Dinamani - கிருஷ்ணகிரி - https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3119202 தருமபுரி கிருஷ்ணகிரி இடைத்தேர்தல்: ஒசூர் தொகுதியில் 2 சுயேச்சைகள் உள்பட 4 பேர் மனு தாக்கல் DIN DIN Saturday, March 23, 2019 03:40 AM +0530 ஒசூரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு 2 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். 
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் விமல்ராஜிடம் சுயேச்சை வேட்பாளர் சின்ன எலசகிரியைச் சேர்ந்த தேவப்ப (எ) தேவேகவுடா (53) மனு அளித்தார். இதையடுத்து, கோவிந்த அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜி.சி.ராமசாமி (67) சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் சார்பில் தேவராஜ் (40) மனு அளித்தார். இவர் சிவசேனாவில் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவராக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒசூர் லட்சுமி நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த ஓவியர் ராஜசேகர் (38) வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒசூரில் வெள்ளிக்கிழமை 2 சுயேச்சைகள் உள்பட நான்கு பேர்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/இடைத்தேர்தல்-ஒசூர்-தொகுதியில்-2-சுயேச்சைகள்-உள்பட-4-பேர்-மனு-தாக்கல்-3119202.html
3119200 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே தீயில் கருகி தாய், ஒன்றரை வயது மகள் பலி DIN DIN Saturday, March 23, 2019 03:28 AM +0530 ஊத்தங்கரையை அடுத்த செங்கன் கொட்டாவூர் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென கூரை வீடு தீப்பற்றியதில், தாய் மற்றும் ஒரு வயது குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த ஊமையனூர் கிராமத்தைச் சேர்ந்த சோலைராஜன் (32),  குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், வியாழக்கிழமை காலை பங்குனி உத்திர திருவிழாவுக்காக தனது மனைவி தீபா (29),  மகள் நித்யஸ்ரீ (1) இருவரையும் செங்கன் கொட்டாவூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் மாமனாரின் கூரை வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீரென  தீப்பற்றியதில், தீபா மற்றும் நித்யஸ்ரீ தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கணவன்,  மனைவி இருவருக்கும் ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில்,  இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/ஊத்தங்கரை-அருகே-தீயில்-கருகி-தாய்-ஒன்றரை-வயது-மகள்-பலி-3119200.html
3119199 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் மாநகராட்சியில் கோடைக்கு முன்பே தொடங்கியது குடிநீர் பிரச்னை DIN DIN Saturday, March 23, 2019 03:27 AM +0530 ஒசூர் மாநகராட்சியில் கோடை தொடங்கும் முன்பே பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியுற்று வருகின்றனர்.
ஒசூர் நகராட்சியில் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது ஒசூர் ராமநாயக்கன் ஏரி. தற்போது இந்த ஏரி வற்றிவிட்டதால், ஒசூர் நகர் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர்
வற்றிவிட்டது.
ஒசூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை ஒசூர் நகராட்சி நிர்வாகம்  வழங்கி வருகிறது. அதுவும் 15 நாள்கள் முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒசூர் ஜேஜே நகர், வசந்த் நகர், ரெயின்போ கார்டன், ராயக்கோட்டை அட்கோ, முனீஸ்வர் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மாதமாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை குறைந்துவிட்டதால், குடிநீர் பிரச்னை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
எனவே,  நிரந்தரத் தீர்வாக ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 
இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் துரை செய்தியாளர்களிடம் கூறியது: கோடை தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்னை தொடங்கிவிட்டது. ஒசூர் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தியதால் வீட்டு வரியை 50 சதவீதமும், குடிநீர் வரியை 300 மடங்கு வரையும் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு.பிரபாகர், ஒசூர் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/ஒசூர்-மாநகராட்சியில்-கோடைக்கு-முன்பே-தொடங்கியது-குடிநீர்-பிரச்னை-3119199.html
3119198 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் பார்வையற்றோர் பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணர்வு DIN DIN Saturday, March 23, 2019 03:27 AM +0530 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் தலைமையில், பிரெய்லி முறையில் வாக்களிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் 17 ஆயிரம் பேர் உள்ளனர். இவற்றில் 2,800 பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்றோர் எளிதாக வாக்களிக்கும் வகையில், பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. வேட்பாளர்களின் பெயர், குறியீட்டுடன் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வலது பக்கத்தில் பிரெய்லி எழுத்து வடிவில் அச்சிடப்பட்ட சீட்டு இருக்கும். எனவே, பார்வையற்றோர் எளிதாக வாக்களிக்க இயலும். ஆகவே, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றார். 
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியாராஜ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் பார்வையற்றோர் பங்கேற்றனர். மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/கிருஷ்ணகிரியில்-பார்வையற்றோர்-பிரெய்லி-முறையில்-வாக்களிக்க-விழிப்புணர்வு-3119198.html
3119197 தருமபுரி கிருஷ்ணகிரி "தருமபுரி-ஒகேனக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்' DIN DIN Saturday, March 23, 2019 03:26 AM +0530 தருமபுரி-ஒகேனக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என பென்னாகரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசும் போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
பின்னர் முதல்வர் பேசியது: தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும். அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தருமபுரியில் இருந்து ஒகேனக்கல்லுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். கோதாவரி-காவிரியை இணைப்பதால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்புவதன் மூலம் விவசாயிகள் பயனடைவர். தாசம்பட்டி, கோடுப்பட்டியிலிருந்து பூதிப்பட்டி வரை உள்ள வனப் பகுதியில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும். நாகாவதி அணைப் பகுதியில் இருந்து அரகாசனஅள்ளி பகுதியில் புதிய சாலை அமைக்கப்படும் என்றார்.
இதில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/தருமபுரி-ஒகேனக்கல்-இடையே-நான்கு-வழிச்சாலை-அமைக்கப்படும்-3119197.html
3119196 தருமபுரி கிருஷ்ணகிரி முறையான சிகிச்சை அளிக்கக் கோரி முதல்வரின் வாகனம் முன் விழ முயன்ற பெண் DIN DIN Saturday, March 23, 2019 03:26 AM +0530 பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காததைக் கண்டித்து,  முதல்வரின் வாகனத்தின் முன் விழ முயற்சித்த பெண்ணை பாதுகாவலர்கள் மீட்டனர். 
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்குள்பட்ட மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி ஜாய் (35).  இவர் உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த 19-ஆம் தேதி சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி,  பென்னாகரத்துக்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வரின் வாகனம் முன் ஜாயின் மகள் ஜெனிபர் (21) விழ முற்சித்தார்.  இதனைக் கண்ட முதல்வரின் பாதுகாவலர்கள் அந்த பெண்ணை மீட்டனர். இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி,அன்பழகன் விசாரித்து,  இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அப் பெண்ணிடம் தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/முறையான-சிகிச்சை-அளிக்கக்-கோரி-முதல்வரின்-வாகனம்-முன்-விழ-முயன்ற-பெண்-3119196.html
3119194 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: அமமுக வேட்பாளர் ச.கணேசகுமார் DIN DIN Saturday, March 23, 2019 03:25 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் அமமுக வேட்பாளராக ச.கணேசகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியானது. அதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக ச.கணேசகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை சேர்ந்தவர். பிறந்த தேதி-30.7.1969. வயது-49. டிசிஇ, டிசி டெக் பயின்றுள்ள இவர், கட்டட ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் ஒன்றியம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலராகவும், மத்தூர் ஒன்றியச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அமமுக மாவட்டச் செயலராக உள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதி-அமமுக-வேட்பாளர்-சகணேசகுமார்-3119194.html
3119192 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: 3 வேட்பாளர்கள் மனு தாக்கல் DIN DIN Saturday, March 23, 2019 03:24 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக, நாம் தமிழர், சுயேச்சை என 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட கடந்த 19-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதுவரை டி.வி.எஸ்.காந்தி என்ற சுயேச்சை வேட்பாளர் மார்ச் 21-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இத்தகைய நிலையில், நான்காம் நாளான வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர் பிரிவின் மாவட்டச் செயலரான ந.மதுசூதனன் (38), சுயேச்சை வேட்பாளர் ஒய்.தேவரப்பா (53) ஆகியோர், தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகரிடம் தங்களது வேட்புமனுவை தனித்தனியே தாக்கல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ந.மதுசூதனன், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். சுயேச்சை வேட்பாளரான ஒய்.தேவரப்பா ஒசூர் அருகே உள்ள சின்ன எலசகிரியைச் சேர்ந்தவர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இதுவரை 2 சுயேச்சைகள் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/23/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதி-3-வேட்பாளர்கள்-மனு-தாக்கல்-3119192.html
3118594 தருமபுரி கிருஷ்ணகிரி யானை தாக்கியதில் பெண் சாவு DIN DIN Friday, March 22, 2019 09:00 AM +0530 யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடிசையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா. இவர் அரசுப் பள்ளியில் சமையல் பணி செய்து வந்தார். 
இவர் தெக்களி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவை காண சென்ற போது, அந்த வழியாக வந்த யானை ராஜம்மாவை விரட்டியது. யானையைக் கண்ட ராஜம்மா ஓட்டம் பிடித்தார். ஆனால், விரட்டி வந்த யானை ராஜம்மாவை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனத் துறையினர் ராஜம்மாவின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/யானை-தாக்கியதில்-பெண்-சாவு-3118594.html
3118592 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் தொகுதியில் முதன்முறையாக திமுக-அதிமுக நேரடி போட்டி DIN DIN Friday, March 22, 2019 09:00 AM +0530 தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும், முதன்முறையாக ஒசூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. ஒசூர் தொகுதி வரலாற்றில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதும் முதன் முறையாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒசூர் ஒன்றாகும். இந்த தொகுதி கடந்த 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 73 ஊராட்சிகள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பண்ணை ஒசூர் மத்திகிரியில் அமைந்துள்ளது. ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார் என்பது ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சிறப்பாகும். அவர் பிறந்த வீடு அரசால் நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பன்மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர். ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள தொகுதி என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து குடியேறிய வாக்காளர்கள் 30 சதவீதம் பேர் உள்ளனர். 
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த தொகுதியில் ஒசூர் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் ஒசூர் தொகுதி மாவட்டத்திலேயே மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதியாக விளங்கியது. ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டில் தொகுதி சீரமைப்பில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் சேர்க்கப்பட்டதால், ஒசூர் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இருந்த போதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஒசூர் விளங்குகிறது. 
இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திராவிடக் கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரையில் ரெட்டி, கெளடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும், முஸ்லிம் சமுதாய மக்களும் அதிகளவில் உள்ளனர். இதைத் தவிர வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். குறிப்பாக கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொகுதியில் உள்ளனர். இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் இந்த தொகுதியில் குடியிருக்கக் கூடிய வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் ஓட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
ஆளுங்கட்சிகளாக அதிமுக, திமுக மாறி மாறி வந்த போதிலும், ஒசூர் தொகுதியில் தேசிய கட்சிகளை தான் தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுத்து வந்தனர். முதன்முறையாக ஒசூர் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களத்தில் போட்டியிடுகின்றன. 

இதுவரை வென்றவர்கள்

    1952    முனிரெட்டி (சுயே) 
    1957    அப்பாவு பிள்ளை (சுயே)
    1962    ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்)
    1967    வெங்கடசாமி (சுதந்திரா கட்சி) 
    1971    வெங்கடசாமி (சுதந்திரா கட்சி) 
    1977    என்.ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்) 
    1980    வெங்கட்ட ரெட்டி (காங்கிரஸ்) 
    1984    வெங்கட்ட ரெட்டி (காங்கிரஸ்) 
    1989    ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்) 
    1991    கே.ஏ.மனோகரன் (காங்கிரஸ்)
    1996    வெங்கடசாமி (ஜனதா தளம்) 
    2001    கே.கோபிநாத் (காங்கிரஸ்) 
    2006    கே.கோபிநாத் (காங்கிரஸ்) 
    2011    கே.கோபிநாத்(காங்கிரஸ்)
    2016    பாலகிருஷ்ணா ரெட்டி(அதிமுக)

தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் விமல்ராஜ் - 9445000430
உதவி தேர்தல் அலுவலர் பாலசுந்தரம் - 9445000541

வாக்காளர்கள்
    ஆண்    1,66,064
    பெண்    1,56,759 
    திருநங்கைகள்    ...........96
    மொத்தம்    3,22,919
    மொத்த வாக்குச் சாவடி - 364
    ஒசூர் தொகுதி எண் - 55

2016 தேர்தல் முடிவுகள்
    பாலகிருஷ்ணா ரெட்டி (அதிமுக)    89510
    கே.கோபிநாத் (காங்கிரஸ்)    66,546
    பாலகிருஷ்ணன்( பாஜக)    28,850
    முனிராஜ் (பாமக)    10,309, 
    சந்திரன்(தேமுதிக)    7780


தேசியத்தில் இருந்து திராவிடத்தை நோக்கி வரும் ஒசூர்
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-இல்  அதிமுக அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டி வெற்றி பெற்றார். பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்ததால், அவர் எம்.எல்.ஏ. பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஒசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளராக முன்னாள் ஒசூர் நகர்மன்றத் தலைவரும், திமுக ஒசூர் நகர பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி எஸ்.ஜோதி
போட்டியிடுகிறார். 
முதன்முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா, நகர்மன்றத் தலைவராக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். இவர் 2011-இல் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளது. 
அதிமுக வேட்பாளரான எஸ். ஜோதி, கடந்த 2 ஆண்டுகளாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த கணவரின் துணையோடு களம் காண்கிறார். பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் இவருக்கு உள்ளது.  
மக்கள் எதிர்பார்ப்பு: உடான் திட்டத்தில் ஒசூரில் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை அமைத்து ரயில்சேவை தொடங்க வேண்டும். ஒசூரில் அதிகஅளவில் தொழில்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், வர்த்தக மையம் அமைக்க வேண்டும். ஒசூரில் அதிகளவில் குடிநீர் பிரச்சனை உள்ளது. 45 வார்டுகளில் 15 வார்டுகளில் மட்டுமே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வருகிறது. மற்ற 30 வார்டுகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும். 
ஒசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினால் ஒசூரில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் ஒசூரில் குடிநீர் பிரச்னை தீரும். ஒசூரில் வடக்கு பகுதியில் மேலும் ஒரு உள்வட்டச் சாலை அமைக்க வேண்டும். தொழிலாளர் தங்கும் வகையில் இளைஞர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/ஒசூர்-தொகுதியில்-முதன்முறையாக-திமுக-அதிமுக-நேரடி-போட்டி-3118592.html
3118591 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல் DIN DIN Friday, March 22, 2019 08:59 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வகையில், சுயேச்சை வேட்பாளர் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு எப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இத்தகைய நிலையில், கடந்த இரு நாளாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகரிடம், சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டி.வி.எஸ்.காந்தி (45) வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். 
இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 22-ஆம் தேதி அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதியில்-சுயேச்சை-வேட்பு-மனு-தாக்கல்-3118591.html
3118590 தருமபுரி கிருஷ்ணகிரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு DIN DIN Friday, March 22, 2019 08:59 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை புதன்கிழமை அறிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (49) அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான இவர், 30.6.1969-ஆம் ஆண்டு பிறந்தார். இளநிலை பட்டப் படிப்பு படித்துள்ளார். சமூக ஆர்வலரான இவர், காரில் தொடர்ந்து 10,218 கி.மீ. தூரம் பயணம் செய்ததற்கான கின்னஸ் சாதனையாளர் விருதாளர். மோட்டார் பந்தய ஆர்வலரும் கூட.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/மக்கள்-நீதி-மய்யம்-கட்சியின்-கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதி-வேட்பாளர்-அறிவிப்பு-3118590.html
3118589 தருமபுரி கிருஷ்ணகிரி திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு DIN DIN Friday, March 22, 2019 08:59 AM +0530 ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை முதல்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒசூர் தொகுதிக்குள்பட்ட பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதி, பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, தேமுதிக ஒசூர் ஒன்றியப் பொறுப்பாளர் அப்பையா, அதிமுக மாவட்டப் பொருளாளர் நாராயணன், ஒசூர் ஒன்றிய துணைச் செயலர் ஜெயராமன், ரவிக்குமார் நாகராஜ் சூசூவாடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் பவித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேரிகையில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வீதிவீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தார். எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து சூளகிரி வடக்கு ஒன்றியம் சூளகிரி அண்ணா நகரில் வேப்பனஹள்ளி சட்டபப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி. முருகன், ஒன்றியச் செயலர் நாகேஷ், மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் முனிசந்திரப்பா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், முன்னள் ஒன்றிய துணைச் செயலர் அசோக், ரத்தன்சிங் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர். இதில், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/திமுக-அதிமுக-வேட்பாளர்கள்-வாக்கு-சேகரிப்பு-3118589.html
3118588 தருமபுரி கிருஷ்ணகிரி வாக்களிக்கக் கோரி விழிப்புணர்வு பேரணி DIN DIN Friday, March 22, 2019 08:58 AM +0530 ஊத்தங்கரையில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.சேதுராமலிங்கம் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியருமான ஜி.ஜெய்சங்கர், தேர்தல் துணை வட்டாட்சியர் திருமுருகன்,  மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் அரவிந்த், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் தொடங்கி ஊத்தங்கரையின் முக்கிய வீதிகள் வழியாகச் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவிப் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
படவரி - விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைக்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், உதவி தேர்தல் அலுவலருமான கே.சேதுராமலிங்கம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/வாக்களிக்கக்-கோரி-விழிப்புணர்வு-பேரணி-3118588.html
3118587 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு DIN DIN Friday, March 22, 2019 08:58 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு  மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆய்வுக் கூட்டத்தில், மேஜர் தீபக் மண்டல் தலைமையில் ராணுவ சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், வட்டாட்சியர் மதுசெழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையம், மாநில கட்டுப்பாட்டு அறை, அவசர கால கருவிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை, பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளில் இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குறைபாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/கிருஷ்ணகிரியில்-தேசிய-பேரிடர்-மேலாண்மைக்-குழுவினர்-ஆய்வு-3118587.html
3118586 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் DIN DIN Friday, March 22, 2019 08:58 AM +0530 கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தினர் ஹோலி பண்டிகையை வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடினர்.
வசந்த காலத்தை உற்சாகமாக வரவேற்கும் வகையில், இந்துக்கள் ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணமயமான இந்த பண்டிகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே வட மாநில இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண பொடி கலந்த நீரை ஊற்றியும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், ஒசூர், ராயக்கோட்டை, பர்கூர், ஜெகதேவி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தினர் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/கிருஷ்ணகிரியில்-ஹோலி-பண்டிகை-கொண்டாட்டம்-3118586.html
3118585 தருமபுரி கிருஷ்ணகிரி வாகனச் சோதனையில் ரூ.1.58 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 22, 2019 08:57 AM +0530 ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைபாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ.1,58,250-த்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஊத்தங்கரை வெங்கடதாம்பட்டி பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி சகாதேவன் என தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேதுராமலிங்கம், வட்டாட்சியர் ஜெய்சங்கர் ஆகியோர், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு
அறிவுறுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/வாகனச்-சோதனையில்-ரூ158-லட்சம்-பறிமுதல்-3118585.html
3118584 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.19.37 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 22, 2019 08:57 AM +0530 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 13 நபர்களிடமிருந்து ரூ.19.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்கள் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 13 நபர்களிடமிருந்து ரூ.19,37,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7,160 மதிப்பிலான 70 மது புட்டிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், பொது சொத்துகளில் அனுமதியின்றி செய்யப்பட்ட சுவர் விளம்பரஙகள், தட்டிகள், சுவரொட்டிகள் என மொத்தம் 3,887, தனியார் சொத்துகளில் இருந்து 4,020 சுவர் விளம்பரங்களும், தட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பல்வேறு அரசியல் கட்சியினர் மீது 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/22/கிருஷ்ணகிரி-மாவட்டத்தில்-இதுவரை-ரூ1937-லட்சம்-பறிமுதல்-3118584.html
3118076 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா DIN DIN Thursday, March 21, 2019 09:40 AM +0530 ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள்  குவிந்தனர். இதனால் ஒசூர் நகரமே விழாக் கோலம் பூண்டது.
நிகழாண்டு மார்ச் 13-இல் இக் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை தேரோட்டத்தில் 4 மாட வீதியில் சென்று உற்சவ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முதலில் சிறிய தேரில் விநாயகர் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து பெரிய தேரில் அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து
3-ஆவது தேரில் அருள்மிகு மரகதாம்பாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர்ப்பேட்டை ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் எதிரில் காலை 10.30 மணிக்கு கிழக்கு மாட வீதியில் தொடங்கிய தேர் ஊர்வலம் மாலையில் நிலை நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு ஒசூர் பேருந்து நிலையம் அருகிலும், எதிரிலும், பெங்களூரு சாலை, வட்டாட்சியர் சாலை, காந்தி சாலை, ரயில் நிலையம், தேர்ப்பேட்டை, ராயக்கோட்டை சாலை, நேதாஜி சாலை, ஏரித் தெரு, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. ஒசூர் முழுவதும் தேர்த்திருவிழா முன்னிட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒசூர், சிப்காட், அட்கோ போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/ஒசூர்-ஸ்ரீ-சந்திரசூடேஸ்வரர்-கோயில்-தேர்த்-திருவிழா-3118076.html
3118075 தருமபுரி கிருஷ்ணகிரி கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம் DIN DIN Thursday, March 21, 2019 09:40 AM +0530 வேப்பனப்பள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராம சுவாமி வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை தேரில் உற்சவ மூர்த்திகள்
அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்தும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அன்னதானமும், தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். வெள்ளிக்கிழமை பல்லக்கு தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/கோதண்டராம-சுவாமி-கோயில்-தேரோட்டம்-3118075.html
3118062 தருமபுரி கிருஷ்ணகிரி கருங்கல் தூள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் DIN DIN Thursday, March 21, 2019 09:35 AM +0530 மத்தூர் அருகே கருங்கல் தூள் கடத்திய டிப்பர் லாரி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூரில் கருங்கல் மண் கடத்துவதாக போச்சம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத் மத்தூர்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்தில் ஈடுபட்டார். அப்போது மத்தூரில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது  லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். சோதனையில் டிப்பர் லாரியில் கருங்கல் மண் கடத்தியது தெரியவந்தது. பின்னர் லாரியை மீட்டு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி விசாரணை நடத்தியதில் டிப்பர் லாரியின் உரிமையாளர் ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/கருங்கல்-தூள்-கடத்திய-டிப்பர்-லாரி-பறிமுதல்-3118062.html
3118044 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே ரூ.1. 16 லட்சம் பறிமுதல் DIN DIN Thursday, March 21, 2019 09:30 AM +0530 சாமல்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே  உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சத்திய சாய்நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (59). தொழிலாளர் நல வாரிய ஓய்வுபெற்ற அலுவலர். இவர், ஊத்தங்கரைப் பகுதியில் நிலம் வாங்க முன்பணமாகக் கட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் எடுத்து வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்தை ஊத்தங்கரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மூன்று தினங்களுக்குள் தகுந்த ஆவணங்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/ஊத்தங்கரை-அருகே-ரூ1-16-லட்சம்-பறிமுதல்-3118044.html
3118042 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் காவலர் தற்கொலை முயற்சி DIN DIN Thursday, March 21, 2019 09:30 AM +0530 போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏழாம் அணியில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏழாம் அணி பயிற்சி மையம் இயங்கி வருகிறது. 
ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெற்று வரும் இந்தப் பயிற்சி மையத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராமகிருஷ்ணன் (32) என்பவர் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினார். இவர் விபத்து காப்பீடு கேட்டு அவரது துறையில் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை விபத்து காப்பீடு குறித்து தகவல் பெற சென்னை சென்று மீண்டும் புதன்கிழமை காலை போச்சம்பள்ளி காவலர்கள் குடியிருப்புக்கு வந்தார்.
பின்னர் அவரது ஓய்வு அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகித்த அவர்களது நண்பர்கள் கதவைத் தட்டியும் எழவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராமகிருஷ்ணன் இடது கை நரம்புகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏழாம் அணியின் தளவாய், ரவிச்சந்திரன் கூறியதாவது:
விபத்தில் சிக்கிய ராமகிருஷ்ணன் கோமா நிலையில் இருந்து மீண்டு வந்தார். அவருக்கு எந்தவித பணி சுமைகளும் அளிக்கப்படவில்லை. மேலும் அவரது சிகிச்சைகாக ஏற்பட்ட விபத்து காப்பீட்டு தொகை எங்கள் பரிந்துரையாக ரூ. 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வழங்க கமிட்டிக்குப் பரிந்துரை செய்துள்ளேன். மேலும் சென்னையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காவல் தலைமை அலுவலகத்தில் கமிட்டி நடைபெறும். அங்கு நீயே சென்று பார்த்துவிட்டு வா என்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தேன். அங்கிருந்து புதன்கிழமை வந்த அவர், பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/போச்சம்பள்ளியில்-காவலர்-தற்கொலை-முயற்சி-3118042.html
3118040 தருமபுரி கிருஷ்ணகிரி குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 18 கிராம மக்கள் போராட்டம் DIN DIN Thursday, March 21, 2019 09:29 AM +0530 காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 18 கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த கிராமங்களும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத்
தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குள்பட்ட எருமாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கூரம்பட்டி, பட்டனூர், பொன்னுநகர், மாங்குடி நகர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன.
மேலும் கூரம்பட்டி ஏரி, பட்டனூர் ஏரி தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் இருப்பதால் 18 கிராம மக்களும் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கால்நடைகள் தண்ணீர் இன்றி தவித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலமாக இந்த ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கும் உரிய கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆவேசமடைந்த நீரேற்று கூட்டுறவுச் சங்க விவசாயிகள்,  கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டு  காலி குடங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருப்பதாகவும் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வர சுமார் இரண்டு கிலோ மிட்டர் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது, ஆடு மாடுகளை காப்பாற்ற ரூ. 500 முதல் ரூ. 700 வரை விலை கொடுத்து தண்ணீர் வாங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது.
ஆகையால், பட்டனூர் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பட்டனூர் ஏரி, கூராம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுப்பதோடு குடிக்க தண்ணீர் வழங்க முன்வர வேண்டும்.
இல்லையெனில் 18 கிராம மக்களும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு வரும் மக்களவைத் தேர்தலை முமுமையாகப் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/21/குடிநீர்-கேட்டு-காலி-குடங்களுடன்-18-கிராம-மக்கள்-போராட்டம்-3118040.html
3117442 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து ஆய்வுக் கூட்டம் DIN DIN Wednesday, March 20, 2019 09:32 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் செலவினம் குறித்த  ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி  மக்களவைத் தொகுதிக்கான மத்தியத் தேர்தல் செலவின பார்வையாளர் அனிஷ் பி.ராஜன் தலைமையில் தேர்தல் செலவினம் குறித்த ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், உதவி செலவின அலுவலர்கள்,  கணக்கீட்டுக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு, நிலையான கண்காணிப்புக் குழு, தேர்தல் நடத்தை விதிகள் குழு,   மீடியா குழு,  சான்று வழங்கும் குழு, வருமான வரித்துறையினர் அடங்கிய குழுவினருடன் தேர்தல் செலவினங்கள், தேர்தல் பணிகளை செலவினப் பார்வையாளர் அனிஷ் பி.ராஜன் ஆய்வு செய்தார். மேலும், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் குழுவுக்கு வரும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு அனுப்பி, அதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, சமூக வலைதளங்களில் முகநூல்,  சுட்டுரை,  கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்)  ஆகியவற்றில் வரக்கூடிய விளம்பரங்களை கண்காணித்து உரிய வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். பின்னர்,  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தையும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களில்  ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதையும், அதன் இயக்கம் குறித்தும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/20/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதியில்-தேர்தல்-செலவினம்-குறித்து-ஆய்வுக்-கூட்டம்-3117442.html
3117441 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூரில் இன்று ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா DIN DIN Wednesday, March 20, 2019 09:32 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெறுகிறது. 
இந்த விழாவில் ஒசூர் மட்டும் அல்லாது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
 தமிழக  - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது ஒசூர்.  இதனால் கர்நாடக மாநில பக்தர்கள் நாள்தோறும் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஆந்திர மாநிலம் அமைந்துள்ளதால்,  அங்குள்ள பக்தர்களும் ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மூன்று மாநில பக்தர்கள் கூடும் தேர்த் திருவிழாவாக ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் திருவிழா அமைந்துள்ளது. இதையொட்டி வியாழக்கிழமை பல்லக்கு உற்வசம், வெள்ளிக்கிழமை தெப்பல் உற்சவம், நடைபெறுகிறது. 
இந்தத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஒசூரில் வீதிதோறும் நீர்மோர்,  அன்னதானம் வழங்கப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/20/ஒசூரில்-இன்று-ஸ்ரீ-சந்திரசூடேஸ்வரர்-கோயில்-தேர்த்-திருவிழா-3117441.html
3117440 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் புறக்கணிப்பு முடிவை கைவிட்ட கிராம மக்கள் DIN DIN Wednesday, March 20, 2019 09:32 AM +0530 மக்களவைத்  தேர்தலுக்கு பிறகு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மிருணாளினி,  அளித்த உறுதிமொழியை ஏற்று, தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கிராம மக்கள் கைவிட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு பல இடங்களில் மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு பகுதியினருக்கு கிருஷ்ணகிரி அருகே சோக்காடி ஊராட்சியில் உள்ள குள்ளன்கொட்டாய், ஜம்பூத்து, காட்டு பெருமாள் கோயில், ஆலமரத்துக்
கொட்டாய், கெடி வெங்கட்ராமன் கோயில் ஆகிய பகுதிகளில் மாற்று இடங்கள் 
வழங்கப்பட்டன. 
இந்த மாற்று இடங்களுக்கு பட்டா, அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள்,  மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அண்மையில் அறிவித்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி வருவாய் வட்டாட்சியர் மிருணாளினி,  கிராம மக்களை நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சோக்காடி கிராமக் கணக்கில் காடு புறம்போக்கு எனப் பதிவாகி உள்ளதால், பட்டா வழங்க இயலாத நிலை உள்ளது. 
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை, கிராம மக்கள் கைவிடுவதாக தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/20/தேர்தல்-புறக்கணிப்பு-முடிவை-கைவிட்ட-கிராம-மக்கள்-3117440.html
3117439 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் அறிவிப்பு DIN DIN Wednesday, March 20, 2019 09:31 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளராக  அனிஷ் பி.ராஜன்,  கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். அவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர், வரவேற்றார். தொடர்ந்து, தேர்தல் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். 
தேர்தல் செலவினம் குறித்து மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளரை 9360067643 என்ற எண்ணிலும், அவரது தொடர்பு அலுவலரை 9047014643 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/20/தேர்தல்-செலவின-பார்வையாளரின்தொடர்பு-எண்-அறிவிப்பு-3117439.html
3117438 தருமபுரி கிருஷ்ணகிரி பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து DIN DIN Wednesday, March 20, 2019 09:31 AM +0530 தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள்  கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருள்கள்  மற்றும் இரும்பு பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புகை வருவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பஷீருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது தீ மளமளவென்று பரவி இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த பிளாஸ்டிக் பீப்பாய்கள், பழைய மரச் சாமான்கள், அந்தப் பகுதியில் இருந்த கார் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன. 
இந்த  தீ விபத்து  குறித்து பஷீர் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து தளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/20/பழைய-பிளாஸ்டிக்-பொருள்கள்-கிடங்கில்-தீ-விபத்து-3117438.html
3116567 தருமபுரி கிருஷ்ணகிரி வாகனச் சோதனையில் ரூ.4.69 லட்சம் பறிமுதல் DIN DIN Tuesday, March 19, 2019 06:41 AM +0530 கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில்  நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.69 லட்சத்தை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி  சோதனை செய்தனர்.  அதில்  ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் சென்றவர் கிருஷ்ணகிரி காந்தி நகரைச் சேர்ந்த செல்வராஜ் என தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அதே போல கெலமங்கலத்தில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் பைரமங்கலம் உள்ளது. இங்கு தளி வட்டார வளர்ச்சி அலுவலரும், பறக்கும் படை அலுவலருமான சீனிவாச சேகர், கெலமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் வீரகுமார் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து அந்த பணம் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் தங்கபாண்டி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாலக்கோட்டில் ரூ.1.95 லட்சம் பறிமுதல்..
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோட்டில் தேர்தல் நடத்தும் உதவித் தேர்தல்  அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூரிலிருந்து அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் காரில் வந்த தருமபுரி மாவட்டம், பொம்பட்டியைச் சேர்ந்த பிரபு மற்றும் விஜய் ஆகியோர் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/வாகனச்-சோதனையில்-ரூ469-லட்சம்-பறிமுதல்-3116567.html
3116566 தருமபுரி கிருஷ்ணகிரி வாகனம் மோதியதில் புள்ளிமான் சாவு DIN DIN Tuesday, March 19, 2019 06:41 AM +0530 கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரியை  அடுத்த கந்திகுப்பம்   அருகே கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகில் மூன்று  வயதான பெண் புள்ளிமான், சாலையில் உயிரிழந்து கிடப்பது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் விரைந்து வந்து, உயிரிழந்த புள்ளிமானை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புள்ளி மானை வனச்சரக அலுவலக வளாகத்திலேயே புதைத்தனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமான், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான்  வாகனம் மோதியதில் உயிரிழந்தது. இந்த நிலையில், மேலும் ஒரு புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதனால், வன விலங்குகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க வனத் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/வாகனம்-மோதியதில்-புள்ளிமான்-சாவு-3116566.html
3116565 தருமபுரி கிருஷ்ணகிரி தீ விபத்து நிகழ்ந்த ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கி பறிமுதல் DIN DIN Tuesday, March 19, 2019 06:40 AM +0530 கிருஷ்ணகிரி அருகே,  கடந்த சில நாள்களுக்கு முன்பு,  தீ விபத்து நிகழ்ந்த ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீஸார்  திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியை  அடுத்த சின்னமுத்தூர் கிராமத்தில்  வசித்து வருபவர் டான்(50).  பெங்களூருவைச் சேர்ந்த இவர்,  இந்தக் கிராமத்தில் தங்கி ஜோதிட தொழில் செய்து வந்தார்.  இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு  அமாவாசையையொட்டி பூஜை செய்த  அவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
 வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர்.  தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இந்த நிலையில், ஜோதிடர் வீட்டிலிருந்து எரிவாயு உருளை வெடித்தது. இதில், காவேரி  (50),  சௌந்தர் (23),  முனியப்பன் (28)  ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் முனியப்பன்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராம மக்கள், ஜோதிடரை கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஜோதிடர் வசித்துவந்த வீட்டை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது, அலமாரியில் இருந்த ஏர் பிஸ்டல்  என அழைக்கப்படும் சிறு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கியை கைப்பற்றினர். 
இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது: ஜோதிடர் வீட்டில் கைப்பற்றியது ஏர் பிஸ்டல் என அழைக்கப்படும் சிறு ஆயுதமாகும்.  இந்த ரக ஆயுதத்துக்கு உரிமம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு,  முன்னாள் ராணுவ வீரர் மூலம் ரூ.250 - க்கு இதை  ஜோதிடர் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/தீ-விபத்து-நிகழ்ந்த-ஜோதிடர்-வீட்டிலிருந்து-சிறிய-ரக-துப்பாக்கி-பறிமுதல்-3116565.html
3116564 தருமபுரி கிருஷ்ணகிரி பலாத்கார வழக்கு: ஓட்டுநருக்கு 11 ஆண்டுகள் சிறை DIN DIN Tuesday, March 19, 2019 06:39 AM +0530 தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓட்டுநருக்கு  கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்தார். இவர், கடந்த 9.2.2016 -இல்  அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ஜெகன் (26),  கிராமத்துக்கு செல்வதாகக் கூறி, அந்த இளம்பெண்ணை, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து பாலியல் பலத்காரம் செய்தார். இதுகுறித்து,  பாதிக்கப்பட்ட பெண் சார்பில் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெகனை கைது செய்தனர். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  பெண்ணை தாக்கிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம்,  கொலை மிரட்டல் குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை,  ரூ.1,000 அபராதம் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் குற்றவாளி ஜெகனுக்கு விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.கலையரசி ஆஜரானார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/பலாத்கார-வழக்கு-ஓட்டுநருக்கு-11-ஆண்டுகள்-சிறை-3116564.html
3116563 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை DIN DIN Tuesday, March 19, 2019 06:39 AM +0530 தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியை  அடுத்த சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (56).  இவர், கால் குடைச்சல், இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை எலும்பு முறிவு மற்றும் தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் தனசேகரன் பரிசோதித்தார். அதில் அவரது முதுகுத் தண்டு வடத்தில் ஜவ்வு பகுதி பிதுங்கி,  2 கால்களின் நரம்புப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டதால் வலியால் அவதிப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எம்.ஆர்.ஐ. பரிசோதனை செய்ததில் இந்தப் பிரச்னை உறுதி செய்யப்பட்டு அவருக்கு நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. 
இதுகுறித்து,  நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது: இம் மருத்துவமனை கண்காணிப்பாளர் பரமசிவம், மயக்கவியல் நிபுணர் பிச்சை திருமலை,  எலும்பு முறிவு தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணர் தனசேகரன் ஆகியோர் அந்த பெண்ணுக்கு நவீன சிகிச்சை மூலம் அதாவது,  தழும்பு, ரத்தப் போக்கு இல்லாமல் குறுகிய காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்து வீட்டுக்குச் செல்லும் வகையில், தையல் இல்லாத நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பகுதி மயக்க நிலையில், அந்த பெண்ணின் முதுகுவடத் தண்டில் நுண்துளையிட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அந்த பெண், முழு உடல் திறனோடு உள்ளார். 
தமிழக அரசு மருத்துவமனையில் இந்த வகையான நவீன அறுவைச் சிகிச்சை, முதன் முறையாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சைக்காக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாகப் பெறலாம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/கிருஷ்ணகிரி-அரசு-மருத்துவமனையில்-நுண்துளை-தண்டுவட-அறுவை-சிகிச்சை-3116563.html
3116562 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோதி DIN DIN Tuesday, March 19, 2019 06:38 AM +0530 ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி(43) போட்டியிடுகிறார்.
இவர்,  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும்,  முன்னாள் மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி.  இவர் பி.எஸ்சி. பி.எட்.,  படித்துள்ளார்.  கர்நாடக மாநிலம், கோலார் அருகேயுள்ள கேசம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர்,   கர்நாடக மாநில முதலாவது முதல்வர் கே.சி. ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 
ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.  ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, கடந்த 2006 ஆம் ஆண்டு ஒசூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றியுள்ளார்.  தற்போது இவர்கள் ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/19/ஒசூர்-சட்டப்பேரவைத்-தொகுதி-இடைத்-தேர்தல்-அதிமுக-வேட்பாளர்-எஸ்ஜோதி-3116562.html
3116182 தருமபுரி கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல்: பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை DIN DIN Monday, March 18, 2019 10:15 AM +0530 மக்களவைத் தேர்தலில் போலீஸார் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி காவல் உள்கோட்ட எல்லையில் உள்ள போலீஸார், தேர்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தேர்தலின் போது, தீவிர வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். சுவர் விளம்பரம், வாகனங்களில் கட்டப்படும் அரசியல் கட்சி கொடிகளையும் கண்காணிக்க வேண்டும். 
வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் 4 பேருக்கு மேல் பயணம் செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். 
வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்க அனுப்பிவைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
இக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, மகாராஜகடை, காவேரிப்பட்டணம் ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/மக்களவைத்-தேர்தல்-பாதுகாப்பு-நடவடிக்கை-குறித்து-ஆலோசனை-3116182.html
3116181 தருமபுரி கிருஷ்ணகிரி வேப்பனஅள்ளியில்  மக்கள் கவனத்துக்கு... DIN DIN Monday, March 18, 2019 10:15 AM +0530 வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. வேப்பனஅள்ளி மற்றும் அண்டை மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகள் அவ்வப்போது, விளை நிலங்கள், கிராமங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 
அவ்வாறு, குடியிருப்பு, நிலங்களில் நுழையும் வன விலங்களையோ துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வேப்பனஅள்ளி வனச் சரகர் நகேஷ் தலைமையில் வனக் காப்பாளர்கள் சம்பத், முருகேசன், இளையராஜா ஆகியோர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/வேப்பனஅள்ளியில்--மக்கள்-கவனத்துக்கு-3116181.html
3116180 தருமபுரி கிருஷ்ணகிரி தீக் காயமடைந்த இளைஞர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Monday, March 18, 2019 10:14 AM +0530 கிருஷ்ணகிரி அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடலை விரைந்து பிரேதப் பரிசோதனை செய்யவும்,  சம்பவத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில்  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டான் (50). ஜோதிடரான இவர் அம்மாவாசையின் போது தனது வீட்டில் பூஜைகள் செய்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் திடீரென தீப்பிடித்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் எரிவாயு உருளை வெடித்ததில் அதேப் பகுதியைச் சேர்ந்த காவேரி(50), சௌந்தர் (23), முனியப்பன் (28) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  
இதில் முனியப்பன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், முனியப்பனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உடனே வழங்க வேண்டும். தீ விபத்துக்கு காரணமான ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/தீக்-காயமடைந்த-இளைஞர்-சாவு-உறவினர்கள்-சாலை-மறியல்-3116180.html
3116179 தருமபுரி கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியில் பயன்பாடற்ற சுகாதார நிலையத்தை சுப்பிரமணிய சிவா புகைப்பட காட்சியகமாக மாற்ற வலியுறுத்தல் DIN DIN Monday, March 18, 2019 10:14 AM +0530 பாப்பாரப்பட்டியில் பயன்பாடின்றி சிதிலமடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்து சுப்பிரமணிய சிவா நினைவு புகைப்பட காட்சியகமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் 1996-இல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில், சுகாதார வளாகம் போதிய இட வசதி இல்லை எனக் கூறி, பழைய பாப்பாரப்பட்டி பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், புதர்கள் அடர்ந்து பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் இந்த சுகாதார நிலையத்தை புதுப்பித்து தியாகி  சுப்பிரமணிய சிவாவின் புகைப்படங்கள் மற்றும் முழுமையான வாழ்க்கை குறிப்புகள் அடங்கும் வகையில் நூலகத்துடன் கூடிய புகைப்பட காட்சியகமாக மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறியது:  பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த இடத்தை சுகாதாரத்  துறையிடம்  இருந்து  அரசு  திரும்பப் பெற்று, புதுப்பித்து தியாகி சுப்பிரமணிய சிவாவை நினைவு கூறும் வகையில் அவரின் வரலாற்று குறிப்புகள், புகைப்படங்கள்,சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்குகள் அடங்கிய குறிப்புகள், அவர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/பாப்பாரப்பட்டியில்-பயன்பாடற்ற-சுகாதார-நிலையத்தைசுப்பிரமணிய-சிவா-புகைப்பட-காட்சியகமாக-மாற்ற-வலியுறுத-3116179.html
3116178 தருமபுரி கிருஷ்ணகிரி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா DIN DIN Monday, March 18, 2019 10:13 AM +0530 ஊத்தங்கரை தொடக்கப் பள்ளியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
விழாவையொட்டி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.  மாணவர்களுக்கு புத்தாடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் தலைமை வகித்தார். தொடக்க பள்ளி ஆசிரியை ச.உமா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கவிதா, சந்திரசேகரன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/சர்வதேச-மாற்றுத்-திறனாளிகள்-தின-விழா-3116178.html
3116177 தருமபுரி கிருஷ்ணகிரி அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் DIN DIN Monday, March 18, 2019 10:13 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் கட்செவி அஞ்சல் எண்  6369700230-இல் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார். 
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் கோரும் உதவிகளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கிவரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண், கட்செவி எண் ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 
இதில் குடிநீர் தேவை, சாலை வசதி, மின் விளக்கு பயன்பாடு உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்ணை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கட்செவி தொடர்புக்கு  6369700230 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/அடிப்படை-வசதிகள்-குறித்து-புகார்-தெரிவிக்கலாம்-3116177.html
3116176 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி போட்டி DIN DIN Monday, March 18, 2019 10:13 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி (66) போட்டியிடுகிறார்.
காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த முனுசாமியின்  தந்தை பூங்காவன கவுண்டர். தாய் மங்கையர்கரசி. மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பை பயின்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பை முடித்தார். 
காவேரிப்பட்டணம் அதிமுக நகரச் செயலாளராகவும், தருமபுரி மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய இவர் தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்ட போது ஜெயலலிதா அணியில் காவேரிப்பட்டணம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, சட்டத் துறை அமைச்சராக இருந்தார். 
1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதி-அதிமுக-வேட்பாளராக-கேபிமுனுசாமி-போட்டி-3116176.html
3116175 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி DIN DIN Monday, March 18, 2019 10:12 AM +0530 ஒசூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா (48) போட்டியிடுகிறார்.
ஒசூர் நகர தி.மு.க. பொறுப்பாளராக உள்ள இவர் தேன்கனிக்கோட்டையில் பிறந்தார். ஒசூர் ஆர்.வி. அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 
2001 முதல் 2006 வரை ஒசூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 2006 முதல் 2011 வரை ஒசூர் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நகர தி.மு.க. பொறுப்பாளராவதற்கு முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தார். சத்யாவுக்கு சட்டப்படிப்பு 4- ஆம் ஆண்டு படித்து வரும் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/ஒசூர்-தொகுதி-இடைத்தேர்தல்-திமுக-வேட்பாளராக-எஸ்ஏசத்யா-போட்டி-3116175.html
3115579 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் மருத்துவரிடம் நில மோசடி DIN DIN Sunday, March 17, 2019 05:40 AM +0530 கிருஷ்ணகிரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, மருத்துவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி வெஸ்ட்லிங் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேஸ்வரன்(44). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த வெல்லமண்டி ஜெயகுமார், கீதா ஆகிய இருவரும் மருத்துவரிடம் கிருஷ்ணகிரியில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி உள்ளனர். 
இதையடுத்து ஜெயகுமார், கீதா ஆகியோரிடம் ரூ.1.43 லட்சம், ரூ.8.23 லட்சம் மதிப்பிலான  தங்க நகைகளை வெங்கடேஸ்வரன் அளித்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள்கள் கடந்த நிலையில், அவர்கள் இருவரும் நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இத்தகைய நிலையில், பணத்தை திருப்பித் தரும்படி வெங்கடேஸ்வரன் கேட்டபோது, அவர்கள் இருவரும், வெங்கடேஸ்வரனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/கிருஷ்ணகிரியில்-மருத்துவரிடம்-நில-மோசடி-3115579.html
3115578 தருமபுரி கிருஷ்ணகிரி கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறித்த 2 பேர் கைது DIN DIN Sunday, March 17, 2019 05:40 AM +0530
கிருஷ்ணகிரியில் கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிந்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி ஆசாத் நகரைச் சேர்ந்தவர் அக்பர். இவரது மனைவி குல்நாத் (40). இருவரும் கிருஷ்ணகிரி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபயிற்சியில் கடந்த 14-ஆம் தேதி ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, குல்நாத் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையைப் பறித்து சென்றனர். இதுகுறித்து, குல்நாத் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை தனித்தனியே விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 
இதையடுத்து, தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காவேரிப்பட்டணம்  அருகே உள்ள குண்டலப்பட்டியைச் சேர்ந்த எம்.மணி(20), டி.அசோக்(18) என்பதும், அவர்கள் இருவரும் தம்பதியிடமிருந்த தங்க நகையை மிரட்டி பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/கத்தியைக்-காட்டி-மிரட்டி-தம்பதியிடம்-நகை-பறித்த-2-பேர்-கைது-3115578.html
3115577 தருமபுரி கிருஷ்ணகிரி ஆத்தூரில் கிழங்கு புரோக்கர் அலுவலக ஊழியரைத் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை: போலீஸார் விசாரணை DIN DIN Sunday, March 17, 2019 05:40 AM +0530
ஆத்தூர் கிரைன் பஜாரில் மரவள்ளிக் கிழங்கு புரோக்கர்  அலுவலகத்தில் சனிக்கிழமை காலை ஊழியரைத் தாக்கி ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  
சேலம் மாவட்டம்,  ஆத்தூர் கிரைன் பஜாரில் கிழங்கு புரோக்கர் அலுவலகம் உள்ளது.  இதில்  பாபு (52) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,  சனிக்கிழமை காலை உரிமையாளர் வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பாபு அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.  அப்போது இரண்டு பேர்  முகமூடி அணிந்து வந்து கிழங்கு விலைக்கு குறித்து விசாரித்துக் கொண்டே பாபுவை தாக்கி நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டு, அங்கிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று
விட்டனர்.
சிறிது நேரம் கழித்து பாபு மெதுவாக வெளியே வந்து சத்தமிட்டுள்ளார்.  இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து அவரின் கட்டை அவிழ்த்து விசாரித்தனர்.அப்போது பணம் திருட்டுப் போன விஷயம் தெரியவந்தது. இதையடுத்து  ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் என்.கேசவன் ஆகியோர் விரைந்து சென்று பாபுவிடம் விசாரணை நடத்தினர். மேலும்,  வழக்குப் பதிவு செய்து அலுவலகத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரித்து வருகின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/ஆத்தூரில்-கிழங்கு-புரோக்கர்-அலுவலக-ஊழியரைத்-தாக்கி-ரூ3-லட்சம்-கொள்ளை-போலீஸார்-விசாரணை-3115577.html
3115576 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் விதிமீறல்:அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு DIN DIN Sunday, March 17, 2019 05:40 AM +0530
ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அரசியல் கட்சியினர் மீது  6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒசூர் சிப்காட் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வடிவேல், மூக்காண்டப்பள்ளி மேம்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு திமுகவினரின் சுவர் விளம்பரம் வரையப்பட்டிருந்தது. 
இதுதொடர்பாக, ஒசூர் சின்ன எலசகிரியைச் சேர்ந்த சுரேஷ்(35) மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல், ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக வாசுதேவன் மீது அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.  ஒசூர் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்த திமுக நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்தியா மீது  அட்கோ போலீஸாரும், சூளகிரியில் மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர் சம்பங்கி மீது சூளகிரி போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர். 
கல்லாவில் பதாகை வைத்தது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெங்கடேசன்(37), வீரமணி(42) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/தேர்தல்-விதிமீறல்அரசியல்-கட்சியினர்-மீது-வழக்குப்-பதிவு-3115576.html
3115575 தருமபுரி கிருஷ்ணகிரி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி DIN DIN Sunday, March 17, 2019 05:39 AM +0530
 பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள கலப்பம்பாடி மையத்தில் 21 பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. 
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கலப்பம்பாடி அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. சின்னபள்ளத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.பழனி தலைமை தாங்கியும், ஓய்வுபெற்ற ஆசிரியர் சென்னி வீரன் முன்னிலையும் வகித்தனர். பென்னாகரம் ஒன்றியத்தில்  உள்ள  தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 21 பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கலந்துகொண்டனர்.
இதில் பெண் கல்வி, பெண்களுக்கான உரிமை, கட்டாயக் கல்வி சட்டம், ஜந்து வயது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் பயிலும் குழந்தைகள் இடைநிற்றலைத் தவிர்த்தல், பள்ளிக்கு சீர்வரிசை திருவிழாவை நடத்தி, பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டன.
பயிற்சியை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்கண்ணா, பயிற்சி ஆசிரியர் கோகிலா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். கலப்பம்பாடி பள்ளித் தலைமை ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/பள்ளி-மேலாண்மைக்-குழு-உறுப்பினர்களுக்கு-பயிற்சி-3115575.html
3115574 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Sunday, March 17, 2019 05:39 AM +0530
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு.பிரபாகர் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சு.பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. தற்போது, பாதுகாப்பு பெட்டக அறையில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், மேலும் வி.வி.பேட் இயந்திரங்கள் வைக்கும் இடம் தேவைப்படுகிறது. 
இதேபோல், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்துக்கான இடமும் தேவைப்படுகிறது.  இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், வாகனங்கள் நிறுத்துவதற்கும், பாதுகாப்பு தடுப்பு அரண்கள் செய்வதற்காகவும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குகள் எண்ணப்படும் அறைகளுக்கு அலுவலர்கள் வருவதற்கான வசதியும், வேட்பாளர்கள் சார்பாக வரக்கூடிய நபர்களுக்கும் இட வசதியும், இருப்பு அறையில்  மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வருவதற்கான தனி வழியும் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/கிருஷ்ணகிரியில்-வாக்கு-எண்ணும்-மையத்தில்-ஆட்சியர்-ஆய்வு-3115574.html
3114811 தருமபுரி கிருஷ்ணகிரி 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழிப்புணர்வு DIN DIN Saturday, March 16, 2019 09:25 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம், காந்தி சாலை, பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.  
ஆட்டோக்களில் வாக்களிப்போம், ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய வில்லையை ஒட்டினார். கிருஷ்ணகிரி நகரில் வீடுவீடாகச் சென்ற அவர், ஏப். 18-இல் நடைபெறும் வாக்குப்பதிவில் கட்டாயம் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமை என வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். மேலும், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தேர்தல் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம் என வலியுறுத்தினார். 
அப்போது, ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் இயக்குநர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் மிருளாளினி, மது செழியன், நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், சுகாதார அலுவலர் மோகன் சுந்தரம், காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/100-சதவீத-வாக்குப்-பதிவை-வலியுறுத்தி-கிருஷ்ணகிரி-மாவட்டத்தில்-விழிப்புணர்வு-3114811.html
3114810 தருமபுரி கிருஷ்ணகிரி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு DIN DIN Saturday, March 16, 2019 09:25 AM +0530 பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டோர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/பர்கூர்-அரசு-பொறியியல்-கல்லூரி-மாணவர்கள்-வகுப்பு-புறக்கணிப்பு-3114810.html
3114809 தருமபுரி கிருஷ்ணகிரி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்: செய்தவர் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Saturday, March 16, 2019 09:24 AM +0530 தளி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் காவல் துறையினருக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை
செய்து கொண்டார். 
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள கொரனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சாந்தகுமார் (25), ஒசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை போலீஸார் தேடி வந்தனர். 
இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் தேடி வருவதை அறிந்த சாந்தகுமார், காவல் துறையினருக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/இளம்பெண்ணை-பாலியல்-பலாத்காரம்-செய்தவர்-தூக்கிட்டுத்-தற்கொலை-3114809.html
3114808 தருமபுரி கிருஷ்ணகிரி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை DIN DIN Saturday, March 16, 2019 09:24 AM +0530 போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நாள்தோறும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகரமாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் உள்ளது. 
இப் பகுதிகளை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் பேருந்து நிலைய வாளாகத்தில் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகம் உள்ளது. மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்கு எதிரில் கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமித்துள்ளதால் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சாந்தகுமார் கூறுகையில், இந்த குடிநீர் தொட்டியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தால் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களின குடிநீர் தேவை பூர்த்தியாகும். இதனால், காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருக்காது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/குடிநீர்-தொட்டியை-பயன்பாட்டுக்கு-கொண்டுவர-கோரிக்கை-3114808.html
3114807 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் ஏமாற்றம் DIN DIN Saturday, March 16, 2019 09:24 AM +0530 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இதுவரை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 1962, 1967,1999,2004, 2009 ஆகிய தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக எளிதில் வெற்றிபெறும் என திமுகவினர் கருதினர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் கடும் போட்டி இருந்தது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், வெற்றிச் செல்வன், அண்மையில் திமுகவில் சேர்ந்த தொழில் அதிபர் மதியழகன், முன்னாள் தலைமைப் பொறியாளர் ஜெயராமன் என 42 பேர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்தனர். மேலும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது திமுகவுக்கு ஒதுக்கப்படும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திமுகவினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமராக ராகுல் காந்தியை அடையாளப்படுத்தியுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என திமுகவினர் கூறுகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதி-காங்கிரஸ்-கட்சிக்கு-ஒதுக்கீடு-திமுகவினர்-ஏமாற்றம்-3114807.html
3114806 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை DIN DIN Saturday, March 16, 2019 09:23 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பாயத்தின் ஆணை படி, வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்களானது காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும், எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால், இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் அபாயம்: இந்த மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இந்திய நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும் இந்த வகை அயல்நாட்டு மீன்கள், நமது பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் அபாய நிலையை உருவாக்கும். 
இந்த அயல்நாட்டு மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், மழைக் கால வெள்ளப் பெருக்கு காலத்தில் குளங்களில் இருந்து தப்ப வாய்ப்பு உள்ளன. அவ்வாறு தப்பும் இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், ஏரி அல்லது ஆற்றில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் நமது பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து விடும். இதனால், நமது பாரம்பரிய மீன்களை வளர்க்கும் மீனவர்கள் வருவாய் இல்லாத நிலை ஏற்படும். 
ஆலோசனை: மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனைகளை பெற்று வளர்க்கவும். புதிதாக மீன் பண்ணை அமைக்கும் மீன் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்கள் மீன் பண்ணையை பதிவு செய்து, அரசு வழங்கும் மானியத்தை பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறி வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மீன் விவசாயிகள் இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். 
அதையும் மீறி, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனை வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
எச்சரிக்கப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/கிருஷ்ணகிரி-மாவட்டத்தில்--ஆப்பிரிக்கன்-கெளுத்தி-மீன்-வளர்க்க-தடை-3114806.html
3114805 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் ரூ.1 லட்சம் பறிமுதல் DIN DIN Saturday, March 16, 2019 09:23 AM +0530 தேன்கனிக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் தேர்தல் அலுவலர்கள் வாகனச் சோதனை நடத்தி வந்தனர்.  அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,  உலிவீரணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அப்பைய்யா மகன் முனிராஜ்,  தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,07,750-ஐ எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து,  சோதனையில் ஈடுபட்ட நில கண்காணிப்புக் குழு அலுவலர் குமார்,  தளி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் முரளி ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.  உதவி தேர்தல் அலுவலர் முத்துபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  அதையடுத்து,  உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தேர்தல் அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர். 
அரூரில்  ரூ.73 ஆயிரம் பறிமுதல்:
தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் காரணமாக தருமபுரி-திருப்பத்தூர் சாலை இருமத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில்,  தருமபுரி மாவட்டம், சித்தன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சம்பத் மகன் கணேசன் (30), உரிய ஆவணம் இன்றி ரூ.73, 900 எடுத்துச் செல்வது தெரியவந்தது.  இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்,  அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/தேன்கனிக்கோட்டையில்-ரூ1-லட்சம்-பறிமுதல்-3114805.html
3114352 தருமபுரி கிருஷ்ணகிரி உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3.94 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 15, 2019 10:06 AM +0530 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி,  பென்னாகரம் அருகேயுள்ள நாகதாசம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி வில்சன் தலைமையிலான குழுவினர்  வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் தருமபுரியை நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டனர்.  அப்போது காரில்  பென்னாகரம் அருகேயுள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்த  பெருமாள் மகன்அருள்மணி(40) என்பவர்  உரிய ஆவணமின்றி ரூ.3.94 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் ஏலச் சீட்டு கட்டுவதற்காக பணம் எடுத்து செல்வதாக அருள்மணி தெரிவித்தார்.  இருப்பினும்,  பணம் பறிமுதல் செய்யப்பட்டு,  பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/உரிய-ஆவணமின்றி-எடுத்துச்-சென்ற-ரூ394-லட்சம்-பறிமுதல்-3114352.html
3114312 தருமபுரி கிருஷ்ணகிரி போத்தாபுரம் கிராமத்தில்  குடிநீர் பற்றாக்குறை! DIN DIN Friday, March 15, 2019 09:36 AM +0530 காரிமங்கலம் அருகேயுள்ள மல்லிக்குட்டை  ஊராட்சிக்குள்பட்ட  போத்தாபுரம் கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தக் கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர்த் தேவையை ஆழ்துளைக் கிணறு வாயிலாக ஏற்றப்படும் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பயன்படுத்தி  வந்தனர். கடந்த இரு மாதங்களாக ஆழ்துளைக் கிணறுவற்றிவிட்டது. இதனால் கிராம மக்கள் சில கி.மீ. தொலைவு சென்று, பக்கத்துக்கு கிராமங்களுக்கு நீர் பிடிக்கச் செல்கின்றனர். எனவும், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கிராம மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/போத்தாபுரம்-கிராமத்தில்--குடிநீர்-பற்றாக்குறை-3114312.html
3114302 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிக முறை வென்றுள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள்! DIN DIN Friday, March 15, 2019 09:36 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 16 தேர்தல்களில் திமுக , காங்கிரஸ் கட்சிகளே பல முறை வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-இல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இத்தகைய நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளன.   கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில்  1951, 1957,1971, 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸும்,  1962, 1967, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுகவும், 1977, 1998, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவும், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட த.மா.கா.வும் வெற்றி
பெற்றுள்ளன. 
இதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள 16 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ்  7 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும் தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு பல முறை வாய்ப்பு அளிக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ளனர். ஆனால்,  1996-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுவருகின்றனர். 
1996-ஆம் ஆண்டில் நடைபெற்ற 11-ஆவது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சி.நரசிம்மன் (தமாகா), 1998-ஆம் ஆண்டு தேர்தலில் கே.பி.முனுசாமி (அதிமுக), 1999-ஆம் ஆண்டில் வெற்றிச் செல்வன் (திமுக),  2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில்  இ.ஜி.சுகவனம் (திமுக), 2014-ஆம் ஆண்டு தேர்தலில் கே.அசோக்குமார் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதியில்-அதிக-முறை-வென்றுள்ள-திமுக-காங்கிரஸ்-கட்சிகள்-3114302.html
3114311 தருமபுரி கிருஷ்ணகிரி துணிக் கிடங்கில் தீ DIN DIN Friday, March 15, 2019 09:35 AM +0530 கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால்,,  ரூ.3 லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம் அடைந்தன.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட மாட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி சஞ்சீவ பிரபு.  இவர் கிருஷ்ணகிரி மேற்கு இணைப்பு சாலை காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, துணிக் கிடங்காகப் பயன்படுத்தி வந்தார். 
இந்த நிலையில், அவர் கிடங்கில் இருந்து துணிகளை வியாபாரத்துக்காக வியாழக்கிழமை எடுத்துச் சென்றார். 
இந்த நேரத்தில் பூட்டிய கிடங்கிலிருந்து புகை வந்துள்ளது.  தகவலின்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று,  தீயை அணைத்தனர்.  விபத்தால் ரூ.3 லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/துணிக்-கிடங்கில்-தீ-3114311.html
3114309 தருமபுரி கிருஷ்ணகிரி குடிநீர் கோரி மறியல் DIN DIN Friday, March 15, 2019 09:35 AM +0530 குடிநீர் கோரி,  சாணார்ப்பட்டியில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரும்பாலை அருகேயுள்ள சாணார்ப்பட்டியில் கடந்த 3 மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில்,  குடிநீருக்காக 2 கி.மீ.  தொலைவில் உள்ள பெரும்பாலை அரசுப் பள்ளி அருகேயுள்ள சிறிய நீர்த்தேக்கத் தொட்டியில் கிராம மக்கள் எடுத்து வருகின்றனர்.  இங்கு முறையான குடிநீரை வினியோகம் செய்யாததை கண்டித்து பெரும்பாலை-மேச்சேரி செல்லும் சாலையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து,  சமரசம் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/குடிநீர்-கோரி-மறியல்-3114309.html
3114307 தருமபுரி கிருஷ்ணகிரி பட்டா கோரி தேர்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் அறிவிப்பு DIN DIN Friday, March 15, 2019 09:35 AM +0530 பட்டா வழங்கக் கோரி,   மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் அளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சின்னமுத்தூர் ஊராட்சியில் கடந்த 1952-ஆம் ஆண்டில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமானோர் வசித்து வந்தனர்.  இங்கு அணை கட்டுவதற்காக,   அங்கு வசித்தோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்தையொட்டி மாற்று இடம் அளிக்கப்பட்டன. 
இதில், கிருஷ்ணகிரி அருகேயுள்ள சோக்காடி ஊராட்சியில் 75 குடும்பங்களுக்கு வனத்தையொட்டி மாற்று இடம் அளிக்கப்பட்டது. பட்டா வழங்கப்படாத நிலையில்,  3 தலைமுறையாக பட்டா கோரி,  விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியது:-
மாற்றுநிலம் பெற்றவர்கள் குள்ளன்கொட்டாய், ஜம்பூத்து, காட்டு பெருமாள் கோயில், ஆலமரத்துக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறோம்.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், 500 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.  
பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக, ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள் உறுதி
அளிப்பர்.  
இதுவரை எந்த அடிப்படை வசதிகளோ செய்து தரப்படவில்லை.  பட்டாவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. 
2010-ஆம் ஆண்டில் நில அளவீடு செய்யப்பட்டாலும்,  இதுவரை பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறோம்.  
குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால் அரசின் சலுவகைகளை பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால்,   அரசு அறிவித்த விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பயன் பெற இயலவில்லை.  
கோரிக்கையை வலியுறுத்தி வரும் மக்களவைத்  தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/பட்டா-கோரி-தேர்தல்-புறக்கணிப்பு-விவசாயிகள்-அறிவிப்பு-3114307.html
3114305 தருமபுரி கிருஷ்ணகிரி குடிநீர் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, March 15, 2019 09:34 AM +0530 குடிநீர் கோரி,  ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் மோசடிகளைக் கண்டித்தும்,   கோவிந்தாபுரம் ஊராட்சிக்குள்பட்ட இரண்டத்தான் பட்டி, வைத்தியர் கொட்டாய் ஆகிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கக் கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின்  மாவட்டத் துணைச் செயலர்  கே.எம்.எத்திராஜ்  தலைமை வகித்தார்.   மாநிலச் செயலர் எம்.முத்து,  மாவட்டச் செயலர் வி.கோவிந்தசாமி,  மாவட்டப் பொருளாளர் கே.செல்வராசு,  பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் அண்ணாமலை,  நிர்வாகிகள் குப்புசாமி, சரவணன், கிருஷ்ணன், எஸ்.குப்புசாமி, மணிகண்டன்,கற்பகம்   உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களிடம்  வட்டார வளர்ச்சி  அலுவலர்  அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி,  இரு நாள்களுக்கு ஒருமுறை லாரியில் குடிநீர் வழங்குவதாகவும்,  உடனடியாக  ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர்த் தொட்டி கட்டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.  இதன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/குடிநீர்-கோரி-பெண்கள்-ஆர்ப்பாட்டம்-3114305.html
3114304 தருமபுரி கிருஷ்ணகிரி முதன்முறையாக இடைத் தேர்தலைச் சந்திக்கும் ஒசூர் பேரவைத் தொகுதி! DIN DIN Friday, March 15, 2019 09:34 AM +0530 ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி முதன்முறையாக இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.
1952-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முனிரெட்டி (சுயேச்சை),  1957-இல் அப்பாவு பிள்ளை (சுயேச்சை), 1962-இ ல் ராமச்சந்திரா ரெட்டி (காங்கிரஸ்),  1967, 1971-ஆம் ஆண்டு தேர்தல்களில் வெங்கடசாமி (சுதந்திரா கட்சி),  1977-இல்  என்.ராமச்சந்திரரெட்டி (காங்கிரஸ்), 1980 , 1984-ஆம் ஆண்டு தேர்தல்களில் வெங்கட்டரெட்டி (காங்கிரஸ்), 
1989-இ ல் நடைபெற்ற தேர்தலில் ராமச்சந்திர ரெட்டி (காங்கிரஸ்) , 1991-இல் கே.ஏ.மனோகரன்(காங்கிரஸ்)  1996-இல் வெங்கடசாமி (ஜனதா தளம்),  2001, 2006, 2011-ஆம் ஆண்டு தேர்தல்களில் கே.கோபிநாத் (காங்கிரஸ்)  ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.  2016-இல் பாலகிருஷ்ணா ரெட்டி (அதிமுக) வெற்றி பெற்றார். இதனிடையே பொது சொத்தைச் சேதப்படுத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், அவர் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.  பதவியையை இழந்தார். 

வெற்றியை நிர்ணயிப்பது யார்?
ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்களும்,   முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர்.  இதைத் தவிர,  வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,  அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.   குறிப்பாக,  கேரளம், கர்நாடகம்,  ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.  இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில், இந்த தொகுதியில் குடியிருக்கக் கூடிய வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் ஓட்டுகளின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.

ஒசூரின் சிறப்பு அம்சங்கள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராக ஒசூர் இருந்துள்ளது.  ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணை மத்திகிரியில்தான் அமைந்துள்ளது.   ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார்.
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூரில்,  தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பல மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.  
ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால்,  ஒசூரில் வெளி மாவட்டங்களில் இருந்து குடியேறிய வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர்.

அதிக வாக்காளர்கள்
ஒசூர் நகரமும்,   ஒசூர், சூளகிரி ஒன்றியங்களில் உள்ள  கிராமப் பகுதிகளும்  ஒசூர் தொகுதியில் இடம் பெற்றிருந்தன.   
2009-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பில் சூளகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன.
இருந்த போதிலும்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஒசூர் விளங்குவருகிறது.

தேசிய கட்சிகளின் ஆதிக்கம்
இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.   அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸும்,  2 முறை சுதந்திரா கட்சியும்,  ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.   2016-ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றி பெற்றது.

அதிமுக- திமுக நேரடி போட்டி!
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல் அதிமுக, திமுக ஆட்சிகள் மாறி மாறி வந்த போதிலும்,  ஒசூர் தொகுதியில் தேசிய கட்சிகளைத்தான் தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுத்து வந்தனர். 
2016-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கே.கோபிநாத்,  அதிமுக சார்பில் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.  அதில் பாலகிருஷ்ணா ரெட்டி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது முதன்முறையாக நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/முதன்முறையாக-இடைத்-தேர்தலைச்-சந்திக்கும்-ஒசூர்-பேரவைத்-தொகுதி-3114304.html
3114300 தருமபுரி கிருஷ்ணகிரி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு DIN DIN Friday, March 15, 2019 09:33 AM +0530 உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து  அவர் வியாழக்கிழமை வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால்,  தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவும், எடுத்து செல்வதற்கு தடையாணை நடைமுறையில் உள்ளது. 
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் தங்களது துப்பாக்கிகளை மார்ச் 16-ஆம் தேதிக்குள் தங்களது எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து, அதற்கான உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு பின்னர், துப்பாக்கிகளை தமது பொறுப்பில் திருப்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/15/உரிமம்-பெற்றவர்கள்-துப்பாக்கிகளை-ஒப்படைக்க-உத்தரவு-3114300.html
3113695 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல் பயிற்சி DIN DIN Thursday, March 14, 2019 09:36 AM +0530 கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தனியார் கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறையைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி யில் வரலாற்றை எழுத ஆதாரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஆதாரங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழி என்று அழைக்கப்படும் தொல் தமிழ் வரிவடிவ எழுத்துகளை எழுத படிக்க பயிற்சி, அந்த தமிழ் எழுத்திலிருந்து வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துகளாகப் பிரித்து ஒவ்வொரு நூற்றூண்டாக எவ்வாறு மாற்றமடைந்து வந்து தற்போதைய எழுத்துகளாக உருமாறின என்பது உரிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டன.
பயிற்சியின் இறுதி நாளான மார்ச் 13-ஆம் தேதி, அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழ கல்வெட்டை மை ஒற்றி, படியெடுத்து அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளைப் படித்து, அவற்றின் பொருளை அறிந்து கொள்வது தொடர்பான பயிற்சியை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டன. கல்லூரியின் பேராசிரியர்கள் ராஜ்குமார், அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/கிருஷ்ணகிரியில்-கல்லூரி-மாணவர்களுக்கு-கல்வெட்டு-படியெடுத்தல்-பயிற்சி-3113695.html
3113693 தருமபுரி கிருஷ்ணகிரி ரெளடி கொலை வழக்கில்  6 பேர் கைது DIN DIN Thursday, March 14, 2019 09:36 AM +0530 பெங்களூரைச் சேர்ந்த ரெளடியை கொலை செய்த வழக்கில் 6 பேரை தேன்கனிக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூருவை  அடுத்த பொம்மனஹள்ளி அருகே உள்ள மங்கம்மா பாளையா மதினா நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (37). இவர், நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை வழக்கும் உள்ளது.
இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் வசித்து வரும் தனது நண்பர் நசீரை(51) காண வாகனத்தில் வந்தார். அவரை பின்தொடர்ந்து இரு வாகனங்களில்  வந்த மர்ம கும்பல், நசீர் வீட்டுக்குள் சென்ற இஸ்மாயிலை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
இந்தக் கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 2016-இல் வசீர் என்பவரை சையத் இஸ்மாயில் கொலை செய்ததும், அதற்கு பழிவாங்கும் வகையில் சையத் இஸ்மாயிலை மர்ம கும்பல் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்தக் கொலை தொடர்பாக பொம்மனஹள்ளியைச் சேர்ந்த சையத் வசீர் மகன் சையத் இர்சாத் ( 22), எம்.ஜி.பாளையா பகுதியைச் சேர்ந்த சையத் இர்பான் (27), முன்னாவர் (26), சையத் வினாயத் (22), எம்.ஜி.பாளையா பகுதியைச் சேர்ந்த சம்சுதீன்(30), தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். லே அவுட் பகுதியைச் சேர்ந்த நசிர் (51) ஆகிய ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள கெளசிஸ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/ரெளடி-கொலை-வழக்கில்--6-பேர்-கைது-3113693.html
3113691 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் தேர்தல் தகவல் மையம் DIN DIN Thursday, March 14, 2019 09:35 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் குறித்த விவரங்களை செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தேர்தல் தகவல் மையத்தை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
எனவே, தேர்தல் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள 04343-233312 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இந்த மையத்தை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/கிருஷ்ணகிரியில்-தேர்தல்-தகவல்-மையம்-3113691.html
3113689 தருமபுரி கிருஷ்ணகிரி ஏரியூர் அருகே கார் மோதியதில் சத்துணவு அமைப்பாளர், மகன் பலி DIN DIN Thursday, March 14, 2019 09:35 AM +0530 ஏரியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சத்துணவு அமைப்பாளரும், அவரது மகனும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்த நெருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி இந்திராணி (42).
இவர், பென்னாகரம் அருகே கொண்டையனுர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணி செய்து வந்தார்.
இந்திராணியின் மகன் கார்த்திக் (26) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வந்தார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த கார்த்திக்கும், தாயார் இந்திராணியும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மூங்கில்மடுவு என்ற இடத்தில் சென்றபோது சாலை வளைவில் எதிரே வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து ஏரியூர் போலீஸார்  தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். 
தொடரும் விபத்து: இந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் வகையில் அபாயகரமான வளைவு உள்ளது. வாகனங்கள் எதிரெதிரே வருவது தெரிவதில்லை என்பதால் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன. தொடர் உயிர்பலியைத் தடுக்க சாலை வளைவின் இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/ஏரியூர்-அருகே-கார்-மோதியதில்-சத்துணவு-அமைப்பாளர்-மகன்-பலி-3113689.html
3113687 தருமபுரி கிருஷ்ணகிரி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு DIN DIN Thursday, March 14, 2019 09:35 AM +0530 தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 26,867 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, மத்தூர், ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 88 மையங்களில் 26,867 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மேலும் தனித் தேர்வர்கள் 677 பேர் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்காக முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் என 1,912 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி செய்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/10-ஆம்-வகுப்பு-பொதுத்-தேர்வு-3113687.html
3113685 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுக் கழிப்பறை திறப்பு DIN DIN Thursday, March 14, 2019 09:35 AM +0530 கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான கழிப்பறை புதன்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 14 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்லுகின்றனர். அவ்வாறு வந்து செல்வோருக்கு பொதுக் கழிப்பறை இல்லாமல் இருந்தது. குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.
இத்தகைய நிலையில், இருபாலரும் பயன்படுத்தும் வகையில், பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டடப்பட்டது.  இந்தக் கட்டத்தை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக  முதன்மை மாவட்ட நீதிபதி மீனா சதீஷ் தலைமை வகித்து, திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி கலாவதி, மக்கள் நீதிமன்றத் தலைவரும் நீதிபதியான அறிவொளி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியன், இலவச சட்ட உதவி மையச் செயலாளர் நீதிபதி தஸ்னீம், முதன்மை சார்பு நீதிபதி ராமகிருஷ்ணன், சிறப்பு சார்பு நீதிபதி லீலா, குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-2 நீதிபதி ஜெயப்பிரகாஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வகுமார், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள், அரசு வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/கிருஷ்ணகிரி-ஒருங்கிணைந்த-நீதிமன்ற-வளாகத்தில்-பொதுக்-கழிப்பறை-திறப்பு-3113685.html
3113683 தருமபுரி கிருஷ்ணகிரி தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து DIN DIN Thursday, March 14, 2019 09:34 AM +0530 பர்கூர் அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் கிராமத்தில் முனுசாமி (65) என்பவர், தென்னை நார் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இந்தத் தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தேங்காய் மட்டைகளும், மற்றொரு அறையில் தென்னை நார் கட்டுகளும் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தொழிற்சாலையில் புகை வருவதைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், புகை வந்தப் பகுதியிலிருந்து தீ ஏற்பட்டு, மற்றப் பகுதிகளுக்கும் பரவியது. 
இதுகுறித்த தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் கட்டுப்படுத்தினர். 
இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன. மேலும், தீ விபத்து ஏற்பட்ட தனியார் தென்னை நார் தொழிற்சாலைக்கு அருகே உள்ள விவசாயிகளின் 35-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகின. இந்த
தீ விபத்து குறித்து, பர்கூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/தென்னை-நார்-தொழிற்சாலையில்-தீ-விபத்து-3113683.html
3113681 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் இன்று தேர்த் திருவிழா கொடியேற்றம் DIN DIN Thursday, March 14, 2019 09:34 AM +0530 ஒசூர் மலைக் கோயிலான அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தி சுவாமிகளை மலை அடிவாரத்தில் உள்ள கல்யாணசூடேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வந்து 14 நாள்களுக்கு பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு இந்தக் கோயிலில் மார்ச் 20-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு மார்ச் 13-இல் அங்குரார்ப்பணம், மார்ச் 14-இல் கொடியேற்றம், சிம்ம வாகன உற்சவம், மார்ச் 15-இல் மயில் வாகன உற்சவம், 16-இல் நந்தி வாகன உற்சவம், 17-இல் நாக வாகன உற்சவம், 18-இல் ரிஷப வாகன உற்சவம், 19-இல் திருக்கல்யாண உற்சவம், மார்ச்  20-இல் தேர்த் திருவிழா, 21-இல் பல்லக்கு உற்சவம், 22-இல் தெப்பல் உற்சவம், 23 முதல் 27-ஆம் தேதி வரை புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுகின்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/14/ஒசூர்-சந்திரசூடேஸ்வரர்-கோயிலில்-இன்று-தேர்த்-திருவிழா-கொடியேற்றம்-3113681.html
3112887 தருமபுரி கிருஷ்ணகிரி கிணறு தோண்டும்போது வெடி விபத்து: விவசாயி பலி DIN DIN Wednesday, March 13, 2019 09:17 AM +0530 ஊத்தங்கரை அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி வெடி விபத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை அடுத்த  கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). கூலித்தொழிலாளி. இவர் கோவிந்தாபுரம்   அருகே உள்ள படத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த  விவசாயி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது பாறையை  உடைக்க வெடிவைக்க துளையிட்டுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக  வெடிக்காமல் இருந்த வெடி வெடித்ததில் தொழிலாளி முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  அவரை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 
இந்த வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளிகள் சென்னகிருஷ்ணன் (35),  ராஜேந்திரன் (38)  ஆகியோர்  தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/13/கிணறு-தோண்டும்போது-வெடி-விபத்து-விவசாயி-பலி-3112887.html
3112846 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை DIN DIN Wednesday, March 13, 2019 09:04 AM +0530 தேர்தல்  நடத்தை விதிகளை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.பிரபாகர், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவை பொதுத் தேர்தல் 2019 தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 
தேர்தல் தொடர்பான விளம்பர பிரசுரம், துண்டுப் பிரசுரங்களை  எந்த வடிவத்திலும் அச்சடிக்க முற்படும்போது, தொடர்புடைய நபர்களிடமிருந்து வெளியிடுபவரின் பெயர், முகவரியைப் பெற்று விளம்பர முகப்பில் அச்சடித்து வெளியிட வேண்டும். 
மேலும்,  அச்சடிக்கப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை, அச்சகத்தின் பெயர் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். பிரசுரம், துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றை அச்சிடும் போது, வெளியிடுபவர் தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் உறுதிமொழி,  இரு சாட்சிகளின் அத்தாட்சியுடன் அச்சக உரிமையாளரிடம் இரு நகல்கள் அளிக்க வேண்டும். 
அதன் ஒரு நகலை உரிய கால அவகாசத்துக்குள் மாவட்ட நிர்வாக நீதிபதியிடம் அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, அச்சகம் மற்றும் புத்தகப் பதிவுச் சட்டம் 1867, உரிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/13/தேர்தல்-நடத்தை-விதிகளை-மீறும்-அச்சக-உரிமையாளர்கள்-மீது-நடவடிக்கை-3112846.html
3112845 தருமபுரி கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு "சீல்' வைப்பு DIN DIN Wednesday, March 13, 2019 09:04 AM +0530 மக்களவைத் தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி,  வேப்பனஅள்ளியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு வருவாய்த் துறையினர், செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில்  அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர்,  துணை முதல்வர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.  மேலும் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள், கொடிக் கம்பங்களை  அகற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை வருவாய் ஆய்வாளர் கே.சக்தி தலைமையிலும், வேப்பனஅள்ளியில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை வேப்பனஅள்ளி வருவாய் ஆய்வாளர் கோகுலக் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். அப்போது, காவல் துறையினர் உடனிருந்தனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/13/எம்எல்ஏ-அலுவலகங்களுக்கு-சீல்-வைப்பு-3112845.html
3112844 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் ரெளடி வெட்டிக் கொலை DIN DIN Wednesday, March 13, 2019 09:04 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டையில் பெங்களூரைச் சேர்ந்த பிரபல ரெளடியை காரில் பின்தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. 
கர்நாடக மாநிலம், பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே உள்ள மங்கமனப்பாள்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (38).  இவர் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.  ரெளடியான இவர் மீது கொலை, கொள்ளை,  ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள்,  அம் மாநிலத்தில் நிலுவையில் உள்ளன. 
இந்த நிலையில்,  இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர்  நஷீர் என்பவரைச் சந்திப்பதற்காக  தனது காரில் வந்துள்ளார்.   அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் ஒரு கும்பல் வந்துள்ளது. தேன்கனிக்கோட்டை வந்த இஸ்மாயில்,   நஷீரின்வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.  அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலை சரமாரியாக வெட்டினர்.  இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.    இதையடுத்து, அவரைக் கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.சங்கீதா,  காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நிலம் வாங்கி,  விற்றல் தொழிலில்  ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக இஸ்மாயில் கொலை செய்யப்பட்டாரா?  அல்லது  கொலை வழக்கில் பழி வாங்குவதற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இஸ்மாயிலை கொலை செய்த மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/13/தேன்கனிக்கோட்டையில்-ரெளடி-வெட்டிக்-கொலை-3112844.html
3112194 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் செலவு தொகையை உயர்த்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் DIN DIN Tuesday, March 12, 2019 08:05 AM +0530 கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வேட்பாளரின் தேர்தல் செலவுத் தொகையை உயர்த்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. 
மக்களவைத் தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி  ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்,  மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் சு.பிரபாகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
இந்தக்  கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியது: நகராட்சி, மாநகராட்சியில் செய்யப்படும் செலவினங்கள் வேட்பாளர்களின் கணக்கில் காட்டப்படுகிறது. அதனால், வேட்பாளர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாநகராட்சியில் தேநீர்  ரூ.15 - க்கும், சாப்பாடு ரூ.85 - க்கும், பிரியாணி ரூ.165 - க்கும், 15 -க்கு 20 என்ற அளவில் பதாகை அமைக்க ரூ.2,800 என கணக்கீடு செய்யப்படுகிறது.  
ஆனால், நகராட்சியில் தேநீர் ரூ.8 - க்கும், சாப்பாடு ரூ.40 - க்கும், பிரியாணி ரூ.80 - க்கும், பதாகை அமைக்க ரூ.1,500 என செலவாகிறது.  இத்தகைய கணக்கை, தேர்தல் அலுவலர்கள் கணக்கிட வேண்டும். மேலும், வேட்பாளரின் தேர்தல் செலவை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சமாக உயர்த்த வேண்டும் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/தேர்தல்-செலவு-தொகையை-உயர்த்த-அரசியல்-கட்சிகள்-வலியுறுத்தல்-3112194.html
3112193 தருமபுரி கிருஷ்ணகிரி தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு DIN DIN Tuesday, March 12, 2019 08:05 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,  கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல உதவி  இயக்குநர் பிரேமா, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்தத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் முன்னாள் ராணுவ வீரர்  நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது விருப்பத்தை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் பணியில், முன்னாள் ராணுவவீரர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளிலேயே  அமர்த்தப்படுவர் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/தேர்தல்-பாதுகாப்புப்-பணி-முன்னாள்-படைவீரர்களுக்கு-அழைப்பு-3112193.html
3112192 தருமபுரி கிருஷ்ணகிரி வழிப்பறி செய்தவர் கைது DIN DIN Tuesday, March 12, 2019 08:05 AM +0530 ஒசூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் அலசநத்தம் தோட்டகிரி  சாலையைச் சேர்ந்தவர் ஷாஜகான் (30).   இவர் ஒசூர் ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ஷாஜகானை வழிமறித்து அவர் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.7,320 பணம் மற்றும் செல்லிடப்பேசியைப் பறித்து சென்றார். இதுகுறித்து ஷாஜகான் ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்டவர் ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்த பசவராஜ் என்கிற காளையா (28) என்றும்,  அவர் மீது ஏற்கெனவே திருட்டு, போக்    ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/வழிப்பறி-செய்தவர்-கைது-3112192.html
3112191 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான 285 வாக்குச் சாவடிகள்: ஆட்சியர் தகவல் DIN DIN Tuesday, March 12, 2019 08:05 AM +0530 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று,  ஆட்சியர் சு.பிரபாகர்   தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (எண் - 9), இடைத் தேர்தல் நடைபெறும்  ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதியில் (எண்-55) தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சு.பிரபாகர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை
தெரிவித்தது: 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி),  பர்கூர்,  கிருஷ்ணகிரி,  வேப்பனஅள்ளி,  ஒசூர்,  தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. 
இதில் உதவித் தேர்தல் அலுவலர்களாக ஊத்தங்கரை  தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,  பர்கூர் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி தொகுதிக்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர், வேப்பனஅள்ளி  தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர், ஒசூர் தொகுதிக்கு ஒசூர்  வருவாய் கோட்டாட்சியர், தளி  தொகுதிக்கு கிருஷ்ணகிரி  உதவி ஆணையர் (கலால்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,855 வாக்குச் சாவடிகள் உள்ளன. கடந்த தேர்தலின் போது நடைபெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 பகுதிகளில் 285 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் இந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.  இம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 9 ஆயிரம் பணியாளர்கள் பங்களிப்பை அளிக்க உள்ளனர். இவர்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானிப்பார்கள்.  மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 11 ஆயிரம் வாக்காளர்கள் மாற்றுத் திறனாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 
ஜி.பி.எஸ். கருவி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் பறக்கும் படை உள்பட 42 குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். நாளிதழ்கள்,  கட்செவி அஞ்சல் மற்றும்  தொலைக்காட்சி  வெளியாகும் விளம்பரங்கள், செய்திகள் குறித்து ஊடக மையம் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். 
அப்போது,   மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் மற்றும்  அலுவலர்கள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/கிருஷ்ணகிரி-மக்களவைத்-தொகுதியில்-பதற்றமான-285-வாக்குச்-சாவடிகள்-ஆட்சியர்-தகவல்-3112191.html
3112190 தருமபுரி கிருஷ்ணகிரி "திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்' DIN DIN Tuesday, March 12, 2019 08:03 AM +0530 திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என்று காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு  கலந்தாய்வுக் கூட்டம் மத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன்  தலைமை வகித்தார். தேசிங்குராஜன், கோவிந்தசாமி,  தருமன்,  ராகிப்ஜால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஜ்முதீன்  வரவேற்றார். வட்டார காங்கிரஸ் தலைவர் லோகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் மாது, மாவட்டச் செயலாளர் சக்திவேல், முன்னாள் தலைவர் கதிரப்பன்,  கணேசன்,  தங்கராஜ்,  சிவகுமார், தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மக்களைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுவது, கன்னியாகுமரிக்கு வருகை தரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சிறப்பாக வரவேற்பது,  மாநிலங்களில் உள்ள  நடை முறைபோல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அனைத்து பிரிவுகளையும்  ஓபிசி என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/திமுக---காங்கிரஸ்-கூட்டணி-வெற்றிக்கு-பாடுபடுவோம்-3112190.html
3112189 தருமபுரி கிருஷ்ணகிரி யோகாவில் சாதனை: மாணவருக்குப் பாராட்டு DIN DIN Tuesday, March 12, 2019 08:02 AM +0530 சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஹரீஷ் , 50 விதமான யோகா கலைகளை செய்து சாதனை புரிந்துள்ளார். 
அம்மாணவரைப்  பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக  ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கு.கணேசன் சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். மேலும், மாணவரின் மேல்நிலைக்கல்வி  வரையிலான  கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 
சீனிவாசபுரம் தலைமை ஆசிரியர்  எச்.பெளலின் புளேரா,  ஆசிரியர்கள் ஜி.செல்வக்குமார், சிங்காரப்பேட்டை ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் சாதனை மாணவர் ஷரீஷ், கல்விச் செலவை ஏற்ற ஆசிரியர் கணேசன் ஆகியோரை பாராட்டினர் .

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/யோகாவில்-சாதனை-மாணவருக்குப்-பாராட்டு-3112189.html
3112188 தருமபுரி கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சாலை விபத்தில் உறவினர்கள் இருவர் உயிரிழப்பு DIN DIN Tuesday, March 12, 2019 08:02 AM +0530 மத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர்  அருகே உள்ள கவுண்டனூர் பிரிவு சாலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, சாமல்பட்டியில் இருந்து மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்த கொடமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் சக்கரவர்த்தி (40)  மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சக்தி (45) ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 
விபத்தில் இறந்த இருவரும் உறவினர்கள் ஆவர். மத்தூர் போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/மத்தூர்-அருகே-சாலை-விபத்தில்-உறவினர்கள்-இருவர்-உயிரிழப்பு-3112188.html
3112187 தருமபுரி கிருஷ்ணகிரி ஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில்கள் அழிந்துவிட்டன:  டி.கே.ரங்கராஜன் DIN DIN Tuesday, March 12, 2019 08:02 AM +0530 மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அழிந்து விட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி தெரிவித்தார்.  
ஒசூர் ராம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரம் மற்றும் நிதியளிப்பு பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. மேலும்  பேசியது:
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்தில் ஒசூர் முதல் கன்னியாகுமரி வரையில் சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துவிட்டன.   சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த தீப்பெட்டி ஆலைகள், பட்டாசு ஆலைகள் பல மாதங்களாக மூடியுள்ளன.   அதேபோன்று கோவை பம்ப் செட் மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் 400 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. 
அதேபோன்று உலக அளவில் உள்ளாடை உற்பத்தியில் முன்னணியில் செயல்பட்டு வந்த திருப்பூரில் ஜி.எஸ்.டி வரி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 
ஒசூரில் வாகன உற்பத்தித் துறையில் ஜி.எஸ்.டி வரி கட்டமுடியாமல் 968 சிறு தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் நிலை இதுதான். 
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கிய சிறு தொழில்கள் அழிந்து வருகின்றன. அதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். விவசாயிகளின் வருவாய் 5 மடங்கு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி  தெரிவித்தார். ஆனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்காமல் இடுபொருள்களின் விலை அதிகரித்துவிட்டது என்றார். 
இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேர்தல் நிதி ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன், வட்டச் செயலாளர் மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், சுரேஷ், அழகிரி, கோவிந்தசாமி, ஆஞ்சலாமேரி, மாவட்டக் குழு உருப்பினர்கள் கோதண்டராமன், சேதுமாதவன், ரவி, நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
மதுரையின் முக்கிய திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. சென்னையில் இருந்து அதிக அளவில் மக்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்பார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள்  திருவிழாவில் பங்கேற்பார்கள். திருவிழா எப்போதும் போல நடைபெறவேண்டும். அதனால் ஏப்ரல் 18 - தேர்தல் நடைபெறும் என்பதை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.  இடைத் தேர்தல் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/ஜிஎஸ்டி-வரியால்-சிறு-தொழில்கள்-அழிந்துவிட்டன--டிகேரங்கராஜன்-3112187.html
3112186 தருமபுரி கிருஷ்ணகிரி மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு DIN DIN Tuesday, March 12, 2019 08:01 AM +0530 போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில் தேங்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள காரமுர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (50).   கூலித் தொழிலாளியான இவர்,  பண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தென்னந் தோப்பில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார்.  அப்போது தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்ததில், சின்னசாமி  மரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
    இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  மேலும்,  உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/12/மின்சாரம்-பாய்ந்து-தொழிலாளி-சாவு-3112186.html
3111619 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில்கொப்பரை உலர்த்தி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை DIN DIN Monday, March 11, 2019 04:05 AM +0530
போச்சம்பள்ளி பகுதியில் கொப்பரை உலர்த்தி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை விற்பனைக் குழு சார்பில் போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், கொப்பரை உலர்த்தி கூடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 
இப்பகுதி தென்னை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 6 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியில் இயங்க கூடிய இந்த கொப்பரை உலர்த்தி கூடத்தை விவசாயிகள் குறைந்த வாடகையில் கொப்பரைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்நாள் வரை இக் கூடம் விவசாயிகளிடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் புவனேஸ்வரி கூறியது: கொப்பரை உலர்த்தி கூடம் ஆரம்பத்தில் 11 மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. பிறகு இந்த உலர்த்தியில் இட வசதி குறைவாக உள்ளதாக தெரிவித்து விவசாயிகள் பயன்படுத்துவது குறைந்துவிட்டது என்றார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/போச்சம்பள்ளியில்கொப்பரை-உலர்த்தி-கூடத்தை-பயன்பாட்டுக்கு-கொண்டுவர-கோரிக்கை-3111619.html
3111618 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி வட்டாரத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல் DIN DIN Monday, March 11, 2019 04:05 AM +0530
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என சந்தூர், போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, அகரம், பண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தம் 193 கிராமங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன.
சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பணியாளர்கள் இப் பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 17,332 குழந்தைகளுக்கு  போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் உதயசூரியன், காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம் ஆகியோரது தலைமையிலான குழு ஆய்வுகள் நடத்தி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை  வழங்கியது. இதில் சந்தூர் மருத்துவ அலுவலர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் கந்தவேல் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/போச்சம்பள்ளி-வட்டாரத்தில்-போலியோ-தடுப்பு-சொட்டு-மருந்து-வழங்கல்-3111618.html
3111617 தருமபுரி கிருஷ்ணகிரி அ.தி.மு.க.வில் சேர்ந்த  மாற்றுக் கட்சியினர் DIN DIN Monday, March 11, 2019 04:05 AM +0530
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜன அள்ளி பேரூராட்சி அ.ம.மு.க. நகரச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்தவர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வரவேற்றார். அப்போது, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய துணைத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/அதிமுகவில்-சேர்ந்த--மாற்றுக்-கட்சியினர்-3111617.html
3111616 தருமபுரி கிருஷ்ணகிரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு DIN DIN Monday, March 11, 2019 04:04 AM +0530
சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 
சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (55). லாரி உதவியாளரான இவர் ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி தாபா உணவகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயடைந்த நடராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/அடையாளம்-தெரியாத-வாகனம்-மோதி-இளைஞர்-சாவு-3111616.html
3111615 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, March 11, 2019 04:04 AM +0530
கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, பர்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதன் வட்டாரத் தலைவர் தேவராஜி தலைமை வகித்தார். இந்திய கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கண்ணு, வட்டச் செயலளர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை, மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். கந்திகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/கிருஷ்ணகிரியை-வறட்சி-மாவட்டமாக-அறிவிக்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3111615.html
3111614 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் வீரசைவ பேரவை மாநில மாநாடு DIN DIN Monday, March 11, 2019 04:04 AM +0530 கிருஷ்ணகிரியில் விசுவ வீரசைவ லிங்காயத்து மகா வேதிகா மற்றும் தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவையின் 6-ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநாட்டையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையிலிருந்து பேரணி புறப்பட்டது. வட்டச் சாலை வழியாக சென்ற பேரணி, மாநாட்டு பந்தல் அருகே நிறைவு பெற்றது. 
பேரணிக்கு மாவட்டத் தலைவர் சோமேஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவ பேரவையினர் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டில் 22 உள்பிரிவுகளில் காணப்படும் இந்த சமூகத்தினரை ஒன்றாக இணைத்து வீரசைவர் என்ற பெயரில் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/கிருஷ்ணகிரியில்-வீரசைவ-பேரவை-மாநில-மாநாடு-3111614.html
3111613 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Monday, March 11, 2019 04:04 AM +0530
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
முகாமில் அனைத்து இளங்கலை மூதறிவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் சோனா யுத்தி குழுமத்தின் ஒருங்கிணைந்த நிறுவனங்களான ஐ.டி.பி.ஐ, வி.டெக்னாலாஜி, எக்ஸைட் லைப், புலு ஓசோன், யூரோகா போப்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. 
சோனா யுத்தி குழுமத்தின் வட்டார மேலாளர் முத்து, கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையத்தின் அலுவலர் அ.சோமசுந்தரம், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) வெ.வியேந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/கிருஷ்ணகிரி-அரசு-ஆடவர்-கலைக்-கல்லூரியில்-வேலைவாய்ப்பு-முகாம்-3111613.html
3111612 தருமபுரி கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில்  குடிநீர் விநியோகம் DIN DIN Monday, March 11, 2019 04:03 AM +0530
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் சேவையை ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
பர்கூர், ஊத்தங்கரையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியை ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா கிருஷ்ணகிரியில் தொடக்கிவைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இதற்காக  ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தெரிவிக்கப்படும். ரஜினி கட்சி தொடங்க தாமதம் செய்கிறார் என்பது தவறு. அவர் நிதானமாக செயல்படுகிறார். ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/ரஜினி-மக்கள்-மன்றம்-சார்பில்--குடிநீர்-விநியோகம்-3111612.html
3111611 தருமபுரி கிருஷ்ணகிரி நாசா அறிவியல் ஆராய்ச்சி கருத்தரங்கு: பாரத் பள்ளி மாணவிகள் தேர்வு DIN DIN Monday, March 11, 2019 04:03 AM +0530  நாசா அறிவியல் விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தேசிய அளவிலான விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆஸ்ட்ரோநெட் மெம்மோரியல் பவுண்டேஷன் மற்றும் புளாரியா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனம் ஆகியன இணைந்து தேசிய அளவிலான விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் கட்டுரை போட்டி அண்மையில் நடத்தின.
இதில் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி கோமல், பத்மா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் சிறந்த படைப்பாளியாக தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா நாசாவில் மே மாதத்தில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். 
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ள மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். அப்போது, முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜய்குமார், பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ) பள்ளி முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/11/நாசா-அறிவியல்-ஆராய்ச்சி-கருத்தரங்கு-பாரத்-பள்ளி-மாணவிகள்-தேர்வு-3111611.html
3110945 தருமபுரி கிருஷ்ணகிரி சட்ட உதவிகள் விழிப்புணர்வு முகாம் DIN DIN Sunday, March 10, 2019 03:40 AM +0530
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஊத்தங்கரை சட்டப் பணிகள் குழு சார்பில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மீனா சதீஷ் தலைமை வகித்தார். ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் வரவேற்றார். இளம் வயது திருமணம், செல்லிடப்பேசி பயன்பாடு, பாலியல் வன்கொடுமை குறித்து  நீதிபதி கே.அறிவொளி பேசினார்.  
தலைமைக் குற்றவியல் நடுவர் பாலசுப்பிரமணியம், முதன்மை சார்பு நீதிபதி இராமகிருஷ்ணன், சிறப்பு நீதிபதி (மோட்டார் வாகன தீர்ப்பாயம்) கே.ஆர்.லீலா, கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிபதி என்.எஸ்.ஜெயபிரகாஷ்,  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் (போச்சம்பள்ளி) எ.செல்வகுமார், ஊத்தங்கரை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் வி.பி.சுகந்தி, ஊத்தங்கரை நீதித்துறை நடுவர்  டி.ராஜேஷ்ராஜு மற்றும் உரிமையியல் நீதிபதி ராஜசேகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் எஸ்.தஸ்னீம் ஆகியோர் மகளிர் பாதுகாப்பு அதற்கான சட்டங்கள் குறித்து விளக்கினர்.
கல்லூரி செயலர் ஆர்.பி.ராஜி, கல்லூரி முதல்வர் க.அருள், ஊத்தங்கரை வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் இரா.சந்திரசேகரன், செயலர் வஜ்ஜிரவேல், எஸ்.மூர்த்தி மற்றும் ஜி.எம்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒசூரில் 
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒசூர் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்திய பெண்களுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற முகாமில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அசோகன்,  சார்பு நீதிபதியும், ஒசூர் வட்ட சட்டப் பணிகள்குழுத் தலைவருமான மோனிகா ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சுகுமார் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிருக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பணிகள் குறித்தும், மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
நீதித்துறை நடுவர் சாந்தி, மாணவர்களின் சட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். மூத்த  வழக்குரைஞர் செல்வி, குடும்ப பிரச்னை, பெண் சிசுக்கொலை தடுப்பு குறித்து சட்ட விளக்கமளித்தார். 
முகாமில் வழக்குரைஞர்கள் கோபிகுமார், வெங்கடேஷ்குமார், காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/10/சட்ட-உதவிகள்-விழிப்புணர்வு-முகாம்-3110945.html
3110944 தருமபுரி கிருஷ்ணகிரி இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் DIN DIN Sunday, March 10, 2019 03:39 AM +0530
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 951 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 888 மையங்கள், 2 நகராட்சிப் பகுதியில் 63 மையங்கள் என மொத்தம் 951 மையங்களில் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் வேறு இடங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக இந்த மாவட்டத்தில் வந்து தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பாலப் பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியோ  சொட்டு மருந்து 951 மையங்களிலும் தயார் நிலையில்  உள்ளது. 56 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகர் நல மையங்கள் மற்றும் 6 அரசு மருத்துவமனைகளுக்கு  போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 
போலியோ தடுப்பு சொட்டு  மருந்துகளைப் பாதுகாக்க உரிய குளிர்சாதன பெட்டிகள் அனைத்து மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிட சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 3804 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/10/இன்று-போலியோ-தடுப்பு-சொட்டு-மருந்து-முகாம்-3110944.html
3110943 தருமபுரி கிருஷ்ணகிரி எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது DIN DIN Sunday, March 10, 2019 03:39 AM +0530
ஜெய்ப்பூரில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தி சென்ற 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநர்கள் இருவரைக் கைது செய்தனர்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூரு வழியாக தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை எரிசாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, பெங்களூரிலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 35 லிட்டர் அளவுகொண்ட 530 கேன்களின் 18 ஆயிரத்து 550 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு எடுத்து செல்வது தெரிய வந்தது. வட மாநிலங்களில் இருந்து எரிசாராயம் தமிழகத்துக்கு கும்மிடிப்பூண்டி வழியாக கடந்த காலங்களில் எடுத்து வரப்பட்டது. அந்த பகுதியில் தொடர் சோதனையால் கடத்தல் தடுக்கப்பட்டதால் தற்போது பெங்களூரு வழியாக கொண்டு செல்லப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த ரமேஷ் ( 46), வெங்கடேசன் (35) ஆகிய 2 ஓட்டுநர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.16 லட்சம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/10/எரிசாராயம்-பறிமுதல்-2-பேர்-கைது-3110943.html
3110389 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா: மார்ச் 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை DIN DIN Saturday, March 9, 2019 10:17 AM +0530 ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மார்ச் 20-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர்அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நடைபெறவுள்ள மார்ச் 20-ஆம் தேதி ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு (சார்-ஆட்சியர் அலுவலகம் உள்பட) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/09/ஒசூர்-ஸ்ரீசந்திரசூடேஸ்வரர்-கோயில்-தேர்த்-திருவிழா-மார்ச்-20-ஆம்-தேதி-உள்ளூர்-விடுமுறை-3110389.html
3110388 தருமபுரி கிருஷ்ணகிரி போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி DIN DIN Saturday, March 9, 2019 10:16 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. 
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கெளரிசங்கர் கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்வுக்கான பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒரு முறை தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/09/போட்டித்-தேர்வர்களுக்கு-இலவச-பயிற்சி-3110388.html