Dinamani - புதுக்கோட்டை - https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3179597 திருச்சி புதுக்கோட்டை கோ- பழங்குளத்தில் ரூ.21.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் DIN DIN Wednesday, June 26, 2019 09:42 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம் கோ- பழங்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ. 21.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி வழங்கினார்.
முகாமில், வருவாய் துறை, சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் நலத் திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியும் நடத்தப்பட்டது.
வருவாய்த் துறையின் மூலம் 42 பேருக்கு ரூ. 9.75 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும், 21 பேருக்கு ரூ. 2.52 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளும், 8 பேருக்கு தேசிய விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 9 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணைகளும், 15 பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகைக்கான ஆணைகளும், 10 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளும், 21 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளும், 12 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளும், 40 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் சுப்பையா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியர் கிருஷ்ணன், வட்டாட்சியர் சிவகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் புஷ்பகலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/கோ--பழங்குளத்தில்-ரூ2148-லட்சத்தில்-நலத்-திட்ட-உதவிகள்-3179597.html
3179596 திருச்சி புதுக்கோட்டை நெய்வேலி ஐயனார் கோயில் தேரோட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:41 AM +0530 பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி இளங்காவுடைய ஐயனார், விசமுனிக்கருப்பர் கோயில் மற்றம் பரிவார தெய்வங்கள் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம்  நடந்தது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு இளங்காவுடைய ஐயனார், விசமுனிக்கருப்பர் கோயில் மற்றம் பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரின் முன்பு யானை நடந்து செல்ல, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. நெய்வேலி, ஆத்தங்காடு, நாகனிவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/நெய்வேலி-ஐயனார்-கோயில்-தேரோட்டம்-3179596.html
3179595 திருச்சி புதுக்கோட்டை மாரடைப்பால் உயிரிழப்போரின்  எண்ணிக்கை ஆண்டுக்கு 34% அதிகரிப்பு DIN DIN Wednesday, June 26, 2019 09:41 AM +0530 மாரடைப்பு என்ற இதய இயக்க நிறுத்தம் காரணமாக இறப்போரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 34 சதவிகிதம் உயர்ந்து வருவதாக டாக்டர் நரேந்திரநாத் ஜெனா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர பராமரிப்பு தொடர்பான 7ஆவது மாநில மாநாடு மற்றும் தென் இந்தியாவில் முதல் முறையாக செவிலியர் கல்லூரியில் தானியங்கி வெளிப்புற இதயமுடுக்கி இயந்திரம் நிறுவுதல் மற்றும் செயல்முறை விளக்க மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரபல மருத்துவர் நரேந்திரநாத் ஜெனா இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியது:
மாரடைப்பு மற்றும் இதய இயக்க நிறுத்தம் காரணமாக இறக்கும் மக்களின் விகிதம் ஒவ்வோர் ஆண்டும் 34 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. சிலர் தேவையான சிகிச்சை அளிக்கப்படாமலும், சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் இறந்து விடுகின்றனர். உயிர் காக்கும் முதலுதவி மற்றும் தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி மூலம் பல உயிர்களைக் காப்பாற்றலாம். 
இதய இயக்க நிறுத்தம் என்பது எதிர்பாராத விதமாக திடீரென்று இதயத் துடிப்பு நின்று விடுவதாகும்.  இவ்வாறு நடக்கும் பொழுது மூளை மற்றும் இதர முக்கியமான உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். இதனைச் சில மணித்துளிகளுக்குள் கவனிக்காவிடில் இறப்பு நேரிடும். 
தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி என்பது இதயத் துடிப்பை ஆராய்தல் மற்றும் மின் அதிர்ச்சியூட்டும் சிறிய கணினிமயமாக்கப்பட்ட ஒரு சாதனமாகும். மின்முனை திட்டுகளை நோயாளியின் மார்பகத்தில் வைக்கும்போது இக்கருவி நோயாளியின் இதயத் துடிப்பை ஆராயும்.
உயிர் காக்கும் முதலுதவியின் மூலம் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் இக்கருவியைப் பயன்படுத்தினால் 75 சதவிகித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றார் நரேந்திரநாத் ஜெனா.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/மாரடைப்பால்-உயிரிழப்போரின்--எண்ணிக்கை-ஆண்டுக்கு-34-அதிகரிப்பு-3179595.html
3179594 திருச்சி புதுக்கோட்டை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:41 AM +0530 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜீவன்ராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டு உள்ள எல்கேஜி,  யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அதிகார அத்துமீறலைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/ஆரம்பப்-பள்ளி-ஆசிரியர்-கூட்டணியினர்-ஆர்ப்பாட்டம்-3179594.html
3179593 திருச்சி புதுக்கோட்டை மூடப்பட்ட மதுக்கடையை திறக்க மக்கள் எதிர்ப்பு DIN DIN Wednesday, June 26, 2019 09:41 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. இந்நிலையில், மேற்பனைக்காட்டில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ""மேற்பனைக்காட்டில் இயங்கிவந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட அந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/மூடப்பட்ட-மதுக்கடையை-திறக்க-மக்கள்-எதிர்ப்பு-3179593.html
3179592 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி, நாகுடி, கீரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை DIN DIN Wednesday, June 26, 2019 09:40 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, நாகுடி மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 26) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 
அறந்தாங்கி அருகே அழியாநிலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. 
எனவே, அங்கிருந்து மின்விநியோகம் பெறும் அறந்தாங்கி நகர், தொழிற்சாலை, தாந்தாணி, சிலட்டூர், தேனிப்பட்டி, மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை பகுதிகளிலும்,
நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்  வல்லவாரி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், பெருங்காடு, மேல்மங்கலம், நாகுடி, தொண்டைமானேந்தல், அத்தாணி, கட்டுமாவடி, வேட்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கீரமங்கலம்  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், கீரமங்கலம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனம் மற்றும் செரியலூர் ஜெமீன் ஆகிய ஊர்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/அறந்தாங்கி-நாகுடி-கீரமங்கலம்-பகுதிகளில்-இன்று-மின்தடை-3179592.html
3179591 திருச்சி புதுக்கோட்டை செம்பட்டிவிடுதியில் குடிநீர் கோரி சாலை மறியல் DIN DIN Wednesday, June 26, 2019 09:40 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செம்பட்டிவிடுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, சில மாதங்களுக்கு முன் புதிதாக ஆழ்குழாய் கிணறு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர் மாசுகலந்து வருவதால், அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமத்திற்காளாகி வந்துள்ளனர்.
இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் செம்பட்டிவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/செம்பட்டிவிடுதியில்-குடிநீர்-கோரி-சாலை-மறியல்-3179591.html
3179590 திருச்சி புதுக்கோட்டை சமூகப் பொருளாதார ஆய்வுக்கு  பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் DIN DIN Wednesday, June 26, 2019 09:40 AM +0530 புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான "சமூகப் பொருளாதார ஆய்வு-2019' மேற்கொள்ளப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின்படி, தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் நிகழாண்டில் (ஜன. 2019 முதல் டிச. 2019 வரை) சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அறிவியல் முறைப்படி மாதிரி கிராமங்கள் மற்றும் மாதிரி நகர்ப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு, சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் அரசின் திட்டங்களும், கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
விவசாயக் குடும்பங்களின் வசம் உள்ள நில விவரங்களும், கால்நடை விவரங்களும், அக்குடும்பங்களின் சொத்து, வருமானம், கடன் மற்றும் முதலீட்டு விவரங்களும் சேகரிப்பது இந்த ஆய்வின் பிரதான நோக்கம். அவர்களின் விவசாய முறைகள் பற்றியும், நவீன விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் பற்றியும், நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் விழிப்புணர்வு பற்றியும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
ஆய்வு நடைபெறும் இடங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகப் பொருளாதார ஆய்வுக்கு குன்றாண்டார்கோவில் வட்டம் மருதூர், புதுக்கோட்டை வட்டம் இச்சடி, வடவாளம், திருமயம் வட்டம் திருமயம், அரிமளம் வட்டம் சாமந்தான்வயல், கைக்குளான்வயல், அறந்தாங்கி வட்டம் கடவாக்கோட்டை, கீழச்சேரி, அரியமரைக்காடு, கந்தர்வக்கோட்டை வட்டம் ஆத்தங்கரைவிடுதி  ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளும்,  அறந்தாங்கி, கீழமஞ்சக்குடி ஆகிய 2 நகர்புற மாதிரிகளும்  தமிழக அரசுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மேற்படி ஆய்வுக்காக, கள அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் புள்ளி விவரங்கள் சேகரிக்க வரும்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பம் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/சமூகப்-பொருளாதார-ஆய்வுக்கு--பொதுமக்கள்-ஒத்துழைக்க-வேண்டும்-3179590.html
3179589 திருச்சி புதுக்கோட்டை ஜூன் 28இல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு DIN DIN Wednesday, June 26, 2019 09:39 AM +0530 புதுக்கோட்டை மாவ ட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் திறன் பயிலரங்கம் வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியது: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பின்றி உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம், வரும் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.   இத்திறன் பயிலரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் உதவித்தொகையுடன் கூடிய தொழில் திறன் பயிற்சிகள், சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பாகவும், அரசு வழங்கும் சலுகைகள், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் மற்றும் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள தங்களின் அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/ஜூன்-28இல்-திறன்-மேம்பாட்டுப்-பயிலரங்கு-3179589.html
3179588 திருச்சி புதுக்கோட்டை நூறுநாள் வேலை வழங்கக் கோரிக்கை DIN DIN Wednesday, June 26, 2019 09:39 AM +0530 கந்தர்வகோட்டையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.மணி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை வெள்ளமுனியன் கோயில் திடலில் இருந்து ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உறுப்பினர் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும், மாவட்டத்தில்  நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சீர்ப்படுத்தி, நாள்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி முழக்கங்களை எழுப்பினர்.
அறந்தாங்கியில்...: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சுனையக்காடு  ஊராட்சி, ஆண்டவராயர்சமுத்திரம், தாந்தாணி ஊராட்சி,  எரிச்சி, ஆமாஞ்சி, மேற்பனைக்காடு, கொடிவயல், விக்னேஷ்வரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை வழங்கக் கோரி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஆ.செல்லமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதியை சந்தித்து மனு அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/நூறுநாள்-வேலை-வழங்கக்-கோரிக்கை-3179588.html
3179587 திருச்சி புதுக்கோட்டை பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற அழைப்பு DIN DIN Wednesday, June 26, 2019 09:39 AM +0530 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு அரசு சார்பில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கான, முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில்  சமூக நலத் துறையின் மூலம் செயல்படும்,  முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 1997 முதல் 2001 வரை விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தமிழ்நாடு போக்குவரத்து  வளர்ச்சி  நிதி நிறுவனத்தின் மூலம் வைப்பீடு செய்யப்பட்டது. இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், அவ்விரு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.50,000 வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டிருந்தது. தற்போது பயனாளிகள் அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டதால் முதிர்வு தொகையைப்   பெற்றுக்கொள்ளலாம். முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு, வைப்புத் தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல், பயனாளியின் பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் ஆகிய சான்றுகளுடன்  மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/பெண்-குழந்தை-பாதுகாப்புத்-திட்டத்தில்-முதிர்வு-தொகை-பெற-அழைப்பு-3179587.html
3179586 திருச்சி புதுக்கோட்டை பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பரிகார பூஜை DIN DIN Wednesday, June 26, 2019 09:39 AM +0530 கந்தர்வகோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. 
கந்தர்வகோட்டையில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஞ்சள், திரவியம், அரிசிமாவு, தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பால் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பரிகார பூஜைகளும், தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/பைரவருக்கு-அஷ்டமி-சிறப்பு-பரிகார-பூஜை-3179586.html
3179585 திருச்சி புதுக்கோட்டை வேளாண் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 09:38 AM +0530 பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோட்டக்கலைத்துறை இயக்குனர் தினவர்மன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்தை மானியத்தில் அமைப்பது, சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. 
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மணி, கார்த்திக், கன்னியா, விவசாய குழு நிர்வாகிகள் சந்திரன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/வேளாண்-ஆலோசனைக்-கூட்டம்-3179585.html
3179584 திருச்சி புதுக்கோட்டை சோழீஸ்வரர்  கோயிலில் தேய்பறை அஷ்டமி வழிபாடு DIN DIN Wednesday, June 26, 2019 09:38 AM +0530 பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலில் சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதேபோல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில்  திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/சோழீஸ்வரர்--கோயிலில்-தேய்பறை-அஷ்டமி-வழிபாடு-3179584.html
3179583 திருச்சி புதுக்கோட்டை தேசியக் கல்வி கொள்கை நகலை எரித்த 15 பேர் கைது DIN DIN Wednesday, June 26, 2019 09:37 AM +0530 புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் நகலை எரித்த இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே, இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேசியக் கல்விக் கொள்கை வரைவு நகல் அறிக்கையின் பிரதிகளை தீ வைத்து எரித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/26/தேசியக்-கல்வி-கொள்கை-நகலை-எரித்த-15-பேர்-கைது-3179583.html
3178602 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடுதிரை திறப்பு விழா DIN DIN Tuesday, June 25, 2019 08:44 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கின் விபரங்களை தெரிந்துகொள்ளும் தொடுதிரையை, சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக நீதிபதி அமிர்தவேல் பேசியதாவது:  
இந்த தொடுதிரையின் பயன் என்னவென்றால் பொதுமக்கள் தங்களது வழக்கின் நிலை என்ன என்பதை வழக்குரைஞர்களிடம் கேட்கும் நிலையை மாற்றி,  வழக்கின் எண்ணை பதிவு செய்து, பின்னர் வழக்குரைஞரின் பெயரை பதிவு செய்தால், வழக்கின் நிலை, ஒத்திவைப்பு தேதி என அனைத்து விபரங்களையும் தொடுதிரை இயந்திரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில்  வழக்குரைஞர் சங்க தலைவர் கண்ணன், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், ஜான்சி மகாராணி, அரசு வழக்குரைஞர் அ.ராஜசேகர், முன்னாள் செயலாளர் அமர், தெய்வரெத்தினம், மூத்த வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், எஸ். பத்மநாபன், பா. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/அறந்தாங்கி-ஒருங்கிணைந்த-நீதிமன்றத்தில்-தொடுதிரை-திறப்பு-விழா-3178602.html
3178600 திருச்சி புதுக்கோட்டை கேரள அரசிடம் தண்ணீர் பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் DIN DIN Tuesday, June 25, 2019 08:44 AM +0530 கேரள அரசு தர முன்வந்த தண்ணீரைப் பெற்று தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரள மாநில அரசு தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் தண்ணீர் வழங்க முன்வந்தது. ஆனால், அந்த தண்ணீரை தமிழ்நாடுஅரசு ஏற்க மறுத்துள்ளது. 
போதுமான தண்ணீரின்றி பல கணினி நிறுவனங்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே, கேரள அரசிடம் இருந்து தண்ணீரைப் பெற்று தேவையான பகுதிகளுக்கு முறையாக அனுப்பி வைக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/கேரள-அரசிடம்-தண்ணீர்-பெற-மார்க்சிஸ்ட்-வலியுறுத்தல்-3178600.html
3178598 திருச்சி புதுக்கோட்டை சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு DIN DIN Tuesday, June 25, 2019 08:44 AM +0530 புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ. மயில்வாகனன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாணவர்கள் அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார்.
விழாவுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜெ. ஜோனத்தன் தலைமை வகித்தார். கல்வி ஒருங்கிணைப்பாளர் எஸ். குமரேஷ் வரவேற்றார். முதல்வர் பாரதிராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் வரலட்சுமி, கிருபா ஜெயராஜ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/சிறப்பிடம்-பெற்ற-மாணவர்களுக்குப்-பாராட்டு-3178598.html
3178596 திருச்சி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி DIN DIN Tuesday, June 25, 2019 08:43 AM +0530 ஊரை விட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்தினரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துரைராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், துரைராஜ் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. 
கடந்த 4 மாதங்களாக இந்த உத்தரவின் மீது எவ்வித நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட சிலர், துரைராஜின் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த துரைராஜ், அவரது மனைவி சின்னப்பொண்ணு, மகன்கள் பாரதி, ஜெயபாரதி ஆகியோர், தங்களின் உறவினர்கள் 6 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர்.
திடீரென துரைராஜ் குடும்பத்தினர் தாங்கள்கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய அறிவுரைகளை வழங்கி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வருவாய் அலுவலர் விசாரணை: துரைராஜ் குடும்பத்தினருடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தி மனுவைப் பெற்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் காவல்துறையின் சோதனையையும் மீறி எப்படி மண்ணெண்ணெய் எடுத்து வந்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/ஆட்சியர்-அலுவலகத்தில்-4-பேர்-குடும்பத்துடன்-தீக்குளிக்க-முயற்சி-3178596.html
3178592 திருச்சி புதுக்கோட்டை கல்வி மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் DIN DIN Tuesday, June 25, 2019 08:43 AM +0530 கல்வி ஒன்றுதான் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி.
புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு வகுப்புகளுக்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.
செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவலர்கள் டாக்டர் எஸ்.சுப்பையா, எஸ்.சவரிமுத்து,  கே.ரெங்கசாமி, அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சாகித்திய அகாதெமி முன்னாள் உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கவுரையாற்றினார். திருச்சி  மாவட்ட  ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், செல்வந்தர்கள் யாராக இருந்தாலும் முதலில் எல்லோரும் கேட்கும் கேள்வி, பொண்ணு எந்தக் கல்லூரியில் படிக்கிறாள் என்பது தான். 
நீங்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்துவாக இருக்க வேண்டும். மசூதிக்குச் செல்ல வேண்டும் என்றால் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும்.  தேவலாயத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு கல்லூரிக்கு  சென்று படிக்க வேண்டுமானால் மனிதனாக இருந்தால் மட்டுமே போதுமானது.
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் கல்வியின் மிகப்பெரிய பெருமை. மிகப்பெரிய கோடீஸ்வரருக்கு மகளாகப் பிறந்தாலும், பெற்றோர்களிடம் இருந்து சொத்தைப் பெறலாம். ஆனால் கல்வியைப் பெறமுடியாது. படித்துதான் அந்த கல்வி அறிவைப் பெறமுடியும் என்றார் கலியமூர்த்தி. 
முன்னதாக கவிஞர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் எஸ்.கவிதா தொகுத்தளித்தார். முடிவில் துணை முதல்வர் முனைவர் மா.குமுதா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/கல்வி-மட்டுமே-பெண்களுக்கு-பாதுகாப்பளிக்கும்-3178592.html
3178590 திருச்சி புதுக்கோட்டை திமுக உறுப்பினர் அட்டை வழங்கல் DIN DIN Tuesday, June 25, 2019 08:42 AM +0530 புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உறுப்பினர் அட்டை வழங்குதலுக்காக கட்சித் தலைமையில் இருந்து நியமிக்கப்பட்ட பிரதிநிதியான, கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பெரியண்ணன் அரசு, மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோர் உறுப்பினர் அட்டைகளை திமுக உறுப்பினர்களுக்கு வழங்கினர்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதியில் : பொன்னமராவதி தெற்கு ஒன்றிய, நகர திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலர் அ.அடைக்கலமணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நகரச்செயலர் அ.அழகப்பன் வரவேற்றார்.  தென்சென்னை மாவட்ட  துணைச்செயலரும், திமுக உறுப்பினர் அட்டை வழங்கல் பொறுப்பாளருமான விஸ்வநாதன், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி ஆகியோர் திமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி ஆற்றவேண்டிய பணிகளை விளக்கி பேசினர். விழாவில் மாவட்ட துணைச்செயலர் அ.சின்னையா, ஒன்றிய பொருளாளர் மணி அண்ணாத்துரை, பொதுக்குழு உறுப்பினர் க.ச.த.தென்னரசு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/திமுக-உறுப்பினர்-அட்டை-வழங்கல்-3178590.html
3178589 திருச்சி புதுக்கோட்டை மனுநீதிநாள் முகாமை புறக்கணிப்பதாக  23 கிராம மக்கள் அறிவிப்பு DIN DIN Tuesday, June 25, 2019 08:42 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த அம்பலவானேந்தல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியர் மனுநீதி முகாமை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதியை சுற்றியுள்ள 23-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
அம்பலவானேந்தல் கிராமத்தில்  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில்  இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது ஒன்றரை ஆண்டுகாலமாக இயங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அம்பலவானேந்தல், செம்பனாம்பொட்டல், கட்டுக்கரை, கீழக்கரை, சித்தாவனம், பகவானேந்தல், பெருங்களகாடு, ஏம்பக்கோட்டை, சீகனேந்தல் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமை புறக்கணிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: 
அம்பலவானேந்தல் கிராமத்தில் இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.  நவம்பர் 18-ல் எம்.கலைச்செல்வி என்ற செவிலியர் நியமனம் செய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி 28-இல் ராபர்ட் திவான் என்ற மருத்துவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில்  இரு அரசு பணியாளர்களும், தற்காலிக பணி என்ற பெயரில் கோட்டைப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆகவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டி அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர  வலியுறுத்தி மனுநீதிநாள் முகாமை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/மனுநீதிநாள்-முகாமை-புறக்கணிப்பதாக--23-கிராம-மக்கள்-அறிவிப்பு-3178589.html
3178588 திருச்சி புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை DIN DIN Tuesday, June 25, 2019 08:42 AM +0530 கந்தர்வகோட்டை அருகே  அரியாணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, அரியாணிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்  திருவிழா, பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. ஆனி 1-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. 
ஆனி 9-ஆம் தேதியான திங்கள்கிழமை கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திகடனாக கிடாவெட்டி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/ஸ்ரீமுத்துமாரியம்மன்-கோயில்-கிடாவெட்டு-பூஜை-3178588.html
3178587 திருச்சி புதுக்கோட்டை பொன்னமராவதி விசைத்தறிக்கூடத்தை மீண்டும் திறக்க கோரிக்கை DIN DIN Tuesday, June 25, 2019 08:42 AM +0530 பொன்னமராவதியில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் கடந்த 1988-ஆம் ஆண்டில் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்பட்டது. இதை அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இந்த விசைத்தறி கூடத்தில் நூல் மூலம் காடா துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தொடக்கத்தில் நூறு தொழிலாளர்களுக்கும் மேல் பணியாற்றினர். இது இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பிற்கு பேருதவியாக இருந்தது.
தொடர்ந்து காடாதுணிகள் உற்பத்தி செய்யப்பட்டு விசைத்தறிக்கூடம் நல்லமுறையில் இயங்கிவந்தது. ஆனால், நாளடைவில் பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். இதனால் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்தது.
தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலியே விசைத்தறிக்கூடம் மூடப்பட்டது. தற்போது அந்தக் கட்டடம் பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கிறது. இந்த விசைத்தறிக்கூட்டத்தை மேம்படுத்தி மீண்டும் திறந்தால், இந்தப் பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏனாதி ஏஎல்.ராசு கூறியது:
பல குடும்பங்களை வாழவைத்து வந்த இந்த இந்த விசைத்தறிக்கூடம் மூடப்பட்டது வேதனைக்குரியது. நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம். காடா நெசவுடன் துணி,சேலைகள் நெய்து லாபம் ஈட்டியிருக்கலாம்.
பொன்னமராவதி பகுதியில் நூறு தொழிலாளர்கள் வேலை செய்யும் அளவிற்கு தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் ஏதும் இல்லை. எனவே இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பிற்கு ஒரே ஆதாரமாக இருந்த இந்த விசைத்தறிக்கூடத்தை மீண்டும் திறந்து உற்பத்தியை மேம்படுத்தி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/பொன்னமராவதி-விசைத்தறிக்கூடத்தை-மீண்டும்-திறக்க-கோரிக்கை-3178587.html
3178586 திருச்சி புதுக்கோட்டை கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா DIN DIN Tuesday, June 25, 2019 08:41 AM +0530 பொன்னமராவதி அருகே வலையபட்டியில் உள்ள தனியார் பள்ளியில், கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் வே.முருகேசன் தலைமை வகித்து, கவிஞர் கண்ணதாசனின் கவிச்சிறப்புகளை விளக்கி பேசினார். தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளி வளாகத்தில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
பள்ளியின் தமிழ்த்துறையை சார்ந்த மெய்யாள், பாரதி, நளினி அழகம்மாள், இலக்கியா, சுபாஷினி, சிவக்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/கவியரசர்-கண்ணதாசன்-பிறந்தநாள்-விழா-3178586.html
3178585 திருச்சி புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை DIN DIN Tuesday, June 25, 2019 08:41 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கீரமங்கலம் துணைமின்நிலைய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/கீரமங்கலம்-பகுதியில்-நாளை-மின்தடை-3178585.html
3178581 திருச்சி புதுக்கோட்டை ஆசிரியர்கள் குறைக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி முற்றுகை DIN DIN Tuesday, June 25, 2019 08:41 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பள்ளித்திவிடுதி அரசு பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பள்ளத்திவிடுதி அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 88  மாணவர்கள் பயின்றுள்ளனர்; 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். 
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, பள்ளியில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் ஆசிரியர் ஒருவர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்படவுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்ததாம். இதைத்தொடர்ந்து, நிகழாண்டில், அப்பகுதி மக்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்களது குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்த்தனராம். 
அதனால், நிகழாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 93-ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆசிரியர் யாரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனுவையும் பள்ளித்திவிடுதி மக்கள் அளித்தனராம். இந்நிலையில், இப்பள்ளியில் பணிபுரிந்த தமிழரசி என்னும் ஆசிரியை சில தினங்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டார். அதனால், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக்கூறி, திங்கள்கிழமை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் ஜேம்ஸ், நடராஜன் மற்றும் ஆலங்குடி போலீஸார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியரை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/ஆசிரியர்கள்-குறைக்கப்பட்டதைக்-கண்டித்து-பள்ளி-முற்றுகை-3178581.html
3178583 திருச்சி புதுக்கோட்டை இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி இலங்கை தமிழர்கள் மனு DIN DIN Tuesday, June 25, 2019 08:40 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் பகுதியில் உள்ள, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அகதிகள், இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு முகாம் திங்கள்கிழளமை நடைபெற்றது. இதில், தேக்காட்டூர் இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவர் ம. மயில்வாகனம் உள்ளிட்டநிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
கடந்த 1983இல் இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தின்போது படகின் மூலம் உயிர் பிழைக்க குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். அதன்பிறகு இலங்கைக்கு திரும்பிச் சென்ற நிலையில், 1990இல் நடைபெற்ற போரையொட்டி மீண்டும் படகின் மூலம் இங்கு வந்தோம்.
சுமார் 29 ஆண்டுகள் அரசு சார்பில் வழங்கப்பட்ட முகாமில் தங்கியிருக்கிறோம். எங்கு சென்றாலும் மாலை 6 மணிக்குள் நாங்கள் முகாமுக்குள் வந்துவிட வேண்டும். வேறெந்த சலுகையும் எங்களுக்கு கிடையாது. இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கூட வாங்க முடியா து என்பதுதான் எங்களின் நிலை.
எனவே, இங்கேயே பிறந்து வளர்ந்துவிட்ட எங்கள் வாரிசுகளின் எதிர்காலம் கருதி எங்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/25/இந்தியக்-குடியுரிமை-வழங்கக்-கோரி-இலங்கை-தமிழர்கள்-மனு-3178583.html
3177886 திருச்சி புதுக்கோட்டை மழை வேண்டி சிறப்புத் தொழுகை DIN DIN Monday, June 24, 2019 08:40 AM +0530 அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வற்றி கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மழைவேண்டி பல்வேறு மதத்தினர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரில் இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து, பரம்பூர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்து ஊரின் நான்கு மூலைகளிலும் பாங்கு கூறி, நிறைவாக பரம்மகுளக்கறையில் நின்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.உலக மக்கள் தாகம் தீர்க்கவும், விவசாயம் செழிக்கவும் மழை பொழிய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை பரம்பூர் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/மழை-வேண்டி-சிறப்புத்-தொழுகை-3177886.html
3177885 திருச்சி புதுக்கோட்டை சியாம பிரசாத் முகர்ஜி படத்திற்கு பாஜகவினர் அஞ்சலி DIN DIN Monday, June 24, 2019 08:40 AM +0530 பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப் படத்திற்கு விராலிமலை மண்டல பாஜகவினர் மலர் தூவி ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரும், பாஜகவின் புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவருமான ஆர்.கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு விராலிமலை ஒன்றிய தலைவர் ஏ. ராஜ்குமார் தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர்கள் ஆர்.நாச்சியப்பன், முருகேசன், பொருளாளர் வீரச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/சியாம-பிரசாத்-முகர்ஜி-படத்திற்கு-பாஜகவினர்-அஞ்சலி-3177885.html
3177884 திருச்சி புதுக்கோட்டை காரையூரில் திமுக பொதுக்கூட்டம் DIN DIN Monday, June 24, 2019 08:39 AM +0530 பொன்னமராவதி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் காரையூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.முத்து தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் அ.அடைக்கலமணி,  நகர செயலாளர் அ.அழகப்பன், மாவட்ட துணை செயலாளர் அ.சின்னையா, பொதுக்குழு உறுப்பினர் க.ச.த.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணைச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி.செழியன், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.சண்முகம், மற்றும் கை.நாகராஜன், சுப.முரளிதரன், எம்.சிக்கந்தர், திலகவதி முருகேசன், பெரி.பூச்சி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/காரையூரில்-திமுக-பொதுக்கூட்டம்-3177884.html
3177883 திருச்சி புதுக்கோட்டை ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைப்பு DIN DIN Monday, June 24, 2019 08:39 AM +0530 அன்னவாசல் ஒன்றியத்தில் மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் அப்பகுதி குளக்கரையில் பனைவிதைகள் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
அன்னவாசல் அருகேயுள்ள அம்மாச்சத்திரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் குளக்கரைகளில், மக்கள் தேசம் அமைப்பினர் சார்பில் ஒரு மணிநேரத்தில் ஓராயிரம் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் மக்கள் தேசம் அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், தன்னார்வலர்களை வரவேற்று நிகழ்வினை துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். 
தாய் உள்ளம் இளைஞர் மன்ற தலைவர் சரவணக்குமார், பிரபு மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தின் கரையின் இருபுறமும் ஆயிரம் பனைவிதைகளை விதைத்தனர்.
மக்கள் தேசம் அமைப்பின் பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/ஒரு-மணிநேரத்தில்-ஓராயிரம்-பனைவிதைகள்-விதைப்பு-3177883.html
3177882 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி: கட்டணமின்றி உடனடி குடிநீர் இணைப்பு DIN DIN Monday, June 24, 2019 08:39 AM +0530 அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில்  மக்கள் வசிக்கும் அனைத்து கட்டடங்களுக்கும் கட்டணம் வசூலிக்காமல் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் இரா.வினோத் அறிவித்துள்ளார். 
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழக அரசு அண்மையில் எடுத்த கொள்கை முடிவின்படி  நகராட்சி பகுதியில்  உள்ள அனைத்து கட்டடங்களுக்கும் குடிநீர் குழாய்  இணைப்பு எந்தவொரு கட்டணமும் வசூலிக்காமல் உடனடியாக வழங்கப்படும். பின்னர் மேற்படி இணைப்பிற்கான கட்டணம், மேற்பார்வை கட்டணம், வைப்புத் தொகை ஆகியவை கணக்கிடப்பட்டு  மொத்தமாக  அந்தந்த குடிநீர்  குழாய் இணைப்புதாரர்களின்  சொத்துவரி தொகையுடன் 10 சம தவணைகளாக வசூலிக்கப்படும்  என்ற விபரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குடிநீர் குழாய் இணைப்புகள் முற்றிலும் இலவசம் என்று கருதக் கூடாது அல்லது இணைப்பு வழங்கிட தொகை தாருங்கள் என வெளிநபர்கள் யாரேனும்  கோரினால் கொடுக்க வேண்டாம். மேலும் இணைப்பு கோரும் கட்டடத்தின்  உரிமையாளர்கள், சொத்துவரி ரசீது நகலுடன் வந்து நகராட்சி அலுவலகத்தில்  விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு  பெற்றுக் கொள்ளலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/அறந்தாங்கி-கட்டணமின்றி-உடனடி-குடிநீர்-இணைப்பு-3177882.html
3177881 திருச்சி புதுக்கோட்டை மரத்தில் பைக் மோதி இளைஞர் சாவு DIN DIN Monday, June 24, 2019 08:38 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகேயுள்ள  சேந்தாக்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம் (28). இவர், மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரகுராஜ் (25), நடராஜன் மகன் முத்துராமன் (25) ஆகியோரை ஏற்றிக் கொண்டு வல்லத்திராகோட்டை சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். 
அவர்கள் வள்ளிக்காடு பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில், ஆறுமுகம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரகுராஜ், முத்துராமன் ஆகியோர் மீட்கப்பட்டு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/மரத்தில்-பைக்-மோதி-இளைஞர்-சாவு-3177881.html
3177880 திருச்சி புதுக்கோட்டை இ-அடங்கல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி DIN DIN Monday, June 24, 2019 08:38 AM +0530 விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு இ-அடங்கல் பெறுவது தொடர்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
முகாமிற்கு வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்தியகோபால் தலைமை வகித்தார். ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் கூறியதாவது: 
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இ-அடங்கல் முறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது . இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 
விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் விரைந்து சென்றடைய பயனுள்ள வகையில் இ-அடங்கல் முறை அமைந்துள்ளது . விவசாய நிலங்களின் அடங்கல்கள் வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்,  தற்போது நிலத்தினுடைய அடங்கல் முழுமையாக கணினி மயமாக்கப்படுகிறது. 
இதனால் விவசாய நிலங்களுக்கு அடங்கல் வழங்குவதில் காலதாமதமின்றி, தவறுகள் ஏற்படாமல் வழங்குவதுடன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் விபரம் உள்ளிட்ட பல்வேறு முழுமையான தகவல்களும் தமிழக அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/இ-அடங்கல்-பெறுவது-குறித்து-விவசாயிகளுக்கு-பயிற்சி-3177880.html
3177879 திருச்சி புதுக்கோட்டை வேர் மண்டல நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் DIN DIN Monday, June 24, 2019 08:36 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், வல்லாத்திராகோட்டை தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலை பணிகள் குறித்த ஆய்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார்.  
ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து கலந்துகொண்டனர். ஆய்வு தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழக அரசு பசுமை புரட்சிக்காக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் என்ற நோக்கில் நவீன முறைகளை பயன்படுத்தி அதிக மகசூலினை அடையும் உத்திகளை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. 
அந்த வகையில், வல்லத்திராகோட்டையில் உள்ள வேளாண் பண்ணையை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு, கடந்த ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரை பயன்படுத்தி அதிக பலனை பெறும் நோக்கில், வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளையும் பார்வையிட்டார். 
மேலும் சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையை பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் மகசூல் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்றார். 
ஆய்வின் போது கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுப்பையா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/வேர்-மண்டல-நீர்ப்-பாசன-முறையை-பயன்படுத்தி-அதிக-மகசூல்-பெறலாம்-3177879.html
3177878 திருச்சி புதுக்கோட்டை ஆலங்குடியில் நள்ளிரவில் வைக்கப்பட்ட அம்மன் சிலை! DIN DIN Monday, June 24, 2019 08:36 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காந்தி பூங்கா அருகே சனிக்கிழமை இரவு சுமார் 3 அடி அம்மன் சிலையை மர்ம நபர்கள் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலங்குடி சந்தைப் பேட்டை பகுதியில் உள்ள காந்தி பூங்கா அருகே சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 3 அடி அம்மன் சிலை ஒன்றை வைத்து சிலர் படையல் வைத்து பூஜை செய்துள்ளனர். அந்த சிலையை அந்த நபர்கள் அங்கேயே வைத்து விட்டு சென்று விட்டனர். 
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதிக்கு தேநீர் அருந்த சென்றவர்கள் படையலுடன் இருந்த சாமி சிலையை கண்டவுடன், அதுதொடர்பான தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். அதில், சிலர் சாமி சிலைக்கு மாலை அணிவித்து வழிபடத் தொடங்கினர். 
 தகவலறிந்து அங்கு சென்ற வருவாய்த்துறையினர், ஆலங்குடி போலீஸார், சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சிலையை யார் வைத்தது, எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/ஆலங்குடியில்-நள்ளிரவில்-வைக்கப்பட்ட-அம்மன்-சிலை-3177878.html
3177877 திருச்சி புதுக்கோட்டை புதுக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம் DIN DIN Monday, June 24, 2019 08:36 AM +0530 புதுக்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
தமிழரின் பராம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க போராடிய மாணவ, மாணவிகள், பொதுமக்களை கெளரவிக்கும் வகையில் மாட்டுவண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை டி.வி.எஸ் முக்கத்தில் இருந்து பந்தயத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரிய மாட்டுவண்டி பிரிவு, நடு மாட்டுவண்டி பிரிவு, சிறிய மாட்டுவண்டி பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. புதுகை - மதுரை சாலையில் பெரிய மாட்டுவண்டிகளுக்கு 8 மைல் தூரமும், நடு மாட்டுவண்டிகளுக்கு 6 மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 5 மைல் தூரமும் பந்தய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 
பெரிய மாட்டுவண்டி பிரிவில் 12 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் பரளி செல்வி மாட்டுவண்டி முதல் இடத்தையும், அறந்தாங்கி தினேஷ்கார்த்திக் மாட்டுவண்டி 2-வது இடத்தையும், மதுரை பாண்டிவயல் பாண்டியராஜ் மாட்டுவண்டி 3-வது இடத்தையும், ஆட்டுக்குளம் அழகர்மலை மாட்டுவண்டி 4-வது இடத்தையும் பிடித்தன. 
நடு மாட்டுவண்டி பிரிவில் 18 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெட்டிவயல் சுந்தரேசன் மாட்டுவண்டி முதல் இடத்தையும், பூக்கொல்லை ரீத்தீஸ்வரன் 2-வது இடத்தையும், வேங்குளம் கண்ணன் 3-வது இடத்தையும், கயத்தாறு ராணுமாமலை மாட்டுவண்டி 4-வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் சிறிய மாட்டுவண்டி பிரிவிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/புதுக்கோட்டையில்-மாட்டுவண்டி-பந்தயம்-3177877.html
3177876 திருச்சி புதுக்கோட்டை மழை வேண்டி சிறப்புத் தொழுகை DIN DIN Monday, June 24, 2019 08:35 AM +0530 அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வற்றி கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மழைவேண்டி பல்வேறு மதத்தினர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரில் இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து, பரம்பூர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்து ஊரின் நான்கு மூலைகளிலும் பாங்கு கூறி, நிறைவாக பரம்மகுளக்கறையில் நின்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.உலக மக்கள் தாகம் தீர்க்கவும், விவசாயம் செழிக்கவும் மழை பொழிய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை பரம்பூர் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/மழை-வேண்டி-சிறப்புத்-தொழுகை-3177876.html
3177875 திருச்சி புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கிழக்கு கடற்கரை சாலையில் மனிதச்சங்கிலி DIN DIN Monday, June 24, 2019 08:35 AM +0530 ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்; டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட  கடற்கரை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
"பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்' சார்பில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை சுமார் 596 கி.மீ தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.  இந்தப் போராட்டத்துக்கு  திமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டிணம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
கட்டுமாவடியில்  நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்தார்.திமுக சொத்துப்பாதுகாப்புகுழு தலைவர் அறந்தாங்கி இராசன், புதுகை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைபித்தன், அறந்தாங்கி நகர செயலாளர் இரா.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள்அறந்தாங்கி பொன்.கணேசன், மணமேல்குடிசக்தி இராமசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றிய செயலாளர்கள் அறந்தாங்கி தென்றல் கருப்பையா, மணமேல்குடி நெருப்பு முருகேஷ், மணமேல்குடி வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதேபோன்று விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். 
மீமிசலில்...: மீமிசலில் நடைபெற்ற போராட்டத்தில் அறந்தாங்கி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக செயலாளருமான உதயம் சண்முகம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்.துரை, சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் சி.இராமநாதன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் திரளானோர் கலந்துகொண்டனர். 
அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி தலைமையில் கந்தர்வகோட்டை காந்தி சிலையிலிருந்து, பெரியகடைவீதி திருப்பம்வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நிலம், நீர், காற்று, கடல் வளங்களை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/ஹைட்ரோ-கார்பன்-திட்டத்துக்கு-எதிர்ப்பு-கிழக்கு-கடற்கரை-சாலையில்-மனிதச்சங்கிலி-3177875.html
3177874 திருச்சி புதுக்கோட்டை தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை DIN DIN Monday, June 24, 2019 08:35 AM +0530 ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பங்களிப்புடன் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 1-ம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் அரசாங்க பங்களிப்புடன் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/தொழிலாளர்களுக்கு-காப்பீடு-திட்டத்தை-செயல்படுத்த-கோரிக்கை-3177874.html
3177873 திருச்சி புதுக்கோட்டை வெண்ணாவல்குடி கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி DIN DIN Monday, June 24, 2019 08:34 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றியது.
வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கத்தில், அரசியல் தலையீடு காரணமாக உரிய காலத்தில் தேர்தலை முறையாக நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. 
11 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக,  அதிமுக,  அமமுக என மூன்று குழுக்கள் மற்றும் சுயேட்சைகள் என  36  பேர் போட்டியிட்டனர்.இதில்,  திமுக கூட்டணியில் பேட்டியிட்ட இரா.மாலதி,  க.பரிமளா,  வெ.கருப்பையா,  கோ.செல்வக்குமார்,  மு.பூபதி,  ரா.செல்லத்தம்பி,  ச.தெட்சிணாமூர்த்தி,  ம.ராஜபாண்டியன்,  சி.ரவிச்சந்திரன்,  கோ.சிவசங்கரன் ஆகிய  10  பேரும்,  அதிமுக கூட்டணியில் வெ.சந்திராவும் வெற்றிபெற்றனர். 
வரும்  26-ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/வெண்ணாவல்குடி-கூட்டுறவு-சங்கத்-தேர்தலில்-திமுக-கூட்டணி-வெற்றி-3177873.html
3177872 திருச்சி புதுக்கோட்டை அழிந்து வரும் முந்திரி காடுகள்: காப்பாற்றுமா அரசு? DIN DIN Monday, June 24, 2019 08:34 AM +0530 கந்தர்வகோட்டை பகுதியில் அழிந்துவரும் முந்திரி காடுகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான முந்திரி காடுகள் உள்ளன. இந்த பகுதியில் விளையும் முந்திரிகொட்டை ருசியானதாக இருக்கும் என்பதால் வெளிமாநில வியாபாரிகள், முந்திரி சீசனில் இந்த பகுதி வியாபாரிகளிடம் முன்பணம் கொடுத்து நல்ல விலைக்கு முந்திரிகொட்டை மூட்டைகளை டன் கணக்கில் லாரியில் வாங்கிச் செல்வர். 
பணப்பயிரான முந்திரியில் பராமரிப்பு, உரம் என எந்தவொரு செலவும் இல்லை என்பதும், வறட்சியை தாங்கி வளரும் என்பதால் தண்ணீர் பாய்ச்சுவதும் குறைவு என்பதும் சிறப்பம்சமாகும். 
ஆண்டுக்கு ஒரு முறை கிளைகளை வெட்டி, மரத்தை சுற்றி பத்தைகளை அகற்றி டிராக்டரால் தோப்பு முழுவதும் உழுது விடுவதால் மழை காலங்களில் பெய்யும் மழையே போதுமானதாக இருக்கும்.  சமீப காலமாக மழை பெய்யாததால் மரங்கள் பட்டும், கஜா புயலால் பெரும் வாரியான மரங்கள் முறிந்து, வேருடன் சாய்ந்தும் அழிந்தன. 
மேலும் நிகழாண்டில் கடும் வறட்சியினால் பூக்கள் கருகி விளைச்சல் குறைந்தும், கொட்டை எடுக்க கூலி அதிகம் கேட்பதாலும், விவசாயிகள் குறுகிய கால விவசாயமான நெல், சோளம், உளுந்து, கடலை என மாற்று பயிர் செய்வதற்கு முந்திரி காடுகளை அழித்து வருகின்றனர். 
கஜாபுயலில் சேதமடைந்த முந்திரி மரங்களுக்கு எந்தவொரு நிவாரணமும் தரப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அழிந்த முந்திரி விறகுகளை குறைந்த விலைக்கு கேட்பதால் வெட்டுக்கூலி, ஏற்றி செல்லும் லாரி வாடகைக்கே பற்றாக்குறை ஏற்படும் நிலையில், பெரும்பாலன முந்திரி மரங்கள் அகற்றபடாமல் பட்டுபோய் தோப்பிலேயே கிடக்கின்றன. முந்திரி மரங்களை அகற்றவும், முந்திரி விறகுக்கு நியாயமான விலை கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதுடன், புதிய முந்திரி கன்றுகளை நடவு செய்திட தரமான முந்திரி கன்றுகளை வழங்கி  முந்திரி விவசாயத்தினை காத்திட அரசு முன்வருமா என காத்திருக்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/24/அழிந்து-வரும்-முந்திரி-காடுகள்-காப்பாற்றுமா-அரசு-3177872.html
3177416 திருச்சி புதுக்கோட்டை அரசுப் பள்ளிகளுக்கு  கல்வித் தொலைக்காட்சிக்கான செட்ஆப் பாக்ஸ் வழங்கல் DIN DIN Sunday, June 23, 2019 04:20 AM +0530
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கான டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி சனிக்கிழமை வழங்கினார்.
பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது: 
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலை மாண்புமிகு தமிழக முதல்வர் விரைவில் துவக்கி வைக்க உள்ளார். இக்கல்வித் தொலைக்காட்சியில் 38 வகையான நிகழ்ச்சிகள் தொடர்ந்து 24 நேரமும் ஒளிபரப்பப்படவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக கல்வித் தொலைக்காட்சி சேனலை காணும் வகையில் 218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் திரையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் இக்கல்வித் தொலைக்காட்சியினை கண்டுகளித்து சிறந்த முறையில் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் பி.உமாமகேஸ்வரி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/அரசுப்-பள்ளிகளுக்கு--கல்வித்-தொலைக்காட்சிக்கான-செட்ஆப்-பாக்ஸ்-வழங்கல்-3177416.html
3177415 திருச்சி புதுக்கோட்டை புதுக்கோட்டையில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் DIN DIN Sunday, June 23, 2019 04:20 AM +0530
புதுக்கோட்டை நகரிலுள்ள கடைவீதிகளில் அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய சோதனையில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 1.5 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில், வட்டாட்சியர் பரணி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளர் ராஜராஜேஸ்வரி, கிராம நிர்வாக  அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். தெற்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் சுமார் 1.5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ரூ. 1000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/புதுக்கோட்டையில்-15-டன்-பிளாஸ்டிக்-பொருள்கள்-பறிமுதல்-3177415.html
3177414 திருச்சி புதுக்கோட்டை ரசாயனம் கலந்த பச்சைப்பட்டாணி பறிமுதல் DIN DIN Sunday, June 23, 2019 04:19 AM +0530
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வாரச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த பச்சைப்பட்டாணி சுமார் 30 கிலோ அளவில் பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அளித்தனர். 
பொன்னமராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பேரூராட்சி துப்புறவு மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளனவா என சோதனை மேற்கொண்டனர். 
சோதனையின்போது சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ எடையுள்ள பச்சைப்பட்டாணியை ஆய்வு செய்ததில் அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன கலர் பொடி கலந்துள்ளது தெரியவந்தது. 
உடனடியாக பச்சைப்பட்டாணியை பறிமுதல் செய்து, குழி தோண்டி புதைத்து அழித்தனர். தொடர்ந்து இதுபோன்று விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. 
அதுபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்துவோர் மீது கூடுதல் அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட் தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/ரசாயனம்-கலந்த-பச்சைப்பட்டாணி-பறிமுதல்-3177414.html
3177413 திருச்சி புதுக்கோட்டை குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, June 23, 2019 04:19 AM +0530
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை  தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருக்களம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் அ.அடைக்கலமணி தலைமை வகித்தார். நகரச்செயலர் அ.அழகப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில்  நிலவும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தமிழக அரசு தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் முழக்கமிட்டனர்.
அதுபோல காரையூர் பகுதியை உள்ளடக்கிய பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் சடையம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் அ.முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக  நிர்வாகிகள் காலிக்குடங்களுடன் முழக்கமிட்டனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலங்குடி சுற்றுவட்டாரத்தில்...: ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவரங்குளத்தில் சிவ.வீ.மெய்யநாதன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசை கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச்செயலர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கறம்பக்குடி, மழையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி சுற்றுவட்டாரத்தில்..: அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான நாகுடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்.துரை தலைமையில், நகரச் செயலாளர் இரா. ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கைராசி புருசோத்தமன், வி.சி.செல்வம், பழ.மாரியப்பன், வின்சென்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகுடியில் தெற்கு ஒன்றியச்செயலாளர் பொன். கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர், காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
கந்தர்வகோட்டையில்...: கந்தர்வகோட்டையில் தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக சார்பில், இரண்டு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையத்தில், ஒன்றிய செயலாளர் தலைமையிலும், வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எம். தமிழய்யா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/குடிநீர்ப்-பிரச்னையை-தீர்க்கக்-கோரி-திமுக-ஆர்ப்பாட்டம்-3177413.html
3177412 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி DIN DIN Sunday, June 23, 2019 04:19 AM +0530
 அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 10 பேரும், சுயேட்சை ஒருவரும் என மொத்தம் 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தன்ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த காரணத்தால் தேர்தலை ரத்து செய்த நீதிமன்றம், மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது .
இதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 10 ஆயிரத்தி 92 வாக்காளர்களில் 2,430 வாக்காளர்களே வாக்களித்தனர். 11 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு 55 பேர் போட்டியிட்டனர்.
சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டபோது, சென்ற தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் ஆதி.மோகனகுமார் 733 வாக்குகளும், சென்ற முறை இயக்குநர்களாக 
இருந்த எஸ்.பார்த்திபன் 558 வாக்குகளும், அ.கலாராணி 922 வாக்குகளும் பெற்று மீண்டும் தேர்வு பெற்றனர்.
அதே போல் அதிமுகவை சேர்ந்த என்.இராஜம்மாள் 755 வாக்குகளும், வி.ரேகா 754 வாக்குகளும், ஆதிதிராவிடர் பிரிவில் எம்.மாலதி 754 வாக்குகளும், எஸ்.வசந்தா 686 வாக்குகளும், பொதுப்பிரிவில்  ஆர்.வெங்கடேஸ்வரன் 559 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
பாஜகவின் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் லெ.முரளிதரன் 740 வாக்குகளும், தமிழ்மாநில காங்கிரஸ் நகர தலைவர் சண்.கார்த்திகேயன் 755 வாக்குகளும் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். 
முன்னாள் நகர வங்கி இயக்குநர் எஸ்.இராசு சுயேட்சையாக போட்டியிட்டு  499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/அறந்தாங்கி-நகர-கூட்டுறவு-வங்கி-தேர்தலில்-அதிமுக-கூட்டணி-வெற்றி-3177412.html
3177411 திருச்சி புதுக்கோட்டை மழை வேண்டி பிரகதம்பாள் கோயிலில் யாகம் DIN DIN Sunday, June 23, 2019 04:18 AM +0530
புதுக்கோ ட்டை திருக்கோகர்ணத்திலுள்ள அருள்மிகு பிரகதம்பாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் மற்றும் வருண பர்ஜனய் சாந்தி யாகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா. சின்னதம்பி, ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பழனியாண்டி, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/மழை-வேண்டி-பிரகதம்பாள்-கோயிலில்-யாகம்-3177411.html
3177410 திருச்சி புதுக்கோட்டை தேசிய கல்விக் கொள்கை ஏழை மாணவர்களைப் பாதிக்கும் DIN DIN Sunday, June 23, 2019 04:18 AM +0530
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதிக்கும் என்றார்  எழுத்தாளர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து சனிக்கிழமை நடத்திய கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றோ, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்றோ சொல்ல முடியாது. பல நேரங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நடத்தும் நிறுவனங்களில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் ஊதியத்துக்கு வேலை செய்யும் நிலை உள்ளது. மெக்காலே கல்வி முறை, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையைத் தரவில்லை. 
மெக்காலே கல்வியைவிட பல மடங்கு மோசமான கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை முன்வைக்கிறது.
 மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு தொடங்குவது பெரிய தவறு. இப்படி பொதுத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஏழை மாணவர்கள் மற்றும் பெண்கள் பெருமளவுக்கு மேல்படிப்புக்கு செல்ல முடியாமல் இடைநிற்றல் ஏற்படும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நூறு பேரில் 75 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டுகின்றனர். 
இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகம் கல்வியில் பெரிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஹிந்தி மட்டுமே தாய்மொழி அல்ல. 
போகி, மைதிலி போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் பல லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் வீட்டில் தாய் மொழியையும், பள்ளியில் வேற்று மொழியையும் கற்பதால் கற்கும் திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது  என்றார் முத்துநிலவன். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/தேசிய-கல்விக்-கொள்கை-ஏழை-மாணவர்களைப்-பாதிக்கும்-3177410.html
3177409 திருச்சி புதுக்கோட்டை ஆலங்குடியில் நாளை மின்தடை DIN DIN Sunday, June 23, 2019 04:18 AM +0530
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, பாப்பான்விடுதி, களபம், ஆலங்காடு, அரையப்பட்டி, கொத்தகோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூர், மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, கே.ராசியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணி முதல் மாலை  5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/ஆலங்குடியில்-நாளை-மின்தடை-3177409.html
3177408 திருச்சி புதுக்கோட்டை 24 மணி நேர மின்தடை புகார் மையம் தொடக்கம் DIN DIN Sunday, June 23, 2019 04:18 AM +0530
புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர மின்தடை புகார் சேவை மையத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
மின் நுகர்வோரின் மின்தடை குறித்த புகார்களை உடனுக்குடன் சரி செய்ய ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1912 அல்லது 18004254912 மற்றும்  04322 223452 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் (பொது) மயில்வாகணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/24-மணி-நேர-மின்தடை-புகார்-மையம்-தொடக்கம்-3177408.html
3177407 திருச்சி புதுக்கோட்டை கிள்ளனூரில் மக்கள் தொடர்பு முகாம் DIN DIN Sunday, June 23, 2019 04:18 AM +0530
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளனூர் கிராமத்தில், வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. 
அனைத்துத் துறை அலுவலர்களும் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளதால், கிள்ளனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/கிள்ளனூரில்-மக்கள்-தொடர்பு-முகாம்-3177407.html
3177406 திருச்சி புதுக்கோட்டை கல்வியின் மூலமே பெண்கள் முன்னேற முடியும் DIN DIN Sunday, June 23, 2019 04:17 AM +0530
கல்வி கற்பதன் மூலமாகத்தான் பெண்கள் முன்னேற்றம் காணமுடியும் என்றார் சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், கவிஞருமான தங்கம் மூர்த்தி.
அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரத்தில் உள்ள நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மாணவிகள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடனே விட்டுவிடவேண்டும். தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். தேர்வுகளில் தோல்வியடைந்தால் தைரியத்துடன் அடுத்த தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். 
மாணவிகள் புத்தகங்களை வாசிக்கும் நேரத்தை விட செல்லிடப்பேசிகளை பார்க்கும் நேரம்தான் தற்போது அதிகமாக உள்ளது. நல்ல புத்தகங்களை, நாட்டுக்கு உழைத்த பெண்களின் வரலாறுகளை படித்தால்  வாழ்கையில் எந்த காலகட்டத்திலும் நமக்கு நம்பிக்கை ஏற்படும். 
நாம் கற்ற கல்விதான் எப்போதும் நமக்கு துணையாக வரும். ஆகவே மாணவிகள் நல்ல கல்வியுடன், நமது வாழ்க்கைக்கு தேவையான உயர்கல்வியையும் கற்று வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக, கல்லூரியின் நிறுவனரும் தாளாளருமான நை.முகம்மது பாரூக் தலைமை வகித்தார். கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.நைனாமுகம்மது, என்.எஸ்.நைனாமுகமது, கே.நைனாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், கணினி அறிவியல் துறைத் தலைவர் எஸ்.ஈஸ்வரி நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/கல்வியின்-மூலமே-பெண்கள்-முன்னேற-முடியும்-3177406.html
3177405 திருச்சி புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அம்மா காப்பீட்டு வார்டு தொடக்கம் DIN DIN Sunday, June 23, 2019 04:17 AM +0530
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட அம்மா காப்பீட்டுத் திட்ட வார்டு சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் இந்த வார்டை திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: 30 படுக்கை வசதியுடன் ரூ. 20 லட்சம் செலவில் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும் நோயாளியுடன், பார்வையாளர்கள் வந்து அமரும் வகையில் மடக்கும் வகையிலான நாற்காலிகள், வாசிப்பதற்கு நாளிதழ்கள், எல்இடி டிவிக்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் விஜயபாஸ்கர்.
நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/மேம்படுத்தப்பட்ட-அம்மா-காப்பீட்டு-வார்டு-தொடக்கம்-3177405.html
3177403 திருச்சி புதுக்கோட்டை ஜூன் 26-இல் சமையல் எரிவாயு வாடிக்கையாளர் குறைகேட்பு DIN DIN Sunday, June 23, 2019 04:16 AM +0530
புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு நுகர்வோர் குறைகேட்புக் கூட் டம், வரும் 26ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்க்கும் வகையில் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் வரும் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், எரிவாயு உருளை (சிலிண்டர்) நிரப்புவது, பதிவு செய்வது ஆகியவற்றில் உள்ள சிரமங்கள், காலதாமதங்கள் உள்ளிட்ட குறைபாடுகளைத் தெரிவிக்கலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/ஜூன்-26-இல்-சமையல்-எரிவாயு-வாடிக்கையாளர்-குறைகேட்பு-3177403.html
3177382 திருச்சி புதுக்கோட்டை மருத்துவக் காப்பீட்டு  திட்டத்தில்  ரூ.5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது DIN DIN Sunday, June 23, 2019 04:10 AM +0530
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், சனிக்கிழமை அளித்த பேட்டி: முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 2,200 கோடிக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தொகை பெறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் பெறப்படவில்லை. பெரும் சவாலான ஒன்றாக உள்ளது. நிபா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடாமல் இருக்க கேரள எல்லைகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிகாரில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தமிழகத்துக்கு பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், அது தொற்றுநோய் அல்ல. இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் மூளைக்காய்ச்சலுக்கு அனைத்து மருத்துவமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/மருத்துவக்-காப்பீட்டு--திட்டத்தில்--ரூ5900-கோடி-செலவிடப்பட்டுள்ளது-3177382.html
3176987 திருச்சி புதுக்கோட்டை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது DIN DIN Sunday, June 23, 2019 12:35 AM +0530
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: 
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 2,200 கோடிக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தொகை பெறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் பெறப்படவில்லை. பெரும் சவாலான ஒன்றாக உள்ளது.
நிபா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடாமல் இருக்க கேரள எல்லைகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 பிகாரில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தமிழகத்துக்கு பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், அது தொற்றுநோய் அல்ல. இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் மூளைக்காய்ச்சலுக்கு அனைத்து மருத்துவமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/23/மருத்துவக்-காப்பீட்டுத்-திட்டத்தில்-ரூ5900-கோடி-செலவிடப்பட்டுள்ளது-3176987.html
3176754 திருச்சி புதுக்கோட்டை கந்தர்வகோட்டை: புதிய துணை மின்நிலையங்கள் தொடக்கம் DIN DIN Saturday, June 22, 2019 09:06 AM +0530 கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய துணை மின்நிலையங்களை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், குளத்தூர்நாயக்கர்பட்டியில் ரூ.3.5 கோடி மதிப்பில் 32 கி.வ. திறனுடைய மின்நிலையத்தினையும், இதேபோல் 8000 கி.வ. மின்நிலையத்தினை வெள்ளாளவிடுதி ஊராட்சியிலும், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ப.ஆறுமுகம் துவக்கி வைத்தார். இந்த இரு துணை மின்நிலையங்களில் இருந்து விவசாயத்திற்கு 1,993 மின் இணைப்புகளும், வீடுகளுக்கு 3,740 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்பொறியாளர் அசோக்குமார், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/கந்தர்வகோட்டை-புதிய-துணை-மின்நிலையங்கள்-தொடக்கம்-3176754.html
3176753 திருச்சி புதுக்கோட்டை களைகட்டிய யோகா தின நிகழ்ச்சிகள் DIN DIN Saturday, June 22, 2019 09:06 AM +0530 உலக யோகா தினத்தையொட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச .செல்வராஜ் கலந்து கொண்டு பேசும்போது, உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் வலுப்பெறச் செய்யும் வல்லமை கொண்டது யோகா எனக் கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 100 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று, யோகா பயிற்சிகளைச் செய்தனர். 
முன்னதாக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் யோகா ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இம்மையத்தில் யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
அரசுப் பள்ளியில் ஓவியப் போட்டி: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உடல், மனம், உயிர் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் யோகா என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம், ஆம்ஸ் அறக்கட்டளை, சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இந்த ஓவியப் போட்டியை நடத்தின. ஓவியர்கள் ஐயப்பா, ராஜப்பா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜெஜெ கல்லூரியில்...: ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். கல்லூரியின் உடற்கல்வித் துறைத்தலைவர் கே. ஜெகதீஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் சி. ஹரிராம்ஜோதி, தமிழ்த் துறைத் தலைவர் கு. தயாநிதி ஆகியோர் பல்வேறு ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி குறித்து விளக்கிப் பேசினர்.
எல்ஐசியில் மருத்துவ முகாம்: புதுக்கோட்டை ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) கிளை அலுவலகம் மற்றும் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் உலக யோகா தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/களைகட்டிய-யோகா-தின-நிகழ்ச்சிகள்-3176753.html
3176752 திருச்சி புதுக்கோட்டை தேவையான அளவுக்கு விதைகள், உரங்கள் இருப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல் DIN DIN Saturday, June 22, 2019 09:05 AM +0530 விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தின் சராசரி மழையளவு- 805.6 மிமீ. மே மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு- 114 மிமீ. ஆனால், நிகழாண்டில் மே வரை பெய்த சராசரி மழையளவு வெறும் 7.35 மிமீ மட்டுமே. மே மாதத்தில் மட்டுமே பெய்ய வேண்டிய சராசரி மழையளவு- 57.7 மிமீ. ஆனால் கடந்த மே மாதத்தில் பெய்த மழை வெறும் 0.40 மிமீ மட்டுமே.
2018-19ஆம்  ஆண்டில் 827 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லும், 120 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 111 ஹெக்டேர் பரப்பளவில் பயறு வகைகளும், 301 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்துக்களும், 20 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பும், 10,164 ஹெக்டேர் பரப்பளவில் தென்னையும், 62 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனையும் பயிரிடப்பட்டுள்ளன. 
மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 52.093 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 15.532 மெட்ரிக் டன் பயறு விதைகளும், 9.866 மெட்ரிக் டன் நிலக்கடலை விதைகளும், 1.73 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள்
தேவைக்கேற்ப வாங்கிப் பயன்பெறலாம். 
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மாவட்டம் முழுவதும் 3764 மெட்ரிக் டன் யூரியாவும், 1369 மெட்ரிக் டன் டிஏபியும், 1418 மெட்ரிக் டன் பொட்டாஷும், 1765 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் உமாமகேஸ்வரி.
கூட்டத்தின்போது, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் மூலம் 6 விவசாயிகளுக்கு மானிய விலையில் நகரும் காய், கனி விற்பனை வண்டிகள் ரூ. 1.80 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. 

விவசாயிகளின் கோரிக்கைகள்...
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் விவரம்:
ஜி.எஸ். தனபதி: கஜா பாதிப்பின் நிவாரணங்கள் இன்னும் சரிவர வழங்கப்படவில்லை. 6 ஆயிரம் பாசனக் குளங்களில் மராமத்து பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை  மேற்கொள்ள வேண்டும்.
தங்க.கண்ணன்: நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி 100 கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் நிலை என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்.
பி.எஸ். சோமையா: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்தான் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நீர்ஆதாரத்தை வழங்கும். எனவே இதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/தேவையான-அளவுக்கு-விதைகள்-உரங்கள்-இருப்பு-மாவட்ட-ஆட்சியர்-தகவல்-3176752.html
3176751 திருச்சி புதுக்கோட்டை மனைவியை கட்டையால்  தாக்கிய கணவர் கைது DIN DIN Saturday, June 22, 2019 09:05 AM +0530 அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலையைச் சேர்ந்தவர் கோபி (54). முன்னாள் மின்சார வாரிய அலுவலர். இவர் குடுமியான்மலையில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார். 
கோபியின் மனைவி ரத்தினம், அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். மணிகண்டன் சென்னையில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் தாயும், மகனும் சென்னையில் இருந்து குடுமியான்மலைக்கு வந்துள்ளனர். அப்போது கோபிக்கும், அவரது மனைவி ரத்தினத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபி ரத்தினத்தை உருட்டு கட்டையால் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/மனைவியை-கட்டையால்--தாக்கிய-கணவர்-கைது-3176751.html
3176750 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி தேர்தல் நிறைவு DIN DIN Saturday, June 22, 2019 09:05 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு, தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி நகர வங்கிக்கு சிலமாதங்களுக்கு முன்னர்  நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. தலைவராக ஆதி.மோகன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் பதவியேற்றனர். இதில் அதிமுகவை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்பட்டு, தேர்தல் முறையாக நடைபெறாமல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஏ.ஜி.ஆர்.எம். தன்ராஜ் என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்து மீண்டும் நடத்த உத்தரவு பிறப்பித்தது.
நிர்வாகக் குழுவில், பொதுப்பிரிவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள், 3 மகளிர்கள், 2 ஆதிதிராவிடர் உள்ளிட்ட 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 55 பேர் வேட்புமனு தாககல் செய்து போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட வாக்களார் பட்டியலில் 10 ஆயிரத்தி 92 பேர், வாக்காளர்களாக இடம்பெற்றிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் திருமண மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/அறந்தாங்கி-நகர-கூட்டுறவு-வங்கி-தேர்தல்-நிறைவு-3176750.html
3176749 திருச்சி புதுக்கோட்டை மீட்கப்பட்ட சிவலிங்கத்தை வைத்து சிறப்பு வழிபாடு DIN DIN Saturday, June 22, 2019 09:04 AM +0530 அறந்தாங்கி - ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில்  உள்ள செட்டிவயல் பாக்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது சிதிலமடைந்து காணப்படும்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு அறந்தாங்கியைச் சேர்ந்த சிவனடியார்கள் கடந்த மாதம்  பரிகார பூஜைகளை நடத்தி, திருப்பணி நடைபெற்று வருகிறது.
கோயிலில் திருப்பணி வேலைகளின் போது கிடைத்த சிவலிங்கத்தை கிராம பொதுமக்களும், சிவனடியார்களும் சிறப்பு பூஜைகள் செய்து தற்போது வழிபாடு நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/மீட்கப்பட்ட-சிவலிங்கத்தை-வைத்து-சிறப்பு-வழிபாடு-3176749.html
3176748 திருச்சி புதுக்கோட்டை குடிநீர் கோரி சாலை மறியல் DIN DIN Saturday, June 22, 2019 09:04 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மழையூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 மழையூர் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மழையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மழையூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகச்செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/குடிநீர்-கோரி-சாலை-மறியல்-3176748.html
3176747 திருச்சி புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்   DIN DIN Saturday, June 22, 2019 09:04 AM +0530 ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வெள்ளிக்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணைனையை எதிர்த்தும், புதியதாக தேர்வாணையம் மூலமாக கிராம நிர்வாக அலுவலர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 
இதில் கந்தர்வகோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-ஆர்ப்பாட்டம்-3176747.html
3176746 திருச்சி புதுக்கோட்டை சர்வதேச யோகா தினம்  DIN DIN Saturday, June 22, 2019 09:03 AM +0530 அரசு மருத்துவமனைகளில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக யோகா தின விழாவுக்கு தலைமை வகித்து, மருத்துவர் மு.பெரியசாமி பேசியது:
யோகா என்பது மனது, எண்ணம், செயல் ஆகியவற்றை சீர்படுத்தவும், உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீகத்தை வளர்க்கவும் உதவிடும் கலை ஆகும். யோகா செய்வதன் மூலம் உடலின் உள்உறுப்புகளை சீராக இயங்க வைக்க முடியும். இதன் மூலம் அதிக ரத்த அழுத்தம், சிறு சிறுநீரக கல், தூக்கமின்மை, மூட்டுவலி, கழுத்துவலி, நுரையீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
யோகா குறித்த ஆலோசனைகள், அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.  விழாவில், மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
அன்னவாசல் வட்டாரத்தில்...: அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற சென்ற நோயாளிகளுக்கு யோகா பயிற்சியளித்தார் சித்த மருத்துவ அலுவலர் சுயமரியாதை. 
இதுகுறித்து அவர் பேசுகையில், ""யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் ஆரோக்யம், மகிழ்ச்சி, அமைதி கிடைப்பதால் உலகத்தில் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா செய்வதால் உடல் உறுப்புகள் வலுப்பெறும்.நோய்கள் வராமல் தடுக்கும்,வந்த நோய்களை குணமாக்கும். இயற்கையோடு வாழ வழிவகுக்கும். மனம் அமைதி புத்துணர்ச்சி பெறும். யோகா செய்யும்போது இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்'' என்றார்.


பொன்னமராவதியில்....
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு யோகா பயிற்சியளித்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ரோசுலெட் பூங்குன்றன் பேசியதாவது:  
உடல் வளர்த்தேன், உடல் வளர்த்தனே என்றார் திருமூலர். அத்தகைய உடலினை பேணும் வழிமுறைகளில் யோகா மிகவும் இன்றியமையாததாகும். யோகா கலையின் தந்தையாக பதஞ்சலி முனிவர் போற்றப்படுகிறார். அத்தனை கலைகளுக்கும் தாயாக விளங்குகிறது யோகக்கலை. யோகா பயின்றால் உடல் வளத்தையும், மன நலத்தையும் பெருக்க முடியும். மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் பெருகும். மேலும் நல்ல பண்பாட்டினையும், நல்ல நடத்தையும் நமக்கு அளிக்கிறது. நமது உடலில் நோயில்லாமல் வாழ தேவையான  ரத்தம், மூச்சுக்காற்று, சூடு ஆகியவை சீராக அமைய யோகா பயன்படுகிறது என்றார்.


ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...
அறந்தாங்கி அருகே வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோகாசனம் செய்யும் மாணவ மாணவிகள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி பகுதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் யோகா நிகழச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்றுநர் இராமநாதன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர். வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் யோகாசனப் பயிற்றுநர் மனோகரன், கிராம கல்விக் குழுத்தலைவர் ரவி, பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சி, நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/22/சர்வதேச-யோகா-தினம்-3176746.html
3175923 திருச்சி புதுக்கோட்டை ரத்ததானத்தில் சிறந்த  கல்லூரிக்கான விருது DIN DIN Friday, June 21, 2019 08:40 AM +0530 புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்ததானத்தில் சிறந்த கல்லூரிக்கான விருது மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற குருதிக் கொடையாளர் தின விழாவில் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் இந்த விருதுக்கான சான்றிதழை வழங்க, கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ஓ.டி. ஜான் பெற்றுக் கொண்டார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/ரத்ததானத்தில்-சிறந்த--கல்லூரிக்கான-விருது-3175923.html
3175922 திருச்சி புதுக்கோட்டை ஊற்று நீரை தேடி அலையும் கிராம மக்கள் DIN DIN Friday, June 21, 2019 08:40 AM +0530 அன்னவாசல் அருகே குடிநீருக்காக பல மைல் தூரம் கடந்து சென்று நீர்ஊற்றில் கிடைக்கும் குறைந்த அளவு நீரை குடங்களில் நிரப்பி எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள கடம்பராயன்பட்டியில் உள்ளது கண்ணியாகுளம். இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வற்றி நிலத்தடி நீர் மட்டம் குறைந்த நிலையில், அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும்  கண்ணியாகுளத்தில் உள்ள நீர் ஊற்று மட்டும் நீரை உற்பத்தி செய்து அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது.  
கோடைகாலத்திலும் நீர் உற்பத்தியை நிறுத்தாமல் செய்து வரும் இந்த நீர் ஊற்றை பராமரிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் ஊற்று பகுதியைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பி குடிநீர் அதிகளவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/ஊற்று-நீரை-தேடி-அலையும்-கிராம-மக்கள்-3175922.html
3175921 திருச்சி புதுக்கோட்டை பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் மகளிர் சுகாதார வளாகங்கள் DIN DIN Friday, June 21, 2019 08:40 AM +0530 கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் உள்ள ஏழை பெண்கள் மற்றும் வளர் இளம்பெண்கள் நாள்தோறும் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், குளிப்பதற்கும் என ஒவ்வொரு கிராமத்திலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கழிப்பறை, குளியல் அறை , துணி துவைப்பதற்கு சலவை கல், பெரிய தண்ணீர் தொட்டி, தண்ணீர் வசதிக்கு ஆழ்குழாய் கிணறு, சுகாதார வளாகம் முன்பாக சோலார் விளக்கு என பல்வேறு அடிப்படை வசதிகளை கொண்ட மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. 
நாளடைவில் இந்த மகளிர் சுகாதார வளாகங்களை பராமரிக்காமல், இதில் இருந்த ஆழ்குழாய் மோட்டார்கள் பழுதடைந்துவிட்டன. தண்ணீர் குழாய் , கழிவறை அமைப்புகள் உடைந்துள்ளன. வளாகம் முழுவதும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து பயனற்று உள்ளது. இந்நிலையில் கிராமங்களில் உள்ள குளங்களில் நீரின்றி வறண்டு, பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படும் சூழ்நிலையில், ஆழ்குழாய் கிணறுடன் இருக்கும் இந்த மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/பராமரிப்பின்றி-பூட்டிக்-கிடக்கும்-மகளிர்-சுகாதார-வளாகங்கள்-3175921.html
3175920 திருச்சி புதுக்கோட்டை யோகா பயிற்சி முகாம் தொடக்கம் DIN DIN Friday, June 21, 2019 08:39 AM +0530 புதுக்கோட்டை புதுக்குளம் நடைப்பயிற்சியாளர் சங்கம், ஆனந்த யோகா பவுண்டேசன், சிட்டி ரோட்டரி சங்கம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
நடைப்பயிற்சியாளர் சங்கத் தலைவர் க. நைனாமுகமது தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் எஸ். பார்த்திபன், ஓய்வுபெற்ற நீதிபதி அ. பிச்சை, ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். அழகப்பன், செயலர் பி. அசோகன், 
வர்த்தகர் சங்கப் பொருளாளர் எஸ். கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட யோகா சங்கத் தலைவர் அ.லெ. சொக்கலிங்கம், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
ஆனந்த யோகா பவுண்டேசன் எஸ். செல்வராஜ் பயிற்சி அளித்தார். தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை புதுக்குளத்தில் யோகா பயிற்சி நடைபெறும்.
நிறைவில் நடைப்பயிற்சி சங்கச் செயலர் கே.என். செல்வரத்தினம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/யோகா-பயிற்சி-முகாம்-தொடக்கம்-3175920.html
3175919 திருச்சி புதுக்கோட்டை கோட்டை விநாயகருக்கு  சிறப்பு அபிஷேகம் DIN DIN Friday, June 21, 2019 08:39 AM +0530 அறந்தாங்கி கோட்டை  வெண்ணாவல்குளம் மேல்கரை அருள்மிகு சக்தி விநாயகருக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சங்கடகர சதூர்த்தியை முன்னிட்டு மாலை சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. வெண்ணாவல்குளம் மேல்கரை விநாயகர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/கோட்டை-விநாயகருக்கு--சிறப்பு-அபிஷேகம்-3175919.html
3175918 திருச்சி புதுக்கோட்டை செட்டிக்காடு அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா DIN DIN Friday, June 21, 2019 08:39 AM +0530 அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சியை சேர்ந்த செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை துவக்க விழாவும், பள்ளியின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.
செட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1989-ம் ஆண்டு துவக்கப்பட்டது. பள்ளி துவக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவுபெற்று 30-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் லீமாரோஷ்லின்ட் தலைமையில் பள்ளி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கிராமத்தில் ஊர்வலமாக சென்று புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கையை ஊக்கப்படுத்தியதன் விளைவாக இந்த ஆண்டு 70 புதிய மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக இப் பள்ளியில்  ஸ்மார்ட்  வகுப்புகள், ஆங்கில வழிக் கல்வி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமையப் பெற்றுள்ளன. இப் பள்ளியில் இந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பாக புரெஜக்டர், உணவுக் கூடம், மாடர்ன் சீரூடை மற்றும்  வகுப்பு நடத்த பயன்படும் ஒலிபெருக்கி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/செட்டிக்காடு-அரசுப்-பள்ளியில்-மாணவர்-சேர்க்கை-திருவிழா-3175918.html
3175917 திருச்சி புதுக்கோட்டை 100 சதவிகித மானியத்தில் ரூ. 10 கோடியில் 1000 பண்ணைக் குட்டைகள்: ஆட்சியர் DIN DIN Friday, June 21, 2019 08:39 AM +0530 புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 100 சதவிகித மானியத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் 1000 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படவுள்ளது என்றும், ஆர்வமுள்ள விவசாயிகள்  வேளாண் பொறியியல் துறையின் உதவிச் செயற்பொறியாளர்களை அணுகி பயன் பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தைச் சேர்ந்த வல்லத்திராக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் கூறியது:
தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகியவற்றை நல்ல முறையில் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகளின் நிலத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 184 பண்ணைக் குட்டைகள் வெட்டப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தற்போது நிகழாண்டில் 824 பண்ணைக் குட்டைகள் வெட்ட ரூ. 8.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறையின் இந்த முயற்சியில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நிகழாண்டில் 1,000 பண்ணைக் குட்டைகளை வெட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பண்ணைக் குட்டைகள் 100 சதவிகிதம் மானியத்தில் வெட்டப்படுகின்றன.
ஆர்வமுள்ள விவசாயிகள் திருக்கோகர்ணம் மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளர்களை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, உதவிச் செயற்பொறியாளர்களை 94432 64168, 94421 78763 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் உமாமகேஸ்வரி.
இந்த ஆய்வின்போது, வேளாண் துறையின் இணை இயக்குநர் சுப்பையா, செயற்பொறியாளர் செல்வம், தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் அருணாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், உதவிப் பொறியாளர் வேலுசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/100-சதவிகித-மானியத்தில்-ரூ-10-கோடியில்-1000-பண்ணைக்-குட்டைகள்-ஆட்சியர்-3175917.html
3175916 திருச்சி புதுக்கோட்டை இளைஞர்களின் முயற்சியால் தூர்வாரப்படும் நீர்நிலைகள் DIN DIN Friday, June 21, 2019 08:38 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளைத் தொடர்ந்து, வடகாட்டிலும் தங்களது சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு நீர் எடுக்க ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்தும் கொத்தமங்கலம், கீரமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் நீரில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில், கொத்தமங்கலத்தில் அரசு சார்பில் குடிநீருக்காக சுமார் 1000 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் நீரில்லாமல் போனது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், கீரமங்கலம் பகுதி இளைஞர்கள், அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடிவு செய்து, தங்களது சொந்த செலவில் குளங்கள், அனைக்கட்டுகள், வரத்துவாரிகள் உள்ளிட்டவற்றை தூர்வாரினர். தொடர்ந்து, கொத்தமங்கலத்திலும் இளைஞர்கள் இணைந்து நீர்நிலைகளை தூர்வாரி வருகின்றனர்.
 இந்நிலையில், வடகாடு பகுதி இளைஞர்களும் தங்களது சொந்த செலவில் குளங்கள், வாரிகளை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர். அதில், முதல்கட்டமாக வடகாடு ஊராட்சி தெற்குப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் குளத்தை தூர்வாரும் பணியை இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து வடகாடு பகுதி இளைஞர்கள் கூறியது:
அம்புலி ஆற்றில் தண்ணீர் சென்ற காலங்களில் கிணற்றில் தண்ணீர் கிடைத்தது. அதை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்றது. அதன்பிறகு மழை குறைந்தது. அதனால், கிணறுகளில் நீரில்லாமல் போனது. பின்னர், ஆழ்குழாய் கிணறு அமைத்தோம். தற்போது ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. அதனால், இப்பகுதியில் உள்ள குளங்கள், வாய்க்கால்களை தூர்வாரி, நீர்நிலைகளைகளையும், அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு பருவமழை பெய்தால் இப்பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீரை தேக்கி பாதுகாப்போம். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளது என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/இளைஞர்களின்-முயற்சியால்-தூர்வாரப்படும்-நீர்நிலைகள்-3175916.html
3175915 திருச்சி புதுக்கோட்டை அருங்காட்சியகத்துக்கு மாணவர்களின் களப்பயணம் DIN DIN Friday, June 21, 2019 08:38 AM +0530 புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 3ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 100 பேர் வியாழக்கிழமை அரசு அருங்காட்சியகத்துக்கு களப்பயணமாகச் சென்று திரும்பினர்.
அப்போது, அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் டி. பக்கிரிசாமி மாணவ, மாணவிகளை வரவேற்று, புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து விளக்கியதுடன், மாவட்டத்தில் குழந்தைகள் நேரில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் குறித்த கையேடுகளையும் வழங்கினார்.
அருங்காட்சியகத்திலுள்ள அரிய கல்வெட்டுகள், கல் மற்றும் உலோகச் சிற்பங்கள், விலங்குகளின் மாதிரிகள், செப்பேடுகள், நாணயங்கள் உள்ளிட்ட ஏராளமானவற்றை மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, ஆசிரியர்கள் மலர்விழி, ராதா, புவனேஸ்வரி, வித்யா, சித்ரா தேவி, வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/அருங்காட்சியகத்துக்கு-மாணவர்களின்-களப்பயணம்-3175915.html
3175914 திருச்சி புதுக்கோட்டை பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில் சேர சிறப்பு முகாம்கள் DIN DIN Friday, June 21, 2019 08:38 AM +0530 பாரதப் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 
பிரதம மந்திரியின் விவசாயிகள் திருத்திய கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் இதுவரையில் சேராதவர்களும் அல்லது முறையான பட்டா மாற்றம் இல்லாமல் இருந்து விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்களுக்கும்  தற்போது வாரத்தில் 3 நாட்கள்  சிறப்பு  முகாம்கள் நடைபெற உள்ளது.
இதில் பல விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்வதில்தான் பிரச்னை உள்ளது. உதாரணமாக, விவசாயிகள் நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில்  வாரிசு அடிப்படையில்  பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும் 
இதற்காக வரும் பிரதி  திங்கள்கிழமை அந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி  முதல் நண்பகல் 1 மணி வரை ஆவணங்களை வழங்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை  வழங்கலாம். அதிலும் விடுபட்டவர்கள் பிரதி புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை  நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாரிசு அடிப்படையில்  பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளித்து மேற்படி திட்டத்தின் கீழ்  பயன்பெறலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/பிரதமரின்-விவசாய-நிதியுதவி-திட்டத்தில்-சேர-சிறப்பு-முகாம்கள்-3175914.html
3175913 திருச்சி புதுக்கோட்டை அரண்மனை விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா DIN DIN Friday, June 21, 2019 08:37 AM +0530 புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அரண்மனை விநாயகர் ராஜ கணபதி, ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமிகள் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி கடந்த 18ஆம் தேதி காலை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால யாகபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புதன்கிழமை காலை 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வியாழக்கிழமை காலை 4ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோயிலைச் சுற்றி எடுத்து வந்தனர். 
பின்னர் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அரண்மனை விநாயகர் ராஜகணபதி, ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/அரண்மனை-விநாயகர்-கோயில்-கும்பாபிஷேக-விழா-3175913.html
3175912 திருச்சி புதுக்கோட்டை மாரடைப்பால்  மீனவர் உயிரிழப்பு DIN DIN Friday, June 21, 2019 08:37 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் கடற்கரையிலிருந்து புதன்கிழமை 150 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த  முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் செல்வராஜ்(60), செந்தில்(36), அருண்(33), முத்தையா(60) உள்ளிட்ட நான்குபேரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது செல்வராஜூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து மற்ற மீனவர்கள் அவரை இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை பெறச் செய்தனர். பின்னர் இராமநாதபுரம் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் புதன்கிழமை இரவு இறந்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/மாரடைப்பால்--மீனவர்-உயிரிழப்பு-3175912.html
3175911 திருச்சி புதுக்கோட்டை தென்னங்குடியில் இளையோர்  நாடாளுமன்றம் DIN DIN Friday, June 21, 2019 08:36 AM +0530 புதுக்கோட்டை  மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் குன்றாண்டார் கோவில் ஒன்றியம், தென்னங்குடி கிராமத்தில் வட்டார அளவிலான இளையோர் நாடாளுமன்றம் மற்றும் யோகா பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மு.கெளரி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் அருள் மற்றும் ஆசிரியை ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ்.ஜெயமணி, சமூக சேவகர்கள்  சுப்புராமன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியை ஆத்மா யோகா மைய நிறுவனர் பாண்டியன் நடத்தினார். முன்னதாக தென்னங்குடி கலாம் நற்பணி மன்றத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் ப. ரஞ்சித் நன்றி கூறினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/21/தென்னங்குடியில்-இளையோர்--நாடாளுமன்றம்-3175911.html
3175314 திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியில் மது அருந்தும் கூடங்களில் எலிக்கறி விற்கப்படவில்லை: உணவு பாதுகாப்பு அலுவலர் DIN DIN Thursday, June 20, 2019 09:10 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் எந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களிலும் எலிக்கறி விற்பனை செய்யப்படவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு.
அறந்தாங்கி அருகே ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுரேஷ் என்பவர் செவ்வாய்க்கிழமை கட்செவி அஞ்சல் விடியோ பதிவு சிலவற்றை வெளியிட்டார். அதில், அறந்தாங்கியைச் சேர்ந்த, நரிக்குறவர் முருகன், கிட்டி மூலம் பிடிக்கும் எலிகளை அறந்தாங்கி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் விற்பனை செய்வதாகவும் அங்குள்ளவர்கள் அவற்றை  முயல் கறி என விற்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு ஆதாரமாக இறந்த எலிகளை காயவைக்கும் காட்சிகளை பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆர். ரமேஷ் பாபு தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். இதில், நரிக்குறவர் முருகன், தனது தோட்டத்து எலிகளைப் பிடித்துத்தர வராததால் அவரைப் பழிவாங்கும் விதமாக இந்தச் செயலில் ஈடுபட்டதாக சுரேஷ் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டிருப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/அறந்தாங்கி-பகுதியில்-மது-அருந்தும்-கூடங்களில்-எலிக்கறி-விற்கப்படவில்லை-உணவு-பாதுகாப்பு-அலுவலர்-3175314.html
3175313 திருச்சி புதுக்கோட்டை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்  கேள்விக்குறியாகும் நகைகளின் பாதுகாப்பு DIN DIN Thursday, June 20, 2019 09:10 AM +0530 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பாதுகாப்பானவை என்ற பொதுமக்களின் நம்பிக்கை மெல்லக் கரைந்து வரும்  சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புப் பெட்டக வசதி மற்றும் அடகு வைக்கப்படும் நகைகள் அண்மைக்காலமாக திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 
புதுக்கோட்டையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையொன்றில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு 13.75 கிலோ தங்க நகைகள் திருடுபோயின. அதுதொடர்பாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியர் காணாமல் போய், இறந்த பின்னர் சடலமாகத் தான் மீட்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காமல் போலீஸார் தவித்து வருகின்றனர். அதே வங்கியின் திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள கிளையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புப் பெட்டகம் (லாக்கர்) உடைக்கப்பட்டு சுமார் 500 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 
இதுபோல, மாநிலம் முழுவதும் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைத் திருட்டு- கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதும் கவனிக்கத்தக்கது. 
மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது கண்காணிப்பு கேமராக்களின் விடியோ பதிவுகள். புதுக்கோட்டை மற்றும் திருச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் "சிசிடிவி- ஹார்டு டிஸ்க்'கை எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது அச்சம்தரும் தகவல்!
பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த நிலையை சரி செய்வது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் சி.ஹெச். வெங்கடாசலத்திடம் கேட்டபோது அவர் கூறியது:
இயல்பாக வங்கியில் பணியாளர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது, கடைநிலை ஊழியர்கள் (உதவியாளர்) கூடுதலாக பாதுகாப்புப் பெட்டகங்களை கையாளும் நிலை உருவாகிவிடுகிறது. ஆதலால் நம்பிக்கையின் பேரில் வங்கி அதிகாரிகள் எல்லா சாவிகளையும் உதவியாளரிடம் கொடுக்கிறார்கள். 
அதேபோலத்தான் "நகை மதிப்பீட்டாளர்'களும் (அப்ரைசர்கள்) "கமிஷன்' அடிப்படையிலான பணியாளர்கள் தான்.  கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில் கூட வங்கிக் கிளைகளில் "காவலர்' என்ற ஒரு பணியிடமே இல்லை. இதனால் "சிசிடிவி'யையே முழுமையாக நம்பி விட்டோம். காவலாளிகள் இல்லாத பாதுகாப்பைத் தான் இப்போதைய வங்கிக் கிளைகள் பெற்றிருக்கின்றன என்பதெல்லாம்  நல்லவேளையாக பொதுமக்களுக்குத் தெரியாது.
எனவே, அனைத்து வங்கிக் கிளைகளிலும் "நகை மதிப்பீட்டாளர்', "காவலர்' பணியிடங்களை உருவாக்கி, முறையான வங்கி ஊழியர்களாக நியமிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
வங்கிக் கிளைகளை முழுமையாக காப்பீடு செய்யவுள்ளோம் என வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள நகைகளை காப்பீடு செய்ய இயலாது. இதற்கான சட்ட நுட்பங்களை ஆய்ந்து பாதுகாப்பளிக்க வேண்டும். "செலவுக் குறைப்பு' என்ற பெயரில் பணியாளர் நியமித்தலை நிறுத்தி வைத்திருத்தல் தொடர்ந்தால் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம் என்பதுதான் உண்மை. 
அதேபோல, கூடுதலான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் தற்போது வந்துவிட்டன. சாதாரண அடகு கடைகளில் கூட அலாரம் வசதி இருக்கிறது. அவற்றை வங்கிக் கிளைகளில்  பொருத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை, அவற்றின் பதிவுகளை குற்றவாளிகள் எடுக்காத வகையில் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றார் வெங்கடாசலம்.


சிறப்புப் பிரிவு விசாரணை தேவை
புதுக்கோட்டை வங்கிக் கிளையில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் வழக்கமான மாநில காவல் துறை புலன்விசாரணையில் தடுமாறி வருவதால், "சிபிசிஐடி' அல்லது "சிபிஐ' விசாரணைக்கு மாற்றுவதுதான் குற்றவாளிகளைக் கைது செய்து நகைகளை மீட்பதிலும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் உதவி செய்யும் என சமூக ஆர்வலர்கள் கருத்தை  முன்வைக்கின்றனர் அல்லது வங்கிக் குற்றங்களைக் கவனிக்க மாநில அரசே கூட தனிப் பிரிவு ஒன்றையும் ஏற்படுத்தி விசாரணையை முடுக்கிவிடச் செய்யலாம் என்கிறார்கள்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/தேசியமயமாக்கப்பட்ட-வங்கிகளில்--கேள்விக்குறியாகும்-நகைகளின்-பாதுகாப்பு-3175313.html
3175267 திருச்சி புதுக்கோட்டை கட்டுமாவடியில் வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது DIN DIN Thursday, June 20, 2019 08:58 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை மணமேல்குடி காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர். 
கட்டுமாவடி  கடைவீதியில்  கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த  நாகராஜ், முகம்மது யாசின் உள்ளிட்ட இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/கட்டுமாவடியில்-வெளிமாநில-லாட்டரி-விற்ற-2-பேர்-கைது-3175267.html
3175266 திருச்சி புதுக்கோட்டை பொன்னமராவதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் DIN DIN Thursday, June 20, 2019 08:58 AM +0530 பொன்னமராவதி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் அரசின் தடையை மீறி பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் பேரூராட்சி பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், பொன்னமராவதி செயல் அலுவலர் வ.சுலைமான் சேட் தலைமையில் பொன்னமராவதி அண்ணா சாலை, நாட்டுக்கல், புதுப்பட்டி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களில் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தடையை மீறி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. மேலும் வணிக நிறுவனங்கள், வீடுகள் தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்க்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் கூடுதல் அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வ.சுலைமான் சேட் தெரிவித்தார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/பொன்னமராவதியில்-பிளாஸ்டிக்-பொருள்கள்-பறிமுதல்-3175266.html
3175265 திருச்சி புதுக்கோட்டை நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க அறிவுறுத்தல் DIN DIN Thursday, June 20, 2019 08:58 AM +0530 விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகேயுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீஃப் கொள்முதல் பருவம் 2018 - 19ஐ முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன்பெறும் வகையிலும், விலை வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து காக்கும் வகையிலும்,  விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக ஏற்கெனவே 15 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது கறம்பக்குடி வட்டத்தில் காட்டாத்தி, மணமேடை கிராமங்கள் மற்றும் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் வெள்ளாளவிடுதி கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை தங்கள் கிராமங்களுக்கு அருகேயுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை  செய்து பயன் பெறலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/நேரடி-கொள்முதல்-நிலையங்களில்-நெல்லை-விற்க-அறிவுறுத்தல்-3175265.html
3175264 திருச்சி புதுக்கோட்டை அன்னவாசலில் இளையோர் நாடாளுமன்றம் DIN DIN Thursday, June 20, 2019 08:57 AM +0530 புதுக்கோட்டை மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் சார்பில் அன்னவாசல் வட்டார அளவிலான இளையோர் நாடாளுமன்றம் மற்றும் யோகா பயிற்சி நிகழ்ச்சி இலுப்பூர் ஆர்.சி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். நேரு இளையோர் மைய கணக்காளர் ஆர். நமசிவாயம் நோக்கவுரை நிகழ்த்தினார். இதில், 100 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். யோகா பயிற்றுநர் பரமகுரு யோகா பயிற்சிகளை செய்துகாட்டினார்.  சமூக  ஆர்வலர் சின்னதம்பி வாழ்த்திப் பேசினார். முன்னதாக விளாப்பட்டி தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். முடிவில் மன்றச் செயலர் சி. தங்கவேல் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/அன்னவாசலில்-இளையோர்-நாடாளுமன்றம்-3175264.html
3175263 திருச்சி புதுக்கோட்டை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை கருத்தரங்கம் DIN DIN Thursday, June 20, 2019 08:57 AM +0530 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். 
அப்போது அவர் மேலும் கூறியது: 
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை என்பது அறுவைச் சிகிச்சை நிபுணர், மயக்கவியல் மருத்துவர், கல்லீரல் நோய் நிபுணர், ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர், தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், செவிலியர்கள் என மொத்தம் 35 பேரைக் கொண்டு நடத்தப்படும் அறுவைச் சிகிச்சையாகும். 12 முதல் 18 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார் மீனாட்சிசுந்தரம்.
டாக்டர் ரேலா நிறுவனத்தின் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் ஜோதிமணி பேசியது: 
தொற்றுநோய் உள்ளவர்கள் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. தற்போதைய நிலையில் காத்திருப்போரின் பட்டியல் நீளமாக உள்ளதால், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். 
        தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் முத்து, தலைமை மருத்துவ நிபுணர் பாபு ஆனந்த், துணை இயக்குநர் டாக்டர் மலர்விழி, துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/கல்லீரல்-மாற்று-அறுவைச்-சிகிச்சை-கருத்தரங்கம்-3175263.html
3175262 திருச்சி புதுக்கோட்டை தைலமரங்களை அகற்ற கந்தர்வகோட்டை விவசாயிகள் கோரிக்கை DIN DIN Thursday, June 20, 2019 08:57 AM +0530 கந்தர்வகோட்டை பகுதியில் தைல மரக்காடுகளை அழித்திடவும், அவைகளை நடுவதற்கு தடை விதிக்கவும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேலாடிப்பட்டி, நெப்புகை, மங்கனூர், கோமாபுரம், மட்டாங்கால், கணபதிபுரம், காட்டுநாவல், பகட்டுவான்பட்டி, நடுப்பட்டி, பழையகந்தர்வகோட்டை, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் (யூக்லிப்டஸ்) தைலமரங்களை தனியார் பண்ணை முதலாளிகள் உள்ளிட்ட விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த தைலமரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போவதாகவும், இதனால் மற்ற பயிர்களின் வளர்ச்சி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது. கந்தர்வகோட்டை பகுதிகளில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இந்த தைலமரக் காடுகள் இருப்பதால் வறட்சியான நிலை காணப்படுவதாகவும், காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் இப்பகுதியில் தொடர் மழை பெய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும்  விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள அரசு காடுகளில் பெருமளவு தைலமரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை தடுத்திடவும், பயன்தரும் மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/தைலமரங்களை-அகற்ற-கந்தர்வகோட்டை-விவசாயிகள்-கோரிக்கை-3175262.html
3175261 திருச்சி புதுக்கோட்டை ராகுல் பிறந்தநாள்: காங்கிரஸார் இனிப்பு வழங்கல் DIN DIN Thursday, June 20, 2019 08:57 AM +0530 பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் சார்பில் திருக்களம்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி வட்டாரத் தலைவர் கே. செல்வராஜன்  தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் வைத்தியநாதன், தேனூர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கிரிதரன், சரவணபவன் மணி, மாவட்ட பொதுச்செயலர் அடைக்கலம், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுப்பையா மற்றும் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முருகேசன் (வடக்கு), தர்ம தங்கவேல் (தெற்கு) மற்றும் இப்ராஹிம் பாபு (நகரம்) உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 
முன்னதாக அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/ராகுல்-பிறந்தநாள்-காங்கிரஸார்-இனிப்பு-வழங்கல்-3175261.html
3175260 திருச்சி புதுக்கோட்டை அனுமதியின்றி மது விற்றவர் கைது DIN DIN Thursday, June 20, 2019 08:56 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அனுமதியின்றி மது விற்றவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
அன்னவாசல் அருகேயுள்ள பணங்குடி மலையடி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் அன்னவாசல் காவல் துணைஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (49) மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/அனுமதியின்றி-மது-விற்றவர்-கைது-3175260.html
3175259 திருச்சி புதுக்கோட்டை குடிநீரை சிக்கனமாக  பயன்படுத்துங்கள்: நகராட்சி ஆணையர் DIN DIN Thursday, June 20, 2019 08:56 AM +0530 அறந்தாங்கி நகராட்சி பகுதியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் நகராட்சி ஆணையர் இரா. வினோத். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் அனைத்து  மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் கிடைக்கும்  வகையில் உரிய நடவடிக்கைகள்  நகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. 
தற்போது நிலவிவரும் கோடை வறட்சியால் பொதுமக்கள் அனைவரும் நகராட்சி விநியோகிக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்துமாறும் வேறு உபயோகங்களான வாகனங்களைக் கழுவுதல், கால்நடைகளைக்  குளிப்பாட்டுதல் உள்ளிட்ட இதர  பயன்பாடுகளுக்கு  உபயோகிக்கக் கூடாது எனவும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் குடிநீர் குழாயில் மோட்டார் வைத்து  நீரை உறிஞ்சுதல் சட்ட விரோதம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், எவ்வித முன்னறிவிப்புமின்றி  குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
மேலும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை  04371- 220556 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/குடிநீரை-சிக்கனமாக--பயன்படுத்துங்கள்-நகராட்சி-ஆணையர்-3175259.html
3175258 திருச்சி புதுக்கோட்டை தலைமையாசிரியர் வராத அரசுப் பள்ளிக்கு பூட்டு DIN DIN Thursday, June 20, 2019 08:56 AM +0530 அறந்தாங்கி அருகே தலைமை ஆசிரியர் தொடர்ந்து பள்ளிக்கு வராத காரணத்தால் புதன்கிழமை பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த கொல்லன்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடர்ந்து தாமதமாக பள்ளி தலைமை ஆசிரியர் வருவதால்  இதுகுறித்து பெற்றோர் பலமுறை தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் அதற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு புதன்கிழமை சென்றபோது, வழக்கம்போல் பள்ளி திறக்காமல் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் உட்கார்ந்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வேறு பூட்டை பூட்டி பள்ளியில் காத்திருந்தனர்.
தகவலறிந்த அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் அங்கு நேரில் வந்து பார்வையிட்டு அருகேயுள்ள பள்ளியின் ஆசிரியர் கூடுதலாக மாற்றுப் பணியில் பணிபுரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பெற்றோர்கள் திரும்பிச் சென்றனர்.  இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்தப் பள்ளியில்  தற்போது 1 முதல் 5 வகுப்புவரை 33 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.  பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒரு ஆசிரியர் பணியில் உள்ளார். தலைமை ஆசிரியர் உடல்நலம் சரியில்லை எனக் கூறி தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ள காரணத்தால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/தலைமையாசிரியர்-வராத-அரசுப்-பள்ளிக்கு-பூட்டு-3175258.html
3175257 திருச்சி புதுக்கோட்டை பாரதி கல்லூரியில் யோகா தின கருத்தரங்கம் DIN DIN Thursday, June 20, 2019 08:56 AM +0530 புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின விழா கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் மா. குமுதா தொடக்கவுரை நிகழ்த்தினார். 
பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூத்த பயிற்றுநர் ஞான  செளந்தரி, புதுக்கோட்டை கிளையின் துணைப் பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் யோகாவின் சிறப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினர்.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெ. செளந்தர்யா வரவேற்றார். முடிவில் சி. அம்பிகா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/பாரதி-கல்லூரியில்-யோகா-தின-கருத்தரங்கம்-3175257.html
3175256 திருச்சி புதுக்கோட்டை ஆவூர் அரசுப் பள்ளி அருகேயுள்ள  மதுக்கடையை அகற்றக் கோரிக்கை DIN DIN Thursday, June 20, 2019 08:55 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அரசுப் பள்ளிக்கூடத்துக்கு அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மற்றும் அரசியல் விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கிளைச் செயலர் ஏ. இன்னாசிமுத்து தலைமை வகித்தார். கட்சிக் கொடியை மாவட்டச் செயலர் எஸ்.கவிவர்மன் ஏற்றி வைத்துப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், ஒன்றியச் செயலர் ச.தோ.அருணோதயன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம். சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காவலர், துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். தண்ணீர் வசதியுடன் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். 
ஆவூர்பட்டி திடீர் நகர் அரசுப் புறம்போக்கில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். புறம்போக்கில் இடம்பிடித்து விற்பனை செய்யும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு கஜா புயல் நிவாரணம் வழங்கிடவும், வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவூரிலிருந்து மண்ணையூருக்குச் செல்லும் இணைப்புச் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/ஆவூர்-அரசுப்-பள்ளி-அருகேயுள்ள--மதுக்கடையை-அகற்றக்-கோரிக்கை-3175256.html
3175255 திருச்சி புதுக்கோட்டை "யோகா ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்' DIN DIN Thursday, June 20, 2019 08:55 AM +0530 யோகா செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் டாக்டர் கே. வெங்கடேசுவரி.
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் அவர் மேலும் பேசியது: 
முதுகுத் தண்டுவடம் நேராக அமர்ந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தொடர்ந்து யோகா செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி ஏற்படும். 
சுவாசப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் வாழ்நாள் அதிகரிக்கும் என்றார் அவர்.ஆத்மா யோகா மாணவர் மன்றத்தின் நிறுவனர் ரெ. பாண்டியன் யோகா குறிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு யோகா நிலைகளைச் செய்து காட்டினர். விழாவுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியை ஆனந்தி ஒருங்கிணைத்தார். முடிவில் ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/யோகா-ரத்த-ஓட்டத்தை-அதிகரித்து-புத்துணர்ச்சியை-ஏற்படுத்தும்-3175255.html
3175254 திருச்சி புதுக்கோட்டை ஆலங்குடியில் சாலையோர பனை மரங்களில் திடீர் தீ DIN DIN Thursday, June 20, 2019 08:55 AM +0530 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சாலையோர பனைமரங்களில் புதன்கிழமை தீப்பற்றியது.
ஆலங்குடி பகுதியில் போதிய மழைப் பொழிவின்றி போனதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. 
இந்நிலையில், ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை நண்பகல் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், ஆலங்குடி அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் திடீரென தீப்பற்றியுள்ளது. 
தொடர்ந்து, தீ அருகே இருந்த மரங்களில் பரவி எரியத் தொடங்கியது.  தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/20/ஆலங்குடியில்-சாலையோர-பனை-மரங்களில்-திடீர்-தீ-3175254.html
3174639 திருச்சி புதுக்கோட்டை சர்வர் பிரச்னை: ஆதார் எடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் DIN DIN Wednesday, June 19, 2019 09:51 AM +0530 பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை இருப்பதால், குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற போதிலும், நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண் பெற்று வருகின்றன.
அந்த வகையில் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க இ-சேவை மையங்களை நாடி வரும் நிலையில், சர்வர் பிரச்னை காரணமாக பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில்  இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உள்பட்ட 42 ஊராட்சிகளை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இந்த மையங்களை நாடி அரசு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். 
ஆனால் இ-சேவை மையங்களில் சர்வர் அடிக்கடி இயங்காமல் தடைபடுவதால் பெற்றோர்கள் உடனுக்குடன் சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு இதை கவனத்தில் கொண்டு விரைந்து சர்வர் சரியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/19/சர்வர்-பிரச்னை-ஆதார்-எடுக்க-முடியாமல்-தவிக்கும்-பெற்றோர்-3174639.html
3174637 திருச்சி புதுக்கோட்டை ஆலங்குடி அருகே காயங்களுடன் முதியவர் சடலம் DIN DIN Wednesday, June 19, 2019 09:51 AM +0530 ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னையா(70), விவசாயி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற அவர், வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது உறவினர்கள் தேடியபோது, அப்பகுதியில் உள்ள அவரது வாழைத்தோட்டத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/19/ஆலங்குடி-அருகே-காயங்களுடன்-முதியவர்-சடலம்-3174637.html
3174636 திருச்சி புதுக்கோட்டை மழை வேண்டி சிறப்பு தொழுகை  DIN DIN Wednesday, June 19, 2019 09:50 AM +0530
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினர்.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் தொடர் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. 
மேலும், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்-தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மழை வேண்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று  அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சிறப்பு தொழுகை நடத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/19/மழை-வேண்டி-சிறப்பு-தொழுகை-3174636.html
3174634 திருச்சி புதுக்கோட்டை சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்க மானியம் DIN DIN Wednesday, June 19, 2019 09:50 AM +0530 பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார விவசாயிகள் வேளாண்மைத் துறையின் மூலம்  மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர், தெளிப்பு நீர் கருவிகள் பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் சா.சிவராணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பிரதம மந்திரியின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னமராவதி வட்டாரத்தில் 2018ம் ஆண்டு பெய்த மழை அளவு 64415 மி.மீ ஆகும். இதனால் இவ்வட்டாரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. 
குறைவான நீரினை பயன்படுத்தி நீர் தேவை குறைவாக தேவைப்படும் பயிர்களான உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில புல வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான சான்று, புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டையுடன் பொன்னமராவதி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/19/சொட்டுநீர்-தெளிப்புநீர்-பாசனம்-அமைக்க-மானியம்-3174634.html