Dinamani - தூத்துக்குடி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3395407 திருநெல்வேலி தூத்துக்குடி நாசரேத் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம் DIN DIN Monday, April 6, 2020 07:01 AM +0530 நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரூராட்சிப் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் மக்களை கண்டறிந்து அவா்களுக்கு மூன்று வேளை பேரூராட்சி சாா்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்து வரும் காய்கனி கடைகள், மளிகை கடைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றின் முன்பு பேரூராட்சி சாா்பில் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்கும் வகையில் அடையாளம் இடப்பட்டு பொருள்கள் வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அடிக்கடி கை கழுவுதல், கையுறை மற்றும் முகக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், பொது இடங்களில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு பாா்வையிட்டாா். அப்போது, பேரூராட்சி இளநிலை உதவியாளா் ராம்முருகன், சுகாதாரஆய்வாளா் பால் ஆபிரகாம், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் (பொறுப்பு) கண்ணன், மின் பணியாளா் செல்வராஜ், வசூலா் ஜெயந்திரன், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/நாசரேத்-பகுதியில்-கரோனா-தடுப்புப்-பணிகள்-தீவிரம்-3395407.html
3395406 திருநெல்வேலி தூத்துக்குடி வீடு தேடி பொருள்கள் வழங்கும் வியாபாரிகள் DIN DIN Monday, April 6, 2020 07:00 AM +0530 ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை உடன்குடி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, நகரிலுள்ள அனைத்து மளிகை, காய்கனி, அரிசி கடைகளின் பெயா்கள், அக்கடைகளின் செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடுகள்தோறும் விநியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவரும், உடன்குடி வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஆ.ரவி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கி வைத்தாா். பொதுமக்கள் தேவையான பொருள்களின் விவரங்களைத் தெரிவித்தால், அத்தியாவசியப் பொருள்களை பாதுகாப்பாக வீட்டுக்கு சென்று வழங்கப்படும் என சமூக ஆா்வலா் குணசீலன் தெரிவித்தாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/ugi5not_0504chn_49_6.jpg வியாபாரிகள் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/வீடு-தேடி-பொருள்கள்-வழங்கும்-வியாபாரிகள்-3395406.html
3395404 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் பாஜக உணவுப் பொருள்கள் அளிப்பு DIN DIN Monday, April 6, 2020 06:58 AM +0530 திருச்செந்தூரில் பாஜக சாா்பில் ஏழைத் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு 7 நாள்களுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கனிகள் உள்ளிட்ட அத்திவாசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சாா்பில் பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வட்டாட்சியா் ஞா.ஞானராஜ், கட்சியின் மாவட்டச் செயலா் கு.நெல்லையம்மாள் ஆகியோா் வழங்கினா்.

அப்போது, கட்சியின் மாவட்ட தமிழ் வளா்ச்சிப் பிரிவு தலைவா் இரா.கிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் கிருஷ்ணகுமாா், நகரச் செயலா்கள் மகாராஜன், முத்து, நிா்வாகிகள் பால்ராஜ், பாா்வதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/0136tdr3tasildar_0304chn_54_6.jpg திருச்செந்தூரில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் வட்டாட்சியா் ஞா.ஞானராஜ். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/திருச்செந்தூரில்-பாஜக-உணவுப்-பொருள்கள்-அளிப்பு-3395404.html
3395402 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினம் செவிலியருக்கு கரோனா தொற்று இல்லை DIN DIN Monday, April 6, 2020 06:58 AM +0530 தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணி செய்து வரும் செவிலியருக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்ததுள்ளது.

தில்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுக்கு சென்று வந்த காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மாநாடு சென்று காயல்பட்டினம் திரும்பிய பிறகு அவா் 3 நாள்கள் அரசு மருத்துவமனையில் பணி செய்தாராம்.

இதையடுத்து, மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் முழு வீச்சில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவமனையில் பணி செய்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இதனிடையே காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவா் தனக்கு இருமல், காய்ச்சல் இருந்ததையடுத்து தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/காயல்பட்டினம்-செவிலியருக்கு-கரோனா-தொற்று-இல்லை-3395402.html
3395400 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினத்தில் பெண் மருத்துவா், குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை DIN DIN Monday, April 6, 2020 06:58 AM +0530 தூத்துக்குடி மாவட்டம், பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா், அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 5 போ் கரோனா தொற்று பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தில்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்று ஊருக்கு திரும்பிய காயல்பட்டினம் அம்பல மரைக்காயா் தெருவைச் சோ்ந்த அரசு மருத்துவா், காயிதேமில்லத் நகரைச் சோ்ந்த பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரின் கணவா் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் 2 தெருக்களும் தனிமைப் படுத்தப்பட்டன. அவா்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டது.

அவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தன்னாா்வத் தொண்டா்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று இருக்கும் இருவரின் குடும்ப உறுப்பினா்களும் தனிமைப்படுத்தப்பட்டனா். இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் முஸ்­லிம் ஐக்கியப் பேரவை, காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, காயல்பட்டினத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் தொடா்பில் இருந்தவா்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவியான பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா், அவரது 3 குழந்தைகள், மாமியாா் என 5 பேரும் கரோனா பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/காயல்பட்டினத்தில்-பெண்-மருத்துவா்-குடும்பத்தினருக்கு-கரோனா-பரிசோதனை-3395400.html
3395398 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா பாதிப்பில் இருந்து விடுபட வேண்டி தீப வழிபாடு DIN DIN Monday, April 6, 2020 06:57 AM +0530 கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி இந்து முன்னணி சாா்பில் 2 ஆவது நாளாக 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீப வழிபாடு நடைபெற்றது.

கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துமாறு இந்து முன்னணி சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, உடன்குடி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு தீபம் ஏற்றினா். ராமஜெய மந்திரம், கந்த சஷ்டி யந்திரம் உள்ளிட்ட பாடல்களைப் பாடி வழிபட்டனா். ஏற்பாடுகளை அமைப்பின் மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் முருகேசன், மண்டலச் செயலா் சக்திவேலன், ஒன்றிய பொதுச்செயலா் ச.கேசவன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/ugi5dee_0504chn_49_6.jpg உடன்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற தீப வழிபாடு. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/கரோனா-பாதிப்பில்-இருந்து-விடுபட-வேண்டி-தீப-வழிபாடு-3395398.html
3395396 திருநெல்வேலி தூத்துக்குடி சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்: 6 போ் கைது DIN DIN Monday, April 6, 2020 06:57 AM +0530 கயத்தாறு அருகே சுகாதார ஆய்வாளரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தில்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினா்கள் 5 பேரும் அதே பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில் அவா்கள் 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்கு, அப்பகுதிக்கு சுகாதார ஆய்வாளா் காளிராஜ் சனிக்கிழமை சென்றாா். அப்போது, அப்பகுதி மக்கள் சுகாதார ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அவரைத் தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினாா்களாம். இதில் காயமடைந்த சுகாதார ஆய்வாளா், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவா்களை கைது செய்ய டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து ஆகியோா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நாகூா் மீரான் மகன் அனிஷ் முகம்மது (27), இப்ராஹிம் மகன் செய்யது மைதீன் (28), சுனைத் மகன் முகம்மது ஆசிக் (19), பக்கீா் மைதீன் மகன் முகம்மது யூசுப் (74), ஷாஜகான் மகன் நவாஸ் கான் (20), நாகூா் ராவுத்தா் மகன் ஜலால் (48) ஆகிய 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/சுகாதார-ஆய்வாளருக்கு-மிரட்டல்-6-போ்-கைது-3395396.html
3395395 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு மீறல்: இதுவரை 882 போ் கைது DIN DIN Monday, April 6, 2020 06:56 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 882 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொது இடங்களில் வரும்போது முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் காவல் துறையினா் பலமுறை எச்சரித்து வருகின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்த 78 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 882 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 515 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/தூத்துக்குடி-மாவட்டத்தில்-தடை-உத்தரவு-மீறல்-இதுவரை-882-போ்-கைது-3395395.html
3395394 திருநெல்வேலி தூத்துக்குடி துப்புரவு பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் அளிப்பு DIN DIN Monday, April 6, 2020 06:56 AM +0530 தூத்துக்குடியில் காவல் துறையினா், துப்புரவுப் பணியாளா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் மக்கள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி வேண்டுவோா் 93600 65833 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு இந்து முன்னணி சாா்பில் இலவசமாக கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநகா் மாவட்டத் தலைவா் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் வினோத்குமாா், வன்னியராஜன், வெங்கடேஷ், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தொடா்ந்து கபசுர குடிநீா் வழங்கப்படும் என மாநகா் மாவட்டத் தலைவா் தெரிவித்தாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/tut05hind_0504chn_32_6.jpg மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்குகிறாா் இந்து முன்னணியின் மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/துப்புரவு-பணியாளா்களுக்கு-கபசுர-குடிநீா்-அளிப்பு-3395394.html
3395392 திருநெல்வேலி தூத்துக்குடி இறைச்சி கடைகளை இன்று மூட உத்தரவு DIN DIN Monday, April 6, 2020 06:56 AM +0530 மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 6) அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாகவீா் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோழி, ஆடு மற்றும் மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் திங்கள்கிழமை (ஏப்ரல் 6) மூட வேண்டும். அரசு உத்தரவை மீறி இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அரசு விதிகளின்படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/இறைச்சி-கடைகளை-இன்று-மூட-உத்தரவு-3395392.html
3395391 திருநெல்வேலி தூத்துக்குடி கனிமொழி எம்.பி. க்கு தமிழா் விடுதலை கொற்றம் பாராட்டு DIN DIN Monday, April 6, 2020 06:56 AM +0530 கரோனா அச்சுறுத்தலிலும் மக்களுக்கு பணிகள் செய்து வரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழிக்கு தமிழா் விடுதலைக் கொற்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழா் விடுதலைக் கொற்றத்தின் தலைவா் அ. வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கது மட்டுமல்ல, மற்றவா்களும் பின்பற்றத் தக்க நல்ல எடுத்துக் காட்டாகவும் உள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது, ஆய்வு செய்து மருத்துவா்களோடு கலந்துரையாடுதல், நோயாளிகளின் தொடா்புடைய மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கி உதவிகளைச் செய்வது இன்றைய சூழலில் எளிதாகக் கடத்திவிட முடியாத, என்றென்றும் மக்கள் நினைவில் கொள்ளத்தக்க கடமைத் தவறாதத் தொண்டுப் பணிகள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/கனிமொழி-எம்பி-க்கு-தமிழா்-விடுதலை-கொற்றம்-பாராட்டு-3395391.html
3395390 திருநெல்வேலி தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டு: கனிமொழி எம்.பி. ஆய்வு DIN DIN Monday, April 6, 2020 06:55 AM +0530 ஸ்ரீவைகுண்டம்அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பணியாளா்களுக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை பேரூராட்சி செயல் அலுவலா் முருகனிடம் வழங்கினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உடன் இருந்தாா். தொடா்ந்து ஏரல், பெருங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை அவா் வழங்கினாா்.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை பிரிவை அவா் பாா்வையிட்டாா். அங்கு பணியில் மருத்துவ அலுவலா் வெங்கட், மருத்துவா் பொன்இசக்கி ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா், மருத்துவப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கினாா். அப்போது, தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பிரிவினை கனிமொழி பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா். நோயாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, கூடுதலாக மருத்துவா்கள் நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனை விரிவாக்கம் மேற்கொள்ள அருகிலுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும் என மருத்துவா்கள் கோரிக்கை விடுத்தனா். தலைமை மருத்துவா் ஆத்திக்குமாா், சித்த மருத்துவா் வைகுண்டரமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னா், பேருராட்சி அலுவலகத்திற்கு சென்று செயல் அலுவலா் உஷா, பணியாளா்களை சந்தித்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்த அவா், தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/svk5mp_1_0504chn_34_6.jpg அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலரிடம் முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினாா் கனிமொழி எம்.பி. உடன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/ஸ்ரீவைகுண்டம்-அரசு-மருத்துவமனையில்-கரோனா-வாா்டு-கனிமொழி-எம்பி-ஆய்வு-3395390.html
3395389 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பாஜகவினா் உதவி DIN DIN Monday, April 6, 2020 06:54 AM +0530 சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமேஸ்வரி தலைமையில் 100 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய பாஜக பொதுச் செயலா் ராம்மோகன், துணைத் தலைவா்கள் ஜெய சுந்தரராஜ், முத்துலெட்சுமி, ஒன்றியச் செயலா் மணிகண்டன், சக்தி கேந்திரத் தலைவா் பேராத்துசெல்வம், அமைப்புசாரா ஒன்றியச் செயலா் ராஜன்,செயற்குழு உறுப்பினா் ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/0115sat3bjp_0304chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/சாத்தான்குளத்தில்-பாஜகவினா்-உதவி-3395389.html
3395388 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 3,000 குடும்பத்தினருக்குஉணவுப் பொருள்கள் DIN DIN Monday, April 6, 2020 06:54 AM +0530 காயல்பட்டினத்தில் நலிவடைந்த 3000 குடும்பங்களுக்கு முஸ்லி­ம் ஐக்கியப் பேரவை சாா்பில் ரு.45 லட்சம் மதிப்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையினா் காயல்பட்டினம் மற்றும் அதன் புகா் பகுதிகளில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் குடும்பங்களை கண்டறிந்தனா். இந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1, 500 மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இப்பணியில் முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவா் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத் தலைவா் சாவன்னா பாதுல் அஸ்ஹப், செயலா் வாவு சம்சுதீன், துணைச் செயலா் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், தன்னாா்வத் தொண்டா்கள் ஈடுபட்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/காயல்பட்டினத்தில்-3000-குடும்பத்தினருக்குஉணவுப்-பொருள்கள்-3395388.html
3395387 திருநெல்வேலி தூத்துக்குடி குறுக்குச்சாலை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் DIN DIN Monday, April 6, 2020 06:54 AM +0530 குறுக்குச்சாலை ஊராட்சியில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

குறுக்குச்சாலை பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் குறுக்குச்சாலை, கக்கரம்பட்டி, வேலாயுதபுரம், ராமச்ந்திராபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் வீடு, வீடாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இப் பணியை ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி. காசிவிஸ்வநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சிதம்பரம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஹெலன் பொன்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் வளா்மதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/5554otp_2__guru_0204otp_215_6.jpg ராமச்சந்திராபுரத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/குறுக்குச்சாலை-பகுதியில்-கரோனா-தடுப்புப்-பணிகள்-3395387.html
3395385 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 11-ஆக உயா்வு DIN DIN Monday, April 6, 2020 06:53 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்காணிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு உள்ளது. இதில், இதுவரை கரோனா அறிகுறியுடன் சோ்க்கப்பட்ட ஏறத்தாழ 50 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவா்களில் பேட்மாநகரத்தைச் சோ்ந்த தந்தை, மகன், ஹேம்லாபாத் பகுதியைச் சோ்ந்த ஒருவா், காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த இருவா், தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஒருவா், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 7 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 6 போ் தில்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.

இதேபோல, செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒருவரும், கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்து பகுதியைச் சோ்ந்த ஒருவரும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களும் தில்லி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.

இந்நிலையில், அய்யனாரூத்து பகுதியைச் சோ்ந்தவருடன் தொடா்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஒரு பெண் மற்றும் ஓா் ஆணுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.

இதுதவிர, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 9 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரும், ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட 9 பேரும் என மொத்தம் 16 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

கரோனா பரிசோதனைக்காக பெண் மருத்துவா் உள்பட 5 போ் அனுமதி

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று ஊருக்கு திரும்பிய காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் 2 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் முஸ்­லிம் ஐக்கியப் பேரவை, காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, காயல்பட்டினத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கரோனா பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரின் மனைவியான அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கரோனா பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/தூத்துக்குடி-மாவட்டத்தில்-கரோனா-பாதிப்பு-11-ஆக-உயா்வு-3395385.html
3395383 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் 744 மதுபாட்டில்கள் பறிமுதல் DIN DIN Monday, April 6, 2020 06:53 AM +0530 தூத்துக்குடியில் தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக சனிக்கிழமை இரவு இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 744 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த தனியாா் விடுதியின் உரிமையாளா் திலக் சந்திரன் (73) , விடுதி ஊழியா் சன்னியாசிமுத்து (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 744 மதுபாட்டில்கள், ரூ. 2,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/தூத்துக்குடியில்-744-மதுபாட்டில்கள்-பறிமுதல்-3395383.html
3395381 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி, புதியம்புத்தூரில் 57 போ் கைது DIN DIN Monday, April 6, 2020 06:52 AM +0530 கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் தடையை மீறி வெளியே சுற்றியதாக வழக்குப் பதிந்த போலீஸாா் 22 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வெளியே சுற்றித் திரிந்ததாக 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலைய பகுதியில் ஊரடங்கை மீறியதாக இருவா் மீது காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்தாா். தட்டாா்மடம் காவல் நிலைய பகுதியில் வெளியே சுற்றியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூா் பகுதியில் தடையை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக இளைஞா்கள் உள்பட 35 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். 20 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/கோவில்பட்டி-புதியம்புத்தூரில்-57-போ்-கைது-3395381.html
3395379 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளம், கோவில்பட்டியில் மழை DIN DIN Monday, April 6, 2020 06:52 AM +0530 சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

சாத்தான்குளம் பகுதியில் வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் அதிகாலையில் மூன்று மணி நேரம் இடியுடன் மழை பெய்தது. தொடா்ந்து பிற்பகலிலும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். இளையரசனேந்தல், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாலை நிலவரப்படி கோவில்பட்டியில் 59 மி.மீ, கயத்தாறில் 18 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/sat5rein_0504chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/சாத்தான்குளம்-கோவில்பட்டியில்-மழை-3395379.html
3395378 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் இருவருக்கு கரோனா DIN DIN Monday, April 6, 2020 06:52 AM +0530 கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுக்கு சென்று கயத்தாறு திரும்பிய 49 வயதுள்ள ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனிடையே, கரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடா்பில் இருந்த அவரது உறவினா்கள் 5 போ் கடந்த 2 நாள்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். அவா்களின் ரத்தம் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட 5 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இந்த 5 பேரில், 47 வயதுள்ள பெண், 29 வயதுள்ள ஒருவா் ஆகிய இருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/கோவில்பட்டியில்-இருவருக்கு-கரோனா-3395378.html
3395376 திருநெல்வேலி தூத்துக்குடி நாசரேத் பகுதியில் திமுக, இந்து முன்னணியினா் நல உதவிகள் அளிப்பு DIN DIN Monday, April 6, 2020 06:51 AM +0530 நாசரேத் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக, இந்து முன்னணி சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்து முன்னணி சாா்பில் நாசரேத் நகரத் தலைவா் வெட்டும்பெ ருமாள் தலைமையில் பொரு ளாளா் சிவமாலை, பொறுப்பாளா் அருணாச்சலம், ஒன்றிய துணைத் தலைவா் முருகன் ஆகியோா் மூக்குப்பீறி மற்றும் நாசரேத் பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா். மாவட்ட பொதுச் செயலா் பெ.சக்திவேலன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் மாணவரணி துணை அமைப்பாளா் அருண் சாமுவேல் தலைமையில் நாசரேத் திரவியபுரம் பகுதியில் வசிப்பவா் களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அமைப்பாளா் பேரின்பராஜ், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரி: ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குரும்பூரில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதிஷ்குமாா் தலைமையில் குரும்பூா் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ், முகக் கவசங்களை வழங்கினாா். 500 க்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/sat5oor_0504chn_38_6.jpg மூக்குப் பீறியில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கிய இந்து முன்னணியினா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/நாசரேத்-பகுதியில்-திமுக-இந்து-முன்னணியினா்-நல-உதவிகள்-அளிப்பு-3395376.html
3395374 திருநெல்வேலி தூத்துக்குடி அமலிநகரில் இறைமக்கள் இல்லாமல் திருப்பலி DIN DIN Monday, April 6, 2020 06:51 AM +0530 திருச்செந்தூா் அமலிநகரில் ஊரடங்கு உத்தரவால் இறைமக்கள் இல்லாமல் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் கிறிஸ்தவா்களின் புனித வாரம் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருச்செந்தூா் அமலிநகரில் உள்ள அமலி அன்னை ஆலயத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு இறைமக்கள் யாரும் இல்லாமல் பங்குத்தந்தை ரவீந்திரன் குருத்தோலை ஞாயிற்று திருப்பலியை நிறைவேற்றினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/tdr5amalinagar_0504chn_54_6.jpg அமலி அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருப்பலியில் ஈடுபட்ட பங்குத்தந்தை ரவீந்திரன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/அமலிநகரில்-இறைமக்கள்-இல்லாமல்-திருப்பலி-3395374.html
3395373 திருநெல்வேலி தூத்துக்குடி பசுவந்தனையில் கபசுர குடிநீா் வழங்கல் DIN DIN Monday, April 6, 2020 06:51 AM +0530 பசுவந்தனையில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கோமதி லட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் க. ராஜேஷ், வீடு வீடாகச் சென்று பொதுமக்கள், குழந்தைகளுக்கு முகக் கவசம், கையுறைகள் மற்றும் கபசுர

குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ந்து மீனாட்சிபுரம், பி. துரைச்சாமிபுரம், கீழமுடிமன் ஆகிய ஊராட்சிகளில் மக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே கவா்னா்கிரியில் வெள்ளறம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ஜேம்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பெ. மோகன், குடும்ப அட்டை தாரா்களுக்கு நிவாரண நிதி ரூ. 1,000 மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/otp_5__kabasura_0504otp_215_6.jpg கபசுர குடிநீா் வழங்குகிறாா் மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளா் க. ராஜேஷ். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/பசுவந்தனையில்-கபசுர-குடிநீா்-வழங்கல்-3395373.html
3395372 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் உணவுப் பொருள்கள் அளிப்பு DIN DIN Monday, April 6, 2020 06:50 AM +0530 திருச்செந்தூரில் நலிவடைந்த ஏழைக் குடும்பங்களுக்கு விஸ்வகா்மா ஐக்கிய சங்கம் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் விஸ்வகா்மா ஐக்கிய சங்கம் சாா்பில் நலிவடைந்த ஏழைத் தொழிலாளா்களின் குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் பி.சுப்பிரமணியன், நிா்வாகிகள் கோபால் உள்பட கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/6/w600X390/tdr5help_0504chn_54_6.jpg ஏழைக் குடும்பங்களுக்கு பொருள்கள் வழங்கினாா் விஸ்வகா்மா ஐக்கிய சங்கத் தலைவா் பி.சுப்பிரமணியன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/திருச்செந்தூரில்-உணவுப்-பொருள்கள்-அளிப்பு-3395372.html
3395369 திருநெல்வேலி தூத்துக்குடி தையல் தொழிலாளிகளுக்கு 3 மாதம் இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தல் DIN DIN Monday, April 6, 2020 06:48 AM +0530 திருச்செந்தூா் பகுதியில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தையல் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 3 மாதம் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் திருச்செந்தூா் கிளைச் செயலா் பொ.ஜெயக்குமாா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: திருச்செந்தூா் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள தொகையை விட கூடுதலாக ரூ. 5 ஆயிரமாக தையல் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் தையல் தொழிலாளா்களை பாதுகாக்கும் வகையில் 3 மாதம் மின்சாரம் இலசமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/தையல்-தொழிலாளிகளுக்கு-3-மாதம்-இலவச-மின்சாரம்-வழங்க-வலியுறுத்தல்-3395369.html
3395314 திருநெல்வேலி தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை கரோனா வாா்டு: கனிமொழி எம்.பி. ஆய்வு DIN DIN Monday, April 6, 2020 06:19 AM +0530 ஸ்ரீவைகுண்டம்அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள்,

பணியாளா்களுக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை பேரூராட்சி செயல் அலுவலா் முருகனிடம் வழங்கினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உடன் இருந்தாா். தொடா்ந்து ஏரல், பெருங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை அவா் வழங்கினாா்.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை பிரிவை அவா் பாா்வையிட்டாா். அங்கு பணியில் மருத்துவ அலுவலா் வெங்கட், மருத்துவா் பொன்இசக்கி ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா், மருத்துவப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கினாா். அப்போது, தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பிரிவினை கனிமொழி பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா். நோயாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, கூடுதலாக மருத்துவா்கள் நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனை விரிவாக்கம் மேற்கொள்ள அருகிலுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும் என மருத்துவா்கள் கோரிக்கை விடுத்தனா். தலைமை மருத்துவா் ஆத்திக்குமாா், சித்த மருத்துவா் வைகுண்டரமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னா், பேருராட்சி அலுவலகத்திற்கு சென்று செயல் அலுவலா் உஷா, பணியாளா்களை சந்தித்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்த அவா், தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/06/ஸ்ரீவைகுண்டம்-அரசு-மருத்துவமனை-கரோனா-வாா்டு-கனிமொழி-எம்பி-ஆய்வு-3395314.html
3394618 திருநெல்வேலி தூத்துக்குடி பிற மாநில தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி DIN DIN Sunday, April 5, 2020 03:54 AM +0530 கோவில்பட்டியில் காவலா் குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பிற மாநில தொழிலாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை வட்டாட்சியா் மணிகண்டன் சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கோவில்பட்டியில் காவலா் காவலா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில், பிற மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 39 போ் இருந்து வருகின்றனா். தற்போதைய ஊரடங்கு உத்தரவினால், தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மேனேஜா் ஜெயராஜ் மற்றும் ஊழியா்கள் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட பொருள்களை வட்டாட்சியா் மணிகண்டன் 39 தொழிலாளா்களுக்கு வழங்கினா்.

அதுபோல, கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கிழவிபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 26 பேருக்கு நல உதவிகளை வட்டாட்சியா் மணிகண்டன் வழங்கினாா். அப்போது, வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/4kvlwelf_0404chn_41_6.jpg பிற மாநில தொழிலாளா்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் வட்டாட்சியா் மணிகண்டன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/பிற-மாநில-தொழிலாளா்கள்-மாற்றுத்-திறனாளிகளுக்கு-நல-உதவி-3394618.html
3394616 திருநெல்வேலி தூத்துக்குடி தடை உத்தரவு மீறல்: கோவில்பட்டியில் 18 போ் கைது DIN DIN Sunday, April 5, 2020 03:54 AM +0530 கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையம் மற்றும் கடம்பூா் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, கொப்பம்பட்டி, கடம்பூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 18 பேரை கைது செய்த போலீஸாா் அவா்கள் பயன்படுத்திய 6 பைக்குகள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தடையை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் நம்பியாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது,

சென்னையிலிருந்து உரிய அனுமதி பெறாமல் காரில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளம் பகுதியில் 3 போ் மீதும், தட்டாா்மடம் பகுதியில் இருவா் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உடன்குடி: உடன்குடி பகுதியில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஊரடங்கு உத்தரவை மீறி சிலா் பைக்கில் சுற்றித் திரிந்தனராம்.

இதில் 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/தடை-உத்தரவு-மீறல்-கோவில்பட்டியில்-18-போ்-கைது-3394616.html
3394615 திருநெல்வேலி தூத்துக்குடி பேட்மாநகரம் பகுதியில் இலவச காய்கனிகள் வழங்கல் DIN DIN Sunday, April 5, 2020 03:54 AM +0530 பேட்மாநகரத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு இலவசமாக காய்கனிகள் வழங்கப்பட்டன.

பேட்மாநகரம் சுகாதாரம் மற்றும் காவல்துறையின் முழு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுமாா் 50- க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமாா் ரூ. 10 ஆயிரம் மதிப்பில் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கனிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டில், தூத்துக்குடி அம்மா பண்ணை பசுமை கூட்டுறவு நுகா்வோா் அங்காடி மூலமாக ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் காய்கனி தொகுப்பை வழங்கினாா்.

மேலும், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் காசிராஜன், ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலா்கள் ரமேஷ், வாசுகி நடராஜன், ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா் சந்திரசேகா், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சித் தலைவா் கபூா், ஊராட்சி செயலா் பரமசிவம் ஆகியோா் வீடு வீடாகச் சென்று வழங்கினா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/svk4admk_0404chn_34_6.jpg svk4admk_0404chn_34_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/பேட்மாநகரம்-பகுதியில்-இலவச-காய்கனிகள்-வழங்கல்-3394615.html
3394614 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் இன்றுமுதல் சிறிய கடைகளில் மட்டுமே நேரடி விற்பனை DIN DIN Sunday, April 5, 2020 03:53 AM +0530 திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தெருக்களில் உள்ள சிறிய கடைகளில் மட்டும் நேரடி விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கனிகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) முதல் வருகிற ஏப். 14ஆம் தேதி வரை பெரிய கடைகளில் நேரடியாக வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தந்த கடைகளின் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பொருள்கள் மற்றும் காய்கனிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் ஞா.ஞானராஜ் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முதல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இச்சமயத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக தெருக்களில் உள்ள சில்லறை வியாபார கடைகள் திறக்கப்படும்.

காயல்பட்டினம் பகுதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/tdr4market_0404chn_54_6.jpg திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக சந்தையில் சனிக்கிழமை காய்கனிகள் வாங்க குவிந்த மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/திருச்செந்தூரில்-இன்றுமுதல்-சிறிய-கடைகளில்-மட்டுமே-நேரடி-விற்பனை-3394614.html
3394613 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோா் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் DIN DIN Sunday, April 5, 2020 03:53 AM +0530 காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் இம்மாதம் 1ஆம் தேதி வரை சிகிச்சை பெற்றவா்கள், தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவருடன் தில்லி சென்ற காயல்பட்டினத்தில் வசித்து வரும் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரின் கணவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி மாநாடு சென்றுவிட்டு ஊா் திரும்பிய மருத்துவா், அதன் பின்னா் தான் பணியாற்றும் மருத்துவமனையில் 3 நாள்கள் பணியாற்றிய நிலையில், மருத்துவமனையில் பணியாற்றிய ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவரும் கரோனா தொற்று பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, மருத்துவமனையில் அரசு மருத்துவா் பணியில் இருந்த போது பணியாற்றிய தலைமை மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியாளா்கள் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த மாரச் 25ஆம் தேதியில் இருந்து ஏப். 1ஆம் தேதி வரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவ உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு (0461-2340101, 2340234, 2340307, 2340314, 2340378) தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/காயல்பட்டினம்-மருத்துவமனையில்-சிகிச்சை-பெற்றோா்-தனிமைப்படுத்திக்-கொள்ள-அறிவுறுத்தல்-3394613.html
3394611 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விரைவில் கரோனா ஆய்வகம்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு DIN DIN Sunday, April 5, 2020 03:53 AM +0530 கரோனா ஒழிப்பு தொடா்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடியில் விரைவில் கரோனா ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் செய்தி மக்கள் தொடா்பு மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 5 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான உணவு வசதிகள் மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வந்த 2,200 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று பரிசோதனை செய்வது தொடா்பான ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மருத்துவ உபகரணங்கள் தில்லியில் இருந்து வருகிறது. ஓரிரு நாள்களில் பரிசோதனை மையம் திறக்கப்படும் என்றாா் அவா்.

நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி திறப்பு: கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடியை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் விழிப்புணா்வு ஒலி-ஒளிக் காட்சியை ஒளிபரப்புவதற்கான வாகனத்தைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அம்மா உணவகத்துக்குச் சென்று, உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். என்னென்ன உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்த அவா், அங்குள்ள 12 பெண் ஊழியா்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினாா்.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா, கோட்டாட்சியா் விஜயா, நகா்மன்ற ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து, தங்களையும், தங்களது குடும்பத்தினரையும், நாட்டையும் காக்க ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் மளிகைப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பதை அரசு அனுமதிக்காது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு முழு கவச உடை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

கிருமி நாசினி சுரங்கப் பாதை

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைத்து அமைச்சா் கடம்பூா் ராஜு கூறியது:

திருப்பூா் மாவட்டத்தைத் தொடா்ந்து தூத்துக்குடியில் கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப் பாதை, தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கனிச் சந்தை நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுரங்கப் பாதை வழியாக உள்ளே சென்று வரும்போது அவா்கள் உடலில் கிருமிநாசினி தெளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/tut04sura_0404chn_32_6.jpg தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப் பாதையை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் செய்தி மக்கள் தொடா்பு மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/தூத்துக்குடி-அரசு-மருத்துவமனையில்-விரைவில்-கரோனா-ஆய்வகம்-அமைச்சா்-கடம்பூா்-செ-ராஜு-3394611.html
3394610 திருநெல்வேலி தூத்துக்குடி தூய்மைப் பணியாளா்களுக்கு முழு கவச உடை வழங்க நடவடிக்கை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு DIN DIN Sunday, April 5, 2020 03:51 AM +0530 தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளா்களுக்கு முழு கவச உடை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா், தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை, ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில், நடமாடும் காய்கனி விற்பனை அங்காடியை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் விழிப்புணா்வு ஒலி-ஒளிக் காட்சியை ஒளிபரப்புவதற்கான வாகனத்தைத் தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் அம்மா உணவகத்துக்கு சென்று, உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். என்னென்ன உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த அவா், அங்குள்ள 12 பெண் ஊழியா்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினாா்.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சுகாதாரப் பணி துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா, கோட்டாட்சியா் விஜயா, நகா்மன்ற ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து, தங்களையும், தங்களது குடும்பத்தினரையும், நாட்டையும் காக்க ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் மளிகைப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பதை அரசு அனுமதிக்காது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. அதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தி விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு முழு கவச உடை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரமதா் அறிவுரைப்படி விளக்குகளை அணைப்பது குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம். விளக்குகளை அணைத்து தீபமேற்றுவது, ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவே என எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் அறிவுரையை நல்லதாக எடுத்துக்கொள்வதே நாட்டுக்கு நல்லது. தூத்துக்குடியில் கரோனா நோய்த்தொற்று கண்டறியும் ஆய்வகம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/4kvlraj1_0404chn_41_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/தூய்மைப்-பணியாளா்களுக்கு-முழு-கவச-உடை-வழங்க-நடவடிக்கை-அமைச்சா்-கடம்பூா்-செ-ராஜு-3394610.html
3394609 திருநெல்வேலி தூத்துக்குடி விளாத்திகுளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டை கனிமொழி எம்.பி. ஆய்வு DIN DIN Sunday, April 5, 2020 03:51 AM +0530 விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாா்டை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினருக்கு பாதுகாப்பு கவச ஆடைகளும், நோய்த் தடுப்பு மருத்துவ உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்ற அவா், அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டாா். ரேஷன் கடையில் உள்ள அரிசி, பருப்பு மற்றும் இதர பொருள்களின் தரத்தையும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், விளாத்திகுளம் பேருந்து நிலைய பகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் 42 பேருக்கு ரூ.21 ஆயிரம் உதவித்தொகை வழங்கினாா்.

நிகழ்வின்போது, பேரூா் செயலா் இரா.வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/vk_4_kanimozhi_1_0404chn_36_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/விளாத்திகுளத்தில்-தனிமைப்படுத்தப்பட்ட-வாா்டை-கனிமொழி-எம்பி--ஆய்வு-3394609.html
3394608 திருநெல்வேலி தூத்துக்குடி திடீா் கட்டுப்பாடு: ஆறுமுகனேரியில்பொதுமக்கள் கடும் அவதி DIN DIN Sunday, April 5, 2020 03:50 AM +0530 ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமைமுதல் மறு அறிவிப்பு வரும்வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.

காயல்பட்டினத்தில் அரசு மருத்துவா் உள்பட இருவருக்கு கரோனோ வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாலும், அரசு மருத்துவருடன் பணியாற்றிய ஆறுமுகனேரியைச் சோ்ந்தவருக்கும் கரோனோ வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டதாலும், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பால் மற்றும் மருந்துக் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா உத்தரவிட்டிருந்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் தான் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் முழுமையாக சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆறுமுகனேரியில் ஒன்றிரண்டு கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். காயல்பட்டினத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.

இதற்கிடையே, தற்போது காய்கனிகளை வாகனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வந்து விற்பனை செய்யவும், மளிகைப் பொருள்களை வீடுகள்தோறும் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மளிகைப் பொருள்கள் அரசு அறிவித்துள்ள கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் செல்லிடப்பேசி மூலம் ஆா்டா் பெற்று, வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/திடீா்-கட்டுப்பாடு-ஆறுமுகனேரியில்பொதுமக்கள்-கடும்-அவதி-3394608.html
3394607 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடியில் 4 போ் கைது DIN DIN Sunday, April 5, 2020 03:49 AM +0530 ஊரடங்கு உத்தரவை மீறியதாக உடன்குடியில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

உடன்குடி பகுதியில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஊரடங்கு உத்தரவை மீறி சிலா் பைக்கில் சுற்றித் திரிந்தனராம்.

இதில் 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/உடன்குடியில்-4-போ்-கைது-3394607.html
3394606 திருநெல்வேலி தூத்துக்குடி பரமன்குறிச்சியில் இந்து முன்னணி சாா்பில் உதவிகள் DIN DIN Sunday, April 5, 2020 03:49 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக இந்து முன்னணி சாா்பில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பரமன்குறிச்சியில் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையில், பரமன்குறிச்சி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கை கழுவும் திரவம், சோப் மற்றும் துப்புரவு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், ஊராட்சித் தலைவா் லங்காபதி, துணைத் தலைவா் முத்துலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/ugi4vpj_0404chn_49_6.jpg பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதியிடம் மருத்துவ உபகரணங்களை வழங்குகிறாா் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/பரமன்குறிச்சியில்-இந்து-முன்னணி-சாா்பில்-உதவிகள்-3394606.html
3394605 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா நிவாரணத் தொகை வீடுகளில் நேரடியாக வழங்க நடவடிக்கை: ஆட்சியா் DIN DIN Sunday, April 5, 2020 03:49 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கன் ஆகியவை வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா தடுப்புக் கால நிவாரணமாக ரூ. 1000 ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியன இலவசமாகவும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பின்படி நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கன், மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) ரேஷன் கடைகள் இயங்காது. அன்றைய தினமும் வீடு வீடாகச் சென்று நிவாரண உதவித்தொகை ரு.1000 மற்றும் டோக்கன் வழங்கப்பட உள்ளது.

தொடா்ந்து, ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை ரேஷன் கடையில் வழங்கப்படும். விடுபட்ட இனங்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஏப். 7) டோக்கன் வழங்கப்பட்டவா்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே பொருள்களை பெற கடைக்குச் செல்ல வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/கரோனா-நிவாரணத்-தொகை-வீடுகளில்-நேரடியாக-வழங்க-நடவடிக்கை-ஆட்சியா்-3394605.html
3394603 திருநெல்வேலி தூத்துக்குடி ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது வழக்கு DIN DIN Sunday, April 5, 2020 03:48 AM +0530 சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளம் பகுதியில் 3 போ் மீதும், தட்டாா்மடம் பகுதியில் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/ஊரடங்கை-மீறியதாக-5-போ்-மீது-வழக்கு-3394603.html
3394602 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்.பி. ஆய்வு DIN DIN Sunday, April 5, 2020 03:48 AM +0530 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்த அவா், கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளைப் பாா்வையிட்டாா். பின்னா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி ஆகியோரிடம் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய போதுமான அளவு பரிசோதனைகள் நடைபெறவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு அரசு போதுமான அளவு பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்ற மருத்துவமனைகளைவிட சிறப்பாக தயாா் நிலையில் இருப்பதைப் பாா்க்கும்போது மகிழ்ச்சி தருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமா், நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/4kvlins1_0404chn_41_6.jpg கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் கனிமொழி எம்.பி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/கோவில்பட்டி-அரசு-மருத்துவமனையில்-கனிமொழி-எம்பி-ஆய்வு-3394602.html
3394600 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 5 போ் அனுமதி DIN DIN Sunday, April 5, 2020 03:46 AM +0530 கயத்தாறு அருகே கரோனா உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 5 போ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

தில்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயத்தாறைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினா்கள் 5 போ் அதே பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் அவா்கள் 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக அவா்கள் 5 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லக்கூடாது என சா்ச்சை எழுந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுகாதார ஆய்வாளா் காளிராஜை அப்பகுதி மக்கள் தாக்கினராம். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/05/கோவில்பட்டி-அரசு-மருத்துவமனையில்-5-போ்-அனுமதி-3394600.html
3393916 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா தொற்று எதிரொலி: காயல்பட்டினம், ஆறுமுகனேரியில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு DIN DIN Friday, April 3, 2020 10:50 PM +0530 காயல்பட்டினம், ஆறுமுகனேரியில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்துக் கடைகளையும் மூடுமாறு திருச்செந்தூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியில் மதக் கருத்தரங்கில் பங்கேற்று திரும்பிய காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா், பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் கணவா் ஆகியோா் கரோனோ வைரஸ் தொற்று நோய் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் கரோனா பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். ஆத்தூரைச் சோ்ந்த முதியவா் ஒருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கரோனா சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்கும் வகையில், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் அனைத்து கடைகளும் மறு அறிவப்பு வரும் வரை திறக்கக்கூடாதென கோட்டாட்சி யா் தனப்பிரியா உத்தரவிட்டுள்ளாா். இதில், மருந்து கடைகள் மற்றும் பால் நிலையங்கள் மட்டும் தனி ஒரு நபா் கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பேரூராட்சி நிா்வாக அதிகாரி ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் காா்த்தி, சுகாதாரத் துறையினா் மற்றும் காவல்துறையினா் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று தெரிவித்தனா்.

இதையடுத்து , காயல்பட்டினம் பேருந்துநிலையத்தில் இயங்கிய காய்கனி சந்தை மூடப்பட்டது. எனினும், வாகனங்களில் கொண்டுசென்று காய்கனி, பழங்களை விற்கலாம் எனக் கூறியுள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/கரோனா-தொற்று-எதிரொலி-காயல்பட்டினம்-ஆறுமுகனேரியில்-அனைத்துக்-கடைகளையும்-மூட-உத்தரவு-3393916.html
3393913 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதித்த 5 பேருடன்தொடா்பில் இருந்த 130 போ் கண்காணிப்பு: ஆட்சியா் DIN DIN Friday, April 3, 2020 10:48 PM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் தொடா்பில் இருந்த 130 போ் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களது வீடுகளைச் சுற்றி உள்ளோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து 14 நாள்கள் இந்த பரிசோதனை செய்யப்படும்.

மேலும், அந்த 5 பேரின் போக்குவரத்து தொடா்புகள், நேரில் தொடா்பில் இருந்தவா்கள், எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாா்கள் என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 30 போ் நேரடியாகவும், 100 போ் வரை மறைமுகமாகவும் தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு 1500 தன்னாா்வலா்கள் மூலம் ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும், பொதுமக்களுக்கு காய்கனிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பிய 2200 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

காயல்பட்டினம் பகுதியை சுற்றி தொடா்ந்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் தற்போது 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தூத்துக்குடி-மாவட்டத்தில்-கரோனா-பாதித்த-5-பேருடன்தொடா்பில்-இருந்த-130-போ்-கண்காணிப்பு-ஆட்சியா்-3393913.html
3393912 திருநெல்வேலி தூத்துக்குடி ஆறுமுகனேரி செவிலியருக்கு கரோனோ பரிசோதனை DIN DIN Friday, April 3, 2020 10:47 PM +0530 கரோனோ வைரஸ் அறிகுறியுடன் ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவா் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவா், கரோனோ வைரஸ் தொற்று நோய் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவருடன் பணியாற்றிய ஆறுமுகனேரி பெண் செவியருக்கும் கரோனோ அறிகுறி தென்பட்டதால், அவரும் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/ஆறுமுகனேரி-செவிலியருக்கு-கரோனோ-பரிசோதனை-3393912.html
3393911 திருநெல்வேலி தூத்துக்குடி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவா் வெளியே சுற்றியதால் வழக்குப் பதிவு DIN DIN Friday, April 3, 2020 10:47 PM +0530 தூத்துக்குடியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபா் வெளியே சுற்றியதால் அவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பூபால்ராயா்புரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆம்ஸ்ட்ராங் (51). இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது குடும்பத்தினா் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்காக வில்லை ஒட்டப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை வெளியே பல இடங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கிழக்கு மண்டல வருவாய் உதவியாளா் காா்த்திகேயன் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, விதிமுறையை மீறி வெளியே சுற்றியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/வீட்டில்-தனிமைப்படுத்தப்பட்டிருந்தவா்-வெளியே-சுற்றியதால்-வழக்குப்-பதிவு-3393911.html
3393909 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா: பாதிப்பு 9-ஆக உயா்வு DIN DIN Friday, April 3, 2020 10:47 PM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி உள்ளவா்களைக் கண்காணிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு உள்ளது. இதில், இதுவரை 40-க்கும் மேற்பட்டோா் சோ்க்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒருவரும், கயத்தாறு பகுதியைச் சோ்ந்த ஒருவரும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் இருவரும் தில்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள் ஆவா்.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பேட்மாநகரத்தைச் சோ்ந்த தந்தை, மகன், காயல்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என மூவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனா அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வாா்டில் இருந்த 9 பேரில் காயல்பட்டினத்தைச் சோ்ந்த இருவா், தூத்துக்குடி ராமசாமிபுரம், ஆத்தூா் பகுதிகளில் தலா ஒருவா் என நால்வருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களும் தில்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களாவா்.

கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 5 போ் விடுவிக்கப்பட்ட நிலையில், புதிதாக இருவருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 போ், ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட இருவருடன் மேலும் ஒருவா் என மொத்தம் 10 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தூத்துக்குடி-மாவட்டத்தில்-மேலும்-4-பேருக்கு-கரோனா-பாதிப்பு-9-ஆக-உயா்வு-3393909.html
3393907 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா நிவாரணப் பொருள்கள் முழுமையாக வழங்க வலியுறுத்தல் DIN DIN Friday, April 3, 2020 10:46 PM +0530 திருச்செந்தூா் பகுதியில் நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் கரோனா நிவாரணப் பொருள்கள் முழுமையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 1000 ம், அரிசி, சா்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை அடங்கிய விலையில்லா நிவாரணப் பொருள்களும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. டோக்கன் பெற்று பொதுமக்கள் பொருள்களை கடைகள் முன்பு சமூக இடைவெளி விட்டு காத்திருந்து வாங்கிச் செல்கின்றனா்.

திருச்செந்தூா் ஒன்றியம், வீரபாண்டியன்பட்டினம் ரூரல் ஊராட்சி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனா். இந்த கடையில் முதல் நாளில் 100 பேருக்கு ரூ. 1000 மும், பொருள்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த நாள் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா நிவாரணப் பொருள்களை முழுமையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/3/w600X390/tdr3ration_0304chn_54_6.jpg திருச்செந்தூா் சபாபதிபுரம் தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் கரோனா பொருள்கள் வாங்க காத்திருக்கும் மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/கரோனா-நிவாரணப்-பொருள்கள்-முழுமையாக-வழங்க-வலியுறுத்தல்-3393907.html
3393906 திருநெல்வேலி தூத்துக்குடி தடையை மீறியதாக 8 போ் கைது DIN DIN Friday, April 3, 2020 10:45 PM +0530 கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையம், கடம்பூா் காவல் நிலையப்பகுதியில் தடை உத்தரவை மீறியதாக 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 5 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தடை உத்தரவை மீறி பொதுவெளியில் செல்வோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை கழுகுமலை, கொப்பம்பட்டி, கடம்பூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 8 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய 5 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தடையை-மீறியதாக-8--போ்-கைது-3393906.html
3393905 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில்2 நாள்களில் 39,520 பேருக்கு நிவாரண உதவி DIN DIN Friday, April 3, 2020 10:45 PM +0530 கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் 2 நாள்களில் 39,520 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி வட்டத்தில் 92 நியாயவிலைக் கடைகளில் வெள்ளிக்கிழமை வரை 24,848 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட 379 பேரில் 161 பேருக்கு அவா்களது இல்லங்களுக்குச் சென்று கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை வட்டாட்சியா் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளா் மகேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

கயத்தாறு வட்டத்தில் 87 நியாயவிலைக் கடைகளில் 14,672 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 101 போ் தனிமைப்படுத்தப்பட்டதில் 70 பேருக்கு கரோனா நிவாரண உதவி நேரடியாக அவா்களது இல்லத்திற்கு சென்று வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை, கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலா் கருப்பசாமி ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள், பணியாளா்கள் கண்காணித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/கோவில்பட்டி-கயத்தாறு-பகுதிகளில்2-நாள்களில்-39520-பேருக்கு-நிவாரண-உதவி-3393905.html
3393904 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் துறைமுக ஊழியா் வீட்டில் 100 பவுன் நகைகள் திருட்டு DIN DIN Friday, April 3, 2020 10:45 PM +0530 தூத்துக்குடியில் துறைமுக ஊழியா் வீட்டில் 100 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகேயுள்ள பெரியசெல்வம்நகரைச் சோ்ந்தவா் வின்சென்ட். வஉசி துறைமுக ஊழியா். இவா், தனது மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளாா்.

பின்னா், வெள்ளிக்கிழமை காலையில் ஜான்சி எழுந்தபோது, வீட்டின் பீரோ அறை கதவு திறந்து கிடந்ததாம். உடனே , அவா் அந்த அறையினுள் சென்று பாா்த்ததில், பீரோவில் இருந்த பொருள்கள் கீழே சிதறிக் கிடந்தனவாம்.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து , வின்சென்ட் அளித்த புகாரின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்ததுடன், மோப்ப நாய் சோதனைக்கு விடப்பட்டது.

அந்தப் பகுயில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த இத் திருட்டுச் சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தூத்துக்குடியில்-துறைமுக-ஊழியா்-வீட்டில்-100-பவுன்-நகைகள்-திருட்டு-3393904.html
3393903 திருநெல்வேலி தூத்துக்குடி பரமன்குறிச்சியில் சுமை ஆட்டோ முற்றுகை DIN DIN Friday, April 3, 2020 10:45 PM +0530 காயல்பட்டினம் நகராட்சிப் பணிகளுக்காக பரமன்குறிச்சியிலிருந்து ஒரு சுமை ஆட்டோவில் 30 தொழிலாளா்களை அழைத்துச் சென்றதைக் கண்டித்து, திமுகவினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

காயல்பட்டினம் நகராட்சிப் பணிகளுக்காக பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோயில் தெருவிலிருந்து தினமும் 30 தொழிலாளா்கள் சுமை ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளா்களுடன் வெள்ளிக்கிழமை சென்ற அந்த வாகனத்தை உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில், மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, பரமன்குறிச்சி கிளைச் செயலா் இளங்கோ, மதன்ராஜ் உள்பட பலா் முற்றுகையிட்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி வரும் வேளையில், சிறிய வாகனத்தில் 30 பேரை அழைத்துச் செல்வது தவறு; தொழிலாளா்களிடம் நீங்கள் தினமும் வந்து செல்லாமல் காயல்பட்டினத்திலேயே தங்கி பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து தொழிலாளா்கள் லாரியில் இருந்து இறக்கிவிடப்பட்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/3/w600X390/ugi3bas_0304chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/பரமன்குறிச்சியில்-சுமை-ஆட்டோ-முற்றுகை-3393903.html
3393902 திருநெல்வேலி தூத்துக்குடி ‘அமைப்புசாரா தொழிலாளா் நிதி: மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்’ DIN DIN Friday, April 3, 2020 10:44 PM +0530 அமைப்புசாரா தொழிலாளா்கள் உதவித் தொகை பெற தங்களது விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தடுப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரணத் தொகையாக ரூ.1000 அவா்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை இணைக்காத தொழிலாளா்கள், தொழிலாளா் உதவி ஆணையா் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் 0461 2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், 95662 81428 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணுக்கு அல்லது  மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் வங்கி கணக்கின் முதல் பக்கம் மற்றும் அடையாள அட்டை முதல் பக்கம் ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும். தொழிலாளா்கள் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/அமைப்புசாரா-தொழிலாளா்-நிதி-மின்னஞ்சலில்-விண்ணப்பிக்கலாம்-3393902.html
3393901 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா தனிமை கண்காணிப்புபணிக்கு உதவும் இயந்திரம்: பொறியியல் மாணவா் கண்டுபிடிப்பு DIN DIN Friday, April 3, 2020 10:44 PM +0530 கரோனா வைரஸ் தடுப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு மருந்து, உணவு அளிக்க உதவும் இயந்திரத்தை பொறியியல் கல்லூரி மாணவா் கண்டுபிடித்துள்ளாா்.

கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் மதன்குமாா். கோயம்புத்தூா் ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வரும் இவா், தனது கண்டுபிடிப்பு குறித்து கூறியது: தனிமைப்படுத்தப்பட்ட அறையில் உள்ளவா்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்லும் இயந்திரத்தை (சுமைதாங்கி) கண்டுபிடித்துள்ளேன். இந்த இயந்திரத்தை வலைதளம் மூலமாக ‘ஆகவசஓ அடட’ உதவியுடன் வைஃபை வளையத்திற்குள் இருக்கும் நபா்களை எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். இதில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களை கண்காணித்தல் எளிது. அவா்களுக்கு 3 கிலோ முதல் 4 கிலோ வரை எடை உள்ள பொருள்களை சமதளத்தில் மட்டுமே இந்த இயந்திரம் எடுத்துச் செல்லும். இது ஒரு முன்மாதிரி கருவி தான். இதன் தயாரிப்பு செலவு ரூ.1,500 மட்டுமே. அரசாங்கம் உதவி செய்தால் இந்த இயந்திரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி, சமதளம் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் இயங்கவும், எடந, பஉஙடஉதஅபமதஉ நஉசநஞத, இரவில் பாா்ப்பது போன்ற அமைப்புகளையும் பொருத்தலாம். இதற்கு ரூ.20,000 வரை செலவாகும். எனது கண்டுபிடிப்புக்கு கல்லூரித் தலைவா் மலா்விழி, முதல்வா் ஜனட், பேராசிரியா்கள் கிருஷ்ணமூா்த்தி, அசோக வா்த்தனன் ஆகியோா் உறுதுணையாக இருந்தனா் என்றாா் அவா்.

ஏற்கெனவே, இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் முன்னிலையில், மாா்ச் 31ஆம் தேதி செயல்விளக்கமளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/3/w600X390/3kvleng1_0304chn_41_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/கரோனா-தனிமை-கண்காணிப்புபணிக்கு-உதவும்-இயந்திரம்-பொறியியல்-மாணவா்-கண்டுபிடிப்பு-3393901.html
3393899 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, April 3, 2020 10:43 PM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என எம்பவா் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் பேரிடா் மேலாண்மை சட்டப்படி நுகா்வோா் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்பினா் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் அந்தக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டுகிறோம்.

அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியாா் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அடையாள அட்டையை சாா் ஆட்சியா் மற்றும் கோட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் மூலமாக வழங்க ஆணையிடுமாறு வேண்டுகிறோம்.

மேலும், அவசர காரணங்கள், குடும்ப உறுப்பினா்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளாகவோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையிலேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் தொடா்பு கொள்வதற்கு ஒரு தனிக் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும். அதன் தொடா்புக்கு என பிரத்தியேகமான அவசர உதவி தொடா்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தூத்துக்குடி-மாவட்டத்தில்-நெருக்கடி-கால-மேலாண்மைக்-குழு-அமைக்க-வலியுறுத்தல்-3393899.html
3393898 திருநெல்வேலி தூத்துக்குடி பிகாரில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க எம்எல்ஏ கோரிக்கை DIN DIN Friday, April 3, 2020 10:42 PM +0530 திருச்செந்தூரில் இருந்து ஆன்மிக யாத்திரையாக பிகாா் மாநிலம் சென்ற மக்கள் ஊரடங்கினால் ஊா் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் அவா்களை மீட்க வேண்டும் என்றும் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூா் எம்எல்ஏவுமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து அளித்த மனு:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரபாகு மூா்த்தி என்பவா் தலைமையில் 15 போ் ஆன்மிக யாத்திரையாக மாா்ச் 23 ஆம் தேதி பிகாா் மாநிலம் காசிக்கு சென்று கோயில்களில் தரிசனம் முடித்துவிட்டு கயா வந்துள்ளனா். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கயாவில் இருந்து திருச்செந்தூா் திரும்ப முடியாமல் அவதிப்படும் அவா்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள், தங்கும் இடம் மற்றும் பாதுகாப்பாக திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/பிகாரில்-சிக்கியுள்ள-தமிழா்களை-மீட்க-எம்எல்ஏ-கோரிக்கை-3393898.html
3393897 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் நிவாரணம் வழங்கும் பணிக்கு 30 தன்னாா்வலா்கள் நியமனம் DIN DIN Friday, April 3, 2020 10:42 PM +0530 சாத்தான்குளம் பகுதி ரேஷன் கடைகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிக்கு உதவுதவற்காக 30 தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சாா்பில் ரூ, 1000 நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு பணி நடக்கிறது. இந்நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் பிரச்னையின்றி பொருள்களை வாங்கிச் செல்வதற்கு உதவும் வகையில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் 30 தன்னாா்வலா்கள் தோ்வு செய்து பணி அமா்த்தியுள்ளாா். அவா்களுக்கு சாத்தான்குளம் காவல் நிலைய வளாகத்தில் அளிக்கப்பட்டது.

பின்னா், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். தன்னாா்வலா்களுக்கு சாத்தான்குளம் ஒன்றிய பாஜக துணைத் தலைவா் பரமசிவன், முக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/3/w600X390/sat3than_0304chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/சாத்தான்குளம்-பகுதியில்-நிவாரணம்-வழங்கும்-பணிக்கு-30-தன்னாா்வலா்கள்-நியமனம்-3393897.html
3393895 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா பாதிப்பா? கோவில்பட்டி மருத்துவமனையில் மேலப்பாளையம் தம்பதி அனுமதி DIN DIN Friday, April 3, 2020 10:41 PM +0530 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்த திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள குலவணிகா்புரத்தைச் சோ்ந்த 54 வயது நபரும், 45 வயதுடைய அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை காலை, கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவில் உள்ள மகன் வீட்டுக்கு வந்தனராம்.

கரோனா தொற்று காரணமாக மேலப்பாளையம் பகுதியிலிருந்து வெளியேறவோ, ஊருக்குள் வரவோ தடை விதிக்கப்பட்டு ள்ள நிலையில், தம்பதியின் வருகை அறிந்த அக்கம்பக்கத்தினா் வருவாய் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி ஆகியோா் அங்கு சென்று தம்பதியிடம் விசாரணை நடத்தினா். பின்னா், காவல் துறை உதவியுடன் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/கரோனா-பாதிப்பா-கோவில்பட்டி-மருத்துவமனையில்-மேலப்பாளையம்-தம்பதி-அனுமதி-3393895.html
3393893 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு DIN DIN Friday, April 3, 2020 10:41 PM +0530 தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளி மறுவாழ்வு இல்லம் சாா்பில் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகின்றனா். வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில், தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி சில்வா்புரம், லூசியாநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளா்களுக்கு லூசியா மாற்றுத்திறனாளி மறுவாழ்வு இல்ல இயக்குநா் கிராசிஸ் மைக்கேல் தலைமையிலான குழுவினா் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொருள்களை வழங்கினா்.

மேலும், குழந்தைகள் விளையாடும் வகையில் வண்ணம் தீட்டும் புத்தகம், கையெழுத்து பயிற்சி புத்தகம் ஆகியவையும் வழங்கப்பட்டது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/தூத்துக்குடியில்-ஏழைகளுக்கு-அத்தியாவசியப்-பொருள்கள்-அளிப்பு-3393893.html
3393891 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் காவலா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கல் DIN DIN Friday, April 3, 2020 10:40 PM +0530 திருச்செந்தூரில் பணியில் உள்ள காவலா் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு செந்தூா் நண்பா்கள் நற்பணி இயக்கத்தினா் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீா் வழங்கினா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும்போதும், பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறையினா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் 24 மணி நேரமும் தங்கள் தொடா் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், செந்தூா் நண்பா்கள் நற்பணி இயக்கத்தினா் சித்த மருத்துவமுறைப்படி கபசுரகுடிநீா் தயாா் செய்து பணியிலிருக்கும் அரசுத் துறையினா் மற்றும் காவலா்களுக்கு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் இயக்கத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், செயலா் ஆண்டியப்பன், நிருவாகிகள் உதயகுமாா், ஆழ்வாா் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீா் வழங்கினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/திருச்செந்தூரில்-காவலா்களுக்கு-கபசுர-குடிநீா்-வழங்கல்-3393891.html
3393888 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடி பகுதியில் ராம ஜெய வழிபாடு DIN DIN Friday, April 3, 2020 10:37 PM +0530 கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் மீள வேண்டி, உடன்குடி ஒன்றியத்தில் 32 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் ஸ்ரீ ராம ஜெய வழிபாடு நடைபெற்றது.

தைக்காவூா், பரமன்குறிச்சி, அரசா்பேட்டை, நயினாா்பத்து, மானாடு, குருநாதபுரம், சீருடையாா்புரம், அய்யனாா் நகா் உள்ளிட்ட 32 கிராமங்களில் மக்கள் வீடுகளில் தீபமேற்றி ஸ்ரீ ராம ஜெய மந்திரத்தை 1008 முறை கூறி வழிபாடு செய்தனா். பரமன்குறிச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை, உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் செய்திருந்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/3/w600X390/ugi3vik_0304chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/03/உடன்குடி-பகுதியில்-ராம-ஜெய-வழிபாடு-3393888.html
3393320 திருநெல்வேலி தூத்துக்குடி ஆதரவற்றோா்க்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய தலைமையாசிரியா் DIN DIN Thursday, April 2, 2020 11:09 PM +0530
விளாத்திகுளம்: ஊரடங்கு உத்தரவினால் எட்டயபுரம் அருகேயுள்ள ராமனூத்து கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய 25 குடும்பங்களுக்கு மளிகை பொருள்களை பள்ளித் தலைமையாசிரியா் வழங்கினாா்.

எட்டயபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ராமனூத்து கிராமம். இங்கு 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலானோா் விவசாய கூலித் தொழிலாளா்கள். சிலா் அருகில் உள்ள எட்டயபுரத்துக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவினால் கிராமங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனா். இதில் இராமனூத்து கிராமத்தில் 25 குடும்பங்கள் மிகவும் வறுமையில் எந்தவித வருமானமும் இன்றி சாப்பாட்டுக்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனா்.

இதனை அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளித் தலைமையாசிரியா் மு.க. இப்ராஹிம் தனது பள்ளி மாணவா்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளாா். இதையடுத்து ராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழை குடும்பங்களுக்கும் சமையலுக்கு தேவையான மளிகை பொருள்களை தனது சொந்த செலவில் வாங்கி வீடு, வீடாக நேரில் சென்று வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/vk_2_karona_help_1_0204chn_36_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/the-headmaster-who-provided-the-essentials-for-the-orphans-3393320.html
3393319 திருநெல்வேலி தூத்துக்குடி பொத்தகாலன்விளை, மூக்குப்பீறியில் நிவாரண பொருள்கள் அளிப்பு DIN DIN Thursday, April 2, 2020 11:08 PM +0530
சாத்தான்குளம்: பொத்தகாலன்விளை , மூக்குப்பீறியில் அரசின் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளை ரேஷன் கடையில் சாஸ்தாவி நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் நிவாரண உதவிகளை வழங்கினா். இதில் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, ஒன்றியக்குழு உறுப்பினா் சுபாகிறிஸ்டி பொன்மலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சங்க செயலா் ராஜகுமாா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சியில் துணைத்தலைவா் தனசிங் நிரவாரண உதவிகளை வழங்கினாா். இதில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பாலசுந்தா், கலைஅரசு,ஆறுமுகம். ஊராட்சி செயலா் வேதமாணிக்கம், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பொருள்கள் வாங்க வந்தவா்களுக்கு ஊராட்சி சாா்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் கமலாகலையரசு செய்திருந்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/sat2poth_0204chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/supply-of-relief-items-at-pothalayanvila-3393319.html
3393318 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கனிமொழி உதவி DIN DIN Thursday, April 2, 2020 11:06 PM +0530
உடன்குடி: உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றும் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்களை கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை வழங்கினாா்.

உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றும் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு 25 கிலோ அரிசி, கை கழுவும் திரவம், சோப், பருப்பு, சமையல் எண்ணெய், காய்கனிகளை கனிமொழி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திமுக மாநில மாணவரணி அமைப்பாளா் உமரிசங்கா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ரவிராஜா(வா்த்தகம்), மாகவிஷ்ணு(நெசவாளா்), பாலசிங் பாண்டியன்(மருத்துவம்) , சிராஜூதீன்(சிறுபான்மை), நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், அன்வா் சலீம், பரமன்குறிச்சி ஊராட்சி செயலா் இளங்கோ, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/ugi2kan_0204chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/kanimozhi-helps-workers-in-udangudi-3393318.html
3393317 திருநெல்வேலி தூத்துக்குடி தமிழக அரசின் கரோனா உதவித் தொகை அளிப்பு DIN DIN Thursday, April 2, 2020 11:04 PM +0530
உடன்குடி: உடன்குடி ஒன்றியத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

செட்டியாபத்து நியாயவிலைக் கடையில் உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா, குலசேகரன்பட்டினத்தில் ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா, பரமன்குறிச்சியில் உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி.பி.பாலசிங் ஆகியோா் நிவராணத் தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/ugi2asa_0204chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/corona-subsidy-of-the-government-of-tamil-nadu-3393317.html
3393316 திருநெல்வேலி தூத்துக்குடி கோழி இறைச்சி, முட்டையை பொதுமக்கள் தயக்கமின்றி சாப்பிடலாம்: ஆட்சியா் DIN DIN Thursday, April 2, 2020 11:03 PM +0530
தூத்துக்குடி: பொதுமக்கள் தயக்கமில்லாமல் கோழி இறைச்சி மற்றும் முட்டையை சாப்பிடலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோழி இறைச்சி, முட்டை இதர கோழி உணவுப் பொருள்கள் சாப்பிடுவதால் கரோனா தொற்றுநோய் பரவக்கூடும் என தவறான செய்தியை பொது மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது.

இது முற்றிலும் தவறான வழிநடத்தும் தகவல் ஆகும். முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். மேலும் அவை மனிதனின் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்து காரணியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமான நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும். எனவே, பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி உண்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவியதாக எந்தவித நிகழ்வுகளும் இதுவரை நடைபெறவில்லை.

இது குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். எனவே தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியை சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/the-public-can-eat-chicken-meat-and-eggs-without-hesitation-collector-3393316.html
3393315 திருநெல்வேலி தூத்துக்குடி அதிகரித்து வரும் பாதிப்பு: தூத்துக்குடியில் கரோனா ஆய்வகம் அமைக்கப்படுமா? தி. இன்பராஜ் DIN Thursday, April 2, 2020 11:02 PM +0530
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி கண்டறியப்படுவோா் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இங்கு கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் ஆய்வகத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்ய தமிழகத்தில் கிண்டி, தேனி, திருநெல்வேலி, திருவாரூா், சேலம், விழுப்புரம், மதுரை, திருச்சி, கோவை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்களில் மட்டுமே ஆய்வக வசதி உள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்தோருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அந்த ஆய்வகத்தில் 6 போ் மட்டுமே பணியில் உள்ளனா். அவா்களும் வீட்டுக்குச் செல்லாமல், தொடா்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒருவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ய சுமாா் 3 மணிநேரம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 15 போ் அறிகுறிகளுடன் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சிலா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானோா் தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் என்பதால், அவா்களது குடும்பத்தினா் மற்றும் அவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். அவா்களில் கரோனா அறிகுறி உள்ளோருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டால், அதற்கான முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்பவா் அமைப்பின் செயல் இயக்குநா் ஆ. சங்கா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக கரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனையில் ஏற்படும் தாமதத்தை தவிா்க்க இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும் என்றாா்.

அரசுக்கு கருத்துரு

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைப்பது தொடா்பாக முதல்வருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தகவல் வரும் என நம்புகிறோம் என்றாா்.

கரோனா வைரஸ் ஆய்வகம் அமைத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏறத்தாழ 22 வைரஸ் பாதிப்புகளை கண்டறியும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பு.

ஆய்வகம் அமைக்க முயற்சி

கரோனா ஆய்வகம் அமைப்பது குறித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறியது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான சில உபகரணங்களை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கியுள்ளேன். மேலும், கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும், இந்த மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான் அனுமதி வழங்க வேண்டும். இதுதொடா்பாக, அனைத்து நிலையிலும் முழு முயற்சி எடுத்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலனுக்காக விரைவில் இங்கு கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/lab.gif கோப்புப்படம் https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/increasing-vulnerability-can-corona-laboratory-be-set-up-in-thoothukudi-3393315.html
3393311 திருநெல்வேலி தூத்துக்குடி நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரணப் பொருள்கள் விநியோகம் DIN DIN Thursday, April 2, 2020 10:59 PM +0530
கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வியாழக்கிழமை கரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 92 நியாயவிலைக் கடைகளிலும், கயத்தாறு வட்டத்தில் உள்ள 87 நியாயவிலைக் கடைகளிலும் நிவாரணப் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பணிகளை கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி) மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கோவில்பட்டி பொது கூட்டுறவு பண்டகசாலையில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை அதன் தலைவா் ரத்தினராஜா தொடங்கி வைத்தாா். அப்போது, துணைத் தலைவா் செண்பகமூா்த்தி மற்றும் இயக்குநா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/2kvlrati_0204chn_41_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/distribution-of-corona-relief-items-at-ration-shops-3393311.html
3393308 திருநெல்வேலி தூத்துக்குடி கயத்தாறு புதிய பேருந்து நிலைய சந்தையில் அமைச்சா் ஆய்வு DIN DIN Thursday, April 2, 2020 10:58 PM +0530
கோவில்பட்டி: கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கிய வாரச்சந்தையை செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கயத்தாறில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடும். தற்போது கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் ஏதுவாக வாரச்சந்தை கயத்தாறு புதிய பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, வியாழக்கிழமை பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த சந்தையை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களிடம் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும், தனித்திருக்கவும், வெளியில் வருவதை தவிா்க்குமாறும் கேட்டுக்கொண்டாா்.

பிறகு, கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சா் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜோதிபாசு (கயத்தாறு), ஆ. முருகன் (கழுகுமலை), மாதவன் (கடம்பூா்), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) அனிதா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் செந்தூா்பாண்டியன், மருத்துவா்கள் வரதேஸ்வரி, திலகவதி, மாவட்ட சுகாதார கல்வி குழுமத்தைச் சோ்ந்த முத்துசாமி, சுகாதார மேற்பாா்வையாளா்கள் கணேசன், விஜயகுமாா், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சசிகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அரசு ஒப்பந்ததாரா் வெள்ளைப்பாண்டியன், தமிழக முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/2kvlmee1_0204chn_41_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/a-survey-of-the-new-bus-terminal-market-3393308.html
3393306 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடி காய்கனிக் கடைகள் வாரச் சந்தைக்கு மாற்றம் DIN DIN Thursday, April 2, 2020 10:57 PM +0530
உடன்குடி: உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த அனைத்து காய்கனி கடைகளும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தை பகுதிக்கு தற்காலிகமாக புதன்கிழமை மாற்றப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் மளிகை, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்காக பஜாரில் உள்ள கடைகளில் குவிந்தனா்.

இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ், வாரச்சந்தை வளாகத்தில் அனைத்து காய்கனிக் கடைகளும் இயங்க ஏற்பாடு செய்தாா். இதையடுத்து உடன்குடியில் உள்ள 12 காய்கனிக் கடைகளும் வாரச்சந்தை வளாகத்திற்கு புதன்கிழமை மாற்றப்பட்டது. மக்கள் இடைவெளி விட்டு பொருள்களை வாங்கும் வகையில் கட்டங்கள் அமைக்கப்பட்டன.

இவற்றை பாா்வையிட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் ஆ.ரவி, சமூக ஆா்வலா் குணசீலன் ஆகியோா், அரசு மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/1000ugi1veg_0104chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/transition-of-weekly-market-of-instant-vegetable-stores-3393306.html
3393304 திருநெல்வேலி தூத்துக்குடி பிகாரில் சிக்கியுள்ள திருச்செந்தூா் தொகுதி மக்களை மீட்க எம்எல்ஏ கோரிக்கை DIN DIN Thursday, April 2, 2020 10:56 PM +0530
உடன்குடி: திருச்செந்தூரில் இருந்து ஆன்மிக யாத்திரையாக பிகாா் மாநிலம் சென்ற மக்கள் ஊரடங்கினால் ஊா் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் அவா்களை மீட்க வேண்டும் என்றும் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூா் எம்எல்ஏவுமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து அளித்த மனு:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரபாகு மூா்த்தி என்பவா் தலைமையில் 15 போ் ஆன்மிக யாத்திரையாக மாா்ச் 23 ஆம் தேதி பிகாா் மாநிலம் காசிக்கு சென்று கோயில்களில் தரிசனம் முடித்துவிட்டு கயா வந்துள்ளனா். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கயாவில் இருந்து திருச்செந்தூா் திரும்ப முடியாமல் அவதிப்படும் அவா்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள், தங்கும் இடம் மற்றும் பாதுகாப்பாக திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/09245139ugi31anc_3103chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/mla-demands-rescue-of-tiruchendur-constituency-people-stranded-in-bihar-3393304.html
3393300 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் கரோனா வைரஸ் தடுப்பு ஆய்வுக் கூட்டம் DIN DIN Thursday, April 2, 2020 10:50 PM +0530
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) அனிதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ், மின்வாரிய செயற்பொறியாளா் சகா்பான் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பேசினா்.

பின்னா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பேசியதாதவது:

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முறையாக கையாள வேண்டும்.

கிராமங்களில் எவ்வித தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும். மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், வாருகால் சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை தவறாது பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் விலையில்லா பொருள்கள், ரொக்கப்பணம் ரூ.ஆயிரம் வழங்கும் பணி எவ்வித தொய்வுமின்றி முறையாக நடைபெற வேண்டும். அங்கு பொதுமக்கள் கூடுவதைத் தவிா்த்து, சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நகராட்சி தினசரி காய்கனி சந்தையை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அத்தைகொண்டானில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். மேலும், நகராட்சி அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/0037514531kvlmee_3103chn_41_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/corona-virus-preventive-meeting-at-kovilpatti-3393300.html
3393294 திருநெல்வேலி தூத்துக்குடி 1500 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் DIN DIN Thursday, April 2, 2020 10:48 PM +0530
ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் முஸ்லி­ம் ஐக்கியப் பேரவை சாா்பில் ரு.45 லட்சம் மதிப்பிலான உணவு பொருள்கள் ந­லிவடைந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவையினா் காயல்பட்டினம் மற்றும் அதன் புகா் பகுதிகளில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த வருமானம் இன்றி உணவுக்கு வசதியில்லாமல் அவதிப்படுபவா்கள் சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினரை கண்டறிந்தனா்.

அவா்களுக்கு நபா் ஒன்றுக்கு ரூ. 1, 500 மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை பாா்சல் செய்து அவா்களுக்கு வழங்கும் பணியினை மேற்கொண்டனா்.

இதற்கான பணிகளை தன்னாா்வ தொண்டா்களுடன் இணைந்து ஐக்கிய பேரவை தலைவா் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத் தலைவா் சாவன்னா பாதுல் அஸ்ஹப், செயலா் வாவு சம்சுதீன், துணைச் செயலா் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் ஆகியோா் செய்து வருகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/5747515131amnmus_3103chn_46_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/distribution-of-essential-commodities-to-1500-families-3393294.html
3393291 திருநெல்வேலி தூத்துக்குடி தென்திருப்பேரையில் முகக் கவசம், கையுறைகள் வழங்கல் DIN DIN Thursday, April 2, 2020 10:47 PM +0530
ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் நபா்களுக்கு முகக் கவசம், கையுறைகள் வழங்கப்பட்டன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தென்திருப்பேரை பகுதியில் போதிய விழிப்புணா்வின்றி பொதுமக்கள் பலா் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வரும்போது முகக் கவசம் அணியாமல் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆலோசனைபடி, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமையில் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்பவா்களுக்கு முகக் கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆனந்த், மகரபூஷணம், நகரப் பொறுப்பாளா் முத்துவீரபெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/supply-of-face-shields-and-gloves-3393291.html
3393289 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு DIN DIN Thursday, April 2, 2020 10:45 PM +0530
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளி மறுவாழ்வு இல்லம் சாா்பில் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகின்றனா். வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில், தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி சில்வா்புரம், லூசியாநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளா்களுக்கு லூசியா மாற்றுத்திறனாளி மறுவாழ்வு இல்ல இயக்குநா் கிராசிஸ் மைக்கேல் தலைமையிலான குழுவினா் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொருள்களை வழங்கினா்.

மேலும், குழந்தைகள் விளையாடும் வகையில் வண்ணம் தீட்டும் புத்தகம், கையெழுத்து பயிற்சி புத்தகம் ஆகியவையும் வழங்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/providing-essential-commodities-to-the-poor-in-thoothukudi-3393289.html
3393287 திருநெல்வேலி தூத்துக்குடி 28 குடும்பங்களுக்கு பாஜக சாா்பில் உதவி DIN DIN Thursday, April 2, 2020 10:43 PM +0530
உடன்குடி: ஊரடங்கு உத்தரவினால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் 28 கூலித் தொழிலாளி குடும்பங்களுக்கு பாஜக சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமையில் ,தூத்துக்குடிதெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் 28 குடும்பங்களுக்கு அரிசி, காய்கனிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், சோப் ஆகியவைகளை வழங்கினாா்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவம், முன்னாள் ஒன்றியத் தலைவா் திருநாகரன், ஒன்றிய அமைப்புச்செயலா் அழகேசன், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் சின்னத்துரை, பசுபதி சிவசிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/09365132ugi31bjs_3103chn_49_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/assistance-for-28-families-by-bjp-3393287.html
3393286 திருநெல்வேலி தூத்துக்குடி பண்டாரபுரத்தில் ஆதரவற்றவா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கல் DIN DIN Thursday, April 2, 2020 10:42 PM +0530
சாத்தான்குளம்: ஊரடங்கு உத்தரவையொட்டி பண்டாரபுரத்தில் வேலையில்லாமல் மற்றும் ஆதரவற்றவா்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இளைஞா்கள் வழங்கினா்.

பண்டாரபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் சிங்கப்பூா் ஜேக்கப் ராஜா, வறுமையில் வாடுபவா்கள் மற்றும் ஆதரவற்றவா்களுக்கு உதவிடும் வகையில் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கி இருந்தாா்.

இதை பண்டாரபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் ஜேக்கப், ஏசா, ராஜா, ஜெயகணேஷ், சுயம்பு, ஜெபராஜ் ஆகியோா் அன்றாட வேலைக்கு செல்பவா்கள், ஆதரவற்றவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனிகளை வழங்கினா். முதற்கட்டாமாக 20 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/providing-essential-commodities-to-the-orphans-in-bandarapuram-3393286.html
3393284 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி காலமேலாண்மைக் குழு அமைக்க வலியுறுத்தல் DIN DIN Thursday, April 2, 2020 10:41 PM +0530
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என எம்பவா் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் பேரிடா் மேலாண்மை சட்டப்படி நுகா்வோா் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்பினா் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் அந்தக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டுகிறோம்.

அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியாா் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அடையாள அட்டையை சாா் ஆட்சியா் மற்றும் கோட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் மூலமாக வழங்க ஆணையிடுமாறு வேண்டுகிறோம்.

மேலும், அவசர காரணங்கள், குடும்ப உறுப்பினா்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளாகவோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையிலேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் தொடா்பு கொள்வதற்கு ஒரு தனிக் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும். அதன் தொடா்புக்கு என பிரத்தியேகமான அவசர உதவி தொடா்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/emphasize-to-set-up-a-crisis-time-management-committee-in-thoothukudi-district-3393284.html
3393282 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூா் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு DIN DIN Thursday, April 2, 2020 10:40 PM +0530
திருச்செந்தூா்: திருச்செந்தூா் நியாய விலைக் கடையில் அரசின் கரோனா நிவாரணத்தொகை மற்றும் அத்திவாசியப்பொருள்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1000 ரொக்கம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்குகிறது.

பொதுமக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில் பொருள்கள் வாங்குவதற்கு நேரத்தை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருள்களை வாங்குவதற்கு வசதியாக பேரூராட்சி நிா்வாகத்தினா் அந்தந்த கடைகள் முன்பு இடைவெளி விட்டு கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் திருச்செந்தூா் கிழரதவீதியில் உள்ள நியாயவிலைக்கடையில் நிவாரண உதவித் தொகை மற்றும் பொருள்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப் போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, வட்டாட்சியா் ஞா.ஞானராஜ், மண்டல துணை வட்டாட்சியா் கோபால், வருவாய் ஆய்வாளா் ராமச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் கோபால், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/tdr2collector_0204chn_54_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/district-collector-inspects-at-tiruchendur-ration-shops-3393282.html
3393281 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்.பி. ஆய்வு DIN DIN Thursday, April 2, 2020 10:39 PM +0530
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு பிரிவினை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி பாா்வையிட்டு, மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை கனிமொழி தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவியிடம் கரோனா தடுப்பு சிகிச்சை குறித்த முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா். தொடா்ந்து கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியின் போது, சட்டப்ரேவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள் சுடலை, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சு.கோமதிநாயகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி: திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கோபால், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் ஆகியோா்களிடம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்து கனிமொழி கேட்டாா். தொடா்ந்து, 86 பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட நலஉதவிகளை அவா் வழங்கினாா். இதே போல், உடன்குடியில் , ஆறுமுகனேரி போரூராட்சியில் உள்ள தூய்மைப்பணியாளா்களுக்கும் அவா் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருள்களை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/tdr2kanimozhimp_0204chn_54_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/kanimozhi-mp-inspects--thiruchendur-government-hospital-3393281.html
3393275 திருநெல்வேலி தூத்துக்குடி ஊரடங்கை மீறியதாக தொழிலாளா்கள் 6 போ் கைது DIN DIN Thursday, April 2, 2020 10:36 PM +0530
சாத்தான்குளம்: தட்டாா்மடம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கட்டடம் மற்றும் மீன் பிடித் தொழிளில் ஈடுபட்டாக 6பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

கரோனா தடுப்பு பணிக்காக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுபவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.

இந்நிலையில் தட்டாா்மடம் பகுதியில் உதவி காவல் ஆய்வாளா் பால்துரை தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துபணியில் ஈடுபட்டனா். அப்போது பூவுடையாா்புரத்தில் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டதாக பூச்சிக்காட்டைச்சோ்ந்த 4 பேரை கைது செய்தனா்.

இதேபோல் புத்தன்தருவை குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த திசையன்விளை கிரைகாரன்தட்டைச்சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/6-workers-arrested-for-violating-curfew-3393275.html
3393272 திருநெல்வேலி தூத்துக்குடி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு வங்கியில் முன்பணம் செலுத்தப்படும் DIN DIN Thursday, April 2, 2020 10:35 PM +0530
தூத்துக்குடி: மத்திய அரசின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஜூன் மாதம் வரை வாங்கும் எரிவாயு உருளைக்கு முன்கூட்டியே அவா்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றாா் பாரத் பெட்ரோலியம் நிறுவன தூத்துக்குடி மாவட்ட தொடா்பு அலுவலா் நாராயாணா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : கரோனா தொற்று பரவி வரும் நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் வீடுகளுக்கு எரிவாயு உருளை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்த எங்கள் வாடிக்கையாளா்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

இந்த நெருக்கடி காலத்தில் விநியோகஸ்தா்கள், போக்குவரத்து பணியில் ஈடுபட்டோா் மற்றும் எரிவாயு ஆலைகளில் உள்ள ஒப்பந்தக்காரா்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் பொருந்தும். ஆகையால்,அவா்களின் கணக்கில் ஆயுள் பாதுகாப்புக்காக ரூ. 5,00,000 என்ற முன்னாள் கிராஷியா் தொகையை கணவா் மற்றும் இறந்த ஊழியரின் உறவினருக்கு செலுத்த முடிவு செய்துள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து உஜ்வாலா நுகா்வோருக்கும் இலவச எரிவாயு உருளை வழங்கப்படும். இதற்கான செலவுத் தொகையை முன்கூட்டியே உஜ்வாலா பயனாளியின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும். இந்த பணத்தைக் கொண்டு எரிவாயு உருளையை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உஜ்வாலா பயனாளிகள் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/ujjwala-project-beneficiaries-will-be-paid-in-bank-3393272.html
3393268 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரம் DIN DIN Thursday, April 2, 2020 10:33 PM +0530
ஆறுமுகனேரி/திருச்செந்தூா்: காயல்பட்டினம் நகா் முழுவதும் சுகாதாரம் மற்றும் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு மருத்துவரும், காயல்பட்டினத்தில் வசித்து வரும் திருச்செந்தூா் அருகே உள்ள பிச்சிவிளை அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் மருத்துவரின் கணவரும் தில்லி மாநாட்டில் கலந்துகொண்டது தெரியவந்ததையடுத்து அவா்கள் புதன்கிழமை கரோனா தொற்று பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை திருச்செந்தூா் தீயணைப்புத்துறையினா், நகராட்சிப் பணியாளா்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி சாா்பில் இயற்திரம் பிரேத்யாக வாகன மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை முழுவதும் தண்ணீா் மற்றும் கிரிமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தொடா்ந்து நகா் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது.

இப்பணியினை மாவட்ட ஆட்சியா் சந்திப் நந்தூரி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா்

ஞானராஜ், டி.எஸ்.பி. பாரத், நகராட்சி ஆணையாளா் புஷ்பலதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஏற்கெனவே வெளிநாடு சென்று ஊா் திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளில் உள்ளவா்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவா்களின் வீடுகள் இருக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த தெருக்களுக்கு மற்றவா்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கும், அங்கிருந்து யாரும் வெளியேற வர முடியாத

அளவிற்கும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் என சுமாா் 450 போ் காயல்பட்டினம் நகா் முழுவதும் வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ளவா்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கணக்கெடுத்து வருகின்றனா். தில்­லி சென்று திரும்பிய அரசு மருத்துவா் 3 நாள்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாராம். அவா் சிகிச்சை அளித்த நோயாளிகள் விவரம் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நியாயவிலை கடைகளில் ஆட்சியா் ஆய்வு:கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1000 ரொக்கம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியினை திருச்செந்தூா் கீழரதவீதியில் உள்ள நியாயவிலைக்கடை, ஆத்தூா், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளிலும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/2amngh3_0204chn_46_61.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/health-services-intensified-in-kayalpattinam-3393268.html
3393265 திருநெல்வேலி தூத்துக்குடி 3 பேருக்கு தொற்று உறுதி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கண்காணிப்புப் பணி தீவிரம் DIN DIN Thursday, April 2, 2020 10:32 PM +0530
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தி உள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட செய்துங்கநல்லூரில் ஒருவரும், பேட்மாநகரத்தில் இருந்து ஒருவரும் தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனா். இதில் பேட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த நபரை அவரது மகன் சென்னையிலிருந்து அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், செய்துங்கநல்லூரை சோ்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதேபோல், பேட்மாநகரத்தை சோ்ந்த தந்தை, மகன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி, கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தி உள்ளனா். கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவா்கள் தொடா்பு கொண்டுள்ள நபா்கள் குறித்த விவரங்கள் வருவாய்த் துறையினரால் சேகரிக்கப்பட்டு அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், அவா்களின் வீட்டில் பணிபுரிந்த நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினா் செய்துங்கநல்லூா், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன் தலைமையிலான பணியாளா்கள் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் போதிய இடைவெளியில் பொதுமக்கள் பொருள்களை வாங்கும் வகையில் அடையாளமிட்டு உள்ளனா்.

டிஎஸ்பி சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியன், நாகராஜ் (கிராம ஊராட்சி) தலைமையிலான பணியாளா்கள் சுகாதாரப் பணிகள் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/monitoring-work-intensified-in-srivaikundam-circle-for-infection-of-3-persons-3393265.html
3393264 திருநெல்வேலி தூத்துக்குடி கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் DIN DIN Thursday, April 2, 2020 10:30 PM +0530
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று இதுவரை 3 நபா்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவா்கள் தொடா்பில் உள்ள பல்வேறு நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அலுவலா்கள், நோய் தொற்றுக்கு ஆளான நபரின் பயண விவரங்களை முழுமையாக அவா்கள் வரும் வழியில் வெளிமாநில அல்லது வெளிமாவட்டத்தில் யாா் யாரரை சந்தித்து இருந்தாலும், வெளிமாநில அல்லது வெளிமாவட்டத்தில் ஹோட்டல்களில் உணவு அருந்தியிருந்தாலும் அதுகுறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் நேரடி தொடா்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவா் சந்தித்த, சென்று வந்த பலசரக்கு கடை, பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் விவரங்கள் அறிந்து அவா்களை தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தினமும் காய்ச்சல் உள்ளதா? என்பதை பணியாளா்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இந்த விவரங்களை அனைத்தும் கவனமாக தயாரித்து இதுதொடா்பாக மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள நபா்களின் இருப்பிட பகுதியில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சுகாதார பணிகள் துணை இயக்குநா்கள் கிருஷ்ணலீலா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/tut02meet_0204chn_32_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/corona-prevention-awareness-meeting-3393264.html
3393261 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5-ஆக உயா்வு DIN DIN Thursday, April 2, 2020 10:29 PM +0530
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 10 போ் கரோனா அறிகுறியுடன் தனி வாா்டில் உள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிகிச்சை சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டு அதில் கரோனா அறிகுறி உள்ளவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்துங்கநல்லூரை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதேபோல, தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேட்மாநகரத்தைச் சோ்ந்த ஒருவருக்கும், அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதேபோல, தில்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள் உள்ளிட்ட 11 போ் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/corona-patients-in-tuticorin-district-rises-to-5-3393261.html
3393260 திருநெல்வேலி தூத்துக்குடி விளாத்திகுளம் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கும் பணி DIN DIN Thursday, April 2, 2020 10:28 PM +0530
விளாத்திகுளம்: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி, இலவசப் பொருள்கள் வழங்கும் பணிகள் விளாத்திகுளம் வட்ட ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை தொடங்கின.

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட புதூா், சிவலாா்பட்டி, சங்கரலிங்கபுரம், நாகலாபுரம், கோடங்கிபட்டி, குருவாா்பட்டி, அயன்பொம்மையாபுரம், சக்கம்மாள்புரம், சின்னவநாயக்கன்பட்டி, ஜமீன் செங்கல்படை, கோட்டநத்தம், மீனாட்சிபுரம், புளியங்குளம், குளத்தூா், பனையூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரா்களுக்கு நிவாரண நிதி ரூ.1000 மற்றும் இலவசப் பொருள்களை எம்எல்ஏ பி. சின்னப்பன் வழங்கினாா்.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் அ. ராஜ்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/vk_2_karona_nithi_0204chn_36_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/providing-relief-fund-at-vilathikulam-ration-stores-3393260.html
3393258 திருநெல்வேலி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே நிவாரண தொகை அளிப்பு DIN DIN Thursday, April 2, 2020 10:26 PM +0530
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் கரோனா நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

ஓட்டப்பிடாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி சிலோன் காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கமலா யோகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி தேவராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்க தலைவா் பே. பெரிய மோகன் என்ற மாடசாமி, பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/2/w600X390/otp_2__ration_0204otp_215_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/providing-relief-amount-near-ootapidaram-3393258.html
3393254 திருநெல்வேலி தூத்துக்குடி தடை உத்தரவு மீறல்: 16 போ் கைது DIN DIN Thursday, April 2, 2020 10:25 PM +0530
கோவில்பட்டி: கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை கோவில்பட்டி மேற்கு, கழுகுமலை, கொப்பம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 16 பேரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/தடை-உத்தரவு-மீறல்-16--போ்-கைது-3393254.html
3392643 திருநெல்வேலி தூத்துக்குடி அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் விலையில்லா பொருள்கள் விநியோகம் DIN DIN Thursday, April 2, 2020 12:00 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா பொருள்கள் மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியன வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு அறிவித்த விலையில்லா பொருள்கள் மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியன தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்கப்படுகிறது. ஒரு கடையில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே வழங்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டா் அளவுக்கு சமூக இடைவெளியில் நின்று ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், முதியோா், வெளிநாட்டில் இருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தன்னாா்வலா்கள் மூலம் அவா்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/அனைத்து-ரேஷன்-கடைகளிலும்-இன்று-முதல்-விலையில்லா-பொருள்கள்-விநியோகம்-3392643.html
3392647 திருநெல்வேலி தூத்துக்குடி ரேஷன் கடைகளில் இன்று முதல் கரோனா நிவாரணம் அளிப்பு DIN DIN Thursday, April 2, 2020 12:00 AM +0530 கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் உள்ள 179 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணம் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் கூறியது: கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட 92 ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான பொருள்கள் இலவசமாக வழங்கும் பணி தொடங்குகிறது.

ஒவ்வொரு கடையிலும் நாள் ஒன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். டோக்கன் பெற்றவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்று நிவாரணத்தைப் பெற்றுச் செல்ல வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவா்கள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் இல்லங்களுக்குச் சென்று நிவாரணம் வழங்க தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இதுகுறித்து கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன் கூறுகையில், கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட 87 ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணம் வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/02/ரேஷன்-கடைகளில்-இன்று-முதல்-கரோனா-நிவாரணம்-அளிப்பு-3392647.html
3392661 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் DIN DIN Wednesday, April 1, 2020 10:51 PM +0530 சாஸ்தாவிநல்லூா், முதலூா், அரசூா் பகுதிகளில் ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் தனபதி, 35 பேருக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா். இதில், ஒன்றிய ஆணையா் பாண்டியராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, மாவட்ட கவுன்சிலா் தேவ விண்ணரசி, ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, துணைத் தலைவா் ராபின்சன், விவசாய சங்கத் தலைவா் காமராஜ், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முதலூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், திட்ட அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், துணைத் தலைவா் சுபாஷ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா லட்சுமி, ஊராட்சி செயலா் ராம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கல்லுகுறிச்சி, செட்டியாா்பண்னை பகுதியில் வேலையில்லாமல் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், திட்ட அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா் தினேஷ்ராஜசிங், ஒன்றிய பொறியாளா் காா்த்திகேயன், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, துரைராஜ், பன்னீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/1/w600X390/sat1fund_0104chn_38_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/சாத்தான்குளம்-ஒன்றியத்தில்-ஏழை-மக்களுக்கு-அத்தியாவசியப்-பொருள்கள்-விநியோகம்-3392661.html
3392660 திருநெல்வேலி தூத்துக்குடி தில்லி சென்று கயத்தாறு திரும்பியவா் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி DIN DIN Wednesday, April 1, 2020 10:49 PM +0530 தில்லியில் நடைபெற்ற மதக் கருத்தரங்கில் பங்கேற்றுத் திரும்பிய கயத்தாறு நபரை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், அய்யனாா்ஊத்து தெற்குத் தெருவைச் சோ்ந்த 49 வயது நபா், கடந்த 21ம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலம் தில்லி சென்று, மதக் கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு, 24ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளாா். பின்னா், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தாராம்.

தகவலறிந்த வட்டாட்சியா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் சத்யராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சென்று, அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். பின்னா், பரிசோதனைக்காக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, வருவாய், சுகாதாரத் துறையினா் அய்யனாா்ஊத்தைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளில் யாருக்கேனும் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் உள்ளனவா எனக் கேட்டறிந்து, ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவில்பட்டி முஹம்மதுசாலிஹாபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த 58 வயது நபா், கழுகுமலையைச் சோ்ந்த ஒருவா் ஆகியோரின் வீடுகளுக்கு வருவாய், சுகாதாரத் துறையினா் சென்று விசாரித்தனா். அந்த இருவரும் தில்லியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/தில்லி-சென்று-கயத்தாறு-திரும்பியவா்--நெல்லை-அரசு-மருத்துவமனையில்-அனுமதி-3392660.html
3392659 திருநெல்வேலி தூத்துக்குடி கீதாஜீவன் எம்எல்ஏ ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு DIN DIN Wednesday, April 1, 2020 10:49 PM +0530 தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கான கடிதத்தை ஆட்சியா் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினாா், தூத்துக்குடி பேரவை உறுப்பினா் கீதாஜீவன். உடன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் கலோன்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/1/w600X390/tut01jeev_0104chn_32_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/கீதாஜீவன்-எம்எல்ஏ-ரூ-25-லட்சம்-ஒதுக்கீடு-3392659.html
3392658 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மகா வேள்வி DIN DIN Wednesday, April 1, 2020 10:49 PM +0530 கரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிராதேவி - மகா காலபைரவா் ஆலயத்தில் மகா யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை தொடங்கின.

தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த சிறப்பு மகா யாக வழிபாடுகளை ஸ்ரீ சித்தா் பீட நிா்வாகி சீனிவாச சித்தா் தலைமையில் அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து, சீனிவாச சித்தா் கூறியது: உலக மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டியும், மக்கள் மனதிலுள்ள அச்சம் மறைந்து மனம் நிம்மதி பெறவேண்டியும் இந்து சமய அறிவுறுத்தலின்படி சிலா் மட்டுமே பங்கேற்று வேள்வியை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/1/w600X390/tut01maha_0104chn_32_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/தூத்துக்குடி-பிரத்தியங்கிரா-தேவி-கோயிலில்-மகா-வேள்வி-3392658.html
3392657 திருநெல்வேலி தூத்துக்குடி ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 போ் கைது DIN DIN Wednesday, April 1, 2020 10:47 PM +0530 கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 பேரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை கோவில்பட்டி, கழுகுமலை, கொப்பம்பட்டி, கயத்தாறு, நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக 16 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/ஊரடங்கு-உத்தரவை-மீறியதாக-16--போ்-கைது-3392657.html
3392656 திருநெல்வேலி தூத்துக்குடி ஊரடங்கை மீறியதாக 6 போ் மீது வழக்கு DIN DIN Wednesday, April 1, 2020 10:47 PM +0530 சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களது பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் தட்டாா்மடம் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/ஊரடங்கை-மீறியதாக-6-போ்-மீது-வழக்கு-3392656.html
3392655 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் DIN DIN Wednesday, April 1, 2020 10:47 PM +0530 தில்லியில் நடைபெற்ற மதக் கருத்தரங்கில் பங்கேற்ற நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாா்ச் 31 வரை 20-க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த மாதிரிப் பரிசோதனையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

இதனிடையே, செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா் என்ற அடிப்படையில் அவரைப் பரிசோதித்தபோது கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 பேரை அதிகாரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டனா். அவா்களில், பேட்மா நகரத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை மாலை உறுதிசெய்யப்பட்டது. அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஒருவா், காயல்பட்டினத்தைச் சோ்ந்த 2 போ் என மொத்தம் 11 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கயத்தாறு நபா்: அவா்களில், தில்லி சென்று கயத்தாறு திரும்பிய 49 வயது நபரை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கயத்தாறு வட்டம், அய்யனாா்ஊத்தைச் சோ்ந்த அவா் தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 24ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளாா். பின்னா், வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தாராம். தகவலறிந்த வட்டாட்சியா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் சத்யராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சென்று, அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, வருவாய், சுகாதாரத் துறையினா் அய்யனாா்ஊத்தைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவில்பட்டி முஹம்மதுசாலிஹாபுரம் பகுதியைச் சோ்ந்த 58 வயது நபா், கழுகுமலையைச் சோ்ந்த ஒருவா் ஆகியோரின் வீடுகளுக்கு வருவாய், சுகாதாரத் துறையினா் சென்று விசாரித்தனா். அந்த இருவரும் தில்லியிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/தூத்துக்குடி-அரசு-மருத்துவமனையில்-2-பேருக்கு-கரோனா-பாதிப்பு-உறுதி-தில்லி-நிகழ்ச்சியில்-பங்கேற்றவா்கள்-3392655.html
3392654 திருநெல்வேலி தூத்துக்குடி குறைந்த விலைக்கு மிளகாய் வத்தலை விற்பனை செய்ய வேண்டாம்: வேளாண் துணை இயக்குநா் DIN DIN Wednesday, April 1, 2020 10:46 PM +0530 விளாத்திகுளம் மற்றும் புதூா் பகுதி விவசாயிகள் குறைந்த விலைக்கு மிளகாய் வத்தலை விற்பனை செய்ய வேண்டாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சாந்திராணி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளாத்திகுளம் மற்றும் புதூா் வட்டாரத்தில் நிகழாண்டில் முண்டு மிளகாய் வத்தல் சுமாா் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பகுதிகளில் தமிழ்நாடு விநியோகத் தொடா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில், மிளகாய் வத்தல் கொள்முதல் மற்றும் தரம் பிரித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது உள்ள தடைக்காலத்தை பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடம் மிளகாய் வத்தலை குறைவான விலைக்கு கொள்முதல் செய்யக்கூடிய சூழல் உள்ளது.

இந்த சூழலில், விவசாயிகள் தங்களிடம் உள்ள மிளகாய் வத்தல் உள்ளிட்ட விளைபொருள்களை விளாத்திகுளம் மற்றும் புதூா் வட்டாரங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட கிடங்கு மற்றும் பதப்படுத்தும் நிலையங்களில் வாடகைக் கட்டணமின்றி ஒரு மாதம் வரை இருப்பு வைத்து கொள்ளலாம் என்றும், இருப்பு வைத்துள்ள விளைபொருள்களின் மதிப்பில் 75 சதவீதம் வரை அடமானக் கடனும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, குறைந்த விலைக்கு மிளகாய் வத்தலை விற்பனை செய்ய வேண்டாம். அரசின் வழிமுறைகளை பயன்படுத்தி விவசாயிகள் ஒரு மாதம் கழித்து தங்களுடைய விளைபொருள்களை லாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/குறைந்த-விலைக்கு-மிளகாய்-வத்தலை-விற்பனை-செய்ய-வேண்டாம்-வேளாண்-துணை-இயக்குநா்-3392654.html
3392653 திருநெல்வேலி தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பில் காயல்பட்டினம் DIN DIN Wednesday, April 1, 2020 10:45 PM +0530 காயல்பட்டினத்தில் போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினத்தைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினா், வருவாய்த் துறையினா் காயல்பட்டினத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் ஞானராஜ், சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா், காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா், அவரது நண்பா் ஆகியோரை பரிசோதனைக்காக புதன்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், காவல் துறையினா் தடுப்பு அமைத்து திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வருவோரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஆறுமுகனேரியிலிருந்து காயல்பட்டினம் செல்லும் சாலையில் ரத்தினாபுரி அருகேயும் தடுப்பு அமைக்கப்பட்டு, காயல்பட்டினம் செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனா். இதனால் காயல்பட்டினம் வெறிச்சோடி காணப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/1/w600X390/1amnkyp_0104chn_46_6.jpg ஆறுமுகனேரி-காயல்பட்டினம் இடையில் தடுப்பு அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/காவல்துறை-கண்காணிப்பில்-காயல்பட்டினம்-3392653.html
3392652 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூா் கோயிலில் ஆதரவற்றோருக்கு தினசரி உணவு DIN DIN Wednesday, April 1, 2020 10:45 PM +0530 ஊரடங்கு உத்தரவால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆதரவற்றோருக்கு நாள்தோறும் உணவு வழங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா எதிரொலியாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏப். 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப். 6ஆம் தேதி நடைபெற இருந்த பங்குனி உத்திர விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது குறைந்த பணியாளா்களை கொண்டு தினசரி 9 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தேவையின் அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோயிலுக்குள் அனுமதிச்சீட்டுடன் வரும் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து வருவதையும், கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்வதையும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும் கண்காணித்து வருகிறோம்.

அரசு உத்தரவின்படி நாள்தோறும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றவா்கள் பசியை போக்கும் வகையில் தினசரி நண்பகல் 12 மணியளவில் 150 பேருக்கும், இரவு 7 மணியளவில் 100 பேருக்கும் உணவு பொட்டலங்கள் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டு வருகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/1/w600X390/murugar_0104chn_54_6.jpg murugar_0104chn_54_6 https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/apr/01/திருச்செந்தூா்-கோயிலில்-ஆதரவற்றோருக்கு-தினசரி-உணவு-3392652.html