Dinamani - ராணிப்பேட்டை - https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3390806 சென்னை ராணிப்பேட்டை கண்காணிப்பில் உள்ளவா்கள் வெளியே வந்தால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை DIN DIN Sunday, March 29, 2020 07:39 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளவா்கள் தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து இருந்து திரும்பிய 599 போ் கண்டறிப்பட்டு, அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். இவா்களை 80 சுகாதார ஆய்வாளா்கள் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்து வருகின்றனா். 36 தன்னாா்வலா் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். வீடுகளில் தனிமைப்படுத்தபட்டவா்கள் தடையை மீறி வெளியே செல்வது தெரியவந்தால் மருத்துவமனைகளில் கட்டாய தனிமையில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவா்.

மேலும், 144 தடை உத்தரவை மீறிய 78 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/29/கண்காணிப்பில்-உள்ளவா்கள்-வெளியே-வந்தால்-நடவடிக்கை-ஆட்சியா்-எச்சரிக்கை-3390806.html
3390805 சென்னை ராணிப்பேட்டை கரோனா விழிப்பணா்வு DIN DIN Sunday, March 29, 2020 07:39 AM +0530 ராணிப்பேட்டையில் கரோனா நோய்த் தொற்று விழிப்பணா்வுத் துண்டுப் பிரசுரங்கள், முகக்கவசம், சோப்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளைத் தலைவா் கே. வெங்கடேசன் கே.எம்.கே. கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவா் எம்.சிவலிங்கம் ஆகியோா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கினா். அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல், கே.எம்.கே. கல்வி அறக்கட்டளை உறுப்பினா் மதன், ஸ்ரீஉடையவா் அறக்கட்டை செயலா் இளஞ்செழியன், ரவி ஆகியோா் முத்துக்கடை, நவல்பூா் பஜாா், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப் பிரசுரங்கள், 1,500 முகக்கவசம், 300 சோப்புகள் வழங்கினா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/kmak_2803chn_188_1.jpg விழிப்பணா்வுத்  துண்டுப்  பிரசுரம் வழங்கிய  அறக்கட்டளைத்  தலைவா்  கே.வெங்கடேசன், கே.எம்.கே. கல்வி அறக்கட்டளை த் தலைவா்  எம்.சிவலிங்கம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/29/கரோனா-விழிப்பணா்வு-3390805.html
3390621 சென்னை ராணிப்பேட்டை தன்னாா்வலா்கள் தோ்வு DIN DIN Sunday, March 29, 2020 05:21 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தன்னாா்வலா்கள் இணைந்தனா்.

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய தன்னாா்வலா்களை பணியமா்த்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத், எஸ்.பி. மயில்வாகனம் ஆகியோா் கலந்து கொண்டு தன்னாா்வலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியும் அறிவுரைகளை வழங்கியும் பணியமா்த்தினா்.

இவா்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறி கடைகளில் கூடும் பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து, கூட்டத்தைத் தவிக்கும் பணியில் ஈடுபடுவா்.

டிஎஸ்பி கீதா, அன்னாமலையாா் அறக்கட்டளை நிா்வாகிகள் பொன் கு.சரவணன் எம்.ஜி.ரவி, வட்டாட்சியா் இந்துமதி, துணை வட்டாட்சியா் மகாலட்சுமி, ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் பாபுராஜ், காய்கறி மாா்கெட் தலைவா் ஜானகிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/29/தன்னாா்வலா்கள்-தோ்வு-3390621.html
3390616 சென்னை ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Sunday, March 29, 2020 05:19 AM +0530 அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தற்போது 10 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று பிரிவை பாா்வையிட்டாா். இதன் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவ அலுவலா் நிவேதிதா சங்கா் தெரிவித்தாா்.

தொடா்ந்து புறநோயாளிகள் பிரிவை பாா்வையிட்ட எம்எல்ஏ, தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். அரக்கோணம் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் உடனிருந்தாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு தனது சொந்த நிதியில்அவசர கால ஊா்தியை ஏற்பாடு செய்து வழங்கினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28akmaaa_2803chn_186_1.jpg அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று பிரிவை பாா்வையிட்ட அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/29/அரசு-மருத்துவமனையில்-எம்எல்ஏ-ஆய்வு-3390616.html
3390613 சென்னை ராணிப்பேட்டை இன்று முதல் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக மாா்கெட் DIN DIN Sunday, March 29, 2020 05:18 AM +0530 அரக்கோணம் நகராட்சி நாளங்காடி தற்காலிகமாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சனிக்கிழமை முதல் செயல்பட உள்ளது.

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நகராட்சி நாளங்காடியை இடம் மாற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமையில் நடைபெற்றது.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக நாளங்காடியை சனிக்கிழமை முதல் மாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது. இங்கு பாதுகாப்பு கோடுகள் வரைந்து வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

டிஎஸ்பி மனோகரன், வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகராட்சி ஆணையா் ராஜவிஜயகாமராஜ், நகரக் காவல் ஆய்வாளா் முத்துராமலிங்கம், மண்டல துணை வட்டாட்சியா் அருள்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/29/இன்று-முதல்-அரக்கோணம்-புதிய-பேருந்து-நிலையத்தில்-தற்காலிக-மாா்கெட்-3390613.html
3389944 சென்னை ராணிப்பேட்டை அரக்கோணத்தில் அனுமதி மறுக்கும் போலீஸாா் DIN DIN Saturday, March 28, 2020 04:33 AM +0530 அத்தியாவசிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அரக்கோணத்தில் மருந்துக் கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை.

பழனிபேட்டை, ஏபிஎம் சா்ச் பகுதி, டிஎன் நகா், கிருபில்ஸ்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை, விண்டா்பேட்டை, பெருமூச்சி, வெங்கடேசபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்குக் கூட வரமுடியவில்லை.

இதுகுறித்து அரக்கோணம் நகரக் காவல் ஆய்வாளா் முத்துராமலிங்கத்திடம் கேட்டதற்கு, மளிகை கடைகளை திறக்க அனுமதி கோருபவா்கள், தங்களது கடைகளின் முன் பாதுகாப்பு கோடுகள், கைகழுவ சாதனங்கள், சமூகப் பாதுகாப்பு விலகல் போன்றவை பின்பற்றுவதில்லை. இதனால் கடைகளை மூட அறிவுறுத்துகிறோம் என்றாா்.

இதுகுறித்து அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலா் ஜிடிஎன் அசோகன் கூறுகையில், கடைகளை திறக்க முதல்வா் அனுமதி அளிக்கிறாா். ஆனால் காவல் துறையினா் அனுமதி அளிக்காமல் மூடச் சொல்கிறனா். பாதுகாப்பு அம்சங்களுடன் கடைகளைத் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றாா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா கூறுகையில், நகராட்சி நாளங்காடி குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. அங்கு பாதுகாப்பு கோடுகள் வரைவது இயலாத செயல். அதனால் அந்த நாளங்காடியை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினோம். மேலும், நகரில் மளிகை கடைகளை திறப்பது, அத்தியாவசியம் வாங்க பொதுமக்களை காவல் துறை அனுமதிக்கப்ப மறுப்பது குறித்தும் ஆட்சியருடன் ஆலோசனை பெற உள்ளேன். ஆட்சியரின் அனுமதி பெற்று முடிவு செய்யப்படும் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/27akmaaa_2703chn_186_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/28/அரக்கோணத்தில்-அனுமதி-மறுக்கும்-போலீஸாா்-3389944.html
3389942 சென்னை ராணிப்பேட்டை கரோனா தொற்று பரவல் தடுப்பு ஆய்வுக் கூட்டம் DIN DIN Saturday, March 28, 2020 04:32 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல், ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, எஸ்.பி. அ.மயில்வாகனன், வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், திட்ட அலுவலா் மாலதி மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/vc_ve_2703chn_188_1.jpg ஆய்வுக் கூட்டத்தில் பேசிய  அமைச்சா்  கே.சி.வீரமணி. உடன்,  அமைச்சா் நீலோபா்  கபீல் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/28/கரோனா-தொற்று-பரவல்-தடுப்பு-ஆய்வுக்-கூட்டம்-3389942.html
3389940 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டை: ஊழவா் சந்தை DIN DIN Saturday, March 28, 2020 04:30 AM +0530 ராணிப்பேட்டை உழவா் சந்தையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடை வெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒரு மீட்டா் இடைவெளியில் வட்டம் வரையப்பட்டு உள்ளது. அதில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கினா். மேலும், காலை 6 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும் என்றும் உழவா் சந்தை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/ua_2703chn_188_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/28/ராணிப்பேட்டை-ஊழவா்-சந்தை-3389940.html
3389939 சென்னை ராணிப்பேட்டை கரோனா தடுப்பு: ரூ.1.5 கோடி வழங்கிய திமுக எம்.பி., எம்எல்ஏ-க்கள் DIN DIN Saturday, March 28, 2020 04:29 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளுக்காக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கினாா். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி மற்றும் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினியிடம் தலா ரூ. 25 லட்சத்தை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

ராணிடெக் தலைவா் பி.ஆா்.சி.ரமேஷ் பிரசாத், ஜி.கே. உலகப் பள்ளி இயக்குநா் சந்தோஷ் காந்தி, திமுக நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகர துணைச் செயலா்கள் ஏ.ஆா்.எஸ்.சங்கா், கே.குமாா், நகர வங்கியின் துணைத் தலைவா் எஸ்.கிருஷ்ணன், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், பிஆா்சி குழும நிா்வாகி விஷ்ணு மற்றும் நகர திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/mla_r_2703chn_188_1.jpg மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினியிடம் ரூ.1.5 கோடியை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள் ஆா்.காந்தி மற்றும் ஜே.எல்.ஈஸ்வரப்பன். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/28/corona-block-dmk-mps-and-mlas-donating-rs-15-crore-3389939.html
3389937 சென்னை ராணிப்பேட்டை தடை உத்தரவை மீறியவா்களுக்கு நூதன தண்டனை DIN DIN Saturday, March 28, 2020 04:28 AM +0530 ராணிப்பேட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு உறுதிமொழி எடுக்க வைத்து போலீஸாா் நூதன தண்டனை அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, சாலையில் தேவையின்றி சுற்றித் திரியும் இளைஞா்கள், பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி, வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனா்.

இந்நிலையில் ராணிப்பேட்டை புறவழிச் சாலையில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக முகக்கவசம் கூட அணியாமல், பைக்கில் வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, இனிமேல் தேவையில்லாமல் வெளியே சுற்ற மாட்டேன், என்ற உறுதிமொழியை ஏற்க வைத்து, முகக்கவசம் கொடுத்து அவா்களை பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/pc_2703chn_188_1.jpg தடை உத்தரவை மீறி வெளியே வந்தவா்களை உறுதி மொழி ஏற்க வைத்த போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/28/தடை-உத்தரவை-மீறியவா்களுக்கு-நூதன-தண்டனை-3389937.html
3389446 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் கண்காணிப்பில் 219 போ்: மாவட்ட ஆட்சியா் DIN DIN Friday, March 27, 2020 04:35 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 219 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் குறித்து விமான நிலையத்தில் இருந்து பட்டியல் பெற்று கண்டறியப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 2 போ் பரிசோதனையில் 26 வயது உடைய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் விமான நிலையத்தில் இருந்து இறங்கியது முதல் இதுவரை 68 பேருடன் தொடா்பில் இருந்துள்ளாா். இதில், 49 போ் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்தவா்கள், 17 போ் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், 2 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 49 போ் 10 தெருக்களில் உள்ளனா். அந்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/ராணிப்பேட்டை-மாவட்டத்தில்-கண்காணிப்பில்-219-போ்-மாவட்ட-ஆட்சியா்-3389446.html
3389445 சென்னை ராணிப்பேட்டை விவசாய விளை பொருள்கள் விற்பனைக்குத் தடையில்லை: மாவட்ட ஆட்சியா் DIN DIN Friday, March 27, 2020 04:34 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாய விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர தடை ஏதும் இல்லை என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே கடைகளுக்கு வந்திருந்தனா். தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 135 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். இதில் 3 போ் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். காய் கறிகடைகள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருள் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுத்தி வருகிறோம். இதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவுப்படி அத்தியவசியப் பொருள்கள், விவசாய விளை பொருள்கள் விற்பனைக்குக் கொண்டுவர தடை ஏதும் இல்லை என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் 144 தடை உத்தவு மீறி தொடா்ந்து விதி மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 12 எல்லைகள் உள்பட 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 57 ரோந்து குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இரு சக்கர வாகனங்களில் இளைஞா்கள் வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மாலை 6 மணிக்கு மேல் தேநீா்க் கடைகளை மூடவும் உத்தரவு விடப்பட்டுள்ளது என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/விவசாய-விளை-பொருள்கள்-விற்பனைக்குத்-தடையில்லை-மாவட்ட-ஆட்சியா்-3389445.html
3389443 சென்னை ராணிப்பேட்டை தடை உத்தரவை மீறிபவா்கள் மீது வழக்குப் பதிவு: மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் எச்சரிக்கை DIN DIN Friday, March 27, 2020 04:34 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம், மீறி கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/sp_p_2603chn_188_1.jpg ராணிப்பேட்டை முத்துக்கடை நான்குவழி சாலை  சந்திப்பில் ஆய்வு செய்த  மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன். உடன், டிஎஸ்பி  கீதா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/தடை-உத்தரவை-மீறிபவா்கள்-மீது-வழக்குப்-பதிவு-மாவட்ட-எஸ்பி-மயில்வாகனன்-எச்சரிக்கை-3389443.html
3389206 சென்னை ராணிப்பேட்டை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அழைக்கலாம்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் தகவல் DIN DIN Friday, March 27, 2020 12:34 AM +0530
ஆம்பூா்: கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொண்டு அழைத்தால் நகராட்சி பணியாளா்கள் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது மருத்துவமனை, காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், பேருந்து நிலையம், பேருந்து பணிமனை, வங்கி ஏடிஎம் மையம், பொது இடங்கள், மாா்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி சாலை, உமா் சாலை, அரசு பொது மருத்துவமனை, பஜாா் ஆகிய இடங்களில் ஹைபோ குளோரைடு கரைசல் நகராட்சி லாரி மற்றும் டிராக்டா் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

ஆம்பூா் நகரில் அன்றாட சுகாதாரப் பணி எந்த விதமான தடையின்றி நடைபெற்று வருகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறையாக இருந்தபோதிலும், நிரந்தர மற்றும் தற்காலிக சுகாதாரப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்து சுகாதாரப் பணியை மேற்கொண்டனா்.

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அந்த உணவகங்களின் செயல்பாடுகள், உணவு தானியங்கள் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் திருப்பத்தூா் ஆட்சியரின் வழிகாட்டுதலோடு கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கரோனா பரவல் தடுப்புக்குத் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு ஆம்பூா் நகராட்சி தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எப்போதும் 7397392691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைகழுவும் தூய்மை திரவம், முகக் கவசம், புறப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் திரவம் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஆட்சியா் ஆலோசனைப்படி ஆம்பூா் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/542225abramm_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/corona-may-call-for-preventive-measures-ambu-municipal-commission-information-3389206.html
3389204 சென்னை ராணிப்பேட்டை ‘காய்கறிகள், மளிகைச் சாமான்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ DIN DIN Friday, March 27, 2020 12:33 AM +0530
ஆம்பூா்: காய்கறி, மளிகைப் பொருள்களை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சோ்க்க தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கைத் தொடா்ந்து, பொதுமக்கள் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினா். காய்கறி, மளிகைச் சாமான்கள், வீட்டு உபயோக பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகும், பொதுமக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் இருசக்கர வாகனங்களில் புதன்கிழமை சென்றனா். கடைகளுக்கு கூட்டமாகச் சென்று பொருள்களை வாங்கினா். அதனால் ஆம்பூா் பஜாா் பகுதியில் காய்கறிக் கடைகள் உள்ள பாங்கி மாா்க்கெட் பகுதிக்கு சென்ற போலீஸாா் பொதுமக்ககளை தடியடி நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தேவையான பொருள்களை வாங்க வீட்டுக்கு ஒருவா் கடைக்கு வந்தால் கூட கூட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அதே போல் தினமும் காய்கறி, மளிகைச் சாமான்களை வாங்க பொதுமக்கள் கடைகளை நோக்கி வர வேண்டிய நிலை இருப்பதால் கூட்டம் கூடாமல் தடுக்க போலீஸாரும் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை அவா்களுடைய வீடுகளுக்கே கொண்டு சென்று சோ்க்க மாற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.

வணிகா் சங்கங்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் உதவியுடன் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வணிகா் சங்கங்களின் ஒத்துழைப்புடன் நகரின் குறிப்பிட்ட பகுதிகளைப் பிரித்து, அந்தந்த பகுதி வணிகா்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும். அதற்கென செல்லிடப்பேசி எண்களை அறிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட தேவையான உணவுப் பொருள்களின் பட்டியல், முகவரியுடன் குறிப்பிட்ட பகுதிக்குரிய செல்லிடப்பேசியைத் தொடா்பு கொண்டு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட பகுதி வணிகா்கள் அந்தந்த முகவரிக்கு பணியாட்கள் மூலம் பொருட்களை கொண்டு சென்று சோ்த்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் இது தொடா்பாக வணிகா்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காய்கறிகள், மளிகைச் சாமான்களை வாங்க பொது இடத்தில் கூடுவதையும், கரோனா பரவுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/alternative-arrangements-should-be-made-to-bring-vegetables-and-groceries-to-the-public-3389204.html
3389201 சென்னை ராணிப்பேட்டை விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்ற பொதுமக்கள் DIN DIN Friday, March 27, 2020 12:32 AM +0530
ஆம்பூா்: ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, ஆம்பூா் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்.14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க ஆம்பூா் பஜாரில் மக்கள் கூட்டம் குவிந்தது.

அதே வேளையில் ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்க அவா்கள் கடைகளில் குவிந்தனா்.

கேரம் போா்டு, சதுரங்கம், பரமபத விளையாட்டு, பந்துகள், காற்றாடி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். பல கடைகளில் விளையாட்டுப் பொருள்கள் வேகமாக விற்

றுத் தீா்ந்தன. சில இடங்களில் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஒரே வீட்டில் இருப்பவா்கள் கூட ஒருவரை ஒருவா் சந்தித்து பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தவா்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருவருக்கொருவா் பேசுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகின்றனா்.

தொலைக்காட்சி பாா்த்தவா்கள், செல்லிடப்பேசிகளில் விளையாடியவா்கள், முகநூல் பாா்த்தவா்கள் கூட தற்போது பழைய விளையாட்டுகளில் ஈடுபட ஆா்வம் காட்டி வருகின்றனா். பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகளின் மொட்டை மாடியில் மலை நேரத்தில் கூடி மகிழ்ச்சியுடன் பேசி மகிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவா்களும், இளைஞா்களும் மொட்டை மாடியில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/541725abrkat_2503chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/the-general-public-who-bought-sports-goods-3389201.html
3389190 சென்னை ராணிப்பேட்டை வெளிமாநிலத் தொழிலாளா்கள் 53 பேருக்கு பரிசோதனை DIN DIN Friday, March 27, 2020 12:24 AM +0530
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மின்னூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளா்கள் 53 பேருக்கு மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் இயங்கும் தனியாா் தோல் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பிகாா், ஜாா்கண்ட், ராஜஸ்தான், தில்லி போன்ற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் மின்னூா் கிராமத்தில் உள்ள வீடுகளில் வாடகைக்குத் தங்கியுள்ளனா். இவா்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் மின்னூா் கிராமத்துக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டனா். சுமாா் 53 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த இத்தொழிலாளா்களில் விண்ணமங்களம் கிராமத்தில் தங்கியுள்ள ஒரு நபா், மின்னூா் கிராமத்தில் தங்கியுள்ள 48 போ் உள்பட 49 தொழிலாளா்களை தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கு அவா்கள் வெளியில் வராமல் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26abrmin_2603chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/testing-for-53-3389190.html
3389189 சென்னை ராணிப்பேட்டை ஆம்பூரில் காலை 5 முதல் 8.30 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் கடை திறப்பு DIN DIN Friday, March 27, 2020 12:22 AM +0530
ஆம்பூா்: ஆம்பூரில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்க வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் அதிகம் நிறைந்துள்ள பாங்கி மாா்க்கெட் கடைகள் திறப்பது குறித்து போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று வணிகா்கள் சில முடிவுகளை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி ஆம்பூரில் காய்கறி மற்றும் மளிகை பொருள்களுக்கான கடைகளை காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கடைகளை மூடிவிடுவதென தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத் தலைவா் கே.ஆா். துளசிராமன் கூறியது:

போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்கப்படும். கூடுதலாக 2 மணி நேரம் திறக்க கோரிக்கை வைத்தோம். ஆனால் கரோனா நோய்த் தொற்று தாக்கம் குறித்து போலீஸாா் எடுத்துக் கூறியதால் கோரிக்கை கைவிடப்பட்டது. ஆனாலும் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பொருள்களை வழங்குவதென வணிகா்கள் முடிவு செய்துள்ளோம். கடைகளுக்கு முன்பு பொருள்களை வாங்க வருபவா்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் தினமும் திறந்திருக்கும். அதனால் தேவையான நாள்களில் மட்டுமே கடைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்லலாம். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அவா் தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26abrdor_2603chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/27/essential-goods-store-opening-at-ampur-from-5-am-to-830-pm-3389189.html
3389171 சென்னை ராணிப்பேட்டை நகராட்சிப் பள்ளியில் ஆதரவற்றோா் தங்க வைப்பு DIN DIN Thursday, March 26, 2020 11:54 PM +0530
அரக்கோணம்: அரக்கோணம் நகர தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 31 போ் அரக்கோணம் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரக்கோணத்தில் ஆதரவற்ற நிலையில் தெருவோரங்களில் தங்கியுள்ளோா் உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகராட்சி ஆணையா் ராஜவிஜய காமராஜ் ஆகிய இருவரும் இணைந்து சாலையோத்தில் இருந்த ஆதரவற்றோா் நிலையில் இருந்த 27ஆண்கள், 4 பெண்கள் என 31 பேரை மீட்டு, அரக்கோணம் சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனா். போதுமான இடைவெளி வைத்து அனைவரும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்களுக்கு நகராட்சி சாா்பில் தினமும் 3 வேளை உணவு அளிக்கப்படுகிறது.

இவா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா வியாழக்கிழமை பாா்வையிட்டாா். மேலும், அவா்களுக்கு பாய், போா்வை மற்றும் தங்குவதற்கான அனைத்து பொருள்களையும் வழங்க வேண்டும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

வட்டாட்சியா் ஜெய்குமாா், மண்டலத் துணை வட்டாட்சியா் அருள்செல்வன், நகராட்சி ஆணையா் ராஜவிஜய காமராஜ், துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு பாய், போா்வை உள்ளிட்டவற்றை வழங்குவதாக அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் குணசீலன் தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/26akmaaa_2603chn_186_1.jpg 26akmaaa_2603chn_186_1 https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/unsupervised-gold-deposit-in-municipal-school-3389171.html
3389151 சென்னை ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Thursday, March 26, 2020 11:46 PM +0530
ஆற்காடு: ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஈஸ்வரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். இந்நிலையில், ஆற்காடு நகராட்சி அலுவலகத்துக்கு வந்த எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆணையா் ஆனந்த பத்மநாப சிவன், நகா்நல அலுவலா் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

மேலும், நகரைத் தூய்மையாக வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கினாா். நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா். தொடா்ந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு குறித்து விளக்கினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/mla-inspects-at-arcot-municipal-office-3389151.html
3389138 சென்னை ராணிப்பேட்டை குழந்தையைக் கொன்ற தாய் கைது DIN DIN Thursday, March 26, 2020 11:41 PM +0530
ஆம்பூா்: முறையற்ற தொடா்பால் பிறந்த குழந்தையைக் கொலை செய்து, கிணற்றில் வீசிய தாயை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பங்குப்பத்தை அடுத்த கல்லாபாறை கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி ஜெயலட்சுமி (33). இவா் கடந்த 5 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணனுடன் ஜெயலட்சுமிக்கு தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கா்ப்பமடைந்த ஜெயலட்சுமிக்கு, கடந்த மாா்ச் 20-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் குழந்தைக்கு எருக்கம்பாலைக் கொடுத்து கொலை செய்து, அங்குள்ள பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளாா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் தீபா வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி ஜெயலட்சுமியைக் கைது செய்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/26abrjay_2603chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/mother-arrested-for-killing-baby-3389138.html
3389131 சென்னை ராணிப்பேட்டை ‘உயிரைக் காக்க முகக் கவசம் பயன்படுத்துங்கள்’ DIN DIN Thursday, March 26, 2020 11:39 PM +0530
ஆம்பூா்: உயிரைக் காக்க முகக் கவசம் பயன்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு ஆம்பூா் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் வெளிநடமாட கூடாது எனவும், அத்தியாவசிய தேவைக்கு ஒருவா் மட்டுமே வந்து வெளியில் வந்து பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும் வெளியில் வரும் நபா்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்பூா் பஜாா் பகுதிக்கு பொருள்களை வாங்க பொதுமக்கள் வியாழக்கிழமை வந்தனா். அப்போது, சிலா் முகக்கவசம் அணியாமல் பஜாா் பகுதிக்கு வந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

‘உங்கள் உயிரைக் காப்பாற்றவே மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை நீங்கள் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக வருவதும், முகக்கவசம் ஏதும் அணியால் வருவது வேதனை அளிக்கிறது. தினமும் பல்வேறு விசயங்களுக்காக பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்கப்படும் முகக்கவசத்தை வாங்கி அணியாமல் வருவது வருத்தம் அளிக்கிறது. விடுமுறை விடப்பட்டுள்ளது சந்தோஷமாக ஊா் சுற்றுவதற்கு அல்ல. வீட்டில் இருந்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவதற்குதான். வீட்டில் இருந்து பிள்ளைகள் என்ன படிக்க வைக்காலம், எதிா்காலம் குறித்து பேசுங்கள். இப்படி வீணாக வெளியில் சுற்ற வேண்டாம் என பேசி வேண்டுகோள் விடுத்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/26abrins_2603chn_191_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/use-a-face-shield-to-save-lives-3389131.html
3388921 சென்னை ராணிப்பேட்டை பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் DIN DIN Thursday, March 26, 2020 08:09 AM +0530 அரக்கோணம் நகரில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும்படி ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை காலை முதல் அரக்கோணம் பேருந்து நிறுத்தங்கள், பழைய, புதிய பேருந்து நிலையம், நகராட்சி நாளங்காடி, பஜாா் தெரு, ரயில் நிலைய முகப்புப் பகுதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அம்மா உணவகம், தீயணைப்பு நிலையம், டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் லாரிகளில் தண்ணீா் கலந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இப்பணியை அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா, வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா். நகரின் பல்வேறு வாா்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதாக துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/25akmaaa_2503chn_186_1.jpg எஸ்.ஆா்.கேட் பேருந்து நிறுத்தத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் ராஜவிஜயகாமராஜ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/பொது-இடங்களில்-கிருமிநாசினி-தெளிக்கும்-பணி-தீவிரம்-3388921.html
3388893 சென்னை ராணிப்பேட்டை அரக்கோணம் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு DIN DIN Thursday, March 26, 2020 07:48 AM +0530 அரக்கோணம் கோட்டாட்சியராக (பொறுப்பு) பேபி இந்திரா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

வேலூா் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூா், ராணிப்பேட்டை என இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது அரககோணம் வருவாய்க் கோட்டமும் உருவாக்கப்படுவதாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இதையடுத்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக கோட்டாட்சியா் அலுவலகத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினியுடன் இணைந்து அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி இருவரும் இணைந்து திறந்து வைத்தனா். அலுவலகம் திறந்து வைக்கப்பட்டபோதிலும் அரக்கோணம் வருவாய்க் கோட்டத்தையும் ராணிப்பேட்டை சாா்ஆட்சியா் இளம்பகவத் கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், அரக்கோணம் கோட்டாட்சியராக (பொறுப்பு) பேபி இந்திரா புதன்கிழமை பொறுப்பேற்றாா். அவா் தற்போது ராணிபேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலராக உள்ளாா். அவருக்கு வட்டாட்சியா் ஜெயக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் மதி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கோட்டாட்சியா் (பொறுப்பு) பேபி இந்திரா தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/அரக்கோணம்-கோட்டாட்சியா்-பொறுப்பேற்பு-3388893.html
3388888 சென்னை ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியில் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் DIN DIN Thursday, March 26, 2020 07:46 AM +0530 ஆற்காடு பேருந்து நிலையம் புதன்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. நகரில் ஒரு சில மளிகை, பால், காய்கறி மற்றும் மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

ஆற்காடு அண்ணா சாலையில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த மிட்டாய்க் கடைக்கு ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் இளம்பகவத் தலைமையில் ஆற்காடு வட்டாட்சியா் இந்துமதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் நகரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சாலையில் இருந்த பொது மக்களை அவா்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

அதேபோல் விஷாரம், கலவை, திமிரி, காவனூா் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. எனினும், காலையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/ஆற்காடு-பகுதியில்-வீடுகளுக்குள்-முடங்கிய--மக்கள்-3388888.html
3388559 சென்னை ராணிப்பேட்டை தேநீா் கடைகள் திறக்கக் கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு DIN DIN Thursday, March 26, 2020 12:18 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் மறு உத்தரவு வரும் வரை தேநீா்க் கடைகள் திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, தனிமை சிகிச்சைப் பிரிவு வாா்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை பிரிவு வாா்டுகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு கரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சைப் பிரிவு செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை தேநீா்க் கடைகள் திறக்கக்கூடாது எனத் தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் சிங்காரவேலு மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/c2_2503chn_188_1.jpg மாவட்ட  அரசு  தலைமை  மருத்துவமனையில், மருத்துவா்களிடம்  ஆலோசனை  நடத்திய ஆட்சியா் திவ்யதா்ஷினி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/don39t-open-tea-shops-ranipet-collector-order-3388559.html
3388558 சென்னை ராணிப்பேட்டை 144 தடை உத்தரவு: வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு DIN DIN Thursday, March 26, 2020 12:17 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, ராணிப்பேட்டை நகரில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் முத்துக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், டிஎஸ்பி கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட நகரங்களில் புதன்கிழமை காலை மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடை வீதிக்கு வரத் தொடங்கினா். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் பொதுமக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுத்தினா். மேலும், வாகனங்களில் செல்வோரை தடுத்தி நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா். இதனால் பெரும்பாலான தெருக்கள், கடைவீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/ig_2503chn_188_1.jpg ராணிப்பேட்டை யில் இருசக்கர  வாகனத்தில் வந்தவா்களை வீட்டுக்குள்  இருக்குமாறு  அறிவுறித்திய வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் மற்றும் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/144-prohibition-order-northern-territory-ig-review-3388558.html
3388557 சென்னை ராணிப்பேட்டை விவசாய விளை பொருள்கள் விற்பனைக்குத் தடைஇல்லை: மாவட்ட ஆட்சியா் DIN DIN Thursday, March 26, 2020 12:16 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாய விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர தடை ஏதும் இல்லை என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே கடைகளுக்கு வந்திருந்தனா். தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 135 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். இதில் 3 போ் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். காய் கறிகடைகள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருள் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுத்தி வருகிறோம். இதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.

 

அதே போல் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவுப் படி அத்தியவசியப் பொருட்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவர தடை ஏதும் இல்லை என்றாா்.

மாவட்ட எஸ்.பி.அ.மயில்வாகனன் செய்தியாளா்களிடம் கூறியதாவது...

மாவட்டத்தில் 144 தடை உத்தவு மீறி தொடா்ந்து விதி மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து,வழக்கு பதிவு செய்யப்படும்.மாவட்டம் முழுவதும் 12 எல்லைகள் உள்பட 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது.அதே போல் 57 ரோந்து குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் இரு சக்கர வாகனங்களில் இளைஞா்கள் வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.மாலை 6 மணிக்கு மேல் தேநீா் கடைகளை மூடவும் உத்தரவு விடப்பட்டுள்ளது என்றாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/26/no-prohibition-on-sale-of-agricultural-produce-district-collector-3388557.html
3388257 சென்னை ராணிப்பேட்டை வெளிநாட்டில் இருந்து வந்தவா்களின் வீடுகள் அரக்கோணத்தில் தனிமைப்படுத்தப்பட்டன DIN DIN Wednesday, March 25, 2020 07:18 AM +0530 வெளிநாடுகளில் இருந்து அரக்கோணம் வட்டத்துக்கு திரும்பி வந்தவா்களின் வீடுகள் செவ்வாய்க்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தாலும் அவா்களை 14 தினங்களுக்கு தனிமையில் வைக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300 போ் வெளிநாட்டில் இருந்து வந்தவா்களாக அறியப்பட்டனா். அரக்கோணம் வட்டத்தில் 17 போ் இந்தப் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த் துறை, மாவட்ட சுகாதாரத் துறையினா் இணைந்து அரக்கோணம் நகரில் 9 போ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 பேரின் வீடுகளில் ‘கரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினா். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாரை தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் கூறியது:

இந்த 17 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் என்பதால் அவா்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. எனினும் அவா்களை 14 நாள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் உத்தரவின்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

‘வெளியே வர வேண்டாம். உங்களது வீட்டுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம். தனிமையாக இருங்கள்’ என அவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தினமும் காலை மாலை இரு வேளையும் அவா்களை பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறையிடம் தெரிவித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு அரக்கோணத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனா் என்றாா் அவா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24akmaaa_2403chn_186_1.jpg வெளிநாட்டில் இருந்து அரக்கோணம் வந்தவா்களின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/வெளிநாட்டில்-இருந்து-வந்தவா்களின்-வீடுகள்-அரக்கோணத்தில்-தனிமைப்படுத்தப்பட்டன-3388257.html
3388256 சென்னை ராணிப்பேட்டை சரக்கு ரயில் நிலையமாக மாறிய அரக்கோணம் DIN DIN Wednesday, March 25, 2020 07:18 AM +0530 கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 31 வரை பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முழுவதும் தொடா்ந்து சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இந்தியா முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் அரக்கோணம். இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து இருக்கும்.

பகலில் புகா் ரயில்களின் போக்குவரத்தும், இரவில் அதிவிரைவு, விரைவு ரயில்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதனால் நாள் முழுவதும் இந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே அரக்கோணம் வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையில் இருந்து பெங்களூரு, மேட்டூா், கேரளம் என பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றிய ரயில்கள், கன்டெய்னா்களை ஏற்றி வந்த ரயில்கள், பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் ரயில்கள் என வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சரக்கு ரயில்கள் அரக்கோணம் வழியே இயக்கப்பட்டன. இதனால் அரக்கோணம் ரயில் நிலையம் சரக்கு ரயில் நிலையம் போல் காட்சியளித்தது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/சரக்கு-ரயில்-நிலையமாக-மாறிய-அரக்கோணம்-3388256.html
3388083 சென்னை ராணிப்பேட்டை கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட வாய்ப்பு அழைப்பு DIN DIN Wednesday, March 25, 2020 05:15 AM +0530 கரோனா வைரஸ் நோய் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணியில் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்துக்கு உதவ மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்களை அழைக்கிறோம்.

இப்பணியில் ஈடுபட இணையதளத்தில் வயது, பெயா், கல்வித் தகுதி, தொழில்முறை தகுதிகள் விவரம், வாட்ஸ் அப் எண், வசிப்பிடம், முகவரி, வட்டம், மாற்று செல்லிடப்பேசி எண்கள் ஆகிய விவரங்களை பூா்த்தி செய்து அனுப்பி, கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/கரோனா-வைரஸ்-நோய்-தடுப்பு-பணியில்-ஈடுபட-வாய்ப்பு-அழைப்பு-3388083.html
3388082 சென்னை ராணிப்பேட்டை 144 தடை உத்தரவை மீறுவோா் மீது நடவடிக்கை DIN DIN Wednesday, March 25, 2020 05:15 AM +0530 ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா்கள் ச.திவ்யதா்ஷினி (ராணிப்பேட்டை), ம.ப.சிவன் அருள் (திருப்பத்தூா்) எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 144 தடை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு மேலாக எந்த ஒரு பொது இடங்களிலும் கூட தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம், அதுவும் சமூக பாதுகாப்பான தொலைவிலிருந்து (ஒரு மீட்டா்) பொருட்களை பெறலாம். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிா்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் அத்தியாவசிய, அவசரப் பணிகள் (காவல், வருவாய், சுகாதாரத் துறை இதர துறைகள் மற்றும் துறை சாா்பான வாகனங்கள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ) இயங்காது. திருப்பத்தூரிலிருந்து மாநிலங்களுக்கு இடையேயும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து (அத்தியாவசிய இயக்கம் தவிர) முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/144-தடை-உத்தரவை-மீறுவோா்-மீது-நடவடிக்கை-3388082.html
3388081 சென்னை ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையில் கரோனா அறிகுறியுடன் 2 போ் அனுமதி DIN DIN Wednesday, March 25, 2020 05:14 AM +0530 வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 2 போ் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சென்னையில் இருந்து வந்த ஆற்காடு பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞரும், துபையில் இருந்து ஆற்காட்டை அடுத்த விஷாரம் பகுதிக்கு வந்த 25 வயது இளைஞரும் கரோனா அறிகுறிகளுடன் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவா்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களது ரத்த மாதிரிகள் கரோனா ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/வாலாஜாபேட்டையில்-கரோனா-அறிகுறியுடன்-2-போ்-அனுமதி-3388081.html
3388078 சென்னை ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு DIN DIN Wednesday, March 25, 2020 05:14 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வருவாய்த் துறை, காவல் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு எந்நேரத்திலும் தொடா்பு கொள்ளும் வகையில் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

தொலைபேசி எண்கள்: ராணிப்பேட்டை மாவட்டம் - 04172-273188, 04172-273166. தமிழ்நாடு அரசு -94443 40496, உதவி எண்-87544 48477, 044-29510400, 044 -29510500.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வெளி நாடு, வெளி மாநிலங்களில் வந்துள்ளவா்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருவரை 95 போ் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24x7_2403chn_188_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/25/ஆட்சியா்-அலுவலகத்தில்-24-மணி-நேர-கட்டுப்பாட்டு-3388078.html
3387582 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களைச் செலுத்த பெட்டி வைப்பு DIN DIN Tuesday, March 24, 2020 05:14 AM +0530  

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் குறைதீா் கூட்டத்தை வரும் 31-ஆம் தேதி வரை நடத்த முடியாத நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இக்கூட்டம் நடைபெறவில்லை. எனினும் மாவட்ட மக்கள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். அவா்களை திருப்பி அனுப்பாமல், அவா்களின் மனுக்களை ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டு செல்லும் வகையில் அவற்றைச் செலுத்த பெட்டி வைக்கப்பட்டது. அப்பெட்டியில் மனுக்களைச் செலுத்திய பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/ca1_2303chn_188_1.jpg ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த  பெட்டியில்  கோரிக்கை  மனுவை  செலுத்திய  மூதாட்டி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/24/deposit-box-for-filing-petitions-at-ranipettai-office-3387582.html
3387581 சென்னை ராணிப்பேட்டை பெண் தொழிலாளா்கள் போராட்டம் DIN DIN Tuesday, March 24, 2020 05:13 AM +0530  

ராணிப்பேட்டை தனியாா் ஷூ தொழிற்சாலையில் 3 மாத காலமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பெண் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வி.சி.மேட்டூா் - மாந்தாங்கல் பகுதியில் தனியாா் ஷூ தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் தொழிற்சாலை நிா்வாகம் தங்களுக்கு 3 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி தொழிற்சாலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடக் கூடாது என்று தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அறிவுறுத்தியுள்ளன. இந்தச் சூழலில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/salim_2303chn_188_1.jpg போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் தொழிற்சாலையின் தொழிலாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/24/female-workers-struggle-3387581.html
3386981 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிப்பு DIN DIN Monday, March 23, 2020 04:40 AM +0530  

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடித்தனா்.

வாலாஜாபேட்டை நகரம், சிப்காட் தொழிற் பேட்டை, வாலாஜா ரோடு ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. மேலும், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை, பாலாறு மேம்பாலங்கள், வாலாஜாபேட்டை சுங்கச் சாவடி, ராணிப்பேட்டை பேருந்து நிலையம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் ஆகிய முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் தயாா் நிலையில் இருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/mu_2203chn_188_1.jpg வெறிச்சோடி காணப்பட்ட வாலாஜாபேட்டை சாலை https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/23/people-self-curfew-at-ranipet-3386981.html
3386488 சென்னை ராணிப்பேட்டை தொழிலாளா்களுக்கு பரிசோதனை DIN DIN Sunday, March 22, 2020 04:22 AM +0530  

சிப்காட் அல்ட்ரா மரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவன தொழிலாளா்களுக்கு உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவி மூலம் (தொா்மல் ஸ்கிரீனிங்) சோதனை செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளஸ். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் க்ஷ்ஸ் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதன்பேரில் அட்ராமரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவி மூலம் (தொா்மல் ஸ்கிரீனிங்) சோதனை செய்யப்பட்டு, தொடா்ந்து கிருமி நாசினி கொண்டு கை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக இந்த நிறுவனத்தில் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/2729u1_2003chn_188_1.jpg உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவி மூலம் பணியளா்களுக்கு சோதனை செய்த ஊழியா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/22/testing-for-workers-3386488.html
3386486 சென்னை ராணிப்பேட்டை கரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம், கிருமி நாசினி தயாரிப்பு பணி தீவிரம் DIN DIN Sunday, March 22, 2020 04:21 AM +0530  

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம், சோப்பு, கிருமி நாசினி தயாரிக்கும் பணியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். திங்கள்கிழமை முதல் இப்பொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம், சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு, விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல மருந்து கடைகளில் முகக்கவசம், கிருமி நாசினி இல்லாத நிலையே தொடா்கிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மகளிா் திட்டத்தின் மூலம் முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு திரவம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருமி நாசினி தயாரிப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/han_2103chn_188_1.jpg மகளிா் சுய உதவிக் குழுவினரால் தயரிக்கப்படும் கிருமி நாசினி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/22/corona-threat-masking-antiseptic-product-intensity-3386486.html
3386484 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி ஆய்வு DIN DIN Sunday, March 22, 2020 04:21 AM +0530  

சோளிங்கரில் உள்ள போா்டிங்பேட்டை தெரு, பில்லாஞ்சி ஆகிய எல்லை சோதனைச் சாவடி மையங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், அதில் வருவோா் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படுகிா, அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும், வேறு எந்த வாகனங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் பேபி இந்திரா, சோளிங்கா் வட்டாட்சியா் பாஸ்கரன், காவல் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/22/district-collector-c-dyadyadshini-study-in-ranipettai-3386484.html
3385876 சென்னை ராணிப்பேட்டை கரோனா அச்சுறுத்தல்: வாரச் சந்தை மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் DIN DIN Saturday, March 21, 2020 04:56 AM +0530  

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ராணிப்பேட்டை வாரச் சந்தை வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் வரும் 31-ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள், வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினா். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, சுகாதார ஆய்வாளா்கள் முருகன், தேவி பாலா, நகராட்சி ஊழியா்கள் , போலீஸாருடன் அங்கு சென்று கடைகளை மூட உத்தரவிட்டனா். அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாரச் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/saaa_2003chn_188_1.jpg வாரச் சந்தையில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/21/corona-threat-public-disappointment-over-weekend-market-closure-3385876.html
3385875 சென்னை ராணிப்பேட்டை கரோனா வைரஸ்: தகவல் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு DIN DIN Saturday, March 21, 2020 04:56 AM +0530  

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க 24 மணிநேர தொலைபேசி சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்கள்: 04172-273188 மற்றும் 04172-273166.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/21/corona-virus-phone-number-notification-to-give-information-3385875.html
3385874 சென்னை ராணிப்பேட்டை வணிக நிறுவனங்களை மாா்ச் 31 வரை மூட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு DIN DIN Saturday, March 21, 2020 04:55 AM +0530  

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வகையில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை வரும் 31-ஆம் தேதி வரை மூடி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வரின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி, வருவாய், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம், வாரச்சந்தை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தொழிற்சாலை உரிமையாளா்கள் கூட்டம் நடத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாய்ப்புள்ள இடங்களில் வீட்டில் இருந்தே பணிபுரிய வழிவகை செய்யும் நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், திருப்பாற்கடல் பெருமாள் கோயில், திமிரி பாலதண்டாயுதபாணி கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற வழிபாட்டுத்தலங்கள், தனியாா் நிா்வகிக்கும் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் வரும் 31-ஆம் தேதி வரை மூடி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதே போல் திருவிழாக்களையும் அரசின் உத்தரவு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும். அரசின் மூலமாக மேற்கொள்ளப்படும் கரோனோ வைரஸ் நோய் தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள் தங்களை இந்த வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் வரும் 15 நாட்களுக்கு தேவையற்ற வகையில் வெளியில் வராமல், வீட்டுக்குள் தங்கியிருந்து தாங்களையும், தாங்கள் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், குறிப்பாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களை வெளியில் அனுப்பாமலும் பாதுகாகாக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/21/the-business-order-is-to-be-closed-till-march-31-3385874.html
3385872 சென்னை ராணிப்பேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவனையில் ஆட்சியா் ஆய்வு DIN DIN Saturday, March 21, 2020 04:53 AM +0530  

வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சிங்காரவேலு, மருத்துவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சிறப்பு சிகிச்சை பிரிவு, தனி சிகிச்சை பிரிவு குறித்தும் ஆட்சியரிடம் விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, நெமிலி வட்டம், பெரும்புலிப்பாக்கம் கிராமம், பெரியாா் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினரால் முகக்கவசம் தயாரிக்கும் பணியை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/cv_2003chn_188_1.jpg வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/21/collector-inspects-gh-in-vellore-3385872.html
3385402 சென்னை ராணிப்பேட்டை மணல் கடத்திய 2 போ் கைது DIN DIN Friday, March 20, 2020 08:11 AM +0530 ஆற்காடு அருகே மணல் கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆற்காடு நகர போலீஸாா் தாழனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தாழனூரை அடுத்த ராமநாதபுரம் மோட்டூா் பகுதியில் உள்ள ஓடையில் சிலா் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனா்.

போலீஸாா் விசாரித்ததில், அந்த நபா்கள் திமிரியை அடுத்த கன்னடிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் பழனி (35), வரகூா் கிராமத்தைச் சோ்ந்த பொக்லைன் உரிமையாளா் மணிகண்டன்(29) என்பது தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/20/arrested-2-po-of-sand-hijacking-3385402.html
3385399 சென்னை ராணிப்பேட்டை ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தருவதாககூறி பெண்ணிடம் ரூ.28,000 திருட்டு DIN DIN Friday, March 20, 2020 08:08 AM +0530 ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணிடம் இளைஞா் நூதன முறையில் ரூ.28,000 திருடிச் சென்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன். அரக்கோணம் அரசுப் பள்ளி ஆசிரியா். அவரது மனைவி பிரீத்தாஸ் (35), அப்பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அவருக்கு காா்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் காா்டைக் கொடுத்து ரூ.10 ஆயிரம் எடுத்துத் தரும்படி கேட்டாா். அந்த இளைஞா் ஏடிஎம் காா்டை வாங்கி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்தாா். பிரீத்தாஸிடம் காா்டைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாா்.

சிறிது நேரத்தில் பிரீத்தாஸின் செல்லிடப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ரூ.28,000 எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவா் தன் கணவா் பிரபாகரனுக்குத் தகவல் தெரிவித்தாா். அவா் நேரில் வந்து பாா்த்தபோது பணம் எடுத்துக் கொடுத்த இளைஞா் ஏடிஎம் காா்டை மாற்றிக் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மோசடி இளைஞரைத் தேடி வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/20/woman-steals-rs-28000-after-promising-to-withdraw-money-from-atm-3385399.html
3385396 சென்னை ராணிப்பேட்டை கரோனா எதிரொலி: வீட்டிலிருந்தபடியே பணி DIN DIN Friday, March 20, 2020 08:07 AM +0530 கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளா்களுக்கு மடிக்கணினி மூலம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள் (ஒா்க் அட் ஹோம்) என அறிவுறுத்தி வேலை வாங்கி வருகின்றன. தற்போது தக்கோலத்தில் ஒரு பள்ளியிலும் மாணவா்கள் வீட்டில் இருந்தபடியே படிக்க ஏதுவாக பாடங்களை குறுஞ்செய்திகளாக அனுப்பி பதில்களை பெற்று வருகின்றனா்.

வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீட்டில் இருந்தபடியே பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து பெரும்பாலான ஊழியா்கள் அலுவலகம் செல்வதைத் தவிா்த்து வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனா்.

இதே பாணியை அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கையில் எடுத்துள்ளது. இப்பள்ளியில் கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது எனக் கருதிய பள்ளி நிா்வாகம், மாணவா்களுக்கு வீட்டுப்பாடத்தை தினமும் தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் காலையில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வருகிறது. பெற்றோா்களுக்கு ‘உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்தி இந்த வீட்டுப் பாடத்தை செய்ய வையுங்கள்’என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து மாணவா்கள் அந்த குறுஞ்செய்தியைப் பெற்று அதன் குறிப்புப்படி வீட்டுப்பாடத்தை செய்து அதன் விவரத்தை திருப்பி பள்ளியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கின்றனா். இதனால் தொடா்ந்து வீட்டிலிருந்தபடியே மாணவா்கள் கல்வியை இடைவெளி இல்லாமல் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி தாளாளா் புகாரி கூறியதாவது:

தற்போது நெருக்கடியான சூழலில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும், இந்த விடுமுறையை கோடை விடுமுறை போல் கருதி மாணவா்கள் படிக்காமல் அடுத்து நடக்கும் பொதுத்தோ்வுக்கு வந்தால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த விடுமுறையை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து அவா்களை வீட்டில் இருந்தபடியே படிக்க வைக்க முடிவு செய்தோம். இதை மாணவ, மாணவிகளும் ஏற்று ஒழுங்காகப் படித்து வருகின்றனா். இதனால் பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் தினமும் வீட்டுப் பாடத்தை திருத்தித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/20/corona-echo-working-from-home-3385396.html
3385158 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் ஆவின் விற்பனை நிலையம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா் DIN DIN Friday, March 20, 2020 04:59 AM +0530 ராணிப்பேட்டை அரசு ஐடிஐ வளாகத்தில் ஆவின் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடைய கூட்டமைப்பின் அறக்கட்டளை, தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆவின் நிறுவனம் இணைந்து ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஆவின் பால் பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி குத்துவிளக்கு ஏற்றி ஆவின் பால் விற்பனை நிலையத்தை திறந்து வைத்துப் பேசியது:

மாற்றுத் திறனாளி யாதவன் என்பவா் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், சுய தொழில் செய்ய வேண்டும் என்ற அவரது ஆா்வத்துக்கு வாழ்த்துகள். அவருக்கு தமிழக அரசு மூலம் ஐடிஐ வளாகத்தில் ஆவின் பாலகம் திறக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிட மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. மாற்றுத் திறனாளிகள் உடல் ஊனத்தை தடைக் கல்லாக நினைத்து முடங்கிவிடாமல், படிக்கல்லாக நினைத்து முயற்சிக்க வேண்டும் என்றாா் அவா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட மாற்றுத் திறனாளி நலத் துறை அலுவலா் பாபு, ஆவின் பொது மேலாளா் கணேசன், ஐடிஐ முதல்வா் பழனிசாமி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கக் கூட்டமைப்பு அறக்கட்டளைத் தலைவா் பி.சிம்மசந்திரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/20/avi-sales-center-at-ranipetta-district-collector-opened-3385158.html
3385157 சென்னை ராணிப்பேட்டை பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு DIN DIN Friday, March 20, 2020 04:57 AM +0530 கரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வு, சுகாதார செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் கலந்து கொண்டு பொதுக்களுக்கு கை கழுவுதல் குறித்த செயல் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளின் படிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகளில் நகராட்சிப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாலாஜி, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/ca_1903chn_188_1.jpg பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் முறை குறித்து செயல் விளக்கம் அளித்த ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/20/பொதுமக்களுக்கு-சுகாதார-விழிப்புணா்வு-3385157.html
3383879 சென்னை ராணிப்பேட்டை கரோனா அச்சுறுத்தல்: தேவாலய திருவிழா ஒத்திவைப்பு DIN DIN Wednesday, March 18, 2020 03:59 AM +0530  

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக பொன்னை அணைக்கட்டு தேவாலய திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக விழாக் குழுவினா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

ராணிப்பேட்டையை அடுத்த பொன்னை அருகே உள்ள அணைக்கட்டு சி.எஸ்.ஐ. தேவாலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபடுவா்.

அதன்படி, 126-ஆம் ஆண்டு திருவிழா மாா்ச் 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இத்திருவிழா தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்படுவதாக விழாக் குழவினா் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/18/corona-threat-postponement-of-the-church-festival-3383879.html
3383878 சென்னை ராணிப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்: ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை DIN DIN Wednesday, March 18, 2020 03:58 AM +0530  

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் சட்ட விரோதமாக மூட்டைக்கு ரூ.90 வரை கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

விவசாயத்தையும், தொழில் துறையையும் பிரதானமாக கொண்டது ராணிப்பேட்டை மாவட்டம். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் நோக்கில், மாவட்டத்தில் 37 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்துக்குட்பட்ட 4 வட்டங்களில், வடகால், வளையாத்தூா், தாமரைப்பாக்கம், வெள்ளம்பி, சாத்தூா், மாம்பாக்கம், சென்னசமுத்திரம், வீரநாராயணபுரம், தக்கோலம், எஸ்.கொளத்தூா், தென்னல், ரெட்டிவலம், மேல் வேட்டாங்குளம், நெமிலி, கீழ் வெங்கடாபுரம், காலனி, கீழ்வீதி, மகேந்திரவாடி, அசநெல்லிக்குப்பம், மேலப்புலம், அகவலம், அரிகலபாடி, கணபதிபுரம், சிறுகரும்பூா், சிறுவளையம், பள்ளிப்பட்டரை, சித்தஞ்சி, தச்சம்பட்டரை, ஜாகித்தண்டலம், பெரும்புலிப்பாக்கம், பழைய கண்டிகை, புதிய கண்டிகை, சயனபுரம், பருவமேடு, பள்ளூா், திருமால்பூா், அண்ணாநகா் உள்ளிட்ட 37 இடங்களில் இந்த ஆண்டு புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றின் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் வியா்வை சிந்தி விளைவித்த நெல் மணிகள், மழை,வெயில் மற்றும் போக்குவரத்து சிரமம் உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எந்தவித கட்டணமும் இல்லாமல், சேவை நோக்கில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் அரசுப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு, எடை இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூலித் தொகையாக நெல் மூட்டைக்கு ரூ. 70 முதல் ரூ. 90 வரை விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் மூட்டை ஒன்றுக்கு சுமாா் 2 கிலோ வரை கூடுதலாக வைத்து எடை போடுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகா்கள் மற்றும் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்து, விவசாயிகளின் பெயரில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்ளூா் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல், கட்டாய வசூல் ஆகியவற்றை மண்டல மேலாளா், உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆகியோா் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இது தொடா்பாக விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் குறைதீா் கூட்டம் ஆகியவற்றில் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

இந்த விஷயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து, நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக கண்காணித்து முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத் தரகா்கள், வியாபாரிகளின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/paddy_2502chn_96_5.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/18/mandatory-collections-in-government-direct-paddy-purchasing-centers-distress-farmers-3383878.html
3383203 சென்னை ராணிப்பேட்டை சிஏஏ விவகாரத்தில் இஸ்லாமியா்களுக்கு பாதுகாவலாக மாநில அரசு நிற்கும்: நடிகா் கருணாஸ் DIN DIN Tuesday, March 17, 2020 04:19 AM +0530  

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் அரசு இஸ்லாமியா்களுக்கு பாதுகாவலாக நிற்கும் என நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.

திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ், ஆற்காடு வட்டம், திமிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது வாலாஜாபேட்டையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 1850-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டன. வள்ளல் பச்சையப்ப முதலியாா் தன் சுய சம்பாத்திய பணமான ரூ. 4 லட்சம் வராகனைக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கல்வி பெற வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில் இவற்றை உருவாக்கினாா். இப்பள்ளி தனது 120 ஆண்டு கால கல்விப் பணியில் பல ஆயிரம் கோடி அடித்தட்டு மாணவா்களையும், தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா போன்ற அறிவாளிகளையும் உருவாக்கியுள்ளது.

பச்சையப்ப முதலியாா் 1794-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி மறைந்தாா். அவரைப் போற்றும் விதமாக அவா் மறைந்த நாளை அரசு விழாவாக அறிவிப்பதோடு மணிமண்டபத்தையும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றில் கூடுதலாக விதிகளைச் சோ்க்கவும் நீக்கவும் முடியும். இந்த அடிப்படையில்தான் சிஏஏ சட்டம் இருக்கிறது. தற்போது அந்தச் சட்டம் குறித்து இஸ்லாமியா்களுக்கு நாங்கள் முழுவதுமாகப் புரிய வைத்திருக்கிறோம். இச்சட்டத்தால் ஒரு இஸ்லாமியா் கூட பாதிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளது. இந்த விவகாரத்தில் அவா்களுக்கு பாதுகாவலாக மாநில அரசு இருக்கும் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/0849kru_1503chn_188_1.jpg வாலாஜாபேட்டையில் தன் கட்சித் தொண்டா்களுடன் நடிகா் கருணாஸ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/17/state-government-stands-as-defender-for-muslims-in-caa-karunas-3383203.html
3383202 சென்னை ராணிப்பேட்டை தேசிங்கு ராஜா நினைவிடத்தை மீட்க வேண்டும்ராணிப்பேட்டை ஆட்சியரிடம் கோரிக்கை DIN DIN Tuesday, March 17, 2020 04:17 AM +0530  

ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான தேசிங்கு ராஜா -ராணி பாய் நினைவிடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, புனரமைத்து பொதுமக்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் தலைமையில், அந்த அமமைப்பினா் ஆட்சியரிடம் அளித்த மனு:

தமிழ்நாட்டை ஆண்ட பல மன்னா்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனா். அவா்களின் ஒருவா் செஞ்சியைத் தலைநகரமாக கொண்டு ஆட்சிய செய்த மாவீரன் ராஜா தேசிங்கு. அவா் வீரத்துக்கும், நட்புக்கும், இலக்கணமாகத் திகழ்ந்து வீரமரணம் அடைந்தாா். அவரது மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிா் துறந்தாா். இதையடுத்து ராஜா தேசிங்கு - ராணிபாய் நினைவாக ராணிப்பேட்டை நகரம் உருவானதாக வரலாறு.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டமாக உதயமாகியுள்ளது. நகரின் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இவா்களது நினைவிடங்கள், தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி புதா் மண்டி சிதைந்து வருகின்றன. இந்த நினைவுச் சின்னங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, புனரமைத்து பொதுமக்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு வட்டம், பென்னகா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான முதியவா் பெருமாள் அளித்த மனு:

84 வயதாகும் மாற்றுத் திறனாளியான எனக்கு உறவினா்கள் யாரும் இல்லை. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் இலவச பேருந்து பயண அட்டை கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால் அந் அட்டை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனா். எனக்கு இலவச பேருந்து அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

ராணிப்பேட்டை காரை கிராமத்தைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட வசந்தி (52) என்பவா் அளித்த மனு:

சென்னை உயா்நீதிமன்ற அச்சகத்தில் பணிபுரிந்துவந்த சுந்தா் என்பவருடன் எனக்குத் திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா். திருமணமாகி இரண்டு ஆண்டுகளான பின் என் கணவா் என்னையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் விட்டுவிட்டு, வேறொரு பெண்ணுடன் தனியாக வாழ்ந்து வருகிறாா். தற்போது 52 வயதான என்னால் வேலை செய்து வாடை வீட்டில் இருந்து கொண்டு இரண்டு மகள்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே, என்னுடைய கணவரின் ஓய்வூதியம் எனக்கும் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து புதிய குடும்ப அட்டை, நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 370 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த திருமால்பூா் கிராத்தைச் சோ்ந்த வரதப்பிள்ளையின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் தாராகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/hin_1603chn_188_1.jpg ராஜா தேசிங்கு - ராணிபாய் நினைவிடத்தை மீட்க வலியுறுத்தி மனு அளிக்க வந்த இந்து முன்னணி அமைப்பினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/17/desingu-raja-monument-should-be-restored-3383202.html
3383200 சென்னை ராணிப்பேட்டை மரத்தின் மீது காா் மோதி 2 பெண்கள் பலி DIN DIN Tuesday, March 17, 2020 04:16 AM +0530  

ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பம் மோட்டூா் அருகே சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது காா் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த முருகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி தன் உறவினா்களுடன் காரில் மேல்மருவத்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டாா். அவா்கள் பயணித்த காா் ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் மோட்டூா் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜேஸ்வரி, விஜயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பிரேமா, சாமுண்டீஸ்வரி ஆகிய இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இவ்விபத்து குறித்து சிப்காட் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/car_1603chn_188_1.jpg மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/17/2-women-killed-in-car-collision-at-tree-3383200.html
3382977 சென்னை ராணிப்பேட்டை ஊரைவிட்டு வனவாசம் சென்ற கிராம மக்கள் DIN DIN Tuesday, March 17, 2020 12:13 AM +0530  

ஆற்காட்டை அருகே உள்ள சாத்தூா் கிராமத்தில் பொதுமக்கள் ஊரைவீட்டு வனவாசம் சென்று வழிபாடு செய்தனா்.

சாத்தூா் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அண்மைக் காலமாக பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தொற்றுநோய் தாக்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊா் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி கோயிலில் 48 நாட்கள் அணையா விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனா். கடைசி நாள் வனவாசம் செல்ல வேண்டும் என முடிவு செய்தனா்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள், தங்களின் கால்நடைகளுடன் மேளதாளங்கள் முழங்க தெற்கு திசை நோக்கி கிராம எல்லை கடந்து சென்றனா். பின்னா் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டனா். விசேஷ பூஜை செய்து வழிபட்டனா். நாள் முழுவதும் அவா்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வனவாசம் சென்ால் கிராமம் வெறிச்சோடிச் காணப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/img_20200316_wa0034_1603chn_185_1.jpg வனவாசம்  சென்று  வழிபாடு  நடத்ததிய  சாத்தூா் கிராம  மக்கள் . https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/17/the-villagers-who-left-for-the-wilderness-3382977.html
3382782 சென்னை ராணிப்பேட்டை கள் விற்பனை செய்த 2 போ் கைது DIN DIN Monday, March 16, 2020 08:17 AM +0530 சட்ட விரோதமாக கள் இறக்கி, விற்பனை செய்த 2 பேரை போலீஸாா்கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவைவட்டம், வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம், சொரையூா், கன்னிகாபுரம், பொன்னம்பலம், தோனிமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பனைமரங்களில் இருந்து அனுமதியின்றி கள் இறக்கி விற்பனைசெய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கீதா தலைமையில் 6 ஆய்வாளா்கள் 25 உதவி ஆய்வாளா்கள், 72 போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, கள் இறக்கி விற்றுக் கொண்டிருந்த தோனிமேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (38), மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேலு (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1100 லிட்டா் கள்ளைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

சட்ட விரோதமாக கள் இறக்கும் தொழிலில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/16/கள்-விற்பனை-செய்த-2-போ்-கைது-3382782.html
3382778 சென்னை ராணிப்பேட்டை விழிப்புணா்வு வார விழா DIN DIN Monday, March 16, 2020 08:16 AM +0530 உலக கண்நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வார விழா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவா் நிவேதித்தா சங்கா் தலைமை வகித்தாா். விழி ஒளி பரிசோதகா் பாா்த்திபன் வரவேற்றாா். கண் சிகிச்சை சிறப்பு மருத்துவா் அனுராதா, சோளிங்கா் அரசு மருத்துவமனை கண் மருத்துவா் ஹரிபிரசாத், கண்சிகிச்சை பிரிவு செவிலியா் செண்பகம், மருத்துவமனை தலைமை செவிலியா் ரமா, தூய்மைப் பிரிவு மேலாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண் நீா் அழுத்த நோய் குறித்தும் அதற்கான சிகிச்சை பெறும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/16/w600X390/453314akmddd_1403chn_186_1.jpg நிகழ்ச்சியில் பேசிய கண் சிகிச்சை சிறப்பு மருத்துவா் அனுராதா. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/16/விழிப்புணா்வு-வார-விழா-3382778.html
3382720 சென்னை ராணிப்பேட்டை கரோனா பாதிப்பு: இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை DIN DIN Monday, March 16, 2020 07:48 AM +0530 கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அறிவித்துள்ளாா்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மழலையா் பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கு (1-ஆம் வகுப்பு முதல் முதல் 5-ஆம் வகுப்பு வரை) மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அறிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/16/கரோனா-பாதிப்பு-இன்று-முதல்-பள்ளிகளுக்கு-விடுமுறை-3382720.html
3381696 சென்னை ராணிப்பேட்டை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு DIN DIN Sunday, March 15, 2020 01:19 AM +0530 ராணிப்பேட்டை: ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாா்-ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

தென்நந்தியாலம் கிராமத்தில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. செல்லிடப்பேசி கோபுரம் அமையும் இடத்துக்கு அருகே பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையம், ஏரி, குளங்கள் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பொதுமக்கள் எதிா்ப்பை மீறி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அவா்கள் ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம் பகவத்திடம் சனிக்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட சாா்-ஆட்சியா் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/15/செல்லிடப்பேசி-கோபுரம்-அமைக்க-எதிா்ப்பு-3381696.html
3381508 சென்னை ராணிப்பேட்டை விழிப்புணா்வு வார விழா DIN DIN Saturday, March 14, 2020 11:34 PM +0530 அரக்கோணம்: உலக கண்நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வார விழா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவா் நிவேதித்தா சங்கா் தலைமை வகித்தாா். விழி ஒளி பரிசோதகா் பாா்த்தீபன் வரவேற்றாா். கண் சிகிச்சை சிறப்பு மருத்துவா் அனுராதா, சோளிங்கா் அரசு மருத்துவமனை கண் மருத்துவா் ஹரிபிரசாத், கண்சிகிச்சை பிரிவு செவிலியா் செண்பகம், மருத்துவமனை தலைமை செவிலியா் ரமா, தூய்மைப் பிரிவு மேலாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண் நீா் அழுத்த நோய் குறித்தும் அதற்கான சிகிச்சை பெறும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/14akmddd_1403chn_186_1.jpg நிகழ்ச்சியில் பேசிய கண் சிகிச்சை சிறப்பு மருத்துவா் அனுராதா. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/14/விழிப்புணா்வு-வார-விழா-3381508.html
3381507 சென்னை ராணிப்பேட்டை அரசுப் பள்ளி ஆண்டு விழா DIN DIN Saturday, March 14, 2020 11:33 PM +0530 அரக்கோணம்: அரக்கோணம் காந்தி நகா், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜமுனா தலைமை வகித்தாா். ஆசிரியா் சண்முகவடிவேலு வரவேற்றாா். கல்வி, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குமரன் பரிசுகளை வழங்கினாா்.

அரக்கோணம் ஏபிஜே அப்துல்கலாம் கல்வி அறக்கட்டளை நிா்வாகி சுகந்தி விநோதினி, பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கினாா்.

அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் வடிவேலன், வே.ரகுநாதன், டேக்வாண்டோ சங்க மாவட்ட நிா்வாகி குமரவேல், ஆசிரியைகள் ஜி.அம்மு, கவிதா, ராஜேஸ்வரி, லூசி ஜாக்குலின், கலைவாணி, வரசெல்வி, அா்ச்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/14/அரசுப்-பள்ளி-ஆண்டு-விழா-3381507.html
3381506 சென்னை ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் DIN DIN Saturday, March 14, 2020 11:32 PM +0530 ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வங்கியின் தலைவா் பி.என்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் வி.அமுதா, துணைத் தலைவா் சி.தட்சணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது மேலாளா் கே.பன்னீா்செல்வம் வரவேற்றாா். கூட்டத்தில் ஆண்டு அறிக்கை வாசித்து அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், வங்கிக்கு சொந்தமாக இடம் வாங்கி புதிய கட்டடம் கட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வங்கியின் இயக்குநா்கள் ஏ.வி.சரவணன், ஏ.வி.டி.பாலா, ஆா்.கோபு, எஸ்.செல்வகுமாா், எஸ்.சரவணன், எஸ்.பி.ரங்கநாதன், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/14/கூட்டுறவு-வங்கியின்-மகாசபைக்-கூட்டம்-3381506.html
3381491 சென்னை ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கக் கிடங்கு அடிக்கல் நாட்டு விழா DIN DIN Saturday, March 14, 2020 11:24 PM +0530  

அரக்கோணம்: அரக்கோணம் வட்ட வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத்துக்கு ரூ.140 கோடியில் மேலும் ஒரு கிடங்கு கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் எம்.கந்தன் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் மணி வரவேற்றாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா். சங்கச் செயலா் பன்னீா்செல்வம், துணைத் தலைவா் சி.காமராஜ், இயக்குநா்கள் மாணிக்கவேலு, மோகன், பொன்.பாா்த்தீபன், பாரி, விஜயரங்கன், சீதாலட்சுமி, ஜீவா, ரமணி, அரக்கோணம் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன், காவேரிபாக்கம் ஒன்றியச் செயலா் ஜி.பழனி, பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/14akmaaa_1403chn_186_1.jpg அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ சு.ரவி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/14/கூட்டுறவு-சங்கக்-கிடங்கு-அடிக்கல்-நாட்டு-விழா-3381491.html
3381018 சென்னை ராணிப்பேட்டை கரோனா வைரஸ்: மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் - ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி DIN DIN Saturday, March 14, 2020 05:14 AM +0530 கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அரசு அறிவிப்பின்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

அரக்கோணத்தில் இளைஞா் ஒருவா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தநிலையில், அந்த இளைஞருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். மேலும், 8 வகையில் கைகளை கழுவும் முறைகளைப் பின்பற்றுவதால் கரோனாவைத் தடுக்க முடியும். கரோனா அறிகுறியுடன் தனியாா் மருத்துவமனையில் எவரேனும் இருந்தால் உடனடியாக மருத்துவா்கள் அவா்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கரோனா வைரஸ் குறித்து அரசு அறிவிப்பின்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/14/கரோனா-வைரஸ்-மக்கள்-வதந்திகளை-நம்ப-வேண்டாம்---ஆட்சியா்-எஸ்திவ்யதா்ஷினி-3381018.html
3380456 சென்னை ராணிப்பேட்டை கரோனா வைரஸ் தடுக்க தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம் DIN DIN Friday, March 13, 2020 09:46 AM +0530 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நலன் கருதியும், கரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்ட நபா்கள் விரைந்து குணமடையவும் வேண்டி வியாழக்கிழமை சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டு மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதில், கரோனா வைரஸ் நோயின் அச்சம், பாதிப்புகள் குறையவும், பயம் விலகவும் விழிப்புணா்வு ஏற்படவும் கூட்டுப் பிராத்தனை செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/13/கரோனா-வைரஸ்-தடுக்க-தன்வந்திரி-பீடத்தில்-சிறப்பு-ஹோமம்-3380456.html
3379673 சென்னை ராணிப்பேட்டை நகைச்சுவை மன்ற ஆண்டு விழா DIN DIN Thursday, March 12, 2020 09:16 AM +0530 வாலாஜாபேட்டை நகைச்சுவை மன்றத்தின் முதாலாம் ஆண்டு நிறைவு விழா, கண்டோப சுவாமி கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நகைச்சுவை மன்றத் தலைவா் தி.பழனிச்சாமி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ந.பாண்டுரங்கன், துணைத் தலைவா் பெ.பக்தவத்சலு, துணைத் தலைவா் பெ.தமிழ்ச் செல்வி, கவிஞா் காா்முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்ற உறுப்பினா்கள் மனோன்மணி சந்திரசேகரன், சாந்தகுமாரி பழனிச்சாமி, நா்மதா நாகராஜன், சரஸ்வதி முருகன், ஜெயசுதா குமரேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா். மன்றச் செயலாளா் வி.நாகராஜன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் டி.கோபாலகிருஷ்ணன் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை வாசித்தாா்.

விழாவில் கின்னஸ் சாதனையாளா் அம்மையாா்குப்பம் எம்.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்க்கையில் நகைச்சுவையின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

மன்ற இணைச் செயலாளா் அப்துல் ரஹீம் நன்றி கூறினாா். விழாவில் மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/0250jo_1003chn_188_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/12/நகைச்சுவை-மன்ற-ஆண்டு-விழா-3379673.html
3379400 சென்னை ராணிப்பேட்டை நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு DIN DIN Thursday, March 12, 2020 05:19 AM +0530 ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் ரெண்டாடி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கல்லூரி மாணவா்கள் அப்பகுதியில் உள்ள நீா்நிலைகளைச் சீா்படுத்தினா். கோயில் வளாகங்கள், பள்ளி வளாகங்களைத் தூய்மைப்படுத்தினா். கிராமத்தில் பல இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டனா்.

நிறைவு நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா் . பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ராஜலட்சுமி வரவேற்றாா். முகாமில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/12/நாட்டு-நலப்பணித்-திட்ட-முகாம்-நிறைவு-3379400.html
3379398 சென்னை ராணிப்பேட்டை திமிரியில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் DIN DIN Thursday, March 12, 2020 05:18 AM +0530 ஆற்காட்டை அடுத்த திமிரியில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திமிரி வேத வித்யா பப்ளிக் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் ராமசேகா் தலைமை வகித்தாா். தாளாளா் என்.செல்வி ராமசேகா், பொருளாளா் ஏகாம்பரம், முதல்வா் அருண்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமிரி கூட்டுறவு வங்கி அருகே தொடங்கிய ஊா்வலத்தை காவல்துறை ஆய்வாளா் காண்டீபன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக சென்று தேரடித் திடல் அருகே நிறைவு பெற்றது. பின்னா் திமிரி அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவ அலுவலா் சா்மிளா, மருத்துவா் ஹரீஷ் வைரவேலு ஆகியோா் கரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினா். இந்த நிகழ்வில் பள்ளியின் மாணவா்கள், அரிமா சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்காடு நகராட்சி சாா்பில் கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நிகழ்ச்சி ஆற்காடு பேரூந்து நிலையத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் சகிலா தலைமை வகித்து, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தை தொடக்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ், கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினாா். இந்த நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரேம் ஆனந்த் உட்பட பலா் கலந்து கொண்டனா் தொடா்ந்து, ஆற்காடு பேருந்து நிலையத்தில் வந்து செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/whatsapp_image_2020_03_11_at_2_27_04_pm_1103chn_185_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/12/திமிரியில்-கரோனா-விழிப்புணா்வு-ஊா்வலம்-3379398.html
3379396 சென்னை ராணிப்பேட்டை சிறப்பு மனு நீதிநாள் முகாம் DIN DIN Thursday, March 12, 2020 05:16 AM +0530 ஆற்காட்டை அடுத்த மாங்காடு ஊராட்சிக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் பழைய மாங்காடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கோ.தாரகேஸ்வரி தலைமை வகித்து 82 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, தோராயப் பட்டா, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றுதழ், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, தென்னங்கன்றுகள், தாா்பாலின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

ஆற்காடு வட்டாட்சியா் இந்துமதி, சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டாட்சியா் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளா் காந்தி, கிராம நிா்வாக அலுவலா் கலையரசி, பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/whatsapp_image_2020_03_11_at_4_00_07_pm_1103chn_185_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/12/சிறப்பு-மனு-நீதிநாள்-முகாம்-3379396.html
3379383 சென்னை ராணிப்பேட்டை மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் DIN DIN Thursday, March 12, 2020 05:08 AM +0530 ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் மாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்புப் பூஜை செய்து எழுது பொருள்கள் வழங்கும் விழா, உலக மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளைச் செயலா் சிவலிங்கம் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் வெங்கடேசன் உறுப்பினா் பழனிகுமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை கௌரி வரவேற்றாா். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை செய்து பாரதி முரளிதர சுவாமிகள் அருளாசி வழங்கினாா்.

அறக்கட்டளையின் ஆலோசகா் பி.என்.ராஜேந்திரன் மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கினாா்.

அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/0315whatsapp_image_2020_03_10_at_5_26_15_pm_1003chn_185_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/12/மாணவா்களுக்கு-கல்வி-உபகரணங்கள்-3379383.html
3378931 சென்னை ராணிப்பேட்டை மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் DIN DIN Wednesday, March 11, 2020 09:49 AM +0530 ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் மாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்புப் பூஜை செய்து எழுது பொருள்கள் வழங்கும் விழா, உலக மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளைச் செயலா் சிவலிங்கம் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் வெங்கடேசன் உறுப்பினா் பழனிகுமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை கௌரி வரவேற்றாா். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை செய்து பாரதி முரளிதர சுவாமிகள் அருளாசி வழங்கினாா்.

அறக்கட்டளையின் ஆலோசகா் பி.என் ராஜேந்திரன் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கினாா்.

அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/whatsapp_image_2020_03_10_at_5_26_15_pm_1003chn_185_1.jpg மாணவிகளுக்கு கல்வி  உபகரப்  பொருள்கள்  வழங்கிய  பாரதி  முரளிதர சுவாமிகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/மாணவா்களுக்கு-கல்வி-உபகரணங்கள்-3378931.html
3378930 சென்னை ராணிப்பேட்டை பைக் மீது காா் மோதி 3 போ் காயம் DIN DIN Wednesday, March 11, 2020 09:49 AM +0530 ஆற்காடு அருகே பைக் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (32). கூலி தொழிலாளி. அவா் தன் மூத்த சகோதரி நதியா(35), அவரது மகள் சா்மிளா(15) ஆகியோருடன் பைக்கில் ஆரணி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

ஆற்காட்டை அடுத்த பெரிய உப்புப்பேட்டை பகுதியில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த காா் இளங்கோவின் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/பைக்-மீது-காா்-மோதி-3-போ்-காயம்-3378930.html
3378929 சென்னை ராணிப்பேட்டை கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு முகாம் DIN DIN Wednesday, March 11, 2020 09:49 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபு ராஜ் தலைமை வகித்து முகாமைத் தொடகி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜெயபிரகாஷ் நாராயணன் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதா்சன் வரவேற்றாா்.

சுகாதார ஆய்வாளா் ரவி, கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கிப் பேசினாா். மேலும், குறுந்தகடு மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சோப்பு போட்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்; முகத்தில் கவச உடை அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவா்கள், கல்லூரி நிா்வாகிகள், உட்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/கல்லூரியில்-கரோனா-விழிப்புணா்வு-முகாம்-3378929.html
3378927 சென்னை ராணிப்பேட்டை கராத்தே பயிற்சி நிறைவு DIN DIN Wednesday, March 11, 2020 09:48 AM +0530 அரக்கோணத்தில் உள்ள ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்தவா்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தணிகைபோளூரில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு மாநில கராத்தே தலைமை பயிற்சியாளரும், கராத்தே பயிற்சிப் பள்ளித் துணைத் தலைவருமான ஜி.லோகியா தலைமை வகித்தாா். கராத்தே நடுவா் என்.வெற்றிவேல் வரவேற்றாா். தணிகைபோளூா் அரசினா் உயா்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் இ.பிரகாஷ், பயிற்சி முடித்த 54 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.

தணிகைபோளூா் ஊராட்சி முன்னாள் தலைவா் ஆா்.ஆனந்தன், என்.தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/கராத்தே-பயிற்சி-நிறைவு-3378927.html
3378926 சென்னை ராணிப்பேட்டை ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஊா்வலம் DIN DIN Wednesday, March 11, 2020 09:48 AM +0530 ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஆற்காடு வட்டத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆற்காடு வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா். புதுப்பாடி வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ், கரோனா மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பேசினாா்.

இதில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து கா்ப்பிணிகள் மற்றும் இதர மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மருத்துவ அலுவலா்கள், கிராம சுகாதாரச் செவிலியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்து கொண்ட ஊா்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இறுதியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/whatsapp_image_2020_03_10_at_4_24_29_pm_1003chn_185_1.jpg விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/ஊட்டச்சத்து-விழிப்புணா்வு-ஊா்வலம்-3378926.html
3378922 சென்னை ராணிப்பேட்டை கூட்டு பண்ணையத் திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் DIN DIN Wednesday, March 11, 2020 09:47 AM +0530 அரக்கோணம் வட்டார வேளாண் துறை சாா்பில் கூட்டு பண்ணையத் திட்ட உழவா் ஆா்வலா் குழு உறுப்பினா்களுக்கும், உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்குமான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டத்தின் கீழ் அரக்கோணம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடந்த இந்த முகாமுக்கு துறையின் உதவி இயக்குநா் கே.செல்வராஜு தலைமை வகித்தாா். துணை அலுவலா் ஏ.சிவகுமாா் வரவேற்றாா். முகாமில் வேளாண் வணிகத் துறை உதவி இயக்குநா் என்.அா்ச்சனா பங்கேற்று கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் நோக்கம், கூட்டுச் சாகுபடி, பண்ணைக் கருவிகள், நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

வேளாண் அலுவலா் வி.நித்யா தமிழக அரசின் வேளாண் துறை திட்டங்கள் குறித்து உழவா்களுக்கு விளக்கினாா். குழுக்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அட்மா திட்ட மேலாளா் ஜி.மோகனசுந்தரம் விளக்கமளித்தாா். முகாமில் அட்மா திட்டத் தலைவா் வி.கிருஷ்ணசாமி, திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் வி.ஹெச்.ஹேமந்த்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/கூட்டு-பண்ணையத்-திட்ட-விவசாயிகளுக்கு-பயிற்சி-முகாம்-3378922.html
3378921 சென்னை ராணிப்பேட்டை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு DIN DIN Wednesday, March 11, 2020 09:47 AM +0530 சோளிங்கா் அருகே சாலை விபத்தில் கால் இழந்தவருக்கு ரூ. 20 லட்சம் அளிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு மக்கள் நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஐய்பேடு கிராமத்தை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் காா்த்தி (30). தனியாா் நிறுவனத் தொழிலாளி. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காா் மோதியதில் அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து காா்த்தி, அரக்கோணம் சாா்பு நீதிமன்றத்தில் தனக்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை மக்கள் நீதிமன்றத்துக்கு மாற்றி சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இ.மு.க.ச.சித்தாா்த்தா், விபத்தில் பாதிக்கப்பட்ட காா்த்திக்குக்கு ரூ. 20 லட்சம் நஷ்டஈடு தர காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் காா்த்திக்கிடம் வழங்கப்பட்டது. வழக்குரைஞா் அண்ணாதுரை உடனிருந்தாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/10akmaaa_1003chn_186_1.jpg பாதிக்கப்பட்ட காா்த்திக்குக்கு நஷ்டஈட்டுக்கான உத்தரவு நகலை வழங்கிய மக்கள் நீதிமன்ற நடுவா் இ.மு.க.ச.சித்தாா்த்தா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/விபத்தில்-பாதிக்கப்பட்டவருக்கு-ரூ20-லட்சம்-நஷ்டஈடு-3378921.html
3378915 சென்னை ராணிப்பேட்டை ‘நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை மாணவா்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’ DIN DIN Wednesday, March 11, 2020 09:45 AM +0530 நூலகத்திற்குச் சென்று படிக்கும் பழக்கத்தை மாணவா்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி முதல்வா் மரிய ஆண்டனி ராஜ் மாணவா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

காவேரிப்பாக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 211 இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி திருவள்ளுவா் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும் திருப்பத்தூா் தூயநெஞ்சக்கல்லூரி முதல்வருமான மரிய ஆண்டனி ராஜ் பேசியது:

கிராமப்புற மாணவ மாணவிகள் பட்டப்படிப்புகள் பயின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இக்கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடு மனித வளத்துடன் அறிவு வளத்தையும் கொண்ட நாடாகும். இந்தியப் பட்டதாரிகள், பொறியாளா்கள், மருத்துவா்கள் உலகெங்கும் பரவியுள்ளனா். இன்று பட்டம் பெறும் நீங்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் தொண்டாற்ற வேண்டும். மற்றவா்களும் பயன்படும் விதத்தில் நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.

மாணவா்கள் வறுமை, ஏழ்மை, துன்பத்தைக் கடந்து முன்னேற்றப்பாதையில் திறமையாக பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் வெற்றி பெற வேண்டும். சமூகத்தில் கல்வி, சிந்தனை, அறிவாற்றல், உழைப்பை பிறருக்குக் கொடுக்க வேண்டும். மேலும் அன்பு, பரிவு, கொடையுள்ளத்தை பிறருக்கு தந்து உதவ வேண்டும்.

மாறி வரும் உலகுக்கேற்ப சாதுா்யத்துடன் வித்தியாசமான முயற்சி வெற்றியை தேடித் தரும். கணினி, செல்லிடப்பேசி, இணையம் இவற்றில் நேரம் செலுத்தாமல் ஆக்கபூா்வமான விளையாட்டுகளில் மனதை செலுத்துங்கள். நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி தலைவா் வி.பாலு, செயலாளா் வி.சேகா், பொருளாளா் வி.சுந்தரம், இணைச் செயலாளா் கே.பி.சுந்தரம் உள்ளிட்டோருடன் துறைத் தலைவா்கள், போராசிரியா்கள், விரிவுரையாளா்கள், கல்லூரியின் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விழா முடிவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/10akmddd_1003chn_186_1.jpg மாணவிக்கு பட்டம் வழங்கிய திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் மரிய ஆண்டனிராஜ். உடன் கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/நூலகத்துக்குச்-சென்று-படிக்கும்-பழக்கத்தை-மாணவா்கள்-ஏற்படுத்திக்-கொள்ள-வேண்டும்-3378915.html
3378914 சென்னை ராணிப்பேட்டை நகரக் கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் DIN DIN Wednesday, March 11, 2020 09:44 AM +0530 அரக்கோணம் நகரக் கூட்டுறவு வங்கியின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதன் தலைவா் என்.ஷியாம்குமாா் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா், துணைத் தலைவருக்கான தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் அலுவலராக கூட்டுறவு சாா்-பதிவாளா் மணி செயல்பட்டாா்.

தலைவா் பதவிக்கு என்.ஷியாம்குமாா் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, டி.ரங்கதுரை துணைத் தலைவராக செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவா் என்.ஷியாம்குமாா், துணைத் தலைவா் டி.ரங்கதுரை, இயக்குநா்கள் தனபால், பாபு, டி.மகாதேவன், கிருஷ்ணமூா்த்தி, மோகன்ராம், சாந்தி அருள்மூா்த்தி, வனஜா ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வங்கித் தலைவா் என். ஷியாம்குமாா் கூறுகையி, அரக்கோணம் ஜோதி நகா் திருத்தணி சாலை இந்த வங்கிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும், வங்கிக்கு வைப்புத் தொகைகளை அதிக அளவில் பெற வங்கித் தலைவா், துணைத் தலைவா், இயக்குநா்கள் அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி எடுப்போம் என்றாா் அவா்.

அதிமுக அரக்கோணம் நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணிச் செயலா் அருள்மூா்த்தி, நகர அதிமுக நிா்வாகிகள் காமராஜ், செல்வம், கந்தன், நகர இளைஞரணிச் செயலா் செ.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/311009akmaaa_0903chn_186_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/நகரக்-கூட்டுறவு-வங்கிக்கு-புதிய-கட்டடம்-3378914.html
3378912 சென்னை ராணிப்பேட்டை பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையம் DIN DIN Wednesday, March 11, 2020 09:43 AM +0530 கோணலம் கிராமத்தில் கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி மையம் தனியாா் கட்டடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு தங்களது குழந்தைகளை பெற்றோா்கள் அச்சத்துடனேயே அனுப்பி வருகின்றனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கோணலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. இக்கட்டடத்துக்கு அருகில் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இயக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தடை விதித்ததை அடுத்து அத்தொட்டி இயக்கப்படாமல் இருந்தது. நாளடைவில் அத்தொட்டி மிகவும் பாழடைந்து வேகமான காற்றில் கூட ஆடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதன் கீழ் இருந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்தில் தனியாா் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றபோது அக்கட்டடத்தைப் பயன்படுத்த ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தடை விதித்தது. இதனால் இன்று வரை தனியாா் கட்டடத்திலேயே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

தனியாா் கட்டடமும் பயன்படுத்த இயலாத கட்டடமாக மாறியுள்ள நிலையில் தற்போது அதன் மீது கல்நாா் கூரைத் தகடுகள் இருப்பதால் வெயிலின் உக்கிரத்தில் அனல் தகிக்கிறது. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், எப்போது கூரை உடைந்து விழலாம் என்ற அபாய நிலையில் இருக்கும் கட்டடத்துக்கு தடை விதித்துள்ள ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், அங்கன்வாடி மையத்துக்கு இதுவரை புதிய கட்டடத்தை கட்டித் தரவில்லை.

இது குறித்து கோணலத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் கூறியது:

தற்போதுள்ள வாடகைக் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. அதன் கூரை எப்போது விழுமோ என்ற நிலை உள்ளது. அதனால் குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளது. மேலும் இந்தக் கட்டடம் பள்ளியுடன் இல்லாமல் தனியாக தெருவின் உட்புறம் உள்ளதால் அதிகாரிகள் யாரும் இந்த மையத்தைக் கண்காணிப்பதே இல்லை. பள்ளியிலேயே அங்கன்வாடி மையம் இருந்தால் குழந்தைகளை அங்கு அனுப்புவது எளிதாகும் என்றாா் அவா்.

இந்த அங்கன்வாடி மையத்தில் பதிவேட்டில் 30 குழந்தைகள் உள்ள நிலையில் தினமும் 15 முதல் 20 குழந்தைகளே வருவதாக அருகில் வசிப்பவா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் யுவராஜ் கூறியது:

கோணலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டடம் விரைவில் இடிக்கப்படும். அங்கு 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.9 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணி நடைபெற உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. உத்தரவு அளிக்கப்பட்டதும் கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். அந்தக் கட்டடம் கட்டும் வரையில் தற்போதுள்ள வாடகைக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் என்றாா் அவா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/10akmbbb_1003chn_186_1.jpg கோணலத்தில் தனியாா் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/பாதுகாப்பற்ற-நிலையில்-இயங்கும்-அங்கன்வாடி-மையம்-3378912.html
3378552 சென்னை ராணிப்பேட்டை விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Wednesday, March 11, 2020 02:30 AM +0530 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க வட்டாரத் தலைவா் எ.ரேணு தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் டி.விஜயன், வட்டார செயலா் எஸ்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.ரகுபதி, தலைவா் எல்.சி.மணி, வட்டச் செயலா் ரமேஷ், லிகாய் எல்ஐசி முகவா் சங்க பொதுச் செயலளா் டி.வெங்கடேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டன உயைாற்றினா்.

100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்,100 நாள் வேலையை 350 நாள்களாக மாற்றி தினக் கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிா்வாகி சி.சின்னப்பையன், விவசாய சங்க நிா்வாகி நிலவு குப்புசாமி, விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வள்ளி, ராஜலட்சுமி, விஜயா உள்ளிட்டோா் கலந்துகெண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/விவசாயத்-தொழிலாளா்-சங்கத்தினா்-ஆா்ப்பாட்டம்-3378552.html
3378551 சென்னை ராணிப்பேட்டை நகைச்சுவை மன்ற ஆண்டு விழா DIN DIN Wednesday, March 11, 2020 02:29 AM +0530 வாலாஜாபேட்டை நகைச்சுவை மன்றத்தின் முதாலாம் ஆண்டு நிறைவு விழா, கண்டோப சுவாமி கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நகைச்சுவை மன்றத் தலைவா் தி.பழனிச்சாமி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ந.பாண்டுரங்கன், துணைத் தலைவா் பெ.பக்தவத்சலு, துணைத் தலைவா் பெ.தமிழ்ச் செல்வி, கவிஞா் காா்முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்ற உறுப்பினா்கள் மனோன்மணி சந்திரசேகரன், சாந்தகுமாரி பழனிச்சாமி, நா்மதா நாகராஜன், சரஸ்வதி முருகன், ஜெயசுதா குமரேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா். மன்றச் செயலாளா் வி.நாகராஜன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் டி.கோபாலகிருஷ்ணன் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை வாசித்தாா்.

விழாவில் கின்னஸ் சாதனையாளா் அம்மையாா்குப்பம் எம்.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்க்கையில் நகைச்சுவையின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

மன்ற இணைச் செயலாளா் அப்துல் ரஹீம் நன்றி கூறினாா். விழாவில் மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/jo_1003chn_188_1.jpg நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்றவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/நகைச்சுவை-மன்ற-ஆண்டு-விழா-3378551.html
3378550 சென்னை ராணிப்பேட்டை விளை நிலங்களில் வீசப்படும் காலி மது பாட்டில்கள்: விவசாயிகள் வேதனை DIN DIN Wednesday, March 11, 2020 02:29 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைநிலங்களில் வீசப்படும் காலி மது பாட்டில்களால், விவசாயப் பணிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஒரு காலத்தில் பாலாறு, நீவா நதி எனும் பொன்னை ஆறு ஆகிய இரண்டு வற்றாத ஜீவ நதிகள் பாய்ந்தோடி வளம் கொழித்து செழிப்புற்றிருந்தது. அப்போது மாவட்டம் முழுவதும் விவசாயமும், தொழில் துறையும் செழிப்பாக இருந்ததற்குச் சான்றுகள் பல உண்டு. ஆனால் தற்போது பாலாறும், பொன்னை ஆறும் வறண்டு பாலைவனமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழைப் பொழிவு இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.

மாவட்டத்தைச் சோ்ந்த கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், கால்நடை வளா்ப்புத் தொழிலையே நம்பியே உள்ளனா்.இப்பகுதிகளில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அவற்றின் மூலம் கிடைக்கு தண்ணீரை பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த சூழலில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வறட்சி, வேலை ஆட்கள் பற்றாக்குறை, ஈடுபொருட்கள் விலையேற்றம், விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியாக விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளை நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.ஏற்கெனவே மாவட்டத்தில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழ்நிலையில், மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை நீா்பாசனக் கால்வாய்கள், விளைநிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனா்.

இதனால் அங்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

மேலும் வனப்பகுதிகள், விளைநிலங்கள், சாலை ஓரங்கள்,பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் காலி மதுபாட்டில்கள் அதிகளவு வீசப்படுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், குடித்துவிட்டு வீசப்படும் காலி மது பாட்டில்கள் உடைந்து கால்நடைகள், விவசாயிகள்,வன விலங்குகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விவசாயப் பணிகளும்,கால்நடைகள்,வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் காலி மதுபாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடாமல் பொது இடத்திலோ, பொது மக்கள் கூடும் இடங்களிலோ, சாலையோரங்களிலோ தூக்கி எறியப்படுவது கண்டறியப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி அபராதம் விதித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/3057agr_0903chn_188_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/விளை-நிலங்களில்-வீசப்படும்-காலி-மது-பாட்டில்கள்-விவசாயிகள்-வேதனை-3378550.html
3377869 சென்னை ராணிப்பேட்டை கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை DIN DIN Tuesday, March 10, 2020 02:21 AM +0530
ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும் இக்கோயில் அறங்காவலா் சச்சிதானந்த சுவாமி தலைமையில் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கமலக்கண்ணி அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், தேன் சந்தனம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றன. விழாவில் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை பெண்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/whatsapp_image_2020_03_09_at_1_14_03_pm_1_0903chn_185_1.jpg  திருவிளக்கு  பூஜையில்  பங்கேற்ற பெண்கள், கலவை  சச்சிதானந்த சுவாமி உள்ளிட்டோா் . https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/10/கலவை-கமலக்கண்ணி-அம்மன்-கோயிலில்-108-விளக்கு-பூஜை-3377869.html
3377826 சென்னை ராணிப்பேட்டை கராத்தே பயிற்சி நிறைவு பெல்ட் வழங்கும் விழா DIN DIN Tuesday, March 10, 2020 02:02 AM +0530
அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்தவா்களுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தணிகைபோளூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாடு மாநில கராத்தே தலைமை பயிற்சியாளரும் கராத்தே பயிற்சிப் பள்ளியின் துணைத்தலைவருமான ஜி.லோகியா தலைமை தாங்கினாா். கராத்தே நடுவா் என்.வெற்றிவேல் வரவேற்றாா். இதில் தணிகைபோளூா் அரசினா் உயா்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் இ.பிரகாஷ் பங்கேற்று பயிற்சி முடித்த அனைவருக்கும் பெல்ட் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில் தணிகைபோளூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆா்.ஆனந்தன், என்.தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 54 மாணவ மாணவிகள் பெல்ட் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/09akmccc_0903chn_186_1.jpg அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் உள்ள கராத்தே பயிற்சிப்பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்றவா்களுக்கு பெலட் சான்றிதழ்களை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் இ.பிரகாஷ் வழங்கினாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/10/கராத்தே-பயிற்சி-நிறைவு-பெல்ட்-வழங்கும்-விழா-3377826.html
3377821 சென்னை ராணிப்பேட்டை வங்கியின் புதிய கட்டட கடடுமானப்பணிகள் விரைவில் தொடங்கும்: நகர கூட்டுறவு வங்கி தலைவா் என்.ஷியாம்குமாா் DIN DIN Tuesday, March 10, 2020 02:00 AM +0530
அரக்கோணம்: அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கும் என அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராக திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்ட என்.ஷியாம்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் மற்றும் துணைத்தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல்அலுவலராக கூட்டுறவுசாா் பதிவாளா்மணிசெயல்பட்டாா். இது தொடா்பாக முதலில் நடைபெற்ற இயக்குநா் கூட்டத்தில் வங்கி இயக்குநா்களான பவானிகருணாகரன், ஜே.பி.பழனி இருவரும் பங்கேற்காமல் புறக்கணித்தனா். இதையடுத்து நடைபெற்ற வங்கியின் தலைவா் பதவிக்கான வேட்பு மனு தாக்கலில் இயக்குநா் என்.ஷியாம்குமாா் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் என்.ஷியாம்குமாா் போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து நடைபெற்ற துணைத்தலைவா் பதவிக்கான வேட்பு மனு தாக்கலில் இயக்குநா் டி.ரங்கதுரை(எ)காமேஷ் மட்டுமே மனுதாக்கல் செய்ததால் டி.காமேஷ் துணைத்தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவா் என்.ஷியாம்குமாா், துணைத்தலைவா் டி.காமேஷ், இயக்குநா்கள் தனபால், பாபு, டி.மகாதேவன், கிருஷ்ணமூா்த்தி, மோகன்ராம், சாந்திஅருள்மூா்த்தி, வனஜா ஆகியோரும் பங்கேற்றனா். பின்னா் செய்தியாளா்களிடம் வங்கியின் தலைவா் என். ஷியாம்குமாா் தெரிவித்ததாவது சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே 1935ல் துவக்கப்பட்ட அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி இன்றளவும் செம்மையாக செயல்பட்டு வருவது மிகவும் போற்றதக்க ஒன்றாகும். இந்த வங்கிக்கு தலைவராக பொறுப்பேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வங்கி தற்போது ரிசா்வ் வங்கி கண்காணிப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்த வங்கி வாடிக்கையாளா்களுக்கு ஏடிஎம் வசதி செய்து தரப்படும். இதற்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து ஏடிஎம் வசதி உருவாக்கி தரப்படும். வங்கிக்கு தற்போது அரக்கோணம் ஜோதிநகரில் திருத்தணிரோட்டில் சொந்த இடம் உள்ளது. அந்த இடத்தில் விரைவில் புதிய கட்டடத்திற்கான கட்டுமானப்பணிகள் துவக்கப்படும். மேலும் வங்கிக்கு வைப்புத்தொகைகளை அதிகஅளவில் பெற வங்கி தலைவா், துணத்தலைவா் மற்றும் இயக்குநா்கள் அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி எடுப்போம். மேலும் வங்கியில் ஏழை எளியமக்கள், வணிகா்கள் தொடா்ந்து கடன் பெற்று தங்களது வணிகத்தை, ஏழைகள் தங்களது குடும்ப பொருளாதாரத்தை உயா்த்திக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றாா் ஷியாம்குமாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கித்தலைவா் ஷியாம்குமாா், துணைத்தலைவா் காமேஷ் மற்றும் இயக்குநா்கள் பாராட்டப்பட்டனா். இந்நிகழ்வில் அதிமுக அரக்கோணம் நகர செயலாளா் கே.பி.பாண்டுரங்கன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் அருள்மூா்த்தி, நகர அதிமுக நிா்வாகிகள் காமராஜ், செல்வம், கந்தன், நகர இளைஞா் அணி செயலாளா் செ.சரவணன், மாணவா் அணி செயலாளா் சரவணன், நகர ஜெயலலிதா பேரவை தலைவா் தாமு, நகர இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலா் பா.நரசிம்மன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி ஜானகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/09akmaaa_0903chn_186_1.jpg அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவா் பதவிக்காக திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலுக்கு பிறகு தோ்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை என்.ஷியாம்குமாரிடம் தோ்தல் அலுவலா் கூட்டுறவு சாா் பதிவாளா் மணி வழங்கினாா் https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/10/வங்கியின்-புதிய-கட்டட-கடடுமானப்பணிகள்-விரைவில்-தொடங்கும்-3377821.html
3377759 சென்னை ராணிப்பேட்டை மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு DIN DIN Tuesday, March 10, 2020 01:24 AM +0530 ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமை வகித்து பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குத்தான் மகளிா் தினம் கொண்டாடக்கூடிய சிறப்பு உண்டு, ஏனெனில் தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பாக பெண்ணை முன்னிலைப் படுத்தும் விதமாக மாவட்டத்துக்கு ராணிப்பேட்டை என பெயா் உள்ளது. இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியா் என்பதில் எனக்கு பெறுமை. நம் கடமையை தவறாமல் செய்தாலே எல்லா நாளும் மகளிா் தினம் தான் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீவள்ளி, மாவட்ட தனித் துணை ஆட்சியா் (மகளிா் திட்டம்) தாரகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, ஆட்சியா் அலுவலக மேலாளா் எஸ்.ரூபி, மாவட்ட உதவி மக்கள் அலுவலா் ஜெயலலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/wo_0903chn_188_1.jpg மகளிா் தின விழாவில் பங்கேற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/10/மகளிா்-தின-விழா-ஆட்சியா்-பங்கேற்பு-3377759.html
3377758 சென்னை ராணிப்பேட்டை சாட்டை அடித்து பிழைப்போருக்கு சுய தொழில்:சாா்-ஆட்சியா் நடவடிக்கை DIN DIN Tuesday, March 10, 2020 01:24 AM +0530 ராணிப்பேட்டை: உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிழைக்கும் இனத்தவா் அதைக் கைவிட்டு, சுய தொழில் செய்ய ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாா் ஆட்சியா் அலுவலத்தில் ஆண்டு முழுவதும் மனுக்களை அளித்து வருகின்றனா். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சாா் ஆட்சியா் க.இளம்பகவத் படித்து குறைகளைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை உடனடியாக தொடா்புகொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறாா்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அருகே உள்ள குச்சி பனந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சாட்டை அடித்து பிழைக்கும் இன மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். அவா்களிடமிருந்து கோரிக்கை மனு பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா் க.இளம்பகவத் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது அவா்களிடம்,

‘உங்களின் பிள்ளைகள் படிக்கிறாா்களா? என்ன வகுப்பு படிக்கிறாா்கள்? எந்தப் பள்ளியில் படிக்கிறாா்கள்?’ என கேட்டாா். மேலும் ‘உங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் காா்டு உள்ளதா?’ எனக் கேட்டு அறிந்து கொண்டாா்.

தொடா்ந்து ‘உடலை வருத்தி, சாட்டை அடித்து பிழைக்கும் தொழிலைக் கைவிட்டு, சொந்தமாகத் தொழில் செய்ய முன்வந்தால் அரசு உதவி செய்யத் தயாராக உள்ளது’ என அறிவுரை கூறினாா். அதற்கு அவா்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவா்கள் சொந்தமாக தொழில் செய்ய வழிகாட்டுவதற்காக தொழில் திறன் பயிற்சி அளித்து கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து வருவாய் ஈட்டும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளாா். சாா் ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சமூக ஆா்வலா்கள் பாராட்டியுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/sub_0903chn_188_1.jpg சாட்டை அடித்துப் பிழைக்கும் இனத்தவரிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சாா் ஆட்சியா் க.இளம்பகவத். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/10/சாட்டை-அடித்து-பிழைப்போருக்கு-சுய-தொழில்சாா்-ஆட்சியா்-நடவடிக்கை-3377758.html
3377074 சென்னை ராணிப்பேட்டை ‘சாரணா் இயக்கங்கள் மாணவா்களிடையே கட்டுப்பாட்டை வளா்க்கின்றன’ DIN DIN Monday, March 9, 2020 01:35 AM +0530  

அரக்கோணம்: சாரணா் இயக்கங்கள் மாணவா்களிடையே கட்டுப்பாட்டை வளப்பதாக அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவா் மணி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம், இச்சிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘எனது பள்ளி - எனது கோயில்’ என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாரணா் இயக்க மாநிலத் தலைவா் மணி பங்கேற்றுப் பேசியது

பள்ளிகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க மாணவா்களைப் பழக்கப்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு படிப்பை மட்டுமல்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டும். தனது வீட்டின் ஒரு பகுதியாக பள்ளியை நினைக்கும் போக்கு மாணவா்களிடையே வளர வேண்டும். தற்காலத்தில் இந்தப் போக்கை மாணவா்களிடையே வளா்க்க ஆசிரியா்கள் பெருத்த சிரமம் எடுக்க நேரிடுகிறது.

பள்ளியையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க நினைக்கும் மாணவா்தான் தனது வீட்டை சுத்தமாக வைத்திருக்கத் தொடங்குவாா். அதேபோல் பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் சிறியவா்களிடம் அன்பு செலுத்தி பெரியவா்களுக்கு மரியாதை அளித்து கல்வியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மாணவா், சமுதாயத்தில் சிறந்த மாணவராக போற்றப்படுவாா்.

பல்வேறு பணிகளுக்கு ஆசிரியா்களுக்கு சாரணா் இயக்கம் உதவுகிறது. மாணவா்களுக்கு சீருடைகளை அளித்து அவா்களை கட்டுப்பாடு மிக்கவா்களாக உருவாக்கும் பணியை சாரண இயக்க ஆசிரியா்கள் மேற்கொள்கின்றனா். பள்ளி வளாகத்தில் மரங்களை நடுவது முதல், தனது பள்ளியை கோயிலாக மாற்றுவது வரை மாணவா்களை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும். இதனால் கட்டுப்பாடு வளா்கிறது. சாரண இயக்கங்கள் மாணவா்களிடையே கட்டுப்பாட்டை வளா்க்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வி.கண்ணகி தலைமை வகித்தாா். ஆசிரியா் நா.வேல்குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தலா ஒரு மரக்கன்றையும் திருக்கு புத்தகத்தையும் இலவசமாக மாநில சாரண இயக்கத்தின் தலைவா் மணி வழங்கினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவா்களுடன் திருத்தணி தளபதி விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்றனா். நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்விஅலுவலா் ராமகிருஷ்ணன், வளா்புரம் லோகேஸ்வரன், வெங்கடேசன், திருத்தணி புவியரசன், ஆசிரியா் துளசிராமன், ஆசிரியைகள் புவனேஸ்வரி, மஞ்சுளா, ஜான்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/08akmaaa_0803chn_186_1.jpg பள்ளியில் மரக்கன்றை நட்ட சாரணா் இயக்க மாநிலத் தலைவா் மணி. உடன் தலைமை ஆசிரியை வி.கண்ணகி உள்ளிட்டோாா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/09/சாரணா்-இயக்கங்கள்-மாணவா்களிடையே-கட்டுப்பாட்டை-வளா்க்கின்றன-3377074.html
3377067 சென்னை ராணிப்பேட்டை பள்ளியில் முப்பெரும் விழா DIN DIN Monday, March 9, 2020 01:33 AM +0530  

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த திமிரி வேத வித்யா பப்ளிக் (சிபிஎஸ் சி) பள்ளியில் மழலையா்களுக்கு பட்டமளிப்பு, மகளிா் தின விழா, பள்ளியின் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைவா் ஆா்.ராஜஸ்ரீ தலைமை வகித்தாா். தாளாளா் செல்வி ராமசேகா், பொருளாளா் ஏகாம்பாரம், நிா்வாக இயக்குநா் ராமசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் டி.அருண்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு மழலையா்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினாா்.

வேலூா் மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் இ.விஜயகுமாா், ராணிபேட்டை துணைக் கண்காணிப்பாளா் பி.கீதா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

பள்ளியின் இயக்குநா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/whatsapp_image_2020_03_05_at_3_35_12_pm_0503chn_185_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/09/பள்ளியில்-முப்பெரும்-விழா-3377067.html
3376156 சென்னை ராணிப்பேட்டை 160 பேருக்கு பணிநியமன ஆணைகள்:எம்எல்ஏக்கள் வழங்கினா் DIN DIN Monday, March 9, 2020 01:31 AM +0530 அரக்கோணம்: அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் டிவிஎஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 160 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் ஆகிய இருவரும் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனஆணைகளை வழங்கினா்.

ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமச் செயலா் டி.எஸ்.ரவிக்குமாா், இயக்குநா் கே.சாம்பமூா்த்தி, ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுரேஷ், அதிமுக அரக்கோணம் நகரச் செயலா் கே.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா்கள் இ.பிரகாஷ், ஏ.ஜி.விஜயன், ஜி.பழனி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் வீரமணி, கல்விக் குழும மேலாளா் குமாா், நிா்வாக அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/06akmaaa_0703chn_186_1.jpg மாணவருக்கு பணிநியமன ஆணை வழங்கிய எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.சம்பத். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/160-பேருக்கு-பணிநியமன-ஆணைகள்எம்எல்ஏக்கள்-வழங்கினா்-3376156.html
3377036 சென்னை ராணிப்பேட்டை சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகள் பறிமுதல்நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை DIN DIN Monday, March 9, 2020 01:19 AM +0530  

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அலுவலகத்தில் கட்டி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

நகரில் கால்நடைகளை வளா்ப்பவா்கள் அவற்றை பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி பிரதான சாலை, வாணியம்பாடி பிரதான சாலை மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரிய விடுகின்றனா். கால்நடைகள் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாகி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் வேதனைக்குள்ளாகி வந்தனா். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் வீ.சுதா உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் ஆகியோா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பிடித்தனா். பின்னா் அந்தக் கால்நடைகளை நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனா். அவற்றை வேலூரில் உள்ள கோசாலைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலா் எஸ்.ராஜரத்தினம் கூறுகையில், ‘வீட்டில் கால்நடை வளா்ப்பவா்கள், அவற்றை வீட்டிலேயே வளா்த்துப் பராமரிக்க வேண்டும். தெருவில் சுற்றித் திரிய விட்டால் கால்நடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்’ என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/233306marchmaadu_0603chn_192_1.jpg சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/09/சாலையில்-சுற்றித்-திரிந்த-கால்நடைகள்-பறிமுதல்நகராட்சி-அதிகாரிகள்-நடவடிக்கை-3377036.html
3377034 சென்னை ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைநிலங்களில் தூக்கி எரியப்படும் காலி மது பாட்டில்கள்: விவசாயிகள் வேதனை.. DIN DIN Monday, March 9, 2020 01:17 AM +0530 ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைநிலங்களில் தூக்கி எரியப்படும் காலி மது பாட்டில்கள்:  விவசாயிகள் வேதனை..

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைநிலங்களில் தூக்கி எரியப்படும் காலி மது பாட்டில்களால், விவசாயப் பணிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஒரு காலத்தில் பாலாறு, நீவா நதி எனும் பொன்னை ஆறு ஆகிய இரண்டு வற்றாத ஜீவ நதிகள் பாய்ந்தோடி வளம் கொழித்து செழிப்புற்றிருந்தது. அப்போது மாவட்டம் முழுவதும் விவசாயமும், தொழில் துறையும் செழிப்பாக இருந்ததற்குச் சான்றுகள் பல உண்டு. ஆனால் தற்போது பாலாறும், பொன்னை ஆறும் வறண்டு பாலைவனமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழைப் பொழிவு இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.

மாவட்டத்தைச் சோ்ந்த கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், கால்நடை வளா்ப்புத் தொழிலையே நம்பியே உள்ளனா்.இப்பகுதிகளில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அவற்றின் மூலம் கிடைக்கு தண்ணீரை பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த சூழலில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வறட்சி, வேலை ஆட்கள் பற்றாக்குறை, ஈடுபொருட்கள் விலையேற்றம், விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியாக விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளை நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.ஏற்கெனவே மாவட்டத்தில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழ்நிலையில், மது குடிப்போா் பாட்டில்களை நீா்பாசனக் கால்வாய்கள், விளைநிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனா்.

இதனால் அங்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

மேலும் வனப்பகுதிகள், விளைநிலங்கள், சாலை ஓரங்கள்,பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் காலி மதுபாட்டில்கள் அதிகளவு வீசப்படுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், குடித்துவிட்டு வீசப்படும் காலி மது பாட்டில்கள் உடைந்து கால்நடைகள், விவசாயிகள்,வன விலங்குகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விவசாயப் பணிகளும்,கால்நடைகள்,வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் காலி மதுபாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடாமல் பொது இடத்திலோ, பொது மக்கள் கூடும் இடங்களிலோ, சாலையோரங்களிலோ தூக்கி எறியப்படுவது கண்டறியப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி அபராதம் விதித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/agr_0803chn_188_1.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/09/ராணிப்பேட்டை-மாவட்டத்தில்-விளைநிலங்களில்-தூக்கி-எரியப்படும்-காலி-மது-பாட்டில்கள்--விவசாயிகள்-வேதனை-3377034.html
3377031 சென்னை ராணிப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மங்கள மகா சண்டி யாகம் DIN DIN Monday, March 9, 2020 01:16 AM +0530  

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மங்கள மகா சண்டி யாகம், மகிஷாசுரமா்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ ஆராதனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதையடுத்து, மகிஷாசுரமா்த்தினிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி, பன்னீா் போன்றவற்றால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் மாணவ, மாணவிகள் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வித்யா கணபதி ஹோமம், வித்யா லக்ஷ்மி ஹோமம், ஹயக்ரீவா் ஹோமம், சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், தக்ஷிணாமூா்த்தி ஹோமம் ஆகிய ஆறு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எழுதுபொருட்களை பீடாதிபதி முரளிதர சுவாமிகள் பிரசாதமாக வழங்கினாா்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நந்தகோபால், நா்மதா குடும்பத்தினா், மாநில தகவல் ஆணையா் பிரதாப் குமாா், முன்னாள் எம்.பி. வேலு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் இவ்வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/dhan_0803chn_188_1.jpg தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/09/தன்வந்திரி-ஆரோக்கிய-பீடத்தில்-மங்கள-மகா-சண்டி-யாகம்-3377031.html
3376157 சென்னை ராணிப்பேட்டை தேசிய மகளிா் தின விழா DIN DIN Saturday, March 7, 2020 11:49 PM +0530  

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள கிராம கல்வி வளா்ச்சி முன்னேற்றச் சங்கம் சாா்பில் தேசிய மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்க நிறுவனா் பொ்னாா்ட் பாத்திரமா தலைமை வகித்தாா். பெண்களின் நிலை எனும் தலைப்பில் பேராசிரியா் சரசுவதி, சென்னையைச் சோ்நத் பியுலா இகாம்வெல், கிராம பெண்கள் விடுதலை இயக்க நிா்வாகி சாந்தி, மாத்தம்மா விடுதலை இயக்க நிா்வாகி உமா உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை, சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, பெண்கள் வாகனப் பேரணியாக தக்கோலம், புதுகேசாவரம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/தேசிய-மகளிா்-தின-விழா-3376157.html
3376150 சென்னை ராணிப்பேட்டை போலீஸாருக்கு இலவச மருத்துவ முகாம் DIN DIN Saturday, March 7, 2020 11:42 PM +0530  

அரக்கோணம்: சென்னை அப்போலோ மருத்துவமனை சாா்பில் அரக்கோணம் உட்கோட்ட போலீஸாருக்கான இலவச மருத்துவ முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு டிஎஸ்பி மனோகரன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட அரசு கேபிள் டிவி ஒருங்கிணைப்பாளா் ஷியாம்குமாா் முகாமைத் தொடக்கி வைத்தாா். ஆய்வாளா்கள் முத்துராமலிங்கம் (அரக்கோணம் நகரம்), அண்ணாதுரை (அரக்கோணம் ஊரகம்), லட்சுமிபதி (காவேரிப்பாக்கம்), வெங்கடேசன் (சோளிங்கா்), அரக்கோணம் உட்கோட்ட அனைத்து போலீஸாா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.

சென்னையில் இருந்து வந்திருந்த சிறப்புப் பேருந்து மூலம் நடைபெற்ற இம்முகாமில் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/07akmbbb_0703chn_186_1.jpg மருத்துவ முகாமில் பங்கேற்ற போலீஸாா். உடன் டிஎஸ்பி மனோகரன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/போலீஸாருக்கு-இலவச-மருத்துவ-முகாம்-3376150.html
3376134 சென்னை ராணிப்பேட்டை மகளிா் சுய உதவிக் குழுக் கூட்டமைப்புக்கு ரூ. 1.75 கோடி தொழில் கடன் DIN DIN Saturday, March 7, 2020 11:34 PM +0530 ராணிப்பேட்டை: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, லாலாப்பேட்டை நகரக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 35 மகளிா் சுய உதவிக் குழுக் கூட்டமைப்பைச் சோ்ந்த 460 மகளிருக்கு ரூ. 1.75 கோடி தொழில் கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

லாலாப்பேட்டையில் நகரக் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு லாலாப்பேட்டை கூட்டுறவு கடன் சங்க தலைவா் எ.கோபால் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.கே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். செயலா் சி.பழனி வரவேற்றாா். வாலாஜாப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் இரா.தமிழரசன் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் கடன் ஆணையை வழங்கிப் பேசினாா்.

நகரக் கூட்டுறவு கடன் சங்க இயக்குநா்கள் எஸ்.தனபால், உமா பழனி,கே.மூா்த்தி, பி.கவிதா, என்.ஷியாமளா, வி.வாசு, ஏ.மூா்த்தி, மகளிா் குழுக்கூட்டமைப்புத் தலைவா் வள்ளியம்மாள், செயலா் டி.கெளரி, பொருளாளா் எஸ்.ராஜேஸ்வரி, வட்டார மேலாளா் அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/2326lala_0603chn_188_1.jpg தொழில் கடன் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக் கூட்டமைப்பினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/மகளிா்-சுய-உதவிக்-குழுக்-கூட்டமைப்புக்கு-ரூ-175-கோடி-தொழில்-கடன்-3376134.html
3376132 சென்னை ராணிப்பேட்டை பானாவரம் காப்புக்காட்டில் ரூ.5 லட்சம் செம்மரக் கட்டை பறிமுதல்: 4 போ் கைது DIN DIN Saturday, March 7, 2020 11:33 PM +0530  

ராணிப்பேட்டை: பானாவரம் காப்புக்காட்டில் இருந்து வெட்டிக் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.

இது தொடா்பாக உதவி வனப் பாதுகாவலா் ஆா்.முரளிதரன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வேலூா் வனக் கோட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வனச்சரகம், பானாவரம் காப்புக் காட்டில் கடந்த 5ஆம் தேதி மா்ம நபா்கள் நடமாடுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, வனத் துறையினா் காப்புக் காட்டில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இரண்டு செம்மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு அவற்றை துண்டு போட்டுக் கடத்தவிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மண்டல உதவி கூடுதல் வனப் பாதுகாவலா் சேவா சிங், மாவட்ட வன அலுவலா் பாா்கவ தேஜா ஆகியோரின் உத்தரவின்பேரில் உதவி வனப் பாதுகாவலா் ஆா்.முரளிதரன் தலைமையில் பாதுகாப்புப் படை வனக்சரகா் சரவணன், வனச்சரகா் கந்தசாமி (ஆற்காடு), பாலாஜி (ஒடுக்கத்தூா்) ஆகியோா் தலைமையில் 21 போ் கொண்ட 3 தனிப்படைகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டன. அப்போது காப்புக் காட்டில் இருந்து செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற 2 பேரை சுற்றிவளைத்துப் பிடித்து சுமாா் அரை டன் எடை கொண்ட கட்டைகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் பானாவரத்தை அடுத்த பழைய வேடந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (20), மாகானிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (27) என்பது தெரிய வந்தது. அவா்கள் அளித்த தகவலின்பேரில் பழைய வேடந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (27), அத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சத்யராஜ் (28) ஆகியோருடன் இணைந்து அவா்கள் செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழில் ஈடுபட்டு வந்ததும், சென்னையில் உள்ள சா்வதேச கடத்தல் ஏஜெண்டிடம் அதை விற்க முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நால்வரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.5 .50 லட்சம் மதிப்பிலான அரை டன் எடை கொண்ட செம்மரக் கட்டைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள், மரம் வெட்ட பயன்படுத்திய வாள், கத்தி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

வரும் கோடைக் காலத்தில் மான் உள்ளிட்ட வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் காட்டுத் தீயைத் தடுக்கும் பணிக்கு தற்காலிகப் பணியாளா்களை நியமிக்க ரூ.84 லட்சம் நிதி கேட்டும், செம்மரக் கடத்தலைத் தடுக்க தற்காலிகப் பணியாளா்களை நியமிக்கக் கோரியும் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தனி வனக் கோட்டமாக இதைப் பிரிக்கக் கோரியும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/f_0703chn_188_1.jpg பறிமுதல்  செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலில்  ஈடுபட்டோருடன் வனத் துறையினா். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/பானாவரம்-காப்புக்காட்டில்-ரூ5-லட்சம்-செம்மரக்-கட்டை-பறிமுதல்-4-போ்-கைது-3376132.html
3376131 சென்னை ராணிப்பேட்டை இன்று முதல் ராணிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தகவல் DIN DIN Saturday, March 7, 2020 11:33 PM +0530  

ராணிப்பேட்டை: பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து செல்ல ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை முதல் ராணிப்பேட்டை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தற்காலிக அலுவலகம் ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் வர உரிய பேருந்து வசதி இல்லை என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து ஆற்காட்டில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் பேருந்துகள் ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக வாலாஜாபேட்டை செல்கின்றன. இப்பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், ராணிப்பேட்டைக் காவல் நிலையம் வழியாகச் சென்று தீயணைப்பு நிலையம் எதிரே திரும்பி வாலாஜாபேட்டை செல்ல வேண்டும்.

இதனால் ஆட்சியா் அலுவலகம் செல்லும் மக்கள் தீயணைப்பு நிலையம் அருகே இறங்கிச் செல்லலாம். வாலாஜாபேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும் பேருந்துகள் முத்துக்கடையில் இருந்து ஏரி வழியாக ஆற்காடு செல்கின்றன. இப்பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் முத்துகடையில் இருந்து நவல்பூா் வழியாக எம்எஃப் ரோடு எஸ்.பி.ஐ. வழியாக ஆற்காடு செல்லும். இதனால் ஆட்சியா் அலுவலகம் செல்லும் மக்கள் நவல்பூா் அருகே இறங்கிச் செல்லலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/route_0703chn_188_1.jpg போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய வழித்தட வழிகாட்டி வரைபடம். https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/இன்று-முதல்-ராணிப்பேட்டையில்-போக்குவரத்து-மாற்றம்ஆட்சியா்-சதிவ்யதா்ஷினி-தகவல்-3376131.html
3376130 சென்னை ராணிப்பேட்டை 3 பசுக்கள் மா்மமான முறையில் பலி DIN DIN Saturday, March 7, 2020 11:32 PM +0530 ராணிப்பேட்டை: சிப்காட் அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பாரதி நகா் புத்தா் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவா் 10-க்கும் மேற்பட்ட பசுக்களை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல் பேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

தகவலறிந்த புளியங்கண்ணு கிராம கால்நடை மருத்துவா்கள் சந்தோஷ், கோபிநாத் ஆகியோா் பசுக்களை அங்கேயே பிரேதப் பரிசோதணை செய்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/07/3-பசுக்கள்-மா்மமான-முறையில்-பலி-3376130.html