Dinamani - நாமக்கல் - https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3079811 தருமபுரி நாமக்கல் உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்தி காட்டவுள்ளோம்: ஈ.ஆர்.ஈஸ்வரன் DIN DIN Sunday, January 20, 2019 05:13 AM +0530
நாமக்கல்லில் நடக்கவுள்ள உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்திக் காட்ட உள்ளோம் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உலக கொங்கு தமிழர் மாநாடு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், காளிங்கராயன் படத்துக்கு மலரஞ்லி செலுத்திவிட்டு தெரிவித்ததாவது:
முதல் உலக கொங்கு தமிழர் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. இதையடுத்து நாமக்கல்லில் தற்போது நடக்கவுள்ள உலக கொங்கு தமிழர் மாநாட்டை வரலாற்று நிகழ்வாக நடத்திக் காட்ட உள்ளோம். 26 நாடுகளிலிருந்து கொங்கு தமிழர்கள் வர உள்ளனர். அவர்களது தொடர்புகளை விரிவுப்படுத்தி நமது இளைஞர்களுக்கு வேலை , கல்வி, வியாபாரம் ஆகிவற்றுக்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். மேலும், மத்திய அரசு விசாவுக்கான கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
சில மாதங்களுக்கு முன்பு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த நீரைத் தேக்கி வைக்க எந்த முயற்சியையும் ஆட்சியில் இருப்பவர்கள் எடுக்காத காரணத்தால் தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து ஏரி, குளங்களில் தேக்கி இருக்கலாம். மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது குடிநீர் பிரச்னை பெரிதாகி தேர்தலில் எதிரொலிக்கும். மாநாட்டுக்குப் பிறகு எங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பல கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடு தெரியவரும்.
2014-இல் பெரும் எதிர்பார்ப்போடு மோடி பிரதமராக பாடுபட்டோம். நதிகள் இணைக்கப்படும் என்று அப்போது அவர் பேசினார். ஆனால் முன்னேறிவிட்டோம் என்று அறிக்கைதான் தற்போது வருகிறதே தவிர யதார்த்தத்தில் அந்த மாதிரி இல்லை.
கொடநாடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த நிலையை அவர்தான் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு பற்றி யாருக்கும் முழுமையாக தெரியவில்லை. ஊழல் நடந்திருந்தால் அது தவறுதான். அதனை கொ.ம.தே.க. எதிர்க்கும்
என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/உலக-கொங்கு-தமிழர்-மாநாட்டை-வரலாற்று-நிகழ்வாக-நடத்தி-காட்டவுள்ளோம்-ஈஆர்ஈஸ்வரன்-3079811.html
3079810 தருமபுரி நாமக்கல் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த பெற்றோர் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் DIN DIN Sunday, January 20, 2019 05:13 AM +0530 குழந்தைகள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில். 
நாமக்கல் அருகே பொம்மைகுட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனத்தின் 20 -ஆவது ஆண்டுவிழா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளியண்ணன் வரவேற்றார். முதல்வர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார். 
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் பங்கேற்று, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 
அப்போது அவர் பேசியது: பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட விடவேண்டும். பொதுத்தேர்வு என்று குழந்தைகளை கசக்கி பிழியக்கூடாது. அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். திறமையை வளர்த்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் குறிக்கோளை அடையவேண்டும். 
அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் அதிக திறனே உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பெற்றோர்கள் அவர்களை பக்குவப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும். உடல்வலிமை இருந்தால் மனவலிமை தானாக வரும். 
உடல்வலிமையை வளர்த்துக்கொள்ள விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் முன்னுக்கு வந்ததாக தெரியவில்லை. மாணவர்கள் ஆசிரியர்களை தங்கள் தாய் போன்று மதிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல ஒழுக்கம், நல்ல கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். 
விழாவில் கல்வி நிறுவன இயக்குநர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர் கோலப்பன், கிங்மேக்கர் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் மோகனப் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமையாசிரியர் பழனிசாமி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/குழந்தைகளின்-திறமைகளை-மேம்படுத்த-பெற்றோர்-சந்தர்ப்பங்களை-ஏற்படுத்த-வேண்டும்-3079810.html
3079809 தருமபுரி நாமக்கல் குட்கா வழக்கில் பிணையில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Sunday, January 20, 2019 05:12 AM +0530
பரமத்தி வேலூர் அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பரமத்தி வேலூர் பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் போலீஸார் வடக்கு நல்லியாம்பாளையம் அருகே உள்ள சுண்டப்பானை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சரக்கு ஆட்டோக்களை சோதனை மேற்கொண்டனர். இதில் 42 மூட்டைகளில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் பாரதி நகரைச் சேந்த மினி ஆட்டோ ஓட்டுநர்களான விக்னேஷ் (22), கரூர் மாவட்டம் மண்மங்கலம், மோதுக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மதன்குமார் (24) மற்றும் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம்புதூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமார் (39) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் கீழ்பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 குட்கா மூட்டைகள் மற்றும் 6 பெட்டிகள் கொண்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பரமத்திவேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த விஜய் (எ) ராமலிங்கம் (35) என்பவரை மோகனூர் போலீஸார் கைது செய்தனர்.இவர்கள் நான்கு பேரும் போலீஸார் விசாரணைக்கு பின்பு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து பிணையில் வந்த பரமத்திவேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த கோபால் மகன் விஜய் (எ) ராமலிங்கம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டில் சேலையில் தூக்கிட்டு உயிரிழந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி புனிதா (32) மற்றும் உறவினர்கள் பரமத்திவேலூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/குட்கா-வழக்கில்-பிணையில்-வந்தவர்-தூக்கிட்டுத்-தற்கொலை-3079809.html
3079808 தருமபுரி நாமக்கல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, January 20, 2019 05:12 AM +0530
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நாமக்கல் பூங்காசாலை முன் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மூத்த தலைவர் பி.செங்கோடன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மு.து.செல்வராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சம்பூரணம், சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கே.மோகன், உதவித் தலைவர் எல்.ஜெயக்கொடி ஆகியோர் பேசினர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். 
விவசாய விளைபொருள்களுக்கு வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி விலையைத் தீர்மானிக்க வேண்டும். ஏழை விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனிசட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/விலைவாசி-உயர்வைக்-கட்டுப்படுத்தக்-கோரி-தொழிற்சங்கங்கள்-ஆர்ப்பாட்டம்-3079808.html
3079799 தருமபுரி நாமக்கல் ராசிபுரம்- புதுச்சத்திரம் பகுதியில் ரூ.94.86 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி: அமைச்சர்கள் வழங்கினர் DIN DIN Sunday, January 20, 2019 04:18 AM +0530
ராசிபுரம்- புதுசத்திரம் பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 247 பயனாளிகளுக்கு ரூ.94.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் வழங்கினர். 
ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமை வகித்தார். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் , சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 17 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 6 பேருக்கு காதொலிக் கருவி, 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி, இருவருக்கு வங்கி கடனுதவி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதே போல் புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் 247 பயனாளிகளுக்கு ரூ.94.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராசிபுரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டங்களில் ஒன்றாகிய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடத்துக்கான உரிமை வழங்கும் வகையில் 220 நபருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. 
மேலும், இடம் உள்ளவர்கள் முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கும், ஏற்கெனவே பட்டா இல்லாத இடங்களில் வீடுகட்டியுள்ளவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் நகரில் புதிய பூலாம்பட்டி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நகரில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
விழாவில் அமைச்சர் வி.சரோஜா பேசுகையில், மறைந்த ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக சமூக நலத்துறையின் எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார். ராசிபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.வி.எம். பாலசுப்ரமணியன், ஓ.செளதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.பி.தாமோதரன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/ராசிபுரம்--புதுச்சத்திரம்-பகுதியில்-ரூ9486-லட்சம்-மதிப்பில்-நலத்-திட்ட-உதவி-அமைச்சர்கள்-வழங்கினர்-3079799.html
3079798 தருமபுரி நாமக்கல் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் DIN DIN Sunday, January 20, 2019 04:18 AM +0530
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கொண்டமநாயக்கன்பட்டி, பச்சுடையாம்பட்டி, உத்திரகிடிக்காவல், நடுக்கோம்பை, வாழவந்திக்கோம்பை, பொம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தலைமை வகித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலர் கே.பொன்னுசாமி, ஒன்றியச் செயலர் அ.அசோக்குமார், நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், பேரூர் செயலர்கள் பி.நடேசன், என்.தனபாலன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் சாம் சம்பத், ஜி.கே.பெரியசாமி, வி.பி.ராணி மற்றும் ஒன்றிய, ஊராட்சி திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/சேந்தமங்கலம்-ஒன்றியத்தில்-திமுக-சார்பில்-ஊராட்சி-சபைக்-கூட்டம்-3079798.html
3079797 தருமபுரி நாமக்கல் கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ.15 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை DIN DIN Sunday, January 20, 2019 04:18 AM +0530
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 350 மூட்டைகள் மஞ்சள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாகின. 
ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 
இந்த மஞ்சள் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 50 - க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் ரூ.15 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகின. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,359 முதல் ரூ.7,399வரையும், கிழங்கு ரகம் ரூ.5,499 முதல் ரூ.6,162 வரையும் விலை போயின. 
ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு நல்ல விலை கிடைத்ததாகக் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/கூட்டுறவு-வேளாண்-சங்கத்தில்-ரூ15-லட்சத்துக்கு-மஞ்சள்-விற்பனை-3079797.html
3079689 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோட்டில் அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடி போட்டி:சென்னை வருமானவரித்துறை அணி வெற்றி DIN DIN Sunday, January 20, 2019 03:46 AM +0530
திருச்செங்கோடு தைப்பொங்கல் விழா குழு, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகம் இணைந்து நடத்திய 25-ஆவது அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடிப் போட்டிகள் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இந்தப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மும்பை பாரத் பெட்ரோலிய நிறுவனம், விஜயா வங்கி பெங்களூரு, கஸ்டம்ஸ் துறை அணி, பெங்களூரு எம்.இ.ஏஅணி, பெங்களூரு ரெட் ஆர்மி தில்லி , எஸ்.எஸ்.பி. போலீஸ் அணி ஹரியாணா, கோவா போலீஸ் அணி, புதுச்சேரி மாநில அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப், சென்னை போஸ்டல் அணி , சென்னை வருமான வரித்துறை அணி, ஈரோடு ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஹரியாணா பானிபட் அணி, மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அணி போன்ற அணிகளும், பெண்கள் பிரிவில் கொல்கத்தா அசோக் சங்க் அணி, புனே ஸ்போர்ட்ஸ் கிளப், மத்திய ரயில்வே அணி, மும்பை வெஸ்டன் ரயில்வே அணி, மும்பை எஸ்.சி. ஆர். ரயில்வே அணி, ஹைதராபாத் , கோவா போலீஸ் அணி, ஸ்ரீ ஓம் ஸ்போர்ட்ஸ் கிளப், புனே பாலம் ஸ்போர்ட்ஸ் கிளப், தில்லி , உத்தரப் பிரதேச மாநில அணி, ஹரியாணா போலீஸ் அணி, மாதா பெங்களூரு அணி , ஹரியாணா பானிபட் அணி, ஜேப்பியார் கல்லூரி அணி சென்னை, பி.கே.ஆர் கல்லூரி அணி கோபி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்ற 38 அணிகள் விளையாடின. 
இதில் செவ்வாய்க் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மின்னொளியில் இரவுப் போட்டிகளாக நடைபெற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் அணிக்கான இறுதிப் போட்டியில் சென்னை அஞ்சல் துறை அணியும், சென்னை வருமானவரித் துறை அணியும் விளையாடின. இதில் சென்னை வருமானவரித் துறை அணி 31-க்கு 25 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் ஹைதராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும், ஹரியாணா எஸ்.எஸ்.பி. அணியும் விளையாடியதில் இரு அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்ததால் கோல்டன் ரைடு முறையில் ஹரியாணா எஸ்.எஸ்.பி.அணி முதலிடத்தை பிடித்தது. 
வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு ரூ.2 லட்சம், பெண்கள் அணிக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் பரிசுக்கோப்பைகளும் வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் பிடித்த பி.பி.சி.எல் மற்றும் தமிழ்நாடு போலீஸ் அணிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. பெண்கள் அணி பிரிவில் மும்பை வெஸ்டன் ரயில்வே, சென்ட்ரல் ரயில்வே அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/20/திருச்செங்கோட்டில்-அகில-இந்திய-சூப்பர்-ஏ-கிரேடு-கபடி-போட்டிசென்னை-வருமானவரித்துறை-அணி-வெற்றி-3079689.html
3079281 தருமபுரி நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜன.25-க்கு ஒத்திவைப்பு DIN DIN Saturday, January 19, 2019 10:18 AM +0530 கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி பதிவுகளைப் பார்வையிட்ட திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர்,  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 6 பேரை அடையாளம் காட்டி உறுதி செய்தார்.  இதையடுத்து,  வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை,   நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி  சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.   கோகுல்ராஜ் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன்,  கோகுல்ராஜ் கல்லூரி தோழி சுவாதி,  அவரது தாய் செல்வி  உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,   அவரது கார் ஓட்டுநர் அருண் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
  திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த நிலையில்,   3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை அன்றும் நீதிமன்றத்தில் ஆஜரானார். 
 அப்போது கோகுல்ராஜை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் இருந்து சிலர் அழைத்துச் செல்வது போன்ற சிசிடிவி பதிவுகள் அவருக்கு போட்டுக் காட்டப்பட்டது.  அந்தப் பதிவுகளில் இருப்பவர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ்,  அவருடைய கார் ஓட்டுநர் அருண், ரவி என்ற ஸ்ரீதர், சுரேஷ், ரஞ்சித், சிவக்குமார் ஆகிய 6 பேர் என்பதை அடையாளம் காட்டினார்.
 இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் உத்தரவிட்டார்.  அன்று யுவராஜ் தரப்பு வழக்குரைஞர்,  கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/கோகுல்ராஜ்-கொலை-வழக்கு-ஜன25-க்கு-ஒத்திவைப்பு-3079281.html
3079280 தருமபுரி நாமக்கல் பைக் சாலையில் கவிழ்ந்து விபத்து: தாய், மகள் பலி DIN DIN Saturday, January 19, 2019 10:18 AM +0530 மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் தாய், மகள் உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வளப்பூர்நாடு, பள்ளத்துவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் (35).  இவர் அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி சசிகலா (29),  மகள் இந்துஜா(12).  இவர் நாமக்கல் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 மகளின் படிப்புக்காக,  நாமக்கல்லில் வாடகை வீட்டில் குடியிருந்துவந்த உமாசங்கர்,  பொங்கல் பண்டிகைக்காக கொல்லிமலை சென்றுவிட்டு,  வெள்ளிக்கிழமை பகலில் மோட்டார் சைக்கிளில் மனைவி,  மகளுடன் நாமக்கல் திரும்பினார். 
 சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கி என்ற இடத்தில் வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.  அப்போது எதிரில் வந்த மினி வேன் மோதியது.  இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
 சசிகலா சம்பவ இடத்திலேயும்,  இந்துஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.  உமாசங்கர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/பைக்-சாலையில்-கவிழ்ந்து-விபத்து-தாய்-மகள்-பலி-3079280.html
3079258 தருமபுரி நாமக்கல் விமானப் படையில் ஆள் சேர்ப்பு:  விண்ணப்பிக்க அழைப்பு DIN DIN Saturday, January 19, 2019 10:09 AM +0530 இந்திய விமானப் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   இந்திய விமானப் படையில் பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதி உடையோருக்கு காலிப் பணியிடங்கள் (குரூப் எக்ஸ், ஒய்)அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளம் மூலமே தேர்வுகள் நடத்தப்படுகிறது.  
விருப்பமுள்ளவர்கள் w‌w‌w.​a‌i‌r‌m‌e‌n‌s‌e‌l‌e​c‌t‌i‌o‌n.​c‌d​a​c.‌i‌n அல்லது w‌w‌w.​c​a‌r‌e‌e‌r‌i‌n‌d‌i​a‌n​a‌i‌r‌f‌o‌r​c‌e.​c‌d​a​c.‌i‌n என்ற இணையதளம் மூலம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தேர்வு இணையதளம் மூலம் மார்ச் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19.1.1999 மற்றும் 1.1.2003 தேதிகளுக்கிடையில் பிறந்தவர்களாக, திருமணமாகதவராக இருக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/விமானப்-படையில்-ஆள்-சேர்ப்பு--விண்ணப்பிக்க-அழைப்பு-3079258.html
3079257 தருமபுரி நாமக்கல் குமாரபாளையம் நகர அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Saturday, January 19, 2019 10:09 AM +0530 குமாரபாளையம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
இக்கூட்டத்துக்கு, நகரச் செயலர் சி.உதயராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் பி.பி.சாமிநாதன், மாவட்ட அவைத் தலைவர் நல்லியப்பன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலருமான கே.ஏ.பழனியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். வரும் 23-ல் பரமத்தி வருகை தரும் கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். நகரில் உள்ள 63 வாக்குச்சாவடிகளுக்கும் நிர்வாகிகள் நியமித்து தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
நகரப் பொருளாளர் ஜி.சம்பத்குமார், மாவட்டப் பிரதிநிதிகள் எஸ்.ஜி.பி.மனோகரன், பி.ஆர்.ஒபுளிசாமி, நிர்வாகிகள் ஜி.வெள்ளிங்கிரி, வீரேந்திர பிரசாத், வேலுமணி, பூங்கொடி, சாந்தா, சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/குமாரபாளையம்-நகர-அமமுக-நிர்வாகிகள்-ஆலோசனைக்-கூட்டம்-3079257.html
3079256 தருமபுரி நாமக்கல் ராசிபுரத்தில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் DIN DIN Saturday, January 19, 2019 10:08 AM +0530 கம்யூனிஸ்ட்டு தலைவர் ப.ஜீவானந்தம் 57ஆவது நினைவு நாள் ராசிபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப.ஜீவானந்தம் படத்துக்கு மலரஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகர ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் இரா.சரவணன், அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளர் எஸ்.மீனா, தாமரைச்செல்வன், மணிகண்டன், கோபால், பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/ராசிபுரத்தில்-பஜீவானந்தம்-நினைவு-நாள்-3079256.html
3079255 தருமபுரி நாமக்கல் இன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் DIN DIN Saturday, January 19, 2019 10:08 AM +0530 வருவாய் வட்டங்கள்தோறும் தேர்வு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் வட்டங்கள் தோறும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி ஜனவரி மாதத்துக்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நாமக்கல் வட்டம், கொண்டிசெட்டிப்பட்டி, சேந்தமங்கலம் வட்டத்தில் கூலிப்பட்டி,  ராசிபுரம் வட்டத்தில் சிங்களாந்தபுரம், கொல்லிமலை வட்டத்தில் காரமனிகாடு, மோகனூர் வட்டத்தில் ஒருவந்தூர், திருச்செங்கோடு வட்டத்தில் எட்டிமடைபுதூர்,  குமாரபாளையம் வட்டத்தில் ஓலப்பாளையம்,  பரமத்தி வேலூர் வட்டத்தில் புஞ்சை இடையார் ஆகிய 8 நியாய விலைக் கடைகளில் வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.  
இதில் பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
மேலும் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் கடைகளில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் குறித்தும் தெரிவித்தால் விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/இன்று-பொதுவிநியோக-திட்ட-குறைதீர்-முகாம்-3079255.html
3079254 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோட்டில் கழிவுநீர் தேக்கம்: சுகாதார சீர்கேடு அபாயம் DIN DIN Saturday, January 19, 2019 10:08 AM +0530 திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 16ஆவது வார்டு சட்டையம்புதூர்  பகுதியில் நகராட்சி கழிப்பறை சுகாதார வளாகத்தில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேட்டினை உருவாக்கி
வருகிறது.
சந்தைப்பேட்டையையொட்டி நகராட்சி நிர்வாகத்தில் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறையை நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வெட்டப்பட்ட குழிக்குள் விடப்படுகிறது. இவ்வாறு தேக்கப்படும் கழுவு நீரினால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்தப் பகுதியில் மாரியம்மன் கோயில், மின்சார வாரிய அலுவலகம், கடைகள் இருப்பதால் துர்நாற்றத்தினால் அவதிப்படுகின்றனர். தேக்கி வைக்கும் கழிப்பறை கழிவுநீரினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், கழிப்பறை சுகாதார வளாகத்தில் இருந்து குழாய் அமைத்து  கழிவு நீர் கால்வாய்க்குள் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/திருச்செங்கோட்டில்-கழிவுநீர்-தேக்கம்-சுகாதார-சீர்கேடு-அபாயம்-3079254.html
3079253 தருமபுரி நாமக்கல் சாலையில் அறிவிப்பு பலகை வைக்கக் கோரிக்கை DIN DIN Saturday, January 19, 2019 10:07 AM +0530 பரமத்திவேலூரில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையையும், கரூரில் இருந்து வேலூர் நகர் பகுதிக்கு வரும் பிரிவு சாலையையும் முறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாராணசி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பரமத்தி வேலூரை கடந்து காவிரி ஆற்றின் இரு பாலங்களையும் கடந்து செல்கிறது. வேலூர் நகர் பகுதியில் இருந்து கரூர் செல்லும் தொழிலாளர்,மாணவ,மாணவியர்கள் மற்றும் பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு செல்வோர் காவிரி பாலம் அருகே பிரிவு சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றனர். அதேபோல, கரூரில் இருந்து காவிரி பாலம் வழியாக வேலூர் வருவோர் அணுகு சாலை வழியாக வேலூர் நகர் பகுதிக்கு வருகின்றனர். இந்த சாலை சந்திப்புகளில் முறையாக அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படாததால், வேலூரில் இருந்து கரூர் நோக்கி செல்வோர் சிலர் பாதை மாறி கரூரில் இருந்து வேலூர் நோக்கி வரும் அணுகு சாலை வழியாக சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் செல்லும் சாலையைக் கடந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக அறிவிப்பு பலகை அமைத்தும், வேலூர் நகர் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள் திசை மாறிப் போகாமல் இருக்கத் தடுப்புகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/சாலையில்-அறிவிப்பு-பலகை-வைக்கக்-கோரிக்கை-3079253.html
3079252 தருமபுரி நாமக்கல் தற்கொலை மிரட்டல்: முன்னாள் படை வீரர் மீட்பு DIN DIN Saturday, January 19, 2019 10:07 AM +0530 தற்கொலை செய்து கொள்ளப் போவதாக உறவினருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு நாமக்கல் மலைக்கோட்டை மீது ஏறி அமர்ந்திருந்த முன்னாள் படை வீரரை போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்டனர். 
நாமக்கல் மாவட்டம், எருமபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (49). முன்னாள் படை வீரரான இவர் வெள்ளிக்கிழமை காலை தனது உறவினரான காவல் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தான் நாமக்கல் மலைக்கோட்டையின் மேல் அமர்ந்திருப்பதாகவும், சற்று நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் அனுப்பியுள்ளார். 
இதையடுத்து நாமக்கல் போலீஸார், தீயணைப்புப் படையினர் உடனடியாக நாமக்கல் மலைக்கோட்டை மீது ஏறி, அங்கு கோட்டையின் உள்ளே அமர்ந்திருந்த நந்தகோபாலை கீழே அழைத்து வந்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது, நந்தகோபால் தனது ஊரான எருமபட்டியில் வீடு கட்டத் திட்டமிட்டு அதற்கு முயற்சி செய்துவந்துள்ளார். ஆனால் இவரது மனைவி வித்யா (43). தனது பெற்றோர் ஊரான கோவையில் வீடு கட்ட வேண்டும் எனக் கூறினாராம், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. 
இதனால் மன வேதனை அடைந்த நந்தகோபால், நாமக்கல் மலைக்கோட்டையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக காவல் துறையில் பணியாற்றும் தனது உறவினருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/தற்கொலை-மிரட்டல்-முன்னாள்-படை-வீரர்-மீட்பு-3079252.html
3079251 தருமபுரி நாமக்கல் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு DIN DIN Saturday, January 19, 2019 10:07 AM +0530 நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. 
 கல்லூரி தாளாளர் பொ. செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ரா நந்தினி பாபு, நிர்வாக இயக்குநர் கி.சி அருள்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். துணை முதல்வர்கள் கே.கே.கவிதா,  ப.தாமரைச்செல்வன்,  கி.குணசேகரன் புலன்முதன்மையர் எழிலரசு மற்றும் பத்மநாதன் ஆகியோர் பேசினர். 
 சிறப்பு விருந்தினர்களாக கோவை பி.எஸ்.ஜி கல்லூரி உதவிப்பேராசிரியர் ஆர்.சுவாமிநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்   கே.ஜெயராமன் ஆகியோர் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் என்ற தலைப்பில் பேசினர்.  
 கருத்தரங்கு ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் செய்தனர். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் து.முரளிதரன் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/தனியார்-கல்லூரியில்-கருத்தரங்கு-3079251.html
3079250 தருமபுரி நாமக்கல் ஜனவரி 19 மின் தடை DIN DIN Saturday, January 19, 2019 10:06 AM +0530 பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக  (ஜன.19) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்தார்.
மின் நிறுத்தப் பகுதிகள்: வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/ஜனவரி-19-மின்-தடை-3079250.html
3079249 தருமபுரி நாமக்கல் ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, January 19, 2019 10:06 AM +0530 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்வதைக் கண்டித்து நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.பூபதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கே.எஸ்.பாலகிருஷ்ணன், ஜெகதீசன், ராஜேந்திர பிரசாத் முன்னிலை வகித்தனர்.  ஒருங்கிணைப்பாளர் ரா.ரவீந்திரன் வரவேற்றார்.  
உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்ணாதுரை, முருகசெல்வராஜ், லோகநாதன், குணசேகரன், தமிழ்மணி, முருகேசன், கலைச்செல்வன், மாதேஸ்வரன் ஆகியோர் பேசினர்.  
பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாகப் பணிமாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். 
  3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம் மற்றும் 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.  ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/ஆசிரியர்களை-அங்கன்வாடி-மையங்களுக்கு-இடமாற்றம்-செய்ய-எதிர்ப்பு-ஜாக்டோ-ஜியோ-ஆர்ப்பாட்டம்-3079249.html
3079248 தருமபுரி நாமக்கல் பொங்கல் விழாவில் புதுமாதிரியாக கோழிக்கட்டு விளையாட்டு DIN DIN Saturday, January 19, 2019 10:06 AM +0530 திருச்செங்கோடு நந்தவனம் தெரு பொங்கல் விழாவில் புதுமாதிரியான கோழிக்கட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கோழிக்கட்டு போட்டியானது ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவர். போட்டியில் ஒரு கயிறு அந்தப் போட்டியாளரின் காலில் கட்டப்படும். அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வட்டத்தைவிட்டு வெளியேறாமல் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதும், கயிற்றை கையில் பிடித்தோ, காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது நிபந்தனை. சீறிவரும் காளையைப் பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக் கொண்டு கோழியைப் பிடிப்பது கோழிக்கட்டு போட்டி என விழா குழுவினர் தெரிவித்தனர்.  இந்தப் போட்டியில் பெண்கள், சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி குறித்து புவனேஸ்வரி என்பவர் கூறும்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள், இக்கோழிக்கட்டுப் போட்டியில் பெண்கள், சிறுமிகள் பங்கேற்கும் வகையில் நடத்தியது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதை ஒரு விதத்தில் நவீன ஜல்லிக்கட்டு என்று எங்களுக்கு கூறத் தோன்றுகிறது எனத் தெரிவித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/பொங்கல்-விழாவில்-புதுமாதிரியாக-கோழிக்கட்டு-விளையாட்டு-3079248.html
3079247 தருமபுரி நாமக்கல் வெற்றிலை விலை உயர்வு DIN DIN Saturday, January 19, 2019 10:05 AM +0530 பரமத்திவேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வரத்துக் குறைந்ததால் வெற்றிலையின் விலை உயர்வடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம்,பொத்தனூர்,வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம்,நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம்,கேரளம்,குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.1500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் ரூ. 2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது. வெற்றிலையின் வரத்துக் குறைவால் வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/வெற்றிலை-விலை-உயர்வு-3079247.html
3079246 தருமபுரி நாமக்கல் சிவன் கோயில்களில் பிரதோஷம் DIN DIN Saturday, January 19, 2019 10:05 AM +0530 பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவேலீஸ்வரருக்கும், நந்திகேஷ்வரருக்கும் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல, மாவுரெட்டி பீமேஷ்வரர்,பில்லூர் வீரட்டீஸ்வரர்,கபிலர்மலை சிவபுரம் சிவன், பாண்டமங்கலம் புதிய, பழைய காசி விஸ்வநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/சிவன்-கோயில்களில்-பிரதோஷம்-3079246.html
3079245 தருமபுரி நாமக்கல் பட்டணம் பகுதியில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Saturday, January 19, 2019 10:05 AM +0530 ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.பட்டணம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பட்டணம் பார்க்கவன் கைப்பந்துக் குழு சார்பில் 38-ஆம் ஆண்டாக நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டப் போட்டி, பெண்களுக்கான குண்டு எறிதல், வடம் இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஆண்களுக்கான கபடி போட்டியில் உள்ளூர் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு விளையாடினர். 
விழாவின் முடிவில் பொறியாளர் என்.மாணிக்கம், தொழிலதிபர் பி.என்.ஆர்.கண்ணண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பார்க்கவன் கைப்பந்துக் குழுவினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/பட்டணம்-பகுதியில்-பொங்கல்-விளையாட்டுப்-போட்டிகள்-3079245.html
3079244 தருமபுரி நாமக்கல் ராசிபுரம் வள்ளலார் கோயிலில் ஜன.21-இல் தைப்பூச விழா DIN DIN Saturday, January 19, 2019 10:05 AM +0530 ராசிபுரம் வள்ளலார் கோயிலில் ஜனவரி 21-இல் 43-ஆம் ஆண்டு தைப்பூச அன்னதான விழா நடைபெறுகிறது. 
இதையொட்டி ஜனவரி 20-இல் வள்ளலார் திருஉருவப் படத்துடன் ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜனவரி 21-இல் அகவல்பாராயணம்,  சன்மார்க்க கொடியேற்றுதல், ஆன்மிக சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் போன்றவை நடைபெறும். 
இதேபோல, கூனவேலம்பட்டிபுதூர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் 80-ம் ஆண்டு தைப்பூச விழா நடைபெறுகிறது. இதையொட்டி பாராயணம், அபிஷேகம், அன்னதானம், ஊர்வலம் நடைபெறும். மேலும், ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னதியில் தைப்பூச அன்னதான விழா நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/19/ராசிபுரம்-வள்ளலார்-கோயிலில்-ஜன21-இல்-தைப்பூச-விழா-3079244.html
3078615 தருமபுரி நாமக்கல் நாளை பொட்டிரெட்டிபட்டி ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, January 18, 2019 08:51 AM +0530 பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.  இதையடுத்து போட்டி நடைபெறும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டம்,  சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.  இந்தப் போட்டியில் 400 ஜல்லிக்கட்டு காளைகளும்,  300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து,  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, சார்- ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது,  ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் நிலத்தில் பரப்பப்பட வேண்டும் என்றும்,  தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும்,  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளைச் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில், துணை காவல் கண்காணிப்பாளர் பெ.கு. ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் வி.பி. பொன்னுவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி. சீனிவாசன், வட்டாட்சியர் சு. பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/நாளை-பொட்டிரெட்டிபட்டி-ஜல்லிக்கட்டு-ஆட்சியர்-ஆய்வு-3078615.html
3078603 தருமபுரி நாமக்கல் ராசிபுரம், பரமத்தி வேலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா DIN DIN Friday, January 18, 2019 08:47 AM +0530 ராசிபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் 102 - வது பிறந்தநாள் விழா நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் 27 -வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டன. பின்னர் பயனாளிகளுக்கு, வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில் நகர நிர்வாகிகள் ஆர்.கோபால், எஸ்.வெங்கடாஜலம், வி.கே.ஆர்.கே. ராமசாமி, ஆர்.எஸ்.ரங்கசாமி, ராதாசந்திரசேகரன், எஸ்.பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமமுக: இதேபோல் ராசிபுரம் நகரம், வெண்ணந்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 27 வார்டுகளிலும் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர அமமுக செயலர் வி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் பி. சம்பத்குமார் பங்கேற்று, கொடியேற்றி பேசினார்.
இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் வி.திருப்பதி, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ஏ.பி.பழனிவேல், மாநில வர்த்தக அணி இணைச் செயலர் கே.ஆர். நல்லியப்பன், வெண்ணந்தூர் ஒன்றியச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமமுக-வினருக்கு அனுமதி மறுப்பு
பாண்டமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு சேவல்கட்டு மூலை பகுதியில் அமமுக மாவட்டச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அவர்களை கபிலர்மலை அதிமுக- ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுக-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அ.ம.மு.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பதாக கூச்சலிட்டதையடுத்து அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
தகவல் அறிந்துவந்த பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால்  அமமுக-வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு கீழே அவரது  உருவப் படத்தை நாற்காலியில் வைத்து மாலை அணிவித்துச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/ராசிபுரம்-பரமத்தி-வேலூரில்-எம்ஜிஆர்-பிறந்த-நாள்-விழா-3078603.html
3078602 தருமபுரி நாமக்கல் தலைக்கவசம் விழிப்புணர்வு: கரும்பு வழங்கி போலீஸார் அறிவுரை DIN DIN Friday, January 18, 2019 08:46 AM +0530 தலைக்கவசம் அணிய வலியுறுத்தி நாமக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் பொங்கல் கரும்பு வழங்கி அறிவுறுத்தினர்.
நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, நாமக்கல் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் நாமக்கல் நகரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வியாழக்கிழமை காலை பொங்கல் கரும்பு வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். நாமக்கல் பேருந்து நிலையம், பூங்கா சாலை, அண்ணா சிலை, சேலம் பிரிவு சாலை, உழவர்சந்தை ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குக் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும் அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தி அவர்களுக்கு கரும்பு வழங்கினர். அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களையும் நிறுத்தி விபத்து குறித்து அறிவுறுத்தி சீட்பெல்ட் அணிய செய்து பொங்கல் கரும்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/தலைக்கவசம்-விழிப்புணர்வு-கரும்பு-வழங்கி-போலீஸார்-அறிவுரை-3078602.html
3078601 தருமபுரி நாமக்கல் பேளுக்குறிச்சியில் எம்ஜிஆர் சிலை: எம்எல்ஏ திறந்துவைத்தார் DIN DIN Friday, January 18, 2019 08:46 AM +0530 பேளுக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 அடி உயர எம்ஜிஆர் சிலையை சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்எல்ஏ சி. சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, துத்திக்குளம், காளப்பநாயக்கன்பட்டி, வெட்டுக்காடு, மலைவேப்பங்குட்டை,  பேளுக்குறிச்சி கணவாய்மேடு, நரசிம்மன்புதூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து பேளுக்குறிச்சி காந்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 10 அடி உயர எம்ஜிஆர் சிலையை எம்எல்ஏ திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பேளுக்குறிச்சி ஊராட்சி கழக செயலர் ராமசாமி, சேந்தமங்கலம் பேரூர் கழக செயலர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/பேளுக்குறிச்சியில்-எம்ஜிஆர்-சிலை-எம்எல்ஏ-திறந்துவைத்தார்-3078601.html
3078600 தருமபுரி நாமக்கல் அரசுக் கல்லூரியில் திருவள்ளுவர் தின விழா DIN DIN Friday, January 18, 2019 08:46 AM +0530 ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
30-ஆம் ஆண்டாக நடைபெற்ற விழாவில்,  கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை தலைமை வகித்தார். கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளருமான முனைவர் இரா. சிவக்குமார் வரவேற்றார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் முனைவர் சி.ஆர். ரமணிகோபால், இயற்பியல் துறைப் பேராசிரியரும், முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவருமான பெ. துரைசாமி, முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் வி. சந்திரசேகரன், அண்ணாமலை பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் முழு உருவச் சிலைக்கு கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை,  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுதில்லி டெலிகாம் பொதுமேலாளர் பி.ஏ. தங்கவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருக்குறள் வாசிக்கப்பட்டது.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பள்ளிகளான இரா. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ மாணவியர்களிடையே "குறள் காட்டும் சமுதாயம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும்  "இக்கால உலகுக்கு திருக்குறளின் தேவை' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் திருக்குறள் நூல் போன்வற்றை கல்லூரி முதல்வர் சீ. மணிமேகலை, சிறப்பு விருந்தினர் பி.ஏ.தங்கவேலு ஆகியோர் வழங்கினர்.
விழாவில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். முத்துநல்லியப்பன், முன்னாள் மாணவர்கள் ஆர். ரங்கசாமி, கே.சக்திவேல், எம். திருக்குமரன், கே. அசோகன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
முன்னாள் மாணவர் சங்க கட்டட நிதியாக 1998-2001-ல் பயின்ற மாணவர்கள் சார்பில் ரூ. 40 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது.
முனைவர் பி. சக்திவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படையினர்  செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/அரசுக்-கல்லூரியில்-திருவள்ளுவர்-தின-விழா-3078600.html
3078599 தருமபுரி நாமக்கல் மோகனூரில் மாடு பூ தாண்டும் விழா DIN DIN Friday, January 18, 2019 08:46 AM +0530 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூர் அருகே மாடு பூ தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
நாமக்கல் மாவட்டத்தில் வாழவந்திநாடு, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாய்க்கர் சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். அவர்கள் 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்புக் கட்டிய மறுநாள் முதல் ஊர் ஊராகச் சென்று நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.
தொடர்ந்து கோயில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக அந்த சமூகத்தினர் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
விழா மோகனூர் பகுதியில் ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர், நல்லையம்பட்டி, மேலப்பட்டி,  தொட்டிப்பட்டி, மேலப்பட்டி, வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர் மற்றும் தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நடத்திய மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி ஊனாங்கல்பட்டியில் நடந்தது. ஊனாங்கல்பட்டி, சின்னபெத்தாம்பட்டி, குன்னத்தூர், மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி கிராமங்களை  சுவாமி மாடுகள் பங்கேற்றன.
மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடந்தது. அதில் சின்னபெத்தாம்பட்டி சுவாமி மாடு வெற்றி பெற்றது. தொடர்ந்து அந்த ஊர்  கோமாளியை குதிரை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/மோகனூரில்-மாடு-பூ-தாண்டும்-விழா-3078599.html
3078598 தருமபுரி நாமக்கல் விபத்தில் பாதயாத்திரை பக்தர்கள் காயம் DIN DIN Friday, January 18, 2019 08:45 AM +0530 மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூர் அருகே பழனி பாதயாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். 
நாமக்கல் மாவட்டம், கருமனூர் கூத்தம்பாளையத்தைச் சேர்ந்த செல்வகணபதி (28), சதீஷ் (28), ரஞ்சித் (19),  வையப்பமலை மணலி பகுதியைச் சேர்ந்த அம்மணியம்மாள் ஆகியோர் பழனிக்கு பாதயாத்திரையாக  புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனர். அறச்சலூர் அருகே சென்றபோது, எதிரில் வந்த கார் மோதி நால்வரும் பலத்த காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செந்தில் (24) மீது  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/விபத்தில்-பாதயாத்திரை-பக்தர்கள்-காயம்-3078598.html
3078597 தருமபுரி நாமக்கல் அன்பு பாராட்டினால் பிரச்னை ஏற்படாது: எஸ்.பி. DIN DIN Friday, January 18, 2019 08:45 AM +0530 அனைவரிடமும் அன்பு பாராட்டினால் பிரச்னை என்பதே வராது என்றார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பேட்டப்பாளையம் புதுக்காலனியில் பாரதம் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. அதில் சிறுவர், சிறுமியருக்கான நடனம், மாறுவேடம், மாரத்தான், ஆண்களுக்கான சைக்கிள் பந்தயம், பெண்களுக்கு கோலப்போட்டி, சைக்கிள் போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பங்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.  விழாவுக்கு மோகனூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் நவலடி தலைமை வகித்தார். டாக்டர் சந்திரமோகன், மோகனூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குமரவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர்
பேசியது: இரு சக்கர வாகனம் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உள்ளது.  தலைக்கவசம் இல்லை என்றால் வாகனத்தில் ஏறமாட்டேன் என சொன்னால், கணவர்கள் கேட்பர். அதேபோல், குழந்தைகள் சொன்னால், பெற்றோர்கள் கேட்பர். மனிதனால் பார்த்து திருந்தாவிட்டால், மனிதர்கள் மிருகமாவதைத் தடுக்க முடியாது. உங்கள் பிரச்னைக்கு காவல் துறைக்கு வரும் நிலையை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை. இதயத்தை உங்கள் அன்பு என்ற சாவியால் திறந்தால் எந்த பிரச்னையும் வராது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஏற்பாடுகளை மன்ற நிர்வாகி கார்த்திக் உள்ளிட்டோர் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/அன்பு-பாராட்டினால்-பிரச்னை-ஏற்படாது-எஸ்பி-3078597.html
3078596 தருமபுரி நாமக்கல் செளடேஸ்வரியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு DIN DIN Friday, January 18, 2019 08:44 AM +0530 குமாரபாளையம் புதுப்பேட்டை ராஜவீதி, செளடேஸ்வரியம்மன் கோயில் தொட்டு அப்பத் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் தொடங்கிய திருவிளக்கு பூஜையில் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தங்கள் குடும்பம் வளம் பெறவும், உலக நன்மை வேண்டியும் வழிபாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மகா ஜோதி திருவீதி ஊர்வலம் கோயிலில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் முடிவடைந்தது.
ஊர்வலத்தின் முன்னதாக இளைஞர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கத்திபோட்டபடி அணிவகுத்துச் சென்றனர். விழாவை முன்னிட்டு,  மகா குண்டத்துக்கு அக்னி போடுதல் மற்றும் பூ மிதித்தல் ஆகியவை நடைபெறுகின்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/செளடேஸ்வரியம்மன்-கோயிலில்-திருவிளக்கு-வழிபாடு-3078596.html
3078595 தருமபுரி நாமக்கல் இன்று நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, January 18, 2019 08:44 AM +0530 இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து,  ஜாக்டோ-ஜியோ சார்பில் நாமக்கல்லில்  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு. ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். ரவீந்திரன், ஜெகதீசன், மதியழகன் முன்னிலை வகித்தனர்.
ரா.செல்வகுமார் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் செ. முத்துசாமி, பொதுச் செயலர் க. செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாகப் பணிமாற்றம் செய்யும் ஆசிரியர் விரோத செயல்பாட்டை கைவிட வேண்டும். 
 3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம், 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதாக உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/இன்று-நாமக்கல்லில்-ஜாக்டோ-ஜியோ-சார்பில்-ஆர்ப்பாட்டம்-3078595.html
3078594 தருமபுரி நாமக்கல் ஜேடர்பாளையம் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் DIN DIN Friday, January 18, 2019 08:44 AM +0530 ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து காணும் பொங்கலைக் கொண்டாடினர். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் இப் பூங்கா உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் அண்ணா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளது. இப் படுகையணை மற்றும் அண்ணா பூங்காவை பார்ப்பதற்காக நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினங்களில் வந்து செல்வது வழக்கம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படுகையணை பகுதிக்குச் சென்று பார்த்து ரசிப்பது மட்டுமல்லாது, ராஜா வாய்க்கால் பகுதியில் குளித்தும், அங்கு உயிருடன் பிடித்த பல்வேறு வகையான மீன்களை சுவைத்தும் செல்கின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படுகையணை பகுதிக்கும், அண்ணா பூங்காவுக்கும் வந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.
ஆனால் அண்ணா பூங்கா முழுமையாகப் பராமரிக்கப்படாமலும், படகு இல்லம் செயல்படாமல் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பொதுப்பணித் துறை மூலம் மீன்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக படுகை அணை, ராஜா வாய்க்கால், அண்ணா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/ஜேடர்பாளையம்-அண்ணா-பூங்காவில்-சுற்றுலாப்-பயணிகள்-குவிந்தனர்-3078594.html
3078593 தருமபுரி நாமக்கல் எம்ஜிஆர் பிறந்த நாள்: வாழ்த்து பதாகை சேதம் DIN DIN Friday, January 18, 2019 08:43 AM +0530 எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சேந்தமங்கலத்தில் அதிமுகவினர் வைத்திருந்த பதாகையை சேதப்படுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வண்டிக்கடை பகுதியில் 7-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் பதாகைகளை புதன்கிழமை இரவு வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பார்த்தபோது அந்த பதாகைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அங்கு கூடிய அதிமுகவினர் பதாகைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பதாகையை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/எம்ஜிஆர்-பிறந்த-நாள்-வாழ்த்து-பதாகை-சேதம்-3078593.html
3078592 தருமபுரி நாமக்கல் சித்தி விநாயகர், சக்தி பகவதி கோயில் திருவிழா DIN DIN Friday, January 18, 2019 08:43 AM +0530 நாமக்கல் சித்தி விநாயகர், சக்தி பகவதி கோயில் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாமக்கல் ராமாபுரம் புதூர் சாலை, குட்டை மேலத் தெருவில் அமைந்துள்ள சித்தி விநாயகர், சக்தி பகவதி கோயில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். அதேபோல் நிகழாண்டு கடந்த 15-ஆம் தேதி இரவு நாமக்கல் கோட்டை முனியப்பன் சக்தி வேலுடன் கமலாலயத்தில் இருந்து மகாசக்தி கரகம் அழைத்துவரப்பட்டது. புதன்கிழமை சக்தி கரகம், அக்னி கரத்துடன் திருவீதி உலாசென்று இரவு தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு  மகாசக்தி  கரகத்தை கமலாலயத்தில் விடப்பட்டு, முனியப்பன் சக்திவேலை கோட்டையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை குட்டை மேலத் தெரு விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/18/சித்தி-விநாயகர்-சக்தி-பகவதி-கோயில்-திருவிழா-3078592.html
3078004 தருமபுரி நாமக்கல் காந்தியடிகளை "மகாத்மா' என அடையாளப்படுத்தியவர் தமிழர்: த.ஸ்டாலின் குணசேகரன் DIN DIN Thursday, January 17, 2019 08:48 AM +0530 சுதேசமித்ரன் இதழின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தான், காந்தியடிகளை "மகாத்மா' என அடையாளப்படுத்தினார் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி சார்பில், அண்ணலின் அடிச்சுவட்டில் எனும் காந்திய பேருந்துப் பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்கள், மதுரை காந்தி அருங்காட்சியக பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. வேங்கடரமணா தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் வந்தனர்.
மகாத்மா காந்தி இந்த ஆஸ்ரமத்துக்கு வந்த போது தங்கிய இடம், அவர் ஆஸ்ரமத்தில் உள்ள நோட்டில் எழுதிய குறிப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து, ஆஸ்ரமத்தில் நடைபெற்று வரும் வேப்பம் புண்ணாக்கு, மெத்தை தயாரிப்பு உள்ளிட்ட அலகுகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரம தலைவர் எ.தேவராஜ், செயலர் எம்.குமார், பொருளாளர் கே.சிதம்பரம் ஆகியோர் ஆஸ்ரமத்தை சுற்றிக்காட்டி, ஆஸ்ரமத்தை தோற்றுவித்த ராஜாஜி குறித்தும், அவர் ஆஸ்ரமத்தை தொடங்கக் காரணம் குறித்தும் மாணவர்களிடையே பேசினர். 
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியது: உலகத் தலைவர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் மகாத்மா காந்திடிகள். அவர், 24 வயதில் இளம் பாரிஸ்டராக வழக்குரைஞர் தொழில் செய்ய 1893-ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் தென்னப்பிரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் சென்றார்.
அதே ஆண்டு, அதே பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமாக அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் நடைபெறும் சர்வமத சபை மாநாட்டில் கலந்துகொள்வற்காக புறப்பட்டார் 30 வயது இந்திய இளைஞர் வீரத்துறவி விவேகானந்தர். 
வெளிநாடு சென்ற இந்த இரண்டு இளைஞர்களுமே, இருவேறு துறைகளில் இந்தியாவின் அடையாளங்களாகவே கருதப்படத்தக்க அளவில் உயர்ந்தனர்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாலசுந்தரம் என்ற தமிழர் ஆங்கிலேய எஜமானன் தன்னை தாக்கியதை எதிர்த்து காந்தியிடம் வழக்கு கொடுக்க வந்தார்.
நிறவெறிகொண்ட ஆங்கிலேயருக்கு எதிராக பாலசுந்தரத்தின் சார்பில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்த பாலசுந்தரம் என்ற தமிழர் தான், சாதாரண வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த தனக்கு, இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் படும் இன்னல்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு காரணமாக இருந்தவர் என்ற கருத்தை பலமுறை குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள். 
16 வயது மாணவியாக இருந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழ்ப் பெண், காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றதும், சிறையில் உடல் நலிவுற்று பின்னர் விடுதலையாகி இளம் வயதிலேயே மரணமடைந்ததும் காந்தியடிகளை மிகவும் மனதளவில் பாதித்த சம்பவமாகும்.
இவர்களோடு நாகப்பன், நாராயணசாமி, செல்வன், சூசை, பச்சையப்பன் உள்ளிட்ட சில தமிழர்களும் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற வெள்ளை நிறவெறி ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தில் இறங்கி உயிர்ப்பலி கொடுத்தனர்.
காந்தியடிகளின் களப் போராட்டத்துக்கு கரம் கொடுத்த தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் தியாகம்தான், தமிழர்கள் மீது கடைசி வரை காந்தியடிகளை தனிக் கரிசனம் கொள்ள வைத்தது. 
தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக காந்தியடிகள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்த காலக் கட்டத்திலேயே, தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த சுதேசமித்ரன் இதழில் தலையங்கம் எழுதிய அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், காந்தியடிகளை "மகாத்மா' என குறிப்பிட்டார்.
காந்தியடிகள் இந்தியாவுக்கு 1915-இல் திரும்புவதற்கு முன்பே "மகாத்மா' என்று ஒரு தமிழரால் அடையாளப்படுத்தப்பட்டது, தமிழர்களின் தீர்க்க தரிசனப் பார்வைக்கு ஓர் உதாரணமாகும். அதன்பின்னர் பாரதி, தாகூர் போன்ற கவிவேந்தர்கள் காந்தியடிகளை "மகாத்மா' என்று அழைத்தும், குறிப்பிட்டும் மகிழ்ந்தனர்.
1915-ஆம் ஆண்டு காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தபோது, சென்னை ரயில் நிலையத்துக்கு சென்று காந்தியடிகளையும், கஸ்தூரிபா காந்தியையும் வரவேற்ற கல்லூரி மாணவர்கள், அவரை அழைத்துச்செல்வதற்காக ரயில் நிலையத்தின் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த சாரட் வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு தாங்களே சாரட் வண்டியை சென்னை நகர வீதிகளில் இழுத்துச் சென்றது ஒரு வரலாற்றுச் செய்தி என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/காந்தியடிகளை-மகாத்மா-என-அடையாளப்படுத்தியவர்-தமிழர்-தஸ்டாலின்-குணசேகரன்-3078004.html
3077990 தருமபுரி நாமக்கல் சாயக்கழிவு நீர் கலப்பால் நிறம் மாறிய கிணற்று நீர்! DIN DIN Thursday, January 17, 2019 08:44 AM +0530 குமாரபாளையத்தில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுக் கிணற்றில் தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
குமாரபாளையம் ஜேகேகே சுந்தரம் நகரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டுள்ளது. மேலும், ரசாயனம் கலந்தது போன்று துர்நாற்றமும் வீசியுள்ளது. அதேபோன்று, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் குழாய்களில் தண்ணீரும் நிறம் மாறி காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுந்தரம் நகர் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சாயப் பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதோடு, நிலத்தடி நீரும் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 
இந்த தண்ணீரை பயன்படுத்தும் போது தோல்நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/சாயக்கழிவு-நீர்-கலப்பால்-நிறம்-மாறிய-கிணற்று-நீர்-3077990.html
3077989 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோட்டில் கபடி போட்டி DIN DIN Thursday, January 17, 2019 08:44 AM +0530 திருச்செங்கோடு தைப்பொங்கல் விழாக் குழு, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கின.
இந்த கபடி போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. பங்குபெறும் அணிகளின் விவரம்: 
ஆண்கள் பிரிவில் மும்பை பாரத் பெட்ரோலியம் நிறுவனம், விஜயா பேங்க் பெங்களூரு, கஸ்டம்ஸ் துறை அணி, பெங்களூரு எம்.இ.ஏ. அணி, பெங்களூரு ரெட் ஆர்மி டெல்லி, எஸ்.எஸ்.பி. போலீஸ் டீம் ஹரியானா, கோவா போலீஸ் அணி, பாண்டிச்சேரி மாநில அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப், சென்னை போஸ்டல் அணி, சென்னை வருமான வரித்துறை அணி, ஈரோடு ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஹரியானா பானிபட் அணி, மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போன்ற அணிகள் விளையாடுகின்றன.
பெண்கள் பிரிவில் கொல்கத்தா அசோக் சங்க் அணி, புனே ஸ்போர்ட்ஸ் கிளப், மத்திய ரயில்வே, மும்பை வெஸ்டன் ரயில்வே, மும்பை எஸ்சிஆர் ரயில்வே, ஹைதராபாத், கோவா போலீஸ் அணி, ஸ்ரீ ஓம் ஸ்போர்ட்ஸ் கிளப், புனே பாலம் ஸ்போர்ட்ஸ் கிளப், டெல்லி, உத்தரப் பிரதேச மாநில அணி ஹரியானா போலீஸ் அணி, மாதா பெங்களூரு அணி,  ஹரியானா பானிபட் அணி, ஜேப்பியார் கல்லூரி அணி, சென்னை பி.கே.ஆர். கல்லூரி அணி, கோபி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்ற அணிகள் விளையாடி வருகின்றன. வெள்ளிக்கிழமை வரை போட்டிகள் நடை
பெறும்.     

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/திருச்செங்கோட்டில்-கபடி-போட்டி-3077989.html
3077988 தருமபுரி நாமக்கல் தூசூரில் மகளிர் வாலிபால் போட்டி DIN DIN Thursday, January 17, 2019 08:43 AM +0530 நாமக்கல் அருகே தூசூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தூசூர் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெறும் இந்த போட்டியை நாமக்கல் சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ்.சக்திவேல் தொடக்கி வைத்தார்.
இதில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி, நெல்லை பிரண்ட்ஸ் அணி, பொள்ளாச்சி புளு ஸ்டார் அணி, கோவை பி.எஸ்.ஜி.ஆர். அணி, சென்னை குயின்மேரீஸ் அணி, ஒசூர் தொன்போஸ்கோ அணி என 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 
சூப்பர் லீக் அடிப்படையில் நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் பரிசை பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ஆவது பரிசை பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம், 3-ஆவது பரிசை பெறும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு கைப்பந்துக் கழக பொதுச் செயலர் சித்தர பாண்டியன் பரிசுகளை வழங்க உள்ளார். இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து சங்க பொருளாளர் அருணகிரி, செயலர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/தூசூரில்-மகளிர்-வாலிபால்-போட்டி-3077988.html
3077987 தருமபுரி நாமக்கல் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது: 37 பவுன் நகை, கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் DIN DIN Thursday, January 17, 2019 08:43 AM +0530 நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 37 பவுன் நகை, கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி காவல் நிலையத்துக்குள்பட்ட வெள்ளாளபாளையம், பாரதி நகரில் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு, வேலூர் காவல் நிலையத்துக்குள்பட்ட படமுடிபாளையம், ஜெ.ஜெ. நகரில் ரவி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு, நாமக்கல் காவல் நிலையத்துக்குள்பட்ட காவேட்டிபட்டி, மகரிஷி நகர் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு, பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்குள்பட்ட சிங்களாந்தபுரம், காந்தி நகர் தங்கவேல் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டார்.
அதன்பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வேலூர் காவிரி பாலம் பகுதியில் வேலூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கரூரில் இருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்றனர். இதையறிந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், திருச்சி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் துரைசாமி (38), அவரது சகோதரர் சோமு (எ) சோமசுந்தரம் (28) மற்றும் மதுரை மாவட்டம், சம்பாகுளம் கே.புதூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரேம்குமார் (30) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், மூன்று பேரும் நாமக்கல், காவேட்டிப்பட்டி, மகரிஷி நகர், பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையம், பாரதிநகர்,வேலூர் அருகே உள்ள படமுடிபாளையம், ஜெ.ஜெ.நகர், பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம் காந்தி நகரில் உள்ள வீடுகளில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைள், கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/திருட்டு-வழக்குகளில்-தொடர்புடைய-3-பேர்-கைது-37-பவுன்-நகை-கார்-இருசக்கர-வாகனங்கள்-பறிமுதல்-3077987.html
3077986 தருமபுரி நாமக்கல் குடும்பத் தகராறில் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Thursday, January 17, 2019 08:43 AM +0530 ராசிபுரம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கணவர், மாமியார், மாமனார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் நடத்தினர். 
பிலிப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சபரீஸ்வரனுக்கும், தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரிக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பொங்கலுக்கு தாய் வீட்டுக்கு போகவேண்டும் என பரமேஸ்வரி கேட்டாராம். இதற்கு கணவன் உள்பட வீட்டில் அனைவரும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பரமேஸ்வரி குருணை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரதட்சணைக்காக பரமேஸ்வரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து சமரசம் பேசி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/குடும்பத்-தகராறில்-பெண்-தற்கொலை-உறவினர்கள்-சாலை-மறியல்-3077986.html
3077985 தருமபுரி நாமக்கல் "கொடநாடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்' DIN DIN Thursday, January 17, 2019 08:42 AM +0530 கொடநாடு காவலாளி  கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக விவசாயப் பிரிவு செயலரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
ராசிபுரம் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் பங்கேற்று பேசியது: கொடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் முதல்வர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு உண்டு. எனவே, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும்.
இந்த குற்றச்சாட்டு தவறாக இருந்தால், குற்றச்சாட்டை கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யக்கூட அரசு முன்வராததால், விவசாயிகள் நெல்களை சாலையோரமும், வீதிகளிலும் கொட்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு, உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார். முன்னதாக, திமுக கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். 
இதேபோல், கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அவர் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடியேற்றினார். இதில் திமுக கிளை நிர்வாகிகள் யுவராஜ், சதீஷ்குமார், மணி, சண்முகம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/கொடநாடு-சம்பவத்தில்-சிபிஐ-விசாரணை-நடத்த-வேண்டும்-3077985.html
3077984 தருமபுரி நாமக்கல் குமாரபாளையம் செளடேஸ்வரியம்மன் கோயில் தொட்டு அப்பத் திருவிழா DIN DIN Thursday, January 17, 2019 08:42 AM +0530 குமாரபாளையம் புதுப்பேட்டை, ராஜவீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரியம்மன் கோயிலில் தொட்டு அப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.
21 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த டிச. 14-ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை சக்தி அழைப்பும், செவ்வாய்க்கிழமை சாமுண்டி அழைப்பும் நடைபெற்றது. இதையடுத்து, திருவீதி உலா புதன்கிழமை நடைபெற்றது. 
திருவீதி உலாவை கர்நாடக மாநிலம், ஹம்பி ஸ்ரீகாயத்ரி பீடாதிபதி மகா சமஸ்தான தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீதயானந்தபுரி சுவாமிகள் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், நாள்தோறும் மனமுருகி காயத்ரி மந்திரம் சொல்லி  அம்மனை வணங்கினால், அம்மன் வாழ்வு வளம் பெறும். மனக்கவலைகள் நீங்கி அமைதி பெறும் என்றார்.
கோயிலில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் முடிவடைந்தது.  விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை குத்துவிளக்கு பூஜையும், அன்னதானம் மற்றும் மாலையில் மகாஜோதி திருவிழாவும் நடைபெறுகிறது. ஜன. 18-ஆம் தேதி மகா குண்டம் திருவிழாவும், 19-இல் மஞ்சள் நீராட்டும், வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/குமாரபாளையம்-செளடேஸ்வரியம்மன்-கோயில்-தொட்டு-அப்பத்-திருவிழா-3077984.html
3077983 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோட்டில் ஓட்டுநர் வெட்டிக் கொலை DIN DIN Thursday, January 17, 2019 08:41 AM +0530 திருச்செங்கோட்டில் முன்விரோதம் காரணமாக வாடகை கார் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் சுரேஷ்குமார் (40), மனைவி சசிகலா (33), மகள் தக்சனா(12) உடன் கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
தைப்பொங்கல் திருநாளையும், தனது மகள் பிறந்த நாளையும் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசிக்கும் ஊரான அம்பேத்கர் நகருக்கு வந்துள்ளார். வீட்டில் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்து பூஜை செய்து விட்டு சில பொருள்களை வாங்கி வருவதற்காக தனது காரில் திருச்செங்கோடு சேலம் சாலையில் அவர் சென்றாராம். அப்போது, வேகமாக வந்த மற்றொரு காரில் வந்த கும்பல், அவரது காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதாம். இதில், சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/திருச்செங்கோட்டில்-ஓட்டுநர்-வெட்டிக்-கொலை-3077983.html
3077982 தருமபுரி நாமக்கல் திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் DIN DIN Thursday, January 17, 2019 08:41 AM +0530 ராசிபுரம் திமுக இளைஞரணி சார்பில், சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகர 23-ஆவது வார்டு பகுதியில் நடைபெற்ற விழாவில், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் எம்.கார்த்திக் வரவேற்றார். இதில், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பங்கேற்று, திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். இதில் நகர திமுக துணை செயலர் ரவிச்சந்திரன், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்று விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/திமுக-சார்பில்-சமத்துவப்-பொங்கல்-3077982.html
3077981 தருமபுரி நாமக்கல் மோகனூரில் ரேக்ளா போட்டி: 12 குதிரைகள் பங்கேற்பு DIN DIN Thursday, January 17, 2019 08:41 AM +0530 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 12 குதிரைகள் பங்கேற்றன.
மோகனூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, பொங்கல் விளையாட்டு விழா செவவாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற உள்ளூர் ரேக்ளா குதிரைப் போட்டிக்கு நகரச் செயலர் தங்கமுத்து தலைமை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி போட்டியை தொடக்கி வைத்தார். மோகனூரில் தொடங்கி ராமநாயக்கன்பாளையம் வரை 7 கி.மீ. தொலைவு சென்று வரும் வகையில், போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 12  உள்ளூர் குதிரைகள் பங்கேற்றன.
பள்ளப்பட்டியார் வேலுசாமி குதிரை முதல் பரிசும், மோகனூர் நாவலடியான் கருப்பண்ணசுவாமி குதிரை இரண்டாம் பரிசும், கார்த்திக் குதிரை மூன்றாம் பரிசும் பெற்றன.
வெற்றிபெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,500, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,500 பரிசு மற்றும் கோப்பையை அமைச்சர் தங்கமணி வழங்கினார். எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஒன்றியச் செயலர் கருப்பண்ணன், முன்னாள் நகரச் செயலர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/மோகனூரில்-ரேக்ளா-போட்டி-12-குதிரைகள்-பங்கேற்பு-3077981.html
3077980 தருமபுரி நாமக்கல் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி: ஒருவர் கைது DIN DIN Thursday, January 17, 2019 08:40 AM +0530 ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.12 லட்சம் ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் நீலாம்பாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ஜீவானந்தம் (25), பி.இ. பட்டதாரி. இவருடன் பயின்ற ஈரோடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் தந்தை சிவாஜி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கோகுல் என்பவருக்கு சென்னையைச் சேர்ந்த மெய்யநாதன் என்பவர் ரயில்வே துறையில் வேலைவாங்கி தந்துள்ளார் என மெய்யநாதனை ஜீவானந்தத்துக்கு தொலைபேசியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து, ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் வேலை வேண்டும் என்றால் ரூ.12 லட்சம் செலவாகும் என மெய்யநாதன் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜீவானந்தம், கடந்த 23.6.2016-இல் புதுசத்திரத்துக்கு நேரில் வந்த மெய்யநாதனிடம் முதல் தவணையாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இதன் பின் 15.7.2016-இல் தற்காலிக நியமன ஆணை வந்ததையடுத்து 16.7.2016-இல் 2-ஆவது தவணையாக ரூ.3 லட்சத்தை சிவாஜி, மெய்யநாதன் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். 
இதன் பின்னர் ஒடிசா மாநிலம், பேலாசூர் ரயில்நிலையத்தில் பயிற்சி முடிக்க வேண்டும் எனக் கூறி, ஜீவானந்தத்தை அங்கு அழைத்துச் சென்று, ஒரு வாரம் டிக்கெட் வழங்கும் பயிற்சியை மெய்யநாதன் அளித்துள்ளார். 
இதனையடுத்து 3-ஆவது தவணையாக ஜீவானந்தம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வேலை கிடைத்து விட்டதால், இறுதி தவணையாக ரூ.2 லட்சம் கேட்டு மெய்யநாதன் பெற்றுள்ளார். பின்னர், ஒருவார பயிற்சி முடிந்துவிட்டதால், நிரந்தர நியமனத்துக்கான பணி ஆணை வீட்டுக்கு வரும் அதுவரை காத்திருக்கும்படி கூறி, ஜீவானந்தத்தை ஊருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆனால், பல நாள்கள் காத்திருந்த ஜீவானந்தம் நியமன ஆணை வராததால், பல முறை தொடர்பு கொண்டும்  மெய்யநாதனை தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  ஜீவானந்தம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மெய்யநாதன், ஈரோடு சிவாஜி ஆகியோர் மீது புகார் கொடுத்தார். இதனை விசாரித்த காவல் துறையினர் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை மெய்யநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிவாஜியை தேடிவருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/ரயில்வே-துறையில்-வேலை-வாங்கித்-தருவதாகக்-கூறிரூ12-லட்சம்-மோசடி-ஒருவர்-கைது-3077980.html
3077979 தருமபுரி நாமக்கல் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் DIN DIN Thursday, January 17, 2019 08:40 AM +0530 திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் தினம் மோகனூரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலர் கண்ணன், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் சுரேஷ்ராஜ், உறுப்பினர்கள் சிவசண்முகம், வழக்குரைஞர் மாதேஸ்வரன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொல்லிமலை செங்காட்டுப்பட்டி கிராமத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், திருவள்ளுவர் 2050-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கூட்டமைப்பு மாவட்டச் செயலர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.ஆ.உதயகுமார் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருக்குறள் ராசா, ஆசிரியர் கார்த்திகேயன், சத்தியநாராயணன், ஓய்வுபெற்ற ஆசிரியர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/திருவள்ளுவர்-தினம்-கொண்டாட்டம்-3077979.html
3077978 தருமபுரி நாமக்கல் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி வழங்குவர்: அமைச்சர் பி.தங்கமணி DIN DIN Thursday, January 17, 2019 08:40 AM +0530 பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி வழங்குவர் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி. 
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது: வல்லூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் முழு உற்பத்தியும் தொடங்கிவிடும். ஏற்கெனவே கூறியதுபோல தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு கிடையாது. சில நாள்களாக 1,500 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருந்தது. புதன்கிழமை முதல் முழுமையாக 1,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
 தமிழக முதல்வர் பொங்கல் பரிசாக ரூ.1,000 கொடுத்தது, அனைத்து தரப்பு மக்களிடமும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார். அது சம்பந்தமாக அதிமுக சார்பில், முதல்வர் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது என்ற புகாரை துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார்.
இது முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தப்படும் நாடகமே ஒழிய, அதில் கடுகளவும் உண்மை இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சட்டத்தின் வாயிலாக நீதி கிடைப்பதற்கு காலதாமதமானாலும் கூட, விரைவில் வரும் மக்களவைத் தேர்தலில் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் நீதி வழங்குவர் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/பொய்-பிரசாரம்-செய்பவர்களுக்கு-மக்களவைத்-தேர்தலில்-மக்கள்-நீதி-வழங்குவர்-3077978.html
3077977 தருமபுரி நாமக்கல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா DIN DIN Thursday, January 17, 2019 08:39 AM +0530 பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில்  சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வியாழக்கிழமை பாலசுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், வெள்ளிக்கிழமை யானை வாகனத்திலும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 20-ஆம் தேதிஇரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 21-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சுவாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணிய கோயில் திருத்தேர் திருவிழாக் குழுவினர், இந்து அறநிலையத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/கபிலர்மலை-பாலசுப்பிரமணிய-சுவாமி-கோயில்-தைப்பூச-தேர்த்திருவிழா-3077977.html
3077976 தருமபுரி நாமக்கல் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது DIN DIN Thursday, January 17, 2019 08:39 AM +0530 பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே லாரி மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் குட்காவை பரமத்தி போலீஸார் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் உள்பட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசுவுக்கு தடை செய்யப்பட்ட குட்காவை லாரி மூலம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச் சாவடியில் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் ரூ.30 லட்சம் குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கரூர் பகுதியில் குட்கா பொருள்களை பதுக்கி வைக்கும் கிடங்குக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் (43) மற்றும் உடன் வந்த ராஜஸ்தான் மாநிலம், வாகோடா பகுதியைச் சேர்ந்த பாபுலால் (33)  ஆகிய இருவரையும் பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/17/லாரியில்-கடத்தி-வரப்பட்ட-ரூ30-லட்சம்-குட்கா-பறிமுதல்-2-பேர்-கைது-3077976.html
3077358 தருமபுரி நாமக்கல் விலை உயர்வால் செங்கரும்பு விற்பனை மந்தம் DIN DIN Tuesday, January 15, 2019 09:29 AM +0530 பொங்கல் பண்டிகை காலத்தில் விற்பனையாகும் செங்கரும்பு விலை அதிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளது.
உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழ் ஆண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்று பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் நகரில் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.   இதேபோல் மண் பானைகளின் விற்பனையும் சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் சீர்வரிசை கொடுக்க, வீட்டுக்கு பொங்கலிடுவதற்கு உள்ளிட்டவற்றுக்காக அளவிற்கேற்றாற்போல் மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ. 500 முதல் ரூ. 700-க்கும் விற்பனையானது. மஞ்சள் குலைகள் ஒரு ஜோடி ரூ. 40-க்கு விற்பனையானது. 20 பழங்கள் அடங்கிய வாழை சீப் ரூ. 100-க்கும் விற்பனையானது.  மண் பானைகள் ரூ. 50, ரூ. 100, ரூ. 150, ரூ. 200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன.
ஒத்த அடுப்பு ரூ. 150-க்கும், இரட்டை அடுப்பு ரூ. 250-க்கும் விற்பனையானது. மண்ணாலான மூடிகள் ரூ. 50-க்கு விற்பனையானது. கரும்பு வரத்துக் குறைந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை கட்டின் விலையும் ரூ. 1,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலை உயர்வால் கரும்பு வாங்க வரும் மக்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இருப்பினும் நஷ்டத்துக்கு வியாபாரம் செய்ய முடியாது. எங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்குதான் விற்க முடியும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/விலை-உயர்வால்-செங்கரும்பு-விற்பனை-மந்தம்-3077358.html
3077357 தருமபுரி நாமக்கல் பரமத்திவேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,200-க்கு ஏலம் DIN DIN Tuesday, January 15, 2019 09:29 AM +0530 பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ  ரூ. 2,200-க்கு ஏலம்போனது.
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500-க்கும், முல்லை பூ ரூ. 1,500-க்கும் பெங்களூரு மல்லிகை ரூ. 600-க்கும் சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், அரளி கிலோ ரூ. 200-க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ. 110-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ. 150-க்கும் ஏலம் போனது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,200-க்கும், முல்லை பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் பெங்களூரு மல்லிகை ரூ. 900-க்கும் சம்பங்கி கிலோ ரூ. 200-க்கும், அரளி கிலோ ரூ. 250-க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 150-க்கும்,ரோஜா கிலோ ரூ. 200-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக  பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/பரமத்திவேலூரில்-குண்டு-மல்லிகை-கிலோ-ரூ-2200-க்கு-ஏலம்-3077357.html
3077356 தருமபுரி நாமக்கல் ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் DIN DIN Tuesday, January 15, 2019 09:28 AM +0530 ராசிபுரம் வட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கம் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின்  தலைவர் எஸ். பெரியசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர் டி. கிருஷ்ணன் வரவேற்றார். சங்கச் செயலர் இரா. சேரலநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
எஸ்.மாதவன், எஸ்.துரைசாமி, சிங்காரம், கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற உதவி வணிகவரி அலுவலர் அறிவழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் எதிர்கால நடைமுறை பற்றியும் அரங்கண்ணன், ஈஸ்வரன் பழனிசாமி, மு.வசந்தா, ஜே.எம்.ராமசாமி, சந்திரகேசவன், வி.மோகன், செங்கோட்டுவேல், ருக்மாங்கதன் ஆகியோர் பேசினர்.
உயிரிழந்த சங்க நிர்வாகிகள் தலைவர் ந. சின்னுசாமி, ஆசிரியர் சிற்றம்பலம், எஸ்.சுந்தரம் ஆசிரியர் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கமலை, மகேந்திரன், கந்தசாமி, மணி, சி.ஆறுமுகம், நடேசன் ஆகியோர் பங்கேற்றனர். மணிவண்ணன் தீர்மானங்களை வாசித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/ஓய்வூதியர்கள்-சங்கக்-கூட்டம்-3077356.html
3077355 தருமபுரி நாமக்கல் சாலை விதிகளை சரியாகப் பின்பற்றினால்  விபத்துகளைக் குறைக்க முடியும் DIN DIN Tuesday, January 15, 2019 09:28 AM +0530 சாலை விதிகளை சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் டிரினிடி கலை, அறிவியல் கல்லூரியில் "குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அமைப்பின் சார்பில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தார்.  செயலர் கே. நல்லுசாமி, இயக்குநர் பி. தயாளன், முதல்வர் எம்.ஆர். லட்சுமிநாராயணன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாமக்கல் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்  ஜி. துரை ரங்கநாதன் பங்கேற்றுப் பேசியது:
சாலை விபத்து அதிக அளவில் நடப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.  அதே போல், இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர்.  பாதசாரிகள், பயணிகள், மிதிவண்டி மற்றும் மோட்டார் வாகன ஓட்டிகள் இவர்களில் யாராவது ஒருவர் செய்யும் தவறினால்தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
ஒருவழிப் பாதை பயணம், அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகன ஓட்டுநர்களுக்குப் போதிய பயிற்சி இன்மை, ஓட்டுநர் கவனக் குறைபாடு, வாகனங்கள் அதிகரிப்பு, வாகனப் பராமரிப்பின்மை, சாலை விதிகளை மீறுவது, முறையாக பராமரிக்கப்படாத சாலைகள் போன்றவையே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். சாலை விதிகளை நாம் அனைவரும் சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும்.  தமிழகத்தில் நான்கு வழிச் சாலைகள் அதிகரித்தாலும் அங்கு தான் அதிக விபத்துகளும் நடக்கின்றன.
வாகன ஓட்டிகளுடன் போக்குவரத்து போலீஸாருக்கு எந்த விதமான முன் விரோதமும் கிடையாது. சாலைப் பயணத்தில் மோட்டார் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு ரசீது வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் நிச்சயமாக தலைக் கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கையில் சீட் பெல்ட் அணிய வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் அவர்கள் மேல் போலீஸார் வழக்குப் பதிவு செய்வது கிடையாது.  சாலைப் பயணத்தில் மகளிர் கவனமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம் மகளிர்களுக்கும் மிகவும் அவசியம்.  தலைக்கவசம் விலை மதிப்பில்லாத உயிரை காக்கும் என்றார்.
முன்னதாக இந் நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றப் பொறுப்பாளர் எம்.சசிகலா வரவேற்றார்.  வணிகவியல் துறைத் தலைவர் ஜி. செல்வலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்து காவலர்கள் எஸ். தனசேகரன், எம். கேசவன், பி. பாலு, எம். மகாதேவன்,  கல்லூரி நிர்வாக அலுவலர் என்.எஸ். செந்தில்குமார், டிரினிடி போக்குவரத்து மேலாளர் எஸ். ஜனார்த்தனன்,  வணிகவியல் துறைப் பேராசிரியைகள்,  டிரினிடி கல்லூரி நிறுவனங்களின் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை மாணவி எம். சத்யா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/சாலை-விதிகளை-சரியாகப்-பின்பற்றினால்--விபத்துகளைக்-குறைக்க-முடியும்-3077355.html
3077354 தருமபுரி நாமக்கல் கந்தம்பாளையம் எஸ்.கே.வி.  பள்ளியில் பொங்கல் விழா DIN DIN Tuesday, January 15, 2019 09:28 AM +0530 நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் ரவி பொங்கல் விழாவுக்குத் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் பொங்கலிட்டு கதிரவனை வழிபட்டனர். பின்னர் தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்தும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலாசார உடை அணிந்து கரகாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் நிகழ்த்தினர்.
மேலும் கம்புச்சண்டை, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் மாணவ, மாணவியர் ஈடுபட்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/கந்தம்பாளையம்-எஸ்கேவி--பள்ளியில்-பொங்கல்-விழா-3077354.html
3077353 தருமபுரி நாமக்கல் "பள்ளிபாளையத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்' DIN DIN Tuesday, January 15, 2019 09:27 AM +0530 பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தொடக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிடும் நிகழ்ச்சி மற்றும் அங்கன்வாடி மைய புதிய கட்டடங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு எம்.பி. எஸ். செல்வக்குமார சின்னையன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிட்டு, ரூ. 12.98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களின் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் வெ. பாஸ்கரன், வட்டாட்சியர் ரகுநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராம கிருஷ்ணராஜ், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ். செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் டி.கே. சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, திருச்செங்கோடு டி.சி.எம்.எஸ் தலைவர் கே.திருமூர்த்தி, அரசு வழக்குரைஞர் தனசேகர் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/பள்ளிபாளையத்தில்-ரூ-450-கோடி-மதிப்பில்-வளர்ச்சிப்-பணிகள்-3077353.html
3077352 தருமபுரி நாமக்கல் கல்விதான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும்: அ.கலியமூர்த்தி DIN DIN Tuesday, January 15, 2019 09:26 AM +0530 கல்வி மட்டும்தான் பிறந்த வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என்றார் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அ.கலியமூர்த்தி.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அ. கலியமூர்த்தி பங்கேற்று பொதுத்தேர்வு மற்றும் விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களையும் வழங்கிப் பேசியது:
கல்வியைப்போன்ற உயர்ந்த செல்வம் ஏதுமில்லை, புத்தகத்தின் முன் நீ தலை குனிந்தால், உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுக்கு உணவை கல்வி அளிக்கும்.  ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்ப்பதுதான் கல்வியின் தலையாயக் குறிக்கோள். ஒழுக்கத்தை தராதக் கல்வியும், விளைச்சலைத் தராத வயலும் வீண்.
மாணவர்கள் செல்லிடப்பேசிகளைக் கவனமாக பயன்படுத்திட வேண்டும். இணையதளத்தில் உள்ள செயலிகளால் அதிக தீமைகள் இருக்கின்றன. மாணவர்கள் எதிலும் முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, அறப்பணி என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் கல்வி நிறுவனத்தின் கெளரவ ஆலோசகர் எஸ். ராஜன், தலைவர் ராஜா, துணைத் தலைவர் நல்லையன், செயலர் சிங்காரவேலு, நிர்வாகிகள் ராஜராஜன், ராஜேந்திரன், நல்லாசிரியர் விருதுபெற்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எ.கே. பழனியப்பன்,  மருத்துவர் சந்திரன்,  தலைமை ஆசிரியர் குமாரசாமி,  முதல்வர் எஸ்.எஸ்.சாரதா, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் (பொ) நாகலட்சுமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி,  ஒருங்கிணைப்பாளர் தியோடர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவர்கள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/கல்விதான்-வீட்டையும்-நாட்டையும்-உயர்த்தும்-அகலியமூர்த்தி-3077352.html
3077351 தருமபுரி நாமக்கல் மரவள்ளிக்கிழங்கிலிருந்து பை தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்: செ. நல்லசாமி வலியுறுத்தல் DIN DIN Tuesday, January 15, 2019 09:26 AM +0530 நிகழாண்டில் மரவள்ளிக் கிழங்கு விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் மரவள்ளி விவசாயத்தை பாதுகாக்க அதிலிருந்து பை தயாரிக்கும் தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ. நல்லசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது புதிராக உள்ளது.
பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்தப்படும் சேவல் கட்டு போட்டியை தமிழகத்தில் மீண்டும் அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதனால் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 21-ஆம் தேதி சென்னையில் தடையை மீறி அசுவமேத யாகம் நடத்தப்படும்.
பொங்கல் பரிசு உள்ளிட்ட எந்த இலவசங்களையும் வழங்கக் கூடாது. மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களையும், விவசாயிகளுக்கு விவசாய கமிஷன் பரிந்துரைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். தனி நபர் காப்பீடு போன்ற நடைமுறைகள் பயிர் காப்பீடு திட்டத்துக்கு வரும் வரை இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் காவிரி தொடர்பான சட்டப் போராட்டங்களில் ஏறத்தாழ 28 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உரிமையை தமிழகம் இழந்திருக்கிறது.
இதனால், பாண்டியாறு-புன்னம்புழா இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு தனது நிதியில் செய்ய வேண்டும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த நதியையும் இணைக்கவில்லை. இதனால் பாண்டியாறு-புன்னம்புழா இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு தனது நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.
கேரளத்துக்கு மின்சாரம், தமிழகத்துக்கு தண்ணீர் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்தால் தமிழகத்துக்கு (பவானி ஆறு) கூடுதலாக 14  டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
அதில் 2 டிஎம்சி தண்ணீரை அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கு பெரிய அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டன் ரூ. 12,000 வரை விற்ற மரவள்ளிக்கிழங்கு படிப்படியாக குறைந்து நிகழாண்டில் ரூ. 3,500 என்ற வரலாறு காணாத விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் கலப்படம் தான். கலப்படத்தை கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல. இதனால் நெகிழி தடையால் பைகள் தேவை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், மரவள்ளிக்கிழங்கில் இருந்து பை தயாரிக்கும் தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். 
இந்தியாவிலேயே அதிக சேகோ ஆலைகள் உள்ள மாவட்டம் நாமக்கல், இதில் 50 சதவீத ஆலைகள் இப்போது மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் சேகோ ஆலைகள் நலனை பாதுகாக்க சேகோ ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து பை தயாரிக்கும் தொழிலைத் தொடங்க அரசு ஊக்கமளிக்க வேண்டும்.
இப்போது மேட்டூர் அணையில் சுமார் 37 டிஎம்சி மட்டுமே தண்ணீர் உள்ளது. சம்பா சாகுபடிக்கு இன்னும் 15 நாள்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற நிலையில், பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 27 டிஎம்சியாக குறைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் 24 சதவீதம், 2017-இல் 7 சதவீதம், 2016-இல் 60 சதவீதம் அளவுக்கு இயல்பான மழை அளவைக் காட்டிலும் குறைவாக மழை பெய்துள்ளது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் காவிரி ஆறுதான் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்போதுள்ள மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க போதுமானதல்ல.
இதனால் கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/மரவள்ளிக்கிழங்கிலிருந்து-பை-தயாரிக்கும்-தொழிலை-ஊக்குவிக்க-வேண்டும்-செ-நல்லசாமி-வலியுறுத்தல்-3077351.html
3077350 தருமபுரி நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்களில் பொங்கல் தின விழா DIN DIN Tuesday, January 15, 2019 09:26 AM +0530 பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் பொங்கல் தின விழா பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரி, பாவை வித்யாஸ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் பொங்கல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது .
விழாவில் கல்லூரி தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து விவசாயிகளின் பண்பாடு, கலாசாரம், சமயத்தில் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் உறி அடித்தல், சிலம்பம், கும்மி, ரங்கோலி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாணவ, மாணவியர் வண்ணக் கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.  பின்னர் பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கே.கே. ராமசாமி, கல்லூரி முதல்வர்கள் பிரேம்குமார், ராஜேஸ்வரி, பாலமுரளி, பள்ளிகளின் இயக்குநர் சதீஸ், உடற்கல்வி இயக்குநர் சந்தனராஜா,  கல்வி முதன்மையர் செல்வி, பள்ளி துணை முதல்வர் எஸ்.ரோஹித், தலைமை ஆசிரியை ஷகிலா பானு உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/பாவை-கல்வி-நிறுவனங்களில்-பொங்கல்-தின-விழா-3077350.html
3077349 தருமபுரி நாமக்கல் 180 பேருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் வழங்கினார் DIN DIN Tuesday, January 15, 2019 09:25 AM +0530 பரமத்திவேலூர் அருகே காமாட்சி நகரில் 180 பேருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர்  தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பரமத்திவேலூர் அருகே காமாட்சி நகரில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியாமரியம் தலைமை வகித்தார். மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 37ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இல்லாமல் காமாட்சி நகரில் வசித்து வந்த 180 பேருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும் 13 மாணவ,மாணவிகளுக்கு ரூ. 31 ஆயிரத்து 750 மதிப்பிலான கல்வி உதவித்தொகையையும் வழங்கினர்.
மேலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி அபிவிருத்தி திட்டம் 2018-19 ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பரமத்திவேலூர் தொகுதிக்குள்பட்ட ரூ. 2,500 மதிப்பிலான இரவுக்கூண்டு, நான்கு வாரம் வளர்க்கப்பட்ட ரூ. 72 மதிப்பிலான 50 கோழிக்குஞ்சுகள், கோழிவளர்ப்புப் பயிற்சி கட்டணமாக ரூ. 150 ஆகியவை சேர்த்து ஒரு பயனாளிக்கு ரூ. 6,400 மதிப்பிலான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பொன்னுவேல், மோகனூர் வட்டாட்சியர் கதிர்வேல், மோகனூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயகுமார், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் ராக்கியண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/15/180-பேருக்கு-ரூ-45-லட்சம்-மதிப்பில்-இலவச-வீட்டுமனை-பட்டா-அமைச்சர்-வழங்கினார்-3077349.html
3076701 தருமபுரி நாமக்கல் காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 08:37 AM +0530 நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சார்பில் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை ராசிபுரத்தில் நடந்தது.  ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார்.   மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி வரவேற்றார். 
மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் பாச்சல்  ஏ.சீனிவாசன்,  ஜி.சுப்பிரமணி,  நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.ஸ்ரீராமுலு முரளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.ராணி,  தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் வயலூர் எஸ்.ராமநாதன்,  இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெ.ஜெனிக்ஸ் ரினோ ஆகியோர் பங்கேற்று,  மத்திய ரஃபேல் விமான ஊழல்,  மாநில அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/காங்கிரஸ்-சார்பில்-கண்டன-பொதுக்கூட்டம்-3076701.html
3076700 தருமபுரி நாமக்கல் பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகளை நடத்த திமுக முடிவு DIN DIN Monday, January 14, 2019 08:36 AM +0530 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்,  சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. 
 திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமை வகித்தார்.  மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் கூட்டப் பொருள் குறித்து பேசினார். 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக்  கொண்டாடுவது.  தைப் பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூர்களில் அனைத்து பகுதிகளிலும் சிறுவர்,  சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி,  பரிசுகள் வழங்குவது. 
 அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் சிறப்பாக நடத்தி மத்திய,  மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேடுகளை எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
 முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.ராமசுவாமி,  சரஸ்வதி, மாநில நிர்வாகிகள் ப.ராணி,  ரா.நக்கீரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் கே.செல்வம்,  ஒன்றியச் செயலர்கள் கே.பி.ஜெகநாதன்,  ஆர்.எம்.துரைசாமி,  அ.அசோக்குமார், எம்.பி.கெளதம்,  வி.கே.பழனிவேல்,  துரை ராமசாமி,  பி.பாலசுப்ரமணியம், பெ.நவலடி, நகரச் செயலர்கள் என்.ஆர்.சங்கர்,  ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/பொங்கல்-பண்டிகை-விளையாட்டு-போட்டிகளை-நடத்த-திமுக-முடிவு-3076700.html
3076699 தருமபுரி நாமக்கல் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்வதை கைவிட கோரிக்கை DIN DIN Monday, January 14, 2019 08:36 AM +0530 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  நாமக்கல் ஒன்றிய செயற்குழுக் கூட்டம், ஒன்றியத் தலைவர் தா.பெ.கண்ணன் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.  
ஒன்றிய பொருளாளர் நா.ஜீவாஜாய் வரவேற்றார்.  மாநில பொதுக் குழு உறுப்பினர் கோ.கு.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயலர் முருகசெல்வராசன்,  ஒன்றியச் செயலர் அ.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர். 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறும் ஆசிரியர்களுக்கான குறை தீர்க்கும் முகாமில் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும்,  விண்ணப்பங்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தீர்வு காண வேண்டும். 
அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி நியமனம் செய்யும் முடிவை அரசு கைவிட  வேண்டும்.  தமிழக அரசின் இந்த முடிவைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக பங்கேற்பது.
   ஹிந்தி,  சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி திணிப்பதை மத்திய அரசு கைவிட  வேண்டும்.  5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய பொதுத் தேர்வு என்னும் முடிவினை மத்திய,  மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/இடைநிலை-ஆசிரியர்களை-அங்கன்வாடி-மையங்களுக்கு-இடமாற்றம்-செய்வதை-கைவிட-கோரிக்கை-3076699.html
3076698 தருமபுரி நாமக்கல் தேசிய இளைஞர் தினவிழா DIN DIN Monday, January 14, 2019 08:36 AM +0530 வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒ.சௌதாபுரத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் இளைஞர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் ஒ.சௌதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ரஞ்சித் தலைமை வகித்தார்.  கிராம நூலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர்  உருவ சிலைக்கு ஒ.சௌதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் கே.அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் விவேகானந்தர் கருத்துகள், சிந்தனைகள், அமெரிக்கா நாட்டில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.  பின்னர் இளைஞர் தின உறுதி மொழி ஏற்றனர்.  
    சமூக ஆர்வலர்கள் விக்னேஷ், துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.  
   விழா ஏற்பாடுகளை கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்க நாமக்கல் கிளை செயலர் கே.அருணாசலம் செய்திருந்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/தேசிய-இளைஞர்-தினவிழா-3076698.html
3076697 தருமபுரி நாமக்கல் ஊராட்சி சபைக் கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 08:35 AM +0530 பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு மோகனூர் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
கூட்டத்தில் நன்செய் இடையாறு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், ராஜா வாய்க்காலில் படித்துறை அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/ஊராட்சி-சபைக்-கூட்டம்-3076697.html
3076696 தருமபுரி நாமக்கல் ராசிபுரத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் DIN DIN Monday, January 14, 2019 08:35 AM +0530 ராசிபுரம் பகுதியில் பல்வேறு பள்ளி மாணவ,  மாணவியர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று 5 கி.மீ. தொலைவுக்கு ஓடினர்.
ராசிபுரம் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 2-ம் ஆண்டாக வெற்றி மாரத்தான் -2019 என்ற தலைப்பில் ஓட்டப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மாணவர்களின் உடல் திறனையும்,  மன வலிமையையும் மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி,  சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவியர் சுமார் 800 பேர் பங்கேற்றனர். 
முன்னதாக,  ஆத்தூர் சாலை கொங்கு திருமண மண்படம் முன்பாக துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எஸ்.குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார்.  இந்த மாரத்தான் ஓட்டம் ஆத்தூர் சாலை, கோனேரிப்பட்டி, புதிய பஸ் நிலையம், கச்சேரி சாலை,  நாமக்கல் சாலை வழியாக வெற்றி விகாஸ் பள்ளியை அடைந்தது. 
     போட்டியின் முடிவியில் ஆடவர், மகளிர் பிரிவில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  ஆடவர் பிரிவில் வெற்றி விகாஸ் ஆண்கள் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.வி.அனிஸ் முதலிடம் பெற்று, ரூ.4 ஆயிரத்து 999 -க்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.  2-ம் இடம் பெற்ற குருசாமிபாளையம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கே.கௌதம் ரூ.2 ஆயிரத்து 999 -க்கான காசோலை மற்றும் கோப்பை பெற்றார்.  இதே போல் மகளிர் பிரிவில் பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவி எஸ்.காவ்யா முதலாவதாக வந்து ரூ.4 ஆயிரத்து 999-க்கான காசோலை மற்றும் கோப்பையும், 2-வதாக வந்த அதே பள்ளி மாணவி ஏ.ஜீவிதா ரூ.2 ஆயிரத்து 999-க்கான காசோலை மற்றும் கோப்பை பெற்றார். 
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்து, கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.  பள்ளித் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன்,  தாளாளர் ஜி.விஜய், செயலர் எஸ்.பாலசுப்பிரமணியம், துணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசன், பொருளாளர் கே.பழனிவேல், பள்ளி நிர்வாக அலுவலர்கள் என்.மாரிமுத்து, கே.சந்திரசேகரன், ஆங்கிலத் துறை இயக்குநர் வி.தாசபிரகாசம், கணிதத் துறை இயக்குநர் வி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/ராசிபுரத்தில்-பள்ளி-மாணவ-மாணவியர்-பங்கேற்ற-மாரத்தான்-ஓட்டம்-3076696.html
3076695 தருமபுரி நாமக்கல் வேலூர் மற்றும் பரமத்தியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு DIN DIN Monday, January 14, 2019 08:35 AM +0530 பரமத்தி வேலூர் வட்டம் வேலூர் மற்றும் பரமத்தியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து தங்களது பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-1997-ஆம் ஆண்டு பயின்ற மாணவ,மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுடன் பள்ளியில் பயின்ற போது நிகழ்ந்த பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.  22 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டது ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
   இதேபோல் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ,மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவாக கொண்டாடினர்.  இந் நிகழ்ச்சியில்1993-1994-ஆம் ஆண்டு இதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகளும்,  தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளுடன் தங்களது பெற்றோர்கள்,குழந்தைகளுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து பள்ளிப் பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.   குடும்ப விழாவாக குழந்தைகளுடன் கொண்டாடினர்.
    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/வேலூர்-மற்றும்-பரமத்தியில்-முன்னாள்-மாணவர்கள்-சந்திப்பு-3076695.html
3076694 தருமபுரி நாமக்கல் ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருவீதி உலா DIN DIN Monday, January 14, 2019 08:35 AM +0530 ராசிபுரம் வி.நகர் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.  ராசிபுரம் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் 15-ம் ஆண்டாக அன்னதானம் நடந்துவருகிறது.  இதனையடுத்து தை 1-ல் துவங்கி பழனிக்குச் செல்லும் வழியில் அன்னதானம் நடத்தப்படுகிறது.  
இதனையடுத்து, சனிக்கிழமை ராசிபுரம் வி.நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கும்,  உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் நடைபெற்றது.  பின்னர் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் இருந்து திருவீதி உலா புறப்பட்டு,  ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் சென்றடைந்தது.  இதனையடுத்து,  தை 1-ல் ராசிபுரம்-நாமக்கல் சாலையில் உள்ள சித்தி வினாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெறும். தை.2-ல் ஈரோடு மாவட்ட அரச்சலூர் பகுதியிலும், தை.3-ல் தாராபுரம் குட்டைக்காடு பகுதியிலும், தை.4-ம் தேதி மேல்கரைப்பட்டி பகுதியிலும்,  தை 5-ல் பழனி நகராட்சிப் பள்ளி அருகிலும் அன்னதானம் நடைபெறும்.
ஓம் ஸ்ரீஆறுபடை முருகன் திருப்பணிக் குழு:  இதே போல்,  ராசிபுரம் ஓம் ஸ்ரீஆறுபடை முருகன் திருப்பணிக் குழு சார்பில் 7-ம் ஆண்டாக பாத யாத்திரையாக பழனி செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் 7-ம் ஆண்டாக நடத்தப்படுகிறது.  இத் திருப் பணிக் குழு சார்பில் தை 1-ல் ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்குகிறது. 
 தை 2-ல் அரச்சலூர் கொமாரபாளையம் பகுதியிலும் அன்னதானம் வழங்கப்படும் என திருப் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/ஸ்ரீபாலமுருகன்-சுவாமி-திருவீதி-உலா-3076694.html
3076693 தருமபுரி நாமக்கல் நல வாரிய உறுப்பினர்கள் ஓய்வு பெறும் தகுதி வயதை குறைக்கக் கோரிக்கை DIN DIN Monday, January 14, 2019 08:34 AM +0530 நலவாரிய உறுப்பினர்கள் ஓய்வு பெறும் தகுதி வயதைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு மக்கள் நல அனைத்து பொதுசேவை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம்,  மாநிலச் செயலர் பா.வைத்தீஸ்வரன் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.  மாவட்ட சட்ட ஆலோசகர் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தார்.  கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வை.பாலுசாமி வரவேற்றார். 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பெற ஆண்களுக்கு 55 வயது எனவும்,  பெண்களுக்கு 50 வயது எனவும் நிர்ணயிக்க வேண்டும்.  தொழிலாளளர் நல வாரிய அலுவலகங்களில் பல்வேறு உதவித்தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவுபெற்ற கட்டுமான,  அமைப்புசார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.  மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்கும் கண்காணிப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். 
    தொழிலாளர் அலுவலகத்தில் புதுப் பதிவு,  பதிவு கேட்பு மனு, குளறுபடிகளைச் சரி செய்ய வாரம் ஒருமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். 
   வாரியங்கள் துவங்கப்பட்டபோது, தொழிலாளர்களின் பங்களிப்பு இருந்தது.  தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது.  ஆரம்ப காலம் போன்று பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு தொழிலாளியின் பங்களிப்பு கட்டாயம் என அரசு உத்தரவிட வேண்டும். 
 கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் காக்க மத்தியிலும், மாநிலத்திலும் தனி துறை உருவாக்க வேண்டும்.  மேலும், ஈஎஸ்ஐ, பிஎப், ஓய்வூதியம், வீட்டு வசதி, மழைக் கால நிவாரணம் போன்றவை உள்ளடக்கிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/நல-வாரிய-உறுப்பினர்கள்-ஓய்வு-பெறும்-தகுதி-வயதை-குறைக்கக்-கோரிக்கை-3076693.html
3076692 தருமபுரி நாமக்கல் அரசுப் பள்ளிக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு DIN DIN Monday, January 14, 2019 08:34 AM +0530 நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125ஆவது ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் ரூ.1 கோடி செலவில் கலையரங்கம் புதுப்பித்தல், பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவுக் கூடம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து,  நன்கொடையாளர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏவும்,  பள்ளியின் 125ஆது ஆண்டு அறக்கட்டளைத் தலைவருமான கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார்.  அறக்கட்டளைச் செயலர் பி.கணபதி வரவேற்றார்.  தொழிலதிபர்  முருகேசன் முன்னிலை வகித்தார்.  இதையொட்டி, பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.  மேலும்,  முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. 
 இதில் அறக்கட்டளை உப தலைவர்கள் எஸ்.ரங்கநாதன்,  பி.மோகன், இணைச் செயலர்கள் கே.நடராஜன்,  கே.பாலுமணி, பொருளாளர் யு.அபுபக்கர் மற்றும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள்,  பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் கேசவன் நன்றி கூறினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/14/அரசுப்-பள்ளிக்கு-உதவிய-நன்கொடையாளர்களுக்கு-பாராட்டு-3076692.html
3076210 தருமபுரி நாமக்கல் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு: அமைச்சர் வெ. சரோஜா பேட்டி DIN DIN Sunday, January 13, 2019 05:01 AM +0530
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புத் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 21-ஆம் தேதி முதல்வர் தொடக்கி வைக்கிறார் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் 21-ஆம் தேதி தமிழக முதல்வர் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி ஆங்கில வகுப்பு சேர்க்கையைத் தொடங்க இசைவு தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 52,000 குழந்தைகள் பயன்பெறுவர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க அங்கன்வாடி மையங்களில் இது போன்ற ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுகிறது.
சுகாதார பழக்க வழக்கங்கள், கைக் கழுவுதல், தன் சுத்தம், உணவு முறை இவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை இந்தப் பள்ளிகள் ஏற்படுத்தும்.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குழந்தைகள் விரும்பி படிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வி மற்றும் சமூக நலத் துறையின் சார்பில் ரூ. 7.30 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் படிப்படியாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 181 கட்டணமில்லா தொலைபேசி திட்டம் மூலம் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக இந்த தொலைபேசி எண்ணில் புகார்கள் பெற்றுக் கொள்ளப்படும். இதற்காக பெரம்பூரிலிருந்து தனி மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
11 பேர் இதில் ஆலோசனைகளை வழங்குவர். இந்த தொலைபேசியில், இதுவரை 14,400 அழைப்புகள் வர பெற்று 2,360 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேசிய குழந்தைகள் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக பெண்கள் பாதுகாப்பைப் பராமரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி வசதியின் மூலம் 20 பேர் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி சான்றிதழ் கடந்த ஆண்டு 3. 60 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல நிகழாண்டில் 4.60 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வியும், தொடக்கக் கல்வியும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் உற்பத்திக்கான தொழில் தொடங்க ரூ. 12,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் தமிழக அரசு தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக வர பேருதவியாக இருக்கும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/2381-அங்கன்வாடி-மையங்களில்-மழலையர்-வகுப்பு-அமைச்சர்-வெ-சரோஜா-பேட்டி-3076210.html
3076209 தருமபுரி நாமக்கல் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா DIN DIN Sunday, January 13, 2019 05:01 AM +0530
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மாணவ மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து கிராமிய பொங்கல் வைத்தும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் பொங்கல் பண்டிகையை முன்னதாகக் கொண்டாடினர்.
ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், கால்நடைகளுடன் கிராமிய சர்க்கரை பொங்கலிட்டு குலவை பாடல்களுடன் பொங்கல் வைத்து பள்ளிகளில் கொண்டாடினர். உறி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கும்மி பாட்டு, ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கு. பாரதி தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத்தினர், வனிதா கிளப், ரோட்டரி கிளப் ஆப் எஜூகேசனல் சிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வித்யாநிகேதன் பள்ளி: இப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாடுகள் வைத்து படையலிட்டு, செங்கரும்பு, வாழை மரம், மா இலை தோரணங்களுடன் கும்மி அடித்து ஆடல் பாடல்களுடன் தை பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற கிராமிய பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பின்னர் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் பள்ளித் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம், தாளாளர் எஸ். அப்துல்கரீம், செயலர் சி. சுந்தரராஜூ, துணைச் செயலர் சி. ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் ராசிபுரம் வெற்றி விகாஸ் சிபிஎஸ்சி பள்ளி, வெண்ணந்தூர் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.
வித்யா விகாஸ் பொறியியல்
கல்லூரியில்... திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கலை கொண்டாடினர்.
கல்லூரிச் செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேலு, மேலாண் இயக்குநர் ராமலிங்கம், முத்துசாமி, இயக்குநர் ஞானசேகரன், முதல்வர் (பொ) பூரணபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேஷனல் பப்ளிக் பள்ளியில்... நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சூரியனுக்கு நன்றி செலுத்துவதோடு மாடுகளுக்கும் நன்றி செலுத்தி உழவர்களால் கொண்டாடக்கூடிய பொங்கல் விழாவை மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது.
பள்ளித் தலைவர் சரவணன் முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கரும்பு, மஞ்சள், மா இலை ஆகியவற்றைக் கொண்டு தோரணங்கள் கட்டி படையல் வைத்து சூரியனை அனைவரும் வணங்கினர். மாணவர்கள் பொங்கல் விழாவின் சிறப்பு குறித்துப் பேசினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/பள்ளி-கல்லூரிகளில்-பொங்கல்-விழா-3076209.html
3076208 தருமபுரி நாமக்கல் கல்வியால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைய முடியும்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பேச்சு DIN DIN Sunday, January 13, 2019 05:01 AM +0530
கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பி. குழந்தைவேல் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் 40-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
விழாவுக்குப் பள்ளியின் தலைவர் கே. குமாரசுவாமி தலைமை வகித்துப் பேசினார்.
பள்ளிச் செயலர் எஸ். சந்திரசேகர், இணைச் செயலர் வி. ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் மாவட்ட காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று துவக்கி வைத்துப் பேசினார். ராசிபுரம் டி.எஸ்.பி., ஆர்.விஜயராகவன், பூனா மார்வல் ரியல்டர்ஸ் இயக்குநரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான டி. கார்த்திக் ஆகியோர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. குழந்தைவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:
கல்வியால் மட்டும் உயர்ந்த நிலையை அடையமுடியும். சிறந்த வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதை கல்வியால் மட்டும் அறிந்து கொள்ள முடியும். கற்பது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். படிப்புடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். நன்றாக படிப்பவர்களை விட, சராசரியாக படிப்பவர்களிடம் நல்ல படைப்பாற்றல் திறன் இருக்கும். இதனை உணர வேண்டும் என்றார். 
விழாவில் பள்ளி நிறுவனத் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணன், நிர்வாகிகள் எம்.ராமகிருஷ்ணன், சி.நடராஜ், வி. ராமசாமி, வி.சுந்தரராஜன், வி. பாலகிருஷ்ணன், என். மாணிக்கம் ஆர். பெத்தண்ணன், முதல்வர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, ஜே. சசி ப்ரியா, எம். மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/கல்வியால்-மட்டுமே-உயர்ந்த-இடத்தை-அடைய-முடியும்-பெரியார்-பல்கலை-துணைவேந்தர்-பேச்சு-3076208.html
3076207 தருமபுரி நாமக்கல் சமுதாய உணர்வுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிந்தனை ஆசிரியர்களுக்கு தேவை: த. ஸ்டாலின் குணசேகரன் DIN DIN Sunday, January 13, 2019 05:00 AM +0530
எதிர்காலத்தில் சமுதாய உணர்வுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிந்தனை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.
ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் பள்ளியின் தலைவர் க. சிதம்பரம் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் எம். ஷோபா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய த. ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசியது:
இன்றைய மாணவர்களுக்கு மதிப்பெண்களைவிட வாழ்வின் மதிப்புகளை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். சமுதாய சீர்கேடு அதிகரிக்க வாழ்வியல் முறைகளை சொல்லித் தராததே காரணம்.
தாய்மொழியில் நல்ல புலமை பெற்றால், பிற மொழிகளை கற்பது சுலபம். மதிப்பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட புரிந்து படிக்க வேண்டும். தாய்மொழியில் புலமை பெற்றால், நல்ல எழுத்தாளராக, கவிஞராக வரமுடியும். பாடப்புத்தக்கத்தை தவிர, பிற நல்ல புத்தகங்களையும் பயில பெற்றோர்கள் வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கு இல்லந்தோறும் நூலகம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் இதனை முதலில் செய்ய வேண்டும். உலக நிகழ்வுகளை ஆசிரியர்கள் அறிந்திருப்பது அவசியம்.
ஆசிரியர்கள் மாணவர்களால் மதிக்கத்தக்கவர்களாகவும், முழு தகுதி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நாட்டின் விடுதலை, தியாகம் போன்றவற்றை சொல்லித் தருவதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் சமுதாய உணர்வுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிந்தனை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/சமுதாய-உணர்வுள்ளவர்களாக-மாணவர்களை-உருவாக்கும்-சிந்தனை-ஆசிரியர்களுக்கு-தேவை-த-ஸ்டாலின்-குணசேகரன்-3076207.html
3076206 தருமபுரி நாமக்கல் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா DIN DIN Sunday, January 13, 2019 05:00 AM +0530
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செ. காந்திசெல்வன் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது .
விழாவில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் கே.எம். ஷேக்நவீத், சிறுப்பான்மையினர் பாஸ்டர் ரெவரண்ட் சாந்தகுமார், ஆலீன் ஷா, மாநில நிர்வாகிகள் ரா.நக்கீரன், ப.ராணி, மாவட்ட நிர்வாகிகள் விமலா சிவக்குமார், கே. செல்வம், ஒன்றியச் செயலர்கள் கே.பி. ஜெகநாதன், எம்.பி.கெளதம், செந்தில் முருகன், துரை ராமசாமி, பி. பாலசுப்ரமணியம், நகர செயலர்கள் என்.ஆர்.சங்கர், ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/திமுக-சார்பில்-சமத்துவ-பொங்கல்-விழா-3076206.html
3076205 தருமபுரி நாமக்கல் மகளிர் விடுதி, முதியோர் இல்லங்களை உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல் DIN DIN Sunday, January 13, 2019 05:00 AM +0530 தனியாரால் நடத்தப்படும் மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கியுள்ள) மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதி மற்றும் தங்கும் இல்லங்கள் சட்டம் 2014-இன் படி முறையாக மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும்.
இதுநாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத விடுதி மற்றும் இல்லங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/மகளிர்-விடுதி-முதியோர்-இல்லங்களை-உடனடியாக-பதிவு-செய்ய-அறிவுறுத்தல்-3076205.html
3076204 தருமபுரி நாமக்கல் ரூ. 1.75 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கி வைத்தார் DIN DIN Sunday, January 13, 2019 05:00 AM +0530
திருச்செங்கோடு ஒன்றியம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிடும் நிகழ்ச்சி, முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா பூமிபூஜையிட்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
முதலாவதாக மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநத்தம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கட்டடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவினாசிப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடத்தையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ராமாபுரம் கொசவம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தையும், செண்பகமாதேவி ஊராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சின்னார்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து வெங்கடேசபுரி, நெசவாளர் காலனி, சின்ன கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து மல்லசமுத்திரம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்களையும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பொ. பாலமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பத்மாவதி, அட்மா தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, புஷ்பராஜன், மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/ரூ-175-கோடியில்-வளர்ச்சித்-திட்டப்-பணிகள்-அமைச்சர்-தொடக்கி-வைத்தார்-3076204.html
3076203 தருமபுரி நாமக்கல் பரமத்திவேலூர் ஏலச் சந்தையில்வாழைத்தார் விலை உயர்வு DIN DIN Sunday, January 13, 2019 04:59 AM +0530
பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம்,நன்செய் இடையாறு,பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 600 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 250 வரையிலும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 300-க்கும்,பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ. 300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 6-க்கு விற்பனையானது. சனிக்கிழமை 2,500 வாழைத்தார்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
அதில் அதிகபட்சமாக பூவன் வாழைத்தார் ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சைநாடன் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும் விற்பனையானது.
மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.9-க்கு விற்பனையானது. தைப்பூச கொடியேற்றத்தை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/பரமத்திவேலூர்-ஏலச்-சந்தையில்வாழைத்தார்-விலை-உயர்வு-3076203.html
3076202 தருமபுரி நாமக்கல் ஜன. 21-இல் நாமக்கல்லில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி DIN DIN Sunday, January 13, 2019 04:59 AM +0530
நாமக்கல்லில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவனம் அளித்தல் குறித்து இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல்லில் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 21-ஆம் தேதி காலை 9 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவனம் அளித்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமில் கறவை மாடுகளில் சினைப் பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க் கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவன குறைபாடுகளால் ஏற்படும் தற்காலிக மலட்டுத் தன்மை குறித்தும் நிரந்தர மலட்டுத் தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
சினைப் பருவ அறிகுறிகள் மற்றும் சினைப் பருவத்துக்கு வராத மாடுகளை சினைப் பருவத்துக்கு வரவைப்பது பற்றிய வழிமுறைகள் குறித்தும், தீவன வகைகள், தீவன மேலாண்மை, பசுந்தீவன மேலாண்மை, உலர்தீவன மேலாண்மை, அடர்தீவன மேலாண்மை, மரபுசாரா பொருள்களை பயன்படுத்தி தீவன மேலாண்மை குறித்த பயிற்சி விரிவாக அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286- 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 21-ஆம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/ஜன-21-இல்-நாமக்கல்லில்-கறவை-மாடு-வளர்ப்புப்-பயிற்சி-3076202.html
3076201 தருமபுரி நாமக்கல் முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு DIN DIN Sunday, January 13, 2019 04:59 AM +0530
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சனிக்கிழமை காலை பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. அதேபோல கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை முருகன், வேல் வடிவம் கொண்ட அனிச்சம்பாளையம் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணியர், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகப்பெருமான் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/முருகன்-கோயில்களில்-சஷ்டி-வழிபாடு-3076201.html
3076200 தருமபுரி நாமக்கல் பொங்கல் பரிசுத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, January 13, 2019 04:59 AM +0530 நல்லிபாளையம் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கக் கோரி சனிக்கிழமை முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லிபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வளாகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் அப் பகுதி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வயதான முதியோர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் தொகை வழங்க மறுக்கப்பட்டதாம். 
இதனால் கோரிக்கை மனு தயார் செய்து நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் சனிக்கிழமை மனு கொடுக்கச் சென்றனர். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்தும், பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கக் கோரியும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவத்தைக் கேள்விப்பட்ட திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் வேலு, தனி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், நேரில் சென்று சம்பந்தப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். தகுதி இருப்பின் பொங்கல் பரிசு பொருட்களும், பரிசுத்தொகையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/13/பொங்கல்-பரிசுத்-தொகை-வழங்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3076200.html
3075407 தருமபுரி நாமக்கல் சத்தான உணவு குறித்து தேசிய அளவிலான போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு DIN DIN Saturday, January 12, 2019 05:29 AM +0530 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய அளவிலான சத்தான உணவு என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால், மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் தேசிய அளவிலான, சரியான, சத்தான சரிவிகித உணவு என்னும் மையக்  கருத்தினைக் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள் பங்குபெறும் வகையில், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவியம், சுவரோவியம், டிஜிட்டல் கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன.
இதில் முதல் கட்டமாக இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் h‌t‌t‌p‌s://‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n/
​c‌r‌e​a‌t‌i‌v‌i‌t‌y​c‌h​a‌l‌l‌e‌n‌g‌e என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 
போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும்.  எனவே, ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் தத்தம் பள்ளிகளின் மூலம் தங்களது பெயரினை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். டிஜிட்டல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை 04286-281242 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/சத்தான-உணவு-குறித்து-தேசிய-அளவிலான-போட்டி-மாணவர்களுக்கு-அழைப்பு-3075407.html
3075406 தருமபுரி நாமக்கல் கொல்லிமலை உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி DIN DIN Saturday, January 12, 2019 05:25 AM +0530 கொல்லிமலை வட்டாரம், சித்தூர்நாடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாடு, சேவைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அண்மையில்
நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புசெல்வி தலைமை வகித்து,  பயிற்சியின் நோக்கம், கொல்லிமலை வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், தீர்மான பதிவேடுகள் பராமரிப்பு, கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் குழுவுக்கு வழங்கப்படும் அரசு அங்கீகாரம், வேளாண் இயந்திரங்கள் பெற்று தங்களுக்குள் வாடகைக்கு விட்டு சேமிப்புக் கணக்கில் சேர்ப்பித்தல் குறித்தும் விளக்கமளித்தார்.
தேசிய வேளாண்மை நிறுவனம் மாவட்ட திட்ட உதவி அமைப்பாளர் கிரண்குமார், உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைத்தல் பயிற்சியில் கலந்து கொண்ட உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு நிறுவனம் அமைத்தல் தொடர்புடைய வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் வேளாண்மை பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் ஆரம்பித்தல், அரசின் சலுகைகள், நிறுவனத்துக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி செயல் விளக்கம், மானியங்கள், தொழில் நுட்ப உதவிகள் குறித்து விளக்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் சேகர், துறையின் மானிய திட்டங்கள் குறித்துப் பேசினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லதுரை, காமராஜ், விஜயசாந்தி ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி, சோலார் விளக்கு பொறி செயல் விளக்கம், செய்து காண்பித்தனர். அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மா.ரமேஷ் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட செயல்பாடுகள், உழவன் செயலியின் செயல்பாடுகள், பயன்கள் குறித்து பேசினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/கொல்லிமலை-உழவர்-உற்பத்தியாளர்கள்-குழு-உறுப்பினர்களுக்கு-திறன்-மேம்பாட்டுப்-பயிற்சி-3075406.html
3075405 தருமபுரி நாமக்கல் ராசிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, January 12, 2019 05:25 AM +0530 ராசிபுரம் மெட்ரோ ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் நம்ம போதமலை அறக்கட்டளை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின. ஆர். புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஜேசிஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜே.சி. தேவா செங்கோட்டுவேலு தலைமை வகித்தார். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர் தலைமையாசிரியர் ஜாய்சி அன்னம்மாள், ஆசிரியர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர்  டி.பூபதி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தவிர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. ஜேசிஐ நிர்வாகிகள் பூபதி, நம்ம போதமலை அறக்கட்டளை பொருளாளர் வி.ஆனந்தன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/ராசிபுரத்தில்-பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணர்வு-பேரணி-3075405.html
3075404 தருமபுரி நாமக்கல் அரசுப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம் DIN DIN Saturday, January 12, 2019 05:24 AM +0530 குமாரபாளையம் நகராட்சி, நாராயணா நகர் நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வட்டாரக் கல்வி அலுவலர் மேகலாதேவி, பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து விளக்கிப் பேசினார். மாணவ, மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை மற்றும் தாவணியில் பங்கேற்றனர். 
பள்ளி வளாகத்தில் கோலம் போடப்பட்டு, கரும்பு, மஞ்சளுடன் அலங்காரம் செய்யப்பட்டு,  பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, ஒயிலாட்டம், கரகாட்டம், குழு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது .
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/அரசுப்-பள்ளியில்-பொங்கல்-கொண்டாட்டம்-3075404.html
3075403 தருமபுரி நாமக்கல் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சர் பி. தங்கமணி தொடக்கிவைத்தார் DIN DIN Saturday, January 12, 2019 05:24 AM +0530 பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கிவைத்தார். 
நாமக்கல் மாவட்டம்,கொமராபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தியடிகள் தெரு, தலைமை நீரேற்று நிலைய வளாகம், சந்தைப்பேட்டை மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, அங்காளம்மன் கோயில் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, அரசு மருத்துவமனை வளாகம்,காளியம்மன் கோயில்,செளண்டம்மன் கோயில்,ஜே.கே.கே சாலை,பேருந்து நிலையம் மற்றும் அய்யன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.18 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் 11 தானியங்கி குடிநீர் விற்பனை மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கி வைத்தார். 
அதைத்தொடர்ந்து, பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7,8 வார்டு மற்றும் படமுடிபாளையம் அம்மா நகர் ஆகிய பகுதிகளில் ரூ.85 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 
பின்னர், வேலூர் மின் மயானத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுந்தரம்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம்,திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன்,கொமராபாளையம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் நாகராஜன், கொமராபாளையம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குணசேகரன்,அரசு வழக்குரைஞர் தனசேகரன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/ரூ283-கோடி-மதிப்பீட்டில்-வளர்ச்சித்-திட்ட-பணிகள்-அமைச்சர்-பி-தங்கமணி-தொடக்கிவைத்தார்-3075403.html
3075402 தருமபுரி நாமக்கல் தொழில் முனைவோருக்கான வணிகம் சார்ந்த போட்டி DIN DIN Saturday, January 12, 2019 05:24 AM +0530 ஞானமணி கல்வி நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையம், இந்திய பசுமை கட்டட சபை இணைந்து தொழில் முனைவோருக்கான வணிகம் தொடர்பான போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதற்கான தொடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார்.  தாளாளர் பி.மாலாலீனா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். 
தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கண்ணன் வரவேற்றார். கல்வி நிறுவன செயல் அலுவலர் கே.விவேகானந்தன், முதன்மை நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நாமக்கல் மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவக்குமார்,  வி இன்வென்ட் கேமிலேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணமராஜா, சேலம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழிலே முனைவு, தொழில் வாய்ப்பு, கடன் நடைமுறைகள் போன்றவை குறித்துப் பேசினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/தொழில்-முனைவோருக்கான-வணிகம்-சார்ந்த-போட்டி-3075402.html
3075401 தருமபுரி நாமக்கல் நோயற்ற முட்டை மண்டலமாக நாமக்கல்லை அறிவிக்க வேண்டும்: டாக்டர் பி.வி.செந்தில் பேட்டி DIN DIN Saturday, January 12, 2019 05:23 AM +0530 நாமக்கல்லை நோயற்ற முட்டை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் பி.வி.செந்தில் தெரிவித்தார். 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலின் பேரில், அகில இந்திய ஓபிசி பிரிவு தலைவர் தாமார்த்வாஜ் சாகு அவரை
நியமித்துள்ளார். 
ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவராக பதவியேற்ற அவர், வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்று நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள நேரு சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
 இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய அளவில் ஓபிசி பிரிவினர் சுமார் 40 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் சிறு, குறுந்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய மத்திய அரசின் அதிக வரி விதிப்பால் பல சிறு தொழில்முனைவோர் ஆன்லைன் மூலம் வரி செலுத்த தெரியாமல் தங்களின் தொழில்களை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரியை சீரமைப்புச் செய்ய வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 
அகில இந்திய அளவில் முட்டைக் கோழி வளர்ப்பு தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல்லை நோயற்ற முட்டை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் சிறு தொழில்களுக்கு 112 கேவிஏ வரையே குறைந்த அழுத்த மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதை 250 கேவிஏவாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக ரிங் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ரா.செழியன், வீரப்பன், காங்கிரஸ் பிரமுகர்கள் சீனிவாசன், மோகன், மணி, செல்வகுமார், மாணிக்கம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/நோயற்ற-முட்டை-மண்டலமாக-நாமக்கல்லை-அறிவிக்க-வேண்டும்-டாக்டர்-பிவிசெந்தில்-பேட்டி-3075401.html
3075400 தருமபுரி நாமக்கல் பாவை பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தேர்வில் மாணவ- மாணவியர் சாதனை DIN DIN Saturday, January 12, 2019 05:23 AM +0530 சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், கடந்த அக்டோபர் 2018 - ல் நடத்துப்பட்ட வாரியத் தேர்வில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  
இதில் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி பூமா 700-க்கு 694 மதிப்பெண்களும், செளமியா 693 மதிப்பெண்களும், சுபாஷினி -689 மதிப்பெண்களும், சிவில் துறையைச் சார்ந்த மாணவி ஜனனி ஷாமிலி 700-க்கு 684 மதிப்பெண்களும், இயந்திரவியல் துறை மாணவர் விஷ்ணு 700-க்கு 677 மதிப்பெண்களும் முதலாம் ஆண்டு மாணவர் இளம் சங்கர்  800-க்கு 777 மதிப்பெண்கள் பெற்று கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட மூன்று பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.   20 மாணவ-மாணவியர் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஜந்தாம் பருவத்தில் 95 சதவீத தேர்ச்சியும், எலக்ட்ரிக்கல் துறை பாடங்களில் ஐந்தாம் பருவத்தில் 98 மற்றும் 96 சதவீத தேர்ச்சியும், மூன்றாம் பருவத்தில் 98 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.  இயந்திரவியல் துறை சார்ந்த பாடங்களில் மூன்றாம் பருவத்தில் 94 சதவீத தேர்ச்சியும், ஐந்தாம் பருவத்தில் 88 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். ஆட்டோமொபைல் துறை சார்ந்த பாடங்களில் 91 சதவீத தேர்ச்சியும், கணினி துறை சார்ந்த பாடங்களில் 92 சதவீத தேர்ச்சியும், சிவில் துறை மாணவர்கள் ஐந்தாம் பருவத்தில் பல்வேறு பாடங்களில் 90 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.  
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன்,  இயக்குநர்கள் கே.கே.ராமசாமி, கே.செந்தில், கல்லூரி முதல்வர் சுமதி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/பாவை-பாலிடெக்னிக்-கல்லூரி-வாரியத்-தேர்வில்-மாணவ--மாணவியர்-சாதனை-3075400.html
3075399 தருமபுரி நாமக்கல் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கம் சிறப்பு முகாம் DIN DIN Saturday, January 12, 2019 05:20 AM +0530 பரமத்தி வேலூரில் உள்ள வேலூர் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
வேலூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சக்திவேல் முகாமுக்கு தலைமை தாங்கினார். அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்டச் செயலாளர் மோகன், டாக்டர் சோமசுந்தரம், இந்தியன் வங்கி பொறியாளர் வேலுச்சாமி, வழக்குரைஞர் இளங்கோ, பரமத்தி இந்தியன் வங்கி கிளை மேலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்துப் பேசினர். 
வேலூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சக்திவேல் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட வங்கி வாடிக்கையாளர்களிடம் கூறியதாவது: இதர வங்கிகளின் காசோலைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் வரவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சிறப்பு கவனம் செலுத்தி தனியாக பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாரம் முழுவதும் மற்றும் விடுமுறை நாள்களில் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலம் வங்கி சேவை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திர வசதி, கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யும் வசதி மற்றும் கிளை வளாகத்தில் இணைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் இயந்தரம் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள்,வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/இந்தியன்-வங்கியில்-சேமிப்பு-கணக்கு-துவக்கம்-சிறப்பு-முகாம்-3075399.html
3075398 தருமபுரி நாமக்கல் பாலிடெக்னிக் வாரிய தேர்வு: எக்ஸல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Saturday, January 12, 2019 05:20 AM +0530 சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்
பெற்றுள்ளனர். 
இரண்டாம் ஆண்டின் முதல் பருவத் தேர்வு எழுதிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  கம்யூனிகேசன் பொறியியல் துறை மாணவி நிவேதா ராஜேஸ்வரி 700-க்கு 695 மதிப்பெண்களும், குருப்பிரியா 700-க்கு 692 மதிப்பெண்களும், இந்து 700-க்கு 687 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதா ராஜேஸ்வரி இரண்டு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், குருப்பிரியா,  இந்து ஆகியோர் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும் இக் கல்லூரியின் முதலாம் ஆண்டு இ.சி.இ. மாணவர் ஆகாஷ் குமார் ஷா  முதல் பருவத் தேர்வில் 800-க்கு 782 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
மேலும் இவர் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இக் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் 11 பேர் 15 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் துணைத் தலைவர் என். மதன் கார்த்திக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் சுப்ரமணியன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/பாலிடெக்னிக்-வாரிய-தேர்வு-எக்ஸல்-கல்லூரி-மாணவர்கள்-சிறப்பிடம்-3075398.html
3075397 தருமபுரி நாமக்கல் கே.எஸ்.ஆர்.கல்லூரியில் சாதனை பொங்கல் விழா DIN DIN Saturday, January 12, 2019 05:19 AM +0530 கேஎஸ்ஆர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையையொட்டி 1800 மாணவிகள் ஜியோ லோகோ வடிவில் நின்று பொங்கல் வைத்து உலக சாதனை படைத்தனர். 
கே.எஸ்.ஆர் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கேஎஸ்ஆர் கல்வி நிறுவனமும், ஜியோ நிறுவனமும் இணைந்து மாணவிகள் பொங்கல் வைக்கும் யூனிக் உலக சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாதனையை துவக்கி வைத்தார். இதில் 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று  விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். 
இதனை யூனிக் உலக சாதனை தலைமை தீர்ப்பாளர் ரஹீமான் கண்காணித்தார். பின்னர் ரஹீமான் கூறும்போது,   யூனிக் உலக சாதனைக்காக 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் யூமென் இமேஜ்யில் ஜியோ லோகோ வடிவில் நின்று அனைவரும் சேர்ந்து மொத்தம் 450 கிலோ பொங்கல் வைத்தனர். இவர்கள் புதிய  உலக சாதனை படைத்துள்ளனர். அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது என்றார்.  நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், மகுடீஸ்வரன், கார்த்திகேயன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/கேஎஸ்ஆர்கல்லூரியில்-சாதனை-பொங்கல்-விழா-3075397.html
3075396 தருமபுரி நாமக்கல் அரசுப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, January 12, 2019 05:19 AM +0530 பரமத்தி வேலூர் வட்டம்,பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து வேளாண் ஆசிரியர் தங்கவேல், போகிப்பண்டிகையன்று பழைய பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல், காற்று ஆகியவை மாசடைவது குறித்து மாணவ,மாணவியர்களிடையே விளக்கிக் கூறினார். 
மாலையில் புகையில்லா போகி குறித்து மாணவ,மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம்,பழைய டயர்,டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க மாட்டோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் ,பொதுமக்களுக்கு துண்டு ப்பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தலைமை தாங்கினார். பேரணியில் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பசுமைப் படை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/அரசுப்-பள்ளியில்-புகையில்லா-போகி-விழிப்புணர்வு-பேரணி-3075396.html
3075395 தருமபுரி நாமக்கல் மது,போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் தொடக்கிவைத்தார் DIN DIN Saturday, January 12, 2019 05:09 AM +0530 நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுப்பழக்கம், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேரணிக்கு தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அர.அருளரசு, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு, மதுப் பழக்கம், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
 பேரணியில் கே.எஸ்.ஆர்.கல்லூரி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப் பணி மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இந்தப் பேரணியானது திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி திருச்செங்கோடு பேருந்து நிலையம் - ஈரோடு சாலை  வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. 
இந்தப் பேரணியில் கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை பாதிக்கப்படும், உயிரிழப்பு ஏற்படும், போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, கள்ளச்சாராயம் ஓர் உயிர்க்கொல்லி, கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்திச் சென்றனர். 
இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளார் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) சு.செந்தில், துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.சண்முகம், உதவி ஆணையர்(கலால்) எம்.இலாஹிஜான் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/மதுபோதைப்-பொருள்களுக்கு-எதிரான-விழிப்புணர்வு-பேரணி-அமைச்சர்-தொடக்கிவைத்தார்-3075395.html
3075394 தருமபுரி நாமக்கல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தத்தால்  தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது: அமைச்சர் பி.தங்கமணி DIN DIN Saturday, January 12, 2019 05:08 AM +0530 வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம்,வாங்கலுக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட தரைவழிப் பாலத்தில் அமைக்கப்பட்ட எல்இடி மின் விளக்குகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர் . 
தொடர்ந்து,  அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :  வல்லூர் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகாவாட் கொண்ட மூன்று மின் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மின் நிலையத்தை மூடுமாறும், மின் உற்பத்தியை நிறுத்துமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்வதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும்,  அதற்கு ஈடாக மின்சாரம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இதனால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது. வல்லூர் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலை அப்புறப்படுத்த மத்திய அரசு நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்.  நீதிமன்ற தீர்ப்பின் ஆணை கிடைத்தவுடன் வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
அதேபோல,  எண்ணூர் மின் நிலையத்துக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு ரூ.1000 பரிசு அளித்துள்ளது.  இதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே அதை குறை கூறி வருகின்றன.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.
    இந் நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/வல்லூர்-அனல்-மின்-நிலையத்தில்-உற்பத்தி-நிறுத்தத்தால்-தமிழகத்தில்-மின்-தட்டுப்பாடு-பிரச்னை-ஏற்படாது-3075394.html
3075393 தருமபுரி நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கு:  ஜன.18-க்கு ஒத்திவைப்பு DIN DIN Saturday, January 12, 2019 05:08 AM +0530 கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து,  வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 
 சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை,  நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி  சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.  கோகுல்ராஜின் தாய் சித்ரா,  அண்ணன் கலைச்செல்வன்,  கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி,  அவரது தாய் செல்வி  உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,  அவரது கார் ஓட்டுநர் அருண் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.  தொடர்ந்து 2 ஆவது நாளாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.  அப்போது சம்பவம் தொடர்பாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட 11 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மணிவண்ணன் அடையாளம் காட்டினார்.
 இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.   அன்று யுவராஜ் தரப்பு வழக்குரைஞர் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. 
 மேலும், அன்று அரசுத் தரப்பு சாட்சியான நாமக்கல் நல்லிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.  கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நல்லிப்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.  இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/12/கோகுல்ராஜ்-கொலை-வழக்கு--ஜன18-க்கு-ஒத்திவைப்பு-3075393.html