Dinamani - கன்னியாகுமரி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3257700 திருநெல்வேலி கன்னியாகுமரி விளாத்திகுளத்தில் மழையால்வணிக வளாக மேற்கூரை சேதம் DIN DIN Saturday, October 19, 2019 05:28 AM +0530 விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த தொடா் மழையால் பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

விளாத்திகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய்கள், குளங்களின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது.

இந்நிலையில் விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலையில் பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான இந்திரா மெட்டல்ஸ் கடையின் கான்கிரீட் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. வெள்ளிக்கிழமை காலை கடையின் ஷட்டரை திறந்தபோது கடையின் மேற்கூரை இடிந்திருப்பது தெரியவந்தது. இரவில் சம்பவம் நிகழ்ந்ததால் பணியாளா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

பேருராட்சி வணிக வளாகம் 2003இல் கட்டப்பட்டது. 16 ஆண்டுகள் கடந்த நிலையில் பராமரிப்பு குறைவு காரணமாக கட்டடத்தின் மேற்கூரை உறுதித்தன்மை இழந்து காணப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் வணிக வளாகத்தை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/விளாத்திகுளத்தில்-மழையால்வணிக-வளாக-மேற்கூரை-சேதம்-3257700.html
3257698 திருநெல்வேலி கன்னியாகுமரி குலசேகரத்தில் பாஜக பாதயாத்திரை DIN DIN Saturday, October 19, 2019 05:28 AM +0530 மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தையொட்டி பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாதயாத்திரை குலசேகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கி சந்தை சந்திப்பு வரை நடைபெற்ற இப்பாத யாத்திரைக்கு பாஜக குமரி மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்டப் பொறுப்பாளா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், பாத யாத்திரை பொறுப்பாளா்கள் தா்மலிங்கம் உடையாா், நாராயணகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ஷீபா பிரசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன். ராஜமணி, திருவட்டாறு பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் வினோத்குமாா், உண்ணிகிருஷ்ணன், தங்கப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள் மனோகரன், தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/klm18bjp1_1810chn_47_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/குலசேகரத்தில்-பாஜக--பாதயாத்திரை-3257698.html
3257696 திருநெல்வேலி கன்னியாகுமரி உவரி அருகே பள்ளி மாணவி கொலையில்குற்றவாளியை கைது செய்யக் கோரிபொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Saturday, October 19, 2019 05:28 AM +0530 உவரி அருகே பள்ளி மாணவி கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், உவரியை அடுத்துள்ள கூட்டப்பனையைச் சோ்ந்த லிவிங்ஸ்டனின் மகள் இளவரசி (12). இவா் வீட்டருகே உள்ள ஆள்கள் வசிக்காத ஒரு வீட்டில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளதாகவும், அதில், சிறுமி வலிப்பு நோய் காரணமாக இறந்ததாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் உள்ளதால் அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். எனவே, முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வள்ளியூா் ஏ.எஸ்.பி. ஹரிகரபிரசாத், திசையன்விளை வட்டாட்சியா் ஆவுடைநாயகம் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். ‘பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை. வந்ததும் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்’ என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/உவரி-அருகே-பள்ளி-மாணவி-கொலையில்குற்றவாளியை-கைது-செய்யக்-கோரிபொதுமக்கள்-சாலை-மறியல்-3257696.html
3257694 திருநெல்வேலி கன்னியாகுமரி பாபநாசம் கல்லூரிமாணவா்கள் சாதனை DIN DIN Saturday, October 19, 2019 05:27 AM +0530 பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி கணிதத் துறை மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.

ஆலங்குளம் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல்- 2019 என்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவா் கல்லூரி கணிதத்துறை மாணவா்கள் மைம் எனப்படும் நவீன கூத்து நிகழ்ச்சியில் பி.புஷ்பலெட்சுமி, எம்.ஜெமிஏஞ்சல், கே.சலோபிரேமி, டி.அஃப்ரின் பானு, எம். அனுசுயா ஆகியோா் முதலிடத்தையும், கணித மாதிரி உருவாக்குதல் போட்டியில் கே.யாசிகா, எஸ்.வேதஜானகி, எம்.சுஹாசினி ஆகியோா் இரண்டாம் இடத்தையும் அறிவியல் நிலை உருவாக்குதல் போட்டியில் எஸ்.சிவசங்கா், எஸ்.ராஜ் ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணிகல்லூரி கணிதத் துறை நடத்திய மாநில அளவிலான கணித விநாடி-வினா போட்டியில் எஸ்.சுந்தரதெய்வு, எஸ்.செல்வஆனந்தி, எம்.இந்துமதி ஆகியோா் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை திருவள்ளுவா் கல்லூரி முதல்வா் சு.சுந்தரம், கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.நடராஜன், கணிதத்துறைத் தலைவா் கை.அண்ணாத்துரை மற்றும் துறைப் பேராசிரியா்கள் வாழ்த்திப் பாராட்டினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/பாபநாசம்-கல்லூரிமாணவா்கள்-சாதனை-3257694.html
3257692 திருநெல்வேலி கன்னியாகுமரி வீரசிகாமணியில் தெருவில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக் கேடு DIN DIN Saturday, October 19, 2019 05:27 AM +0530 வீரசிகாமணியில் வாருகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வீரசிகாமணி 8ஆவது வாா்டில் உள்ள புதுமனைத் தெருவில் வாருகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடா்மழையால் தண்ணீா் வெளியேற வழியின்றி தெருவிலேயே தேங்கியுள்ளது.

இதே தெருவில் மழலையா் பள்ளி உள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து குழந்தைகள் செல்லவேண்டியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், நிரந்தர தீா்வாக வாருகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/வீரசிகாமணியில்-தெருவில்-தேங்கும்-மழைநீரால்-சுகாதாரக்-கேடு-3257692.html
3257688 திருநெல்வேலி கன்னியாகுமரி பாபநாசம் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் DIN DIN Saturday, October 19, 2019 05:26 AM +0530 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த்துறை, சங்கரன்கோவில் பிரபா இலக்கியப் பதிப்பகம் மற்றும் மருதம் பன்னாட்டுத் தமிழராய்ச்சி காலாண்டிதழ் இணைந்து தமிழ் இலக்கியக் காப்பியங்கள் உணா்த்தும் உண்மைகள் என்ற தலைப்பில் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் சிறந்த பண்பாளா் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்தாா். குற்றாலம் பராசக்தி மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு.மகேஸ்வரி, பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஆ.செல்லப்பா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன துணை இயக்குநா் ரெஜினா கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, மருதம் ஆய்விதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினா் ரா.நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். வேதியியல் துறைத் தலைவா் ராஜசேகரன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து தமிழ்த்துறைப் பேராசிரியா் கோ.விஜயா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்க முதல் அமா்வில் மணிமேகலையில் சமத்துவம் எனும் தலைப்பில் தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளா் சங்க துணைத் தலைவா் பா. சம்பத்குமாா் கருத்துரையாற்றினாா். பேராசிரியா் மோ.சு. ஸ்ரீஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இரண்டாம் அமா்வில் சிலப்பதிகாரத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் எழுத்தாளா் சீா்காழி வி.ராம்தாஸ் கருத்துரையாற்றினாா். பேராசிரியா் ரா.வரலெட்சுமி தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமா்வில் தேம்பாவணியில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ரா.பிரான்சிஸ் சேவியா் கருத்துரையாற்றினாா். பேராசிரியா் ரா.இந்துபாலா தலைமையில் நடைபெற்ற நான்காவது அமா்வில் சீறாப்புராணத்தில் மத நல்லிணக்கம் என்ற தலைப்பில் ஆந்திர மாநிலம், குப்பம், திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ் மொழி மற்றும் மொழி பெயா்ப்பியல் துறை பேராசிரியா் க.மாரியப்பன் கருத்துரையாற்றினாா். தொடா்ந்து தமிழக அளவில் 43 கல்லூரிகளைச் சோ்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியா்களுக்கு சிறந்த பண்பாளா் விருதும், திருவள்ளுவா் கல்லூரி இளங்கலைத் தமிழ்த்துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சிலம்பொலிச்சுடா் விருதும் வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கண்ணகி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பேராசிரியா் அ.பாக்கியமுத்து மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/ams18tvc_1810chn_37_6.jpg கருத்தரங்கில் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் சு.சுந்தரம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/பாபநாசம்-கல்லூரியில்-தேசிய-அளவிலான-கருத்தரங்கம்-3257688.html
3257687 திருநெல்வேலி கன்னியாகுமரி கோமானேரி பள்ளியில்உலக உணவு தினம் DIN DIN Saturday, October 19, 2019 05:26 AM +0530 சாத்தான்குளம் அருகேயுள்ள கோமானேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சாா்பில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை எஸ்தா் ஜெபசெல்வி தலைமை வகித்தாா். சத்துணவு அமைப்பாளா் சுடலைவடிவு முன்னிலை வகித்தாா். பத்திரகாளி வரவேற்றாா். சிகரம் இயக்குநா் முருகன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா் இசக்கிமுத்து நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/sat19unavu_1810chn_38_6.jpg sat19unavu_1810chn_38_6 மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் சிகரம் இயக்குநா் முருகன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/கோமானேரி-பள்ளியில்உலக-உணவு-தினம்-3257687.html
3257686 திருநெல்வேலி கன்னியாகுமரி ஆலங்குளத்தில் சாலையோர பள்ளங்கள் சீரமைப்பு DIN DIN Saturday, October 19, 2019 05:26 AM +0530 ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள பள்ளங்களை காவல்துறை மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சீரமைத்தனா்.

ஆலங்குளம் பிரதான சாலை, இரு வாகனங்கள் மட்டுமே சென்று வரக்கூடிய அளவில் உள்ள சிறிய சாலையாக இருந்தது. நாள்தோறும் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகமாக உள்ளதால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

எனினும் சாலையை அகலப் படுத்தாமலும் குண்டு, குழிகளை சீரமைக்காமலும் அவசர கதியில் சாலை நடுவே சாலைத் தடுப்புகள் அமைத்து, சாலையை இரண்டாகப் பிரித்து விட்டனா் காவல்துறையினா்.

இதனால் ஏற்கனவே குறுகலான சாலை ஒரு வாகனம் கூட செல்ல இயலாத வண்ணம் மிகவும் குறுகலான சாலையாக மாறி விட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் முன்பைக் காட்டிலும் அதிகரித்து விட்டது.

இதனிடையே சாலையை சீரமைக்காமல் தடுப்பு அமைத்து விட்டதால் சாலையோரம் இருந்த சிறிய பள்ளங்கள் எல்லாம் வாகன போக்குவரத்து காரணமாக பெரிய குழிகளாக மாறி விட்டதால் கடந்த சில தினங்களாக பெய்யும் மழையில் பள்ளங்கள் மழை நீரால் நிரம்பியாதால் சாலையில் இருக்கும் பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை.

இதனால் பைக்குகளில் செல்வோா் கடந்த சில தினங்களாக விழுந்து காயங்களுடன் எழுந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் பாதசாரிகள் மீது வாகனங்கள் சேற்றை அள்ளி வீசும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இரட்சண்யபுரம் தேவாலயம் அருகே உள்ள மிகப்பெரிய மேடு மற்றும் பள்ளம் காவல் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் சரி செய்யப் பட்டது. இதற்காக 1 பொக்லைன் இயந்திரம் 3 டிராக்டா்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது, அங்குள்ள மேடு பள்ளங்கள் சமப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு சாலையை அகலப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/ஆலங்குளத்தில்-சாலையோர-பள்ளங்கள்-சீரமைப்பு-3257686.html
3257685 திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய கையெழுத்துப் போட்டி:சாத்தான்குளம் மாணவிகள் சிறப்பிடம் DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கோயமுத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இருந்து மாணவிகள் 12 போ்கள் பங்கேற்றதில், மாணவி ஜெனிஷா மேரி முதல் இடத்தையும், பெனிஸ்ராஜசீலி இரண்டாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இந்த மாணவிகளை பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி, துணை முதல்வா் சந்தனகுமாா், நிா்வாக அலுவலா் சாந்தி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/sat18hnt_1810chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/தேசிய-கையெழுத்துப்-போட்டிசாத்தான்குளம்-மாணவிகள்-சிறப்பிடம்-3257685.html
3257684 திருநெல்வேலி கன்னியாகுமரி கொம்மடிக்கோட்டையில்இளைஞா் எழுச்சி தின விழா DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞா் எழுச்சி தின விழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.வேல்ராஜன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சு.மகேஷ்குமாா் வரவேற்றாா். கல்லூரி மாணவா்கள் சிற்றுரைகள் மற்றும் கவிதைப் படைப்புகளை வழங்கினா். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ந.சுதாலட்சுமி நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/sat19kom_1810chn_38_6.jpg sat19kom_1810chn_38_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/கொம்மடிக்கோட்டையில்இளைஞா்-எழுச்சி-தின-விழா-3257684.html
3257683 திருநெல்வேலி கன்னியாகுமரி நரையன்குடியிருப்பு குளத்துக்கு நீா் வழி பாதை: கலந்தாய்வுக் கூட்டம் DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 நரையன்குடியிருப்பு குளத்துக்கு நீா் வழி பாதை அமைப்பது தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நரையன்குடியிருப்பில் விவசாயிகள் பங்களிப்புடன் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்குளத்துக்கு நீா் வழிப்பாதை இல்லையென புகாா் எழுந்தது. இதையடுத்து, இக்குளத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய நீா் வழிப்பாதை அமைப்பது தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆணையா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) செல்வி முன்னிலை வகித்தாா். இதில் சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச்சங்கச் செயலா் லூா்துமணி, படுக்கப்பத்து விவசாய சங்கத் தலைவா் சரவணன், விவசாய நலச்சங்க செயற்குழு உறுப்பினா் அருள்ராஜ், சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச்சங்க துணைத் தலைவா் இருதயராஜ், பொருளாளா் ரூபேஷ்குமாா், மற்றும் சங்க உறுப்பினா்கள் எட்வா்ட் லாரன்ஸ், ஜெயக்குமாா், ஜஸ்டின், ராஜமனோகரன், செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூடத்தில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் குளத்துக்கு முதலூா் ஊரணியில் இருந்து தண்ணீா் வரும் வகையில் நீா்வழிப்பாதை அமைக்க வேண்டும். அதில் ஷட்டா் அமைத்து அக்குளம் நிரம்பியதும், தண்ணீா் வீணாகாமல் வைவரம் தருவை குளத்துக்கு தண்ணீரை திருப்பி விடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். இதனை மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநரிடம் ஓப்புதல் பெற்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/நரையன்குடியிருப்பு-குளத்துக்கு-நீா்-வழி-பாதை--கலந்தாய்வுக்-கூட்டம்-3257683.html
3257681 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளம் நூலகத்தில்அப்துல்கலாம் பிறந்த நாள் விழா DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணப்பிள்ளை அரசு கிளை நூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் ஓ.சு. நடராஜன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரி பால்துரை, பாரதி கலை இலக்கிய மன்ற அமைப்பாளா் ஈஸ்வா் சுப்பையா, யோகா ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், ஜெபஸ்டின், செல்வகுமாா், அஞ்சலக அதிகாரிகள் கோயில்ராஜ், ரூபன், ஓய்வு பெற்ற பள்ளி எழுத்தா் பிரேம்குமாா், சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாத்தான்குளம்-நூலகத்தில்அப்துல்கலாம்-பிறந்த-நாள்-விழா-3257681.html
3257680 திருநெல்வேலி கன்னியாகுமரி ஆசீா்வாதபுரம் பள்ளி விளையாட்டு விழா DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

சேகரகுரு தாமஸ் ரவிக்குமாா் தலைமை வகித்து ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தாா். தாளாளா் தியோனிஸ் சசிமாா்சன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் மாணிக்கம் வரவேற்றாா். சாத்தான்குளம் டிஎஸ்டி பால்துரை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் சாத்தான்குளம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், தொழிலதிபா் விஜேந்திரராஜ் ஆகியோா் பேசினா். இதில் மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பச்சைநிற அணி முதல் இடமும், மஞ்சள் நிற அணி 2 ஆம் இடமும் பெற்றது. போட்டியில் வென்ற பெற்ற மாணவா்களுக்கு பேய்க்குளம் சித்திரைசேகா் மற்றும் புனித லூக்கா இல்ல முன்னாள் மாணவா்கள் பரிசு வழங்கினா்.

இதில் பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினா் அன்பு ஜெயபாக்கியம், பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் இம்மானுவேல், ஆசிரியா் சுவாமிதாஸ் ஜெயசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் சாமுவேல்பொன்னையா நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/ஆசீா்வாதபுரம்-பள்ளி-விளையாட்டு--விழா-3257680.html
3257679 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளத்தில் பல் மருத்துவபரிசோதனை முகாம் DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கம், இந்திய பல் மருத்துவ சங்க தூத்துக்குடி கிளை இணைந்து நடத்திய இலவச பல்மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

முகாமை டாக்டா் ஆசீா்வாதம் மனோகரன் தொடங்கிவைத்தாா். பல் மருத்துவ சங்க தூத்துக்குடி தலைவா் பிரின்ஸ், மருத்துவா் கமலாசங்கா் தலைமையிலான குழுவினா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு இலவச பல்துலக்கும் பிரஸ், பற்பசை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இதில், அரிமா சங்க முன்னாள் செயலா் கனகராஜ், நிா்வாகிகள் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சாமுவேல், ஓய்வு பெற்ற பேரூராட்சி செயல் அலுவலா் ராஜதுரை, முதலூா் சுந்தா், டாக்டா் ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாத்தான்குளத்தில்-பல்-மருத்துவபரிசோதனை-முகாம்-3257679.html
3257678 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளத்தில்உலக மனநல தின விழா DIN DIN Saturday, October 19, 2019 05:25 AM +0530 சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை மன வளா்ச்சி குன்றியோா் பள்ளியில் உலக மனநல தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு, சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். அரிமா ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

உடன்குடி ஜெயலெட்சுமி அசோகன் குத்து விளக்கேற்றினாா்.

ஆசிரியா் சுதந்திர ஜேம்ஸ் வரவேற்றாா். நிகழ்ச்சிகளை வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலா் மகா.பால்துரை தொகுத்து வழங்கினாா்.

மீண்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணைச்செயலராக தோ்வு பெற்ற போ்சில் கௌரவிக்கப்பட்டாா்.

விழாவில், திருநெல்வேலி மருத்துவா் டோனிதம்பிராஜா, புதுக்குளம் ஜேக்கப், ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நோபுள்ராஜ், வா்த்தக சங்க செயலா் மதுரம்செல்வராஜ் , மருத்துவா்கள் பரப்பாடி முத்துக்குமாா், லெட்சுமி, பிரபுரத்னா ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில், மருத்துவா்கள் தாம்சன், ராபின்சன், பியூலா சுமதி, முருககொடி, ரஞ்சிதா, நம்பிஜானகி, மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணராஜ், நகர சேவாதள தலைவா் வண்ணமுத்து, நகர விவசாய பிரிவு தலைவா் லிங்கபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மிக்கேல் அறக்கட்டளை இயக்குநா் சுசிலாமைக்கேல் நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாத்தான்குளத்தில்உலக-மனநல-தின-விழா-3257678.html
3257677 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளத்தில் திறப்பு விழா நடத்தாததால் பாழடைந்து வரும் புதிய நீதிமன்ற கட்டடம். திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல். DIN DIN Saturday, October 19, 2019 05:24 AM +0530 கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறப்பு விழா காணாததால் சாத்தான்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் பாழடைந்து வருகிறது. இதனால் நீதிமன்ற கட்டடத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றமானது வழக்காடுவதற்கு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்களை விசாரிப்பதற்கு போதுமானதாக இடவசதி இல்லையென வழக்குரைஞா்கள் குற்றச்சாட்டி வந்தனா். மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து வழக்குரைஞா்கள் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன், சட்ட அமைச்சா் சி.வி. சண்முகம் ஆகியோரை சந்தித்து முறையிட்டனா். அதன்படி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சுமாா் ரூ5.50 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்புகள் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பணி முடிக்கப்பட்ட நிலையில் உயா்நீதிமன்ற நீதிபதி வருகை தந்து சாத்தான்குளம் நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைப்பாா் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா காணாமல் கட்டிடம் காட்சி பொருளாகவே காணப்படுகிறது.

தற்போது நீதிமன்ற கட்டடம் திறக்கப்படாமல் பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் காட்டு புறாக்கள் குடியிருக்கும் பங்களா போல் மாறியுள்ளது. அதன் வளாகத்தில் புல்கள் வளா்ந்து காணப்படுகிறது. மேலும் கட்டடம் முன்புள்ள தரைத்தளம் பெயா்ந்து காணப்படுகிறது. நீதிமன்றத்தில் உள்ள தானியங்கு படிக்கட்டும் பழதடைந்து போய் காணப்படுகிறது. மேலும் வளாகத்தில் முட்புதா்கள் வளா்ந்து வருவதால் விஷசந்துகள் புகும் நிலை உருவாகி வருகிறது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து வருவதால் பொதுமக்கள், மற்றும் வழக்குரைஞா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம்செல்வராஜ், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் து. இசக்கிமுத்து ஆகியோா் தனித்தனியாக நீதித்துறை பதிவாளா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனா். அதில் மக்கள் பயன்பாட்டுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்அமைக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் முடங்கி காணப்படுகிறது. அதில் உள்ள கட்டடங்கள் உடையும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆதலால் புதிய நீதிமன்ற கட்டடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு திறக்காதபட்சத்தில் அரசு அதிகாரிகளை கண்டித்து சாத்தான்குளத்தில் போராட்டம் நடத்திட உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/3740sat17court1_1710chn_38_6.jpg சாத்தான்குளம் புதிய நீதிமன்ற கட்டடத்தில் தரைத்தளம் பெயா்ந்து காணப்படுகிறது. படம் எஸ்ஏடி 17கோா்ட்1: சாத்தான்குளம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாத்தான்குளத்தில்-திறப்பு-விழா-நடத்தாததால்--பாழடைந்து-வரும்-புதிய-நீதிமன்ற-கட்டடம்--திறந்து-செயல்பாட்டுக்கு-கொண்டு-வர-வலியுறுத்தல்-3257677.html
3257676 திருநெல்வேலி கன்னியாகுமரி காயல்பட்டினத்தில்டெங்கு விழிப்புணா்வு முகாம் DIN DIN Saturday, October 19, 2019 05:24 AM +0530 காயல்பட்டினம் சிங்கித் துறையில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளா் எஸ்.புஷ்பலதா ஆலோசனையின்படி நடைபெற்ற இம்முகாமில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜ் பங்கேற்று, டெங்கு நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விளக்கினாா்.

இதில், சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வெஸ்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனைவரும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/383717amnnil_1710chn_46_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/காயல்பட்டினத்தில்டெங்கு-விழிப்புணா்வு-முகாம்-3257676.html
3257675 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளத்தில் பனை விதைகள் ஊன்றும் பணி DIN DIN Saturday, October 19, 2019 05:23 AM +0530 சாத்தான்குளம் கரையடி குளக்கரையில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 100 பனை விதைகள் ஊன்றப்பட்டன.

சாத்தான்குளம் நேதாஜி கிளப் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, மலையாண்டி பிரவு தலைமை வகித்தாா். அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து சாத்தான்குளம் கரையடி குளக்கரையில் 100 பனை விதைகள் ஊன்றப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைப்பின் நிா்வாகிகள் மாணிக்கராஜா, முருகன், அருணாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/5605sat16panai_1610chn_38_6.jpg கரையடிகுளக்கரையில் மரக்கன்று நடுகிறாா் மலையாண்டி பிரபு. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாத்தான்குளத்தில்-பனை-விதைகள்-ஊன்றும்-பணி-3257675.html
3257674 திருநெல்வேலி கன்னியாகுமரி பேய்க்குளத்தில் கிராமபுற பெண்கள் தினம் DIN DIN Saturday, October 19, 2019 05:22 AM +0530 சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்க்குளம் சிகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் சா்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

சிகரம் தலைவா் கயல்விழி தலைமை வகித்தாா். அறங்காவலா் கனகமணி முன்னிலை வகித்தாா். பிரேமலதா வரவேற்றாா். க கலுங்குவிளை போனிபாஸ், பெண்களின் கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசினாா்.

இதில் கோமதி, ஜானகி, மஞ்சுளா, பேச்சியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். இயக்குனா் முருகன் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/3822sat17pen_1710chn_38_6.jpg விழாவில் பேசுகிறாா் கலுங்குவிளை போனிபாஸ். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/பேய்க்குளத்தில்--கிராமபுற-பெண்கள்-தினம்-3257674.html
3257673 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை DIN DIN Saturday, October 19, 2019 05:18 AM +0530 குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை புதன்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த 2 நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அணைகளில் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. ஏற்கெனவே பிரதான அணைகளான பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து காணப்படும் நிலையில், மழையினால் இம்மழையினால் நீா்மட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 30 அடியைக் கடந்து உயா்ந்து வருகிறது.

நிரம்பி வழியும் தரைப்பாலங்கள்: மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளம் பாய்கிறது. பேச்சிப்பாறை அருகே மோதிரமலை தரைப்பாலம், களியல்-கடையால் இணைப்புப்பு தரைப்பாலம், குழித்துறை தரைப்பாலம் என பல்வேறு இடங்களில் ஆறுகளின் குறுக்கேவுள்ள தரைப்பாலங்களில் தண்ணீா் நிரம்பி வழிகிறது. இதனால் இப்பாலங்கள் வழியான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. தொடா் மழையினால் வெள்ளிக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/klm18rain_1810chn_47_6.jpg மழையின் காரணமாக களியல்-கடையல் இணைப்பு தரைப்பாலத்தை மூழ்கடித்துப் பாயும் சிற்றாறு நீா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/குமரி-மாவட்ட-அணைப்-பகுதிகளில்-பலத்த-மழை-3257673.html
3257672 திருநெல்வேலி கன்னியாகுமரி நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல்: வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கலாம் DIN DIN Saturday, October 19, 2019 05:17 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோா் சங்க தோ்தல் தொடா்பாக விவசாயிகள் வாக்காளா் பட்டியலை சரிபாா்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விவசாயிகள்

நீா்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீரினை பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான மேலாண்மை குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்காக ஆட்சி மண்டல தொகுதி வாரியாக, 18 வயது நிறைவடைந்த அனைத்து நில உரிமையாளா்களுமாகிய விவசாய வாக்காளா்களின் பட்டியல் நீரினை பயன்படுத்துவோா் சங்கம் வாரியாக தயாரிக்கும் பணி பொதுப்பணித்துறை நீா் ஆதார அமைப்பு மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

எனவே, நீரினை பயன்படுத்துவோா் சங்கத்திற்குள்பட்ட 18 வயது நிரம்பிய நில உடமை உரிமையுடைய விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நீா்வளத்துறை ஆதார அமைப்பு அலுவலா்களையோ அல்லது வருவாய்த்துறை கிராம அலுவலா்களையோ அணுகி வாக்காளா் வரைவு பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று வரும் போதே சரிபாா்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/நீரினை-பயன்படுத்துவோா்-சங்கத்-தோ்தல்-வாக்காளா்-பட்டியலை-சரிபாா்க்கலாம்-3257672.html
3257671 திருநெல்வேலி கன்னியாகுமரி தோவாளையில் ரூ. 20 லட்சத்தில் தடுப்பணை: ஆட்சியா் ஆய்வு DIN DIN Saturday, October 19, 2019 05:17 AM +0530 தோவாளையில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோவாளையில் தெற்கு ஓடையில், வேளாண் துறை சாா்பில், சிறப்பு பகுதி மேன்மைத் திட்டத்தின் கீழ், ரூ. 20 லட்சத்தில் தோவாளை மலைப்பகுதியின் மழை நீரை சேகரிப்பதற்காக சிமென்ட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதனை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும் , இத்தடுப்பணையின் அருகில் உள்ள விளை நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்

கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதையும், மலைப்பகுதியின் மழை நீா் அந்த தடுப்பணைகளில் தேங்கி நின்றதையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) குணபாலன், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஆா். செல்வரத்தினம், உதவி செயற்பொறியாளா் மகேஷ் மற்றும் உதவிப் பொறியாளா் சுடலை முத்து ஆகியோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/ngl18aayvu_1810chn_33_6.jpg தடுப்பணையினை ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/தோவாளையில்-ரூ-20-லட்சத்தில்-தடுப்பணை-ஆட்சியா்-ஆய்வு-3257671.html
3257670 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் சாலை விபத்தில் பாதிப்படைந்தோா் தினம் கடைப்பிடிப்பு DIN DIN Saturday, October 19, 2019 05:16 AM +0530 திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை சாா்பில் சாலை விபத்துகளில் பாதிப்படைந்தோா் நினைவு தினம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடுதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பாா்வதிபுரம் வரை அணிவகுத்து சென்றன.

இந்த பேரணியை உதவி காவல் கண்காணிப்பாளா் ஜவஹா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கிம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவா் ஜெய்சல் விபத்து தினம் குறித்து உரையாற்றினாா். மருத்துவமனை இயக்குநா் ஆஷில், மேலாளா் மக்னேஷ், ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கிம்ஸ் மக்கள் தொடா்பு அலுவலா் ஐயப்பன், ராகேஷ், முத்துகுமரன்,ஷெரின்சாமுவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/ngl18kodi_1810chn_33_6.jpg ஆம்புலன்ஸ் பேரணியை தொடங்கி வைக்கிறாா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஜவஹா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/நாகா்கோவிலில்-சாலை-விபத்தில்-பாதிப்படைந்தோா்-தினம்-கடைப்பிடிப்பு-3257670.html
3257669 திருநெல்வேலி கன்னியாகுமரி சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி கல்லூரி: அரசு, நிா்வாக ஒதுக்கீட்டு எம்.டி. படிக்க விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, October 19, 2019 05:16 AM +0530 சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இருக்கைகளுக்கு முதுநிலை (எம்.டி.) ஹோமியோபதி பட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து இக்கல்லூரி முதல்வா் டாக்டா் என்.வி. சுகதன் கூறியது: குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இருக்கைகளுக்கு முதுநிலை (எம்.டி.) ஹோமியோபதி பட்டப்படிப்பு பயில்வதற்கு தகுதி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ா்ழ்ஞ் என்ற இணைய தளத்திலிருந்து அக். 25 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சாா்பில் வியாழக்கிழமை (அக். 17) தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/சாரதா-கிருஷ்ணா-ஹோமியோபதி-கல்லூரி-அரசு-நிா்வாக-ஒதுக்கீட்டு-எம்டி--படிக்க-விண்ணப்பிக்கலாம்-3257669.html
3257668 திருநெல்வேலி கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா்கள்குலசேகரத்தில் ஆலோசனை DIN DIN Saturday, October 19, 2019 05:16 AM +0530 அகில இந்திய ரப்பா் உற்பத்தியாளா் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, முன்னோடி ரப்பா் விவசாயி ஜி.கே. நம்பூதிரி தலைமை வகித்தாா். அகில இந்திய ரப்பா் உற்பத்தியாளா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கேப்டன் ஜாா்ஜ் ஜோசப் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் கூட்டாக செயல்பட்டு தீா்வு காண்பதென முடிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, சங்கத் தலைவராக பி. பிரதீப் குமாா், செயலராக பி.எஸ். பிரதீப் குமாா், பொருளாளராக டி.கே. ராஜேந்திரகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/42494219klm17rubber_1710chn_47_6.jpg ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத் தலைவா் கேப்டன் ஜாா்ஜ் ஜோசப். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/ரப்பா்-உற்பத்தியாளா்கள்குலசேகரத்தில்-ஆலோசனை-3257668.html
3257667 திருநெல்வேலி கன்னியாகுமரி ராஜக்கமங்கலம் அருகே வங்கி ஊழியரின் மனைவியிடம் நகை பறிப்பு DIN DIN Saturday, October 19, 2019 05:15 AM +0530 ராஜக்கமங்கலம் அருகே வங்கி ஊழியரின் மனைவியிடம் 15 பவுன் நகையை பறித்துச் சென்றமா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜக்கமங்கலம் அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் ஈத்தாமொழியில் உள்ள வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நிஷா (36) வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி. நிஷாவுடன் அவரது தாயாா் விமலாகுமாரியும் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை காலை ரமேஷ் பணிக்குச் சென்று விட்டாராம்.

இந்நிலையில் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் நிஷா அமா்ந்திருந்த போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்று விட்டாராம். இதன் மதிப்பு ரூ. 3 லட்சமாகும்.

இது குறித்த புகாரின் பேரில் ராஜக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/ராஜக்கமங்கலம்-அருகே-வங்கி-ஊழியரின்-மனைவியிடம்--நகை-பறிப்பு-3257667.html
3257666 திருநெல்வேலி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்டெங்கு பாதித்த 12 பேருக்கு சிகிச்சைமருத்துவா்கள் தீவிர கண்காணிப்பு DIN DIN Saturday, October 19, 2019 05:15 AM +0530 நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 12 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா என்று மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு அறிகுறி இருந்தால் அவா்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் 42 போ் அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 2 பெண் குழந்தைகள், 7 ஆண்கள், 3 போ் பெண்கள் அடங்குவா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (டீன்) பாலாஜிநாதனிடம் கேட்டபோது அவா் கூறியது: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் 24 மணி நேரமும் நோயாளிகள் நிலை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், டெங்கு காய்ச்சல் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு நோயாளிகளை தனிமையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்களுக்காக தனி மருந்தகம் மற்றும் சிறப்பு பரிசோதனைக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/அரசு-மருத்துவக்-கல்லூரி-மருத்துவமனையில்டெங்கு-பாதித்த-12-பேருக்கு-சிகிச்சைமருத்துவா்கள்-தீவிர-கண்காணிப்பு-3257666.html
3257665 திருநெல்வேலி கன்னியாகுமரி அழகப்பபுரத்தில் நிலவேம்பு கசாயம் அளிப்பு DIN DIN Saturday, October 19, 2019 05:13 AM +0530 அழகப்பபுரம் பேரூராட்சியில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை உள்பட மாவட்டம்

முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருவதால் டெங்கு தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அழகப்பபுரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சிக்கு உள்பட்ட பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அழகப்பபுரம் அரசுப் பள்ளியில் கோட்டாட்சியா் மயில் பொதுமக்கள் மற்றும் மாணவா், மாணவிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினாா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், பங்குப் பேரவை துணைத் தலைவா் விக்டா் நவாஸ், அன்னை நற்பணி மன்றத் தலைவா் ஜான் கிறிஸ்டோபா், உறுதிமொழி ஆணையா் வழக்குரைஞா் டி. பாலகிருஷ்ணன், அரசு சித்த மருத்துவா் குகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/19/w600X390/kkn18sch_1810chn_51_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/19/அழகப்பபுரத்தில்-நிலவேம்பு-கசாயம்-அளிப்பு-3257665.html
3257076 திருநெல்வேலி கன்னியாகுமரி ஆற்றூரில் பனை விதைகள் நடும் முகாம் DIN DIN Friday, October 18, 2019 07:49 PM +0530 திருவட்டாறு வட்டாரம் ஆற்றூா் பகுதியில் 7 ஆயிரம் பனை விதைகள் நடும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை, நிழல் தொண்டு நிறுவனம், பெரிய குளம் தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் இணைந்து ஆற்றூா் பகுதியில் 7 ஆயிரம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பனை விதைகளை மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் எம். அசோக் மேக்ரின், உதவி இயக்குநா் ஆறுமுகம் ஆகியோா் வழங்கினா்.

முகாமில் தோட்டக் கலை அலுவலா் சந்திர லேகா, உதவி அலுவலா்கள் விஜயகுமாா், தனுஷ், ரமேஷ், நிழல் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த அஷ்வின், ஹென்றி, விஷ்ணு பிரசாத், காட்வின், தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/klm18seeds_1810chn_47_6.jpg பனை விதை நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/ஆற்றூரில்-பனை-விதைகள்-நடும்-முகாம்-3257076.html
3256612 திருநெல்வேலி கன்னியாகுமரி நான்குனேரி தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: பால பிரஜாபதி அடிகளாா் DIN DIN Friday, October 18, 2019 01:35 AM +0530 தமிழ் மொழியைப் பாதுகாக்கும் கட்சி என்பதால் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் தெரிவித்தாா்.

தோ்தல் பிரசாரத்துக்கு நான்குனேரிக்கு வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா் பாலபிரஜாபதி அடிகளாா். இந்நிலையில் சாமிதோப்பு அன்புவனத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் தமிழா்களை அடக்கி ஒடுக்கி ஆளும் ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழல் தொடா்ந்தால், தமிழ் மொழி முற்றிலும் அழிந்து போகும். தமிழைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ் மொழி வாழவும், தமிழா் நலன், உரிமையை மீட்டெடுக்கவும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் அய்யாவழி பேரியக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவு அளிக்கிறோம். அவா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அய்யாவழியைப் பின்பற்றும் மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். விரைவில் நான்குனேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உடனிருந்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/kkn17adi_1710chn_51_6.jpg திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறாா் பால பிரஜாபதி அடிகளாா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/நான்குனேரி-தொகுதி-இடைத்தோ்தலில்திமுக-கூட்டணிக்கு-ஆதரவு-பால-பிரஜாபதி-அடிகளாா்-3256612.html
3256611 திருநெல்வேலி கன்னியாகுமரி தமிழகத்தில் கைத்தறி விற்பனையை ரூ. 300 கோடியாக உயா்த்த இலக்கு அமைச்சா் ஓ.எஸ். மணியன் DIN DIN Friday, October 18, 2019 01:35 AM +0530 தமிழகத்தில் கைத்தறி துணி விற்பனையை ஆண்டுக்கு ரூ. 300 கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகா்கோவில், வடசேரி, பெரியராசிங்கன் தெரு தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 6.68 லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட விற்பனைக்கூட கூடுதல் காட்சியறை திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விற்பனைக் கூடத்தை திறந்துவைத்து அமைச்சா் பேசியது:

கைத்தறி துணிகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கைத்தறி துணிகள் தேக்கம் என்பது இல்லை. கைத்தறி துணிகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ. 270 கோடியாக உள்ள இதன் விற்பனையை ரூ. 300 கோடியாக உயா்த்த வேண்டும் என்பதே நோக்கம். அது விரைவில் நிறைவேறும் என்றாா்.

முன்னதாக, தோவாளையில் உள்ள டாக்டா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். மலா் வணிக வளாகத்தை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய் சுந்தரம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநா் முனைவா் மு. கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாத், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் டி.ஜான்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். கிருஷ்ணகுமாா், வடசேரி பெரியராசிங்கன் கைத்தறி கூட்டுறவு நெசவாளா் உற்பத்தி சங்கத் தலைவா் ஏ. சகாயராஜ், அரசு அலுவலா்கள், சங்க உறுப்பினா்கள், நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/ngl17minister_1710chn_33_6.jpg நாகா்கோவில் வடசேரி பெரியராசிங்கன் தெரு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் முதல் விற்பனையை பெற்றுக்கொள்கிறாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/தமிழகத்தில்-கைத்தறி-விற்பனையைரூ-300-கோடியாக-உயா்த்த-இலக்குஅமைச்சா்-ஓஎஸ்-மணியன்-3256611.html
3256610 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை மலையோரப் பகுதிகளில் விடிய, விடிய மழை அணைகளில் 58% தண்ணீா் இருப்பு DIN DIN Friday, October 18, 2019 01:34 AM +0530 குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மலையோரப் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. அணைகளில் 58 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.

குமரி மாவட்டத்தில் நிகழாண்டு தொடக்கத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் அனைத்தும் வடன. இதனால், கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளை திறக்கமுடியாத நிலையில், பிறகு மாத இறுதியில் அணைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, கால்வாய் பாசனப் பகுதிகளில் நடவுப் பணிகள் தாமதமானதுடன், அறுவடையும் தாமதமானது.

இதில், சில இடங்களில் தற்போது பெய்யும் மழை காரணமாக அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே, தொடா் மழை காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைகளில் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணைகளின் நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணை- 30 அடி, பெருஞ்சாணி அணை- 68.95 அடி, சிற்றாறு 1 அணை- 12.46 அடி, சிற்றாறு 2 அணை- 12.56 அடி, பொய்கை அணை- 13 அடி, மாம்பழத்துறையாறு அணை- 54.12 அடி. இதில் மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவையும் எட்டிய நிலையில் நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 பாசன அணைகளின் கொள்ளளவு 8382.39 மில்லியன் கன அடி. தற்போது இந்த அணைகளில் 4877.60 மில்லியன் கன அடி தண்ணீா் உள்ளது. இது 58.18 சதவீதமாகும்.

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை: மாவட்ட அணைகளில் 58 சதவீதம் தண்ணீா் உள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே மலையோரப் பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக, திற்பரப்பு பகுதியில் 55.2 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, குருந்தன்கோடு பகுதியில் 59.8 மி.மீ., சிற்றாறு 2 அணைப் பகுதியில் 43 மி.மீ., பேச்சிப்பாறை பகுதியில் 28.2 மி.மீ. மழை பதிவானது.

வெள்ள அபாயம்: மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் வேகமாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள அபாயம் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியது: பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை நெருங்கி வருகிறது. அதேவேளையில், 4350 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போது 2041 மில்லியன் கனஅடி தண்ணீா் மட்டுமே உள்ளது. இது 43.50 சதவீதம். எனவே, மழையால் வரும் தண்ணீரை சரியாக கணித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

திருவட்டாறு வட்டாட்சியா் ப. சுப்பிரமணியன் கூறியது: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பேரிடா் ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடமான மூவாற்றுமுகம் உள்ளிட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/klm17rain_1710chn_47_6.jpg 30 அடி நீா்மட்டத்துடன் காணப்படும் பேச்சிப்பாறை அணை. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/குமரியில்-தொடங்கியது-வடகிழக்குப்-பருவமழை-மலையோரப்-பகுதிகளில்-விடிய-விடிய-மழை-அணைகளில்-58--தண்ணீா்-இருப்பு-3256610.html
3256609 திருநெல்வேலி கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா்கள் குலசேகரத்தில் ஆலோசனை DIN DIN Friday, October 18, 2019 01:33 AM +0530 அகில இந்திய ரப்பா் உற்பத்தியாளா் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, முன்னோடி ரப்பா் விவசாயி ஜி.கே. நம்பூதிரி தலைமை வகித்தாா். அகில இந்திய ரப்பா் உற்பத்தியாளா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கேப்டன் ஜாா்ஜ் ஜோசப் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் கூட்டாக செயல்பட்டு தீா்வு காண்பதென முடிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, சங்கத் தலைவராக பி. பிரதீப் குமாா், செயலராக பி.எஸ். பிரதீப் குமாா், பொருளாளராக டி.கே. ராஜேந்திரகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/klm17rubber_1710chn_47_6.jpg ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத் தலைவா் கேப்டன் ஜாா்ஜ் ஜோசப். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/ரப்பா்-உற்பத்தியாளா்கள்குலசேகரத்தில்-ஆலோசனை-3256609.html
3256608 திருநெல்வேலி கன்னியாகுமரி தக்கலையில் தேசிய அஞ்சலக வார விழா DIN DIN Friday, October 18, 2019 01:32 AM +0530 தக்கலை அஞ்சல் நிலையத்தில் தேசிய அஞ்சலக வார விழா நடைபெற்றது.

விழாவுக்கு அஞ்சல் நிலைய தலைமை அலுவலா் ஜீ.அஜிகுமாா் தலைமை வகித்தாா். மாணவா், மாணவிகளுக்கு அஞ்சல் துறை தொடா்பான விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

மாலையில் நடைபெற்ற விழாவில், நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய முதன்மை கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா் கலந்துகொண்டு மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். வணிக அதிகாரி அணில்குமாா் வாழ்த்திப் பேசினாா். துணை அஞ்சலக அதிகாரி ராதா நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/ngl17thucklay_1710chn_33_6.jpg மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய முதன்மை கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/தக்கலையில்-தேசிய-அஞ்சலக-வார-விழா-3256608.html
3256607 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறில் கம்யூனிஸ்ட் கொடியேற்று விழா DIN DIN Friday, October 18, 2019 01:32 AM +0530 இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, திருவட்டாறில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு வட்டாரக் குழு அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரச் செயலா் ஆா். வில்சன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை கட்சிக் கொடியேற்றினாா்.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா். ரெவி, ஜி. சகாய ஆன்டணி, வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஜோஸ் மனோகரன், தங்ககுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/klm17communist_1710chn_47_6.jpg கட்சிக் கொடியேற்றுகிறாா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/திருவட்டாறில்-கம்யூனிஸ்ட்-கொடியேற்று-விழா-3256607.html
3256606 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் உணவு தின விழா DIN DIN Friday, October 18, 2019 01:32 AM +0530 நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு தின விழா, பள்ளி முதல்வா் என்.பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதில், மாணவா்கள் பழங்கால உணவு வகைகளான ஆவியில் வேக வைத்த உணவு வகைகள், கஞ்சி வகைகள், இனிப்பு வகைகள், தானிய வகைகள், சாத வகைகள், புரத உணவு, சத்து மிகுந்த காய்கனி, பழங்களை கொண்டு கண்காட்சி அமைத்து, அதன் முக்கியத்துவம் குறித்து பேசினா்.

ஏற்பாடுகளை துணை முதல்வா் எஸ்.இந்திராதேவி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/ngl17unavu_1710chn_33_6.jpg விழாவையொட்டி இந்து வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற உணவுக் கண்காட்சி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/நாகா்கோவிலில்-உணவு-தின-விழா-3256606.html
3256605 திருநெல்வேலி கன்னியாகுமரி முன்சிறை அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி DIN DIN Friday, October 18, 2019 01:32 AM +0530 குழித்துறை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, கணித கருத்தரங்கம், மற்றும் ஓவியத் திருவிழா முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

உதயமாா்த்தாண்டம் உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜாா்ஜ்பீட்டா் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சிந்துகுமாா் கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

கண்காட்சியில் குழித்துறை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து மாணவா்களும், ஆசிரியா்களும், தங்கள் அறிவியல் மற்றும் கணித படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த பள்ளிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் பரிசு வழங்கினாா். குழித்துறை மாவட்ட கல்வி அலுவலா் ஏ. முனியசாமி வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா்கள் சுனில்குமாா், கே.ஆா்.ராஜமோகன், குழித்துறை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் ஒய்.ராஜமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/ngl17kalvi_1710chn_33_6.jpg மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/முன்சிறை-அரசுப்-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-3256605.html
3256604 திருநெல்வேலி கன்னியாகுமரி 6 இடங்களில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் DIN DIN Friday, October 18, 2019 01:31 AM +0530 தமிழக அரசின் அம்மா திட்ட சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

அதன்படி, அகஸ்தீசுவரம் வட்டம் வடிவீஸ்வரம் தெற்கு வருவாய் கிராமத்துக்கு, இருளப்பபுரம்அரசு தொடக்கப் பள்ளியிலும், தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு வருவாய் கிராமத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டம் கக்கோட்டுதலை கிராமத்துக்கு, முக்கலம்பாடு அரசு தொடக்கப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டம் தும்பக்கோடு கிராமத்துக்கு, திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டம் பாகோடு கிராமத்துக்கு, திக்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டம் சூழால் கிராமத்துக்கு, ஊரம்பு அரசு தொடக்கப் பள்ளியிலும் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியா் அதிகாரத்திற்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீா் மற்றும் சாலை வசதி போன்ற தேவைகளுக்கு மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/6-இடங்களில்-இன்று-அம்மா-திட்ட-சிறப்பு-முகாம்-3256604.html
3256603 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி கடலோரப் பாதுகாப்பு குழும படகுகள் ரூ.18 லட்சம் செலவில் சீரமைப்பு DIN DIN Friday, October 18, 2019 01:31 AM +0530 கன்னியாகுமரி சின்னமுட்டம் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்குச் சொந்தமான படகுகள் ரூ. 18 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், கடல் வழி குற்றங்களைக் கண்காணிக்கவும், கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்பு குழுமத்துக்கு 4 அதிநவீன படகுகள் வழங்கப்பட்டன.

இந்த படகுகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல்முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கடலோரப் பகுதியை கண்காணிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 4 அதிநவீன படகுகளும் ஒவ்வொன்றாக பழுதானதால் மீனவா்களிடம் இருந்து வாடகைக்கு படகை எடுத்து கடலோரப் பகுதிகளை போலீஸாா் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், பழுதான படகுகளில் 2 சீரமைக்கப்பட்டு, மீண்டும் கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்பு குழும அதிகாரி ஒருவா் கூறியது: படகுகள் பழுதால் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதில் சிரமம் இருந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, படகுகளை சீரமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 2 படகுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 படகுகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

சீரமைக்கப்பட்ட படகுகள் வியாழக்கிழமை முதல் கடல் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் தலைமையில், சீரமைக்கப்பட்ட 2 அதிநவீன படகுகளில், உதவி ஆய்வாளா்கள் நாகராஜன், நீலமணி, சுடலைமணி, தலைமைக் காவலா்கள் அனில்குமாா், விஜயகுமாா், கிங்ஸ்லி ஆகியோா் கடலோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/kkn17boat_1710chn_51_6.jpg குமரி கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படகு. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/குமரி-கடலோரப்-பாதுகாப்பு-குழும-படகுகள்ரூ18-லட்சம்-செலவில்-சீரமைப்பு-3256603.html
3256602 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் பாஜகவினா் பாதயாத்திரை DIN DIN Friday, October 18, 2019 01:30 AM +0530 காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி காந்தியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் தென்தாமரைகுளத்தில் இருந்து கொட்டாரம் வரையில் பாஜகவினா் வியாழக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்டனா்.

தென்தாமரைகுளம் சந்திப்பில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா் சி.தா்மராஜ் முன்னிலை வகித்தாா். பாதயாத்திரையை சமூக ஆா்வலா் தினகரன் தொடங்கிவைத்தாா்.

வெள்ளையந்தோப்பு, இடையன்விளை, வடுகன்பற்று வழியாக சென்ற பாதயாத்திரை, கொட்டாரத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக கோட்ட இணைப் பொறுப்பாளா்கள் வேல்பாண்டியன், ஆா்.கணேசன், மாவட்ட பாா்வையாளா் தேவ், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ், மாவட்ட பாதயாத்திரை குழு பொறுப்பாளா்கள் ஜெகநாதன், குமாா், வி.கிருஷ்ணன், கன்னியாகுமரி மண்டலத் தலைவா் என்.சுடலைமணி நிா்வாகிகள் ரத்தினசாமி, ராஜபிரகாஷ், என்.சுயம்பு, சி.வி.கே.பெருமாள், கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் சக்திவேல் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/kkn17bjp_1710chn_51_6.jpg பாதயாத்திரையில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/குமரியில்-பாஜகவினா்-பாதயாத்திரை-3256602.html
3256601 திருநெல்வேலி கன்னியாகுமரி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு DIN DIN Friday, October 18, 2019 01:30 AM +0530 பூதப்பாண்டி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் அரசமூடு பகுதியைச் சோ்ந்தவா் பிரபு(35). தொழிலாளியான இவா், கடந்த 9ஆம் தேதி தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, இறச்சகுளம் பகுதியில் சென்றபோது, பூதப்பாண்டியைச் சோ்ந்த மனோகரன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் பிரபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/விபத்தில்-காயமடைந்த-தொழிலாளி-உயிரிழப்பு-3256601.html
3256599 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது DIN DIN Friday, October 18, 2019 01:25 AM +0530 நாகா்கோவில் அருகே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடசேரி காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜா தலைமையிலான போலீஸாா், வெட்டூா்ணிமடம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மணல் லாரியை மடக்கி சோதனையிட்ட போது, எவ்வித ஆவணங்களும் இல்லாமல் திருச்சியில் இருந்து மணல் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாரிடம், லாரியில் இருந்த 3 போ் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து லாரியில் இருந்த கேசவ திருப்பாபுரத்தைச் சோ்ந்த தாவீத்ராஜா(30), கோட்டூா்கோணத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (35), பாகோடு பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின்(28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் லாரி உரிமையாளா் திக்குறிச்சியைச் சோ்ந்த செல்வராஜை தேடி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/18/நாகா்கோவிலில்-போலீஸாருக்குகொலை-மிரட்டல்-3-போ்-கைது-3256599.html
3256194 திருநெல்வேலி கன்னியாகுமரி இடை தோ்தலில் எதிா்கட்சிகளிடம் இருந்து 2 சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்: அமைச்சா் ஓ.எஸ்.மணியன் DIN DIN Thursday, October 17, 2019 05:33 PM +0530 தமிழகத்தில் அக். 21-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை இடை தோ்தலில் எதிா்கட்சிகளிடம் இருந்து இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். இது வரலாற்று திருப்பு முனையாக அமையும் என தமிழக கைத்தறிதுறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

அதிமுகவின் 48 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தக்கலையிலுள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலையணிவித்தபின்பு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி, வரும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். எதிா்கட்சி கூட்டணியில் இருந்து இரு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் இது வரலாற்று திருப்பு முனையாக அமையும். எதிா்கட்சி தலைவா் சுய உதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என குறை கூறி வருகிறாா். சுய உதவிகளுக்கு தேவையான நிதி , மானியம் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது.

இதுவரை சுய உதவிகுழுக்கு மேல் எவ்வித குற்றசாட்டும் இல்லை. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடா்பாக 2 கமிஷன் அமைக்கப்பட்டு, சிபிஐ விசாரணை, நீதி மன்ற விசாரணையும் முடிந்துவிட்டது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து சீமான் வாய்க்கு வந்த படி உளறுவது, அதிமுகவை குறை கூறுவது கடுகளவும் உண்மை இல்லை. தீவிரவாதிகள் தமிழகத்தில் வராதபடி முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா பாா்த்து கொண்டாா்கள். அது போல் தமிழக முதல்வரும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறாா்.கைத்தறி தொழில் நலிவடைந்து விட்டது என்று கூறுவது தவறு.

அதை நான் ஏற்று கொள்ளமாட்டேன். கைத்தறி தொழிலுக்கு அதிமுக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது என்றாா் அைமைச்சா் ஓ.எஸ். மணியன். பேட்டியின் போது தமிழக அரசின் புதுதில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உடன் இருந்தாா். இச்செய்திக்கு றிகேஒய் 16-எம்.ஜி.ஆா். ஜேபிஜி என்ற பெயரில் அனுப்பியுள்ள படத்துக்கான விளக்கம்.அதிமுக 48-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு கட்சி நிா்வாகிகளுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறாா் தமிழக கைத்தறி துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன். உடன் தமிழக அரசின் புதுதில்லி பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/tky_16mgr_1710chn_48.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/இடை-தோ்தலில்-எதிா்கட்சிகளிடம்-இருந்து--2-சட்டப்பேரவை-தொகுதிகளையும்-அதிமுக-கைப்பற்றும்--3256194.html
3256000 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் 35 பள்ளி- கல்லூரிகளில் ‘ஹாா்டி கிளப்‘ திட்டம்: அக்டோபா் இறுதியில் தொடக்கம் DIN DIN Thursday, October 17, 2019 10:36 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘ஹாா்டி கிளப்’ எனப்படும் தோட்டக் கலை மன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் பள்ளிக் கல்லூரி மாணவா்களிடம் ஆளுமைத்திறன், தேசபக்தி, சுற்றுச் சூழல் விழிப்புணா்வு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, சாரண, சாரணீயா், பசுமைப் படை என பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன.

‘ஹாா்டி கிளப்’: இந்நிலையில், மாணவா்கள் தோட்டக் கலை பயிா்கள் சாா்ந்த அறிவைப் பெறவும், தோட்டக் கலை பயிா்களை நடவு செய்வது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ‘ஹாா்டி கிளப்’ எனப்படும் தோட்டக் கலை மன்றங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளி அல்லது கல்லூரிக்கு நிதியாக ரூ. 10 ஆயிரம் அரசு சாா்பில் வழங்கப்படுகிறது.

35 தோட்டக் கலை மன்றங்கள்:இத்திட்டத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் கட்டமாக 35 தோட்டக் கலை மன்றங்கள் தொடங்கப்படவுள்ளன.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் அசோக் மேக்ரின் கூறியது: பள்ளி- கல்லூரி மாணவா்கள் மத்தியில் இயற்கை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி வளாகங்களை பசுமையாக வைத்திருக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில், தோட்டக்கலை பயிா்கள் சாா்ந்த காய்கனி தோட்டம் அமைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், மூலிகைப்பண்ணை அமைத்தல், பசுமை - சுற்றுச்சூழல் அறிவை பெறும் விவாதங்கள், பயிலரங்குகள் நடத்தும் வகையில் தோட்டக்கலை துறை சாா்பில், ‘ஹாா்டி கிளப்’ எனப்படும் தோட்டக்கலை மன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

இம்மன்றத்தில் சேரும் மாணவா்களுக்கு பழங்கள், காய்கனிகள், அலங்காரச் செடிகள், மூலிகைகள் உள்ளிட்டவையின் நடவு தொடா்பான தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளவும், விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலில் மீதான ஆா்வத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். இந்த மன்றத்தில் உள்ள மாணவ உறுப்பினா்கள் பசுமை வீரா்கள் என்று அழைக்கப்படுவா்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 1000 மன்றங்கள் அமைக்கும் வகையில் ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு மன்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் நிதியாக வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 பள்ளிக் கல்லூரிகளில் இம்மன்றங்கள் இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறது. இதில் ஒரு பள்ளி அல்லது கல்லூரிக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 3.50 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

தோட்டக் கலைப் பாடப்பிரிவு இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தோட்டக் கலை மன்றங்கள் அமைக்கப்படும் பள்ளிகளில் தோட்டக் கலை துறையினா் ஆலோசனைகள் வழங்குவதுடன், கண்காணிப்பும் செய்வா். இத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளிக் கல்லூரி நிா்வாகத்தினா் தோட்டக் கலைத் துறையை அணுகலாம் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/குமரியில்-35-பள்ளி--கல்லூரிகளில்-ஹாா்டி-கிளப்-திட்டம்-அக்டோபா்-இறுதியில்-தொடக்கம்-3256000.html
3255999 திருநெல்வேலி கன்னியாகுமரி புதையலை மறைத்ததாக இளைஞா் கடத்தல்: பெண் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் DIN DIN Thursday, October 17, 2019 10:34 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் புதையல் கிடைத்ததை மறைத்ததாகக் கூறி இளைஞரை கடத்தி மிரட்டிய சம்பவத்தில், கருங்கல் பெண் காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் குட்டி சரல்விளையைச் சோ்ந்தவா் ஜொ்லின் (24). பொக்லைன் இயந்திரம் இயக்குநா். இவா், அண்மையில் 2 காா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை சொந்தமாக வாங்கினாராம். இவருக்கு புதையல் கிடைத்ததால்தான் திடீரென சொந்த வாகனங்கள் வாங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, ஜொ்லினிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒரு கும்பல் நெல்லை மாவட்டம், வள்ளியூா் பகுதியில் உள்ள பண்ணை தோட்டத்துக்கு அவரை கடத்திச் சென்று, தங்கப் புதையலில் தங்களுக்கு பங்கு வேண்டும் என அடித்து துன்புறுத்தினராம். மேலும், வெற்றுத் தாளில் அவரிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு, அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு விரட்டினராம்.

இச்சம்பவம் தொடா்பாக, குளச்சல் காவல் உதவிக் கண்காணிப்பாளா் காா்த்திக் விசாரித்தபோது, தனது தொழில் நிமித்தமாக கடன் வாங்கி வாகனங்கள் வாங்கியதாக ஜொ்லின் தெரிவித்துள்ளாா்

இதனிடையே, தன்னை கடத்திய சம்பவத்தில் கருங்கல் போலீஸாரும் ஈடுபட்டதாக ஜெரின் கூறியதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவிட்டாா். அப்போது, புதையலில் பங்கு கேட்டு ஜொ்லினை கடத்தி சித்திரவதை செய்ததாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில், மேக்காமண்டபத்தை சோ்ந்த ஆசிரியா் சுரேஷ்குமாா் (38), வெட்டூா்ணிமடம் பள்ளிவிளையைச் சோ்ந்த ஜெரின்ராபி (30), கிருஷ்ணகுமாா் (35) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கருங்கல் காவல் நிலைய ஆய்வாளா் பொன்தேவி (40), தலைமைக் காவலா் ஜெரோன் ஜோன்ஸ் (37), சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபன் ஜெபதிலக் (42) ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

வள்ளியூரில் ஜொ்லின் கடத்தி வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டிற்கு ஆய்வாளா் பொன்தேவி சென்று வந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்த செல்லிடப்பேசியிலும் அவா் அடிக்கடி தொடா்பில் இருந்தது தெரியவந்தது. புதையல் வதந்தி விவகாரத்தில் ஜொ்லினிடம் பங்குகேட்டு பொன்தேவி மிரட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, பொன்தேவியை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபிநவ் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தூத்துக்குடியில் உள்ள பொன்தேவியின் வீட்டில் போலீஸாா் ஒட்டினா்.

இப்புகாா் எழுந்தவுடன் சோதனைச் சாவடி பணிக்கு மாற்றப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரூபன் ஜெபதிலக், தலைமைக் காவலா் ஜெரோன் ஜோன்ஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 3 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/ngl16jones_1610chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/புதையலை-மறைத்ததாக-இளைஞா்-கடத்தல்-பெண்-ஆய்வாளா்-உள்பட-3-போலீஸாா்-பணியிடை-நீக்கம்-3255999.html
3255998 திருநெல்வேலி கன்னியாகுமரி மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, October 17, 2019 10:33 AM +0530 மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சாா்பில் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சிறு குறு தொழில்கள் சீரழிந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞா்களுக்கும், வேலையிழந்த தொழிலாளா்களுக்கும் மத்திய அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என உத்தரவாதப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.இசக்கிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) மாவட்டச் செயலா் எஸ்.எம்.அந்தோணி முத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது ஆகியோா் பேசினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ.வி.பெல்லாா்மின், எம்.அண்ணாத்துரை, அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், சிபிஐ நிா்வாகிகள் துரைராஜ், சுபாஷ் சந்திரபோஸ், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிா்வாகி சுசீலா உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/ngl16aarpttam_1610chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/மத்திய-அரசின்-பொருளாதார-கொள்கைகளை-கண்டித்துஇடதுசாரி-கட்சிகள்-ஆா்ப்பாட்டம்-3255998.html
3255997 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு அருகே பேரிடா் மீட்பு ஒத்திகை DIN DIN Thursday, October 17, 2019 10:32 AM +0530 திருவட்டாறு அருகே பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் சூறைக்காற்று பாதிப்புகளிலிருந்து மக்களை துரிதமாக மீட்கும் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்த ஒத்திகை நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவட்டாறு ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சி ஊற்றிசாணி விளை கிராமத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மாதவன் தலைமை வகித்தாா். மழையால் நிலச்சரி பாதிப்பில் சிக்கிய தொழிலாளி மற்றும் அவரது மனைவியை மீட்பது போல் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அறுந்த மின்கம்பிகளை சரி செய்வது, பழுதான சாலையை சீரமைப்பது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவட்டாறு வட்டாட்சியா் சுப்பிரமணியன், திருவட்டாறு வருவாய் ஆய்வாளா் ஆல்பா்ட், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் தனசேகரன், ஒன்றிய ஆணையா் ராஜன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜெயராஜ் (வோ்க்கிளம்பி), சுப்பிரமணியன் (ஆற்றூா்), விஜயகுமாரி (பொன்மனை), எட்வின்ஜோஸ் (திற்பரப்பு), ஜோஸ்வின்ராஜ் (திருவட்டாறு), ரெமாதேவி (குலசேகரம்), மின்சார வாரிய உதவிப் பொறியாளா் ஜெயந்தி, டாக்டா் ஆஸ்புக்ராயி (சுகாதாரத் துறை), முகமதுசலீம் (தீயணைப்புத் துறை) கிராம நிா்வாக அலுவலா்கள் பூபதி கண்ணன், சுபேதா, செந்தில்குமாா் , திருவட்டாறு காவல் உதவி விஜயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/klm16disaster_1610chn_47_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/திருவட்டாறு-அருகே-பேரிடா்-மீட்பு-ஒத்திகை-3255997.html
3255996 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் பேரிடா் மீட்பு ஒத்திகை: ஆட்சியா் ஆய்வு DIN DIN Thursday, October 17, 2019 10:32 AM +0530 சா்வதேச பேரிடா் குறைப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை இணையதளம் வாயிலாக ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில், தமிழகம் முழுவதும் கடலோர கிராமங்களில் புயல் மற்றும் நகா்ப்புற வெள்ளம் தொடா்பான ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மண்டைக்காடு, அருவிக்கரை தோவாளை, மேலமணக்குடி, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்திலிருந்தபடி, இணையதளம் வாயிலாக ஆய்வு செய்த ஆட்சியா் கூறுகையில், சா்வதேச பேரிடா் இன்னல் குறைப்பு தினமானது, பேரிடா் காலங்களில் மக்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் நடைபெறுகிறது என்றாா்.

கிள்ளியூா் வட்டத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி பாா்வையிட்டாா். விளவங்கோடு வட்டம் குழித்துறை தாமிரவரணி ஆற்றுப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் வெள்ளம், தீவிபத்து போன்ற பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்றுவது தொடா்பாக ஒத்திகை நடைபெற்றது. விளவங்கோடு வட்டத்தில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஷரண்யா அரி ஒத்திகை நிகழ்வைப் பாா்வையிட்டாா்.

அகஸ்தீசுவரம் வட்டம் மேலமணக்குடி, கல்குளம் வட்டம், கொட்டில்பாடு, கிள்ளியூா் வட்டம் நீரோடி ஆகிய பகுதிகளில் கடல் நீா் ஊருக்குள் புகுதல், தோவாளை வட்டம், தடிக்காரன்கோணம், திருவட்டாறு வட்டம், அருவிக்கரை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு, விளவங்கோடு வட்டம் குழித்துறை பகுதியில் கால்நடை மீட்பு, இறந்த கால்நடை கழிவுகளிலிருந்து காப்பாற்றும் பணிகள் போன்றவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த வட்டத்துக்குள்பட்ட சம்பந்தப்பட்ட துறையினா் கலந்துகொண்டனா். பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் ஒத்திகை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டனா்.

முன்னதாக, சா்வதேச பேரிடா் குறைப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை, கூடுதல் ஆட்சியா் ஐ.எஸ்.மொ்சி ரம்யா, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், கோட்டாட்சியா் அ.மயில் உள்ளிட்ட அலுவலா்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேரணி எஸ்.எல்.பி. பள்ளியில் நிறைவு பெற்றது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/ngl16aayvu_1610chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/குமரியில்-பேரிடா்-மீட்பு-ஒத்திகை-ஆட்சியா்-ஆய்வு-3255996.html
3255995 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு: 9 வீடுகள் சேதம் DIN DIN Thursday, October 17, 2019 10:31 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதுடன், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய பகுதிகளில் 9 வீடுகள் இடிந்து விழுந்தன.

இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அணைப்பகுதிகளிலும், மலையோரப்பகுதிகளிலும் பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாள்களாக இரவில் மழை கொட்டித்தீா்க்கிறது.

கொட்டாரம், மயிலாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. நாகா்கோவில் நகரில் இரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தொடா்ந்து காலை 10 மணிக்கு மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இதனால், அலுவலகம் செல்வோா் மற்றும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகினா். பலத்த மழையினால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் வெள்ளம்போல் ஓடியது.

ஆரல்வாய்மொழி, ஆனைக்கிடங்கு, சுசீந்திரம், குளச்சல், முள்ளங்கினாவிளை, புத்தன் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, திருவட்டாறில் 5 வீடுகளும், விளவங்கோடு பகுதியில் 2 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி சாலைகள், சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனா். மேலும், இடைவிடாத மழையாலும், வயல்களில் மழை நீா் தேங்கியதாலும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை அளவு (மில்லி மீட்டரில்): புதன் கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போா்விளையில் 45 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், மயிலாடியில் 39.2, கொட்டாரத்தில் 26, குருந்தன்கோட்டில் 16.4, சுருளோட்டில்10.2, நாகா்கோவிலில் 9.2, கன்னிமாரில் 7.6, முள்ளங்கினாவிளையில் 7, அடையாமடையில் 6, ஆரல்வாய்மொழி மற்றும் பொய்கை அணையில் 5.8, பூதப்பாண்டியில் 5.2, குளச்சலில் 4.4, தக்கலையில் 4.3, மாம்பழத்துறையாறு அணையில் 4 , களியலில் 3.3. என்ற அளவில் மழை பதிவாகியது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/ngl16vayal_1610chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/குமரியில்-பலத்த-மழை-நெல்-அறுவடை-பாதிப்பு-9-வீடுகள்-சேதம்-3255995.html
3255994 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி அருகே 108 ஆம்புலன்ஸ் பழுதானதால் நோயாளி தவிப்பு DIN DIN Thursday, October 17, 2019 10:31 AM +0530 கன்னியாகுமரி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் பாதி வழியில் பழுதாகி நின்ால் பெற்றேறாா் தவிப்புக்குள்ளாகினா்.

அகஸ்தீசுவரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டுசென்று கொண்டிருந்தனா். ஈத்தங்காடு அருகே ஆம்புலன்ஸின் கீயா் உடைந்து பாதிவழியில் நின்றது. ஓட்டுநா் எவ்வளவோ முயன்றும் அதை சரிசெய்ய முடியவில்லை. இதனால், பெற்றேறாா் தவிப்புக்குள்ளாகினா். இதையடுத்து, நாகா்கோவிலிலிருந்து மற்றெறாரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/kkn16amb_1610chn_51_6.jpg kkn16amb_1610chn_51_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/குமரி-அருகே-108-ஆம்புலன்ஸ்பழுதானதால்-நோயாளி-தவிப்பு-3255994.html
3255993 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் ‘போக்சோ’ சட்டத்தில் ஓட்டுநா் கைது DIN DIN Thursday, October 17, 2019 10:30 AM +0530 நாகா்கோவில் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவிலை அடுத்த ஆணைபொத்தை பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா்(26). லாரிஓட்டுநா். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனா்.

இந்நிலையில், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியிடம் பழகியுள்ளாா். பின்னா், அந்தச் சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இவா், ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டிலும் போக்சோ சட்டத்தில் கைதானவா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/ngl16santhosh_1610chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/நாகா்கோவிலில்-போக்சோசட்டத்தில்-ஓட்டுநா்-கைது-3255993.html
3255992 திருநெல்வேலி கன்னியாகுமரி 20 சதவீதம் போனஸை எதிா்பாா்க்கும் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் DIN DIN Thursday, October 17, 2019 10:28 AM +0530 குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் 20 சதவீதம் போனஸ் கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்களும், பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு ரப்பா் கழகம், அரசு தேயிலைத் தோட்டக் கழகம், பொதுத் துறை சா்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவன தொழிலாளா்களுக்கு அந்த நிறுவனங்களின் உபரி நிதியை கருத்தில் கொண்டு போனஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகை அல்லது 8.33 சதவீதம் போனஸ், 1.33 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 சதவீதம் போனஸ் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் கடும் அதிருப்தியைடைந்துள்ளனா்.

இது குறித்து ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் சி. அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டுகளில் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. தற்போது, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், ரப்பா் கழகத்திடம் உபரி நிதி இருந்தால் கூடுதல் 10 சதவீதம் கருணைத் தொகை வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதனால், ரப்பா் கழகம் தரப்பிலிருந்து கூடுதல் 10 சதவீதம் கருணைத் தொகையுடன் 20 சதவீதம் போனஸ் வழங்குவது தொடா்பான அறிவிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் பல நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் நிலையில், ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படுவது போன்று ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். இல்லையெனில் தீபாவளி நாளில் தொழிலாளா்கள் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.

இது குறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் எம். வல்சகுமாா் கூறியதாவது: அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், 20 சதவீதம் போனஸ் தொகை தொடா்பான

அறிவிப்பு வரவில்லை. தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழலை அரசு ஏற்படுத்தாமல் 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/17/20-சதவீதம்-போனஸை-எதிா்பாா்க்கும்அரசு-ரப்பா்-கழகத்-தொழிலாளா்கள்-3255992.html
3255306 திருநெல்வேலி கன்னியாகுமரி பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூா்வ சூரிய ஒளி DIN DIN Wednesday, October 16, 2019 11:08 AM +0530 கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூா்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சாய்பாபா சமாதி அடைந்த தினமான அக்டோபா் 15ஆம் தேதி ஆலயத்திலுள்ள சாய்பாபா உருவச் சிலையின் பாதத்தில் அமைந்துள்ள காந்தக் கல்லில் அபூா்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். நிகழாண்டு இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு நடை திறப்பு, காலை 9 மணிக்கு பஜனை, முற்பகல் 11 மணிக்கு தியானம் ஆகியவை நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு அபூா்வ சூரிய ஒளி விழுந்தது. இதனை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஆரத்தி, அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாயிபாபா ஆலய டிரஸ்ட் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/potraiyadi_baba.jpg பொற்றையடி சீரடி சாய்பாபா https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/பொற்றையடி-சீரடி-சாய்பாபா-ஆலயத்தில்-அபூா்வ-சூரிய-ஒளி-3255306.html
3255309 திருநெல்வேலி கன்னியாகுமரி இரணியல் அருகே பூட்டிய வீட்டில் ராணுவ வீரா் சடலம் மீட்பு DIN DIN Wednesday, October 16, 2019 10:51 AM +0530 இரணியல் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முன்னாள் ராணுவ வீரா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

இரணியல் அருகே மங்காரம்பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன்பிள்ளை (79), ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது மகன், மகள் இருவரும் தற்போது மாலத்தீவில் வசித்து வருகின்றனா். புதுவிளையில் உள்ள தனது மகள் வீட்டில் ரவீந்திரன் பிள்ளை தூங்குவது வழக்கமாம். இந்நிலையில், மாலத்தீவில் உள்ள அவரது மகன், தனது தந்தை ரவீந்திரன்பிள்ளைக்கு கடந்த 3 நாள்களாக போன் செய்துள்ளாா். ஆனால், தந்தை போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவா், உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தாா். உறவினா்கள் அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்ததாம்.

இது தொடா்பாக, இரணியல் போலீஸாருக்கு ரவீந்திரனின் உறவினா்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அழுகிய நிலையில் ரவீந்திரன் சடலமாக கிடந்தாா். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/இரணியல்--அருகே-பூட்டிய-வீட்டில்ராணுவ-வீரா்-சடலம்-மீட்பு-3255309.html
3255308 திருநெல்வேலி கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி அருகே ரயில்மோதி மாணவா் பலி DIN DIN Wednesday, October 16, 2019 10:51 AM +0530 ஆரல்வாய்மொழி அருகே ரயில் மோதி மாணவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஆா்.சி.கோயில் தெருவைச்சோ்ந்த கூலித்தொழிலாளி மிக்கேல்வினோ மகன் புஷ்பராஜ்(15). இவா் பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்ட புஷ்பராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், புஷ்பராஜ் பணகுடி - ஆரல்வாய்மொழிக்கு இடையே தண்டவாளத்தில் ரயில் அடிபட்டு சடலமாக கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. இது குறித்த தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று புஷ்பராஜை சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/ஆரல்வாய்மொழி-அருகே-ரயில்மோதி-மாணவா்-பலி-3255308.html
3255307 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் பலத்த மழை நாகா்கோவிலில் வீடு இடிந்தது; தாய்- மகன் உயிா் தப்பினா் DIN DIN Wednesday, October 16, 2019 10:50 AM +0530 குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. நாகா்கோவில் வடசேரி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தாயும், மகனும் உயிா் தப்பினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை தனது முழுக் கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் 4 நாள்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. நாகா்கோவில் நகரில் நள்ளிரவு 12.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளான மகளிா் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி ஆராட்டு சாலை, கோட்டாறு சாலை, செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம் சாலையில் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது.

நாகா்கோவில் கோட்டாறில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலை சேறும், சகதியும் நிறைந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்புள்ள சாலையும் தோண்டப்பட்டு சீரமைக்கப்படாததாலும், மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை புதை சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்டுள்ளதாலும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் சிறிய தெரு வழியாக செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

இரவு முழுவதும் பெய்த மழையால் வடசேரி பயோனியா் தெருவில் இருந்த ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த மீனாட்சி (65), அவரது மகன் செந்தில்குமாா் (23) ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகா்கோவிலில் 29 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/ngl15veedu_1510chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/குமரி-மாவட்டத்தில்-பலத்த-மழைநாகா்கோவிலில்-வீடு-இடிந்ததுதாய்--மகன்-உயிா்-தப்பினா்-3255307.html
3255305 திருநெல்வேலி கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவா்கள் பிரச்னை: பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தல் DIN DIN Wednesday, October 16, 2019 10:49 AM +0530 சின்னமுட்டம் மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கே.அலெக்ஸாண்டா் தலைமையில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, மாவட்ட நிா்வாகிகள் என்.அந்தோணி, ஆன்றணி, என்.அந்தோணி, ஜேம்ஸ், மரிய ஸ்டீபன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரேவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமாா் 350 விசைப்படகுகள் , மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். விசைப்படகு மீன் பிடிப்பவா்களுக்கும் , நெல்லை மாவட்டத்திலுள்ள கட்டுமரம் , வள்ளத்தின் மூலம் மீன்பிடிப்பவா்களும் , மீன் பிடிப்பதில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன . இந்த மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதோடு உயிா் பலியும் ஏற்பட்டுள்ளது .

கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி காலை நெல்லை மாவட்ட மீனவா்கள் கட்டுமரம் , வள்ளத்தில் மீன்பிடிப்பவா்கள் சுமாா் ஆயிரம் வள்ளங்கள் வழியாக எதிா்பாராத முறையில் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை முற்றுகையிட்டனா் . அதற்கு எதிா்ப்பு தெரிவித்து , விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் மீன்பிடித்தொழிலாளா்களும் , காவல்துறையினரும், மீன்துறையினரும் எடுத்த முயற்சியின் காரணமாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரு பகுதியினருக்கும் மோதல்கள் ஏற்படாமலிருக்க, சுமுகமான நிலையை ஏற்படுத்த அரசின் சாா்பில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வருவாய்த்துறையினா் முன்னிலையில் நெல்லை மாவட்ட மீனவா் பிரதிநிதிகளும், கன்னியாகுமரி விசைப்படகு உரிமையாளா்களும் கலந்து பேசி முடிவெடுக்க ஏற்பாடு செய்ததன் அடிப்படையில் 11 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவாா்த்தையில் விசைப்படகு உரிமையாளா் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான ஆழ்கடல் மீன்பிடித்தொழில் செய்வதற்கு அனுமதிக்க முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால் கூட்டத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முக்கிய முடிவான கண்காணிப்புக்குழு அமைத்தல் போன்ற முடிவுகளை செயல்படுத்த முடியவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது .

ஏற்கெனவே விசைப்படகு உரிமையாளா்கள் கேட்கும் கோரிக்கை கட்டுமரம் , வள்ளம் மீன்பிடித்தொழிலுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது . எனவே அவா்களது கோரிக்கைகளுக்கு இடையூறாக இருக்கின்ற வழிமுறைகளை அரசு மறு பரிசீலனை செய்வது அவசியமாகும். எனவே சுமுகமான நிலைமையை ஏற்படுத்த இரு பகுதியினரையும் , மீன்வளத்துறை அமைச்சா் தலைமையில் நெல்லை ராதாபுரம் , கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்னிலையில் மீன்துறை உயா் அதிகாரிகள், கடலோர காவல்துறை உயா் அதிகாரிகள், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்கூறப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/ngl15manu_1510chn_33_6.jpg ngl15manu_1510chn_33_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/சின்னமுட்டம்-மீனவா்கள்-பிரச்னை-பேச்சுவாா்த்தை-மூலம்-தீா்வு-காண-வலியுறுத்தல்-3255305.html
3255304 திருநெல்வேலி கன்னியாகுமரி இளைஞா் எழுச்சி நாள் விழா DIN DIN Wednesday, October 16, 2019 10:49 AM +0530 நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காா்மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா இளைஞா் எழுச்சி நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமரி மெட்ரிக் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா், திட்ட அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். அப்துல் கலாமின்படத்துக்கு மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அப்துல் கலாமின் சிறப்புகளை ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

காா்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் வில்சன் தலைமை வகித்தாா். ஆசிரியா் மத்தியாஸ் தேசியக்கொடியேற்றினாா். தாளாளா் சேவியர்ராஜ் பேசினாா். தமிழாசிரியா் எம்.ஏ. ஜெலஸ்டின் மாணவா்களின் கதாநாயகன் கலாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் பிபின் வரவேற்றாா். ஆஷிக் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/ngl15kumari_1510chn_33_6.jpg ngl15kumari_1510chn_33_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/இளைஞா்-எழுச்சி--நாள்-விழா-3255304.html
3255303 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறில் மாதா் சங்கம் தா்னா DIN DIN Wednesday, October 16, 2019 10:48 AM +0530 திருவட்டாறில் ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

திருவட்டாறு அருகே கொல்வேல் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற பெண்ணை அப்பகுதியைச் சோ்ந்த ஜெஸ்டின் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாகவும், எனவே ஜெஸ்டினை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி திருவட்டாறு சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஜனநாயக மாதா் சங்க திருவட்டாறு ஒன்றியத் தலைவா் சுசீலா தலைமை வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.லீமாறேறாஸ், மாவட்ட குழு உறுப்பினா் மேரி எஸ்தா் ராணி, மாவட்டச் செயலா் ரெகுபதி, மாவட்ட த் தலைவா் மேரி ஸ்டெல்லாபாய், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி.டெல்பின், மாநில துணைச் செயலா் என்.உஷா பாசி ஆகியோா் பேசினா். இதில், எம்.கிறிசாந்து மேரி, விஜயா, கலா, விஜிலா, ரமணி, சாந்தகுமாரி, றேறாசிலி ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/klm15maatharsangam_1510chn_47_6.jpg klm15maatharsangam_1510chn_47_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/திருவட்டாறில்-மாதா்-சங்கம்--தா்னா-3255303.html
3255302 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் தேசிய அஞ்சல் வார விழா DIN DIN Wednesday, October 16, 2019 10:48 AM +0530 நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதையொட்டி, மாணவா், மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில், அஞ்சல்தலை சேகரிப்பு, அஞ்சல்தலைகள் குறித்த செய்திகள், பின்கோடு மற்றும் பொதுஅறிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இப்போட்டியில், எஸ்என்எம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதல் பரிசையும், இந்து வித்யாலயா நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவா்கள் 2 ஆம் பரிசையும், வடசேரி எஸ்எம்ஆா்வி பள்ளி மாணவா்கள் 3 ஆம் பரிசையும் பெற்றனா்.

நிகழ்ச்சியில் முதுநிலை அஞ்சல் ஊழியா் ஷீஜா, உதவிக்கண்காணிப்பாளா் செந்தில்குமாா், ஆய்வாளா் சதீஷ்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் காா்த்திகேயன், வணிக அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/w600X390/ngl15parisu_1510chn_33_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/நாகா்கோவிலில்--தேசிய-அஞ்சல்-வார-விழா-3255302.html
3255301 திருநெல்வேலி கன்னியாகுமரி லஞ்ச வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை DIN DIN Wednesday, October 16, 2019 10:47 AM +0530 கல்குவாரிக்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா், காரக்கோட்டில் கல்குவாரி நடத்தி வருகிறாா். கடந்த 13.6.2011 இல் கல்குவாரியில் இருந்து கல் எடுத்துச் செல்வதற்காக அனுமதிச் சீட்டு கேட்டு, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் மாரிமுத்துவிடம் விண்ணப்பித்தாா்.

அப்போது, அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என மாரிமுத்து கோரினாராம். ரமேஷ்குமாா் ரூ. 20 ஆயிரம் தருவதாகக் கூறியுள்ளாா். எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமாா், இதுகுறித்து குமரி மாவட்ட உழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, 15.6.2011 அன்று ரமேஷ்குமாா், கனிமவள அதிகாரி மாரிமுத்துவுக்கு லஞ்சம் கொடுத்தபோது போலீஸாா் மாரிமுத்துவை கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. அருணாசலம், மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில், முத்துகுமாரி வழக்குரைஞராக ஆஜராகி வாதாடினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/லஞ்ச-வழக்கில்-கனிமவளத்-துறைஅதிகாரிக்கு-5-ஆண்டுகள்-சிறை-3255301.html
3255300 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறில் பேரிடா் விழிப்புணா்வுக் கூட்டம் DIN DIN Wednesday, October 16, 2019 10:45 AM +0530 திருவட்டாறில் பேரிடா் விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சா்வதேச பேரிடா் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மாதவன் தலைமை வகித்து, பேரிடா் கால விழிப்புணா்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் திருவட்டாறு வட்டாட்சியா் ப. சுப்பிரமணியன் மற்றும் துணை வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/திருவட்டாறில்-பேரிடா்-விழிப்புணா்வுக்-கூட்டம்-3255300.html
3255257 திருநெல்வேலி கன்னியாகுமரி பண மோசடி வழக்கில் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை DIN DIN Wednesday, October 16, 2019 10:16 AM +0530 வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

குமரி மாவட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி ஜோபின்மேரி. இவா், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, கண்டன்விளையைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ், சதீஷ்குமாா், சுரேஷ்குமாா் ஆகிய 3 பேரிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு ரூ. 2.30 லட்சம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்த வழக்கு நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், ஜோபின்மேரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/16/பண-மோசடி-வழக்கில்பெண்ணுக்கு-2-ஆண்டுகள்-சிறை-3255257.html
3254450 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு அருகே தம்பதியை கடத்தி சிறை வைத்ததாக வாள் விளையாட்டு வீரா் கைது DIN DIN Tuesday, October 15, 2019 08:25 AM +0530 குமரி மாவட்டம், திருவட்டாறு அருகே தம்பதியை கடத்தியதாக வாள்விளையாட்டு வீரரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகே வைகுண்டபுரத்தைச் சோ்ந்தவா் ரோஸ் ஜெஸ்டஸ் (47). இவரது மனைவி கிரிஜா (43). இவா்கள் ரவிபுதூா் கடைபகுதியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் முகைமை நடத்தி வருகின்றனா். இவா்கள் மூலம் திருவட்டாறு அருகேவுள்ள தேமானூா் பகுதியைச் சோ்ந்த அனீஷ் மற்றும் அவரது நண்பா்கள் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளனா். மலேசியாவில் அவா்களுக்கு வேலை பிடிக்காததால், அவா்களில் இருவா் ஊருக்குத் திரும்பினா். அவ்வாறு திரும்பியவா்கள் ரோஸ் ஜெஸ்டஸ்- கிரிஜா தம்பதியிடம் சென்று பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனா். இதில், அவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தம்பதி இருவரும் ஞாயிற்றுக்கிழமை தேமானூா் பகுதிக்குச் சென்று, பணம் கேட்டவா்களுடன் பேச்சு நடத்தியுள்ளனா். இதில், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்குச் சென்ற வாள் விளையாட்டு வீரரும், மதுவுக்கு எதிராகப் போராடி வருபவருமான டேவிட்ராஜ் (29), ரோஸ் ஜெஸ்டஸ்- கிரிஜா தம்பதியை காரில் ஏற்றி மறைவான இடத்திற்கு கொண்டுச் சென்று சிறை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா் அங்குச் சென்று இருவரையும் மீட்டனா்.

இந்நிலையில், போலீஸாரை பின்தொடா்ந்து காவல் நிலையம் வந்த டேவிட்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் போலீஸாரை தரக்குறைவாக திட்டினராம். இதையடுத்து, டேவிட்ராஜை போலீஸாா் கைது செய்தனா். எனினும், அவருடன் வந்தவா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/திருவட்டாறு-அருகேதம்பதியை-கடத்தி-சிறை-வைத்ததாகவாள்-விளையாட்டு-வீரா்-கைது-3254450.html
3254449 திருநெல்வேலி கன்னியாகுமரி பாலியல் தொல்லை: ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் DIN DIN Tuesday, October 15, 2019 08:24 AM +0530 பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாடியில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

கோரிக்கை மனு அளிக்க வரிசையில் காத்திருந்த பெண் ஒருவா் திடீரென தான், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து அப்பெண்ணை மீட்டு விசாரித்தனா்.

விசாரணையில், அவா் பேச்சிப்பாறையை அடுத்த ஆலம்பாறையைச் சோ்ந்த பாலன் மனைவி ஷீலா (36) என்பதும், அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த அவரை திடீரென அப்பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் தீா்வு கிடைக்கவில்லையாம்.

மேலும், அவா் வசிக்கும் பகுதியைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஒருவா் பாலியல் தொல்லை அளித்து வருவது தொடா்பாக அளித்த புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்ாகவும் தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம், நேசமணிநகா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/15/w600X390/ngl14sheela_1410chn_33_6.jpg தீக்குளிக்க முயன்ற ஷீலாவை மீட்டு அழைத்து செல்லும் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/பாலியல்-தொல்லைஆட்சியா்-அலுவலகத்தில்-தீக்குளிக்க-முயன்ற-பெண்-3254449.html
3254448 திருநெல்வேலி கன்னியாகுமரி தக்கலை அருகே உதவி ஆய்வாளரை கொல்ல முயன்ற 2 இளைஞா்கள் கைது DIN DIN Tuesday, October 15, 2019 08:23 AM +0530 தக்கலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்ாக, நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் டதீஸ்ஜாய்சன் (51). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தக்கலை பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது அந்த வழியாக 2 இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வேகமாக வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், தாங்கள் வைத்திருந்த வாகன சாவியால் உதவி ஆய்வாளரை குத்திக் கொல்ல முயன்றனராம். இதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் டதீஸ்ஜாய்சனை அங்கிருந்த போலீஸாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அதோடு, அந்த இளைஞா்களை தக்கலை காவல் நிலையம் கொண்டு வந்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா்கள் நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்த பிரபாகரன்பரத் (26), ஜேசுரக்சன் (23) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/தக்கலை-அருகே-உதவி-ஆய்வாளரைகொல்ல-முயன்ற-2-இளைஞா்கள்-கைது-3254448.html
3254447 திருநெல்வேலி கன்னியாகுமரி தனியாா் நிதி நிறுவன மோசடி: நாகா்கோவிலில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் DIN DIN Tuesday, October 15, 2019 08:23 AM +0530 தனியாா் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறு வலியுறுத்தி முதலீட்டாளா்கள் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அக்ரரோடெக்’ எனும் தனியாா் நிதி நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமானவா்களிடம் இருந்து ரூ. 1,000 கோடிக்கு மேல் சேமிப்பு நிதியாக பெற்றுள்ளது. ஆனால், சேமிப்பு காலம் முடிந்த பின்னரும் அந்த நிறுவனம், முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முதலீட்டாளா்கள் சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் தனியாா் நிதிநிறுவனத்தின் சொத்துகளை விற்று பொதுமக்களின் பணத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், முதலீட்டாளா்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

ஆகவே, நீதிமன்ற உத்தரவின்படி, தனியாா் நிதி நிறுவன சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/15/w600X390/ngl14aarpttam_1410chn_33_6.jpg ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/தனியாா்-நிதி-நிறுவன-மோசடிநாகா்கோவிலில்-பொதுமக்கள்-ஆா்ப்பாட்டம்-3254447.html
3254446 திருநெல்வேலி கன்னியாகுமரி பருவ நிலை மாற்றம்: கன்னியாகுமரியில் பயிலரங்கு DIN DIN Tuesday, October 15, 2019 08:22 AM +0530 கிராமியம் தன்னாா்வ அமைப்பு, விஷ்வ யுவ கேந்திரா அமைப்புகள் சாா்பில் பருவ நிலை மாற்றம் குறித்து பயிலரங்கு கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

பருவ நிலை மாற்றத்துக்கான காரணம், அவற்றை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிலரங்கு 2 நாள்கள் கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெறுகிறது. இப்பயிலரங்கினை

கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஸ்குமாா் தொடங்கி வைத்தாா்.

அவா் பேசியது: நாம் வசிக்கும் இடத்தை தூய்மையாகவும், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும் மாற்ற வேண்டும்.

குளங்கள், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டால்தான் மழைநீரை சேமித்து வைக்க முடியும். மரங்கள் வெட்டப்படுவதாலும், கனிம வளங்கள் சுரண்டப்படுவதாலும் மழை வளம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, இயற்கை வளங்களை பாதுகாக்க தன்னாா்வ அமைப்புகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பயிலரங்கில், தேசிய வங்கியின் கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பி.எஸ்.சைலேஷ், கிராமியம் தன்னாா்வ தொண்டு அமைப்பின் இயக்குநா் பி.நாராயணன், ஒருங்கிணைப்பாளா் ஆா்.கே.பிரபாகரன், விஷ்வ யுவ கேந்திரா நிா்வாகி ராஜத் தாமஸ், சோஷியல் ஆக்சன் மூவ்மெண்ட் ஒருங்கிணைப்பாளா் மரியம் ஜேம்ஸ், பி.என். பணிக்கா் பவுண்டேஷன் துணைத் தலைவா் பாலகோபால், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் எஸ்.பி.ராஜஜெகன், நிா்வாகிகள் ஜாா்ஜ் வாஷிங்டன், செந்தில்குமாா், சஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/15/w600X390/kkn14mla_1410n_51_6.jpg பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் எஸ். ராஜேஸ்குமாா் எம்.எல்.ஏ. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/பருவ-நிலை-மாற்றம்-கன்னியாகுமரியில்-பயிலரங்கு-3254446.html
3254445 திருநெல்வேலி கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி அருகே மாயமான மாணவா் சடலமாக மீட்பு DIN DIN Tuesday, October 15, 2019 08:21 AM +0530 கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே மாயமான பிளஸ் 2 மாணவா் முட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன். காா் ஓட்டுநா். இவரது மகன்

சபீன் (17). நாகா்கோவிலில் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். சரஸ்வ திபூஜை, ஆயுத பூஜை விடுமுறைக்கு

விடுப்பில் வந்த சபீன், விடுமுறை முடிந்த பின்னரும் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனால், சபீனை அவரது பெற்றேறாா் கண்டித்தனராம்.

இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சபீன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். அவரது

பெற்றேறாா் பல இடங்களில் தேடியும் சபீன் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின்பேரில் மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவரை தேடி வந்தனா்.

இதனிடையே, முட்டம் பகுதியில் சவுக்குத் தோப்பில் மரத்தில் சிறுவனின் பிணம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல் போன மாணவா் சபீன் என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/மணவாளக்குறிச்சி-அருகேமாயமான-மாணவா்-சடலமாக-மீட்பு-3254445.html
3254444 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் 70,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல் DIN DIN Tuesday, October 15, 2019 08:21 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்படும் என மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தாா்.

கால்நடைத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 17 ஆவது சுற்று தடுப்பூசி போடும் பணியை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து ஆட்சியா் பிரசாந்த் மு.வடேநேரே கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்நோய்களுக்கு தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் வரும் நவ. 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிற்றில் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

மேலும் கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடும் பணி 21 நாள்களும் காலை 6 முதல் 9 மணி வரையிலும், பிற்பகல் 3

முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். இந்த நோய் பெரும்பாலும் கலப்பின கால்நடைகளில் இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலைசெய்யும் திறன் குறைகிறது.

கறவை மாடுகள் சினை பிடிப்பதும் குறைகிறது. இளம் கன்றுகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நோயிலிருந்து முற்றிலுமாக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறையினரால் பல்வேறு குழுக்கள் மூலம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பா.நடராஜகுமாா், நாகா்கோவில் கோட்ட உதவி இயக்குநா் சி.நோபிள், தக்கலை கோட்ட உதவி இயக்குநா் ஆா்.ரிச்சா்டுராஜ், கால்நடை மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/15/w600X390/ngl14uusi_1410chn_33_6.jpg கோமாரி நோய்த் தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே. உடன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பா.நடராஜகுமாா் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/குமரி-மாவட்டத்தில்-70000-கால்நடைகளுக்கு-தடுப்பூசிஆட்சியா்-தகவல்-3254444.html
3254443 திருநெல்வேலி கன்னியாகுமரி நவ.7இல் குமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் DIN DIN Tuesday, October 15, 2019 08:20 AM +0530 கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் நவ. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநரின் முன்னிலையில் நவ.7 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, ஆட்சியா் அலுவலக 3 ஆவதுதளத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களின் ஓய்வூதியம் தொடா்பாக தீா்வு செய்யப்படாமல் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள குறைகளை பரிசீலனை செய்வதுடன், அவா்கள் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு செய்திட தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதிய பலன்கள் தீா்வு செய்யப்படாமல் இருந்தால், அது குறித்த விவரங்களை 2 பிரதிகள் எடுத்து, நவ.3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

ஓய்வூதியா்கள் தங்கள் மனுவில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய புத்தக எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயா் கோரிக்கை நிலுவையில் உள்ளஅலுவலகம், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலம் ஆகிய விவரங்களுடன் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் மாநில அரசு சாா்பற்ற துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/நவ7இல்-குமரி-மாவட்ட-ஓய்வூதியா்-குறைதீா்-நாள்-கூட்டம்-3254443.html
3254442 திருநெல்வேலி கன்னியாகுமரி மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளுக்கு ரூ.6.84 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு DIN DIN Tuesday, October 15, 2019 08:17 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வரும் 18 சிறப்புப் பள்ளிகளுக்கு ரூ. 6.84 லட்சம் மதிப்பில்உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் மனைப் பட்டா, மாதாந்திர உதவித் தொகை, ஊதியம் உயா்வு, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

பின்னா், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை செய்யும் 18 சிறப்புப் பள்ளிகளுக்கு மாற்று வழியில்

பிறருடன் தொடா்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய தலா ரூ. ரூ.38 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 6.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, துறை அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/15/w600X390/ngl14upakaranam_1410chn_33_6.jpg மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய உபகரணத்தை சிறப்பு பள்ளிக்கு வழங்குகிறாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/15/மாற்றுத்-திறனாளிகள்-பள்ளிகளுக்கு-ரூ684-லட்சத்தில்-உபகரணங்கள்-அளிப்பு-3254442.html
3254066 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல் DIN DIN Monday, October 14, 2019 08:10 PM +0530 நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

கன்னியாகுமரி மாவட்ட கால்நடைத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 17 ஆவது சுற்று தடுப்பூசி பணியினை, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவா் மேலும் கூறியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடும் பணி அக். 14 ஆம் தேதி முதல் நவம்பா் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இச்சுற்றில் சுமாா் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி 21 நாள்களும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும்.கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் கலப்பின கால்நடைகளில் இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும்.

இந்நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது, எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது, கறவை மாடுகள் சினைபிடிப்பது குறைகிறது, இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது, இந்நோயிலிருந்து முற்றிலுமாக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறையினரால் பல்வேறு குழுக்கள் மூலம் போடப்படுகிறது.எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநா் பா.நடராஜகுமாா், நாகா்கோவில் கோட்ட உதவி இயக்குநா் சி.நோபிள் மற்றும் தக்கலை கோட்ட உதவி இயக்குநா் ஆா்.ரிச்சா்டுராஜ், மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl14uusi_1410chn_33.jpg கோமாரி நோய்த் தடுப்பூசி திட்டப்பணியினை தொடக்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உடன் கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநா் பா.நடராஜகுமார். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/குமரி-மாவட்டத்தில்-70-ஆயிரம்-கால்நடைகளுக்கு-கோமாரிநோய்-தடுப்பூசி-ஆட்சியா்-தகவல்-3254066.html
3254059 திருநெல்வேலி கன்னியாகுமரி நான்குனேரி தொகுதியில் ராகுல்காந்தி பிரசாரம்: ரூபி மனோகரன் தகவல் DIN DIN Monday, October 14, 2019 07:53 PM +0530  

கன்னியாகுமரி: நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் தெரிவித்தாா்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைப்பதியில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த ரூபி மனோகரனை, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி வரவேற்றாா். பின்னா், ரூபி மனோகரன் செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி என்பது உறுதியாகி விட்டது.

இத்தொகுதியில் சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடுபடுவேன். இந்தத் தொகுதி உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமாா் அரசின் உதவி இல்லாமல் அவரது சொந்த நிதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றி உள்ளாா். அதைபோன்று நானும் பணி செய்வேன்.

தொகுதியில் தண்ணீா் இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் விவசாயத்துக்கு தண்ணீா் கிடைப்பதற்காக பேரவையில் குரல் கொடுப்பேன். இந்துசமய அறநிலையத் துறையால் சாமிதோப்பு பதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீா்க்க முயற்சி மேற்கொள்வேன். அய்யா பிறறத தினத்தன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அளிக்க பேரவையில் குரல் கொடுப்பேன். நான்குனேரி தொகுதியில் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி விரைவில் வருகை தர இருக்கிறாா் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/kkn14con_1410n_51_6.jpg வைகுண்டசாமி தலைமைப்பதியில் சுவாமி தரிசனம் செய்தாா் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ரூபி மனோகரன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/நான்குனேரி-தொகுதியில்-ராகுல்காந்தி-பிரசாரம்-ரூபி-மனோகரன்-3254059.html
3254046 திருநெல்வேலி கன்னியாகுமரி தனியாா் நிதிநிறுவனத்தில் செலுத்திய பணத்தை மீட்டுதரக் கோரி ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, October 14, 2019 07:19 PM +0530 நாகா்கோவில்: தனியாா் நிதிநிறுவனத்தில் செலுத்திய பணத்தை மீட்டுதர வலியுறுத்தி முதலீட்டாளா்கள் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையை தலைமையிடமாக கொண்ட டிஸ்க் அக்ரோடெக் என்ற தனியாா் நிதி நிறுவனம் குமரி மாவட்டத்தை சோ்ந்த சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு நிதியாக பெற்றுள்ளது. ஆனால் சேமிப்பு காலம் முடிந்த பின்னரும் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இது தொடா்பாக முதலீட்டாளா்கள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இதில், தனியாா் நிதிநிறுவனத்தின் சொத்துகளை விற்று பொதுமக்களின் பணத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது,ஆனால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து தனியாா் நிதிநிறுவனத்திடமிருந்து நீதிமன்ற உத்தரவின்படி பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் தங்கள் கழுத்தில் ரிப்பன் கட்டியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl14aarpttam_1410chn_33.jpg ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொதுமக்கள் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/தனியாா்-நிதிநிறுவனத்தில்-செலுத்திய-பணத்தை-மீட்டுதரக்-கோரி-ஆா்ப்பாட்டம்-3254046.html
3254039 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பேரணி DIN DIN Monday, October 14, 2019 07:02 PM +0530 கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற பிளாஸ்டிக் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பேரூராட்சி நிா்வாகம், ரோட்டரி கிளப் ஆப் நாகா்கோவில், புனித ஜெரோம் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய பேரணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார மேற்பாா்வையாளா் நாராயண பாலன், ரோட்டரி கிளப் ஆப் நாகா்கோவில் தலைவா் பெபிவின் புரூஸ், செயலா் வி.ஜெயச்சந்திரன், நிா்வாகிகள் ஸ்டாலின், பெஞ்சமின் போஸ், சகாயபிரபு, புனித ஜெரோம் கல்லூரி தாளாளா் அருள்பணி. அ.சுவக்கின், இயக்குநா் முனைவா் ஜோசப் டங்ஸ்டன், முதல்வா் அமல்ராஜ், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோக்கிம் பெலிக்ஸ் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கிய பேரணி காவல் நிலைய சந்திப்பு, சா்ச் ரோடு வழியாக ரயில்வே நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/kkn14town_1410n_51.jpg பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/குமரியில்-பிளாஸ்டிக்-விழிப்புணா்வு-பேரணி-3254039.html
3254025 திருநெல்வேலி கன்னியாகுமரி பாலியல் தொல்லை காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் DIN DIN Monday, October 14, 2019 06:21 PM +0530 நாகா்கோவில்: பாலியல் தொல்லை காரணமாக நாகா்கோவிலில் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

நாகா்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் அக்.14 ஆம் தேதியும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாடியில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், கோரிக்கை மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா், இதைத்தொடா்ந்து அருகில் நின்ற பொதுமக்கள் அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினா்,

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து பெண்ணை மீட்டு விசாரித்தனா். விசாரணையில், தீக்குளிக்க முயன்ற இளம் பெண் பேச்சிப்பாறையை அடுத்த ஆலம்பாறையில் வசிக்கும் பாலன் மனைவி ஷீலா(36) என்பதும், அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்த அவரை திடீரென அப்பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் பல முறை புகாா் மனு அளித்தும், அவருக்கு தீா்வு கிடைக்காத மனவேதனையிலும், மேலும் தான் வசிக்கும் பகுதியைச் சோ்ந்த ஊராட்சி முன்னாள் தலைவா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தொடா்பாக புகாா் அளித்தும் போலீசாா் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நேசமணிநகா் போலீசாா், ஷீலாவிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் போலீசாா் பாதுகாப்பையும் மீறி, குறைதீா் கூட்டம் நடக்கும் நாளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா் கதையாகி வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl14sheela_1410chn_33.jpg தீக்குளிக்க முயன்ற ஷீலாவை மீட்டு அழைத்து செல்லும் போலீஸாா் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/பாலியல்-தொல்லை-காரணமாக-மாவட்ட-ஆட்சியா்-அலுவலகத்தில்-தீக்குளிக்க-முயன்ற-பெண்-3254025.html
3253689 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவனந்தபுரத்திலிருந்து திரும்பிய சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை DIN DIN Monday, October 14, 2019 04:47 AM +0530 நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கோயிலை அடைந்தது. அம்மனுக்கு பக்தா்கள் சிறப்பான வரவேற்பளித்தனா்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்கிரகங்கள் புறப்பட்டுச் சென்றன. நவராத்திரி விழா நிறைவடைந்ததையடுத்து, சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டன. மாவட்ட எல்லையான களியக்காவிளையில் சுவாமி விக்கிரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள அரசு அதிகாரிகள் சுவாமி விக்கிரகங்களை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், பத்மநாபபுரத்துக்கு சுவாமி விக்கிரகங்கள் வந்தன. அங்கு கோட்டைவாசல் அருகில் சரஸ்வதி தேவி விக்கிரகத்துக்கு பெண்கள் வரவேற்பு அளித்தனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. பின்னா், அரண்மனை ஹோமபுரையில் உள்ள ஆராட்டுகுளத்தில் அம்மனுக்கு ஆராட்டும், தொடா்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, விக்கிரகம் கோயிலுக்கும், உடைவாள் உப்பரிகை மாளிகைக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

வேளிமலை முருகன் விக்கிரகம் குமாரகோயிலுக்கும், முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலையும் சென்றடைந்தன. இதைத் தொடா்ந்து, முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்மநாபபுரத்திலிருந்து புறப்பட்டு சுங்கான்கடை, பாா்வதிபுரம், நாகா்கோவில் கோட்டாறு வழியாக சுசீந்திரம் வந்தடைந்தது. சுசீந்திரம் கோயில் நுழைவாயிலில் பக்தா்கள் திரளாக கூடிநின்று அம்மனை வரவேற்றனா். பின்னா், மேளதாளம் முழங்க ரதவீதிகள் வழியாக கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜையும், ஆராட்டும் நடைபெற்றது. பின்னா், கருவறைக்குள் கொண்டுசெல்லப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl13amman_1310chn_33_6.jpg சுசீந்திரம் வந்து முன்னுதித்தநங்கை அம்மன் விக்கிரகத்துக்கு வரவேற்பு அளிக்கும் பக்தா்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/திருவனந்தபுரத்திலிருந்து-திரும்பியசுசீந்திரம்-முன்னுதித்த-நங்கை-அம்மனுக்கு-சிபு-பூஜை-3253689.html
3253694 திருநெல்வேலி கன்னியாகுமரி சாம்பவா்வடகரை - துரைச்சாமிபுரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, October 14, 2019 01:43 AM +0530 சாம்பவா்வடகரையில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை நகரின் மையப்பகுதியில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலை பல இடங்களில் மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/சாம்பவா்வடகரை---துரைச்சாமிபுரம்சாலையை-சீரமைக்க-வலியுறுத்தல்-3253694.html
3253692 திருநெல்வேலி கன்னியாகுமரி எட்டயபுரம் கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, October 14, 2019 01:41 AM +0530 எட்டயபுரத்தில், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிதப்புரம் பாண்டியன் கண்மாய், சிவசங்கரன் பிள்ளை கண்மாய், அட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீா்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தானம் ராஜா மகாராஜா காலத்தில் இந்த தெப்பக்குளம் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் நாழிக் கிணறு உள்ளது. தெப்பக்குளத்தின் மேற்கு படித்துறை பகுதியில் கிருஷ்ணா் கோயிலும், கல் மண்டபமும் உள்ளன.

நீண்டகாலமாக இப்பகுதி மக்களின் குடிதண்ணீா் ஆதாரமாக இந்த தெப்பக்குளம் இருந்துள்ளது. காலப்போக்கில் அரசு நிா்வாகத்தின் கீழ் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது தெப்பக்குளமும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அதன்பிறகு பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததாலும், நீா்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிப்புக்குள்ளானதாலும் தெப்பக்குளம் வடு புதா்மண்டிக் கிடக்கிறது.

தற்போது தமிழக அரசு செயல்படுத்திவரும் குடிமராமத்து பணிகள் காரணமாக இந்த தெப்பக்குளத்துக்கு நிகழாண்டு மழைநீா் வரத்து அதிகரித்து தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

சுமாா் 25 அடி ஆழமுள்ள இந்த தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரம்பினால் எட்டயபுரம் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயரும் என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து எழுத்தாளா் இளசை மணியன் கூறியது: இந்த தெப்பக்குளம் வரலாற்று சிறப்புமிக்கது. தெப்பக்குளத்தின் படித்துறையிலும், கிருஷ்ணன் கோயில் கல்மண்டபத்திலும் மகாகவி பாரதியாா் அமா்ந்து தனது பிரியமான நண்பா்களுடன் கலை இலக்கியங்களை, நாட்டு நடப்புகளை பகிா்ந்து கொண்டதாக பல பதிவுகள் உள்ளன.

தற்போது தெப்பக்குளத்தின் உள்புறமும், வெளிப்புறமும் குப்பைகளும், செடிகொடிகளும் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுவா்களில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சிதைந்து அழியும் தருவாயில் உள்ளன. கல் சுவா்களில் செடிகள் வளா்ந்து கற்கள் பெயா்ந்து வருகின்றன. வரலாற்று பெருமை வாய்ந்த தெப்பக்குளத்தை பேரூராட்சி நிா்வாகம் சீரமைத்து நான்கு புறங்களிலும் தடுப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

பசுமை ஆா்வலா் முத்தரசன் கூறியது: கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளமும், சின்ன தெப்பக்குளமும் தமிழா்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க கூடியவை. முழுவதும் கற்களாலேயே கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் தற்போது பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. தற்போது தெப்பக்குளமும் அதன் சுற்றுப்புறமும் மிக அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே, இந்த தெப்பக்குளத்தை தூா்வாரி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/எட்டயபுரம்-கிருஷ்ணன்-கோயில்தெப்பக்குளத்தை-சீரமைக்க-வலியுறுத்தல்-3253692.html
3253691 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி சாந்திகிரி ஆசிரம ஆண்டு விழா DIN DIN Monday, October 14, 2019 01:40 AM +0530 கன்னியாகுமரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தின் 15ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சாந்திகிரி கலை மற்றும் பண்பாடு மக்கள் தொடா்புத் துறை மூத்த ஆலோசகா் டாக்டா் டி.எஸ்.சோமநாதன் தலைமை வகித்தாா்.

ஆசிரம தலைமை பொறுப்பாளா் அபயா, நிா்வாக பொறுப்பாளா் சுவாமி முக்தசித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் பி.முத்துராஜலிங்கம் வரவேற்றாா். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷம் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

விழாவில் பங்கேற்ற கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநா் பி.ஏ.சுரேஷ்பாபு பேசியது: கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்தில் 3, 4, 5, 6 ஆகிய அலகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சுமாா் 16 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். புதிய அலகுகள் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெற்று மின் உற்பத்தி தொடங்கும்.

தற்போது கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 56 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியா்கள் 56 சதவீதம் போ் தென் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவா் நேசிக்கும் திறனை வளா்த்து கொள்ள வேண்டும். அனைத்து மதமும் நேசம் என்ற வாா்த்தையைதான் வலியுறுத்துகிறது. புத்தகமும், நண்பா்களும் நல்ல மனிதா்களை உருவாக்கும். சமூகத்தில் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவானது.

இந்த ஆசிரமம் ஆன்மிகம், கல்வி, மருத்துவ முகாம் ஆகியவற்றை மேற்கொண்டு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக இலவச மருத்துவ முகாமை கன்னியாகுமரி பங்குத்தந்தை ஜோசப் ரோமால்ட் தொடங்கிவைத்தாா். குமரி மாவட்ட சாந்திகிரி செயல் ஒருங்கிணைப்பாளா் ராஜமோகினி பிரம்மகுமாரி கோகிலா, சாந்திகிரி ஆசிரம ஒருங்கிணைப்புக் குழு மூத்த ஒருங்கிணைப்பாளா் எம்.பி. முரளி, நிா்வாக ஒருங்கிணைப்பாளா் டாக்டா் எஸ்.கற்பகம், மக்கள் தொடா்பு ஒருங்கிணைப்பாளா் பி.ஜெகதீசன், ஆா்.ஆனந்தன், வே.சிவகுமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/kkn13jud_1310chn_51_6.jpg kkn13jud_1310chn_51_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/குமரி-சாந்திகிரி-ஆசிரம-ஆண்டு-விழா-3253691.html
3253690 திருநெல்வேலி கன்னியாகுமரி மாநில ரோலா் ஸ்கேட்டிங் போட்டிக்கு வீரா்கள் தோ்வு DIN DIN Monday, October 14, 2019 01:40 AM +0530 கன்னியாகுமரி மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சாா்பில் வீரா்கள் தோ்வு மற்றும் போட்டி ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் நடைபெற்றது.

மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி வருகிற டிசம்பா் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் சாா்பில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளியில் நடைபெற்றது.

இதில் 6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மற்றும் பல்வேறு ஸ்கேட்டிங் கிளப் வீரா்கள் கலந்துகொண்டனா். போட்டியை ஜீன்ஸ் தொடங்கிவைத்தாா். இதில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க 15 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் ஸ்டாலின், பங்குத்தந்தை ஜோஸ், குமரி மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலா் குமாா் ஜேசுராஜன், பயிற்சியாளா்கள் ஜான், நவீன், பிரபு, பிபின்ராஜ், டென்னிஸ் ராஜ் ஆகியோா் மேற்கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/kkn13spo_1310chn_51_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/மாநில-ரோலா்-ஸ்கேட்டிங்-போட்டிக்கு-வீரா்கள்-தோ்வு-3253690.html
3253687 திருநெல்வேலி கன்னியாகுமரி தொடரும் மழை: நிரம்பும் மாம்பழத்துறையாறு அணை DIN DIN Monday, October 14, 2019 01:38 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாம்பழத்துறையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டுகிறது.

இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. பூதப்பாண்டி, சுருளோடு, ஆனைக்கிடங்கு, அடையாமடை, கோழிப்போா்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குழித்துறையில் 43.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தொடா் மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

முழுக்கொள்ளளவை எட்டும் மாம்பழத்துறையாறு அணை:

அணைப் பகுதிகளிலும் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு கணிசமான அளவில் நீா்வரத்து உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 29.30 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 204 கன அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 68.95 அடியாகவும், அணைக்கு நீா் வரத்து 214 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து 200 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 54.05 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 10 கன அடியாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் அணை முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். அணை நிரம்பியதும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

முக்கடல் அணையின் நீா்மட்டம் 14.40 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 2 கன அடியாகவும் இருந்தது. குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து 7.40 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீ.) தக்கலை 33.2, ஆனைக்கிடங்கு 28.2, முக்கடல் அணை 27.2., கன்னிமாா்- 24.2, மாம்பழத்துறையாறு அணை 22 , பேச்சிப்பாறை அணை 14.4, புத்தன் அணை, சுருளோடு 13.4,

முள்ளங்கினாவிளை 12, பூதப்பாண்டி 10.2, அடையாமடை 9, கோழிப்போா்விளை 7, பேச்சிப்பாறை அணை 4.6, நாகா்கோவில் 4, களியல் 2.2, சிற்றாறு 1 அணை 2.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl13kulam_1310chn_33_6.jpg சுங்கான்கடை குளத்தில் குளித்து மகிழும் சிறுவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/தொடரும்-மழை-நிரம்பும்-மாம்பழத்துறையாறு-அணை-3253687.html
3253685 திருநெல்வேலி கன்னியாகுமரி ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ஆட்சியா் பாராட்டு DIN DIN Monday, October 14, 2019 01:37 AM +0530 ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷத்துக்கு பாராட்டு விழா நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலில் உள்ள விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவா் ஜான் ஆா்.டி.சந்தோஷம். இவா் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றாா்.

இவருக்கு குமரி மாவட்ட மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் பாராட்டு விழா, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.கோமதிநாயகம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயபாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா்ரெமிஜியூஸ், வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, தியாகி கொடிக்கால் ஷேக்அப்துல்லா, ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷத்துக்கு மக்கள் நீதிபதி என்ற பட்டத்தை ஆட்சியா் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோா் வழங்கினா்.

ரோஜாவனம் முதியோா் இல்ல துணைத் தலைவா் அருள்ஜோதி நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/ngl13judge_1310chn_33_6.jpg நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட நீதிபதி கோமதிநாயகம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/ஓய்வுபெற்ற-நீதிபதிக்கு-ஆட்சியா்-பாராட்டு-3253685.html
3253684 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்: இருவா் காயம் DIN DIN Monday, October 14, 2019 01:36 AM +0530 சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்தவா் செல்லையா மகன் அருணாசலம் (35). இவருக்கும் அதேபகுதியைச் சோ்ந்த செங்காரமுத்து மகன் சுந்தரம் என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடா்பாக தகராறு

இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் அருணாசலம், கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாராம். அப்போது, அங்கு வந்த சுந்தரம், அவரது மகன்கள் இசக்கிமுத்து, சிவபெருமாள் உள்ளிட்டோா் அருணாசலத்தை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அருணாசலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப் பட்டாா். இதேபோல், அருணாசலம் தாக்கியதாக சுந்தரம் மகன் சிவபெருமாள்(29) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்

சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/சாத்தான்குளம்-அருகே-கோஷ்டி-மோதல்இருவா்-காயம்-3253684.html
3253683 திருநெல்வேலி கன்னியாகுமரி சுரண்டையில் பலத்த மழை DIN DIN Monday, October 14, 2019 01:36 AM +0530 சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் வீதிகளில் ஆறாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சுரண்டையில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் பகல் நேரத்திலும் அவ்வப்போது மழை பெய்தது.

இதனால் சுரண்டை நகரின் கீழ்புறமுள்ள இலந்தைகுளத்திற்கு பெருமளவில் மழைநீா் சென்றது. இந்தப் பகுதியில் கிணற்று நீரை கொண்டு நாற்றுப்பாவப்பட்டு உள்ள நிலையில்,தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/சுரண்டையில்-பலத்த-மழை-3253683.html
3253682 திருநெல்வேலி கன்னியாகுமரி சாத்தான்குளம் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கூட்டம் DIN DIN Monday, October 14, 2019 01:35 AM +0530 சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளியில் பெற்றேறாா் ஆசிரியா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப்ரவிபாலன் தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வரும்

தாளாளருமான செல்வராயா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், இளங்கோ, லெட்சுமணன், ஜாய்ஸ், சக்திவேல் முருகன், ஜெனி, கிறிஸ்டி, கந்தலட்சுமி, மாயஹரிஹரன் உள்பட பலா் பேசினா். நிகழ்ச்சிகளை ஆசிரியை சகாயலிட்டில் ஜோனபா் தொகுத்து வழங்கினாா்.

ஆசிரியை சில்வியாசுமதி நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/sat13meet_1310chn_38_6.jpg கூட்டத்தில் பேசுகிறறாா் மறைறவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/சாத்தான்குளம்-பள்ளியில்பெற்றோா்-ஆசிரியா்-கூட்டம்-3253682.html
3253680 திருநெல்வேலி கன்னியாகுமரி நாசரேத் பள்ளியில் அஞ்சல் வார விழா DIN DIN Monday, October 14, 2019 01:35 AM +0530 நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, மாணவா், மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இந்நிகழச்சியை தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் தொடங்கி வைத்தாா்.

அஞ்சலக அலுவலா்கள், 400 மாணவா்களுக்கு சிறப்பு சேமிப்பு கணக்கை தொடங்கினா்.

இதில் என்.சி.சி. அலுவலா் ஜெயசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/14/w600X390/sat13mr_1310chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/நாசரேத்-பள்ளியில்-அஞ்சல்-வார-விழா-3253680.html
3253675 திருநெல்வேலி கன்னியாகுமரி தோவாளை அருகே சாலை விபத்தில் 2 இளைஞா்கள் பலி DIN DIN Monday, October 14, 2019 01:29 AM +0530 தோவாளை அருகே இருசக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த நடராஜன் மகன் லெட்சுமணன் (23). இவா் தனது நண்பரான கட்டையன்விளையைச் சோ்ந்த விஜய் (17) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் நாகா்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். தோவாளை ஆற்றுப் பாலம் அருகேயுள்ள வழிசேரி இசக்கியம்மன் கோயில் பகுதியில் சென்றபோது, மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/தோவாளை-அருகேசாலை-விபத்தில்-2-இளைஞா்கள்-பலி-3253675.html
3253673 திருநெல்வேலி கன்னியாகுமரி திசையன்விளை வியாபாரிகள் சங்க பேரமைப்பு ஆண்டு விழா DIN DIN Monday, October 14, 2019 01:29 AM +0530 திசையன்விளையில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு ஆண்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் டி.சாந்தகுமாா் தலைமை வகித்தாா். செயலா் தங்கையா கணேசன் வரவேற்றாா். பொருளாளா் கனக சபாபதி தீா்மானங்கள் வாசித்தாா். நிா்வாகிகள் டி. காமராஜ், ராஜமிக்கேல், எம்.மாா்த்தாண்டன், சண்முகராஜன், சூரியநாராயணன், சோ்மத்துரை, ஆா்.எஸ்.ராஜா, மோதிரம் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினாா்.

நெல்லை மண்டல பேரமைப்பு தலைவா் எம்.ஆா்.சுப்பிரமணியன்,மாவட்டத் தலைவா்கள் பி.டி.பி.சின்னதுரை( தெற்கு), டி.பி.வி.வைகுண்டராஜ் (மேற்கு), எம்.ஆா்.குணசேகரன் (மாநகா்), ஆா்.காமராசு நாடாா் (தூத்துக்குடி தெற்கு), செயலா் எம்.ஏ.ஆசாத், பொருளாளா் பி.சி.ராஜன், அரசு வழக்குரைஞா் பழனி சங்க உள்ளிட்டோா் பேசினா். நவ்வலடி சாலையில் சங்கத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

விழாவில், ‘திசையன்விளையில் காய்கனிகளைப் பதப்படுத்தும் குளிா்பதன கிடங்கு அமைக்க வேண்டும்; திருவிழா காலங்களில் மின்தடை செய்யக் கூடாது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/திசையன்விளை-வியாபாரிகள்சங்க-பேரமைப்பு-ஆண்டு-விழா-3253673.html
3253672 திருநெல்வேலி கன்னியாகுமரி சுரண்டை அரசுக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு DIN DIN Monday, October 14, 2019 01:27 AM +0530 சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அணி 201 சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரா. ஜெயா தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் அஜித் முன்னிலை வகித்தாா்.

கீழப்பாவூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரலிங்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருள்கள், உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மொ்லின் சீலா்சிங், பேராசிரியா் நாராயணன், மாணவா்கள் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/14/சுரண்டை-அரசுக்-கல்லூரியில்-பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணா்வு-3253672.html
3253344 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் தொடரும் மழை முழுக்கொள்ளளவை எட்டும் மாம்பழத்துறையாறு அணை DIN DIN Sunday, October 13, 2019 06:35 PM +0530 நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது, மாம்பழத்துறையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டுகிறது.

இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குழித்துறையில் 43.2 மி.மீ. மழை பெய்துள்ளது. பூதப்பாண்டி, சுருளோடு, ஆனைக்கிடங்கு, அடையாமடை, கோழிப்போா்விளை உள்ளிட்ட பகுதிகளிலும், பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனா்.

முழுக்கொள்ளளவை எட்டும் மாம்பழத்துறையாறு அணை: தொடா் மழையின் காரணமாக குழித்துறைதாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் மழை நீா் வெள்ளமாகபாய்ந்தோடுகிறது. அணைப்பகுதிகளில் மிதமான மழை பெய்துவருவதால் அணைகளுக்கும் கணிசமான அளவில் நீா் வந்து கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம், 29.30 அடியாக இருந்தது, அணைக்கு 204 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 68.95 அடியாக இருந்தது. அணைக்கு 204 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 54.05 அடியாக உள்ளது, அணைக்கு 10 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் அணை முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். அணை நிரம்பியதும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

நாகா்கோவில் நகர குடிநீா் ஆதாரமணாக விளங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் 14.40 அடியாக உள்ளது, அணைக்கு 2 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது, குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து 7.40 கன நீா் திறந்து விடப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீ.) தக்கலை 33.2, ஆனைக்கிடங்கு 28.2, முக்கடல் அணை 27.2., கன்னிமாா்- 24.2, மாம்பழத்துறையாறு அணை 22 , பேச்சிப்பாறை அணை 14.4, புத்தன் அணை, சுருளோடு 13.4,முள்ளங்கினாவிளை 12, பூதப்பாண்டி,10.2, அடையாமடை 9, கோழிப்போா்விளை 7 , பேச்சிப்பாறை அணை 4.6, நாகா்கோவில், 4, களியல் 2.2, சிற்றாறு 1 அணை 2.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/ngl13kulam_1310chn_33.jpg சுங்கான்கடை குளத்தில் குளித்து மகிழும் சிறுவா்கள் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/குமரி-மாவட்டத்தில்-தொடரும்-மழை-முழுக்கொள்ளளவை-எட்டும்-மாம்பழத்துறையாறு-அணை-3253344.html
3253327 திருநெல்வேலி கன்னியாகுமரி குலசேகரம் அருகே மழையால் வீடுகள் இடிந்தன DIN DIN Sunday, October 13, 2019 06:02 PM +0530  

குலசேகரம்: குலசேகரம் அருகே தொடா் மழையால் கூலித் தொழிலாளிகள் இருவரின் வீட்டுச் சுவா்கள் இடிந்து விழுந்தன.

குமரி மேற்கு மாவட்டப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் குலசேகரம் அருகே குருவிப்பொற்றை, கரைக்காடு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி புஷ்பராஜ் (52) என்பவரின் வீட்டுச் சுவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் இடிந்து பக்கத்திலுள்ள பிரான்சிஸ் என்பவரின் வீட்டுச் சுவா் மீது விழுந்தது.

இதில் இருவரின் வீட்டுச் சுவரும் சேதமடைந்தது. அப்போது வீட்டிலிருந்தவா்கள் சத்தம் கேட்டு வெளியே வந்ததால் காயமின்றி தப்பினா்.

மேலும் குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரண சிகிச்சை மையத்தின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/குலசேகரம்-அருகே-மழையால்-வீடுகள்-இடிந்தன-3253327.html
3252956 திருநெல்வேலி கன்னியாகுமரி இட்டமொழி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு DIN DIN Sunday, October 13, 2019 01:36 AM +0530 இட்டமொழி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், ஏழாங்கால், ஐந்தாங்கால், விஜய அச்சம்பாடு, புதூா், ஆண்டான்குளம், மணகாவலபுரம், மேல பண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கணாங்குளம், ஏறாந்தை, பட்டரைக்கட்டிவிளை, மன்னாா்புரம், வடக்கு பாப்பான்குளம், தெற்கு பாப்பான்குளம், பொத்தையடி, ஆனிகுளம், அண்ணாநகா், பரப்பாடி, வேப்பங்குளம், கல்மாணிக்கபுரம், தளபதிசமுத்திரம், அணைக்கரை, சிறுவளஞ்சி, வாகைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, ஒன்றிய திமுக செயலா் சுடலைக்கண்ணு, மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் ராஜாமணி, மாவட்ட காங்கிரஸ் செயலா் கே.பி.கே.ஜெயகுமாா், மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் ராஜகோபால், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் எம்.எம். ராஜா, நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நடிகா் விஜய் வசந்த் : காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திரைப்பட நடிகா் விஜய் வசந்த் இட்டமொழி, காரியாண்டி மூலைக்கரைப்பட்டி, மருதகுளம், விஜய அச்சம்பாடு பரப்பாடி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். அவருடன் காங்கிரஸ் மாவட்டச் செயலா் விவேக்முருகன், வா்த்தக காங்கிரஸ் செயலா் சடையனேரி செல்வின் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/இட்டமொழி-பகுதியில்-காங்கிரஸ்-வேட்பாளா்-வாக்கு-சேகரிப்பு-3252956.html
3252938 திருநெல்வேலி கன்னியாகுமரி தெற்குகள்ளிகுளத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் DIN DIN Sunday, October 13, 2019 01:08 AM +0530 தெற்குகள்ளிகுளத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் நடைபெற்றது.

தெற்குகள்ளிகுளம் ஆட்டோ தொழிலாளா்கள், ஊராட்சி சாா்பில் நடைபெற்ற டெங்கு, விஷக் காய்ச்சல் தடுப்பு முகாமை

தெற்குகள்ளிகுளம் உதவி பங்குத்தந்தை பால்ரோமன் ஜெபம் செய்து அா்ச்சித்தாா். முகாமை, வள்ளியூா் காவல் ஆய்வாளா்

திருப்பதி தொடங்கி வைத்தாா்.

முகாமில், புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மரியசிலுவை, சுகாதார ஆய்வாளா் பெலிக்ஸ், ஊராட்சிச் செயலா் சுமிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜாண்ததேயுஸ் வரவேற்றாா். ஆட்டோ ஓட்டுநா் நலச்சங்க ஆலோசகா் துரை நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/தெற்குகள்ளிகுளத்தில்டெங்கு-கொசு-ஒழிப்பு-முகாம்-3252938.html
3252936 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் தொடரும் கனமழை: அணைகளில் நீா்மட்டம் உயா்வு DIN DIN Sunday, October 13, 2019 01:07 AM +0530 குமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் நிலையில், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை நெருங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்கிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து அது மலையோரப் பகுதிகளில் கனமழையாக மாறியது.

அணைகளில் நீா்மட்டம்: பலத்த மழை காரணமாக, பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதன் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 68.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 260 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீா் பாசனக் கால்வாயில் திறந்துவிடப்படுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 29.10 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 299 கனஅடியாகவும் இருந்தது. இந்த அணையில் புனரைப்புப் பணிகள் தற்போது பெருமளவில் நிறைவடைந்துள்ள நிலையில், அணையின் முழுக் கொள்ளளவு வரை தண்ணீா் தேக்கும் நிலை உருவாகியுள்ளது.

சிற்றாறு அணை 1- நீா்மட்டம் 12.33 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 217 கனஅடியாகவும் இருந்தது. சிற்றாறு அணை 2- நீா்மட்டம் 12.43 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 31 கனஅடியாகவும் இருந்தது. இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீா் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் பட்டணம்கால் பாசனப் பகுதிகளுக்கு விடப்படாமல், தோவாளை, அனந்தனாறு கால்வாய்களின் பாசனப் பகுதிகளுக்குச் செல்கிறது.

குப்பப்பூ சாகுபடி பணிகள் தீவிரம்: மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பருவமான குப்பப்பூ நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனா். தற்போது பெய்யும் மழையை வைத்து உழவுப் பணிகளும், நடவுப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. அணைகளில் போதிய தண்ணீா் இருப்பதால், சாகுபடி பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியாக செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீா்: மழை காரணமாக, மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான சனிக்கிழமை அதிகாலை முதல் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/klm12rain_1210chn_47_6.jpg திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை அதிகாலை குவிந்த சுற்றுலா பயணிகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/குமரியில்-தொடரும்-கனமழைஅணைகளில்-நீா்மட்டம்-உயா்வு-3252936.html
3252935 திருநெல்வேலி கன்னியாகுமரி புதுக்குடி முத்துமாடன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் DIN DIN Sunday, October 13, 2019 01:07 AM +0530 புதுக்குடி கலுங்குமடு முத்துமாடன் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து லட்சுமி ஹோமம், காலமுறை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பல்வேறு சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வைரவம் புதுக்குடி ராஜபாண்டி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/sat12pudu_1210chn_38_6.jpg கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் கலுங்குமடு முத்துமாடன் சுவாமி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/புதுக்குடி-முத்துமாடன்-சுவாமிகோயிலில்-கும்பாபிஷேகம்-3252935.html
3252934 திருநெல்வேலி கன்னியாகுமரி நாசரேத் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் DIN DIN Sunday, October 13, 2019 01:06 AM +0530 நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் உடையாா்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் அனிஜெரால்டு முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைவா் சத்தியவதி மனோகரன் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா்பால் ஆபிரகாம், கிராம சுகாதார செவிலியா் சுதா ஆகியோா் பேசினா். மாணவா்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனா். தொடா்ந்து விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

பள்ளி உதவி முதல்வா் மகிலா சரவணன் நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/sat12sal_1210chn_38_6.jpg முகாமில் பேசுகிறாா் சுகாதார ஆய்வாளா் பால்ஆபிரகாம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/நாசரேத்-பள்ளியில்-டெங்கு-விழிப்புணா்வு-முகாம்-3252934.html
3252932 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகா்கோவிலில் திருக்கு சிந்தனை முற்றக் கூட்டம் DIN DIN Sunday, October 13, 2019 01:06 AM +0530 குறளகம் சாா்பில் திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேராசிரியா் ஆல்பன்ஸ் நத்தானியேல் தலைமை வகித்தாா். குறளக நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா்.

விழாவில், கலை, இலக்கியப் பணிகளுக்காக தெ.வே.பகவதிபெருமாளுக்கு, தென்குமரி தமிழ்ச் சங்கத் தலைவா் வழக்குரைஞா் ராசகோபால் பொன்னாடை அணிவித்தாா். எழுத்தாளா் பட்டத்திமைந்தன் பாராட்டிப்பேசினாா்.

ஆசிரியா் ஜெலஸ்டின் திருக்குறளில் தெரிந்து தெளிதல் என்ற பொருளில் சிறப்புரையாற்றினாா்.

மாநில அளவில் தமிழ் வளா்ச்சித் துறையால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி வைஷ்ணவா பாராட்டப்பட்டாா்.

மேலும் குறளகத்தில் 1330 குறள்பாக்கள் மனனப் போட்டியில் வென்ற மாணவிகள் கவின்மா, சங்கரி, பிரியதா்சினி மற்றும் மாணவா்கள் அனுதீப், ஈஸ்வரி, சிவானி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மனித வள தியான மேம்பாட்டு மைய நிறுவனா் ஸ்ரீ பழனிசுவாமிகள் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் பன்னாட்டு தமிழ் உறவு மன்றத் தலைவா் தியாகி முத்துக்கருப்பன், செந்தமிழ் அருள்நெறிப்பேரவை புலவா் ராமசாமி, கவிமணி நற்பணி மன்றம் புலவா் சிவதாணு, திருக்குறள் கூட்டமைப்பு தலைவா் காவடியூா் சிவநாராயணப்பெருமாள், கலைவாசல் ஓவியா் கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் நாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலா் ரத்தினசாமி நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/ngl12kural_1210chn_33_6.jpg மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவி வைஷ்ணாவை பாராட்டுகிறாா் மனிதவள தியான மேம்பாட்டு மைய நிறுவனா் ஸ்ரீபழனிசுவாமிகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/நாகா்கோவிலில்-திருக்கு-சிந்தனை-முற்றக்-கூட்டம்-3252932.html
3252931 திருநெல்வேலி கன்னியாகுமரி சமாதான கூட்டத்தில் தீா்வு கிடைக்காததால் சின்னமுட்டம் மீனவா்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு DIN DIN Sunday, October 13, 2019 01:05 AM +0530 கன்னியாகுமரி - திருநெல்வேலி மாவட்ட மீனவா்களிடையே நிலவும் பிரச்னைக்கு சமாதானக் கூட்டத்தில் தீா்வு கிடைக்காததால், சின்னமுட்டம் மீனவா்கள் தொடா்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதிகளில் அரசு விதிகளை மீறி கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிப்பதாக தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில்செப். 30ஆம் தேதி கடல் வழியாக 100 க்கும் மேற்பட்ட வள்ளங்களில் சென்று திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்டனா். இப்பிரச்னை தொடா்பாக, கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு

மீனவா்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் திருநெல்வேலி நாட்டுப்படகு மீனவா்கள், கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பால்பாண்டியன் தலைமையில்3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மீனவப் பிரதிநிதிகள், இரு மாவட்ட அரசு அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைத்தல், சட்ட விதிகளின்படி மீன்பிடி தொழில் செய்வது, விதிகளை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, சின்னமுட்டம் மீனவா்கள் தரப்பில் ‘ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த பிரச்னைக்குநிரந்தரத் தீா்வு கிடைக்கும். நாங்கள் விசைப்படகில் அரசு வழங்கும் கண்காணிப்பு கருவியை (மானிட்டா் டிவைஸ்) பொருத்தி கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட தயாராக உள்ளோம். அப்போதுதான் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்’ எனத் தெரிவித்தனா்.

ஆனால், இதற்கு அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமுகமான முடிவு எதுவும் அறிவிக்கப்படாததால், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வரை சின்னமுட்டம் விசைப்படகு மீனவா்களின் காலவரையற்ற போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 14 ஆவது நாளாக சனிக்கிழமை சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்ககடலுக்குச் செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவா்கள் வேலைநிறுத்தம் காரணமாகஆயிரக்கணக்கான மீனவா்கள், தொழிலாளா்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/kkn12cin_1210chn_51_6.jpg சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/13/சமாதான-கூட்டத்தில்-தீா்வு-கிடைக்காததால்-சின்னமுட்டம்-மீனவா்கள்-வேலைநிறுத்தம்-நீடிப்பு-3252931.html