Dinamani - திருநெல்வேலி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3079829 திருநெல்வேலி திருநெல்வேலி வாழ்க்கையில் லட்சியத்தை எட்ட நேர்மறை சிந்தனை அவசியம்: சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு DIN DIN Sunday, January 20, 2019 05:19 AM +0530
வாழ்க்கையில் லட்சியத்தை எட்ட நமக்கு நேர்மறையான சிந்தனை அவசியம் என திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறினார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகித்து 141 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தொலைநெறி தொடர்கல்வி இயக்கக மாணவர்களுக்காக நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழா இதுதான். இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற உதவியாக இருந்த உங்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது பட்டம் பெறும் உங்களில் சிலர் ஏதாவது ஒரு பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், சிலர் கூடுதல் கல்வித் தகுதிக்காகவும், சிலர் வேலைவாய்ப்பை பெறும் நோக்கிலும் படித்திருப்பீர்கள். நீங்கள் பெற்ற இந்த பட்டத்தை நடைமுறை வாழ்க்கையில் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தாவிட்டால் அது அர்த்தமற்றதாகிவிடும். இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனால் காலத்துக்கேற்றவாறு உங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்: இப்போது பட்டம் பெற்றிருக்கும் அனைவரும் இதோடு படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். அது உங்கள் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். பட்டம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் வேலைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல், தொழில்முனைவோராகி வேலைவாய்ப்பையும் உருவாக்குங்கள். சிறு சிறு தோல்வியைக் கண்டு கவலைப்படாதீர்கள். இந்த உலகில் தோல்வியை சந்திக்காதவர்கள் எவருமே கிடையாது.
மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற தலைசிறந்த மனிதர்களும்கூடதோல்வியை சந்தித்தவர்கள்தான். நேர்மறையான சிந்தனையோடு இருங்கள். அது உங்கள் லட்சியத்தை எட்ட நிச்சயம் உதவும் என்றார்.
பட்டம் பெற்ற 141 பேரில் 93 மாணவ, மாணவிகள் ஆசிரிய பயிற்சிப் படிப்பிலும், 27 மாணவ, மாணவிகள் முதுகலையிலும், 21 மாணவ, மாணவிகள் இளநிலையிலும் பட்டம் பெற்றனர்.
தேர்வாணையர் ஆ.சுருளியாண்டி, புல முதல்வர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கூடுதல் தேர்வாணையர் கா. முருகன் செய்திருந்தார்.
பல்கலைக்கழக பதிவாளர் சே. சந்தோஷ்பாபு வரவேற்றார். பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் தி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

படிப்பினால் கிடைக்கும் உயர்வுக்கு வேறு எதுவும் இணையாகாது
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை டாடா ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சி. வேலன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் மக்கள் தொகைதான். இந்தியா 70 சதவீத இளைஞர்களைக் கொண்டிருந்தாலும், இன்றைய அளவில் சீனாவே உயர்ந்து நிற்கிறது. ஆனால் சீனாவில் இளைஞர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. அது நமக்கு பலம்தான்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இயற்கை, விவசாயம் என பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது கல்விதான். இந்தியாவில் அரசும், பெற்றோர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முதன்மையாகத் திகழ்கிறது.
நான் சிறிய பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். பொறியியலில் டிப்ளமோ படித்தேன். அதன்பிறகு நெடுஞ்சாலைத் துறையில் பணியில் சேர்ந்தேன். ஆனால் பொறியியல் படிக்க வேண்டும் என்ற பேராவல் எனக்குள் இருந்ததால், பகுதிநேரமாக பொறியியல் பட்டப் படிப்பு படித்தேன். கடலூரில் இருந்து சிதம்பத்துக்கு 50 கி.மீ. தூரம் பயணித்து படித்தேன். 53 வயதில் முனைவர் பட்டம் பெற்றேன். இதை நான் சொல்வதற்கு காரணம், ஆரம்ப காலத்தில் படிப்பை நிறுத்தியிருந்தால், இன்றைக்கு டாடா நிறுவனத்தில் இந்தப் பதவிக்கு வந்திருக்க முடியாது. படிப்பும், உழைப்பும் சேர்ந்திருக்கிறபோது கிடைக்கிற வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி அளப்பரியது. படிப்பினால் கிடைக்கும் உயர்வுக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/வாழ்க்கையில்-லட்சியத்தை-எட்ட-நேர்மறை-சிந்தனை-அவசியம்-சுந்தரனார்-பல்கலை-பட்டமளிப்பு-விழாவில்-துணைவே-3079829.html
3079759 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு DIN DIN Sunday, January 20, 2019 04:06 AM +0530
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள். அதன் பிறகு வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் முதல்வர் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனை பகுதியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றுப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, கடம்பூர் செ.ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் நிகழ்ச்சியை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் சுமார் 16 கி.மீ. சுற்றளவுக்கு கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கேடிசி நகரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் முதல்வரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/நெல்லையில்-இன்று-அதிமுக-பொதுக்கூட்டம்-முதல்வர்-பங்கேற்பு-3079759.html
3079723 திருநெல்வேலி திருநெல்வேலி மோடியின் வருகை தமிழகத்தில் திருப்புமுனையை உருவாக்கும்: தமிழிசை செளந்தரராஜன் DIN DIN Sunday, January 20, 2019 03:55 AM +0530
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கும் என்றார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: மதுரையில் ரூ.1300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 27 ஆம் தேதி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன்மூலம் தமிழக மக்களுக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்கும்.
தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதுவரை சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் தமிழகத்துக்கு முதலீடுகளும், திட்டங்களும் கிடைத்துள்ளன.
இந்தியாவில் மீண்டும் மோடி என்கிற முழக்கம் உருவாகத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றாலும், பலவீனமாகவே உள்ளனர். பிரதமர் வேட்பாளரை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற விழாவின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதை மீண்டும் முன்மொழியவோ, பிற தலைவர்களின் ஆதரவைத் திரட்டவோ முன்வராதது வேடிக்கையாக உள்ளது.
மாநில சுயாட்சி பேசிய கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசும் நிலைக்கு மாறியிருப்பதே பாஜக அரசின் வெற்றி. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி அதிகளவில் தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார் அவர்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர், நிர்வாகிகள் டி.வி.சுரேஷ், வேல்ஆறுமுகம், மகாராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/மோடியின்-வருகை-தமிழகத்தில்-திருப்புமுனையை-உருவாக்கும்-தமிழிசை-செளந்தரராஜன்-3079723.html
3079722 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை அருகே கோயிலில் செப்புத்தகடுகளை திருட முயற்சி DIN DIN Sunday, January 20, 2019 03:55 AM +0530
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் செப்புத் தகடுகளை சேதப்படுத்தி திருட முயன்றவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி கரையோரம் 5 நிலை ராஜகோபுரம் கொண்ட அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கோயில் கொடிமரத்தில் செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 
சனிக்கிழமை காலையில் பணியாளர்கள் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது கோயிலின் கொடிமரத்தில் இருந்த செப்புத்தகடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை திருடுவதற்காக மர்மநபர்கள் சேதப்படுத்தியிருக்கலாம் என தெரியவருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/நெல்லை-அருகே-கோயிலில்-செப்புத்தகடுகளை-திருட-முயற்சி-3079722.html
3079720 திருநெல்வேலி திருநெல்வேலி வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோயில் தெப்ப உற்சவம் DIN DIN Sunday, January 20, 2019 03:55 AM +0530 வீரவநல்லூர் அருள்மிகு பூமிநாத சுவாமி மரகதாம்பிகை திருக்கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மாலை கோயிலின் எதிரே உள்ள தெப்ப மண்டபத்துக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் வீரவநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/வீரவநல்லூர்-பூமிநாத-சுவாமி-கோயில்-தெப்ப-உற்சவம்-3079720.html
3079719 திருநெல்வேலி திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் மாவட்ட கிரிக்கெட் போட்டி: தென்காசி அணி சாம்பியன் DIN DIN Sunday, January 20, 2019 03:54 AM +0530
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, வாசுதேவநல்லூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் தென்காசி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு, திமுக மேற்கு மாவட்டச் செயலர் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பொன். முத்தையாபாண்டியன், தொழிலதிபர் அய்யாத்துரைபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் ஆ. சரவணன் வரவேற்றார். ச. முத்துசாமி தொகுத்து வழங்கினார்.
முதலிடம் பிடித்த தென்காசி எம்என்சிஎஸ் அணிக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, இரண்டாமிடம் பிடித்த வாசுதேவநல்லூர் லெவன் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாமிடம் பிடித்த வாசுதேவநல்லூர் கலைமணி ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் கோ. மாடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் செ.சு. செண்பகவிநாயகம், ராயகிரி நகரச் செயலர் கேடிசி குருசாமி என்ற சர்க்கரை குரு, மாவட்ட அமைப்புகளின் துணை அமைப்பாளர்கள் வே. மனோகரன், நல்லசிவன், செல்லத்துரை, சுந்தர், பொன்ராஜ், மாவட்ட மகளிரணி நிர்வாகி கிருஷ்ணலீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, லெவன் டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/வாசுதேவநல்லூரில்-மாவட்ட-கிரிக்கெட்-போட்டி-தென்காசி-அணி-சாம்பியன்-3079719.html
3079718 திருநெல்வேலி திருநெல்வேலி களக்காடு முப்பிடாதி அம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் DIN DIN Sunday, January 20, 2019 03:54 AM +0530
களக்காடு கோயில்பத்து தேவி ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது. 
இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 
மாலையில் சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவில் ரக்ஷா பந்தனம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை, சனிக்கிழமை திருமுறை பாராயணம், 2 ஆம் கால யாக பூஜை, 96 வகை மூலப் பொருள்கள் கொண்டு சன்னவதி ஹோமம், மாலையில் 3 ஆம் கால யாக பூஜை, இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன. 
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 4 ஆம் கால யாக பூஜை, 9.30 மணிக்கு பூர்ணாஹூதி, 10 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு வெற்றி விநாயகர் விமானம், தேவி ஸ்ரீமுப்பிடாதி அம்மன் விமானம், மூலஸ்தான கும்பாபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 
இதையடுத்து காலை 11.45 மணிக்கு மஹா அபிஷேகம், பகல் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், இரவில் அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெறுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/களக்காடு-முப்பிடாதி-அம்மன்-கோயிலில்-இன்று-கும்பாபிஷேகம்-3079718.html
3079717 திருநெல்வேலி திருநெல்வேலி சத்திரம் பாரதி பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் அளிப்பு DIN DIN Sunday, January 20, 2019 03:54 AM +0530 கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 450 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை மீரா தலைமை வகித்தார். கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள்முருகையா, பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 450 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
இதில், தெற்கு கடையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமதுரை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவபாலசுப்பிரமணியன், ஆசிரியர் வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/சத்திரம்-பாரதி-பள்ளியில்-மாணவர்களுக்கு-சைக்கிள்-அளிப்பு-3079717.html
3079716 திருநெல்வேலி திருநெல்வேலி டெரே ஒலிம்பியாடு தேர்வு: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் DIN DIN Sunday, January 20, 2019 03:54 AM +0530
தேசிய அளவிலான டெரே ஒலிம்பியாடு தேர்வில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இப்போட்டி நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜஸ்வந்த், ரிஷிகேசன் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். இம் மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் சான்றிதழ், பதக்கம் மற்றும் மினி கணினி ஆகியவற்றை வழங்கினார்.
தேசிய அளவில் வெற்றிபெற்ற இம் மாணவர்களை பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி, முதல்வர் வனிதா ஆகியோர் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/20/டெரே-ஒலிம்பியாடு-தேர்வு-இலஞ்சி-பாரத்-பள்ளி-சிறப்பிடம்-3079716.html
3079074 திருநெல்வேலி திருநெல்வேலி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் DIN DIN Saturday, January 19, 2019 08:14 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், உடனடியாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்  ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,  கோட்டாட்சியர் மணீஷ் நாரணவரே,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
விவசாயிகள்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், இப்போது முறையாக வருவதில்லை.
ஆட்சியர்: கோரிக்கை மனுக்கள் மீதான பதில்களை விவசாயிகளுக்கு முறையாக அளிக்க வேண்டும்.
விவசாயிகள்: திருவேங்கடம் வட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் நெல் பயிர்கள் 70 சதவீதம் பட்டுப்போய்விட்டன. உளுந்து மற்றும் பாசிப் பயிர்கள் பூப்பிடிக்கும் பருவத்தில் கருகிவிட்டன. ஆகவே, திருவேங்கடம் வட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.
அதிகாரிகள்: இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.
விவசாயிகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் புளியரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிசான பருவ சாகுபடி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏடிடி 45 ரக நெல் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை தனியார் வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,000-க்கு வாங்குகிறார்கள்.  அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.1,380-க்கு வாங்கப்படுகிறது.  ஆனால், இப் பகுதியில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், வியாபாரிகளே லாபம் அடைந்து வருகிறார்கள்.  விவசாயிகள் இழப்பைச்சந்தித்து வருகிறார்கள். ஆகவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.
அதிகாரிகள்: நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவாக திறக்கப்படும்.
விவசாயிகள்: வனவிலங்குகளால் பயிர் சேதத்திற்கு ஆளாகும் விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதாக வனத்துறையினர் கூறியிருப்பது வருத்தத்திற்குரியதாகும். கேரளத்தில் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோல யானை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும்போது 3 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
விவசாயிகள்: தென்காசி மலர் சந்தையில் பூக்களை முறையாக எடையிட்டு கொள்முதல் செய்யாமல் கையால் அளந்து இழப்பு ஏற்படுத்துகிறார்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்: தொழிலாளர் நலத்துறை மூலம் ஏற்கெனவே இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, உரிய எடைக்கற்களைப் பயன்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்படும்.

இருக்கைகள் இன்றி தவிப்பு
குளிர்சாதன வசதி, ஒலிபெருக்கி வசதியுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கு தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ளது.  
தற்காலிக ஒலிபெருக்கி வசதியின் மூலமே கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் வரும் நேரங்களில் இருக்கைகள் இல்லாமல் சுமார் 3 மணி நேரம் வரை நின்று கொண்டே பதிலுக்காகக் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.  அந்த அரங்கத்தில் மீண்டும் கூட்டத்தை நடத்தவும்,  வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கூடுதல் வசதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


"பருத்தி பயிருக்குக் காப்பீடு செய்ய பிப். 28 கடைசி நாள்'
பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்  ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 
மாவட்டத்தின் இயல்பான மழையளவு 814.80 மி.மீ.  தற்போது அணைகளில் 63% நீர் இருப்பு உள்ளது.  நிகழாண்டில் பிசான பருவத்தில் இதுவரை 61,254 ஹெக்டேரில் நெற்பயிரும்,  15,709 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 33,811 ஹெக்டேரில் பயறுவகைப் பயிர்களும், 1980 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகளும் பயிரிடப்பட்டுள்ளன. பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சிறு-குறு விவசாயிகளுக்கு 100%  மானியத்திலும்,  இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இத்திட்டத்தை மாவட்டத்தில் 3,275 ஹெக்டேரில் செயல்படுத்த ஏதுவாக ரூ. 13.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு-குறு விவசாயிகளுக்கான சான்று ஆகியவற்றுடன்  w‌w‌w.‌t‌n‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌h‌o‌r‌t‌i/‌m‌i‌m‌i‌s  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் தாங்கள் இருக்குமிடத்திலேயே வேளாண் துறை செயல்பாடுகளை அறியும் வகையில், உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை 12,242 விவசாயிகள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலியின் மூலம் மானிய விவரங்கள், இடுபொருள்கள் இருப்பு உள்ளிட்ட தகவல்களை அறியமுடியும். மாவட்டத்தில் கோடைக்கால நெல் பயிருக்கு (நெல்-3) காப்பீடு செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதியும், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதியும் கடைசி நாள் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/நெல்-கொள்முதல்-நிலையங்கள்-திறக்க-விவசாயிகள்-வலியுறுத்தல்-3079074.html
3079073 திருநெல்வேலி திருநெல்வேலி ஜாக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, January 19, 2019 08:13 AM +0530 பாளையங்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாலைநேர கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற அரசாணைக்கு முரணாக பணிநிரவல் என்ற பெயரில் பணியிறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் தொடங்கவுள்ள எல்.கே.ஜி. , யு.கே.ஜி. வகுப்புகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதைக் கண்டித்தும்,  பள்ளிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் தொடக்கக் கல்வியைச் சீரழிக்கும் முயற்சியை கைவிடக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.பால்ராஜ், வீ.பார்த்தசாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் த.பாபு செல்வன், ஜெ.ஜஸ்டின் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில உயர்நிலை குழு உறுப்பினர் மூ.மணிமேகலை தொடக்கவுரையாற்றினார்.  மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் ஜெ.எட்வர்ட் ஜெபசீலன், க.கங்காதரன், க.துரைசிங் ஆகியோர் பேசினர்.  மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் மு.நாகராஜன் நிறையுரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.மாரிராஜா நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/ஜாக்டோ-ஜியோ-கவன-ஈர்ப்பு-ஆர்ப்பாட்டம்-3079073.html
3079072 திருநெல்வேலி திருநெல்வேலி விவேகானந்தர் மன்றக் கூட்டம் DIN DIN Saturday, January 19, 2019 08:12 AM +0530 விவேகானந்தர் மன்றத்தின் 219 ஆவது கூட்டம்  பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு  மன்றத் தலைவர் பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். ராமர் இறைவணக்கம் பாடினார். மன்றப் பொருளாளர் நாகராஜன் வரவேற்றார். 
"தொலைக்காட்சித் தொடரில் விவேகானந்தர்' என்ற தலைப்பில் பேச்சாளர் சுந்தரம் சொற்பொழிவாற்றினார். விவேகானந்தர் குறித்த கலந்துரையாடலில் ஜெயக்குமார்,  ராசு, சொ.முத்துசாமி, ராமர் ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில் முத்துக்குமார், கணபதி சுப்பிரமணியம், முருகேசன்,  ஆசிரியர் சுப்பிரமணியன், உமையொருபாகம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருக்குறள் முருகன் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/விவேகானந்தர்-மன்றக்-கூட்டம்-3079072.html
3079071 திருநெல்வேலி திருநெல்வேலி திருவள்ளுவர் தினம்: திருக்குறள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வுப் பணி DIN DIN Saturday, January 19, 2019 08:12 AM +0530 திருவள்ளுவர் தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் திருக்குறள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாளையங்கோட்டை மேட்டுத்திடல் மு.ந.அப்துர்ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி  ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம்,  திருவள்ளுவர் தினத்தையொட்டி கடந்த 29 ஆண்டுகளாக திருக்குறளை வீடுகளிலும்,  தெருக்களிலும் எழுதி மக்களிடம் விழிப்புணர்வையும்,  மாணவர்களிடத்தில் திருக்குறள் மீதான ஆர்வத்தையும் வளர்த்து வருகிறார். அதன்படி நிகழாண்டில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் சுவர்களில் திருக்குறள் எழுதும் பணியைச் செய்தார்.   நூலகர் அ.முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.   ஓவிய ஆசிரியருடன், நுண்கலை மன்றத்தின் மாணவர்கள் ஹனிபா,  மது ஆகியோரும் திருக்குறளை எழுதினர் .  
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் கூறியது:  திருவள்ளுவர் தினத்தில் செய்யப்படும் இந்த விழிப்புணர்வுப் பணியால் மாணவர்களுக்கு குறளின்பால் ஈடுபாடு அதிகரிக்கிறது. நூலக சுவரில் மட்டுமன்றி செய்துங்கநல்லூர்,  மகாராஜநகர்,  திருநெல்வேலி நகரம், டி.வி.எஸ்.நகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம் பகுதிகளிலும் திருக்குறள்கள் எழுதப்பட்டுள்ளன என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/திருவள்ளுவர்-தினம்-திருக்குறள்-மீதான-ஆர்வத்தை-அதிகரிக்க-விழிப்புணர்வுப்-பணி-3079071.html
3079070 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கநகை பறிப்பு DIN DIN Saturday, January 19, 2019 08:12 AM +0530 பாளையங்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
பாளையங்கோட்டை அருகேயுள்ள திருவண்ணநாதபுரம் பொட்டல் ஜோதி தெருவைச் சேர்ந்த வெள்ளைத்துரை மனைவி கோமதி (36). இவர், தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கு வந்த மர்ம நபர் கோமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டாராம். பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/பாளை-அருகே-பெண்ணிடம்-3-பவுன்-தங்கநகை-பறிப்பு-3079070.html
3079069 திருநெல்வேலி திருநெல்வேலி 16 வட்டங்களில் இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, January 19, 2019 08:12 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.  
அதன்படி திருநெல்வேலி வட்டம் சுத்தமல்லி,  பாளையங்கோட்டை வட்டம் குன்னத்தூர்,  சங்கரன்கோவில் வட்டம் சென்னிகுளம், தென்காசி வட்டம் பாட்டப்பத்து, செங்கோட்டை வட்டம் வல்லம்,  சிவகிரி வட்டம் மேட்டுப்பட்டி,  வீரகேரளம்புதூர் வட்டம் அதிசயபுரம்,  ஆலங்குளம் வட்டம் அய்யனார்குளம்,  அம்பாசமுத்திரம் வட்டம் சிவசைலம், நான்குனேரி வட்டம் சிங்கனேரி,  ராதாபுரம் வட்டம் சிவகாமிபுரம்,  திசையன்விளை வட்டம் புதூர், கடையநல்லூர் வட்டம் சிங்கிலிபட்டி,  திருவேங்கடம் வட்டம் காரிசாத்தான், மானூர் வட்டம் கானார்பட்டி,  சேரன்மகாதேவி வட்டம் சேரன்மகாதேவி  ஆகிய இடங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இதில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/16-வட்டங்களில்-இன்று-பொதுவிநியோகத்-திட்ட-குறைதீர்-கூட்டம்-3079069.html
3079068 திருநெல்வேலி திருநெல்வேலி கடையம் அருகே ஆம்புலன்ஸ் மோதிவங்கி நகை மதிப்பீட்டாளர் சாவு DIN DIN Saturday, January 19, 2019 08:11 AM +0530 கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டியில் ஆம்புலன்ஸ் மோதியதில் வங்கி நகை மதிப்பீட்டாளர் உயிரிழந்தார்.
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். கடையத்தில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிராமகிருஷ்ணன் என்ற ராஜா (24). இவர் கீழக்கடையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராக இருந்து வந்தார்.  இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ராஜாவும், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகன் ஆறுமுகமும் பைக்கில் பொட்டல்புதூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனராம்.  பைக்கை ராஜா ஓட்டியுள்ளார். அப்போது முதலியார்பட்டி ரஹ்மத் நகர் வளைவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
போலீஸார் விசாரணையில், 108 ஆம்புலன்ஸ் பாவூர்சத்திரத்திலிருந்து ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தில் நோயாளியை அழைத்து செல்ல வந்ததும், வண்டியை சேர்ந்தமரம் அடுத்துள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வெள்ளைத்துரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. விபத்து குறித்து கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/கடையம்-அருகே-ஆம்புலன்ஸ்-மோதிவங்கி-நகை-மதிப்பீட்டாளர்-சாவு-3079068.html
3079067 திருநெல்வேலி திருநெல்வேலி மானூர் அருகே விபத்து: கட்டடத் தொழிலாளி சாவு DIN DIN Saturday, January 19, 2019 08:11 AM +0530 மானூர் அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை  உயிரிழந்தார்.
மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (38). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். 
இந்நிலையில் அதே பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றபோது பொக்லைன் இயந்திரம் மோதியதாகக் கூறப்படுகிறது.  இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் உயிரிழந்தார். 
இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/மானூர்-அருகே-விபத்து-கட்டடத்-தொழிலாளி-சாவு-3079067.html
3079066 திருநெல்வேலி திருநெல்வேலி தாழையூத்தில் விபத்து: காவலாளி சாவு DIN DIN Saturday, January 19, 2019 08:11 AM +0530 திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தாழையூத்து செல்வியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோமதி மகன் வேல்முருகன் (45).  இவர், சங்கர்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். வேல்முருகன், தனது மோட்டார் சைக்கிளில் சங்கர்நகரில் உள்ள  மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாராம். 
அப்போது அவ்வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வேல்முருகனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் இறந்தார். தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/தாழையூத்தில்-விபத்து-காவலாளி-சாவு-3079066.html
3079065 திருநெல்வேலி திருநெல்வேலி தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மேலகரத்தில் தொடக்கம் DIN DIN Saturday, January 19, 2019 08:10 AM +0530 தென்காசி மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.
தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர், மாணவிகளுக்காக வரும் 21ஆம்தேதி முதல் கல்வித் தொலைக்காட்சி செயல்பட உள்ளது. 
இதையொட்டி தென்காசி மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்முறை பாடங்கள் தொடர்பான படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். தென்காசி மாவட்ட கல்விஅலுவலர் ஷாஜகான்கபீர், பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில், அதிமுக புறநகர் மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், பேரூர் செயலர் கார்த்திக்குமார், அரசு வழக்குரைஞர் சின்னத்துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலர் முகிலன், பேச்சாளர் முத்துசாமி, காமராஜ், குணம்,  ரமேஷ், குற்றாலம் பேரவை துணைச் செயலர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் துரை நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/தமிழக-அரசின்-கல்வி-தொலைக்காட்சிக்கான-படப்பிடிப்பு-மேலகரத்தில்-தொடக்கம்-3079065.html
3079064 திருநெல்வேலி திருநெல்வேலி கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம்: ஆட்சியர் DIN DIN Saturday, January 19, 2019 08:10 AM +0530 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்களிடம் ஆட்சியர்  அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்,  வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம்  ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் ஆட்சியர் பேசியதாவது:  ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு பேரணிகள், பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. 
மேலும், தேர்தல் தொடர்பாக 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
2016-இல் நடைபெற்ற நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை கணக்கிட்டு,  குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தி இந்த முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். 
இக்கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,  திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாரணவரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார்  (பொது),  சாந்தி (தேர்தல் பிரிவு), தேர்தல் வட்டாட்சியர் தங்கராஜ்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/கடந்த-தேர்தலில்-குறைவான-வாக்குகள்-பதிவான-பகுதிகளில்-கூடுதல்-விழிப்புணர்வு-அவசியம்-ஆட்சியர்-3079064.html
3079063 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் நாளை எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார் DIN DIN Saturday, January 19, 2019 08:10 AM +0530 திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
இது தொடர்பாக திருநெல்வேலி அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா கூறியதாவது: 
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனை பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  
இதில் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.  மதுரையில் இருந்து கார் மூலம் பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு வரும் முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமிக்கு  திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.  தொடர்ந்து  கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில்  மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள். 
அதைத் தொடர்ந்து திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுப் பேசுகிறார்.  
அவர், திருநெல்வேலியில் முதல்முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.  இந்தக் கூட்டத்துக்கு  மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
அப்போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை,  மாநில அமைப்புச் செயலர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புறநகர் மாவட்டம்: புறநகர் மாவட்ட அதிமுக செயலர் பிரபாகரன் எம்.பி. வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி நகரம் வாகையடி திடலில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வரும்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். 
இக் கூட்டத்தில் மாவட்ட,  ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளும்படி பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/நெல்லையில்-நாளை-எம்ஜிஆர்-பிறந்த-தின-விழா-பொதுக்கூட்டம்-முதல்வர்-எடப்பாடி-கேபழனிசாமி-பங்கேற்கிறார்-3079063.html
3079062 திருநெல்வேலி திருநெல்வேலி ராஜபாளையம்-செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு:  "மீண்டும் கருத்துக் கேட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு' DIN DIN Saturday, January 19, 2019 08:10 AM +0530 ராஜபாளையம்-செங்கோட்டை நான்குவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். மீண்டும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி மாற்றுப்பாதையில் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் திருமங்கலம்-ராஜபாளையம்- செங்கோட்டை (என்.ஹெச்.744) இடையே 147கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டி முதல் செங்கோட்டை வரையிலான சுமார் 69 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலிஆட்சியர் அலுவலகத்தை 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் ஆட்சியரிடம் முறையிட்டனர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:  புதிய சாலை அமைக்கும் பகுதியில் நிலம் உள்ள விவசாயிகளிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்டு அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நான்குவழிச் சாலையை வனத்தையொட்டி அமைப்பதால் வன உயிரினங்கள் பாதிக்கப்படும்.  தென்னை,  மா,  பலா,  கொய்யா,  பனை மரங்கள் பாதிக்கப்படும்.  நெல், கரும்பு, நவதானிய பயிர் சாகுபடியும் பாதிக்கப்படும். அரசுகள் இதை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
இல்லையெனில் கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/19/ராஜபாளையம்-செங்கோட்டை-நான்குவழிச்-சாலைக்கு-எதிர்ப்பு-மீண்டும்-கருத்துக்-கேட்டு-நடவடிக்கை-எடுக்காவ-3079062.html
3078674 திருநெல்வேலி திருநெல்வேலி எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம் DIN DIN Friday, January 18, 2019 09:51 AM +0530 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் அஹமது நவவி பேசினார். மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முல்லை மஜீத், பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொதுச் செயலர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்டச் செயலர் முஸ்தபா. மாவட்டப் பொருளாளர் மீராஷா, மின்னதுலாஹ், ரத்திஸ் முஹம்மது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: பாபர் மசூதி தொடர்பான கண்காட்சி, பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம் நடத்துவது, திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலையை உடனே அமைக்கக் கோருவது, மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு பகுதியிலும் பூத் கமிட்டிகள் அமைத்து திறம்பட செயலாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/எஸ்டிபிஐ-ஆலோசனைக்-கூட்டம்-3078674.html
3078673 திருநெல்வேலி திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட  கணபதி கோயில் வருஷாபிஷேகம் DIN DIN Friday, January 18, 2019 09:51 AM +0530 திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் வருஷாபிஷேகம்  வியாழக்கிழமை நடைபெற்றது.  
இதையொட்டி, கோயிலில் காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், மகா பூர்ணாஹுதி,  அபிஷேகம்,  காலை 10.30 மணிக்கு மேல் விமான கோபுரங்களுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. நண்பகலில் மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள 16 விநாயகருக்கும் பக்தர்கள் தங்களது கைகளால் புஷ்பாபிஷேகம் செய்தனர். 
மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை,   மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 6.30 மணிக்கு மேல் சுவாமி கோயிலில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தியாகராஜநகர் கோயிலில்...
பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் 30ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு கும்பபூஜை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.  மாலையில் 27ஆவது முறையாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவ விநாயகர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் அர்ச்சகர் வெங்கடசுப்பிரமணிய பட்டர் குழுவினரின் வேதபாராயணம், சுப்பிரமணியபிள்ளை குழுவினரின் திருமுறை விண்ணப்பம், பாலசுப்பிரமணியன் குழுவினரின் நாகசுர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/மணிமூர்த்தீஸ்வரம்-உச்சிஷ்ட--கணபதி-கோயில்-வருஷாபிஷேகம்-3078673.html
3078672 திருநெல்வேலி திருநெல்வேலி சுரண்டையில் இருந்து ஜன. 20இல் சென்னை, கோவைக்கு சிறப்பு பேருந்து DIN DIN Friday, January 18, 2019 09:50 AM +0530 சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 20) இயக்கப்படுகிறது.
சென்னை மற்றும் கோவையில் இருந்து சுரண்டை பகுதிக்கு பொங்கல் பண்டிகைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் வசதிக்காக சுரண்டை பேருந்து நிலையத்தில் இருந்து வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு சென்னைக்கும், இரவு 7 மணிக்கு கோவைக்கும் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்துகள் சுரண்டையில் இருந்து கடையநல்லூர், புளியங்குடி, ராஜபாளையம் வழியாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது.  சுரண்டை பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/சுரண்டையில்-இருந்து-ஜன-20இல்-சென்னை-கோவைக்கு-சிறப்பு-பேருந்து-3078672.html
3078671 திருநெல்வேலி திருநெல்வேலி "புத்தக வாசிப்பு  தனிமைக் கொடுமையை நீக்கும்' DIN DIN Friday, January 18, 2019 09:50 AM +0530 தனிமைக் கொடுமையை நீக்கும் வரம் நூல்கள் வாசிப்புக்கு உண்டு என மேலப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற  "வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. 
மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவில் உள்ள சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் 7,000 நூல்கள் கொண்ட பன்நோக்கு நூலகத்தின் சார்பில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் எஸ்.ஷாகுல் ஆலம் தலைமை வகித்தார். 
செயற்குழு உறுப்பினர் காஜா வரவேற்றார்.  ஆலோசகர்கள் கஸ்சாலி காஜா முகைதீன்,  பேராசிரியர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்புவிருந்தினராக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன் கலந்துகொண்டு பேசியது: உலகின் வளர்ந்த நாடுகளில் ஆண்டுக்கு 3,200 பக்கங்களை இளைஞர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 30 பக்கங்களை மட்டுமே வாசிக்கிறார்கள். 
கன்னிமாராவில் அறிஞர்அண்ணா வாசிக்காத நூல்கள் இல்லை என்று அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியதே! நாம் ஏன் அப்படி இல்லை? தொண்டைப்புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சைக்கான நாளை அமெரிக்க மருத்துவர்கள் முடிவுசெய்தபோது, நல்ல ஆங்கிலப்புதினத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடித்தவுடன் அறுவை சிகிச்சை நாளை வைத்துக் கொள்ளலாமா? என்று பேரறிஞர் அண்ணா வேண்டினார். 
ஏன் நம் இளைய சமுதாயத்தை அவ்வாறு செதுக்க முடியவில்லை? தனிமைக் கொடுமையை நீக்கும் பெரும் வரம் நூல்கள். மனஅழுத்தம் குறைக்கும் மாமருந்து நல்லநூல்கள். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் அதிகம். செல்லிடப்பேசிகளின் அதிகப்படியான பயன்பாட்டால் வாசிப்புப் பழக்கம் குறைத்துள்ள இந்த நிலையில், நாடெங்கும் மாணவர் வாசகர் வட்டங்களை ஏற்படுத்தவேண்டும்' என்றார் அவர். 
இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி அரபுப் பேராசிரியர் ஜலில் அகமது நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/புத்தக-வாசிப்பு--தனிமைக்-கொடுமையை-நீக்கும்-3078671.html
3078670 திருநெல்வேலி திருநெல்வேலி எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு DIN DIN Friday, January 18, 2019 09:50 AM +0530 தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், நிர்வாகிகள் பரணிசங்கரலிங்கம், சுதா கே.பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், நிர்வாகிகள் பால்கண்ணன், பேச்சிமுத்துபாண்டியன், அசன்ஜாபர்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேமுதிக சார்பில் அக் கட்சியின் பொருளாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தச்சை பகுதி செயலர் ஆர்.மாரிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, நிர்வாகிகள்ஆரோக்கிய அந்தோணி, மாடசாமி, ஜலீல் ரஹ்மான், சேக், பாலகிருஷ்ணன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/எம்ஜிஆர்-பிறந்த-நாள்-சிலைக்கு-மாலை-அணிவிப்பு-3078670.html
3078669 திருநெல்வேலி திருநெல்வேலி கேரளத்துக்கு லாரியில் கடத்த முயற்சி: 163 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது DIN DIN Friday, January 18, 2019 09:49 AM +0530 தமிழக-கேரள எல்லையான புளியரை வழியாக லாரியில் கடத்திச் செல்லப்பட இருந்த 163 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகப் பதிவெண் கொண்ட லாரி ஒன்று புளியரை சோதனைச் சாவடியை வியாழக்கிழமை காலை கடக்க முயன்றது. போலீஸார் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது,  அதில் 163 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. லாரி, அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரான கோவை அருகேயுள்ள பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் சுபஹானியின் மகன் சுகைபு (35) என்பவரைக் கைது செய்தனர்.
விசாரணையில், பாவூர்சத்திரம் பகுதியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதிகளுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. லாரி, அரிசி மூட்டைகளை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் புளியரை போலீஸார் ஒப்படைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/கேரளத்துக்கு-லாரியில்-கடத்த-முயற்சி-163-மூட்டை-ரேஷன்-அரிசி-பறிமுதல்-ஒருவர்-கைது-3078669.html
3078668 திருநெல்வேலி திருநெல்வேலி திருச்செந்தூரில் ஜன.21 இல் தைப்பூச விழா: பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படுமா? கோ.முத்துக்குமார் - DIN Friday, January 18, 2019 09:49 AM +0530 தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் போதிய கவனம் செலுத்தப்படாமல் உள்ளது. தெருவிளக்கு, கழிப்பறை வசதிகளை அதிகரிக்க வேண்டுமென பெண் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான தைப்பூச விழா இம் மாதம் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. தைப்பூச விழாவில் பங்கேற்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 முதல் 250 கி.மீ. தொலைவுக்கு மேல் பாதயாத்திரையாகச் சென்று வழிபடுகிறார்கள்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆண்கள் மட்டுமன்றி பெண்கள், குழந்தைகளும் பாதயாத்திரை செல்கிறார்கள்.
எண்ணிக்கை அதிகரிப்பு: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறியது: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை எண்ணி மனதை ஒருமுகப்படுத்தி வேண்டுதல் செய்தால் பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூருக்கு 8 முதல் 41 நாள்கள் வரை விரதம் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூர், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்தும் பல பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். இவர்கள் குறைந்தது 3 முதல் 4 இடங்களில் ஓய்வெடுத்து நடையை தொடர்கிறார்கள். பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மயில்காவடி போன்றவற்றுடன் அலகு குத்திக் கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். ஆண்டுதோறும் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றார் அவர்.
தெருவிளக்கு, கழிப்பறைகள் தேவை:  மானூர் பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கூறியது: கடந்த 5 ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வருகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் பிரான்சேரி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய பகுதிகளில் ஓய்வெடுத்து செல்கிறார்கள். அங்கு போதிய கழிப்பறைகள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தாமிரவருணி மற்றும் பாசனக் கால்வாய்களின் கரையோரம் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் பல இடங்களில் தெருவிளக்குகள் போதிய அளவில் இல்லை. பாதயாத்திரை பக்தர்கள் இரவில்தான் அதிகநேரம் நடப்பதால் தெருவிளக்கு மற்றும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு மின்விளக்கு வசதிகளை மாவட்ட நிர்வாகம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 15 கி.மீ. தொலைவு இடைவெளியில் 10 நடமாடும் கழிப்பறைகளையும் அமைக்க வேண்டும். முடநீக்கியியல் நிபுணர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாமை நடத்த வேண்டும். விபத்து பகுதிகளில் பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் 3 வாரங்களுக்கு மட்டும் ஒளிரும் பிளாஸ்டிக் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கண்காணிப்பு அவசியம்:  ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகபக்தர் கிருஷ்ணன் கூறியது:  திருச்செந்தூர்-தூத்துக்குடி, திருச்செந்தூர்-பாளையங்கோட்டை, கிழக்கு கடற்கரைச் சாலைகளின் வழியாக ஒரு வாரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். 
ஆகவே, இந்தச் சாலைகளில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைத்து, அனைத்து வாகன ஓட்டிகளிடமும் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல அறிவுறுத்த வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், ஆயுதப்படை பிரிவு போலீஸாரை கொண்டு சிறப்பு ரோந்து படைகளை அமைத்து கண்காணிக்க வேண்டும். தாமிரவருணி மஹா புஷ்கரவிழாவில் பெண் பக்தர்கள் நீராடவும், உடைகள் மாற்றவும் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல பெண் பக்தர்களுக்காக சிறப்பு ஓய்வறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
விழிப்புணர்வு தேவை:  காவல் துறை வட்டாரங்கள் கூறியது: பெண்கள், குழந்தைகளுடன் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். அதேபோல மாலை 4 முதல் இரவு 11 மணி வரையும், அதிகாலை 4 முதல் காலை 10 மணி வரையும் நடக்கும் வகையில் திட்டங்களை வகுப்பது சிறந்தது. 
ஏனெனில் வயதான பெண்கள், குழந்தைகள் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் நடக்கும்போது சிரமங்களைச் சந்திக்கும் அபாயங்கள் உள்ளன. 
நடந்து செல்லும் பக்தர்கள் தங்களது கைகளில் டார்ச் லைட்டுகள், ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பக்தர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
 ஓய்வெடுக்க விரும்பும் பக்தர்கள் சாலையோரம் வெளிச்சம் இல்லாத இடங்களில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். உணவு, உடை ஆகியவற்றை தேவைக்கு அதிகமாக எடுத்துச் செல்லக் கூடாது. தங்கம் உள்ளிட்ட விலைஉயர்ந்த ஆபரணங்களை அதிகளவில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்றினால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

"தரிசன சலுகை வேண்டும்'
திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள், சாய்வுதள பாதை வழியாக தினமும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் கோயிலுக்குச் சென்றதும் பாதயாத்திரையைக் கருத்தில்கொண்டு மிகவும் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், திருச்செந்தூருக்கு பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல முடியாமல் கடற்கரை மணலிலேயே முருகப்பெருமானுக்கு சூடம் ஏற்றி பஜனை பாடி வழிபட்டு செல்கிறார்கள். பாதயாத்திரையாக வரும் குழந்தைகள், பெண்களுக்காவது தனியாக தரிசன சலுகை வழங்கி முருகப்பெருமானை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்பு இதர பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கவும் பரிசீலிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/திருச்செந்தூரில்-ஜன21-இல்-தைப்பூச-விழா-பாதயாத்திரை-பக்தர்களுக்கு-அடிப்படை-வசதிகள்-அதிகரிக்கப்படுமா-3078668.html
3078667 திருநெல்வேலி திருநெல்வேலி மார்கழி பஜனை குழுவுக்குப் பாராட்டு DIN DIN Friday, January 18, 2019 09:47 AM +0530 பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் மார்கழி மாத பஜனை குழுவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
 மார்கழி மாதம் முழுவதும் இக்கோயிலில் பஜனை பாடியதற்காக இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு  முத்தையாபிள்ளை தலைமை வகிக்தார். கோயில் பொறுப்பாளர் சிவன்பிள்ளை வரவேற்றார். 
 மார்கழி மாத பஜனை, இறையருளின் பெருமை ஆகியவை குறித்து கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன், முத்துசுவாமி ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக துணை ஆட்சியர் சொர்ணராஜ் கலந்து கொண்டு பஜனையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 
அதைத் தொடர்ந்து, உலக நன்மைக்காக சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் எஸ்.கண்ணன் சிறப்பு வழிபாடு நடத்தினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/மார்கழி-பஜனை-குழுவுக்குப்-பாராட்டு-3078667.html
3078666 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை ரேடியன்ட் பயிற்சி மையத்தில் பொங்கல் விழா DIN DIN Friday, January 18, 2019 09:47 AM +0530 திருநெல்வேலி ரேடியன்ட் பயிற்சி மையத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாக  அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 
இதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறை தலைவர் ராமானுஜம் கருத்துரை வழங்கினார். தொழில் முனைவோர் வழிகாட்டி மைய இயக்குநர் வைரவராஜ், மாவட்ட மைய நூலக  நூலகர் முத்துக் கிருஷ்ணன்,  புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பட்டிமன்ற நடுவர் குமரகுருபரன், ஆசிரியர்கள் பன்னீர் செல்வம்,  சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/நெல்லை-ரேடியன்ட்-பயிற்சி-மையத்தில்-பொங்கல்-விழா-3078666.html
3078665 திருநெல்வேலி திருநெல்வேலி கடையநல்லூர் அருகே தோப்புக்குள் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு DIN DIN Friday, January 18, 2019 09:47 AM +0530 கடையநல்லூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய யானைகளை வனத் துறையினர் விரட்டியடித்தனர் .
கடையநல்லூர் வனச் சரகத்துக்கு உள்பட்ட கருப்பாநதி அணைப் பகுதியையொட்டி, மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளதாம். அங்கு புதன்கிழமை இரவு யானைகள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தின.
தகவலின்பேரில் கடையநல்லூர் வனச் சரகர் செந்தில்குமார், வனவர் சரவணன் ஆகியோர் தலைமையில் வனத் துறையினர் சென்று பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/கடையநல்லூர்-அருகே-தோப்புக்குள்-புகுந்த-யானைகள்-விரட்டியடிப்பு-3078665.html
3078664 திருநெல்வேலி திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் விபத்து: மாற்றுத் திறனாளி சாவு DIN DIN Friday, January 18, 2019 09:46 AM +0530 கல்லிடைக்குறிச்சியில் நேரிட்ட விபத்தில் மாற்றுத் திறனாளி இறந்தார்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (30).  மாற்றுத் திறனாளியான இவர், புதன்கிழமை மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் சேரன்மகாதேவிக்குச் சென்றுகொண்டிருந்தாராம். கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென தடுமாறி விழுந்ததாம். இதில், காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆதம்அலி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/கல்லிடைக்குறிச்சியில்-விபத்து-மாற்றுத்-திறனாளி-சாவு-3078664.html
3078663 திருநெல்வேலி திருநெல்வேலி ஆலங்குளம் பகுதியில்  559 மதுபாட்டில்களுடன் பெண்கள் உள்பட 5 பேர் கைது DIN DIN Friday, January 18, 2019 09:46 AM +0530 ஆலங்குளம் பகுதியில் திருவள்ளுவர் தினத்தில் விதிமுறை மீறி,  மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இரண்டு பெண்கள் உள்பட 5 பேர்  கைது செய்யப்பட்டனர். 559 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆலங்குளத்தில் உள்ள  புதுப்பட்டி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அதன் அருகிலுள்ள ஒரு கூடத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து, திருவள்ளுவர் தினமான புதன்கிழமை  கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  காவல் ஆய்வாளர் அய்யப்பன்  உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில்,  324 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்ததாம். அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், விதிமுறை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக ஆலங்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த திரவியம் மகன் ராஜ்குமார்(39) என்பவரை கைது செய்தனர். 
மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்றதாக மருதப்பபுரம் செல்லத்துரை மனைவி லட்சுமி(53),  சிவலார்குளம் கண்ணன் மனைவி மாரியம்மாள்(30) , குருவன்கோட்டை  சுப்பையா மகன் சிவனணைந்த பெருமாள்(70),  சண்முகம் மகன் செல்வம்(39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து முறையே  70,  55 , 50,  60 என 235 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/ஆலங்குளம்-பகுதியில்--559-மதுபாட்டில்களுடன்-பெண்கள்-உள்பட-5-பேர்-கைது-3078663.html
3078662 திருநெல்வேலி திருநெல்வேலி கல்யாணி அம்மன் கோயில் வருஷாபிஷேகம் DIN DIN Friday, January 18, 2019 09:46 AM +0530 கடையம் ராமநதி அணைச் சாலையில் உள்ள கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாதர் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், சிறப்பு கும்ப பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விமானத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/கல்யாணி-அம்மன்-கோயில்-வருஷாபிஷேகம்-3078662.html
3078661 திருநெல்வேலி திருநெல்வேலி வள்ளியூர் நரிக்குறவர் காலனிக்கு விரைவில் அங்கன்வாடி மையம்: இன்பதுரை எம்எல்ஏ DIN DIN Friday, January 18, 2019 09:45 AM +0530 வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் அங்கன்வாடி மையம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ.
வள்ளியூர் பூங்கா நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இந்தக் காலனியில் நரிக்குறவர்கள் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற இன்பதுரை எம்எல்ஏ, மின்னணு குடும்ப அட்டை இல்லாத 41 குடும்பங்களுக்கு தனது சார்பில் இலவச வேட்டி, சேலை, பொங்கல் பொருள்கள் மற்றும் ரூ.1000 அடங்கிய பரிசுத் தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் தான் நரிக்குறவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் மக்கள் எம்.ஜி.ஆரின் உண்மையான பக்தர்களாகத் திகழ்கிறார்கள். இதை கருத்தில்கொண்டு, தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்றார் அவர்.
விழாவில், அ.தி.மு.க. வள்ளியூர் ஒன்றியச் செயலர் இ.அழகானந்தம், ராதாபுரம்- நான்குனேரி வட்டார வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பொன்னரசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் சண்முகபாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் எட்வர்ட் சிங், இளைஞரணி இணைச் செயலர் சந்திரமோகன், மாவட்ட வழக்குரைஞர் அணி சங்கர், நகர துணைச் செயலர் கல்யாணசுந்தரம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் பொன்செல்வன், இந்திரன், கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/வள்ளியூர்-நரிக்குறவர்-காலனிக்கு-விரைவில்-அங்கன்வாடி-மையம்-இன்பதுரை-எம்எல்ஏ-3078661.html
3078660 திருநெல்வேலி திருநெல்வேலி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வண்ணார் சமுதாயத்தினர் கோரிக்கை DIN DIN Friday, January 18, 2019 09:45 AM +0530 வண்ணார் சமுதாயத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க எடுக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரத்தில் உள்ள வண்ணார் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்திடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் நலிவடைந்த வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இஸ்திரிப் பெட்டி வழங்கக் கோரி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அந்த நலத்திட்ட உதவிகளை மாநில அரசு மூலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் உள்ளதுபோல அனைத்து வண்ணார் சமுதாய மக்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து வண்ணார் சமுதாய மக்களுக்கும் உள்பிரிவுகளின்றி சூரியகுல இந்து வண்ணார் என்று ஒரே சாதிச் சான்றிதழை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் சலவைத் தொழிலாளர்களுக்கும் மழைக் கால நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/தாழ்த்தப்பட்டோர்-பட்டியலில்-சேர்க்க-வண்ணார்-சமுதாயத்தினர்-கோரிக்கை-3078660.html
3078659 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை., சுத்தமல்லியில் ஜனவரி 19 மின்தடை DIN DIN Friday, January 18, 2019 09:45 AM +0530 பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை (ஜன. 19) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருநெல்வேலி நகர்ப்புற மின்பகிர்மான செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. எனவே, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை. காந்தி சந்தை, திருச்செந்தூர் சாலை, பாளை. பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம்சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேற்கூறிய நேரத்தில் மின்விநியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் வீ.புலமாடன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேலக்கல்லூர், கரிசல்பட்டி  துணை மின் நிலையங்களில்ல் சனிக்கிழமை (ஜன. 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கரன்திரடு சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி சுற்று வட்டார பகுதிகளி பிற்பகல் 1முதல் மாலை 5 மணி வரை  மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/18/பாளை-சுத்தமல்லியில்-ஜனவரி-19-மின்தடை-3078659.html
3078146 திருநெல்வேலி திருநெல்வேலி 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் DIN DIN Thursday, January 17, 2019 10:04 AM +0530 திருநெல்வேலி குறிச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 மதுபாட்டில்களை  போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலப்பாளையம்  குறிச்சி டாஸ்மாக் கடை அருகே உள்ள முள்புதரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக   உளவுத்துறை பேலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  இதன்பேரில் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன்,  உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் மற்றும் போலீஸார் குறிச்சி பகுதியில் சோதனை நடத்தினர். 
இதில் குறிச்சி டாஸ்மாக் மதுபானகடைக்கும் புறவழிச்சாலைக்கும் இடையே உள்ள முள்புதரில் சுமார் 1,500 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/1500-மதுபாட்டில்கள்-பறிமுதல்-3078146.html
3078145 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் DIN DIN Thursday, January 17, 2019 10:04 AM +0530 தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின்   மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு  மாவட்டத் தலைவர் எஸ்.செய்யதுசுலைமான் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலர் அப்துல் மஜீத், மாநில துணைச் செயலர் வி.டி.எஸ்.ஆர். முகம்மதுஇஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலர் முகம்மது அபூபக்கர் பங்கேற்று பேசினார்.
பிப்.16இல் மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்திலிருந்து 5ஆயிரம் பேர் கலந்துகொள்வது; கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்;  கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நகர்பகுதியில் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாநிலதுணைத் தலைவர் செய்யது பட்டாணி, மாவட்ட இளைஞரணி தலைவர் நவாஸ்கான், செய்யது மசூது, புளியங்குடி சாகுல்ஹமீது, முகம்மது அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலர் இக்பால் வரவேற்றார். பொருளாளர் செய்யது இப்ராகீம் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/தென்காசியை-தலைமையிடமாக-கொண்டு-தனி-மாவட்டம்-இந்திய-யூனியன்-முஸ்லிம்-லீக்-தீர்மானம்-3078145.html
3078144 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' DIN DIN Thursday, January 17, 2019 10:04 AM +0530 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் இந்நிகழ்வு ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் மட்டும் இடம்பெறுகிறது. இதையொட்டி மேடையில் நெல்மணிகளை இட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறியது: திருநெல்வேலியைச் சேர்ந்த சிவபக்தரான வேதபட்டர் தினமும் சிவபூஜை செய்து அன்னதானம் வழங்கி வந்தார். ஒருநாள் நெல்லைக் காயவைத்துவிட்டு தாமிரவருணியில் நீராடச் சென்றபோது, மழை பெய்தது. சிவபெருமானை வேண்டியவாறும், நெல் நனைந்துவிடுமே என வருந்தியபடியும் வேதபட்டர் வந்துபார்த்தபோது, நெல் இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லையாம். இதன்பின்பு, வேணுவனம், நெல்வேலி என அழைக்கப்பட்டு வந்த இப்பகுதி திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலியாக தொடர்கிறது என்றனர் அவர்கள்.
திருவிழாவில் இம்மாதம் 21 ஆம்தேதி பகல் 12.30 மணிக்கு தைப்பூசத் தீர்த்தவாரி விழா கைலாசபுரத்தில் தாமிரவருணிக் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக  சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலிலிருந்து எஸ்.என். நெடுஞ்சாலை, கீழ்ப்பாலம் வழியாக தைப்பூச மண்டபத்துக்குச் செல்வர். பின்னர், தீர்த்தவாரி முடிந்து, மாலை 6 மணிக்குப் புறப்பட்டு கோயிலை வந்தடைவர்.
22ஆம் தேதி செளந்திர சபா மண்டபத்தில் செளந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி, 23ஆம் தேதி எஸ்.என்.நெடுஞ்சாலையோரம் உள்ள வெளிதெப்பத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வலம் வருவார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா. ரோஷிணி, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/நெல்லையப்பர்-கோயிலில்-நெல்லுக்கு-வேலியிட்ட-திருவிளையாடல்-3078144.html
3078143 திருநெல்வேலி திருநெல்வேலி மாட்டுப் பொங்கல்: உற்சாக கொண்டாட்டம் DIN DIN Thursday, January 17, 2019 10:03 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.  கிராமப் பகுதிகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
உழவுக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா புதன்கிழமை  கொண்டாடப்பட்டது.   கால்நடைகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணங்களைப் பூசி, தோட்டம், மாட்டுத்தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.   பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில்,  பசுக்களின் முன்பு பெண்கள் பொங்கலிட்டனர்.  அதன்பின்பு கோ பூஜை நடத்தப்பட்டது.  விழாவில் பங்கேற்ற கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.  
அருகன்குளம்  அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலையில் மாட்டுப்பொங்கலையொட்டி கோசாலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் பொங்கலிட்டனர்.  நண்பகலில் பசுக்களுக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும் காய்கனிகள், பழங்கள், கரும்புகள், பக்தர்களின் பொங்கல் ஆகியவை பசுக்களுக்கு வழங்கப்பட்டன.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி: பாளையங்கோட்டை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் மாட்டுப்பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா தலைமை வகித்தார். ஐ.ஏ.ஆர்.எப். தலைவர் பி.டி.சிதம்பரம்,  அந்தோணி குரூஸ் அடிகளார், லிட்டில் பிளவர் கல்வி குழுமத் தலைவர் அ.மரியசூசை,  கம்பன் இலக்கியச் சங்க பொருளாளர் எம்.ஏ.நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவப்பிகாசர் நற்பணி மன்றச் செயலர் கோ.கணபதி சுப்பிரமணி யன் வரவேற்றார். நிர்மலானந்த மகராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பயிற்சி ஆட்சியர் சுகபுத்திரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். விழாவில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.  அதைத்தொடர்ந்து கோ பூஜை, பஜனை, கிருஷ்ணர் வழிபாடு நடைபெற்றது. யதீஸ்வரி தவபிரியா,  யதீஸ்வரி நீலகண்ட பிரியா, யதீஸ்வரி துர்கா பிரியா ஆகியோர் பஜனை பாடல்கள் பாடினர். கல்லூரி கல்வி ஆலோசகர் பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/மாட்டுப்-பொங்கல்-உற்சாக-கொண்டாட்டம்-3078143.html
3078142 திருநெல்வேலி திருநெல்வேலி "ஜன.20 இல் சத்ய நாராயண பூஜை' DIN DIN Thursday, January 17, 2019 10:03 AM +0530 திருநெல்வேலியில்  சத்யநாராயண பூஜை இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் அகில உலக செயல்தலைவர் வேதாந்தம்ஜி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: மனிதர்கள் துன்பங்கள், ஆரோக்கிய குறைபாடுகளால் தவித்து வரும் சூழலில் அவர்களது கஷ்டங்கள் தீர தம்பதியராய் சத்ய நாராயண பூஜை செய்து வழிபட்டால் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும்.  தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழாக்குழு ஆகியவை சார்பில் திருநெல்வேலி தைப்பூச படித்துறையில் இம் மாதம் 20 ஆம் தேதி மாலை 3 மணிக்கு சத்ய நாராயண பூஜை நடைபெற உள்ளது. இதேநாளில் ஈரோடு, சேலம், திருச்சி, சென்னை உள்பட மொத்தம் 16 இடங்களில் இப்பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலியில் நடைபெறும் பூஜையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.  பூஜையில் நான்குனேரி ராமானுஜ ஜீயர், வேளாக்குறிச்சி ஆதீனம் மகாதேவ தேசிக பரமாச்சார்யா சுவாமிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். சத்ய நாராயண பூஜையை தொடர்ந்து செய்து வருவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நற்பலன்கள் பெருகும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கல்வி வளர்ச்சி கிடைக்கும் என்றார் அவர். 
பேட்டியின்போது, ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் பள்ளித் தாளாளர் உஷாராமன், நிர்மல் ராமரத்தினம், கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன், விஜய் சுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/ஜன20-இல்-சத்ய-நாராயண-பூஜை-3078142.html
3078141 திருநெல்வேலி திருநெல்வேலி திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு DIN DIN Thursday, January 17, 2019 10:03 AM +0530 திருவள்ளுவர் தினத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட தமிழ் நலக் கழகம் சார்பில் 19 ஆவது ஆண்டாக வள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி,  திருநெல்வேலி நகரம் வாகையடி சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைப்பின் செயலர் பாப்பாக்குடி இரா. செல்வமணி, மாவட்டத் தலைவர் முரசொலி முருகன் ஆகியோர் தலைமையில் பொருளாளர் திருமாவளவன், துணைத் தலைவர் விசாலம் முருகன், அ.செ.அற்புதானந்தம், கவிஞர்கள் ம.சக்திவேலாயுதம், ப.தாணப்பன், செ.ச.பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; தனியார் பேருந்துகளிலும் திருக்குறள் எழுத வேண்டும்; வணிகப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திமுக: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப் தலைமையில் சட்டப்பேரவை  உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், நிர்வாகிகள் சங்கர், எஸ்.வி.சுரேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் பகுதிச்செயலர் உலகநாதன், ஷாஜகான் உள்பட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில், பகுதி செயலர் கோபி என்ற நமச்சிவாயம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/திருவள்ளுவர்-தினம்-சிலைக்கு-மாலை-அணிவிப்பு-3078141.html
3078140 திருநெல்வேலி திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா DIN DIN Thursday, January 17, 2019 10:02 AM +0530 மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை (ஜன.17) நடைபெற உள்ளது.
மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி காலை 7.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, மஹாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு விமான கோபுரங்களில் வருஷாபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு மஹா தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் வீதியுலா ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/மணிமூர்த்தீஸ்வரம்-கோயிலில்-இன்று-வருஷாபிஷேக-விழா-3078140.html
3078139 திருநெல்வேலி திருநெல்வேலி சொந்த ஊரில் வீடுவீடாகச் சென்று பொங்கல் வாழ்த்து கூறிய வைகோ! DIN DIN Thursday, January 17, 2019 10:02 AM +0530 மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது சொந்த ஊரில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி. இவர் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி தனது கிராமத்துக்கு வந்து மக்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதுடன், இளைஞர்கள், மாணவர்களுக்குப் போட்டி நடத்தி பரிசு வழங்குவார்.
நிகழாண்டு பொங்கலையொட்டி, கடந்த 13ஆம் தேதி கலிங்கப்பட்டிக்கு வந்த வைகோ, பல்வேறு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று, மக்களுக்கு வாழ்த்துக் கூறினார்; பல இடங்களில் கட்சிக் கொடியேற்றினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா பொங்கல். ஆனால் விவசாயிகளைப் பொருத்தவரை இது கண்ணீர்ப் பொங்கல். பயிரிட்ட மக்காச்சோளம் அழுகியதால் விவசாயிகள் வருமானம் இழந்துள்ளனர். கஜா புயலால் 4 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நெல்லை மேற்கு மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/சொந்த-ஊரில்-வீடுவீடாகச்-சென்று-பொங்கல்-வாழ்த்து-கூறிய-வைகோ-3078139.html
3078138 திருநெல்வேலி திருநெல்வேலி தென்னிந்திய வாலிபால் போட்டி: சென்னை கல்லூரி சாம்பியன் DIN DIN Thursday, January 17, 2019 10:02 AM +0530 பாளையங்கோட்டையில் நடைபெற்ற தென்னிந்திய பெண்கள் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நெல்லை ப்ரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், நெல்லை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில்  மயன் கோப்பைக்கான  வாலிபால் போட்டி  பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் கடந்த  13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளம், ஆந்திரம் உள்பட தென்னிந்தியவில் உள்ள கல்லூரி அணிகள் பங்கேற்றன. பெண்களுக்கான  இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி,  திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை 17-25, 25-17, 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மயன் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. 
புள்ளிகள் அடிப்படையில்  கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணி 2 ஆம் இடமும்,  திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 3 ஆம் இடமும்,  கோபி பி.கே.ஆர். கல்லூரி அணி 4 ஆம் இடமும் பிடித்தன. பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒய். ஜான்நிக்கல்சன்,  மயன் நிர்வாக இயக்குநர் டி.டி. ரமேஷ்ராஜா தலைமை வகித்தனர் .  மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆ.பழனி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
தென் மாவட்ட ஆண்கள் அமர்வு வாலிபால் போட்டியில்  கன்னியாகுமரி அணி முதலிடமும், தூத்துக்குடி முத்துநகர் அணி 2 ஆவது இடமும்  பிடித்தன. போட்டி ஒருங்கிணைப்புச் செயலர் பாஸ்கர், நாராயணன், சேவியர் ஜோசப்  உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/தென்னிந்திய-வாலிபால்-போட்டி-சென்னை-கல்லூரி-சாம்பியன்-3078138.html
3078137 திருநெல்வேலி திருநெல்வேலி மானூர் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் சாவு DIN DIN Thursday, January 17, 2019 10:01 AM +0530 திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மானூர் அருகேயுள்ள பல்லிக்கோட்டையைச் சேர்ந்த மணி மகன் கண்ணன் (23). இவர், மும்பையில் வேலை செய்து வந்தார். பொங்கல் விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்த் அவர், செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றாராம். அப்போது மோட்டார் குழாயில் கட்டப்பட்டிருந்த கயிறில் கால் சிக்கியதால் கண்ணன் நீரில் மூழ்கினார். 
தகவலறிந்த மானூர் போலீஸார், பேட்டை தீயணைப்புபடையினர் அங்கு சென்று கண்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/மானூர்-அருகே-கிணற்றில்-மூழ்கி-இளைஞர்-சாவு-3078137.html
3078136 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை வந்த ரயிலில் இளைஞர் சடலம் மீட்பு DIN DIN Thursday, January 17, 2019 10:01 AM +0530 திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு புதன்கிழமை வந்த விரைவு ரயிலில் கிடந்த இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு, விசாரித்துவருகின்றனர்.
கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருநெல்வேலி சந்திப்பு வந்தது. இதில், 2 பெட்டிகளை இணைக்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் சிக்கியிருந்தது.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சந்திப்பு ரயில் நிலைய ஆய்வாளர் அருள் ஜெயபால், போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக, இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து அரை மணிநேரம் தாமதமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/நெல்லை-வந்த-ரயிலில்-இளைஞர்-சடலம்-மீட்பு-3078136.html
3078135 திருநெல்வேலி திருநெல்வேலி சத்தியவாகீஸ்வரர் கோயிலில் கணுத் திருவிழா DIN DIN Thursday, January 17, 2019 10:01 AM +0530 களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்பாள் திருக்கோயிலில் கணுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் கணுத் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை யொட்டி, சுவாமி-அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தனித் தனி சப்பரங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 
ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி, அம்பாளுக்கு பக்தர்கள் தேங்காய்-பழம் உடைத்து வழிபட்டனர். இரவில் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு களக்காடு - நாகர்கோவில் சாலையில் உள்ள பிள்ளைமடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை புறப்படும் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமி சப்பரங்கள் வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/சத்தியவாகீஸ்வரர்-கோயிலில்-கணுத்-திருவிழா-3078135.html
3078134 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை அறிவியல் மையத்துக்கு ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் வருகை DIN DIN Thursday, January 17, 2019 10:01 AM +0530 காணும் பொங்கலையொட்டி திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தை புதன்கிழமை  6 ஆயிரம் பார்வையிட்டனர்.
காணும் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவை ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி அருவிகள், நீர்நிலைகள், சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்துக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அங்குள்ள 3 டி அரங்கம், கோளரங்கம், அறிவியல் சாதனங்களைப் பார்வையிட்ட பொதுமக்கள், குழந்தைகளுடன் உணவருந்தி மகிழ்ந்தனர். மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை கழகம், திருநெல்வேலி மாநகர ரஜினி மக்கள் மன்றம், திருநெல்வேலி வீடியோ மற்றும் போட்டோ கிராபர் அசோசியேஷன் ஆகியவை சார்பில் பொதுமக்களுக்கான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ். முத்துகுமார் தலைமை வகித்தார். அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரிலெனின் முன்னிலை வகித்தார்.  விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கூடி வாழுதல் குறித்து "பறவையின் குரல்' என்ற தலைப்பில் இருப்பிடத்தை தொலைத்த காக்கா தன்னுடைய கதையை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறு நாடகத்தில் பிளாஸ்டிக் பொருள்களால் குரங்கு ஒன்று உயிரிழக்கும் நிகழ்வை நடித்துக் காட்டினர். குறுநாடகத்தை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கணபதி, மதியழகன் ஆகியோர் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழாண்டும் அறிவியல் மையத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள், முதியவர்கள் உள்பட சுமார் 6  ஆயிரம் பேர் ஒரே நாளில் வருகை தந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று அறிவியல் மைய அலுவலர் குறிப்பிட்டார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/நெல்லை-அறிவியல்-மையத்துக்கு-ஒரே-நாளில்-6-ஆயிரம்-பேர்-வருகை-3078134.html
3078133 திருநெல்வேலி திருநெல்வேலி மஹா புஷ்கரத்தால் விழிப்புணர்வு: தாமிரவருணி நதிக்கரையில் பொங்கல் வழிபாடு DIN DIN Thursday, January 17, 2019 10:00 AM +0530 மஹா புஷ்கர விழாவில் நதியைப் போற்றும் விழிப்புணர்வு அதிகரித்ததால்  தாமிரவருணி நதிக் கரையில் பொங்கலிட்டு பொதுமக்கள் புதன்கிழமை வழிபட்டனர். 
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்த நிலையில் அந்த ராசிக்குரிய புண்ணிய நதியான தாமிரவருணியில் மஹா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. 
அகில பாரதிய துறவியர்கள் சங்கம், தாமிரவருணி மஹா புஷ்கர ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புஷ்கர விழா நடத்தப்பட்டது. 
பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்களில் 12 நாள்களில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர்.
நதிக்கரையில் பொங்கல்:   நம் தாமிரவருணி அமைப்பு சார்பில் பொங்கல் நாளன்று தாமிரவருணி நதிக்கரையில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
கல்லிடைக்குறிச்சி, கரிசூழ்ந்தமங்கலம், மேலநத்தம், கருப்பந்துறை, குறுக்குத்துறை, நாரணம்மாள்புரம், ராஜவல்லிபுரம், பாலாமடை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதி  படித்துறைகளில் பொங்கலிடப்பட்டது.  தொடர்ந்து தாமிரவருணிக்கு ஆரத்தியும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
விழிப்புணர்வு தொடரும்: இதுகுறித்து நம் தாமிரவருணி அமைப்பின் நிர்வாகி எஸ்.நல்லபெருமாள் கூறியது:  
நதி மீதான விழிப்புணர்வுக்காக முதல் முறையாக நதிக்கரையில் பொங்கலிட்டு வழிபாடு செய்துள்ளோம்.  இதுதவிர பெளர்ணமிதோறும் ஆரத்தி பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.  அடுத்த ஆண்டு முதல் மேலும் அதிகமானோர் நதிக்கரைகளில் பொங்கலிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/17/மஹா-புஷ்கரத்தால்-விழிப்புணர்வு-தாமிரவருணி-நதிக்கரையில்-பொங்கல்-வழிபாடு-3078133.html
3077278 திருநெல்வேலி திருநெல்வேலி சுரண்டை கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு DIN DIN Tuesday, January 15, 2019 08:30 AM +0530 சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு நாள் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டாள் பஜனை குழு சார்பில் தொடர்ந்து 34ஆவது ஆண்டாக  நடைபெற்ற பஜனை நிறைவு விழா நிகழ்ச்சியில் சுவாமி ஊர்வலத்துடன் பஜனை நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட மழலையர்கள் கிருஷ்ணர், ஆண்டாள், ராதை  வேடமணிந்து ஆடி,  பாடினர்.  பின்னர் கோயிலில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் பஜனையில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,  முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பேச்சிமுத்து பாண்டியன்,  நடராஜன், அழகுசுந்தரம்,  பாலமுருகன்,  மாரியப்பன்,  சிவகுருநாதன், சிவபபிஷ்ராம்,  கோபால், கணபதிராமன், முத்துகிருஷ்ணன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/சுரண்டை-கோயிலில்-மார்கழி-மாத-பஜனை-நிறைவு-3077278.html
3077277 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ சோமையாஜுலுவுக்கு அஞ்சலி DIN DIN Tuesday, January 15, 2019 08:30 AM +0530 திருநெல்வேலியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோமையாஜுலுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
சுதந்திரப் போராட்ட வீரரும், திருநெல்வேலியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினருமான சோமையாஜுலுவின் 29-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பெரியவர் பக்தவத்சலம் நினைவு அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி நகரம் இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 
பள்ளிக்குழுச் செயலர் செல்லப்பா, ஐஎன்டியூசி மாநிலச் செயலர் ஆவுடையப்பன், தமிழ் முழக்கப் பேரவை ராமன், கம்பன் இலக்கிய சங்கம் முருகன், பள்ளிக்குழு உறுப்பினர் சு.சண்முகவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி ,  ஆசிரியர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/நெல்லையில்-முன்னாள்-எம்எல்ஏ-சோமையாஜுலுவுக்கு-அஞ்சலி-3077277.html
3077276 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. சிறையில் கைதிகள் விளைவித்த கரும்பு, சிறுகிழங்கு : பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை DIN DIN Tuesday, January 15, 2019 08:29 AM +0530 பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட கரும்பு மற்றும் சிறுகிழங்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு, கைதிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை உரங்கள் மூலம் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் சிறையில் கைதிகளின் உணவுக்கு வழங்கப்படுவதோடு, சிறைவாசலில் உள்ள அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு முதல்முறையாக பொங்கல் பண்டிகையை கருத்தில்கொண்டு கரும்பு மற்றும் சிறுகிழங்கு பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை அறுவடை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டுகளில் ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சிறை வளாகத்தில் விளைந்த கரும்பு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/பாளை-சிறையில்-கைதிகள்-விளைவித்த-கரும்பு-சிறுகிழங்கு-பொதுமக்களுக்கு-மலிவு-விலையில்-விற்பனை-3077276.html
3077275 திருநெல்வேலி திருநெல்வேலி நெகிழிக்கு தடை எதிரொலி: ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா? ஏ.வி.பெருமாள் DIN Tuesday, January 15, 2019 08:28 AM +0530 நெகிழிக்கு தடையைத் தொடர்ந்து தங்கள் தொழிலுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர் பனை ஓலையில் பெட்டி முடையும் தொழிலாளர்கள்.
ஒரு காலத்தில் இனிப்பு கடைகளில் தொடங்கி இரும்புக் கடை வரை பனை ஓலைப் பெட்டிகள்தான் புழக்கத்தில் இருந்தன. அதனால் பனை ஓலையில் பெட்டிகள் முடையும் தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்தன. ஆனால் நெகிழி பொருள்களின் வருகையைத் தொடர்ந்து ஓலைப் பெட்டிகளுக்கு இருந்த வரவேற்பு குறைய ஆரம்பித்தது. நெகிழி பொருள்கள்,  பைகளில் தொடங்கி பல்வேறு வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தவே, பனை ஓலையில் பெட்டி முடையும் தொழில் நசிந்தது. அதை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தன. பல தலைமுறைகளாக பெட்டி முடைவதை மட்டுமே நம்பி வாழ்ந்த அந்தக் குடும்பங்கள், ஆரம்பத்தில் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்தபோதிலும், நாளடைவில் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தன. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஓலைப் பெட்டி முடைந்த தெருக்களில், இப்போது ஒருசிலரைத் தவிர வேறு யாருமே அந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. சில கடைக்காரர்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்ததால், மிகச் சில குடும்பங்கள் மட்டுமே தங்களின் குடும்பத் தொழிலை விட்டு வெளியேறாமல் இன்னும் ஓலைப் பெட்டியை முடைந்து வருகின்றன.
தற்போது நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் ஓலைப் பெட்டி முடையும் தொழில் சூடுபிடிக்காதா? தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்காதா என ஏங்குகிறார்கள் ஓலைப் பெட்டி முடையும் சமூகத்தினர்.
300 குடும்பத்தை முடக்கிய நெகிழி: இது தொடர்பாக திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி கடசர் தெருவில் ஓலைப்பெட்டி முடைந்து வரும் லெட்சுமணன் கூறியதாவது: எங்கள் குடும்பம் ஆறேழு தலைமுறைகளாக பனை ஓலையில் பெட்டி முடையும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தத் தெரு முழுவதும் பெட்டி முடையும் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. சுமார் 300 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தன. ஆனால் நெகிழி பொருள்களின் வருகைக்குப் பிறகு எங்கள் தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் தொழில் பின்னடைவை சந்தித்ததால், பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கின. அதனால் வேறு வழியின்றி கட்டடப் பணி, கூலி வேலை என வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
எனக்கு 65 வயது ஆகிறது. சிறு வயது முதலே இந்த தொழிலில்தான் இருக்கிறேன். இரண்டு ஸ்வீட் கடைக்காரரும், ஒரு இறைச்சிக் கடைக்காரரும் இப்போதும் ஓலைப் பெட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ஆர்டர் கிடைத்ததால்தான் இந்தத் தொழிலில் இன்று வரை நானும், எனது மனைவி செல்லம்மாளும் நீடிக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிட்டு மற்றும் கொழுக்கட்டை அவிப்பதற்காக மும்பைக்கே ஓலைப் பெட்டி அனுப்பியிருக்கிறேன். கருப்புக் கட்டி கடை, பழக்கடை, பூக்கடை, வத்தல் கடை என அனைத்திலும் ஓலைப் பெட்டியின் பயன்பாடு இருந்தது. ஆனால் நெகிழியின் வருகை எங்கள் தொழிலையே மொத்தமாக முடக்கிவிட்டது. இப்போது நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பனை ஓலைப் பெட்டிகளுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். அப்படி கிடைத்தால் இந்தத் தொழிலை விட்டுச் சென்ற பல குடும்பங்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என நம்புகிறோம் என்றார். 
மறுவாழ்வு கிடைக்குமா? நம்முடைய முன்னோர்கள் பனை ஓலையில் பட்டை பிடித்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நெகிழி பயன்பாட்டால் அடுத்த தலைமுறை அதையெல்லாம் மறந்த நிலையில், இப்போது நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் பழைய பாரம்பரியத்துக்கு திரும்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தென்னை மரங்களில் ஏறுவதற்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதைப் போன்று பனை மரத் தொழிலாளர்கள் எளிதாக மரத்தில் ஓலை வெட்டும் வகையில் இந்தியரத்தைக் கண்டுபிடிக்க அரசு முயற்சிக்க வேண்டும். 
தங்களின் மறுவாழ்வுக்கு அரசு மட்டுமின்றி, ஓலைப் பெட்டிகளை வாங்குவதன் மூலம் பொதுமக்களும் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் ஓலைப் பெட்டி முடையும் தொழிலாளர்கள். அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவுமா?

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/நெகிழிக்கு-தடை-எதிரொலி-ஓலைப்-பெட்டி-முடையும்-தொழிலாளர்களுக்கு-மறுவாழ்வு-கிடைக்குமா-3077275.html
3077274 திருநெல்வேலி திருநெல்வேலி தெற்குகள்ளிகுளம் பள்ளியில் 350 பேருக்கு விலையில்லா சைக்கிள் DIN DIN Tuesday, January 15, 2019 08:28 AM +0530 தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பள்ளித் தாளாளர் ஜே.ஜாண்சன் ராஜ் தலைமை வகித்தார்.  பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும்  350 மாணவர், மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர் அந்தோணி அமலராஜா, தெற்குகள்ளிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எப்.அகஸ்டின்,  மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் அருண்புனிதன்,  உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசிலுவை வரவேற்றார்.  கணினி ஆசிரியர் கிரீபின் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/தெற்குகள்ளிகுளம்-பள்ளியில்-350-பேருக்கு-விலையில்லா-சைக்கிள்-3077274.html
3077273 திருநெல்வேலி திருநெல்வேலி வடக்கன்குளம் அருகே கிணற்றில் மலைப் பாம்பு மீட்பு DIN DIN Tuesday, January 15, 2019 08:27 AM +0530 வடக்கன்குளம் அருகே கிணற்றிலிருந்து மலைப் பாம்பு ஒன்று  தீயணைப்பு படையினரால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது .
வடக்கன்குளம் அருகேயுள்ள அடங்கார்குளம் கிராமத்தில் சிவனணைந்த பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவில் கிணற்றில் மலைப்பாம்பு பதுங்கியிருந்தது. இதைப் பார்த்த மக்கள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப் பாம்பை மீட்டனர். 13 அடி நீளம் இருந்த அந்தப் பாம்பு திருக்குறுங்குடி வனக் காப்பாளர் செல்வமணி மூலம் வனப் பகுதியில் கொண்டுவிடப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/வடக்கன்குளம்-அருகே-கிணற்றில்-மலைப்-பாம்பு-மீட்பு-3077273.html
3077272 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் பனை ஓலை விலை வீழ்ச்சி: மக்கள் மகிழ்ச்சி DIN DIN Tuesday, January 15, 2019 08:27 AM +0530 பொங்கல் பண்டிகையையொட்டி பனை ஓலை வரத்து அதிகரிப்பால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஓலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.15) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பனை ஓலையும் முக்கியத்துவம் பெறுகிறது. பொங்கலிடுவதற்கு பனைஓலையைப் பயன்படுத்துவது பாரம்பரிய பழக்கமாகவே இருந்து வருகிறது.  வேகமாக பொங்கல் பொங்கி வர பனை ஓலை எரிபொருளாக பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பனை ஓலைக்கு அதிக அளவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஓர் ஓலை ரூ.50 வரை விற்பனையானது. 
நிகழாண்டில் திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பனை ஓலை வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, பளையங்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே பல இடங்களில் பனை ஓலை குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓலை வரத்து அதிகமானதால் விலையும் குறைந்தது. ஓர் ஓலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் ஓலை வாங்கி சென்றனர். 
இது குறித்து பனை ஓலை விற்பனையாளர் ஒருவர் கூறியது: கடந்த ஆண்டைப் போன்று விலை இருக்கும் என நம்பி இந்த முறை அதிக அளவு பனை ஓலை வாங்கி வந்துள்ளேன். ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் கேட்ட விலைக்கு கொடுத்து செல்லவேண்டும் என்று கவலை தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/நெல்லையில்-பனை-ஓலை-விலை-வீழ்ச்சி-மக்கள்-மகிழ்ச்சி-3077272.html
3077271 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா DIN DIN Tuesday, January 15, 2019 08:26 AM +0530 பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சுப.சீதாராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு  உறுப்பினர் டி.வின்சா, மாநில தகவல் தொழில்நுட்ப துணைச் செயலர் சு.சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலர் எஸ்.பி.கண்ணன், ஆ.க.மணி, அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜகுமாரி, பகுதிச் செயலர்கள் பூக்கடை அண்ணாதுரை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மீரான், பூங்கனி, ரேவதி  அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/பாளை-எம்எல்ஏ-அலுவலகத்தில்-சமத்துவப்-பொங்கல்-விழா-3077271.html
3077270 திருநெல்வேலி திருநெல்வேலி மாநகரில் அதிகாலை வரை பொங்கல் பொருள்கள் விற்பனை DIN DIN Tuesday, January 15, 2019 08:26 AM +0530 திருநெல்வேலி மாநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பொங்கல் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரில்  நகரம்,  சந்திப்பு, பாளையங்கோட்டை, பேட்டை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பொருள்களின் விற்பனை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் காய்கனிகள் மற்றும் பொங்கல் பொருள்களை வாங்குவதற்கு மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இரவு முழுவதும் பொங்கல் பொருள்களின் விற்பனை தொடர்ந்தது. திங்கள்கிழமை நள்ளிரவில் காய்கனிகளின் விலை ஓரளவு குறையும் என்பதால் அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மக்கள் நள்ளிரவில் பொங்கல் பொருள்களை வாங்கினர். இதனால் இரவு முழுவதும் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது. 
பொங்கல் பானை, கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலை, பூக்கள், பூமாலை, காய்கனிகள், கிழங்குகள், வாழைப்பழம், பூஜைப் பொருள்கள், வாழை இலை, பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கிச் சென்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி நகரத்தில் உள்ள மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருநெல்வேலி நகரத்துக்குள் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன;  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/மாநகரில்-அதிகாலை-வரை-பொங்கல்-பொருள்கள்-விற்பனை-3077270.html
3077269 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை.யில் விவேகானந்தர் மன்றக் கூட்டம் DIN DIN Tuesday, January 15, 2019 08:26 AM +0530 பாளையங்கோட்டை மாநில தமிழ்ச் சங்கத்தில் விவேகானந்தர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.  
இந்தக் கூட்டத்திற்கு சங்க நிறுவனர் சொ.முத்துசாமி தலைமை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். எஸ்.நெல்லையப்பன், விவேகானந்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை "சென்னையில் இருந்து, சிகாகோ வரை' என்னும் தலைப்பில் பேசினார். 
இரா.முருகன், சையது அலி, நாகராஜன், வைகுண்டராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/பாளையில்-விவேகானந்தர்-மன்றக்-கூட்டம்-3077269.html
3077268 திருநெல்வேலி திருநெல்வேலி கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகப் பிரச்னை: ஜன. 18இல் சர்வகட்சி கையெழுத்து இயக்கம் DIN DIN Tuesday, January 15, 2019 08:25 AM +0530 கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (ஜன.18) கையெழுத்து இயக்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது மின்வாரிய அலுவலகம் அருகே தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா காசி தர்மம் வனப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதிக்குள்தான் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள், எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும், கடையடைப்பும் நடைபெற்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மேலும், இப்பிரச்னை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்,  கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, எம்.எம்.கே. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதிக்குள் அமைக்கக் கோரி ஜன. 18ஆம் தேதி கடையநல்லூரில் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/15/கடையநல்லூர்-வட்டாட்சியர்-அலுவலகப்-பிரச்னை-ஜன-18இல்-சர்வகட்சி-கையெழுத்து-இயக்கம்-3077268.html
3076619 திருநெல்வேலி திருநெல்வேலி ஜன.25இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ தீர்மானம் DIN DIN Monday, January 14, 2019 07:27 AM +0530 ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 ஜாக்டோ-ஜியோவின் திருநெல்வேலி மாவட்ட  உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.பால்ராஜ், வீ.பார்த்தசாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அருள்ராஜ் பீட்டர், கோமதிநாயகம், முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உறுப்பினர் ஆரோக்கியராசு வரவேற்றார். 'மூட்டா'வின் மாநில பொதுச் செயலர் எம்.நாகராஜன், மாநில உயர் நிலைக் குழு உறுப்பினர் கெங்காதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ராஜ்குமார் வாழ்த்திப் பேசினார். 
தீர்மானங்கள்: கூட்டத்தில், "இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்; முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; 
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற  நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 
2003 முதல் 2004 மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்; தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் விதமாக கொண்டுவரப்படும் பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை  கைவிட வேண்டும்; மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடுவதை கைவிட்டு சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும்;
ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் வட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது, ஜனவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 10 மணிக்கு மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/ஜன25இல்-சாலை-மறியல்-ஜாக்டோ-ஜியோ-தீர்மானம்-3076619.html
3076618 திருநெல்வேலி திருநெல்வேலி காங்கிரஸ் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா DIN DIN Monday, January 14, 2019 07:27 AM +0530 திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா கொக்கிரகுளத்தில் உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, மாநகர் மாவட்ட தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் நலிவுற்றோருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
விழாவில், பாவலர் அகமது ஷா, டாக்டர் ஜவஹர் ராஜ்குமார், ஓய்வுபெற்ற வருவாய்த் துறை ஆணையர் கே.கணேசன், எர்னஸ்பால் ஆகியோர் பேசினர்.
இந்த விழாவில் மாவட்ட பொதுச்செயலர் சொக்கலிங்கம், மாவட்டப் பொருளாளர் எஸ். ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

ஆதித்யா வித்யா நிகேதன் பள்ளியில்...
பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள ஆதித்யா வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளர் கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். இதில், கோலப்போட்டி, வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்களும், மாணவர்களும் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர். விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக ஏராளமான விவசாயிகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடினர். 
சிறப்பு விருந்தினராக இயற்கை விவசாயி பணகுடி மகேஸ்வரன் கலந்துகொண்டு, விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். பள்ளிச் செயலர் அவினாஷ் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுந்தரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/காங்கிரஸ்-சார்பில்-சமத்துவப்-பொங்கல்-விழா-3076618.html
3076617 திருநெல்வேலி திருநெல்வேலி புஷ்பலதா பள்ளியில்  மார்கழி உற்சவ விழா DIN DIN Monday, January 14, 2019 07:25 AM +0530 பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் ஏழாவது ஆண்டாக மார்கழி உற்சவ விழா கொண்டாடப்பட்டது. 
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர்  புஷ்பலதா பூரணன் தலைமை வகித்தார்.  மாணவர்களின் பாடல் பயிலரங்கம், புராண நீதிக் கதைகள் கூறுதல், வேடம் புனைதல், நாடகம், கோலமிடுதல், திருப்பாவை, திருவெம்பாவை, முற்றோதுதல்உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 
மேலும், பரதநாட்டியம், கர்நாடக இசை நிகழ்ச்சி போன்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.  பத்து  நாள்களாக  நடைபெற்ற இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன்,  ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/புஷ்பலதா-பள்ளியில்--மார்கழி-உற்சவ-விழா-3076617.html
3076616 திருநெல்வேலி திருநெல்வேலி மாணவர்களிடம் இருந்து மாற்றம் உருவாக வேண்டும்: ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் DIN DIN Monday, January 14, 2019 07:25 AM +0530 மாணவர்களிடம் இருந்து மாற்றம் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வலியுறுத்தினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி நாளிதழ் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டது. 
அதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தமிழகத்தில் காந்தியடிகள் தடம்பதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் வகையில் "அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற காந்திய சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது சுற்றுப்பயணம். அங்கிருந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா தலைமையில் மாணவர்கள்,  மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக காட்சிக் கூட விரிவுரையாளர் சாப்ரா பீவி அல்அமீன் ஆகியோர் பேருந்தில் புறப்பட்டனர். 
மதுரை டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூர், எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்த வீடு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. வீடு, தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள கோபாலசாமி நாயக்கர் இல்லம், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரம் ஆகியவற்றைப் பார்வையிட்ட பின் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். 
அவர்களை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றார்.  அதன்பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து பேசியதாவது:
மாற்றம் என்பது மாணவர்களிடம் இருந்துதான் ஏற்பட வேண்டும். மற்றவர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் நாமே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்துதான் மாவட்ட ஆட்சியராகியுள்ளேன். 
எனது தந்தை காவல் துறையில் இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் இருக்கும். அதனால் சிறிய ஊர்களில் உள்ள சாதாரண பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. எனது பெற்றோர்களால்தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.
சாதிப்பதற்கு சிறந்த குழந்தையாக இருக்க வேண்டும், சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதேநேரத்தில் நாம் என்னவாக வேண்டும் என்ற லட்சியம் முக்கியமாகும். கடின உழைப்பும், ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா,  மாணவர்கள்,  மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக காட்சிக் கூட விரிவுரையாளர் சாப்ரா பீவி அல்அமீன்,  மலர் ஐடிஐ தாளாளர் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் தனபால், பத்மநாபன்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட காந்திய சுற்றுப்பயணக் குழுவினர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள  வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை பார்வையிட்டனர்.

"மொழியை சவாலாக பார்க்காதீர்கள்'
தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதலாமா என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பதிலளித்தபோது, "கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும், மற்ற மொழிகளை வேகமாக கற்றுக்கொள்கிறேன். தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு,  ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகள் எனக்குத் தெரியும். 
எனது குழந்தைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். தமிழில் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எனது மகன் எனக்கு கற்றுத்தருகிறான்.  ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் எழுதலாம். அதேநேரத்தில் நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க வேண்டும். ஆட்சியராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயமாக ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது  தமிழ் மொழி போன்று மற்றொரு மொழிதான். அதை சவாலாக பார்க்காதீர்கள். ஆர்வத்தோடு படித்தால் எந்த மொழியையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

"அரசு அலுவலகங்களை மாணவர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்'
ஏராளமான இளைஞர்கள் படிப்பில் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கு வெளியுலக அறிவோ, அனுபவமோ இல்லாமல் இருக்கிறார்கள்.  வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்றவை குறித்து மாணவ பருவத்திலேயே தெரிந்துகொள்ள வேண்டும். 
எனவே வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் போன்றவற்றை மாணவர்கள் நேரில் சென்று பார்வையிடவும், அங்கு நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து அறிந்து கொள்ளவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலந்துரையாடலின்போது வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், அதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் செய்வதாக உறுதியளித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/மாணவர்களிடம்-இருந்து-மாற்றம்-உருவாக-வேண்டும்-ஆட்சியர்-ஷில்பா-பிரபாகர்-சதீஷ்-3076616.html
3076615 திருநெல்வேலி திருநெல்வேலி அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு DIN DIN Monday, January 14, 2019 07:24 AM +0530 ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு ஒன் டூ ஒன் பேருந்து சனிக்கிழமை காலையில் சென்றது. பேருந்தை புளியரையைச் சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேஷ் இயக்கினார். ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியே நடந்து சென்ற முதியவர் மீது பேருந்து மோதியுள்ளது. இதில் அந்த முதியவர் பலத்த காயமடைந்தார். ஆலங்குளம் போலீஸார் முதியவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் யார் என்பது தெரியவரவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/அரசுப்-பேருந்து-மோதி-முதியவர்-சாவு-3076615.html
3076614 திருநெல்வேலி திருநெல்வேலி வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு DIN DIN Monday, January 14, 2019 07:24 AM +0530 அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னார்கோவில், சன்னதி தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மில் தொழிலாளி சித்திரைக்கண்ணு.  இவரது, மனைவி பாக்கியலட்சுமி (54) சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 40 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/வீடு-புகுந்து-பெண்ணிடம்-நகை-பறிப்பு-3076614.html
3076613 திருநெல்வேலி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் DIN DIN Monday, January 14, 2019 07:24 AM +0530 திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி சிறுபான்மைப் பிரிவு சார்பில் மத்திய அரசை கண்டித்தும்,  ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக விளக்கும் வகையிலும் மேலப்பாளையத்தில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.   மாநகர் மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் முருகன், துணைத் தலைவர்கள் வெள்ளைப்பாண்டி,  காளை ரசூல் மைதீன்,  பொதுச்செயலர் சபீக், சிறுபான்மைப் பிரிவு  மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரசூல் மைதீன், மாநகர் மாவட்டச் செயலர் ரவுப் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறுபான்மைப் பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர் முகம்மது அனஸ் ராஜா வரவேற்றார்.  கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்,  மாநிலப் பேச்சாளர் சென்னை எர்னஸ்ட் பால்,   மாநில பொதுச்செயலர் வானமாமலை உள்ளிட்டோர் பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் ராஜேஸ்வரன்,  காமராஜ், பொன். ராஜேந்திரன், சிறுபான்மைப் பிரிவு மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ராசி ஆமீது  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/மேலப்பாளையத்தில்-காங்கிரஸ்-பொதுக்கூட்டம்-3076613.html
3076612 திருநெல்வேலி திருநெல்வேலி நரசிங்கநல்லூரில் திருவாசக முற்றோதுதல் DIN DIN Monday, January 14, 2019 07:24 AM +0530 துர்கா அபிராம் திருவாச முற்றோதுதல் குழுவின் சார்பில், நரசிங்கநல்லூரில் உள்ள குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது. 
இந்நிகழ்வுக்கு செயலர் மு.கணேசன், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  36 அபிஷேகங்கள்  மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
சண்முகவேல், நாராயணன், ராம்குமார், ராஜேஷ், ஆறுமுகச்செல்வி, வசந்தா, திரிபுசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/நரசிங்கநல்லூரில்-திருவாசக-முற்றோதுதல்-3076612.html
3076611 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் போக்குவரத்து ஆய்வாளர்- நடத்துநர் மோதல் DIN DIN Monday, January 14, 2019 07:23 AM +0530 திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக்கழக ஆய்வாளருக்கும், தனியார் பேருந்து நடத்துநருக்கும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவரும் காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் வழியாக கருங்குளத்திற்கு அரசுப் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக கருங்குளம் செல்ல வேண்டிய தனியார் பேருந்து, அரசுப் பேருந்தை முந்திச் சென்று நின்றுள்ளது. மேலும் தனியார் பேருந்தில் மார்க்கெட் வழி என வழித்தடம் மாற்றப்பட்ட போர்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஆய்வாளரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (58),  தனியார் பேருந்து நடத்துநரான கருங்குளம் இசக்கிமுத்து (24) என்பவரிடம்  வழித்தட போர்டை மாற்றி வைத்தது குறித்து கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கைகலப்பாக மாறியதாம். இதில், இருவரும் காயமுற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆய்வாளர் புகாரின் பேரில் நடத்துநர் மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/நெல்லையில்-போக்குவரத்து-ஆய்வாளர்--நடத்துநர்-மோதல்-3076611.html
3076610 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது DIN DIN Monday, January 14, 2019 07:23 AM +0530 பாளையங்கோட்டை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையை அடுத்த மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்தவர் சுருளி ராஜன். அரசு ஒப்பந்ததாரர். இவரது வீட்டில் சனிக்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து  தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதுதொடர்பாக சுருளிராஜன் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த முருகன் (25) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/பாளை-அருகே-ஒப்பந்ததாரர்-வீட்டில்-பெட்ரோல்-குண்டு-வீச்சு-ஒருவர்-கைது-3076610.html
3076609 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை சரணாலயத்தில் பொங்கல் விழா DIN DIN Monday, January 14, 2019 07:23 AM +0530 திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சரணாலயம் மற்றும் ஹோப் பவுண்டேசன் இல்ல குழந்தைகளுக்கு பாரம்பரிய கலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் பொங்கலிடப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் சிறப்பிக்கப்பட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/நெல்லை-சரணாலயத்தில்-பொங்கல்-விழா-3076609.html
3076608 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை.யில் ஜன.20இல் அன்னம் பாலிப்பு விழா DIN DIN Monday, January 14, 2019 07:23 AM +0530 பாளையங்கோட்டை ஸ்ரீ கார்த்திகேயன் பக்தர்சேவா அறக்கட்டளை சார்பில் அன்னம்பாலிப்பு விழா இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருசெந்தூர் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக நடத்தப்படும் இந்த விழா, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு பூஜைகள், வழிபாடு, பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். மேலும் அன்று வரும் பக்தர்களுக்கு மருத்துவ முதலுதவி வசதிகள் செய்யப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/பாளையில்-ஜன20இல்-அன்னம்-பாலிப்பு-விழா-3076608.html
3076607 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை.யில் "வின்' அகாதெமி பயிற்சி மையம் தொடக்கம் DIN DIN Monday, January 14, 2019 07:22 AM +0530 பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் சார்பில் "வின்' அகாதெமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக  "வின்' அகாதெமியும், திருநெல்வேலி சமூக சேவை சங்கமும் இணைந்து அனைவருக்கும் ஒரு நாள் இலவச  பயிற்சியை வழங்கின. இந்நிகழ்ச்சிக்கு அந்தோணி குரூஸ் தலைமை வகித்தார். ஹென்றி ஜெரோம், அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஎன்பிஎஸ்சியின்  இயக்குநர் நடராஜன் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குநர் மோட்சராஜன், "வின்' அகாதெமி இயக்குநர் மை. பா.ஜேசுராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/பாளையில்-வின்-அகாதெமி-பயிற்சி-மையம்-தொடக்கம்-3076607.html
3076606 திருநெல்வேலி திருநெல்வேலி சாலைப் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, January 14, 2019 07:22 AM +0530 சாலைப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோட்டார் வாகனத் தொழில் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி வட்டார ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில் ஜாகீர்உசேன், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/சாலைப்-பாதுகாப்பு-மசோதாவை-ரத்து-செய்யக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3076606.html
3076605 திருநெல்வேலி திருநெல்வேலி தென்னிந்திய மகளிர் வாலிபால்: சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி வெற்றி DIN DIN Monday, January 14, 2019 07:22 AM +0530 பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டியில்  சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, கேரளத்தின் கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.  
புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்தி, 6-ஆவது மயன் கோப்பைக்கான தென்னிந்திய கல்லூரிகள் மகளிர் வாலிபால் போட்டி மற்றும் தென் மாவட்ட அளவிலான ஆடவர் அமர்வு வாலிபால் போட்டி பாளையங்கோட்டை  வ.உ.சி. மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
4 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியை  திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர்  ராஜகோபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மகளிர் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.,  எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி, பனிமலர் பொறியியல்  கல்லூரி, கோபி பி.கே.ஆர். கல்லூரி,  கோவை பிஎஸ்ஜி கல்லூரி, திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி, எர்ணாகுளம் தூய சவேரியார் கல்லூரி, தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி, மதர் தெரசா கல்லூரி, குற்றாலம் பராசக்தி கல்லூரி,  பேட்டை ராணி அண்ணா கல்லூரி, பாளையங்கோட்டை எஸ்.டி.சி. கல்லூரி,  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவை பங்கேற்றுள்ளன. 
 முதல் ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 25-17, 25-19 என்ற நேர் செட்களில் எர்ணாகுளம் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்தியது.  2-ஆவது ஆட்டத்தில் கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணி 25-21, 25-21 என்ற நேர் செட்களில் கோபி பி.கே.ஆர். கல்லூரி அணியை வீழ்த்தியது. 
ஆடவர் வாலிபால்: முன்னதாக, தென் மாவட்ட ஆடவர் அமர்வு வாலிபால் போட்டியில் தூத்துக்குடி முத்து நகர் அணி 30-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/14/தென்னிந்திய-மகளிர்-வாலிபால்-சென்னை-எஸ்ஆர்எம்-கல்லூரி-வெற்றி-3076605.html
3076250 திருநெல்வேலி திருநெல்வேலி செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா DIN DIN Sunday, January 13, 2019 05:13 AM +0530
பாளையங்கோட்டையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட சேர்மன் எம்.சார்லஸ் தலைமை வகித்தார். சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் பி.டி.சிதம்பரம், அருட்தந்தை அந்தோணி குரூஸ் அடிகளார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா கலந்துகொண்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழர்களின் மரபு சார்ந்த பாரம்பரியமான பொருள்களான ரேக்ளா மாட்டு வண்டி, ஏர் உழும் கலப்பை, கலைத்திறன் மிக்க பழங்கால நகைப் பெட்டகம், வீர விளையாட்டுகளை பறைசாற்றும் குறுவாள், கலைத்திறன் மிக்க வாள், வேல்கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள், இளவட்டக் கல், அரிக்கேன் விளக்கு உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை பார்வையிட்டவர்களுக்கு அங்கிருந்த பொருள்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. மேலும், இளவட்டக் கல் மற்றும் சிலம்பாட்ட கலைகள் குறித்து செயல்முறை மூலம் செய்து காட்டினர்.
நெகிழி இல்லாத வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் அனைவருக்கும் வாழை இலை மற்றும் பாக்கு மரத் தட்டுகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. செயின்ட் ஆன்ஸ் நல்வாழ்வு மையத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு வேட்டிகள், சேலைகள், லூங்கி, நைட்டி ஆகியவை வழங்கப்பட்டது. இதுதவிர ஏழை மக்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள், அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/செஞ்சிலுவை-சங்க-அலுவலகத்தில்-சமத்துவப்-பொங்கல்-விழா-3076250.html
3076249 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு DIN DIN Sunday, January 13, 2019 05:13 AM +0530
பாளையங்கோட்டை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
பாளையங்கோட்டையை அடுத்த மணப்படைவீடை சேர்ந்தவர் சுருளிராஜன். அரசு ஒப்பந்ததாரர். இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை அதிகாலையில் அவருடைய வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சப்தம் கேட்டு சுருளிராஜன் வீட்டுக்கு வெளியே வந்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
இதுகுறித்து சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/பாளை-அருகே-அரசு-ஒப்பந்ததாரர்-வீட்டில்-பெட்ரோல்-குண்டு-வீச்சு-3076249.html
3076248 திருநெல்வேலி திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு DIN DIN Sunday, January 13, 2019 05:13 AM +0530
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணியிடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை வரும் 18-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்துடன் பணி நிரவல் செய்யவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் பணிநிரவலில் ஆள் இல்லாத போது அருகில் உள்ள ஒன்றியங்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் திருநெல்வேலி மாவட்ட செயலர் செ.பால்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 36 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. எமிஸ் அறிக்கைப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 24 இடைநிலை ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எஞ்சிய 12 இடங்களுக்கு உபரியாக இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு மாற்றுப்பணி என்ற பெயரில் ஆணை வழங்கி வரும் 18-ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டும் எனக் கூறி ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் மற்றும் தேவைப்பணியிடங்கள் 30-க்கும் மேல் உள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்களை இக்காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்யாமல் அங்கன்வாடி பணியிடத்திற்கு மாற்றுவதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
மேல்நிலைக்கல்வி முடித்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று பட்டயச்சான்று பெற்று இடைநிலை ஆசிரியராக பணிபுரிய பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரை அங்கன்வாடி பள்ளியில் சென்று பாடம் நடத்த சொல்லி பணியிறக்க ஆணை வழங்குவது மனித உரிமை மீறலாகும். இது ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
மேலும் உபரியாக இல்லாத ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே வேளையில் இப்பணியிடத்திற்கு முன்பருவக் கல்வி, மாண்டிசோரி பயிற்சி முடித்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளம் பெண்களுக்கு பணியாணை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/இடைநிலை-ஆசிரியர்களை-அங்கன்வாடிக்கு-மாற்ற-ஆரம்பப்-பள்ளி-ஆசிரியர்-கூட்டணி-எதிர்ப்பு-3076248.html
3076247 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. கல்லூரியில் மாநில அளவிலான கலைப்போட்டி DIN DIN Sunday, January 13, 2019 05:13 AM +0530
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழகம் - 2019 என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிக்கு, கல்லூரி முதல்வர் வி.பிரிட்டோ தலைமை வகித்துப் பேசினார். தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பேச்சு, கட்டுரை, கவிதை, விநாடி-வினா, பாவனை, நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்செந்தூர் கோவிந்தமாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதலிடமும், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி இரண்டாவது இடமும் பெற்றன. 
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அந்தோணி சாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் கே.எம்.ஏ.நிஜாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 
விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி ஜேசுராஜ் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/பாளை-கல்லூரியில்-மாநில-அளவிலான-கலைப்போட்டி-3076247.html
3076246 திருநெல்வேலி திருநெல்வேலி துப்புரவுப் பணியாளர்களுக்குஇலவச வேட்டி, சேலை DIN DIN Sunday, January 13, 2019 05:12 AM +0530
திருநெல்வேலி நகரத்தில் மின்னல் அறக்கட்டளை சார்பில் 200 துப்புரவு பணியாளர்கள் குடும்பங்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மாநில பொதுச் செயலர் கே.முத்துபாண்டியன் தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அலிப் சலீம், தொழில்அதிபர் மெளலானா, கென்னடி ரத்த தான கழகத் தலைவர் ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னல் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.மில்லத் இஸ்மாயில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.
திருநெல்வேலி நகரம் ஜாமியா செய்யது வரவேற்றார். பொறியாளர் தர்வேஸ் முகைதீன் என்ற கனி நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/துப்புரவுப்-பணியாளர்களுக்குஇலவச-வேட்டி-சேலை-3076246.html
3076245 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை.யில் சைவத் திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு நிறைவு DIN DIN Sunday, January 13, 2019 05:12 AM +0530
சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் பாளைங்கோட்டை சைவ சபையில் வைத்து சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. 5 ஆவது தொகுப்பின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
சைவ சபையின் அமைச்சர் வெ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். ராம்குமார் வரவேற்றார். பேராசிரியை உ.விஜயலட்சுமிக்கும், தேவார இன்னிசை ஆசிரியர் சோ.சொக்கலிங்கத்திற்கும் மாணவர்கள் குருவணக்கம் செய்தனர். 
தேர்வில் சிறப்பிடம் பெற்ற ச.செல்வம், சு.பசுங்கிளி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் கந்தகுமார், கேசவன், செல்வம் ஆகியோர் பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினர். 
துணை அமைப்பாளர் ச.அ.கண்ணன், ப.கார்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். 6 ஆவது தொகுப்பு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/பாளையில்-சைவத்-திருமுறை-நேர்முக-பயிற்சி-வகுப்பு-நிறைவு-3076245.html
3076244 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் DIN DIN Sunday, January 13, 2019 05:12 AM +0530
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.15) பிற்பகலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடலும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. 
திங்கள்கிழமை (ஜன.21) பகல் 12.30 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரவருணி அம்பாள், குங்குலிய கலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு, கைலாசபுரம் வழியாக திருநெல்வேலி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீர்த்தவாரி முடிந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு சுவாமி, மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, கோயிலை வந்தடைகிறார். செவ்வாய்க்கிழமை (ஜன.22) செளந்திர சபை மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. புதன்கிழமை (ஜன. 23) சுவாமி நெல்லையப்பர் வெளித் தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/நெல்லையப்பர்-கோயிலில்-தைப்பூசத்-திருவிழா-கொடியேற்றம்-3076244.html
3076243 திருநெல்வேலி திருநெல்வேலி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறை பாடமாக சேர்க்கக் கோரி தீர்மானம் DIN DIN Sunday, January 13, 2019 05:12 AM +0530
பாளையங்கோட்டையில் விவேகானந்தர் யோகா மற்றும் சத்சங்க மையம் சார்பில் விவேகானந்தரின் 157-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திரத்தின் திருநெல்வேலி கிளை பொறுப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். ஜெயகோமா சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார். காத்தப்பன், கவிஞர் முருகன் ஆகியோர் விவேகானந்த கேந்திர பாடல்களைப் பாடினர். 
பாளையங்கோட்டை விவேகானந்தர் மன்றத்தின் செயலர் சுந்தரம் பேசினார்.
பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட வேண்டுமென்றும் , அதற்கான முயற்சிகளை எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
சந்திரபாபு, வெள்ளத்துரை, பாக்கியம், லட்சுமையா, குரு.கிருஷ்ணமூர்த்தி, திருமலையப்பன், ராமகிருஷ்ணன், மயிலை.சுந்தரி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/விவேகானந்தர்-வாழ்க்கை-வரலாறை-பாடமாக-சேர்க்கக்-கோரி-தீர்மானம்-3076243.html
3076242 திருநெல்வேலி திருநெல்வேலி .விவேகானந்தர் பிறந்த தினம் DIN DIN Sunday, January 13, 2019 05:11 AM +0530 பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த தினமானது இளைஞர்கள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. 
இந்த விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் சத்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் எம். மலர்விழி அறிமுகவுரையாற்றினார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி வி.ருக்குமணி வரவேற்றார். 
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஆலோகர் விஷ்ணுகாந்த் எஸ்.சத்பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்கள்தின விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: ஒவ்வொரு மாணவியரும் குறிக்கோளுடன் கனவு காணவேண்டும். தேசியம், ஆன்மிகம், நாட்டுப்பற்று என அனைத்திலும் சிறந்த விவேகானந்தர் வழி நின்று தங்களின் குறிக்கோள் வெற்றி அடைய உழைக்க வேண்டும் என்றார்.
விழாவில் மாணவிகளின் பன்முகத் திறமையை வெளிக்கொணரும் வகையில் விவேகானந்தர் குறித்த விவேகா -2018 என்ற தலைப்பில் ஒப்பித்தல், பேச்சு, கவிதை, பென்சில் ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகள் சிறப்பிக்கப்பட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/விவேகானந்தர்-பிறந்த-தின-3076242.html
3076241 திருநெல்வேலி திருநெல்வேலி தியாகராஜ நகர் விக்ன விநாயகர்கோயிலில் ஜன.17இல் வருஷாபிஷேகம் DIN DIN Sunday, January 13, 2019 05:10 AM +0530
பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் 30-ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் தேர் திருவிழா ஜன. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹுதி, 10.35 மணிக்கு கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.மாலை 6.15 மணிக்கு இருபத்து ஏழாவது முறையாக உற்சவ விநாயகமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி 7-ஆவது மற்றும் 8-ஆவது வடக்கு தெருக்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விக்ன விநாயகர் ஆலய வழிபாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/தியாகராஜ-நகர்-விக்ன-விநாயகர்கோயிலில்-ஜன17இல்-வருஷாபிஷேகம்-3076241.html
3076240 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா DIN DIN Sunday, January 13, 2019 05:10 AM +0530
பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் கமாலுதீன், சத்யானந்த் ஆகியோர் மாணவர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கினர். 
ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்கள் பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கலிட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர் ஜே.கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால், இயக்குநர் ஐ.ரவிக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில்...பொங்கல் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் பிடலிஸ் தலைமை வகித்தார். அன்னை ரூபி, தலைமை ஆசிரியை நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லூர்து செல்வி வரவேற்றார். கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமலி புஷ்பம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில், பள்ளி மாணவிகளின் தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பாரம்பரிய விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவை பாடப்பட்டன. மாணவிகளின் பரத நாட்டியம், கிராமிய நடனம், பறையாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பூங்குமாரி நன்றி கூறினார். 
வி.கே.நர்சரி பள்ளியில்... திருநெல்வேலி நகரத்தில் உள்ள வி.கே.நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் கே.முத்துகுமார் தலைமை வகித்தார். செயலர் ஆர்.சின்னதம்பி, பொருளாளர் எம்.தளவாய் மாடசாமி, உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/பாளை-பள்ளியில்-சமத்துவ-பொங்கல்-விழா-3076240.html
3076239 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு DIN DIN Sunday, January 13, 2019 05:10 AM +0530
கம்பன் இலக்கிய சங்கத்தின் 1,166-ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். பேராசிரியர் பா.வளன் அரசு முன்னிலை வகித்தார். மருத்துவர் மகாலிங்கம் இறை வாழ்த்துப் பாடினார். இணைச் செயலர் இரா.முருகன் வரவேற்றார்.
பொறியாளர் வி.பாப்பையா மனிதநேயம் என்ற தலைப்பில் பேசினார். ஐயமும் விளக்கமும் என்ற தலைப்பில் கு.சடகோபன் பேசினார். வரலாற்று ஆசிரியர் செ.திவான், பிரபா கிருட்டிணன், சித்தாந்த தென்றல் தி.ராமன் ஆகியோர் பாடலுக்கு விளக்கம் அளித்தனர். 
கூட்டத்தில் வை.ராமசாமி, நிலா இலக்கிய வட்ட அமைப்பாளர் ந.ராசகோபால், வைகுண்டராமன், நாகராசன், முருகேசன், சண்முகையா, உமையொரு பாகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் மு.அ.நசீர் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/பாளையில்-இலக்கிய-சொற்பொழிவு-3076239.html
3076238 திருநெல்வேலி திருநெல்வேலி மதிதா பள்ளியில் கருத்தரங்கம் DIN DIN Sunday, January 13, 2019 05:09 AM +0530
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் நற்பொழிவு என்ற பெயரில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 650 மாணவர்கள் எழுதவுள்ளனர். அவர்களுக்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திருவண்ணாமலை ஜெ.ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பள்ளித் தலைமையாசிரியர் சு.வேல்முருகன் வரவேற்றார். மூத்த ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர் ஹரிஹரகார்த்திகேயன் செய்திருந்தார்.
விழாவில், ரா.சிவக்குமார், ஆசிரியர்கள் சோமசுந்தரம், ராஜகோபால், உலகநாதன், பகவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/மதிதா-பள்ளியில்-கருத்தரங்கம்-3076238.html
3076174 திருநெல்வேலி திருநெல்வேலி காந்திய சுற்றுப்பயணம் : சங்கரன்கோவில் அருகே காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி DIN DIN Sunday, January 13, 2019 04:00 AM +0530 திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்தில், காந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி நாளிதழ் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தமிழகத்தில் காந்தியடிகள் தடம் பதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அவரது கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் வகையில், அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்தியச் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் காந்திய சுற்றுப்பயணத்தை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிவைத்தார். அவர்கள் அங்கிருந்து பேருந்தில் மதுரை டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம் உள்ளிட்ட காந்தி தடம் பதித்த பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூருக்கு வந்தனர்.
மாணவர்களை ராயகிரி ராம் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், சங்கரன்கோவில் சர்வோதய சங்கம், காந்திய நிர்மாண சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த காந்தியவாதிகள் வரவேற்றனர். பின்னர், நிட்சேப நதிக்கரையில் காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந் நினைவிடத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக காந்தி காட்சிக்கூட விரிவுரையாளர் சப்ராபீவி அல்அமீன் மற்றும் மாணவர்கள், காந்திய மற்றும் வினோபா பாவே பாடல்களைப் பாடினர். நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ராம் பப்ளிக் சாரிட்டபிள் நிறுவனர் ராஜாராம், சங்கரன்கோவில் சர்வோதய சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், சர்வோதய சங்க மேலாளர் மாரியப்பன், பொருளாளர் சுப்பையா, ஓய்வுபெற்ற மூத்த சர்வோதய சங்க ஊழியர் செல்லையா, ஆ.சுப்பையா, க.கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/13/காந்திய-சுற்றுப்பயணம்--சங்கரன்கோவில்-அருகே-காந்தி-அஸ்தி-கரைக்கப்பட்ட-நினைவிடத்தில்-அஞ்சலி-3076174.html
3075506 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, January 12, 2019 07:13 AM +0530 தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செவிலியர்களுக்கான புதிய சீருடையை மாற்ற வேண்டும்.  சம ஊதியம் வழங்க வேண்டும்.  இடமாறுதல் ஆணை பெற்றும் 8  மாதங்களாக விடுவிப்பு இல்லாத செவிலியர்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.  ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.  பணியில் சேர்ந்த நாள் முதல்  நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆஷா அலிஸ் மாதரசி தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதேவி தொடக்கவுரையாற்றினார்.  மாநில பொதுச்செயலர் சுபின்,  மாவட்ட ஆலோசகர் ரூத் டேவிட்,  மாவட்டச் செயலர் க.சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பார்த்தசாரதி,  பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கா.கற்பகம், மார்த்தாண்ட பூபதி,  மு.சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வட்டச் செயலர் வசந்தமாலை நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/நெல்லையில்-செவிலியர்கள்-ஆர்ப்பாட்டம்-3075506.html
3075505 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் ரேஷன் கடை முற்றுகை DIN DIN Saturday, January 12, 2019 07:13 AM +0530 திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
திருநெல்வேலி நகரம்,  காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.  பிற்பகலில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கக் கூறியுள்ளதாகவும்,  அந்த அளவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து    விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தினர். இதற்கு பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  காலை முதல் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கக் கோரி ரேஷன் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு  தொகுப்பு முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/நெல்லையில்-ரேஷன்-கடை-முற்றுகை-3075505.html
3075504 திருநெல்வேலி திருநெல்வேலி கம்பன் கழக சொற்பொழிவு DIN DIN Saturday, January 12, 2019 07:13 AM +0530 நெல்லை கம்பன் கழகத்தின் சார்பில் 465 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.  அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார்.  மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார்.  சம்பாதி என்ற தலைப்பில் தமிழூரைச் சேர்ந்த முனைவர் போ.கார்த்திகாவும்,  பாலகாண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். 
முனைவர் பாண்டியன், வெங்கடாசலபதி, மகராஜன், பேராச்சிமுத்து,  நாகராஜன்,  ஜெயா,  சுதா,  லட்சுமி,  கதிரேசன், செந்தில்குமார், மாயன், முருகன், கணபதி, சங்கரன், ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொன்.வேலுமயில் நன்றி கூறினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/கம்பன்-கழக-சொற்பொழிவு-3075504.html
3075503 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் களைகட்டிய பொங்கல் விழா DIN DIN Saturday, January 12, 2019 07:13 AM +0530 திருநெல்வேலியில் அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பல்வேறு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழாக்கள் களைகட்டின.   அதிகாரிகள்,  மாணவர்-மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி-சட்டை,  தாவணி,  சேலை அணிந்து பங்கேற்றனர்.
திருநெல்வேலி அருகே  அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமை வகித்தார்.  பதிவாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார்.   ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற இசைக்கு மாணவர்-மாணவிகள் நடனமாடினர்.  பல்கலைக்கழகம் முன்பு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையர் சனத்குமார் தலைமை வகித்தார்.அதிகாரிகள் வீரேஷ்,   சிவகாமிநாதன்,  அனந்தபத்மநாபன்,  நித்யகல்யாணி, ஜெயலட்சுமி,  சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  
பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட குழந்தைகள் நகர்ப்புற நல மையத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார்.  அங்கு பயின்று வரும் ஆட்சியரின் மகள் கீதாஞ்சலி உள்பட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொங்கல் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து மையத்தின் பொறுப்பாளர் செல்வராணி,  உதவியாளர் ரேவதி உள்ளிட்டோர் பொங்கலிட்டனர். 
கங்கைகொண்டான்: கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் வரவேற்றார்.
கங்கைகொண்டான் காவல்  ஆய்வாளர் தலைமை வகித்தார்.  மாணவர்-மாணவிகளுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது. 
மானூர் அருகேயுள்ள பள்ளமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நன்றித் திருவிழா என்ற தலைப்பில் பொங்கல் திருநாளின் சிறப்புகள் விளக்கப்பட்டன.  பாரம்பரிய விளையாட்டுகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.


தூய சவேரியார் பள்ளியில்...

பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் எல்.பிரான்சிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வி.அகஸ்டின் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.நெப்போலியன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றார். அழிந்து வரும் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றனர். 
மொத்தம் 60 பானைகளில் பொங்கலிட்டனர். அலங்காரம் செய்வது, பொங்கலிடுவது, தூய்மைப்படுத்துவது, வரவேற்பது என மாணவர்கள் நான்கு குழுக்களாக செயல்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட 7 குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.


சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில்...
பாளையங்கோட்டை சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மைய நிறுவனர் கு.பரமசிவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூய சவேரியார் கல்லூரியின் ஸ்டேன்ட் திட்ட இயக்குநர்  சகாயராஜ் பங்கேற்றார். சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தின் அறங்காவலர்கள் எடிசன், பாலமுருகன், ராமலெட்சுமி, ஐயப்பன் உள்பட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில்...
திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் துணை இயக்குநர், உதவி இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர். திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் துணை இயக்குநர்(பொ)  எம். அருள்ராஜ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/நெல்லையில்-களைகட்டிய-பொங்கல்-விழா-3075503.html
3075502 திருநெல்வேலி திருநெல்வேலி தேசிய விளையாட்டுப் போட்டி:  கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி சிறப்பிடம் DIN DIN Saturday, January 12, 2019 07:11 AM +0530 தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி வித்யா சிறப்பிடம் பெற்றார். 
அனைத்திந்திய வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் லூதியானாவில் அண்மையில் நடைபெற்றது.   இப் போட்டியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் நான்காமாண்டு மாணவி வித்யா பங்கேற்றார்.  
நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வித்யா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  சிறப்பிடம் பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர் ஜெ.ஜாண்சன் ராஜேஸ்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/தேசிய-விளையாட்டுப்-போட்டி--கால்நடை-மருத்துவக்-கல்லூரி-மாணவி-சிறப்பிடம்-3075502.html
3075501 திருநெல்வேலி திருநெல்வேலி துப்புரவுத் தொழிலாளர்கள் தர்னா DIN DIN Saturday, January 12, 2019 07:10 AM +0530 முறையான ஊதியம் வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் துப்புரவு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
சங்கர் நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் மனு அளித்தனர். மனு விவரம்:
சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் 24 பேர் துப்புரவு பணி செய்து வருகிறோம். மேற்பார்வை பணி செய்யும் நபர் எங்களை அவமதிக்கிறார். எங்களுக்கு உரிய ஊதியத்தை சரியாக கொடுப்பது இல்லை. விடுமுறைகள் முறையாக வழங்க மறுப்பதோடு மிரட்டியும் வருகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/துப்புரவுத்-தொழிலாளர்கள்-தர்னா-3075501.html
3075500 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை நகரம் பள்ளியில் முற்றுகை DIN DIN Saturday, January 12, 2019 07:09 AM +0530 திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியை கோடீஸ்வரன் நகர் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கோடீஸ்வரன்நகரைச் சேர்ந்த ஒரு மாணவி  9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளி முடிந்தபின்பு வெளியேற முயன்றபோது ஆசிரியர் ஒருவர் அடித்ததாகக் கூறப்படுகிறது.  
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கோடீஸ்வரன் நகர் பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.  சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 
தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து  பள்ளித் தலைமை ஆசிரியர் நாச்சியார் (எ) ஆனந்த பைரவியிடமும், திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திலும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/நெல்லை-நகரம்-பள்ளியில்-முற்றுகை-3075500.html
3075499 திருநெல்வேலி திருநெல்வேலி பாளையங்கோட்டை போலீஸார் மீது ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு DIN DIN Saturday, January 12, 2019 07:08 AM +0530 பாளையங்கோட்டை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
பாளையங்கோட்டை கோட்டூர் சாலையைச் சேர்ந்தவர் சுப்புமாரி.   பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் சாலையோரத்தில் பூக்கடை நடத்தி வருகிறார்.  
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் குலைகளை விற்பனைக்காக வைத்திருந்தாராம்.  அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை போலீஸார், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மஞ்சள் குலைகளை அப்புறப்படுத்துமாறு கூறினராம்.   அதற்கு, தனது தாய் வந்தவுடன் அகற்றுவதாக சுப்புமாரி கூறினாராம். இதை ஏற்க மறுத்த போலீஸார் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுப்புமாரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:  
பாளையங்கோட்டை போலீஸார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பால் தாக்கினர்.  இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jan/12/பாளையங்கோட்டை-போலீஸார்-மீது-ஆட்சியர்-அலுவலகத்தில்-பெண்-மனு-3075499.html