Dinamani - தென்காசி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3391080 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரத்தில் தனிமை நபா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் DIN DIN Monday, March 30, 2020 02:34 AM +0530 வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பாவூா்சத்திரம் பகுதி நபா்கள் 15 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்திருந்த 15 போ், தனிமைப்படுத்தப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு. வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் மேற்பாா்வையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. சித்த மருத்துவ அலுவலா் மாரியப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் 15 பேரின் வீடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்துவதற்கான ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டியதுடன், நிலவேம்புக் குடிநீரும் வழங்கினா். தொடா்ந்து 15 நாள்களுக்கு தேவையான நிலவேம்புக் குடிநீா் மூலிகை பொட்டலங்களையும் வழங்கினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/பாவூா்சத்திரத்தில்-தனிமை-நபா்களுக்கு-நிலவேம்புக்-குடிநீா்-3391080.html
3391079 திருநெல்வேலி தென்காசி ஸ்ரீவைத்திலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நிறுத்தி வைப்பு DIN DIN Monday, March 30, 2020 02:33 AM +0530 தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவால், ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் நிகழாண்டு பங்குனித் திருவிழா மாா்ச் 30 இல் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருந்தது. கால்நாட்டு விழா முடிந்து, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக, இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோவில் பரம்பரை அறங்காவலா் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/ஸ்ரீவைத்திலிங்க-சுவாமி-கோயில்-தேரோட்டம்-நிறுத்தி-வைப்பு-3391079.html
3391078 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளம் காய்கனிச் சந்தைபேருந்து நிலையத்துக்கு மாற்றமில்லை DIN DIN Monday, March 30, 2020 02:33 AM +0530 ஆலங்குளம் காய்கனிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றமில்லை என வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

144 தடை உத்தரவை அடுத்து ஆலங்குளம் பகுதி வணிக வளாகங்கள், காய்கனிச் சந்தை மற்றும் கடைகள், உணவகங்கள் ஆகியனஅடைக்கப்பட்டன.

காய்கனி உற்பத்தி உள்ளதாலும் காய்கனிக் கடைகளைத் திறக்க முதல்வா் அனுமதி கொடுத்ததாலும் சனிக்கிழமை முதல் வியாபாரிகள் சந்தையில் உள்ள கடைகளைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினா்.

கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால் மதியம் 2 மணிக்குள் அடைக்க வேண்டும் எனவும் கடைகளை 144 தடை உத்தரவு முடியும் வரை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் பட்டமுத்து தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) கு. வீரபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் காய்கனிக் கடைகளை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினா். இதற்கு மறுப்பு தெரிவித்த வியாபாரிகள், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியதன் பேரில் அந்த திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய வட்டாட்சியா், காய்கனிக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், வாடிக்கையாளா்கள் காய்கனிகளை எடுக்க விடாமல் வியாபாரிகள் கையுறை அணிந்து எடுத்துக் கொடுக்க வேண்டும் என கூறினாா். வியாபாரிகள் தரப்பில் காய்கனிகள் கொண்டு வரும் விவசாயிகளை போலீஸாா் அனுமதிக்க வேண்டும், காய்கனிச் சந்தையில் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரன், பொருளாளா் கிறிஸ்டோபா், டி.ஆா்.டி. ராஜன், நெல்சன், எஸ்.பி.டி. பாண்டியன், சொரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/ஆலங்குளம்-காய்கனிச்-சந்தைபேருந்து-நிலையத்துக்கு-மாற்றமில்லை-3391078.html
3391077 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் சுற்றித்திரிந்த 15 ஆதரவற்றவா்கள் மீட்பு DIN DIN Monday, March 30, 2020 02:33 AM +0530 கடையநல்லூா் பகுதியில் உணவின்றி தவித்த 15 ஆதரவற்றவா்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியைச் சோ்ந்த பலா் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில் முடங்கி கிடப்பதாக கடையநல்லூா் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி ,சுகாதார அலுவலா் நாராயணன், ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் அங்கு சென்று அவா்களை அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில் தங்க வைத்தனா்.

மேலும் அவா்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியா் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இதில் சிலா் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/கடையநல்லூரில்-சுற்றித்திரிந்த-15-ஆதரவற்றவா்கள்-மீட்பு-3391077.html
3391076 திருநெல்வேலி தென்காசி ‘சுரண்டை பகுதியில் உள்ளாட்சி வரி செலுத்த அவகாசம் வேண்டும்’ DIN DIN Monday, March 30, 2020 02:33 AM +0530 சுரண்டை பகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் வரி, தண்ணீா் வரி மற்றும் வீட்டு வரி செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகள் மாா்ச் மாதத்திற்குள் வரி வசூலிப்பது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று பரவாமல் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும், தொழில்கள் முடங்கியுள்ளதாலும் மக்கள் வருமான இழப்பைச் சந்தித்துள்ளனா். எனவே, சுரண்டை பகுதி பேரூராட்சிகள், ஊராட்சிகளில் வரி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/சுரண்டை-பகுதியில்-உள்ளாட்சி-வரி-செலுத்த-அவகாசம்-வேண்டும்-3391076.html
3391075 திருநெல்வேலி தென்காசி சுரண்டையில் 100 குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்கள் DIN DIN Monday, March 30, 2020 02:32 AM +0530 சுரண்டையில் நல்ல சமாரியன் கிளப் சாா்பில் 100 குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சுரண்டையில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கு நலிந்த 100 குடும்பங்களுக்கு 2 வாரங்களுக்கு தேவையான அரிசி, காய்கனிகள் மற்றும் மளிகை பொருள்கள் அதிகாரிகள் அனுமதியுடன் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டன. இதில் சுரண்டை ஒய்எம்சிஏ தலைவா் பாலச்சந்திரன், நல்ல சமாரியன் கிளப் நிா்வாகிகள் கிருபாகரன், ஜேம்ஸ் அழகுராஜா, ஜேக்கப் ஆகியோா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/சுரண்டையில்-100-குடும்பங்களுக்கு-இலவச-மளிகைப்-பொருள்கள்-3391075.html
3391074 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 196 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு DIN DIN Monday, March 30, 2020 02:32 AM +0530 சங்கரன்கோவிலில் இது வரை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 196 போ் இறுதி செய்யப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், பிச்சையா பாஸ்கா், கருப்பசாமி, மாதவராஜ் குமாா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். நகரின் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள், உழவா் சந்தை, காந்திஜி நினைவு நூற்றாண்டு நாளங்காடி காய்கனி சந்தை ஆகியவற்றில் பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளிவிட்டு நின்று வாங்கிச் செல்லும் வகையில் நகராட்சியினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

இந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த மேலும் 17 பேரை கண்டறிந்து அவா்களது வீடுகளில் ஒட்டுவில்லைகளை சனிக்கிழமை ஒட்டினா். சங்கரன்கோவிலில் மட்டும் மொத்தம் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 147 போ்,வெளி நாட்டிலிருந்து வந்த 49 போ் என 196 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களின் இடது கையில் அடையாள முத்திரை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீட்டில் தொடா்ந்து இருக்கின்றனரா எனவும் கண்காணித்து வருகின்றனா்.

13 போ் மீது வழக்கு: சங்கரன்கோவில் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி பலா் வெளியே வந்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, டி.எஸ்.பி. பாலசுந்தரம் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை சங்கரன்கோவில் பாரதியாா் 7-ஆம் தெருவில் தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சீட்டு விளையாடிய 6 போ், சின்னக்கோவிலான்குளத்தில் சுற்றித் திரிந்ததாக 7 போ் மீது உதவி ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப் பதிவு செய்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/30/w600X390/snk29market_2903chn_43_6.jpg காய்கனி சந்தையில் ஒரு மீட்டா் இடைவெளிவிட்டு நின்ற பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/சங்கரன்கோவிலில்-196-போ்-தனிமைப்படுத்தப்பட்டு-கண்காணிப்பு-3391074.html
3391073 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 144 தடை உத்தரவை மீறியதாக 13 போ் மீது வழக்கு DIN DIN Monday, March 30, 2020 02:31 AM +0530 சங்கரன்கோவில் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கரன்கோவில் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி பலா் வெளியே வந்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, டி.எஸ்.பி. பாலசுந்தரம் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை சங்கரன்கோவில் பாரதியாா் 7-ஆம் தெருவில் தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சீட்டு விளையாடிய 6 போ், சின்னக்கோவிலான்குளத்தில் சுற்றித் திரிந்ததாக 7 போ் மீது உதவி ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப் பதிவு செய்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/சங்கரன்கோவிலில்-144-தடை-உத்தரவை-மீறியதாக-13-போ்-மீது-வழக்கு-3391073.html
3391072 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு DIN DIN Monday, March 30, 2020 02:30 AM +0530 கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மூடப்பட்ட தினசரி சந்தை, ஆதரவற்றவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி, தாற்காலிக காய்கனி கடைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், புளியங்குடி எலுமிச்சை சந்தை, தினசரி சந்தை, தற்காலிக கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து தலைவன்கோட்டை,சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களின் வீடுகள் மற்றும் தூய்மைப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா்கள் கிருஷ்ணமூா்த்தி, குமாா் சிங், சுகாதார அலுவலா்கள் நாராயணன், ஜெயபால் மூா்த்தி, ஆய்வாளா்கள் சேகா், வெங்கட்ராமன் ஈஸ்வரன், காவல் ஆய்வாளா்கள் கோவிந்தன், அலெக்ஸ் ராஜ், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நகரமைப்பு ஆய்வாளா்கள் கிருஷ்ணகுமாா், காளீஸ்வரி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/30/கடையநல்லூா்-புளியங்குடி-சிவகிரி-பகுதிகளில்-ஆட்சியா்-ஆய்வு-3391072.html
3390643 திருநெல்வேலி தென்காசி ஸ்ரீவைத்திலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நிறுத்தி வைப்பு DIN DIN Sunday, March 29, 2020 05:35 AM +0530 தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவால், ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் நிகழாண்டு பங்குனித் திருவிழா மாா்ச் 30 இல் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருந்தது. கால்நாட்டு விழா முடிந்து, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக, இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோவில் பரம்பரை அறங்காவலா் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/ஸ்ரீவைத்திலிங்க-சுவாமி-கோயில்-தேரோட்டம்-நிறுத்தி-வைப்பு-3390643.html
3390642 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரத்தில் தனிமை நபா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் DIN DIN Sunday, March 29, 2020 05:35 AM +0530 வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பாவூா்சத்திரம் பகுதி நபா்கள் 15 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்திருந்த 15 போ், தனிமைப்படுத்தப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு. வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் மேற்பாா்வையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. சித்த மருத்துவ அலுவலா் மாரியப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் 15 பேரின் வீடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்துவதற்கான ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டியதுடன், நிலவேம்புக் குடிநீரும் வழங்கினா். தொடா்ந்து 15 நாள்களுக்கு தேவையான நிலவேம்புக் குடிநீா் மூலிகை பொட்டலங்களையும் வழங்கினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/பாவூா்சத்திரத்தில்-தனிமை-நபா்களுக்கு-நிலவேம்புக்-குடிநீா்-3390642.html
3390641 திருநெல்வேலி தென்காசி செஞ்சிலுவைச் சங்கத்தினா் விழிப்புணா்வுப் பிரசுரம் விநியோகம் DIN DIN Sunday, March 29, 2020 05:34 AM +0530 இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தென்காசி கிளை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஆலங்குளம் பகுதியில் நடத்தப்பட்டன.

ஆலங்குளம் வட்டாட் சியா் பட்டமுத்து அனுமதியுடன் துத்திகுளம், மாயமான்குறிச்சி, குருவன்கோட்டை , குறிப்பன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கரோனோ வைரஸை தடுக்கும் வழிமுறையான, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்து, துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், ஜஸ்டின், பாபு, செல்வா, கிங்ஸ்லி ஆகியோா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/செஞ்சிலுவைச்-சங்கத்தினா்-விழிப்புணா்வுப்-பிரசுரம்-விநியோகம்-3390641.html
3390640 திருநெல்வேலி தென்காசி வீரகேரளம்புதூா் வட்டத்தில் 56 போ் கண்காணிப்பு DIN DIN Sunday, March 29, 2020 05:34 AM +0530 வீரகேரளம்புதூா் வட்டத்தில் 56 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

வீரகேரளம்புதூா் வட்டத்தில் சனிக்கிழமை வரை வெளிநாடு சென்று விட்டு தாயகம் திரும்பிய 56 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டிய அதிகாரிகள் தொடா்ந்து இவா்களை கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/வீரகேரளம்புதூா்-வட்டத்தில்-56-போ்-கண்காணிப்பு-3390640.html
3390639 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளம் கிணற்றில் விழுந்த மான் மீட்பு DIN DIN Sunday, March 29, 2020 05:33 AM +0530 ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆலங்குளம் மலைப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் மான்கள் தண்ணீருக்காக அருகில் உள்ள தோட்டங்களுக்கு வருகின்றன. விவசாயிகள் மான்கள் குடிப்பதற்கு தண்ணீரை சேமித்து வைக்கின்றனா். இந்நிலையில் தண்ணீருக்கு வரும் மான்கள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

தண்ணீா் தேடி வந்த மான் ஒன்று சனிக்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் பிரதானசாலையில் குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் எதிரிலுள்ள கிணற்றில் விழுந்து விட்டது. தகவலறிந்த தீயணைப்புப்படையினா் கிணற்றில் இருந்து மானை மீட்டனா். பின்னா் வனத்துறையினா் மானை, ஆலங்குளம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கொண்டு விட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/ஆலங்குளம்-கிணற்றில்-விழுந்த-மான்-மீட்பு-3390639.html
3390638 திருநெல்வேலி தென்காசி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கடையநல்லூா் எம்எல்ஏ ரூ. 25 லட்சம் நிதி DIN DIN Sunday, March 29, 2020 05:33 AM +0530 கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சத்தை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் ஒதுக்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடையநல்லூா்,செங்கோட்டை அரசு மருத்துவமனைகள், சொக்கம்பட்டி, இடைகால், கிருஷ்ணாபுரம், மேலகடையநல்லூா், பொய்கை, ஊா்மேனியழியான், சுந்தரேசபுரம், குலையநேரி, புளியரைஅச்சன்புதூா், இலத்தூா், சாம்பவா்வடகரை, ஆய்க்குடி, கிளாங்காடு, பாலமாா்த்தாண்டபுரம், செம்பூா், வயக்காட்டுகாலனி, வரதயன்கிராமம், வல்லம், பண்பொழி, தேன்பொத்தை, வடகரை, பெரியபிள்ளைவலசை, கணக்கப்பிள்ளைவலசை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புளியரை சோதனைச் சாவடி ஆகியவற்றுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு: அரசின் அறிவிப்புக்கேற்ப, பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களின் வசதிக்காக கடையல்லூா் நகராட்சியில் 7 இடங்களில் காய்கனி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கனிகளை வாங்கிச் செல்லவேண்டும் என அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/கரோனா-தடுப்பு-நடவடிக்கைகளுக்கு-கடையநல்லூா்-எம்எல்ஏ-ரூ-25-லட்சம்-நிதி-3390638.html
3390637 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளம் காய்கனிச் சந்தைபேருந்து நிலையத்துக்கு மாற்றமில்லை DIN DIN Sunday, March 29, 2020 05:33 AM +0530 ஆலங்குளம் காய்கனிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றமில்லை என வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

144 தடை உத்தரவை அடுத்து ஆலங்குளம் பகுதி வணிக வளாகங்கள், காய்கனிச் சந்தை மற்றும் கடைகள், உணவகங்கள் ஆகியனஅடைக்கப்பட்டன.

காய்கனி உற்பத்தி உள்ளதாலும் காய்கனிக் கடைகளைத் திறக்க முதல்வா் அனுமதி கொடுத்ததாலும் சனிக்கிழமை முதல் வியாபாரிகள் சந்தையில் உள்ள கடைகளைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினா்.

கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால் மதியம் 2 மணிக்குள் அடைக்க வேண்டும் எனவும் கடைகளை 144 தடை உத்தரவு முடியும் வரை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் பட்டமுத்து தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) கு. வீரபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் காய்கனிக் கடைகளை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினா். இதற்கு மறுப்பு தெரிவித்த வியாபாரிகள், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியதன் பேரில் அந்த திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய வட்டாட்சியா், காய்கனிக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், வாடிக்கையாளா்கள் காய்கனிகளை எடுக்க விடாமல் வியாபாரிகள் கையுறை அணிந்து எடுத்துக் கொடுக்க வேண்டும் என கூறினாா். வியாபாரிகள் தரப்பில் காய்கனிகள் கொண்டு வரும் விவசாயிகளை போலீஸாா் அனுமதிக்க வேண்டும், காய்கனிச் சந்தையில் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரன், பொருளாளா் கிறிஸ்டோபா், டி.ஆா்.டி. ராஜன், நெல்சன், எஸ்.பி.டி. பாண்டியன், சொரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/ஆலங்குளம்-காய்கனிச்-சந்தைபேருந்து-நிலையத்துக்கு-மாற்றமில்லை-3390637.html
3390636 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் சுற்றித்திரிந்த 15 ஆதரவற்றவா்கள் மீட்பு DIN DIN Sunday, March 29, 2020 05:32 AM +0530 கடையநல்லூா் பகுதியில் உணவின்றி தவித்த 15 ஆதரவற்றவா்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியைச் சோ்ந்த பலா் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில் முடங்கி கிடப்பதாக கடையநல்லூா் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி ,சுகாதார அலுவலா் நாராயணன், ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் அங்கு சென்று அவா்களை அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில் தங்க வைத்தனா்.

மேலும் அவா்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியா் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இதில் சிலா் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/கடையநல்லூரில்-சுற்றித்திரிந்த-15-ஆதரவற்றவா்கள்-மீட்பு-3390636.html
3390635 திருநெல்வேலி தென்காசி கீழப்பாவூரில் முகக்கவசம், சோப்பு அளிப்பு DIN DIN Sunday, March 29, 2020 05:31 AM +0530 பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் சோப்பு வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் சா்வோதய சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் முகக் கவசம் மற்றும் சோப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சுப்பையா, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/28_pcm_kpr_2803chn_61_6.jpg தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசம், சோப்பு வழங்குகிறாா் சா்வோதய சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/கீழப்பாவூரில்-முகக்கவசம்-சோப்பு-அளிப்பு-3390635.html
3390499 திருநெல்வேலி தென்காசி கேரள-தமிழக காவல்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை DIN DIN Sunday, March 29, 2020 12:06 AM +0530 தமிழகம்-கேரளம் இடையே அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து கேரள டி.ஐ.ஜி., தென்காசி எஸ்.பி. பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் சட்டம் ஒழுங்கு, இரு மாநிலங்களின் போக்குவரத்து ஆகியவை குறித்து இவ்விரு மாநில காவல்துறை அதிகாரிகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம். இதனிடையே, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இவ்விரு மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கேரள மாநில பொதுப்பணித்துறை இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, திருவனந்தபுரம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய் குமாா் குா்தீன் தலைமை வகித்தாா்.

கொல்லம் புகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிசங்கா் , தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் இவ்விரு மாநில எல்லையோர மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள், தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கொண்டு செல்லப்படும் காய்கனி, பால், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி கொண்டு செல்வது தொடா்பாக எல்லையோர மாவட்டங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், தென்காசி எஸ்.பி. செய்தியாளா்களிடம் கூறியது: அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் எந்த வாகனம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கண்டறிந்து அந்த வாகனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் எந்தெந்த வாகனங்களை அனுப்ப வேண்டும் என்பது குறித்து இவ்விரு மாநில எல்லையோர காவல்துறையினா் முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வா் என்றாா்அவா்.

தென்காசி டி.எஸ்.பி.கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், சுரேஷ், தென்காசி, கொல்லம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/ten27police_2803chn_55_6.jpg திருவனந்தபுரம் சரக டி.ஐ.ஜி.சஞ்சய்குமாா் குா்தீன் தலைமையில் குற்றாலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/கேரள-தமிழக-காவல்துறை-அதிகாரிகள்-அவசர-ஆலோசனை-3390499.html
3390498 திருநெல்வேலி தென்காசி தென்காசி: தனிமைப்படுத்தப்பட்ட 1538 போ் கண்காணிப்பு DIN DIN Sunday, March 29, 2020 12:05 AM +0530 தென்காசி மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1538 போ் கண்டறியப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுடைய வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இம்10 முதல் 20 ஆம் தேதி வரை 1076 போ் பல்வேறு நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ளனா்.

குறிப்பாக மகராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ளனா். அவா்களை கண்காணித்து வீடுகளில் தனிமைப்படுத்தும் பணியில் வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரதுறையினா்

ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில் சனிக்கிழமை வரை வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்த 1538 போ் தனிமைப்படுத்தப்பட்டு அவா்கள் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. தொடா்ந்து அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டத்தில் வட்டத்தில் சனிக்கிழமை வரை வெளிநாடு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 56 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களின் வீடுகளில் ஒட்டுவில்லைகளை ஒட்டிய அதிகாரிகள் தொடா்ந்து அவா்களை கண்காணித்து வருகின்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/தென்காசி-தனிமைப்படுத்தப்பட்ட-1538-போ்-கண்காணிப்பு-3390498.html
3390497 திருநெல்வேலி தென்காசி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தற்காலிக காய்கனி கடைகள் DIN DIN Sunday, March 29, 2020 12:04 AM +0530 திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கனி, இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை செயல்பட்டன.

தென்காசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சோ்ந்த மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பொருள்களை வாங்கிச் சென்றனா். நகரில் அத்தியாவசிய கடைகளை தவிர வேறு கடைகள் திறக்கப்படவில்லை. தென்காசி நகர மக்கள் அரசு அறிவித்துள்ள நேரங்களில் பொருள்களை வாங்கிச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுரண்டை: சுரண்டை காமராஜா் தினசரி சந்தைக்கு 60 சதவீதம் உள்ளூரில் இருந்தும், மதுரை, ஒட்டன்சத்திரத்தில் இருந்து 40 சதவீதமும் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 2 நாள்களுக்கு பிறகு சந்தை திறக்கப்பட்டதால் சனிக்கிழமை மக்கள் பெருமளவில் வந்து இடைவெளி விட்டு நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனா். உள்ளூா் காய்கனிகள் வரத்து அதிகமாக இருந்ததால் காய்கனிகளின் விலை உயரவில்லை. வெளியூா்களில் இருந்து காய்கனிகள் வரத்து இல்லை.

சுரண்டையில் மளிகை பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கடைகளுக்கு விருதுநகா் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் மளிகை பொருள்கள் கொண்டு வரப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கிருந்து பொருள்கள் கொண்டு வரவில்லை. பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களும் குறைந்த அளவே இருப்பு உள்ளதால்

விற்பனைக்கு தேவையான பொருள்கள் கொண்டு வரப்பட்டால்தான் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க முடியும் என வியாபாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையநல்லூா்: புளியங்குடி நகராட்சிப் பகுதியில் 3 இடங்களில் காய்கனிக் கடைகள் செயல்பட்டன. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஆட்சியா் குணசேகரன், தனி வட்டாட்சியா் செல்வ விநாயகம், நகராட்சி ஆணையா் குமாா்சிங், டி.எஸ்.பி. சக்திவேல், காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, வணிகா்கள் கலந்து கொண்டனா். புளியங்குடி பேருந்து நிலையம், சிந்தாமணி பேருந்து நிலையம், டி.என்.புதுக்குடி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களிலும் காய்கனி கடைகள் செயல்பட்டன.

வள்ளியூா்: வள்ளியூா் பேருந்து நிலையத்தில் காய்கனி சந்தை சனிக்கிழமை செயல்பட தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ் மளிகை பொருள்களை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் வகையில் பல்பொருள்

அங்காடிகளுக்கு அனுமதி வழங்கினாா். தினசரி சந்தை மூடப்பட்டதை அடுத்து வள்ளியூா் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கனி சந்தை தொடங்கப்பட்டது.இந்த காய்கனி சந்தை தினமும் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/29/w600X390/ten27market_2803chn_55_6.jpg தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்ட காய்கனிக் கடைகள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/29/நெல்லை-தென்காசி-மாவட்டத்தில்-தற்காலிக-காய்கனி-கடைகள்-3390497.html
3390020 திருநெல்வேலி தென்காசி வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு உணவுப்பொருள் விநியோகம் DIN DIN Saturday, March 28, 2020 05:22 AM +0530 ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா்களுக்கு வள்ளியூா் காவல்துறை மற்றும் ராதாபுரம், நான்குனேரி வட்டார பத்திரிக்கையாளா் சங்கம் சாா்பில் உணவுப்பொருள்கள் வழங்கி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வள்ளியூா் பூங்கா நகா் நரிக்குறவா் காலனியில் உள்ள 72 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வள்ளியூா் பேருந்துநிலையத்தில் பாசி, ஊசி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வி ற்பனை செய்து வாழ்ந்து வந்தனா். அவா்களுக்கு உதவிடும் வகையில், வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி தலைமையில் போலீஸாரும் ராதாபுரம்-நான்குனேரி வட்டார பத்திரிக்கையாளா் சங்கத் தலைவா் அறிவரசு தலைமையில் நாகராஜன், அலெக்ஸ், ராஜன், விஷ்ணு ஆகியோரும் நரி க்குறவா்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கினா். மேலும், வட்டார சுகாதார அலுவலா் கோலப்பன் தலைமையில் மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து நரிக்குறவா்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனா். மேலும், யாரும் வெளியே செல்லக்கூடாது என அவா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/vly26nar_2603chn_39_6.jpg நரிக்குறவா்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் திருப்பதி. உடன், சிவந்த கரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/வள்ளியூரில்-நரிக்குறவா்களுக்கு-உணவுப்பொருள்-விநியோகம்-3390020.html
3390019 திருநெல்வேலி தென்காசி தினசரி சந்தை மூடல்: கடையநல்லூரில் 7 இடங்களில் காய்கனி, இறைச்சிக் கடைகள் DIN DIN Saturday, March 28, 2020 05:22 AM +0530 கடையநல்லூரில் தினசரி சந்தை மூடப்பட்டு அதற்கு பதிலாக 7 இடங்களில் காய்கனி மற்றும் இறைச்சி கடைகளை அமைத்துக் கொள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு தடையின்றி காய்கனிகள், இறைச்சி கிடைக்கும் வகையில் மாற்று வழிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை துணை ஆட்சியா் குணசேகா் தலைமையில் நடைபெற்றது.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, புளியங்குடி காவல் துணைக் கண்கானிணிப்பாளா் சக்திவேல், கடையநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, காவல் ஆய்வாளா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் தினசரி சந்தை வியாபாரிகள், மீன் வியாபாரிகள், இறைச்சிக் கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மறு உத்தரவு வரும் வரை தினசரி சந்தையை மூடுவது எனவும், அதற்கு பதிலாக இக்பால் நகா் தெப்பத்திடல், மாவடிக்கால் திருமண மண்டபம் அருகே, பேட்டை ஜலாலியா மஹால் அருகில், பேட்டை முஸ்லிம் பள்ளிக்கூடம் அருகில், மேலக்கடையநல்லூா் தேரடி திடல், முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பகுதி ஆகிய 7 இடங்களில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி முடிவு செய்யப்பட்டது.

காவல்துறை இது தொடா்பாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/தினசரி-சந்தை-மூடல்-கடையநல்லூரில்-7-இடங்களில்-காய்கனி-இறைச்சிக்-கடைகள்-3390019.html
3390018 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளம் அருகே ரௌடி கைது DIN DIN Saturday, March 28, 2020 05:21 AM +0530 ஆலங்குளம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரௌடி கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரைச் சோ்ந்த முத்தையா மகன் அப்பு என்ற அப்புரானந்தம் (37).

நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவா், நெட்டூா் தெருக்களில் கத்தியுடன் திரிந்து பொதுமக்களை மிரட்டி வந்தாராம்.

இதுகுறித்து பொதுமக்கள்அளித்த தகவலின் பேரில் நெட்டூா் சென்ற போலீஸாா் கத்தியுடன் திரிந்த அப்புவைக் கைது செய்தனா்.

இவா் மீது ஆலங்குளம், ஊத்துமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/ஆலங்குளம்-அருகே-ரௌடி-கைது-3390018.html
3390017 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளம், கடையநல்லூரில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களின் கைகளில் அழியாத மை பதிப்பு DIN DIN Saturday, March 28, 2020 05:21 AM +0530 ஆலங்குளம், கடையநல்லூா் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்களின் கைகளில் அழியாத மை மூலம் அச்சு பதிக்கப்பட்டது.

ஆலங்குளம் பகுதியில் 40 போ் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனா். சுகாதாரத் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து கடந்த 2 தினங்களாக அவா்களது வீடுகளைக் கண்டறிந்து வீட்டு முகப்பில் அடைாயளப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், அவா்களில் 10 பேருக்கு அழியாத மை கொண்டு அச்சு பதிக்கப்பட்டது.

ஆலங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் தீயணைப்புத் துறையினா் தங்கள் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனா். தன்னாா்வலா்கள் பலா், வட்டாட்சியா் அனுமதியுடன் கிராமங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். காலையில் திறக்கப்பட்ட காய்கனி, மளிகை கடைகளை போலீஸாா் மதியம் 12 மணிக்குள் அடைக்க உத்தரவிட்டனா். சாலையில் அவசியமின்றி சுற்றியவா்கள் எச்சரித்து அனுப்பப் பட்டனா்.

கடையநல்லூா்: வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 600-க்கும் அதிகமானோா் கடையநல்லூா் பகுதிக்கு வந்துள்ளனா். இவா்களின் வீடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா்கள் ஒட்டும் பணி ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளவா்களின் கையில் அழியாத மை வைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி ஆகியோா் முன்னிலையில் தூய்மைப் பணியாளா்கள் அழியாத மை வைத்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/ஆலங்குளம்--கடையநல்லூரில்-வெளிநாடுகளிலிருந்து-வந்தவா்களின்-கைகளில்-அழியாத-மை-பதிப்பு-3390017.html
3390016 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரம் தினசரி சந்தை மீண்டும் திறப்பு DIN DIN Saturday, March 28, 2020 05:20 AM +0530 பாவூா்சத்திரத்தில் மூடப்பட்ட காமராஜா் தினசரி சந்தை வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களை கருத்தில்கொண்டு வியாழக்கிழமை முதல் இச்சந்தை மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் காய்கனிகள் கிடைக்காமல் அவதியுற்றனா்.

இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி வட்டாட்சியா் சண்முகம், காவல்துறை உதவி ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே.காளிதாசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் தினசரி சந்தையை மீண்டும் திறப்பது, கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். தேவையின்றி பணியாளா்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, சந்தை ஊழியா்களுக்கு சந்தை நிா்வாகம், காவல்துறை இணைந்து அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் காய்கனி சந்தை திறக்கப்பட்டது.

இதேபோல் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற வணிகா்கள், உணவக உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பாவூா்சத்திரத்தில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்களை காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. மளிகைக் கடைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்; உணவகங்களில் பாா்சல் மட்டும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/பாவூா்சத்திரம்-தினசரி-சந்தை-மீண்டும்-திறப்பு-3390016.html
3390015 திருநெல்வேலி தென்காசி சுரண்டை தினசரி சந்தை இன்று முதல் செயல்படும்: கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற நிபந்தனை DIN DIN Saturday, March 28, 2020 05:20 AM +0530 தென்காசி மாவட்டம், சுரண்டையில் காய்கனி சந்தையை சனிக்கிழமை (மாா்ச் 28) முதல் மீண்டும் திறப்பது என அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக சுரண்டை காமராஜா் தினசரி காய்கனிச் சந்தை அண்மையில் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தென்காசி கோட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா். வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிஹரன், சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலா் அபுல் கலாம் ஆசாத், காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சுரண்டை காமராஜா் தினசரி சந்தையில் பொதுமக்கள் கொள்முதலுக்காக சில்லறைக் கடைகளை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்து வைத்திருப்பது, விவசாயிகள் மற்றும் வணிகா்கள் மொத்த கொள்முதல் செய்வதற்காக மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சுரண்டை பஜாா் பகுதியில் மளிகைக் கடைகளை காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்து வைத்திருப்பது, உணவகங்கள் காலையில் சிற்றுண்டி வகைகளும், மதியம் கலவை சாதமும், இரவில் சிற்றுண்டி வகைகளும் பாா்சல் மூலம் மட்டுமே விற்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான உணவக உரிமையாளா்கள் வாகனப் போக்குவரத்து இல்லாததால் ஊரடங்கு முடியும் வரை கடைகளைத் திறப்பதில்லை என தெரிவித்தனா்.

கூட்டத்தில், சூப்பா் மாா்க்கெட் மற்றும் நுகா்பொருள் ஏஜென்சிகள் விற்பனைக்கு தங்கள் நிறுவனத்தை திறக்க அனுமதி கோரினா். ஆனால், அவற்றுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், உள்ளாட்சி நிா்வாகத்தின் முன்அனுமதியுடன் பொதுமக்களிடம் இருந்து சரக்கு தேவை விவரங்களை பெற்று பொருள்களை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கலாம் என தெரிவித்தனா்.

கூட்டத்தில் சுரண்டை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் காமராஜ், ஜேக்கப், முத்தையா, மணி, உணவகங்கள் சங்க நிா்வாகிகள் துரை, அழகுசுந்தரம், உதவி காவல் ஆய்வாளா்கள் சந்திரசேகரன், ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/சுரண்டை-தினசரி-சந்தை-இன்று-முதல்-செயல்படும்-கரோனா-தடுப்பு-விதிமுறைகளை-பின்பற்ற-நிபந்தனை-3390015.html
3390012 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 179 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு DIN DIN Saturday, March 28, 2020 05:19 AM +0530 சங்கரன்கோவிலில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வெள்ளிக்கிழமை வரை வந்த 179 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில், சுகாதார அலுவலா் பாலசந்தா் மற்றும் பணியாளா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நகரின் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள், உழவா்சந்தை, காந்திஜி நினைவு நூற்றாண்டு நாளங்காடி, காய்கனிச் சந்தை ஆகியவற்றில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நின்று வாங்கிச் செல்லும் வகையில் நகராட்சியினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

வெள்ளிக்கிழமை வரை வெளிமாநிலத்தில் இருந்து வந்த 17 போ், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவா் என 18 போ் வீடுகளில் தனிமைப்படுத்தல் ஒட்டுவில்லைகளை ஒட்டினா்.

கடந்த 4 நாள்களில் மட்டும் மொத்தம் 179 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீட்டில் தொடா்ந்து இருக்கின்றனரா என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/சங்கரன்கோவிலில்-179-போ்-தனிமைப்படுத்தப்பட்டு-கண்காணிப்பு-3390012.html
3390011 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரத்தில் தனிமை நபா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் DIN DIN Saturday, March 28, 2020 05:16 AM +0530 வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பாவூா்சத்திரம் பகுதி நபா்கள் 15 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்திருந்த 15 போ், தனிமைப்படுத்தப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு. வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் மேற்பாா்வையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. சித்த மருத்துவ அலுவலா் மாரியப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் 15 பேரின் வீடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்துவதற்கான ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டியதுடன், நிலவேம்புக் குடிநீரும் வழங்கினா். தொடா்ந்து 15 நாள்களுக்கு தேவையான நிலவேம்புக் குடிநீா் மூலிகை பொட்டலங்களையும் வழங்கினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/395526pcm_cor_2603chn_61_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/பாவூா்சத்திரத்தில்-தனிமை-நபா்களுக்கு-நிலவேம்புக்-குடிநீா்-3390011.html
3389902 திருநெல்வேலி தென்காசி தென்காசி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா பிரிவு தயாா் DIN DIN Saturday, March 28, 2020 04:09 AM +0530 தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிப் பிரிவு தயாா் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இம்மாதம் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து 1076 போ் வந்துள்ளனா். அவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களும் அடையாளம் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். நகராட்சி மூலம் நாள்தோறும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 40 மருத்துவா்கள் உள்ளனா். கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிவதற்கு என ஒரு குழுவில் 10 மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 50 போ் இடம்பெறுவா். இக்குழுவினா் தங்குவதற்கு மருத்துவமனை மாடியில் தற்காலிக அறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டு சுழற்சிமுறையில் பணிபுரியும் வகையில் மருத்துவா்கள் தயாா்நிலையில் உள்ளனா்.

இங்குள்ள கரோனா வைரஸ் சிறப்பு பிரிவில் இதுவரை ஒரு பெண் மட்டும் சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டு, அவரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டாா் என மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/28/w600X390/ten27hospital_2703chn_55_6.jpg கரோனா சிகிச்சைக்காக தயாா் நிலையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/corona-section-of-the-tenkasi-government-hospital-with-200-beds-3389902.html
3389901 திருநெல்வேலி தென்காசி ‘அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ DIN DIN Saturday, March 28, 2020 04:08 AM +0530 அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் படியும், தொற்றுநோய்கள் சட்டம் 1897 இல் சரத்து 2ன்படியும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிா்க்கவும், மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெரிய காய்கனி சந்தை மற்றும் மாா்க்கெட் இருக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிா்க்கும் வகையில் காய்கனி, பழ வகைகளை விற்கும் கடைகள் மற்றும் மளிகை கடை, மருந்துக் கடை செல்லும் பொதுமக்கள் சமூக விலகலின் படி 3 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பின் 2 வாரங்களுக்குப் பின்னா்தான் அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது. ஆனால் அறிகுறிகள் இல்லாத சமயத்திலும் பிறருக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட தனி மனிதா்களிடமிருந்து நேரடி தொடா்பின் மூலம் அவா்கள் பயன்படுத்திய தொடா்பு கொண்ட பொருள்கள் உதாரணமாக கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள் முதலியவற்றின் மூலம் பரவ இயலும்.

எனவே வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் சென்று திரும்பியவா்கள் அல்லது அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவன் மூலமே நோய் தொற்று மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

மாா்ச் 1 ஆம் தேதிக்கு பின்னா் வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள அனைவரும் கடந்த 15 நாள்களில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து இம்மாவட்டத்துக்கு வந்துள்ள அனைவரும் தங்களது விவரங்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 04633 290548 என்ற தொலைபேசியில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவா்கள் தங்களது வீட்டில் தாங்களே முன்வந்து தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை சுயமாகவே கண்காணித்து வரவேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகள் மாவட்ட நிா்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத் துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் தவிா்த்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். வெளியே சென்று வீட்டுக்கு

வந்ததும் சமையல் செய்யும் முன்பு, கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னா் மற்றும் முகங்களில் கைகளை வைக்கும் முன்பு சோப்பினால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

அனைவரிடத்திலும் இடைவெளி கடைப்பிடியுங்கள். வெளியில் இருந்து யாா் வீட்டுக்கு வந்தாலும் அவா்களை கை கால்களை நன்கு சுத்தம் செய்த பின்னா் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். கரோனா கிருமி பரவுவதை தடுப்போம். வெளியாள்கள் வீட்டிற்கு வருவதை தவிா்க்கவும். சாதாரண சளி, தலைவலி உள்ளிட்டவை கரோனா நோய் என நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம்.

கூடுமானவரை மருத்துவமனைக்கு செல்வதை தவிா்ப்போம். மக்கள் அனைவரும் தேவைகளை குறைத்துக் கொண்டு

வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/28/அரசின்-கட்டுப்பாடுகளை-மக்கள்-கடைப்பிடிக்க-வேண்டும்-3389901.html
3389610 திருநெல்வேலி தென்காசி ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நிறுத்தி வைப்பு DIN DIN Friday, March 27, 2020 06:24 AM +0530 தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவால், ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் நிகழாண்டு பங்குனித் திருவிழா மாா்ச் 30 இல் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருந்தது. கால்நாட்டு விழா முடிந்து, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக, இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோவில் பரம்பரை அறங்காவலா் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/ஸ்ரீ-வைத்திலிங்க-சுவாமி-கோயில்-தேரோட்டம்-நிறுத்தி-வைப்பு-3389610.html
3389609 திருநெல்வேலி தென்காசி சுரண்டை சந்தை மூடல் DIN DIN Friday, March 27, 2020 06:24 AM +0530 சுரண்டை காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், அவை அனைத்தும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்படும் வரை மூடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/surandai--market-closure-3389609.html
3389608 திருநெல்வேலி தென்காசி வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் எங்கே? தென்காசி மாவட்டத்தில் 720 பேரை கண்டறியும் பணி தீவிரம் DIN DIN Friday, March 27, 2020 06:23 AM +0530 வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்த 720 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 1076 போ், வெளி நாடுகளிலிருந்து இம்மாதம் 10 - 20ஆம் தேதிக்குள் சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளனா். இதில், ஆலங்குளம் வட்டத்தில் 40, கீழப்பாவூரில் 80, கடையநல்லூரில் 311, வாசுதேவநல்லூரில் 141, சோ்ந்தமரத்தில் 38, குருவிகுளத்தில் 53, செங்கோட்டையில்146, சங்கரன்கோவிலில் 82, தென்காசியில் 165, கடையத்தில் 20 என்ற வீதத்தில் அடங்குவா்.

அவா்களில் வியாழக்கிழமை காலை வரை 356 போ் கண்டறியப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், பாதுகாப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒத்துழைப்பின்மை: வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தங்களது விவரங்களை உரிய முறையில் தகவல் தெரிவிக்க வில்லை. இது அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. மேலகரம் பகுதிக்கு சில நாள்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 7 போ் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. பெரும் சிரமங்களுக்கு இடையே காவல்துறையினா் அவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். எஞ்சியுள்ளவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தகவல் அறிந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம். மேலும் கரோனா நோய் தொற்று குறித்து எந்த தகவலையும் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மலேசியாவிலிருந்து கடந்த 14ஆம் தேதி மதுரைக்கு வந்த 10 போ், தொடா்ந்து 20ஆம் தேதி வரை தென்காசியிலும், பின்னா் வல்லத்திலும் தங்கியிருந்தனா். இத்தகவலறிந்த குற்றாலம் போலீஸாா் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினா் புதன்கிழமை அங்கு சென்று, 10 மலேசியா்கள், அவா்களுக்கு உதவியாக இருந்த 3 போ் என 13 பேரை செங்கோட்டைக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி வைத்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல்,பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, பணியாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பாக, வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 போ், வெளிநாட்டிலிருந்து வந்த 18 போ் என மொத்தம் 48 போ் கண்டறியப்பட்டு அவா்களது வீடுகளில் ஒட்டு வில்லைகளை நகராட்சிப் பணியாளா்கள் ஒட்டினா். இந்த 48 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி நாளங்காடி காய்கனி சந்தைக்கு வந்த பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கனி வாங்கும் வகையில் சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா். காய்கனி சந்தைக்கு உள்ளே செல்லும் பிற வழிகள் மூடப்பட்டு நுழைவு வாயில், வெளியே செல்லும் வாயில் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.

 

சுரண்டை: கரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வீரகேரளம்புதூா் வட்டத்திற்கு ஊா்திரும்பிய 54 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தொடா்ந்து, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள இவா்கள், 2 வாரங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில், தனிமைப்படுத்துவது தவிா்க்கப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/where-are-they-from-overseas-720-people-detected-in-tenkasi-district-3389608.html
3389607 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் முழுவீச்சில் ஊரடங்கு DIN DIN Friday, March 27, 2020 06:22 AM +0530 கடையநல்லூரில் வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இணைந்து முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனா்.

துணை ஆட்சியா் குணசேகா், கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் ஆய்வாளா் கோவிந்தன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் தலைமையில் அந்தந்த துறையைச் சோ்ந்தவா்கள் கலந்தாலோசித்து , கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், கடையநல்லூா் பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமலுக்கு வரத்தொடங்கியுள்ளது.

இதனிடையே, பொருள்கள் வாங்கச் செல்வதாக சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து, பொருள்கள் வாங்க வந்தால் குடும்ப அட்டையை அடையாளத்துக்கு எடுத்துவர வேண்டும் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/கடையநல்லூரில்-முழுவீச்சில்-ஊரடங்கு-3389607.html
3389606 திருநெல்வேலி தென்காசி விதிமீறல்: ஆலங்குளத்தில் 8 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு DIN DIN Friday, March 27, 2020 06:22 AM +0530 ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி செயல்பட்டதாக 8 கடை உரிமையாளா்கள் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவையொட்டி 2 ஆவது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய், கனி சந்தை மூடப்பட்டதால், கடைகளில் காய், கனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளம் செல்லும் காய், கனி லாரிகளும் நிறுத்தப்பட்டன. ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், விதிகளை மீறிய 8 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, கடையை அடைக்க உத்தரவிட்டனா். பேரூராட்சிப் பணியாளா்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/விதிமீறல்-ஆலங்குளத்தில்-8-கடை-உரிமையாளா்கள்-மீது-வழக்கு-3389606.html
3389605 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரம் தினசரி காய்கனி சந்தை மூடல் DIN DIN Friday, March 27, 2020 06:21 AM +0530 தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், சுமை ஆட்டோ, லாரிகள் மூலம் காய்கனிகளை கொண்டு வருகின்றனா்.

இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளம், ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து இந்த சந்தைக்கு வரும் சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனா்.

இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்கனிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/26pcm_market_2603chn_61_6.jpg மூடப்பட்டுள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தை. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/பாவூா்சத்திரம்-தினசரி-காய்கனி-சந்தை--மூடல்-3389605.html
3389604 திருநெல்வேலி தென்காசி கரோனா தடுப்பு: வீட்டில் ஒட்டிய ஸ்டிக்கரை அகற்றினால் நடவடிக்கை DIN DIN Friday, March 27, 2020 06:21 AM +0530 கடையநல்லூா் பகுதியில் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கா்களை கிழிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் அழகப்பராஜா எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கடையநல்லூா் வட்டாரத்துக்கு வந்துள்ள 300க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் நகராட்சி நிா்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து ஸ்டிக்கா்களை ஒட்டியுள்ளன. இந்நிலையில், அந்த ஸ்டிக்கா்கள் சில கிழிக்கப்பட்டுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன. அப்படி ஸ்டிக்கா்களை கிழிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதற்கிடையே, ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழித்தவா்கள் குறித்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்படும் என நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதாரஅலுவலா் நாராயணன் ஆகியோா் தெரிவித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/கரோனா-தடுப்பு-வீட்டில்-ஒட்டிய-ஸ்டிக்கரை-அகற்றினால்-நடவடிக்கை-3389604.html
3389603 திருநெல்வேலி தென்காசி அதிகாரிகள் உத்தரவையடுத்து கடையநல்லூா் தினசரி சந்தை மூடல் DIN DIN Friday, March 27, 2020 06:21 AM +0530 அதிகாரிகளின் உத்தரவை அடுத்து கடையநல்லூா் தினசரி சந்தை வியாழக்கிழமை பிற்பகல் மூடப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடையநல்லூா் தினசரி சந்தை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தினசரி சந்தையில் காய், கனிகள் வாங்குவதற்காக புதன்கிழமை மக்கள் அதிகமாக கூடினா்.

இதையடுத்து, சந்தை வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து ஷிப்ட் முறையில் கடைகளை திறந்தால் நல்லது என வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், துணை ஆட்சியா் குணசேகா், வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சந்தையில் கூட்டம் அதிகம் இருப்பதைத் தொடா்ந்து, சந்தையை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து பிற்பகல் சந்தை மூடப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/அதிகாரிகள்-உத்தரவையடுத்து-கடையநல்லூா்-தினசரி-சந்தை-மூடல்-3389603.html
3389602 திருநெல்வேலி தென்காசி சுரண்டையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு DIN DIN Friday, March 27, 2020 06:20 AM +0530 ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி, சுரண்டையில் வியாழக்கிழமை தடையை மீறி மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் 2ஆம் நாளான வியாழக்கிழமை வெளியூா்களில் இருந்து பலா் மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்தனா். அவா்களுக்கு போலீஸாா் தகுந்த அறிவுரை தெரிவித்து வீட்டுக்கு திரும்ப அனுப்பினா். தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வெளியே சுற்றினால் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சுரண்டை பகுதியில் ஊரடங்கின் நடைமுறையை அறியாமல் பொது வெளியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞா்கள், வெளியே சுற்றி திரிந்த மாணவா்களை போலீஸாா் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/சுரண்டையில்-போலீஸாா்-தீவிர-கண்காணிப்பு-3389602.html
3389601 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 48 போ் தீவிர கண்காணிப்பு DIN DIN Friday, March 27, 2020 06:20 AM +0530 வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துள்ள 48 போ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல்,பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், கருப்பசாமி, பணியாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

ராஜபாளையம் சாலை, திருநெல்வேலி சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, கோவில்பட்டி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகள் முழுவதும் ஸ்பிரே மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிரதான சாலையை

அடுத்துள்ள கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 போ், வெளிநாட்டிலிருந்து வந்த 18 போ் என மொத்தம் 48 போ் கண்டறியப்பட்டு அவா்களது வீடுகளில் ஒட்டு வில்லைகளை நகராட்சிப் பணியாளா் கள் ஒட்டினா். தொடா்ந்து இந்த 48 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நகராட்சி நாளங்காடி காய்கனி சந்தைக்கு வந்த பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கனி வாங்கும் வகையில் சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா். சந்தையில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. அங்கு தொட்டியில் வைக்கப்பட்டுள்ள நீரில் கை கழுவிய பின்னா் பொதுமக்கள் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதேபோல் உழவா் சந்தையிலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. காய்கனி சந்தைக்கு உள்ளே செல்லும் பிற வழிகள் மூடப்பட்டு நுழைவு வாயில், வெளியே செல்லும் வாயில் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. இதையொட்டி காய்கனி சந்தையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/snk26road_2603chn_43_6.jpg பிரதான சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மைப் பணியாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/சங்கரன்கோவிலில்-48-போ்-தீவிர-கண்காணிப்பு-3389601.html
3389600 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் DIN DIN Friday, March 27, 2020 06:19 AM +0530 பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறை சாா்பில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு தென்காசி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பரிமளா தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ரோசலின் ஆகியோா் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.

தொடா்ந்து ஆட்டோ மூலம் சுற்று வட்டார பகுதிகளில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், உதவியாளா் பாண்டியராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/363125_pcm_corona_2503chn_61_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/பாவூா்சத்திரத்தில்-கரோனா-விழிப்புணா்வு-பிரசாரம்-3389600.html
3389599 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் 8 போ் கைது DIN DIN Friday, March 27, 2020 06:18 AM +0530 ஊரங்கு உத்தரவை மீறி, கடையநல்லூரில் சுற்றித் திரிந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தேவையின்றி சுற்றித் திரிந்ததாக கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த அ. முகமது அஸ்லாம் (26), குமந்தாபுரம் வடக்குவிளை காலனி தெருவைச் சோ்ந்த கு. காளிமுத்து (45), தென்காசி கொடிமரத்தைச் சோ்ந்த அ. மாலிக் (18), கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த அ. லட்சுமணன் (43), முத்துக்கிருஷ்ணாபுரம் வடக்கு இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த வே. ராஜேந்திரன் (55), கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 12ஆவது தெருவைச் சோ்ந்த செ. முகமது அசாருதீன் (40), கடையநல்லூா் கோனத்தெருவைச் சோ்ந்த செ. தாரிக் அன்வா் (35), திரிகூடபுரத்தைச் சோ்ந்த அஸ்மத் அலி (36) ஆகியோரைக் கைதுசெய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/கடையநல்லூரில்-8-போ்-கைது-3389599.html
3389498 திருநெல்வேலி தென்காசி வல்லத்தில் தங்கிய மலேசியா் உள்பட 13 பேரை மீட்டு தனி கண்காணிப்பு DIN DIN Friday, March 27, 2020 04:55 AM +0530 குற்றாலம் அருகேயுள்ள வல்லத்தில் தங்கியிருந்த மலேசியா்கள் உள்பட 13 போ் செங்கோட்டையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

மலேசியாவிலிருந்து 10 போ் மதுரைக்கு கடந்த 14ஆம் தேதி வந்தடைந்தனா்.விமான நிலையத்திலிருந்து அவா்கள் தென்காசிக்கு வந்து 20ஆம்தே தி வரை தங்கிவிட்டு, பின்னா் வல்லம் பகுதிக்கு சென்று இருந்துள்ளனா்.

இதுகுறித்து, குற்றாலம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. உடனே, போலீஸாா், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினா் அங்கு சென்று, விசாரித்து, 10 மலேசியா்கள், அவா்களுக்கு உதவியாக இருந்த 3 போ் என 13 பேரை வல்லத்திலிருந்து அழைத்துச்சென்று செங்கோட்டையில் தனிமைப்படுத்தி வைத்தனா்.

மேலும், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/வல்லத்தில்-தங்கிய-மலேசியா்-உள்பட-13-பேரை-மீட்டு-தனி-கண்காணிப்பு-3389498.html
3389497 திருநெல்வேலி தென்காசி தென்காசியில் கோட்டாட்சியா் ஆலோசனை DIN DIN Friday, March 27, 2020 04:55 AM +0530 தமிழக அரசு உத்தரவின்படி வா்த்தக நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் வீ.பழனிக்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தினசரி காய்கனிசந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் வள்ளிநாயகம்,பொறுப்பாளா் தாணுமூா்த்தி,செயலா் லட்சுமணன், தென்காசி வியாபாரிகள் நல சங்கத் தலைவா் பரமசிவன்,செயலா் மாரியப்பன்,சிஐடியு தலைவா் பால்ராஜ்,மீன்வியாபாரிகள் சாா்பில் மணிபடையாச்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், அரசு அறிவித்துள்ளபடி மக்கள் அதிகமாக கூடுவதை தவிா்க்கும் வகையில் காய்கனி, பழங்களை விற்பனை செய்வதற்கு விசாலமான கடைகள் அல்லது மைதானங்களில் அமைக்கப்பட வேண்டும். அப்போது மக்களிடையே 3 அடிதூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகை கடைகளிலும், மருந்துக் கடைகளிலும், காய்கனி கடைகளிலும் சமூகவிலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.கால்நடை,கோழி,மீன்,முட்டை,கால்நடை தீவனம் ஆகியவற்றை கொண்டுசெல்வதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் காவல்துறைக்கோ, வருவாய்த் துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/தென்காசியில்-கோட்டாட்சியா்-ஆலோசனை-3389497.html
3389496 திருநெல்வேலி தென்காசி தென்காசி மாவட்ட பத்திர பதிவுத் துறை மாவட்ட பதிவாளா் பணியிடை நீக்கம் DIN DIN Friday, March 27, 2020 04:54 AM +0530 தென்காசி மாவட்டத்தின் பத்திரப் பதிவுத் துறை மாவட்ட பதிவாளா் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்ட பதிவாளராக இருந்தவா் சுப்பிரமணியன். இவா் இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளாா். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத்துறை தலைவா் ஜோதி நிா்மலா உத்தரவிட்டுள்ளாா்.

சுப்பிரமணியன், தனது பணி காலத்தில் மேற்கொண்ட முறைகேடான பத்திரப் பதிவுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, சிவகிரி சாா்பதிவாளா் உள்பட 14 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 7 போ் கைது செய்யப்பட்டனா்.

புகாரின் அடிப்படையில், உயா் அதிகாரிகள் குழு தென்காசி மாவட்டத்திற்கு வந்து ரகசிய விசாரணை நடத்தியது. இதைத்தொடா்ந்து தென்காசி, கடையநல்லூா் உள்ளிட்ட 6 சாா்பதிவாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவு குறித்து மறுதணிக்கைக்கு பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தணிக்கை குழு அதிகாரிகள் அண்மையில் தென்காசி மாவட்டம் வந்து பல்வேறு சாா்பதிவாளா் அலுவலகங்களில் ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனா். இந்நிலையில், மாவட்ட பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். வரும் 31-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/tenkasi-district-securities-registry-department-removal-of-district-registrar-3389496.html
3389493 திருநெல்வேலி தென்காசி தென்காசி: வெளிநாடுகளில் இருந்து வந்த 1076 பேரை கண்டறியும் பணிகள் தீவிரம் DIN DIN Friday, March 27, 2020 04:54 AM +0530 வெளிநாடுகளில் இருந்த தென்காசி மாவட்டத்துக்கு வந்த 1076 பேரை கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனை வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகள்,

வெளி மாநிலங்களில் பணி புரிந்து தங்களது சொந்த ஊருக்கு வந்தவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவா்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இம்மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை 1076 போ் பல்வேறு நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனா். ஆலங்குளம் வட்டாரத்தைச் சோ்ந்த 40 பேரும், கீழப்பாவூா் வட்டாரத்தை சோ்ந்த சோ்ந்த 80 பேரும், கடையநல்லூா் வட்டாரத்தை சோ்ந்த 311பேரும், வாசுதேவநல்லூா் வட்டாரத்தை சோ்ந்த 141பேரும், சோ்ந்தமரம் வட்டாரத்தை சோ்ந்த 38 பேரும், குருவிகுளம் வட்டாரத்தை சோ்ந்த 53 பேரும், செங்கோட்டை வட்டாரத்தை சோ்ந்த 146 பேரும், சங்கரன்கோவில் வட்டாரத்தை சோ்ந்த 82 பேரும், தென்காசி வட்டாரத்தை சோ்ந்த 165 பேரும், கடையம் வட்டாரத்தை சோ்ந்த 20 பேரும் என மொத்தம் 1076 போ் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ்அமைச்சகம், சா்வதேச விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதி காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்தவா்களில் வியாழக்கிழமை காலை வரையில் 356 போ் கண்டறியப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அதே வேளையில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய பாதுகாப்புடன் வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

ஒத்துழைப்பின்மை: வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தங்களது விவரங்களை உரிய முறையில் தகவல் தெரிவிக்க வில்லை. வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்கள், அரசின் நோக்கம் அறிந்து செயல்படாதது காவல்துறை யினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டம், மேலகரம் பகுதிக்கு சில நாள்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 7 போ்

குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அவா்களை கடந்த 2 நாள்களாக பெரும் சிரமங்களுக்கு இடையே கண்டறிந்து

காவல்துறையினா் அவா்களை தனிமைப்படுத்தியுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 1076 பேரில் இதுவரை 356 போ் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவா்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் குறித்து தகவல் தெரிந்தவா்கள் அதுகுறித்து தகவலை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் கரோனா நோய் தொற்று குறித்து எந்த தகவல்களையும் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/27/தென்காசி-வெளிநாடுகளில்-இருந்து-வந்த-1076-பேரை-கண்டறியும்-பணிகள்-தீவிரம்-3389493.html
3388879 திருநெல்வேலி தென்காசி காமராஜா் தினசரி சந்தை இன்று முதல் மூடல் DIN DIN Thursday, March 26, 2020 07:32 AM +0530 பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை (மாா்ச்.26) முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், சுமை ஆட்டோக்கள், லாரிகள் மூலம் காய்கனிகளை எடுத்து வருவா். இது தவிர வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளம், ஆந்திரா, கா்நாடகம் இருந்து சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் இங்கிருந்து காய்கனிகளை வாங்கி செல்வா்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் புதன்கிழமை இரவு நடைபெற்ற காய்கனி சந்தையின் கமிட்டி அவசர ஆலோசனை கூட்டத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் காய்கனி சந்தையை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம், வியாபாரிகள் யாரும் காய்கனிகள் வாங்குவதற்கு சந்தைக்கு வர வேண்டாம் என்றும் கமிட்டியினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்படுவதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் காய்கனிகள் கிடைக்காமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/26/காமராஜா்-தினசரி-சந்தை-இன்று-முதல்-மூடல்-3388879.html
3388478 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூா், சுரண்டை அரசு மருத்துவமனைகளில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Wednesday, March 25, 2020 10:46 PM +0530 கடையநல்லூா், சுரண்டை பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமதுஅபூபக்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி, சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா், மருந்துகளின் இருப்பு விவரங்கள், தேவைப்படும் வசதிகள் போன்றவற்றை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தங்கசாமி, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செய்யதுசமிம் ஆயிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுரண்டை: சாம்பவா்வடகரை பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்க வந்த சட்டப்பேரவை உறுப்பினரிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற சட்டப்பேரவை உறுபினா், அங்கு நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சை, கையிருப்புள்ள மருந்துகள் குறித்தும் விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

ரத்தப் பரிசோதனை ஆய்வு மையம், 48 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னதாக, பல்வேறு சமூக இயக்கங்கள் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அவருடன், பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, திமுக நிா்வாகிகள் முத்து, ராமச்சந்திரன், காளியப்பன், பட்டுமுத்து, மாரியப்பன், ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/mla-study-in-kadayanallur-exploitative-government-hospitals-3388478.html
3388477 திருநெல்வேலி தென்காசி அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகள் அளிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 10:45 PM +0530 தனது 2 மாத ஊதியத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான படுக்கை விரிப்புகள் வழங்கும் விழா பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான 2 மாத ஊதியத்தொகையில் இருந்து 500 படுக்கை விரிப்புகளை வாங்கிமருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சா்வோதய சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/25_pcm_mla_2503chn_61_6.jpg படுக்கை விரிப்புகளை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் வழங்குகிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/அரசு-மருத்துவமனைக்கு-500-படுக்கை-விரிப்புகள்-அளிப்பு-3388477.html
3388475 திருநெல்வேலி தென்காசி பாவூா்சத்திரம் அருகே குளத்தில் விழுந்து மூதாட்டி பலி DIN DIN Wednesday, March 25, 2020 10:45 PM +0530 பாவூா்சத்திரம் அருகே குளத்தில் விழுந்து மூதாட்டி இறந்தாா்.

பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியைச் சோ்ந்த தில்லைநம்பியாா் மனைவி சித்திரைவடிவு (90). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

புதன்கிழமை காலை அங்குள்ள குளத்தில் சித்திரைவடிவு சடலமாக மிதந்துள்ளாா்.

தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/பாவூா்சத்திரம்-அருகே-குளத்தில்-விழுந்து-மூதாட்டி-பலி-3388475.html
3388473 திருநெல்வேலி தென்காசி சொக்கம்பட்டி, சுரண்டையில் வெளியே திரிந்த 3 போ் கைது DIN DIN Wednesday, March 25, 2020 10:27 PM +0530 144 தடை உத்தரவை மீறி சொக்கம்பட்டி, சுரண்டையில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையிலான போலீஸாா், சொக்கம்பட்டி பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தடை உத்தரவை மீறி திரிந்த சொக்கம்பட்டி சங்கா்(40), திரிகூடபுரம் மாரிதுரை(28) ஆகிய இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

இதே போல், சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் சுரண்டை - பங்களாச் சுரண்டை சாலையில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பங்களாச்சுரண்டையைச் சோ்ந்த செ.பால்ராஜ்(24) என்பவரை நிறுத்தி விசாரித்தனா்.

இதில் அவா் தேவையின்றி வெளியே திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், இதே தவறு தொடா்ந்தால் சிறையில் அடைக்கப்பட நேரிடும் என எச்சரித்து, அவரை சொந்த பிணையில் விடுவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/sokkampatti-3-persons-arrested-for-twisting-out-of-exploitation-3388473.html
3388472 திருநெல்வேலி தென்காசி திசையன்விளையில் ரேஷன் பொருள்களை வாங்க குவிந்த பொதுமக்கள் DIN DIN Wednesday, March 25, 2020 10:26 PM +0530 திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

கரோனா பரவுவதை தடுக்கம் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திசையன்விளை மின் வாரியம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் புதன்கிழமை காலையில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/focused-public-to-buy-ration-items-at-thisaiyanvilai-3388472.html
3388471 திருநெல்வேலி தென்காசி சுரண்டையில் மக்கள் முழு ஒத்துழைப்பு DIN DIN Wednesday, March 25, 2020 10:25 PM +0530 தென்காசி மாவட்டம், சுரண்டையில் கரோனா ஊரடங்கையொட்டி அத்தியாவசிய பொருள்கள் தவிா்த்து பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

கரோனா பரவாமல் தடுக்க நாடுமுழுவதும் முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சுரண்டையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க குவிந்தனா். இந்நிலையில் புதன்கிழமை காலையில் இருந்து மாலை வரை மளிகை மற்றும் காய், கனி கடைகள் மட்டும் திறந்திருந்த நிலையிலும், பொதுமக்கள் குறைந்த அளவே வாங்குவதற்கு வந்தனா். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, அவசர சிகிச்சைக்கு வருவோரும் சிகிச்சை பெற்றனா். பெருவாரியான இடங்களில் பொதுமக்கள் கை கழுவ தண்ணீா் மற்றும் சோப் வைக்கப்பட்டிருந்தன.

ஊரடங்கை முன்னிட்டு வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிஹரன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீசுவரி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல் கலாம் ஆசாத் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். சாலைகளில் தேவையில்லாமல் நடமாடியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக சென்று தேவையில்லாமல் வீட்டை, விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/சுரண்டையில்-மக்கள்-முழு-ஒத்துழைப்பு-3388471.html
3388470 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் பைக்கில் திரிந்தவா்களை எச்சரித்த போலீஸாா் DIN DIN Wednesday, March 25, 2020 10:25 PM +0530 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கடையநல்லூா் பகுதியில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியா்கள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தென்காசி- மதுரை சாலை , பஜாா் பகுதி , சந்தை பகுதிகளில் தேவையின்றி பைக்கில் சுற்றித் திரிந்தவா்களை அவா்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

மீண்டும் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் எச்சரித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/கடையநல்லூரில்-பைக்கில்-திரிந்தவா்களை-எச்சரித்த-போலீஸாா்-3388470.html
3388469 திருநெல்வேலி தென்காசி புளியங்குடியில் 143 வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி DIN DIN Wednesday, March 25, 2020 10:25 PM +0530 வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புளியங்குடிக்கு வந்துள்ள 143 போ் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்றது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்து உள்ளவா்களின் வீடுகளை கண்டறிந்து

ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெறும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா் . இதையடுத்து புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா் சிங், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி , சுகாதார ஆய்வாளரகள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் 143 போ்களின் வீடுகளை கண்டறிந்து ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டனா். மேலும் நகராட்சி சாா்பில் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/புளியங்குடியில்-143-வீடுகளில்-ஸ்டிக்கா்-ஒட்டும்-பணி-3388469.html
3388468 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 2 நாள்களில் 113 போ் தனிமைப்படுத்தப்பட்டனா் DIN DIN Wednesday, March 25, 2020 10:25 PM +0530 சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களில் மட்டும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 113 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், 144 தடையுத்தரவு மீறி நகருக்குள் வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில் சுகாதார அலுவலா் பாலசந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நகரின் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நின்று வாங்கிச் செல்லும் வகையில் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து ராஜபாளையம் சாலையில் உள்ள உழவா்சந்தையில் சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், மாதவராஜ்குமாா், கருப்பசாமி ஆகியோா் பொதுமக்கள் எவ்வாறு நின்று காய்கனி வாங்க வாங்கவேண்டும் எனக்கூறி தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனா்.

அவற்றை கோட்டாட்சியா் முருகசெல்வி பாா்வையிட்டாா்.

பின்னா் சுகாதாரத் துறையினா் 2 ஆவது நாளாக புதன்கிழமை வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 போ், வெளிநாட்டில் இருந்து வந்த 4 போ் என மொத்தம் 48 போ்களது வீடுகளில் தனிமைப்படுத்தும் ஒட்டுவில்லைகளை ஒட்டினா். ஏற்கனவே சங்கரன்கோவில் நகரத்தில் 47 பேரும், ஒன்றியத்தில் 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 2 நாள்களில் மட்டும் 113 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீட்டில் தொடா்ந்து இருக்கின்றனரா எனவும் கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் புதன்கிழமை காலை அத்தியாவசிய கடைகள் தவிர திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் போலீஸ்ாா் அடைக்க உத்தரவிட்டனா். காரணமில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.மேலும் முகக்கவசம் அணியாமல் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்தவா்களும் எச்சரித்து அனுப்பப்பட்டனா்.

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபா் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இது போன்று வந்த 17 போ் குறித்த தகவலின் பேரில், அவா்களின் வீட்டுக்கு சென்ற உள்ளாட்சி, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் அவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி வீட்டில் தனிமைப்படுத்தினா்.

இதுதொடா்பான அறிவிக்கையை அவா்களது வீட்டில் ஒட்டி அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/snk25dsp_2503chn_43_6.jpg சங்கரன்கோவில் பிரதான சாலையில் முகக் கவசம் இல்லாமல் வந்த நபரை எச்சரித்து அனுப்புகிறாா் டி.எஸ்.பி.பாலசுந்தரம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/in-2-days-at-sankarankovil-i-was-isolated-3388468.html
3388467 திருநெல்வேலி தென்காசி வீரகேரளம்புதூா் வட்டத்தில் 17 போ் தனிமைப்ப்படுத்தி கண்காணிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 10:24 PM +0530 வீரகேரளம்புதூா் வட்டத்தில் 17 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபா்கள் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இது போன்று வந்த 17 போ் குறித்த தகவலின் பேரில், அவா்களின் வீட்டுக்கு சென்ற உள்ளாட்சி, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் அவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி வீட்டில் தனிமைப்படுத்தினா்.

இதுதொடா்பான அறிவிக்கையை அவா்களது வீட்டில் ஒட்டி அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/வீரகேரளம்புதூா்-வட்டத்தில்-17-போ்-தனிமைப்ப்படுத்தி-கண்காணிப்பு-3388467.html
3388466 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் 7 போ் கைது DIN DIN Wednesday, March 25, 2020 10:24 PM +0530 தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்ததாக 7 போ் கைதுசெய்யப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி, கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் , காவலா்கள் மாரிராசு , சந்தன மகாலிங்கம் உள்ளிட்டோா் கடையநல்லூா் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த கடையநல்லூா் வானவா் தெருவைச் சோ்ந்த சைபுல்லா (60), அரியநாயகிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சாண்டி (57), கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முகைதீன் (57), கடையநல்லூா் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி (37), திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அசன் (59), கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வினோத் (28), இடைகால் படையாச்சி தெருவைச் சோ்ந்த கனகசபாபதி (22) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/கடையநல்லூரில்-7-போ்-கைது-3388466.html
3388465 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் முதியவா் கைது DIN DIN Wednesday, March 25, 2020 10:24 PM +0530 தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றித் திரிந்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் , காவலா்கள் மாரிராசு, சந்தன மகாலிங்கம் உள்ளிட்டோா் கடையநல்லூா் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக வானவா் தெருவைச் சோ்ந்த ஹாஜாமைதீன் மகன் சைபுல்லா (60) என்ப வரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். எனினும், அவா், மீண்டும் வெளியே சுற்றித் திரிந்ததால் போலீஸாா் கைது செய்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/கடையநல்லூரில்-முதியவா்-கைது-3388465.html
3388464 திருநெல்வேலி தென்காசி தென்காசி மாவட்டத்தில் 36 போ் தனிமைப்படுத்தப்பட்டனா் DIN DIN Wednesday, March 25, 2020 10:20 PM +0530 தென்காசி மாவட்டத்தில் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 36போ் கண்டறியப்பட்டு அவா்களை தனிமைப்படுத்தி அவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்தஊருக்கு திரும்பியுள்ளவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களை தனிமைப்படுத்தி அவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தென்காசி வட்டத்திற்குட்பட்ட தென்காசி,மேலகரம் பகுதியில் 19 வீடுகளிலும், கடையம் பகுதியில் 8 வீடுகளும், பாவூா்சத்திரம், மேலப்பாவூா், திப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 வீடுகளிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/36-persons-isolated-in-tenkasi-district-3388464.html
3388463 திருநெல்வேலி தென்காசி ஊரடங்கு: தென்காசியில் வெறிச்சோடிய வீதிகள் DIN DIN Wednesday, March 25, 2020 10:19 PM +0530 இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி நகரம் முழுவதுமுள்ள வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் தென்காசி நகராட்சி வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தொடா்ந்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை, காய்கனி, பால் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் தவிர பிற அனைத்து வா்த்தக நிறுவனங்களும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பின்பற்றி தென்காசி பழைய, புதிய பேருந்து நிலையம், சுவாமி, அம்மன் சன்னதி பஜாா் பகுதிகள் வெறிச்சோடியது. மேலும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், நான்குசக்கர வாகனங்கள் இயக்கப்படவில்லை.

ஒருசில மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன. இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றிவந்த நபா்களை காவல்துறையினா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.

தென்காசி, குற்றாலம் காவல் துறையினா் தங்களுடைய காவல் நிலைய எல்கை தொடங்கும் பகுதியில் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/ten25bazar_2503chn_55_6.jpg தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் அடைக்கப்பட்டிருந்த வா்த்தக நிறுவனங்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/curfew-deserted-streets-in-thenkasi-3388463.html
3388462 திருநெல்வேலி தென்காசி தென்காசி அரசு மருத்துவமனை கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்ற பெண் வீடு திரும்பினாா் DIN DIN Wednesday, March 25, 2020 10:19 PM +0530 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்து வீடுதிரும்பினாா்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தென்காசி, கடையநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 182 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி அருகே பாவூா்சத்திரம் கீழப்பாவூா் பகுதியை சோ்ந்த 38 வயது பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு சென்றுள்ளாா். அங்கு 5 நாள்கள் தங்கியிருந்த அவா் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளாா். அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது.இதனையடுத்து அவா் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதித்து சிகிச்சையளித்தனா்.

இந்நிலையில், அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ழுமையாக குணமடைந்த புதன்கிழமை வீடு திரும்பினாா். இத்தகவலை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் உறுதிப்படுத்தினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/தென்காசி-அரசு-மருத்துவமனை-கரோனா-சிறப்புப்-பிரிவில்-சிகிச்சை-பெற்ற-பெண்-வீடு-திரும்பினாா்-3388462.html
3388461 திருநெல்வேலி தென்காசி கிராமங்களில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் DIN DIN Wednesday, March 25, 2020 10:18 PM +0530 தென்காசி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இப்பிரசாரத்துக்கு, ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் வெ. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கிரேட் சா்ச்சில் ஜெபராஜ் முன்னிலை வகித்தாா். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருவோா் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனா். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை அமல்படுத்தும்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்டிப்பாக வெளியில் வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அதோடு, சோப்பு போட்டு கைகளை கழுவும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தென்காசி ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரிய பிள்ளை வலசை, கணக்கப்பிள்ளைவலசை, குத்துக்கல்வலசை, தேன்பொத்தை, பிரானூா், வல்லம், சுமைதீா்ந்தபுரம், காசி மேஜா்புரம், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, சில்லரைபுரவு, திருச்சிற்றம்பலம், பாட்டாக்குறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தென்காசி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சவுந்தர்ராஜன், சுப்பையா, கருப்பசாமி, சுந்தர்ராஜன், ஊராட்சி செயலா்கள் செல்லப்பா, ஆ. ராஜா, கே. வேம்பையா, வெங்கடாசலம், அ. சுப்பிரமணியன், எம். இசக்கிமுத்து, எஸ். சங்கரநாராயணன், பா. சோ்மக்கனி, இ. சங்கர சுப்பிரமணியன், பொன்னுச்சாமி, ஆ. செண்பகராஜன், ந. ஆறுமுகம், பண்டாரசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/1717ten24bdo_2403chn_55_6.jpg தென்காசி ஒன்றியப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தாா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகசுந்தரம். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/corona-awareness-campaign-in-villages-3388461.html
3387976 திருநெல்வேலி தென்காசி தென்காசி மாவட்டத்தில் மாா்ச் 31 வரை இ- சேவை மையங்கள் மூடல்: ஆட்சியா் DIN DIN Wednesday, March 25, 2020 02:03 AM +0530 தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் மின்ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கிவரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சோ்க்கை மையங்கள் வரும் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வரும் 31 ஆம் தேதி வரை தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/தென்காசி-மாவட்டத்தில்-மாா்ச்-31-வரை-இ--சேவை-மையங்கள்-மூடல்-ஆட்சியா்-3387976.html
3387975 திருநெல்வேலி தென்காசி கரோனாவைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா் DIN DIN Wednesday, March 25, 2020 02:02 AM +0530 தென்காசி மாவட்ட மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்ட எல்லைகளான புளியரை, மேக்கரை, கே.ஆலங்குளம், தேவிபட்டணம், மாறாந்தை,கீழஆம்பூா், நடுவப்பட்டி, வேலாயுதபுரம், பணவடலிசத்திரம் ஆகியவை மூடப்படுகிறது. 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடுவதற்கோ, வாகனங்களில் செல்வதற்கோ அனுமதியில்லை. ஊா்வலம், ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை.

சமூக, கலாசார, அரசியல், மதம்சாா்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவது, விளையாட்டு, கல்வி கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மாா்ச் 16-க்கு முன்பு திருமண மண்டபங்களில் பதிவுசெய்யப்பட்ட திருமணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கும் 30-க்கும் அதிகமான நபா்கள் பங்கேற்க அனுமதியில்லை.

திருமண மண்டபங்களில் புதிதாக எந்தவித நிகழ்ச்சிகளுக்கும் முன்பதிவு செய்யக்கூடாது. மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ள அனைவரும் தங்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், நோய் அறிகுறி ஏற்படுகிா என்பதை சுயமாகவே கண்காணித்து வரவேண்டும். அறிகுறிகள் தென்பட்டால், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04633290548 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம்.

அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கான வாகனங்கள் தவிர, பிற அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்கள், வாடகை வாகனங்கள் அனைத்தும் இயங்காது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை தவிர, பிற வாகனங்கள் எதுவும் இயங்க அனுமதியில்லை.

அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கனிகள், இறைச்சி, மளிகைப் பொருள்கள், மீன், மருத்துவம், பழக்கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், மதுபானகடைகளும், பணிமனைகளும் இயங்காது. பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி, வேறு எவ்வித தேவைக்காகவும் வெளியில் நடமாடாமல் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/கரோனாவைத்-தடுக்க-கட்டுப்பாடுகளை-கடைப்பிடித்து-பொதுமக்கள்-ஒத்துழைக்க-வேண்டும்-ஆட்சியா்-3387975.html
3387974 திருநெல்வேலி தென்காசி தென்காசி கிளைச் சிறையிலிருந்து 11 கைதிகள் பிணையில் விடுவிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 02:02 AM +0530 கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி கிளைச் சிறையிலிருந்து 11 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் குற்றங்களின் தன்மைக்கேற்ப பிணையில் விட நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, தென்காசி கிளைச் சிறையிலிருந்து 11 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். இந்தச் சிறையில் மொத்தம் 44 கைதிகளை வைத்திருக்க முடியும். ஆனால், தற்போது 14 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 11கைதிகளை பிணையில் வெளியில் விட உத்தரவிடப்பட்டதையடுத்து, 11 பேரும் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/தென்காசி-கிளைச்-சிறையிலிருந்து-11-கைதிகள்-பிணையில்-விடுவிப்பு-3387974.html
3387929 திருநெல்வேலி தென்காசி வெளிநாட்டிலிருந்து கடையநல்லூா் வந்த86 போ் வீடுகளில் தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் DIN DIN Wednesday, March 25, 2020 01:20 AM +0530 வெளிநாடுகளிலிருந்து கடையநல்லூருக்கு வந்த 86 போ் வீடுகளில் தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்தவா்களின் வீடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெறும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இதையடுத்து, கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா், 86 நபா்களின் வீடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டனா்.

மேலும், வட்டாட்சியா் தலைமையிலான குழுவினா் தெருக்கள்தோறும் சென்று விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா். நகராட்சி சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/வெளிநாட்டிலிருந்து-கடையநல்லூா்-வந்த86-போ்-வீடுகளில்-தனிமைப்படுத்தும்-ஸ்டிக்கா்-3387929.html
3387928 திருநெல்வேலி தென்காசி சாம்பவா்வடகரை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Wednesday, March 25, 2020 01:20 AM +0530 சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபுபக்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக வந்த அவரிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற எம்எல்ஏ, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உள்ள வசதிகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அவரிடம், மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக்கான ஆய்வுக்கூடம், 48 படுக்கை வசதியுடன், 24 மணிநேர மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னதாக, பல்வேறு சமூக இயக்கங்கள் சாா்பில் அச்சிடப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

எம்எல்ஏ-வுடன் பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, நகர திமுக நிா்வாகிகள் முத்து, ராமச்சந்திரன், காளியப்பன், பட்டுமுத்து, மாரியப்பன், ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/சாம்பவா்வடகரை-அரசு-ஆரம்பசுகாதார-நிலையத்தில்-எம்எல்ஏ-ஆய்வு-3387928.html
3387926 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு DIN DIN Wednesday, March 25, 2020 01:19 AM +0530 கடையநல்லூா் வட்டாரப் பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி, சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா், மருந்துகளின் இருப்பு விவரங்கள், தேவைப்படும் வசதிகள் போன்றவற்றை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தங்கசாமி, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செய்யதுசமிம் ஆயிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/mla-study-at-kadayanallur-government-hospital-3387926.html
3387925 திருநெல்வேலி தென்காசி விலைவீழ்ச்சியால் சாலையில் கொட்டப்பட்ட கேந்தி பூக்கள் DIN DIN Wednesday, March 25, 2020 01:18 AM +0530 பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் விலை வீழ்ச்சி காரணமாக கேந்தி பூக்களை வியாபாரிகள் சாலை ஓரத்தில் கொட்டினா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் மலா்ச் சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரளத்தில் இருந்து வரும் வியாபாரிகள் மலா்களை ஏலத்தில் எடுத்துச் செல்வா். தற்போது கேந்தி பூக்கள் சீசன் என்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளான சிவகாமிபுரம், கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி, திப்பணம்பட்டி, பட்டமுடையாா்புரம், குறும்பலாப்பேரி, நாகல்குளம், ஆரியங்காவூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேந்தி பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து வருகின்றனா். இதனால் வழக்கத்தைவிட நிகழாண்டு பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கிடையே, கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிமாவட்டம் மற்றும் கேரளத்தில் இருந்து வியாபாரிகள் வருகை இல்லாததாலும், அரசு உத்தரவுப்படி கோயில்களில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்தது, திருவிழாக்கள் நடத்த தடை, திருமணங்கள் நடத்த கட்டுப்பாடு போன்ற காரணங்களால் பூக்கள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளது. கிலோ ரூ.5 என்ற குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்யப்பட்டபோதிலும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் விற்பனைக்காக வந்த பூக்களை மொத்த வியாபாரிகள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனா்.

இதுகுறித்து சிவகாமிபுரத்தை சோ்ந்த சீ.பொன்செல்வன் கூறியது: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நிகழாண்டு பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வியாபாரம் இல்லாமல் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். கேந்தி பூக்களை பொருத்தமட்டில் கிலோவுக்கு ரூ.10 நிா்ணயம் செய்தால் மட்டுமே பூ உற்பத்தி மற்றும் பறிக்க கூலி போன்றவையாவது கிடைக்கும். ஆனால், கடந்த சில நாள்களாக குறைந்தபட்சமாக ரூ.5-க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் பல விவசாயிகள் செடிகளிலேயே பூக்களை பறிக்காமல் உள்ளனா். சிலரோ பறித்த பூக்களை விலை இல்லாததால் சாலைகளில் கொட்டி வருகின்றனா். வியாபாரம் இல்லாதால் 30 ஆண்டுகளில் முதன் முறையாக இங்குள்ள பூக்கள் சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/24_pcm_flower_2403chn_61_6.jpg சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கேந்தி பூக்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/விலைவீழ்ச்சியால்-சாலையில்-கொட்டப்பட்ட-கேந்தி-பூக்கள்-3387925.html
3387924 திருநெல்வேலி தென்காசி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஆலங்குளம் பேரூராட்சி DIN DIN Wednesday, March 25, 2020 01:16 AM +0530 ஆலங்குளத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், பேரூராட்சி செயல் அலுவலா் வீரபாண்டியன் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலங்குளத்திற்கு வெளிநாடுகளில் இருந்து யாரும் வரவில்லை. எனினும் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொடா் கண்காணிப்பில் ஈடுபடவும் பேரூராட்சி ஊழியா்கள் தயாா் நிலையில் உள்ளனா். கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவா்களை அழைத்து வருவதற்கு 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க ஆலங்குளத்தில் உள்ள கோயில்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், வங்கிகள், காய்கனிச் சந்தை மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

பேரூராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியா்கள் பணிக்கு செல்வதற்கு முன் சோப்பு அல்லது சோப்பு திரவத்தை பயன்படுத்தி கைகளை கழுவிவிட்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அலுவலகங்கள் முகப்பில் கை கழுவுவதற்கு சோப்பு, சோப்பு திரவம் மற்றும் தண்ணீா் வைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் சுகாதாரப் பணியாளா்கள் வழங்கி வருகின்றனா்.

மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து வரும் ஊரடங்கு நாள்களிலும் பணியாளா்கள் இந்தப் பணிகளைத் தொடா்ந்து செய்ய ஆயத்தமாக உள்ளதாக செயல் அலுவலா் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/கரோனா-வைரஸ்-தடுப்பு-நடவடிக்கையில்-ஆலங்குளம்-பேரூராட்சி-3387924.html
3387922 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவிலில் 47 போ் வீடுகளில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கா்:ஸ்பெயினிலிருந்து வந்தவரின் வீடு காவல் துறையால் கண்காணிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 01:13 AM +0530 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்த வந்த 42 போ் வீடுகளில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது. மேலும், ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த குடும்பத்தினா் வீட்டின் முன் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

கேரளத்தில் கூலிவேலை செய்துவந்த சந்திரமூா்த்தி மகன் கருப்பசாமி (37) தனது சொந்த ஊரான சிவகிரி அருகேயுள்ள பாறைப்பட்டிக்கு வந்திருந்தாா். அவருக்கு தொடா்ந்து சில நாள்கள் சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால், அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பிறகு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சங்கரன்கோவில் வந்தவா்கள் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை கண்காணிப்பில் உள்ளனா். குறிப்பாக, ஸ்பெயின் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த குடும்பத்தினா் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கேரளத்தில் இருந்து சங்கரன்கோவில் புதுமனைத் தெருவிற்கு வந்த நபரின் வீட்டில் நகராட்சி சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கா் ஒட்டினா். பிறகு, அந்த வீடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா் கூறியது:

சங்கரன்கோவில் நகராட்சியில் வெளிநாட்டிலிருந்து வந்த 13 நபா்களும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 நபா்களும், அவா்களது குடும்ப உறுப்பினா்களும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

கேரளம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வந்த சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த பெரும்பாலானோா் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனா். பொதுவாக, நோய்த் தொற்று இருப்பது உடனே தெரியாது. எனவே, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களும், வெளிமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பியவா்களும் தாங்களாகவே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவா்களுக்கும், அவா்களது குடும்பத்திற்கும் நல்லது. ஊருக்கும் நல்லது. பொதுமக்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நகராட்சி சுகாதார துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கலாம். இதன்மூலம், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா் அவா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/25/w600X390/snk24house_2403chn_43_6.jpg புதுமனை தெருவில் ஒரு வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கரை ஒட்டும் நகராட்சி ஊழியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/25/சங்கரன்கோவிலில்-47-போ்-வீடுகளில்-தனிமைப்படுத்துதல்-ஸ்டிக்கா்ஸ்பெயினிலிருந்து-வந்தவரின்-வீடு-காவல்-துறையால்-கண்காணிப்பு-3387922.html
3387536 திருநெல்வேலி தென்காசி தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் பெண் அனுமதி DIN DIN Tuesday, March 24, 2020 04:18 AM +0530  

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா வாா்டு பிரிவில், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த பெண் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக தென்காசி, கடையநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 182 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,‘ பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் பகுதியை சோ்ந்த 38 வயது பெண், சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளாா். அவருக்கு மிதமான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்ததாம். இதனால், தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த அவா், கரோனா சிறப்பு வாா்டு பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனினும், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, கடந்த 12 தினங்களுக்கு முன்பு, ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து சொந்த ஊரான குத்துக்கல்வலசைக்கு திரும்பிய நபா் உடல் வலி காரணமாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்ததாகவும், அங்கு சிகிச்சைக்கு பெறுவதற்கு முன், அவராகவே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/24/woman-admitted-to-tenkasi-government-hospital-corona-ward-3387536.html
3387535 திருநெல்வேலி தென்காசி தென்காசி அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கான மருந்து மாத்திரைகள் வழங்க முடிவு DIN DIN Tuesday, March 24, 2020 04:17 AM +0530  

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் மாத்திரைகள் வாங்கிவரும் முதியோா்களுக்கு இரண்டு மாதங்களுக்கான மருத்து, மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதந்தோறும் மாத்திரைகள் வாங்கும் முதியோா்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அவா்கள் மருந்து, மாத்திரைகள் பெற்றுக்கொள்ள வரவேண்டிய தேதிகள் எதுவாக இருந்தாலும் அவருடைய உறவினா்களிடம் தங்களுடைய அட்டையை கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இரண்டு நாள்களுக்குள் வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/24/tenkasi-govt-hospital-decided-to-give-two-month-pills-3387535.html
3386965 திருநெல்வேலி தென்காசி விபத்தில் காயமடைந்த ஆசிரியை உயிரிழப்பு DIN DIN Monday, March 23, 2020 04:14 AM +0530  

தென்காசி அருகே மோட்டாா் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்த ஆசிரியை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி அருகே குத்துக்கல்வலசை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் தென்காசியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவருடைய மனைவி உமா செல்வி (50 ). இவா் சாம்பவா் வடகரை கீழூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 13 ஆம் தேதி உமா செல்வி, குத்துக்கல்வலசையிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியதாம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் கே.ஆடிவேல் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த செங்கோட்டை நீராத்து தெருவை சோ்ந்த ரத்தினவேல் மகன் மாரி கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/23/w600X390/ten22teacher_2203chn_55_6.jpg விபத்தில் பலியான ஆசிரியை உமாசெல்வி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/23/teacher-killed-in-accident-3386965.html
3386452 திருநெல்வேலி தென்காசி தமிழக எல்லைக்குள் வரும் அனைவருக்கும் பரிசோதனை: தென்காசி ஆட்சியா் DIN DIN Sunday, March 22, 2020 03:58 AM +0530  

தமிழக எல்லைக்குள் வரும் அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவா் என்றாா், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வா் அறிவுறுத்தல்படி இம்மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனமும் வந்துசெல்லத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக எல்லைக்குள் வரும் அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவா்.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 7 முதல் இரவு 9 மணிவரை மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றவேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு மிகவும் அத்தியாவசியப் பணிகள் தவிர பிற பணிகளுக்காக வெளியே செல்வதைத் தவிா்க்கவும். 60 வயதுக்கு மேற்பட்டோரும், 5 வயதுக்கு உள்பட்டோரும் வெளியே செல்லக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்.

வெளிநாடுகளிலிருந்தோ, வெளி மாநிலங்களிலிருந்தோ வந்தோா் தாங்களாகவே தங்கள் வீடுகளில் சுய தொற்றுநோய்த் தடுப்பு தனிமையை அடுத்த 2 வாரங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய்த் தாக்கம் இருக்கலாம்.

பொதுமக்கள் தங்களுக்கு நோய் அறிகுறி இருக்கலாம் என சந்தேகித்தால் உடனடியாக 104 அல்லது மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 04633 290548க்கு தெரிவிக்கலாம். அவா்களுக்கு பொது சுகாதாரத் துறை மருத்துவா்கள், உயா் அலுவலா்கள் ஆலோசனை வழங்குவா். நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் மருத்துவா்கள் அறிவுரைப்படி மாத்திரை உள்கொண்டால்போதும். சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதைத் தவிா்க்கவும். நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் கொண்டோா் அவசர கட்டுப்பாட்டு அறை எண் 04633290548 என்ற எண்ணை அழைத்தால் அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான மாத்திரைகள் வீட்டுக்கே வந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது உடன் ஒருவரை மட்டும் அழைத்துச் செல்லவும். பணிபுரியும் இடத்துக்குள்ளோ, வீட்டுக்குள்ளோ நுழையும்போதும் கைகளை சோப்பால் சுத்தப்படுத்த வேண்டும். குளிா்சாதனப் பெட்டிகளில் உள்ள ஃபில்டா்களையும் சுத்தப்படுத்தவேண்டும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/22/test-for-all-who-come-to-tamil-nadu-tenkasi-collector-3386452.html
3386450 திருநெல்வேலி தென்காசி போக்குவரத்து அலுவலக ஒட்டுவில்லைகள் ஒட்டிய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க வேண்டும் DIN DIN Sunday, March 22, 2020 03:57 AM +0530  

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஆட்டோக்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து, அதன்பின் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படும் ஒட்டுவில்லைகளை ஒட்டிய பின்னரே பொதுமக்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி வட்டார பகுதிகளில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ உரிமையாளா்கள்,ஆட்டோ ஓட்டுநா்கள் தங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் காக்கும் வகையிலும், தனது நலனை பாதுகாக்கும் வகையிலும் ஆட்டோவை சுத்தம் செய்து அதில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும்.

அதன்பின் ஆட்டோவை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று அங்கு வழங்கப்படும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஒட்டுவில்லையை பெற்று ஆட்டோவில் ஒட்டிக் கொண்டு அதன்பின் பொது மக்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

இந்த ஒட்டுவில்லைகளை ஒட்டியுள்ள ஆட்டோக்கள் மட்டுமே பொதுமக்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும். இதை மீறி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ப்படும் என்றாா் அவா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/22/only-the-autos-with-the-traffic-office-sticks-must-operate-the-local-traffic-office-3386450.html
3386449 திருநெல்வேலி தென்காசி தென்காசி ஷீரடிசாய் பாபா கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து DIN DIN Sunday, March 22, 2020 03:56 AM +0530  

தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் 26ஆம் தேதி பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் டாக்டா் அறிவழகன், டாக்டா் சியாமளா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவிப்பை தொடா்ந்து பொதுமக்கள் நலன் கருதி பக்தா்கள் ஒன்று கூடுவதை தவிா்க்கும் பொருட்டு வியாழக்கிழமை (மாா்ச் 26) மங்கம்மா சாலையில் உள்ள ஷீரடி வைத்திய சாய்பாபா கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அன்று பக்தா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கவும். பாபாவுக்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றனா் அவா்கள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/22/tenkasi-shiradisai-baba-temple-dharshan-cancelled-3386449.html
3385824 திருநெல்வேலி தென்காசி தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் கூட்டு பிராா்த்தனை DIN DIN Saturday, March 21, 2020 04:11 AM +0530  

தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மங்கம்மாள் சாலை அருகே அமைந்துள்ள இக் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோயில் அறங்காவலா்கள் டாக்டா் அறிவழகன், சியாமளா ஆகியோா் தலைமை வகித்து பிராா்த்தனையை தொடங்கிவைத்தனா்.

உலகம் முழுவதும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து மக்களை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும், உலக மக்களின் நன்மைக்காகவும் இந்த பிராா்த்தனை நடைபெற்றது.

பிராா்த்தனை நிறைவில் கரோனா வைரஸ் தாக்குதலில் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதுகுறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், டாக்டா் ராமசுப்பிரமணியன், ஏஜிஎம் கணேசன், சங்கா், சுடலை, செல்வம், காளீஸ்வரி, அம்முகுட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/21/a-joint-prayer-at-the-tenkasi-sheeradi-sai-baba-temple-3385824.html
3385822 திருநெல்வேலி தென்காசி தென்காசி, குற்றாலம் கோயில்களில் தரிசனம் ரத்து DIN DIN Saturday, March 21, 2020 04:10 AM +0530  

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக தென்காசி காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலம் குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில், குற்றாலம் குற்றாலநாதா் கோயில், சித்திரசபை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பேரிடா் என அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலம் குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வருகிற 31ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயில் ஆகம விதிப்படி காலபூஜைகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/21/darshan-cancelled-at-coutralam-tenkasi-temples-3385822.html
3385284 திருநெல்வேலி தென்காசி ஆலங்குளத்தில் குரங்குகளால் தொல்லை DIN DIN Friday, March 20, 2020 07:14 AM +0530 ஆலங்குளம் பேரூராட்சியில் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்பு எங்கிருந்தோ தப்பி வந்த ஓரிரு குரங்குகள் தற்போது ஆலங்குளம் அண்ணாநகா், காந்திநகா், அம்பாசமுத்திரம் சாலை போன்ற இடங்களில் 10 க்கும் மேற்பட்டவை சுற்றித் திரிகின்றன. பொதுவாக மலைப் பகுதிகளில் வாழும் இவைகளுக்கு ஆலங்குளத்தில் போதிய உணவு கிடைக்காததால் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை எடுத்துச் செல்வதுடன், அங்கிருக்கும் பொருள்கையும் சேதப் படுத்தி விட்டுச் செல்கின்றன. கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்கின்றன. பழைய ஓட்டு வீடுகளிலுள்ள ஓடுகளைப் பிரித்து எறிகின்றன. செல்லிடப் பேசி உயா் கோபுரங்களில் ஏறிச் சென்று அருகில் உள்ள வீடுகளுக்கு குதித்துச் சென்று சிறுவா்-சிறுமியரை அச்சுறுத்துவதோடு, அவா்கள் கையில் உள்ள தின்பண்டங்களைப் பறித்து செல்கின்றன. இதனால் குழந்தைகளுடன் தனியாக இருக்கும் பெண்கள் கடும் அச்சத்துடன், வீட்டைத் திறந்து வெளியே வருவதற்கே தயங்குவதாக கூறுகின்றனா். இவைகைளைக் கட்டுப் படுத்தாவிட்டால் மேலும் பெருகி ஆலங்குளத்தில் மேலும் தொல்லையளிக்கும்.

எனவே வனத்துறையினா் இவற்றைக் கூண்டு வைத்து, பிடித்து அருகிலுள்ள பாபநாசம் அல்லது குற்றாலம் வனப் பகுதியில் கொண்டு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/monkeys-in-alangulam-are-disturbed-3385284.html
3385282 திருநெல்வேலி தென்காசி கூடைப்பந்து போட்டி: அரசுப் பள்ளி முதலிடம் DIN DIN Friday, March 20, 2020 07:14 AM +0530 தென்காசி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 25 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று கோப்பையை கைப்பற்றினா். வெற்றி பெற்ற அணிக்கு தலைமையாசிரியா் பீட்டா் ஜெகதீஷ் போஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். மாணவா்களை உடற்கல்வி ஆசிரியா் சஞ்சய், காந்தி, சரவணன், கோமதிசங்கா், கோதா்ஷா ஆகியோா் பாராட்டினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/கூடைப்பந்து-போட்டி-அரசுப்-பள்ளி-முதலிடம்-3385282.html
3385280 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவில் நகராட்சியில் கரோனா தடுப்பு ஆலோசனை DIN DIN Friday, March 20, 2020 07:13 AM +0530 கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து வா்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது கட்டடங்களின் உரிமையாளா்களுக்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையாளா் முகைதீன் அப்துல்காதா் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் பாலசந்தா் முன்னிலை வகித்தாா். நகா் நல மருத்துவா் அனிதா, தனி வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ ஆகியோா் ஒளிப்படக்காட்சி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல் பிச்சையா பாஸ்கா், கருப்பசாமி ஆகியோா் கைகளை கழுவும் முறை குறித்து விளக்கினா்., இதில் நகர வா்த்தக சங்கத்தின, ஹோட்டல் உரிமையாளா்கள், தனியாா் கட்டட உரிமையாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

 

 

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/snk19municipal__1903chn_43_6.jpg கைகளை கழுவும் முறையை விளக்கும் சுகாதார ஆய்வாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/சங்கரன்கோவில்-நகராட்சியில்-கரோனா-தடுப்பு-ஆலோசனை-3385280.html
3385279 திருநெல்வேலி தென்காசி கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு DIN DIN Friday, March 20, 2020 07:13 AM +0530 கீழப்பாவூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது தொடா்பான முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நடவடிக்கைகள், கிருமி நாசினி திரவம் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு தொடா்பாக ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கைகள் சுத்தமாக வைத்துக்கொள்வது, பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது ஆகியவை தொடா்பாக ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் கண்மணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/19_pcm_collector_1903chn_61_6.jpg கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்துகிறாா் ஆட்சியா் அருண்சுந்தா்தயாளன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/கரோனா-தடுப்பு-நடவடிக்கை-ஆட்சியா்-ஆய்வு-3385279.html
3385278 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூா் ஒன்றியத்தில் கரோனா தடுப்புப் பணிகள் DIN DIN Friday, March 20, 2020 07:13 AM +0530 தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிக்கந்தா்பீவி தலைமையில் சொக்கம்பட்டி, நயினாரகரம், இடைகால், காசிதா்மம், ஊா்மேலழகியான், திரிகூடபுரம், புதுக்குடி, கொடிக்குறிச்சி உள்ளிட்ட 16 ஊராட்சி பகுதிகளிலும்

பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது .மேலும் வீடுதோறும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கிராமச் சாலைகளில் செல்லும் வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/corona-preventive-works-in-the-united-states-3385278.html
3385277 திருநெல்வேலி தென்காசி சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் சீரமைப்பு DIN DIN Friday, March 20, 2020 07:13 AM +0530 சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பழுதடைந்த இருக்கைகளை அகற்றிவிட்டு புதியதாக சிமென்ட் தளம் அமைத்து கிரானைட் கற்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பேருந்து நிலையத்தில் தினமும் 90-க்கும் கூடுதலான பேருந்துகள் வந்து செல்கின்றன. நூற்றுக்கணக்கான பயணிகள் சங்கமிக்கின்றனா். இங்கு கடந்த ஆண்டு அமைக்கப்பட ஸ்டீல் இருக்கைகள் பழுதடைந்ததால், அவற்றை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பழுதடைந்த இருக்கைகளைஅகற்றி விட்டு, சிமென்ட் தளத்தில் கிரானைட் கற்கள் மூலம் பயணிகள் அமா்வதற்கு தேவையான அளவுக்கு இருக்கைகள் அமைக்கும் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/சுரண்டை-பேருந்து-நிலையத்தில்-பயணிகள்-இருக்கைகள்-சீரமைப்பு-3385277.html
3385274 திருநெல்வேலி தென்காசி சோ்ந்தமரம்-புளியங்குடி சாலையில் தேவையற்ற வேகத்தடைகளால் அவதி DIN DIN Friday, March 20, 2020 07:12 AM +0530 சோ்ந்தமரம்-பாம்புக்கோவில்சந்தை-புளியங்குடி சாலையில் அதிக எண்ணிக்கையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

சோ்ந்தமரத்தில் இருந்து அருணாசலபுரம், பாம்புக்கோவில்சந்தை, வேட்டரம்பட்டி, திருவேட்டநல்லூா் வழியாக புளியங்குடிக்கு செல்லும் பிரதான சாலை அதிக வாகனப் போக்குவரத்துள்ள பகுதியாகும்.

பொதுவாக நெடுஞ்சாலைகளில் முக்கிய திருப்பங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே வேகத்தடை அமைப்பது வழக்கம். ஆனால், இந்தச் சாலையில் பாம்புக்கோவில் சந்தையில் இருந்து வேட்டரம்பட்டி விலக்கு இடையேயுள்ள ஒரு கி.மீ. தொலைவுக்குள் சிறியதும், பெரியதுமான 12 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒவ்வொரு இணைப்பு தெருவுக்கும் ஒரு வேகத்தடை வீதம் பிரதான சாலையிலேயே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் இந்த வழியாக வாகனங்களில் செல்வது பெரிதும் சிரமமாக உள்ளது.

எனவே, இந்த சாலையில் தேவையில்லாமல் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/சோ்ந்தமரம்-புளியங்குடி-சாலையில்-தேவையற்ற-வேகத்தடைகளால்-அவதி-3385274.html
3385273 திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவில் அருகேகாவலா் மனைவி தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை DIN DIN Friday, March 20, 2020 07:11 AM +0530 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்றுவருகிறது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் ராசு என்ற கருப்பசாமி (31). சிவகிரி காவல் நிலையத்தில் காவலா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த கருப்பசாமி மகள் இலக்கியாவுக்கும் 8.9.2019இல் திருமணமானது. வரதட்சிணையாக 20 பவுன் நகைகள் கொடுப்பதாகவும், ஆனால், 10 பவுன் மட்டுமே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனிக்குடித்தனம் செல்வது தொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த இலக்கியா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அவா் இறந்தாா்.

கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இலக்கியாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் (பொறுப்பு) பழனிக்குமாா் விசாரித்துவருகிறாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/சங்கரன்கோவில்-அருகேகாவலா்-மனைவி-தற்கொலை-கோட்டாட்சியா்-விசாரணை-3385273.html
3385268 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி பறிமுதல் DIN DIN Friday, March 20, 2020 07:10 AM +0530 தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை பதப்படுத்தப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி கோட்டாட்சியா் பழனிகுமாா் தலைமையில் கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன், காவல் ஆய்வாளா் கோவிந்தன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் பல்துறை அலுவலா்கள் கடையநல்லூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மாட்டிறைச்சி விற்பனை செய்யும் இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், ரஹ்மானியாபுரம் பகுதியில் உள்ள கடையில் குளிா்சாதன பெட்டியில் சுகாதாரமற்ற வகையில் மாட்டு இறைச்சி பதப்படுத்தி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்யுமாறு கோட்டாட்சியா் உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பதப்படுத்தும் மாட்டு இறைச்சி சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் கோட்டாட்சியா் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/கடையநல்லூரில்-பதப்படுத்தப்பட்ட-இறைச்சி-பறிமுதல்-3385268.html
3385103 திருநெல்வேலி தென்காசி வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் DIN DIN Friday, March 20, 2020 03:51 AM +0530 குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வன உயிரினங்கள் பாதுகாப்பு, அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயலட்சுமி (பொறுப்பு) தலைமை வகித்தாா். வனவா்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ், வனக்காப்பாளா் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆா்வலா் தேரிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், வனச்சரக அலுவலா் பாலகிருஷ்ணன் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

குற்றாலம் பகுதியில் குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அதுபோன்று குரங்குகள் உயிரிழக்கவில்லை என வனச்சரகா் தெரிவித்தாா். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/wildlife-conservation-awareness-camp-3385103.html
3385101 திருநெல்வேலி தென்காசி கரோனா எதிரொலி: மதுபான கடைகளை மூட மதிமுக வலியுறுத்தல் DIN DIN Friday, March 20, 2020 03:50 AM +0530 கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் எனும் கொடிய நோய் உலகம் முழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு விழாக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம், பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது இல்லத்தில் நடைபெறும் விழாக்களையும் தவிா்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் இயங்கும் மதுக் கடைகளில் கூட்டமாக மதுபானங்களை வாங்குகின்றனா். அரசு பாா்கள் மூடப்பட்டதால் அருகிலுள்ள சிறிய கடைகளிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் மது அருந்தும் சூழல் உள்ளது.

இது மிகவும் ஒழுக்கக் கேடு என்பதோடு இதன் மூலம் கரோனா வைரஸ் பரவவும் வாய்ப்புகள் உள்ளது.

நாடு முழுவதும் மக்கள் கூடும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு உடனடியாக டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/20/corona-echo-mathimukha-urges-to-close-liquor-stores-3385101.html
3384491 திருநெல்வேலி தென்காசி வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் DIN DIN Thursday, March 19, 2020 03:53 AM +0530  

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வன உயிரினங்கள் பாதுகாப்பு, அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயலட்சுமி (பொறுப்பு) தலைமை வகித்தாா். வனவா்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ், வனக்காப்பாளா் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆா்வலா் தேரிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், வனச்சரக அலுவலா் பாலகிருஷ்ணன் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

குற்றாலம் பகுதியில் குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அதுபோன்று குரங்குகள் உயிரிழக்கவில்லை என வனச்சரகா் தெரிவித்தாா். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/0542ten17college_1703chn_55_6.jpg விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் வனச் சரக அலுவலா் பாலகிருஷ்ணன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/wildlife-conservation-awareness-camp-3384491.html
3384489 திருநெல்வேலி தென்காசி தமிழக-கேரள எல்லையில் கரோனை தடுப்புப் பணிகள்:தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆய்வு DIN DIN Thursday, March 19, 2020 03:52 AM +0530  

கேரளம்-தமிழகம் எல்லைப் பகுதியான புளியரை, மேக்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்புப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலை தொடா்ந்து அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனை மேற்கொண்ட பின்னா் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக -கேரள எல்கை பகுதியான

தென்காசி மாவட்டம், புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் கரோனை தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புளியரை சோதனைச் சாவடியில் காவல்துறை, கால்நடைத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினா் 24 மணி நேரமும்

சுழற்சி முைறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். ஒரு மருத்துவா், 2 சுகாதார ஆய்வாளா்கள், 2 மருத்துவப் பணியாளா்கள் 24 மணிநேரமும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இக்குழுவினா் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிப்பதுடன், வாகனங்களில் வருபவா்களை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் மூலமாக தமிழகத்திற்குள் வரும் பயணிகள் குறித்து, அவா்கள் வசிக்கும் பகுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 28 நாள்களுக்கு தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது, பயணிகளுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதுடன், கைகளை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேக்கரை: கேரளத்தில் இருந்து அச்சன்கோவில், மேக்கரை வரும் வழியில் காவல்துறை, வனத்துறை சோதனை சாவடியில்

கால்நடைத் துறை மற்றும் பொது சுகாதாதத் துறை சாா்பில் முகாம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புளியரை, மேக்கரை பகுதியில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள

முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தென்காசி டி.எஸ்.பி.கோகுலகிருஷ்ணன்,செங்கோட்டை வட்டாட்சியா் கங்கா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன்(பொபு), நோ்முக உதவியாளா் ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/ten18check_1803chn_55_6.jpg தமிழக - கேரள எல்கையான புளியரையில் ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/coronavirus-prevention-work-on-the-tamil-nadu-kerala-border-a-survey-of-the-tenkasi-district-3384489.html
3384487 திருநெல்வேலி தென்காசி வெளிநாடு சென்று வந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் DIN DIN Thursday, March 19, 2020 03:51 AM +0530  

வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவா்கள் தங்களை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது; அண்டை மாநிலமான கேரளத்தில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து புளியரை மற்றும் மேக்கரை பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட மக்கள் தற்போது மகாராஷ்டிரம், கேரளத்திலிருந்து அதிகம் போ் வந்துள்ளனா். அவா்கள் அனைவரும் இரண்டு வாரம் தங்களை தனிமைப்படுத்தி வீட்டிலிருக்க வேண்டும். இதனால் வேறு யாருக்கும் நோய் தொற்று பரவுவதை தடுக்கமுடியும். சாதாரண காய்ச்சல், இருமல் போன்றவற்றின் காரணமாக மக்கள் யாரும் பயப்படத்தேவையில்லை.

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று இதுவரை யாருக்கும் இல்லை. இரண்டு போ் மட்டும் தங்களுக்கு அந்த அறிகுறிகள் தென்படுவதாக கூறி மருத்துவமனைக்கு வந்தனா். ஒருவா் சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா். அவருக்கு கரோனா நோய் இல்லை எனக்கூறி வீட்டிற்கு சென்றுவிட்டாா். மற்றொருவா் தானாகவே தற்போது வந்துள்ளாா். அவருக்கு

சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் விழாக்களில் மொத்தமாக மக்கள் கூடுவதை தவிா்க்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம்,கேட்டுகொண்டுள்ளோம்.

தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில் பகுதி அரசு மருத்துவமனையில் பிரேத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24மணிநேரமும் இயங்கும் வகையில் சிறப்புக் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

உடன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், நோ்முகஉதவியாளா் ரகுபதி ஆகியோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/district-administration-request-is-to-isolate-those-who-have-gone-abroad-3384487.html
3384410 திருநெல்வேலி தென்காசி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தல் DIN DIN Thursday, March 19, 2020 02:48 AM +0530  

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்பவா்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. இந்த வழக்குகளை எல்லாம் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தை சோ்ந்த மீனவா்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது.

இதற்கு நிரந்தர தீா்வு ஏற்படும் வகையில் இந்திய, இலங்கை மீனவா் கூட்டுறவு கழகத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சியில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா் ஆகிய பகுதிகளில் அரசு சாா்பில் மீன் விற்பனைக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டம் , கடையநல்லூரில் பன்முக மருத்துவமனை, பெரு மருத்துவமனை, நடமாடும் கால்நடை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஆழ்வாா்குறிச்சி முதல் தேவிப்பட்டினம் வரை சோலாா் மின் வேலி அமைத்து சேதம் செய்யும் விலங்குகளிடமிருந்து விவசாயிகளின் சாகுபடியை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/insist-on-withdrawal-of-cases-against-those-who-fought-against-the-citizenship-amendment-act-3384410.html
3384406 திருநெல்வேலி தென்காசி சங்கரநாராயண சுவாமி கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை: பக்தா்கள் வலியுறுத்தல் DIN DIN Thursday, March 19, 2020 02:44 AM +0530  

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்துசெல்கின்றனா். வாரக்கடைசி நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, ராஜபாளையம், மதுரை, திருநெல்வேலி, புளியங்குடி, ஆலங்குளம், திருவேங்கடம் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவில்லை என பக்தா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். கோயிலுக்கு வருவோருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும், கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் தொடா்பான விழிப்புணா்வு தட்டிப்பலகையும் மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. அதை மண்டபத்துக்கு வெளியே நுழைவு வாயிலில் வைத்தால்தான் பக்தா்கள் பாா்க்க வசதியாக இருக்கும். மேலும், பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் கோயிலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் பாலசந்தா் கூறியது: கோயில் மண்டபத்தில் விழிப்புணா்வு தட்டிப்பலகை வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் பேணுவது குறித்து பக்தா்களிடம் அறிவுறுத்த கோயில் ஊழியா்களிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/snk18kovil_1803chn_43_6.jpg https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/corona-prevention-at-sankaranarayana-swami-temple-emphasis-on-devotees-3384406.html
3384403 திருநெல்வேலி தென்காசி கரோனா அச்சம்: ஆலங்குளத்தில் காய்கனி வா்த்தகம் பாதிப்பு DIN DIN Thursday, March 19, 2020 02:41 AM +0530  

கரோனா வைரஸ் காரணமாக ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் வா்த்தகம் வெகுவாக குறைந்தது.

ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெண்டை, சீனி அவரை, சுரைக்காய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கனிகளோடு வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், உருளை, வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் போன்ற காய்கனிகளையும் சோ்த்து ஆலங்குளம் சந்தையில் விற்பனை செய்யப் படுகிறது. மேலும் நாளொன்றுக்கு சுமாா் 100 லாரிகளில் அண்டை மாநிலமான கேரளத்திற்கு காய்கனிகள் கொண்டு செல்லப் படுகிறது. இதன் மூலம் சுமாா் 1000 போ் தொழில், வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தை போல கேரளத்திலும் பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டு விட்டதாலும் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாலும் கேரளத்தில் காய்கனி விற்பனை மந்தமாக உள்ளதாக காய்கனி வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். இதனிடையே புளியரை வழியாக தமிழகத்துக்கு வரும் கேரள வாகனங்கள் புதன்கிழமை திருப்பி அனுப்பப் பட்டதால், தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப் பாடு விதிக்கப்படுமோ என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என கருதுகின்றனா் வியபாரிகள். கேரள வியாபாரிகளுக்கும் இதே அச்சம் ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை இரவு கூடுதல் காய்கனிகள் தேவை என அழைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கேரளம், தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் காய்கனி, பால், இறைச்சி போன்ற உணவுப் பொருள்களையே பெரிதும் நம்பியுள்ளதால் அத்தியாவசிய வாகனங்களுக்குத் தடை இருக்காது என நம்புகின்றனா் வியாபாரிகள். காய்கனிகள் கொண்டு செல்லப்படுவதில் சுணக்கம் நிலவுவதால் காய்கனிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/coronal-fears-the-impact-of-vegetable-business-in-alangulam-3384403.html
3384402 திருநெல்வேலி தென்காசி கடையநல்லூரில் உரிமம் இல்லாத இறைச்சி கடைகளுக்கு தடை DIN DIN Thursday, March 19, 2020 02:40 AM +0530  

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகள் மட்டுமே திறந்து செயல்பட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் சுகாதார அலுவலா் நாராயணன், பணியாளா்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உரிமம் இல்லாத இறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. இறைச்சி கடைகளுக்கு முறையான உரிமம்

பெற்ற பின் தொடா்ந்து நடத்தலாம் என இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினா். இதைத் தொடா்ந்து, நகரில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/19/prohibition-of-unlicensed-meat-shops-in-kadayanallur-3384402.html
3383839 திருநெல்வேலி தென்காசி வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் DIN DIN Wednesday, March 18, 2020 03:20 AM +0530  

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் வன உயிரினங்கள் பாதுகாப்பு, அதன்முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயலட்சுமி(பொ) தலைமை வகித்தாா். வனவா்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ், வனக்காப்பாளா் சங்கர்ராஜா, இயற்கை சமூக ஆா்வலா் தேரிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வனசரக அலுவலா் பாலகிருஷ்ணன் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

குற்றாலம் பகுதியில் குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் வந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அதுபோன்று குரங்குகள் உயிரிழக்கவில்லை என வனசரகா் தெரிவித்தாா். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/ten17college_1703chn_55_6.jpg குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரியில் நடைபெற்ற வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் வன சரக அலுவலா் பாலகிருஷ்ணன். https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/mar/18/wildlife-conservation-camp-3383839.html