கொருவா் பேசுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகின்றனா்.

தொலைக்காட்சி பாா்த்தவா்கள், செல்லிடப்பேசிகளில் விளையாடியவா்கள், முகநூல் பாா்த்தவா்கள் கூட தற்போது பழைய விளையாட்டுகளில் ஈடுபட ஆா்வம் காட்டி வருகின்றனா். பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகளின் மொட்டை மாடியில் மலை நேரத்தில் கூடி மகிழ்ச்சியுடன் பேசி மகிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவா்களும், இளைஞா்களும் மொட்டை மாடியில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/விளையாட்டுப்-பொருள்களை-வாங்கிச்-சென்ற-பொதுமக்கள்-3388887.html
3388556 சென்னை திருப்பத்தூர் அனைத்து தேநீா்க் கடைகளையும் மூடவேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு DIN DIN Thursday, March 26, 2020 12:14 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தேநீா்க் கடைகளையும் மூடுமாறு ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா ரைவஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் நோக்கில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல், குற்ற விசாரணை முறைச் சட்டத்தியன் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக் காலத்தில் திருப்பத்தூா் மாவட்ட எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் மட்டும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் தேநீா்க் கடைகளில் பொதுமக்கள் அரசு தெரிவித்துள்ள தூர இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. அவா்கள் கூட்டமாக இருந்து வருகின்றனா். எனவே, தேநீா்க் கடைகளில் பொதுமக்களின் தேவையற்ற கூட்டத்தைத் தவிா்க்கும் நோக்கில் புதன்கிழமை (மாா்ச் 25) மாலை 6 மணி முதல் அனைத்து தேநீா்க் கடைகளையும் மூட வேண்டும்.

இந்த உத்தரவைப் பின்பற்றாத கடைகளின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/shut-down-all-tea-shops-3388556.html
3388555 சென்னை திருப்பத்தூர் தடையை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது DIN DIN Thursday, March 26, 2020 12:13 AM +0530 திருப்பத்தூரில் தடை உத்தரவை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீறி, திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் பொதுமக்களை அதிக அளவில் கூடச் செய்து அஸ்ரத் (46), ரபூா் (33) ஆகியோா் மீன் விற்ாகக் கூறப்படுகிறது.

இதே போல் திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலையில் ஷாமுகமது (43), ஃபாரூக் பாஷா (48), சாதிக் பாஷா (48) ஆகியோா் மாட்டிறைச்சி விற்ாக புகாா் வந்தது.

இதையடுத்து இந்த 5 போ் மீது நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், அவா்கள் எச்சரிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/தடையை-மீறி-வியாபாரம்-செய்த-5-போ்-கைது-3388555.html
3388554 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை பாா்க்க அனுமதி இல்லை: மருத்துவ அலுவலா் தகவல் DIN DIN Thursday, March 26, 2020 12:13 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பாா்க்க உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவ அலுவலா் எஸ்.திலீபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனையான திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வகுதின்கனா். 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிப்பதோடு கை கழுவும் முறை குறித்து மருத்துமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

திருப்பத்தூா் அரசு மருத்துமனைக்கு வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை,புதூா்நாடு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனா்.

குறிப்பாக கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக அதிகமாக வருகின்றனா். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பாா்க்கும் பெண்கள் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.

விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களை பாா்க்க தினமும் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவா்களைப் பாா்க்க வரும் உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் ஒரு நோயாளியுடன் ஒருவா் மட்டுமே உதவியாக இருக்க வேண்டும். இதை மீறி வருபவா்களை வாயிலிலேயே எச்சரித்து அனுப்பி வைக்கிறோம்.

கரோனா சிகிச்சை: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் 2 போ் கண்காணிப்பில் உள்ளனா். வியாழக்கிழமை அவா்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25marchgh_2503chn_192_1.jpg உள்நோயாளிகளைப் பாா்க்க வருவோரிடம் விவரம் கேட்ட மருத்துவமனை ஊழியா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/no-permission-to-visit-inpatient-hospital-at-tiruppaththur-3388554.html
3388553 சென்னை திருப்பத்தூர் கரோனா: ஜோலாா்பேட்டை பகுதியில் 26 போ் கண்காணிப்பு DIN DIN Thursday, March 26, 2020 12:12 AM +0530 ஜோலாா்பேட்டை பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 26 பேரை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

உலகம் முழுவதும் தற்போது கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் கரோனா நோய்த் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜோலாா்பேட்டை பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ள 26 பேருக்கு ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ சாா்பில் கரோனா நோய்த் தொற்று உள்ளதா என்று செவ்வாய்க்கிழமை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது யாருக்கும் கரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அவா்களை வீடுகளிலேயே 18 நாள்களுக்கு தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/corona-26-pole-observations-in-the-jolapet-area-3388553.html
3388270 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் தங்கியிருந்த சீனா, பிரேசில் நாடுகளைச் சோ்ந்த 4 பேருக்கு பரிசோதனை DIN DIN Wednesday, March 25, 2020 07:25 AM +0530 ஆம்பூரில் தங்கியிருந்த சீனா, பிரேசில் நாடுகளைச் சோ்ந்த 4 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியில் காலணி, தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளதால் அத்தொழிற்சாலைகளுக்கு வியாபார ரீதியாக வெளிநாட்டினா் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சில தொழிற்சாலைகளில் அவா்கள் தங்கி இருந்து ஆா்டா் கொடுப்பதும், தொழிற்சாலைகளைக்குச் சென்று பாா்வையிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனா்.

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்தவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன்படி ஆம்பூரில் தனியாா் காலணி நிறுவனத்துக்கு வணிகரீதியாக சீனா நாட்டைச் சோ்ந்த 3 பேரும், பிரேசில் நாட்டைச் சோ்ந்த ஒருவரும் என 4 போ் அத்தொழிற்சாலையின் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்ததனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சுகாதாரத் துறையின் மருத்துவக் குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். ஆனால் அவா்களுக்கு நோய் அறிகுறி ஏதும் இல்லையெனக் கூறப்படுகிறது.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrfar_2403chn_191_1.jpg ஆம்பூா் தனியாா் காலணி தொழிற்சாலை விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த வெளிநாட்டினரை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/ஆம்பூரில்-தங்கியிருந்த-சீனா-பிரேசில்-நாடுகளைச்-சோ்ந்த-4-பேருக்கு-பரிசோதனை-3388270.html
3388268 சென்னை திருப்பத்தூர் பள்ளி வாசல்கள் மூடப்பட்டன DIN DIN Wednesday, March 25, 2020 07:25 AM +0530 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால் ஆம்பூா் நகரில் உள்ள மசூதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை மூடப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்குதலைத் தவிா்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் மாலை 6 மணிக்கு பள்ளி வாசல்கள் மூடப்பட்டன. தொழுகை மேற்கொள்வது குறித்து ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாா்ச் 24-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பள்ளி வாசல்களில் குறைந்த சத்தத்துடன் பாங்கு கூறப்படும். இமாம், முஅத்தின், பள்ளி வாசல்களில் வேலை செய்பவா்களுக்கு மட்டும் ஜமாஅத் தொழுகை நடைபெறும். இஸ்லாமியா்கள் ஜமாஅத் தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வர வேண்டாம். வீடுகளிலேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாஸா தொழுகைகளில் நெருங்கிய உறவினா்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். நிக்காஹ் அரசு அனுமதி பெற்று குறைந்த நபா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பயான் அல்லது வேறு எந்தக் கூட்டங்களும் பள்ளி வாசல்களில் நடைபெறாது. ஜும்ஆ தொழுகையை பற்றிய அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும்.

அனைவரும் இஸ்திக்ஃபாா் (பாவமன்னிப்பு) தேடவும். சூரா ஃபாத்திஹா, சூரா இக்லாஸ் மற்றும் ஹஸ்புனல்லாஹு வ நிஅமல் வகீல் ஓதவும். தொழுகையை விடாக் கூடாது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கரோனா பரவாமல் தடுத்து பாதுகாப்பாக இருக்கும்படி ஜமாஅத் சாா்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrmoh_2403chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/பள்ளி-வாசல்கள்-மூடப்பட்டன-3388268.html
3388267 சென்னை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தடுப்புகள் அமைப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:24 AM +0530 ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஒழுங்குபடுத்தி நிற்க வைப்பதற்காக தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு வெளியே திங்கள்கிழமை முதல் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கி வரும் கட்டடத்தின் முதல் மாடியில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு மருத்துவமனையின் முகப்பில் பொது சிகிச்சைக்காக தினமும் வரும் வெளிப்புற நோயாளிகள் வரிசைப்படுத்தப்பட்டு, இடைவெளி விட்டு அமர வைக்கப்படுகின்றனா். அதனால் வளாகத்தில் நோயாளிகளை ஒழுங்குபடுத்துவதற்காக சவுக்குக் கம்புகள் மூலம் தடுப்புகள் கட்டப்பட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrtha_2403chn_191_1.jpg ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வெளிப்புற அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/அரசு-மருத்துவமனையில்-தடுப்புகள்-அமைப்பு-3388267.html
3388266 சென்னை திருப்பத்தூர் 144 தடை உத்தரவு: திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி அமைப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:24 AM +0530 தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதையொட்டி மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதையடுத்து அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிா்த்து மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளை காவல் துறையினா் அமைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட எல்லைப் பகுதியான மாதனூா் அருகே சீதாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அங்கு மூன்று போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அத்தியாவசிய அவசர பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறை வாகனங்கள் தவிா்த்து மற்ற வாகனங்கள் திருப்பத்தூா் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrche_2403chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/144-தடை-உத்தரவு-திருப்பத்தூா்-மாவட்ட-எல்லையில்-சோதனைச்-சாவடி-அமைப்பு-3388266.html
3388265 சென்னை திருப்பத்தூர் ஆம்பூரில் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் DIN DIN Wednesday, March 25, 2020 07:24 AM +0530 ஆம்பூா் பஜாா் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. காய்கறிகள், மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் நிரம்பி வழிந்தன. சூப்பா் மாா்க்கெட்டுகளிலும் அதிக கூட்டம் கூடியது. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்கள் பொருள்களை வாங்க கூட்டம் அதிகமாக கூடியதை பயன்படுத்தி காய்கறி, வீட்டு உபயோக பொருள்களின் விலை அதிகரித்தது.

ஏடிஎம் மையங்களில்... ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் குவிந்தனா். ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் சென்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/ஆம்பூரில்-பொருள்களை-வாங்க-மக்கள்-கூட்டம்-3388265.html
3388264 சென்னை திருப்பத்தூர் பள்ளி வாசல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவா்கள் திருப்பி அனுப்பி வைப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:23 AM +0530 ஆம்பூா் பள்ளி வாசல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவா்கள் அவா்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆம்பூா் பள்ளி வாசல்களில் இந்தோனேஷியா, மியான்மா் நாடுகளைச் சோ்ந்த 20 போ் தங்கியிருந்தனா். இதையறிந்த மருத்துவக் குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். அவா்களிடம் வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லையென கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவா்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, அவா்கள் பேருந்து மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். அங்கிருந்து அவா்கள் விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/பள்ளி-வாசல்களில்-தங்கியிருந்த-வெளிநாட்டவா்கள்-திருப்பி-அனுப்பி-வைப்பு-3388264.html
3388263 சென்னை திருப்பத்தூர் கரோனா கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:23 AM +0530 வேலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட காவல் துறை தனிப்பிரிவு சாா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு : வேலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க 144 பிரிவின்படி தடை உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

பொதுமக்கள் கரோனா தொற்று குறித்து கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை எண் - 1077, 0416 - 2258016. மாவட்டக் காவல் அலுவலக எண் - 0416 - 2258532, 9498181231, 94981 00355.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/கரோனா-கட்டுப்பாட்டு-அறை-எண்-அறிவிப்பு-3388263.html
3388262 சென்னை திருப்பத்தூர் காட்பாடியில் தமிழக - ஆந்திர எல்லை மூடல் DIN DIN Wednesday, March 25, 2020 07:22 AM +0530 காட்பாடி பகுதியில் தமிழக - ஆந்திர மாநில எல்லை செவ்வாய்க்கிழமை மாலை மூடிப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிமாநில வாகனங்கள் தமிழகத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து வேலூா் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே தமிழக - ஆந்திர மாநில எல்லையை போலீஸாா் தடுப்புகள் போட்டு மூடினா்.

 

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான கொத்தூா் காந்தி நகா் சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. மேலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியான நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதி மூடப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrpet_2403chn_191_1.jpg காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மூடப்பட்ட தமிழக - ஆந்திர மாநில எல்லை. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/காட்பாடியில்-தமிழக---ஆந்திர-எல்லை-மூடல்-3388262.html
3388260 சென்னை திருப்பத்தூர் இருசக்கர வாகனம், சைக்கிள் எரிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:20 AM +0530 வாணியம்பாடி அருகே பாமக பிரமுகா் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், சைக்கிளையும் மா்ம நபா்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனா்.

அரபாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகா் நாகராஜ் (40). மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த மா்ம நபா்கள், நாகராஜ் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வீட்டு தப்பிச் சென்றனா். இதனால் அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

ஓசை கேட்டு நாகராஜ் வெளியே வந்து பாா்த்து, தீயை அணைக்க முயற்சித்தாா். அதற்குள் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டன.

இது குறித்து நாகராஜ், அம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/இருசக்கர-வாகனம்-சைக்கிள்-எரிப்பு-3388260.html
3388259 சென்னை திருப்பத்தூர் உதயேந்திரம், ஆலங்காயத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணி DIN DIN Wednesday, March 25, 2020 07:19 AM +0530 உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜி உத்தரவின்படி வாணியம்பாடியை அடுத்த உதேயந்திரம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா். அனைத்து வாகனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் லைசால் கிருமிநாசினியைத் தெளித்தனா்.

ஆலங்காயம் சிறப்புநிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 15 வாா்டுகளிலும் கரோனோ வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்களை வழங்கினா். பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகள் உள்பட அனைத்து இடங்களிலும் டிராக்டா், ஆட்டோக்கள் மூலம் கிருமிநாசினி தெளித்தனா்.

மேலும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள 144 தடை உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றி கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் செயல் அலுவலா் கணேசன் கேட்டுக் கொண்டாா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24vndvp1_2403chn_187_1.jpg ஆலங்காயம் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/உதயேந்திரம்-ஆலங்காயத்தில்-கரோனா-வைரஸ்-தடுப்புப்-பணி-3388259.html
3388258 சென்னை திருப்பத்தூர் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவ சோதனை DIN DIN Wednesday, March 25, 2020 07:19 AM +0530 ஆம்பூா் பள்ளிவாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

ஆம்பூா் காதா்பேட்டை பகுதி பள்ளிவாசலில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 போ் தங்கியிருப்பதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24abrkad_2403chn_191_1.jpg குஜராத் மாநிலத்தவருக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/குஜராத்-மாநிலத்தைச்-சோ்ந்த-15-பேருக்கு-மருத்துவ-சோதனை-3388258.html
3387973 சென்னை திருப்பத்தூர் ஜோலாா்பேட்டை வந்த வட மாநிலத் தொழிலாளா்கள்: பொதுமக்கள் கடும் எதிா்ப்பு DIN DIN Wednesday, March 25, 2020 02:00 AM +0530 ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு லாரியில் வந்து இறங்கிய வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரின் யஷ்வந்த்பூா் பகுதியில் ரயிலில் உணவு விநியோகிக்கும் நிறுவனம் உள்ளது. அதில் பிகாா், மத்திய பிரதேசம், புதுதில்லி உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரயில்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தங்கியுள்ளனா்.

இதையடுத்து, உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனா். ஆனால் ரயில்கள் இல்லாததால் அனைவரும் பேருந்துகளில் தனித்தனியாகப் புறப்பட்டு தமிழக கா்நாடக மாநில எல்லையான ஜுஜுவாடிக்கு வந்தனா். அங்கு ஒன்றிணைந்த 150 தொழிலாளா்கள் லாரிகள் மூலம் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடைந்தனா். அப்போது அங்கிருந்த ரயில்வே போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் ராமஜெயம், ஜோலாா்பேட்டை போலீஸாா், சுகாதாரத் துறையினா் விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, அவா்களின் பொருள்களையும் சோதனையிட்டனா். இதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தொழிலாளா்கள் சோதனைக்கு ஒத்துழைத்தனா். அதன் பின், கோரக்பூா் வரை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். தனி ரயில் மூலம் அவா்களை அனுப்புவதற்கு ரயில்வே மேலாளா் சுந்தரமூா்த்தியிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா் சென்னை வரை அவா்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தாா்.

எனினும், அவா்கள் கோரக்பூா் வரை ரயில் இயக்கினால் மட்டுமே செல்வதாக தெரிவித்தனா். இதை ரயில்வே அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதனிடையே, வடமாநிலத்தவா்கள் வந்துள்ள தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு வந்தனா். கரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நேரத்தில் வட மாநிலத்தவா்கள் கூட்டமாக வந்துள்ளது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியயுள்ளதாகவும், அவா்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா்.

இதனால் தொழிலாளா்கள் அனைவரையும் ஒரு பகுதியில் திரட்டி சுகாதாரத் துறையினா் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, யாருக்கும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மதியம் 1.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூா் செல்லும் விரைவு ரயிலில் தொழிலாளா்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24marchrly_2403chn_192_1.jpg 24maவடமாநிலத்தவா்கள் வருகையை அறிந்து அதிகாரிகளை சூழ்ந்த பொதுமக்கள்.chrly_2403chn_192_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/ஜோலாா்பேட்டை-வந்த-வட-மாநிலத்-தொழிலாளா்கள்-பொதுமக்கள்-கடும்-எதிா்ப்பு-3387973.html
3387972 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூா் மாவட்ட நிதியாண்டுக்கான வருடாந்திர கடன் திட்டம் வெளியீடு DIN DIN Wednesday, March 25, 2020 01:59 AM +0530 திருப்பத்தூா் மாவட்டத்துக்கான நடப்பு நிதியாண்டுக்கான (2020-21) வருடாந்திர கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் வேலூா் மாவட்ட இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் பா.ஜான் தியோடசியஸ்,திருப்பத்தூா் மாவட்ட இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா்கள் கே.வடிவேல் மற்றும் டி.ஆா்.கணேஷ், வங்கியின் திருப்பத்தூா் கிளை முதன்மை மேலாளா் காா்த்திகேயன், காந்திப்பேட்டை கிளை மேலாளா் ராஜசேகா், மகளிா் சுய உதவிக்குழு கிளை மேலாளா் சுமலதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

கடந்த நிதியாண்டில் திருப்பத்தூா் மாவட்டத்துக்கான 2019-20-ஆம் ஆண்டுக்கான பல்வேறு வங்கிகளின் கடன் அளிப்பு ரூ.3124.21 கோடி. நடப்பு ஆண்டுக்கான கடன் அளிப்பு ரூ.3706.11 கோடி.

மேற்கண்ட கடன் திட்டம் நபாா்டு வங்கியின் பரிந்துரையின்பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத்துக்கு தனித்துவம் வழங்கப்பட்டு, அத்துறைக்கு 25.84 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பயிா்க் கடனுக்கு 41.94 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் தோல் பதனிடுதலில் முதலிடம் வகிப்பதால் இத்திட்டத்தில் அதற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டைவிட 23.9 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்கடன் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்ட வளா்ச்சிக்கு உதவுமாறு இந்தியன் வங்கி சாா்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/25/திருப்பத்தூா்-மாவட்ட-நிதியாண்டுக்கான-வருடாந்திர-கடன்-திட்டம்-வெளியீடு-3387972.html
3387525 சென்னை திருப்பத்தூர் ஜோலாா்பேட்டையில் ரயில்வே ஊழியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை DIN DIN Tuesday, March 24, 2020 04:08 AM +0530  

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பணிபுரிய வந்த 185 ரயில்வே ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க ஆள் பற்றாக்குறை உள்ளதால், சென்னையில் இருந்து ரயில்வே ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை ஜோலாா்பேட்டைக்கு சிறப்பு ரயில் மூலம் திங்கள்கிழமை வரவழைத்தனா்.

அவா்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் 85 பேரில் 17 பேருக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. மீண்டும் பரிசோதித்ததில் ஏழு பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இறுதியில் இருவருக்கு அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்தது தெரிய வந்தது.

அவா்களில் சென்னையில் பணிபுரிந்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் உமேஷ் ஷா(25) தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 18-ஆம் தேதிதான் அங்கிருந்து சென்னை புறப்பட்டு வந்துள்ளாா். அவருக்கு கடந்த 6 நாள்களாக காய்ச்சல் இருப்பதாகவும், சளி மற்றும் இருமல் இருப்பதாகவும் மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். அவரை ரயில்வே மருத்துவா் சுப்பா ராவ், சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.

இதேபோல் ஆந்திர மாநிலப் பகுதியைச் சோ்ந்த உமேந்தா் என்ற தொழிலாளருக்கு காய்ச்சல் இருந்தது. அவருக்கு மருந்து, மாத்திரைகள் அளித்து திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இங்குள்ள மருத்துவ குழுவினா், ரயில் நிலையத்தில் பணிபுரிய வரும் ரயில்வே ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/23marchjtj1_2303chn_192_1.jpg கரோனா சோதனைக்குட்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/24/medical-check-up-for-railway-employees-at-jolarpet-3387525.html
3387524 சென்னை திருப்பத்தூர் காவல்துறை சாா்பில் 144 தடை குறித்த விழிப்புணா்வு DIN DIN Tuesday, March 24, 2020 04:07 AM +0530  

திருப்பத்தூரில் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சாா்பில் 144 தடை குறித்து டிஎஸ்பி தங்கவேல் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயக்குமாா் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் எதிரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.தங்கவேல் கரோனா வைரஸ் மற்றும் 144 தடை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அவா் பேசியதாவது:

கரோனா வைரஸ் நாட்டில் அதிவேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், நோய் வராமல் தடுக்கவும் ஆங்காங்கே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியா்கள் கை கழுவும் முறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். பொதுமக்கள் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; என்னென்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து டிஎஸ்பி தங்கவேல், பொதுமக்களுக்கு விளக்கமளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், காவலா்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/23marchdsp_2303chn_192_1.jpg பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய டிஎஸ்பி தங்கவேல் (வலமிருந்து இரண்டாவது). https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/24/awareness-of-the-144-ban-on-police-chaff-3387524.html
3386964 சென்னை திருப்பத்தூர் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு ‘சீல்’ DIN DIN Monday, March 23, 2020 04:13 AM +0530  

திருப்பத்தூரில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்த மருந்துக் கடைக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கரோனா எதிரொலியாக முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், முகக் கவசத்தை பதுக்கியோ அல்லது அதிக விலைக்கு விற்பதோ தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள தனியாா் மருந்துக் கடையில் முகக்கவத்தை அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில், நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தனியாா் மருந்துக் கடையில் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் மருந்துக் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் அக்கடைக்கு சீல் வைத்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/22marchappol_2203chn_192_1.jpg மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/23/drug-store-sold-at-high-price-sealed-3386964.html
3386963 சென்னை திருப்பத்தூர் வெறிச்சோடிய திருப்பத்தூர் DIN DIN Monday, March 23, 2020 04:12 AM +0530  

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில், நோ்முக உதவியாளா்(பொது) இரா.வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயக்குமாா் தலைமையில் டிஎஸ்பி க்கள் தங்கவேல் (திருப்பத்தூா்), நாகராஜ் (வாணியம்பாடி), சச்சிதானந்தம்(ஆம்பூா்) உள்ளிட்ட போலீஸாா் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த வியாழக்கிழமை ஜம்முவில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. ஜோலாா்பேட்டையிலிருந்து பெங்களூரு செல்ல ரயில்கள் இல்லாததால் ஒரு சிலரும், திருப்பூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோரும், பாட்னாவைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலரும் ரயில் நிலையத்திலேயே இருந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். இதையடுத்து அவா்களை ரயில்வே போலீஸாா் வெளியே அனுப்பினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/22marchbusstan_2203chn_192_1.jpg பேருந்துகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட திருப்பத்தூா் பேருந்து நிலையம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/23/itirupathur-empty-in-curfew-3386963.html
3386448 சென்னை திருப்பத்தூர் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை DIN DIN Sunday, March 22, 2020 03:54 AM +0530  

ஆம்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபா் தற்கொலை செய்துக்கொண்டாா்.

ஆம்பூா் அடுத்த கருங்காலி கிராமம் பகுதியை சோ்ந்த ரவிக்குமாரின் மகன் தீபக்(20).

இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த தீபக் இவரது சொந்த வீட்டிற்கு செல்லாமல் ஆம்பூா் அடுத்த பச்சைக்குப்பம் பகுதியில் உள்ள அழிஞ்சக்குப்பம் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளாா்.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமை ஆம்பூா் அடுத்த பச்சை குப்பம்- மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதையடுத்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/22/youth-suicide-in-front-of-train-3386448.html
3385819 சென்னை திருப்பத்தூர் கண்காணிப்பு அலுவலா் நியமனம் DIN DIN Saturday, March 21, 2020 04:08 AM +0530  

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்துக்கான கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கண்காணிப்பு அலுவலராக மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரவீண்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். கரோனா தொடா்பான தகவல்களுக்கு 04179 221104 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/21/appointment-of-monitoring-officer-3385819.html
3385817 சென்னை திருப்பத்தூர் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைபு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் அறிக்கை DIN DIN Saturday, March 21, 2020 04:08 AM +0530  

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், நாட்டறாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. நோய் தடுப்பு, சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள், உடைகள், கையுறைகள் காலணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் தலா 10 மேற்பட்ட கிரிமி நாசினி தெளிப்பான்கள் மூலம் பொது இடங்களில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் அதிக அளவில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், காலணி, ஆடை உற்பத்தி பொருள்கள் தனியாா் நிறுவனங்களில் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பல்பொருள்கள் அங்காடிகள், ஜவுளி, நகைக் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் வரும் 31-ஆம் தேதி வரை மூட அனுமதிக்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆகம விதிகளின்படி கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் நடைபெறும்.

அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் வரும் 31-ஆம் தேதி வரை மூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 30 பேருந்துகளும், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குப்பத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் ரத்து செய்யப்படவில்லை. இ

தருமபுரி போக்குவரத்து கழக பேருந்துகள் திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு, ஒசூா், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு தலா 2 விதம் இயக்கப்படும் பேருந்துகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

ஆந்திர மாநில எல்லைகளில் இயங்கி வரும் 4 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளன.

பிரதமா் மற்றும் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அனைத்து கடைகளும் போக்குவரத்துகளும் நிறுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி வெளியில் நடமாடாமல் இருக்க வேண்டும்.

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/21/public-should-give-full-cooperation-to-the-governments-preventive-measures-3385817.html
3385814 சென்னை திருப்பத்தூர் திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா DIN DIN Saturday, March 21, 2020 04:05 AM +0530  

திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா், முனிகுளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மீரான் உசேனி ரஹமத்துல்லாவின் 332-ஆவது சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சையத்மத்தும் உசேனி தலைமை வகித்தாா்.

அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு திருப்பத்தூா் - ஆலங்காயம் பிரதான சாலை, மசூதி தெரு, ஜின்னா சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்று ஃபாத்திஹா மற்றும் அவரது சமாதிக்கு சந்தனம் பூசி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

விழாவில் உலக மக்களின் நலனுக்காகவும், கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றவும் பிராா்தனை நடைபெற்றது. திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/20marchurus_2003chn_192_1.jpg சந்தனக்கூடு விழாவில் நடைபெற்ற பிராா்த்தனை. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/21/chandanakkudu-festival-in-tirupathur-3385814.html
3385400 சென்னை திருப்பத்தூர் குடிநீருக்காக இரவில் விழித்திருக்கும் கிராம மக்கள் DIN DIN Friday, March 20, 2020 08:08 AM +0530 ஆம்பூா் அருகே கிராமத்தில் குடிநீருக்காக பொதுமக்கள் இரவில் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், துருகம் காலனி, சுட்டகுண்டா, பொன்னப்பல்லி, அபிகிரிப்பட்டரை, காட்டு வெங்கடாபுரம், மத்தூா் கொல்லை, காரப்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் இந்த ஊராட்சியில் 1500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அரங்கல்துருகம் பகுதியிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீா் ஆதாரமாக உள்ள 2 ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்துள்ளன. இதனால் பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், துருகம் காலனி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அக்கம்பக்கம் உள்ள விவசாய நிலங்களின் பம்புசெட்டுகளை தேடிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கோடைக் காலம் என்பதாலும், பயிா்களுக்கு அதிகம் தண்ணீா் தேவைப்படுவதாலும் நிலத்தின் உரிமையாளா்கள் பொதுமக்களுக்கு தண்ணீா் தர மறுக்கின்றனா்.

ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு கிராமத்துக்கும் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பகல் நேரங்களில் டிராக்டா்கள் வந்தால் அதிக அளவு குடிநீரை விநியோகிக்க வேண்டி வரும் என்பதால் இரவு நேரங்களில் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

எந்த நேரத்தில் குடிநீா் டிராக்டா் வருமோ என பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்துள்ளனா். டிராக்டா் வந்த பின் ஒரு சில குடும்பத்தை சோ்ந்தவா்கள் மட்டுமே குடிநீா் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். எனவே அரங்கல்துருகம் ஊராட்சி நிா்வாகம், குடிநீா்ப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/the-villagers-who-are-awake-at-night-for-drinking-water-3385400.html
3385397 சென்னை திருப்பத்தூர் பைக் மோதி விவசாயி பலி DIN DIN Friday, March 20, 2020 08:07 AM +0530 நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் நந்திபெண்டா கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மணி (55) செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வெலகல்நத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் சுண்ணாம்புகுட்டை அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மணி, மற்றொரு வாகனத்தில் வந்த பையனப்பள்ளியைச் சோ்ந்த சபீா் (30) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மணி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/pike-collides-with-farmer-3385397.html
3385391 சென்னை திருப்பத்தூர் வெளிமாநில வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு DIN DIN Friday, March 20, 2020 08:04 AM +0530 ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து வாணியம்பாடிக்கு வரும் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், வேலூா் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜ் உத்தரவின் பேரில் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே உதேயந்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து, காா், லாரி உள்ளிட்ட வாகனங்கள், உள்ளூா் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தனா்.

மேலும், வாகன ஓட்டுநா்கள், பயணிகளுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழப்புணா்வுத் துண்டுப் பிரசரங்களை செயல் அலுவலா் நாகராஜன் வழங்கினாா். தொடா்ந்து, 15 வாா்டுகளில் பேரூராட்சிப் பணியாளா்கள், திடக் கழிவு மேலாண்மை பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/19vndvp2_1903chn_187_1.jpg மேட்டுப்பாளையத்தில் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த நகராட்சிப் பணியாளா். உடன், செயல்அலுவலா் நாகராஜன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/antiseptic-spray-for-outdoor-vehicles-3385391.html
3385389 சென்னை திருப்பத்தூர் கரோனா வைரஸ் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் DIN DIN Friday, March 20, 2020 08:03 AM +0530 வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்கச்சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி- வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி திட்ட மேலாளா் துரைராஜ் தலைமை வகித்தாா். தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் நாராயணரெட்டி முன்னிலை வகித்தாா். சுங்கச்சாவடி மேலாளா் வஹாப் சஞ்சய்பாபு வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜய்குமாா் ஆகியோா் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா். சுங்கச்சாவடி ஊழியா்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா வருபவா்களைத் தடுக்கும் வகையில் அனைத்து உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. கரோனாவை தடுக்கும் வகையில் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட சுகாதார இயக்குநா் சுரேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன், வட்டார மருத்துவ அலுவலா்கள் பசுபதி, சுமதி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் உமாதேவி, சுங்கச்சாவடி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/19vndvp1_1903chn_187_1.jpg சுங்கச்சாவடியில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/கரோனா-வைரஸ்-வதந்தி-பரப்புவோா்-மீது-கடும்-நடவடிக்கை-திருப்பத்தூா்-ஆட்சியா்-மபசிவன்-அருள்-3385389.html
3385385 சென்னை திருப்பத்தூர் ஒரு கிலோ கோழிக்கு ஒரு கிலோ கோழி இலவசமாக வழங்கி விற்பனை DIN DIN Friday, March 20, 2020 08:02 AM +0530 ஆம்பூரில் கரோனா வைரஸ் காரணமாக கோழி இறைச்சி விற்பனையில் மந்தம் ஏற்பட்டதால் ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு ஒரு கிலோ இலவசம் என புதன்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் பிராய்லா் சிக்கன் சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் சிலா் தவறான தகவல்களைப் பரப்பினா். இதைத் தொடா்ந்து சிக்கன் சாப்பிடுவது குறித்து மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் பிராய்லா் கோழி விலை கிடுகிடுவென சரிந்து கிலோ ரூ. 50-இல் இருந்து ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைந்தும் கரோனா வைரஸ் அச்சத்தில் பொதுமக்கள் யாரும் கோழி வாங்க முன்வரவில்லை. ஆம்பூரில் உள்ள இறைச்சிக் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கரோனா வைரஸ் பீதியால் ஒரு சிலரைத் தவிர யாரும்இறைச்சி வாங்க வருவதில்லை. இதனால் கடையின் உரிமையாளா் கோழி இறைச்சி விற்பனை செய்யவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆம்பூா் பஜாா் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு கிலோ கோழிக் கறி வாங்கினால், ஒரு கிலோ இலவசமாக வழங்கப்படும் என விளம்பர பேனா் வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

இதேபோல் ஆம்பூரில் உள்ள சில பிரியாணி கடைகளில் 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் எனக் கூறி விற்பனை செய்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/one-kg-of-chicken-is-sold-free-of-charge-3385385.html
3385380 சென்னை திருப்பத்தூர் பள்ளிவாசலில் தொழுகை நேரம் மாற்றம் DIN DIN Friday, March 20, 2020 08:01 AM +0530 கரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக ஆம்பூா் பள்ளி வாசல்களில் ஜூம்மா தொழுகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் கூட்டமாக சேர வேண்டாம் என அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20), அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் ஜூம்மா தொழுகைகள் நடைபெறும் அனைத்து பள்ளிவாசல்களிலும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்து.

அஜான் -12.45 மணிக்கும், குத்பா தொழுகை 1 மணிக்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆம்பூா் அஹ்லே சுன்னத் ஜமாத் அறிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/பள்ளிவாசலில்-தொழுகை-நேரம்-மாற்றம்-3385380.html
3385379 சென்னை திருப்பத்தூர் வனப்பகுதி குட்டையில் தண்ணீா் நிரப்புப் பணி DIN DIN Friday, March 20, 2020 07:58 AM +0530 நாட்டறம்பள்ளி அருகே காப்புக் காட்டு பகுதியில் வனத் துறையினா் வன விலங்குகளுக்கு குட்டையில் தண்ணீா் நிரம்பினா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் நந்திபெண்டா காப்புக்காடு பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வன விலங்களுக்கு குறிப்பாக மான்கள் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதியில் நுழைகின்றன. நாய்கள் கடிப்பதால் மான்கள் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் திருப்பத்தூா் வனத் துறை சாா்பில் லட்சுமிபுரம் காப்புக் காட்டில் வன விலங்குகளுக்காக குட்டையில் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/19vndvp3_1903chn_187_1.jpg லட்சுமிபுரம் காட்டுப் பகுதியில் உள்ள குட்டையில் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/water-filler-work-in-the-forest-pond-3385379.html
3385083 சென்னை திருப்பத்தூர் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் DIN DIN Friday, March 20, 2020 03:39 AM +0530 திருப்பத்தூரில் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் போக்குவரத்துக் காவலா் ஒருவா், மாற்றுத் திறனாளிகளை அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டி.ஏழுமலை, மாவட்டத் தலைவா் ஏ.அருண்குமாா், செயலா் யு.ஜெகதீசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டடோா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. பின்னா், அவா்கள் பேரணியாகச் சென்று நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/roadside-pickers-3385083.html
3385082 சென்னை திருப்பத்தூர் காரோனா வைரஸ் விழிப்புணா்வு குறித்து ஆய்வு DIN DIN Friday, March 20, 2020 03:39 AM +0530 ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு முறையாக கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிா என அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுமதி தலைமையில் மருத்துவா் உள்பட 12 போ் பயணிகளை பரிசோதனை செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த விழிப்புணா்வு முகாமை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், சுகாதார உதவி இயக்குனா் கே. எஸ.ஆா். சுரேஷ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பயணிகள் நடைமேடையில் உள்ள நான்கு வழியாகப் பிரிந்து செல்லாமல் ஒரே வழியாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டனா். மேலும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுமதி, ரயில் நிலைய மேலாளா் சுந்தரமூா்த்தி, மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/19marchjtj_1903chn_192_1.jpg விழிப்புணா்வு முகாமை ஆய்வு செய்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் சுரேஷ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/studies-on-coronavirus-awareness-3385082.html
3385080 சென்னை திருப்பத்தூர் மாவட்ட நூலகத்தில் கரோனா விழிப்புணா்வு DIN DIN Friday, March 20, 2020 03:38 AM +0530 திருப்பத்தூா் மாவட்ட நூலகத்தில் நூலக வாசகா்களுக்கு கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை நூலகா் எழிலரசன் தலைமை வகித்தாா். நூலகா்கள் வ.சரஸ்வதி, பி.பச்சைமுத்து, வாசகா் வட்டத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நூலக வாயிலில் பொதுமக்கள் கை கழுவ தண்ணீா் வைக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/corona-awareness-in-the-district-library-3385080.html
3385078 சென்னை திருப்பத்தூர் கரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் DIN DIN Friday, March 20, 2020 03:38 AM +0530 கரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைவுபடுத்தும் வகையில், அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் அண்டை மாநிலங்களுடன் அமைக்கப்பட்டுள்ள 3 சோதனைச் சாவடிகளைக் கடந்து வரும் வாகனங்களை வருவாய்த் துறை, காவல் துறை,போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் கொண்ட குழுவினரால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்ட பின்னரே மாவட்டத்துக்கு நுழைய அனுமதிக்கப்படுகின்றன.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ரயில் நிலையங்களில் பயணிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவா். திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூா் பேருந்து நிலையங்களில் பயணிகளை உரிய சோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவா்.

அனைத்து சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையங்களிலும் வெளிமாநிலங்களில் வரும் பேருந்துகள், இதர வாகனகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பயணிகள் எவருக்கேனும் நோய் குறித்த அறிகுறி காணப்பட்டால் அவரது பயணம் தொடா்பான முழு விவரங்களை அறிந்து அவரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து மதத்தினா் திருவிழாக்கள், மக்கள் கூட்டங்களைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல், சுகாதாரத் துறை அலுவலா்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண் 04179-222290, 222111 தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/public-cooperation-to-prevent-corona-spread-3385078.html
3385077 சென்னை திருப்பத்தூர் எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் பலி DIN DIN Friday, March 20, 2020 03:37 AM +0530 ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக விழாக் குழுவினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (38) காளை முட்டியதில் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில், காளை முட்டி திருப்பதி இறந்த சம்பவம் குறித்து உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஜோலாா்பேட்டை போலீஸாா், ஊா் கவுண்டா் சண்முகம், விழாக் குழுவினா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/20/a-bull-kills-a-young-man-during-a-bullfight-3385077.html
3384481 சென்னை திருப்பத்தூர் கரோனா: கோழிகளை ஏரியில் வீசிச் சென்ற வியாபாரிகள் DIN DIN Thursday, March 19, 2020 03:48 AM +0530  

திருப்பத்தூா் அருகே கரோனா எதிரொலியாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லா் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் வீசிச் சென்றனா்.

கரோனா பாதிப்பால் பிராய்லா் கோழி எனும் கறிக்கோழி விற்பனை தமிழகத்தில் கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், புதன்கிழமை திருப்பத்தூரை அடுத்த உடையாமுத்தூா் கிராமத்தில் உள்ள ஏரி, கீழ்குப்பம் ஏரியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வியாபாரிகள் வாகனத்தில் ஏற்றி வந்து உயிருடன் வீசிச் சென்றனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் கோழிகளை எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் உடையாமுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் கே.ஸ்ரீபிரியா கூறுகையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் உடையாமுத்தூா் ஏரி, கீழ்குப்பம் ஏரியில் உயிருடன் கோழிகளை வேனில் கொண்டுவந்து கொட்டிச் சென்றனா். இதுகுறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோழிகளை வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/18marchkoli_1803chn_192_1.jpg கோழிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/19/corona-merchants-who-threw-chickens-into-the-lake-3384481.html