Dinamani - பெரம்பலூர் - https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3119277 திருச்சி பெரம்பலூர் செலவினப் பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம் DIN DIN Saturday, March 23, 2019 04:13 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம். 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்கும் வகையில்,  பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் செலவின பார்வையாளர் துக்ரியா,  துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர் நீரஜ்சாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செலவினப் பார்வையாளர்கள்  துக்ரியாவை 6384807013 என்ற எண்ணிலும்,  நீரஜ்சாயை 6384807015 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/செலவினப்-பார்வையாளர்களிடம்-புகார்-அளிக்கலாம்-3119277.html
3119275 திருச்சி பெரம்பலூர் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் DIN DIN Saturday, March 23, 2019 04:13 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தார். 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தாவிடம், சாந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். திருச்சி மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கனகசபை மனைவி சாந்தி  (34). இவர் கட்சியின் ஒன்றிய மகளிரணி பாசறை செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். எம்.ஏ.பி.எட் படித்துள்ள இவர், தன்னிடம் 10 பவுன் நகை, ரூ.36 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலர் ப. அருள் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் சாந்தி மாலை அணிவித்தார்.
தொடர்ந்து,  சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்ற ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பச்சை நிற வேட்டி, துண்டு அணிந்து விவசாயிகளைபோல் சென்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/ஊர்வலமாக-வந்து-மனுதாக்கல்-செய்த-நாம்-தமிழர்-கட்சி-வேட்பாளர்-3119275.html
3119272 திருச்சி பெரம்பலூர் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் DIN DIN Saturday, March 23, 2019 04:12 AM +0530 குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
 பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் மாலதி கருத்தரங்குக்குத் தலைமை வகித்து,  எய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தில் மாணவர்களின் கடமை குறித்து விளக்கி பேசினார்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆலோசகர் அபிமணியன் சிறப்புரையாற்றி பேசும் போது, எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய் தடுக்கும் முறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.  உயிர்த் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். 
முன்னதாக, செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் வீரபாகு வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் ஹென்றி ரிச்சர்ட் நன்றி கூறினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/எய்ட்ஸ்-விழிப்புணர்வுக்-கருத்தரங்கம்-3119272.html
3119271 திருச்சி பெரம்பலூர் சிவகங்கை அருகே லாரி மோதி பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் சாவு DIN DIN Saturday, March 23, 2019 04:11 AM +0530 சிவகங்கை அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராமச்சந்திரன்(28). இவர், பரமக்குடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கிராவல்  அள்ளும் லாரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், காளையார்கோவில் அருகே புலியடிதம்மத்தில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரியில் மண் அள்ளுவதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு ராமச்சந்திரன் உள்ளிட்ட  ஏராளமானோர் லாரிகளில் சென்றனராம். நீண்ட நேரமாகி விட்டதால் அனைவரும் அங்கேயே படுத்து தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிவையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஓட்டுநர் கருப்பன் லாரியை பின்னால் எடுத்துள்ளார். அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து  காளையார்கோவில் போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/சிவகங்கை-அருகே-லாரி-மோதி-பெரம்பலூரைச்-சேர்ந்த-இளைஞர்-சாவு-3119271.html
3119270 திருச்சி பெரம்பலூர் அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கல்விச்சீர் DIN DIN Saturday, March 23, 2019 04:11 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அப்பகுதி மக்கள் ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான கல்விச் சீர் பொருள்களை  வியாழக்கிழமை வழங்கினர்.
இவ்விழாவுக்கு  பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ், ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரன்  முன்னிலை வகித்தனர். 
பள்ளிக்குத் தேவையான தளவாட பொருள்கள், மின் விசிறிகள், மேசை, நாற்காலிகள், பீரோ, தண்ணீர் குடங்கள், குப்பைக் கூடைகள், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பள்ளி கிணற்றை ஆழப்படுத்துவதற்கான நிதி என ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் நிதி உதவிகளை ஊர்வலமாக கொண்டுவந்து வழங்கினர். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சேகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக, பள்ளித் தலைமைமாசிரியர் செல்வகுமார் வரவேற்றார்.  நிறைவில், உயர்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/அனுக்கூர்-அரசு-மேல்நிலைப்பள்ளிக்கு-கல்விச்சீர்-3119270.html
3119269 திருச்சி பெரம்பலூர் வெயிலின்தாக்கம் அதிகரிப்பு: தர்ப்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை மும்முரம் DIN DIN Saturday, March 23, 2019 04:10 AM +0530 கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், தர்ப்பூசணி, முலாம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் இளநீர் விற்பனை பெரம்பலூர் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வழக்கமாக மார்ச் மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் தொடங்கி ஜூன் மாதம் வரை நிலவும். ஆனால், நிகழாண்டில் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் காணப்பட்டது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
கோடை வெயிலின் தாக்கத்தை குளிர்விக்க பெரும்பாலும் பயன்படுவது தர்ப்பூசணி பழம்தான்.  இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உடலை சீரான வெப்பநிலையில் வைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்தும், சர்க்கரையும் நிறைந்திருப்பதால் உடல் சோர்வை போக்கவும் தர்ப்பூசணி பெரிதும் உதவுகிறது. 
தீவிரமடைந்த வியாபாரம்:  
வழக்கம்போல மார்ச் தொடக்கத்தில் தான் இப்பழங்களின் வரத்து அதிகரிக்கும். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான சாலைகளில், வழக்கத்தைவிட அதிகளவில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 
திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணிப் பழங்கள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெரம்பலூர் நான்குச் சாலை சந்திப்பில் இருந்து ஆத்தூர், துறையூர் சாலைகள் உள்பட பிரதான இடங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.சில்லறை விலையில் பெரிய துண்டு தர்ப்பூசணி ரூ. 10-க்கும், கிலோ ரூ.15 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 
இதுகுறித்து பாலக்கரை பகுதியில்  கடை வைத்துள்ள தர்ப்பூசணி வியாபாரி ஒருவர் கூறியது:  கடந்த ஆண்டு இறுதியில் போதிய மழை பெய்ததால் தர்ப்பூசணிப் பழங்களின் விளைச்சல் அதிகரித்தது. இதனால், கடந்த ஆண்டைவிட அதிகளவில் வரத்து காணப்படுகிறது. இதனால், தள்ளுவண்டி வியாபாரிகள் கூட சாலையோரங்களில் விற்பனை செய்யத்தொடங்கி உள்ளனர். 
பழங்களை அறுவடை செய்யும் ஆள்களுக்கும் பற்றாக்குறையாக உள்ளது. இதைத் தவிர, லாரிகளின் வாடகையும் அதிகமாகி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேவை அதிககரிப்பதோடு, வரத்தும் குறைந்துவிடும். இதனால் விலையை அதிகமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
முலாம் பழங்கள்: தர்ப்பூசணியைப் போன்று,  முலாம் பழங்களையும் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். பொதுவாக இப்பழங்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த காலத்தில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கிர்னி பழங்கள் இப்போது குறைந்தே காணப்படுகின்றன. இப்பழங்கள் தற்போது ஒருசில இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கும் வரத்துக் குறைவே காரணம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இளநீர் விலையும் அதிகரிப்பு
எப்போதும் இல்லாத வகையில் தற்போது இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் அதன் விலையும் அதிகமாகியுள்ளது. லாரி வாடகை உயர்வு காரணமாக பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து இளநீர்களை கொண்டு வரும் வியாபாரிகள் விலையை ஏற்றியுள்ளனர்.உழவர் சந்தையில் இளநீர் ரூ.40-க்கும், சாலையோரங்களில்ரூ. 30 முதல் 40 வரையிலும் விற்கப்படுகின்றன என்கின்றனர் வியாபாரிகள்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/23/வெயிலின்தாக்கம்-அதிகரிப்பு-தர்ப்பூசணி-முலாம்-பழங்கள்-விற்பனை-மும்முரம்-3119269.html
3118610 திருச்சி பெரம்பலூர் உலக வன நாள் தினவிழா கொண்டாட்டம் DIN DIN Friday, March 22, 2019 09:06 AM +0530 பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில், உலக வன நாள் விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய விவசாய குழுமத்தின் 23 ஆவது பொதுக்கூட்டத்தில் உலக வன நாள் விழா கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஐக்கிய நாடு உணவு மற்றும் விவசாய நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதிதியை உலக வன நாள் தினமாகக் கடைப்பிடித்து வருகின்றன. 
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட தொழில்மைய அலுவலகம் எதிரே நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவுக்கு, மாவட்ட வன அலுவலர் அசோகன் தலைமை வகித்தார்.  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார். மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அங்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.  நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமார், வேப்பந்தட்டை வனச்சரகர் குமார், வனவர்கள் பாண்டியன், குமார், சுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/உலக-வன-நாள்-தினவிழா-கொண்டாட்டம்-3118610.html
3118609 திருச்சி பெரம்பலூர் உறங்கும் நிலையில் சூசையப்பர் உருவச் சொரூபம் திறப்பு DIN DIN Friday, March 22, 2019 09:06 AM +0530 பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் உறங்கும் நிலையில் உள்ள சூசையப்பர் உருவச் சொரூபம் நிறுவும் விழா கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கும்பகோணம் மறைமாவட்டத்திலேயே மிகவும் பழமையா 158 ஆண்டுகள் புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பெயரை தற்போது புனித யோசேப்பு தேவாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யும் விழா, தேவாலயத்துக்குள் உறங்கும் நிலையில் உள்ள புனித சூசையப்பர் உருவச் சொரூபம் நிறுவும் விழா நடைபெற்றது.  
பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம், கோனான்குப்பம் வட்டார முதன்மை பங்கு குரு அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை வகித்து, உறங்கும் நிலையிலுள்ள புனித சூசையப்பர் உருவச் சொரூபத்தை பூஜை செய்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பிஷப் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/உறங்கும்-நிலையில்-சூசையப்பர்-உருவச்-சொரூபம்-திறப்பு-3118609.html
3118608 திருச்சி பெரம்பலூர் சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் DIN DIN Friday, March 22, 2019 09:05 AM +0530 சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அறிமுகக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ஜராஜேந்திரன், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினர் மா. சந்திரகாசி, வேப்பூர் ஒன்றிய செயலர் பி. கிருஷ்ணசாமி, ஆலத்தூர் ஒன்றிய செயலர் என்.கே. கர்ணன், செந்துரை ஒன்றிய செயலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் பேசியது: சிதம்பரம் மக்களவை தொகுதி மக்களின் தேவையை அறிந்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர். 
பின்னர், பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வைத்தி, பாமக மாவட்ட செயலர் செந்தில்குமார், தேமுதிக மாவட்ட செயலர் துரை. காமராஜ், பாஜக கோட்ட பொருப்பாளர் ம. சிவசுப்ரமண்யம், பாஜக மாவட்ட செயலர் சாமி. இளங்கோவன் மற்றும் புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/சிதம்பரம்-மக்களவை-தொகுதி-அதிமுக-வேட்பாளர்-அறிமுகக்-கூட்டம்-3118608.html
3118607 திருச்சி பெரம்பலூர் தேர்தல் விளம்பரங்களுக்கு ஊடக அனுமதி அவசியம் DIN DIN Friday, March 22, 2019 09:05 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் அரசியல், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை  ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூர் கேபிள் டிவி, தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்தியாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் பேசியது:  
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவின் அறையில் தொலைக்காட்சி பெட்டிகள், செய்திகளை கணினியில் பதிவேற்றம் செய்ய பிரத்யேக மென்பொருள் வசதிகள் கொண்ட கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி சுழற்சி முறையில் நடைபெறுகிறது. 
மேலும், அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகி வரும் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புகளும் கண்காணிக்கப்படுகிறது.  பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய தாங்கள் தயாரித்த விளம்பரத்தை இக்குழுவினரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். 
இந்த குழுவினர் செய்தித்தாள்களில் வெளிவரும் விளம்பரங்கள், பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணிப்பார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கேபிள் டிவி நிறுவனத்தினர் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒளிபரப்பினால் நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல நாளிதழ்களில் அரசியல் கட்சியினரின் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கும் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்றார் அழகிரிசாமி. 
கூட்டத்தில், வட்டாட்சியர் முத்துக்குமார், உள்ளூர் கேபிள் டிவி மற்றும் தொலைக்காட்சி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/தேர்தல்-விளம்பரங்களுக்கு-ஊடக-அனுமதி-அவசியம்-3118607.html
3118606 திருச்சி பெரம்பலூர் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் DIN DIN Friday, March 22, 2019 09:05 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தண்டாயுதபாணிக்கு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 
7 ஆம் திருவிழாவான மார்ச் 19 ஆம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 20 ஆம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் வியாழக்கிழமை மாலை 4.40 மணிக்கு தொடங்கி, பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்படும் திருத்தேர் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) மாலை நிலைக்கு வந்தடைகிறது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 
விழாவில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை, துறையூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு புதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்னர். விழாவை முன்னிட்டு, பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ம. யுவராஜு, தக்கார் கே. பாரதிராஜா தலைமையிலான கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பாலமுருகன் கோயில் தேரோட்டம்: பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 39 வது ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு அனுக்கை, விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் காலை 8 மணிக்கு மூலவருக்கு அபிசேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், 19 ஆம் தேதி தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பாலமுருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  தேரோட்டத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. அர்ச்சகர் ரமேஷ் அபிஷேகம் ஆராதனையை நடத்தினார். பின்னர் வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சப்பர திருத்தேரோட்டம் நடைபெற்றது. நகரின் பிரான வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.  வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீர் விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தொடர்ந்து 28 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/தண்டாயுதபாணி-கோயில்-பங்குனி-உத்திர-தேரோட்டம்-3118606.html
3118605 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில்  ரூ.1.18 லட்சம் பறிமுதல் DIN DIN Friday, March 22, 2019 09:04 AM +0530 பெரம்பலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இரு வேறு இடங்களில் ரூ. 1.18 லட்சத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
        பெரம்பலூர் - அரியலூர் சாலையில் கவுல்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த யூஜின் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 
மேலும், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.18 லட்சத்தை குன்னம் சட்டப் பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளா, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/பெரம்பலூரில்--ரூ118-லட்சம்-பறிமுதல்-3118605.html
3118604 திருச்சி பெரம்பலூர் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் DIN DIN Friday, March 22, 2019 09:04 AM +0530 பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு தலைமை வகித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் மாலதி, எய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தில் மாணவர்களின் கடமை குறித்து விளக்கி பேசினார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆலோசகர் அபிமணியன், எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய் தடுக்கும் முறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். 
இதில், உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
முன்னதாக, செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் வீரபாகு வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் ஹென்றி ரிச்சாட் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/22/எய்ட்ஸ்-விழிப்புணர்வு-கருத்தரங்கம்-3118604.html
3117838 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் DIN DIN Thursday, March 21, 2019 07:38 AM +0530 பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி கொண்டுவரப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி. 
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
 பெரம்பலூர் தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவேன். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான ரயில் போக்குவரத்து வசதியை நிறைவேற்றுவேன். தற்போது, ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்த பின்னர் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார் வேட்பாளர் என்.ஆர். சிவபதி.
அதிமுக  மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி,  முன்னாள் எம்பி இளவரசன்  முன்னிலை வகித்தனர்.  
 கூட்டத்தில், பாஜக கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன், பாமக மாவட்டச் செயலர் க. செந்தில்குமார், தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்டத் தலைவர் பாலாஜி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் உள்பட பலர் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/பெரம்பலூருக்கு-ரயில்-போக்குவரத்து-வசதி-ஏற்படுத்தப்படும்-3117838.html
3117837 திருச்சி பெரம்பலூர் செலவின பார்வையாளர்கள் பெரம்பலூர் வருகை DIN DIN Thursday, March 21, 2019 07:37 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் செலவினப்பார்வையாளர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இத்தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக துக்ரியாவும்,  துறையூர், குளித்தலை, முசிறி  சட்டப்பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக  நீரஜும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். 
இதில், தேர்தல் செலவினப்  பார்வையாளர் துக்ரியா செவ்வாய்க்கிழமையும், நீரஜ் புதன்கிழமையும் பெரம்பலூருக்கு வருகை தந்து தங்களது  பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/செலவின-பார்வையாளர்கள்-பெரம்பலூர்-வருகை-3117837.html
3117836 திருச்சி பெரம்பலூர் பறக்கும் படையினரால் ரூ.2.30 லட்சம் பறிமுதல் DIN DIN Thursday, March 21, 2019 07:37 AM +0530 பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தேர்தல் பிரிவு  பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம், மக்காச்சோளம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை ரூ. 1.60 லட்சத்தை உரிய ஆவணங்களின் எடுத்துச் சென்றபோது பறிமுதல் செய்தனர். 
பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 2.30 லட்சம் ரொக்கம், குன்னம் சட்டப் பேரவை தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டு , பின்னர்அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/பறக்கும்-படையினரால்-ரூ230-லட்சம்-பறிமுதல்-3117836.html
3117835 திருச்சி பெரம்பலூர் எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் மனுதாக்கல் DIN DIN Thursday, March 21, 2019 07:37 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எம். ராஜசேகரன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார் .
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (34) கட்சியின் மாநில அமைப்புச் செயலராக உள்ளார். 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து வரும் இவர்,  தனது வேட்பு மனுவை, பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே. சாந்தாவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தார். 
இதைத் தொடர்ந்து,  அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அ. வெள்ளத்துரை செய்தியாளர்களிடம் கூறியது;
எங்கள் கட்சி 2013 ஆம் ஆண்டிலிருந்து பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயலாற்றி வருகிறது. கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவுக்கு இணையான வாக்குகளை பெற்றோம். 
2019 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை  இடைத்தேர்தலிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்றார் அவர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/எழுச்சித்-தமிழர்கள்-முன்னேற்றக்-கழக-வேட்பாளர்-மனுதாக்கல்-3117835.html
3117834 திருச்சி பெரம்பலூர் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு DIN DIN Thursday, March 21, 2019 07:36 AM +0530 மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, தகுதியான முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே,  மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குள்பட்ட நல்ல உடல் திறனுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள், தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர்- 621 704 எனும் முகவரியில் நேரில் அணுகவும். 
மேலும் விவரங்களுக்கு 04329 - 221011 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/பாதுகாப்புப்-பணி-முன்னாள்-படைவீரர்களுக்கு-அழைப்பு-3117834.html
3117833 திருச்சி பெரம்பலூர் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: பேருந்து ஓட்டுநர் சாவு DIN DIN Thursday, March 21, 2019 07:36 AM +0530 பெரம்பலூர் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். 
பெரம்பலூர் அருகிலுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்லத்துரை (47). இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், வேலூரிலிருந்து  பெரம்பலூருக்கு அவரது மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தார். பெரம்பலூர்- செட்டிக்குளம் சாலையில், சத்திரமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
 இதில் பலத்த காயமடைந்த செல்லத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் செல்லத்துரை உடலை மீட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/கார்-மோட்டார்-சைக்கிள்-மோதல்-பேருந்து-ஓட்டுநர்-சாவு-3117833.html
3117832 திருச்சி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் DIN DIN Thursday, March 21, 2019 07:36 AM +0530 பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சிம்மம், ஹனுமந்தம், சேஷ,  உதயகருட, வெள்ளிக்கருட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்துகடந்த 17 ஆம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா வந்த சுவாமிக்கு,  18 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வெண்ணெய்தாழி உற்ஸவமும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இதையொட்டி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை  மதனகோபாலசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்துகாலை  10 மணிக்குத் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டது.  நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில், பெரம்பலூர் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து, வியாழக்கிழமை காலை துவாதச ஆராதனம், இரவு சப்தாவரணமும்,  22 ஆம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும், மார்ச்   23 ஆம் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்ஸவமும், 24 ஆம் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றி விழாவும், 27 ஆம் தேதி  காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் வை. மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.                                                  
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/மதனகோபால-சுவாமி-கோயிலில்-பங்குனி-உத்திரத்-தேரோட்டம்-3117832.html
3117831 திருச்சி பெரம்பலூர் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் DIN DIN Thursday, March 21, 2019 07:35 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றார்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
பெரம்பலூர் அருகிலுள்ள ரெங்கநாதபுரம்,  தம்பிரான்பட்டி அரசு தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பார்வையிட்ட ஆட்சியர்,  மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாய்தளத்துடன் கூடிய பாதை வசதி, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும்  ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியது: இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் 1,40,270 ஆண் வாக்காளர்களும், 1,46,112  பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,86,397 வாக்காளர்ளும்,  குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 320  வாக்குச்சாவடிகளில் 1,29,764 ஆண் வாக்காளர்களும்,  1,30,520 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,60,294 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளன்று வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார் வே. சாந்தா.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.                                                  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/21/வாக்குச்சாவடி-மையங்களில்-தேவையான-அடிப்படை-வசதிகள்-3117831.html
3117412 திருச்சி பெரம்பலூர் கூடை விழுந்து தொழிலாளி சாவு DIN DIN Wednesday, March 20, 2019 09:11 AM +0530 பெரம்பலூர் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது, கூடை விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (65). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர், ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கிணற்றை ஆழப்படும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 16 ஆம் தேதி பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கூடை விழுந்ததில் துரைசாமி பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/கூடை-விழுந்து-தொழிலாளி-சாவு-3117412.html
3117411 திருச்சி பெரம்பலூர் ஐஓபி சார்பில் தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி DIN DIN Wednesday, March 20, 2019 09:11 AM +0530 பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், நடப்பு நிதியாண்டில் (2019- 20) 21 வகையான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர், பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சிகள், குறுகிய கால பயிற்சி வகுப்புகளாக காலை 9.30 மணி முதல் 5 மணி வரை முழு நேர வகுப்புகளாக நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது சிற்றுண்டி மற்றும் மதிய உணவு அளிக்கப்படும். 
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 8 ஆம் வகுப்புக்கு மேல் படித்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  தையல் கலை, எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், அழகுக் கலை, அகர்பத்தி தயாரிப்பு, சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் சேவை, செல்பேசி பழுது நீக்கல், ஏசி, பிரிட்ஜ் பழுது நீக்கல், குழாய்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் அமைப்பு, கறவை மாடு வளர்த்தல், இரு சக்கர வாகனம் பழுது நீக்கல், சணல் பை தயாரிப்பு ஆகிய தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04328 277896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/ஐஓபி-சார்பில்-தொழில்திறன்-வளர்ப்பு-பயிற்சி-3117411.html
3117410 திருச்சி பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே நீரில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் சாவு DIN DIN Wednesday, March 20, 2019 09:11 AM +0530 பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை அருகே பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை முடித்துவிட்டு விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரைச் சேர்ந்த பாலன் மகன் ஹேமநாதன் (17). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், பிளஸ் 2 அரசுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, தேர்வை எழுதி முடித்துவிட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் தனது நண்பர்களுடன், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி ஹேமநாதன் உயிரிழந்தார். இதையறிந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் வயல்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பொதுமக்கள் மாணவனின் உடலை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/வேப்பந்தட்டை-அருகேநீரில்-மூழ்கி-பிளஸ்-2-மாணவர்-சாவு-3117410.html
3117409 திருச்சி பெரம்பலூர் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார் அதிமுக வேட்பாளர் DIN DIN Wednesday, March 20, 2019 09:10 AM +0530 பெரம்பலூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.ஆர். சிவபதி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆதரவு கோரினார்.
     பெரம்பலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக அமைச்சர் என்.ஆர். சிவபதி போட்டியிடுகிறார். இதையடுத்து வேட்பாளர் சிவபதி, அதிமுக மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், அதிமுக அணிச் செயலர்கள் பூவை த. செழியன், எம்.என். ராஜாராம், பாஜக மாவட்ட செயலர் சாமி. இளங்கோவன், பாமக மாவட்டச் செயலர் செந்தில்குமார், தேமுதிக மாவட்ட செயலர் துரை. காமராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்டத் தலைவர் பாலாஜி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீராம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். நிகழ்ச்சியின்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/கூட்டணி-கட்சி-நிர்வாகிகளிடம்-ஆதரவு-கோரினார்-அதிமுக-வேட்பாளர்-3117409.html
3117408 திருச்சி பெரம்பலூர் ஊடக சான்றளிப்பு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு: தேர்தல் செலவு பார்வையாளர் ஏ.இ.பி. துக்ரியா DIN DIN Wednesday, March 20, 2019 09:10 AM +0530 ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஏ.இ.பி. துக்ரியா. 
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ஏ.இ.பி. துக்ரியா  நியமிக்கப்பட்டுள்ளார். 
இதையடுத்து, பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பிரசாரத்துக்காக உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள், செய்திகள் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிட 24 மணி நேரமும் இயங்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.  இக்குழு மூலமாக செய்தித்தாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார விளம்பரங்களை கண்காணித்து, அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஏ.இ.பி. துக்ரியா.  
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சித்ரகலா ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/ஊடக-சான்றளிப்பு-தேர்தல்-கட்டுப்பாட்டு-அறை-ஆய்வு-தேர்தல்-செலவு-பார்வையாளர்-ஏஇபி-துக்ரியா-3117408.html
3117407 திருச்சி பெரம்பலூர் விடுதிகள், திருமண மண்டபங்களில் விருந்தளித்தல், பரிசு வழங்குதல் கூடாது DIN DIN Wednesday, March 20, 2019 09:10 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விருந்தளித்தல் மற்றும் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் வாடகைக்கு எடுத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல், பரிசு கொடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களை வாடகைக்கு அளிக்கும்போது, அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு விவரமாக தெரிவிக்க வேண்டும்.  போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த விரங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பிருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வெளியூர் நபர்களை மண்டபங்களில் தங்க வைக்க அனுமதிக்கக் கூடாது. 
நகை அடகு பிடிப்போர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் தூண்டுதலின் பேரில் வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
இதேபோல் விதிகளுக்கு புறம்பாக நடைபெறும் நடவடிக்கைகளை பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்காணித்து,  1800 425 2240 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்  தெரிவிக்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/விடுதிகள்-திருமண-மண்டபங்களில்விருந்தளித்தல்-பரிசு-வழங்குதல்-கூடாது-3117407.html
3117406 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் அருகே  ரூ. 57 ஆயிரம், 23 செல்பேசிகள் பறிமுதல் DIN DIN Wednesday, March 20, 2019 09:09 AM +0530 பெரம்பலூர் அருகே தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 1.33 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் செல்பேசிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தேர்தல் பிரிவு பறக்கும்படை குழுவினர், துணை வட்டாட்சியர் பழனிச்செல்வம் தலைமையில், அரியலூர்- பெரம்பலூர் சாலையில் அல்லிநகரம் அருகே வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். 
அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 76 ஆயிரம் மதிப்புள்ள 23 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதே குழுவினர் பேரளி சுங்கச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 57,200 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த செல்பேசிகள், ரொக்கம் ஆகியவற்றை குன்னம் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.  பின்னர் அவைகள் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.      
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/பெரம்பலூர்-அருகே--ரூ-57-ஆயிரம்-23-செல்பேசிகள்-பறிமுதல்-3117406.html
3117405 திருச்சி பெரம்பலூர் பாடாலூர் அருகே பள்ளி மாணவியை கடத்த முயன்ற 2 பேர் கைது DIN DIN Wednesday, March 20, 2019 09:09 AM +0530 பாடாலூர் அருகே பொதுத்தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 2 மாணவியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.  
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி. இவர், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பாடாலூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் வெங்கடேசன் (22). இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால், வெங்கடேசனும், அவரது நண்பர்கள் 8 பேரும் சேர்ந்து மாணவியை கடத்தத் திட்டமிட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த மாணவி தேர்வு எழுத  கீழக்கணவாய் கிராமத்தில் இருந்து பேருந்தில் செட்டிக்குளம் வந்தார். அப்போது, வெங்கடேசன் உள்பட 8 பேரும் மாணவியைக் கடத்த முயன்றனர். இதையறிந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிப் பிடித்ததில் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற வெங்கடேசனின் நண்பர்கள் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (22), கருப்புசாமி (18) ஆகியோரைப் பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து  பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனர்
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/பாடாலூர்-அருகே-பள்ளி-மாணவியை-கடத்த-முயன்ற-2-பேர்-கைது-3117405.html
3117404 திருச்சி பெரம்பலூர் பதாகை வைத்த 6 பேர் மீது வழக்கு DIN DIN Wednesday, March 20, 2019 09:07 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைத்திருந்த 6 பேர் மீது குன்னம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் மக்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால், வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றததால், தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, வயலப்பாடி பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகை மற்றும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
குன்னம் வட்டாட்சியர் செல்வராஜ், பொதுமக்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக விளம்பரப் பதாகைகள் வைத்தனர்.  வயலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை அளித்த புகாரின் பேரில், தேர்தல் விதிகளை மீறி விளம்பர பதாகை வைத்த வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், பெரியசாமி, கதிர்வேல், மணிகண்டன், மணிவேல் ஆகியோர் மீது குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/பதாகை-வைத்த-6-பேர்-மீது-வழக்கு-3117404.html
3117403 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு முதல் நாளில் ஒருவர்கூட  வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை DIN DIN Wednesday, March 20, 2019 09:07 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனினும் 11 பேர் வேட்புமனு வாங்கிச்சென்றனர்.
பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, திமுக கூட்டணி சார்பில் ஐஜேகே வேட்பாளராக பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து, அமமுக வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அல்லது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
போலீஸ் பாதுகாப்பு:வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் 100 மீட்டருக்கு முன்னதாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.   
கணிகாணிப்பு கேமரா:
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோரை கண்காணிக்க ஆட்சியர் அலுவலக அறை மற்றும் கோட்டாட்சியர் அலுவலக அறை எதிரே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 
வேட்பு மனு தாக்கல் இல்லை:
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கான முதல் நாளான செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் தயார் நிலையில் அலுவலர்கள் காத்திருந்தனர். ஆனால், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவரவில்லை. இருப்பினும், 11 வேட்பு மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/20/பெரம்பலூர்-மக்களவை-தொகுதிக்கு-முதல்-நாளில்-ஒருவர்கூட-வேட்பு-மனு-தாக்கல்-செய்யவில்லை-3117403.html
3116900 திருச்சி பெரம்பலூர் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் தேவை DIN DIN Tuesday, March 19, 2019 09:46 AM +0530 தமிழகத்திலும், இந்தியாவிலும் நிச்சயம் ஒரு மாற்றம் தேவை என்றார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து.       பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:  
     பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் குறித்து மக்களிடம் கலந்தாலோசித்து, அத் திட்டங்களை வரிசைப்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் அவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். மக்கள் விரும்பும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறோம். தமிழகத்திலும், இந்தியாவிலும் நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. அதற்காகவே இக்கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றார் அவர்.  திமுக மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, மாநில நிர்வாகி ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/19/மத்தியிலும்-மாநிலத்திலும்-மாற்றம்-தேவை-3116900.html
3116899 திருச்சி பெரம்பலூர் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு DIN DIN Tuesday, March 19, 2019 09:46 AM +0530 பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவத்தில், புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்யவும், இவ் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதென வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
பெரம்பலூர் பார் அசோஸியேசன் சங்கத் தலைவர் இ. வள்ளுவன் நம்பி, அட்வகேட் அசோஸியேசன் சங்கத் தலைவர் இலியால் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றப் பணிகளில் சுணக்கம் காணப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/19/வழக்குரைஞர்கள்-பணி-புறக்கணிப்பு-3116899.html
3116898 திருச்சி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் DIN DIN Tuesday, March 19, 2019 09:46 AM +0530 பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.  
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 13 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 14 ஆம் தேதி பல்லக்கு அனுமந்த வாகனத்திலும், 15 ஆம் தேதி பல்லக்கு சேஷ வாகனத்திலும், 16 ஆம் தேதி உதய கருட சேவை, வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 17 ஆம் தேதி பல்லக்கு யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
திருக்கல்யாண உற்ஸவம்:
திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், அலங்கார ஆராதனைகளும் நடத்தப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மதனகோபால சுவாமி. இதில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. வெண்ணெய்த்தாழி உற்ஸவம், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் புதன்கிழமை (மார்ச் 20) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், 22 ஆம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா,  23 ஆம் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவமும், 24 ஆம் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றி விழாவும், 27 ஆம் தேதி 8 ஆம் திருவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் வை. மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/19/மதனகோபால-சுவாமி-கோயிலில்-திருக்கல்யாண-உற்ஸவம்-3116898.html
3116897 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் ஆலோசனை DIN DIN Tuesday, March 19, 2019 09:46 AM +0530 நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி தலைமை வகித்தார். 
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் விவரம், தேர்தல் நடத்தை விதிகள், விதிமீறல்கள் கண்டறிந்தால் வழக்குப் பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பொதுத்தேர்தலில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும். தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வேட்பாளர்கள் எவரேனும் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்திட வேண்டும். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து வாகனங்களையும் சோதனையிட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரால் அறிவுறத்தப்பட்டது.  
தொடர்ந்து, பொதுத்தேர்தலில் புதியதாக பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு சரிபார்க்கும் (வி.வி.பேட்) இயந்திரம் குறித்து அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், கூடுதல் காவல் கண்கானிப்பாளர் ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.          
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/19/மக்களவைத்-தேர்தல்-பாதுகாப்புப்-பணிகள்-ஆலோசனை-3116897.html
3116896 திருச்சி பெரம்பலூர் 2 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் DIN DIN Tuesday, March 19, 2019 09:46 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் வரும் 26 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என 2 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
மக்களவைத் தேர்தல் ஏப். 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, திமுக கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே வேட்பாளராக பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து, அமமுக வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், சில கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். 
2 இடங்களில் வேட்புமனு: இத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பெரம்பலூர் தொகுதியில் போட்டிடுவோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அல்லது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 
இதில், 23, 24 ஆம் தேதி விடுமுறை என்பதால் அன்று வேட்பு மனு தாக்கல் கிடையாது. வரும் 26 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கலின்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 
தேர்தல் செலவின பார்வையாளர் வருகை: பெரம்பலூர் மக்களவைத் தேர்தலுக்கான செலவின பார்வையாளர் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் செலவின கணக்குகளை பார்வையிட்டு, தங்களது பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றனர். 
பலத்த போலீஸ் பாதுகாப்பு: வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயில் எதிரே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்படுவர். 
வேட்பு மனு பரிசீலனை: தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனு 27 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 29 ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு ஏப். 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர், வாக்குப்பெட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்
பொறியியல் கல்லூரியில் சீல் வைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/19/2-இடங்களில்-வேட்பு-மனு-தாக்கல்-செய்யலாம்-3116896.html
3116051 திருச்சி பெரம்பலூர் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே ஆதரவு: நாயுடு பேரவை DIN DIN Monday, March 18, 2019 08:43 AM +0530 வரும் சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க நாயுடு பேரவை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாநிலத் தலைவர் காமாட்சி பேசியது: 
எங்களது சமூகத்தில் 1.20 கோடி பேர் உள்ளனர். 
நாயுடு இனத்தில் உள்ள உள்பிரிவு, சில இனப்பிரிவு ஓ.சி பட்டியலில் உள்ளதை பி.சி பட்டியலிலும், பி.சி பட்டியலில் உள்ள சில இனப் பிரிவுகளை எம்.பி.சி பட்டியலிலும் இணைக்க வேண்டும். எங்களது சமுதாயத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். 
வரும் சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு, மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். 
தற்போது அதிமுக-வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, மாநிலச் செயலர் கண்ணன், மாநில பொருளாளர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணைத் தலைவர்கள் நடராஜன், ராஜேசேகரன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/இட-ஒதுக்கீடு-அளிக்கும்-கட்சிக்கே-ஆதரவு-நாயுடு-பேரவை-3116051.html
3116050 திருச்சி பெரம்பலூர் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் DIN DIN Monday, March 18, 2019 08:43 AM +0530 மாணவர்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சியைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி. 
 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அவர் மேலும் பேசியது: 
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் சகஜமாக பழகுவதுடன் பாசத்துடன் இருக்க வேண்டும். இளம் வயது பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் பிள்ளை எனும் பேதம் பார்க்காமால் இளம் வயதிலேயே அனைத்து வேலைகளையும், அவர்களே செய்து கொள்ளப் பழக்க வேண்டும். அது, அவர்களது எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 
இதனால், எதிர்காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.  நல்ல மனிதர்களை உருவாக்குவது கல்வியே. அந்தக் கல்வியை சிறந்தமுறையில் கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியே உங்களது வாழ்க்கையை சிறப்பிக்கும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார் அழகிரிசாமி.  
தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர் ஆர். ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். மெட்ரிக். பள்ளி முதல்வர் பிரேமலதா ஆண்டறிக்கை வாசித்தார். 
இதில், கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் எஸ். நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோவிந்தசாமி, ஆங்கில வழிக்கல்வி முதல்வர் மாலா, திருச்சி மெட்ரிக். பள்ளி முதல்வர் செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/தன்னம்பிக்கை-கடின-உழைப்பு-விடா-முயற்சி-இருந்தால்-வெற்றி-பெறலாம்-3116050.html
3116049 திருச்சி பெரம்பலூர் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல் DIN DIN Monday, March 18, 2019 08:43 AM +0530 சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலர் ஆ. அம்சராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. தயாளன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். 
கூட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியத் தொகுப்பில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் கலந்துகொண்டு ஊதியத்தை இழந்தவர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 
இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு, மாவட்ட செயலர் கொளஞ்சி, மாவட்ட துணைத் தலைவர் துரை. ரெங்கன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்க மண்டல பொருப்பாளர் சூரியகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலர் முத்து வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/41-மாத-பணிநீக்கக்-காலத்தை-பணிக்-காலமாக-அறிவிக்க-சாலைப்-பணியாளர்கள்-வலியுறுத்தல்-3116049.html
3116048 திருச்சி பெரம்பலூர் பாஜக தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும்: இல. கணேசன் DIN DIN Monday, March 18, 2019 08:42 AM +0530 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், அக் கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன்.
பெரம்பலூரில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த திருச்சி பெருமண்டல பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் 5 தொகுதியில் பி.ஜே.பி போட்டியிடுகிறது. ஆனால், 40 தொகுதியிலும் நரேந்திர மோடி போட்டியிடுவதாக நினைத்து பாடுபட வேண்டும். நரேந்திர மோடி வந்ததால் தான், உலகளவில் இந்திய நாடு உயர்ந்து நிற்கிறது. இன்னமும் உயரவேண்டும். உலக அளவில் 6 இடத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் 3 இடத்துக்கு வரவேண்டும். பாரத நாடு முக்கியம், நாடு முன்னேற வேண்டும் என்றால் அது நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். கொள்கைக்காக எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் உள்ள திமுக வெறும் திராவிட முன்னேற்ற கழகம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் உள்ளது. இந்தியாவில் 60 ஆண்டுகளில் அதிகமாக கொள்ளையடித்தது காங்கிரஸ் கட்சியினர். இக் கட்சியினரால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி திமுக. அவர்களை ஆதரிப்பதால் தேச விரோத சக்திக்கு திமுக துணை போகிறது. அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் அதிமுக தொண்டர்களை விட அதிகமாகவும், நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும். அப்போது தான் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். ஏனெனில், மீண்டும் பிரதமாக நரேந்திர மோடி வரவேண்டும். இந்தியாவில், இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமாவது உறுதி என்றார் இல. கணேசன். 
கூட்டத்துக்கு, கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன், கோட்ட இணை பொறுப்பாளர்கள் இல. கண்ணன், சிவசாமி, பொறுப்பாளர்கள் இளங்குமார் சம்பத், அய்யாரப்பன், பெரியசாமி மற்றும் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். 
பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் வரவேற்றார். திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன் நன்றி கூறினார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் மேலும் கூறியது: 
தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு முறைப்படி அறிவிக்கும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்னை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் அமோகமாக வெற்றி பெறும்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இல. கணேசன்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/பாஜக-தொண்டர்கள்-உத்வேகத்துடன்-உழைக்க-வேண்டும்-இல-கணேசன்-3116048.html
3116047 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் கலைப் போட்டிகள்: 70 பேர் பங்கேற்பு DIN DIN Monday, March 18, 2019 08:42 AM +0530 பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் 70 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம்  சார்பில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், 5 முதல் 8 வயது, 8 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்குள்பட்டவர், 12 வயதுக்கு மேற்பட்ட 16 வயதுக்குள்பட்டவர் ஆகிய 3 பிரிவுகளில் வாய்ப்பாட்டு (குரலிசை), நடனம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் பக்கிரிசாமி, பாரதி, ஹேமா, சுந்தரமூர்த்தி, முருகேசன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். 9 -12 வயதுக்குள்பட்ட பிரிவு, 12 -16 வயதுக்குள்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் முத ல்பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/பெரம்பலூரில்-கலைப்-போட்டிகள்-70-பேர்-பங்கேற்பு-3116047.html
3116046 திருச்சி பெரம்பலூர் மின் வாரியத்தில் காலியிடத்துக்கான பணி நியமனங்களை அதிகரிக்க வேண்டும் DIN DIN Monday, March 18, 2019 08:41 AM +0530 மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக் கிளை சிறப்புப் பேரவைக் கூட்டம், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்ட தலைவர் கே. கண்ணன் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர்கள் எஸ். அகஸ்டின்,  மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். 
கூட்டத்தில், கேங் மேன் பதவியை கள உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் நீண்ட நாள்களாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களைக் கொண்டு, கள உதவியாளர் பதவிக்கு ஆள்களை நியமிக்க வேண்டும். அரியலூர், பெரம்பலூர் என இரண்டு வெவ்வேறு மின் கோட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/மின்-வாரியத்தில்-காலியிடத்துக்கான-பணி-நியமனங்களை-அதிகரிக்க-வேண்டும்-3116046.html
3116045 திருச்சி பெரம்பலூர் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சாவு DIN DIN Monday, March 18, 2019 08:41 AM +0530 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர். 
குன்னம் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (56). இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த மூர்த்தி கடந்த 8 ஆம் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுவந்த அவர் சனிக்கிழமை இரவு அங்கு உயிரிழந்தார். அவரது சகோதரர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தவறி விழுந்த ஊராட்சி செயலர் சாவு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள எறையூர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (49). எறையூர் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, வேப்பந்தட்டையிலிருந்து எறையூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அனுக்கூர் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த சங்கர் பலத்த காயமடைந்தார். 
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/18/வெவ்வேறு-சம்பவங்களில்-இருவர்-சாவு-3116045.html
3115464 திருச்சி பெரம்பலூர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல் DIN DIN Sunday, March 17, 2019 03:35 AM +0530
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. 
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சி.ஐ.டி.யூ சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாவட்ட கன்வீனர் கே. மணிமேகலை தலைமை வகித்தார். 
மின் ஊழியர் சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராஜ்குமார், அமுதா, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ. கலையரசி பெண்களுக்கான சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், உழைக்கும் பெண்களுக்கு கண்ணியமான வேலை உத்திரவாதப்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு பலன்கள் அளிக்க வேண்டும். அனைத்து முறைசாரா மற்றும் விவசாய பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ நிதி ரூ. 18 ஆயிரம் உறுதிப்படுத்த வேண்டும். 
பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகமாக மாற்றிட வேண்டும். நகரங்களில் வீட்டுவசதி, பாதுகாப்பான போக்குவரதது வசதி ஏற்படுத்த வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், கட்டுமான சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி. ஆதிலட்சுமி, பி. தனம், அங்கன்வாடி சங்க ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் கே. மேனகா, ஆர். கொளஞ்சி, ஏ. தமிழரசி, முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெரம்பலூர், மார்ச் 16: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. 
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சி.ஐ.டி.யூ சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாவட்ட கன்வீனர் கே. மணிமேகலை தலைமை வகித்தார். 
மின் ஊழியர் சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராஜ்குமார், அமுதா, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ. கலையரசி பெண்களுக்கான சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், உழைக்கும் பெண்களுக்கு கண்ணியமான வேலை உத்திரவாதப்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு பலன்கள் அளிக்க வேண்டும். அனைத்து முறைசாரா மற்றும் விவசாய பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ நிதி ரூ. 18 ஆயிரம் உறுதிப்படுத்த வேண்டும். 
பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகமாக மாற்றிட வேண்டும். நகரங்களில் வீட்டுவசதி, பாதுகாப்பான போக்குவரதது வசதி ஏற்படுத்த வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், கட்டுமான சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி. ஆதிலட்சுமி, பி. தனம், அங்கன்வாடி சங்க ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் கே. மேனகா, ஆர். கொளஞ்சி, ஏ. தமிழரசி, முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/பெண்களுக்கான-இட-ஒதுக்கீட்டை-அமல்படுத்த-வலியுறுத்தல்-3115464.html
3115454 திருச்சி பெரம்பலூர் வீட்டில் புகுந்து திருட முயன்ற பெண் கைது DIN DIN Sunday, March 17, 2019 03:32 AM +0530
பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் 4 வீடுகளில் திருடிய 3 பெண்களில் பொதுமக்கள் விரட்டியதில் ஒரு பெண்ணைப் பிடித்தனர். தலைமறைவாகிய 2 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் கீழ வீதி பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் மனைவி ஜெரீனா பேகம். இவரது மகள் சபீனா பேபி. உறவினர் இறந்து விட்டதால் வீட்டைப் பூட்டிவிட்டு ஜெரீனா பேகம் சனிக்கிழமை வெளியூர் சென்றுவிட்டார். அவரது மகள் சபினா பேபி அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு  மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, வீடு, பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்டைவீட்டாரிடம் விசாரித்துள்ளார்.  
அச்சமயம், அதே தெருவில் வசித்துவரும் கலாவதி தனது வீட்டின் தாழ்ப்பாளை தாழிட்டபடி அண்டை வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டினுள் அடையாளம் தெரியாத பெண் புகுந்தார். இதையறிந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை விரட்டிப் பிடித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், பிடிபட்ட பெண்  லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த காலித் மனைவி சம்சாத் பேகம் (40) என்பதும், அவருடன் மேலும் 2 பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.   
அப்துல் ஹக்கீம் மனைவி ஜெரீனா பேகம் வீட்டிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடியதும், அவற்றைத் தப்பி ஓடிய 2 பெண்கள் எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. பின்னர், சம்சாத் பேகத்தை கைது செய்து போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/வீட்டில்-புகுந்து-திருட-முயன்ற-பெண்-கைது-3115454.html
3115453 திருச்சி பெரம்பலூர் அனுமதியின்றி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தால் நடவடிக்கை DIN DIN Sunday, March 17, 2019 03:32 AM +0530
அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் மேலும் பேசியது:      
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் அச்சக வெளியீட்டாளர்களை அணுகி துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடிக்க வாய்ப்புள்ளது. அதில், அச்சகத்தின் பெயர், முகவரி, பிரசுரங்களின் எண்ணிக்கையின் விவரம் இடம் பெற்றிருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு அரசியல் கட்சியை அல்லது வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவரத்தை பிரசுரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சிகள், வேட்பாளர் சம்மதமின்றி விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டால், அச்சக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். பொது இடங்கள், நகராட்சி பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதியில்லை. மீறி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு, வழக்குப் பதிந்து 6 மாதம்  சிறை தண்டனை அல்லது ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிமீறல்களுக்கு முரண்பாடாக செயல்படும் அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மீதும் கடு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் ஆணைய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அழகிரிசாமி.   கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பி. மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/அனுமதியின்றி-துண்டுப்பிரசுரங்கள்-விநியோகித்தால்-நடவடிக்கை-3115453.html
3115452 திருச்சி பெரம்பலூர் தேர்தல் விதிமீறல்களை கட்டணமில்லா தொலைபேசியில் புகார் அளிக்கலாம் DIN DIN Sunday, March 17, 2019 03:32 AM +0530
மக்களவை பொதுத்தேர்தலில் நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நகர், கிராமப் புறங்களிலும் அனுமதியின்றி பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இதர பரிசுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள், தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்தால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1800 425 2240 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். 
தொலைபேசியில் வரும் புகார்களைப் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்திட 2 பேர் கொன்ட 3 குழுக்கள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
மேலும், புகைப்படமாகவும், விடியோவாகவும் புகார் அனுப்ப இயஐஎஐக எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 
வாக்காளர் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை தெரிந்து கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/தேர்தல்-விதிமீறல்களை-கட்டணமில்லா-தொலைபேசியில்-புகார்-அளிக்கலாம்-3115452.html
3115451 திருச்சி பெரம்பலூர் வாகன தணிக்கை: பெரம்பலூர், அரியலூரில் ரூ. 2.50 லட்சம் பறிமுதல் DIN DIN Sunday, March 17, 2019 03:31 AM +0530
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை  தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.  
அப்போது, பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் மகன் பெரியசாமியின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1.50 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் (பொ) பி. மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 
அரியலூரில் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 600 பறிமுதல்: அரியலூரை அடுத்த விளாங்குடி ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்  தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சத்து 3ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்தி நகரைச் சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்துக்கான உரிய ஆணங்கள் இல்லாததால் அதனைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/வாகன-தணிக்கை-பெரம்பலூர்-அரியலூரில்-ரூ-250-லட்சம்-பறிமுதல்-3115451.html
3115450 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் இன்று 2 மணி நேரம் மின் தடை DIN DIN Sunday, March 17, 2019 03:31 AM +0530
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) காலை 9 முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பழைய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே. நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி, பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/பெரம்பலூரில்-இன்று-2-மணி-நேரம்-மின்-தடை-3115450.html
3115449 திருச்சி பெரம்பலூர் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை DIN DIN Sunday, March 17, 2019 03:31 AM +0530
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகள் சினேகா (17).  இவர், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குன்னம் அருகேயுள்ள கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தர்மராஜ் (19). பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இருவரும் உறவினர்கள் மற்றும் காதலர்கள். பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நேரத்தில் சினேகா, தர்மராஜுடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.  
இதையறிந்த பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சினேகா விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தர்மராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் தர்மராஜ் மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/விஷம்-குடித்து-இளம்பெண்-தற்கொலை-3115449.html
3115448 திருச்சி பெரம்பலூர் பொள்ளாச்சி விவகாரம்: பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, March 17, 2019 03:31 AM +0530
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, அக் கட்சியின் மாநில நிர்வாகி வழக்குரைஞர் பி. காமராஜ் தலைமை  கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் சம்பவத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு வழக்கு நடத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
மாவட்டத் தலைவர் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் வினோத், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் சத்குரு, பொறுப்பாளர்கள் சத்யா, பிரவீன், மகளிரணி பொறுப்பாளர் முத்துலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/17/பொள்ளாச்சி-விவகாரம்-பகுஜன்-சமாஜ்-கட்சி-ஆர்ப்பாட்டம்-3115448.html
3114836 திருச்சி பெரம்பலூர் பொள்ளாச்சி விவகாரம்: பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, March 16, 2019 09:35 AM +0530 பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தனித்தனியே  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கே.ஏ. மீரான் மொய்தீன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். 
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கலையரசி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மின் ஊழியர் சங்கத்தின் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி. தயாளன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/பொள்ளாச்சி-விவகாரம்-பெரம்பலூரில்-ஆர்ப்பாட்டம்-3114836.html
3114835 திருச்சி பெரம்பலூர் பாரிவேந்தர், தொல். திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட முடிவு DIN DIN Saturday, March 16, 2019 09:35 AM +0530 திமுக கூட்டணி சார்பில், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாரிவேந்தர் மற்றும் தொல். திருமாவளவனின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சியினர் பாடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டது. 
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், அக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். 
 தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் எம்.எம். அப்துல்லா, அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ். சிவசங்கர்  ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, மக்களவைத் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியினரின் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை வெற்றி பெறச் செய்வது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாதுகாக்க முயற்சிக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/பாரிவேந்தர்-தொல்-திருமாவளவன்-வெற்றிக்கு-பாடுபட-முடிவு-3114835.html
3114834 திருச்சி பெரம்பலூர் நிலத் தகராறில் 7 பேருக்கு சிறை தண்டனை DIN DIN Saturday, March 16, 2019 09:34 AM +0530 பெரம்பலூர் அருகே நிலத்தகராறு முன் விரோதம் காரணமாக விவசாயியை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து சார்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
 குன்னம் வட்டம், அத்தியூரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமன். அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயராமன். இருவருக்குமிடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கடந்த  2003, ஜூன் 30 ஆம் தேதி  ஜெயராமன் மற்றும் தங்கவேலு ஆகியோரை, ராமன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து ஜெயராமன் மனைவி அஞ்சலை அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட அத்தியூரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமன் (67),கிருஷ்ணமூர்த்தி (27), கிருஷ்ணசாமி மகன்கள் ரவி(எ) ரவிச்சந்திரன் (28), ராஜபூபதி(25), திருமாவளவன் மனைவி அலமேலு (38), நடராஜன் மகன் அன்புராஜ் (32), சுப்ரமணி (45) ஆகிய 7 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், ராமனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும்,  அலமேலுக்கு 2 ஆண்டு,  கிருஷ்ணசாமிக்கு 7 ஆண்டு தண்டனையும் ரவிச்சந்திரன், ராஜபூபதி, அன்புராஜன், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து சார்பு நீதிபதி ஸ்ரீஜா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வயது முதிர்வின் காரணமாக குறைவான தண்டனை பெற்ற ராமர் மற்றும் அலமேலு ஆகியோர் அபராதத் தொகையை உடனடியாக செலுத்திவிட்டு ஜாமினில் வெளியே வந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/நிலத்-தகராறில்-7-பேருக்கு-சிறை-தண்டனை-3114834.html
3114833 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி DIN DIN Saturday, March 16, 2019 09:34 AM +0530 பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், குன்னம்  சட்டப்பேரவைத்  தொகுதிகளின் மண்டல அலுவலர்களுக்கான பொறுப்புகள், பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்தப் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா பேசியது:  பெரம்பலூர், குன்னம்  தொகுதிகளில் 652 வாக்குச்சாவடி மையங்களும் 63 மண்டலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்து குடிநீர், கழிவறை, கைப்பிடியுடன் சாய்தளப் பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வேண்டிய சாலைகள், பாதைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். 
தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களைத் தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், குழுவினர், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் என யாரேனும் ஒருவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 1800 425 2240 எனும் கட்டணமில்லா தொலைபேசியிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.   தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்த அடிப்படைப்  பயிற்சியும், மக்களவை பொதுத்தேர்தல், 2019- இல் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் குறித்தும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் மற்றும்  வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/மக்களவைத்-தேர்தல்-மண்டல-அலுவலர்களுக்கான-பயிற்சி-3114833.html
3114832 திருச்சி பெரம்பலூர் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம் DIN DIN Saturday, March 16, 2019 09:34 AM +0530 பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில், வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான கலை நிகழ்ச்சியும், கையெழுத்து இயக்கமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். வாக்களிக்க யாரிடமும் பணம் வாங்காமல், விலைமதிப்பற்ற தனது வாக்கினை நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  தொடர்ந்து ஏராளமானோர் விழிப்புணர்வுப் பதாகையில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா, துணை வட்டாட்சியர் வனிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/வாக்காளர்-விழிப்புணர்வு-கையெழுத்து-இயக்கம்-தொடக்கம்-3114832.html
3114831 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் மூடப்படாத தலைவர்களின் சிலை, படங்கள் DIN DIN Saturday, March 16, 2019 09:33 AM +0530 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையிலும்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள், சிலைகள் மூடி மறைக்கப்படாமல் உள்ளன. 
குறிப்பாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் ஜெயலலிதாவின் உருவப் படம் காணப்படுகிறது. இந்த படத்தை அகற்றவோ, மறைக்கவோ அதிகாரிகள் முயற்சிக்கவில்லை.
இதேபோல, பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலின் முகப்பில் உலோகத்தில் பதிக்கப்பட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா எனும் பெயர், புறநகர் பேருந்து நிலைய வளாகம் அருகிலுள்ள அம்மா உணவகத்திலும்,  மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் இதுவரை மறைக்கப்படாமல் உள்ளது.  
தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள், பெயர்கள் ஆகியற்றை அகற்றுதல், மறைத்தல், அழித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது. அதில், அரசுக்கு சொந்தமான இடங்களுக்கு 24 மணி நேரம், பொது இடங்களுக்கு 48 மணி நேரம், தனியார் இடங்க ளுக்கு 72 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில்  இதற்கான நேரம் கடந்தும்அரசியல் தலைவர்களின் சிலைகள், படங்கள் மறைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/பெரம்பலூரில்-மூடப்படாத-தலைவர்களின்-சிலை-படங்கள்-3114831.html
3114830 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில்  ஐ.ஜே.கே-வினர் கொண்டாட்டம் DIN DIN Saturday, March 16, 2019 09:33 AM +0530 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவை தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, பெரம்பலூரில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர். 
மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்பை திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதையடுத்து, அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், தொண்டர்கள் புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர் ரெங்காஸ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், ஒன்றியத் தலைவர்கள் குமார், செந்தில்குமார், ரகுபதி, காமராஜ், நகர நிர்வாகிகள் அழகுவேல், பொற்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/16/பெரம்பலூரில்--ஐஜேகே-வினர்-கொண்டாட்டம்-3114830.html
3114033 திருச்சி பெரம்பலூர் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு: பெரம்பலூரில் 8,656 மாணவர்கள் எழுதினர் DIN DIN Friday, March 15, 2019 07:30 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வில் 8,656 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 45 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4,513 மாணவர்களும், 4,143 மாணவிகளும் என மொத்தம் 8,656 பேர் தேர்வு எழுதினர். 82 மாணவர்களும், 39 மாணவிகளும் என மொத்தம் 121 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வு மைய கண்காணிப்புப் பணியில் 37 முதன்மை கண்காணிப்பாளர்களும், 37 துறை அலுவலர்களும், 6 கூடுதல் துறை அலுவலர்களும், 49 பறக்கும் படை அலுவலர்களும், கேள்வித் தாள், விடைத்தாள் எடுத்துச் செல்ல 11 வழித்தட அலுவலர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
தனித்தேர்வர்களாக 168 பேர்:
இதேபோல, தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்காக 180 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். 
இதில், 12 மாணவர்கள் தேர்வு எழுத வருகை புரியாததால் 168 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 
வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய பொதுத்தேர்வில் கேள்வித்தாள் படிக்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சரி பார்க்க 5 நிமிடமும், விடையளிக்க 2.30 மணி நேரமும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/எஸ்எஸ்எல்சி-அரசுப்-பொதுத்தேர்வு-பெரம்பலூரில்-8656-மாணவர்கள்-எழுதினர்-3114033.html
3114032 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் DIN DIN Friday, March 15, 2019 07:30 AM +0530 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா.  
மாற்றுத்திறனுடையோர் வாக்களிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
முகாமைத் தொடக்க வைத்து மேலும் அவர் பேசியது: 
அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் எனும் நோக்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குத் தேவையான உதவிகளை பெறுவதற்காக பி.டபள்யூ.டி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள், தாங்கள் சார்ந்துள்ள வாக்குச்சாவடி குறித்த முகவரி, பாகம் எண் உள்ளிட்ட தகவல்களை வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவுசெய்து பெறலாம். 
வாக்களிக்க வருகை தரும் மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு வீல்சேர், பிரைலி உள்ளிட்ட உதவி உபகரணங்களை பதிவு செய்வதன் மூலமாக, வாக்களிக்கும் போது  பயன்படுத்திக்கொள்ள முடியும். 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களும் தங்களது பெயரை இச்செயலி மூலமாக வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றார் அவர். முகாமில், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பி. காமாட்சி ஆகியோர் உடனிருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/மக்களவைத்-தேர்தல்-வாக்குச்சாவடி-மையங்களில்-அடிப்படை-வசதிகள்-3114032.html
3114031 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை DIN DIN Friday, March 15, 2019 07:29 AM +0530 வரும் மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா தலைமை வகித்தார். 
இதில்,  பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர், கிராமப் புறங்களில் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடிக் கம்பங்களை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகள் கண்காணித்திடும் வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 
மேலும், பதற்றமான, நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விவரம், அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களில் மைய எண்ணை குறியிடுதல், அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சமர்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல், அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என். விஸ்வநாதன் (பெரம்பலூர்), லியாகத் (குளித்தலை), ரவிச்சந்திரன் (முசிறி), பாலாஜி (லால்குடி), ரமேஷ் (துறையூர்), பாலசுப்பிரமணியன் (மண்ணச்சநல்லூர்), தேர்தல் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/மக்களவைத்-தேர்தல்-உதவி-தேர்தல்-நடத்தும்-அலுவலர்களுடன்-ஆட்சியர்-ஆலோசனை-3114031.html
3114030 திருச்சி பெரம்பலூர் மனநலன் சீரான முதியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு DIN DIN Friday, March 15, 2019 07:28 AM +0530 பெரம்பலூரில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிகார் முதியவர் மருத்துவ சிகிச்சையில் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டார். 
        பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் அருகே மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் 65 வயதுள்ள முதியவர் சுற்றித்திருந்தார். இதையறிந்த, பெரம்பலூர் போலீஸார் கடந்த 6.6.2018-இல் அவரை மீட்டு வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநலன் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இயல்பு நிலைக்கு வந்த முதியவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிகார் மாநிலம், நவாடா மாவட்டம், சஜாஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த மிதிலேஷ் என்பதும், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் மிதிலேஷ் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். 
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலையில், அவரது குடும்பத்தினரிடம் முதியவர் மிதிலேஷ் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
நிகழ்ச்சியின்போது, வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/மனநலன்-சீரான-முதியவர்-குடும்பத்தினரிடம்-ஒப்படைப்பு-3114030.html
3114029 திருச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் DIN DIN Friday, March 15, 2019 07:27 AM +0530 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மூலப்பொருள் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் மூலக்கூறு பொருள் அறிவியலின் நவீன தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்கிற்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜப்பான் கிராஜீவேட் பொறியியல் கல்லூரி முனைவர் சிகிரோ சீகின், கருத்தரங்கை தொடக்கி வைத்து உயர் அழுத்த நுட்பங்களை பயன்படுத்தி, புதிய வெப்ப உற்பத்தி பொருள்களின் உருவாக்கம் குறித்து பேசினார்.  
திருச்சி பாரதிதாசன் பல்கலை. இயற்பியல்துறை பேராசிரியர் முனைவர் ஆறுமுகம், நவீன அறிவியலில் அதிமின் கடத்திகள் மற்றும் காந்த மூலப்பொருள்களின் போக்குகள் குறித்து விளக்க உரையாற்றினார். இந்திய மூலப்பொருள் ஆராய்ச்சி அமைப்பு சார்பில், இளம் அறிவியல் ஆராய்ச்சிக்கான விருது பூர்ணிமா, மணிகண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர்.  அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கண்ணன், கல்லூரி துணை முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ் உள்பட பலர் பங்கேற்றனர். முதுநிலை மாணவி காவ்யா வரவேற்றார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் உமா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/தனலட்சுமி-சீனிவாசன்-மகளிர்-கல்லூரியில்-தேசிய-கருத்தரங்கம்-3114029.html
3114028 திருச்சி பெரம்பலூர் பறக்கும் படையினர் அடையாள அட்டை அணிந்து பணியில் ஈடுபடக் கோரிக்கை DIN DIN Friday, March 15, 2019 07:27 AM +0530 தேர்தல் பிரிவு பறக்கும் படை அலுவலர்கள் அடையாள அட்டை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் பாதை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட மக்கள் பாதை அமைப்பு நிர்வாகி வரதராஜன், தேர்தல் ஆணையத்துக்கும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும் வியாழக்கிழமை அளித்த மனு: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபடும் பெரும்பாலான அலுவலர்கள், பணியின்போது அடையாள அட்டை அணிவதில்லை. இதனால், சோதனையின்போது முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்களையும், உண்மையான அலுவலர்களையும் அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.
மேலும், மர்ம நபர்கள் ஆங்காங்கே தேர்தல் பிரிவு பறக்கும்படை அலுவலர்களைப்போல் சோதனையில் ஈடுபட்டு பணம், பொருள் ஆகியவற்றை பறிக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் தேர்தல் பிரிவு பறக்கும் படை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும், அடையாள அட்டை அணிந்து பணி செய்வதை கட்டாயமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/பறக்கும்-படையினர்-அடையாள-அட்டை-அணிந்து-பணியில்-ஈடுபடக்-கோரிக்கை-3114028.html
3114027 திருச்சி பெரம்பலூர் "ஆண்டுதோறும் பின்தங்கிய 300 மாணவர்களுக்கு இலவசக் கல்வி' DIN DIN Friday, March 15, 2019 07:27 AM +0530 பொருளாதாரத்தில் பின்தங்கிய 300 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வியும், நலிவுற்ற வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்றார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்களை வியாழக்கிழமை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ஐ.ஜே.கே சார்பில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். நான் வெற்றி பெற்றால், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு வசதியாக இலவச குளிர்சாதன வாகனம் இயக்கப்படும். அல்லது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு அவர்களது இடத்துக்கே சென்று விளைபொருள்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய 300 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வியும், நலிவுற்ற வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்றார் அவர்.  பேட்டியின்போது, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், பி. அன்புதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/ஆண்டுதோறும்-பின்தங்கிய-300-மாணவர்களுக்கு-இலவசக்-கல்வி-3114027.html
3114026 திருச்சி பெரம்பலூர் பொள்ளாச்சி சம்பவம்: மறியலில் ஈடுபட்ட  வி.சி கட்சியினர் 17 பேர் கைது DIN DIN Friday, March 15, 2019 07:26 AM +0530 பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 17 பேரைப் பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை குறி வைத்து கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் நெருக்கமாகப் பழகி, அவர்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும்,  தங்களது செல்பேசியில் விடியோ காட்சிகளாக எடுத்து மிரட்டியுள்ளனர்.  இக்கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், அண்மையில் அளித்த புகாரைத் தொடர்ந்து 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்ய வேண்டுமென சில அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், பாலியல் விவகாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்யவேண்டும். இச்சம்பவத்துக்கு பின்னணியில் உள்ள ஆளும் கட்சியினர் மீது வழக்குப் பதிந்து, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்த போலீஸார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/15/பொள்ளாச்சி-சம்பவம்-மறியலில்-ஈடுபட்ட--விசி-கட்சியினர்-17-பேர்-கைது-3114026.html
3113543 திருச்சி பெரம்பலூர் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் ஆய்வு DIN DIN Thursday, March 14, 2019 08:51 AM +0530 ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
வரும் மக்களவைப் பொதுத்தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, விடியோ வியூவிங் குழு, சேவை மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்துக்காக உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள், செய்திகள் வெளியிடப்படுவதை கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்று உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பிட வசதியாக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. 
இக்குழு மூலமாக செய்தித்தாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார விளம்பரங்களைக் கண்காணித்து, அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது, கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா.   
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், தேர்தல் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/தேர்தல்-கட்டுப்பாட்டு-அறை-செயல்பாடுகள்-ஆய்வு-3113543.html
3113542 திருச்சி பெரம்பலூர் தேர்தல் விதிமீறல்களை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம் DIN DIN Thursday, March 14, 2019 08:51 AM +0530 பெரம்பலூர் தொகுதி மக்களவை தேர்தலில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றால் உரிய ஆதாரங்களுடன் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா.  
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரம் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விதிமீறல், முறைகேடு குறித்து புகைப்படம், வீடியோ பதிவுகளை உரிய ஆதாரங்களுடன் பதிவேற்ற செய்ய 94441 23456 எனும் வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல் )எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவித்தால், மாவட்ட நிர்வாகம் மூலம் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வே. சாந்தா.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/தேர்தல்-விதிமீறல்களை-கட்செவி-அஞ்சலில்-தெரிவிக்கலாம்-3113542.html
3113541 திருச்சி பெரம்பலூர் வாகனச் சோதனையில் ரூ. 2.95 லட்சம் ரொக்கம் பறிமுதல் DIN DIN Thursday, March 14, 2019 08:50 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழ மை நடைபெற்ற தேர்தல் பிரிவு பறக்கும் படையினரின் வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.95 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வம் தலைமையிலான பறக்கும் படையினரின் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (38),  உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ. 1.73 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். 
இதேபோல, களரம்பட்டி அருகே பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் மாயக்கிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரம்பலூர் கல்யாண் நகரைச் சேர்ந்த ஆனந்தி (47),   உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ .1.22 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். 
இந்தத் தொகை, குன்னம் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் சமர்பிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/வாகனச்-சோதனையில்-ரூ-295-லட்சம்-ரொக்கம்-பறிமுதல்-3113541.html
3113540 திருச்சி பெரம்பலூர் ஏப்.16 வரை எடை கருவிகளுக்கு முத்திரையிடும் முகாம் DIN DIN Thursday, March 14, 2019 08:50 AM +0530 பெரம்பலூரில் எடையளவு கருவிகளுக்கு முத்திரையிடும் முகாம் ஏப். 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது யூசுப், புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் மார்ச் 12 முதல் ஏப். 16 ஆம் தேதி வரை எடையளவு கருவிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கு முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுக்கான முத்திரையிடும் முகாம் நடைபெறுகிறது.  
இந்த முகாமில், வணிகர்கள் தங்களது எடையளவு கருவிகளான மின்னணு தராசு, மேசை தராசு, விட்ட தராசு, எடைகற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் கொண்டுவந்து முத்திரையிட்டு செல்லலாம்.  
முத்திரையிடாத எடையளவு கருவிகளை பயன்படுத்தினால், சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் எடையளவு கருவிகளை பறிமுதல் செய்து ரூ.5 
ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/ஏப்16-வரை-எடை-கருவிகளுக்கு-முத்திரையிடும்-முகாம்-3113540.html
3113539 திருச்சி பெரம்பலூர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது DIN DIN Thursday, March 14, 2019 08:50 AM +0530 எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 14) மதியம் தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 8,777 பேர் எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 14) மதியம் தொடங்குகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 4,595 மாணவர்களும், 4,182 மாணவிகளும் என மொத்தம் 8,777 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில், 45 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
தேர்வு மைய கண்காணிப்பு பணியில் 37 முதன்மை கண்காணிப்பாளர்கள், 37 துறை அலுவலர்கள், 6 கூடுதல் துறை அலுவலர்கள், 49 பறக்கும் படை அலுவலர்கள், கேள்வித் தாள், விடைத்தாள் எடுத்துச் செல்ல 11 வழித்தட அலுவலர்கள்  தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  
வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கும் தமிழ் பாட தேர்வு மாலை 4.45 மணிக்கு நிறைவடையும். கேள்வித்தாள் படிக்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சரி பார்க்க 5 நிமிடமும், விடையளிக்க 2.30 மணி நேரமும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
அரியலூர்: தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 10,935 மாணவர்களும், 334 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் உடையார்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டத்தில் உள்ள 173 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 5,381 மாணவர்கள், 5,554 மாணவிகள் என 10,935 பேரும், தனித்தேர்வர்கள் 334 பேரும் 49 மையங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வியாழக்கிழமை எழுதுகின்றனர்.
49 மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர், துணை அலுவலர் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் என 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லவும், தேர்வு முடிந்து விடைத்தாள்களை பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டுவரவும் அரியலூர் கல்வி மாவட்டத்தில் 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 6 வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/பத்தாம்-வகுப்பு-அரசு-பொதுத்-தேர்வு-இன்று-தொடங்குகிறது-3113539.html
3113538 திருச்சி பெரம்பலூர் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு   கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு மையம் DIN DIN Thursday, March 14, 2019 08:49 AM +0530 பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மையத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் மாவட்டத்தில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் நடத்தும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு அரசு பொத்தேர்வு மாணவ, மாணவிகள் அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று தேர்வெழுதி 
வந்தனர்.  
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முதலாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுதேர்வு மையம் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 
இங்கு, ஆல்மைட்டி வித்யாலயா, ஹேன்ஸ் ரோவர், கோல்டன் கேட்ஸ் மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 111 பேரும், பிளஸ் 2 மாணவர்கள் 28 பேரும் தேர்வுவெழுதி வருகின்றனர். 
இத் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, தேர்வு மைய கண்கானிப்பாளர் சர்மிளா, பள்ளி துணை முதல்வர் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/சிபிஎஸ்சி-பள்ளி-மாணவர்களுக்கு---கேந்திரிய-வித்யாலயா-பள்ளியில்-தேர்வு-மையம்-3113538.html
3113537 திருச்சி பெரம்பலூர் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம் DIN DIN Thursday, March 14, 2019 08:49 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ஸவர் தண்டாயுதபாணிக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், பாடாலூர், பெரம்பலூர், துறையூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு அலங்கார வாகனத்தில் எழுந்தருளிய தண்டாயுதபாணி திருவீதி உலா நடைபெற்றது.  
தொடர்ந்து, நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.  7 ஆம் திருவிழாவான மார்ச் 19 ஆம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 20 ஆம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெறுகிறது.  
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் 21 ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு தொடங்கி, பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்படும் திருத்தேர் 22 ஆம் தேதி மாலை நிலைக்கு வந்தடைகிறது. விழாவை முன்னிட்டு, பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மார்ச் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ம. யுவராஜு, தக்கார் கே. பாரதிராஜா தலைமையிலான கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பாலமுருகன் கோயிலில்... பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 39 ஆவது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு அனுக்கை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.  விழாவையொட்டி, புதன்கிழமை இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8 மணிக்கு சுவாமிக்கு அபிசேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.  19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் பாலமுருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தை, சுத்ரத்தின சிவாச்சாரியார் மற்றும் அர்ச்சகர் ரமேஷ் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். 21 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் சப்பரத் தேரோட்டம் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீர் விடையாற்றி விழா வுடன் திருவிழா நிறைவடைகிறது. 28 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/14/தண்டாயுதபாணி-கோயில்-பங்குனி-உத்திரத்-திருவிழா-தொடக்கம்-3113537.html
3112991 திருச்சி பெரம்பலூர் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கை: அரியலூர், பெரம்பலூரில் ரூ. 13.70 லட்சம் பறிமுதல் DIN DIN Wednesday, March 13, 2019 10:21 AM +0530 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கார் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டுசென்ற ரூ. 13.70 லட்சம் மதிப்பிலான ரொக்கம், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.38 லட்சம் மதிப்புள்ள எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்களைத் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம், பேரளி சுங்கச்சாவடி அருகே, ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது, உத்தரப் பிரதேசம் மாநிலம், உசேன்பூர் பகுதியை சேர்ந்த ஆசிக் கான் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 1.38 லட்சம் மதிப்பிலான எல்.இ.டி தொலைக்காட்சிப் பெட்டிகள், ஸ்பிக்கர் ஆகிய பொருள்களைப் பறிமுதல் செய்தனர். 
இதேபோல், குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த கட்டையன்குடிக்காட்டில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படகாத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் மாவட்டம், சொர்ணகுடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 96,500 ரொக்கம் மற்றும் ரூ. 6.5 லட்சம் மதிப்பிலான 16 கிலோ வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்தனர்.  பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்களை குன்னம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர். 
ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல்:  ஜயங்கொண்டம் அடுத்த மதனத்தூர் கொள்ளிடம் அருகே ஜயங்கொண்டம் வட்டாட்சியரும், தேர்தல் நிலைக் குழுவினருமான சசிக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதா தியோஸ் ரொக்கத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது.  இதையடுத்து, அதிகாரிகள் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/பறக்கும்-படையினர்-வாகனத்-தணிக்கை-அரியலூர்-பெரம்பலூரில்-ரூ-1370-லட்சம்-பறிமுதல்-3112991.html
3112852 திருச்சி பெரம்பலூர் புது மணப்பெண் தீக்குளித்து சாவு DIN DIN Wednesday, March 13, 2019 09:06 AM +0530 பெரம்பலூர் அருகே திருமணமான 25 நாள்களில் புது மணப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். 
பெரம்பலூர் அருகேயுள்ள வரகுபாடி கிராமம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகள் புனிதவள்ளி (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (25). ஆட்டோ ஓட்டுநர். இருவருக்கும், கடந்த 25 நாள்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தந்தை வீட்டுக்குச் சென்ற புனிதவள்ளி, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் அங்குசென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 25 நாள்களே ஆவதால், வரதட்சினை காரணமா என வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் விசாரிக்கிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/புது-மணப்பெண்-தீக்குளித்து-சாவு-3112852.html
3112851 திருச்சி பெரம்பலூர் வாகனத் தணிக்கையில்  ரூ.98 ஆயிரம் பறிமுதல் DIN DIN Wednesday, March 13, 2019 09:06 AM +0530 பெரம்பலூர் அருகே வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 98 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில், பறக்கும் படை அலுவலர் மாயக்கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் கிருஷ்ணாபுரத்தில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உரிய ஆவணங்களின்றி ரூ. 98 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலர்கள் பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என். விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/வாகனத்-தணிக்கையில்--ரூ98-ஆயிரம்-பறிமுதல்-3112851.html
3112850 திருச்சி பெரம்பலூர் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, March 13, 2019 09:06 AM +0530 பொள்ளாச்சி பகுதியில் பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் மீது, பாரபட்சமின்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், துறைமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். 
கட்சி நிர்வாகிகள் அ.க. தமிழாதன், செல்லப்பன், மன்னர்மன்னன், கலையரசன், கிருஷ்ணகுமார், ஸ்டாலின், உதயகுமார், ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநில நிர்வாகிகள் வீர. செங்கோலன், ராசித் அலி, கா.அ. தமிழ்குமரன், அண்ணாதுரை ஆகியோர் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.   கூட்டத்தில், பொள்ளாச்சி பகுதியில் பெண்களை சீரழித்த பாலியல் குற்றவாளிகள் மீது, தமிழக அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிதம்பரம் மக்களவை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். கட்சித் தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
பெரம்பலூர் ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர் வரவேற்றார். நகரச் செயலர் தங்க. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/பாலியல்-குற்றவாளிகள்-மீது-நடவடிக்கை-எடுக்க-வலியுறுத்தல்-3112850.html
3112849 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா DIN DIN Wednesday, March 13, 2019 09:05 AM +0530 பெரம்பலூரில், பெரியார் முழக்கம் எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஓவியர் கி. முகுந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரியாரியல் அறிஞர் வே. ஆணைமுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் 
முழக்கம் எனும் நூலை வெளியிட, அதை பெற்றுக்கொண்டார் தந்தை ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கி. வரதராஜன்.
மதிமுக அமைப்புச் செயலர் ஆ. வந்தியத்தேவன், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் ச.அ. பெருநற்கிள்ளி, அக்ரி ஆறுமுகம், கவிஞர் அகவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  தொடர்ந்து, நூலாசிரியர் கு. வரதராசன் ஏற்புரை வழங்கினார். 
விழாவில், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/பெரம்பலூரில்-நூல்-வெளியீட்டு-விழா-3112849.html
3112848 திருச்சி பெரம்பலூர் மார்ச் 16, 17-இல் மாவட்ட கலைப்போட்டிகள் DIN DIN Wednesday, March 13, 2019 09:05 AM +0530 அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து, மண்டல கலை பண்பாட்டு மைய இணை இயக்குநர் குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 16 ஆம் தேதியும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.  
5 முதல் 8 வயது, 8 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்குள்பட்டவர் பிரிவு, 12 வயதுக்கு மேற்பட்ட 16 வயதுக்குள்பட்டவர் ஆகிய 3 பிரிவுகளில்  வாய்ப்பாட்டு (குரலிசை), நடனம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறுகிறது.   குரலிசை போட்டியில், கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். திரையிசைப் பாடல்களுக்கு அனுமதியில்லை. கிராமிய நடனப் போட்டியில் தமிழக கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்களில் பங்கேற்கலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும். நடனத்துக்கான பாடலை குறுந்தகட்டில் (சி.டி.யில்) கொண்டு வரவேண்டும்.   நடனப் போட்டியில் பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களில், முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் பங்கேற்கலாம். நடனத்திற்குரிய பாடல் குறுந்தகட்டைக் கொண்டுவர வேண்டும்.  ஓவியப் போட்டிக்கு 40 செ.மீ-க்கு 30 செ.மீ அளவிலான ஓவியத்தாள்கள் உள்பட தேவையான வரைபொருள்களை மாணவர்கள் கொண்டுவர வேண்டும். குழுவாக பங்கேற்க முடியாது.   போட்டியாளர்கள் தங்களது பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பயிலும் பள்ளியில் இருந்து சான்றிதழ் கொண்டுவந்து, போட்டி நாளில் காலை 9.30 மணிக்கு முன்னதாக வந்து தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/மார்ச்-16-17-இல்-மாவட்ட-கலைப்போட்டிகள்-3112848.html
3112847 திருச்சி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம் DIN DIN Wednesday, March 13, 2019 09:05 AM +0530 பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மார்ச் 20-இல் தேரோட்டம் நடைபெறுகிறது. 
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபால சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் வைத்து, கொடிமரத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்ஸவத்தை, கோயில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில், சென்னை திருமழிசை ஆழ்வார் திருக்கோயில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹம்ச வாகனத்தில் திருவீதிவுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்திலும், வியாழக்கிழமை பல்லக்கு அனுமந்த வாகனத்திலும், 15 ஆம் தேதி பல்லக்கு சேஷ வாகனத்திலும், 16 ஆம் தேதி: உதய கருட சேவை, வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 17 ஆம் தேதி பல்லக்கு யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
திருக்கல்யாண உற்ஸவம் 18 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா, 19 ஆம் தேதி வெண்ணெய்த்தாழி உற்ஸவம், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.  விழாவின்முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் மார்ச் 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. 
21 ஆம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியுடன் தொடங்கி  27 ஆம் தேதி 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/13/மதனகோபால-சுவாமி-கோயிலில்-பங்குனி-உத்திர-திருவிழா-தொடக்கம்-3112847.html
3112316 திருச்சி பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலை.  கல்லூரியில் கருத்தரங்கம் DIN DIN Tuesday, March 12, 2019 09:24 AM +0530 பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பாக ஏ2 புரதம் செரிந்துள்ள நாட்டுப் பசும்பாலின் முக்கியத்துவம் குறித்த ஒருநாள் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் என். ஜானகிராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் வி. நித்யா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஏ1 பசும்பாலின் தீமைகள், நாட்டுப் பசுக்களிடமிருந்து பெறப்படும் ஏ2 புரதம் கொண்ட பாலின் மருத்துவ நன்மைகள், புற்றுநோய் குணப்படுத்துதலில் நாட்டுப் பசும்பாலின் முக்கியத்துவம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கி பேசினார். உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் கே. செந்தில்குமார் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர். மாலதி வரவேற்றார். உயிர் தொழில்நுட்பவியல் பேராசிரியர் முனைவர் கே. சந்திரசேகர் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/12/பாரதிதாசன்-பல்கலை--கல்லூரியில்-கருத்தரங்கம்-3112316.html
3112315 திருச்சி பெரம்பலூர் குடிநீர் கேட்டு ஆட்சியரகம் வந்த மக்கள் DIN DIN Tuesday, March 12, 2019 09:24 AM +0530 தூய்மையான குடிநீர் வழங்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், குரும்பாபாளையம் கிராமத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்காகவும், அங்குள்ள ஏரி தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், மண், தூசி ஆகியவை கலந்து பழுப்பு நிறத்தில் காணப்படும் ஏரி தண்ணீரை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மாசு நிறைந்த தண்ணீரை பயன்படுத்துவதால், பலருக்கு தொண்டை வலி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். 
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன், பாட்டில்களில் மாசு நிறைந்த தண்ணீருடன் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.  
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மனுக்களை அலுவலர்கள் நேரில் வாங்க மறுத்தனர். இருப்பினும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரி மூலம் தூய்மையான குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/12/குடிநீர்-கேட்டு-ஆட்சியரகம்-வந்த-மக்கள்-3112315.html
3112314 திருச்சி பெரம்பலூர் தேனூர் நந்திகேசுவரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் DIN DIN Tuesday, March 12, 2019 09:23 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமையான மகா சம்பத் கெளரி உடனுறை நந்திகேஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை பெய்து, விவசாயம் செழித்து, தனதானியம் பெருகிடவும், ஏழ்மை நிலை நீங்கி மக்கள் சுபிட்ஷமாக வாழவும் வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.  
இதில், திருச்சி பூலோகநாத சுவாமி கோயில் வார வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த ஆன்மிக மெய்யன்பர்கள் சார்பில், திருஞான சம்மந்தர் அருளிய மழை வேண்டுதல் பதிகம் பாராயணம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் லால்குடி சந்திரமோகன் முற்றோதல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, பக்தர்களுக்கு திருவாசக பக்தி நூலை இலவசமாக வழங்கினார்.   பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி,ஞூ அம்பாள் சன்னதி, கணபதி, சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, புது வஸ்திரங்கள் சாற்றப்பட்டன. பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டு, மகுடங்கள் கூறி நிறைவு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதலைப் பாடி தரிசனம் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/12/தேனூர்-நந்திகேசுவரர்-கோயிலில்-திருவாசகம்-முற்றோதல்-3112314.html
3112313 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல்: பதட்டமான வாக்குச்சாவடிகளை  கண்காணிக்க கூடுதல் போலீஸார் DIN DIN Tuesday, March 12, 2019 09:23 AM +0530 பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ள 73 வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் மற்றும் கூடுதல் போலீஸார் நியமனம் செய்யபட உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: 
   பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தலை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் பதட்டமானவை என அடையாளம் கண்டறியப்பட்ட 73 வாக்குச் சாவடிகளை கண்காணிக்க தலா ஒருவர் என 73 மத்திய அரசு அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். 
வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபட 3,200 அலுவலர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிமம் பெற்று 95 நபர்கள் துப்பாக்கி வைத்துள்ளனர். இதில், 17 பேர் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர, மற்ற அனைவரும் துப்பாக்கிகளை அந்தந்த காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 56 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டனர். மீதியுள்ள 22 பேர் செவவாய்க்கிழமைக்குள் (மார்ச் 12) ஒப்படைக்க வேண்டும். 
அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் நபர்களது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும்.
கட்டணமில்லா தொலைபேசி 1800 425 2240 எனும் எண்ணுக்கு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும், இந்த எண்ணில் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர் சாந்தா.
பேட்டியின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் ஆ. அலுவலர் ஆ.அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/12/மக்களவைத்-தேர்தல்-பதட்டமான-வாக்குச்சாவடிகளை-கண்காணிக்க-கூடுதல்-போலீஸார்-3112313.html
3112312 திருச்சி பெரம்பலூர் மக்களவைத் தேர்தல்: தேர்தல் நடத்தை விதிளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை DIN DIN Tuesday, March 12, 2019 09:23 AM +0530 மக்களவைத் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியரும், மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது: 
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதையொட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் கட்சிக் கொடிகள், கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அகற்ற வேண்டும்.  
அரசியல் கட்சி விளம்பரங்கள், தட்டிகள், பதாகைகள், கொடிகள், கம்பங்கள் உள்ளிட்ட பிற இனங்கள் அகற்றப்பட்டமைக்கான அறிக்கையை நாள்தோறும் மாலை 6 மணிக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு சமர்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் எந்தவொரு அலுவலர் மீதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்படும். 
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பெரம்பலூர், குன்னம் சட்டபபேரவை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள், தேர்தல் பிரசாரங்களை கண்காணிக்க 2 விடியோ கண்காணிப்பு குழு அமைக்கபட்டு தங்களது பணியைத் தொடங்கியுள்ளனர். எனவே, மக்களவைத் தேர்தலை அனைத்து அலுவலர்களும் சிறப்பான முறையில் நடத்தி முடித்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெயினுலாவுதீன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன் உள்ளிட்ட மாவட்ட நிலையிலான அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
முன்னுரிமை அடிப்படையில் பிரசாரத்துக்கு அனுமதி :  தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அரசியல் கட்சியினருக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சேவை மையங்களைத் தொடர்பு கொண்டு உரிய விளக்கங்களைப் பெறலாம். 
அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடிகளை அகற்றிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ரீதியிலான அமைப்புகளின் கொடிகள், கொடி கம்பங்களை உடனடியாக மறைக்க அல்லது அகற்ற வேண்டும்.தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது காவல் துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக ஊர்வலம் மற்றும் வாகன அனுமதி பெற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பித்து, அதற்கான அனுமதி கடிதங்களைப் பெறலாம். அந்த வகையில், முதலில் வருபவருக்கே முன்னுரிமை எனும் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தனியார் இடங்களில் கட்சி அலுவலகங்கள் அமைப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்றார் அவர்.  கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/12/மக்களவைத்-தேர்தல்-தேர்தல்-நடத்தை-விதிளை-மீறுவோர்-மீது-கடும்-நடவடிக்கை-3112312.html
3111525 திருச்சி பெரம்பலூர் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் DIN DIN Monday, March 11, 2019 03:21 AM +0530
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டுமென துப்புரவு தொழிலாளர்கள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிஐடியூ அமைப்பைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
கூட்டத்தில், மாதச் சம்பளம் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தனியார் ஒப்பந்தப் பணியை ரத்து செய்து விட்டு, அரசே பணி வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். சம்பளம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பணியின் போது விபத்து நிகழ்ந்து உயிரிழந்தால் அல்லது, பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். 
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
சங்கச் செயலர் பொன்ராஜ் வரவேற்றார். பொருளாளர் மதுரை வீரன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/துப்புரவு-பணியாளர்களுக்கு-குறைந்தபட்ச-ஊதியம்-வழங்க-வேண்டும்-3111525.html
3111524 திருச்சி பெரம்பலூர் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகள் அளிப்பு DIN DIN Monday, March 11, 2019 03:21 AM +0530
பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜய பிரபாகரன் பங்கேற்றார். 
பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில், குன்னம் அருகேயுள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல்வாடி, எழுமூர், சித்தளி, ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்று விழா, 
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சி நிர்வாகியின் இல்ல காதணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார். முன்னதாக, சிறுகுடல் கிராமத்தில் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள், விவசாயிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/தேமுதிகவினர்-நலத்திட்ட-உதவிகள்-அளிப்பு-3111524.html
3111523 திருச்சி பெரம்பலூர் வாக்குகளை உறுதி செய்யும் கருவிகளின் செயல்பாடுகள் ஆய்வு DIN DIN Monday, March 11, 2019 03:20 AM +0530
பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ள வாக்குகளை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடுகள் குறித்த முதல்கட்ட பரிசோதனையை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அளித்த வாக்குகளை உறுதி செய்யும் கருவி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், இக்கருவியின் செயல்பாடுகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள இக்கருவியின் செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் குறைபாடுடைய கருவிகளுக்குப் பதிலாக புதிதாக 150 கருவிகள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக பெறப்பட்ட கருவிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாரத் மின்னணு நிறுவனத்தின் அலுவலர்களின் முன்னிலையில், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், வட்டாட்சியர்கள் பாரதிவளவன் (பெரம்பலூர்), ஷாஜஹான் (ஆலத்தூர்), தி. கவிதா (வேப்பந்தட்டை), சித்ரா (குன்னம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/வாக்குகளை-உறுதி-செய்யும்-கருவிகளின்-செயல்பாடுகள்-ஆய்வு-3111523.html
3111522 திருச்சி பெரம்பலூர் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து DIN DIN Monday, March 11, 2019 03:20 AM +0530
பெரம்பலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. 
பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:  
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி வளாகங்கள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் முகாம் நடைபெற்றது. சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப் பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1,548 பணியாளர்கள் ஈடுபட்டனர் என்றார் அவர். இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/50-ஆயிரம்-குழந்தைகளுக்கு-போலியோ-சொட்டு-மருந்து-3111522.html
3111521 திருச்சி பெரம்பலூர் அனைத்து கட்சிகளும்  பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் DIN DIN Monday, March 11, 2019 03:20 AM +0530
அனைத்துக் கட்சிகளும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன். குமார்.  
பெரம்பலூரில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: 
இந்தியாவில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை இன்னும் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் கொண்டு வரவேண்டும். என்றார் அவர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/அனைத்து-கட்சிகளும்--பெண்களுக்கான-இட-ஒதுக்கீட்டை-அளிக்க-வேண்டும்-3111521.html
3111520 திருச்சி பெரம்பலூர் ஆப்பூரான் நல்லேந்திர சுவாமி கோயில் குடமுழுக்கு DIN DIN Monday, March 11, 2019 03:20 AM +0530
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி, அருள்மிகு கனகசபை  கோயில் சுமார் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.  இக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமான மகா சங்கல்பம், புண்யவாகனம், பூமி பூஜை, அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, அக்னி பிரதிஷ்டை, யாகசாலை ப்ரவேசம், ப்ரதான ஹோமம், மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு புண்யாஹவாசனம், காலசாந்தி, திருவாராதனம், உற்ஸவர் அபிஷேகமும்  மாலை 6 மணிக்கு காவிரி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக பாலக்கரை பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு விஷ்வரூபம், மூலமந்திர ஹோமம், திரவ்யா ஹூதி, மஹா பூரணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடுதீபாராதனை ப்ரசாத விநியோகமும், 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார் சுவாமிகள், பெரம்பலூர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஆப்பூரான் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/ஆப்பூரான்-நல்லேந்திர-சுவாமி-கோயில்-குடமுழுக்கு-3111520.html
3111519 திருச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி DIN DIN Monday, March 11, 2019 03:19 AM +0530
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வேலைவாய்ப்புத் துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
பயிற்சியை தொடக்கி வைத்து, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பேசியது:
பொறியியல் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தான் பயிலும் துறையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நுண்ணிய அறிவை பெற்று வெளியே செல்லும்போது அனைத்து மாணவர்களும் பணி நியமன ஆணைய பெற்று செல்ல வேண்டும் என்பதே என் கனவு என்றார் அவர். 
தொடர்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேலாளர்கள் ஐசக் பட்டுராஜா, ஆறுமுகம், சேஷாத்ரி மோகன், கிரிகோரி மனோஜ், டீனா மேரி தாஸ் மற்றும் ஐசிடி அகாதெமி மாநில அலுவலர் பூர்ண பிரகாஷ் ஆகியோர் நிறுவனங்களின் தேவைகளை மாணவர்கள் பூர்த்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினர். 
நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி முதல்வர்கள் துரைராஜ், இளங்கோவன், சேகர், வேல்முருகன் மற்றும் மாலதி மற்றும் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மூன்றாமாண்டு மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/தனலட்சுமி-சீனிவாசன்-பொறியியல்-கல்லூரியில்-புத்தாக்கப்-பயிற்சி-3111519.html
3111518 திருச்சி பெரம்பலூர் கதையாடல்கள் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகின்றன DIN DIN Monday, March 11, 2019 03:19 AM +0530
கதையாடல்கள் துணிச்சலையும், நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன என்றார் திருச்சி உளவியல் நிபுணர் த. லீமாபீட்டர்.  
பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கதையாடல் அரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:  
கதையாடல்கள் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. புதிய சிந்தனைகளுக்கு வித்திடுகின்றன. உலக பரிணாம வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. புதிய பாதைகளுக்கு வழிவகுக்கின்றன. தன்னம்பிக்கை தருவதோடு, ஏமாறாமல் வாழும் வழிகளைச் சொல்கின்றன. நமது மரபினைப் புதுப்பிக்கின்றன. 
மொழியை உயர்வு செய்து, இலக்கிய வளம் சேர்க்கின்றன. மண்ணையும், மொழியையும் நேசிக்க வற்புறுத்துகின்றன. தீயப் பழக்கங்களிலிருந்து நம்மை மடை மாற்றம் செய்கின்றன. ஒரு பொருள் குறித்த இருபக்க நியாயங்களைப் புலப்படுத்துகின்றன. இதயத்திற்கு மயில்தோகை தடவும் உணர்வைத் தருகின்றன. துணிச்சலையும் நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன. நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தன. நமது உணர்வுகளை மீட்டும் வலிமை படைத்தவை கதையாடல்கள் தான் என்றார் அவர்.   
   நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் பேசியது: 
மனிதனின் அன்றாட வாழ்க்கை கதைகளில் தான் கடத்தப்படுகிறது. தமிழ்க் கதையாடல்கள் மனித மேன்மையை வெளிப்படுத்துவனவாக, மனிதனை மேம்படுத்துவனவாக உள்ளன என்றார் அவர்.  
அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் த. தனுஷ்கோடி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முனைவர் பெ. பாரதி ஆறுமுகம், தலைமை ஆசிரியை மலர்கொடி, சமூக ஆர்வலர் சாரங்கபாணி, வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் தே. தேவன்பு, ஆசிரியர் அ. சுரேஷ்குமார், ஆங்கிலப் பேராசிரியர் நா. செளந்தராஜன், கவிஞர் கெளதம் நீல்ராஜ், அரியலூர் அரசு கலைக் கல்லூரி ஆய்வியல் நிறைஞர் ஆய்வாளர் சிவாஜி ஆகியோர், சமகாலக் கதையாடல்கள் எனும் தலைப்புகளில் பேசினர். 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் மதன்ராஜ் வரவேற்றார். கவிஞர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/கதையாடல்கள்-நேர்மறை-எண்ணங்களை-ஏற்படுத்துகின்றன-3111518.html
3111517 திருச்சி பெரம்பலூர் சாரண, சாரணீயர் பயிற்சி முகாம் நிறைவு DIN DIN Monday, March 11, 2019 03:19 AM +0530
பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் சாரண, சாரணீயருக்கான சிறப்பு முகாம், பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரணப் பயிற்சி மையத்தில் வெள்ளி, சனிக்கிழமை  நடைபெற்றது. 
களரம்பட்டி ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர், ஒகளூர், ஈச்சம்பட்டி, பொம்மனப்பாடி, நத்தக்காடு, லாடபுரம், பசும்பலூர், ஆலம்பாடி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 163 சாரணர்கள், 125 சாரணீயர்கள் என மொத்தம் 288 பேர் பங்கேற்றனர். 
முகாம் தலைவராக மதுரை மாவட்டப் பயிற்றுநர் பீட்டர் ஆரோக்கியராஜ், உதவி பயிற்றுநர்களாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரணாளர் அந்தோணிசாமி, முசிறி கல்வி மாவட்ட பயிற்சி ஆணையர் வேணுகோபால், பெரம்பலூர் கல்வி மாவட்ட பயிற்சி ஆணையர்கள் செல்வராசு, கல்பனா, மாவட்ட அமைப்பு ஆணையர்கள் காமராசு, ரேவதி, வேப்பூர் கல்வி மாவட்ட அமைப்பு ஆணையர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் குணாளன் ஆகியோர்,  இயக்க வரலாறு, உறுதிமொழி, சட்டம், சாரண இயக்கப் பாடல்கள், கொடிகள், முடிச்சுகள், முதலுதவி, முகாம் கலை, மதிப்பீடு, நிலப்படக் கலை, மதிப்பீடு ஆகியத் தலைப்புகளில் பயிற்சிகள் அளித்தனர். பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு. அருளரங்கன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மஞ்சுளா ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/சாரண-சாரணீயர்-பயிற்சி-முகாம்-நிறைவு-3111517.html
3111478 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் அருகே கார் மோதி 3 பாதயாத்திரை பக்தர்கள் சாவு DIN DIN Monday, March 11, 2019 03:10 AM +0530
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 
      பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் களியன் (60), ராமசாமி மனைவி பரமேஸ்வரி (35), மற்றொரு ராமசாமி மனைவி காவேரி (55), முருகன் மனைவி மருதாம்பாள் (55), மற்றொரு மனைவி சோலையம்மாள் (60). மேற்குறிப்பிட்ட 5 பேரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றனர். 
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள பூமலை சஞ்சீவிராயர் மலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார், பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி விட்டு, அங்குள்ள சாலை மையத் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில் பலத்த காயமடைந்த களியன், பரமேஸ்வரி, காவேரி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவலறிந்த பாடாலூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று, காயமடைந்த மருதாம்பாள், சோலையம்மாள் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில், தீவிர சிகிச்சைக்காக சோலையம்மாள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீஸார் தலைமறைவாகிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/11/பெரம்பலூர்-அருகே-கார்-மோதி-3-பாதயாத்திரை-பக்தர்கள்-சாவு-3111478.html
3110894 திருச்சி பெரம்பலூர் கோயில் குடமுழுக்கு: முளைப்பாரி ஊர்வலம் DIN DIN Sunday, March 10, 2019 03:24 AM +0530
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  
      பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி, அருள்மிகு கனகசபை  கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆச்சார்ய அழைப்பு, யாகசாலை ப்ரவேசம், மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு புண்யாஹவாசனம், காலசாந்தி, திருவாராதனம், உற்ஸவர் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆப்பூரான் சுவாமி, காவிரி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக பாலக்கரை பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. 
இதில், திரளான பெண்கள் முளைப்பாரியுடன் காவிரியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், கோ பூஜை, தீப பூஜை, அக்னி ஆராதனம், ஸர்வ தேவார்சனம், ஹெளத்திரம், மஹாசாந்தி கும்ப அபிஷேகம் ஆகிய பூஜைகளும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 
பின்னர், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 
விழா ஏற்பாடுகளை ஆப்பூரான் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.                                        

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/10/கோயில்-குடமுழுக்கு-முளைப்பாரி-ஊர்வலம்-3110894.html
3110893 திருச்சி பெரம்பலூர் மக்கள் நீதிமன்றம்: 1,410 வழக்குகளுக்கு தீர்வு DIN DIN Sunday, March 10, 2019 03:24 AM +0530
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,410 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 3.40 கோடி வசூலிக்கப்பட்டது. 
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொ) என். விஜயகாந்த் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்றங்களில், தலைமை நீதித்துறை நடுவர் ஏ. முரளீதரன், சார்பு நீதிபதி எம். ஸ்ரீஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சி. கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் கே. மோகனப்பிரியா மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்ணையன், ராஜகோபால், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வானது, பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், தேசிய வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன் வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது. 
இதில், வங்கி வழக்குகளுக்கு ரூ. 65,70,300 மதிப்பிலும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 2,00,70,402 மதிப்பிலும் தீர்வு காணப்பட்டது. மேலும், சிவில் வழக்குகளுக்கு ரூ. 48,90,000, சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ. 2,82,900, குடும்ப நல வழக்கில் ரூ. 6,00,000, நில கையப்படுத்தும் வழக்கில் ரூ. 97,762, காசோலை மோசடி வழக்குகளில் ரூ. 16,90,000 என மொத்தம் 1,410 வழக்குகளுக்கு ரூ. 3,40,51,364-க்கு தீர்வு காணப்பட்டது.  
இதில், வழக்குரைஞர்கள் சங்க செயலர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் எஸ். விஜயகுமாரி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் எம். தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/10/மக்கள்-நீதிமன்றம்-1410-வழக்குகளுக்கு-தீர்வு-3110893.html
3110892 திருச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மகளிர் தின விழா DIN DIN Sunday, March 10, 2019 03:24 AM +0530
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, அக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கே. சுமதி பேசியது: 
தற்போதைய பெண்கள், பழைய தலைமுறையினரை விட 10 மடங்கு அறிவில் மேம்பட்டுள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். 
கல்வி பயிலும் காலத்தில் பாடப்புத்தகங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். காதல் எனும் வலையில் விழாமல், தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 
ஒவ்வொரு செயலையும் முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் கவனத்தை சிதற விடக்கூடாது என்றார் அவர். 
விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். நந்தகுமார் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பள்ளி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/10/தனலட்சுமி-சீனிவாசன்-கல்லூரியில்-மகளிர்-தின-விழா-3110892.html
3110891 திருச்சி பெரம்பலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை DIN DIN Sunday, March 10, 2019 03:24 AM +0530
மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல், தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 20 தலைமை கண்காணிப்பு  அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தலைமை கண்காணிப்பு அலுவலர்களுக்கான தேர்தல் தொடர்பான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆ. அழகிரிசாமி, ஜெய்னுலாப்தீன் (சர்க்கரை ஆலை), தலைமை கண்காணிப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் சட்டப்பேரவை அளவிலான தலைமை பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/10/மக்களவை-தேர்தல்-முன்னேற்பாடு-ஆலோசனை-3110891.html
3110890 திருச்சி பெரம்பலூர் சாலை விபத்து: மருத்துவர் சாவு DIN DIN Sunday, March 10, 2019 03:23 AM +0530
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு மருத்துவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  
திருச்சி தில்லைநகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் சனாத் (29). இவரது மனைவி அனகராஜ் (32). மருத்துவர்களான இருவரும், திருச்சியில் கிளினிக் நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரும் பாண்டிச்சேரிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சனாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அனகராஜ் பலத்த காயமடைந்தார். 
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அனகராஜை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/mar/10/சாலை-விபத்து-மருத்துவர்-சாவு-3110890.html