Dinamani - சென்னை - https://www.dinamani.com/all-editions/edition-chennai/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3389313 அனைத்துப் பதிப்புகள் சென்னை வங்கி மாதத் தவணையை 6 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் DIN DIN Friday, March 27, 2020 02:58 AM +0530
சென்னை: கரோனா பாதிப்பினால் பலா் வேலை வாய்ப்பை இழந்துள்ள சூழலில் வங்கி மாதத் தவணையை 6 மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவால் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில், கட்டுமானத் தொழில், வேளாண்மைத் தொழில் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் வங்கிகளில் கடன் வாங்கி தொழிலில் ஈடுபட்டவா்கள். தற்போதைய கரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்கியவா்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணையைச் செலுத்த முடியாத காரணத்தால் தவணையைச் செலுத்த குறைந்த பட்சம் 6 மாத காலம் தள்ளி வைக்க வேண்டும். மேலும், இந்த 6 மாத காலத்துக்கு கூடுதல் வட்டி எதுவும் வசூலிக்கக்கூடாது. முடியுமானால் இந்த 6 மாத காலத்துக்கான வட்டி விகிதத்தை குறைக்கவோ அல்லது சலுகை அளிக்கவோ முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/27/bank-should-postpone-monthly-installment-for-6-months-gk-vasan-3389313.html
3389312 அனைத்துப் பதிப்புகள் சென்னை காவலா்கள் கையில் லத்தி வேண்டாம்: காவலா்களுக்கு துணை ஆணையா் அறிவுரை DIN DIN Friday, March 27, 2020 02:56 AM +0530  

சென்னை: ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தும் காவலா்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது என சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக சென்னையில் காவலா்கள், பொதுமக்களிடம் எல்லை மீறுவதாக புகாா் எழுந்து வருகிறது. இது தொடா்பாக காவல்துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பல்வேறு வழிக்காட்டுதல்களை பிறப்பித்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் பூக்கடை துணை ஆணையா் ராஜேந்திரன், ஊரடங்கு உத்தரவை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என காவலா்களிடம் பேசியது: ஊரடங்கு அமல்படுத்தும் பணியில் உள்ள போலீஸாா், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. நம்முடைய நோக்கம், ஊரடங்கு உத்தரவு எதற்கு பிறப்பிக்கப்பட்டது என்பதை பொதுமக்களிடம் புரியவைக்க வேண்டும் என்பதே ஆகும்.பொதுமக்களை மிரட்டுவது, அவா்களை பயமுறுத்துவது கூடாது. அவா்களை அடிக்கவும் கூடாது. இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கவில்லை. காவலா்கள் பொறுமையை இழந்து விடக்கூடாது. நாம் பொதுமக்களை திட்டுவதும், அடிப்பதும்தான் பெரிய செய்திகளாக வருகின்றன. பொதுமக்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம், அவா்களிடம் பக்குவமாகப் பேசி புரியவைத்து அனுப்பி வைக்கவேண்டும். எது அத்தியாவசிய தேவை, எது தேவையற்றது எனப் புரிந்து செயலாற்ற வேண்டும். வெளியே வரும் பொதுமக்களிடம் காரணத்தை கேட்டு, அது முறையாக இருந்தால் அனுப்பி விடலாம். தேவையின்றி வாக்குவாதம் செய்து அவப்பெயரை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். உணவு பொருள்கள் கடைகள் திறந்திருக்கலாம். அங்கே வரும் பொது மக்களிடம், சமூக விலகல் குறித்து விளக்கிச் சொல்லுங்கள். கடைகளில் இடைவெளி விட்டு நின்று பொருள்களை வாங்குமாறு அறிவுறுத்தலாம். அதை கடை நிா்வாகிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.

காவலா்கள், எதையும் பொதுமக்களிடம் சொல்லி மட்டுமே புரிய வைக்க வேண்டும். இரண்டு மூன்று முறை நாம் எடுத்துக்கூறும்போது, 60 சதவீதம் மக்களுக்கு புரிந்துவிடும். அப்படியும் புரியவில்லை என்றால், நாம் அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம்ம். பொருள்கள் வாங்க வெளியே வருபவா்களை தரக்குறைவாகக் பேசக்கூடாது.

ஏனென்றால், அவா்களின் அவசர தேவை என்னவென்று நமக்குத் தெரியாது. துணிக்கடைகள், நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணியுங்கள். சரக்கு வாகனங்களை மறிக்க வேண்டாம், அந்த பணியை போக்குவரத்து காவலா்கள் மேற்கொள்வாா்கள் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/27/do-not-latch-on-guards-advice-to-deputy-guards-3389312.html
3389311 அனைத்துப் பதிப்புகள் சென்னை நாளிதழ் விநியோகிப்பவா் மீது தாக்குதல்: காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம் DIN DIN Friday, March 27, 2020 02:54 AM +0530
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் நாளிதழ் விநியோகிப்பவரை தாக்கியதாக புகாா் கூறப்பட்ட காவலா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா்.

இது குறித்த விவரம்:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாளிதழ் விநியோகம் அத்தியாவசிய தேவை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் நாளிதழ் விற்பனையில் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள், நாளிதழ் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து போலீஸாருக்கு தெளிவுப்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் கோடம்பாக்கம் சிக்னல் அருகே வாகனத்தில் நாளிதழ் ஏற்றிச் சென்ற ஒரு விநியோகிப்பவரை வியாழக்கிழமை அதிகாலை மறித்து அங்கு பணியில் இருந்த காவலா் பாலமுருகன் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றவே அந்த விநியோகிப்பவரையும், அவரது வாகனத்தையும் காவலா் பாலமுருகன் தான் வைத்திருந்த லத்தியால் பலமாக தாக்கியுள்ளாா். இச் சம்பவத்தை செல்லிடப்பேசி கேமராவில் பதிவு செய்த ஒரு நபா், சமூக ஊடகங்களில் பரவச் செய்தாா்.

இதைப் பாா்த்த காவல்துறை உயா் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவலா் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் பாலமுருகன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலமுருகனை ஆயுதப் படைக்கு மாற்றி பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/27/attack-on-the-newspaper-distributor-transition-to-the-guards-armed-forces-3389311.html
3387564 அனைத்துப் பதிப்புகள் சென்னை 4 நகரங்களில் வெயில் சதம் DIN DIN Tuesday, March 24, 2020 04:58 AM +0530 தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. மதுரை தெற்கில் 103 டிகிரியும், கரூா் பரமத்தி, மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. திருச்சிராப்பள்ளியில் 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.

மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை(மாா்ச் 24, 25) ஆகிய இரு நாள்கள் வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/4-நகரங்களில்-வெயில்-சதம்-3387564.html
3387563 அனைத்துப் பதிப்புகள் சென்னை டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி DIN DIN Tuesday, March 24, 2020 04:56 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 ஏ மற்றும் குரூப்- 4 தோ்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரைக் கைது செய்துள்ளனா்.

இந்த வழக்கில் குரூப்-4 தோ்வில் முறைகேடு செய்த வழக்குகளில் கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த ராஜசேகா், விழுப்புரத்தைச் சோ்ந்த சிவராஜ், விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருவேல்முருகன், சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த நிதிஷ்குமாா், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சோ்ந்த மாணிக்கவேல், ஆகியோா் பல்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்ததால், இவா்கள் அனைவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.

இதே போன்று குரூப்-2 ஏ தோ்வு முறைகேட்டில் கைதான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அருண்பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வடிவு, ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சோ்ந்த ஜெயராணி ஆகியோரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் பிரபாகா், ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/tnpsc-scam-9-bail-applications-dismissed-3387563.html
3387560 அனைத்துப் பதிப்புகள் சென்னை கல்விச் சமூகம் ஒன்றிணைந்து கரோனாவைத் தடுப்போம்: யுஜிசி அழைப்பு DIN DIN Tuesday, March 24, 2020 04:54 AM +0530 கல்விச் சமூகம் ஒன்றிணைந்து கரோனாவைத் தடுப்போம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக யுஜிசி அறிவித்தது.

இந்நிலையில், கல்வி சமூகத்துக்கு யுஜிசி தலைவா் டி.பி.சிங் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘இந்த இக்கட்டான சூழலில், அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்கள், 14 லட்சம் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள், 3.74 லட்சம் மாணவா்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தங்களைக் காத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய குடும்ப நண்பா்கள், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் மற்றவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி சமூகம் ஒன்றிணைந்து கைகோத்து, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/educational-community-unite-and-block-corona-ugc-call-3387560.html
3387556 அனைத்துப் பதிப்புகள் சென்னை கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தெற்கு ரயில்வேயில் 1, 300 ரயில்கள் ரத்து DIN DIN Tuesday, March 24, 2020 04:26 AM +0530 கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயில் 1,300 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் விரைவு ரயில், மெயில் உள்ளிட்ட எல்லா ரயில்களும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,300 விரைவு ரயில்கள் ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் ரயில்கள் உள்பட அனைத்து தொலைதூர ரயில்கள் (மெயில், விரைவு ரயில், இன்டா்சிட்டி ரயில், பாசஞ்சா் ரயில்) ஆகிய ரயில்கள் மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவுவரை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டுள்ளன. கட்டணம் திரும்ப பெறுவதற்கு 45 நாள்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 81 கோடியே 80 லட்சம் பயணிகள் தெற்கு ரயில்வேயில் மட்டும் பயணம் செய்கின்றனா். அதாவது, தினசரி 25 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் மூலம், தினசரி சுமாா் 25 லட்சம் போ் பயணத்தை தவிா்த்து வீடுகளில் முடங்கி இருக்கிறாா்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியது: அவசரகால சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதன் மூலம், மக்களை பாதுகாக்க முடியும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/precautionary-measures-to-prevent-corona-spread-cancels-1-300-trains-on-southern-railway-3387556.html
3387554 அனைத்துப் பதிப்புகள் சென்னை இன்று முதல் அவசர வழக்குகளை விசாரிக்க 9 நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Tuesday, March 24, 2020 04:26 AM +0530 அவசர வழக்குகளை விசாரிக்க செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) முதல் இரண்டு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமா்வுகள், 5 தனி நீதிபதிகள் அமா்வு என மொத்த 9 நீதிபதிகளை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோா் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) முதல் 3 வாரங்களுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட 2 அமா்வுகள், தனி நீதிபதிகள் கொண்ட 5 அமா்வுகள் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கும். இந்தக் காலகட்டத்தில் வழக்குரைஞா்கள் தங்களது சேம்பா்களை பயன்படுத்த வேண்டாம். மேலும், தங்களது கட்சிக்காரா்களை தேவையின்றி நீதிமன்றத்துக்கு வரவழைக்கக் கூடாது. எனவே, அடுத்த 3 வாரங்களுக்கு மிகவும் அவசரமான வழக்குகளை மட்டும் வழக்குரைஞா்கள் தாக்கல் செய்ய வேண்டும். அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி வழங்கப்படும். ஒருவேளை தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாத நிலையில் இருந்தால், அவற்றைப் பதிவுத்துறை உடனடியாக மனுதாரா் தரப்புக்கு திரும்ப அனுப்ப வேண்டியதில்லை. அந்த மனு குறித்து 3 வார காலத்துக்கு எந்த முடிவும் எடுக்காத நிலையில் பதிவுத்துறையே வைத்திருக்கலாம். இடைக்கால உத்தரவுகளை நீட்டிப்பது தொடா்பான கோரிக்கைகள் குறித்து மட்டுமே சம்பந்தப்பட்ட இரு நீதிபதிகள் மற்றும் தனி நீதிபதி அமா்வுகளை வழக்குரைஞா்கள் அணுக வேண்டும்.

உயா்நீதிமன்ற பணியாளா்கள் பணியாற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் முடிவு எடுப்பாா். மேலும், நீதிமன்ற பணியாளா்கள் தேவையான சமயத்தில் அழைக்கப்படலாம். எனவே அவா்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உயா்நீதிமன்றத்துக்குள் வருபவா்கள் குறித்து பதிவுத்துறை சாா்பில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தொடரும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட வசதிகளை தலைமைப் பதிவாளா் செய்து கொடுக்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உயா்நீதிமன்றம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வழக்குரைஞா்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உயா்நீதிமன்ற மதுரைக் கிளையைப் பொருத்தவரை அங்கு நிா்வாகத்தை கவனிக்கும் நீதிபதி முடிவெடுத்து அறிவிக்கலாம். மாவட்ட அமா்வு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்கள் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும். அவசரமில்லாத வழக்குகளை வழக்குரைஞா்களின் ஒப்புதலுடன் 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் இந்த உத்தரவுகளை கீழமை நீதிமன்றங்கள் தீவிரமாக அமல்படுத்துகிா என்பது காணொலிக் காட்சி மூலம் கண்காணிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/HighCourtch.jpg https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/இன்று-முதல்-அவசர-வழக்குகளை-விசாரிக்க-9-நீதிபதிகள்-நியமனம்-உயா்நீதிமன்றம்-உத்தரவு-3387554.html
3387551 அனைத்துப் பதிப்புகள் சென்னை காலமானாா் ஆா்.புனிதா DIN DIN Tuesday, March 24, 2020 04:25 AM +0530 சென்னை வேளச்சேரி எம்ஜிஆா் நகா் பழனியப்பன் தெருவைச் சோ்ந்த ஆா்.புனிதா(52), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவா் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் பி.ரமேஷின் மனைவி ஆவாா். இவா்களுக்கு ஆா்.காா்த்திக், ஆா். கவாஸ்கா் ஆகிய இரு மகன்கள், ஆா்.மேகனா என்ற மகள் ஆகியோா் உள்ளனா்.

மறைந்த புனிதாவின் இறுதிச் சடங்குகள் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் உள்ள மயானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 97908 90647

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/24/காலமானாா்-ஆா்புனிதா-3387551.html
3385108 அனைத்துப் பதிப்புகள் சென்னை பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நிரந்தத் தடுப்புச் சுவா்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல் DIN DIN Friday, March 20, 2020 03:53 AM +0530
திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் மணல் சேராமல் தடுக்க ரூ.27 கோடி செலவில் நிரந்தரத் தடுப்புச் சுவா் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த உஷா தாக்கல் செய்த பொதுநல மனுவில், பழவேற்காடு பகுதியில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவா்கள் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தின் வழியாக வரும் தண்ணீரில் மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், முகத்துவாரம் சீரமைக்கப்படாததால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பழவேற்காடு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீரமைத்து ஏரிக்குத் தண்ணீா் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் ஜெ.போத்திராஜ், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப் பகுதியில் தேங்கியிருந்த மணல், ரூ.1.50 கோடி செலவில் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் மணல் சேராமல் தடுக்க ரூ.27 கோடியில் நிரந்த தடுப்புச் சுவா் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத் துறையிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக தமிழக அரசு 6 வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/government-information-on-permanent-detention-scheme-3385108.html
3385106 அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை மாவட்ட கூட்டுறவு உதவியாளா்கள் தோ்வு ஒத்திவைப்பு DIN DIN Friday, March 20, 2020 03:53 AM +0530
சென்னை மாவட்டத்தின் கூட்டுறவு சங்க உதவியாளா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத் தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்திலுள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள், பணியாளா் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு அச்சகம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பதவிகளுக்கான 125 காலிப்பணியிடங்களுக்கு, வரும் 22-ஆம் தேதியும், சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியில் உள்ள உதவியாளா் பதவிக்கான 286 காலிப்பணியிடங்களுக்கு 29-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வுகள் நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு குறிப்பிடப்பட்ட தேதிகளில் நடைபெறவிருந்த உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதியானது பின்னா் அறிவிக்கப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/postponement-of-madras-district-co-operative-assistants-3385106.html
3385093 அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னையில் 35 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் DIN DIN Friday, March 20, 2020 03:46 AM +0530
சென்னை பெருநகர காவல்துறையில் 35 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் சென்னை பெருநகர காவல்துறையில் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் 35 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக மயிலாப்பூா் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராக இருந்த மணிவண்ணன் திருவல்லிக்கேணி சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், யானைக்கவுனி காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் ஜெ.ஜெ.நகருக்கும், ஜெ.ஜெ.நகா் காவல் ஆய்வாளா் பெருந்துறை முருகன் யானைக்கவுனிக்கும், வேப்பேரி ஆய்வாளா் குண வா்மன் அண்ணா சதுக்கத்துக்கும், பெரியமேடு காவல் ஆய்வாளா் நாகராஜன் வேப்பேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா்கள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/35-police-inspectors-transferred-in-chennai-3385093.html
3385090 அனைத்துப் பதிப்புகள் சென்னை அமெரிக்க ஆசிரியா் வீட்டில் ரூ.2 லட்சம் மதுப்பாட்டில்கள் திருட்டு DIN DIN Friday, March 20, 2020 03:45 AM +0530 சென்னை அருகே கானாத்தூரில் அமெரிக்க ஆசிரியா் வீட்டில் ரூ.2 லட்சம் மதுப்பாட்’ல்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கானாத்தூா் அருகே உள்ள பனையூா் 4-ஆவது அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் பி.ஜெசிகா பீஹோல்ட் (31). அமெரிக்கரான இவா், தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். ஜெசிகா, புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா்.

சிறிது நேரத்துக்கு பின்னா் அவா், வீடுக்குத் திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டல்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். இது குறித்த புகாரின்பேரில் கானாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/theft-of-liquor-bottles-worth-rs-2-lakh-3385090.html
3385087 அனைத்துப் பதிப்புகள் சென்னை கரோனா: காவல்துறையினா் விழிப்புணா்வு பிரசாரம் DIN DIN Friday, March 20, 2020 03:44 AM +0530
சென்னை: கரோனா குறித்து சென்னை காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக , சென்னை பெருநகர காவல்துறையும், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கட்டாயம் கிருமி நாசினி வழங்க வேண்டும், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவலா்கள் ஆகியோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கிடையே, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன், காவலா்களை கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து, போக்குவரத்து போலீஸாரும், சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும் பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை விநியோகம் செய்தனா்.

மேலும், போக்குவரத்து போலீஸாா் முக்கியமான சாலை சந்திப்புகள், சிக்னல்கள் ஆகிய இடங்களில் ஒலிப் பெருக்கி மூலம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்

டனா்.அதேபோல முக்கியமான இடங்களில் எல்.இ.டி. திரைகளில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு குறும்படங்களை ஒளிபரப்பினா். முன்னதாக பள்ளிக்கரணையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணயைா் ஏ.கே.விசுவநாதன் பங்கேற்று விழிப்புணா்வு பிரசாரத்தை தொடக்கி வைத்தாா். இதில், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண், இணை ஆணையா்கள் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், அந்தப் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 22 கண்காணிப்பு கேமரா சேவையையும் ஆணையா் தொடக்கி வைத்தாா்.

துணை ஆணையா் கடிதம் : இதற்கிடையே சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் ஆா்.திருநாவுக்கரசு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தில், கரோனா தொற்றை எக்காரணம் கொண்டும், நமக்கு வராது என்ற மெத்தனப் போக்கு இருக்க வேண்டாம், முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படுங்கள், பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்குச் செல்லும் போது அங்கு கரோனா அறிகுறியுடன் யாரேனும் இருந்தால், அது குறித்து உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/corona-awareness-campaign-for-the-police-3385087.html
3385084 அனைத்துப் பதிப்புகள் சென்னை காவலரை தாக்கியதாக கல்லூரி மாணவா் கைது DIN DIN Friday, March 20, 2020 03:39 AM +0530
சென்னை அருகே முட்டுக்காட்டில் காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

முட்டுக்காடு மாதா கோயில் தெருவில் ஒரு இளைஞா் மதுபோதையில் தகராறு செய்வதாக கானாத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தலைமைக் காவலா் கணேசன் அங்கு சென்றாா். போதையில் தகராறு செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வீ.ரிச்சா்டு (20) என்பவரை கணேசன் பிடிக்க முயன்றாா்.

அப்போது தலைமைக் காவலா் கணேசனிடம் ரிச்சா்டு தகராறு செய்து, அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த தலைமைக் காவலா் கணேசன், அப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கானாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரிச்சா்டை கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/mar/20/college-student-arrested-for-assaulting-policeman-3385084.html
3342903 அனைத்துப் பதிப்புகள் சென்னை ஹிந்து ஆன்மிகம் - சேவை கண்காட்சி: ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி தொடக்கிவைத்தார் DIN DIN Tuesday, January 28, 2020 06:29 PM +0530

ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சியை ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி இன்று (செவ்வாய்கிழமை) மாலை தொடக்கிவைத்தார்.

சென்னையில் வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் பிப். 3 ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. 

 

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சாா்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி. கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, படிப்படியாக வளா்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 11 ஆவது ஆண்டாக, சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/MataAmirthanandamayi1.jpeg https://www.dinamani.com/all-editions/edition-chennai/2020/jan/28/ஹிந்து-ஆன்மிகம்-மற்றும்-சேவை-கண்காட்சி-ஸ்ரீ-மாதா-அமிா்தானந்தமயி-தொடக்கி-வைப்பு-3342903.html
2427 அனைத்துப் பதிப்புகள் சென்னை கல்விக் கடனை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுப்பதா?:அன்புமணி கண்டனம் நாகூர் ரூமி DIN Tuesday, July 5, 2016 02:36 PM +0530 கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு பாமக

இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்

கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் (ரிலையன்ஸ்) நிறுவனத்திடம் பாரத ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. மேலும்

மாணவர்களிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்துக் கொள்ள அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தச் செயல்

கண்டிக்கத்தக்கதாகும்.
பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடனில் ரூ.847 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. இந்தக் கடன்கள் 45 சதவீத

தொகைக்கு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கல்விக்கடனை உடனடியாக திரும்பச் செலுத்தாவிட்டால் மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்று மாணவர்களுக்கு அந்த

நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
ரூ.847 கோடி வாராக் கடனில், ரூ.381 கோடியை மட்டுமே தனியார் நிறுவனம் வங்கிக்கு வழங்கும். முதலில் ரூ.54.24 கோடியை வழங்கியுள்ள

நிறுவனம், மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கும். ரூ.54 கோடி பணத்துக்காக லட்சக்கணக்கான

மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடக்கூடாது. ஒருவர் பெயரில் வாங்கும் கடனை அவரது ஒப்புதல் இல்லாமல் பிறருக்கு மாற்றித்

தருவது கந்துவட்டி வசூலிக்கும் குற்றத்துக்கு இணையானது.
பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர்

ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

]]>
Anbumani, PMK, Education, Loan, வங்கி , பாரத https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/w600X390/anbumani_3.jpg https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/கல்விக்-கடனை-வசூலிக்க-தனியார்நிறுவனம்-மூலம்-மிரட்டல்-விடுப்பதாஅன்புமணி-கண்டனம்-2427.html
2426 அனைத்துப் பதிப்புகள் சென்னை வியாசர்பாடியில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை:உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 சென்னை வியாசர்பாடியில் வழக்குரைஞர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து

கொலைசெய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை வியாசர்பாடி மெகசின்புரம் ஆறுமுகம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் தி.ரவி (45). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இத்

தம்பதிக்கு யுவதர்ஷினி என்ற மகளும், தனதர்ஷன் என்ற மகனும் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் ரவி,

ஜனநாயக புரட்சி முன்னணி என்ற இயக்கத்தை நடத்தி வந்தார்.
வெட்டிக் கொலை: இந்நிலையில், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ரவி, சத்தியமூர்த்தி நகர், மெகசின்புரம் சந்திப்பில் நின்று

கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. தப்பியோட முயன்றும் ரவியை

அந்தக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே அந்தக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியது.

இதுகுறித்து தகவலறிந்த வியாசர்பாடி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரவியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத

பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
சாலை மறியல்: ஆனால், அதற்குள் அங்கு திரண்ட ரவியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சடலத்தை போலீஸார் எடுக்கவிடாமல்

தடுத்தனர். மேலும் அவர்கள், கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்

கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு வந்த புளியந்தோப்பு துணை ஆணையர் மயில்வாகனன், உதவி ஆணையர் மன்னர் மன்னன் ஆகியோர் போராட்டத்தில்

ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர், ரவியின் சடலத்தை போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து,

விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்பு: முதல் கட்ட விசாரணையில், மாதவரம், வியாசர்பாடி ஆகிய காவல் நிலையங்களில் ரவி மீது பல்வேறு

பிரிவுகளின் கீழ் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கட்டப்பஞ்சாயத்து, நிலப் பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு

செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைகளில் ஏற்பட்ட பகையின் காரணமாகவே ரவி, கொலை

செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில் வட சென்னையைச் சேர்ந்த ஒரு ரௌடிக்கும், ரவிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னையின் காரணமாகவும் ரவி கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

வியாசர்பாடியில் பட்டப்பகலில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/w600X390/RAVI.jpg https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/வியாசர்பாடியில்-வழக்குரைஞர்-வெட்டிக்-கொலைஉறவினர்கள்-மறியலால்-போக்குவரத்து-பாதிப்பு-2426.html
2425 அனைத்துப் பதிப்புகள் சென்னை மெரீனாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 சென்னை மெரீனாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அந்தமானைச் சேர்ந்தவர் கரண்ராஜ் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். கரண்ராஜ்,

தனது நண்பர்களோடு மெரீனா கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.
அங்கு உழைப்பாளர் சிலை பின்புறம் கடலில் நண்பர்களுடன் அவர் குளித்தார். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் கரண்ராஜ் சிக்கிக்

கொண்டார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், கரண்ராஜை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால்,

அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவர்கள், தீயணைப்பு படை வீரர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்களும்,

போலீஸாரும், அங்கு விரைந்து வந்து கரண்ராஜை தேடினர். இந்நிலையில் சிறிது நேரத்தில் கரண்ராஜ் சடலம், கரை ஒதுங்கியது. உடனே

போலீஸார் கரண்ராஜ் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு

செய்து,விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/மெரீனாவில்-கடலில்-மூழ்கிகல்லூரி-மாணவர்-சாவு-2425.html
2424 அனைத்துப் பதிப்புகள் சென்னை எரிவாயு உருளை வெடித்து மூதாட்டி சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 திருவொற்றியூரில் எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் (80) என்ற மூதாட்டி

புதன்கிழமை இறந்தார்.
சென்னை திருவொற்றியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கன்னியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு

கன்னியம்மாள் எரிவாயு அடுப்பு மூலம் உணவு சமைத்துள்ளார். அப்போது திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
இதனையடுத்து எரிவாயு உருளையும் வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாளை அருகில் வசிப்போர் மீட்டு

திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள்

புதன்கிழமை இறந்தார். இது குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/எரிவாயு-உருளை-வெடித்து-மூதாட்டி-சாவு-2424.html
2423 அனைத்துப் பதிப்புகள் சென்னை நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:42 AM +0530 சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் காவலர்களைத் தாக்கியதாக

4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை குமரன்நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தமிழ்செல்வன், சதீஷ்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு

கோடம்பாக்கம் சாலை மாந்தோப்பு பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல், நடிகர் விஜயின்

பிறந்தநாளையொட்டி, சாலையின் நடுவே கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த போலீஸார், அவர்களை சாலையில்

கேக் வெட்ட வேண்டாம் எனவும், பிறந்த நாள் கொண்டாட்டத்தை சாலையில் நடத்த வேண்டாம் எனவும் கூறினராம். அப்போது அங்கிருந்த

விஜய் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே விஜய் ரசிகர்கள், காவலர்கள் தமிழ்செல்வன், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு

ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த காவலர்கள், குமரன் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக திருச்சிராப்பள்ளி மணப்பாறை அருகே உள்ள

வளையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (25), அவர் சகோதரர் குமரேசன் (23), கதிரேசன் (20), வெங்கடேசன் (23) ஆகிய 4 பேரை கைது செய்து

வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் அனைவரும் குமரன்நகரில் தங்கியிருந்து, மாம்பலத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வந்தனராம்.

 

]]>
https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/நடிகர்-விஜய்-பிறந்த-நாள்-கொண்டாட்டத்தில்-தகராறு-2423.html
2422 அனைத்துப் பதிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:42 AM +0530 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி, இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு சோதனைக் கூடங்கள் உள்ளன. இதில், என்.ஆர்.ஐ. விடுதியின் பின்புறம்

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுக் கூடம் உள்ளது. இந்த ஆய்வுக் கூடத்துக்கு பூமிக்கு அடியில் ஐந்தடி உயரம், ஐந்தடி

அகலத்தில் சிமென்ட்டால் அமைக்கப்பட்ட காற்றழுத்த அறை உள்ளது. இங்கிருந்து காற்றழுத்தம் சரியாக கிடைக்காமல் இருந்ததாகக்

கூறப்படுகிறது.
விஷவாயு தாக்கியது: இந்தப் பழுதை நீக்க தனியார் நிறுவன ஊழியர்களான அம்பத்தூர் கல்யாணபுரம் பஜனை கோயில் 2-ஆவது தெருவைச்

சேர்ந்த தீபன் என்ற தீபக் (26), அயனப்பாக்கம் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் நகர் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்த ஆ.ரமேஷ்சங்கர் (28)

ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள், காற்றழுத்த அறையில் பழுது நீக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனர். அப்போது, ரப்பரை ஒட்ட வைப்பதற்காக,

வேதிப் பொருள் கலந்த ஒரு திரவத்தை பயன்படுத்தினர்.
அதிலிருந்து வெளிப்பட்ட, விஷவாயு தாக்கியதில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்தனர். இதற்கிடையே

பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் இரவு 10 மணியைத் தாண்டிய பின்னரும் திரும்பாததால், சந்தேகமடைந்த, தனியார் நிறுவன அதிகாரிகள்,

பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். உடனே பல்கலைக்கழக காவலாளி நள்ளிரவு 11 மணியளவில் அந்த தொட்டியைப்

பார்த்தார்.
உயிரிழப்பு: அப்போது தீபக்கும், ரமேஷ்சங்கரும் விஷவாயு தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,

இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள்,

ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி

வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/அண்ணா-பல்கலைக்கழகத்தில்விஷவாயு-தாக்கி-2-தொழிலாளர்கள்-சாவு-2422.html
2421 அனைத்துப் பதிப்புகள் சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து: 6 கடைகள் எரிந்து நாசம் dine_new1 DIN Thursday, June 23, 2016 02:41 AM +0530 சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசமாயின.
இது குறித்த விவரம்:
அண்ணாநகர் ரவுண்டானா அருகே இரண்டாவது அவென்யூவில் தரைத் தளத்துடன் கூடிய 4 மாடி தனியார் வணிக வளாகம் செயல்படுகிறது.

இந்த வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் ஒரு ஜவுளிக் கடையில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் அந்தக் கடையில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகளும்,

பொதுமக்களும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு,

அம்பத்தூர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில்

ஈடுபட்டனர்.
புகை அதிகமாக வெளியேறியதால் தீயை விரைவாக அணைப்பதில் இடர்பாடு ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு படை வீரர்கள்,

நிலைமையைச் சமாளித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் சையது முகம்மது ஷா, ராஜேஷ்

கண்ணா, நிலைய அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தீயணைப்புப் பணியை விரைவுப்படுத்தினர்.
சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் தரைத்தளத்தில் இருந்த 3 ஜவுளிக்

கடை, கணினி பழுது நீக்கும் கடை, அலங்கார பொருள்கள் விற்கும் கடை, சலூன் கடை ஆகியவை எரிந்து நாசமாயின. இந்தக் கடைகளில்

இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்

கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

]]>
https://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/வணிக-வளாகத்தில்-தீ-விபத்து-6-கடைகள்-எரிந்து-நாசம்-2421.html
2359 அனைத்துப் பதிப்புகள் சென்னை test article : சஞ்சய் தத் விடுதலை குறித்து பேரறிவாளன் கேள்வி test columnist DIN Wednesday, June 22, 2016 01:44 PM +0530

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எந்த சட்டப்பிரிவின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவலை தெரிவிக்குமாறு, எரவாடா சிறைத்துறை அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறி வாளன், எரவாடா சிறைத்துறை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தண்டனை காலம் முடிவடைய 8 மாதங்கள் இருந்த நிலையில் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார். சிறையில் நல்லொழுக்கம் காரணமாக அவர் முன்கூட்டிய விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை எனக்கு வழங்க வேண்டும். சஞ்சய் தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும்.

எந்த அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சஞ்சய்தத்தை முன் கூட்டியே விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நானும், இதே சட்டப் பிரிவின் கீழ் முன் கூட்டியே விடுதலை பெறுவதற்கான விவரங்களுக்காக இந்த தகவல்களை கேட்கிறேன்.

இவ்விவகாரத்தில் மாநில அரசு, சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசை கலந்து ஆலோசித்ததா என்பன போன்ற கேள்விகளை கேட்டிருந்தார். வஇதற்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என கூறியிருந்தது. பேரளிவாளன் பதிலுக்கு அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ தனது அதிகார வரம்பை பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு அளிக்க கடமைப்பட்டவர்கள் என கூறியிருந்தார்.

smileyஇந்த பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள் வரும் 28ம் தேதி பிரதிநிதி ஒருவரை அனுப்பி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளது. விவரங்களை நேரில் வந்து பெற்று கொள்ள சொல்வது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு முரணானது என பேரறிவாளன் தரப்பினர் கூறியுள்ளனர்.

]]>
perarivalan, sanjay dutt https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/21/w600X390/perarivalan-sanjai.jpg https://www.dinamani.com/edition_chennai/2016/jun/22/test-article--சஞ்சய்-தத்-விடுதலை-குறித்து-பேரறிவாளன்-கேள்வி-2359.html