Dinamani - திருநெல்வேலி - https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3061495 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் டிசம்பர் 21 மின்நிறுத்தம் DIN DIN Thursday, December 20, 2018 08:01 AM +0530 தச்சநல்லூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 21) மின்விநியோகம் இருக்காது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வெள்ளிக்கிழமை (டிச. 21) காலை 9முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி தச்சநல்லூர், பாலாஜிஅவென்யூ, சிவன்கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ்நகர், சத்திரம்புதுக்குளம், பிராங்குளம், கோகுல்நகர், கிருஷ்ணாநகர், சேந்திமங்கலம், வடக்கு பாலபாக்யாநகர், தெற்கு பாலபாக்யாநகர், திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலை, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/தச்சநல்லூர்-பகுதியில்-டிசம்பர்-21-மின்நிறுத்தம்-3061495.html
3061494 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தமிழகத்தில் மந்த கதியில் நீர் மேலாண்மைப் பணிகள்: துரைமுருகன் குற்றச்சாட்டு DIN DIN Thursday, December 20, 2018 08:01 AM +0530 தமிழகத்தில் நீர் மேலாண்மைப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக, திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவருமான துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சியான பகுதிகள் பயன்பெறும் வகையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தாமிரவருணி-நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை ரூ.369 கோடியில் நிறைவேற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு மிகவும் துரிதமாக பணிகள் நடைபெற்றன. இரண்டு கட்டப் பணிகள் முடிந்துள்ளன. ஆனால், அப் பணிகளை தொடர்ச்சியாக வேகப்படுத்தாமல் விட்டதன் விளைவாக இப்போது  திட்ட மதிப்பு ரூ.872 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2020 இல் பணி முடிந்துவிடும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மழைக் காலத்தில் மட்டுமே நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துவது சரியானதல்ல. தமிழகத்தின் மிக முக்கிய அணைகளில் ஒன்றான  மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக, அதன் மூலம் விளைநிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் பாசன முறைகள் வெவ்வேறாக உள்ளன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாவூர் போன்றவற்றில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடிகள் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார், பிசானம் என உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தண்ணீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டியது முக்கியம். பொதுவாக தமிழக அரசு நீர் மேலாண்மையில் மந்த கதியில் செயல்பட்டு வருகிறது. கால்வாய்களை தூர்வாராததால் பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/தமிழகத்தில்-மந்த-கதியில்-நீர்-மேலாண்மைப்-பணிகள்-துரைமுருகன்-குற்றச்சாட்டு-3061494.html
3061493 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி நெல்லை, தென்காசி, கடையநல்லூரில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு DIN DIN Thursday, December 20, 2018 08:01 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவரும், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முகமது அபூபக்கர் (கடையநல்லூர்), பாரதி (சீர்காழி),  மருத்துவர் பரமசிவம் (வேடசந்தூர்),  டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி) பொதுக் கணக்கு குழு செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மனக்காவலம்பிள்ளை பூங்காவில் மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும், அரசு பொறியியல் கல்லூரி அருகில் காய்கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியையும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடங்களையும், குற்றாலம் ஐந்தருவி அருகே சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ள பெடிலியா தோட்டம், புளுமோயா தோட்டம், அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
தேன்பொத்தையில் உள்ள மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருள்களையும், மாநில தென்னை நாற்றுப்பண்ணை பணிகளையும், கடையநல்லூர் நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளையும், யானை புகா அகழி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த குழுவினரிடம்,  பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 4,353 மாணவிகள் பயில்வதாகவும், 73  கழிப்பறைகளும், இணைப்பு கட்டட கழிப்பறை 50 எண்ணிக்கையில் இருப்பதாகவும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு 2 கழிப்பறைகள் இருப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். அங்கு கூடுதலாக கழிப்பறைகளை கட்டவும், சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையரிடம் குழுவினர் அறிவுறுத்தினர்.
தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு கொண்ட குழுவினரிடம், "இக்கூட்டுறவு சங்கத்தில் 200 மண்பாண்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.80 ஆயிரம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. சங்கக் கூடம் 60 ஆண்டுகள் பழமையாகிவிட்டதால் இயற்கை பேரிடரை தாங்கும் வகையில் புதுப்பித்து தர வேண்டும்' என மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
செங்கோட்டையில் உள்ள மாநில தென்னை நாற்றுப் பண்ணையில் குட்டை, நெட்டை ரகங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவினரிடம், "ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 17 ஆயிரம் நெட்டை ரகங்களும், 4 ஆயிரத்து 500 நெட்டை, குட்டை ரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு 6 மாதங்கள் வளர்க்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு வருகிறது' என அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது பொதுக் கணக்கு குழுத் தலைவர் துரைமுருகன் கூறுகையில், இம் மாவட்டத்தில் இரண்டு நாள் ஆய்வுப் பணிக்காக வந்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச. 20) அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கள ஆய்வுகள் குறித்தும், பணிகள் மேம்பாடு குறித்தும் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.பி.எம்.மைதீன்கான்(பாளையங்கோட்டை), பூங்கோதை ஆலடிஅருணா (ஆலங்குளம்), ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திருநெல்வேலி), மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஸ் நாரணவரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர், சட்டப்பேரவைக் குழு சிறப்புச் செயலர் வசந்திமலர், இணைச் செயலர் ஐயம்பெருமாள், துணைச் செயலர்கள்  தேன்மொழி,  ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/நெல்லை-தென்காசி-கடையநல்லூரில்-சட்டப்பேரவை-பொதுக்-கணக்கு-குழுவினர்-ஆய்வு-3061493.html
3061492 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி பொதிகைநகர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை தொடக்கம் DIN DIN Thursday, December 20, 2018 08:00 AM +0530 பாளையங்கோட்டை, பொதிகைநகரில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 21ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு பொதிகை விநாயகருக்கு கணபதிஹோமம், சுகிர்தஹோமம் நடைபெறுகிறது. சனிக்கிழமை (டிச. 22) காலை 7 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், இரவு 7 மணிக்கு சனீஸ்வர பூஜை, 108 நீராஞ்சனம், 9 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. 23ஆம் தேதி காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை, மாலை 4.30 மணிக்கு 2ஆம் கால லட்சார்ச்சனை, 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சர்வ ஐஸ்வர்ய பூஜை, இரவு 9 மணிக்கு தீபாராதனை, 25ஆம் தேதி காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு சந்தியா தீபாராதனை, 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முற்பகல் 10.30 மணிக்கு விசேஷ ஆயில்ய பூஜை,  இரவு 7 மணிக்கு படி பூஜை, விளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு கும்பேஷ கர்கசரி பூஜை, பிரம்ம கலச பூஜை, சையா பூஜை, கலஸாதி வாசம், அதிபாக ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 108 கலச பூஜை, கஜ பூஜை, காலை 7 மணிக்கு பால்குடம், நெய்குடம் எடுத்தல், 9 மணிக்கு 108 கலசாபிஷேகம், 508 இளநீர் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/பொதிகைநகர்-ஐயப்பன்-கோயிலில்-மண்டல-பூஜை-நாளை-தொடக்கம்-3061492.html
3061491 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி நெல்லையில் டிச.22இல் கன்னி பூஜை DIN DIN Thursday, December 20, 2018 08:00 AM +0530 திருநெல்வேலி நகரம் நேதாஜி போஸ் மார்க்கெட்டில்,  ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர் குழு சார்பில் கன்னி பூஜை விழா மற்றும் அன்னதானம் சனிக்கிழமை (டிச. 22) நடைபெற உள்ளது.
இதில் மாலை 6 மணிக்கு ஐயப்ப ஜோதி ஊர்வலம், மாலை 8 மணிக்கு இன்னிசை கீதம், இரவு 12 மணிக்கு சமபந்தி போஜனம் ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர் குழுவினர் செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/நெல்லையில்-டிச22இல்-கன்னி-பூஜை-3061491.html
3061490 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி 12 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம் DIN DIN Thursday, December 20, 2018 08:00 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி வட்டம் அபிஷேகப்பட்டி, ராதாபுரம் வட்டம் பெருங்குடி, அம்பாசமுத்திரம் வட்டம் பாப்பான்குளம், நான்குநேரி வட்டம் இடையன்குளம், சேரன்மகாதேவி வட்டம் மானாபாநல்லூர், பாளையங்கோட்டை வட்டம் திடியூர், சங்கரன்கோவில் வட்டம் பட்டாடைக்கட்டி, திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டி, வீரகேரளம்புதூர் வட்டம் வாடி, ஆலங்குளம் வட்டம் அய்யனார்குளம்,  கடையநல்லூர் வட்டம் கிருஷ்ணாபுரம், திசையன்விளை வட்டம் கோட்டைக்கருங்குளம் ஆகிய இடங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரைஅம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், குடிநீர், சாலை வசதி வேண்டி பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/12-வட்டங்களில்-நாளை-அம்மா-திட்ட-முகாம்-3061490.html
3061489 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் பகவத் கீதை உதய தினம் DIN DIN Thursday, December 20, 2018 07:59 AM +0530 வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் பகவத் கீதை உதயமான தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
வேதஞானத்தின் மணிமகுடமாகத் திகழும் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினம் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  அதன்படி, வண்ணார்பேட்டை ஹரேகிருஷ்ணா சாலையில் உள்ள இஸ்கான் கோயிலில் பகவத் கீதை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணிக்கு பாராயணத்துடன் தொடங்கியது.  மாலை  6 மணி முதல் சிறப்பு நிகழ்ச்சிகளும், பஜனைகளும் நடைபெற்றன. ஸ்ரீஸ்ரீகிருஷ்ணர் பலராமர், சிவப்பு பட்டு வஸ்திரத்தில் மோட்ச ஏகாதசி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பின்னர் சுவாமி சன்னதி முன்பாக பகவத் கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பகவத் கீதை மஹாத்மியம் குறித்து சிறப்புரை நடைபெற்றது. விழாவில் சிறப்பு சலுகையாக ரூ.400 மதிப்புள்ள பகவத் கீதை புத்தகம், ரூ.225-க்கு வழங்கப்பட்டது. இந்தப் புத்தகத்துடன் கீதை மற்றும் யோகா சம்பந்தமான ஆறு விளக்கப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் சில நாள்கள் சிறப்பு விலையில் பகவத் கீதை புத்தகம் வழங்கப்படவுள்ளது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/இஸ்கான்-கோயிலில்-பகவத்-கீதை-உதய-தினம்-3061489.html
3061488 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி: வாஞ்சி இயக்கம் பாராட்டு DIN DIN Thursday, December 20, 2018 07:59 AM +0530 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதற்கு வாஞ்சி இயக்கம் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக  வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி. ராமநாதன் வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவில் 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ள நிலையில் தமிழகம், தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், மதுரை தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/மதுரையில்-எய்ம்ஸ்-மருத்துவமனைக்கு-அனுமதி-வாஞ்சி-இயக்கம்-பாராட்டு-3061488.html
3061487 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி சாலை விபத்தில் காயமுற்ற பெண் சாவு DIN DIN Thursday, December 20, 2018 07:58 AM +0530 வண்ணார்பேட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
வண்ணார்பேட்டை சாலைத் தெருவைச் சேர்ந்த இசக்கி மனைவி  மகராசி (42). இத்தம்பதி  சில தினங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வண்ணார்பேட்டை ஆற்றுபாலப் பகுதியில் இவர்களது வாகனத்தில் கார் மோதியதாம். 
இதில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மகராசி புதன்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/சாலை-விபத்தில்-காயமுற்ற-பெண்-சாவு-3061487.html
3061486 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி நெல்லையில் திருவாசக முற்றோதுதல் DIN DIN Thursday, December 20, 2018 07:58 AM +0530 திருநெல்வேலி நகரம் மேலரத வீதியில் உள்ள ஈசான மடத்தில் 65ஆவது திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈசான மடத்தின் தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், கோடீஸ்வரன்நகர் முருகேசன்-கஸ்தூரி, வள்ளிநாயகம், துர்கா அபிராமி திருவாசக முற்றோதுதல் குழுச் செயலர் மு. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி அமைப்பாளர் முத்துசுவாமி  செய்திருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/நெல்லையில்-திருவாசக-முற்றோதுதல்-3061486.html
3061485 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி பாளை. பொறியாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு DIN DIN Thursday, December 20, 2018 07:58 AM +0530 பாளையங்கோட்டையில் பொறியாளரின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாளையங்கோட்டை என்ஜிஒ - ஏ காலனி மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம்(37).  மென்பொருள் பொறியாளர். இவர் கடந்த  2ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் புதன்கிழமை காலை ஊருக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்திருந்ததாம். மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 35 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள்,  ரூ. 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம். 
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். விரல்ரேகை நிபுணர்கள் தடையங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் சோதனைக்கு விடப்பட்டது.  அது, சம்பவ இடத்திலிருந்து அருகிலுள்ள டாஸ்மாக் வரை சென்று நின்றது.  அந்த டாஸ்மாக் கடையில் கடந்த 16ஆம் தேதி திருட்டு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, இரண்டு இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/பாளை-பொறியாளர்-வீட்டில்-ரூ10-லட்சம்-நகை-பணம்-திருட்டு-3061485.html
3061484 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி பாளை.யில் பாஜக ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, December 20, 2018 07:57 AM +0530 ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய்ப் பிரசாரம் செய்வதாக கண்டனம் தெரிவித்து, பாஜகவினர் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் அ.தயாசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர்கள் எஸ்.பி.தமிழ்செல்வன், ஏ.மகாராஜன், மண்டலத் தலைவர் எஸ்.வி.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலர் டி.வி.சுரேஷ், மாவட்டச் செயலர் முத்துபலவேசம் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/பாளையில்-பாஜக-ஆர்ப்பாட்டம்-3061484.html
3061483 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி எழுத்தாளர் அகிலாவின் 3 நூல்கள் அறிமுகம் DIN DIN Thursday, December 20, 2018 07:57 AM +0530  திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய" "நின்று துடித்த இதயம் ", " சம்முகம்" , " மணலில் நீந்தும் மீன்கள் "  ஆகிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்ச்சி, சாரல் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளையங்கோட்டை மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தார். மைய நூலகத்தின் முதல் நிலைநூலகர் வயலட் முன்னிலை வகித்தார்.  கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி வரவேற்றார்.
"நின்று துடித்த இதயம்' நூல் குறித்து மனநல மருத்துவரும், எழுத்தாளருமான ராமானுஜம் பேசுகையில்,  " தனக்கு ஏற்பட்ட இதய அறுவை சிகிச்சை அனுபவத்தை சுவாரசியமான நடையில் அகிலா எழுதியுள்ளார்.  இதய நோய் குறித்து அச்சம் ஏற்படுத்தாத வகையில் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது' என்றார்.  "சம்முகம்' என்ற குறுநாவல் குறித்து கவிஞர்கள் சக்தி வேலாயுதம், தானப்பன் ஆகியோர் பேசினர். " மணலில் நீந்தும் மீன்கள்' என்ற கவிதை நூல் குறித்து கவிஞர் ரமணி முருகேஷ் பேசினார். 
பேராசிரியர் மாஜிதா பர்வின் "பெண்களின் பாடுகள் பற்றியே இவரது அனைத்து கவிதைகளும் பேசுகின்றன' என்றார். கவிஞர் சுப்ரா நிறைவுரையாற்றினார்.  எழுத்தாளர் அகிலா ஏற்புரையாற்றினார்.  பிரபு தொகுத்து வழங்கினார்.  நல்நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/எழுத்தாளர்-அகிலாவின்-3-நூல்கள்-அறிமுகம்-3061483.html
3061482 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் DIN DIN Thursday, December 20, 2018 07:57 AM +0530 அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 இந்தப் போராட்டத்துக்கு, சங்க துணைத் தலைவர் எஸ்.வேலுசாமி தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் அப்துல் சமது முன்னிலை வகித்தார். கோட்டச் செயலர் ஜே.ஞான பாலசிங் கோரிக்கைகள் குறித்துப் பேசினார். 
போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கூறியது: மத்திய அரசின் 7-ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை  செய்த ஊதியத்தை 1-1-2016 முதல் வழங்க வேண்டும்.  பணிக்கொடையை ரூ.60 ஆயிரத்திலிருந்து  ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்கள் ஊதியத்துடன் எடுக்கும் விடுப்புகள்  20 நாள்கள் என்பதை  30 நாள்கள் எனவும்,   அதன் காலாவதி நாள்களை 180 நாள்களாக அதிகரிக்க வேண்டும். ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச்செலவு தொகை வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/கிராமிய-அஞ்சல்-ஊழியர்கள்-2ஆவது-நாளாக-வேலைநிறுத்தம்-3061482.html
3061481 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி ராமையன்பட்டியில் 3ஆவது நாளாக போராட்டம் DIN DIN Thursday, December 20, 2018 07:57 AM +0530 ராமையன்பட்டி குளத்தில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமையன்பட்டியில் புதைச் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் கால்வாய் மற்றும் குளத்தில் கலக்கிறது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர் கேடுக்கான அபாயம் நிலவுகிறது. நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கூறி ராமையன்பட்டி பொதுமக்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 3 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே,  திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ராமையன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட   மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்தப் பகுதியில் கழிவுநீர் கலக்கும் குளத்தை ஆய்வு செய்து,  அதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 
அதன்பேரில், மாநகராட்சி அலுவலர்கள் குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி வருகிறார்கள். எனினும் கழிவுநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அப்பகுதி மக்கள் 3-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/ராமையன்பட்டியில்-3ஆவது-நாளாக-போராட்டம்-3061481.html
3061480 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி அறிவியலின் தொட்டிலாக உள்ளது சங்க இலக்கியம்: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி DIN DIN Thursday, December 20, 2018 07:56 AM +0530 சங்க இலக்கியம் அறிவியலின் தொட்டிலாக உள்ளது என்றார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி கருத்தரங்கைத் தொடங்கிவைத்து "தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்' என்ற ஆய்வுக் கோவையை வெளியிட்டுத் தலைமை உரையாற்றினார்.  
கல்லூரியின் முதல்வர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.  ஆட்சிக் குழுத் தலைவர்  பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ. மீரான் மைதீன், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் மற்றும் அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத் ஆய்விதழின் முதன்மையாசிரியர் எஸ். முகம்மது ஹனீப் ஆய்வுரை நிகழ்த்தினார். 
புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உதவி இயக்குநரும் கவிஞருமான ஆண்டாள் பிரியதர்ஷினி "தமிழ்க் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசியதாவது: 
சங்க இலக்கியம் அறிவியலின் தொட்டிலாக உள்ளது. தமிழ் கவிதைகள் பண்பாட்டை உள்ளடக்கியதாக அமைகின்றன. மனிதத்தை தொலைத்த அறிவியலால் எந்தப் பயனும் இல்லை. தொல்காப்பியம் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களைப் பட்டியலிடுகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் மழை குறித்த பதிவுகள் மிகத் தெளிவாகவுள்ளன. சித்தர் பாடல்கள் பொருள் பொதிந்தனவாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியத்தில் புஷ்பக விமானம் குறித்த கருத்துகளைப் பார்க்க முடிகிறது. தமிழர் வாழ்வியல் அறிவியல் சார்ந்த வாழ்வியலாக அமைந்ததன் காரணம் பண்பாட்டுத் தொடர்ச்சியும் தொன்மையுமே ஆகும். அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித உறவுகளின் மாண்புகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்றார் அவர். 
முன்னதாக நெய்தல் ஆய்வாளர்  வஹீதையா கான்ஸ்தந்தின் தொடக்க உரையாற்றினார். இலங்கை மருத்துவ அலுவலர்கள் முருகமூர்த்தி துஷ்யந்தன், கலைச்செல்வி துஷ்யந்தன் ஆகியோர் "அறிவியல் பார்வையில் தமிழ் மருத்துவம்' என்ற தலைப்பில் நோக்கவுரையாற்றினர். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான் அறிமுகவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன.
முதலாம் அமர்வில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் ரஹ்மத் ராஜகுமாரன்,   "இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் அறிவியல் பார்வை' என்ற பொருளிலும், இரண்டாம் அமர்வில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜான் பிரதாப் குமார் "காடுகளில் கற்றவை' என்ற பொருளிலும், மூன்றாம் அமர்வில் அறிவியல் புல முதன்மையர் சே.மு. அப்துல் காதர் "அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்' என்ற பொருளிலும் சிறப்புரையாற்றினர். 
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு. சதாசிவம் "பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளும் தொடர்ச்சியும்' என்ற பொருளில் நிறைவுரையாற்றினார். அரசுதவி பெறாப் பாட வகுப்புகளின் தமிழ்த்துறைத் தலைவர்  எம். சாதிக் அலி நன்றி கூறினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2018/dec/20/அறிவியலின்-தொட்டிலாக-உள்ளது-சங்க-இலக்கியம்-கவிஞர்-ஆண்டாள்-பிரியதர்ஷினி-3061480.html