Dinamani - தருமபுரி - https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3011650 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, October 1, 2018 11:13 AM +0530
தருமபுரி: யமஹா மற்றும் எம்எஸ்ஐ தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து தருமபுரியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. நாகராசன், மாநில துணைத் தலைவர் எம். சந்திரன், மாவட்டப் பொருளாளர் சி. முரளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சென்னையில் யமஹா மோட்டார் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழிலாளர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
எம்எஸ்ஐ கொரிய நிறுவனத்தில் ஏறத்தாழ 24 நாள்களாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/சிஐடியு-தொழிற்சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-3011650.html
3011649 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி குன்னத்தூரில் பூட்டிக்கிடக்கும் மாணவர் விடுதி திறக்கப்படுமா? DIN DIN Monday, October 1, 2018 11:12 AM +0530
ஊத்தங்கரை: ரூ.31.50 லட்சத்தில் ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூரில் பூட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட தொலைவிலிருந்து வரும் ஏழை மாணவர்களின் வசதிக்காக குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  அருகே 2004-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டப்பட்டது. தொடக்கத்தில் அந்த விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வந்தனர். இதனிடையே மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2006முதல் விடுதி பூட்டப்பட்டது. இந்த நிலையில்,  15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விடுதி இயங்கி வருகிறது.
இந்த விடுதியில் இரண்டு அறை மட்டுமே உள்ளதால் மாணவர்கள் குளிக்கவும், உறங்கவும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அனைத்து வசதிகளும் நிறைந்த மாணவர் விடுதி பூட்டப்பட்டுள்ளதால், அப் பகுதியில் முள்புதர்கள் அடர்ந்து சமூக விரோத நிகழ்வுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது பூட்டியுள்ள இந்த விடுதியை மீண்டும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகவோ அல்லது வகுப்பறைகளுக்கோ பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/குன்னத்தூரில்-பூட்டிக்கிடக்கும்-மாணவர்-விடுதி-திறக்கப்படுமா-3011649.html
3011648 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு DIN DIN Monday, October 1, 2018 11:11 AM +0530
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், கோலாரை அடுத்துள்ள சினிகினிஅள்ளியைச் சேர்ந்த ஆனந்த ரெட்டியின் மகன் ரஞ்சித்(21). பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சனிக்கிழமை சென்றார்.
பையனப்பள்ளி அருகே நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததில் காயமடைந்த ரஞ்சித் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/சாலை-விபத்தில்-கல்லூரி-மாணவர்-சாவு-3011648.html
3011646 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நில அபகரிப்பு வழக்கு: சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி DIN DIN Monday, October 1, 2018 11:11 AM +0530
ஒசூர்: ஒசூரில் நில அபகரிப்பு செய்ததாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி.
ஒசூரில் 32 ஏக்கர் நிலத்தை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரித்தது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒசூர் கம்மசந்திரத்தைச் சேர்ந்த அஞ்சான ரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறியது:
இந்த வழக்குக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சர்கள் மீது சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும்
விளம்பரத்துக்காகவே இதுபோன்ற புகார்கள் அளிக்கின்றனர். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/நில-அபகரிப்பு-வழக்கு-சட்டப்படி-எதிர்கொள்வேன்-அமைச்சர்-பாலகிருஷ்ணா-ரெட்டி-3011646.html
3011645 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி "அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆசிரியர்கள் களமிறங்க வேண்டும்' DIN DIN Monday, October 1, 2018 11:10 AM +0530
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கியுள்ள, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஆசிரியர்களும், செயற்பாட்டாளர்களும் களமிறங்க வேண்டும் என பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் செயலர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதிகளில் உள்ள சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்களையும் ஒருங்கிணைத்து வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற நம்பிக்கை மக்களுக்கு உருவாக்க வேண்டும். 
அந்தந்தப் பகுதி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். பணிகளின் போது நமக்கு முதலில் வரும் சிக்கல், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதாக இருக்கும். எனவே, பள்ளி மேலாண்மைக் குழு, கிராமசபைக் கூட்டங்களை இதற்காக நாம் பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிப்பறை பராமரிப்பு இல்லை போன்ற பிரச்னைகள்தான் உள்ளன. இவற்றை சரி செய்வதற்கு கிராமசபைக் கூட்டங்களில் வலியுறுத்துவதும், பள்ளி மேலாண்மைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதும் முக்கியமான பணிகள்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஏராளமான சமூக அமைப்புகள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கின. ஆனால், இப்போது பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 
சாதாரண மக்களின் கல்வியிலும், சுகாதாரத்திலும் பணம் கொள்ளையடிக்கப்படுவது நல்லதல்ல. இதைத் தடுக்க வேண்டும். இதற்காக நாம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். வரும் நவம்பர் 18ஆம் தேதி பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் ஓராண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெறவுள்ளது. கல்வியாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதில் தருமபுரி மாவட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கவிதா, அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, இயற்கைப் பாதுகாப்புச் சங்க நிர்வாகி தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/அரசுப்-பள்ளிகளை-மேம்படுத்த-ஆசிரியர்கள்-களமிறங்க-வேண்டும்-3011645.html
3011643 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி அரூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல் DIN DIN Monday, October 1, 2018 11:10 AM +0530 அரூர்: அரூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரூரில் அச் சங்கத்தின் 14-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஆர்.எழில் அரசன் தலைமை வகித்தார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :  அரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் இல்லை. இதனால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
எனவே, அரூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான படுக்கை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
 தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரூரில் அரசு வேளாண்மை கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்.
 தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க மாவட்டத் தலைவர் சி.வேலாயுதம், செயலர் பால சிங்கம், பொருளர் ஆர்.பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/அரூர்-அரசு-மருத்துவமனையை-மேம்படுத்த-வலியுறுத்தல்-3011643.html
3011642 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் DIN DIN Monday, October 1, 2018 11:09 AM +0530
பென்னாகரம்: வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்.30) ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. 
கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். பிறகு குடும்பத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை முடிவதால் வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
தற்போது அருவிகளில் போதிய தடுப்புகள் அமைக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் தேய்த்து அருவிகளில் குளிப்பதற்கு பலரும் ஆர்வம்காட்டினர். 
தொங்கும் பாலம், முதலைப் பண்ணையைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், பூங்காவில் குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஒகேனக்கல்லில்-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-3011642.html
3011641 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவை DIN DIN Monday, October 1, 2018 11:09 AM +0530
தருமபுரி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பேரவையின் மாவட்ட அளவிலான அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளதால், ஐயப்ப பக்தர்களின் விருப்பத்தை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனத் தலைவர் எம்.பி. முனுசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/நீதிமன்ற-தீர்ப்பை-மறுபரிசீலனை-செய்ய-வேண்டும்-தமிழக-ஐயப்ப-பக்தர்கள்-பேரவை-3011641.html
3011640 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி வத்தல்மலையில் துப்பாக்கி கண்டெடுப்பு DIN DIN Monday, October 1, 2018 11:08 AM +0530 அரூர்: கடத்தூர் அருகேயுள்ள வத்தல்மலையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை
கண்டெடுத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வத்தல்மலையில் கடத்தூர் காவல் ஆய்வாளர் சரவண குமரன் தலைமையில்
போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பகுதியில் பால்சிலம்பு பகுதியில் உள்ள முள்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் கண்டெடுத்தனர்.
மேலும்,  அப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அப் பகுதியைச் சேர்ந்த சின்னவேல் (47), ராமன் (37), மாது (46) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/வத்தல்மலையில்-துப்பாக்கி-கண்டெடுப்பு-3011640.html
3011639 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி விஸ்வகர்ம சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல் DIN DIN Monday, October 1, 2018 11:08 AM +0530
நாமக்கல்: விஸ்வகர்ம சமூகத்தை எம்பிசி பட்டியலில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.  இடைக்காலமாக, கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 
அகில இந்திய விஸ்வகர்ம பேரவையின் தேசிய பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு தேசிய தலைவர் பி.எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்தார்.  பொதுச் செயலர் இ.மாணிக்கவேலு, ஆண்டறிக்கை வாசித்தார்.  தமிழ் மாநிலத் தலைவர் ஏ.குமார் ஆச்சாரி துவக்க உரையாற்றினார்.  நாமக்கல் மாவட்ட செயலாளர்
வி.ஜெகதீசன் ஆச்சாரிவரவேற்றார். 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தமிழக அரசு விஸ்வகர்ம சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்.  இடைக்காலமாக டாக்டர் அம்பா சங்கர் அறிக்கைப்படி கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்திய அளவில் விஸ்வகர்ம சமூகம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண நீதிபதி ரோகிணி ஆணையத்திடம் கோரிக்கை மனுவும்,  நேர்முக சாட்சியமும் அளித்ததை ஏற்று மத்திய அரசு,  விஸ்வகர்ம சமூகத்துக்கு ஓ.பி.சி.யில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். 
மத்திய, மாநில அரசு செப்டம்பர் 17 ஆம் தேதியை விஸ்வகர்ம தினம் என அறிவிக்க வேண்டும்.  எம்.கே.தியாகராஜ பாகவதர் புகழைப் போற்றும் வகையில், தமிழக அரசு மணிமண்டபம் எழுப்பி, அதில் அவரது வெண்கலச் சிலையை நிறுவி கௌரவப்படுத்திட வேண்டும். 
திருச்சியில் புனரமைக்கப்பட்டு வரும் கலையரங்குக்கு எம்கேடி கலையரங்கம் என பெயர் சூட்ட வேண்டும்.  தமிழகத்தில் உள்ள தச்சு, பட்டறைகளுக்கு வனத்துறையின் மூலம் உரிமம் மற்றும் மின்சார துறை மூலம் மின் இணைப்பு தங்கு தடையின்றி உடனடியாக கிடைக்க வேண்டும்.
அரசு சிற்ப கலை கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களும், மாணவர் சேர்க்கையிலும் 50 சதவீதம் பாரம்பரிய விஸ்வகர்ம சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 
பாரம்பரிய பொற்கொல்லர்களை அரசு திருக்கோயில்களில் ஓர் அறங்காவலராக நியமித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாரம்பரிய நகை தொழிலாளியை, வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நியமித்து,  பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/விஸ்வகர்ம-சமூகத்தை-எம்பிசி-பட்டியலில்-சேர்க்க-வலியுறுத்தல்-3011639.html
3011638 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் கருத்தரங்கு DIN DIN Monday, October 1, 2018 11:07 AM +0530
ராசிபுரம்: ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் சார்பில் கல்வி சுரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் தேங்கல்பாளையம் வித்யாநிகேதன் இன்டெல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்  ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எல். சிவக்குமார் தலைமை வகித்தார்.
திட்டத் தலைவர் எஸ். பாலாஜி வரவேற்றார். மாவட்ட கல்வியறிவு திட்டத் தலைவர் ஏ. வெங்கேடேஸ்வர குப்தா, கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். ரோட்டரி உதவி ஆளுநர் எஸ். பிரகாஷ், மாவட்ட ஆளுநரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆளுநர் ஏ. நிர்மல்பிரகாஷ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ரோட்டரி மேற்கொண்டு வரும், சேவை திட்டங்கள், கல்வி வளர்ச்சிக்கான பணிகள் குறித்துப் பேசினார்.
மாவட்ட ஆளுநர் தேர்வு ஏ.கே. நடேசன், முன்னாள் ஆளுநர்கள் தர்மேஷ் படேல், கோவிந்தராஜன், ஆளுநர் நாமினி கே.எஸ். வெங்கேடசன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதைத்தொடர்ந்து இன்ஜினியர் டிஹெலினா கிறிஸ்டோபர், சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்று "கல்வி எனும் அறம்' என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் ஆசிரியர் மேம்பாடு, ஆசிரியர்களை ஊக்குவித்தல், ஆன்லைன் கல்வி முறை, மூத்தோர் கல்வியின் அவசியம், பள்ளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்துதல், தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கான நிதியுதவிகள் போன்றவை குறித்தும், பல்வேறு தரப்பினரும் பேசினர்.
பின்னர் கிளப் தலைவர்கள், உறுப்பினர்களுக்கிடையே திட்டம் குறித்து விவாதம் நடைபெற்று, சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. பின்னர், கருத்தரங்கில் பங்கேற்ற மெகா ஸ்டார் கிளப்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் ரோட்டரி சங்கச் செயலர் எஸ். முரளி, பொருளாளர் கே. ராமசாமி, முன்னாள் தலைவர்கள் டாக்டர் எம். ராமகிருஷ்ணன், என்.பி.ராமசாமி, கே.குணசேகர், சிட்டிவரதராஜன், வி.சேதுராமன், பி.சீனிவாசன், பி.நடராஜன், திட்டச் செயலாளர் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம், பொருளாளர் எஸ். கதிரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ராசிபுரம்-ரோட்டரி-சங்கம்-சார்பில்-கருத்தரங்கு-3011638.html
3011637 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுகோள் DIN DIN Monday, October 1, 2018 11:07 AM +0530
திருச்செங்கோடு: எலச்சிபாளையம் -மல்லசமுத்திரம் ஒன்றியத்தின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு ஒன்றியத் தலைவர்  சம்பத்குமார் தலைமையில் எலச்சிபாளையம் சங்க அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ரவி பேரவையைத் துவக்கி வைத்துப் பேசினர். மாவட்டச்  செயலாளர்  கோவிந்தராஜ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். 
ஒன்றியத் தலைவராக ராஜி, ஒன்றியச் செயலாளராக சக்திவேல், ஒன்றியப் பொருளாளராக மணிவேல், துணைத் தலைவராக ஜனா, துணைச் செயலாளராக  சர்மிளா உள்பட 11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்.
பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
எலச்சிபாளையம்-மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும். ஒன்றியம் முழுவதும் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
வையப்பமலை எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு  இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். எலச்சிபாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரமங்கலம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூட வசதி அமைத்துத் தர வேண்டும்.
ஒன்றியத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், புதிய தொழிற்சாலை துவங்கிட வேண்டும். மேலும் பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/மல்லசமுத்திரம்-ஒன்றியத்தில்-அரசு-கலைக்-கல்லூரி-அமைக்க-வேண்டுகோள்-3011637.html
3011636 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பார்வையிழப்பு தடுப்புத் திட்ட பணியாளர்கள் கோரிக்கை DIN DIN Monday, October 1, 2018 11:06 AM +0530
நாமக்கல்: மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பார்வையிழப்பு தடுப்பு சங்கப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  அனைத்து மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க மாநில தலைவர் கல்பனா தேவி தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  அதில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரபிரசாத் ஆகியோர் பேசினர். 
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  மருத்துவத் துறையில் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.  சம வேலைக்கு சம ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.  அனைத்து மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பணி பாதுகாப்புக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என பணியாளர்களை அச்சுறுத்தும் மாநில திட்ட இயக்குநர் மீது தொழிலாளர் விரோத போக்கு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பணியாற்றும் பார்வையிழப்பு தடுப்பு சங்கப் பணியாளர்கள் மீது மாவட்ட திட்ட மேலாளர்களின் பழிவாங்கும் வகையிலான
நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.  நலப் பணிகள் அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணியமர்த்தப்படடு, தொடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் மாற்றுத் திறானாளிகளை அரசு ஆணை 5-இன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/பணிப்-பாதுகாப்பை-உறுதிப்படுத்த-பார்வையிழப்பு-தடுப்புத்-திட்ட-பணியாளர்கள்-கோரிக்கை-3011636.html
3011634 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஆத்தூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி போராட்டம் DIN DIN Monday, October 1, 2018 11:06 AM +0530
ஆத்தூர்:   ஆத்தூரில் போலீஸாரைக் கண்டித்து அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆத்தூர் உடையார்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, எதிராக சேலத்தில் இருந்துசென்னைக்கு சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து வந்தது. அந்த பேருந்து  முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றபோது,  உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் மண் சாலையில் இறங்கியதால் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து  உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம்,  ஆத்தூர் பேருந்து நிலையத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட  பேருந்து ஓட்டுநரிடம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர் அலட்சியமாக பதில் கூறினாராம். இதையடுத்து ஓட்டுநரை காவல்நிலையத்துக்கு வருமாறு உதவி ஆய்வாளர் அழைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் கோட்டஅரசுப் பேருந்து ஓட்டுநர்கள்  பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள்அவதியடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சமாதானப்படுத்தினார்.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஆத்தூரில்-அரசுப்-பேருந்து-ஓட்டுநர்கள்-பேருந்தை-நிறுத்தி-போராட்டம்-3011634.html
3011633 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஆற்றில் மணல் அள்ளியதாக ஜேசிபி, டிராக்டர்கள் பறிமுதல்: 5 பேர் கைது DIN DIN Monday, October 1, 2018 11:05 AM +0530
தம்மம்பட்டி:  கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில்  சுவேத நதியில் மணல் அள்ளியதாக 3 டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
74 கிருஷ்ணாபுரத்தில் சுவேத நதியில் கடந்த இருநாள்களாக நள்ளிரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக சுவேத நதி ஆற்றுப்படுகை விவசாயிகள் சார்பில் போலீஸாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து  ஆத்தூர் டி.எஸ்.பி.பொன்கார்த்திக்குமார் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை 74 கிருஷ்ணாபுரம் சுவேத நதியில் சோதனை செய்தனர்.
அப்போது  ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆற்றில் 3 டிராக்டர்களில் அனுமதியின்றி  மணல் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து மணல் அள்ளிய 3 டிராக்டர்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸார்  பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் மீது கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி  அருகே  74 கிருஷ்ணாபுரம் மற்றும் தம்மம்பட்டி  ஆற்றில்   மணல் அள்ளியதாக  5 வாகனங்களை  போலீஸார்  பறிமுதல்  செய்து, 5 பேரை  கைது   செய்தனர்.
74 கிருஷ்ணாபுரத்தில் டிராக்டர் உரிமையாளர்கள் புவிராஜ், செந்தில் ,பேரளிவான்,  ஆணையாம்பட்டி மோகன்ராஜ், ஜேசிபி  உரிமையாளர் மணிகண்டன்  ஆகிய 5 பேரை டி.எஸ்.பி. பொன்கார்த்திக்குமார் உத்தரவின்பேரில்  கெங்கவல்லி,  தம்மம்பட்டி போலீஸார் கைது செய்துள்ளனர்.  மேலும்  சுதாகர், சேகர், அரவிந்த் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.   74 கிருஷ்ணாபுரத்தில்  சுப்ரமணி,  செந்தில்குமார் ஆகியோரின் விவசாயத் தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 யூனிட்  மணலை   வட்டாட்சியர் வரதராஜன் பறிமுதல் செய்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஆற்றில்-மணல்-அள்ளியதாக-ஜேசிபி-டிராக்டர்கள்-பறிமுதல்-5-பேர்-கைது-3011633.html
3011632 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் DIN DIN Monday, October 1, 2018 11:05 AM +0530
சேலம்:  இந்தியன் வங்கியின் சேலம் மண்டலம் சார்பில் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமில் 14 இந்தியன் வங்கியின் கிளை மேலாளர்கள், 140 வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.உதயகுமார் வரவேற்றார். முகாமின் நோக்கம் குறித்து துணை மண்டல மேலாளர் என்.ரவிகுமார் எடுத்துரைத்தார். 
இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.செல்வராஜ், வாடிக்கையாளர்களின்  உரிமைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் ராமச்சந்திரன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றியும், சிறு-குறு தொழில்முனைவோருக்கு அளிக்கப்படும் இதர தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் விளக்கினார்.
இதில் வாடிக்கையாளர்கள் உரிமைகள், சிறு-குறு தொழில்முனைவோருக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள், வங்கிக் கடன் வசதிகள், மின்னணு பரிவர்த்தனைகள் பற்றி காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/இந்தியன்-வங்கி-சார்பில்-வாடிக்கையாளர்-உரிமைகள்-பற்றிய-விழிப்புணர்வு-முகாம்-3011632.html
3011631 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி வாய்க்கால் பாலத்தின் சுவரை சீரமைக்க கோரிக்கை DIN DIN Monday, October 1, 2018 11:04 AM +0530
சங்ககிரி: சங்ககிரி வட்டம்,  தேவூரை அடுத்த அரசிராமணி மேட்டுப்பாளையத்தில் இடிந்துவிழுந்துள்ள வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைக்க  விவசாயிகள்,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய்  தேவூரை அடுத்த அரசிராமணி மேட்டுப்பாளையம்  வழியாகச் செல்கிறது. இப்பாலத்தை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர், சிறுமிகள் விடுமுறை நாள்களில் கால்வாயில்  விளையாடி வருகின்றனர். 
இந்நிலையில் இந்த தரைப் பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒருபகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்துவிட்டது. அப்பகுதியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்விளக்கு இல்லாததால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.   
எனவே பொதுப்பணித் துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைக்க வேண்டும் என்று  விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/வாய்க்கால்-பாலத்தின்-சுவரை-சீரமைக்க-கோரிக்கை-3011631.html
3011612 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஏற்காட்டில் இரவு நேரங்களில் ஆட்டோக்களை இயக்கத் தடை DIN DIN Monday, October 1, 2018 10:28 AM +0530
ஏற்காடு:  சேலம் மாவட்டம்,  ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு  சுற்றுலா வந்த பயணிகளிடம் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் நகை, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்
பட்டுள்ளது. 

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், ஒண்டிக்கடை, காந்தி பூங்கா மற்றும் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் , சுற்றுலா கார்களை இரவு 9.30 மணிக்கு மேல்நிறுத்தக்கூடாது.  

மேலும், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் புறக்காவல் நிலையத்தில் இரவுக் காவலர்கள் பணியில் இருப்பார்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இரவு நேரங்களில்  ஆட்டோ மற்றும் வாகனம் தேவைப்படுமெனில் காவல் துறையினர் உதவுவார்கள். 

இதுதொடர்பான உதவிக்கு புறக்காவல் நிலைய தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஏற்காட்டில்-இரவு-நேரங்களில்-ஆட்டோக்களை-இயக்கத்-தடை-3011612.html
3011615 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு DIN DIN Monday, October 1, 2018 10:27 AM +0530
ஏற்காடு:  சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக்காணப்பட்டது.  

பள்ளிகள் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். ஏற்காட்டில் படகு இல்லம்,  மான்பூங்கா,  அண்ணாபூங்கா, ரோஜா தோட்டம்,  பக்கோட காட்சி முனை,  சேர்வராயன் கோயில் , கிளியூர் நீர் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் காணமுடிந்தது.

படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகுசவாரி சென்று மகிழ்ந்தனர். மலைப் பாதைகளிலும் சுற்றுலா வாகனங்கள் அதிகமாகக் காணப்பட்டன. மேலும் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலாப் பகுதி சாலையோர பழக்கடைகளில் மலை வாழை, மிளகு, வெண்ணெய்ப் பழம் மற்றும்  ஏற்காட்டில் விளையும் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஏற்காட்டுக்கு-சுற்றுலாப்-பயணிகள்-வருகை-அதிகரிப்பு-3011615.html
3011623 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாடக இயக்குநர்கள், கலைஞர்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் இணைக்க வேண்டும் DIN DIN Monday, October 1, 2018 09:54 AM +0530
பரமத்திவேலூர்: நாடக இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் இணைக்க வேண்டும் என பரமத்திவேலூரில் நடைபெற்ற சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக தொழில்முறை நாடக இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் வைரம் வரதாஜன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். சங்க வரவு, செலவு கணக்குகளை பொதுச் செயலாளர் வானதிகதிர் வாசித்தார்.

மாநில இணைப் பொதுச் செயலாளர் வல்லரசு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இச் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலை, பண்பாட்டு துறையிலும், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திலும் இணைக்க வேண்டும். அரசு நலத்திட்டங்கள் மற்றும் இலவச காப்பீட்டு நிதியை சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.

மாவட்ட அளவிலான அரசு விருதுகளைக் குறைந்தது 5 நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் சித்தன் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/நாடக-இயக்குநர்கள்-கலைஞர்களை-தென்னிந்திய-திரைப்பட-நடிகர்-சங்கத்தில்-இணைக்க-வேண்டும்-3011623.html
3011622 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி மதுபோதையில் தகராறு: காவலர் பணி இடைநீக்கம் DIN DIN Monday, October 1, 2018 09:53 AM +0530
நாமக்கல்: மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க காவல்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நாமக்கல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவரும் இடம் பெற்றிருந்தார். 

இவர் சனிக்கிழமை இரவு வளையப்பட்டியில் இருந்து காட்டுபுத்தூர் செல்லும் பிரிவு சாலையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கட்டட தொழிலாளர்களிடம் காவலர் ஆனந்தன் குடிபோதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சிறைபிடித்தனர். பின்னர் இதுகுறித்து மோகனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற மோகனூர் போலீஸார் அவரை மீட்டனர். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக நாமக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஜோர்ஜி ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

காவலர் ஆனந்தன் மதுபோதையில் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/மதுபோதையில்-தகராறு-காவலர்-பணி-இடைநீக்கம்-3011622.html
3011621 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தமிழ் மொழியும், இனமும் நிலைபெற கம்பன் நிலைக்க வேண்டும்: இலங்கை ஜெயராஜ் DIN DIN Monday, October 1, 2018 09:52 AM +0530
நாமக்கல்: தமிழ் என்ற மொழியும்,  தமிழன் என்ற இனமும் உலகத்தில் நிலைக்க வேண்டுமானால்,  கம்பன் நிலைக்க வேண்டும் என்றார் இலங்கை ஜெயராஜ். 
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா பட்டிமன்றம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  தொடக்க நிகழ்ச்சியாக சினேகா தமிழ்ச்செல்வனின் பரத நாட்டியம் நடைபெற்றது.  மருத்துவர் ஆர். குழந்தைவேல் பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கம்ப காவியத்தில் நம்மை பெரிதும் ஈர்ப்பது அன்பின் வலிமையா? அறத்தின் பெருமையா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு நடுவராக இலங்கை ஜெயராஜ் பங்கேற்றார். 
அன்பின் வலிமையே என்ற அணியில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,  முனைவர் மு. பழனியப்பன், குருநானாம்பிகை ஆகியோர் பேசினர்.  அறத்தின் பெருமையே என்ற அணியில் த. ராமலிங்கம்,  முனைவர் க. முருகேசன், முனைவர் விஜயசுந்தரி ஆகியோர் பேசினர்.
பட்டிமன்ற நிகழ்ச்சியில் இலங்கை ஜெயராஜ் பேசியது:
பல சம்பிரதாயங்களைக் காரணம் தெரியாமல் கடைப்பிடித்து நம் மொழியை,  மதத்தை, பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
எந்தக் காரியத்தையும் செய்யும் முன்பு இதை ஏன் செய்கிறோம்? என்ற தெளிவோடு செய்ய வேண்டும்.  தமிழ் என்ற மொழியும், தமிழன் என்ற இனமும் உலகத்தில் நிலைக்க வேண்டுமானால்,  கம்பன் நிலைக்க வேண்டும்.  இதனை நோக்கமாகக் கொண்டுதான் கம்பன் விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பதை அறிய வேண்டும். 
"கால மாற்றத்துடன் சில மாற்றங்களையும் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால்,  காலம் புறம் தள்ளிவிட்டுப் போய்விடும்.  அதே சமயத்தில் இனத்துக்கும், மொழிக்கும் உள்ள தன்மையில் இருந்து மாறக் கூடாது' என்கிறான் பாரதி.
இன்று எது நமது பண்பாடு,  கலாசாரம் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
மாற்றம் என்பது மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  மேலை நாட்டினரின் பழக்கவழக்கங்களில் இளைய தலைமுறை அடிமைப்பட்டுக்கிடக்கிறது.
தமிழன் என்ன சாதாரணமானவனா? 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் வந்துள்ளது.  அப்படி இலக்கண நூல் வரவேண்டுமானால், அதற்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி பயிலப்பட்டிருக்க வேண்டும் என இன்றைய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆங்கிலேயன் பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டான் என்பதற்காக, வாழ்க்கை நெறியையும் அவனிடம் படிக்க பார்க்கிறோம்.  கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் வியப்பை அளிக்கிறது.  அப்போது வாழ்ந்தவர்கள் உணவில் கூட மாற்று உணவை அங்கீகரிக்க மாட்டார்கள்.  இப்போது விளம்பரங்கள் மூலம் தமிழனை படிப்படியாக வெள்ளைகாரனாக மாற்றும் அநாகரிகம் நடந்து கொண்டிருக்கிறது.
இளங்கோ,  திருவள்ளுவர், கம்பன் ஆகிய 3 புலவர்கள் நிற்கும் வரையும் தமிழ் நிற்கும் என பாரதி சொல்கிறான்.  இதுபோல் தமிழனுக்கு உரிய மரபு ரீதியான, பாரம்பரிய குணங்களான தெய்வம் மறவாத குணமும், தன்னுடைய கடமையில் இருந்து தவறாத குணமும் இருக்கும் வரை தமிழ் வாழும் என்றும் பாரதி கூறுகிறான். 
ஆனால்,  இப்போது இந்தக் குணங்களில் இருந்து தமிழன் மாறிவிட்டான்போல் தெரிகிறது.  பிழைகளை சரியெனச் சொல்லும் சமுதாயத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பனின் தேவை இருந்ததை விட இப்போது 100 மடங்கு தேவை இருக்கிறது.  கம்பனைப் போற்றி விழா எடுப்பவர்களை சமுதாயம் போற்ற வேண்டும். கம்பனைப் போற்ற ஒரு சிலராவது இருப்பதால்தான் இன்னும் கம்பன் நிற்கிறான்.  கம்பன் நிற்பதால் தான் தமிழ் நிற்கிறது.  தமிழ் நிற்பதால்தான், தமிழ் இனம் நிற்கிறது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/தமிழ்-மொழியும்-இனமும்-நிலைபெற-கம்பன்-நிலைக்க-வேண்டும்-இலங்கை-ஜெயராஜ்-3011621.html
3011620 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்-சேலம் செல்லும் பேருந்துகள் புதுச்சத்திரம் நகருக்குள் வந்து செல்ல திமுக கோரிக்கை DIN DIN Monday, October 1, 2018 09:51 AM +0530
நாமக்கல்: நாமக்கல்-சேலம் செல்லும் பேருந்துகள் புதுச்சத்திரம் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றியச் செயலர் கெளதம் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் எஸ். காந்திசெல்வன் பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாவட்ட திமுக மற்றும் தமிழக அரசின் அனுமதி பெற்று நவனி கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது, நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழித்தட அனுமதி இருந்தும் புதுச்சத்திரம் நகருக்குள் வராமல் செல்கின்றன.
இதனால் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.
நான்கு வழிச்சாலையைக் கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன. இதனால், நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் புதுச்சத்திரம் நகருக்குள் வந்துசெல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கூட்டத்தில் மாவட்ட திமுக துணை செயலர் ராமலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், பொருளாளர் செல்வம், மகளிர் அணி துணை செயலர் மேனகா, ஊராட்சி செயலர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றியப் பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/நாமக்கல்-சேலம்-செல்லும்-பேருந்துகள்-புதுச்சத்திரம்-நகருக்குள்-வந்து-செல்ல-திமுக-கோரிக்கை-3011620.html
3011619 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் விவசாயி பலி DIN DIN Monday, October 1, 2018 09:50 AM +0530
குமாரபாளையம்:  குமாரபாளையம் அருகே டேங்கர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
குமாரபாளையம் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையைக் கடக்க முயன்றபோது,  சங்ககிரியிலிருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி மோதியது.  இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
விசாரணையில்,  உயிரிழந்தவர் பவானியை அடுத்த பருவாச்சி அருகேயுள்ள பாலப்பாளையத்தைச் சேர்ந்த சின்னாக்கவுண்டர் பழனிச்சாமி (55) என்பதும்,  காயமடைந்தவர் பருவாச்சியைச் சேர்ந்த குமாரசாமி (50) என்பதும் தெரியவந்தது.  இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/குமாரபாளையம்-அருகே-லாரி-மோதியதில்-விவசாயி-பலி-3011619.html
3011618 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: இன்று பயிற்சி வகுப்பு துவக்கம் DIN DIN Monday, October 1, 2018 09:49 AM +0530
நாமக்கல்: குரூப்-2 தேர்வு மாதிரி பயிற்சி நாமக்கல்லில் திங்கள்கிழமை துவங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தேர்வு வரும் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டது. 
 தற்போது குரூப் 2 தேர்வுக்கென தனியே திங்கள்கிழமை முதல் மாதிரித்தேர்வு பயிற்சி 25 நாள்கள் இலவசமாக நடைபெறுகிறது. இம்மாதிரித் தேர்வுகள் பாடவாரியாகவும் மற்றும் அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய மொத்த தேர்வாகவும் நடத்தப்பட உள்ளது.
இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/டிஎன்பிஎஸ்சி-குரூப்-2-தேர்வு-இன்று-பயிற்சி-வகுப்பு-துவக்கம்-3011618.html
3011617 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி: மீனவப் பட்டதாரிகளுக்கு அழைப்பு DIN DIN Monday, October 1, 2018 09:48 AM +0530
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவுச் சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்வு செய்து, தனிக் குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
தமிழக மீன்வளத் துறை, சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் தங்களுக்குத் தேவையான விவரங்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மீன்வளத் துறை உதவி இயக்குநர், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை-1 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 5-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/இந்திய-குடிமைப்-பணித்-தேர்வு-பயிற்சி-மீனவப்-பட்டதாரிகளுக்கு-அழைப்பு-3011617.html
3011616 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி ஆன்லைன் மணல் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல் DIN DIN Monday, October 1, 2018 09:47 AM +0530
சேலம்:  ஆன்லைன் மணல் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கண்ணையன் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் கண்ணையன், பொருளாளர் மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின்னர் சங்கச் செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு  40 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது.  ஆனால், 10 மணல் குவாரிகள் இயங்குவதாகக் கூறினாலும்,  தற்போது 2 குவாரிகள் மட்டுமே இயங்கிவருகின்றன.  இதனால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தி, எம் சேண்ட்  மணலை பயன்படுத்தக் கூறுகின்றனர். அரசே எம் சாண்ட் மணல் குவாரிகளை நடத்தி தரமான எம் சாண்ட் மணல் வழங்க வேண்டும். 
மேலும்,  முறைப்படி மணல் அள்ளி தமிழகத்திற்கு மட்டும் விநியோகம் செய்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மணல் தட்டுப்பாடு இருக்காது.  அதுமட்டுமல்லாமல்,  மழை பெய்தால் மீண்டும் மணல் சேகரமாகும்.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் யூனிட் ரூ.10 ஆயிரம் என்று கூறப்படுகிறது.   இதன்மூலம் மணல் விநியோகம் செய்தால் பல மடங்கு மணல் விலை அதிகரிக்கும்.   எனவே, இறக்குமதி மணலை தடை செய்து,  தமிழகத்திலேயே மணல் அள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
பெட்ரோல்,   டீசல் விலையை ஜி.எஸ்.டி.  வரிக்குள் கொண்டு வர வேண்டும்.  மூன்றாம் நபர் காப்பீடு உயர்வினால் லாரியின் மறுவிற்பனை விலை பலமடங்கு குறைந்துவிட்டது. 
ஆன்லைன் பதிவு மூலம் ஒரு லாரிக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் மணல் கிடைக்கிறது.  இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுவதால், ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும்.  15 நாள்களுக்குள் மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்,  தமிழகம் முழுவதும் மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகங்களில் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/ஆன்லைன்-மணல்-பதிவு-முறையை-ரத்து-செய்ய-வேண்டும்-மணல்-லாரி-உரிமையாளர்கள்-சங்கம்-வலியுறுத்தல்-3011616.html
3011614 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு DIN DIN Monday, October 1, 2018 09:46 AM +0530 சங்ககிரி:  சேலம் மாநகர குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பி.கே.சசிகுமார், மகுடஞ்சாவடி காவல் நிலைய புதிய ஆய்வாளராக  சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இக் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் ராஜரணவீரன் பதவி உயர்வு பெற்று, சேலம் மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்
பட்டுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/மகுடஞ்சாவடி-காவல்-ஆய்வாளர்-பொறுப்பேற்பு-3011614.html
3011613 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கெங்கவல்லி அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டிக் கடத்திய விவகாரம்: அதிகாரிகள் விசாரணை DIN DIN Monday, October 1, 2018 09:45 AM +0530
தம்மம்பட்டி:  கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரங்களை வெட்டிக் கடத்தியது குறித்து போலீஸார்,               வருவாய்த் துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர்.
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு, புங்கன், வேம்பு,  இலுப்பை உள்ளிட்ட  200-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் அருகே சில மரங்கள் அடியோடும், 15-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முழுவதும் மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது.  பள்ளி விடுமுறை என்பதால், மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பலருக்கும் தெரியவில்லை. இந்தப் பள்ளிக்கு இரவுக் காவலர்கள் இல்லை.  மேலும், பள்ளியின் நுழைவுவாயில் பூட்டப்படுவதே இல்லையாம். இதனைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் மர்மநபர்கள், வாகனங்கள் வைத்து மரங்களை வெட்டி எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளித் தலைமையாசிரியர் பாலமுருகன், கெங்கவல்லி போலீஸ் மற்றும் வருவாய்த்துறையில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினரும், காவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/கெங்கவல்லி-அரசுப்-பள்ளியில்-மரங்களை-வெட்டிக்-கடத்திய-விவகாரம்-அதிகாரிகள்-விசாரணை-3011613.html
3011611 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் DIN DIN Monday, October 1, 2018 09:44 AM +0530
சேலம்:  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் தலைவர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் அடிக்கடி வேலைநிறுத்தம் அறிவிக்கும் அரசியல் கட்சிகளை நாங்கள் புறக்கணிப்போம். முக்கிய நாள்களில் பந்த் அறிவிப்பதால் வணிகர்களும், பொதுமக்களும் பெருமளவு பாதிக்கின்றனர். 
அதனால் இனிமேல் வேலைநிறுத்தம் அறிவிக்கும்போது அந்தந்த மாவட்ட வணிகர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால், லாரி வாடகை உயர்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் என்பது ஏற்க முடியாது. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மாநில அரசின் நடவடிக்கையால் மக்களால் வாங்க முடியாமல் அத்தியாவசிய பொருள்களின் விலை பெருமளவு குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்ப்பேட்டை கடைவீதியில் உள்ள குப்பைகளை சாக்கடையில் கொட்டாமல் மாநகராட்சி குப்பை லாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/பெட்ரோல்-டீசல்-விலை-உயர்வை-கட்டுப்படுத்த-நடவடிக்கை-எடுக்க-வலியுறுத்தல்-3011611.html
3011610 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி வெள்ளக்கரடு திம்மராய பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு DIN DIN Monday, October 1, 2018 09:44 AM +0530
சங்ககிரி: சங்ககிரி அருகே உள்ள வெள்ளக்கரடு திம்மராயபெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. 
வெள்ளக்கரடு திம்மராய பெருமாள் கோயிலில் திம்மராயபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி,  பூதேவி சுவாமிகளுக்கு  ஆண்டுதோறும்  புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள்
நடைபெறும். 
நிகழாண்டு புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனர். 
கட்டளைதாரர்கள் சார்பில் திம்மராயபெருமாள் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி கருடவாகனத்தில் வீரப்பம்பாளையம், சங்ககிரி சாலை பகுதியில் வீதிஉலா வந்தார். விவசாயிகள், பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபட்டு துளசி தீர்த்தத்தை பெற்று சென்று வீடுகளில் விரதத்தை முடித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/வெள்ளக்கரடு-திம்மராய-பெருமாள்-கோயிலில்-சிறப்பு-வழிபாடு-3011610.html
3011609 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி DIN DIN Monday, October 1, 2018 09:43 AM +0530
சங்ககிரி:  மகுடஞ்சாவடி வட்டார வேளாண் துறை, அட்மா திட்டத்தின் சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், மகுடஞ்சாவடி அருகே  உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. 
மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) கே.பழனிசாமி தலைமை வகித்து கூட்டு பண்ணையத் திட்டம், மானாவாரி  வேளாண் இயக்கம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். 
 விதைச் சான்று அலுவலர் வேலு, தரமான விதை ரகத் தேர்வு, விதையின் அளவு, சான்று பொருத்தப்பட்ட விதையை உபயோகித்தல், பயிர் எண்ணிக்கை பராமரித்தல்,  விதை நேர்த்தியின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். 
அட்மா  திட்ட தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார்,  உழவன் செயலியின் முக்கியத்துவம் மற்றும் அட்மா திட்டம் குறித்து விளக்கினார். வேளாண் உதவி அலுவலர் விஜயகுமார் வேளாண் மானியம் திட்டம் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவித் தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 
அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளர் மகேந்திரன், வேளாண் உதவி அலுவலர்  பழனிவேல், தங்கவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/வேளாண்துறை-சார்பில்-விவசாயிகளுக்கு-பயிற்சி-3011609.html
3011608 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கூட்டுறவு சங்க ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.22 இல் ஆர்ப்பாட்டம்: சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் DIN DIN Monday, October 1, 2018 09:42 AM +0530
சேலம்: கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும்,  கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களையக் கோரியும் அக்டோபர்  22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு.  மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் 6-ஆவது மாநில மாநாடு அதன் தலைவர் சுகுமார் தலைமையில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் கலந்து கொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் பொது விநியோகம் உள்பட கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும்.  அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் கட்சியினர் மற்றவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தினர்.
ஆளும் கட்சிக்கு தோல்வியடையும் நிலையில் உள்ள சில கூட்டுறவுச் சங்கங்களில் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.  மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா,  கருணாநிதியால் செய்த கூட்டுறவு கடன் தள்ளுபடியால் ரூ.1,700 கோடி பாக்கி உள்ளது. இதன்மூலம் கூட்டுறவு நிறுவனம் ஏழையாக்கப்பட்டுள்ளது.  மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கூட்டுறவு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் நடத்த உள்ளோம்.
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குப் பிறகு இயக்குநர்கள் குழு அனைத்துப் பணிகளிலும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.  சிறு தொழில் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்துக்காக இயந்திரங்கள் வாங்கியதிலும்,  கணினியின் வருட பராமரிப்புக்காக கணினியின் மதிப்பைவிட இருமடங்கு செலவிடுகின்றனர்.   அரசுப் பணிமனைகளில் ஏராளமான பேருந்துகள் மாதக்கணக்கில் இயக்கப்படாமல் வைத்துள்ளனர்.  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இது பெரிய அளவில் போக்குவரத்து கழகத்துக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  செயல் தலைவர் அசோகன்,  பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம்,  துணைப் பொதுச் செயலாளர்கள் கு.உமாசந்திரன், எல்.கே.மனோகரன்,  பொருளாளர் சௌந்தரராஜன்,  உதவித் தலைவர்களாக வின்சென்ட்,  செல்வம்,  ரங்கசாமி,  சண்முகம், ஆர்.சேகர், இணைச் செயலாளர்களாக பன்னீர்செல்வம்,  ஜி.வி.செல்வகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2018/oct/01/கூட்டுறவு-சங்க-ஊழியர்-கோரிக்கைகளை-வலியுறுத்தி-அக்22-இல்-ஆர்ப்பாட்டம்-சிஐடியு-மாநிலத்-தலைவர்-சௌந்தர-3011608.html