Dinamani - வேலூர் - https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3119637 சென்னை வேலூர் அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி: முதல்வர் பழனிசாமி DIN DIN Sunday, March 24, 2019 01:21 AM +0530
அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணி மட்டுமே வெற்றிக் கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
 நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக திமுகவி பொய்யான வாக்குறுதி அளித்தது. ஆட்சியில் நாம் உள்ளோம், ஆனால் அவர்கள் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். நமது கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள வாக்குறுதிகள் முத்தான வாக்குறுதிகள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. திருவண்ணாமலை தொகுதியில் அதிமுகவை வெற்றி பெற வைத்தால், வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும். திமுக கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இடம் பெற்றிருந்தது. இதுவரை தமிழகத்துக்கு குறிப்பாக திருவண்ணாமலை தொகுதிக்கென்று எந்த ஒரு முன்னேற்றத்தையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது அமைந்துள்ள கூட்டணி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என ஒத்த கருத்துள்ள கூட்டணி. அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை ஆய்வில் இந்தியாவிலேயே தமிழகம் சட்டம்-ஒழுங்கில் முதலிடம் வகிக்கிறது என சான்றிதழ் அளித்துள்ளது.
நீர் மேலாண்மை திட்டம் 4 ஓய்வுபெற்ற தலைமை ஊழியர்களை நியமித்து உபரிநீரை விவசாயத்துக்குச் வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில்தான் பெரும்பாலான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. தற்போது விவசாயிகள் வளம் பெற வண்டல் மண் இலவசமாக அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளைத் திறக்க முன் வருகின்றனர். திமுகவினர் அமைத்துள்ள கூட்டணி கொள்கையில்லா கூட்டணியாகும்.
நீண்டகால கோரிக்கையான 
காவிரி-கோதாவரியை இணைக்க கடுமையாக முயற்சிப்போம் என்றார் அவர்.
மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/24/அதிமுக-கூட்டணி-வெற்றிக்-கூட்டணி-முதல்வர்-பழனிசாமி-3119637.html
3119442 சென்னை வேலூர் இன்று 251-ஆவது திருமுறை வழிபாடு DIN DIN Saturday, March 23, 2019 11:54 PM +0530
குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், வீடுகளில் மாதந்தோறும் நடைபெற்று வந்த திருமுறைச் சொற்பொழிவின் 251- ஆவது நிகழ்வு நடுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த அமைப்பு சார்பில் மாதந்தோறும் ஒரு இல்லம் என 250 இல்லங்களில் திருமுறைச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 251- ஆவது நிகழ்வு காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 5 மணிக்கு திருமுறை வழிபாடு நடத்திய அடியார்களை கௌரவித்தல், 5.30 மணிக்கு திருத்தணி எம். சுவாமிநாதன் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை, அதைத் தொடர்ந்து சென்னை ஞானத் திரள்' மாத இதழ் ஆசிரியர் கி.சிவக்குமார் குழுவினரின் திருமுறை விளக்க உரை ஆகியவை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.அசோக்குமார், கோ.வீரய்யபத்தர், எம்.வாசுதேவன், எம்.டி.சதானந்தம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/இன்று-251-ஆவது-திருமுறை-வழிபாடு-3119442.html
3119441 சென்னை வேலூர் குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து DIN DIN Saturday, March 23, 2019 11:54 PM +0530
குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமாயின.
குடியாத்தம் தரணம்பேட்டையைச் சேர்ந்தவர் நசீர் அகமது (38).  இவர், மேல்ஆலத்தூர் சாலையில் உள்ள நத்தம் கிராமம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்கு வைத்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கிடங்கில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சாம்பலாயின. அதே வளாகத்தில் இருந்த தென்னை, மா மரங்களும் எரிந்து சேதமடைந்தன. 
தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/குடியாத்தம்-அருகே-பிளாஸ்டிக்-கிடங்கில்-தீ-விபத்து-3119441.html
3119440 சென்னை வேலூர் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: வி.ஐ.டி. வேந்தர் வலியுறுத்தல் DIN DIN Saturday, March 23, 2019 11:54 PM +0530
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார். 
சட்டக்கதிர் தமிழ் சட்ட இதழ் மற்றும் தமிழ்நாடு மகளிர் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை தியாகராய நகரில்  சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு  பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார். 
இந்நிகழ்ச்சியை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தொடங்கி வைத்துப் பேசியது: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுக்காக இன்னும் போராடி வருகிறோம். இதுகட்டாயம் அடைந்தே தீரவேண்டிய நிகழ்வு. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது, பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை. எனவே, பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும். பெண்களுக்கு  அதிகாரம் அளித்தல்  என்பது பழைய முறையில் சிந்திக்க முடியாது என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்தல் '  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியது: அதிகாரம் வேண்டும் என்றால் கல்வி வேண்டும்.  இப்போது பள்ளிக் கல்விக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், உயர்கல்விக்கு யாரும் உதவி செய்வது இல்லை. 40 நாடுகளில் இலவச உயர்கல்வி வழங்கப்படுகிறது.
ஆனால், நமது நாட்டில் அந்த நிலை இல்லை. அது மாற வேண்டும். முழுமையாக அதை செயல்படுத்த இயலவில்லை என்றாலும், முதலில் பெண்களுக்காவது இலவச உயர்கல்வி கொடுக்க வேண்டும். 
பெண்களுக்கு 3-இல் ஒரு பங்கு இடஒதுக்கீடு  கோரி 1996-இல் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதுதொடர்பான மசோதா 2010-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்காததால், அந்த மசோதா நிறைவேறவில்லை. 2014-இல் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. அடுத்த 5 ஆண்டில் திருப்பி கொண்டு வரவில்லை. அதற்கு பெண்களும் பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை. அடுத்து வருகின்ற நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான  33 சதவீத இடஒதுக்கீடு  மசோதாவை  நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.    இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள், அதை எதிர்நோக்குதல் '  என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, இந்திய சைபர் சமூகத்தின் தலைவர் பாலுசுவாமிநாதன், சைபர் பாதுகாப்பு ஆலோசகர் நாகராஜன் சுப்பு ஆகியோர் பேசினர். 
இந்த நிகழ்ச்சியில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, மூத்த வழக்குரைஞர் ஆர்.விடுதலை, இந்திரா தங்கபாலு, கவிஞர் சல்மா உள்பட பலர் பேசினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/பெண்களுக்கு-33-சதவீத-இடஒதுக்கீடு-மசோதாவை-நிறைவேற்ற-வேண்டும்-விஐடி-வேந்தர்-வலியுறுத்தல்-3119440.html
3119439 சென்னை வேலூர் சூடுபிடித்த தேர்தல் பிரசாரத்துக்கு இடையே சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி DIN DIN Saturday, March 23, 2019 11:54 PM +0530
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 இதையடுத்து, பகல் நேர தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைந்து வருவதால் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே கோடைகாலத்தில் வெயில் அதிகம் நிலவும் மாவட்டமாக வேலூர் உள்ளது. இம்மாவட்டத்தில் நிகழாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. மார்ச் தொடக்கத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் இருந்த வெயில் அளவு, சில நாள்களிலேயே 100 டிகிரியைக் கடந்தது. 
தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி அதிகபட்சமாக 105.10 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்பிறகு, வெயில் அளவு 100 டிகிரிக்கு கீழாக குறைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் நூறு டிகிரியைக் கடந்து 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயில் அளவு சனிக்கிழமை 102.40 டிகிரியாக மேலும் அதிகரித்தது. வெப்ப அளவு இனி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வேலூர் மாவட்டத்தில் தற்போதுதான் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அதிகரித்து வரும் வெயிலால் பகல் நேரங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகின்றன. இது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதிகரிக்கும் கோடை வெயிலை அடுத்து பகல் நேரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் நலனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தலைவர்கள் சில நிமிடங்களில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவதால் அரசியல் கட்சியினர் பெரும்பாலும் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/சூடுபிடித்த-தேர்தல்-பிரசாரத்துக்கு-இடையே-சுட்டெரிக்கும்-வெயிலால்-மக்கள்-அவதி-3119439.html
3119438 சென்னை வேலூர் வாகனச் சோதனையில் கோட்டை விடப்படும் பேருந்துகள்! DIN DIN Saturday, March 23, 2019 11:54 PM +0530
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணியையொட்டி, பல்வேறு குழுக்கள் 24 மணிநேரமும் வாகனச் சேதனையில் ஈடுபட்டாலும், அந்தக் குழுவினர் பேருந்துகளைக் கண்டுகொள்வதில்லை என்றும், இதனால் பேருந்துகளில் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவை கடத்திச் செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைக் குழுக்கள், 39 நிலைக் கண்காணிப்புக்  குழுக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் நடத்தும் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் 26 காணொலிக் கண்காணிப்புக் குழுக்கள், அவ்வாறு பதிவு செய்யும் பதிவுகளைத் தணிக்கை செய்து செலவினப் பார்வையாளரிடம் சமர்ப்பிக்க 13 குழுக்கள், வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 13  உதவி செலவினப் பார்வையாளர் குழுக்கள், 13 உதவி கணக்குத் தணிக்கைக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படைக் குழுவினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர், காணொலிக் கண்காணிப்புக் குழுவினர் ஆகியோர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தக் குழுவினர் தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கில் கார், வேன்களை மட்டுமே சோதனையிட்டு வருகின்றனர். அப்போது பெரும்பாலும் தொழில் நிமித்தமாக பணம் கொண்டு செல்வோரே சோதனையில் சிக்குகின்றனர். 
அதேசமயம், சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும், இன்னும் பல இடங்களில் இருந்தும் வேலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்தச் சோதனையில் இருந்து தப்பி விடுகின்றன. 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதேபோல் அரசு, தனியார் பேருந்துகள் சோதனையில் இருந்து தப்பிய நிலையில், ஒரு சில அரசியல் கட்சிகள் நம்பகமான நபர்களிடம் தோளில் மாட்டிச்செல்லும் பைகளில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கொடுத்தனுப்பிய சம்பவங்களும் நடந்திருப்பதாக பெயர் கூற விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். 
இதேபோல், சென்னையில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த ஒருவரிடம் இது பற்றிக் கேட்டபோது, வழியில் எந்த இடத்திலும் தேர்தல் பறக்கும்படைக் குழுவினர் சோதனை நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். 
இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, பேருந்துகளில் சோதனை நடத்தக் கூடாது என்று எந்தவித விதிமுறையும் இல்லை. 
கார், வேன்கள் மட்டுமின்றி அவ்வப்போது பேருந்துகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் நெருங்கும்போது இந்தச் சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வாகனச்-சோதனையில்-கோட்டை-விடப்படும்-பேருந்துகள்-3119438.html
3119437 சென்னை வேலூர் ஏழைகளுக்கு நடப்பாண்டில் 3 லட்சம் வீடுகள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு DIN DIN Saturday, March 23, 2019 11:53 PM +0530
தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு நடப்பாண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா ஆகியோரை ஆதரித்து மாதனூர் மற்றும் ஆம்பூரில் சனிக்கிழமை அவர் பேசியதாவது:
தமிழக தேர்தலை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ரௌடிகள், சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டு எந்தவித பிரச்னையும் இல்லாத நிலை உருவாகி, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. இந்தியா டுடே பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் என இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தைத் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்து விருது பெற்றுள்ளது. சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் 2-ஆம் இடத்திலும், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடுகள்: வீடில்லாத ஏழை மக்களுக்கு நடப்பாண்டில் 3 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்படும். வரும் ஆண்டில் 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.    
45 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் முதல்வர் பதவி: நான் சாதாரண தொண்டனாக அதிமுகவில் இருந்து 1974-ஆம் ஆண்டு கிளைச் செயலராக இருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்து கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்த முதல்வர் பதவி கிடைத்துள்ளது. இது சாதாரணமான விசயம் அல்ல. உழைப்பு, விசுவாசம் ஆகியவை அதிமுகவில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.  திமுகவில் அது முடியாது. அதிமுகவில் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது என்றார்.
பிரசாரத்தின் போது அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, நிலோபர் கபீல், ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம். மதியழகன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் ஆர்.வெங்கடேசன் மற்றும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஆம்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா ஆகியோரை ஆதரித்து மாதனூர் மற்றும் ஆம்பூரிலும், குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். மூர்த்தியை ஆதரித்து  பேர்ணாம்பட்டு, எர்த்தாங்கல், குடியாத்தம் புதிய பேருந்து நிலைய பகுதிகளிலும் முதல்வர் பிரசாரம் செய்தார்.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஏழைகளுக்கு-நடப்பாண்டில்-3-லட்சம்-வீடுகள்-முதல்வர்-எடப்பாடி-கேபழனிசாமி-பேச்சு-3119437.html
3119436 சென்னை வேலூர் 100 % வாக்குப் பதிவு: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு DIN DIN Saturday, March 23, 2019 11:53 PM +0530
வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்பாடி ஆக்சிலீயம் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைவரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். வேலூர் மாவட்டம் 100 சதவீத வாக்குப் பதிவு பெறும் வகையில் மாணவிகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியக்கூடிய விவி பேட் இயந்திரத்தின் நம்பகத் தன்மை குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதில், மகளிர் திட்ட அலுவலர் சிவராமன், கல்லூரி முதல்வர் ரெஜினாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/100--வாக்குப்-பதிவு-கல்லூரி-மாணவிகளுக்கு-விழிப்புணர்வு-3119436.html
3119435 சென்னை வேலூர் பள்ளி ஆண்டு விழா DIN DIN Saturday, March 23, 2019 11:53 PM +0530
ஆற்காடு எஸ்எஸ்எஸ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
எஸ்எஸ்எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் என்.செல்வம், செயலர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் செல்வகீதா வரவேற்றார். 
கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் விஜயலட்சுமி, வேதியியல் துறைத் தலைவர் தமிழ்தென்றல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி ஆண்டு விளையாட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.  
கல்லூரிச் செயலர் அன்வருல்லா தலைமை வகித்தார். முதல்வர் இலியாஸ், துணை முதல்வர் ராஜா முகமது முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் மொஹிதீன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களும், 2018 உலக வளைபந்து (டெனிகாய்ட்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுமான அறிவழகன், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் பஹீமுர் ரஹ்மான் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். தொடர்ந்து, மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நஜீர்அகமத் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/பள்ளி-ஆண்டு-விழா-3119435.html
3119434 சென்னை வேலூர் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு DIN DIN Saturday, March 23, 2019 11:53 PM +0530
ஆற்காடு அரிமா சங்க 2019-2020-ஆம் ஆண்டிடுக்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் எஸ்.பி. தினமணி தலைமை வகித்தார். புதிய தலைவராக எஸ்.ராமதாஸ், செயலராக ஜெ.குப்புசாமி, பொருளாளராக ஏ.பி.தயாபரன், ஒருங்கிணைப்பாளராக ஏ.கே.குமாரசாமி, துணைத் தலைவர்களாக ஏ.வி.டி. பாலா, ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் தலைவர் ஹரிபாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அரிமா-சங்க-நிர்வாகிகள்-தேர்வு-3119434.html
3119433 சென்னை வேலூர் அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும்: ராமதாஸ் பேச்சு DIN DIN Saturday, March 23, 2019 11:52 PM +0530 அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டம் சனிக்கிழமை  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக-வின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் அதிக வாக்குகளைக் கொண்டுள்ளவர்கள் பெண்கள்தான். அவர்கள் மூன்று சக்திகளைக் கொண்டவர்கள். அவர்கள் நினைத்தால் எதையும் மாற்றுவார்கள்.
அதிமுக கூட்டணி தெளிந்த நீரோடை. இதை அள்ளிப் பருகலாம். ஆனால் திமுக கூட்டணி தேங்கிக் கிடக்கும் குட்டை. நான் மருத்துவராக  இருந்தாலும் விவசாயம் செய்பவன். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் கோரிக்கைகளை நான்ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பேன். எங்களைப் பார்த்து திமுகவினர் காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து போன்றவற்றை நிறைவேற்ற நாங்கள் வலியுறுத்துவோம். மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுகவினர் மத்தியில் 18 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அது பற்றிப் பேசவில்லை. மத்தியில் நல்ல இலாகா வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தினார்கள். 
100 ஆண்டு காலம் ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் இருக்கிறது. அவர்களால் எப்படி மத்தியில் ஆட்சி செய்ய முடியும்? அதே போல்தான் தமிழகத்தில் திமுகவும் இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி கண்டது. இப்போது 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிக் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
அண்ணா ஏழையாக கட்சி ஆரம்பித்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே மறைந்தார். ஆனால் இப்போது இருக்கிற திமுக ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி கூட செலவு செய்வார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள் திமுகவினர். ஆனால், ஏழையை வளர்க்க மாட்டார்கள். ஏழைகளை ஒழிக்கத்தான் செய்வார்கள்.
இன்றைக்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கக் கூடியது அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான். ஆனால் எதிரணியைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களின் பாதுகாப்புத் தொடர்பாக ஓர் ஆணையைப் பிறப்பித்தார். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏடிஜிபி தலைமையில் குழு அமைத்து  புது ஆணையைப் பிறப்பித்துள்ளார். 
பாமகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவதற்கு மாங்கனியும் அதனுடன் இணைந்த இரட்டை இலையும்தான் சாட்சி. கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுவோம்; வெற்றி பெறுவோம். விடுபட்ட பணிகள் தொடர மாங்கனிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிரவாகிகள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அதிமுக-கூட்டணிக்-கட்சிகள்தான்-பெண்களுக்கு-பாதுகாப்பளிக்கும்-ராமதாஸ்-பேச்சு-3119433.html
3119432 சென்னை வேலூர் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் இடத்தை ஆட்சியர் ஆய்வு DIN DIN Saturday, March 23, 2019 11:52 PM +0530 ஆம்பூரில் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கும் இடத்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் கருவி ஆகியவை ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறைகளில் வைக்கப்பட உள்ளன. 
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள அந்த அறைகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
ஆம்பூர் தொகுதிக்குத் தேவையான 242 வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் கூடுதலாக 10 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சி. பேபி இந்திரா, ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் முரளி, ஆம்பூர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், நகராட்சிப் பொறியாளர் எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர், இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பார்த்திபன் உள்ளிட்டோர் 
உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வாக்குப்பதிவு-இயந்திரம்-வைக்கும்-இடத்தை-ஆட்சியர்-ஆய்வு-3119432.html
3119431 சென்னை வேலூர் அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு DIN DIN Saturday, March 23, 2019 11:52 PM +0530
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். 
இந்தக் கூட்டணிக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக  வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை புதியநீதிக் கட்சி மாநிலச் செயல் தலைவர் ஏ.சி.எஸ்.ரவிக்குமார் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், மாவட்ட தொழில்நுட்ப அணிச் செயலர் சதீஷ்குமார், பாஜக நிர்வாகி இளங்கோ, பாமக மாவட்டத் தலைவர் சரவணன், தேமுதிக மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அதிமுக-கூட்டணி-தேர்தல்-பணிமனை-திறப்பு-3119431.html
3119430 சென்னை வேலூர் வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் DIN DIN Saturday, March 23, 2019 11:52 PM +0530
திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின், வாணியம்பாடியில் பிரசாரம் செய்தார்.
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டு ரோடு, கோணாமேடு அம்பேத்கர் சிலை அருகில், ஜின்னா மேம்பாலம் மற்றும் ஆற்றுமேடு ஆகிய 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இக்கூட்டங்களில் உதய நிதி ஸ்டாலின் பேசியது:
பிரதமர் மோடி எடுத்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏழைகள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மாநிலத்தில் திமுக ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். 
திமுக பொருளாளர் துரைமுருகன், எம்எல்ஏ நந்தகுமார், முன்னாள் மாவட்டச் செயலர் க.தேவராஜி, நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார், மாவட்டப் பொறியாளர் அணி நிர்வாகி பிரபாகரன் மற்றும் மாவட்ட,  ஒன்றிய, நகர, நிர்வாகிகள், பொதுமக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். முன்னதாக கிரிசமுத்திரம் பகுதியில் ஒன்றிய திமுக சார்பிலும், வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வாணியம்பாடியில்-உதயநிதி-ஸ்டாலின்-பிரசாரம்-3119430.html
3119429 சென்னை வேலூர் வாக்களிக்கப் பயன்படுத்தும் மாற்று அடையாள ஆவணங்கள் அறிவிப்பு DIN DIN Saturday, March 23, 2019 11:52 PM +0530
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிலாக வாக்களிக்கப் பயன்படுத்தத் தகுதியான அடையாள ஆவணங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். 
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அதற்கு மாற்றாக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், பொதுத் துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் உள்ள வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், நிரந்தரக் கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, தேசிய வேலையுறுதித் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் சீட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை சரிபார்க்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது வாக்களிக்கத் தேவையான ஆவணமாக ஏற்கப்படாது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வாக்களிக்கப்-பயன்படுத்தும்-மாற்று-அடையாள-ஆவணங்கள்-அறிவிப்பு-3119429.html
3119428 சென்னை வேலூர் இந்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
இந்திய குடியரசுக் கட்சி (ஜி.மூர்த்தி பிரிவு) சார்பில் வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மேல்விஷாரம் பிரான்சா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஜி.நாகமணி தலைமை வகித்தார். தேசியத் தலைவர் சஞ்சீவி, மாநிலப் பொருளாளர் பி.எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஏ.பாபு வரவேற்றார். இந்திய குடியரசுக் கட்சி (ஜி.மூர்த்தி பிரிவு) சார்பில் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் எம்.எஸ் .கிருஷ்ணன், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.பீமராவ்மிலிந்தர், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை அறிமுகம் செய்து கட்சியின் பொதுச் செயலர் எஸ்.குணசேகரன் பேசினார்.  இதில், கட்சி நிர்வாகிகள் முருகேசன், ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/இந்திய-குடியரசுக்-கட்சியின்-வேட்பாளர்கள்-அறிமுகக்-கூட்டம்-3119428.html
3119427 சென்னை வேலூர் ஆம்பூரில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆம்பூர் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்களை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். 
ஆம்பூர் நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம், நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து மாதனூரில் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாதனூர் ஒன்றிய திமுக செயலர் ப.ச.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வேலூர் மக்களவைத் தொகுதி திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.  ஆம்பூர் தொகுதி பொறுப்பாளர் கே. தயாளமூர்த்தி, வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் அண்ணா அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஆம்பூரில்-ஆதரவு-திரட்டிய-திமுக-வேட்பாளர்-3119427.html
3119426 சென்னை வேலூர் வாகனச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல் DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
குடியாத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், காரில் எடுத்துச் செல்லப்பட்ட கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், அலுவலர் உமாசங்கர் தலைமையில் சித்தூர் சாலையில் பாக்கம் துணை மின் நிலையம் அருகே சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில் ரூ.1.10 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
கல்லப்பாடியை அடுத்த முதலியார் ஏரியைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் காரில் எடுத்து வந்த அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு, குடியாத்தம் தொகுதி தேர்தல் துணை அலுவலர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வாகனச்-சோதனையில்-ரூ110-லட்சம்-பறிமுதல்-3119426.html
3119425 சென்னை வேலூர் முதல்வர் கூட்டத்துக்கு வந்த தொண்டர் மாரடைப்பால் சாவு DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
கே.வி.குப்பம் அருகே முதல்வரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தேர்தல் பிரசாரம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை மாலை கே.வி.குப்பம் வந்தார். கூட்டத்தைக் காண சோழமூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் தாமோதரன் (60) வந்திருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/முதல்வர்-கூட்டத்துக்கு-வந்த-தொண்டர்-மாரடைப்பால்-சாவு-3119425.html
3119424 சென்னை வேலூர் முதல்வர் பிரசாரத்துக்குச் சென்ற மினி வேன் கவிழ்ந்து 15 பேர் காயம் DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
காட்பாடி அருகே தமிழக முதல்வரின் தேர்தல் பிரசாரத்தைக் காணச் சென்றபோது மினிவேன் கவிழ்ந்த விபத்தில் அதிமுக தொண்டர்கள் 15 பேர் காயமடைந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பிரசாரம் செய்தார். கே.வி.குப்பத்தில் நடைபெற்ற பிரசாரத்தைக் காண லத்தேரியில் இருந்து அதிமுக தொண்டர்கள் 20 பேர் மினி வேனில் சென்றனர். வடுகந்தாங்கல் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனத்தில் சென்ற 10 பேர் பலத்த காயமடைந்தனர். 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வரத் தாமதமானதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகலறிந்த போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் வேலூர் அடுக்கம்பாறை மற்றும் சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து லத்தேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/முதல்வர்-பிரசாரத்துக்குச்-சென்ற-மினி-வேன்-கவிழ்ந்து-15-பேர்-காயம்-3119424.html
3119423 சென்னை வேலூர் வெள்ளக்கல் அணைத் திட்டத்தை நிறைவேற்ற அமமுக-விற்கு வாக்களியுங்கள்: முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் DIN DIN Saturday, March 23, 2019 11:51 PM +0530
ஆம்பூர் தொகுதியில் வெள்ளக்கல் அணைத் திட்டத்தை நிறைவேற்ற அமமுக-வுக்கு வாக்களியுங்கள் என முன்னாள் அமைச்சர் கே. பாண்டுரங்கன் கூறினார்.
அமமுக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே. பாண்டுரங்கன் மற்றும் ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி ஆகியோருக்கான அறிமுகக் கூட்டம் ஆம்பூர் ப்ரியா மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கே.பாண்டுரங்கன் பேசியது:
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பலன் ஆம்பூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீரைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அகரம்சேரி மற்றும் மின்னூர் பாலாற்றுப் பாலம் அமைக்கப்படும். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்து தன்னந்தனியாக தேர்தலைச் சந்திக்கும் ஒரே கட்சி அமமுக-தான்.   கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைப்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். முதியோர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பாண்டுரங்கன் பேசினார்.
கூட்டத்தில் ஆம்பூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி பேசியது:
ஆம்பூரில் பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாதனூர் - ஒடுக்கத்தூர் மாநில நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெலத்திகமணி பெண்டா மற்றும் நாயக்கனேரி ஆகிய மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன், மாவட்ட துணைச் செயலர் சக்கரபாணி, ஆம்பூர் நகரச் செயலர் சமரசன், மாதனூர் ஒன்றியச் செயலர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் இராம.சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் கண்ணபிரான், மாவட்ட அவைத் தலைவர் செல்வம், பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வெள்ளக்கல்-அணைத்-திட்டத்தை-நிறைவேற்ற-அமமுக-விற்கு-வாக்களியுங்கள்-முன்னாள்-அமைச்சர்-கேபாண்டுரங்கன்-3119423.html
3119422 சென்னை வேலூர் அமமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் DIN DIN Saturday, March 23, 2019 11:50 PM +0530
ஆம்பூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.
விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், மிட்டாளம் ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேலூர் மேற்கு மாவட்டச் செயலரும் ஆம்பூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.பாலசுப்பிரமணி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அமமுகவில்-இணைந்த-மாற்றுக்-கட்சியினர்-3119422.html
3119421 சென்னை வேலூர் ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவர் சாவு DIN DIN Saturday, March 23, 2019 11:50 PM +0530
வேலூரில் ஆட்டோவில் சென்றுபோது தவறி விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவர் மீது அந்த ஆட்டோவின் பின்சக்கரம் ஏறியது. இதில் அந்த மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனின் மகன் திலக்கராஜன் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்புப் படித்து வந்தார். சனிக்கிழமை காலை 7 மணியளவில் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றார். அந்த ஆட்டோ பள்ளி அருகே சென்றபோது திடீரென திலக்கராஜன், ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். 
இதில், ஆட்டோவின் பின்சக்கரம் திலக்கராஜன் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸார் அங்கு சென்று திலக்கராஜனின் சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஆட்டோவில்-இருந்து-தவறிவிழுந்து-பள்ளி-மாணவர்-சாவு-3119421.html
3119420 சென்னை வேலூர் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை திருட்டு DIN DIN Saturday, March 23, 2019 11:50 PM +0530
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
திருப்பத்தூர் அருகே பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியின் மனைவி வனிதாமணி (65). இவர் சனிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 சவரன் நகைகள், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/வீட்டின்-பூட்டை-உடைத்து-9-சவரன்-நகை-திருட்டு-3119420.html
3118933 சென்னை வேலூர் அமமுக வேட்பாளர்கள்: சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதி DIN DIN Saturday, March 23, 2019 01:20 AM +0530 சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் நெமிலி மேற்கு ஒன்றியச் செயலர் டி.ஜி.மணி(65) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெமிலி வட்டம், மேலபுலம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இரண்டு முறையும், வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக ஒரு முறையும் இருந்துள்ளார். 
இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு லட்சுமி, அருணாராணி, ரேவதி என 3 பெண்கள் உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அமமுக-வேட்பாளர்கள்-சோளிங்கர்-சட்டப்-பேரவைத்-தொகுதி-3118933.html
3118929 சென்னை வேலூர் அமமுக வேட்பாளர்கள்: வேலூர் மக்களவைத் தொகுதி DIN DIN Saturday, March 23, 2019 01:19 AM +0530 வேலூர் மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே. பாண்டுரங்கன் (65) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் மக்களவைத் தேர்தலுக்கான 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 
அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மாதனூர் பகுதியைச் சேர்ந்த கே.பாண்டுரங்கன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர், அமமுக அமைப்புச் செயலராகப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே மாதனூர் ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர், தமிழ்நாடு கதர் வாரிய துணைத் தலைவர், தமிழ்நாடு தோல் தொழில் வளர்ச்சி வாரியத் தலைவர், ஊரகத் தொழில் துறை, வேளாண்மை துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அமமுக-வேட்பாளர்கள்-வேலூர்-மக்களவைத்-தொகுதி-3118929.html
3118928 சென்னை வேலூர் அமமுக வேட்பாளர்கள்: அரக்கோணம்  மக்களவைத் தொகுதி DIN DIN Saturday, March 23, 2019 01:19 AM +0530 அரக்கோணம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி.பார்த்திபன்(44) அறிவிக்கப்பட்டுள்ளார். 
அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. கோபாலின் மூத்த மகனான இவர் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதியில் 2016-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி, பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 
சோளிங்கர் நகரக் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரான என்.ஜி.பார்த்திபன் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவில் இணைந்தார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், அபிநயா, கயல்விழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அமமுக-வேட்பாளர்கள்-அரக்கோணம்--மக்களவைத்-தொகுதி-3118928.html
3118925 சென்னை வேலூர் ஏ.கே.மூர்த்திக்கு ரூ. 5.63 கோடி சொத்து DIN DIN Saturday, March 23, 2019 01:18 AM +0530 அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, அவரது மனைவி ஏ.எம்.பத்மினிதேவி, மகன் ஏ.கே.விஜய்மகேஷ், மகள் ஏ.கே.சமித்ரா ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ. 5 கோடியே 63 லட்சத்து 3 ஆயிரத்து 417 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையும் சொத்துகள்: ஏ.கே.மூர்த்தி பெயரில் மொத்தம் ரூ. 39 லட்சத்து 38 ஆயிரத்து 450 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 51 லட்சத்து 18 ஆயிரத்து 335 மதிப்பிலும், மகன் பெயரில் ரூ. 35 லட்சத்து 86 ஆயிரத்து 790 மதிப்பிலும், மகள் பெயரில் ரூ. 27 லட்சத்து 67 ஆயிரத்து 22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
ஏ.கே.மூர்த்தி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 65,500-ம், மனைவி பெயரில் ரூ. 45,785-ம், மகன் பெயரில் ரூ.15,880-ம், மகள் பெயரில் ரூ.14,965-ம், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அசையா சொத்துகள்: விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.கே.மூர்த்தி பெயரில் ரூ. 13 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 77 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மகன் பெயரில் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மகள் பெயரில் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. 
இதுதவிர, விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.கே.மூர்த்தி பெயரில் மொத்தம் ரூ.93 லட்சத்து ஆயிரத்து 450 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 1 கோடியே 57 லட்சத்து 21 ஆயிரத்து 450 மதிப்பிலும், மகன் பெயரில் ரூ. 27 லட்சத்து 94 ஆயிரத்து 960 மதிப்பிலும், மகள் பெயரில் ரூ. 27 லட்சத்து 94 ஆயிரத்து 960 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
கடன்: ஏ.கே.மூர்த்தி பெயரில் ரூ. 26 லட்சத்து 69 ஆயிரத்து 80, அவரது மனைவி பெயரில் ரூ. 26 ஆயிரத்து 69 ஆயிரத்து 80, மகன் பெயரில் ரூ. 23 லட்சத்து 72 ஆயிரத்து 418 கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், பாமக மாநில துணைப் பொதுச் செயலருமான ஏ.கே.மூர்த்தி (54) வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். 
அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, முன்னாள் மத்திய அமைச்சர் எ.வ.வேலு, பாமக துணைப் பொதுச் செயலர் சரவணன், பாஜக மாவட்டத் தலைவர் தசரதன் ஆகியோர் உடனிருந்தனர்.  
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஏ.கே.மூர்த்தி கூறியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு நிலைத் தன்மையை ஏற்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் 10 கட்டளைகளுடன் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளார். அரக்கோணம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
அதற்கு என்னை ஜாதி, மதம் சாராத பொது வேட்பாளராக நிறுத்தியிருப்பதே முக்கியக் காரணமாகும். இதன்மூலம், தேர்தலில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக விளங்குகிறது. தேர்தலில் நான் பெற்றி பெறும்போது அரக்கோணம் தொகுதி மக்களுக்கு ஊழியனாக இருந்து செயலாற்றுவேன் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஏகேமூர்த்திக்கு-ரூ-563-கோடி-சொத்து-3118925.html
3118923 சென்னை வேலூர் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு DIN DIN Saturday, March 23, 2019 01:18 AM +0530 வாணியம்பாடியில் அதிமுக கூட்டணியின் தேர்தல் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக கூட்டணியின் வேலூர் மக்களவைத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதை அதிமுக கூட்டணி வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வியாழக்கிழமை இரவு திறந்து வைத்தார். 
இதில் மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார், நகரச் செயலர் சதாசிவம், பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/அதிமுக-தேர்தல்-அலுவலகம்-திறப்பு-3118923.html
3118922 சென்னை வேலூர் திருமலையில் தங்கும் அறையில் பூட்டை உடைத்து மீண்டும் திருட்டு DIN DIN Saturday, March 23, 2019 01:17 AM +0530 திருமலையில் பக்தர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து அவர்களின் உடமைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஏழுமலையானை தரிசிக்க நாகர்கோவிலைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருமலைக்கு வியாழக்கிழமை வந்தனர். அவர்கள் எஸ்எஸ்ஆர்எச் வளாகத்தில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இக்குடும்பத்தினர் தரிசனத்திற்காக சென்ற நேரத்தில் அந்த அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, செல்லிடப்பேசி, தங்க நகைகள், ரயில் பயண டிக்கெட், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
இது குறித்து பக்தர்கள் திருமலை போலீஸாரிடம் புகார் அளித்தனர்.  அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாள்களில் 3ஆவது முறையாக வாடகை அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/திருமலையில்-தங்கும்-அறையில்-பூட்டை-உடைத்து-மீண்டும்-திருட்டு-3118922.html
3118921 சென்னை வேலூர் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு DIN DIN Saturday, March 23, 2019 01:17 AM +0530 நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி(44 ). கூலித் தொழிலாளியான அவர் வியாழக்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து புதுப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது வேட்டப்பட்டு கூட்டு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து ராஜாமணி திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். 
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.  நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/இருசக்கர-வாகனத்திலிருந்து-தவறி-விழுந்தவர்-சாவு-3118921.html
3118919 சென்னை வேலூர் ஆம்பூர் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் DIN DIN Saturday, March 23, 2019 01:17 AM +0530 திமுக வெற்றி பெற்றால் ஆம்பூர் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவோம் என திரைப்பட நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த், ஆம்பூர் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து ஆம்பூரில் மோட்டுக்கொல்லை, ஏ-கஸ்பா, புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை வழங்காமல், தேவையில்லாத திட்டங்களை செயல்படுத்தியதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைதான் திமுகவின் ஹீரோ. திமுக வெற்றி பெற்றால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். நேத்ராவதி - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆம்பூர் ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூர் அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும். திமுக ஆட்சியில்தான் ஆம்பூருக்கு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் பேசினார்.
வேலூர் வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த், ஆம்பூர் பேரவைத் தொகுதி வேட்பாளர் அ.செ.வில்வநாதன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமார், ஆம்பூர் நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், பேர்ணாம்பட்டில் நான்கு கம்பம், நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஆம்பூர்-அரசு-மருத்துவமனையை-பல்நோக்கு-மருத்துவமனையாக-மாற்றுவோம்-உதயநிதி-ஸ்டாலின்-3118919.html
3118918 சென்னை வேலூர் கூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாகச் செயல்படுங்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி DIN DIN Saturday, March 23, 2019 01:17 AM +0530 "கூட்டணிக் கட்சியின் வெற்றி, நமது கட்சியின் (அதிமுக) வெற்றி ஆகிய இரண்டுமே நமக்கு முக்கியம். கூட்டணிக் கட்சியினரோடு இணக்கத்துடன் தேர்தல் பிரசார பணியை மேற்கொள்ளுங்கள்' என தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
சோளிங்கர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நெமிலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: 
வேலூர் மாவட்டத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். எனினும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவின் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். 
சோளிங்கர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நமது சின்னம் இரட்டைஇலை ஆகும். எனவே சோளிங்கர் தொகுதியில் மாம்பழம், இரட்டை இலை ஆகிய இரண்டிற்கும் வாக்கு சேகரிக்க வேண்டும். கூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாக செயல்பட்டு தேர்தல் பிரசாரத்தை நடத்துங்கள். நமக்கு மாம்பழமும், இரட்டை இலையும் ஒருசேர வெற்றி பெற வேண்டியது முக்கியம் என்றார் கே.சி.வீரமணி.
இக்கூட்டத்தில் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில் "நமது கூட்டணி பலமான கூட்டணி. 
இக்கூட்டணியில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டால் வெற்றி என்பது நமக்கு எளிதாகி விடும். கூட்டணிக் கட்சியினரின் தலைவர்களது பிரசாரங்களின்போது ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக மேற்கொள்ளுங்கள். இரு சின்னங்களையும் மக்களின் மனத்தில் நிலைநிறுத்துங்கள்' என்றார்.
இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் சு.ரவி, சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் சம்பத், கட்சியின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலர் கமலக்கண்ணன், ஒன்றியச் செயலர்கள் நெமிலி கிழக்கு ஏ.ஜி.விஜயன், மேற்கு அருணாபதி, சோளிங்கர் கார்த்திகேயன், காவேரிபாக்கம் ராஜா, மாவட்ட பாசறைச் செயலர் ஏ.எல்.விஜயன் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/கூட்டணிக்-கட்சியினரோடு-இணக்கமாகச்-செயல்படுங்கள்-அமைச்சர்-கேசிவீரமணி-3118918.html
3118917 சென்னை வேலூர் ஏ.சி.சண்முகத்துக்கு ரூ. 191.22 கோடி சொத்து DIN DIN Saturday, March 23, 2019 01:16 AM +0530 வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதாலட்சுமி ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையும் சொத்து: ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 42 லட்சத்து 18 ஆயிரத்து 320 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 21 கோடியே 14 லட்சத்து 42 ஆயிரத்து 682 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன. 
ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,41,243-ம், வங்கியிருப்பு ரூ. 57,68,234.37-ம், பங்கு பத்திரங்களில் முதலீடு  ரூ. 23,95,78,036-ம், காப்பீட்டு முதலீடு ரூ. 1,30,000-ம், இதர முதலீட்டின் மீதான வருவாய்  ரூ. 3,12,77,307-ம், நகைகள் ரூ. 66,03,500-ம், அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ.8,52,117-ம், வங்கியிருப்பு ரூ. 7,55,688.90ம், பங்கு பத்திரங்களில் முதலீடு  ரூ. 16,27,49,967-ம், காப்பீட்டு முதலீடு ரூ. 2,97,380-ம், இதர முதலீட்டின் மீதான வருவாய்  ரூ. 3,63,80,145-ம், நகைகள் ரூ. 1,04,07,385-ம் அடங்கும்.
அசையா சொத்துகள்...
விவசாய  நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே  80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
மேலும், விவசாய நிலங்கள் அல்லாத  இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது  மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.  
கடன் மதிப்பு: ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 13 கோடியே 20  லட்சத்து 50 ஆயிரம், அவரது மனைவி பெயரில் ரூ. 9 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பு மனுதாக்கல்:  வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் வி.எஸ்.விஜய், புதிய நீதிக் கட்சியின் மாவட்டச் செயலர் சி.பி.கே.பாலாஜி, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் இளவழகன், தேமுதிக மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து ஏ.சி.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நான், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நான் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படும் போது 2 ஆண்டில் வேலூர் பொலிவுறு நகரம் திட்டத்தைச் செயல்படுத்துவதுடன், வேலூரை ஒரு குட்டி பெங்களூராக மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி, மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஏ.சி.சண்முகம் வேலூர் பழைய மாநகராட்சியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மேளதாளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஏசிசண்முகத்துக்கு-ரூ-19122-கோடி-சொத்து-3118917.html
3118916 சென்னை வேலூர் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் DIN DIN Saturday, March 23, 2019 01:16 AM +0530 ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட குண்டி மாரியம்மன் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குண்டி மாரியம்மன் வட்டம், முதலைமடுகு மற்றும் ரெட்டியூர் இணைப்புச் சாலைப் பகுதிகளில் ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி- திருப்பத்தூர் பிரதான சாலை ரெட்டியூர் இணைப்புச் சாலை அருகே வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி மற்றும் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/குடிநீர்-கேட்டு-காலிக்-குடங்களுடன்-பெண்கள்-சாலை-மறியல்-3118916.html
3118915 சென்னை வேலூர் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கத் தடை: ஆட்சியர் அறிவிப்பு DIN DIN Saturday, March 23, 2019 01:16 AM +0530 வேலூர் மாவட்டத்தில் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன் வளர்ப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இதனால் இந்த வகை மீன்கள் நீர்நிலைகளில்  நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லை.
 மேலும், இவ்வகை மீன்கள் மிகக் குறைந்த அளவு  தண்ணீரிலும்  இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.
இம்மீன்கள், நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் வகை மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் வகைகள் அழியும் அபாயம்  உள்ளது.   இந்த வகை மீன்களைப் பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளர்ப்புக் குளங்களிலோ வளர்த்தால் இவை மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு  வழியில்லாமல் போய்விடும். எனவே, வேலூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்போர், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதை மீறி, ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது, வளர்ப்பது, இருப்பு மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள்  பெறப்பட்டால், அவற்றை முற்றிலும் அழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீன்  வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட  மீன்களை மட்டுமே மீன்வளத் துறையின் ஆலோசனையைப் பெற்று  வளர்க்க வேண்டும். 
தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்போர் குறித்து பொதுமக்கள் 0416- 2240329 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/ஆப்பிரிக்கன்-கெளுத்தி-மீன்கள்-வளர்க்கத்-தடை-ஆட்சியர்-அறிவிப்பு-3118915.html
3118914 சென்னை வேலூர் மின்வழிப் பாதை மூலம் 22 சதவீத மின்சாரம் இழப்பு: விஐடி வேந்தர்  ஜி.விசுவநாதன் தகவல் DIN DIN Saturday, March 23, 2019 01:15 AM +0530 "மின்வழிப் பாதை மூலம், நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 22 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பைக் குறைப்பதற்கான் வழிமுறைகளை மின் பொறியியல் வல்லுநர்கள் காண வேண்டும்' என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் பள்ளி சார்பில் ஐபேட் எனும் மின்சக்தி, முன்னேற்றப்பட்ட கணினி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான இரு நாள் சர்வதேச மாநாடு விஐடி-யில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், அமெரிக்கா, வங்கதேசம், ஜப்பான், எகிப்து, வியத்நாம், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மின்பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என 320 பேர் பங்கேற்றுள்ளனர். 
இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து மாநாடு குறித்த செயலியை அறிமுகப்படுத்திப் பேசியது: 
மின் உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்கினாலும் மின் பற்றாக்குறை அதிகம் உள்ளது.  நாட்டில் 20 கோடி பேர் இன்னும் மின்வசதி பெறாமல் உள்ளனர். நாட்டில் மின் உற்பத்தியில் 75 சதவீதம் அனல் மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலமாகவே கிடைக்கிறது. மற்றவை நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகிறது.
மத்திய அரசு நாட்டை மின் உற்பத்தியில் பசுமை நாடாக  மாற்றுவதற்கான திட்டத்தை கடந்த 1990ஆம் ஆண்டில் கொண்டு வந்ததன் மூலம் தேசிய பவர் கிரிட் கழகம் உருவாக்கப்பட்டு மாநிலங்களுக்கிடையே மின்சாரத்தை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு மின் விநியோகம் செய்வதில் மின் இழப்பு அதிகம் ஏற்படுகிறது. மின்வழிப் பாதை மூலம் நாட்டின் மின் உற்பத்தியில் 22 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மின் பொறியியல் வல்லுநர்கள் மின் இழப்பைக் குறைக்கும் வழிமுறைகளைக் காண வேண்டும். மின் உற்பத்தியில் வளர்ந்த நாடுகள் மின் உற்பத்தி குறைவான நாடுகளுக்கு தங்களின் உபரி மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அவர் பேசினார். 
ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆசிய பிராந்திய  துணைத் தலைவர் கைலாஷ் சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
இந்த மாநாட்டில் மின் பொறியியல், ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் சார்ந்த பல நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சி தொடங்கியுள்ளது. 
தற்போது உலகில் பொருளாதாரம், மேலாண்மை, தொழிற்சாலைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகியுள்ளன. இவை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மின்உற்பத்தி சாதன நிறுவனங்களும் இணைந்து சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கான சாதனங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் கனிணி பயன்பாடு வரத் தொடங்கியது. தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. மின் பொறியியல் மூலம் கடந்த 4, 5 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வின் ஸ்ட்ரீம் எனர்ஜி டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் வெங்கட்குமார் டங்ரிலா, சவூதி அரேபிய நாட்டின் கிங் ஃபைசல் பல்கலைக்கழக பேராசிரியர் கரேல் எல்.ஸ்டெரிக்ஸ் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்றுப் பேசினர்.
முன்னதாக, விஐடி மின் பொறியியல் பள்ளி முதல்வர் எஸ்.சிவபாலன் வரவேற்றார். 
மாநாட்டின் நோக்கம் குறித்து மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் ஐ.ஜேக்கப் ரெஜிலெண்ட் விளக்கமளித்தார். பேராசிரியர்கள் ஆர்.திருமலைவாசன், எஸ்.மெய்கண்டசிவம், பி.சரவணன், ஜெ.பெல்வின் எட்வர்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டு அமைப்பாளர் பி.அருள்மொழிவர்மன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/மின்வழிப்-பாதை-மூலம்-22-சதவீத-மின்சாரம்-இழப்பு-விஐடி-வேந்தர்--ஜிவிசுவநாதன்-தகவல்-3118914.html
3118912 சென்னை வேலூர் முத்துக்குமார சுவாமி கோயில் தேரோட்டம் DIN DIN Saturday, March 23, 2019 01:15 AM +0530 திருப்பத்தூரில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, முத்துக்குமார சுவாமி கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன தொடங்கியது. இதையடுத்து, 20-ஆம் தேதி சிவகாமி அம்பாள் சமேத சிதம்பேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி, பஜார் பகுதி முழுவதும் வியாபாரிகளும், சமூக சேவகர்களும் மோர், பானகம் ஆகியவற்றை வழங்கினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/முத்துக்குமார-சுவாமி-கோயில்-தேரோட்டம்-3118912.html
3118910 சென்னை வேலூர் பங்குனி உத்திரம்: சிவன், பெருமாள் கோயில்களில் திருக்கல்யாணம் DIN DIN Saturday, March 23, 2019 01:15 AM +0530 ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
நீவா நதி எனும் பொன்னை ஆறும், பாலாறும் சங்கமிக்கும் படுகையில் தொன்மை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இது சிவபெருமான், ராஜரிஷி மற்றும் சப்த ரிஷிகளுக்கு கல்யாணக் கோலத்துடன் தரிசனம் தந்த புராண - புராதனப் பெருமைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் பராந்தக சோழ மன்னரால் திருப்பணிகள் செய்து, புனரமைத்த பெருமைக்கு உரியது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
இந்த விழாவையொட்டி, மாலை 3 மணியளவில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், சீர்வரிசை ஊர்வலமும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தலில் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் மற்றும் சிவனுக்குப் பிரியமான பூதகண வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், வளையல் அருட்பிரசாதமும், திருமண விருந்தும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு கல்யாணக் கோல சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் தெங்கால்  மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
ஆற்காடு, திமிரி 
கோயில்களில்...
ஆற்காடு, திமிரி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு தோப்புகானா பகுதியில் உள்ள அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோயிலில் கடந்த 10ஆம் தேதி  பிரம்மோற்சவம் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு, அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான அன்னபூரணிஅம்மனுக்கும், கங்காதர ஈஸ்வருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் திருப்பணிக் குழுவினர், உபயதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 10ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. இக்கோயில் மூலவருக்கு வியாழக்கிழமை சிறப்பு திருமஞ்சனமும் இரவு உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றன. திமிரி தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரர் கோயிலில் கடந்த 12ஆம்தேதி  பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் மூலவர் சோமநாத ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டன. இரவில், அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான தனுமத்தியம்மனுக்கும், சோமநாத ஈஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி கோயிலில்...
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
இக்கோயிலில் மூலவர்களான சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை வியாழக்கிழமை நடத்தப்பட்டன. உற்சவ மூர்த்திகளான பத்மாவதித் தாயார், ஆண்டாள் நாச்சியார், வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தையொட்டி பட்டு வஸ்திரம், இனிப்பு, காரம், பழ வகைகள், திருக்கல்யாணத்திற்கான அனைத்து பொருள்களுடன் யாக குண்ட பூஜை நடைபெற்றது. அத்துடன் தொடங்கிய சிறப்பு பூஜையில் மந்திரங்கள், மங்கல இசை முழங்க பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் கல்யாணக் கோலத்தை தரிசித்தனர். திருக்கல்யாண உற்வசவத்தையொட்டி பக்தர்களுக்கு சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டதோடு, கல்யாண விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாச கைங்கர்ய சபா குழுவினர்  மற்றும் சேவார்த்திகள் செய்திருந்தனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/23/பங்குனி-உத்திரம்-சிவன்-பெருமாள்-கோயில்களில்-திருக்கல்யாணம்-3118910.html
3118469 சென்னை வேலூர் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் DIN DIN Friday, March 22, 2019 07:53 AM +0530 திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஜோலார்பேட்டை அருகே நாட்டறம்பள்ளி பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக நகரச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவு அமைச்சர் கே.சி.வீரமணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி பேசினார். 
கூட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/அதிமுக-வேட்பாளர்-அறிமுகக்-கூட்டம்-3118469.html
3118468 சென்னை வேலூர் "மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம்' DIN DIN Friday, March 22, 2019 07:52 AM +0530 விரைவில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி துரைமுருகன் பேசியதாவது: 
தற்போதுள்ள ஆட்சியாளர்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அதே போல் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
திமுக மாவட்டச் செயலர் ஆர்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், மதிமுக மாவட்டச் செயலர் பி.என் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/மத்தியிலும்-மாநிலத்திலும்-விரைவில்-ஆட்சி-மாற்றம்-3118468.html
3118467 சென்னை வேலூர் ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள் DIN DIN Friday, March 22, 2019 07:52 AM +0530 அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆதரவு திரட்டினார்.
ஆற்காடு நகரம், ஒன்றியம், திமிரி ஒன்றியம், திமிரி, விளாபாக்கம், கலவை ஆகிய பேரூராட்சி, கணியம்பாடி ஒன்றியப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவரை வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி அறிமுகப்படுத்தினார். 
அதிமுக ஆற்காடு நகரச் செயலர் எம்.சங்கர், ஒன்றியச் செயலர்கள், எம்.குட்டி (ஆற்காடு), சொரையூர் குமார்(திமிரி), பாமக மாநில நிர்வாகிகள் க.சரவணன், தேமுதிக மாவட்டச் செயலர் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக வேட்பாளர்
மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பாக்கம்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, அகரம், தோளப்பள்ளி, அக்ராவரம், பள்ளிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அ.செ. வில்வநாதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். மாதனூர் ஒன்றிய திமுக செயலர் ப.ச. சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/ஆதரவு-திரட்டிய-வேட்பாளர்கள்-3118467.html
3118466 சென்னை வேலூர் உருது மொழி கருத்தரங்கம் DIN DIN Friday, March 22, 2019 07:52 AM +0530 ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் உருதுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரியின் தாளாளர் அப்ரார் அஹமது தலைமை வகித்தார். மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கப் பொதுச் செயலர் ஜியாவுதீன் அஹமது, கல்லூரி முதல்வர் 
எஸ்.ஏ.சாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருதுத் துறைத் தலைவர் முஹமது யாசிர் வரவேற்றார். 
இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 50 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையது முஹமது ஹசீம், கர்நாடக மாநில உருது மொழிக் கழக முன்னாள் தலைவர் எம்.என்.ஷாயித், எழுத்தாளர் ஹலமாஜா பாரூக், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் சையது சகாபுதீன், சென்னைப் பல்கலைக்கழக உருதுத் துறைத் தலைவர் கே.ஹபீப் அஹமது ஆகியோர் பேசினார்கள்.
இதில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/உருது-மொழி-கருத்தரங்கம்-3118466.html
3118465 சென்னை வேலூர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் DIN DIN Friday, March 22, 2019 07:52 AM +0530 ஆற்காடு நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு நகராட்சிஆணையர் ஷகிலா தலைமையில் சுகாதார ஆய்வாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட 
அதிகாரிகள் பேருந்து நிலையம், அண்ணாசாலை, ஷா காஞ்சிபஜார், கலவை சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/தடை-செய்யப்பட்ட-பிளாஸ்டிக்-பொருள்கள்-பறிமுதல்-3118465.html
3118464 சென்னை வேலூர் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 10 பேர் கைது DIN DIN Friday, March 22, 2019 07:51 AM +0530 வாணியம்பாடியில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரப் ஆரிப் (42) தொழிலதிபர். இவரது தாயைப் பார்த்துக் கொள்ள செவிலியர் தேவைக்காக கடந்த 16-ஆம் தேதி வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, வாணியம்பாடியைச் சேர்ந்த அபிதா (48) என்ற பெண்ணைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அப்துல்ரப் ஆரிப்பை அரை நிர்வாணமாக்கி அவரது பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்லிடப்பேசியில் படம் பிடித்து, அவரிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டினர். மேலும் அவரது கையில் இருந்த ரூ. 4 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டனர். பின்னர், ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 2 லட்சத்துக்கு நகைகளை வாங்கிக் கொண்டு, ரூ. 1 லட்சத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து வாணியம்பாடி காதர்பேட்டை அருகில் அப்துல்ரப் ஆரிப்புடன் மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்தபோது, அவரின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பியோடினர். 
பின்னர், அந்த இளைஞரை வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். டிஎஸ்பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பெண்கள் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபர் அப்துல்ரப் ஆரிப்பை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. 
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆபிதா, ஜெயலாபுதின் (38), ஹசேன் (28), கோவிந்தராஜ் (26), சதாம் உசேன் (23), சாது (24), அஸ்லம் (33), நதீம் (21), மனோஜ்குமார் (20), தாரா (18) ஆகிய 10 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது  செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/தொழிலதிபரை-மிரட்டி-பணம்-பறித்த-2-பெண்கள்-உள்பட-10-பேர்-கைது-3118464.html
3118463 சென்னை வேலூர் பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது DIN DIN Friday, March 22, 2019 07:51 AM +0530 திருப்பத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 
திருப்பத்தூரை அடுத்த ராமக்காபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தனலட்சுமி (48). இவர் கடந்த 3-ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதுப்பேட்டை சாலையில் டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி விசாரித்தபோது, அதிலிருந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(26), நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (25) என்பதும், அவர்கள் தனலட்சுமியிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் ஓட்டி வந்த காரை சூளகிரி பகுதியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/பெண்ணிடம்-நகை-பறித்த-இருவர்-கைது-3118463.html
3118359 சென்னை வேலூர் சுயநலத்துக்காக அணி மாறியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: அமைச்சர் கே.சி. வீரமணி DIN DIN Friday, March 22, 2019 07:19 AM +0530 கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்து விட்டு சுயநலத்துக்காக அணி மாறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார். 
குடியாத்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
2016 பேரவைத் தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கரில் நான் பரிந்துரை செய்தவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்து வெற்றியும் பெற வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவர்கள் கட்சிக்கும், வாக்களித்த தங்களின் தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு தங்களின் சுயநலத்துக்காக டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையிலான அரசைக் கவிழ்க்க சதி செய்தார்கள். அதன் விளைவு, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது மீண்டும் அவர்கள் மக்களாகிய உங்களைத் தேடி வாக்கு கேட்டு வருகின்றனர்.  அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  குடியாத்தம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மூர்த்தியை வெற்றிபெற வைத்தால், கெங்கையம்மன் கோயில் அருகே கௌன்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாகத் தரம் உயர்த்த  உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட குடியாத்தம் புறவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். 
தொடர்ந்து குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர். மூர்த்தி பேசினார்.  
கூட்டத்தில் அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ராமு, பாமக நிர்வாகிகள் என்.டி.சண்முகம், ஜி.கே.ரவி, பாஜக மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன், நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த், தமாகா நகரத் தலைவர் எஸ்.அருணோதயம்,  தேமுதிக மாவட்டச் செயலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/சுயநலத்துக்காக-அணி-மாறியவர்களுக்கு-பாடம்-புகட்டுங்கள்-அமைச்சர்-கேசி-வீரமணி-3118359.html
3118358 சென்னை வேலூர் "இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக இருப்பேன்' DIN DIN Friday, March 22, 2019 07:18 AM +0530 இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக நான் இருப்பேன் என புதிய நீதிக் கட்சியின் தலைவரும், வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் வியாழக்கிழமை கூறினார்.
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் வெற்றி பெற்றால் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மக்களவை உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும்.  படித்து முடித்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை மற்றும் அதற்குத் தயார் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இயங்கும் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படும்.  
ஆம்பூரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்குப் பரிசு:  அதிக வாக்குகளைப் பெற்று தரும் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு தலா ஒரு தொகுதிக்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வீதம் 12 மோட்டார் சைக்கிள்கள் தரப்படும். சிறப்பாகப் பணியாற்றி அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொண்டர்கள் ரயில் மூலம் தில்லிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.  அதேபோல அதிக வாக்குகளை பெற்றுத் தரும் கட்சி நிர்வாகிகள் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம். மதியழகன் வரவேற்றார். மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, பாஜக மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன், பொதுச் செயலர் வாசுதேவன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டி.கே. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/இஸ்லாமியர்களின்-பாதுகாவலனாக-இருப்பேன்-3118358.html
3118356 சென்னை வேலூர் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் நாளை பிரசாரம் DIN DIN Friday, March 22, 2019 07:18 AM +0530 மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 23, 24) பிரசாரம் செய்ய உள்ளார்.
அதிமுக கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் "அக்ரி' கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இது தவிர, சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர் தொகுதியில் ஜே.ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் (தனி) தொகுதியில் ஆர்.மூர்த்தி, சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23, 24) ஆகிய இரு நாள்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 
சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேலம் இணைப்புச் சாலை, 9.30 மணிக்கு திருப்பத்தூர், 10 மணிக்கு ஆசிரியர் நகர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை, 11.30 மணிக்கு வாணியம்பாடி நகரம், 11.40 முதல் பகல் 1 மணி வரை ஆம்பூர் நகரம் உள்ளிட்ட 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். மாலை 4 மணிக்கு ஆம்பூர் புறவழிச்சாலை, 5 மணிக்கு உமராபாத், மாலை 6 மணிக்கு பேர்ணாம்பட்டு, இரவு 7 மணிக்கு கே.வி.குப்பம், 8 மணிக்கு லத்தேரி, 8.30 மணிக்கு காட்பாடி சித்தூர் நிலையம், 9 மணிக்கு வேலூர் புது மாநகராட்சி, இரவு 9.30 மணிக்கு மண்டித் தெரு ஆகிய இடங்களில் பேச உள்ளார். இரவு வேலூரில் தங்குகிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வேலூர் வள்ளலார், 9.30 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம், 10 மணிக்கு முத்து கடை பேருந்து நிலையம், 10.45 மணிக்கு பானாவரம் இணைப்புச் சாலை, பகல் 12 மணிக்கு காவேரிப்பாக்கம் பூங்கா, 12.30 மணிக்கு பனப்பாக்கம் பேருந்து நிலையம், 1 மணிக்கு நெமிலி, மாலை 4 மணிக்கு அரக்கோணம், மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/வேலூர்-மாவட்டத்தில்-தமிழக-முதல்வர்-நாளை-பிரசாரம்-3118356.html
3118357 சென்னை வேலூர் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் நாளை பிரசாரம் DIN DIN Friday, March 22, 2019 07:18 AM +0530 மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 23, 24) பிரசாரம் செய்ய உள்ளார்.
அதிமுக கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் "அக்ரி' கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இது தவிர, சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர் தொகுதியில் ஜே.ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் (தனி) தொகுதியில் ஆர்.மூர்த்தி, சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23, 24) ஆகிய இரு நாள்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 
சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேலம் இணைப்புச் சாலை, 9.30 மணிக்கு திருப்பத்தூர், 10 மணிக்கு ஆசிரியர் நகர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை, 11.30 மணிக்கு வாணியம்பாடி நகரம், 11.40 முதல் பகல் 1 மணி வரை ஆம்பூர் நகரம் உள்ளிட்ட 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். மாலை 4 மணிக்கு ஆம்பூர் புறவழிச்சாலை, 5 மணிக்கு உமராபாத், மாலை 6 மணிக்கு பேர்ணாம்பட்டு, இரவு 7 மணிக்கு கே.வி.குப்பம், 8 மணிக்கு லத்தேரி, 8.30 மணிக்கு காட்பாடி சித்தூர் நிலையம், 9 மணிக்கு வேலூர் புது மாநகராட்சி, இரவு 9.30 மணிக்கு மண்டித் தெரு ஆகிய இடங்களில் பேச உள்ளார். இரவு வேலூரில் தங்குகிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வேலூர் வள்ளலார், 9.30 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம், 10 மணிக்கு முத்து கடை பேருந்து நிலையம், 10.45 மணிக்கு பானாவரம் இணைப்புச் சாலை, பகல் 12 மணிக்கு காவேரிப்பாக்கம் பூங்கா, 12.30 மணிக்கு பனப்பாக்கம் பேருந்து நிலையம், 1 மணிக்கு நெமிலி, மாலை 4 மணிக்கு அரக்கோணம், மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/வேலூர்-மாவட்டத்தில்-தமிழக-முதல்வர்-நாளை-பிரசாரம்-3118357.html
3118355 சென்னை வேலூர் வேலூர் மக்களவைத் தொகுதி: பாலாறு பாதுகாப்பு இயக்க வேட்பாளர் உள்பட இருவர் மனுத் தாக்கல் DIN DIN Friday, March 22, 2019 07:18 AM +0530 மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட பாலாறு பாதுகாப்பு இயக்க வேட்பாளர் உள்பட இருவர் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 
ஆம்பூரைச் சேர்ந்த எம்.ஆர்.வெங்கடேசன்(47), பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் இயக்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கன்னையா நாயுடு, மாவட்ட பொதுச் செயலர் கலத்தூர் வெங்கடேசன், பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் மகளிரணிச் செயலர் சுசீலா ஆகியோர் உடன் வந்தனர்.
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து ஏ.சி.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது:  
தமிழகத்தில் உள்ள நதிநீர்ப் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பாலாறு, விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகளாலும், தொடரும் மணல் கொள்ளையாலும் வறண்டு பாழ்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடரும் பாலாறு பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தப் பிரச்னையை தேர்தலுக்காக மட்டும் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு பின்னர் கைவிட்டு விடுகின்றன. நடக்க உள்ள மக்களவைத் தேர்தல் மூலமாவது இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, நடைபெற உள்ள மக்களவைத்  தேர்தலில் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் அறிக்கைகளில் பாலாறு விவகாரம் புறக்கணிக்கப்பட்டது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுவேட்பாளராக எம்.ஆர்.வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆப்பிள், சூட்கேஸ், பக்கெட் ஆகிய சின்னங்கள் கோரப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த பொது வேட்பாளர் மனுவை வாபஸ் பெற மாட்டார். 
இனியாவது பிரதான அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது பாலாறு பிரச்னைக்கு தீர்வு காணவும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களை மறு சீரமைக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
மற்றொருவர் மனு தாக்கல்: இதேபோல், வேலூர் சாய்நாதபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(59) என்பவரும் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். திமுக-வில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த இவர், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 
கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் துரைமுருகன் தனது மகனுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவர் மதிமுக-வின் வேலூர் மாவட்டச் செயலரான சுப்பிரமணியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தொகுதிகளில்...
சோளிங்கர், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தலில் 3-ஆவது நாளான வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத் சார்பில் அவரது ஆதரவாளர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/வேலூர்-மக்களவைத்-தொகுதி-பாலாறு-பாதுகாப்பு-இயக்க-வேட்பாளர்-உள்பட-இருவர்-மனுத்-தாக்கல்-3118355.html
3118354 சென்னை வேலூர் "ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு' DIN DIN Friday, March 22, 2019 07:17 AM +0530 கரும்பூர் கிராமத்தில் பொது சொத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றாவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அந்தக் கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
கரும்பூர் ஊராட்சி கிராம நத்தம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். மேலும், ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் படிப்பகம் மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவலையும் கோரிக்கை கடிதம் மூலம் கரும்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/ஆக்கிரமிப்பை-அகற்றாவிட்டால்-தேர்தல்-புறக்கணிப்பு-3118354.html
3118353 சென்னை வேலூர் பறக்கும் படையினர் சோதனை: வேலூரில் ஒரே நாளில் ரூ.32.70 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 22, 2019 07:17 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி வேலூரில் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய திடீர் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஒரேநாளில் ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் கொணவட்டத்தில் பறக்கும் படை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த யுனானி மருத்துவர் அமினுதீன் என்பவர் வந்த காரைச் சோதனையிட்டதில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. அந்தத் தொகையைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கொணவட்டத்தில் வட்டாட்சியர் பாக்கியநாதன் தலைமையில் பறக்கும் படையினர் வியாழக்கிழமை காலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ரூ.5 லட்சம் இருந்தது தெரிய வந்தது. காரில் வந்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் இக்மால் என்பதும், தொழில் தேவைக்காக பணத்தைக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, பறக்கும் படை தனி வட்டாட்சியர் நெடுமாறன் தலைமையிலான குழு வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சேவை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரைச் சோதனையிட்டதில் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை ஊழியரான சபியுல்லா(45) என்பவரிடம் ரூ.23 லட்சத்து 80 ஆயிரத்து 270 இருந்தது தெரிய வந்தது. 
இதேபோல், மற்றொரு காரில் வாணியம்பாடியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இந்தத் தொகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இருவரிடம் இருந்தும் சுமார் ரூ.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி, வேலூரில் வியாழக்கிழமை ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், அரசுக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அந்தப் பணத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/பறக்கும்-படையினர்-சோதனை-வேலூரில்-ஒரே-நாளில்-ரூ3270-லட்சம்-பறிமுதல்-3118353.html
3118352 சென்னை வேலூர் தேர்தல் பாதுகாப்புப் பணி:  முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு DIN DIN Friday, March 22, 2019 07:16 AM +0530 மக்களவைத் தேர்தல்,  சட்டப்பேரவை இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாகப் பணிபுரிய முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் சிறப்புக் காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் முன்னாள் படை வீரர்களுக்கும், இளநிலை அலுவலர்களுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது அடையாள அட்டை, படை விலகல் சான்று ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/தேர்தல்-பாதுகாப்புப்-பணி--முன்னாள்-படை-வீரர்களுக்கு-வாய்ப்பு-3118352.html
3118351 சென்னை வேலூர் பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்: கட்சிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Friday, March 22, 2019 07:16 AM +0530 வெயில் நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி தற்போதைய வெயில் காலத்தில் மதிய வேளையில் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. சில இடங்களில் சிலர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் முகவர்களும் பிரசாரம், பொதுக்கூட்டத்தின் போது நிழல், தங்குமிடம், குடிதண்ணீர், மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகளை செய்துதர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 
எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பான அதிகாரிகளும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/பொதுக்கூட்ட-பாதுகாப்பு-ஏற்பாடுகள்-கட்சிகளுக்கு-ஆட்சியர்-அறிவுறுத்தல்-3118351.html
3118350 சென்னை வேலூர் கிடப்பில் போடப்பட்ட தொரப்பாடி ரயில்வே மேம்பாலப் பணி மீண்டும் தொடக்கம் DIN DIN Friday, March 22, 2019 07:16 AM +0530 தொரப்பாடி - அரியூர் இடையே பாதி கட்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தை இணைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கஸ்பா பகுதியில் ரூ.17.50 கோடியிலும், அரியூர் தங்கக் கோயில் செல்லும் சாலையின் குறுக்கே தொரப்பாடியில் ரூ. 22.93 கோடி மதிப்பிலும் ரயில்வே மேம்பாலங்களைக் கட்டும் பணி கடந்த 2016 பிப்ரவரி, ஜூலை மாதங்களில் தொடங்கியது. 
2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த இரு ரயில்வே மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்படவில்லை. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பணிகள் முடிக்கப்பட்ட போதிலும், ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் பேருந்துகள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
தாமதமாகி வரும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதனிடையே, கஸ்பா, தொரப்பாடி ரயில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொரப்பாடி ரயில்வே கேட் பகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து, கடந்த மாதம் இந்தப் பாலத்தைப் பார்வையிட்ட தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இரு பாலங்களின் பணிகளை விரைவில் முடித்து போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், தொரப்பாடி ரயில்வே மேம்பாலத்தின் இரு
புறங்களையும் இணைக்கும் இரும்புப் பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்காக இரும்புப் பாலங்கள் கொண்டுவரப் பட்டு அவற்றைப் பொருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கஸ்பா பகுதியிலும் ரயில்வே மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/கிடப்பில்-போடப்பட்ட-தொரப்பாடி-ரயில்வே-மேம்பாலப்-பணி-மீண்டும்-தொடக்கம்-3118350.html
3118348 சென்னை வேலூர் வால்மீகீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் DIN DIN Friday, March 22, 2019 07:15 AM +0530 ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தில் வடிவுடை அம்பாள் சமேத வால்மீகீஸ்வரர் கோயில்  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு திருவலம் சர்வ மங்களா பீடத்தின் சாந்த சுவாமிகள் முன்னிலையில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட  உற்சவர் வால்மீகீஸ்வரருக்கும் வடிவுடை அம்மைக்கும்  உத்திர நட்சத்திரம் கன்னியா லக்கினத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உபயதாரர்கள் சார்பில்  வேட்டி, சேலை, இனிப்பு வகைகள், பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசை வைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/வால்மீகீஸ்வரர்-கோயிலில்-திருக்கல்யாண-உற்சவம்-3118348.html
3118349 சென்னை வேலூர் அம்மூர் காப்புக் காட்டில் தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள்: வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? DIN DIN Friday, March 22, 2019 07:15 AM +0530 வேலூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு போன நீர்நிலைகளால் அம்மூர் காப்புக் காட்டில் வாழும் மான் உள்ளிட்ட வன விலங்குகளும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளும் தண்ணீர் தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை நகரில் அலுவலகம் கொண்டுள்ள ஆற்காடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூர், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூர் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இக்காடுகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள். மேற்கண்ட காப்புக் காடுகளில் விலை உயர்ந்த அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 2,273 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அம்மூர் காப்புக்காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் 
ஒன்றான புள்ளி மான் இனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் முயல், காட்டுப்பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால், ஏரி, குளம்,குட்டை, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் வன விலங்குகள் காடு முழுவதும் தேடி அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காடுகளை விட்டு வெளியேறி தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் விவசாயக் கிணற்றில் தவறி விழுகின்றன. சில விலங்குகள் நாய்களால் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும், சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டும், மின்வேலியில் சிக்கியும் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. 
அம்மூர் காப்புக்காட்டில் வளர்ந்துள்ள மஞ்சள் புற்களுக்கு கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் வைத்த தீ காரணமாக அங்கு வளர்ந்திருந்த விலை உயர்ந்த பசுமையான செடி,கொடி, மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. இதனால் வன விலங்களுக்குத் தேவையான நிழல், குளிர்ந்த காற்று, உணவு உள்ளிட்ட உயிர்வாழ் காரணிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
தற்போது மாவட்டம் முழுவதும் நிலவிவரும் கோடை வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல், மந்தை மந்தையாக வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ன. 
இதன்  காரணமாக காடுகளையொட்டி, விளைநிலம் வைத்திருப்பவர்கள் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே வன விலங்குகள், கால்நடைகளைப் பாதுகாக்க காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்புவதோடு, புதிய தொட்டிகளையும் அமைத்து உடனடியாக போதிய அளவு தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


தண்ணீர்த் தொட்டி அமைப்பு
இந்நிலையில் அம்மூர் காப்புக் காட்டில் காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள சதாசிவ ஈஸ்வரர் கோயில் நிர்வாகியான நேதாஜி நடேசனின் முயற்சியால் சிப்காட்டில் உள்ள மல்லாதி தனியார் நிறுவனம் ஒரு தண்ணீர்த் தொட்டியை கடந்த ஆண்டு அமைத்தது. இக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, இத்தொட்டி நிரப்பப்பட்டுவருகிறது.
இதைக் கண்ட மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துச் செல்கின்றன. அதே போல் பகல் நேரங்களில் காப்புக் காடு அருகே உள்ள விவசாயிகளின் கால்நடைகள் உச்சி வெயில் நேரங்களில் மந்தையாக வந்து தண்ணீர் அருந்தி, இளைப்பாறிச் செல்கின்றன. அதே போல் இந்தக் காப்புக் காடு முழுவதும் தொட்டிகளை அமைத்து தண்ணீர் நிரப்ப வனத்துறையினர்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்பதே சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாகும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/அம்மூர்-காப்புக்-காட்டில்-தண்ணீர்-தேடி-அலையும்-வன-விலங்குகள்-வனத்துறை-உரிய-நடவடிக்கை-எடுக்குமா-3118349.html
3118347 சென்னை வேலூர் அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு DIN DIN Friday, March 22, 2019 07:13 AM +0530 அரக்கோணம் - தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல் 4 முதல் 14-ஆம் தேதி வரை ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
அரக்கோணம் - தக்கோலம் இடையே அமைக்கப்பட்ட புதிய இருப்புப் பாதையை அரக்கோணத்தில் உள்ள பழைய இருப்புப் பாதைகளோடு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகவும், சிக்னல் மற்றும் பொறியியல் பணிக்காகவும் வரும் ஏப்ரல் 4 முதல் 
14-ஆம் வரை ரயில்களின் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் பெங்களூரு டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று பெங்களூரில் மதியம் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்குப் புறப்படும் சதாப்தி விரைவு ரயில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாலை 5.30 மணிக்குப் புறப்படும் சதாப்தி ரயில் ஆகியவை ஏப்ரல் 14-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6.30 மணிக்குப் புறப்படும் லால்பாக் அதிவிரைவு ரயில் காட்பாடி - சென்னை இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செயயப்படுகிறது.
மைசூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் (எண்: 12610) அதிவிரைவு ரயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 
14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
வாஸ்கோடகாமாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை - சென்னை இடையே ஏப்ரல் 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஹூப்ளியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை - சென்னை இடையே ஏப்ரல் 6 மற்றும் 13-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 7 மற்றும் 14-ஆம் தேதிகளில்  சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. 
பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி சோளிங்கபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. 
மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம்:
தனாப்பூர் - பெங்களூரு சங்கமித்ரா அதிவிரைவு ரயில்  ஏப்ரல் 12-ஆம் தேதி கூடூர் - சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - காட்பாடி வழித்தடத்திற்கு பதிலாக கூடூர் - ரேணிகுண்டா - திருப்பதி - காட்பாடி வழியாக இயங்கும். இதே ரயில் மறுமார்க்கத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை காட்பாடி - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும். 
பெங்களூரு - தர்பங்கா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி - சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - திருப்பதி - கூடுர் வழித்தடத்தில் இயங்கும். யஷ்வந்த்பூர் - காமாக்யா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 3 மற்றும் 10-ஆம் தேதிகளில் காட்பாடி - சென்னை - கூடூருக்கு பதிலாக காட்பாடி - சென்னை சென்ட்ரல் -கூடூர் வழியாக இயங்கும். 
 பெங்களூரு - சென்னை மெயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி- அரக்கோணம் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - வேலூர்- திருவண்ணாமலை - விழுப்புரம் - சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும். 
சில ரயில்களில் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரயில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக மதியம் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். யஷ்வந்த்பூர் - ஹெளரா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/அரக்கோணத்தில்-சிக்னல்-பணிகள்-ஏப்-4-முதல்-ரயில்-சேவைகளில்-மாறுதல்கள்-ரயில்வே-நிர்வாகம்-அறிவிப்பு-3118347.html
3118246 சென்னை வேலூர் அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு DIN DIN Friday, March 22, 2019 02:38 AM +0530
அரக்கோணம் - தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல் 4 முதல் 14-ஆம் தேதி வரை ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
அரக்கோணம் - தக்கோலம் இடையே அமைக்கப்பட்ட புதிய இருப்புப் பாதையை அரக்கோணத்தில் உள்ள பழைய இருப்புப் பாதைகளோடு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகவும், சிக்னல் மற்றும் பொறியியல் பணிக்காகவும் வரும் ஏப்ரல் 4 முதல் 14-ஆம் வரை ரயில்களின் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் பெங்களூரு டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று பெங்களூரில் மதியம் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்குப் புறப்படும் சதாப்தி விரைவு ரயில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாலை 5.30 மணிக்குப் புறப்படும் சதாப்தி ரயில் ஆகியவை ஏப்ரல் 14-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6.30 மணிக்குப் புறப்படும் லால்பாக் அதிவிரைவு ரயில் காட்பாடி - சென்னை இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் - சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செயயப்படுகிறது.
மைசூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் (எண்: 12610) அதிவிரைவு ரயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 
14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
வாஸ்கோடகாமாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை - சென்னை இடையே ஏப்ரல் 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஹூப்ளியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை - சென்னை இடையே ஏப்ரல் 6 மற்றும் 13-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 7 மற்றும் 14-ஆம் தேதிகளில்  சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. 
பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி சோளிங்கபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. 
மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம்:
தனாப்பூர் - பெங்களூரு சங்கமித்ரா அதிவிரைவு ரயில்  ஏப்ரல் 12-ஆம் தேதி கூடூர் - சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - காட்பாடி வழித்தடத்திற்கு பதிலாக கூடூர் - ரேணிகுண்டா - திருப்பதி - காட்பாடி வழியாக இயங்கும். இதே ரயில் மறுமார்க்கத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை காட்பாடி - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும். 
பெங்களூரு - தர்பங்கா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி - சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - திருப்பதி - கூடுர் வழித்தடத்தில் இயங்கும். யஷ்வந்த்பூர் - காமாக்யா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 3 மற்றும் 10-ஆம் தேதிகளில் காட்பாடி - சென்னை - கூடூருக்கு பதிலாக காட்பாடி - சென்னை சென்ட்ரல் -கூடூர் வழியாக இயங்கும். 
 பெங்களூரு - சென்னை மெயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி- அரக்கோணம் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி - வேலூர்- திருவண்ணாமலை - விழுப்புரம் - சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும். 
சில ரயில்களில் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரயில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக மதியம் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். யஷ்வந்த்பூர் - ஹெளரா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/அரக்கோணத்தில்-சிக்னல்-பணிகள்-ஏப்-4-முதல்-ரயில்-சேவைகளில்-மாறுதல்கள்-ரயில்வே-நிர்வாகம்-அறிவிப்பு-3118246.html
3118245 சென்னை வேலூர் அம்மூர் காப்புக் காட்டில் தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள் : வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? DIN DIN Friday, March 22, 2019 02:34 AM +0530 வேலூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு போன நீர்நிலைகளால் அம்மூர் காப்புக் காட்டில் வாழும் மான் உள்ளிட்ட வன விலங்குகளும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளும் தண்ணீர் தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை நகரில் அலுவலகம் கொண்டுள்ள ஆற்காடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூர், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூர் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இக்காடுகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள். மேற்கண்ட காப்புக் காடுகளில் விலை உயர்ந்த அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 2,273 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அம்மூர் காப்புக்காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் 
ஒன்றான புள்ளி மான் இனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் முயல், காட்டுப்பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால், ஏரி, குளம்,குட்டை, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் வன விலங்குகள் காடு முழுவதும் தேடி அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காடுகளை விட்டு வெளியேறி தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் விவசாயக் கிணற்றில் தவறி விழுகின்றன. சில விலங்குகள் நாய்களால் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும், சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டும், மின்வேலியில் சிக்கியும் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. 
அம்மூர் காப்புக்காட்டில் வளர்ந்துள்ள மஞ்சள் புற்களுக்கு கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் வைத்த தீ காரணமாக அங்கு வளர்ந்திருந்த விலை உயர்ந்த பசுமையான செடி,கொடி, மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. இதனால் வன விலங்களுக்குத் தேவையான நிழல், குளிர்ந்த காற்று, உணவு உள்ளிட்ட உயிர்வாழ் காரணிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
தற்போது மாவட்டம் முழுவதும் நிலவிவரும் கோடை வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல், மந்தை மந்தையாக வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ன. 
இதன்  காரணமாக காடுகளையொட்டி, விளைநிலம் வைத்திருப்பவர்கள் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே வன விலங்குகள், கால்நடைகளைப் பாதுகாக்க காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்புவதோடு, புதிய தொட்டிகளையும் அமைத்து உடனடியாக போதிய அளவு தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தண்ணீர்த் தொட்டி அமைப்பு
இந்நிலையில் அம்மூர் காப்புக் காட்டில் காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள சதாசிவ ஈஸ்வரர் கோயில் நிர்வாகியான நேதாஜி நடேசனின் முயற்சியால் சிப்காட்டில் உள்ள மல்லாதி தனியார் நிறுவனம் ஒரு தண்ணீர்த் தொட்டியை கடந்த ஆண்டு அமைத்தது. இக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, இத்தொட்டி நிரப்பப்பட்டுவருகிறது.
இதைக் கண்ட மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துச் செல்கின்றன. அதே போல் பகல் நேரங்களில் காப்புக் காடு அருகே உள்ள விவசாயிகளின் கால்நடைகள் உச்சி வெயில் நேரங்களில் மந்தையாக வந்து தண்ணீர் அருந்தி, இளைப்பாறிச் செல்கின்றன. அதே போல் இந்தக் காப்புக் காடு முழுவதும் தொட்டிகளை அமைத்து தண்ணீர் நிரப்ப வனத்துறையினர்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்பதே சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாகும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/22/அம்மூர்-காப்புக்-காட்டில்-தண்ணீர்-தேடி-அலையும்-வன-விலங்குகள்--வனத்துறை-உரிய-நடவடிக்கை-எடுக்குமா-3118245.html
3117761 சென்னை வேலூர் சமூக ஆர்வலருக்கு விஐடி, வீக் எண்ட் லீடர் சாதனையாளர் விருது DIN DIN Thursday, March 21, 2019 06:48 AM +0530 வேலூர் விஐடி, வீக் எண்ட் லீடர்  சாதனையாளர் விருது சமூக ஆர்வலரான பிந்தீஸ்வர் பதக்குக்கு அளிக்கப்பட்டது. ரொக்கப் பரிசு ரூ. 25 ஆயிரத்துடன் இந்த விருதை கர்நாடக மாநில முன்னாள் மக்கள் நீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ்ஹெக்டே வழங்கினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகமும், வீக் எண்ட் லீடர் பத்திரிகையும் இணைந்து சமூக மாற்றத்துக்கான செயல்களில் ஈடுபட்டு சாதனை படைத்து வரும் சமூக ஆர்வலர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் கூடிய சாதனையாளர் விருதை வழங்கி வருகின்றன. 
அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான சாதனை விருது அமைதி, அஹிம்சை, தொழில்நுட்பம் மூலமான சமூக மாற்றத்துக்கான பள்ளி நிறுவனரும், சமூக ஆர்வலருமான பிந்தீஸ்வர் பதக்குக்கு வழங்கப்பட்டது. 
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியை ஒழிக்க புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவிலான கழிப்பறை அமைக்கும் திட்டத்தை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
விஐடி மேலாண்மைப் பள்ளி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஐடி பல்கலைக்கழகப் பதிவாளர் கே.சத்தியநாராயணன் தலைமை வகித்தார். விஐடி மேலாண்மைப் பள்ளி முதல்வர் சுபஸ்ரீ வரவேற்றார். இதில், பிந்தீஸ்வர் பதக்குக்கு ரூ. 25ஆயிரம் வெகுமதியுடன் சுழற்கோப்பையை கர்நாடக மாநில முன்னாள் மக்கள் நீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ்ஹெக்டே வழங்கினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/சமூக-ஆர்வலருக்கு-விஐடி-வீக்-எண்ட்-லீடர்-சாதனையாளர்-விருது-3117761.html
3117760 சென்னை வேலூர் தேர்தல் அறிக்கைகளில் கைவிடப்பட்ட பாலாறு: பொது வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் திட்டம் DIN DIN Thursday, March 21, 2019 06:47 AM +0530 திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாதது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, அரசியல் கட்சிகள், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலாறு நீராதார பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
 தமிழகத்தில் உள்ள ஜீவ நதிகளில் ஒன்றான பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், இந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனினும், ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகத்தில் பாலாறு வறண்டு பாழடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னை குறித்து, ஒவ்வொரு தேர்தல் நேரத்தின் போது பேசப்படுவதும், திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மூலமேனும் பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பாலாறு பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு அளிக்கப் போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், பாலாறு பிரச்னை குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. 
 இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறியது:
 தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் முல்லைப் பெரியாறு, காவிரி, மேக்கேதாட்டு குறித்து கூறப்பட்ட நிலையில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படவில்லை. 
  அதேசமயம், திமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் தென்பெண்ணை, பாலாறு நதிகளில் தடுப்பணை கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வறண்டு கிடக்கும் பாலாற்றுக்கு நீராதாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதே தேவையாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் தடுப்பணை கட்டுவதாக கூறியிருப்பது இப்பிரச்னை குறித்து திமுக முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.  மேலும், ஆண்டு முழுவதும் பாலாறு பிரச்னை குறித்துப் பேசி வரும் பாமக, தனது தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரத்தை கைவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை  எழுப்புகிறது. 
 எனவே, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தேர்தல் அறிக்கைகளில் பாலாறு விவகாரம் புறக்கணிக்கப்பட்டது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், வேலூர் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த பாலாறு பாதுகாப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/தேர்தல்-அறிக்கைகளில்-கைவிடப்பட்ட-பாலாறு-பொது-வேட்பாளரை-நிறுத்த-விவசாயிகள்-திட்டம்-3117760.html
3117759 சென்னை வேலூர் ஆடுகளுடன் தவறி வந்த மான் குட்டி மீட்பு DIN DIN Thursday, March 21, 2019 06:47 AM +0530 பேர்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் இருந்து ஆடுகளுடன் தவறி வந்த மான் குட்டி மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.
பேர்ணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (60) வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்காக அடுகள் வனப்பகுதிக்குச் சென்றன. இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆட்டு மந்தையில் 6 மாத பெண் புள்ளிமான் குட்டி வழிதவறி வந்துள்ளது. அதை கிராம மக்கள் பிடித்து வைத்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். 
வனவர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அங்கு சென்று மான் குட்டியை மீட்டு மோர்தானா விரிவு காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/ஆடுகளுடன்-தவறி-வந்த-மான்-குட்டி-மீட்பு-3117759.html
3117758 சென்னை வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் DIN DIN Thursday, March 21, 2019 06:47 AM +0530 ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, 108 பால்குட ஊர்வலம்,  பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 52-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றன.
 விழாவை முன்னிட்டு, காலை விநாயகர் பூஜையும், 108 பால்குடங்களை வைத்து சிறப்புப் பூஜையும் செய்யப்பட்டன. மலையடிவாரத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயில் முன்பு  பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், பால்குடங்கள் ஊர்வலமாக மலைவலம் வந்து மூலவர் வள்ளி , தெய்வானை சமேத பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மலையடிவாரத்தில்   அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பாலமுருகனுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
 விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/ரத்தினகிரி-பாலமுருகன்-கோயிலில்-108-பால்குட-ஊர்வலம்-3117758.html
3117757 சென்னை வேலூர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.60 லட்சம் பறிமுதல் DIN DIN Thursday, March 21, 2019 06:46 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை வட்டாட்சியர் ரூபிபாய் தலைமையிலான குழுவினர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் புதன்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காட்பாடியைச் சேர்ந்த கிறிஸ்டோபரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் காரின் இருக்கையில் இருந்த கைப்பையில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில் மேல்விஷாரத்தில் உள்ள ஹோட்டலுக்கு மளிகை பொருள்கள் வாங்க பணம் கொண்டு செல்வதாக கிறிஸ்டோபர் கூறினார். எனினும், அந்தத் தொகைக்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.
இதேபோல், கிரீன் சர்க்கிள் சேவைச் சாலையில் சலவன்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 60 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டாட்சியர் ரமேஷ் மூலமாக கருவூலத்தில் செலுத்தினர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/ஆவணங்களின்றி-கொண்டு-சென்ற-ரூ-160-லட்சம்-பறிமுதல்-3117757.html
3117756 சென்னை வேலூர் வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் நாளும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை DIN DIN Thursday, March 21, 2019 06:33 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், அரக்கோணம் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டாம் நாளான புதன்கிழமையும் யாரும் வரவில்லை. 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மார்ச் 26-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
வேலூர் தொகுதிக்கான வேட்பு மனு ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடமும், அரக்கோணம் தொகுதிக்கான வேட்பு மனு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபனிடமும் தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை வேலூர், அரக்கோணம் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 
இரண்டாம் நாளான புதன்கிழமை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேலூர், அரக்கோணம் ஆகிய இரு தொகுதிகளுக்கு புதன்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. அதேமயம், அரக்கோணம் தொகுதிக்கு 11 பேரும், வேலூர் தொகுதிக்கு 7 பேரும் வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனர்.
பௌர்மணி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை யாரும் மனு தாக்கல் செய்யாதது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஒலி பெருக்கி மூலம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
சட்டப்பேரவை தொகுதிகளில்...
ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான 2-ஆவது நாளான புதன்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல்
சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 
திமுக வேட்பாளர் அசோகன் தரப்பில் விண்ணப்பம் வாங்கப்பட்டது. இதுவரை வேட்பாளரே அறிவிக்கப்படாத நிலையில் அமமுக வேட்பாளருக்காக அக்கட்சியின் நெமிலி மேற்கு ஒன்றியச் செயலர் டி.ஜி.மணி அவரது பெயரில் விண்ணப்பத்தைப் பெற்றுச் சென்றார். புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை 22 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/வேலூர்-அரக்கோணம்-மக்களவைத்-தொகுதிகளுக்கு-இரண்டாம்-நாளும்-யாரும்-வேட்புமனு-தாக்கல்-செய்யவில்லை-3117756.html
3117755 சென்னை வேலூர் "குடியாத்தத்தில் கைத்தறிப் பூங்கா அமைக்கப்படும்' DIN DIN Thursday, March 21, 2019 06:33 AM +0530 வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை வெற்றிபெற வைத்தால் குடியாத்தம் பகுதியில் கைத்தறிப் பூங்கா அமைக்கப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன்  உறுதியளித்தார்.
குடியாத்தம் சித்தூர்கேட்டில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், குடியாத்தம் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
குடியாத்தம் நெசவாளர்கள் நிறைந்த பகுதி. இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று  தில்லி  செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியை வடிவமைத்தது குடியாத்தம் நகரம். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை வெற்றிபெற வைத்தால் குடியாத்தம் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கைத்தறிப் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மிசா காலத்தில் நான் ஓராண்டு சிறையில் இருந்தேன். அப்போது என் மகன்  கைக்குழந்தை. குழந்தைப் பருவத்திலேயே என்னைப்பார்க்க  அம்மாவுடன் அவன் அடிக்கடி சிறைக்கு வருவான். அப்போதே அவன் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கி விட்டான் என்றார்.
கூட்டத்தில் வேட்பாளர் கதிர்ஆனந்த் பேசியதாவது: 
என்னை வெற்றிபெற வைத்தால் ஜிஎஸ்டியால் நலிவடைந்துள்ள பீடி, தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர பாடுபடுவேன். குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதி குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு  காண்பேன் என்றார்.
கூட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலர் ஏ.பி. நந்தகுமார் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் எஸ்.சௌந்தரராஜன் வரவேற்றார். வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன், திமுக மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமதுசகி, ஒன்றியச் செயலர் கே. ரவி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோர் பேசினர்.
வேலூரில்... 
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், வேட்பாளர் கதிர்ஆனந்த்தை அறிமுகப்படுத்தி துரைமுருகன் பேசுகையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை குறையின்றி நிறைவேற்றியதால்தான் ஒரே தொகுதியில் 10-ஆவது முறையாக எம்எல்ஏ ஆக்கப்பட்டுள்ளேன். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றார். 
கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், நல்லதம்பி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆம்பூரில்... 
ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்த திமுக பொருளாளர் துரைமுருகன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார். 
மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் அ.அஸ்லம் பாஷா, கட்சியின் வேலூர் மாவட்டச் செயலர் வி.ஆர்.நசீர் அஹமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/குடியாத்தத்தில்-கைத்தறிப்-பூங்கா-அமைக்கப்படும்-3117755.html
3117754 சென்னை வேலூர் "ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது' DIN DIN Thursday, March 21, 2019 06:32 AM +0530 இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என்று மாநில வணிகவரி மற்றும் பதிரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வாணியம்பாடியை அடுத்த நன்னேரி கிராமத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 100 பேர் விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, ஆலங்காயம் ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமார் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலை வகித்தார். மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 100 பேருக்கு அமைச்சர் கே.சி.வீரமணி சால்வை அணிவித்தார். 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி. வீரமணி கூறியதாவது: 
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவர். மக்களோடு எளிதல் பழகக் கூடியவர். எதிரணியில் நிற்கக் கூடிய திமுக வேட்பாளர் வெறும் அரசியல் வாரிசு தான் என்றார். 
கூட்டுறவு சங்கத் தலைவர் கே.பிரகாசம், துணைத் தலைவர் கே.சி.மணி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ராஜமாணிக்கம், பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/ஆட்சியைப்-பிடிக்கலாம்-என்ற-திமுகவின்-கனவு-பலிக்காது-3117754.html
3117753 சென்னை வேலூர் வாரிசு என்பதைத் தவிர திமுக வேட்பாளரின் தகுதி என்ன? அமைச்சர் கே.சி. வீரமணி கேள்வி DIN DIN Thursday, March 21, 2019 06:32 AM +0530 வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு, துரைமுருகனின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன  தகுதியிருக்கிறது  என மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர்  கே.சி. வீரமணி கேள்வியெழுப்பினார். 
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை கே.வி. குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது: 
வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், இதுவரை அவர் சார்ந்த கட்சியில் எந்தப் பணியையும் செய்யவில்லை. பொதுமக்களுக்கும் அவர் யார் என்று தெரியாது. தற்போது பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். துரைமுருகனின் மகன் என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை. தேர்தலுக்குப் பின் அவர் காணாமல் போவார். 
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் 3.28  லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 3.83 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
தற்போது ஏ.சி. சண்முகம் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் தங்களுக்குள் உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து இவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பேசியதாவது:
நான் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டவன். என்னை வெற்றிபெற வைத்தால், பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அதிகாரிகளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அதிகாரிகளுடன் நான் பொதுமக்களாகிய உங்களைத் தேடி வந்து குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பேன்.
நான் வெற்றிபெற்றால், இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, லத்தேரி அருகே ரயில்வே மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன். அரசினர் மகளிர் கலைக் கல்லூரியை இப்பகுதியில் அமைப்பேன். கிராமப்புற மாணவர்களின் கணினி வளர்ச்சியை பெருக்கும் வகையில் இங்கு இலவச கணினிப் பயிற்சி மையத்தை அமைப்பேன் என்றார். 
கூட்டத்தில் எம்எல்ஏ ஜி.லோகநாதன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி. ராமு, பாமக நிர்வாகிகள் என்.டி.சண்முகம், கே.எல்.இளவழகன், தேமுதிக நிர்வாகி ஸ்ரீதர், பாஜக நிர்வாகி கார்த்தியாயினி, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவர் பி. மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/வாரிசு-என்பதைத்-தவிர-திமுக-வேட்பாளரின்-தகுதி-என்ன-அமைச்சர்-கேசி-வீரமணி-கேள்வி-3117753.html
3117752 சென்னை வேலூர் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, March 21, 2019 06:32 AM +0530 பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர்  வேலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டி வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன், அமைப்பாளர் ராஜேஷ், கோட்டப் பொதுச் செயலர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/இந்து-முன்னணியினர்-ஆர்ப்பாட்டம்-3117752.html
3117751 சென்னை வேலூர் அடையாள அட்டை இல்லாத ஊழியர்களுக்கு  அனுமதி இல்லை: ஆட்சியர் உத்தரவு DIN DIN Thursday, March 21, 2019 06:31 AM +0530 அடையாள அட்டை இல்லாத ஊழியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதியில்லை என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். 
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், அரக்கோணம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கட்டாயமாக அடையாள அட்டையுடன் வர வேண்டு. அடையாள அட்டை இல்லாத ஊழியர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்துக்குள் வர அனுமதியில்லை என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே அலுவலகத்துக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அடையாள அட்டை கொண்டுவராத ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான தகவலை உறுதிப்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை வேட்புமனு தாக்கல் நடைபெறும் காலை 10 மாலை 3 மணி வரை பின்பற்றப்படுகிறது. அதன்பிறகு வழக்கம்போல் ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/அடையாள-அட்டை-இல்லாத-ஊழியர்களுக்கு--அனுமதி-இல்லை-ஆட்சியர்-உத்தரவு-3117751.html
3117750 சென்னை வேலூர் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 10 பேர் மீட்பு DIN DIN Thursday, March 21, 2019 06:31 AM +0530 கணியம்பாடியில் உள்ள இருவேறு செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உள்பட 10 பேரை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் மகாலிங்கம், ரமேஷ் ஆகியோருக்குச் சொந்தமாக செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வருவதாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வேலூர் சார்-ஆட்சியர் கே.மெஹராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சார்-ஆட்சியர், கணியம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாருடன் அப்பகுதிக்கு புதன்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, மகாலிங்கத்தின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டிருந்த ஆற்காடு அருகே மாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் (35), அவரது மனைவி மாரியம்மாள் (30), மகள் ராஜேஸ்வரி (12), மகன் வாசுதேவன் (10) ஆகியோரும், ரமேஷின் செங்கல் சூளையிலிருந்து சித்தூர் மாவட்டம், பங்கார்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (28), அமுலு (25), பிரியா (5), பேபி (4), கார்த்தி (2), 8 மாத குழந்தை மகாலட்சுமி ஆகியோரும் மீட்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குமார் குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாலிங்கத்திடம் ரூ. 50 ஆயிரம் முன்தொகை பெற்றுள்ளனர். அந்தத் தொகையை வேலை செய்து கழிக்கும் வகையில் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
ஆனால், கூறியபடி தினக்கூலி அளிக்காமல் குடும்பத்துக்கும் சேர்த்து வாரத்துக்கே ரூ. 500 மட்டுமே அளிக்கப்பட்டதுடன், தினமும் இரவு வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதும் தெரியவந்தது. இதேபோல், பிரகாஷ் குடும்பத்தினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷிடம் வாங்கிய ரூ. 60 ஆயிரம் முன்தொகைக்காக கொத்தடிமையாகப் பணியமர்த்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மீட்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் விடுதலை சான்றிதழ் அளிக்கப்பட்டதுடன், அரசின் முதல்கட்ட நிவாரணமாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மேலும், இந்தக் குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரில் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சார்-ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, இரு குடும்பத்தினரை கொத்தடிமைகளாகப் பணியமர்த்தியிருந்த மகாலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது கணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் வேலூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/செங்கல்-சூளைகளில்-கொத்தடிமைகளாக-பணியாற்றிய-10-பேர்-மீட்பு-3117750.html
3117749 சென்னை வேலூர் வேட்பாளர்களின் செலவினங்களை முறையாகக் கண்காணிக்க உத்தரவு DIN DIN Thursday, March 21, 2019 06:30 AM +0530 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு யாதுவீர்சிங், காட்பாடி , ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளுக்கு ஹரீஷ்குமார், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உஜ்வால்குமார், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ரவிகாந்த் ஆகியோர் தேர்கல் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது தலைமையில் தேர்தல் செலவினம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில், பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினர், விடியோ மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
வேட்பாளர்களின் செலவினங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போடப்படும் இருக்கைகளின் எண்ணிக்கையும், வேட்பாளர்கள் தங்களது கணக்கில் தெரிவிக்கும் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் விடியோ பதிவு செய்யும்போது ஆடியோ பதிவாவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் ஆடியோ பதிவோடு விடியோ எடுக்க வேண்டும். அப்போது தான் அங்கு என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அறிய முடியும். மேலும், சோதனையின் போது எடுக்கப்பட்ட விடியோவை எடிட் செய்யாமல் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து விடியோ கண்காணிப்புக் குழுவில் போலீஸாரும் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறியதற்கு உரிய பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/வேட்பாளர்களின்-செலவினங்களை-முறையாகக்-கண்காணிக்க-உத்தரவு-3117749.html
3117748 சென்னை வேலூர் அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் DIN DIN Thursday, March 21, 2019 06:30 AM +0530 அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதி பொருளாளர் யு.ரா.பாவேந்தன் (41) அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்குரைஞராக இருக்கும் இவர் அரக்கோணம் நகரில் கணினி உதிரிபாகங்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது அரக்கோணம் பகுதியில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
இவருக்கு மீனாட்சி (39) என்ற மனைவியும் பாமகள் (15), ஓவியன் (9) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/அரக்கோணம்-தொகுதி-நாம்-தமிழர்-கட்சி-வேட்பாளர்-3117748.html
3117747 சென்னை வேலூர் கிராமங்களில் ஆதரவு திரட்டிய  அமமுக வேட்பாளர் DIN DIN Thursday, March 21, 2019 06:30 AM +0530 ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகளை ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர் புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட  ஆம்பூர் தொகுதி எம்எல்ஏவும், அமமுக ஆம்பூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.பாலசுப்பிரமணி மாதனூர் ஒன்றியம் நாச்சார்குப்பம் கிராமத்தில் வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அமமுக மாதனூர் ஒன்றியச் செயலர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/கிராமங்களில்-ஆதரவு-திரட்டிய--அமமுக-வேட்பாளர்-3117747.html
3117746 சென்னை வேலூர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த  அதிமுக வேட்பாளர் DIN DIN Thursday, March 21, 2019 06:29 AM +0530 ஆம்பூரில் எம்ஜிஆர் சிலைக்கு ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தார்.
ஆம்பூர் நகரக் காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம்.மதியழகன் தலைமையில் வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   அதிமுக நிர்வாகிகள் மணி, ஆம்பூர் அன்பரசன், அகரம் அன்பரசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/எம்ஜிஆர்-சிலைக்கு-மாலை-அணிவித்த--அதிமுக-வேட்பாளர்-3117746.html
3117745 சென்னை வேலூர் சேஷாசல வனத்தில் துப்பாக்கிச் சூடு: தமிழக செம்மரத்தொழிலாளி ஒருவர் கைது DIN DIN Thursday, March 21, 2019 06:29 AM +0530 திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தமிழக செம்மரத்தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளைக் கொண்டு செல்வதைக் கண்டனர். முட்புதரில் ஒளிந்து கொண்டு அவர்களைப் பிடிக்க முயன்றபோது செம்மரத்தொழிலாளிகள் கற்கள் மற்றும் ஆயுதங்களை வீசினர். அதில் காவலர் ஒருவருக்கு தோளில் காயம் ஏற்பட்டது. 
இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களில்  ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்து 13 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஜவ்வாது மலையைச் சேர்ந்த செல்வராஜ் (39) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/சேஷாசல-வனத்தில்-துப்பாக்கிச்-சூடு-தமிழக-செம்மரத்தொழிலாளி-ஒருவர்-கைது-3117745.html
3117744 சென்னை வேலூர் மனைவியைக் கொன்ற கணவன் கைது DIN DIN Thursday, March 21, 2019 06:29 AM +0530 வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த புள்ளாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் (34). கட்டடத் தொழிலாளி. மனைவி வசந்தா (27), மகள்கள் புனிதா (5), சரண்யா (1) . கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வசந்தா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஒசூரில் இருந்த வசந்தாவை பிரகாசம் புதன்கிழமை வீட்டுக்கு அழைத்து வந்தார். 
இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாசம், வசந்தாவின் கழுத்தை நைலான் கயிறால் இறுக்கிக் கொலை செய்தாராம். 
இதையடுத்து பிரகாசம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் போலீஸார் முன் சரணடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாசத்தை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/மனைவியைக்-கொன்ற-கணவன்-கைது-3117744.html
3117743 சென்னை வேலூர் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை DIN DIN Thursday, March 21, 2019 06:28 AM +0530 திருப்பத்தூர் அருகே கடன் பிரச்னையால் 4 வயது குழந்தையைக் கொன்று தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூரை அடுத்த சின்ன உடையாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயக்குமார் (45). இவரது மனைவி நீலா (35). இவர்களது மகள் பவதாரிணி (4). 
இந்நிலையில், உதயக்குமார் வெளிநாடு செல்வதற்கு நீலா பல்வேறு நபர்களிடம் கடன் பெற்று தனது கணவரிடம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உதயக்குமார் பணத்தை செலவு செய்து, பெங்களூரிலேயே தங்கினாராம். கடன் அளித்தவர்கள், பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
விரக்தியடைந்த நீலா கடந்த 17-ஆம் தேதி குழந்தைக்கு பூச்சி மருந்தைக் கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது.  மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீலா புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/குழந்தையைக்-கொன்று-தாய்-தற்கொலை-3117743.html
3117742 சென்னை வேலூர் வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள்: அரக்கோணம் ஆணையர் தகவல் DIN DIN Thursday, March 21, 2019 06:28 AM +0530 அரக்கோணம் நகராட்சியில் 22 மையங்களில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின் இணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், சாய்வு தளங்கள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுள்ளதாக நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் முருகேசன், பொறியாளர் சண்முகம் ஆகிய இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:  
ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக அரக்கோணம் நகராட்சியில் 22 மையங்களில் 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 9 வாக்குச்சாவடிகள், ஆர்.சி.எம். நடுநிலைப் பள்ளி மையத்தில் 8 வாக்குச்சாவடிகள், போலாட்சி அம்மன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மையத்தில் 6 வாக்குச்சாவடிகள், விண்டர்பேட்டை எம்.ஏ.ஜெயின் நகராட்சி நடுநிலைப் பள்ளி, காந்தி நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் 5 மற்றும் 4 வாக்குச்சாவடிகளும் அமைய உள்ளன. 
இதில், நகராட்சிப் பள்ளிகளில் 30 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தெற்கு ரயில்வே மனமகிழ் மன்ற வளாகம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் 40 வாக்குச்சாவடிகளும் அமைய உள்ளன. 
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின் இணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், சாய்வு தளங்கள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டன. அரக்கோணம் நகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் தேர்தலுக்கு தயாராக உள்ளன என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/வாக்குச்சாவடிகளில்-தேவையான-வசதிகள்-அரக்கோணம்-ஆணையர்-தகவல்-3117742.html
3117632 சென்னை வேலூர் ஆடுகளுடன் தவறி வந்த மான் குட்டி மீட்பு DIN DIN Thursday, March 21, 2019 02:23 AM +0530
பேர்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் இருந்து ஆடுகளுடன் தவறி வந்த மான் குட்டி மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.
பேர்ணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (60) வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்காக அடுகள் வனப்பகுதிக்குச் சென்றன. இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆட்டு மந்தையில் 6 மாத பெண் புள்ளிமான் குட்டி வழிதவறி வந்துள்ளது. அதை கிராம மக்கள் பிடித்து வைத்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். 
வனவர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அங்கு சென்று மான் குட்டியை மீட்டு மோர்தானா விரிவு காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/ஆடுகளுடன்-தவறி-வந்த-மான்-குட்டி-மீட்பு-3117632.html
3117631 சென்னை வேலூர் தேர்தல் அறிக்கைகளில் கைவிடப்பட்ட பாலாறு: பொது வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் திட்டம் DIN DIN Thursday, March 21, 2019 02:22 AM +0530
திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாதது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, அரசியல் கட்சிகள், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலாறு நீராதார பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
 தமிழகத்தில் உள்ள ஜீவ நதிகளில் ஒன்றான பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், இந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனினும், ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகத்தில் பாலாறு வறண்டு பாழடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னை குறித்து, ஒவ்வொரு தேர்தல் நேரத்தின் போது பேசப்படுவதும், திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மூலமேனும் பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பாலாறு பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு அளிக்கப் போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், பாலாறு பிரச்னை குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. 
 இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறியது:
 தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் முல்லைப் பெரியாறு, காவிரி, மேக்கேதாட்டு குறித்து கூறப்பட்ட நிலையில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படவில்லை. 
  அதேசமயம், திமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் தென்பெண்ணை, பாலாறு நதிகளில் தடுப்பணை கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வறண்டு கிடக்கும் பாலாற்றுக்கு நீராதாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதே தேவையாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் தடுப்பணை கட்டுவதாக கூறியிருப்பது இப்பிரச்னை குறித்து திமுக முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.  மேலும், ஆண்டு முழுவதும் பாலாறு பிரச்னை குறித்துப் பேசி வரும் பாமக, தனது தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரத்தை கைவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை  எழுப்புகிறது. 
 எனவே, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தேர்தல் அறிக்கைகளில் பாலாறு விவகாரம் புறக்கணிக்கப்பட்டது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், வேலூர் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த பாலாறு பாதுகாப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/21/தேர்தல்-அறிக்கைகளில்-கைவிடப்பட்ட-பாலாறு-பொது-வேட்பாளரை-நிறுத்த-விவசாயிகள்-திட்டம்-3117631.html
3117109 சென்னை வேலூர் 100 % வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் DIN DIN Wednesday, March 20, 2019 04:41 AM +0530 நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடியாத்தம் நகரில் கலை நிகழ்ச்சிகள் மூலம் திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
 குடியாத்தம் நகராட்சி சார்பில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தென்குளக்கரை, சந்தப்பேட்டை பஜார் ஆகிய 4 இடங்களில் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/100--வாக்களிக்க-வலியுறுத்தி-விழிப்புணர்வுப்-பிரசாரம்-3117109.html
3117108 சென்னை வேலூர் பொறியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு DIN DIN Wednesday, March 20, 2019 04:40 AM +0530 வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 2 நாள் (ரீட்மா 2019) கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நடராஜன் தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினார். எம்சிஏ துறைத்தலைவர் விஜயகுமார் வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர் தஸ்தகீர்கான் கலந்துகொண்டு, மாணவர்களின் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது தொடர்பான சிக்கல்களை தெளிவுபடுத்தும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். கல்லூரி முன்னாள் மாணவர் சீனிவாசன் கலந்துகொண்டு, மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதுகுறித்து விளக்கி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்த 175 ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. முகாமில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த 300 ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/பொறியியல்-கல்லூரியில்-தேசியக்-கருத்தரங்கு-3117108.html
3117107 சென்னை வேலூர் இளம்பெண்ணின் உடல், கண் தானம் DIN DIN Wednesday, March 20, 2019 04:39 AM +0530 குடியாத்தம் அருகே இளம்பெண்ணின் உடல் கண்கள் தானமாக பெறப்பட்டன.
குடியாத்தம் செருவங்கி, அவ்வை நகரைச் சேர்ந்த எம். அம்பேத்கரின் மனைவி வான்மதி (29). இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வான்மதி திங்கள்கிழமை உயிரிழந்தார். 
இதையடுத்து அம்பேத்கர் விருப்பத்தின்பேரில் குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தான பிரிவுத் தலைவர் எம்.ஆர். மணி, ரோட்டரி தலைவர் பி. அன்பரசு ஆகியோரின் வழிகாட்டுதல்படி வான்மதியின் கண்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/இளம்பெண்ணின்-உடல்-கண்-தானம்-3117107.html
3117106 சென்னை வேலூர் நார் தொழிற்சாலையில் தீ விபத்து DIN DIN Wednesday, March 20, 2019 04:39 AM +0530 திருப்பத்தூர் அருகே உள்ள நார் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. 
திருப்பத்தூரை அடுத்த நத்தம் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரனுக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை பரவியது. தகவலறிந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தால் தொழிற்சாலையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/நார்-தொழிற்சாலையில்-தீ-விபத்து-3117106.html
3117105 சென்னை வேலூர் மனைவியை எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறை DIN DIN Wednesday, March 20, 2019 04:39 AM +0530 திருப்பத்தூர் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே குரும்பர்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.சுரேஷ் (32). இவர், பெங்களூருவில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரியா (19). இவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் கிருஷ்ணகிரியில் தங்கி வசித்து வந்தனர். தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, பிரியா, திருப்பத்தூர் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 
கடந்த 2014 பிப்ரவரி 9-ஆம் தேதி மனைவியைப் பார்க்க அவரது தாய் வீட்டுக்கு சுரேஷ் சென்றார். அன்று இரவும் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது மனைவி பிரியா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில், பலத்த காயமடைந்த பிரியா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதுகுறித்து பிரியாவின் தாய் முருகம்மாள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, சுரேஷ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/மனைவியை-எரித்துக்-கொன்றவருக்கு-ஆயுள்-சிறை-3117105.html
3117104 சென்னை வேலூர் "ஆம்பூர் தொகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்' DIN DIN Wednesday, March 20, 2019 04:38 AM +0530 ஆம்பூர், வாணியம்பாடி தொகுதி மக்களின் நலனுக்காக புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோரை அறிமுகம் செய்யும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் துரைமுருகன் பேசியதாவது: 
ஆம்பூர் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். வில்வநாதன் வெற்றி பெற்றால் தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்றார்.
அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், மாவட்டச் செயலர்கள் 
ஆர். காந்தி, நந்தகுமார், சூப்பர் நேஷன் பார்ட்டி நிறுவனத் தலைவர் மதார் கலீலூர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகி ஹெச்.அப்துல் பாசித், ஆம்பூர் நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம், மாதனூர் ஒன்றியச் செயலர் 
ப.ச.சுரேஷ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டில் நடைபெற்ற திமுக கூட்டணியின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலர் க.தேவராஜ் முன்னிலை வகித்தார். நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை அறிமுகப்படுத்தி பேசினார். 
கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலர் ஆர்.காந்தி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஆம்பூர் தொகுதி சட்டப்பேரவை திமுக வேட்பாளர் வில்வநாதன் மற்றும் காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/ஆம்பூர்-தொகுதியில்-புதிய-தொழிற்பேட்டை-அமைக்கப்படும்-3117104.html
3117103 சென்னை வேலூர் பறக்கும் படை சோதனை: வேலூர், காட்பாடியில் 5 பேரிடம் ரூ. 4 லட்சம் பறிமுதல் DIN DIN Wednesday, March 20, 2019 04:37 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், காட்பாடியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில் 5 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 
ரூ. 4 லட்சத்து 7 ஆயிரத்து 270 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கும் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் ரூபிபாய் தலைமையிலான குழுவினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் சென்னை போரூரைச் சேர்ந்த பிரேம்குமாரிடம் ரூ. 1.08 லட்சம் இருந்தது. வேலூரில் உள்ள வீட்டுமனைக்கான பணத்தைச் செலுத்த கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்தத் தொகையை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மற்றொரு காரில் வந்த வேலூரைச் சேர்ந்த விடுதி உரிமையாளர் சொக்கநாதனிடம் ரூ. 70,270 பறிமுதல் செய்யப்பட்டது. வாடகை வசூல் பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தபோதும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகையை அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல், அந்த வழியாக வந்த மேலும் ஒரு காரை நிறுத்தி நடத்தப்பட்ட சோதனையில் சேவூரைச் சேர்ந்த சகுந்தலாவிடம் ரூ. 52 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து அந்தத் தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, வேலூரை அடுத்த ஜமால்புரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் சத்துவாச்சாரியைச் சேர்ந்த கமலிடம் ரூ. 67,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், காட்பாடி காந்தி நகரில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணனிடம் (45) ரூ. 1.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 5 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்து 7 ஆயிரத்து 270 தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டதாகவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் நிலைக் குழுவினர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில், இரட்டைக்குளம் சோதனைச் சாவடியில் திருத்தணி சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது திருத்தணி நோக்கி சென்ற காரை சோதனையிட்டபோது அதில் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 300 சால்வைகள் இருந்தது தெரியவந்தது. அந்த காரில் இருந்த சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த ஆனந்தனிடன் (53) விசாரித்ததில், இவற்றை திருத்தணி கோயிலுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 300 சால்வைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/பறக்கும்-படை-சோதனை-வேலூர்-காட்பாடியில்-5-பேரிடம்-ரூ-4-லட்சம்-பறிமுதல்-3117103.html
3117102 சென்னை வேலூர் விகாரி வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா  DIN DIN Wednesday, March 20, 2019 04:37 AM +0530 காஞ்சி மடத்தின் 70ஆவது பீடாதிபதி பட்டத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரித்தமைக்கான விழா, தென்னிந்திய புரோகிதர்கள் சங்க அரக்கோணம் கிளையின் 10ஆண்டு தொடக்க விழா, விகாரி வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா ஆகியவை அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தென்னிந்திய புரோகிதர்கள் சங்க அரக்கோணம் கிளையின் பொருளாளர் வி.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை பாரதிய வித்யாபீடத்தின் முரளிதர சுவாமிகள் வெளியிட எஸ்.ஆர்.எஸ். தொழில் குழுமத் தலைவர் குப்பையா பெற்றுக்கொண்டார். 
விழாவில் 70 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை தென்னிந்திய புரோகிதர் சங்க மாநில பொதுச் செயலர் வி.ஆர்.சீதாராமய்யர் வழங்கினார். இதில் அரக்கோணம் நகராட்சி ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகி வீரராகவன், அரக்கோணம் கிளைத் தலைவர் பி.குமார், டி.ஆர்.கோபாலய்யர், என்.ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/விகாரி-வருட-பஞ்சாங்க-வெளியீட்டு-விழா-3117102.html
3117101 சென்னை வேலூர் வலு தூக்கும் போட்டி:  சாதனை படைத்த வீரர்களுக்குப் பாராட்டு DIN DIN Wednesday, March 20, 2019 04:36 AM +0530 மாநில அளவிலான 46-ஆவது மாஸ்டர்ஸ் வலு தூக்கும்  போட்டிகளில்  சிறப்பிடம் பெற்ற வேலூர் மாவட்ட வீரர்களுக்கு குடியாத்தத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாநில அளவிலான மாஸ்டர்ஸ் வலு தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 20 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மேலும் ஒட்டுமொத்த புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். வீரர் மூர்த்தி மாநில அளவிலான சாதனைப் படைத்தார்.
இதையடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில், வேலூர்  மாவட்ட வலுதூக்குவோர்  சங்கத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பிரமுகர்கள் ஜே.கே.என்.பழனி, எஸ்.துரைசாமி, கே. ரவி, கே.யுவராஜ் உள்ளிட்டோர் வீரர்களைப் பாராட்டினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/வலு-தூக்கும்-போட்டி--சாதனை-படைத்த-வீரர்களுக்குப்-பாராட்டு-3117101.html
3117100 சென்னை வேலூர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த 3 இடங்களில் அனுமதி DIN DIN Wednesday, March 20, 2019 04:36 AM +0530 ஜோலார்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, திருவண்ணாமலை தொகுதிக்கு உள்பட்ட ஜோலார்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு, பொன்னேரி இணைப்புச் சாலை மற்றும் வக்கணம்பட்டி பழையூர் மாரியம்மன் கோயில் அருகில் ஆகிய 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/கட்சியினர்-பொதுக்கூட்டம்-நடத்த-3-இடங்களில்-அனுமதி-3117100.html
3117099 சென்னை வேலூர் மக்களவைத் தேர்தல்: 4 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வருகை DIN DIN Wednesday, March 20, 2019 04:35 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் 4 பேர் வேலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். 
இதுகுறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம், வேலூர் தொகுதிகளுக்கு தலா 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அதன்படி, அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு யாதுவீர்சிங், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளுக்கு ஹரீஷ்குமார், வேலூர் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உஜ்வால்குமார், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ரவிகாந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் 4 பேரும் வேலூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
இதில், யாதுவீர்சிங் - 8300 30526, ஹரீஷ்குமார் - 8300 30527, உஜ்வால்குமார் - 8300 30528, ரவிகாந்த் - 8300 30529 ஆகிய செல்லிடபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/மக்களவைத்-தேர்தல்-4-தேர்தல்-செலவினப்-பார்வையாளர்கள்-வருகை-3117099.html
3117098 சென்னை வேலூர் மக்களுக்காக பணியாற்ற அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறேன்: பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி DIN DIN Wednesday, March 20, 2019 04:35 AM +0530 மக்களுக்காக பணியாற்ற அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று  பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு அரக்கோணம் உள்பட 7 தொகுதிகள் ஒதுக்கப்பபட்டுள்ளன. இதையடுத்து அரக்கோணம் தொகுதியில் போட்டியிட பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இதையொட்டி, வேலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
அரக்கோணம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவுபெற்ற, அதிமுக கூட்டணி வேட்பாளராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளேன். இதையடுத்து வேலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பிற நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். 
அரக்கோணம் தொகுதியில் பொதுமக்களுக்கு பணியாற்ற ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட பொது வேட்பாளராக ராமதாஸ் என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிட்டேன். இந்த முறை அரக்கோணம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கூட்டணி கட்சிகளும், முதல்வர் உள்பட தலைவர்களும் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் மக்களுக்காக பணியாற்ற அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.  வரும் 28-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்க உள்ளேன். வேட்புமனு தாக்கல் எப்போது செய்வேன் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றார் அவர். அப்போது, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/மக்களுக்காக-பணியாற்ற-அரக்கோணம்-தொகுதியில்-போட்டியிடுகிறேன்-பாமக-வேட்பாளர்-ஏகேமூர்த்தி-3117098.html
3117097 சென்னை வேலூர் மலையில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத் துறை ஆட்டோ பிரசாரம் DIN DIN Wednesday, March 20, 2019 04:35 AM +0530 மலைப்பகுதியில் தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூரில் வனத் துறை அலுவலர்கள் ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வேலூரை நகரையொட்டி உள்ள மலையில் வளர்ந்துள்ள புல், செடி, மரங்கள் தற்போது கோடை வெயிலால் காய்ந்துள்ளன. இந்த புல், செடி, கொடிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து செல்வதால் எரிந்து கருகி வருகின்றன. அத்துடன், இந்த காட்டுத் தீயில் இருந்து வெளியேறும் தீப்பொறிகளால் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா உத்தரவின்பேரில் வனசரகர் டி.கோவிந்தராஜ் தலைமையில் வனத் துறை அலுவலர்கள் வேலூர் நகரில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், வேலூர் வனத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள மரங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மலையில் தீ வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லத்தேரி பகுதியில் அதிக அளவில் மான்கள் உள்ளன. தண்ணீர் தேடி மான்கள் போன்ற உயிரினங்கள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதியில் 15 இடங்களில் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/மலையில்-தீ-வைத்தால்-கடும்-நடவடிக்கை-வனத்-துறை-ஆட்டோ-பிரசாரம்-3117097.html
3117096 சென்னை வேலூர் கோதாவரி-பாலாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்: ஏ.சி.சண்முகம் DIN DIN Wednesday, March 20, 2019 04:34 AM +0530 வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மக்கள் என்னை தேர்வு செய்தால் கோதாவரி-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இதையொட்டி, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசியது: தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது கிடையாது.
 மாநில அரசின் சாதனைகளை நாள் முழுவதும் கூறலாம். அந்த அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லோருக்கும் கொடுத்துப் பழக வேண்டும், வாங்கிப் பழகக் கூடாது என்று எம்ஜிஆர் அடிக்கடி கூறுவார். அதை இப்போதும் நான் பின்பற்றி வருகிறேன். இந்தத் தொகுதியில் நான் வெற்றி பெறும்பட்சத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்படும். எனது சொந்த செலவில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம், இலவச திருமண மண்டபம் அமைக்கப்படும். 
அத்துடன், பாலாறு நீராதாரம் பெற கோதாவரி-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன். 
பெங்களூரில் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதைப் போல் வேலூர் தொகுதியிலும் மருத்துவ சேவை கிடைக்க வழிவகை செய்வேன் என்றார்.  
கூட்டத்துக்கு, தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும், மாநிவ வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தார். வேலூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவர் வி.எஸ்.விஜய் வரவேற்றார். மேற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் எம்.மூர்த்தி, புதிய நீதிக் கட்சி மாவட்டத் தலைவர் ஜி.பி.கே.பாலாஜி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தமாகா மாவட்டத் தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/கோதாவரி-பாலாறு-இணைப்புத்-திட்டம்-செயல்படுத்தப்படும்-ஏசிசண்முகம்-3117096.html
3117095 சென்னை வேலூர் ஒத்திவைக்கப்பட்டதா சாதனைத் திட்டமான சர்க்குலர் ரயில் திட்டம்? DIN DIN Wednesday, March 20, 2019 04:34 AM +0530 தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட சாதனைத் திட்டமான சென்னை - அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு -சென்னை சர்க்குலர் ரயில் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 95 சதவீத பணிகள் முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மீட்டர்கேஜ் ரயில்பாதை இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் பணி முடிவடைந்து மின்மயமாக்கப்பட்டபோது அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.வேலு ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
 "இப்பாதையில் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வகையில் சென்னை - காஞ்சிபுரம் - சென்னை வழியில் சர்க்குலர் ரயில் இயக்கப்படும்' என அவர் அறிவித்தார். இதையறிந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வடசென்னை, திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளுக்கு செல்பவர்களும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் பகுதியில் இருந்து தென்சென்னை, தாம்பரம் பகுதிகளுக்கு செல்பவர்களும், குறிப்பாக தினசரி அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் இப்பணி முடிவடைந்து மின்மயமாக்கப்பட்டபோது அரக்கோணம் - தக்கோலம் ரயில் நிலையங்களுக்கு இடையே மின்மயமாக்கப்படும் பணிக்கு அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகம் தடை விதித்தது. தங்களது தளத்தில் உள்ள விமானங்களின் இயக்கத்துக்கு இப்பணிகளால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி இத்தடை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாதுகாப்புத் துறை ரூ. 54 கோடியை ரயில்வே நிர்வாகத்துக்கு அளித்தது. அதைத் தொடர்ந்து அப்பாதையில் பொய்ப்பாக்கம் பகுதியில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரை பாதையை மாற்றுப்பாதையில் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்து இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
இப்பணி நடைபெறுவதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளோடு மிகுந்த தாமதம் நீடித்தது. அந்தச் சூழ்நிலையில், தற்போது தெற்கு ரயில்வே பொது மேலாளராக உள்ள குல்சிரேஷ்டா விரைவாக நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை விரைந்து முடித்தார். 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் முழுவதும் மின்மயமாக்கப்பட்டு முடிவடைந்தன. இதையடுத்து, இப்பாதையில் ஜனவரி மாதம் இந்திய ரயில்வே தெற்கு மண்டல பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி "இப்பாதை போக்குவரத்துக்கு ஏற்றது' என சான்றிதழ் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இப்பாதையைப் பார்வையிட வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்டா, பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் மார்ச் முதல் வாரம் இப்பாதையில் மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும், இதில் சர்க்குலர் ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்தார். 
இந்நிலையில் இப்புதிய பாதையை தற்போதைய பாதையான அரக்கோணம் - தக்கோலம் பாதையுடன் இணைக்கும் பணிகளும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல்கள் மாற்றியமைக்கும் பணியும் நடைபெறாத நிலை நீடித்தது. இதற்காக அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் பலமுறை மத்திய ரயில்வே அமைச்சர், அரக்கோணம் எம்.பி., எம்எல்ஏ, தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை கோட்ட மேலாளர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
புதிய பாதையை அரக்கோணம் - தக்கோலம் பாதையோடு இணைக்கும் பணியை மேற்கொள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல்களில் பெரிய அளவில் மாறுதல்களைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த மாறுதல்களை செய்து முடிக்க அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் குறைந்தது ஆறு மணி நேரம் ரயில்களின் இயக்கத்தை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. 
அந்த அனுமதியை ரயில்வே வாரியத்திடம் பெற வேண்டும். இது தொடர்பாக ரயில்வே வாரிய அலுவலர்கள் அளித்த பதிலில் "இப்பாதை தெற்கு ரயில்வேயின் மிக முக்கிய வழித்தடமாக இருப்பதாலும், தற்போது கோடைகாலத் தொடக்கமாகவும், பல்வேறு புதிய ரயில்களின் அறிமுக காலமாகவும் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ரயில் இயக்கத்தை நிறுத்துவதை அனுமதிக்க இயலாது. 
மேலும் இப்பணிகள் ஆறு மணி நேரத்தில் முடியாது. குறைந்தது பத்து மணி நேரமாகும். எனவே இப்பணிகளை மே மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.  இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கினால் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட கோட்டமாக மாறும். தெற்கு ரயில்வேயில் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட கோட்டம் என்ற பெயரை சென்னை கோட்டம் பெறும். மேலும் இந்தியாவிலேயே இரண்டாவது சர்க்குலர் ரயில் இயங்கும் பாதையாகவும், நாட்டின் நீண்ட தூர சர்க்குலர் ரயில், அதாவது 232 கி.மீ சர்க்குலர் ரயில் பாதையாகவும் இது மாறும். இது தெற்கு ரயில்வேயின் சாதனையில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பணிகள் ஒத்திப் போடப்பட்டுள்ளன.
இப்பாதை பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மறைமலைநகர் செல்லவும், திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம் பகுதிகளில் உள்ளவர்கள் தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர் செல்லவும் பெரிதும் உதவியாக அமைந்திருக்கும்.  இதனாலேயே அதற்குண்டான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்தே இவ்வழிகளில் பயணிக்கும் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது இந்த மகிழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது. 
இந்திய ரயில்வே அமைச்சகம், ரயில்வே வாரியத்துடன் இணைந்து சர்க்குலர் ரயில் பாதையில் விரைவில் பணிகளை முடித்து போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/ஒத்திவைக்கப்பட்டதா-சாதனைத்-திட்டமான-சர்க்குலர்-ரயில்-திட்டம்-3117095.html
3117094 சென்னை வேலூர் முருகன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு DIN DIN Wednesday, March 20, 2019 04:34 AM +0530 கல்புதூர் சிறுகுன்றம் முருகன் கோயில் மூலவர் மீது சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தரிசித்தனர்.
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே கல்புதூர் கிராமம் சிறுகுன்றத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் மீது ஆண்டுக்கு சில நாள்கள் சூரியனின் கதிர்கள் விழுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டு உத்தராயண காலத்தையொட்டி கடந்த 16ஆம் தேதி முதல் காலை காலை 6.13 மணி முதல் 6.50 மணி வரை மூலவர் மீது சூரிய ஒளி நிலைகொண்டிருந்தது. அதன் பின் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 
மூலவர் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு 20ஆம் தேதி (புதன்கிழமை) வரை நிகழும் என பிரபு சாது சுவாமிகள் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/20/முருகன்-கோயில்-மூலவர்-மீது-சூரிய-ஒளி-விழும்-நிகழ்வு-3117094.html
3116492 சென்னை வேலூர் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: வேலூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் DIN DIN Tuesday, March 19, 2019 02:40 AM +0530
பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக வேலூர் கன்டோன்மென்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 
வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை: வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து மார்ச் 20-ஆம் தேதி  இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் (எம்.இ.எம்.யு.,) புறப்பட்டு, அதேநாளில் இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். இந்த ரயில் கணியம்பாடியை இரவு 9.57 மணிக்கும், கண்ணமங்கலத்தை இரவு 10.09 மணிக்கும், ஆரணி சாலையை இரவு 10.24 மணிக்கும், போளூரை இரவு 10.40 மணிக்கும்,  அகரத்தை 10.51 மணிக்கும், துரிஞ்சாபுரத்தை இரவு 11.07 மணிக்கும் சென்றடையும்.
திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட்: திருவண்ணாமலையில் இருந்து மார்ச் 21-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில்(எம்.இ.எம்.யு) புறப்பட்டு, அதேநாளில் காலை 5.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்டை அடையும். இந்த ரயில் துரிஞ்சாபுரத்தை அதிகாலை 4.12 மணிக்கும், அகரத்தை அதிகாலை 4.29 மணிக்கும், போளூரை அதிகாலை 4.41மணிக்கும்,  ஆரணி சாலையை அதிகாலை 5.00 மணிக்கும், கண்ணமங்கலத்தை அதிகாலை 5.16 மணிக்கும், கணியம்பாடியை அதிகாலை 5.33 மணிக்கும் வந்தடையும்.  இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/19/திருவண்ணாமலை-பௌர்ணமி-கிரிவலம்-வேலூரில்-இருந்து-சிறப்பு-ரயில்-இயக்கம்-3116492.html