Dinamani - திருச்சி - https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3099505 திருச்சி திருச்சி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு DIN DIN Wednesday, February 20, 2019 09:14 AM +0530 திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர், மாணவிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அறக்கட்டளை நிறுவனர் பி. தயாபரன் வெளியிட்ட அறிக்கை:
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், திருக்குறள் திருவிழா எனும் குறள் ஒப்புவித்தல் போட்டி 22ஆவது ஆண்டாக திருச்சியில் நடத்தப்படவுள்ளது. இதில், 17 அகவைக்குள்பட்ட மாணவர், மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம். 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் 30 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், விருது வழங்கப்படும். முதல் 500 குறள்களை ஒப்புவிக்கும் 110 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்படும். ஏற்கெனவே அறக்கட்டளை போட்டியில் விருது பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது.
விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விவரங்களை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி பதிவு செய்ய வேண்டும். திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே மாதம் போட்டிகள் நடைபெறும்.
சுய விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பி. தயாபரன், நிறுவனர், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை, புள்ளம்பாடி-621711. மேலும், விவரங்களுக்கு 97865-86992 என்ற செல்லிடபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/திருக்குறள்-ஒப்புவித்தல்-போட்டி-மாணவர்களுக்கு-அழைப்பு-3099505.html
3099504 திருச்சி திருச்சி இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி DIN DIN Wednesday, February 20, 2019 09:14 AM +0530 இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனப்பயிர் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்தபயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோர் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியரும், மையத்தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/இலவச-கறவைமாடு-வளர்ப்புப்-பயிற்சி-3099504.html
3099503 திருச்சி திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, February 20, 2019 09:13 AM +0530 காப்பீட்டுக் கட் டண உயர்வைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆண்டுதோறும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவதை நிறுத்த வேண்டும், கட்டுப்பாடில்லாத மூன்றாம் நபருக்கான காப்பீட்டுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இழப்பீடுத் தொகை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல். பக்ருதீன் பாபு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கராஜன், பொதுச் செயலர் மணிகண்டன், அமைப்புச் செயலர் ஜி.சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நிறைவில், மாவட்டப் பொருளாளர் அன்புச் செல்வம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/ஆட்டோ-ஓட்டுநர்கள்-ஆர்ப்பாட்டம்-3099503.html
3099502 திருச்சி திருச்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு DIN DIN Wednesday, February 20, 2019 09:13 AM +0530 தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவராக சிவகங்கையைச் சேர்ந்த பீட்டர்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 
திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில்,  மாநிலத் தலைவராக சிவகங்கையைச் சேர்ந்த பீட்டர்ராஜா, மாநில பொதுச்செயலாளராக திருவள்ளூரைச் சேர்ந்த ராஜு, மாநில பொருளாளராக திருச்சி, இனாம் பெரியநாயகி சத்திரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசன், மாநில அமைப்புச் செயலராக தருமபுரி இளங்கோ, தலைமை நிலையச் செயலாளராக காஞ்சிபுரம் மாயகிருஷ்ணன் மற்றும் சட்டச் செயலாளர்கள், மகளிர் அணிச் செயலர்கள், மாநில துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் இருந்து,  சுமார் 400க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும், சங்கத்தின் புரவலர் அருள்சுந்தர்ராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் பொதுச்செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி-தலைமை-ஆசிரியர்-சங்க-மாநில-நிர்வாகிகள்-போட்டியின்றி-தேர்வு-3099502.html
3099501 திருச்சி திருச்சி மது போதையில் தகராறு: இருவர் குத்திக் கொலை DIN DIN Wednesday, February 20, 2019 09:13 AM +0530 திருச்சியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
தேவதானம், பிள்ளையார் கோயில்தெருவைச் சேர்ந்தவர் ரா. பிரகாஷ்குமார் ( 34) பெயிண்டர்.  கீழரண்சாலை விறகுப்பேட்யைச் சேர்ந்தவர் ஆ. ராஜ்குமார்(38) சுமை தூக்கும் தொழிலாளி.  நண்பர்களான இருவரும், செவ்வாய்க்கிழமை இரவு தேவதானம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் மதுஅருந்திவிட்டு நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர்  ஜெகநாதனிடம் (35) இருவரும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன், அங்கிருந்து சென்று,  ஆதரவாளர்கள் 4 பேருடன் மீண்டும் சம்பவ இடத்துக்கு  வந்துள்ளார்.
அப்போது, அங்கு நின்றிருந்த பிரகாஷ்குமார், ராஜ்குமார் இருவரையும் கட்டை மற்றும் கம்பியால் தாக்கியும் கத்தியாலும் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து,  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
சரண்: தப்பியோடிய ஜெகநாதன் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/மது-போதையில்-தகராறு-இருவர்-குத்திக்-கொலை-3099501.html
3099500 திருச்சி திருச்சி மாசி பௌர்ணமி : திருவானைக்காவில் நால்வர் புறப்பாடு DIN DIN Wednesday, February 20, 2019 09:13 AM +0530 மாசி பௌர்ணமியையொட்டி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் நால்வர் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் புறப்பாடாகி, 5 ஆம் பிரகாரத்தை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழ் மாதத்தில்  பௌர்ணமியோடு மாசி மகமும் இணைந்து வந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கயிலாய வாத்தியத்துடன் 5 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனர். ஏராளமான சிவபக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று சிவமந்திரத்தை உச்சரித்து வலம் வந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/மாசி-பௌர்ணமி--திருவானைக்காவில்-நால்வர்-புறப்பாடு-3099500.html
3099499 திருச்சி திருச்சி மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது DIN DIN Wednesday, February 20, 2019 09:12 AM +0530 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 74 வயது முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
வையம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மனநலன் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை வீட்டில் இருந்த போது, திடீரென அலறல் சப்தம் கேட்டது. இதையறிந்து அவரது உறவினர் பெண். அங்கு வந்தபோது கதவு தாழிட்டு இருந்ததும், அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பொம்முரெட்டி  (74) இருந்ததையும் அவர் பார்த்துள்ளார். 
மற்றவர்களை அழைத்து வர அப்பெண் சென்ற போது பொம்முரெட்டி அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதுகுறித்து  வையம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து பொம்முரெட்டியை கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/மனநலன்-பாதிக்கப்பட்ட-பெண்ணை-பலாத்காரம்-செய்ய-முயன்ற-முதியவர்-கைது-3099499.html
3099498 திருச்சி திருச்சி அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு DIN DIN Wednesday, February 20, 2019 09:12 AM +0530 துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கடைவீதியை நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்ற இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதியர் காயமடைந்தனர்.
தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம், உத்தமப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அ.பழனியாண்டி (42), அவரது மனைவி பெரியநாச்சி (38) என்பதும், உறவினர் வீட்டுக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
 மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  பழனியாண்டி உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/அடையாளம்-தெரியாத-வாகனம்-மோதி-தொழிலாளி-சாவு-3099498.html
3099497 திருச்சி திருச்சி பிப்.23 -இல் சட்டத் திருவிழா DIN DIN Wednesday, February 20, 2019 09:12 AM +0530 திருச்சி ஆக்ஸ்போர்டு பொ றியியல் கல்லூரியில் பிப். 23ஆம் தேதி சட்டத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் தி.சுசீலா கூறியது. திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்,உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தேசிய சிந்தனையை வளர்க்க இத்திருவிழா நடத்தப்படுகிறது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/பிப்23--இல்-சட்டத்-திருவிழா-3099497.html
3099496 திருச்சி திருச்சி வேங்கை மண்டலத்தில் பிப்ரவரி 21 மின்தடை DIN DIN Wednesday, February 20, 2019 09:11 AM +0530 வேங்கை மண்டலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (பிப்.21) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர் பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் நகரியம் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்குள்பட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
மேலும், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. சேகர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/வேங்கை-மண்டலத்தில்-பிப்ரவரி-21-மின்தடை-3099496.html
3099495 திருச்சி திருச்சி திருச்சி மாவட்டத்துக்கான வெளிவட்ட சுற்றுச் சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, February 20, 2019 09:11 AM +0530 திருச்சி மாவட்டத்துக்கான வெளி வட்டச் சுற்றுச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உபயோகிப்பாளர் இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டத்துக்கு, இயக்கத் தலைவர் வி. மகேஷ்வரன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் ஹெல்டின்ரஜினி, துணைத் தலைவர் தியாகராஜன், மூத்த உறுப்பினர் அன்னக்கிளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிர்வாகச் செயலர் பி.ஏ. ஹரிஹரன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியை சுற்றி அமைக்கப்படும் வெளிவட்ட சுற்றுச் சாலைக்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். 
திருச்சி-கீரனூர், திருச்சி- சேலம், திருச்சி- கரூர் நான்கு வழிச் சாலை திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். 
திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கான இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/திருச்சி-மாவட்டத்துக்கான-வெளிவட்ட-சுற்றுச்-சாலையை-விரைந்து-அமைக்க-வலியுறுத்தல்-3099495.html
3099494 திருச்சி திருச்சி மனைவி தற்கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை DIN DIN Wednesday, February 20, 2019 09:10 AM +0530 வரதட்சணைக் கொடுமையால் மனைவி தூக்கிட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் செல்வகணபதி(37). இவருக்கும் ராஜலட்சுமி(29) என்பவருக்கும் கடந்த 12.2.2012 ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு வரதட்சணைக் கேட்டு ராஜலட்சுமியை செல்வகணபதி குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராஜலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸார் கணவர் செல்வகணபதி, அவரது தாயார் கோமதி, சகோதரர் சுப்பிரமணியன், சகோதரனின் மனைவி ருக்குமணி ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.மகிழேந்தி செவ்வாய்க்கிழமை செல்வகணபதிக்கு ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/மனைவி-தற்கொலை-கணவருக்கு-ஆயுள்-தண்டனை-3099494.html
3099493 திருச்சி திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு நவீன கேமரா DIN DIN Wednesday, February 20, 2019 09:10 AM +0530 திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு புகையும், இருளும் சூழ்ந்திருக்கும் இடத்திலும் புகைப்படம் எடுக்கும் வகையிலான நவீன கேமரா அரசால் வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் எஸ்.லியோ ஜோசப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:   திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் செயல்படும் வகையில் ரூ.5.50லட்சம் மதிப்பிலான நவீன கேமரா தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கு தெர்மல் இமேஜிங் கேமரா என்று பெயராகும். விபத்து நடந்த இடங்களில் புகை சூழ்ந்திருந்தால் அவற்றுக்குள் மனிதர்கள் இருக்கிறார்களா என்பதை அம்மனிதர்களது உடல் வெப்பத்தை கணக்கிட்டு அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை துல்லியமாக கணக்கிட்டு உடனுக்குடன் உதவிகளை செய்து காப்பாற்ற முடியும். மிகவும் இருள் நிறைந்திருக்கும் இடத்தில் இந்த கேமரா யார் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக காட்டும் சக்தி படைத்தது.
தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும். சுமார் 2 ஆயிரம் புகைப்படங்கள் வரை இக்கருவி மூலம் எடுக்க முடியும். ஒரே நேரத்தில் புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கும் வசதியும் உள்ளது. அதே நேரத்தில் தண்ணீரிலும் மூழ்காமல் மிதக்கக்கூடியது.சீருடை அணிந்திருப்பவர்கள் தங்கள் சீருடையில் மாட்டிக் கொண்டு செயல்படும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே போல திருச்சி தீயணைப்பு நிலையத்தில் 12 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும் தீயை அணைக்கும் வகையில் 137 அடி உயரம் கொண்ட பிரான்டோ ஸ்கை லிப்ட் என்ற கருவியும் உள்ளது. இக்கருவி மூலம் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும்  தீ விபத்துக்களையும் தடுக்க முடியும்.மேலும் கான்கிரீட் கட்டடங்களில் ஏற்படும் இடிபாடுகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் கான்கிரீட் கட்டர், இரும்புக் கம்பிகள் கட்டர் உள்பட பல்வேறு மீட்புக் கருவிகளும் உள்ளன என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/தீயணைப்பு-நிலையத்துக்கு-நவீன-கேமரா-3099493.html
3099492 திருச்சி திருச்சி துறையூர் அருகே 500க்கும் மேற்பட்ட போலி மதுபாட்டில்கள் பறிமுதல் DIN DIN Wednesday, February 20, 2019 09:09 AM +0530 திருச்சி மாவட்டம், துறையூர் அருகே 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பெரம்பலூர் தனியார் பால் நிறுவனம் அருகே  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது மூட்டைகள் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, வாகனத்தில் 59 மதுபாட்டில்கள் இருப்பதும், அவர், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியைச் சேர்ந்த செ.சரத்குமார்(26) என்பதும் தெரியவந்தது. அவர், மேலக்கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி, அஜய் ஆகியோருடன் சேர்ந்து போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், பெரமங்கலம் - உடையாம்பட்டி செல்லும் சாலையில் மூடப்பட்ட கோழிப்பண்ணையை சாத்தான்குளம் மூ.வீரன், ரவி ஆகியோர் குத்தகைக்கு எடுத்து,போலி மதுபாட்டில்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார், அங்கிருந்த 800 காலிபாட்டில்கள், மது நிரப்பப்பட்ட 500க்கும் மேற்பட்ட பாட்டில்கள், கேன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை போலீஸார் கைது செய்தனர். கார்த்தி, அஜய், வீரன், ரவி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/துறையூர்-அருகே-500க்கும்-மேற்பட்ட-போலி-மதுபாட்டில்கள்-பறிமுதல்-3099492.html
3099491 திருச்சி திருச்சி திருக்குறள் ஒப்புவித்தல்: மாணவர்களுக்கு அழைப்பு DIN DIN Wednesday, February 20, 2019 09:09 AM +0530 திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர், மாணவிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அறக்கட்டளை நிறுவனர் பி. தயாபரன் வெளியிட்ட அறிக்கை:
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், திருக்குறள் திருவிழா எனும் குறள் ஒப்புவித்தல் போட்டி 22ஆவது ஆண்டாக திருச்சியில் நடத்தப்படவுள்ளது. இதில், 17 அகவைக்குள்பட்ட மாணவர், மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம். 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் 30 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், விருது வழங்கப்படும். முதல் 500 குறள்களை ஒப்புவிக்கும் 110 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்படும். ஏற்கெனவே அறக்கட்டளை போட்டியில் விருது பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விவரங்களை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி பதிவு செய்ய வேண்டும். திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே மாதம் போட்டிகள் நடைபெறும். சுய விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பி. தயாபரன், நிறுவனர், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை, புள்ளம்பாடி-621711. மேலும், விவரங்களுக்கு 97865-86992 என்ற செல்லிடபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/திருக்குறள்-ஒப்புவித்தல்-மாணவர்களுக்கு-அழைப்பு-3099491.html
3099490 திருச்சி திருச்சி தீக்காயமடைந்த மாணவி சாவு DIN DIN Wednesday, February 20, 2019 09:09 AM +0530 துறையூர் மதுராபுரியில் பேப்பர் குப்பைகளைச் சேகரித்து  தீ வைத்த போது,எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் காயமடைந்த மாணவி  திங்கள்கிழமை உயிரிழந்தார். 
துறையூர் ஒன்றியம், மதுராபுரியைச் சேர்ந்த எலெக்டிரீசியன் ரா. பிரபாகரன் (38). இவரது மூத்த மகள் ஜெகதீசுவரி (8).  மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். , கடந்த மாதம் 27 ஆம் தேதி  வீட்டிலிருந்த பேப்பர் குப்பைகளை சேகரித்து தீ பற்ற வைத்து விளையாடிய போது எதிர்பாராதவிதமாக ஜெகதீசுவரி மீது தீப்பற்றியது.
 பலத்த காயமடைந்த இவர் துறையூர், சமயபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிப்.4 ஆம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெகதீசுவரி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/தீக்காயமடைந்த-மாணவி-சாவு-3099490.html
3099489 திருச்சி திருச்சி திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.20 லட்சம் தங்கம் பறிமுதல் DIN DIN Wednesday, February 20, 2019 09:09 AM +0530 மலேசியத் தலைநகர், கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பயணியிடம் ரூ.35.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்  விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோலாலம்பூரிலிருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சென்னை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்குள்படுத்தப்பட்டனர்.
அப்போது,  பயணிகள் 4 பேர்  1,100 கிராம் எடையுள்ள ரூ. 35.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன், தீபா, மகாலட்சுமி, தமிழ்ச்செல்வன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.  இவர்கள் 4 பேரும்  அடிக்கடி வெளிநாடுகளிலிருந்து நகைகளை கழுத்தில் அணிந்து கடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி பாஸ்போர்ட்- இருவர் கைது : சிங்கப்பூர், கொழும்புவிலிருந்து திருச்சி வந்த விமானங்களில்  பயணம் செய்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர். அப்போது சிங்கப்பூரிலிருந்து வந்த  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமலை மகன் பாண்டியன் (51), கொழும்புவிலிருந்து வந்த சிவகாசியைச் சேர்ந்த தங்கையா மகன் தயாபரன் (42) ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடம் விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள்,  விமான நிலையக் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிந்து பாண்டியன், தயாபரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/திருச்சி-விமான-நிலையத்தில்-ரூ3520-லட்சம்-தங்கம்-பறிமுதல்-3099489.html
3099488 திருச்சி திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது DIN DIN Wednesday, February 20, 2019 09:08 AM +0530 திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்சி நவல்பட்டு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையில் போலீஸார் குண்டுர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த சக்திதாசன்(19), வடக்கு தாராநல்லூரை சேர்ந்த பாலமுருகன்(29), வரகனேரி ஜாபர்அலி(27) மற்றும் திருவெறும்பூர் அம்பாள்புரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன்  என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறினர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், 4 பேரும் தலா 50 வீதம்  மொத்தம் 200 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த ரெத்தினம் மற்றும்  தேவேந்திரன் ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து, நவல்பட்டு, குண்டூர் பகுதிகளில் தங்கியுள்ள கல்லூரி  மாணவர்களுக்கு  விநியோகித்து வந்தது தெரியவந்தது.  
இது தொடர்பாக நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, சக்திதாசன், பாலமுருகன், ஜாபர் அலி ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/கல்லூரி-மாணவர்களுக்கு-கஞ்சா-விற்ற-3-பேர்-கைது-3099488.html
3099487 திருச்சி திருச்சி விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின்  தேர்தல் அறிக்கை வெளியீடு DIN DIN Wednesday, February 20, 2019 09:08 AM +0530 காவிரி வழக்கில் மறுசீராய்வு மனு, விளை பொருளுக்கு விலை நிர்ணயம், லோக்பால் சட்டம், மதுவிலக்கு, வேளாண்மைக்கு தனிபட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய மக்களவைத் தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டமைப்பின் மாநிலச் செயலர் செ. நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையம் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். உற்பத்தி செலவிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
காவிரி வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். தினந்தோறும் நீர்ப்பங்கீட்டு முறையே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும். உபரிநீர் கடலில் கலப்பது மடைமாற்றப்பட்டு ஏரி, குளங்களில் தேக்க வழிவகை கிடைக்கும். பெட்ரோலிய இறக்குமதி மூலம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடிக்கு அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எரிபொருள் செலவு மீதமாகும்.  
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதுவரை டாஸ்மாக் மதுக்கடைகளில் பனை, தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.  மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டை தனி நபர் காப்பீடாக மாற்றியமைக்க வேண்டும்.  ஊழல், முறைகேடுகள் குறைந்தால் மட்டுமே நாட்டில் அமைதி நிலவும். எனவே, வலுவான லோக்பால் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
 பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.   உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளை தன்னாட்சி மற்றும் அதிகாரம் கொண்டவைகளாக மாற்ற தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை மட்டுமே மக்களவைத் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/விவசாயிகள்-சங்கங்கள்-கூட்டமைப்பின்--தேர்தல்-அறிக்கை-வெளியீடு-3099487.html
3099486 திருச்சி திருச்சி துறையூர் பகுதி சிவன் கோயில்களில் மாசிமகம் DIN DIN Wednesday, February 20, 2019 09:08 AM +0530 துறையூர் பகுதி சிவன் கோயில்களில் மாசி மகம் மற்றும்  பௌர்ணமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துறையூர்- ஆத்தூர் சாலையிலுள்ள சிவன்கோயிலில் மூலவர் நந்திகேசுவரர்- சம்பத் கௌரி,  விநாயகர், வள்ளி- தெய்வ சேனா சமேத முருகன், சண்டிகேசுவரர், அம்பாள் மற்றும் உமையாள் சமேத சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் அலங்காரத்துக்குப் பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பகளவாடி அருகிலுள்ள சத்திரம் காமாட்சி  உடனுறை ஏகாம்பரேசுவரர் கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி சித்தர் சாரங்கநாதர் சந்நிதியில்யாகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து,  பயங்கரவாதத்  தாக்குதலில்
உயிரிழந்த சிஆர்பிஃஎப் வீரர்கள் ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.துறையூர் ஓங்காரக்குடிலிலும் ரெங்கராஜ தேசிகர் தலைமையில் பௌர்ணமியையொட்டி ஜோதி வழிபாடு, சித்தர் போற்றி வழிபாடு நடைபெற்றது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/துறையூர்-பகுதி-சிவன்-கோயில்களில்-மாசிமகம்-3099486.html
3099485 திருச்சி திருச்சி ராகுல்காந்தியை பிரதமராக்குவதே இலக்கு: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய்தத் DIN DIN Wednesday, February 20, 2019 09:07 AM +0530 காங்கிரஸ் கட்சியின் வெற்றியை நிலை நாட்டி,  ராகுல் காந்தியை பிரதமராக்குவதே இலக்காக கொள்ள வேண்டும் என்றார்  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத்.
மக்களவைத் தேர்தலுக்கான, திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அடங்கிய  மண்டல அளவிலான ஆயத்த கூட்டம்,  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில் அவர் மேலும் பேசியது:  
இங்கு கூடியுள்ள கூட்டமும், தொடர்ந்து தமிழக மக்கள் காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவும் நாம் வெற்றிப்பாதையில் செல்ல வழிவகுத்து வருகிறது. நமது சந்ததியினரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காலகட்டத்தில் உள்ளோம். அதனை மனதில் கொண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது முக்கியம் . பலமான ஆதரவு இருப்பதால் நாம் திருச்சி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 
நமது கூட்டணி ,  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. 
ஆனால் தற்போது சேர்ந்துள்ள பாஜக, அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. நேற்றுவரை ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டிருந்தனர், ஆனால் இன்று கூட்டணி சேர்ந்துள்ளனர். இது தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிரத்திலும் இதே நிலைதான். 
அங்கே சிவசேனை கட்சியும்-பாஜகவும் 2 நாள் முன்புவரை ஒருவரை ஒருவர் விமர்சித்த நிலை மாறி தற்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளன. அதேபோல பாமகவும் விமர்சித்து பின்னர் கூட்டணி சேர்ந்துள்ளது.
அடிப்படை கொள்கையின்றி அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளன.  ஊழல் வழக்குகள் குறித்தும், அமலாக்கத்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என  மிரட்டியும் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். ஜாதிப் பெயரையும், கட்சிப் பெயரையும் கூறி வாக்கு கேட்டு வருவார்கள். அதிமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, அவர்களுக்கல்ல, அது மோடியின் வெற்றிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை பெறவும், வெற்றியை நிலை நாட்டவும் பிரதமராக ராகுல் காந்தியை அமர்த்தவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வதுடன் நமது இலக்கும் அதுவாக அமைய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தமிழக செயல் தலைவர்கள்  வசந்தகுமார்,  மயூரா எஸ். ஜெயக்குமார், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்  
வி. ஜவஹர்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்
ஏ. ஜோசப்லூயிஸ், மாவட்ட தலைவர்கள் கலைச்செல்வன், வழக்குரைஞர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள், விஷ்ணுபிரசாத், ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி. பாபு, சுஜாதா, 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/20/ராகுல்காந்தியை-பிரதமராக்குவதே-இலக்கு-காங்கிரஸ்-கட்சியின்-தேசிய-செயலர்-சஞ்சய்தத்-3099485.html
3098867 திருச்சி திருச்சி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது DIN DIN Tuesday, February 19, 2019 09:29 AM +0530 திருச்சி மாவட்டம்,  நெ. 1 டோல்கேட் அடுத்த தாளக்குடி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 10 பேர் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  
சமயபுரம் நெ. 1 கொள்ளிடம் அடுத்த தாளக்குடி ஊராட்சி பகுதியில்  உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கொள்ளிடம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு 2 டாரஸ் லாரிகளில் 10 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.  அவர்களைச் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்,  அவர்கள், புதுகை மாவட்டம், வசந்தபுரி நகரைச் சேர்ந்தவர்களான கருப்பையா மகன் விஜயகுமார் (32),  அருண்குமார் மகன் ரமேஸ்கண்ணன் (31), திருநெல்வேலி மாவட்டம், குறிஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான சுடலைமுத்து மகன் பார்த்தீபன் (24), பண்டாரம் மகன் சூரியபிரகாஷ் (26),  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தைலான் மகன் முருகேசன் (53), லால்குடி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் கார்த்திக் (23), திருச்சி மாவட்டம், அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த  பிச்சை மகன் சக்திவேல் (25),  ஆறுமுகம் மகன் முத்துக்குமார் (43),  லெக்கன் மகன் சுரேஷ் (32), மணப்பாறை பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி மகன் அறிவழகன் (22) ஆகிய 10 பேர் என்பது தெரியவந்தது. 
அவர்களை கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த போலீஸார் வழக்கு பதிந்து திருச்சி நீதிமன்றம் - 4  இல் ஆஜர்படுத்தினர். 
இதில் அவர்கள் 10 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/ஆற்றில்-மணல்-திருட்டில்-ஈடுபட்ட-10-பேர்-கைது-3098867.html
3098866 திருச்சி திருச்சி மணப்பாறையில் குடிநீரில் புழுக்கள் DIN DIN Tuesday, February 19, 2019 09:29 AM +0530 மணப்பாறையில் நகராட்சி பகுதியில் குடிநீரில் திங்கள்கிழமை வெள்ளை புழுக்கள் கலந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ஆணையரிடம் புகார் அளித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 23 வார்டுக்குட்பட்ட பகுதியான காசிம் ராவுத்தர் பேட்டை, அப்பாஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 3 மூன்று மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் திங்கள் கிழமை காலை குடிநீரில் சுமார் 2 செ.மீ அளவிலான வெள்ளை புழுக்கள் அதிக அளவில் காணப்பட்டது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதிக்கு வந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ் என்பவரை வழிமறித்து அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஆணையர் (பொ) நகராட்சி பொறியாளர் மனோகரன், சம்பவ இடத்துக்குவந்து குடிநீரில் புழுக்கள் இருப்பதை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/மணப்பாறையில்-குடிநீரில்-புழுக்கள்-3098866.html
3098865 திருச்சி திருச்சி காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் 9.35 லட்சம் மரக்கன்றுகள் நடவு: கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் தகவல் DIN DIN Tuesday, February 19, 2019 09:28 AM +0530 வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் மூலம், தமிழகத்தில் 9.35 லட்சம் மரக்கன்றுகள்  நடவு செய்யப்பட்டுள்ளது என  தமிழக  வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுகட்டோ தத் தெரிவித்தார்.
தமிழக வனத்துறை சார்பில், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வரும், தேசிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.   இதில்  சுகட்டோ தத் பேசியது: வேளாண் தொழில் மிகவும் சவால்கள் வாய்ந்த தொழிலாகி விட்டதால் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் விவசாயிகள். எனவே  விவசாயிகள் பயன் பெறும் வகையில், வேளாண் துறையுடன் இணைந்து காடுகள் வளர்க்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.  
பழவகை, மலர்கள்,  மட்டுமின்றி அனைத்து வகையான மரங்களையும் வளர்க்கலாம்.  மரங்களிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருள்களை உபயோகித்த பின்னரும்   இறுதி காலத்தில், மரங்களை மரப்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
மரங்களை லாப விலைக்கு விற்பது,   சந்தைப்படுத்தும் இடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும்  விவசாயிகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த நடவடிக்கை தமிழகம் மட்டுமல்லாத அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் எந்தெந்த மரங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு தேவை, அங்கு விலை விவரம்  குறித்து தெரிவிக்கப்படும் எனவே வேளாண் பயிர்கள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள் மரங்கள் மூலமாகவும் ஆண்டு முழுவதும் நிரந்தர வருவாய் பெறும் நோக்கில் இத் திட்டம் செயல்டுத்தப்படுகிறது.
2017-18 நிதியாண்டில்  தமிழகத்தில் 9.35 லட்ச்சம் மரக்கன்றுகள் நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றை வளர்ப்பதற்காக  ஆழ்துளைக் கிணறுகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிவு உரமாக்கும் தொட்டிகள் உள்ளிட்டவை ரூ. 3.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் குறைந்த பட்சம் 30 சதவிகித தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு கூடுதல் முதன்மை  தலைமை வனப்பாதுகாவலர்கள்  கயாரத் மோகன்தாஸ்,  கே.வி. கிரிதர் ( வனத்தோட்டக்கழகம்) திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் டி.வி. மஞ்சுநாதா, திண்டுக்கல் தலைமை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மாவட் ட வன அலுவலர்கள் சுஜாதா (திருச்சி), க. அசோகன் (பெரம்பலூர்), உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக,  பெரம்பலூரைச் சேர்நந்த விவசாயிகள்  மா. அமுதாவுக்கு ரூ. 16 ஆயிரம், ரா. எழிலரசிக்கு ரூ.14 ஆயிரம்  பயிர் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. மேலும் வேப்பந்தட்டையைச் சேர்ந்த பெ. பூவாயி, அரியலூர் பெ. வீரமுத்து, புதுக்கோட்டை  விஜயா, மற்றும் ந. ராமன் ஆகியோருக்கு சுமார் தலா ரூ. 5 ஆயிரம்  உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/காடுகள்-வளர்ப்புத்-திட்டத்தில்-935-லட்சம்-மரக்கன்றுகள்-நடவு-கூடுதல்-முதன்மை-வனப்-பாதுகாவலர்-தகவல்-3098865.html
3098864 திருச்சி திருச்சி பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 1,200 பேர் பங்கேற்பு DIN DIN Tuesday, February 19, 2019 09:28 AM +0530 பி.எஸ்.என்.எல்.   தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில், திருச்சி தொலைத் தொடர்பு மாவட்டத்தில் சுமார் 1,200  பேர்  ஈடுபட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை தனியார் மயமாக்க கூடாது. மேலும்  4 ஜி  வழங்கப்பட வேண்டும்.  தொழிலாளர்களுக்கு 15 சதவிகித நிர்ணய பலனுடன் ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ். என்.எல்.  ஊழியர்கள், திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் திருச்சி தொலை தொடர்பு மாவட்டத்துக்கு உள்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் பணியாற்றுவோர்  பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப்  போராட்டத்தில் பங்கேற்றனர்.  முதல் நாள் என்பதால் திங்கள்கிழமை பாதிப்புகள் ஏதுமில்லை, ஆனால் தொடர்ந்து 3 நாள்கள் 20 ஆம் தேதி வரையில் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், அடுத்த சில நாள்களில் பணிகள் பாதிக்கும் என தெரிகிறது.
போராட்டத்தைத் தொடர்ந்து, காலையில் அலுவலக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசியத் தொலைத் தொடர்பு ஊழியர் சங்க நிர்வாகி தலைவர் எஸ். பழனியப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ். காமராஜ் ,  எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பிஎஸ்என்எல்-தொழிலாளர்கள்-வேலைநிறுத்தம்-1200-பேர்-பங்கேற்பு-3098864.html
3098863 திருச்சி திருச்சி தகராறு: இளைஞர் கைது DIN DIN Tuesday, February 19, 2019 09:27 AM +0530 ஸ்ரீரங்கத்தில் பெண்ணைத் திருமணம் செய்து தருமாறு, தகராறில் ஈடுபட்டவரைப் போலீஸார் கைது  செய்தனர்.
ஸ்ரீரங்கம் நரியன்தெரு பகுதியைச் சேர்ந்த  கூலித்தொழிலாளியின் மகளை ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியில் வசிக்கும் சுதர்சன் (22) தன்னை காதலிக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். தனது தந்தையிடம் அப்பெண் புகார் செய்தார். அவர் சுதர்சனை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அவர் அளித்தபுகாரின்பேரில், சுதர்சனைப் போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/தகராறு-இளைஞர்-கைது-3098863.html
3098862 திருச்சி திருச்சி குடிநீர், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் பேட்டி DIN DIN Tuesday, February 19, 2019 09:27 AM +0530 திருச்சி மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என திங்கள்கிழமை  பொறுப்பேற்ற புதிய ஆட்சியர் சு. சிவராசு (49) திங்கள்கிழமை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குள்பட்ட கூத்தம்பூண்டியைச் சேர்ந்த இவர், எம்எஸ்சி பிஎட் முடித்துள்ளார். திருச்சி கோட்டாட்சியராக 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், கோவை, மதுரை மாநகராட்சிகளில் துணை ஆணையர், திருப்பத்தூர் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும் பணிபுரிந்தவர். 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றார். அதன் பிறகு கோவையில் வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையராக பதவி வகித்து, தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சியில் கோட்டாட்சியராக பணிபுரிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே மாவட்டத்துக்கு ஆட்சியராக வந்துள்ளது பெருமைக்குரியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன். குறிப்பாக, பொதுமக்களின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு கொண்டு சேர்க்கவும், திட்டத்தின் பலன்கள் விரைவாக மக்களை சென்றடையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதன் தொடர்ச்சியாக குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கடன் பெற விண்ணப்பிக்கலாம்:  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களான சிறு,குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய ஆழ்துளைக் கிணறு,மின் மோட்டார் பம்புகள் மற்றும் இதர உபகரணங்கள் பொருத்துதல், குழாய் தொடரமைப்பு அமைத்தல் மற்றும் சொட்டு நீர்ப்பாசன கடன் திட்டத்துக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் தகுதியுடையோர் கடனுதவி கோரும் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்  உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/குடிநீர்-சுகாதாரத்துக்கு-முக்கியத்துவம்-அளிக்கப்படும்-திருச்சி-மாவட்ட-புதிய-ஆட்சியர்-பேட்டி-3098862.html
3098861 திருச்சி திருச்சி பணத் தகராறு:  இளைஞர் கைது DIN DIN Tuesday, February 19, 2019 09:27 AM +0530 ஸ்ரீரங்கம் ரெங்க நகரைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (36). இவரும், அம்மாமண்டபம் பகுதி குஜியன் தோப்பை சேர்ந்த விஜயகுமாரும்(37) நண்பர்கள். இவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செந்தில்குமார் கீதா புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த விஜயகுமாருக்கும், செந்தில்குமாருக்கும் பணத் தகராறு ஏற்பட்டது. இதில் விஜயகுமார் பாட்டிலை உடைத்து செந்தில் குமாரின் வயிற்றில் குத்தியதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பணத்-தகராறு-இளைஞர்-கைது-3098861.html
3098860 திருச்சி திருச்சி பிப்.22இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Tuesday, February 19, 2019 09:27 AM +0530 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப். 22-இல் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பிப்22இல்-தனியார்வேலைவாய்ப்பு-முகாம்-3098860.html
3098859 திருச்சி திருச்சி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி DIN DIN Tuesday, February 19, 2019 09:26 AM +0530 மணப்பாறையில் காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பினர், தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் காவல் துறை சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்று மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மணப்பாறையில், திங்கள்கிழமை தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு, அரியலூர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,  ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பினர், தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் காவல் துறையினர் மௌன ஊர்வலம் சென்றனர். காமராஜர் சிலையிலிருந்து  பேருந்து நிலையம் பெரியார் சிலை வரை சென்ற அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த உயிர்நீத்த வீரர்களின் பதாகைக்கு வீரவணக்கம் செலுத்தி, மலர் தூவி, கைகளில் மெழுகுவர்த்தியுடன் அஞ்சலி செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/உயிரிழந்த-ராணுவ-வீரர்களுக்கு-அஞ்சலி-3098859.html
3098858 திருச்சி திருச்சி துறையூரில் அமைதிப் பேரணி DIN DIN Tuesday, February 19, 2019 09:26 AM +0530 காஷ்மீர் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.
துறையூர் வழக்குரைஞர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர் சங்க தலைவர் டி.ராமசாமி, சங்க செயலர் கே.செல்லதுரை உள்ளிட்ட பல்வேறு வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். பாலக்கரையில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு நிறைவடைந்ததது.  இதில் துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் காமராஜ், புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார், துறையூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மணிகண்டன், மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரணி நிறைவில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/துறையூரில்-அமைதிப்-பேரணி-3098858.html
3098857 திருச்சி திருச்சி பள்ளி மாணவர்கள் அஞ்சலி DIN DIN Tuesday, February 19, 2019 09:26 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தியாகேசர் ஆலை பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை மௌன ஊர்வலம் வந்து காஷ்மீர் தாக்குதலில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படையினர் சீருடையுடன் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி மவுன ஊர்வலம் சென்றனர். இதில் பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
தமிழ்நாடு கவச படை ராணுவ இளைய தளபதி அன்பழகன், ஹவுல்தார் குருபியார்சிங், பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முத்துகுமார் ஆகியோர் ராணுவ உடையுடன் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினர். பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணப்பாறை பேருந்து நிலையம் அடுத்த பெரியார் சிலை திடலில் நிறைவுற்றது. அங்கு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பள்ளி-மாணவர்கள்-அஞ்சலி-3098857.html
3098856 திருச்சி திருச்சி டேக்வாண்டோ, குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு DIN DIN Tuesday, February 19, 2019 09:26 AM +0530 மாநில டேக்வாண்டோ மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சு. சிவராசு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
சேலம் காந்தி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி முதன்மை நிலை சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் பங்கேற்று 11 பதக்கங்கள் வென்றுள்ளனர்.
இதில், பி. கிஷோர்குமார், கே.எஸ். ஆனந்த் சுதன், பி. ரிஷி, வி. அய்யனார் ஆகிய 4 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். எம். மெக்ரீகன், டி. ரஞ்சித்குமார் ஆகிய இருவர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
என். யுகேஷ், எஸ். ராம்சன், ஆர். கிருபாகரன், ஜி.  ஸ்ரீசரண், ஜே. தினேஷ் ஆகிய 5 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர். 
இதேபோல, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி மாணவர்கள் 9 பேர் பதக்கம் வென்றனர். டி. ஹரிஷ், ஜி. சச்சின், ஜி.எஸ். ஜெயகாந்த், வி. முகேஷ் ஆகிய 4 பேர் தங்கம் வென்றனர். 
எம். கமல்நாத், ஜி. பரத், எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவர் வெள்ளி பதக்கம் வென்றனர். எஸ்.கே. கீரன், ஏ. பாலாஜி ஆகிய இருவர் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற அனைவரும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசுவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
நிகழ்ச்சியில், திருச்சி விளையாட்டு விடுதி மேலாளர் எஸ். ரமேஷ், டேக்வாண்டோ பயிற்றுநர் பரணிதேவி, குத்துச்சண்டை பயிற்றுநர் ஆர். செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/டேக்வாண்டோ-குத்துச்சண்டையில்-பதக்கம்வென்ற-மாணவர்களுக்கு-ஆட்சியர்-பாராட்டு-3098856.html
3098855 திருச்சி திருச்சி திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Tuesday, February 19, 2019 09:25 AM +0530 திருச்சி  டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம் பகுதியில் திங்கள்கிழமை  ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.
இதையொட்டி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கொட்டகைகள், நடைமேடை அமைத்தல், கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர். இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம், போலீஸார் பாதுகாப்பு மேற்கொண்டனர். இதேபோன்று தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/திருச்சியில்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3098855.html
3098854 திருச்சி திருச்சி தனி பட்டா கோரி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்னா DIN DIN Tuesday, February 19, 2019 09:25 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொந்த வீடுகளுக்கு தனி பட்டா பெற குறிப்பிட்ட அமைப்பினரும் தடுப்பதாகக் கூறி, திங்கள்கிழமை பழைய காலனி பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் தர்னா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.   
மணப்பாறையில் பழைய காலனி மற்றும் புது காலனி என இரு பகுதியில் அப்பகுதியில் உள்ள பஞ்சாலையால் கட்டி அளிக்கப்பட்டிருந்த வீடுகளில், புது காலனி பகுதியில் குடியிருப்பவர்களுக்கு தனி பட்டாவாக உள்ள நிலையில், பழைய காலனி பகுதி மக்களுக்கு கூட்டுப் பட்டாவாக இருந்து வருகிறது. 
இதனையடுத்து பழைய காலனி மக்கள், தனி பட்டா பெற வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, அதற்கான நில அளவீட்டிற்காக அப்பகுதிக்கு வந்த அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட அமைப்பினைச் சேர்ந்தவர்களும், ஒரு சிலரும் தடுத்து நிறுத்தி அதிகாரிகளை மிரட்டியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பழைய காலனியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வருவாய் வட்டாட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்னா போராட்டம் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து  மணப்பாறை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/தனி-பட்டா-கோரி-மணப்பாறை-வட்டாட்சியர்-அலுவலகத்தில்-தர்னா-3098854.html
3098853 திருச்சி திருச்சி பச்சமலையில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல் DIN DIN Tuesday, February 19, 2019 09:25 AM +0530 பச்சமலையில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பச்சமலை  527.61 சதுர கி.மீ. பரப்பளவில்  அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,072 மீட்டர் உயரம் கொண்ட இங்கு  சுமார் 154 வகையான பறவை இனங்கள், குறிச்சிமலை, ஷோபனாபுரம் மண்மலை ஆகிய காப்புக் காடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மான்களும் காணப்படுகின்றன. 
இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'பச்சமலை சூழல் சுற்றுலா' திட்டத்தை அறிவித்தார். 
இதற்காக ரூ.2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அருவிகள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்துவது, காட்சி கோபுரங்கள் அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல்,  பயணிகள் தங்கும் மர வீடுகள்,  உணவகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அது தவிர  சுற்றுலா செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் மகிழ்ந்து விளையாடும் வகையில் டாப் செங்காட்டுப்பட்டியில் பல்வேறு வகையான உபகரணங்களுடன் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. 
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், போதிய பராமரிப்பின்றி தற்போது அந்த பூங்கா புதர்மண்டிக் காணப்படுகிறது. மேலும், மங்களம் அருவிக்குச் செல்லக்கூடிய சாலை, இருசக்கர வாகனங்களில்கூட செல்ல முடியாத அளவுக்கு மேடு பள்ளமாக காணப்படுகிறது. 
பல்லுயிர் பெருக்க பூங்கா : பச்சமலைப் பகுதிக்கு சுமார் 135-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் வந்து செல்வதால் அதற்காக ஒரு பூங்கா, ஏராளமான மூலிகை செடிகள்  அடங்கிய பூங்கா, மலையில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் குறித்து விளக்கும் வகையிலான காட்சிக்கூடம், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பூங்கா ஆகியவற்றுடன் கூடிய ஒரு பல்லுயிர் பூங்காவை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், சுற்றுலா பயணிகளுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அதிகளவில் வந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். அரசின் சுற்றலா திட்டமும் வெற்றி பெற வழிபிறக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
அரசு நிதி கிடைக்குமா : இது குறித்து வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், மங்களம் அருவிக்கான சாலை, சிறுவர் பூங்கா சீரமைக்க அரசின் நிதியை எதிர்நோக்கியுள்ளோம். பல்லுயிர் பெருக்க பூங்கா அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பச்சமலை சூழல் சுற்றுலாவுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கும்.  திட்டத்தை செயல்படுத்த அரசு நிதியை எதிர்நோக்கியுள்ளோம், வந்தவுடன் பணிகள் தொடங்கும்' என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பச்சமலையில்-பல்லுயிர்-பெருக்க-பூங்கா-அமைக்க-வேண்டும்-இயற்கை-ஆர்வலர்கள்-வலியுறுத்தல்-3098853.html
3098852 திருச்சி திருச்சி சாலையை சீரமைத்து தரக்கோரி மறியல் DIN DIN Tuesday, February 19, 2019 09:25 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக, தோண்டப்பட்ட சாலைகளை பணி முடிந்த பின்னர் சீரமைத்து தரவலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்டடனர். 
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 16 ஆவது வார்டு பகுதி   யில், திங்கள்கிழமை காவிரி குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்தை முழுவதுமாக முடங்கியது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்தை செல்பேசியில் தொடர்பு கொண்டதில், முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோவில்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் குழாய் சீரமைப்புக்கு பின் சாலை சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/சாலையை-சீரமைத்து-தரக்கோரி-மறியல்-3098852.html
3098851 திருச்சி திருச்சி கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு DIN DIN Tuesday, February 19, 2019 09:24 AM +0530 துறையூர் அருகே 70 வயது மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
சோபனபுரத்தில் உள்ள காட்டுக்கொட்டகையில் வசிக்கும் மு. முத்தாளம்மாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் திங்கள்கிழமை முத்தாளம்மாவை தேடியபோது கிணற்றில் அவரது சடலம் மிதந்தைக் கண்டு அதிர்த்தியடைந்தனர். தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் முத்தாளம்மாளின் சடலத்தை மீட்டு உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனர். துறையூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்த போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/கிணற்றில்-தவறி-விழுந்து-மூதாட்டி-சாவு-3098851.html
3098850 திருச்சி திருச்சி நாகநாதசுவாமி கோயில் தேரோட்டம் DIN DIN Tuesday, February 19, 2019 09:24 AM +0530 திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் மாசிமகத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை நந்திக்கோயில் தெருவில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் மாசிமகத் திருவிழா, பிப். 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுவாமியும், அம்மனும் தினமும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக பிப். 15 ஆம் தேதி திருக்கல்யாணமும், 17ஆம் தேதி  குதிரைவாகனத்தில் எழுந்தருளி தேர்த்தடம் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையடுத்து, மாசி மகத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருள்மிகு நாகநாத சுவாமியும், ஆனந்தவல்லிஅம்மனும் தனித்தனியாக தேரில் பவனி வந்தனர்.இத்திருத்தேர் வடக்கு ஆண்டாள் வீதி, கீழ ஆண்டாள் வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.சாலை, தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது.
மாசிமகத்தை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை அருள்மிகு நடராஜர் தரிசனமும், சிவகங்கைக்கு தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து  காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு சுவாமியும்,அம்மனும் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளனர்.  புதன்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை செவ்வந்தி மலர்களால் அர்ச்சிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/நாகநாதசுவாமி-கோயில்-தேரோட்டம்-3098850.html
3098849 திருச்சி திருச்சி ரூ.2 ஆயிரம் உதவித் தொகை கோரி குவியும் மனுக்கள்: ஆட்சியரகத்தில் திரளும் மக்கள் DIN DIN Tuesday, February 19, 2019 09:24 AM +0530 தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கக் கோரி ஆட்சியரகத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனால், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வழக்கத்தைவிட இரு மடங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் தனித்தனியே மனுக்களை வழங்கினர். 
இதேபோல, மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரியும் பலர் மனு அளித்தனர். இந்த மனுவில் பலரும்  கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்தில் வசிப்பதாலும், நிலமற்ற ஏழைகளாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, தங்களுக்கும் அந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இதேபோல்,  பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊராட்சி தோறும் கூட்டம் கூட்டமாக வந்து மனு அளித்தனர்.
ஜல்லிக்கட்டு இழப்பீடு:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக ஜனவரி 20 ஆம் தேதி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் பார்வையாளராக சென்றிருந்த திருச்சி மாவட்டம் அல்லூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் மாடு முட்டியதில்  உயிரிழந்தார். 
 இதையடுத்து இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் தவிப்பதாகவும், எனவே முதல்வரின் நிவாரணநிதி உதவித் திட்டத்தில் நிதியுதவி வழங்க வேண்டும் என சதீஷ்குமாரின் மனைவி தனபாக்கியம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோயில் புனரமைக்க கோரிக்கை:  மாநகராட்சி 16 ஆவது வார்டு காசிப்பாளையம் பகுதியில் மிகவும் பழைமையான ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில்  சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. 
கோயில் நிர்வாகமும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புனரமைப்புப் பணிக்கு தடையாக உள்ள விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல, முகாமில் பல்வேறு கோரிக்கைகளுடன் 579 மனுக்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களிடம் மேல்நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம், ஆட்சியரின் தன் விருப்ப நிதி திட்டம் என பல்வேறு 
நிலைகளில் 49 பேருக்கு ரூ.1.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/ரூ2-ஆயிரம்-உதவித்-தொகை-கோரி-குவியும்-மனுக்கள்-ஆட்சியரகத்தில்-திரளும்-மக்கள்-3098849.html
3098848 திருச்சி திருச்சி மத்திய சிறையில் தையலகம் DIN DIN Tuesday, February 19, 2019 09:23 AM +0530 திருச்சி மத்திய சிறை அங்காடியில் சிறைவாசிகள் பயன் பெறும் வகையில் தையலகம் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் மூலம்  சிறை வளாகத்திற்குள்ளேயே வேளாண்தொழில் மற்றும் பல்வேறு வகையான  சிறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும்,  சிறை அங்காடி ஏற்படுத்தப்பட்டு சிறை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள், மற்றும் உணவுப்பொருள்கள், பேக்கரி உணவு வகை, சிற்றுண்டி உள்ளிட்டவை  விற்பனை செய்யப்படுகின்றன. 
இதன் தொடர்ச்சியாக தையலகம் தொடங்கப்பட்டுள்ளது. சிறைத்துறை  துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம், தையலகத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் . 
பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறை அங்காடி  தையலகத்தில் நவீன வடிவமைப்புகளில், குறைவான கட்டணத்தில் ஆடைகள் தைத்து வழங்கப்படும். தையலகத்தில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பிரத்யேக ஊதியம் வழங்கப்படும். வேளாண் தொழில் மூலம் அடுத்தாண்டு பொங்கலுக்கு பயன்படும் வகையில் கரும்பு பயிரிடப்படவுள்ளது.  சிறையில் உள்ள 1400 பேரில்   400 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில்  200 பேர் இந்தத்  தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைத்துறையின் சார்பில் நடத்தப்படும் எரிபொருள் விற்பனையகங்களிலும் தண்டனைக் கைதிகள் பயன்படுத்தப்படுவர். புதுக்கோட்டையில் உள்ள விற்பனையகத்தில் பணிபுரிய திருச்சியிலிருந்து 24 சிறைவாசிகள் அனுப்பப்பட்டுள்ளனர். 
இதன் மூலம் கைதிகளின்  நன்னடத்தை அடிப்படையில்  தண்டனை குறையவும் வழியுள்ளது. திருச்சி மத்திய சிறையில் நிகழாண்டு 40 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும்,  6 பேர் 11 -ஆம் வகுப்பு, 15 பேர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர் என்றார் அவர். நிகழ்ச்சியில்,  சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் சி. முருகேசன், ஏ. திருமுருகன் (நிர்வாகம்) ஆகியோர்  உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/மத்திய-சிறையில்-தையலகம்-3098848.html
3098847 திருச்சி திருச்சி சணல் பொருள்கள் ஏற்றுமதிக்கு 50% மானியம்: வாரிய இணை இயக்குநர் தகவல் DIN DIN Tuesday, February 19, 2019 09:23 AM +0530 சணல் மூலம் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்பட்டுவதாக தேசிய சணல் வாரிய இணை இயக்குநர் தி. ஐயப்பன் தெரிவித்தார்.
திருச்சி  மாநகராட்சி சார்பில், நெகிழி பைகளுக்கு மாற்றாக சணல்பைகள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய சணல் வாரிய இணை இயக்குநர் தி.ஐயப்பன் பேசியது: சாக்குப்பைகள், சணல் கயிறு என இரண்டு மட்டுமே சணல் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சணலில் இருந்து சணல் பைகள், அணிகலன்கள்,  திருமணத் தாம்பூல கவர்கள், பரிசுப் பொருட்கள் என ஏராளமானவற்றையும் தயாரிக்கலாம். சணல் பொருள் சுற்றுச்சூழலையும்,சுகாதாரத்தையும் பாதுகாக்கிறது. அதிக எடையை தாங்கும் சக்தியுடையதாகவும், பளபளப்பும் உடையது.
சணல் செடிகள் 4 மாதங்களில் விளைந்து சாகுபடி தரக்கூடியது.சுமார் 15 அடி வரை வளரும். சணல் கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. சணலில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால் 50 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. சணல் வாரியத்தின் மூலம் தொழில் தொடங்க பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதனை தொழில்முனைவோர் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் பேசியது:
திருச்சியில் தற்போது 30 பூங்காக்கள் உள்ளன. 3 மாதத்தில் ரூ.25கோடி மதிப்பில் மேலும் சில பூங்காக்ககளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக சணல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திருச்சியில் நடத்தப்படுகிறது. 
வீட்டுக்கு வீடு மாடித்தோட்டம் அமைக்க மாநகராட்சி குறைந்த அளவு பட்ஜெட் திட்டம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு ரூ.400 வீதம் மாடித் தோட்டம் அமைக்க தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.இதன் மூலம் திருச்சி மக்களுக்கு இயற்கையான காய்கறிகள் கிடைப்பதுடன் காய்கறிகள் வாங்கும் செலவும் குறையும் என்றார்.
கூட்டத்தில்,  சுகாதார அலுவலர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/சணல்-பொருள்கள்-ஏற்றுமதிக்கு-50-மானியம்-வாரிய-இணை-இயக்குநர்-தகவல்-3098847.html
3098846 திருச்சி திருச்சி ஒருங்கிணைந்த கோயில் நிர்வாகக் குழு அமைக்கக்கோரி மனு DIN DIN Tuesday, February 19, 2019 09:23 AM +0530 ஸ்ரீரங்கம் வட்டம் திருவானைக்கா பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அனைத்து மத பிரிவினரையும் ஒருங்கிணைத்து புதிதாக கோயில் நிர்வாகக் குழு அமைக்க வேண்டும் அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
முத்தரசநல்லூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட முருங்கைபேட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோயில் நிர்வாகக் குழுவினர் முறைகேடாக கோயில் நிலங்களை விற்றுவருவதாக கோயில் நிலங்களை விற்று வருகின்றனர். 
இதைத் தடுக்கும்வகையில், அனைத்து மத பிரிவினரையும் ஒருங்கிணைத்து நிர்வாகக் குழு அமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/ஒருங்கிணைந்த-கோயில்-நிர்வாகக்-குழு-அமைக்கக்கோரி-மனு-3098846.html
3098845 திருச்சி திருச்சி கூட்டுறவு சங்க லாபத் தொகை பகிர்வு DIN DIN Tuesday, February 19, 2019 09:22 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த முத்தப்புடையான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது. 
மணப்பாறை அடுத்த முத்தப்புடையான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக்கூட்டம் செயலாளர் எம்.லெட்சுமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உறுப்பினர் சேர்க்கை, தணிக்கை அறிக்கை அங்கீகரித்தல், வரவு - செலவுகளை அங்கீகரித்தல், உத்தேச வரவு - செலவு (பட்ஜெட்) திட்டம் ஆகியவை விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் 1998-99, 2009-10, 2010-11, 2011-12, 2012-13 ஆம் ஆண்டு லாபத் தொகை ரூ.40,52,562/-யை மூத்த உறுப்பினர்கள் 850 பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, லாப பங்குத் தொகையை மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கினார். 
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் எஸ்.செந்திகுமார், துணைத் தலைவர் டி.ராபர்ட், அதிமுக மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாசலம், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜெயசீலன், அன்னை.என்.கோபால், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/கூட்டுறவு-சங்க-லாபத்-தொகை-பகிர்வு-3098845.html
3098843 திருச்சி திருச்சி தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை துவக்கம்: பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் தகவல் DIN DIN Tuesday, February 19, 2019 09:22 AM +0530 தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமை பொது மேலாளர் வி. ராஜூ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் தமிழகத்தில் 4 ஜி சேவையை பெருமளவில் தொடங்கத் தயாராகி வருகிறது. கோயம்புத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் முதற்கட்டமாகவும் திருச்சி, மதுரை, வேலூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் அடுத்த கட்டமாகவும் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் 4 ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. கோயம்புத்தூர், சேலத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் அவர்களது 3 ஜி சிம்மிற்கு பதிலாக இலவசமாக 4 ஜி சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4 ஜி சிம் வழங்கப்பட்டவுடன் இச்சேவை இரு நகரங்களிலும் தொடங்கும். 4 ஜி வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்கம் 21 எம்பிபிஎஸ் வேகம் வரை கிடைக்கும்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதிய செல்பேசி வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணைந்து வருகிறார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூடப்படுவதாக ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.அவ்வாறு மூடுவது குறித்த எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. 
மாறாக இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது.
பலத்த போட்டியின் காரணமாக ஏற்ற கட்டணக் குறைப்பினால் உண்டான நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தொலை தொடர்புத்துறை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்துக்கு நிதி உதவித் திட்டத்தையும் தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/தமிழகத்தில்-விரைவில்-4-ஜி-சேவை-துவக்கம்-பிஎஸ்என்எல்பொதுமேலாளர்-தகவல்-3098843.html
3098841 திருச்சி திருச்சி "முத்தரையர்களுக்கு 3% ஒதுக்கீடு வழங்க வேண்டும்' DIN DIN Tuesday, February 19, 2019 09:22 AM +0530 முத்தரையர்களுக்கு மூன்று சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை  நடைபெற்ற முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முத்தரையருக்கு  மணி மண்டபம் அமைக்க அறிவிப்பு செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி புத்தூரில் உள்ள சங்க அலுவலகத்தில் முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது.நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பெரியசாமி, கோவிந்தராஜ், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்  செல்லாண்டி வரவேற்றார். மாவட்ட தலைவர் மரு.பாஸ்கரன், மாநில விவசாய அணியின் செயலாளர் முகிலன்,தொழிலாளர் அணியின் செயலாளர் வர்மக்கலை சக்திவேல், பெரியகோபால்,கவிஞர்.லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
 திருச்சியில் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்கவும், மணி மண்டபம்,நூலகம் ஆகியன அமைக்கவும் அறிவிப்பு செய்தமைக்காக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலில் முத்தரையர்களை அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும், முத்தரையர்களுக்கும் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/முத்தரையர்களுக்கு-3-ஒதுக்கீடு-வழங்க-வேண்டும்-3098841.html
3098839 திருச்சி திருச்சி பட்டா குளறுபடிகள்: மத்திய அரசு உதவித்தொகை கிடைக்குமா? பரிதவிப்பில் விவசாயிகள் DIN DIN Tuesday, February 19, 2019 09:22 AM +0530 பட்டா குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்காததால் மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் தொகை கிடைக்குமா என்று விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இத் திட்டத்தில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் உதவித் தொகையை மார்ச் மாதத்துக்குள் வழங்க வேளாண்துறை மூலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக, அந்தந்தப் பகுதி விஏஓ  மூலம் சிறு விவசாயிகளின் தகுதிகளை உறுதி செய்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது. பயனாளிகளின் ஆதார், வங்கி கணக்கு எண் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து அனுப்பப்பட உள்ளது. இதில், விவசாயிகளின் பட்டா நகலும் இணைக்கப்படுகிறது.
ஆனால், விவசாயிகளின் பட்டாக்களில் பெரும்பகுதி குளறுபடியாகவே உள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு பிறகு உரிமை மாற்றப்பட்டு கணனியில் பதிவேற்றம் செய்ததில் பல்வேறு தவறுகள் ஏற்பட்டுள்ளன. பட்டா ஒருவரது பெயரிலும், இப்போது உழவு செய்யும் விவசாயி வேறு பெயரிலும் உள்ளது. மேலும், தந்தை பெயரில் பட்டா இருந்து மகன் அனுபவித்து வந்ததாலும் பட்டா மாற்றம் செய்யாமல் விடுபட்டுள்ளது. இத்தகைய குளறுபடிகளால் அனைத்து விவசாயிகளுக்கும் உதவித் தொகை கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் வி. ராஜாராம் கூறியது:
ஆங்கிலேய அரசால் கடந்த 1924ஆம் ஆண்டு நிலம் தொடர்பான உரிமைகள் பதியப்பட்டன. இந்த உரிமைகள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர்படுத்தப்பட்டு மீண்டும் மேம்படுத்தி பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு நில உரிமை தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால், நில உரிமையில் பல சிக்கல்களும், பெயர் மாற்றம், கூட்டுப் பட்டா என ஏகப்பட்ட குளறுபடிகள் உருவானது. இதைக் கருத்தில் கொண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் 1982இல் கிராம நிலப் பதிவேடுகளை சரிபார்த்து நிலம் வாரியாக கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நில உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி யூடிஆர் என்ற நில உறிமை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
1983-க்கு பிறகு கடந்த 35 ஆண்டுகளில் பல நில உரிமையாளர்கள் இறந்துவிட்டனர். ஆனால், அவர்களது வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. பலர் தங்களது நிலங்களை விற்றுவிட்டனர். அவற்றை வாங்கியவர்கள் பெயரிலும் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், நில உரிமை ஆவணத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன.
தற்போது மத்திய அரசின் உதவித் தொகை வழங்கவுள்ளதால் பட்டாவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டியது அவசியமானது. 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதைப் போன்று நில உரிமை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பட்டாவில் சரி செய்ய வேண்டியவர்களிடம் மனு பெற்று முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றார்.
காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலர் கவுண்டம்பட்டி ஆர். சுப்பிரமணியம் கூறியது:
மார்ச் மாதத்துக்குள் முதல் கட்ட தவணை வழங்க வேண்டும் என்ற தீவிரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அவசரம், அவசரமாக சிறு விவசாயிகள் விவரங்கள் பதியப்படுகின்றன. பட்டா குளறுபடிகளை சரி செய்து சரியான நபர்கள் ஒருவர் கூட விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும். மேலும், பட்டாவில் பெயரில் உள்ளவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலையும் உள்ளது. எனவே, சிறு விவசாயிகள் குறித்த பதிவுகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். வருவாய்த் துறை, வேளாண் துறை இணைந்து போதிய அவகாசம் எடுத்து தகுதியான பயனாளிகளை அனைவரையும் இத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/பட்டா-குளறுபடிகள்-மத்திய-அரசு-உதவித்தொகை-கிடைக்குமா-பரிதவிப்பில்-விவசாயிகள்-3098839.html
3098837 திருச்சி திருச்சி தேசிய இளையோர் படையில் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 3 கடைசி DIN DIN Tuesday, February 19, 2019 09:21 AM +0530 தேசிய இளையோர் படையின் தொண்டர் பணியில் சேர மார்ச் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய இளையோர் படையின் தொண்டர் பணி முற்றிலும் தற்காலிகமானது. முதல் வருடத்தில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு மட்டுமே இரண்டாம் ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படும். குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம். மாத மதிப்பூதியம் ரூ.5 ஆயிரம். கடந்த 1.4.2018 ஆம் தேதியன்று 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மார்ச் 3 விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பத்தினை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்,நேரு யுவ கேந்திரா,ரேஸ் கோர்ஸ் சாலை  (அரசு சட்டக்கல்லூரி எதிரில்)காஜாமலை,திருச்சி-620023 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2421240 அல்லது 9445662559 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/தேசிய-இளையோர்-படையில்-தொண்டர்பணிக்கு-விண்ணப்பிக்க-மார்ச்-3-கடைசி-3098837.html
3098835 திருச்சி திருச்சி தினமணி செய்தி எதிரொலி: அரசு மருத்துவமனையில் பூட்டப்பட்டிருந்த  பெண்கள் கழிப்பறை திறப்பு DIN DIN Tuesday, February 19, 2019 09:21 AM +0530 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பெண்கள் கழிப்பறை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் ஆண், பெண் இரு பாலருக்கும் இலவச பொதுக்கழிப்பறை உள்ளது. இதில், பெண்கள் கழிப்பறை பூட்டியே கிடப்பதால் ஆண்கள் கழிப்பறையை பெண்களும் பயன்படுத்தி வந்தனர். 
இது குறித்து கடந்த 14.1.2019 ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது.  இதனையடுத்து மறுநாளே பெண்கள் கழிப்பறை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/19/தினமணி-செய்தி-எதிரொலி-அரசு-மருத்துவமனையில்-பூட்டப்பட்டிருந்த--பெண்கள்-கழிப்பறை-திறப்பு-3098835.html
3098084 திருச்சி திருச்சி மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது DIN DIN Monday, February 18, 2019 07:49 AM +0530 துறையூரில்   மோட் டார் சைக்கிளைத் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
துறையூர் கீழரத வீதியைச் சேர்ந்தவர் மு. வைரம் (36). இவர், கடந்த 11 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வந்த  மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என காவல் நிலையத்தில்புகார் அளித்தார்.
இதுகுறித்து துறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில்,காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா தலைமையிலான போஸீஸார் ஆத்தூர் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்  சௌண்டீசுவரி கோயில் தெருவைச் சேர்ந்த சு. பிரேம்குமார் (24) என்பதும், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் வைரத்துக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/மோட்டார்-சைக்கிள்-திருடியவர்-கைது-3098084.html
3098083 திருச்சி திருச்சி மணப்பாறையில் மாநில யோகாசன போட்டி DIN DIN Monday, February 18, 2019 07:48 AM +0530 மணப்பாறையில் சங்கமம் யோகா ஆரோக்கிய மையம் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் குறிஞ்சி பொறியியல் தொழிற்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
போட்டியினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தார்.  இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் யோகாசனத்தில் தங்களது தனித்திறமைகளை செய்து காட்டினர். ஏற்பாடுகளை சங்கமம் யோகா ஆரோக்கிய மையத்தின் செயலர் ஆர். நித்யா ராஜேஸ்வரன் மற்றும் கலை சங்கமம் செயலர் வெ.பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/மணப்பாறையில்-மாநில-யோகாசன-போட்டி-3098083.html
3098082 திருச்சி திருச்சி இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: ஒருவர் கைது DIN DIN Monday, February 18, 2019 07:48 AM +0530 திருச்சியில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.  
மாநகரப் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்றதால், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்படியில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, மணிகண்டத்தைச் சேர்ந்த ஆ. தாமஸ் (20) மற்றும் 15 வயது சிறார் ஆகிய இருவரும் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கே.கே.நகர், எ.புதூர், கண்டோன்மென்ட் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 7 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தாமஸை கைது செய்த போலீஸார், 15 வயது சிறாரை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/இருசக்கர-வாகனங்கள்-தொடர்-திருட்டு-ஒருவர்-கைது-3098082.html
3098081 திருச்சி திருச்சி பச்சமலையில் குறிசொல்பவர் அடித்துக்கொலை DIN DIN Monday, February 18, 2019 07:48 AM +0530 திருச்சி மாவட்டம், பச்சமலையில் குறிசொல்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
துறையூர் வட்டம், வண்ணாடு ஊராட்சியிலுள்ள வாழையூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (60). உடுக்கை அடித்தும், சோழி உருட்டியும் குறிசொல்லி வந்தார். இந்நிலையில், இவரிடம் பெரம்பலூர் மாவட்டம்,  குரும்பலூரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (50) அடிக்கடி குறி கேட்க வந்து சென்றுள்ளார்.
சனிக்கிழமை மாலை வெங்கடேசன், தனது மனைவி, மகன், மகள்கள்,மருமகனுடன் வாழையூருக்கு குறிகேட்கச் சென்றார்.  இரவு நேரத்தில் பேருந்து இல்லாததால் தனது வீட்டிலேயே அனைவரையும் தங்குமாறு பொன்னுசாமி கூறினார்.
இந்நிலையில்  நள்ளிரவில் பொன்னுசாமி பெரியக்கட்டையால் அடித்து வெங்கடேசன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.  அப்போது ஏற்பட்ட அமளியை அறிந்து வாழையூர் கிராமத்தினர் அங்கு சென்று பார்த்த போது,  வெங்கடேசன் பெரியக் கட்டையுடன் ஆக்ரோசத்துடன் அமர்ந்து இருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலை கிராம மக்கள்,  வெங்கேடசன், மனைவி, மருமகனைப் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பொன்னுசாமி சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து வெங்கடேசன் உள்ளிட்ட  3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/பச்சமலையில்-குறிசொல்பவர்-அடித்துக்கொலை-3098081.html
3098080 திருச்சி திருச்சி பண்ணாங்கொம்புவில் மௌன ஊர்வலம் DIN DIN Monday, February 18, 2019 07:47 AM +0530 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பண்ணாங்கொம்புவில் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊர்வலம் நடைபெற்றது.
பெருமாப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய மௌன ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று பண்ணாங்கொம்பு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவடைந்தது.   இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சி.சின்னசாமி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/பண்ணாங்கொம்புவில்-மௌன-ஊர்வலம்-3098080.html
3098079 திருச்சி திருச்சி மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம் DIN DIN Monday, February 18, 2019 07:47 AM +0530 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 13 பேர் காயமடைந்தனர்.
சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புனித சவேரியார் ஆலயத் திருவிழாவையொட்டி, பாஸ்கா திடலில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டை  மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி  முடிந்து, புனிதநீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 619 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 340 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த  சில காளைகள் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்கள் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவிற்குச் சென்றன. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கியவர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு  இருசக்கர வாகனம், சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் 8 மாடுபிடி வீரர்கள், 5 மாடுகளின் உரிமையாளர்கள் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனர்.  ஜல்லிக்கட்டில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்,  ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) சிவசுப்பிரமணியன் தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/மலையடிப்பட்டியில்-ஜல்லிக்கட்டு-13-பேர்-காயம்-3098079.html
3098078 திருச்சி திருச்சி சேதுத் திட்டம் நிறைவேறாமலிருப்பது கவலையளிக்கிறது DIN DIN Monday, February 18, 2019 07:47 AM +0530 சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாமலிருப்பது கவலையளிக்கிறது என்றார் சேது சமுத்திரக் கழகத்தின் முன்னாள் தலைவர் ந.க.ரகுபதி.
திருச்சி தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைமகள் கலைமன்றத்தின் செயலர் கவிஞர் வீ.கோவிந்தசாமியின் ஒருகை ஒருஓசை, முத்துக்கள் முந்நூறு நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
எண்ணக் குவியல்களையும், மனக்குவியல்களையும் எழுத்தாக வடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதை நூலாசிரியர் சிறப்பாக செய்திருக்கிறார்.எந்த ஒரு மனிதரும் குடத்துக்குள் ஒளிரும் விளக்காக இருக்காமல், மாடத்திலிருந்து கொண்டு பலருக்கும் ஒளித்தரக்கூடிய விளக்காக இருக்க வேண்டும்.பிறருக்கு பயன்படுகிற வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கையாகும்.
சேது சமுத்திரத் திட்டம் ஒரு மிகச்சிறந்த திட்டமாகும்.  இத்திட்டத்தை சேது சமுத்திரக் கழகத்தின் தலைவராக நான் (ரகுபதி) இருந்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொடக்கி வைத்தார். 11 ஆண்டுகளாக இத்திட்டம் நிறைவேறாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றார் அவர்.
ஒரு கை ஒரு ஓசை நூலை  ந.க.ரகுபதி வெளியிட அதை பேராசிரியர் கலைச்செல்வி முத்துசாமி,  எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மூத்த விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், வாசகர் வட்ட ஆலோசகர் இல.கணேசன் பெற்றுக் கொண்டனர்.
முத்துக்கள் முந்நூறு நூலை எண்ணூர் துறைமுகக் கழக முன்னாள் தலைவர் செ.வேலுமணி வெளியிட, அதை ராம.மு.கதிரேசன், தமிழ் இலக்கிய சமயப் பேரவையின் தலைவர் த.ரவீந்திரன்,கோவிந்தம்மாள்  மன்றத்தின் நிறுவனத் தலைவர் ப.நாகராஜன் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவுக்கு காவேரி மகளிர் கல்லூரி முதல்வர் வெ.சுஜாதா தலைமை வகித்தார். தொழிலதிபர் ப.பாலாஜி,தூயவளனார் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜி.பாலகிருஷ்ணன்,மகளிர் வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி  முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் ப.நீலகண்டன், வழக்குரைஞர் த.கங்கைச் செல்வன் ஆகியோர் நூல்களை ஆய்வு செய்துபேசினர்.  விழாவில் தொழிலதிபர் ரா.மனோகரன்,மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், பேராசிரியர்கள் கே.அலெக்ஸ், அ.ஜாஹீர் ஹூசேன்  வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக நூலாசிரியர் வீ.கோவிந்தசாமி ஏற்புரையாற்றினார். முன்னதாக தைமகள் கலைமன்றத் தலைவர் சுமங்கலி.எஸ்.சம்பத் வரவேற்றார்.வாசகர் வட்ட துணைத் தலைவர் கி.நன்மாறன் நன்றி கூறினார். உதவிப் பேராசிரியை நா.சாத்தம்மைப்பிரியா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை 
செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/சேதுத்-திட்டம்-நிறைவேறாமலிருப்பது-கவலையளிக்கிறது-3098078.html
3098077 திருச்சி திருச்சி ராமலிங்கநகர் பூங்காவில்  உடற்பயிற்சி செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை DIN DIN Monday, February 18, 2019 07:46 AM +0530 திருச்சி ராமலிங்கநகர் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு  நீரிழிவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டன.
மேக்ஸ்கேர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையை மாநகராட்சி ஆணையர் 
ந.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார்.
உடற்பயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டுவலிகள் உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனையை மருத்துவர் முகேஷ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். 
150-க்கும் மேற்பட்டோர்  பரிசோதனை செய்து கொண்டனர். முன்னதாக மான்ஷா யோகா அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட யோகா பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/ராமலிங்கநகர்-பூங்காவில்--உடற்பயிற்சி-செய்வோருக்கு-மருத்துவப்-பரிசோதனை-3098077.html
3098076 திருச்சி திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு DIN DIN Monday, February 18, 2019 07:46 AM +0530 திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சந்தித்து, அறக்கட்டளை நிறுவி முன்னாள், இந்தநாள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.
தூய வளனார் கல்லூரியின் 175 ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், இக் கல்லூரியில் தமிழ்த்துறையில் 1982ஆம் ஆண்டு முதல் பயின்ற பல்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் பி. செல்வக்குமரன், முன்னின்று இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.முன்னாள் மாணவர், மாணவிகள் 65 பேர் கல்லூரி ஒலி, ஒளிக் காட்சியகத்தில் சனிக்கிழமை ஒன்று கூடி, தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். 
தமிழாய்வுத்துறையின் முன்னாள் தலைவர்கள் அந்தோனி குரூஸ், சாமிமுத்து ஆகியோர் தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவரும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குநருமான சு. ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார்.
இந்த மாணவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் கல்லூரியில் கூடி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. 
மேலும், முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை நிறுவி கல்லூரியில் தமிழ்த்துறை பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும், வறுமையில் உள்ளவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/தூய-வளனார்-கல்லூரியில்-தமிழ்த்துறை-முன்னாள்-மாணவர்கள்-சந்திப்பு-3098076.html
3098075 திருச்சி திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் நுண் உர செயலாக்க மையம் திறப்பு DIN DIN Monday, February 18, 2019 07:46 AM +0530 குப்பைக் கழிவுகளில் இருந்து நுண் உரம் தயாரிக்கும் வகையில் , திருச்சி மாநகராட்சியில் 30ஆவது செயலாக்க மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி சார்பில், மாநகரைத் தூய்மையாக்கும் வகையில்  குப்பைகளைத் தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை ஊக்குவிக்கும் வகையில்,  2016-17, 2017-18 ஆம் நிதியாண்டுகளில், 4 கோட்டங்களிலும் 30 நுண் உரம் செயலாக்க மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ஏற்கெனவே  29 மையங்கள் திறக்கப்பட்டன.
அரியமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட 61, 62 மற்றும் 64ஆவது வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க, காட்டூர் பாப்பாக்குறிச்சியில் ரூ.74 லட்சத்தில் அமைக்கப்பட்ட நுண் உர செயலாக்க மையத்தை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இதன் மூலம் 237 தெருக்களிலுள்ள, 8,757 வீடுகள், 300 வணிக நிறுவனங்களிடமிருந்து  பெறப்படும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுவதுடன், இப்பகுதி முழுவதும் தூய்மையாகப் பராமரிக்கப்படும்.  2016 திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் கீழ், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்க முடியும். ஆனால், அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்றார் ஆணையர்.
இந்த நிகழ்ச்சியில், நகரப் பொறியாளர் எஸ். அமுதவள்ளி, உதவி ஆணையர் டி. துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் ஜி.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/காட்டூர்-பாப்பாக்குறிச்சியில்-நுண்-உர-செயலாக்க-மையம்-திறப்பு-3098075.html
3098074 திருச்சி திருச்சி தமிழகத்துக்கு நிதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, February 18, 2019 07:45 AM +0530 தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, ரூ.26,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, திருச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்து வழங்க வேண்டிய ரூ.15,000 கோடி கஜா புயல் நிவாரண நிதி, ரூ.7000 கோடி ஜிஎஸ்டி வரி, ரூ.4000 கோடி வாட் வரி என மொத்தமாக நிலுவையிலுள்ளரூ.26,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
லட்சிய திமுக,  ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகம், மக்கள் தேசக் கட்சி, அனைத்திந்திய உழைப்பாளிகள் முன்னேற்றக் கழகம், மதசார்பற்ற இந்திய மக்கள் கட்சி, மக்கள் நலக்கழகம், தேசிய நதிநீர் பாதுகாப்புக் கழகம், முஸ்லிம் முன்னேற்றக்கழகம், முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழகம், ஜீவா கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு,  மவுலானா சதக்கத்துல்லா தலைமை வகித்தார்.
 முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகப் பொதுச்செயலர் இஸ்மாயில் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.  பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் தங்கதுரை, ஆசைத்தம்பி, கருப்பையா, ரபீக், அமீன்,  ஜெய்னுலாதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/தமிழகத்துக்கு-நிதி-வழங்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3098074.html
3098073 திருச்சி திருச்சி திருவானைக்கா காடைப்பிள்ளை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Monday, February 18, 2019 07:45 AM +0530 திருவானைக்கா ஜம்புகேசுவரர் நகரிலுள்ள ஸ்ரீகாடைப்பிள்ளை அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுதரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாடைப்பிள்ளை அய்யனார்,  நாகசுப்பசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த 15  ஆம் தேதி  விக்னேசுவரபூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து காவிரியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜை  தொடங்கியது. சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் 2,3 ஆம் காலயாகசாலை பூஜைகளும், காடைப்பிள்ளை அய்யனார் சுவாமிக்கு யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைக்குப் பின்னர், மகா பூர்ணாஹூதியுடன் கடங்கள்
புறப்பாடு நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு அனைத்து விமான கலசங்களுக்கும்  வேதவிற்பன்னர்களால் புனித நீர் ஊற்றப்பட்டுமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன்,எஸ். வளர்மதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
காவடி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நாச்சியார்புதூர் ஸ்ரீ காவடி முருகன்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில், பிப்.3 ஆம் தேதி பந்தல்கால் நடுதல், முளைப்பாரி தெளிப்புடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. பிப்.15 ஆம் தேதி திருஈங்கோய்மலை காவிரியாற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை  கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேசுவர பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹுதிக்குப்  பின்னர், காலை 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கே. சின்னத்தம்பி,  கோபால், விழாக்குழுவினர் எம்.ஏ. ஆறுமுகம், பி. சுப்பிரமணியன், ஏ. முருகேசன், எம். பாலன், வி. சின்னையன், ரங்கராஜன், பூவலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்னர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/திருவானைக்கா-காடைப்பிள்ளை-அய்யனார்-கோயில்-கும்பாபிஷேகம்-3098073.html
3098072 திருச்சி திருச்சி பயங்கரவாதத் தாக்குதல்: இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் DIN DIN Monday, February 18, 2019 07:45 AM +0530 இந்திய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாது, அவர்களுக்கு இந்தியா தக்க பதிலடியும் கொடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி கொடியேற்று விழா, நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தாயகத்தை பாதுகாக்கக்கூடிய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாது, அவர்களுக்குத் தக்க பதிலடியும் கொடுக்க வேண்டும். 
 உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும்.தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
 மணப்பாறை போன்ற பகுதிகள் வறட்சியில் பாதித்திருக்கும் நிலையில் இம்மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.மக்களவைத் தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது நிலையைத் தெளிவுப்படுத்தியிருக்கிறார். எந்த கட்சியுடன் த.மா.கா. கூட்டணி சேர்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றார் வாசன்.
நிகழ்வில், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் திருச்சி தெற்கு டி.குணா, மாநகர் நந்தா கே.செந்தில்வேல், வடக்கு கே.வி.ஜி .ரவீந்திரன், விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/18/பயங்கரவாதத்-தாக்குதல்-இந்தியா-பதிலடி-கொடுக்க-வேண்டும்-3098072.html
3097498 திருச்சி திருச்சி ரயில்வே பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி DIN DIN Sunday, February 17, 2019 03:28 AM +0530
திருச்சி பொன்மலையில் ரயில்வே பாரம்பரியப்  பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை, இளைய சமுதாயத்தினர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், ரயில்வே பாரம்பரியக் கண்காட்சி அமைக்க வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 
இதன்படி, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் பொன்மலை ரயில்வே திருமணஹாலில் சனிக்கிழமை பாரம்பரிய ரயில்வே பொருள்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக் கண்காட்சியை, பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் பி.என். ஜா தொடங்கி வைத்தார். ரயில்வே தொழிலாளர் நல அதிகாரி டி. சங்கரன், துணை முதன்மை இயந்திரவியல் பொறியாளர் சுபாஷ்குமார், உதவி இயந்திரவியல் பொறியாளர் ஜலால் ஆகியோர் கண்காட்சி நோக்கங்கள் குறித்து விளக்கிக் கூறினர்.
இக்கண்காட்சியில் தெற்கு ரயில்வேயில் உள்ள பாரம்பரிய ரயில் நிலையங்கள், பாலங்கள், தொடக்கக் காலங்களில் இயக்கப்பட்ட ரயில்கள், இன்ஜின் ஆகியவற்றின் அரிய புகைப்படங்கள், மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரப் போராட்ட காலத்தில் 
தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் ரயில் பயன்பாடு குறித்த புகைப்படங்கள், ரயில்வே அஞ்சல் தலைகளும் இடம் பெற்றிருந்தன. ரயில்வே துறையின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தி தொலைபேசி, சமிக்ஞை விளக்குகள், டார்ச் லைட்டுகள், கடிகாரம், அச்சு முத்திரைகள், இருப்புப் பாதை வரைபடங்களும் இடம் பெற்றிருந்தன.
இக் கண்காட்சியை பள்ளி மாணவர், மாணவிகள், பொன்மலை பணிமனை பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/ரயில்வே-பாரம்பரியப்-பொருள்கள்-கண்காட்சி-3097498.html
3097497 திருச்சி திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு DIN DIN Sunday, February 17, 2019 03:28 AM +0530 திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சந்தித்து, அறக்கட்டளை நிறுவி முன்னாள், இந்தநாள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.
தூய வளனார் கல்லூரியின் 175 ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், இக் கல்லூரியில் தமிழ்த்துறையில் 1982ஆம் ஆண்டு முதல் பயின்ற பல்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் பி. செல்வக்குமரன், முன்னின்று இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.முன்னாள் மாணவர், மாணவிகள் 65 பேர் கல்லூரி ஒலி, ஒளிக் காட்சியகத்தில் ஒன்று கூடி, தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். தமிழாய்வுத்துறையின் முன்னாள் தலைவர்கள் அந்தோனி குரூஸ், சாமிமுத்து ஆகியோர் தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவரும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குநருமான சு. ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார்.
இந்த மாணவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் கல்லூரியில் கூடி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. 


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/தூய-வளனார்-கல்லூரியில்-தமிழ்த்துறை-முன்னாள்-மாணவர்கள்-சந்திப்பு-3097497.html
3097449 திருச்சி திருச்சி திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் DIN DIN Sunday, February 17, 2019 03:14 AM +0530
திருச்சி விமான நிலையத்திற்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்ட அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழகம், கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த 4 சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் புதுதில்லியிலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள்  தேசியக் கொடியுடன் விமான நிலைய வளாகத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பாஜக அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளும் விமானநிலையத்துக்கு காலை 9 மணிக்கு வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.
விமானநிலையத்தில்  விஐபி ஓய்விடம் அருகிலுள்ள திறந்தவெளி பகுதியில் 4 வீரர்களின் உடல்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர்,  அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனின் உடலை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சிவச்சந்திரனின் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
காலை 10.45 மணிக்கு  திருச்சி விமான நிலையம் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஐபி ஓய்விடத்துக்கு சென்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பின்னர்,முற்பகல்  11.15 மணிக்கு வீரர்களின் உடல்களை சுமந்த இந்திய விமானப்படை விமானம், திருச்சி விமானநிலையத்தில் தரை இறங்கியது.
விமானத்தில் இருந்து சிவச்சந்திரன் உடல் மட்டும் இறக்கப்பட்டது. இதர 3 வீரர்களின் உடல்கள் அதே விமானத்தில் மதுரை, கோழிக்கோடு, பெங்களூருக்கு கொண்டு செல்லும் வகையில் தயார் செய்யப்பட்டது. 
முற்பகல்  11.54 மணிக்கு சிவச்சந்திரனின் உடல் வெளியே கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  முதலில் சிவச்சந்திரன் உடலுக்கு அவருடைய  சித்தப்பா கண்ணன், மைத்துனர் அருண், ஜெயபால், குணவேல் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தமிழகக் காவல்துறையின் சார்பில், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 9 காவலர்கள் அடங்கிய குழு வீரவணக்கம் செய்து பாதுகாப்பு மரியாதை செலுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மத்திய திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் 
அனந்தகுமார் ஹெக்டே, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார், எம்எல்ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம்.  பரமேஸ்வரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் ஜெ. சீனிவாசன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாவட்ட செயலர் ஆர்.சி. கோபி, டாக்டர் எம்.ஏ. அலீம், உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முப்படையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  மத்திய மண்டலக் காவல்துறைத்  தலைவர் வரதராஜு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், டிஐஜி  ஆர். லலிதா லட்சுமி, சிஆர்பிஎப் டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா,  மாவட்ட ஆட்சியர்கள் திருச்சி கு.ராசாமணி, அரியலூர் மு. விஜயலட்சுமி, காவல் கண்காணிப்பாளர்கள் திருச்சி ஜியாவுல்ஹக், அரியலூர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 இதைத் தொடர்ந்து, சிவச்சந்திரனின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு கார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தல்:   சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  பிறகு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், கார்குடியில் உள்ள சிவச்சந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்றிருந்தேன். அவர்களது குடும்பத்தில் அனைத்திலும் தேசப்பற்று மேலாங்கி நிற்பதை காணமுடிந்தது.உயிரிழந்த சிவச்சந்திரனின் மனைவிக்கு செவிலியர் பணி வழங்குவதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  இதுபோல, சிவச்சந்திரனின் தங்கை வாய் பேச இயலாத நிலையில் உள்ளார். அவருக்கும் அரசு இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். சிவச்சந்திரன் நினைவாக கார்குடியிலும், சுப்பிரமணியன் நினைவாக சவலாப்பேரியிலும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.

 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான கார்குடியில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து சிவச்சந்திரன் உடல் ராணுவ வாகனத்தில் மாலை 4 மணிக்கு  அரியலூர் மாவட்டம் கார்குடியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மக்களவை உறுப்பினர் சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம்  உள்ளிட்டோர்,  குடும்பத்தினர், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4.15 மணிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சிவச்சந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சொந்தமான இடத்தில் மாலை 5.15 மணிக்கு  மத்தியப் பாதுகாப்புப் படையினரின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, திருச்சியிலிருந்து சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழியில் பொதுமக்கள் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/திருச்சி-விமான-நிலையத்தில்-சிவச்சந்திரன்-உடலுக்கு-மத்திய-அமைச்சர்கள்-அஞ்சலி-21-குண்டுகள்-முழங்க-உடல-3097449.html
3097447 திருச்சி திருச்சி மணப்பாறையில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு DIN DIN Sunday, February 17, 2019 03:13 AM +0530
மணப்பாறை ரயில் நிலையம் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சனிக்கிழமை மக்களவை துணை தலைவர்  மு. தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி வரவேற்றனர்.  
வைகை அதிவிரைவு வண்டி மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்ற மணப்பாறை மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையை  கரூர் மக்களவை தொகுதி எம்.பி.யும், மக்களவை துணைத் தலைவருமான மு. தம்பிதுரை மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் 16.02.2019 முதல் 18.07.2019 வரையிலான ஆறு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் மணப்பாறையில் நின்றுசெல்லும் என்ற அரசாணை வெளியிட்டது.  தொடர்ந்து சனிக்கிழமை 
(பிப்.16) காலை 8.50 மணியளவில் மணப்பாறை ரயில் நிலையத்தில் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகர் ஆகியோர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பச்சைக் கொடியசைத்து வழியனுப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், என்.சேது, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், நகரச் செயலாளர் பவுன்.ராமமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதி ஏ.டி.எஸ்.ராமசந்திரன், மணவை ஸ்ரீதரன், நெட்ஸ் இளங்கோ, சண்முகப் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாஜக பிரமுகர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/மணப்பாறையில்-நின்ற-வைகை-எக்ஸ்பிரஸ்-ரயிலுக்கு-வரவேற்பு-3097447.html
3097446 திருச்சி திருச்சி ஆரம்பக் கல்வி அனுபவமாக இருத்தல் வேண்டும் DIN DIN Sunday, February 17, 2019 03:13 AM +0530
குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் ஆரம்பக் கல்வியானது அழகிய அனுபவமாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பெல் நிறுவனத்தின் திருச்சி மின்னாலைக் குழாய்கள் பிரிவு செயலாண்மை இயக்குநர் ஆர். ராஜாமனோகர் தெரிவித்தார்.
பெல் நிறுவனத்தின் திருச்சி பிரிவு ஊழியர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை வழங்கி, பால்விஹார் மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. இந்தப் பள்ளியை பெல் நிறுவன மகளிர் நலச் சங்கம் நடத்தி வருகிறது. 
இச்சங்கத்தின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பெல் நிறுவன செயலாண்மை இயக்குநர் ஆர். ராஜாமனோகர் பேசியது:
குழந்தைகள் உற்சாகத்துடன், பள்ளி செல்ல புதிய, புதிய விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். ஆரம்பக் கல்வி என்பது குழந்தைகளுக்கு ஆனந்தமான, அற்புதமான அனுபவமாக அமைவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டுவதாக அமைய வேண்டும். இல்லையெனில் இடைநிற்றல் அதிகரிக்கும். மகளிர் நலச்சங்கம் நடத்தும் பால்விஹார் பள்ளியில் குழந்தைகள் ஆனந்தமாகவும், சுகாதாரமான சூழலுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், வாழ்த்திப் பேசிய கல்வியாளரும், ஆலோசகருமான சுஜாதா ஸ்ரீராம் பேசுகையில், குழந்தைகள் கூடுதலாக ஓடியாடி விளையாடவும் மற்ற குழந்தைகளுடன் பழகவும் ஆசிரியர்கள் வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். 
இதன் மூலம் குழந்தைகளின் உடல் உறுப்புகளின் இயக்கங்கள் வலுப்பெறுவதுடன், பிறர் மீதான கருணை உணர்ச்சி பெருகும். வன்மத்துக்கு இடம் இருக்காது என்றார்.
பெல் திருச்சி பிரிவின் முதல் பெண்மணியும், மகளிர் நலச்சங்கத்தின் புரவலருமான நிர்மலா ராஜாமனோகர், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களைக் கௌரவப் படுத்தினார். மகளிர் நலச்சங்க செயலர் கீதா சுப்பராயலு, சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். 
சங்கத் தலைவர் ரேவதி சீனிவாசன் வரவேற்றார். ஜோதி ராஜேந்திரகுமார் நன்றி கூறினார். தொடர்ந்து, மழலைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/ஆரம்பக்-கல்வி-அனுபவமாக-இருத்தல்-வேண்டும்-3097446.html
3097445 திருச்சி திருச்சி கார் மோதி மூதாட்டி சாவு DIN DIN Sunday, February 17, 2019 03:12 AM +0530
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில்  நடந்து சென்ற இரு மூதாட்டிகள் மீது சனிக்கிழமை கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொட்டியம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மனைவி செம்பாயியம்மாள் (70), பிச்சை மனைவி  அனுசுயா (61) ஆகிய இரு மூதாட்டிகளும்   சனிக்கிழமை காலை தொட்டியம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றனராம். அப்போது பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மூதாட்டிகள் மீது மோதியதில், செம்பாயியம்மாள் நிகழ்விடத்திலயே இறந்தார். அனுசுயா பலத்த  காயமடைந்து தொட்டியம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று செம்பாயியம்மாள் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் பெங்களூருவைச் சேர்ந்த குட்டைகௌடா என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/கார்-மோதி-மூதாட்டி-சாவு-3097445.html
3097444 திருச்சி திருச்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் DIN DIN Sunday, February 17, 2019 03:12 AM +0530
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடக்கி வைத்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது:  
மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் அவசியமானது. 
வேலைவாய்ப்பு அலுவலகம்,  தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியை பெற்று  போட்டித் தேர்வுகளுக்கு மன உறுதியோடு இளைஞர்கள் தங்களை ஹதயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
முகாமில்,  516 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர். 418 பேர் திறன் பயிற்சிக்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். 
தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்காக 170 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு  அவர்களுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் வெ. சுப்பிரமணியன், மகளிர் திட்ட இயக்குநர் சரவணன்,சிறு, குறு தொழில் சங்க தலைவர் எம்.கனகசபாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/போட்டித்-தேர்வுகளுக்கு-இலவச-பயிற்சி-ஆட்சியர்-3097444.html
3097443 திருச்சி திருச்சி அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி  ஆட்சியர், ஆணையரிடம் எம்எல்ஏ மனு DIN DIN Sunday, February 17, 2019 03:12 AM +0530
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனு அளித்தார்.
திருவெறும்பூர் தொகுதிக்குள்பட்ட  பொதுமக்களுடன் ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனு அளித்தார்.
அதில்,  65ஆவது வார்டில் நொச்சியவயல்புதூரில் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். 62ஆவது வார்டு பாரத் அவென்யூ பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். 
பாலாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சாலை, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். கிருஷ்ணசமுத்திரம், வேங்கூர், அரசங்குடி, குண்டூர், குவளக்குடி, முல்லைக்குடி, பனையக்குறிச்சி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை, கும்பக்குடி, கீழக்குறிச்சி, அசூர், சோழமாதேவி, பத்தாளபேட்டை, கிளியூர், சூரியூர், பழங்கனாங்குடி, காந்தலூர், நடராஜபுரம், நவல்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதிகளை விரைந்து செய்துதர வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/அடிப்படை-வசதிகள்-செய்துதரக்-கோரி--ஆட்சியர்-ஆணையரிடம்-எம்எல்ஏ-மனு-3097443.html
3097442 திருச்சி திருச்சி தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்வு DIN DIN Sunday, February 17, 2019 03:12 AM +0530
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு திருச்சி கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்துக்குள்பட்ட ஆங்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து  கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் பேசியது:  தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி விட்டது. காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளான 2019அக்டோபர் 2  தேகிக்குள் திறந்த வெளிக்கழிப்பிடமில்லாத நாடாக  இந்தியவை  மாற்ற  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முதல்வர் சாமிநாதன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பொன்னி சியாமளா, நாட்டு நல பணி திட்ட அலுவலர் தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்த்தில்,  ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/தூய்மை-இந்தியா-விழிப்புணர்வு-நிகழ்வு-3097442.html
3097441 திருச்சி திருச்சி மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் தட்டச்சர் பணிக்கான தகுதி பட்டியல் தயாரிப்பு DIN DIN Sunday, February 17, 2019 03:12 AM +0530
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தட்டச்சர் பணிக் காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பரிந்துரைக்கப்பட இருப்பதாக  திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள தட்டச்சர் பணிக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சில் ஆங்கிலம்  மற்றும் தமிழில் உயர்நிலை படிப்பு மற்றும் பட்டயச் சான்றிதழ் பயிற்சி கணினியில் முடித்திருத்தல் (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி)  வேண்டும்.  
1.1.2018 அன்று தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினருக்கு 35 வயது ஆகவும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினருக்கு 32 வயதும், பகிரங்க போட்டியாளருக்கு உச்ச வயது வரம்பு 30 ஆகவும் இருக்க வேண்டும்.
இக்கல்வித்தகுதிக்கு உட்பட்ட பதிவுதாரர்கள் பிப். 18 ஆம் தேதிக்குள் பாரதிதாசன் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் அனைத்து சான்றிதழ்களோடு வந்து பரிந்துரை பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/மாசுக்-கட்டுப்பாடு-வாரியத்தில்-தட்டச்சர்-பணிக்கான-தகுதி-பட்டியல்-தயாரிப்பு-3097441.html
3097440 திருச்சி திருச்சி சணல் பொருள்கள் உபயோகம்: பிப்.18-இல் விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Sunday, February 17, 2019 03:11 AM +0530
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக சணல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் உபயோகம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருச்சி தேவர்ஹாலில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக சணல் மூலம் தயாரிக்கப்படும் பைகள், பள்ளிக் குழந்தைகளுக்கான பைகள், மகளிருக்கான கைப்பைகள், மதிய உணவு பைகள், காலணிகள், நகைகள், சுவர் அலங்கார பொருள்கள், தரை விரிப்புகள், பொம்மைகள் மற்றும் இதர சணல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் உபயோகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
இதற்காக திருச்சி மேலரண்சாலையில் உள்ள தேவர்ஹாலில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. 
இக் கூட்டத்தில், தேசிய சணல் வாரியத்தின் தென்மண்டல இணை இயக்குநர் ஐயப்பன் பங்கேற்று பேசுகிறார். மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் மற்றும் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/சணல்-பொருள்கள்-உபயோகம்-பிப்18-இல்-விழிப்புணர்வுக்-கூட்டம்-3097440.html
3097439 திருச்சி திருச்சி பந்தக்காட்சியில் வலம் வந்த நம்பெருமாள்: மாசி தெப்பத் திருவிழா நிறைவு DIN DIN Sunday, February 17, 2019 03:11 AM +0530
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த மாசி தெப்பத் திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு பந்தக் காட்சியுடன் நிறைவு பெற்றது.
மாசி தெப்பத்திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. 9 நாள்கள் நடைபெற்று வந்த இவ்விழா நாட்களில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முக்கிய நிகழ்வான தெப்ப உற்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு பந்தக்காட்சி நடைபெற்றது. 
இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை பகல் 1.30 மணிக்கு வந்தடைந்தார். 2 மணிமுதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். 
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஒற்றைபிரபையில் நம்பெருமாள் எழுந்தருளி இருபுறமும் 30-க்கும் மேற்பட்ட தீப்பந்தகளின் வெளிச்சத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியே வலம் வந்தார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழங்காலத்தில் நடைபெற்ற விழாவைப்போல் பழைமை மாறாமல் பந்தக்காட்சியில் திருவீதி உலா வந்த நம்பெருமாளை பக்தர்கள் ஆயிரம்கண் கொண்டு கண்டு ரசித்தனர். படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார் நம்பெருமாள்.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/பந்தக்காட்சியில்-வலம்-வந்த-நம்பெருமாள்-மாசி-தெப்பத்-திருவிழா-நிறைவு-3097439.html
3097438 திருச்சி திருச்சி வயதான தம்பதி தற்கொலைக்கு முயற்சி; மனைவி சாவு, கணவர் கவலைக்கிடம் DIN DIN Sunday, February 17, 2019 03:11 AM +0530
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் தனியே வசித்து வந்த வயதான தம்பதி மன உலைச்சலால் வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை முயன்றதில்  மனைவி உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமயபுரம் அருகேயுள்ள இருங்களூர் துரைசாமித் தெருவைச் சேர்ந்தவர் செல்வரங்கம் (74). மனைவி சரஸ்வதி (64). ஒரே மகள் மீனாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம், பூலாங்குடி பகுதியில் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டனர். 
இருவரும் வீட்டின் முன்பு பெட்டிக் கடை வைத்து தனியே வசித்து வந்தனர். இந்தச் சூழலில், செல்வரங்கத்திற்கு அண்மையில் கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் பல்வேறு உடல் உபாதைகள் இருந்துவந்தநிலையில், தனியே வசித்து வந்த இருவரும் உதவிக்கு யாருமின்றி மிகுந்த மன உலைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,  கணவர், மனைவி இருவரும் வாழ்வில் விரக்தியடைந்து வெள்ளிக்கிழமை இரவு
வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு வந்த பால்காரர், தம்பதி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் அளித்தார். 
தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில், சரஸ்வதி உயிரிழந்திருப்பதும், செல்வரங்கம் மயங்கிய நிலையில் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வரங்கத்தை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சரஸ்வதி உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வரங்கம் எழுதிவிட்டுச் சென்ற கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/வயதான-தம்பதி-தற்கொலைக்கு-முயற்சி-மனைவி-சாவு-கணவர்-கவலைக்கிடம்-3097438.html
3097437 திருச்சி திருச்சி ரயில்வே பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி DIN DIN Sunday, February 17, 2019 03:11 AM +0530
திருச்சி பொன்மலையில் ரயில்வே பாரம்பரியப்  பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை, இளைய சமுதாயத்தினர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், ரயில்வே பாரம்பரியக் கண்காட்சி அமைக்க வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் பொன்மலை ரயில்வே திருணமஹாலில் சனிக்கிழமை பாரம்பரிய ரயில்வே பொருள்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கண்காட்சியை, பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் பி.என். ஜா தொடங்கி வைத்தார். ரயில்வே தொழிலாளர் நல அதிகாரி டி. சங்கரன், துணை முதன்மை இயந்திரவியல் பொறியாளர் சுபாஷ்குமார், உதவி இயந்திரவியல் பொறியாளர் ஜலால் ஆகியோர் கண்காட்சி நோக்கங்கள் குறித்து விளக்கிக் கூறினர்.
இக்கண்காட்சியில் தெற்கு ரயில்வேயில் உள்ள பாரம்பரிய ரயில் நிலையங்கள், பாலங்கள், தொடக்கக் காலங்களில் இயக்கப்பட்ட ரயில்கள், இன்ஜின் ஆகியவற்றின் அரிய புகைப்படங்கள், மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் ரயில் பயன்பாடு குறித்த புகைப்படங்கள், ரயில்வே அஞ்சல் தலைகளும் இடம் பெற்றிருந்தன. இக் கண்காட்சியை பள்ளி மாணவர், மாணவிகள், பொன்மலை பணிமனை பிரிவு அதிகாரிகள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/ரயில்வே-பாரம்பரிய-பொருள்கள்-கண்காட்சி-3097437.html
3097436 திருச்சி திருச்சி உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம் DIN DIN Sunday, February 17, 2019 03:11 AM +0530
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு முசிறி பகுதி மக்கள் சனிக்கிழமை  மாலை மௌன ஊர்வலமாக முசிறி நகரை வலம் வந்து அஞ்சலி செலுத்தினர். 
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் சீதாராமன்  தலைமையில் காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்ற மௌன ஊர்வலம் 
கைகாட்டியில் இருந்து புதிய பேருந்து  நிலையம்,   தா.பேட்டை - முசிறி சாலை வழியாகச் சென்று  மௌன ஊர்வலமாக  மீண்டும்  கைகாட்டிக்கு  சென்று உயிரிழந்த வீரர்களின் திருஉருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு  அஞ்சலி செலுத்தினர்  இதேபோல் தொட்டியம் அடுத்த கிளிஞ்சிநத்தம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட  மௌன அஞ்சலி  நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று உயிரிழந்த வீரர்களின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி வீர வணக்கம் செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/உயிரிழந்த-வீரர்களுக்கு-மௌன-அஞ்சலி-ஊர்வலம்-3097436.html
3097435 திருச்சி திருச்சி திருச்சி விமான பயணிகளிடம் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல் DIN DIN Sunday, February 17, 2019 03:10 AM +0530
திருச்சி விமானநிலையத்தில் பயணிகளிடம் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஏர் ஆசியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, மதார் சிக்கந்தர் என்ற பயணி மீது சந்தேகம் எழவே அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அணிந்திருந்த காலணிக்கு அடியில் மறைத்து 109.6 கிராம் எடையுள்ள ரூ.3.63 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல ஷேக் அகமது என்ற பயணியிடமிருந்து 190 கிராம் எடையுள்ள ரூ.6.30 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/திருச்சி-விமான-பயணிகளிடம்-ரூ10-லட்சம்-தங்கம்-பறிமுதல்-3097435.html
3097434 திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு DIN DIN Sunday, February 17, 2019 03:10 AM +0530
திருச்சி அருகே முக்கொம்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்  சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புலிவலம் பகுதி கவுண்டர் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் யுவன்(18).இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன் முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது  நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/காவிரி-ஆற்றில்-மூழ்கி-கல்லூரி-மாணவர்-சாவு-3097434.html
3097433 திருச்சி திருச்சி மணப்பாறை அருகே உணவகத்தில் தகராறு: 3 பேர் கைது DIN DIN Sunday, February 17, 2019 03:10 AM +0530
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை அடுத்த மரவனூர் பகுதியில் திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்வம் என்பருக்கும் சொந்தமான உணவகத்தில் வியாழக்கிழமை இரவு உணவருந்த வந்த இளைஞர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதில்,  வாக்குவாதம் முற்றியதில் உணவகத்தில் இருந்த பொருள்களை இளைஞர்கள் அடித்து உடைத்தனர். அப்போது தடுக்க முயன்ற  திவாகர், ராஜபிரபு மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அழகர் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்து வந்து காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  முன்விரோதமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ரத்தினம் மகன் சிவமூர்த்தி(35), செல்வம் மகன் பிரபாகரன்(26), ராமசாமி மகன் திருப்பதி(22) ஆகிய மூவரை சனிக்கிழமை இரவு கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/17/மணப்பாறை-அருகே-உணவகத்தில்-தகராறு-3-பேர்-கைது-3097433.html
3097130 திருச்சி திருச்சி மணப்பாறையில் நின்று சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு DIN DIN Saturday, February 16, 2019 11:44 PM +0530
மணப்பாறை ரயில் நிலையம் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சனிக்கிழமை மக்களவை துணை தலைவர்  மு. தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி வரவேற்றனர்.  
வைகை அதிவிரைவு வண்டி மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்ற மணப்பாறை மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையை  கரூர் மக்களவை தொகுதி எம்.பி.யும், மக்களவை துணைத் தலைவருமான மு. தம்பிதுரை, ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் 16.02.2019 முதல் 18.07.2019 வரையிலான ஆறு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் மணப்பாறையில் நின்றுசெல்லும் என்ற அரசாணை வெளியிட்டது.  
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (பிப்.16) காலை 8.50 மணியளவில் மணப்பாறை ரயில் நிலையத்தில் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகர் ஆகியோர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பச்சைக் கொடியசைத்து வழியனுப்பட்டது. 
    நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பாஜக பிரமுகர்கள், பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/மணப்பாறையில்-நின்று-சென்ற-வைகை-எக்ஸ்பிரஸ்-ரயிலுக்கு-வரவேற்பு-3097130.html
3096871 திருச்சி திருச்சி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவித் தொகை: பள்ளி, கல்லூரி வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு DIN DIN Saturday, February 16, 2019 08:59 AM +0530 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இதன்படி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்.
1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குழு போட்டிகளா இருந்தால் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழுடன் மார்ச் 12ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/விளையாட்டு-மேம்பாட்டு-ஆணைய-உதவித்-தொகைபள்ளி-கல்லூரி-வீரர்கள்-விண்ணப்பிக்க-அழைப்பு-3096871.html
3096870 திருச்சி திருச்சி வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக  ரூ. 5.20 லட்சம் மோசடி:  2 பேர் கைது DIN DIN Saturday, February 16, 2019 08:58 AM +0530 வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி  ரூ. 5.20 லட்சம் மோசடி செய்த சகோதரர்களை திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தியாகேசர் ஆலை பகுதியைச் சேர்ந்தவர்  மகாதேவன் மகன் அரவிந்த்.  இவர், சிங்கப்பூரில் வேலைக்குச் செல்வதற்காக   டிராவெல் ஏஜென்ஸி முகவர்களான   உறையூர் லிங்க நகரைச் சேர்ந்த ப.  சச்சிதானந்தம் மற்றும் அவரது ச கோதரர் சுசீந்திரன் ஆகியோரை அணுகினார்.
இதற்காக 2017 டிசம்பரில் ரூ.6.50 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அரவிந்தை சிங்கப்பூருக்கு அனுப்பவில்லை. இதனையடுத்து  பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ரூ. 1.30 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். மீதித் தொகையை  தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக, அரவிந்த் அளித்த புகாரின் பேரில், திருச்சி  மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சச்சிதானந்தம் மற்றும் அவரது சகோதரர் சுசீந்திரன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/வெளிநாட்டில்-வேலை-வாங்கித்தருவதாக--ரூ-520-லட்சம்-மோசடி--2-பேர்-கைது-3096870.html
3096869 திருச்சி திருச்சி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனிதச் சங்கிலி DIN DIN Saturday, February 16, 2019 08:58 AM +0530 பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து திருச்சி தலைமை அலுவலகம் முன்பு நடத்திய போராட்டத்துக்கு தலைமை வகித்து அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநில துணைச் செயலர் எஸ். காமராஜ் கூறியது: பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னெப்போதும் சந்தித்திராத நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  பிஎஸ்என்எல் நிதியாதாரத்தை பெருக்க மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். 
பிஎஸ்என்எல் தனது விரிவாக்க பணிகளுக்காக வங்கியில் கடன் பெற தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 18ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றார்.
இந்தப் போராட்டத்தில், ஊழியர் சங்க மாவட்ட செயலர் அசலம் பாஷா, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட செயலர் பழனியப்பன், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் முன்னேற்ற சங்க சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
இந்த மனிதச் சங்கிலி இயக்கத்தில் பெண் ஊழியர்கள், அதிகாரிகள், தொலைத்தொடர்பு அலுவலர்கள் என பலர் கைகளை கோர்த்தபடி 2 கி.மீ. தொலைவுக்கு நின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/பிஎஸ்என்எல்-ஊழியர்கள்-மனிதச்-சங்கிலி-3096869.html
3096868 திருச்சி திருச்சி பனையக்குறிச்சியில் இன்று தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் DIN DIN Saturday, February 16, 2019 08:57 AM +0530 திருச்சி பனையக்குறிச்சியில்  தொழில் முனைவோருக்கான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட  சிறு, குறுந்தொழில்கள் சங்க (டிடிசியா)  செயலர் எஸ்.புண்ணியமூர்த்தி கூறியது: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் ஆகியன இணைந்து  பனயைக்குறிச்சியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை சனிக்கிழமை  நடத்துகின்றன.
ஆண்,பெண் இருபாலரும் இந்த இலவச முகாமில் கலந்து கொள்ளலாம். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான ஆலோசனகள், தொழில் வாய்ப்புகள், அரசு உதவிகள், வங்கிக் கடன்கள் உள்ளிட்ட  அனைத்து சந்தேகங்களுக்கும்  விளக்கம் அளிக்கப்படும். மேலும்,  விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின்  0431-2440119,  9659558111 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/பனையக்குறிச்சியில்-இன்று-தொழில்-முனைவோர்-விழிப்புணர்வு-முகாம்-3096868.html
3096867 திருச்சி திருச்சி இளைஞர் அடித்து கொலை: 3 பேர் கைது DIN DIN Saturday, February 16, 2019 08:57 AM +0530 இளைஞர் கொலை வழக்கில், 3 பேரைப் முசிறி போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். 
முசிறி காவல் சரகத்திற்குட்பட்ட பெரியார் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இளைஞர் சடலத்தை முசிறி போலீஸார் மீட்டு  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்தவர், பெரியகொடுந்துறையைச் சேர்ந்த முத்துசெல்வம்  மகன் நந்தாஸ்ரீ (21) என்பதும், அதே ஊரைச் சேர்ந்த  மகாலிங்கம் மகன் அஜித் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கு காவல் நிலையத்தில் உள்ளதால், இந்தப் பிரச்னையில் சமாதானம் பேசவந்த அஜித்தின் சகோதரர் லோகநாதன் (29), பெரியகொடுந்துறையைச் சேர்ந்த மாசி மகன் சந்திரன் (20), சிவசுப்பிரமணியன் மகன் கோபி (22)  ஆகிய மூவரும்  அவரை அடித்துக் கொன்றது தெரியவந்தது. 
போலீஸார் வழக்கு பதிந்து மேற்குறிப்பிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/இளைஞர்-அடித்து-கொலை-3-பேர்-கைது-3096867.html
3096866 திருச்சி திருச்சி தொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை:உறவினர்கள் மறியல் DIN DIN Saturday, February 16, 2019 08:57 AM +0530 தொட்டியம் அருகே மின்னத்தம்பட்டியில் கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து முசிறி அரசு மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொட்டியம் அருகேயுள்ள மின்னத்தம்பட்டியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி. இவர் நாமக்கல்லில் போர்வெல் லாரி தொழிலாளியாக வேலை செய்கிறார். ராஜீவ் காந்தி மனைவி கலாவிடம் (23), போர்வெல் வண்டி உரிமையாளர் செல்பேசியில் தொடர்பு கொண்டு அவரது கணவர் வாங்கிய கடனைக் கேட்டு தகாத வார்த்தையில் பேசினாராம். 
இதில், மனமுடைந்த கலா வியாழக்கிழமை (பிப். 14) இரவு அவரது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தொட்டியம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு முசிறி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில், கலாவின் சாவுக்கு காரணமான போர்வெல் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து கலாவின் உறவினர்கள் முசிறி அரசு மருத்துவமனை முன்பு திருச்சி - சேலம் சாலையில் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும்  போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் சடலத்தை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/தொட்டியம்-அருகே-இளம்பெண்-தற்கொலைஉறவினர்கள்-மறியல்-3096866.html
3096865 திருச்சி திருச்சி கரூர் முன்னாள் எம்.பி துரை செபஸ்தியான் காலமானார் DIN DIN Saturday, February 16, 2019 08:57 AM +0530 திருச்சி மாவட்டம் கரூர் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் துரை. செபஸ்தியான் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். 
மணப்பாறையில் அய்யாசாமி ஆசாரி, பாக்கியத்தம்மாள் ஆகியோருக்கு 1937-ஆம் ஆண்டு பிறந்தவர் துரை செபஸ்தியான்(82). பி.காம் பட்டதாரி. இவர்  1980 முதல் 1984 வரையில் கரூர் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினராவார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கோவில்பட்டி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் துரை செபதிஸ்யான் உடல்நலக்குறைவால் காலமானார். 
அவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை தோட்டத்தில் நடைபெறுகிறது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/கரூர்-முன்னாள்-எம்பி-துரை-செபஸ்தியான்-காலமானார்-3096865.html
3096864 திருச்சி திருச்சி தஞ்சை, காரைக்கால் பயணிகள் ரயில் உள்பட 4 ரயில்கள் மார்ச் 31 வரை ரத்து DIN DIN Saturday, February 16, 2019 08:56 AM +0530 நிர்வாக காரணங்களுக்காக தஞ்சை, காரைக்கால் பயணிகள் ரயில் உள்பட 4 ரயில்கள் சனிக்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அலுவலக மக்கள் தொடர்புத் திட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தெற்கு ரயில்வே சார்பில் நிர்வாக காரணங்களுக்காக 4 வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்கள் முழுமையாகவும், பாதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி-தஞ்சை-திருச்சி  பயணிகள் ரயில்கள் (76820, 76823) சனிக்கிழமை முதல் மார்ச் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதே போல திருச்சி-காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்களும் (எண் 76854, 76853), காரைக்குடி-பட்டுக்கோட்டை-காரைக்குடி பயணிகள் ரயில்களும் (எண் 06856,06855) மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி-மயிலாடுதுறை-திருநெல்வேலி பயணிகள் ரயில்கள் (எண் 56822,56821) மார்ச் 31 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/தஞ்சை-காரைக்கால்-பயணிகள்-ரயில்-உள்பட-4-ரயில்கள்-மார்ச்-31-வரை-ரத்து-3096864.html
3096863 திருச்சி திருச்சி "ஹைமாஸ் விளக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள்' DIN DIN Saturday, February 16, 2019 08:55 AM +0530 திருச்சி மாநகரில் ஹைமாஸ் விளக்குகள் மற்றும் வங்கிகள், வணிக நிறுவனங்களின் பின்பகுதிகளிலும் கேமரா பொருத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்றார்  மாநகர காவல் ஆணையர் அ.  அமல்ராஜ்.
திருச்சி பொன்னகர் பகுதியில் இயங்கி வந்த கண்டோன்மென்ட் போக்குவரத்து காவல் நிலையம் பீமநகர் நீதிமன்றக் காவல் நிலையத்துக்கு அருகே மாற்ற செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.  அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில்,  போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ரூ. 10 லட்சத்தில் ஒளிரும் விளக்குகள், பேரிகார்டுகள் உள்ளிட்ட போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் இடர்பாடுகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். காவல் கட்டுப்பாட்டு அறையில் 700 கேமராக்களை தொடர்புபடுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி அதன் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஜிபிஎஸ் கருவிகள் காவல்துறை வாகனங்களில் பொருத்தப்பட்டுளது. 
இனி வரும் காலங்களில் அனைத்து காவல்துறை வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் மற்ற காவல் பணிக்கு பயன்படுத்தப்படும்.  தவிர குற்றங்களை தடுக்கு வகையிலும், கொள்ளையர்கள் தாக்கி உடைப்பதை தடுக்கு வகையிலும்  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் சேதப்படுத்த முடியாத வகையில் உயரமான ஹைமாஸ் விளக்குகளில் பொருத்தப்படவுள்ளன. அதேபோல வணிக நிறுவனங்களின் பின்பகுதி வழியாக கொள்ளையர்கள் திருட்டுக்களை தொடர்வதால் பின்பகுதியிலும் கேமராக்கள் பொருத்த முடிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் . நிகழ்ச்சியில்  மாநகரக் காவல் துணைஆணையர் ஆ. மயில்வாகனன், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/ஹைமாஸ்-விளக்குகளில்-கண்காணிப்பு-கேமராக்கள்-3096863.html
3096862 திருச்சி திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாசி தெப்பத் திருவிழா DIN DIN Saturday, February 16, 2019 08:55 AM +0530 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் மாசி தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமானோர்  தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் மாசி தெப்பத் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.
9 நாள்கள் நடைபெறும் இவ்விழா சனிக்கிழமையுடன் (பிப். 16) பந்தக் காட்சியுடன் நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியார்களுடன் மாலை 3 மணிக்கு புறப்பட்டார். 5 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உபய நாச்சியார்களுடன் 7.30 மணிக்கு எழுந்தருளி தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து மைய மண்டபத்தை 9.15 அடைந்தார். அங்கு வேதமந்திரங்கள் முழங்க தீபராதனை காண்பிக்கப்பட்டது.
தெப்பத்தில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 9.45 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார் நம்பெருமாள். நிறைவு நாளான சனிக்கிழமை (பிப்.16) ஒற்றை பிரபையில் நம்பெருமாள் புறப்பட்டு பந்தக்காட்சியில் காட்சியளிக்கிறார்.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/ஸ்ரீரங்கத்தில்-மாசி-தெப்பத்-திருவிழா-3096862.html
3096861 திருச்சி திருச்சி மணப்பாறை அருகே   ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் சாவு DIN DIN Saturday, February 16, 2019 08:55 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கேட்கும் திறன் குறைந்த 6 ஆம் வகுப்பு மாணவர் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். 
மணப்பாறை அடுத்த கீழ பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி. இவரது மகன் இளவரசன்(12). பொத்தமேட்டுப்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். 
அதிக டெசிபல் அளவிலான ஒலிகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்ட இளவரசன், கடந்த சில நாட்களாக பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிலேயே மன இறுக்கத்துடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் இயற்கை உபாதைகளுக்காக அவரது வீட்டின் அருகேயுள்ள தண்டவாளத்தை இளவரசன் கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாணவரின் பெற்றோர் அவரது உடலைக் கண்டு கதறி அழுதனர். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை ரயில்வே போலீஸார் மாணவரின் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/மணப்பாறை-அருகே---ரயிலில்-அடிபட்டு-பள்ளி-மாணவர்-சாவு-3096861.html
3096860 திருச்சி திருச்சி மணப்பாறையில் சிஐடியு ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, February 16, 2019 08:55 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆட்டோ காப்பீட்டுக் கட்டண உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சிஐடியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறையில் ஆட்டோ இன்சூரன்ஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பேருந்துநிலையம் அருகே உள்ள பெரியார்சிலை திடலில் சிஐடியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் கே.நவமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலைவர் பிரபாகரன், செயலாளர் ஜான்ஜோசப், பொருளாளர் இன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பட்டத்தில், கலந்து கொண்ட சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜ், ஆட்டோ புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தில் பாதகமான திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர். ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் நன்றியுரை கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/மணப்பாறையில்-சிஐடியு-ஆர்ப்பாட்டம்-3096860.html
3096859 திருச்சி திருச்சி திருவெறும்பூரில் சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1முதல் ரத்து DIN DIN Saturday, February 16, 2019 08:54 AM +0530 திருவெறும்பூரில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 1ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியின், அரியமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட திருவெறும்பூர் பகுதியில் சரக்குகள் இறக்கும் லாரிகள், வேன்கள், டெம்போ மற்றும் தற்காலிக கடை வைத்து நடத்தும் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கான குத்தகைக்கான உரிமம் 31.03.2019 முடிகிறது. எனவே, ஏப்.1ஆம் தேதி முதல் லாரிகள், வேன்கள், டெம்போ மற்றும் தற்காலிக கடை வைத்து நடத்தும் வியாபாரிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/திருவெறும்பூரில்-சுங்கக்-கட்டணம்-ஏப்ரல்-1முதல்-ரத்து-3096859.html
3096858 திருச்சி திருச்சி ஜம்மு தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, February 16, 2019 08:54 AM +0530 காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு காவல் படையினர் மீதான தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து, இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை மாலை பேருந்துநிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டனர். 
இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய அமைப்பைக் கண்டித்து, அந்த அமைப்பின் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பாஜக பிரமுகர்கள் தர்னா:  பாஜக பிரமுகர்கள் அயோத்தி கண்ணன் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.  மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் அருகேயுள்ள காந்தியடிகள் சிலை அருகே தேசியக் கொடியுடன் தர்னாவில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/ஜம்மு-தாக்குதலைக்-கண்டித்து-ஆர்ப்பாட்டம்-3096858.html
3096857 திருச்சி திருச்சி வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு DIN DIN Saturday, February 16, 2019 08:54 AM +0530 மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மலைகாட்டுப்பட்டியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மலையாண்டி மகன் தங்கராஜ்(38). இவரது தந்தை உடல்நலக் குறைவால் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரை கவனித்துக் கொள்வதற்காக வியாழக்கிழமை முதல் தங்கராஜ் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார். 
வெள்ளிக்கிழமை காலை அவரது மனைவி உஷாராணி அருகேயுள்ள தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். 
மதியம் திரும்பிவந்துபார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 5 வெள்ளி கொலுசுகள் மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புத்தாநத்தம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/வீட்டின்-பூட்டை-உடைத்து-4-பவுன்-நகை-திருட்டு-3096857.html
3096856 திருச்சி திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே மீனவர் வலையில் சிக்கிய 2 சுவாமி சிலைகள் மீட்பு DIN DIN Saturday, February 16, 2019 08:53 AM +0530 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடித்தபோது மீனவர் வலையில் சிக்கிய 2 சுவாமி சிலைகளை மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் வெள்ளிக்கிழமை மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.  
மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மீனவர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, மீனவர் ஒருவரது வலையில் நடராஜர், விநாயகர் ஆகிய 2 உலோக  சிலைகள் சிக்கின. இதைத்தொடர்ந்து,  தகவலறிந்த மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா  மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, தலா சுமார் 1 கிலோ எடை கொண்ட 2 சிலைகளையும் மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/மண்ணச்சநல்லூர்-அருகே-மீனவர்-வலையில்-சிக்கிய-2-சுவாமி-சிலைகள்-மீட்பு-3096856.html
3096855 திருச்சி திருச்சி 3வயது குழந்தையை கொன்ற வழக்கில் இளம்பெண்ணுக்கு  இரட்டை ஆயுள்: திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு DIN DIN Saturday, February 16, 2019 08:53 AM +0530 குழந்தையைக் கொன்ற இளம் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் 3ஆவது தெருவைச்  சேர்ந்தவர் சிவக்குமார்-லட்சுமிபிரபா  தம்பதியர். சிவக்குமார், அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வந்தார். அந்த கடையில் அதே தெருவைச் சேர்ந்த சேவியர் மகள் ரோஸ்லின் பாக்கியராணி (27) என்பவர் 2013ஆம் ஆண்டு முதல்  பணியாற்றி வந்தார்.  
முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, ரோஸிலினை பணியிலிருந்து சிவக்குமார் நிறுத்தி விட்டார்.  இதையடுத்து  2016 ஜூலை 30ஆம் தேதி, ரோஸ்லின் மொபெட்டில் சென்றபோது,  சிவக்குமாரின் 3 வயது மகன் த்ரிச், மகள் சிஷானி (10) ஆகியோர் வீட்டருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது வீட்டில் விடுவதாக கூறி இருவரையும் ரோஸ்லின் தனது மொபெட்டில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் சிஷானியை வீட்டின் அருகே இறக்கி விட்டு த்ரிச்சை மட்டும் கீரைக்கொல்லைத் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு சிறுவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி  கொலை செய்துள்ளார். 
மேலும் கத்தி மூலம் குழந்தையின் உடல் பாகங்களை கீறியுள்ளார். பின்னர் போர்வையால் குழந்தையை மூடி, லட்சுமிபிரபாவின் தாயார் லட்சுமியிடம் கொண்டு சென்று குழந்தை தூங்குவதாக கூறி கொடுத்துள்ளார். அவரும் அப்படியே வீட்டில் குழந்தையை தூங்க வைத்துள்ளார். 
இதனையடுத்து பதற்றமடைந்த ரோஸ்லின், பாலக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரோஸ்லின் பாக்கியராணியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் விசாரணைகள் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். குமரகுரு,  குற்றம் உறுதியானதை அடுத்து ரோஸ்லின் பாக்கியராணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4000 வீதம் ரூ. 8000 அபராதமும், இதனை கட்டத் தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  இதனையடுத்து ரோஸ்லின் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/16/3வயது-குழந்தையை-கொன்ற-வழக்கில்-இளம்பெண்ணுக்கு--இரட்டை-ஆயுள்-திருச்சி-நீதிமன்றம்-தீர்ப்பு-3096855.html
3096314 திருச்சி திருச்சி குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு DIN DIN Friday, February 15, 2019 09:04 AM +0530 குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு  இளங்குழந்தை பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
திருச்சியில் இக்கூட்டமைப்பின் சார்பில்  2019 மக்களவைத் தேர்தலில் குழந்தைகள் உரிமைக்கான மாநிலப் பிரசாரம் மற்றும் தயாரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில அமைப்பாளர் க. சண்முகவேலாயுதம் பேசியது:
தமிழகத்தில்தான் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 30.47 சதவிகிதமாக உள்ளது. இதுபோல, 1,647 என்ற எண்ணிக்கையில் அதிகளவு குழந்தைகள் காப்பகங்களும் உள்ளன.  
 மேலும், தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் குறைந்து வருகிறது. 54.7 சதவிகித பெண்கள் மட்டுமே பிறந்த ஒரு மணிநேரத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நிலையில் உள்ளனர். 
 6 மாதம் வரை முழுமையாக தாய்ப்பால் வழங்கும் பெண்களின் எண்ணிக்கை 48.3 சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு இணை உணவுடன் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 21.4 சதவிகிதமாகவும்  உள்ளது. 
இதுமட்டுமின்றி பல்வேறு நிலைகளில் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆரம்பக் கல்வி தொடங்கி உடல் ஆரோக்கியம் வரையில் பல்வேறு நிலைகளில் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.
தமிழ்நாடு மாநிலக்  குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2018 மார்ச் வரை 1,437 குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத்  திட்டமிட்டுள்ளோம். தேர்தல் அறிக்கையும் தயாரித்துள்ளோம். 
அறிக்கையில் இடம்பெற்றுள்ள  பிரதான கோரிக்கைகள்:  18 வயது வரை அனைவரும் குழந்தைகள் எனக் கருதி அதற்கேற்ப குழந்தைகளுக்கான சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடி சேவைத் திட்டத்தை சமுதாய பங்கேற்புடன் பலப்படுத்த வேண்டும். 
குறைந்து வரும் பாலின விகிதத்தை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நலவாழ்வை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 
தேசியக்  குழந்தைப் பாதுகாப்பு கொள்கையை ஏற்படுத்தி, குழந்தைகளுக்குத்  தனியே தகவல் தளம் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் அன்றாட நிலை கண்காணிக்கப்பட வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், புதுவையில் உளள 40 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படும். 
வாகனப் பிரசாரம், அரங்கக் கூட்டம், கலை நிகழ்ச்சிகள் என்ற அடிப்படையில் பிரசார யுத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இக் கூட்டத்தில், கூட்டமைப்பின் மத்திய மண்டல அமைப்பாளர் மருதநாயகம், மாவட்ட அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு, அப்துல்நாசர், ஜெகதீசன், சௌந்தரராஜன், ராம. பெருமாள், வேளாங்கண்ணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/15/குழந்தைகள்-உரிமைகளுக்கான-தேர்தல்-அறிக்கை-வெளியீடு-3096314.html
3096313 திருச்சி திருச்சி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் DIN DIN Friday, February 15, 2019 09:04 AM +0530 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ. நல்லசாமி தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் வியாழக்கிழமை சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பருவமழையானது சராசரிக்கும் குறைவாகவே பெய்துள்ளது. 2016-இல் 60 சதம் குறைந்தது. 2017இல் 9 சதம் குறைந்தது. இப்போது (2018), 24 சதம் குறைந்துள்ளது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழக உரிமையைப் பெற வேண்டுமெனில் தினந்தோறும் நீர்ப் பங்கீடு மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். நீதிமன்ற தீர்ப்பு, மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு என எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது, கண்துடைப்பாக அமையும். தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய தண்ணீரை தினந்தோறும் திறந்துவிட்டால் மட்டுமே தமிழகம் பலன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. உற்பத்தி செலவு 40 சதம் அதிகரித்துள்ளதால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு ரூ.35 எனவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.45 எனவும் உயர்த்த வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். மாறாக, இலவசங்கள், கடன் தள்ளுபடி, மானியம், மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகை தேவையில்லை. இதேபோல, விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் தேவையில்லை. இலவசத் திட்டங்கள் அனைத்தும் லஞ்சம், ஊழலுக்கே இடமளிக்கும்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக  தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மாநில அரசு நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
பேட்டியின்போது, மகாதானபுரம் வி. ராஜாராம், கே.சி. ஆறுமுகம், ஹேமநாதன், சீனிவாசன், பஞ்சாபிகேசன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/15/தமிழகத்தை-வறட்சி-மாநிலமாக-அறிவிக்க-வேண்டும்-3096313.html