Dinamani - கரூர் - https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3235690 திருச்சி கரூர் கரூரில் பலத்த மழை; வாகன ஓட்டிகள் அவதி DIN DIN Monday, September 16, 2019 05:46 AM +0530
கரூரில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது.
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வழக்கம்போல கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் 4 மணி வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 5.10 மணியளவில் வானில் கருமேகங்கள் கூடின. பின்னர் சிறிது நேரத்திலேயே தூறலுன் பெய்யத்தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக மாறியது. 
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா, உழவர்சந்தை, திருக்காம்புலியூர் ரவுண்டானா, சுங்ககேட், திருமாநிலையூர் ரவுண்டானா உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல ஓடி குட்டை போல தேங்கியது. 
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் இரவு 7.45 மணிக்கும் திடீரென மீண்டும் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, குளிர்ந்த காற்று வீசியது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/கரூரில்-பலத்த-மழை-வாகன-ஓட்டிகள்-அவதி-3235690.html
3235688 திருச்சி கரூர் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கக் கூட்டம் DIN DIN Monday, September 16, 2019 05:46 AM +0530
கரூரில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க நிர்வாகிகளின் மாநில கருத்துக் கேட்புக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தாந்தோணிமலையில் நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியன், பொருளாளர் ரா.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களின் ஊதிய முரண்பாடுகளை தமிழக அரசு உடனே களைய முன்வரவேண்டும், கூட்டத்தில் புதியதாக மாநில நிர்வாகிகள் தேர்வு செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/அரசுத்துறை-ஊர்தி-ஓட்டுநர்-சங்கக்-கூட்டம்-3235688.html
3235686 திருச்சி கரூர் மது போதையில் இளைஞர் கொலை: உடனுக்குடன் பழி தீர்க்கப்பட்ட கொலையாளி DIN DIN Monday, September 16, 2019 05:45 AM +0530
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இறந்தவரின் சகோதரர் அந்தக் கொலையாளியை உடனடியாக பழி தீர்த்தார்.
அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் மகன் ஆனந்த் (37). இவர், திருமணத்துக்குப் பின், பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தில் உள்ள தனது மாமனார் படைகாத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம் (34). ஆட்டோ ஓட்டுநர்.
இருவேறு சமூகத்தைச் சேர்ந்த சண்முகம் மற்றும் ஆனந்த் ஆகிய இருவருக்கும் இடையே கோயில் திருவிழா மற்றும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நல்லறிக்கை கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் சண்முகம் மற்றும் ஆனந்த் இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. 
இதையடுத்து சண்முகத்திடம், ஆனந்த் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த்  மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார். பலத்த காயமடைந்த சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 
இத்தகவலறிந்து, ஆத்திரமடைந்த சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம் (38), அரசு மதுபானக் கடைக்குச்சென்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கதிரவன் வழக்குப் பதிந்து, முருகானந்தம், ஆரோக்கியராஜ் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/மது-போதையில்-இளைஞர்-கொலை-உடனுக்குடன்-பழி-தீர்க்கப்பட்ட-கொலையாளி-3235686.html
3235685 திருச்சி கரூர் கரூரில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம் DIN DIN Monday, September 16, 2019 05:45 AM +0530
மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு அதிமுகவினர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன் முன்னிலையிலும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன், இளைஞரணி செயலாளர் விசிகே.ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர்கள் மார்கண்டேயன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முன்னதாக கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், நகரச் செயலாளர்கள் எஸ்பி.கனகராஜ், கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் கருணாநிதி, ரகுநாதன், கந்தசாமி மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/கரூரில்-அண்ணா-பிறந்தநாள்-கொண்டாட்டம்-3235685.html
3235684 திருச்சி கரூர் சிசிடிவி கேமராக்கள் திருடிய 3 இளைஞர்கள் கைது DIN DIN Monday, September 16, 2019 05:45 AM +0530
கரூரில் பலசரக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை திருடிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன் 4 சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருந்தார். இந்த கேமராக்களை சனிக்கிழமை நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் திருடிக் கொண்டிருந்தனர். 
இதனைக்கண்ட அப்பகுதியினர் மூன்று இளைஞர்களையும் கையும், களவுமாக பிடித்து கரூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிந்து மூன்று பேரையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் கரூர் சாலிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்(35), திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து(28), சக்திநகரைச் சேர்ந்த தமிழ்வாணன்(28) என தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெறுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/சிசிடிவி-கேமராக்கள்-திருடிய-3-இளைஞர்கள்-கைது-3235684.html
3235682 திருச்சி கரூர் திருச்சியில் ரயிலில் ஓட்டுநர் தவற விட்ட ரூ.2.50 லட்சம் கரூரில் மீட்பு DIN DIN Monday, September 16, 2019 05:44 AM +0530
கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் திருச்சியில் ரயிலில் தவற விட்ட பணம் ரூ.2.50 லட்சத்தை கரூரில் ரயில்வே போலீஸார் மீட்டு அவரிடமே ஒப்படைத்தனர். 
கடலூர் மாவட்டம், ஆபத்தாரணபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தயானந்தன் (50). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் மங்களூர் செல்ல சனிக்கிழமை பிற்பகலில விருத்தசாலத்தில் இருந்து புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயிலில் ஏறியுள்ளார். அப்போது கைப்பையில் ரூ.2.50 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளார். 
இந்நிலையில் ரயில் இரவு 8 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயிலில் இறங்கி நடைமேடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். 
அப்போது பணப்பையை ரயிலிலேயே வைத்துவிட்டு வந்துள்ளார். அவர் சாப்பிட்டுவிட்டு வரும் முன் ரயில் புறப்பட்டது. இதனைக்கண்டு ஓடிவந்தும் அவரால் ரயிலை பிடிக்க முடியாததால் இதுதொடர்பாக அங்குள்ள ரயில்வே சேவை மையத்தை நாடியுள்ளார். 
அங்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் வந்ததாகவும், தன் உடமைகளுடன் பணம் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். உடனே ரயில்வே அதிகாரிகள் கரூர் ரயில்நிலைய போலீஸாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 10.20 மணிக்கு கரூர் ரயில்நிலையத்திற்கு புதுச்சேரி-மங்களூர் ரயில் வந்ததும், கரூர் ரயில்நிலைய காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் ரயில்பெட்டியில் ஏறி தயானந்தனின் பணம் ரூ.2.50 லட்சத்தையும் மீட்டனர். 
பின்னர் தயானந்தை திருச்சியில் இருந்து பேருந்தில் வருமாறுக்கூறி அவர் கரூர் ரயில் நிலையம் வந்ததும் அவரிடம் விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/திருச்சியில்-ரயிலில்-ஓட்டுநர்-தவற-விட்ட-ரூ250-லட்சம்-கரூரில்-மீட்பு-3235682.html
3235675 திருச்சி கரூர் கரூரில் 8 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் DIN DIN Monday, September 16, 2019 05:42 AM +0530
கரூரில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் 8 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் புதூர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியது:
முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மூலம் கரூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 
 சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நஞ்சை புகளுர் பகுதியில் 1.15 டி.எம்.சி நீரை தேக்கும் கதவணை கட்ட ஆணை வழங்கப்பட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.     
மேலும், நெரூர் பகுதியிலும், குளித்தலை பகுதியிலும் கதவணை கட்டுவதற்கு ஆய்வு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அவ்வாறு கதவணைகள் அமைக்கப்படும்போது, மாயனூர், நஞ்சைபுகளுர், குளித்தலை, நெரூர் என 5 இடங்களிலும் உள்ள கதவணைகள் மூலம் சுமார் 5 டி.எம்.சி நீர் தேக்கிவைக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும். 
மேம்பாலங்கள் அமையும்: கரூர் மாவட்டத்தை கடந்து செல்லும் மாநில நெடுஞ்சாலை எண்-67 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்-7ல் விபத்துகளை தடுக்கும் வகையில் 8 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இடம் உள்ளவர்களுக்கு வீடுகட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இடம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படுகிறது என்றார். 
தொடர்ந்து  தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தார்சாலையில் ரூ.12.35 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், எல்.வி.பி நகர் மெயின்ரோடு மற்றும் குறுக்குத் தெருக்களில் உள்ள தார்சாலைகளில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.    
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர். காளியப்பன்,  கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, வட்டாட்சியர் செந்தில் (மண்மங்கலம்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/கரூரில்-8-இடங்களில்-மேம்பாலம்-அமைக்கப்படும்-அமைச்சர்-எம்ஆர்விஜயபாஸ்கர்-தகவல்-3235675.html
3235674 திருச்சி கரூர் செந்தில்பாலாஜி, ஜோதிமணி மீது போலீஸார் வழக்கு DIN DIN Monday, September 16, 2019 05:41 AM +0530
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரவக்குறிச்சி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து அணையின் கடைமடைப்பகுதியான கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சின்னதாராபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் மணியன் உள்ளிட்ட 100 பேர் மீது சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/செந்தில்பாலாஜி-ஜோதிமணி-மீது-போலீஸார்-வழக்கு-3235674.html
3235672 திருச்சி கரூர் க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு DIN DIN Monday, September 16, 2019 05:41 AM +0530
க.பரமத்தி அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்தார். 
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகேயுள்ள விஸ்வநாதபுரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி அருக்காணி (65). இவர் அங்குள்ள சூர்யமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்களுடன் களை எடுக்கச் சென்றுள்ளார். பின்னர் பிற்பகலில் மோட்டார் அறை அருகே சாப்பிட வந்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/கபரமத்தி-அருகே-மின்சாரம்-பாய்ந்து-மூதாட்டி-உயிரிழப்பு-3235672.html
3235671 திருச்சி கரூர் மது போதையில் முதியவரை அரிவாளால் வெட்டியவர் மீது வழக்கு DIN DIN Monday, September 16, 2019 05:41 AM +0530
மது போதையில் முதியவரை அரிவாளால் வெட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவைக்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்(60). விவசாயி. இவர் சனிக்கிழமை இரவு பிச்சம்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு, அங்குள்ள வாய்க்கால் அருகே நடந்துவந்தபோது, எதிரே போதையில் வந்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த தக்காசுப்ரமணியன்(40) என்பவர் தங்கராஜிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தக்காசுப்ரமணியன் தங்கராஜை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த தங்கராஜ் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் தக்காசுப்ரமணியன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/மது-போதையில்-முதியவரை-அரிவாளால்-வெட்டியவர்-மீது-வழக்கு-3235671.html
3235669 திருச்சி கரூர் உலக அமைதி வேண்டி மஹாலெக்ஷ்மி யாகம் DIN DIN Monday, September 16, 2019 05:41 AM +0530
தோகைமலை அருகே சின்னரெட்டியபட்டி பெரியக்காண்டியம்மன் கோயிலில் மழைவேண்டியும், உலக அமைதிக்காகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹாலட்சுமி யாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள சின்னரெட்டியபட்டியில் விநாயகர், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார்அம்மன்கள், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியே கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் பொதுமக்கள் சார்பில் உலக அமைதி வேண்டி 8ஆம் வருட அபிஷேகம் மற்றும் மஹாலெக்ஷ்மி யாக விழா நடந்தது. 
மன்னர்கள் காலத்தில் தங்கள் நாடு வளம் பெறவும், நல்ல மழை பெய்யவும் பொதுமக்கள் அனைவரும் வீரம், செல்வம், கல்வி பெற்று உலகில் அமைதியுடன் வெற்றியுடன் வாழ மஹாலெக்ஷ்மி யாகம் செய்வது வழக்கம்.  
அதேபோல் தற்போதும் உலக மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவும், பல வருடங்களாக மழை இல்லாத நிலையில், வறுமையில் இருக்கும் மக்கள் அதிலிருந்து விடுபட வேண்டியும் மஹாலெக்ஷ்மி யாகம் நடைபெற்றது.   இந்த யாக குண்டத்தில் பழங்கள், தேன், பால், தயிர், நெய், பல்வேறு வகையான சாதங்கள், கரும்பு, மஞ்சள், குங்குமம், கற்கண்டு உள்பட 1108 வகையான பொருட்களை கொண்டு யாகசாலை பூஜை செய்தனர். பின்னர் அதே பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பெரியக்காண்டியம்மனுக்கு பால் குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/உலக-அமைதி-வேண்டி-மஹாலெக்ஷ்மி-யாகம்-3235669.html
3235668 திருச்சி கரூர் கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் DIN DIN Monday, September 16, 2019 05:41 AM +0530
கரூரில் மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கரூர் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கர்பாபு தலைமை வகித்தார். செயலாளர் ரவிகுமார் வரவேற்றார். இதில் துணைத்தலைவர் காவிரிபாலு, பொருளாளர் ஆனந்த், முன்னாள் தலைவர்கள் செல்லமுத்து, வைரம்கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்ககேற்று பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியது: 
தற்போது மழைநீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம். 15 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 
நாளடைவில் அந்த உத்தரவு முறையாக அமலாக்கப்படாததல் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைப்பது தவிர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் இதனை தமிழக அரசு கடுமையாக்கியுள்ளது. இயற்கை வளங்களை அழிப்பதாலும், காற்று மாசுபடுவதாலும் மழை பொழிவு குறைந்துவிட்டது. தற்போது முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் 434 குளங்கள் தூர்வாரப்படுகின்றன. மழைநீர் உயிர்நீர் என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் மழைநீரை சேமிக்க முன்வர வேண்டும் என்றார். 
முன்னதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜனும் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
தொடர்ந்து உழவர்சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு  துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஜெய்ராம்ஸ் கல்லூரியின் தாளாளர் ராமசாமி மற்றும் கட்டட பொறியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/கரூரில்-மழைநீர்-சேகரிப்பு-விழிப்புணர்வு-முகாம்-3235668.html
3235666 திருச்சி கரூர் பொறியாளர் தினம்  கொண்டாட்டம் DIN DIN Monday, September 16, 2019 05:40 AM +0530
கரூரில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் சங்கம் சார்பில் மூத்த பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 
பொறியாளர் தினத்தினை முன்னிட்டு  தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன், அரிமா மண்டலத்தலைவர் சுப்ரமணிய பாரதி,  தமிழிசை சங்க நிர்வாகி க.ப.பாலசுப்ரமணியன், காந்தி கிராமம் ஷைன் சங்கத்தின் சீனிவாசபுரம்  ரமணன்  ஆகியோர் கரூர் நகரின்  மூத்த பொறியாளர்களுள் ஒருவரும், முனைவர்  பட்டம்  பெற்றவருமான ச. ராமநாதனுக்கு நூலாடை அணிவித்து பாராட்டினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/பொறியாளர்-தினம்--கொண்டாட்டம்-3235666.html
3235665 திருச்சி கரூர் எழுச்சி நாள் ஊர்வலம் DIN DIN Monday, September 16, 2019 05:40 AM +0530
கரூரில் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் சங்கம் சார்பில் வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த சங்கத்தின் எழுச்சி நாளையொட்டி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர ஊர்வலம் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன், மாநில தலைவர் டாக்டர் பிரபு தலைமையில் துவங்கியது. இப்பேரணி வெஞ்சமாங்கூடலூரில் நிறைவுபெற்றது. பசுபதிபாளையத்தில் சங்க கொடியேற்றப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/எழுச்சி-நாள்-ஊர்வலம்-3235665.html
3235322 திருச்சி கரூர் ரயிலில் கடலூர் பயணி தவற விட்ட ரூ.2.50 லட்சம் ஒப்படைப்பு DIN DIN Monday, September 16, 2019 01:31 AM +0530
கடலூரைச் சேர்ந்த பயணி திருச்சியில் ரயிலில் தவற விட்ட பணம் ரூ.2.50 லட்சத்தை கரூரில் ரயில்வே போலீஸார் மீட்டு அவரிடமே ஒப்படைத்தனர். 
கடலூர் மாவட்டம், ஆபத்தாரணபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தயானந்தன் (50). ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர் மங்களூர் செல்ல சனிக்கிழமை பிற்பகலில் விருத்தாசலத்தில் இருந்து புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயிலில் ஏறினார். அப்போது, கைப்பையில் ரூ.2.50 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளார். 
ரயில் இரவு 8 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். 
அப்போது பணப்பையை ரயிலிலேயே வைத்துவிட்டு வந்துள்ளார். அவர், சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் ரயில் புறப்பட்டது. இதைக் கண்டு ஓடிவந்தும் அவரால் ரயிலை பிடிக்க முடியாததால் இதுதொடர்பாக அங்குள்ள ரயில்வே சேவை மையத்தை நாடினார். 
அங்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் வந்ததாகவும், தன் உடைமைகளுடன் பணம் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். உடனே ரயில்வே அதிகாரிகள் கரூர் ரயில்நிலைய போலீஸாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இரவு 10.20 மணிக்கு கரூர் ரயில்நிலையத்துக்கு அந்த ரயில் வந்ததும், கரூர் ரயில்நிலைய காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் ரயில் பெட்டியில் ஏறி, தயானந்தனின் பணம் ரூ.2.50 லட்சத்தையும் மீட்டனர்.  
பின்னர், தயானந்தை திருச்சியில் இருந்து பேருந்தில் வருமாறு கூறி, அவர் கரூர் ரயில் நிலையம் வந்ததும் அவரிடம் விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/16/ரயிலில்-கடலூர்-பயணி-தவற-விட்ட-ரூ250-லட்சம்-ஒப்படைப்பு-3235322.html
3234874 திருச்சி கரூர் கரூரில் 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் திறப்பு DIN DIN Sunday, September 15, 2019 04:16 AM +0530
கரூரில் 5 இடங்களில் ரூ.29.25 லட்சம் மதிப்பில் உயர்மின்கோபுர விளக்குகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. 
கரூர் மாவட்டத்தை கடந்து செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் உயர்மின்கோபுர விளக்குகளை இயக்கி வைத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது:
தமிழக முதல்வர் சாலை பாதுகாப்பு நிதியை ரூ.20 கோடியிலிருந்து ரூ.65 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார். இதில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  
அதன் மூலம் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்துகள் ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கரூர்-கோவை சாலையில் உள்ள கோவிந்தம்பாளையம், ரோட்டுக்கடை, ரெட்டிபாளையம் பிரிவு, ஆண்டாங்கோவில் புதூர் பிரிவு மற்றும் வடிவேல்நகர் மில்கேட் பேருந்து நிறுத்தம் ஆகிய 5 பகுதிகளில் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் விபத்து ஏற்படாத வகையில், சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து தலா ரூ.5.85 லட்சம் வீதம் ரூ.29.25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.  
முன்னதாக கோடங்கிப்பட்டியில், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார். 
 இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டாட்சியர் அமுதா (கரூர்), திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.திருவிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/கரூரில்-5-இடங்களில்-உயர்கோபுர-மின்விளக்குகள்-திறப்பு-3234874.html
3234873 திருச்சி கரூர் பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை சரிவு DIN DIN Sunday, September 15, 2019 04:16 AM +0530
பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சர்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம்,  சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. 
இப் பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை  உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம்,அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைத் தயார் செய்கின்றனர். 
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையம் வெள்ள ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். 
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 5 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 10 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம்  ரூ.1,200 வரையிலும்,  அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. 
இந்த வாரம் சனிக்கிழமை (செப்.14) நடைபெற்ற ஏலத்துக்கு 4 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும்,  7 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. 
இதில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,150க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் சிப்பம்  ரூ.1,150க்கும் ஏலம் போனது. வியாபாரிகள் அதிக அளவில் வராததால் வெல்லம் விலைச் சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/பிலிக்கல்பாளையம்-ஏலச்-சந்தையில்-வெல்லம்-விலை-சரிவு-3234873.html
3234872 திருச்சி கரூர் பாலவிடுதியில் 76.2 மி.மீ மழை பதிவு DIN DIN Sunday, September 15, 2019 04:16 AM +0530
கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய இடிமின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலவிடுதியில் 76.2 மி.மீ மழை பதிவானது.
 கர்நாடகம், கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்துவருகிறது. 
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான கோடை வெயில் தாக்கிவந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ùளஇந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு விடிய, விடிய மழை பெய்தது. 
கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்): கரூர்-44.3, அரவக்குறிச்சி-8, அணைப்பாளையம்-15, க.பரமத்தி-32.2, குளித்தலை-19, தோகைமலை-24, கிருஷ்ணராயபுரம்-25.4, மாயனூர்-26, பஞ்சப்பட்டி-45.6, கடவூர்-25, பாலவிடுதி-76.2, மைலம்பட்டி-63 என மழை பதிவானது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/பாலவிடுதியில்-762-மிமீ-மழை-பதிவு-3234872.html
3234871 திருச்சி கரூர் பானிபூரி கடையில் தகராறு: இளைஞர் கைது DIN DIN Sunday, September 15, 2019 04:16 AM +0530
கரூரில் பானிபூரி கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர் காசிம் தெருவைச் சேர்ந்தவர் பானுபிரதாப்சிங்(39). இவர் கரூர் ஜவஹர் பஜாரில் மாலை நேரங்களில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிக்கிழமை இரவு பசுபதிபாளையம் ராமானூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார்(27) என்பவர் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் தரமறுத்தாராம். இதை தட்டிக்கேட்ட பானுபிரதாப்சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/பானிபூரி-கடையில்-தகராறு-இளைஞர்-கைது-3234871.html
3234870 திருச்சி கரூர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை DIN DIN Sunday, September 15, 2019 04:15 AM +0530
நோய்க்கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி(31). இவருக்கு திருமணமாகி மனைவி நந்தினி (27) மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/தொழிலாளி-தூக்கிட்டு-தற்கொலை-3234870.html
3234869 திருச்சி கரூர் புன்னம்சத்திரம் அருகே மதுவிற்றவர் கைது DIN DIN Sunday, September 15, 2019 04:15 AM +0530
புன்னம்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையம் பெருமாள் கோயில் பகுதியில் ஒருவர் அனுமதியின்றி மதுவிற்பதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு அனுமதியின்றி மதுவிற்ற அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (49) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/புன்னம்சத்திரம்-அருகே-மதுவிற்றவர்-கைது-3234869.html
3234793 திருச்சி கரூர் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: வி. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு DIN DIN Sunday, September 15, 2019 03:56 AM +0530 மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளும் அரசும், மாவட்ட நிர்வாகமும் முட்டுக்கட்டை போடுகின்றன என்று அரவக்குறிச்சி சட்டப்பே
ரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.
அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறக்கக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சின்னதாராபுரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்தின் கடைமடை வரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார், வந்த பிறகு தண்ணீர் திறக்கப்படும் என்கிறார்கள்.   குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கும் நிலை கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையானது கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்குச் சொந்தமானது. ஏதோ திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமானது போல அங்குள்ள சிலருக்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். 
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளும் அரசும், மாவட்ட நிர்வாகமும் முட்டுக்கட்டை போடுகின்றன. வெகு நாள்களுக்கு இந்த அரசு நீடிக்காது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் வழங்கியிருக்கின்றனர். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்றார்.
பேட்டியின்போது கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் ம. சின்னசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
விரைவில் மறியல்: முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் செந்தில்பாலாஜி பேசியபோது, நாங்கள் சிறை சென்றாவது, அமராவதி அணை நீரை கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு  பெற்றுத்தருவோம். இரண்டொரு நாள்களில் அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், விரைவில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/15/மக்கள்-நலத்திட்டங்களுக்கு-முட்டுக்கட்டை-வி-செந்தில்பாலாஜி-குற்றச்சாட்டு-3234793.html
3234182 திருச்சி கரூர் நெரூர் காவிரியாற்றில் மூழ்கிய  கல்லூரி மாணவர் உடல் மீட்பு DIN DIN Saturday, September 14, 2019 08:58 AM +0530 நெரூர் காவிரியாற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் உடலை தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை இரவு  மீட்டனர்.
கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்த வங்கி ஊழியர் சூர்யபிரகதீஸ் (24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக்ராஜா(19) உள்ளிட்ட 3 பேர் புதன்கிழமை நெரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது சூர்யபிரகதீசும், கார்த்திக்ராஜாவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 
இதில் சூர்யபிரகதீஸின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. ஆனால் கார்த்திக்ராஜாவின் உடலை மட்டும் தீயணைப்புத் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கார்த்திக்ராஜாவின் உடலையும் மீட்டனர். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/நெரூர்-காவிரியாற்றில்-மூழ்கிய--கல்லூரி-மாணவர்-உடல்-மீட்பு-3234182.html
3234181 திருச்சி கரூர் கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த மழை DIN DIN Saturday, September 14, 2019 08:58 AM +0530 கரூரில் வெள்ளிக்கிழமை மாலையில் சுமார் 2 மணி நேரம் இடிமின்னலுடன் பெய்த பலத்த  மழையால் சாலையில் மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை கால வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.  மாவட்டத்தில் வழக்கம்போல வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை  மாலை 5.50 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. 
பின்னர் இடிமின்னலுடன் பெய்த பலத்த மழையால் கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா, லைட்ஹவுஸ்கார்னர், சுங்ககேட், திருக்காம்புலியூர் ரவுண்டானா, வெங்கமேடு மேம்பாலம் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, சில்லக்குடி, பாடாலூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
மேலும், வயல்வெளிகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவு நீர் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் வீணாகி வருகிறது. இதனால், மழை நீர் சேமிப்பு மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆங்காங்கே பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் நகரில் பெய்த பலத்த மழையால் பெரம்பலூர் ரோவர் வளைவு உள்பட பல இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் விழுந்தன. மேலும், பெரம்பலூர் சிவன் கோயில் வளாகத்துக்குள் மழை நீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயக் கிணறுகள், குளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், நிலங்களை உழவு செய்யும் பணிகளையும் விவசாயிகள் மும்முரமாக தொடங்கியுள்ளனர். 
இதேபோல, தற்போது பெய்துவரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கொட் டித் தீர்த்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மதியம் வரை வெயிலும், மாலை நேரத்தில் லேசான மழையும் பெய்து வருகிறது. 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு இரவு 9.45 மணி வரை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது. மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போல  மழை நீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர் நகர் பகுதியான மார்க்கெட்,வெள்ளாளத் தெரு,ராஜாஜி நகர், புதுமார்க்கெட்,கல்லூரி சாலை,செந்துறை சாலை,திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதே போல் திருமானூர்,கீழப்பழுவூர்,தா.பழூர்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம்,மீன்சுருட்டி,செந்துறை,பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/கரூர்-பெரம்பலூர்-அரியலூர்-மாவட்டங்களில்-பலத்த-மழை-3234181.html
3234180 திருச்சி கரூர் "தூய்மை இந்தியா இயக்கத்தில் 10 கோடி தனிநபர் கழிப்பிடங்கள்' DIN DIN Saturday, September 14, 2019 08:57 AM +0530 தூய்மை இந்தியா இயக்கத்தில் நாடு முழுவதும் 10 கோடி தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் கே. தேவிபத்மநாபன் தெரிவித்தார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், நீர் மேலாண்மை இயக்கம், உடல் திறன்மிகு இயக்கம்  மற்றும் காந்தியடிகளின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 2014 அக். 2-ல் தொடங்கி காந்தியடிகளின் 150 பிறந்தநாளான வரும் அக்.  2- ல் நிறைவடைகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தில் நாடு முழுவதும் 10  கோடி தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் மூலம் நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமங்களாக மாறியுள்ளன.  தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியதால் நாட்டில் 34 மாநிலங்களில் 698  கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நோய்களைத் தடுக்க தூய்மை மிகவும் அவசியம் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு இந்த இயக்கத்தை செயல்படுத்தியது என்றார்.
தொடர்ந்து கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா பேசுகையில்,  அரசு உதவியுடன் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பிடங்களை மக்கள் முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் லோகேஷ், கரூர் மாவட்ட தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்,  மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஊராட்சி செயலர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக தாந்தோணி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஊராட்சி மக்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா நீர் மேலாண்மை இயக்க விழிப்புணர்வு பேரணி ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்றது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/தூய்மை-இந்தியா-இயக்கத்தில்-10-கோடி-தனிநபர்-கழிப்பிடங்கள்-3234180.html
3234179 திருச்சி கரூர் கரூர் நகரம்,  காணியாளம்பட்டியில் செப். 17-இல் மின் தடை DIN DIN Saturday, September 14, 2019 08:57 AM +0530 கரூர் நகரம் மற்றும் காணியாளம்பட்டி பகுதியில் வரும் 17-ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மாதாந்திர பராமரிப்பு பணியால் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான காமராஜபுரம்,  கே.வி.பி.நகர், செங்குந்தபுரம்,  பெரியார்நகர்,  ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம்,  காந்திநகர், ரத்தினம்சாலை, கோவைரோடு,  வடிவேல்நகர், ராமானுஜம்நகர், திருக்காம்புலியூர்,  ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம்-புறவழிச்சாலை,  ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகள் மற்றும் காணியாளம்பட்டி, முத்துரெங்கம்பட்டி,  மஞ்சநாயக்கன்பட்டி,  வீரியபட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/கரூர்-நகரம்--காணியாளம்பட்டியில்-செப்-17-இல்-மின்-தடை-3234179.html
3234178 திருச்சி கரூர் குடும்பத்தகராறு: மனைவியை குத்திய  கணவர் கைது DIN DIN Saturday, September 14, 2019 08:56 AM +0530 குடும்பத்தகராறில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் சணப்பிரட்டியைச் சேர்ந்தவர் மணிராஜ் (32). இவரது மனைவி ஜெயலட்சுமி(29). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஜெயலட்சுமி கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர். இந்நிலையில் வியாழக்கிழமை குடிபோதையில் இருந்த மணிராஜ் தனது மனைவியிடம் தகராறு செய்து கத்தரிக்கோலால் அவரது முதுகில் குத்தினாராம். இதில் காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து மணிராஜை கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/குடும்பத்தகராறு-மனைவியை-குத்திய--கணவர்-கைது-3234178.html
3234177 திருச்சி கரூர் ஜக்கி வாசுதேவ் பைக் பேரணி கரூர் வருகை DIN DIN Saturday, September 14, 2019 08:56 AM +0530 ஜக்கி வாசுதேவ் தலைமையிலான காவிரி கூக்குரல் இருசக்கர வாகன பேரணி கரூருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தது.
ஈஷாயோகா நிறுவனரான ஜக்கி வாசுதேவ் காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும், காவிரி ஆற்றின் கரையோரம் மரக்கன்று நட வேண்டும் என வலியுறுத்தி அண்மையில் கர்நாடகத்தில் காவிரி கூக்குரல் என்ற பெயரில்  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கினார். இந்த இருசக்கர வாகன பேரணி குழுவினர் வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவை வந்தடைந்தனர். அங்கு கரூர் ஈசா யோகா மைய சிவசங்கர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அக்குழுவினர் குளித்தலை வழியாக திருச்சியை அடைந்தனர். ரவீந்திரநாத் எம்பி, சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/ஜக்கி-வாசுதேவ்-பைக்-பேரணி-கரூர்-வருகை-3234177.html
3234176 திருச்சி கரூர் தெருநாயை சுட்டுக் கொன்றதாக இருவர் கைது DIN DIN Saturday, September 14, 2019 08:55 AM +0530 கரூரில் தெருநாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(40). இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று சுற்றியுள்ளது. அந்த நாய் கடந்த 2 நாள்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று உணவை உண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் நாயை தனது நண்பர் கரூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கொக்குச்சுடும் துப்பாக்கியைக் கொண்டு வந்து நாயை வியாழக்கிழமை சுட சம்பவ இடத்திலேயே நாய் இறந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதியினர் வெங்கமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலசுப்ரமணியன் மற்றும் ரமேசை கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/தெருநாயை-சுட்டுக்-கொன்றதாக-இருவர்-கைது-3234176.html
3234175 திருச்சி கரூர் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை DIN DIN Saturday, September 14, 2019 08:55 AM +0530 குடிநீர் கேட்டு கரூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்ட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நகராட்சியின் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதியினர் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் குடிநீர் விநியோகம் செய்யப்படாதது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பயனில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி உதவி பொறியாளர் மஞ்சுநாத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனே குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.     
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/குடிநீர்-கேட்டு-நகராட்சி-அலுவலகம்-முற்றுகை-3234175.html
3234174 திருச்சி கரூர் சீமைக்கருவேல மரங்களை ஆராய செயற்கைக்கோள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு DIN DIN Saturday, September 14, 2019 08:54 AM +0530 தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் சீமைக்கருவை மரங்கள் குறித்து ஆய்வுக்காக செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் ஏவிய கரூர் மாவட்ட வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டினார்.
புவியில் நீர் மட்டம் குறையக் காரணமாக சீமைக்கருவை மரங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய கரூர் மாவட்டம்,வெள்ளியணை,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் பெ. தனபால் வழிகாட்டலால் தயாரித்த 30 கிராம் எடைகொண்ட நீர் செயற்கைக்கோள் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி, ஸ்பேஸ் போர்ட் இந்தியா ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் வியாழக்கிழமை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் ராக்கெட்டில் காலை 11.25 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
செலுத்தப்பட்ட 28 வினாடிகளில் செயற்கைக்கோள் 35 கி.மீ அதாவது 1 லட்சத்து 12 ஆயிரம் அடி உயரம் விண்ணில் இலக்கைச் சென்றடைந்தது. பின்னர் மூன்றரை மணி நேரப் பயணத்திற்கு பின் வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை வேறுபாடு காரணமாக ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் வெடித்ததும், பாராசூட் திறக்கப்பட்டு செயற்கைக்கோள்கள் புவியின் ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி பாதுகாப்பான முறையில் இறக்கப்பட்டு ஏவுதளத்தில் இருந்து  170 கி.மீ  அப்பால் வேலூர் மாவட்டத்தில் புவியை வந்தடைந்தது. 
இந்நிகழ்வை தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மீண்டும் செயற்கைக்கோளை கைப்பற்றி , தொடர் ஆய்வுக்காக நீர் செயற்கைக்கோளை வெள்ளியணை,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தது.
செயற்கைக்கோள் ஏவிய நிகழ்வை நேரில் பார்வையிட்டு வந்த  மாணவர்கள் கோ. சுகந்த், மு. விஷ்ணு, கா. பசுபதி, சு.ஜெகன், சி.நவீன்குமார் ஆகியோரையும், அவர்களது வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபாலையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. முத்துக்கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சா. சிவராமன் ஆகியோர் பாராட்டினர். 
பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) இரா.கி. சாந்தி, பள்ளி கட்டடக் குழுத் தலைவர் வீ. ராமநாதன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.கருப்பண்ணன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயலர் அ. கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/சீமைக்கருவேல-மரங்களை-ஆராய-செயற்கைக்கோள்-அரசுப்-பள்ளி-மாணவர்களுக்கு-பாராட்டு-3234174.html
3234173 திருச்சி கரூர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கிராமசபைக் கூட்டம் DIN DIN Saturday, September 14, 2019 08:54 AM +0530 கரூர் மாவட்டத்தில் 157 கிராம ஊராட்சிகளிலும் தேசிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கிராமசபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா தலைமை வகித்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருள்சேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சசிகுமார் வரவேற்றார். பொதுமக்களிடம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா பேசுகையில், நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியமாகிறது.  ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்கள் குழந்தைகளை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மின்னாம்பள்ளி ஊராட்சி கவுண்டன்புதூரில் நடந்த கிராமசபைக்கூட்டத்திற்கு கரூர் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் எம். சுரேஷ் வரவேற்றார். இதில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, ஏற்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/ஊட்டச்சத்து-விழிப்புணர்வு-கிராமசபைக்-கூட்டம்-3234173.html
3234172 திருச்சி கரூர் பாசனத்திற்கு தண்ணீர் கோரி திமுக இன்று ஆர்ப்பட்டம் DIN DIN Saturday, September 14, 2019 08:54 AM +0530 அமராவதி அணையில் பழைய ஆயக்கட்டு பகுதியான கரூர் மாவட்ட கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும் வகையில் அணையில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி சின்னதாராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில்  திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசை கண்டித்தும்,  அமராவதி அணையில் பழைய ஆயக்கட்டு பகுதியான கரூர் மாவட்ட கடைமடை பகுதி தண்ணீர் செல்லும் வகையில் உடனடியாக அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் க.பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் சின்னதாராபுரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு  ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான  செந்தில்பாலாஜி தலைமையிலும்,  கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும். 
க. பரமத்தி திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/பாசனத்திற்கு-தண்ணீர்-கோரி-திமுக-இன்று-ஆர்ப்பட்டம்-3234172.html
3234171 திருச்சி கரூர் "மின், மின்னணு பொருள் தயாரிப்பாளர்களுக்கு    மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் தேவை' DIN DIN Saturday, September 14, 2019 08:53 AM +0530 மின் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் நாட்டில் மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றுதல் குறித்து மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள் 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகள் அக்.1-2016 முதல் அமலுக்கு வந்துள்ளன.  
இவ்விதிகளின்படி மின்னணுக் கழிவு என்பது நுகர்வோர் அல்லது மொத்த நுகர்வோர் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் (கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர்ஸ், தொலைபேசி, செல்போன், டெலிவிஷன், வாஷிங்மிசின், ஏர்கண்டிஸ்னர், டியுப்லைட் போன்றவை உட்பட) பயன்படுத்திய பழைய கழிவுகளாக வெளியேற்றுதல் மற்றும் மின் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தி, புதுப்பித்தல் மற்றும் பழுது பார்க்கும் செயல் முறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அடங்கும்.
மின்னணு கழிவு விதிகள் சரியான முறையில் அமலாக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் புதுதில்லியில் உள்ள  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு வியாழக்கிழமை (12-ஆம் தேதி)பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.  அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இப்போது அறிவிப்பை வெளியிடுகின்றது.
இதில் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள்,  மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 அட்டவணை 1-ல் கொடுக்கப்பட்டுள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள், தங்களது சாதனங்களை விநியோகஸ்தர்கள் மூலமாகவோ, சில்லரை விற்பனையாளர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, விற்பனை செய்தபின், அப்பொருட்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் "தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு' என்ற அடிப்படையில் அவற்றினை திரும்பப்பெற்று மறுசுழற்சிக்கு அனுப்புவது அவர்களது கடமையாகும்.
இவ்விதிகளின்படி, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு அவ்விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 90 நாட்களுக்குள் தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.  தவறும் பட்சத்தில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்  1986-ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/மின்-மின்னணு-பொருள்-தயாரிப்பாளர்களுக்கு---மாசுக்கட்டுப்பாட்டு-வாரிய-அங்கீகாரம்-தேவை-3234171.html
3234170 திருச்சி கரூர் நீர்நிலைகளைத் தூர்வார ரூ. 7.2 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் DIN DIN Saturday, September 14, 2019 08:53 AM +0530 கரூர் மாவட்டத்தில் 67 சிறுகுளங்கள், 367 குளங்கள், குட்டைகள் ஆகியவற்றைத் தூர்வார ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 30 பகுதியில் உள்ள ராமானூர், வார்டு எண் 31-ல் உள்ள அருணாசலம் நகர், பசுபதிபாளையம்,  பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் பேசியது:
மக்களைத்தேடி அரசு என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், சிறப்பு குறைதீர் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம்  நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்கள்தோறும் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன்பேரில் கரூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இதுவரை 32,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 15 கோடியில் சுமார் 48,500 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய பைப்லைன் அமைக்கப்பட்டு மீட்டர்பொருத்தும் பணி நடைபெறுகிறது. நடைபெறும் மூன்று குடிநீர் திட்ட பணிகள் மூன்று மாதத்தில் முடிவுற்று, குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ள அனைத்து வீடுகளுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்கப்படும்.
மேலும் 50 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையத்தில் ரூ.13 கோடியில் குகை வழிப்பாதையாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 
அடுத்த வாரம் குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை திறக்கப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், கிராம பகுதியில் உள்ள  67 சிறு பாசனக்குளங்கள் மற்றும் 367 குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வார ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.  
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அவர்களி ஒப்புதலுடன் மரக்கன்றுகள் நட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் பசுவைசிவசாமி, கூட்டுறவு மொத்த விற்பணை பண்டகசாலை தலைவர் வை. நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இன்ஜினியர் கமலக்கண்ணன்,என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/14/நீர்நிலைகளைத்-தூர்வார-ரூ-72-கோடி-ஒதுக்கீடு-அமைச்சர்-3234170.html
3233358 திருச்சி கரூர் செப். 27-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Friday, September 13, 2019 09:43 AM +0530 கரூரில் வரும் 27-ஆம் தேதி தனியார் வேலைவாய் ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். 
முகாம் மூலம் 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசிஸ்ட், பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு,  படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 - 223555 என்ற எண்ணிலும் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/செப்-27-இல்-தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-3233358.html
3233357 திருச்சி கரூர் 157 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக்கூட்டம் DIN DIN Friday, September 13, 2019 09:43 AM +0530 கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (13-ம்தேதி) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.      இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து  இயக்கம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/157-கிராம-ஊராட்சிகளில்-இன்று-கிராமசபைக்கூட்டம்-3233357.html
3233356 திருச்சி கரூர் புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து சாவு DIN DIN Friday, September 13, 2019 09:42 AM +0530 புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த செல்லிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு (33).  குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை அதே பகுதியில் டாக்டர் தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதியில் புறா பிடிக்க போதையில் சென்றதாக கூறப்படுகிறது. 
அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/புறா-வேட்டைக்குச்-சென்ற-இளைஞர்-கிணற்றில்-தவறி-விழுந்து-சாவு-3233356.html
3233355 திருச்சி கரூர் குறுவட்ட தடகளப் போட்டிகளில் பி.ஏ.வித்யாபவன் பள்ளி சாம்பியன் DIN DIN Friday, September 13, 2019 09:42 AM +0530 சின்னதாராபுரம் குறுவட்ட தடகளப் போட்டியில் கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 
பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான சின்னதாராபுரம் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் அண்மையில் கரூரில் நடைபெற்றன. 
இதில் கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி 128 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 
இதில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மாணவி அனுசியா 200 மீ. ஓட்டத்தில் முதலிடம், ஆர்கே. நவநிதா 600மீ., 400மீ. ஓட்டத்தில் முதலிடம், வர்ஷினி குண்டு எறிதலில் முதலிடம், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி நேஹா 800மீ. ஓட்டத்தில் முதலிடம், தர்ஷினி 1500மீ., 3000மீ. ஓட்டத்தில் முதலிடம், கீர்த்திகா மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி வினிதா 3000 மீ. ஓட்டத்தில் மூன்றாமிடம், நாகமணி மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம், சோபிகா உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்தனர். 
19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ரமேஷ் அரவிந்த் 15 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். 
மேலும் பல்வேறு பிரிவுகளில் முதல்,   இரண்டாமிடம் பிடித்தனர். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளியின் தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், பள்ளிச் செயலர் சுமதி சிவக்குமரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் எஸ். சுகுமார், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/குறுவட்ட-தடகளப்-போட்டிகளில்-பிஏவித்யாபவன்-பள்ளி-சாம்பியன்-3233355.html
3233354 திருச்சி கரூர் வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் DIN DIN Friday, September 13, 2019 09:42 AM +0530 வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதியுதவியுடன் கஷால் சீ குசால்தா திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 
இத்திட்டத்தின் கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ் கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள்  46 நாட்கள் வழங்கப்படும்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் மொத்தம்  40 பேருக்கு பயிற்சியளிக்கப்படும். 
பயிற்சியில் சேர சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பயிற்சியின்போது ஒரு பயனாளிக்கு ரூ. 1534 பயிற்சி உதவித்தொகை அளிக்கப்படும்.  உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.
இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், எண்.64சி, சாலை தெரு, புதேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.  
மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (மனோகரன் - 8939813412), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை, (தொலைபேசி - 044- 28514846) ஆகியோர்களை அணுகலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/வேலையில்லாத-சிறுபான்மையினருக்கு-இலவச-திறன்-வளர்ப்புப்-பயிற்சி-முகாம்-3233354.html
3233353 திருச்சி கரூர் முருகன், மகாமாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு DIN DIN Friday, September 13, 2019 09:42 AM +0530 கரூர் தொழிற்பேட் டை கல்யாணசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் தொழிற்பேட்டை அரசுக் காலனியில் கரூர் சஷ்டிக் குழுவினரால் இக் கோயில் கட்டப்பட்டது.  கும்பாபிஷேகம் விழாவையொட்டி முன்னதாக புதன்கிழமை காலை கணபதி ஹோமம்,  மாலையில் முதற்கால யாக பூஜை,  மருந்துசாத்துதல், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை,  நாடிசந்தானம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து கலச வேள்வி, கடம் புறப்பாடு நடைபெற்றது. 
தொடர்ந்து சிவாச்சாரியார் கணேசசர்மா தலைமையில் செகந்நாத ஓதுவார் திருமுறை இசையுடன் கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு காலை 10 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.  ஆவண கார்த்திகேயன் தொடக்கி வைத்தார். திருப்பணிக் கமிட்டித் தலைவர் மேலை பழநியப்பன்,  சஷ்டிக்குழு நிறுவனர் காளிமுத்து மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தோகைமலை அருகே கழுகூர் முனையம்பட்டியில் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
இங்குள்ள மகாமாரியம்மன் கோயிலில் விநாயகர், பகவதியம்மன், மகாமாரியம்மன், சப்தகன்னிமார்அம்மன், கருப்பண்ண சுவாமிகள் தனித்தனி சன்னதியாக அமைந்துள்ளன. இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாடுகள் நடைபெற்றது. 
தொடர்ந்து  கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் விழா கமிட்டியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/முருகன்-மகாமாரியம்மன்-கோயில்களில்-குடமுழுக்கு-3233353.html
3233352 திருச்சி கரூர் தோகைமலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா DIN DIN Friday, September 13, 2019 09:41 AM +0530 தோகைமலை அரு கே பட்டவன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் 10 ஊர் மந்தை மாடுகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பில்லூர் ஊராட்சிக்குட்பட்ட கம்பளிநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினருக்குச் சொந்தமான பட்டவன் கோயில் உள்ளது. 
பசாப்பாளையப்பட்டு மந்தையில் உள்ள இக்கோயிலில் மாலை தாண்டும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 
நிகழாண்டு  திருவிழா கடந்த 2-ஆம் தேதி பூ போட்டு 10 மந்தையர்களுக்கு அழைப்பு விடுத்து தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து பசாப்பாளையபட்டு மந்தையில் உள்ள பட்டவன் சுவாமிக்கு நாள்தோறும் மூன்று கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். 
தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் பட்டவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கொலுக்கட்டை வைத்து படைத்து சிறப்பு பூஜை செய்தனர். 
இரண்டாம் நாளான 3-ஆம் தேதி பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபட்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகளுடன் வந்திருந்த 10 மந்தையர்களுக்கு கோயில் முன் உருமி மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
பின்னர் பட்டவன் கோயில் முன்பாக அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க, பசாப்பாளையபட்டு நாயக்கர் மந்தையின் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம் செய்து அனைத்து மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.  
கொட்டும் மழையிலும் அங்கிருந்து பசாப்பாளையபட்டு மந்தையில் அமைக்கப்பட்ட  எல்லைக் கோட்டை நோக்கி மாடுகள் ஓடி வந்தன. 
இதில் முதலாவதாக ஓடிவந்த கோலகப்புலி நாயக்கர் மந்தை மாடு, இரண்டாவதாக வந்த சின்னகாப்பிபாபி நாயக்கர் மந்தை மாடுகளுக்கு சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை தூவி எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.  பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் பட்டவன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பட்டவன் சாமிக்கு மஞ்சள் நீராட்டுடன் வழியனுப்பினர்.  
முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன் மற்றும் ஊர் நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/தோகைமலை-அருகே-மாடுகள்-மாலை-தாண்டும்-விழா-3233352.html
3233351 திருச்சி கரூர் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும்  ரூ.15.23 கோடி உதவித் தொகை DIN DIN Friday, September 13, 2019 09:41 AM +0530 கரூர் மாவட்டத்தில் மட்டும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 29,566 பேருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.15,23,32,260 வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  
கரூர் மாவட்டத்தில் 2019- 2020-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 15,560 பயனாளிகளுக்கு ரூ. 8,01,99,660-ம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின்கீழ்  3,065  பயனாளிகளுக்கு ரூ. 1,57,75,850-ம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 585 பயனாளிகளுக்கு ரூ.30,11,820-ம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 3,601 பயனாளிகளுக்கு ரூ.1,85,52,860-ம், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டத்தின்கீழ் 4,082 பயனாளிகளுக்கு ரூ.2,10,06,080-ம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1,596 பயனாளிகளுக்கு ரூ.82,28,620 வழங்கப்பட்டு வருகிறது.
50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 251 பயனாளிகளுக்கு ரூ.12,91,720,  முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 666 பயனாளிகளுக்கு ரூ.34,40,620-ம், அகதிகள் முகாமில் உள்ள விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 66 பயனாளிகளுக்கு ரூ.3,40,930, அகதிகள் முகாமில் உள்ள முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 89 பயனாளிகளுக்கு ரூ.4,58,350, 
அகதிகள் முகாம் மாற்றுதிறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.25,750 என 29,566 பயனாளிகளுக்கு ரூ,15,23,32,260 மாதந்தோறும் ஓய்வூதிய உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/13/முதியோர்-மாற்றுத்திறனாளிகளுக்கு-மாதந்தோறும்--ரூ1523-கோடி-உதவித்-தொகை-3233351.html
3232714 திருச்சி கரூர் குளம் தூர்வாருவதில் அதிமுக-திமுக இடையே போட்டி: போலீஸ் குவிப்பு DIN DIN Thursday, September 12, 2019 09:10 AM +0530 நெடுங்கூர் குளத்தைத் தூர்வாருவதில் அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர், தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட உப்பிடமங்கலம் உள்ளிட்ட குளங்கள் திமுக இளைஞரணி சார்பில் புதன்கிழமை தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவே நெடுங்கூர் குளத்தை தூர்வாரும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் தொடங்கினர்.  புதன்கிழமையும் பணி தொடர்ந்த நிலையில்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஏராளமான போலீஸார் நெடுங்கூர் குளக் கரையில் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே காலை 11 மணியளவில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி, திமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, க. பரமத்தி ஒன்றியச் செயலர் கருணாநிதி மற்றும் திமுகவினர் நெடுங்கூர் குளத்தின் தென்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை தொடங்கினர்.
அப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கட்சியின் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  கரூரில் செந்தில்பாலாஜி தலைமையில் மூன்று இடங்களில் தூர்வாருகிறோம்.
நாங்கள் தூர்வாரத் திட்டமிட்ட நெடுங்கூர் குளத்தை அதிமுகவினர் தூர்வாருவது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.  தேவைப்பட்டால் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் எங்கள் இளைஞரணியில் உறுப்பினராகச் சேர்ந்து இதுபோன்ற சமூகப் பணிகளில் ஈடுபடலாம் என்றார்.
இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடந்த குளம் தூர்வாரும் பணியை  ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கூறியது:
குடிமராமத்து திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சிறிய, பெரிய 434 குளங்களை தூர்வாரும் பணிகளில் பாதிப்பணிகள் முடிந்துள்ளன.  40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்கள் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளன.
நெடுங்கூர் குளத்தை அரசு அனுமதியோடு தூர்வாருகிறோம். கட்சி தலைமையிடத்தில் பெயர் வாங்கும் எண்ணத்தோடு கரூரில் இருக்கும் ஒருவர் இந்த வேலையை செய்கிறார். கடவூர் மாவத்தூரில் காங்கிரஸார் 1.6 ஹெக்டேர் பரப்பு குளத்தை அனுமதி கேட்டு தூர்வாரினர். மக்களுக்குச் சேவை செய்வதை யாரும் தடுக்கப் போவதில்லை.  
திமுகவைச் சேர்ந்த நண்பர் மகேஷ் எனக்கு திமுக இளைஞரணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.  கட்சிகளுக்கு பதவிக்காக போகிறவர்களை அவர் சேர்க்கலாம். எங்களுக்கு ஒரே தலைமை ஜெயலலிதாதான். எடப்பாடி தலைமையில் உயிருள்ளவரை செயல்படுவோம். அரசு அனுமதியோடு அவர்கள் எந்த வேலையானாலும் செய்யட்டும் என்றார்.
பேட்டியின்போது அதிமுக நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், எஸ். திருவிகா, வை. நெடுஞ்செழியன், வி.வி. செந்தில்நாதன், தானேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/குளம்-தூர்வாருவதில்-அதிமுக-திமுக-இடையே-போட்டி-போலீஸ்-குவிப்பு-3232714.html
3232622 திருச்சி கரூர் விவசாயி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு DIN DIN Thursday, September 12, 2019 08:51 AM +0530 தோகைமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச் சென்றனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனி (52), விவசாயி. இவரது மனைவி சித்ரா(47). செவ்வாய்க்கிழமை காலை பழனி வழக்கம்போல தோட்டத்திற்கும், சித்ரா 100 நாள் வேலைக்கும் சென்றுவிட்டார்.  
மேலும் தம்பதியர்களின் மகன் நந்தகுமார் திருச்சியில் தான் பயிலும்  கல்லூரிக்கும் சென்றுவிட்டார்.  
இந்நிலையில் பிற்பகல் 2 மணியளவில் சாப்பிட பழனி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.55,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/விவசாயி-வீட்டில்3-பவுன்-நகை-திருட்டு-3232622.html
3232621 திருச்சி கரூர் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்  DIN DIN Thursday, September 12, 2019 08:51 AM +0530 விலையில்லா தை யல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட சமூக நலத் துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில்  பயனாளிகளின் வயது 16.9.2019 அன்று 40 வயதிற்குள் உள்ள விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் ஆகியோர் மின் மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல்  இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, தையல் பயிற்சி சான்று, கல்விச்சான்று அல்லது பிறப்புச்சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்,  ஆதரவற்ற மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல்,  கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், முதல் தளம்,   கரூர்-7 என்ற முகவரிக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு  மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/விலையில்லா-தையல்-இயந்திரம்-பெற-விண்ணப்பிக்கலாம்-3232621.html
3232619 திருச்சி கரூர் தோகைமலை அருகே பைக் மோதி  தொழிலாளி சாவு DIN DIN Thursday, September 12, 2019 08:50 AM +0530 தோகைமலை அருகே பைக் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட பொறைக்கிழாம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (54),  கூலித்தொழிலாளி.  இவர் செவ்வாய்க்கிழமை பேரூர் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு பேரூர்-கள்ளை சாலையில் தனியார் ஷா மில் அருகே நடந்து சென்றார். 
அப்போது பின்னால்  வந்த பைக் மோதி படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 
பின்னர்திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இதுதொடர்பாக தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து பைக்கை ஓட்டி வந்த கூடலூர் ஊராட்சி சின்னராசாபட்டியை சேர்ந்த ஆண்டி மகன் பூமிநாதன் (35) என்பவரை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/தோகைமலை-அருகே-பைக்-மோதி-தொழிலாளி-சாவு-3232619.html
3232618 திருச்சி கரூர் தியாகி இமானுவேல்சேகரன் குருபூஜை;  படத்துக்கு மாலை DIN DIN Thursday, September 12, 2019 08:50 AM +0530 தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு கரூரில் அவரது படத்திற்கு புதிய தமிழகம் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பரமக்குடியில் புதன்கிழமை தியாகி இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு கரூரில் பல்வேறு அமைப்பினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் அசோகன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
கரூர் நகரச் செயலர் சோமசுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் சந்தானம், மாவட்ட மாணவரணி செயலர் சுபாஷ், தாந்தோணி ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் மாரியப்பன் தலைமையில் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்தனர். மாநில செய்தித்தொடர்பாளர் வழக்குரைஞர் ரகுநாதன், இளைஞரணி செயலாளர்கள் ராஜலிங்கம், இளவழகன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மாலை அணிவித்த பின் எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரை நீக்க வேண்டும். 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/தியாகி-இமானுவேல்சேகரன்-குருபூஜை--படத்துக்கு-மாலை-3232618.html
3232617 திருச்சி கரூர் "மறைந்துபோன கலைகள் இருந்தால் உயிர்ப்பிக்கப்படும்' DIN DIN Thursday, September 12, 2019 08:50 AM +0530 மறைந்து போன கலைகள் குறித்து தகவல் இருந்தால் அவை உயிர்ப்பிக்கப்படும் என்றார் கலை பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் ச. சூர்யபிரகாஷ்.
கரூர் விநாயகா சதுரங்க கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை கரூரில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 
கரூர் மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவர் அட்லஸ் எம். நாச்சிமுத்து தலைமை வகித்தார். மோனிகா கிராபிக்ஸ் கார்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
காந்திகிராமம் விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் கார்த்திகா லட்சுமி வரவேற்றார். விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் ச. சூர்யபிரகாஷ் பேசியது:
கரூர் மாவட்டம் எப்போதும் சமுதாய ஒற்றுமைக்கும்,  கல்வி,  ஆன்மிகம் போன்றவற்றில் முன் நிற்கக்கூடிய மாவட்டமாகும்.  மூளைக்கு வேலை கொடுக்கக்கூடியது என கூறப்படும் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முதன்மையானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டாலும்,  வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாளைய வெற்றிக்குரியவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் மிகவும் தொன்மையானவை. நூற்றுக்கணக்கான கலைகள் தமிழகத்தில் மறைந்து போயுள்ளன. அப்படிப்பட்ட கலைகள் மீண்டும் வெளிக்கொணரப்பட வேண்டும். மறைந்து போன கலைகள் குறித்து கலை பண்பாட்டுத் துறைக்கு தெரிவித்தால், அந்த கலைகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.  உலக அரங்கில் தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, கலாசாரத்தை முழுமையாக வெளிக்கொண்டு வரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.  
ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாரம்பரியமிக்க பல்வேறு கலைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பழங்கால விளையாட்டுகளும்,  தற்போது மறைக்கப்படுகின்றன.  இவற்றையெல்லாம் முழுமையாக வெளிக்கொணர ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.  கிராமப்பகுதிகளில் உள்ள பழமையான கலைகள் மற்றும் மறைந்து போன கலைகள் இருப்பின் சென்னையில் உள்ள தமிழ்நாடு கலை பண்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அக்கலைகள் உயிர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.  முன்னதாக விழாவில் கரூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யதீஸ்வரி நீலகண்ட பிரிய அம்பா ஆசி வழங்கிப் பேசினார்.  கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன்,எவர்கிரீன் பவுண்டேஷன் சேர்மன் ஸ்காட் தங்கவேல், கரூர் விநாயகா சதுரங்க கழக தலைவர் யக்னேஸ்வரன்,  காந்திகிராமம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் அம்சவல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கரூர் விநாயகா சதுரங்க கழக செயலாளர் செ.ரேவதி செல்லமுத்து நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/மறைந்துபோன-கலைகள்-இருந்தால்-உயிர்ப்பிக்கப்படும்-3232617.html
3232616 திருச்சி கரூர் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Thursday, September 12, 2019 08:50 AM +0530 கரூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில்,  தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில்  மட்டும் வழக்கம்போல பகலில் கோடை காலம் போன்றுகடுமையான வெயிலும், இரவு நேரங்களில் சில இடங்களில் தூறலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. வேகம் அதிகரித்து இடிமின்னலுடன் பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது. 
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறிய பேருந்துகள் மற்றும் நகரின் முக்கியச் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்தவாறு சென்றன. புதன்கிழமையும் வழக்கம்போல பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் கரூரில் திடீரென தூறலுடன் கூடிய மழை பெய்தது.
 கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையானது தற்போது காவிரி ஆற்றை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பயிரின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/இடி-மின்னலுடன்-பலத்த-மழை-விவசாயிகள்-மகிழ்ச்சி-3232616.html
3232615 திருச்சி கரூர் ஆவின்பால் விற்பனை மையம்:  மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு DIN DIN Thursday, September 12, 2019 08:49 AM +0530 ஆவின்பால் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
2019-20 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ. 25000- மானியம் மற்றும் ஆவின் நிறுவனத்தின் ரூ. 25000-க்கு பால் உற்பத்தி  பொருட்கள் பெற்று விற்பனை மையம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல்,  வங்கிகணக்கு புத்தகம் அசல்,  நகல்,  குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அனைத்து நகல்களுடன் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் முழு உருவத்துடன்-1 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/ஆவின்பால்-விற்பனை-மையம்-மாற்றுத்திறனாளிகளுக்கு-அழைப்பு-3232615.html
3232614 திருச்சி கரூர் நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி  வங்கி ஊழியர் சாவு: நண்பர் மாயம் DIN DIN Thursday, September 12, 2019 08:49 AM +0530 நெரூர் காவிரியாற்றில் மூழ்கி வங்கி ஊழியர் இறந்தார். மாயமான அவரது நண்பரைத்  தேடுகின்றனர்.
கரூர் தாந்தோன்றிமலை முருகன்கோவில் பின்புற பகுதியைச் சேர்ந்த மாவட்ட காங். துணைத் தலைவர் சின்னையன் மகன் சூர்யபிரகதீஷ் (23).  இவர் ராயனூரில் உள்ள வங்கியின் ஊழியர். 
தாந்தோணிமலை கணபதிபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திக்ராஜா (19), அப்துல் அலி மகன் அக்பர் உசேன்(20) ஆகிய இருவரும் மதுரை சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு மாணவர்கள். நண்பர்களான மூவரும் புதன்கிழமை பிற்பகல் நெரூர் புதுப்பாளையம் காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு சூர்யபிரகதீசும், கார்த்திக்ராஜாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அக்பர்உசேன் ஷாம்பு வாங்க நெரூரில் உள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது இருவரையும் காணவில்லை. உடனே அங்கிருந்த பொதுமக்களிடம் கூற,  அவர்கள் ஆற்றில் இறங்கித் தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வாங்கல் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் சென்று தேடியதில் சூர்யபிரகதீஷ் உடல் மட்டும் கிடைத்தது. இதையடுத்து உடலை  கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார்த்திக்ராஜாவை தேடுகின்றனர். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/நெரூர்-காவிரி-ஆற்றில்-மூழ்கி--வங்கி-ஊழியர்-சாவு-நண்பர்-மாயம்-3232614.html
3231915 திருச்சி கரூர் ஆண்டாங்கோவில் பகுதிகளில்  நாளை மின் தடை DIN DIN Wednesday, September 11, 2019 08:43 AM +0530 ஆண்டாங்கோவில் பகுதியில் வரும் 12-ஆம் தேதி மின்சாரம் இருக்காது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 12-ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம்,  கோதூர்,  வடிவேல்நகர், கோவிந்தம்பாளயம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம்,  பவித்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/ஆண்டாங்கோவில்-பகுதிகளில்-நாளை-மின்-தடை-3231915.html
3231914 திருச்சி கரூர் திமுக சார்பில் இன்று குளங்கள் தூர்வாரும் பணி:  உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு DIN DIN Wednesday, September 11, 2019 08:42 AM +0530 கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் புதன்கிழமை  குளங்கள் தூர்வாரும் பணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நீர்நிலைகளை காத்திடவும், பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்திடவும் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெடுங்கூர், தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட உப்பிடமங்கலம் கஞ்சமனூர், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈசநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களைத் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணியை தொடக்கி வைக்கிறார். 
திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான  வி. செந்தில்பாலாஜி,  மாநில இளைஞரணி துணைச் செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக இளைஞரணியினர் பங்கேற்கிறார்கள்.  ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.ஏ. அன்பரசு செய்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/திமுக-சார்பில்-இன்று-குளங்கள்-தூர்வாரும்-பணி-உதயநிதி-ஸ்டாலின்-பங்கேற்பு-3231914.html
3231913 திருச்சி கரூர் கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.1கோடியில்  அமராவதி பழையபாலத்தில் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி DIN DIN Wednesday, September 11, 2019 08:42 AM +0530 கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை, கரூர் வைஸ்யா வங்கியின் பங்களிப்புடன் ரூ.1கோடியில் பூங்காவுடன் கூடிய நடைபாதையாக அமைக்கும் பணி நடைபெற்று வருவதை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் திருமாநிலையூரில்  நடக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியது: கரூர் நகர மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் பழைய அமராவதி பாலமானது  கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, சிறந்ததொரு பூங்காவாக அமைக்கப்படுகிறது. இந்தப்பாலம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதித்து, இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்புக்காக உயரிய கம்பிகள் பொருத்தப்படவுள்ளன. மேலும், பாலத்தில் நடுவில் ஆங்காங்கே பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும், சாய்வு நாற்காலிகளும், மின்விளக்குகளும் பொருத்தப்படவுள்ளன. அதுமட்டுமல்லாது, பூங்காவின் நுழைவுவாயில் அருகே பொதுமக்களும், சிறுவர்களும் மகிழும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்காக கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படவும் உள்ளது. பூங்கா பாதுகாப்பிற்காக  காவலர் நியமிக்கப்படவுள்ளார். இந்த பணிகளை மூன்று மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், கரூர் வைஸ்யா வங்கி பொது மேலாளர் சாய்ராஜ்,  முதுநிலை மேலாளர் வைத்தியநாதன், பொறியாளர் ஜெய்சங்கர்,  வட்டாட்சியர் அமுதா, தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பணை பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/கரூர்-வைஸ்யா-வங்கி-சார்பில்-ரூ1கோடியில்-அமராவதி-பழையபாலத்தில்-பூங்காவுடன்-கூடிய-நடைபாதை-அமைக்கும்-ப-3231913.html
3231912 திருச்சி கரூர் "முதல்வரின் சிறப்பு குறைதீர்  கூட்டத்தில் 32,000 மனுக்கள்' DIN DIN Wednesday, September 11, 2019 08:41 AM +0530 முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் இதுவரை 32,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 41,42, 48 ஆகிய வார்டுகளில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் மேலும் கூறியது:
முதல்வரின் உத்தரவுப்படி  கரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது.  இதுவரை 32,000  மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்படும் மனுக்களில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு வருவததை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மேலும் 5 இலட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என்றார். பின்னர் கரூர் நகராட்சிக்குட்பட்ட  12,13, 14 வார்டுகளில் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா,  வட்டாட்சியர் அமுதா, தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் பசுவைசிவசாமி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வை. நெடுஞ்செழியன், கரூர் கூட்டுறவு வீடுகட்டும் சங்கத் தலைவர் செல்மணி, கேசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.சி.கே. ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/முதல்வரின்-சிறப்பு-குறைதீர்-கூட்டத்தில்-32000-மனுக்கள்-3231912.html
3231911 திருச்சி கரூர் சின்னதாராபுரத்தில் தொழிலாளி  அடித்துக் கொலை: 3 பேர் கைது DIN DIN Wednesday, September 11, 2019 08:41 AM +0530 சின்னதாராபுரத்தில் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊர் கொத்துக்காரர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த சின்னதாராபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (48), தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் (38) என்பவரின் மனைவியை கேலி கிண்டல் செய்தாராம். இதனால் தண்டபாணிக்கும், மாயவனுக்கும் முன்விரோதம் இருந்தது. 
இந்நிலையில் ஊர்கொத்துக்காரரான அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பியையும் (54) தண்டபாணி குடிபோதையில் அண்மையில் திட்டினாராம். இதனால் தண்டபாணியை மாயவன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் சேர்ந்து தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்தனர். இந்நிலையில் தண்டபாணி திங்கள்கிழமை இரவு மதுக்குடித்துவிட்டு போதையில் மலைச்சியூர் பிரிவு சாலையில் நடந்து வந்தபோது எதிரே போதையில் ஊர் கொத்துக்காரர் நல்லதம்பி, மாயவன், இவர்களது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(40) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதில் ஆத்திரமடைந்த மாயவன், நல்லதம்பி, வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து அருகில் கிடந்த விறகுக் கட்டையால் தண்டபாணியை தாக்கிவிட்டு ஓடி விட்டனர். 
ரத்த வெள்ளத்தில் மிதந்த தண்டபாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தண்டபாணியின் மகன் மாரீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து மாயவன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/சின்னதாராபுரத்தில்-தொழிலாளி-அடித்துக்-கொலை-3-பேர்-கைது-3231911.html
3231910 திருச்சி கரூர் சலவைத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் DIN DIN Wednesday, September 11, 2019 08:41 AM +0530 கரூர் நகராட்சி அலுவலகத்தை சலவைத் தொழிலாளர்கள்  முற்றுகையிடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
கரூர் நகராட்சிக்குட்பட்ட  மாவடியான் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்களாம். மேலும் நகராட்சிக்கு குடிநீர் வரி, மின்சார வரியும் செலுத்தி வருகிறார்களாம். இந்நிலையில் தனிப்பட்ட நபரின் சொந்த நிலம் சலவைத்தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
அவரது தூண்டுதலின்பேரில் திடீரென சலவைத்தொழிலாளர்கள் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என நகராட்சி சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டதாம். அவ்வாறு காலி செய்யாவிட்டால் புல்டோசர் மூலம் வீடுகள் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சலவைத்தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன்  தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நகராட்சி ஆணையரிடம், அப்பகுதியினர் நாங்கள் நகராட்சிக்குட்பட்ட இடத்தில்தான் வசிக்கிறோம். ஆனால் குடிநீர் உள்ளிட்ட வரிகளையும் செலுத்தி வருகிறோம். மேலும் நகராட்சிக்கு எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை. சலவைத் தொழிலுக்கு ஆற்றோரம் இருப்பதால் எங்களால் தொழிலையும் சரிவர செய்ய முடிகிறது. 
இந்நிலையில் தனிப்பட்ட நபருக்காக எங்கள் வீடுகளை இடித்துத் தள்ளுவோம் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.  ஏற்கனவே நாங்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இங்கு குடியிருக்கிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளோம். ஆட்சியரும் தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென எங்கள் வீட்டை இடிப்போம் என நோட்டீஸ் வழங்கினால் நாங்கள் எங்கே போவோம் என்றனர். அதற்கு ஆணையர்(பொ) ராஜேந்திரன், இப்போதைக்கு உங்கள் வீட்டை இடிக்க மாட்டோம் என அவர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சலவைத் தொழிலாளர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/சலவைத்-தொழிலாளர்கள்-முற்றுகை-போராட்டம்-3231910.html
3231909 திருச்சி கரூர் குற்றங்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் தேவை: சார்பு நீதிபதி பேச்சு DIN DIN Wednesday, September 11, 2019 08:41 AM +0530 நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் தேவை என்றார் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும்,  சார்பு நீதிபதியுமான சி. மோகன்ராம். 
கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கரூர் சைக்கோ அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிலரங்கத்தில் பங்கேற்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட பள்ளித்தலைமை ஆசிரியர் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது, பல்கலைக்கழக மாணவி மீது திராவகம் வீசியது போன்று எண்ணற்ற செயல்கள் நடந்து வருவது சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையையே காண்பிக்கிறது. 
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோ போன்ற சட்டங்கள் இருந்தாலும், அதைப்பற்றி சிலர் கவலைப்படாமல் குற்றங்களில் ஈடுபடுவது  புலப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்துவிட்டால், அதற்கு காவல் துறையை குற்றம் சுமத்துவது ஒருபோதும் தீர்வாகாது. அது ஏற்புடையது அல்ல. மாறாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து துறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  எப்போதும் பெற்றோர் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். குற்றங்கள் நிகழ்வதற்கு முன் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். 
நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமுதாய ஏற்றத்தாழ்வுதான். இது அழிக்கப்படும்போதுதான் குற்றங்கள் குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் குற்றங்கள் நிகழ இன்றைய கலியுகத்தில் செல்லிடபேசிகளும் வந்துவிட்டன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் போன்றவற்றில்தான் அதிகளவில் குற்றங்கள் நிகழ்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றமே உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் நீதிபதி உள்ளிட்ட அனைவருமே பெண்கள்தான். குற்றங்கள் நிகழ்ந்துவிட்டதே இனி சமுதாயம் நம்மை மாறுபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கும், நீதிமன்றம், காவல் நிலைய படிக்கட்டில் மிதிப்பது அவமானம் எனக் கருதாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற திடமான நம்பிக்கையோடு பெண்கள் முன்வரும்போதுதான், அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பெருமளவில் அச்சம் ஏற்படும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறையத் தொடங்கும் என்றார்.
பயிலரங்கில் சைக்கோ அறக்கட்டளை செயலாளர் ஏ.பிலோராணி வரவேற்றார். கரூர் குழந்தைகள் நல குழுமத் தலைவரும், சைக்கோ அறக்கட்டளை தலைவருமான ஜே. கிறிஸ்துராஜ் அறிமுக உரையாற்றினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ். கவிதா, குழந்தைகள் நல குழும உறுப்பினர் எஸ். காந்திமதி, கரூர் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பி. சேகர் ஆகியோர் வாழ்த்தினர். மதுரை அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் சோ. சிவக்குமார் கருத்துரையாற்றினார். வனிதாபிரியா நன்றி கூறினார். 
பயிலரங்கில் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி பெண் போலீஸாருக்கு கேடயம் வழங்கப்பட்டன. இதில் பெண் போலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/குற்றங்களை-தடுப்பதில்-பொதுமக்களின்-பங்களிப்பும்-தேவை-சார்பு-நீதிபதி-பேச்சு-3231909.html
3231908 திருச்சி கரூர் "ஜூலையில் மட்டும் 7,805 பேருக்கு ரூ.16.11 கோடி ஓய்வூதியம்' DIN DIN Wednesday, September 11, 2019 08:41 AM +0530 ஜூலை மாதம் மட்டும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு  ரூ.16.11 கோடி ஓய்வூதியம் வழங்கபட்டுள்ளது எனத் தெரிவித்தார் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர். 
தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் கருவூல கணக்குத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு. ஜவஹர் இறுதிக் கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.  அனைத்து மாவட்டத்திற்கும் பயணம் மேற்கொண்டு மண்டல, மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வாரியாகஆய்வு நடத்தியதில், கரூர் மாவட்டம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்னோடி மாவட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
எனவே கோவை மண்டலத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கபயிற்சி திங்கள்கிழமை துவங்கியது. 
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் முன்னிலையில் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் பேசியது:
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி  நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.  இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிகத் துல்லியமாக நடத்த இயலும்.  அரசுப் பணியாளர்களை மிகச் சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 337 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் 13, 433அரசுப்பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பட்டியல் சமர்ப்பிக்கும் பணியில் உள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 65,51, 42, 253 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16,11, 08, 882 ஓய்வூதியமாக ஜூலை மாதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.  சம்பளமில்லா பட்டியல்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் வாயிலாக ரூ.20,46,16,632 செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன்,  கூடுதல் இயக்குநர்(மின்ஆளுகை) மகாபாரதி, மண்டல இணை இயக்குநர்கள் இரா. பூங்கோதை, புவியரசு, நாகராஜன்,  முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கரூர் மாவட்டக்கருவூல அலுவலர், க. ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் கருவூலஅலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சியில் கரூர் மாவட்டத்திலுள்ளஅனைத்துக் உதவிக் கருவூல அலுவலர்கள், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, மருத்துவத் துறை, நீதித்துறை, காவல்துறை, சமூகநலத்துறைகளிலிருந்து 182 அலுவலர்களும்,  பள்ளிக்கல்வித் துறையிலிருந்து 117 பள்ளிகளிலிருந்து 325 அலுவலர்களும் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/ஜூலையில்-மட்டும்-7805-பேருக்கு-ரூ1611-கோடி-ஓய்வூதியம்-3231908.html
3231907 திருச்சி கரூர் நெரூர் கிளைவாய்க்கால் கரை உடைந்து வீடுகள்,வயல்களுக்குள் புகுந்த நீர்: கோரைப்பயிர் நாசம் DIN DIN Wednesday, September 11, 2019 08:40 AM +0530 நெரூரில் கிளைவாய்க்காலை தூர்வாராததால் இரண்டாவது முறையாக கரை உடைந்து வீடுகளுக்குள்ளும், வயல்களுக்குள்ளும் காவிரி நீர் புகுந்தது. இதனால் சுமார் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோரை பயிர்கள் சேதமடைந்தன.
கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமான 120 அடியையும் நீரின் அளவு எட்டியதால் அணைக்கு வரும் நீரான 65,000 கன அடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 65,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் வரும் நீர் கரூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நெரூரில் காவிரியில் இருந்து பிரதான நெரூர் வாய்க்காலுக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நெரூர் வாய்க்கால்களின் கிளை வாய்க்கால்களுக்கும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த கிளைவாய்க்கால்களில் நெரூர் அக்ரஹாரம் பகுதியில் கரை உடைந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தது. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நெரூர் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாத வகையில்,  பிரதான வாய்க்காலின் ஷட்டர்களை மூடினர். இதையடுத்து நெரூர் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்த நீர் வடியத்தொடங்கியது.
இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் நெரூர் தென்பாகம் பகுதியில் சில வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
நூறு நாள் வேலைத் திட்டப்பணியாளர்களும் கூட இங்கு வந்து வேலை செய்யவில்லை. இதனால்தான் வாய்க்காலில் தண்ணீர் அதிகளவு வந்தபோது கரை பலமிழந்து உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வெளியேறியது. சுமார் 5 ஏக்கரில் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கோரைக்குள் நீர் புகுந்துவிட்டன. 
இதனால் கோரைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட கோரை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/11/நெரூர்-கிளைவாய்க்கால்-கரை-உடைந்து-வீடுகள்வயல்களுக்குள்-புகுந்த-நீர்-கோரைப்பயிர்-நாசம்-3231907.html
3231261 திருச்சி கரூர் கட்சி பெயரில் பணம் பறிப்பதாக புகார் DIN DIN Tuesday, September 10, 2019 09:46 AM +0530 விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயரில் சில சமூக விரோதிகள் தொழில் அதிபர்களிடம் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் சில சமூக விரோதக்கும்பல்  கட்சியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மாமூல் மற்றும் சட்டவிரோதமாக தொழில் அதிபர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதாக செய்தி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் கட்சி நிர்வாகிகள் அல்ல. 
இதுசம்பந்தமாக புகார் வந்தால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார் தொடர்பாக 9443853157 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/கட்சி-பெயரில்-பணம்-பறிப்பதாக-புகார்-3231261.html
3231260 திருச்சி கரூர் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம் DIN DIN Tuesday, September 10, 2019 09:46 AM +0530 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற,  ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000-லிருந்து ரூ.72,000 என உயர்த்தி அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயனாளியின் தாய், தந்தை அல்லது கணவன் அல்லது மனைவி ஆகியோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72,000 என நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து தகுதியான பதிவுதாரர்களும் இத்திட்டத்தில் மூலம்  உதவித்தொகை பெற்று பயன் பெறலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/வேலைவாய்ப்பற்றோர்-உதவித்-தொகை-பெறலாம்-3231260.html
3231259 திருச்சி கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை DIN DIN Tuesday, September 10, 2019 09:46 AM +0530 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை வரும் 16-ஆம் தேதி மகளிருக்கான ஒரு வருடத்திற்கான டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர்,  சீவிங் டெக்னாலஜி, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்புகளும், இரு வருட படிப்பான ஆபரேட்டர் அட்வான்ஸ் மெஷின்டூல் படிப்புக்கும் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.  
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் உதவித்தொகை மாதம் ரூ.500,  விலையில்லா பேருந்து கட்டணச் சலுகை,  விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்,  விலையில்லா சீருடை- ஒரு செட் மற்றும் விலையில்லா காலணி, ஒரு செட் வழங்கப்படுகிறது.  
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை நேரில் வந்து பயிற்சியில் சேரலாம்.  கூடுதல் விவரங்களுக்கு 04324-222111, 04324-222112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/அரசு-தொழிற்பயிற்சி-நிலையங்களில்-சேர்க்கை-3231259.html
3231258 திருச்சி கரூர் ரூ.14 லட்சம் மோசடி: நாகர்கோவிலை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு DIN DIN Tuesday, September 10, 2019 09:45 AM +0530 புதிய பேருந்துக்கு கூண்டு கட்டி வாங்கியதில் ரூ.14 லட்சம் மோசடி செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை, அவரது 2 மகன்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜகோபால் (65). இவரது மகன்கள் ஆனந்த், அகிலன். இவர்கள் கன்னியாகுமரியில் ஆர்ஆர் என்ற பெயரில் பஸ் கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் கரூர் ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த கண்ணன்(49) என்பவருக்குச் சொந்தமான தனியார் கூண்டு கட்டும் நிறுவனத்தில்  முன்பணமாக கடந்த மார்ச் 31-ஆம் தேதி ரூ. 7.50 லட்சம் கொடுத்து  மூன்று பேருந்துகளுக்கு கூண்டு கட்டி வாங்கிசென்றுள்ளனர். மீதிப்பணம் ரூ. 14 லட்சத்தைக் கொடுக்காமல் இதுவரை ஏமாற்றி வந்தார்களாம். இதுதொடர்பாக கண்ணன் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் ஆனந்த் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/ரூ14-லட்சம்-மோசடி-நாகர்கோவிலை-சேர்ந்த-3-பேர்-மீது-வழக்கு-3231258.html
3231257 திருச்சி கரூர் கரூர் அரசு பொருட்காட்சியில் இதுவரை ரூ.3.62 லட்சம் வசூல் DIN DIN Tuesday, September 10, 2019 09:45 AM +0530 கரூர் அரசு பொருட்காட்சியில் நுழைவுக்கட்டணம் மூலம் இதுநாள்வரை ரூ.3.62 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி கடந்த மாதம் 9-ம் தேதி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பொருட்காட்சியானது வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளும் உள்ளன. இந்தப் பொருட்காட்சியை ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 28,129 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் ரூ. 3,62,145 மதிப்பிலான நுழைவுச்சீட்டு விற்பனையாகியுள்ளது.  
அரசுத்துறை அரங்குகளில் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களும், மாதிரிகளும், திட்டங்கள் குறித்த தெளிவுரைகளும் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/கரூர்-அரசு-பொருட்காட்சியில்-இதுவரை-ரூ362-லட்சம்-வசூல்-3231257.html
3231256 திருச்சி கரூர் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, September 10, 2019 09:44 AM +0530 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.  ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் இடமாறுதல் உத்தரவுகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ம. ரவிச்சந்திரனின் தற்காலிகப் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/இந்திய-பள்ளி-ஆசிரியர்-கூட்டமைப்பு-ஆர்ப்பாட்டம்-3231256.html
3231255 திருச்சி கரூர் லாலாபேட்டையில் வாழைத்தோட்டம் தீக்கிரை DIN DIN Tuesday, September 10, 2019 09:44 AM +0530 லாலாபேட்டையில் தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ  விபத்தில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்தன.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை கொடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(45), விவசாயி. இவர் அதே பகுதியில் ஓர் ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாழைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
 இதில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வாழைகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார்,  வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டுச் சென்றனர். லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/லாலாபேட்டையில்-வாழைத்தோட்டம்-தீக்கிரை-3231255.html
3231254 திருச்சி கரூர் கரூர் ஆட்சியரகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி DIN DIN Tuesday, September 10, 2019 09:43 AM +0530  

கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு நிலவியது.

கரூர் தாந்தோணிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (54). கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளி. 40 வயதுடைய இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருடன்  கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறாராம்.

திருமணம் செய்த சில நாட்களிலேயே சிவசுப்பிரமணி தனது பெயரில் இருந்த ஒரு சில சொத்துகளை மனைவி பெயரில் எழுதி வைத்தாராம்.  இதனிடையே சிவசங்கருடன் சேர்ந்துகொண்டு, மீதமுள்ள சொத்துகளையும் எழுதிக்கேட்டு சிவசுப்ரமணியை மிரட்டுகிறாராம். மேலும் சிவசங்கரும் அவரைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிவசுப்ரமணி தாந்தோணிமலை காவல் நிலையம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் விரக்தியடைந்த சிவசுப்பிரமணி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து, ஆட்சியரக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். 

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து, அங்கிருந்த மினி தீயணைப்பு வாகனம் மூலம் அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். தொடர்ந்து தாந்தோணிமலை போலீஸார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/karur_collector_office_sucide_attempt.jpg கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/கரூர்-ஆட்சியரகத்தில்-தொழிலாளி-தற்கொலை-முயற்சி-3231254.html
3231253 திருச்சி கரூர் குடிநீர் கேட்டு ஆட்சியரகம் வந்த மூன்று கிராம மக்கள் DIN DIN Tuesday, September 10, 2019 09:40 AM +0530  

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மூன்று கிராமமக்கள் வந்திருந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன்  வந்து அவர்கள் வழங்கிய கோரிக்கை மனு:
எங்களுக்கு கடவூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகிறோம். மேலும் எங்கள் ஊரின் அருகே உள்ள சமத்துவபுரம் வரை காவிரிக்குடிநீர் குழாயில் வருகிறது. அந்த காவிரி குடிநீர் இணைப்பை எங்களது ஊருக்கும் இணைக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரில் தெரிவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால் இரவில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.
பாமகவினர் கோரிக்கை மனு: மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமக மேற்கு மாவட்டச் செயலர் சதீஸ்குமார் தலைமையில் அக்கட்சியினர் வழங்கிய மனுவில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி அதை ஓரிடத்தில் கொட்டிவைத்து, பின்னர் லாரியில் கடத்துகின்றனர். மேலும் வாங்கல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என தெரிந்தும் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அதிகாரிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. எனவே மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 
தேங்காய் தொட்டி கரி ஆலை மீது நடவடிக்கை தேவை: ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில்,  அரவக்குறிச்சி அடுத்த மானார்பட்டியில் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆலை செயல்படுகிறது. அரசின் அனுமதி பெறாமல் நச்சுவாயுவை வெளியேற்றும் ஆலை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/10/குடிநீர்-கேட்டு-ஆட்சியரகம்-வந்த-மூன்று-கிராம-மக்கள்-3231253.html
3230816 திருச்சி கரூர் கரூர் நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் DIN DIN Monday, September 9, 2019 10:53 AM +0530 கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மக்களைத்தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் முதல்வரின் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகிறது. கரூரில் கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ரத்தினம்சாலை,  ஈஸ்வரன் கோவில் பகுதியில்  உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன்,  நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பணை பன்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை.சிவசாமி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு செல்வராஜ், வி.சி.கே.ஜெயராஜ்,  தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/09/கரூர்-நகராட்சிப்-பகுதிகளில்-முதல்வரின்-சிறப்பு-குறைதீர்-திட்ட-முகாம்-3230816.html
3230815 திருச்சி கரூர் மூதாட்டியிடம்  7 பவுன் சங்கிலி பறிப்பு DIN DIN Monday, September 9, 2019 10:53 AM +0530 கரூரில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். 
கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள்(55). தம்பதி இருவரும் கரூரில் உள்ள உழவர் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் கீரைக்கட்டு கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு பைக்கில் சென்றனர்.  வீட்டின் முன் பைக்கை நிறுத்தியதும், பின்னால் பைக்கில்  வந்த மர்ம நபர், செல்லம்மாள் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துள்ளான். அப்போது அவனை ஆறுமுகம் பிடிக்க முயன்றபோது, அவரது செல்பேசியை கீழே போட்டுவிட்டு பைக்கில் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். ஆறுமுகம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/09/மூதாட்டியிடம்--7-பவுன்-சங்கிலி-பறிப்பு-3230815.html
3230814 திருச்சி கரூர் மாவட்ட சிலம்பம் போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் DIN DIN Monday, September 9, 2019 10:52 AM +0530 கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
கரூரில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை, மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ மலையப்பசுவாமி துவக்கி வைத்தார். இதில் 10, 14, 17 மற்றும் 30 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 
தொடுதிறன் மற்றும் தனித்திறன் என இருபிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு, சிலம்பாட்ட கழகச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை சிலம்பாட்ட கழகத்தலைவர் மலையப்பசுவாமி மற்றும் தாந்தோணிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் காளிமுத்து ஆகியோர் வழங்கினர். விழாவில் போட்டி இயக்குநர் எம்.வீரமணி மற்றும் சிலம்பம் பயிற்சியாளர்கள், வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/09/மாவட்ட-சிலம்பம்-போட்டியில்-வென்றவர்களுக்கு-சான்றிதழ்கள்-3230814.html
3230813 திருச்சி கரூர் பேக்கரி கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு DIN DIN Monday, September 9, 2019 10:52 AM +0530 காந்திகிராமத்தில் பேக்கரி கடையின் மேற்கூரையை உடைத்து பணத்தைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையப்பன்(61). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது, கடையின் பின்புற சுவர் வழியே உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து ரூ.15,000-த்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/09/பேக்கரி-கடையில்-ரூ15-ஆயிரம்-திருட்டு-3230813.html
3230081 திருச்சி கரூர் அமராவதி அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு: பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை DIN DIN Sunday, September 8, 2019 04:11 AM +0530 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 5 மணி  நிலவரப்படி 80 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக அணையைத் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் என இரு மாவட்டங்களிலும் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.  
இந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மூணாறு, மறையூர், காந்தலூர், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடிக்கும் மேலாக இருந்தது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 83 அடியை எட்டியது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 
இதையடுத்து புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிர்களைக் காப்பாற்ற 15 நாள்களுக்கு உயிர் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் அமராவதி ஆற்றிலும் தினமும் 2 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 8 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பாம்பாறு, சின்னாறு, தேனாறு என நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 79 அடியை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 80 அடியைத் தாண்டியது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைப் பகுதியில் பொதுப் பணித் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 
அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என  பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் கூறியதாவது:
அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து  வருகிறது. இந்நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
அணையில் நீர் இருப்பு நிலவரம்:
90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நீர்மட்டம் 80.06 அடியாக இருந்தது. அணைக்கு 1588 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3180  மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.  அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/அமராவதி-அணையின்-நீர்மட்டம்-80-அடியாக-உயர்வு-பாசனத்துக்குத்-தண்ணீர்-திறக்க-விவசாயிகள்-கோரிக்கை-3230081.html
3230080 திருச்சி கரூர் மேற்குவங்க மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை DIN DIN Sunday, September 8, 2019 04:09 AM +0530 கரூரில் மேற்குவங்க மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலம் பிரகினாஸ்தாய்தலா பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி ஷர்மாமண்டல் (28). இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், இருவரும் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த சடையகவுண்டன்புதூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் தங்கி அங்கேயே தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதனிடையே சம்சுதீன் மனைவியிடம் எதுவும் சொல்லாமல் சொந்த மாநிலமான மேற்குவங்கத்திற்குச் சென்றாராம். இதனால் விரக்தியில்  ஷர்மாமண்டல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/மேற்குவங்க-மாநில-இளம்பெண்-தூக்கிட்டு-தற்கொலை-3230080.html
3230079 திருச்சி கரூர் வெள்ளியணை அரசுப் பள்ளி ஆண்டு விழா DIN DIN Sunday, September 8, 2019 04:09 AM +0530 கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் லைப் இன்சூரன்ஸ்  கார்ப்பரேஷன் சார்பில் 63-ஆவது ஆண்டு விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ( பொ)  இரா.கி.சாந்தி தலைமை வகித்தார். 
கரூர் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதுநிலை கிளை மேலாளர் ச.க.ராமநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,  பள்ளி சார்பில் நீர் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மு.விஷ்ணு, கோ,சுகந்த், கா,பசுபதி, ச.நவீன்குமார், சு.ஜெகன் ஆகிய மாணவர்களுக்கும், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மு. ஜாஹீர்கான், சி.ரூபன், ஆர்.சஞ்சய் ஆகிய மாணவர்களுக்கும் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.   
விழாவில், எல்.ஐ.சி உயர்நிலை அதிகாரி கணேசன் மற்றும் உதவி கிளை மேலாளர்  த.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/வெள்ளியணை-அரசுப்-பள்ளி-ஆண்டு-விழா-3230079.html
3230078 திருச்சி கரூர் முதியவர் தூக்கிட்டு தற்கொலை DIN DIN Sunday, September 8, 2019 04:08 AM +0530 ஜெகதாபியில் நோய்க்கொடுமையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூரை அடுத்த ஜெகதாபியைச் சேர்ந்தவர் நம்பெருமாள்(67). இவர் கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். 
மேலும் இந்நோய்க்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/முதியவர்-தூக்கிட்டு-தற்கொலை-3230078.html
3230077 திருச்சி கரூர் பைக் -  கார் மோதல்: இளைஞர் பலி DIN DIN Sunday, September 8, 2019 04:08 AM +0530 வேலாயுதம்பாளையம் அருகே பைக் மீது கார் மோதியதில் வெள்ளிக்கிழமை மதியம் இளைஞர் இறந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தேவராஜன்(24). இவர் பைக்கில் திண்டுக்கல் சென்றுவிட்டு, மீண்டும் சேலம் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகலில் வேலாயுதம்பாளையம் அடுத்த கட்டிப்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிஹேர வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார். 
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் கரூர் கந்தபொடிக்காரத்தெருவைச் சேர்ந்த இளமுருகு (59) என்பவரைத் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/பைக்----கார்-மோதல்-இளைஞர்-பலி-3230077.html
3230076 திருச்சி கரூர் கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்கள் கைது DIN DIN Sunday, September 8, 2019 04:08 AM +0530 கரூரில் ரூ.11,000 மதிப்புள்ள கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்களைப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கரூர் வெங்கமேடு என்எஸ்கே நகரில் இரு இளைஞர்கள் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அங்குசென்று சோதனை செய்தபோது, விற்பனைக்காக ரூ.11,600 மதிப்புள்ள 1,800 கிராம் கஞ்சா வைத்திருந்த வெங்கமேடு எஸ்பி காலனியைச் சேர்ந்த மோகன்(27), குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/கஞ்சா-பதுக்கிய-இரு-இளைஞர்கள்-கைது-3230076.html
3230075 திருச்சி கரூர் புன்செய்புகழூரில் மரக்கன்று நடும் விழா DIN DIN Sunday, September 8, 2019 04:08 AM +0530 புன்செய் புகழூரில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை) திட்டத்தில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுப.சத்திமூர்த்தி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் எஸ்.சரவணன், ஆர்.சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/புன்செய்புகழூரில்-மரக்கன்று-நடும்-விழா-3230075.html
3230074 திருச்சி கரூர் தனியார் பெயரில் உள்ள கோயில் நில பட்டாவை மாற்றக்கோரி மக்கள் மறியல் DIN DIN Sunday, September 8, 2019 04:07 AM +0530 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் தனி நபரின் பெயரில் உள்ள கோயில் நிலத்தின் பட்டாவை மாற்ற வேண்டும் என கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட பாப்பக்காபட்டி ஊராட்சியில் உள்ளது குப்பையம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் நிலம் தனியார் ஒருவரது பெயரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதில் சிக்கல் ஏற்பட்டதாம். இதனால் தனி நபரின் பெயரில் உள்ள கோயில் நிலத்தின் பட்டாவை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தார்களாம். இந்நிலையில், இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பழனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் திடீரென கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் பழனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் பழனி, இப் பிரச்னை தொடர்பாக குளித்தலை கோட்டாட்சியரை சந்தித்து முறையிடுங்கள் எனக் கூறி பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/தனியார்-பெயரில்-உள்ள-கோயில்-நில-பட்டாவை-மாற்றக்கோரி-மக்கள்-மறியல்-3230074.html
3230073 திருச்சி கரூர் "கிராம மக்களின் தேவைகளைக் கேட்டறிய வேண்டும்' DIN DIN Sunday, September 8, 2019 04:07 AM +0530  நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை நியமித்து கிராம மக்களிடம் நேரிடையாகச் சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான துறைசார் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் மேலும் பேசியது: கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம் கரூர், தாந்தோணி, குளித்தலை நகராட்சி, 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் என 12 பகுதிகளுக்கு 12 துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள அலுவலர்களை நியமித்து பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
பொதுமக்கள் அதிகம் தொடர்புகொள்ளும் மின்சார வாரியம், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்குகள் சரியாக எரிகிறதா என தொடர்புடைய அலுவலர்கள் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழைகாலம் வருவதற்கு முன்னதாக டெங்கு தடுப்பு பணிகளை தொடங்க வேண்டும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் காவிரி குடிநீர் திட்டம் இல்லாத கிராமங்களைக் கண்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் துறை சார்பில் 14, 858 விவசாயிகளுக்கு இலக்கு நிர்ணயித்து கிசான் கடன் அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் 6 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிட்டு, முதல் கட்டமாக 4 .20 லட்சம் பனை விதைகள்   நடவு செய்யும் பணி விரைவில் தொடங்கும். 
மேலும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் செல்லாண்டிபாளையத்தில் 640 வீடுகளும், புலியூரில் 288 வீடுகளும்,  சணப்பிரட்டியில் 192 வீடுகளும், அரவக்குறிச்சியில் 32 வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார். 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி,  கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ராதாகிருஷ்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/கிராம-மக்களின்-தேவைகளைக்-கேட்டறிய-வேண்டும்-3230073.html
3230072 திருச்சி கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டி வரை: ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் எல்.ஈ.டி விளக்குகள் அமைக்கப்படும் DIN DIN Sunday, September 8, 2019 04:07 AM +0530 சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டிவரை உள்ள சாலையில் எல்.ஈ.டி பல்புகள் மூலம் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 
கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், திண்ணப்பா நகர் மற்றும் முத்தாலடம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதல்வரின் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலும் பேசியது: 
கரூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.145 கோடியில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை இணைக்கும் நெரூர் - உன்னியூர் பாலம் என எண்ணற்ற திட்டங்களை  முதல்வர் அளித்து வருகிறார். மேலும், நெரூர், குளித்தலை பகுதிகளில் கதவணை கட்டும் ஆய்வு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5 டி.எம்.சி நீர் தேக்கிவைக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும்.  
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பில் சுமார் 48,500 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய குழாய் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தும் பணி நடைபெறுகிறது.  தாந்தோணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டிவரை உள்ள சாலையில் எல்.ஈ.டி பல்புகள் மூலம் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கரூர் மாவட்ட ஏழை பெண்களின் திருமாங்கல்யத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்க நடப்பாண்டில் 2000 பவுன்கள் தயாராய் உள்ளது. இதேபோல், 2018 -19 நிதியாண்டில் 1535 பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தாந்தோணி அரசு கலைக்கல்லூரி முன்புறம் ரூ.15 லட்சத்தில் நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜை பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் கரூர் நகராட்சிக்குட்பட்ட16, 22 , 44, 46 ஆகிய வார்டுகளிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன்,  வட்டாட்சியர்கள் அமுதா, ஈஸ்வரன்,தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் விசிகே.ஜெயராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதி தானேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/08/அமராவதி-பாலம்-முதல்-வெங்கக்கல்பட்டி-வரை-ரூ350-கோடி-மதிப்பீட்டில்-எல்ஈடி-விளக்குகள்-அமைக்கப்படும-3230072.html
3229604 திருச்சி கரூர் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு DIN DIN Saturday, September 7, 2019 10:07 AM +0530 தாந்தோணிமலையில் சனிக்கிழமை (செப். 7) மின்தடை செய்வதாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
கரூர் மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை மின்நிறுத்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/மின்தடை-அறிவிப்பு-ஒத்திவைப்பு-3229604.html
3229603 திருச்சி கரூர் ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, September 7, 2019 10:07 AM +0530 ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000  நிதி உதவி வழங்கப்படுகிறது.     இதற்கான விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி  பெறலாம். விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/ஜெருசலேம்-புனித-பயணத்திற்கு-விண்ணப்பிக்கலாம்-3229603.html
3229602 திருச்சி கரூர் செப்.13ஆம் தேதி அம்மா திட்ட முகாம் DIN DIN Saturday, September 7, 2019 10:07 AM +0530 கரூர் மாவட்டத்தில் வரும் 13ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
அரவக்குறிச்சி வட்டத்தில் கொடையூர் கிராமம், ஐந்து ரோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்திலும், மண்மங்கலம் வட்டத்தில் கருப்பம்பாளையம் சமுதாயக் கூடக் கட்டடத்திலும், குளித்தலை வட்டத்தில் ராஜேந்திரம் வடக்கு  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் சேங்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திலும், கடவூர் வட்டத்தில் பாப்பயம்பாடி கிராம நிர்வாக அலுவலகக்  கட்டடத்திலும், கரூர் வட்டத்தில் ஜெகதாபி கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்திலும், புகளூர் வட்டத்தில் மொஞ்சனூர் மேல்பாகம் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்திலும் நடைபெறவுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/செப்13ஆம்-தேதி-அம்மா-திட்ட-முகாம்-3229602.html
3229601 திருச்சி கரூர் குறுவட்ட போட்டியில் வென்றோருக்குப் பாராட்டு DIN DIN Saturday, September 7, 2019 10:06 AM +0530 பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆண்கள் குறுவட்ட  போட்டியில் குழு மற்றும் தனித்திறன் விளையாட்டுப் போட்டிகளில் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டியில், செஸ், வாலிபால், பூப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.மாணவர்களை பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் சேகர் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/குறுவட்ட-போட்டியில்-வென்றோருக்குப்-பாராட்டு-3229601.html
3229600 திருச்சி கரூர் டி.என்.பி.எல். மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு விருது DIN DIN Saturday, September 7, 2019 10:06 AM +0530 டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு கல்வித்துறையில் சீர்மையாக செயல்பட்டதை பாராட்டி முன்னோடி பெண்மணி விருது என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது, உலக அளவிலான முன்னுதாரணமான ஆசிரியர்களுக்கான குளோபல் டீச்சர்ஸ் ரோல் மாடல் விருது உள்ளிட்ட விருதுகள் பெற்ற காகிதபுரம் டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தே.வள்ளியம்மையை, உலக உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் மகளிரியல் துறை கெளரவித்துள்ளது. 
கல்விச்சேவையில் முனைப்பாகப் பணியாற்றி ஆசிரிய சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன்னோடியாக விளங்கியதைப் பாராட்டி கெளரவப்படுத்தும் வகையில் "முன்னோடி பெண்மணி விருது - 2019' என்ற விருதினை அண்மையில் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
விருதுகள் பெற்று வரும் பள்ளி முதல்வரை டி.என்.பி.எல் பள்ளிக்குழுவின் தலைவர் எஸ்.வி.ஆர். கிருஷ்ணன், செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.பாலசுப்ரமணியன், பொருளாளர் பி.ஸ்ரீனிவாசராவ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/டிஎன்பிஎல்-மெட்ரிக்-பள்ளி-முதல்வருக்கு-விருது-3229600.html
3229599 திருச்சி கரூர் ஆர்ச்சம்பட்டியில் ரூ.4.94 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி துவக்கம் DIN DIN Saturday, September 7, 2019 10:06 AM +0530 தோகைமலை ஊராட்சி ஒன்றியம், ஆர்ச்சம்பட்டியில் ரூ.4.95 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியது:  
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இங்கு ரூ.31.50 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருந்தகம் திறப்பதற்கு முன்பு சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள நெய்தலூர் கால்நடை மருந்தகத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கால்நடை மருந்தகம் திறந்து வைத்ததின் மூலம் ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.மலை, குழுப்போரி, ஆலந்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7500 கால்நடைகள் பயன்பெற உள்ளது.
மேலும் தோகமலையில் உள்ள ராமபத்திர நாயக்கர் குளம் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.4.95 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் வரத்து வாரிகள் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் தேக்கிவைக்கபடும் நீரால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இராதாகிருஷ்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் செந்தில் (குளித்தலை), அமுதா (கரூர்),  கரூர் நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/ஆர்ச்சம்பட்டியில்-ரூ494-லட்சத்தில்-குளம்-தூர்வாரும்-பணி-துவக்கம்-3229599.html
3229598 திருச்சி கரூர் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Saturday, September 7, 2019 10:06 AM +0530 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்பேரில், தளவாபாளையம் பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தளவாபாளையம் வழியாக  பாப்புலர் முதலியார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறமும் வசிக்கும் சிலர், வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருந்ததால் வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபட்டு வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தளவாபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017ஆம் ஆண்டு பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டனர். 
தொடர்ந்து இந்த உத்தரவுக்கு தடைகேட்டு சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்ததுடன், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.  இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் கரூர் மக்களவைத் தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி  தள்ளிப்போனது. 
தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.  அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பராமரிப்பு துறை உதவி செயற்பொறியாளர் சரவணன்,  உதவிப் பொறியாளர் ஸ்ரீதர், புகழூர் வட்டாட்சியர் ராஜசேகரன், புஞ்சை புகழூர் பேரூராட்சி செயல்அலுவலர் சக்திவேல் ஆகியோர் மேற்பார்வையில், பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி இடிக்கப்பட்டன. வேலாயுதம்பாளையம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/பாப்புலர்-முதலியார்-வாய்க்காலில்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3229598.html
3229597 திருச்சி கரூர் பண்டுதகாரன்புதூரில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி DIN DIN Saturday, September 7, 2019 10:05 AM +0530 பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கறவைமாடு வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மையத்தின் தலைவர் பெ.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில், பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்து இலவசப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. 
இப்பயிற்சியில் அறிவியல் ரீதியாக கறவை மாடு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்,  கறவை மாட்டு இனங்கள் மற்றும் பால் உற்பத்திக்கு தரமான மாடுகளை தேர்வு செய்தல், பண்ணை கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கி கடன் உதவி, காப்பீடு திட்டங்கள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம், பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகள், குறைந்த விலையில் சொந்தமாக கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலா மற்றும் மண்ணில்லா முறையில் தீவன உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபோர் அலுவலக தொலைபேசி எண். 04324 294335, செல்லிடப்பேசி எண் 73390 57073 ஆகியவற்றில் அழைத்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/07/பண்டுதகாரன்புதூரில்-கறவைமாடு-வளர்ப்பு-பயிற்சி-3229597.html
3228883 திருச்சி கரூர் தாந்தோணிமலை பெருமாள் கோயில் புரட்டாசி விழா: 30-இல் தொடக்கம் DIN DIN Friday, September 6, 2019 09:51 AM +0530 தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா வரும் 30-ஆம் ததி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து அக்.3-ஆதேதி வெள்ளி கருட சேவையும், 6-ஆம்
தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 7 ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலாவருதல் நிகழ்ச்சியும், 8-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. 
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வெள்ளி கருட சேவை நடக்கிறது. 20-ஆம் தேதி  புஷ்பயாகத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ம.சூரியநாராயணன், செயல் அலுவலர் நா.சுரேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/தாந்தோணிமலை-பெருமாள்-கோயில்-புரட்டாசி-விழா-30-இல்-தொடக்கம்-3228883.html
3228882 திருச்சி கரூர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை DIN DIN Friday, September 6, 2019 09:51 AM +0530 வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூரில் பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் தாந்தோன்றிமலை ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில்  கரூர் மாவட்டத் தலைவர் மணி கே.மகேஸ்வரன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
 இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட செயலாளர் அன்பு பசுபதி,  கரூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.நந்தகுமார், இணைச் செயலாளர் சிவபாண்டியன், தாந்தோணி நகர முன்னாள் சேர்மன் ரவி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.கி.தனபால், மூக்கணாங்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் சிவசாமி, தமிழ் ஆர்வலர்  வழக்குரைஞர் தமிழ்  ராஜேந்திரன்  மற்றும் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/வஉசிதம்பரனார்-சிலைக்கு-மாலை-அணிவித்து-மரியாதை-3228882.html
3228881 திருச்சி கரூர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3 பேர் கைது DIN DIN Friday, September 6, 2019 09:51 AM +0530 கரூரில்  ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களைப் பதுக்கியதாக 3 பேரைக் கைது செய்த போலீஸார் குட்கா ஏற்றிவந்த வேனைப் பறிமுதல் செய்தனர்.  மேலும் தப்பியோடிய வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். 
கரூர் பேருந்து நிலையம் அருகே தெற்கு முருகநாதபுரம் பகுதியில் வணிக நிறுவனம் நடத்தி வருபவர் கர்நாடகாவைச் சேர்ந்த சாவ்லா ராம் (30). இவர், சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள பாண்டியன் நகரில் மாயாண்டி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு அறை எடுத்து அங்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்றுவந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அத்தின்னப்பள்ளியில் இருந்து வேனில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை ஏற்றி வரப்பட்டு பாண்டியன் நகரில் உள்ள சாவ்லாராமிற்கு சொந்தமான அறையில் குட்கா பொருட்கள் இறக்கி வைப்பது 
குறித்து கரூர் நகரப் போலீஸார் தகவல் அறிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாரைக் கண்டதும் வேன் ஓட்டுநர் பார்த்திபன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.  வேன் கிளீனர் ஜிதேந்திரகுமார் (27), வேனிலிருந்த குட்கா பொருள்களை இறக்கிக் கொண்டிருந்த அத்தினப்பள்ளியைச் சேர்ந்த ஹர்ஷன் (21) ஆகியோரைப்  போலீஸார் கைது செய்தனர். பின்னர் குட்காவை பதுக்கிய சாவ்லாராமையும் கைது செய்தனர். தொடர்ந்து அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/ரூ10-லட்சம்-மதிப்புள்ள-குட்கா-பறிமுதல்-3-பேர்-கைது-3228881.html
3228880 திருச்சி கரூர் தாந்தோணிமலையில் நாளை மின் நிறுத்தம் DIN DIN Friday, September 6, 2019 09:50 AM +0530 தாந்தோணிமலை பகுதியில் வரும் 7-ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் வரும் 7-ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளானதாந்தோணிமலை,  சுங்ககேட்,  மணவாடி,  காந்திகிராமம்,  கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம்,  ஏமூர்,  மின்நகர், ஆட்சிமங்கலம்,  ராயனூர், கொரவபட்டி,  பாகநத்தம்,  பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/தாந்தோணிமலையில்-நாளை-மின்-நிறுத்தம்-3228880.html
3228879 திருச்சி கரூர் அகவை முதிர்ந்த ஆசிரியர்கள் வீடு தேடிச் சென்று பாராட்டு DIN DIN Friday, September 6, 2019 09:50 AM +0530 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அகவை முதிர்ந்த ஆசிரியர்கள் வீடு தேடிச் சென்று அவர்களை கருவூர் திருக்குறள் பேரவையினர் பாராட்டினர்.
நாடு முழுவதும் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, மத்திய, மாநில அரசுகள் , பள்ளி கட்டமைப்புகளிலும் மாணவர்கள் கல்வித்திறனில் அக்கறை காட்டுகின்ற ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி போற்றுகின்றார்கள். இதேபோல அரிமா சங்கம் போன்றவைகளும் ஆசிரிய மாமணி என்ற விருதினை வழங்குகின்றது. இந்த வகையில், கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய அணுகுமுறையாக ஆசிரியராகப் பணியாற்றி 20 வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற எஸ்.லட்சுமி நாராயணன் மற்றும் 85 வயதான எம்.ரத்தினம் ஆகியோருடைய வீடுகளுக்கு நேரிடையாக கருவூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை.பழநியப்பன், தமிழிசை சங்கத் தலைவர் க.ப.பாலசுப்ரமணியன், கரூர் காந்திகிராமம் ஷைன் லயன்ஸ் சங்க இயக்குநர் சீனிவாசபுரம் ரமணன், வித்யா, பத்திர விற்பனையாளர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று நூலாடை அணிவித்து பரிசு பொருள்களை வழங்கியதோடு, அவர்களின் பணிகளைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/அகவை-முதிர்ந்த-ஆசிரியர்கள்-வீடு-தேடிச்-சென்று-பாராட்டு-3228879.html
3228878 திருச்சி கரூர் அன்னை வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா DIN DIN Friday, September 6, 2019 09:49 AM +0530 வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியராகப் பணியாற்றி, தனது கடின உழைப்பால் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான  டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
கரூர் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் எம். கீதா மணிவண்ணன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் எம்.பகலவன் வரவேற்றார். விழாவில், பள்ளியின் தாளாளர் ஆர்.மணிவண்ணன் டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள் எம்.கதிரவன், என்சி.சதீஸ்குமார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பி.செந்தில்குமார் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
டி. என். பி. எல். பப்ளிக் பள்ளியில்... கரூர் காகிதபுரம் டி. என். பி. எல். பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் டாக்டர்.வா.மு.அய்யப்பன்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  விழாவில் பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் பாலசுப்ரமணியன், பள்ளியின் பொருளாளர் சீனிவாசராவ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பின்னர் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைப்பால் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/அன்னை-வித்யாலயா-பள்ளியில்-ஆசிரியர்-தின-விழா-3228878.html
3228877 திருச்சி கரூர் ஊரகப் பகுதிகளில் 81,000 மரக்கன்றுகள் நட இலக்கு DIN DIN Friday, September 6, 2019 09:49 AM +0530 கரூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 2019-20 ஆம் ஆண்டிற்குள்  81,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், தென்னிலை ஊராட்சி  மஞ்சப்புளிப்பட்டி, கீழ்சக்கரகோட்டை மற்றும் பண்ணப்பட்டி ஊராட்சி பழனிசெட்டியூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுவு செய்து பராமரித்து வரும் பணியினையும், தென்னிலை, கீழ்சக்கரக்கோட்டை மற்றும் வாழ்வார் மங்கலத்தில் குளம் தூர்வாரும் பணியினையும் வியாழக்கிழமை  மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா முன்னிலையில் பார்வையிட்டார். 
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:   கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை தடுக்கவும், வெப்பத்தின் அளவைக் குறைக்கவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதன்படியில், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2017-18 ஆம் ஆண்டிற்கு சாலையோரங்களில் 100 கி.மீ நீளத்திற்கு 76,550 மரக்கன்றுகளும், 2018-19 ஆண்டில் சாலையோரங்களில் 90.10 கி.மீ நீளத்திற்கு 72,749 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. 2019-20 நடப்பு ஆண்டில்  81,000 மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிட்டு இதுவரை சாலையோரங்களில் 12.75 கி.மீ நீளத்தில் 2,550 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள மரக்கன்றுகள் விரைவாக நடவு செய்யப்பட உள்ளது. இப்பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய கிராம சாலையோரம் இருபுறங்கள் மற்றும் பொது இடங்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்கள், அரசு மற்றும் தனியார் இடங்களில்  மரக்கன்றுகள்  நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
 மேலும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழை நீரை சேகரிக்கவும், விவசாயிகளுக்கு  உதவிடும் வகையில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 27 சிறு பாசனக் குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 65  குளம், குட்டைகள் தலா ரூ. 1லட்சம் மதிப்பில்  தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியின் போது உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார்,  ஊராட்சிகளின்  உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார  வளர்ச்சி  அலுவலர்  பரமேஷ்வரன்,  உதவி  பொறியாளர்கள் தியாகராஜன், கிருஷ்ணன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/ஊரகப்-பகுதிகளில்-81000-மரக்கன்றுகள்-நட-இலக்கு-3228877.html
3228876 திருச்சி கரூர் கரூர், குளித்தலை நீதிமன்றங்களில் செப். 14-இல் மக்கள் நீதிமன்றம் DIN DIN Friday, September 6, 2019 09:49 AM +0530 வரும் 14 -ஆம் தேதி கரூர், குளித்தலை நீதிமன்றங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மெகா அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட தலைமை நீதிபதி கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் கூறியது: 
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன வழக்குகள், வங்கி கடன் திரும்பச் செலுத்துதல் தொடர்பான வழக்குகள், பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பான வழக்குகள் போன்றவை எடுத்துக்கொள்ளப்படும். இங்கு கையாளப்படும் வழக்குகள் இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி இன்றி சமரசமான ஒரு சூழலை ஏற்படுத்துவதாக இருக்கும். மன்னித்து விடக்கூடிய குற்றவியல் தொடர்பான வழக்குகளும்  எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் பிரச்னை தொடர்பான வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. கடந்த முறை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 300 நிலுவை வழக்குகள், நீதிமன்றத்திற்கு வராத 600 வழக்குகள் எனத் தீர்வு காணப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்திற்கு  தயாராகும் வகையில் வார விடுமுறை நாட்களில் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தலைமையில் பேசி தீர்வு காணப்பட்டு 14-ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் குளித்தலை நீதிமன்றத்திலும் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் செயல்படும். கரூர் மாவட்டத்தில் புதிதாக அரவக்குறிச்சியில் துவக்கப்பட்ட நீதிமன்றத்தில் அடுத்து வரும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த முறை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில்  சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/06/கரூர்-குளித்தலை-நீதிமன்றங்களில்-செப்-14-இல்-மக்கள்-நீதிமன்றம்-3228876.html