Dinamani - காரைக்கால் - https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3158430 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் கடற்கரையில் இரவு நேர போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படுமா? DIN DIN Sunday, May 26, 2019 12:27 AM +0530
கடற்கரையில் இரவு நேரத்தில் போலீஸார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டுமென காவல்துறை தலைமைக்கு பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
கோடை வெயில் கடுமையாக உள்ளதால், காரைக்கால் கடற்கரையில் பொழுது போக்குக்காக தினமும் பிற்பகல் 3 மணி முதல் திரளான மக்கள் செல்லத் தொடங்குகின்றனர்.
கடற்கரை சாலை நடைமேடையில் உள்ள இருக்கைகள், சிறுவர் பூங்கா, சீகல்ஸ் உணவகம், கடற்கரை மணல் பரப்பு உள்ளிட்டவற்றில் நீண்ட நேரம் தங்கிவிட்டு இரவு 9 மணியளவில் புறப்பட்டுச் செல்வோர் ஏராளம். வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் கடற்கரைக்குச் செல்லும் சூழலில், தற்போது கடும் வெயில் காலமாக இருப்பதையொட்டி, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருகிறது.
உள்ளூர், வெளியூரிலிருந்து கார்கள் நூற்றுக்கணக்கானவை கடற்கரையை நோக்கி பயணிக்கின்றன.  கடற்கரை மணல் பரப்பில் வெகு நேரமாக தங்கியிருப்போரை போலீஸார் சென்று வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது. எனவே கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில், மக்களுக்கான பாதுகாப்புக்கு காவல்துறையினர் ஆதரவு வெகு குறைவாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது. கூட்டம் வெகுவாக இருப்பதை பயன்படுத்தி, சமூக விரோதிகள் வழிப்பறி, வாகனத் திருட்டு போன்றவற்றில் ஈடுபடும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இளைஞர்கள் சாகசம்...
மேலும், இரவு 10 மணிக்குப் பின் இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக கடற்கரை சாலை, குறுக்குச் சாலைகளில் சாகசம் செய்கின்றனர். இரவு நீண்ட நேரம் வரை கடற்கரையில் இவர்களது நடமாட்டம் மிகுதியாக உள்ளது. இதுவும் கடற்கரைக்கு வெகுதூரத்திலிருந்து காரில் வந்துவிட்டுச் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே தினமும் பிற்பகல் முதல் இரவு வரை காரைக்கால் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக இருக்க வேண்டும். குறிப்பாக சீருடையில்லா காவலர்கள் இரவு நேரத்தில் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை நடைமேடை, சாலையோரத்தில் பலர் மது அருந்திவிட்டு புட்டிகளை உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இவற்றைக் கண்காணித்து தடுக்க 
வேண்டும். 
மேலும் இரவு நேரத்தில் கடற்கரையில் நடக்கும் பல்வேறு சமூக சீர்கேடுகளைத் தடுக்கும் விதத்தில் தமது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவை தடுக்கப்படும்பட்சத்தில், சட்டம்- ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பிருக்காது. 
மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி, கூடுதல் காவலர்களைக் கடற்கரை பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடுபடுத்த முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/காரைக்கால்-கடற்கரையில்-இரவு-நேர-போலீஸ்-ரோந்துப்-பணி-தீவிரப்படுத்தப்படுமா-3158430.html
3158429 நாகப்பட்டினம் காரைக்கால் ஆலங்குடியில் திருந்திய நெல் சாகுபடி: விவசாயிக்கு புதுச்சேரி அமைச்சர் நேரில் பாராட்டு DIN DIN Sunday, May 26, 2019 12:27 AM +0530
ஆலங்குடியில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயியை புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். 
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்வதை நேரில் அறியும் வகையில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர்
ஆர்.கமலக்கண்ணன் அக்கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அவருடன் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் முகம்மது தாசீர் உள்ளிட்ட வேளாண் துறையினரும் சென்றிருந்தனர். 
ஆலங்குடி கிராமத்தில் விவசாயி பெருமாள் என்பவர் மேற்கொண்ட திருந்திய முறை சாகுபடி நிலப்பரப்பை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.  விவசாயி பெருமாளிடம் பயிர் செய்யும் முறை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.  கிராமங்களில் தற்போது உள்ள நாற்று விடும் முறையான ஏக்கருக்கு 35 முதல் 40 கிலோ விதை நெல் பயன்படுத்தும் முறைக்கு மாற்றாக, 250 கிராம் நெல்லை மட்டும் பயன்படுத்தி 50 செ.மீ.,  இடைவெளிக்கு ஒரு நாற்று என்ற முறையில் விவசாயம் செய்து ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 68 மூட்டை நெல்லை அறுவடை செய்வதாக விவசாயி கூறியுள்ளார்.
அமைச்சர் பாராட்டு...
தமிழக அரசு அவருக்கு பாராட்டுத் தெரிவித்ததையும், வேளாண் விஞ்ஞானிகள் வந்து பயிரை ஆய்வு செய்து சென்றதையும், தொடர்ந்து இந்த முறையிலேயே சாகுபடி செய்து பயனடைவதாக விவசாயி கூறியுள்ளார். அவருக்கு அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்து காரைக்கால் திரும்பினார்.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் (பொறுப்பு) முகம்மது தாசீர் சனிக்கிழமை கூறும்போது,  திருந்திய நெல் சாகுபடி முறை என்பது லாபகரமானது, விதை நெல் அளவு குறையும் வாய்ப்பு கிடைக்கும். காரைக்கால் பகுதியில் இந்த முறையின்றி பயிர் செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு 30 மூட்டை என்ற அளவில் மகசூலைப் பெறுகின்றனர். ஆலங்குடி விவசாயி 68 மூட்டை கிடைப்பதாக கூறுகிறார்.
ஆலங்குடியில் அவர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு  வளமானதாகும். தரமான தண்ணீர் கிடைக்கிறது. அதுபோன்ற நிலை காரைக்காலில் பெரும்பாலும் இல்லை. எனினும் இந்த ஆய்வு  குறித்து வேளாண்துறை தீவிரமான ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/ஆலங்குடியில்-திருந்திய-நெல்-சாகுபடி-விவசாயிக்கு-புதுச்சேரி-அமைச்சர்-நேரில்-பாராட்டு-3158429.html
3158428 நாகப்பட்டினம் காரைக்கால் தேவ விமானத்தில் பத்ரகாளியம்மன் வீதியுலா DIN DIN Sunday, May 26, 2019 12:27 AM +0530
 மகிஷ சம்ஹார நினைவு பெருவிழாவையொட்டி, அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் தேவ விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு அம்பாள் வீதியுலா எழுந்தருளினார். 
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற  பத்ரகாளியம்மன் கோயிலில், வருடாந்திர மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெற்று வருகிறது.
முன்னதாக மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் மற்றும் தீமிதி உத்ஸவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, பத்ரகாளியம்மன் தினமும் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.  இவற்றில் 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக தேவ விமானத்தில் அம்பாள் வீதியுலா புறப்பாடாகும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட அம்பாள், சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் மின் அலங்கார தேவ விமானத்தில் எழுந்தருளினார். சிறப்பு ஆராதனைகளுக்குப் பின் பக்தர்கள் தேவ விமானத்தை வீதியுலாவாக இழுத்துச் சென்றனர். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 26) அம்பாள் பின்ன வாகனத்தில் வீதியுலாவும், திங்கள்கிழமை இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், செவ்வாய்க்கிழமை மகிஷ சம்ஹார நினைவு வைபவம் பகல் வழிபாடாக நடைபெறவுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/தேவ-விமானத்தில்-பத்ரகாளியம்மன்-வீதியுலா-3158428.html
3158427 நாகப்பட்டினம் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வசந்த உத்ஸவம் DIN DIN Sunday, May 26, 2019 12:26 AM +0530
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நந்தவனத்தில் பெருமாள் வீற்றிருக்கும் வகையில், வசந்த உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் வழிபாட்டில்   திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வசந்த உத்ஸவம் மற்றும் கோடை திருமஞ்சனப் பெருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தாயார் சன்னிதி எதிரே செயற்கையாக அமைக்கப்பட்ட நந்தவனம் போன்ற வளாகத்தின் நடுவே ஸ்ரீதேவி பூதேவியாருடன் நித்யகல்யாண பெருமாள்  வீற்றிருந்தார். 
அக்னி நட்சத்திர காலம் மற்றும் தொடரும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையிலான பிரார்த்தனையாக வசந்த உத்ஸவம் நடத்தப்படுவதையொட்டி, பெருமாளுக்கு மூலிகை எண்ணெய் சாற்றப்பட்டு, பன்னீரில் கரைத்த குங்குமப்பூ பெருமாள் மீது பூசப்பட்டது. மூலிகை, வாசனை திரவியங்கள் கலந்த தூய சந்தனம், பெருமாளின் திருமார்பிலும், கை மற்றும் நெற்றிப் பகுதியிலும் பூசப்பட்டது. பெருமாளுக்கு வெட்டிவேர் மூலம் தயார் செய்யப்பட்ட கிரீடம் அணிவிக்கப்பட்டது. கிரீடத்தில் உலர் பழ வகைகள் பதிக்கப்பட்டிருந்தன.
 இதேபோல உபயநாச்சியார்களுக்கும் கை, நெற்றிப் பகுதியில் பூசப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய், சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர், உபயதாரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 
திருமஞ்சன நாள்...: இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 26) கோயிலில் மூலவராக சயன நிலையில் வீற்றிருக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. காலை 10 முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோடை வெப்பம் தணியும் நோக்கிலும், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் தணியவும் பெருமாளுக்கு இவ்வகையான வழிபாடு பல ஆண்டுகளாக, அக்னி நட்சத்திர காலத்தில் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/நித்யகல்யாண-பெருமாள்-கோயிலில்-வசந்த-உத்ஸவம்-3158427.html
3158426 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயிலில்: பிரமோத்ஸவ மகா கணபதி ஹோமம் DIN DIN Sunday, May 26, 2019 12:26 AM +0530 வைகாசி பிரமோத்ஸவத்தையொட்டி, திருநள்ளாறு கோயிலில் மகா கணபதி ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரமோத்ஸவ கொடியேற்றம் மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தினமும் சுவாமி புறப்பாடு, தேரோட்டம்,  சனீஸ்வர பகவான் வீதியுலா, தெப்போத்ஸவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தத் திருவிழாவின்  பூர்வாங்க பூஜை தொடக்கமாக வெள்ளிக்கிழமை ஆச்சார்யவர்ணம், அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை என்கிற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தொடர் நிகழ்ச்சியாக சனிக்கிழமை சொர்ண கணபதி, ஆதி கணபதிக்கு மகா கணபதி சன்னிதி முன்பாக  மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. ஹோமத்தில் 108 வகையான ஹோம திரவியங்கள், அருகம்புல், மோதகத்துடன் பூஜை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விநாயகர்களுக்கு 16 வகையான திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சொர்ண கணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. 
தொடர்ந்து கோயிலில் கஜ (யானை) பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுர அதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் ஜெ.சுந்தர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/திருநள்ளாறு-கோயிலில்-பிரமோத்ஸவ-மகா-கணபதி-ஹோமம்-3158426.html
3158425 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயிலில்: பிரம்ம தீர்த்தக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம் DIN DIN Sunday, May 26, 2019 12:26 AM +0530
திருநள்ளாறில் பிரம்ம தீர்த்தக் குளத்தை மேம்படுத்தும் பணி இம்மாத நிறைவு நிலையில் உள்ள சூழலில், பிரமோத்ஸவம் தொடங்கவுள்ளதையொட்டி தண்ணீர் நிரப்பும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருநள்ளாறில் பெரும்பான்மையான பக்தர்கள் புனித நீராடும் வகையில் உள்ளது நளன்  தீர்த்தக் குளம். இது தவிர, சரஸ்வதி தீர்த்தக்குளம், பிரம்ம தீர்த்தக் குளம்,  எமன் தீர்த்தக் குளம் ஆகியன பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இக்குளத்தில்தான் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய உத்ஸவங்களில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்ப வைபவமும் இத்தீர்த்தக் குளத்திலேயே நடைபெறும். இக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் சில திசைகளில் கரைகள் பலமிழந்திருந்ததால், திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கரை கட்டுதல், தீர்த்த மண்டபம் கட்டுதல் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.
நிகழாண்டு பிரமோத்ஸவம் வரும் 29-ஆம் தேதி தர்பாரண்யேசுவரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.   ஜூன் 14-ஆம் தேதி தெப்ப வைபவம் நடைபெறவுள்ளது.
பிரம்மோத்ஸவம் தொடங்கும் தருணத்திலேயே பிரம்ம தீர்த்தக் குளத்தின் படிக்கட்டுகள் கட்டுமானம், தீர்த்த மண்டபம் கட்டுமானம் உள்ளிட்டவை நிறைவு செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பிட வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. மே மாத இறுதிக்குள் பணிகள் முழுமையும் நிறைவடைந்து ஒப்படைக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஏ.விக்ரந்த் ராஜா அறிவுறுத்தியிருந்தார்.
குளத்தில் படிக்கட்டுகள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், தீர்த்த மண்டபம் கட்டி சாரங்கள் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. அடுத்தகட்டமாக வர்ணம் பூசப்பட வேண்டும். இதற்கிடையே சனிக்கிழமை முதல் குளத்தின் அருகே உள்ள ஆழ்குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டது.
 அடுத்த 2 நாள்களில் குளத்தில் தேவையான அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டு விடும். மண்டபம் வர்ணம் பூசும் பணியும் அடுத்த சில நாள்களில் தொடங்கிவிடும். நிகழாண்டு மேம்படுத்தப்பட்ட தீர்த்தக் குளத்தில் தெப்பல் உத்ஸவம்
நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/26/திருநள்ளாறு-கோயிலில்-பிரம்ம-தீர்த்தக்-குளத்தில்-தண்ணீர்-நிரப்பும்-பணி-தொடக்கம்-3158425.html
3157857 நாகப்பட்டினம் காரைக்கால் பாரபட்ச மனநிலையை பிரதமர் மாற்றிக் கொள்ள வேண்டும்: திமுக DIN DIN Saturday, May 25, 2019 01:02 AM +0530
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிடையே பாரபட்சமான மனநிலையை பிரதமர் இனி மாற்றிக்கொண்டு, மக்கள் நலன் கருதி நேசக்கரம் நீட்டவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.   
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியை கைப்பற்றியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்குமான போக்கில் ஆரோக்கியமில்லாதது, மத்திய பாஜக அரசின் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது பாரபட்சமான போக்கு, ஆளுநர்களை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் போக்கு ஆகியவை மக்களிடையே ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் புதுச்சேரியில் வெற்றிபெற்றுள்ளது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழகத்தைப் பொருத்தவரை திமுக வெற்றிக்கு முழு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அவரே தலைவராகவும், தொண்டராகவும், பிரசாரம் செய்பவராகவும் இருந்து செயல்பட்டுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த பூமியில்  மதவாதம் தலைக்காட்ட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.  விரைவில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவதற்கு காரைக்கால் திமுக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  புதுச்சேரியை பொருத்தவரை தகுதியான, தரமான, அனுபவமிக்க ஒரு வேட்பாளரை அடையாளம் காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்கள் செய்த கைமாறாகவே இந்த வெற்றியைப் பார்க்கவேண்டியுள்ளது.  புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகளைப் பெற்று வி.வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு காரைக்கால் திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். பாரபட்சமான போக்கைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் தங்கள் மாநிலங்களாகக் கருதி நேசக்கரம் நீட்ட வேண்டும். இதன் மூலம் மக்கள் பயனடைவர் என்றார் 
 நாஜிம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/பாரபட்ச-மனநிலையை-பிரதமர்-மாற்றிக்-கொள்ள-வேண்டும்-திமுக-3157857.html
3157856 நாகப்பட்டினம் காரைக்கால் ஆட்சியரகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்: அறைக்கு சீல் வைப்பு DIN DIN Saturday, May 25, 2019 01:02 AM +0530
வாக்கு எண்ணும் மையத்திலிருந்து காரைக்கால் ஆட்சியரகத்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளான நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகியவற்றில் நடந்தது. இதற்காக 164 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் விவிபாட் இயந்திரங்களும்பயன்படுத்தப்பட்டன. வாக்குச் சாவடிகளிலிருந்து காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு.கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்துக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை  மையத்தின் இருவேறு இடங்களில் நடைபெற்றது. திருள்ளாறு, நெடுங்காடு ஓரிடத்திலும், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகியவை ஓரிடத்திலும் என  உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இரவு 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கைப் பணி நிறைவடைந்தது. பின்னர் இவற்றை தேர்தல் துறையினர், கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பான அறையில் வைத்தனர். துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்தனர். இந்த மையத்திலிருந்து காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள துணை ஆட்சியரக கட்டத்துக்கு இயந்திரங்களைக் கொண்டுவரும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்டத் துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் துறையினர் முன்னிலையில் இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு துணை ராணுவப் படையினர், புதுச்சேரி மாநில போலீஸார் பாதுகாப்புடன் ஆட்சியரகம் கொண்டு செல்லப்பட்டது. இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியன பேரவைத் தொகுதி வாரியாக பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 
இந்த செயல்பாடுகள் பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/ஆட்சியரகத்துக்கு-கொண்டு-செல்லப்பட்ட-வாக்குப்-பதிவு-இயந்திரங்கள்-அறைக்கு-சீல்-வைப்பு-3157856.html
3157854 நாகப்பட்டினம் காரைக்கால் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்த்த காங்கிரஸார்..! DIN DIN Saturday, May 25, 2019 01:02 AM +0530
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி, மக்களவைத் தேர்தலில் அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, காரைக்கால் 5 பேரவைத் தொகுதிகளிலும் முதன்மையான வாக்குகள் பெற்றும் வெற்றிக் கொண்டாட்டத்தை காங்கிரஸார் தவிர்த்துவிட்டனர். 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் இலவச அரிசி வழங்கல் புதிய வேலைவாய்ப்புகள், அரசு சார்பு நிறுவனத்தினருக்கு ஊதிய நிலுவை, பள்ளி, கல்லூரிகள் முதல் அனைத்து அரசுத்துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பாதது, ரேஷன் கடைகள் செயல்படாதது, வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம், அரசு மருத்துவமனையில் மேம்பாடு இன்மை என மக்களின் கோரிக்கைகளை முழுமையாகவோ அல்லது 50 சதவீதமோ நிறைவேற்ற முடியாத நிலையில் அரசு சிக்கலை சந்தித்துவருகிறது.
இவ்வளவு சூழலிலும் ஆளும் கட்சியானது, மக்கள் தொகையில் மாநிலத்தில் 2-ஆவது பெரிய பிராந்தியமான காரைக்காலில் கட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்தக்கூடிய, கட்சியினரை உற்சாகப்படுத்தக்கூடிய, கட்சி நிர்வாகத்தினரிடம் கருத்துகளைக் கேட்டு அதன்படி செயல்படுதல் போன்ற  எந்த செயலிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என்பது அக்கட்சியினர் வேதனையுடன் தெரிவிக்கும் கருத்தாகும்.
மேலும் மாநிலத்தில் ஓர் அமைச்சர் காரைக்காலை சேர்ந்தவர். முதல்வர் உள்ளிட்ட பிறர் புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களைச் சேர்ந்தோர். இவர்களில் 2 அமைச்சர்கள் காரைக்காலுக்கு துறை சார்பு செயல்பாடுகளில் பங்கேற்க ஆண்டுக்கு ஓரிண்டு நாள்களே வருகின்றனர். அண்மையில் மாவட்ட நிர்வாகி ஒருவர் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். மக்களவைத் தேர்தலின்போது காரைக்காலில் பிரசாரம் செய்யக்கூட வராத முதல்வர், மருத்துவமனையில் அவரை சந்திக்க  வந்தது கட்சியினர் வெறுப்பு மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் வி.வைத்திலிங்கம் மாநிலத்தில் வரலாறு காணாத வகையிலான வித்தியாசத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். காரைக்கால் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முதன்மையான வாக்குகளைப் பெற்றது. மாநில மக்கள் மாநில ஆட்சி மீது கடும் கோபத்தில் இருப்பதாக ஆட்சியாளர்களே கூறிவரும் நிலையில், இந்த வெற்றி காங்கிரஸாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் இதைக் கொண்டாட முடியாத வகையில் போனது அக்கட்சியினரிடையே ஒருவித வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மூத்த அரசியல்வாதியான வைத்திலிங்கம் வெற்றிபெற்றும் மத்தியில் காங்கிரஸ் பலமில்லாத வகையில் போய்விட்டதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட 2  தொகுதிகளில் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவியதும் காரணமாக சொல்லப்படுகிறது. 
காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என்பது பாஜகவின் எண்ணமாக இருப்பதாக கூறும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலேயே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியன் அவசியம் ஏற்பட்டிருப்பதாகக் கூறும் நிலையில், புதுச்சேரியில் ஆளும் கட்சி, அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கவுள்ள பேரவைத் தேர்தலில், இந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற  முன்னணி வாக்குகளைப் பெறவேண்டுமெனில் புதுச்சேரி மாநிலத்திலும் ஆட்சியின் செயல்பாடுகளில் சிறப்புகளும், கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்வதும் அவசியம்.  காரைக்காலில் ஒரே பதவியில் நீண்ட ஆண்டுகளாக உள்ளோரை மாற்றி, புதியவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.
மாநில ஆட்சித் தலைமையின் போக்கிலும் மாற்றம் வேண்டும். கட்சியின் நிர்வாகிகளின் கருத்துகளை அறிதல், உள்ளூர் அமைச்சரின் கட்டுப்பாட்டில் சில செயல்பாடுகளை ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்பட்சத்தில், வரும் பேரவைத் தேர்தலில் இப்போது மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பெற்ற நிலையை சந்திக்காமல் தவிர்க்க முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சிலர் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/வெற்றிக்-கொண்டாட்டத்தைத்-தவிர்த்த-காங்கிரஸார்-3157854.html
3157853 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகள்: வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் DIN DIN Saturday, May 25, 2019 01:02 AM +0530
மக்களவைத் தேர்தலையொட்டி, காரைக்காலில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முதன்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. 
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு விவரம் :
நெடுங்காடு : காங்கிரஸ் வேட்பாளர் வி.வைத்திலிங்கம் 16, 254. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி  6,399. நாம் தமிழர்  795, மக்கள் நீதி மய்யம்  596, நோட்டா  342.
திருநள்ளாறு : காங்கிரஸ்  14,799. என்.ஆர்.காங்கிரஸ்  7,734.   நாம் தமிழர்  753. மக்கள் நீதி மய்யம்  282.நோட்டா 260.
காரைக்கால் வடக்கு : காங்கிரஸ் 15,326. என்.ஆர்.காங்கிரஸ்  7,429.  நாம் தமிழர் 1,150. மக்கள் நீதி மய்யம்  993. நோட்டா  374.
காரைக்கால் தெற்கு : காங்கிரஸ் 17, 181. என்.ஆர்.காங்கிரஸ்  3,439. மக்கள் நீதி மய்யம்  681. நாம் தமிழர்  581. நோட்டா 237.
நிரவி - திருப்பட்டினம் :  காங்கிரஸ் 14,735. என்.ஆர்.காங்கிரஸ் 6,278. நாம் தமிழர் 1,065. மக்கள் நீதி மய்யம் 488, நோட்டா  360.
காரைக்கால் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரவை உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த 1 பேரவை உறுப்பினரும் இருந்தும் இந்த 3 தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பின்தங்கிய நிலையிலேயே வாக்குகளைப் பெற்றுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/காரைக்காலில்-5-பேரவைத்-தொகுதிகள்-வேட்பாளர்கள்-பெற்ற-வாக்கு-விவரம்-3157853.html
3157851 நாகப்பட்டினம் காரைக்கால் பாஜகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம் DIN DIN Saturday, May 25, 2019 01:01 AM +0530
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காரைக்காலில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் வெள்ளிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பாஜக புதுச்சேரி மாநில ஓ.பி.சி. அணி தலைவர் ஜெ.துரைசேனாதிபதி தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அந்த பகுதியிலும், திருநள்ளாறு வீதி - பாரதியார் வீதி சந்திப்பிலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் ஓ.பி.சி. அணி மாநிலச் செயலர் மணிகண்டன், மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் கே.ராஜவேலு, மாவட்டத் துணைத் தலைவர் குமரவேல், அய்யாசாமி மற்றும் தொகுதி தலைவர் முருகன் மற்றும் செல்வராஜ், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநில இளைஞரணி பொதுச்செயலர்
செந்தில் அதிபன் வரவேற்றார். வடக்குத் தொகுதி செயலர் அழகிரி நன்றி கூறினார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/பாஜகவினர்-இனிப்பு-வழங்கிக்-கொண்டாட்டம்-3157851.html
3157850 நாகப்பட்டினம் காரைக்கால் அம்பகரத்தூர் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு DIN DIN Saturday, May 25, 2019 01:01 AM +0530 அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு வரும் செவ்வாய்க்கிழமை (மே 28) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. அம்பரனை அழிக்கும் கோலத்தில் மூலவராக பத்ரகாளியம்மன் வெள்ளை நிற ஆடை உடுத்தி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வருடாந்திர மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பத்ரகாளியம்மன் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகின்றன. 
முக்கிய நிகழ்வாக புஷ்ப பல்லக்கில் அம்பாள் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு ( மே 27) 11 மணியளவில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை  பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவாக சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மே 31-ஆம் தேதி விடையாற்றியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/25/அம்பகரத்தூர்-கோயிலில்-மகிஷ-சம்ஹார-நினைவு-வழிபாடு-3157850.html
3157339 நாகப்பட்டினம் காரைக்கால் பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் DIN DIN Friday, May 24, 2019 01:26 AM +0530
திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணிக்கை நடைபெற்றது. 
இதில், நாடுமுழுவதும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை வரவேற்கும் வகையில் திருத்துறைப்பூண்டியில் பாஜக அமைப்புச் செயலர் சிவக்குமார் தலைமையில், மாவட்ட முன்னாள் செயலர் இலசுமணி, மாவட்டச் செயலர் சிவக்குமார், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நகரச் செயலர் பாலாஜி உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில், பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை பி. சிவா, மாவட்ட பொதுச் செயலர் வி.கே. செல்வம், கோட்ட இணைப் பொறுப்பாளர் சி.எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவ. காமராஜ் உள்ளிட்டோர் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 
தொடர்ந்து, வெற்றியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/24/பாஜகவினர்-பட்டாசு-வெடித்துக்-கொண்டாட்டம்-3157339.html
3157338 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றப்பட்ட நடைமுறை: கட்சியினர் வருத்தம் DIN DIN Friday, May 24, 2019 01:26 AM +0530
புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலையொட்டி, காரைக்காலில் பதிவான வாக்குகள் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. 
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் பிராந்தியங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதியிலேயே எண்ணப்பட்டு புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டன. காரைக்காலில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவின்போது 77.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த இயந்திரங்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த மையத்தில் 2 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் 2 பேரவைத் தொகுதிகள் ஓர் இடத்திலும், 3 பேரவைத் தொகுதிகள் ஓர் இடத்திலும் என வாக்குகள் எண்ணப்பட்டன. சரியாக காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி, தேர்தல் பார்வையாளர் (பொது) பிரசன்ன ராமசாமி, செலவினப் பார்வையாளர் பாபுராவ் நாயுடு ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான  ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் ஆகியோர் பிற ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
வாக்கு எண்ணும் 2 மையங்களில் தலா 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன.  ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் 3 சுற்றுகள் வீதம் வாக்குகள் எண்ணப்பட்டன. 3-ஆவது சுற்றின் நிறைவில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட  5 விவிபாட்  இயந்திரங்களில் உள்ள பதிவுகள் எண்ணப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் ஆகியவற்றை எண்ணுவதால், வாக்கு எண்ணிக்கை நிறைவடைய கூடுதல் நேரமாகுமெனக் கருதி, வாக்கு எண்ணும் அறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்து. ஒவ்வொரு சுற்று முடிவின் வாக்கு விவரங்கள் புதுச்சேரி தலைமைத் தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்டது. காரைக்கால் தேர்தல் துறையில் வாக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை. மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். முகவர்கள், பத்திரிகையாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  முந்தைய 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவிலும், வாக்கு விவரப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் இம்முறை அந்த நடைமுறையின்றி, புதுச்சேரி தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பேரவைத் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் உள்ளிட்ட தகவலை காரைக்கால் வாக்கு எண்ணும் மையம் மூலமாக  அந்தந்த கட்சியினரும், மக்களும் தெரிந்துகொள்ள முடியாததால் வருத்தம் அடைந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/24/வாக்கு-எண்ணிக்கையில்-மாற்றப்பட்ட-நடைமுறை-கட்சியினர்-வருத்தம்-3157338.html
3157336 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பே இல்லாத காரைக்கால் DIN DIN Friday, May 24, 2019 01:26 AM +0530
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை காரைக்கால் தேர்தல் துறையினர் முழுமையாகக் கையாண்டதால், காரைக்காலில் வாக்கு எண்ணியதற்கான அறிகுறியே தெரியாமல், எந்தவித பரபரப்புமின்றி காணப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அந்தந்த பிராந்தியங்களில் நடைபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.
நீண்ட காலமாக காரைக்காலில் வாக்குகள் எண்ணும் மையமாக அண்ணா அரசு கலைக் கல்லூரி இருந்துவருகிறது. பொதுவாகவே வாக்குகள் எண்ணப்படும் நாளில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் எல்லைப் பகுதியில் திரளான மக்கள் கூடியிருப்பர். பேரவைத் தேர்தலாக இருந்தால் இவை கூடுதலாகவும், மக்களவைத் தேர்தலாக இருப்பின் ஆங்காங்கே மக்கள் நின்று பேரவைத் தொகுதியின் வாக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ள முற்படுவர். 
பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து செல்லாத வகையில் போலீஸôர் தடுப்புகளை அமைத்து, காவல்  பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கையின்போது பாரதியார் சாலையில் (வாக்கு எண்ணும் மையம் உள்ள பகுதி) வழக்கமான போக்குவரத்து இருந்தது. வாக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் யாரும் மையம் அருகே வரவில்லை.
பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது  ஒலிபெருக்கி சாதனம் வைத்து வாக்குகள் விவரம் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காணப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் வாக்குகள் பதிவு விவரம் தெரிவிக்கப்படவில்லை. முந்தைய தேர்தல்களில் மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் வாக்கு எண்ணும் அறை சீல் உடைப்பு மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கண்காணிப்புப் பணி இருந்தது. இம்முறை மாவட்டத் தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் பணி தொடங்கும் முன்னரே அந்த வளாகத்திலிருந்து வெளியேறிவிட்டார். 
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா கூறும்போது, 2 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மையத்துக்கும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில் பணிகள் நடைபெறும். இந்த மையத்தின் முழு பொறுப்பும் அவர்களைச் சார்ந்தது. மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அந்த இடத்தில் வேலையில்லை. பிற ஏற்பாடுகளைக் கவனித்தல் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டலாகும் என்றார். புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும், மத்திய அளவில் பாஜக முன்னிலை வகித்த போதிலும் இரு கட்சியினரும் காரைக்காலில் பெரிய அளவில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசியின் மூலம் முன்னிலை, வெற்றி விவரங்களைத் துல்லியமாக மக்கள் அறிந்துகொள்ள முற்பட்டதால், காரைக்காலில் வாக்கு எண்ணிக்கை மையத்தில்  குறிப்பிட்ட பகுதியைத் தவிர, வேறெங்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்குரிய பரபரப்பு ஏதும் காணப்படவில்லை.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/24/வாக்கு-எண்ணிக்கை-பரபரப்பே-இல்லாத-காரைக்கால்-3157336.html
3157333 நாகப்பட்டினம் காரைக்கால் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்கள் பறிமுதல் DIN DIN Friday, May 24, 2019 01:25 AM +0530
திருநள்ளாறு பகுதி சேத்தூர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வராதது மட்டுமல்லாது, சாலையில் புதை நிலையில் போடப்பட்டிருக்கும் பிரதான குடிநீர் குழாயிலிருந்து, வீட்டின் கீழ்நிலை தொட்டிக்கு நேரடியாக உயர்திறன் கொண்ட மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சும் செயலிலும் குடியிருப்புவாசிகள் பலர் சட்ட விரோதமாக  ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அடுத்தடுத்த வீடுகளுக்கு குடிநீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தோரும் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினரை வலியுறுத்தி வருகின்றனர்.
திருநள்ளாறு கொம்யூன்,  சேத்தூர், காமாட்சி நகர் பகுதியிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது 8 வீடுகளில் உயர்திறன் கொண்ட மோட்டார் வைத்து குடிநீரை பிரதானக் குழாயிலிருந்து உறிய பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த மோட்டார்களை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை குறித்து ஆணையர் கூறும்போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக பலர் புகார் கூறுகின்றனர். புகார் தெரிவிக்கும் பகுதியில் சோதனை நடத்தும்போது, இதுபோல மோட்டார் வைத்து தண்ணீரை ஈர்ப்பது தெரியவருகிறது. ஒரு குடியிருப்புப் பகுதியில் மட்டும் 8 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதல் முறையாக இருந்தால் அபராதம் வசூலித்துக்கொண்டு மோட்டார் திருப்பித் தரப்படும். 2-ஆவது முறை என்றால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவது திருப்பித் தரப்பட மாட்டாது. மேலும் இந்தத் தவறை செய்தால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும். தொடர்ந்து திருநள்ளாறு கொம்யூன் பகுதியில் தீவிரமான சோதனையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஈடுபடுவர் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/24/சட்டவிரோதமாக-பொருத்தப்பட்டிருந்த-மின்-மோட்டார்கள்-பறிமுதல்-3157333.html
3156848 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் ஐக்கிய வழிபாடு DIN DIN Thursday, May 23, 2019 06:27 AM +0530 காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் ஐக்கிய வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், தேவாரம் அருளித் தந்தவருமான திருஞான சம்பந்தர் ஐக்கியமான வைகாசி மூல நட்சத்திரத்தில், காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் ஐக்கிய வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பகல் 12 மணியளவில் உத்ஸவ மூர்த்தியான திருஞான சம்பந்தரை கைலாசநாதர் முன்பாக எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக கோயிலில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னிதியில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
இரவு நிகழ்ச்சியாக, உத்ஸவ மூர்த்தியான திருஞான சம்பந்தருக்கு கொன்றை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிவ வாத்தியங்களுடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. மீண்டும் கோயிலை வந்தடைந்ததும், திருஞானசம்பந்தரை, மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதர் முன்பாக எழுந்தருளச் செய்து, இறைவனிடம் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/காரைக்கால்-கைலாசநாதர்-கோயிலில்-திருஞான-சம்பந்தர்-ஐக்கிய-வழிபாடு-3156848.html
3156847 நாகப்பட்டினம் காரைக்கால் யாழ்முரி நாதர் கோயிலில் வைகாசி மூல நட்சத்திர வழிபாடு DIN DIN Thursday, May 23, 2019 06:26 AM +0530 தருமபுரம் யாழ்முரிநாதர் கோயிலில் வைகாசி மூல நட்சத்திர வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தருமபுரத்தில், தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான தேனாமிர்தவல்லி சமேத  யாழ்முரி நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் யாழ் வாசிப்பை மெய் மறந்து சிரத்தை சாய்த்தவாறு கேட்கும் கோலத்தில், தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, சிவ தலத்துக்குரிய பல்வேறு வழிபாடுகள் உபயதாரர்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டுவருகிறது. இக்கோயிலில் வைகாசி மாத மூல நட்சத்திர வழிபாடு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.  இதையொட்டி, சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்விக்கப்பட்டன. பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு கையில் யாழ் சுமந்தவாறு அலங்காரம் செய்து, ரதத்தில் வீதியுலா செல்லும் நிகழ்வு இரவில் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் பங்களிப்புடன் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/யாழ்முரி-நாதர்-கோயிலில்-வைகாசி-மூல-நட்சத்திர-வழிபாடு-3156847.html
3156846 நாகப்பட்டினம் காரைக்கால் சங்கரர், ராமானுஜர் பெருமைகள் குறித்த சொற்பொழிவு DIN DIN Thursday, May 23, 2019 06:26 AM +0530 காரைக்காலில் சங்கரர், ராமானுஜர் பெருமைகள் குறித்த சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
சமுதாய நல்லிணக்கப் பேரவையின் காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் மாதந்தோறும், தேசியத் தலைவர்கள், சமுதாய நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டோரை மையமாக வைத்து, சிறப்பு சொற்பொழிவு நடத்தப்படுகிறது.
அந்தவகையில்,  நிகழ்மாதம் ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோரது பிறந்த தினத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களது சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பக்த ஜன சபா தலைவர் கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கும்பகோணம், ஜோதிமலை இறைப்பணிக் கூட நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள் கலந்துகொண்டு, ஆதிசங்கரர் குறித்தும், சிதம்பரம் தில்லை திருசித்திரக்கூடத்தை சேர்ந்த ஏ.வி.ரங்காச்சாரியார் சுவாமிகள்,  ராமானுஜரின் பெருமைகள் குறித்தும் சொற்பெழிவாற்றினர்.
சமுதாய நல்லிணக்கப் பேரவை மாநில அமைப்பாளர் ராஜ.முருகானந்தம், பேரவையின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். மேலும் காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாச்சாரிய வேதசிவாகம வித்யா பீட முதல்வர் பால. சர்வேஸ்வர குருக்கள். ஏ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோரும் பேசினர்.
நிகழ்ச்சியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகள், சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
இதற்கான ஏற்பாடுளை  பேரவை காரைக்கால் பொறுப்பாளர்கள்  ஞானசேகரன், சுந்தரமூர்த்தி, சிவகுமார், நாகை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/சங்கரர்-ராமானுஜர்-பெருமைகள்-குறித்த-சொற்பொழிவு-3156846.html
3156845 நாகப்பட்டினம் காரைக்கால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்: இயந்திர உழவுப் பணியில் ஈடுபட்ட  அமைச்சர் DIN DIN Thursday, May 23, 2019 06:26 AM +0530 காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வேளாண் தொழிலாளர்களுடன் சேர்ந்து இயந்திர உழவுப் பணியில் புதன்கிழமை  ஈடுபட்டார்.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, மோட்டார் பம்பு செட்டு வைத்துள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களில் தண்ணீர் பாய்ச்சி, வரப்பு மற்றும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியிலும், நிலத்தை உழுது, நடுவைக்குத் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்பகரத்தூருக்கு புதன்கிழமை வந்த புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், அங்குள்ள அவரது நிலத்தில் நடைபெறும் குறுவை சாகுபடி பணிகளைப் பார்வையிட சென்றார். அப்போது,  வயலில் தண்ணீர் பாய்ச்சி, இயந்திரம் மூலம் நிலத்தை உழும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர், தனது நிலத்தில் இயந்திரத்தைக் கொண்டு உழவுசெய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து, அமைச்சர் கூறியது: காரைக்காலில் இருக்கும் நாள்களில் வயல் பகுதிக்குச் சென்று பயிர் நிலையை அறிந்து வருவதில் ஆர்வம் கொள்வேன். இரவு என்றும் பார்ப்பதில்லை. தொழிலாளர்கள் செய்யும் பணியை, நானே நேரடியாகச் செய்வதில் ஆர்வம் அதிகம். பொதுவாழ்க்கையில் அதிக நேரம் செலவிடும் நிலையில், ஓய்வு நேரத்தில் எங்களது விளைநிலத்தில் நடக்கும் விவசாயத்தின் மீது கவனம் செலுத்துவேன் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/குறுவை-சாகுபடியில்-விவசாயிகள்-தீவிரம்-இயந்திர-உழவுப்-பணியில்-ஈடுபட்ட--அமைச்சர்-3156845.html
3156844 நாகப்பட்டினம் காரைக்கால் அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம் DIN DIN Thursday, May 23, 2019 06:26 AM +0530 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் புதிய நடைமுறையை மாநில பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அதன்படி, அந்தந்த பள்ளியில் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து, அதே பள்ளியில் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்காக அந்தந்த பள்ளிகளில் கடந்த 17-ஆம் தேதி வரை  விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. மே 22 முதல் 24-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
 அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 28-ஆம் தேதியும்,  தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 30-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தி, சேர்க்கை ஆணை தரப்படவுள்ளது.
முதலாவதாக, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளில் புதன்கிழமை தொடங்கியது. கல்வித்துறையின் விதிகளின்படி கலந்தாய்வு நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு, மாணவர் விரும்பும் பாடப் பிரிவுகள் தரப்பட்டன.
குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே பங்கேற்பு: அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களே அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒருசில மாணவர்களே 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர். தனியார் பள்ளிகள் பலவும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான பணியை ஏற்கெனவே முடித்துவிட்டன.
இதுவரை, காரைக்கால் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடப் பிரிவுகளுக்கான விரிவுரையாளர்கள் பணியிடங்களில் 17 இடங்கள் காலியாக உள்ளதாக, ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பல விரிவுரையாளர்கள் பணி ஓய்வு பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
மதிப்பெண் குறைவு, தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் வகையில் பொருளாதார வசதி இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளியை பெற்றோர்கள், மாணவர்கள் நாடுகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் விரிவுரையாளர்கள் இல்லாமல் இருந்தால், மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கும். இந்த விவகாரத்தில் புதுச்சேரி மாநில கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை செயலர், கல்வித் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/அரசுப்-பள்ளிகளில்-பிளஸ்1-மாணவர்-சேர்க்கைக்கான-கலந்தாய்வு-தொடக்கம்-3156844.html
3156843 நாகப்பட்டினம் காரைக்கால் இன்று வாக்கு எண்ணிக்கை: தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரி ஆய்வு DIN DIN Thursday, May 23, 2019 06:25 AM +0530 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (மே 23)  நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட  தேர்தல் துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியன, காரைக்கால் அண்ணா  அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்தால் காரைக்கால் தேர்தல் பணிக்கு பொது பார்வையாளராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ராமசாமி மற்றும் செலவினப் பார்வையாளர் பாபுராவ் நாயுடு ஆகியோருடன் மாவட்டத்  தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார். இம்மையத்தில் வாக்கு எண்ணுவதற்கான பிரிவுகள், அமைக்கப்பட்டிருக்கும் மேஜை, தடுப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, மின் வசதிகளையும் ஆய்வு செய்தார். உடன் வந்திருந்த தேர்தல் துறையின் பிற அதிகாரிகளுக்கு, வியாழக்கிழமை காலை முதல்கட்டமாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்டத் தேர்தல் அதிகாரி கூறியது: காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. 2 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒரு இடத்தில் 2 பேரவைத் தொகுதிகளும், மற்றொரு இடத்தில் 3 பேரவைத் தொகுதிகளுக்கான இயந்திரங்களும் ஒவ்வொரு தொகுதியாக இயந்திரங்கள் எடுத்து எண்ணப்படும். தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 
எனவே, வாக்கு எண்ணிக்கை நிறைவடைய ஒரு நாளாகும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டலில் வாக்கு எண்ணும் ஒரு இடத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்கு எண்ணும் பணி நிறைவடைய ஒரு நாளாகும் என்பதால் அறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட இடத்தைக் கடந்து அவர்கள் வெளியே சென்றுவிட்டால், மீண்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர அனுமதிக்க முடியாது. காரைக்காலில் வாக்கு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் திருப்தியான முறையில் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/இன்று-வாக்கு-எண்ணிக்கை-தேர்தல்-பார்வையாளர்கள்-தேர்தல்-அதிகாரி-ஆய்வு-3156843.html
3156842 நாகப்பட்டினம் காரைக்கால் 28-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு DIN DIN Thursday, May 23, 2019 06:25 AM +0530 காரைக்காலில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு மே 28-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து, பல்வேறு தரப்பினரால், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை கூறியது:  
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள், கல்வி நிலைய வாகனங்கள் அனைத்தையும் தர  சோதனைக்குள்படுத்த மாவட்ட நிர்வாகம் போக்குவரத்துத் துறையை அறிவுறுத்தியுள்ளது. 
அதன்படி, மே 28-ஆம் தேதி காரைக்காலில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான, குறிப்பாணை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/23/28-இல்-பள்ளி-வாகனங்கள்-ஆய்வு-3156842.html
3156109 நாகப்பட்டினம் காரைக்கால் பள்ளி வாகனங்களில் தர சோதனை: ஆட்சியரிடம் வலியுறுத்தல் DIN DIN Wednesday, May 22, 2019 06:33 AM +0530 பள்ளி வாகனங்களில் தர சோதனை செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு:
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனங்கள், இருக்கை வசதி, பிரேக் செயல்பாடுகளில் குறைபாடு நிலவுகிறது. இதைத் தர சோதனை செய்ய வேண்டிய போக்குவரத்துத் துறை இதுவரை அதற்கான பணிகளை பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையிலும் மேற்கொள்ளவில்லை. இந்த பணியை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்கள், வேன்களில் அதிகபட்ச எண்ணிக்கையில் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியர் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள், கல்லூரிகளில் காலை, மாலை வேளையில் பள்ளி வாயிலில் பெண் காவலர்களைப் பணியமர்த்தி, மாணவியர் பாதுகாப்பாக கல்வி நிலையத்துக்குள் செல்லவும், வெளியேறவும் உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/பள்ளி-வாகனங்களில்-தர-சோதனை-ஆட்சியரிடம்-வலியுறுத்தல்-3156109.html
3156117 நாகப்பட்டினம் காரைக்கால் திரௌபதி அம்மன் கோயிலில் சக்தி கரக வழிபாடு DIN DIN Wednesday, May 22, 2019 06:32 AM +0530 காரைக்கால் திரௌபதியம்மன் கோயில் உத்ஸவத்தில் திங்கள்கிழமை இரவு சக்தி கரக வழிபாடு, அம்பாள் வீதியுலா ஆகியன நடைபெற்றன.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த திருவிழா கொடியேற்றம் மற்றும் பூச்சொரிதலுடன் கடந்த வாரம் திங்கள்கிழமை (மே 13) தொடங்கியது.  கடந்த புதன்கிழமை இரவு அர்ச்சுணன், திரௌபதி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சனிக்கிழமை இரவு காளியாட்ட வழிபாடு நடைபெற்றது.  திங்கள்கிழமை மாலை (மே 20) சக்தி கரக புறப்பாடு நடைபெற்றது. 
கோயில்பத்து பார்வதீசுவரர் கோயில் குளக்கரையிலிருந்து சக்தி கரகம் சுமந்தவாறு பக்தர்கள் மேள வாத்தியங்களுடன் திரௌபதி அம்மன் கோயிலைச் சென்றடைந்தனர். தொடர்ந்து பத்ரகாளியம்மன், திரௌபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு,  திரௌபதி அம்மன், அர்ச்சுணன், கிருஷ்ணருடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. உத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக  செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை இரவு (மே 22) விடையாற்றி, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் உத்ஸவம் நிறைவடைகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/திரௌபதி-அம்மன்-கோயிலில்-சக்தி-கரக-வழிபாடு-3156117.html
3156116 நாகப்பட்டினம் காரைக்கால் மோட்டார் சைக்கிள் திருட்டு: இளைஞர் கைது DIN DIN Wednesday, May 22, 2019 06:32 AM +0530 காரைக்காலில் பல்வேறு இடங்களில் 4 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் பேருந்து நிலையம் அருகிலும், சந்தைத் திடல் பகுதியிலும் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நகரக் காவல்நிலைய போலீஸார் திங்கள்கிழமை காலை சந்தைத் திடல் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் வந்த இளைஞரிடம் வாகன ஆவணங்களை போலீஸார் கோரினர். அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாததை அறிந்த போலீஸார், அவரிடம் விசாரணை செய்தபோது அந்த வாகனம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது திருடப்பட்டது தெரியவந்தது. 
மேலும்  அவர் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (28) என்றும், வாகனங்கள் திருடுவதை வழக்கத்தில் கொண்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, பேருந்து நிலையம், சந்தைத் திடல் பகுதியில் 3 வாகனங்களைத் திருடி மறைத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த 4 வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீஸார், காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/மோட்டார்-சைக்கிள்-திருட்டு-இளைஞர்-கைது-3156116.html
3156115 நாகப்பட்டினம் காரைக்கால் ராஜீவ் காந்தி நினைவு நாள்: வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு DIN DIN Wednesday, May 22, 2019 06:31 AM +0530 ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, காரைக்கால் ஆட்சியரகத்தில்  அமைச்சர், எம்.எல்.ஏ.  உள்ளிட்ட அதிகாரிகள், கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதா ஆனந்தன், மாவட்ட  ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் உள்ளிட்டோர்
ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
இவர்களைத் தொடர்ந்து  காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அரசுத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வன்முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மும்மதத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் விளக்கிப் பேசினர். தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/ராஜீவ்-காந்தி-நினைவு-நாள்-வன்முறை-எதிர்ப்பு-உறுதிமொழி-ஏற்பு-3156115.html
3156114 நாகப்பட்டினம் காரைக்கால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல் DIN DIN Wednesday, May 22, 2019 06:31 AM +0530 கடும் வெயிலாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் நாளை தள்ளி வைக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் காரைக்காலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:  
நிகழாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு  வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நிகழ் மாதம் 29-ஆம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தைக் கடந்தும் வெயில் கடுமையாக இருக்க வாய்ப்புண்டு என்றே கூறப்படுகிறது. 
இதனால், கல்வி நிலையங்களுக்குச் செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாவார்கள் என்பதை உணர முடிகிறது. பெற்றோர்களும் இதையே தெரிவிக்கின்றனர். ஜூன் 3 -ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில்  பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களின் நலன் கருதி இந்த தேதியை மாற்றி ஒரு வார காலமாவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் புதுச்சேரி  மாநிலக் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.  மேலும் பள்ளி வாகனங்களை ஒவ்வோர் ஆண்டும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.
 பள்ளி திறக்கப்படும் சமயத்தில் இது செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகின்றன. 
ஆகையால், மாவட்ட  ஆட்சியர் தலையிட்டு வாகன சோதனைப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்றார் நாஜிம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/பள்ளிகள்-திறப்பைத்-தள்ளி-வைக்க-வேண்டும்-ஏஎம்எச்-நாஜிம்-வலியுறுத்தல்-3156114.html
3156113 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதி வழிபாடு DIN DIN Wednesday, May 22, 2019 06:31 AM +0530 திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். 
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், திங்கள்கிழமை இரவு திருநள்ளாறு வந்தார். அவரை மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஏ.விக்ரந்த் ராஜா வரவேற்றார். 
திருநள்ளாறில் இரவு தங்கிய அவர், செவ்வாய்க்கிழமை தர்பாரண்யேசுவரர் கோயிலுக்குச் சென்று மூலவர் உள்ளிட்ட சன்னிதிகளில் தரிசனம் செய்தார். சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் அவர் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். நீதிபதிக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து பிரசாதங்கள் வழங்கினர்.  
மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், கோயில் நிர்வாக அதிகாரி ஜெ.சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/திருநள்ளாறு-சனீஸ்வர-பகவான்-கோயிலில்-உயர்நீதிமன்ற-நீதிபதி-வழிபாடு-3156113.html
3156112 நாகப்பட்டினம் காரைக்கால் ஜிப்மர் தற்காலிக மையத்தில் புற சிகிச்சை மையம் தொடங்கத் திட்டம்? இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆய்வு DIN DIN Wednesday, May 22, 2019 06:30 AM +0530 காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தற்காலிக மையத்தில் ஜிப்மர் இயக்குநர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால் கடற்கரை சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான தற்காலிக இடத்தில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. மருத்துவ மாணவர்களுக்கான ஆய்வுக் கூடம் உள்ளிட்ட பிற வசதிகள், கோயில்பத்து பகுதியில் உள்ள ஜிப்மரின் நிரந்தர கட்டடத்தில் நடைபெற்று வருகின்றன.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானத்துக்காக கோயில்பத்து பகுதியில் புதுச்சேரி அரசு 80 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது. முதல்கட்டமாக ரூ.480 கோடியில் கட்டடங்கள் கட்டப்படும், பின்னர் அடுத்தகட்ட கட்டுமானம் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கட்டுமானத்தை ஜிப்மர் நிர்வாகம் இதுவரை மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை ஜிப்மர் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ரூ.30 கோடியில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கிய நிதியிலும், திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்மர் இயக்குநராக பொறுப்பேற்ற ராகேஷ் அகர்வால், காரைக்கால் மருத்துவமனையைக் கடந்த ஜனவரி மாதத்தில் நேரில் பார்வையிட்டார். எனினும், திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் இயக்குநர் ராகேஷ் அகர்வால் செவ்வாய்க்கிழமை ஜிப்மர் மருத்துவ அதிகாரிகளுடன் காரைக்காலுக்கு வந்தார். காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் காரைக்கால் ஜிப்மர் கிளை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளுடன் இயக்குநர் ஆலோசனை நடத்தினார். பின்னர், கோயில்பத்து பகுதியில் உள்ள ஜிப்மர் ஆய்வுக்கூட கட்டடத்துக்குச் சென்றார்.  இதனிடையே, செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது, காரைக்காலில் நடத்திய ஆய்வு, ஆலோசனை குறித்து கருத்துத் தெரிவிக்க இயக்குநர் மறுத்துவிட்டார். 
இயக்குநர் வருகையின் முக்கியத்துவம் குறித்து ஜிப்மர் வட்டாரத்தில் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் நிரந்தர கட்டுமானங்கள் தொடங்கும் எனவும், கடற்கரை சாலையில் உள்ள வளாகத்தில் ஜிப்மரின் புற சிகிச்சை மையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அகில இந்திய அளவில் புதுச்சேரி ஜிப்மரில் 150, காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பயிலும் வகையில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  புதுச்சேரி அரசு கல்லூரிக்காகவும், மாணவ, மாணவியர் விடுதிக்காகவும் உரிய நிலத்தை ஒப்படைத்துவிட்டது. இதன் பிறகு உரிய கட்டுமானத்தை ஜிப்மர் நிர்வாகம் தொடங்கவில்லை.  காரைக்காலில் ஜிப்மர் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கோ, காரைக்கால் மக்களுக்கோ முழுமையாகத் தெரியாத நிலையே கடந்த 3 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. ஜிப்மர் நிர்வாகத்திடம் வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து புதுச்சேரி தொகுதி எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/ஜிப்மர்-தற்காலிக-மையத்தில்-புற-சிகிச்சை-மையம்-தொடங்கத்-திட்டம்-இயக்குநர்-ராகேஷ்-அகர்வால்-ஆய்வு-3156112.html
3156111 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்: மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு DIN DIN Wednesday, May 22, 2019 06:30 AM +0530 காரைக்காலில் வாக்குகள் எண்ணும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 23-ஆம் தேதி காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் நடைபெறவுள்ளது.
நெடுங்காடு, திருநள்ளாறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரு மையத்திலும், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றொரு மையத்திலும் அந்தந்த தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டலில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், ஓர் உதவியாளர் என இரு மையங்களிலும் 84 அதிகாரிகளும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் மேஜை மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும் மேஜைக்கு ஒரு முகவர் வீதம் 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜைக்கு வேட்பாளர் அல்லது அவரது முகவர் என 15 முகவர்களை நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள 2 மேலிடத் தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 23-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும். முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், பின்னர் தொடர்புடைய தொகுதியின் 5 விவிபாட் இயந்திரங்களின் தற்செயல் தெரிவு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணைய வசதியுடன் கூடிய ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு விலை செலுத்தி பெறும் வகையில் உணவக வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லிடப்பேசி, புகைப்படக் கருவி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல அனுமதியில்லை.
தேர்தல் துறையால் அனுமதிக்கப்பட்டவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். உரிய சோதனைக்குப் பின் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அனைத்துத் தரப்பினரும் மாவட்டத் தேர்தல் துறையின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/வாக்கு-எண்ணிக்கை-ஏற்பாடுகள்-தயார்-மாவட்டத்-தேர்தல்-அதிகாரி-அறிவிப்பு-3156111.html
3156110 நாகப்பட்டினம் காரைக்கால் ஆக்கிரமிப்பு: இரும்புக் கடை அகற்றம் DIN DIN Wednesday, May 22, 2019 06:30 AM +0530 நீதிமன்ற அனுமதியின்பேரில், காரைக்காலில் சாலை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமித்து நடத்திவந்த இரும்புக்கடையின் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அகற்றியது.
காரைக்காலில் சாலைகளையும், நடைமேடைகளையும் வணிகர்கள், பெரு நிறுவனத்தினர் ஆக்கிரமித்திருக்கும் செயல் அதிகரித்துள்ளது. இதை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பயனும் இல்லை. 
காரைக்கால் முருகராம் நகர் அருகே காரைக்கால் - திருநள்ளாறு சாலையோரத்தில் புரட்சிமணி என்பவர் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். போக்குவரத்துள்ள சாலைப் பகுதியையும், அருகில் உள்ள பொது இடத்தையும் ஆக்கிரமித்து கடை நடத்தி வருவதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பொருட்படுத்தப்படாததால், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் உத்தரவின்பேரில், நகராட்சியின் பல்வேறு நிலை அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இதுகுறித்து ஆணையர் எஸ். சுபாஷ்  கூறும்போது, சாலையையும், பிற பொது இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து தொழில் நடத்திவருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை ஆய்வு செய்தபோது ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. பல கட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடுமாறு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டது. இதற்கென தனிக் குழுவினர் நியமிக்கப்பட்டு, இரும்புக் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து நகராட்சியின் கவனத்துக்கு வந்துள்ளது. இதன் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/22/ஆக்கிரமிப்பு-இரும்புக்-கடை-அகற்றம்-3156110.html
3155449 நாகப்பட்டினம் காரைக்கால் ஹைட்ரோ கார்பன் திட்டம்: வயலில் இறங்கி பெண்கள் போராட்டம் DIN DIN Tuesday, May 21, 2019 12:54 AM +0530
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து, திருவாரூர்  மாவட்டம், நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதற்காக சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் அழியும் அபாயம் ஏற்படும் என இத்திட்டத்துக்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தைக் கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் அரிச்சபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்று, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/ஹைட்ரோ-கார்பன்-திட்டம்-வயலில்-இறங்கி-பெண்கள்-போராட்டம்-3155449.html
3155448 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இறுதி கட்டப் பயிற்சி DIN DIN Tuesday, May 21, 2019 12:54 AM +0530
காரைக்காலில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும்  ஊழியர்களுக்கு திங்கள்கிழமை இறுதிக் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்கள், நுண்ணறி பார்வையாளர்களுக்கான பயிற்சி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் ஏற்கெனவே நடைபெற்றது. 
இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள், நுண்ணறி பார்வையாளர் உள்ளிட்ட பிற பிரிவு அதிகாரிகளுக்கான பயிற்சி காமராஜர் நிர்வாக வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.  தற்போது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரங்களைக் கையாளும் ஊழியர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பணியில் ஈடுபடும் ஊழியர்களின் கடமைகள் குறித்து விளக்கிப் பேசினார். பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மோகன் கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் உதவியாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.  இயந்திரங்களையும், விவிபாட் இயந்திரங்களை கையாளும் முறை, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் குறித்து விளக்கமான பயிற்சி தரப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின்போது அவ்வாறே செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட  ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/வாக்கு-எண்ணும்-ஊழியர்களுக்கு-இறுதி-கட்டப்-பயிற்சி-3155448.html
3155446 நாகப்பட்டினம் காரைக்கால் அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவம் DIN DIN Tuesday, May 21, 2019 12:53 AM +0530
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்பரனை அழித்த மகிஷ சம்ஹார நினைவு பெருவிழாவையொட்டி, தீமிதி வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட  பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் சித்திரை மாதம்  வருடாந்திர விழாவாக, மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு இத்திருவிழா தொடங்கும் விதத்தில்  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் உத்ஸவம் கடந்த 6-ஆம் தேதி இரவு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பத்ரகாளியம்மனுக்கு பூர்வாங்க அபிஷேகம்,  காப்புக் கட்டுதல் 8-ஆம் தேதி நடைபெற்றது.  
தீமிதி வழிபாடு: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் சார்பில் தீமிதி  வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் வாயிலில் தீ குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உத்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேள வாத்தியங்களுடன் தீ குண்டம் அருகே மாலை 6 மணியளவில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.
கரகம் சுமந்த பக்தர் முதலாவதாகவும், தொடர்ந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் 200-க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
தொடர்ந்து உத்ஸவ அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
செவ்வாய்க்கிழமை முதல் பத்ரகாளியம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.   27-ஆம் தேதி புஷ்ப பல்லக்கும், 28-ஆம் தேதி மகிஷ சம்ஹார நினைவு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி உதிரவாய் படையல் நிகழ்ச்சியுடன் பெருவிழா நிறைவுபெறுகிறது. 
விழாவில், தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை  ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/அம்பகரத்தூர்-மகா-மாரியம்மன்-கோயில்-தீமிதி-உத்ஸவம்-3155446.html
3155445 நாகப்பட்டினம் காரைக்கால் குறைந்தபட்ச ஆதார விலையில் பருத்தி கொள்முதல் செய்ய அறிவுறுத்தல் DIN DIN Tuesday, May 21, 2019 12:53 AM +0530
பருத்தியை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் விற்பனைக் குழு செயலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பருத்தியை, காரைக்கால் விற்பனைக் குழுவில் உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பருத்திக்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான கிலோவுக்கு ரூ.51.50-க்கு குறையாமல் வியாபாரிகள் கொள்முதல் செய்யவேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/குறைந்தபட்ச-ஆதார-விலையில்-பருத்தி-கொள்முதல்-செய்ய-அறிவுறுத்தல்-3155445.html
3155444 நாகப்பட்டினம் காரைக்கால் வடிகால் வாய்க்கால்களை தூர்வார எம்.எல்.ஏ. வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 21, 2019 12:53 AM +0530
காரைக்காலில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து கொம்யூன்கள் மற்றும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால் வாய்கால்களும் முறையாக பராமரிக்கப்படாமலேயே உள்ளன. வடிகால் வாய்கால் அருகில் குடியிருப்பவர்களும், புதிதாக குடியிருப்பு மனைகள் அமைப்பவர்களும், பொதுத்துறை நிறுவனங்களும் அவர்களது இடத்திற்கு அருகாமையில் உள்ள வடிகால்களை அத்துமீறி ஆக்கிரமைப்பு செய்துள்ளார்கள். இதனை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் கண்டுகொள்வதில்லை.  ஆக்கிரமைப்பை அகற்ற அரசு சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.  
குறிப்பாக காரைக்கால் தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால்களும் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலையில் மணல், குப்பைகளால் மூடி, வடிகால் வாய்கால் குறுகியும், முள் புதர் மண்டியும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. வடிகால் வாய்க்கால் இருப்புற கரைகளிலும் சுமார் 2 மீட்டர் அளவுக்கு பாதை இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. கடந்த  2 ஆண்டுகளில் வடிகால் வாய்க்கால்களை இருமுறை தூர்வாரி பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தும், ஒருமுறை மட்டும்தான் பணிகள் நடைபெற்றுள்ளன. 
இதனை அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாதது மிகவும் வேதனை அளிக்கிறது. 
எனவே, காரைக்கால் தெற்கு தொகுதிக்குள்பட்ட அனைத்து வடிகால் வாய்கால்களை ஆய்வு செய்து, ஆக்கிரமைப்புகளை அகற்றி, வாய்க்கால்களை முறையாக தூர்வாரி தண்ணீர் வடியச் செய்யும் நடவடிக்கையை பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/வடிகால்-வாய்க்கால்களை-தூர்வார-எம்எல்ஏ-வலியுறுத்தல்-3155444.html
3155442 நாகப்பட்டினம் காரைக்கால் சாலைகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்கள் செப்பனிடப்படுமா? DIN DIN Tuesday, May 21, 2019 12:53 AM +0530
வணிக நிறுவனங்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக, ரூ.50 கோடி மதிப்பில் புதிய குழாய்கள் பதிப்பு செய்யப்படுகிறது.
இதனால், நகரின் பெரும்பாலான  சாலைகள் தோண்டப்பட்டும், சில  சாலைகளில் தார் கலவை மூலம் மூடப்பட்டும் உள்ளன. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா அண்மையில் இப்பணியை ஆய்வு செய்து, குழாய் பதிப்புக்காக தோண்டிய பள்ளத்தை முறையாக தார் கலவையால் மூடிவிட்டு, அடுத்த சாலைகள் தோண்டுவதை மேற்கொள்ளவேண்டும் என பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி சில சாலைகளில் தார் கலவை மூலம் சீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், இது தொடராமல், முக்கியமாக வணிக நிறுவனங்கள் உள்ள மாதா கோயில் சாலை, போக்குவரத்து மிகுந்த காமராஜர் சாலை உள்ளிட்டவை தோண்டி குழாய் பதித்துவிட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதுகுறித்து காரைக்கால் வணிகர்கள் மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிக்கும் திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.
வணிகர்கள் இதுகுறித்து கூறியது:
அதிகமான வணிக நிறுவனங்கள், வாகனப் போக்குவரத்துள்ள சாலைகளில் குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டியுள்ளனர். இது பல நாள்களாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால், போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பள்ளம் தோண்டிய சாலைகளில், உடனடியாக அதனை சீரமைக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
இதன் மீது அரசு நிர்வாகத்தினர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/சாலைகளில்-குடிநீர்-குழாய்-பதிக்க-தோண்டிய-பள்ளங்கள்-செப்பனிடப்படுமா-3155442.html
3155441 நாகப்பட்டினம் காரைக்கால் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல் DIN DIN Tuesday, May 21, 2019 12:53 AM +0530
காரைக்கால் பகுதி ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த வாகனங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் பகுதி ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. 
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவின்பேரில், வருவாய்த் துறையினர் காரைக்கால் மாவட்டம், சேத்தூர், அம்பகரத்தூர், விழிதியூர், நிரவி, கீழமனை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஞாயிறு, திங்கள்கிழமையில் மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, திருமலைராஜனாறு, அரசலாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் உள்ளிட்ட 8 வாகனங்களை போலீஸார் உதவியுடன் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/அனுமதியின்றி-மணல்-ஏற்றிவந்த-வாகனங்கள்-பறிமுதல்-3155441.html
3155439 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோத்ஸவம்: 29-இல் தொடக்கம் DIN DIN Tuesday, May 21, 2019 12:52 AM +0530
திருநள்ளாறு கோயில் பிரமோத்ஸவம் மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 12-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில்  ஆண்டுதோறும் பிரமோத்ஸவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு உத்ஸவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து சார்புக் கோயில்களாகத் திகழும் ஐயனார், பிடாரி அம்மன், மகா மாரியம்மன் ஆகிய எல்லை தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடத்தப்பட்டுவருகின்றன. முக்கிய நிகழ்ச்சிகள் தொடக்கமாக வருகிற 29-ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் செய்யப்படுகிறது. அன்று இரவு முதல் விநாயகர் உத்ஸவம் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி காலையுடன் நிறைவடைகிறது. அன்று மாலை சுப்ரமணியர் உத்ஸவம் தொடங்கி  4-ஆம் தேதி காலையுடன் நிறைவடைகிறது. 4-ஆம் தேதி இரவு முதல் அடியார்கள் உத்ஸவம் தொடங்குகிறது. 5-ஆம் தேதி  அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடத்தப்பட்டு 6-ஆம் தேதி காலையுடன் இந்த உத்ஸவம் நிறைவடைகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 6-ஆம் தேதி இரவு செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளுவதும், 7-ஆம் தேதி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளலும் செய்யப்படுகிறது. 10-ஆம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், 12-ஆம் தேதி  தேரோட்டம் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி தங்க காக வாகனத்தில்  சனீஸ்வரபகவான் வீதியுலா நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி தெப்ப உத்ஸவம், 15-ஆம் தேதி விசாக தீர்த்தத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/திருநள்ளாறு-கோயில்-பிரமோத்ஸவம்-29-இல்-தொடக்கம்-3155439.html
3155438 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு பிரம்ம தீர்த்தக் குளம் சீரமைப்புப் பணி இம்மாத இறுதியில் நிறைவுபெறும்: ஆட்சியர் தகவல் DIN DIN Tuesday, May 21, 2019 12:52 AM +0530
திருநள்ளாறு கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.
திருநள்ளாறில் பெரும்பான்மையான பக்தர்கள் புனித நீராடும் வகையில் உள்ளது நளன்  தீர்த்தக் குளம். இது தவிர, சரஸ்வதி தீர்த்தக் குளம், பிரம்ம தீர்த்தக் குளம்,  எமன் தீர்த்தக் குளம் போன்றவை உள்ளன.
இதில் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இக்குளத்தில்தான் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய உத்ஸவங்களில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்ப வைபவமும் இத்தீர்த்தக் குளத்திலேயே நடைபெறும்.
இக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் சில திசைகளில் கரைகள் பலமிழந்திருந்ததால், திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தினால் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பில் கரை கட்டுதல், தீர்த்த மண்டபம் கட்டுதல் போன்ர கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. மே 29-ஆம் தேதி தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கத்துக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.  ஜூன் 14-ஆம் தேதி தெப்ப வைபவம் நடைபெறவுள்ளது.
பிரம்மோத்ஸவம் தொடங்கும் தருணத்திலேயே பிரம்ம தீர்த்தக் குளத்தின் படிக்கட்டுகள் கட்டுமானம், தீர்த்த மண்டபம் கட்டுமானம் உள்ளிட்டவை நிறைவு செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பிடவேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரும், ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் தனி அதிகாரியுமான ஏ.விக்ரந்த் ராஜா திங்கள்கிழமை கூறியது:பிரம்ம தீர்த்தக் குளத்தை மேம்படுத்தும் பணிகளை அண்மையில் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளரும் நேரில் ஆய்வு செய்து,  தினமும் அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கவுள்ளது. மே 31-ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து ஒப்படைத்துவிடும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே குளத்தில் தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். தெப்ப உத்ஸவம் கண்டிப்பாக இந்த தீர்த்தக் குளத்தில் நடைபெறும் என்றார் ஆட்சியர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/திருநள்ளாறு-பிரம்ம-தீர்த்தக்-குளம்-சீரமைப்புப்-பணி-இம்மாத-இறுதியில்-நிறைவுபெறும்-ஆட்சியர்-தகவல்-3155438.html
3155437 நாகப்பட்டினம் காரைக்கால் பள்ளி வாகனங்களை தர சோதனை செய்ய வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 21, 2019 12:52 AM +0530
 காரைக்காலில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி வாகனங்களை உடனடியாக தர சோதனை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. 
ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளின் வாகனங்கள் போக்குவரத்துத் துறையால் தர பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு சோதனை செய்து, தரச்சான்று அளிக்கப்பட்ட பின்னரே, அந்த வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். சோதனையின்போது குறைகள் காணப்பட்டால், குறித்த அவகாசம் அளித்து, அதனை நிவர்த்தி செய்துவர அறிவுறுத்தப்படும். 
காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசு சார்பில் சலுகைக் கட்டணத்தில் இயக்கப்பட்டு வரும்  சிறப்புப் பேருந்துகள் உள்பட அரசு உதவிப் பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 130 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், காரைக்கால் போக்குவரத்துத் துறை இதுவரை அந்த வாகனங்களை சோதனை செய்ய ஏற்பாடு செய்யவில்லை. வாகனங்களில் முதலுதவி  ஏற்பாடுகள் மற்றும் பேருந்துகளில் அவசர கால திறப்பு கதவுகள், போதிய இருக்கை வசதிகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி ஆகியவை சீரான முறையில் செயல்படுகிறதா என்பதே இந்த ஆய்வின் மூலம் செய்யப்படும் பணியாகும்.  ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை அந்த பணிகள் செய்யப்படாதது பெற்றோர்களையு கவலைக்குள்ளாக்கியுள்ளது.
காரைக்கால் போக்குவரத்துத் துறையில் தலைமை அலுவலரான மண்டல  போக்குவரத்து அலுவலர் நீண்ட விடுப்பில் உள்ளார். துணை அலுவலர்களே பணிகளை செய்துவருகின்றனர். புதுச்சேரியிலிருந்து தலைமை அலுவலர் அவ்வப்போது வந்து அவருக்கான பணியை செய்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதனாலேயே உரிய காலத்தில் பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்படாமல் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.  
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.எம்.இஸ்மாயில் கூறியது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிச்சென்றபோது, அப்பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் பேருந்திலிருந்த ஒட்டையின் வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதையடுத்து, தமிழக போக்குவரத்துத் துறை பள்ளி கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பு கோடை விடுமுறையில் பேருந்துகளை தர ஆய்வுக்குப்பின்னரே இயக்க அனுமதித்து வருகிறது. பேருந்துகள் மட்டுமின்றி, ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு எஃப்.சி. சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதேமுறை புதுச்சேரியிலும் சில ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், நிகழாண்டு ஜூன் 3- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இதுவரை பள்ளி வாகனங்களை தர சோதனை செய்யவில்லை, எனவே, உடனடியாக தர சோதனை செய்வதுடன், சோதனைக்குள்படுத்தப்பட்ட வாகனங்களின் முகப்பில் அதற்கான அடையாள வில்லைகளையும் ஒட்டவேண்டும். ஆண்டில் ஒரு முறை மட்டும் இதுபோன்ற சோதனை என நிறுத்திக்கொள்ளாமல், அவ்வப்போது சோதனைகள் நடத்தி தவறுகள் திருத்தப்படவேண்டும் என்றார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில்  சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்பது பெரும்பான்மையான பெற்றோர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/21/பள்ளி-வாகனங்களை-தர-சோதனை-செய்ய-வலியுறுத்தல்-3155437.html
3155086 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்காலில் கரும்பு சாகுபடி தொடக்கம் DIN DIN Monday, May 20, 2019 08:40 AM +0530 காரைக்காலில் மார்கழி மாத அறுவடை இலக்கில் பொங்கல் கரும்பு சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 
காரைக்கால் மாவட்டத்தில் நெல் தவிர்த்து மாற்றுப் பயிராக பருத்தி, உளுந்து, பயறு ஆகியவை மட்டும் பயிர் செய்யப்பட்டுவருகின்றன.  கோட்டுச்சேரிக்கு கிழக்கே சில பகுதிகள், திருப்பட்டினம், படுதார்கொல்லை ஆகிய பகுதிகளில் எள் சாகுபடி நடைபெறுகிறது. தோட்டப் பயிர் சாகுபடி ஆங்காங்கே சில இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக தமிழக கடைமடைப் பகுதியில் ஆலைக்கு அனுப்பப்படும் சர்க்கரைக் கரும்பு, பொங்கலுக்கான கரும்பு ஆகியவை போல காரைக்கால் பகுதியில் பயிரிடப்படுவதில்லை.
கடந்த 7, 8 ஆண்டுகளாக சில விவசாயிகள் மட்டும் காரைக்கால் பகுதியில் பொங்கல் கரும்பு பயிர் செய்து வருகின்றனர். மற்ற விவசாயிகள் காவிரித் தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிரிடுவது, இல்லையெனில் நிலத்தைத் தரிசாக வைத்திருப்பது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூனுக்கு உள்பட்ட சேத்தூர் மற்றும் குமாரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சிலர் பொங்கல் கரும்பு பயிரிடும் பணியைத் தொடங்கியுள்ளனர். 
இதுகுறித்து சேத்தூர் பகுதியில் கரும்பு விதைத்துள்ள விவசாயி லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை கூறியது : பொங்கல் கரும்பு 9 மாத பயிராகும். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் கரும்பு கனு ஊன்றப்படும். முன்கூட்டியே கனு விதை உற்பத்தி செய்யப்படும். நிலத்தில் 4 அடி அகலத்திற்கிடையே ஒவ்வொரு கன்றும் நடப்படும். கரும்பு பயிருக்கு களிப்பு மண் உதவாது. செம்மண் கலந்த பகுதியாக நிலப்பரப்பு இருக்கவேண்டும். 4 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றுதல் மற்றும் நோய் தாக்காத வகையில் மருந்து தெளிக்க வேண்டும். 
100 குழி நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால், சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். மார்கழி மாதத்தில் அறுவடை செய்யும்போது ரூ.1.20 லட்சம் வரை விற்கமுடியும். 8 மற்றும் 9 அடி உயரத்தில் வளர்ந்த பிறகு அறுவடை செய்யப்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் காற்றினால் இது சாயும் வாய்ப்புண்டு.  இதனால் வளர்ப்பு முறையைக் கட்டுப்படுத்தி 7.5 அடி உயரத்தில் வரும்போது அறுவடை செய்யப்படும்.
இங்குள்ள 100 குழி (அரை ஏக்கருக்கும் குறைவு) நிலத்தில் 3,200 விதை ஊன்றப்பட்டுள்ளது. 8 ஆயிரம் கழி (கரும்பு) வரை அறுவடை செய்யமுடியும்.  இங்கு தண்ணீர் தேவைக்கு ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்துகிறோம் என்றார்.
எனினும் கடந்த சில ஆண்டுகளாகக் கரும்பு பயிரிடும் விவசாயிகள் மட்டுமே நிகழாண்டும் பயிர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொங்கல் கரும்பு விளைச்சல் செய்யக்கூடிய நிலப்பரப்பு விவசாயிகள், இந்த பயிரின் மீது போதிய ஆர்வம் காட்டவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/காரைக்காலில்-கரும்பு-சாகுபடி-தொடக்கம்-3155086.html
3155084 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு- அம்பகரத்தூர் சாலை மேம்பாட்டுப் பணி மும்முரம்: ஜூன் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டம் DIN DIN Monday, May 20, 2019 08:40 AM +0530 திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை மேம்பாட்டுப் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும், ஒரு மாத காலத்தில் ஒட்டுமொத்தப் பணியும் நிறைவு செய்யப்படும் எனவும்  பொதுப்பணித்துறை நிர்வாகம் தெரிவித்தது.
காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிகரான போக்குவரத்து நெருக்கடியைக் கொண்டுள்ள திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்புமின்றி காணப்பட்டது. இதனால் பள்ளம், சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உருவெடுத்தது.
திருநள்ளாறு தொகுதியில் கடந்த 2016-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண் அமைச்சராக பொறுப்பேற்ற ஆர்.கமலக்கண்ணன் முயற்சியால்,  ரூ.11 கோடி திட்டத்தில், இந்த சாலையை இருபுறமும் அகலப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைக்கு நிகரான அமைப்பில் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. சாலையின் ஓரத்தில் உள்ள மின் கம்பங்களை நகர்த்தி நடுதல், சாலையோரத்தில் சுமார் 1.5 மீட்டர் தூரம் கான்கிரீட் முறையில் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முக்கிய திட்டப்பணிகளில் அடங்கும்.
கடந்த ஓராண்டுக்கு முன் பூமி பூஜை செய்து சாலைப் பணி தொடங்கினாலும், மின் கம்பங்கள் நகர்த்தி நடுதலில் கால தாமதம் ஏற்பட்டதால், சாலைப் பணியை குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2 மாதத்துக்கிடையே சாலை குறிப்பிட்ட  தூரம் வரை மேம்படுத்தப்பட்டது. பின்னர், இந்த பணி முடங்கியது. திருநள்ளாறு- அம்பகரத்தூர் 8 கி.மீ.,  சாலை, ஒரு பகுதி வரை முறையாகவும், பெரும்பாலான இடங்களில் பள்ளம், சரிவுகளுடனேயே உள்ளது. இதனால் தமிழகத்தில் கும்பகோணம் மார்க்கத்திலிருந்து திருநள்ளாறு வருவோர், காரைக்காலில் இருந்து கும்பகோணம், திருச்சி செல்வோர் இந்த மார்க்கத்தைப் பயன்படுத்தும்போது பெரிதும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது என பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.
இந்த நிலையில்  திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலைப் பணியை பொதுப்பணித்துறை நிர்வாகம் விரைவான முறையில் மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இந்த சாலையில் பெரும்பாலான பகுதியில் மின் கம்பங்களை நகர்த்தி நடும் பணி நிறைவடைந்துவிட்டது. அம்பகரத்தூர் பகுதியில் மட்டுமே சரிசெய்ய வேண்டும். 
இதுவும் விரைவாக முடித்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ., தூர சாலையில் 3 கி.மீ., வரை சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 5 கி.மீ., தூரம் மேம்படுத்த வேண்டியதில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சாலைப் பணியையும் ஜூன் இறுதிக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/திருநள்ளாறு--அம்பகரத்தூர்-சாலை-மேம்பாட்டுப்-பணி-மும்முரம்-ஜூன்-இறுதிக்குள்-நிறைவு-செய்ய-திட்டம்-3155084.html
3155083 நாகப்பட்டினம் காரைக்கால் வெங்கடேச பெருமாள் கோயில் திருப்பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல் DIN DIN Monday, May 20, 2019 08:40 AM +0530 திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருப்பணிகளை விரைவாக நிறைவேற்றி, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமையான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட இக்கோயிலில், 1958-ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1991-ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. பல்வேறு வைணவத் திருத்தலங்களில் நடத்தப்படும் விசேஷமான நிகழ்ச்சிகளில் பலவும் இக்கோயிலில் நடத்தப்பட்டுவருகின்றன.
குறிப்பாக மாசிமக உத்ஸவம், நவராத்திரி, ஸப்த கருட சேவைக்கு எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெறுகின்றன. இக்கோயில் குடமுழுக்கு செய்து 28 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது.
அரசு சார்பிலான நிதி மற்றும் பக்தர்கள் நன்கொடைகள் மூலம் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம் மற்றும் விமானத்தில் சிதிலங்கள் சீர்செய்யும் பணி ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுள்ளது. சன்னிதியில் புதிதாக பெருமாள் சயன திருக்கோலம், நின்ற கோலம், அமர்ந்த கோலத்தில் சுவரில் சுதை வேலைப்பாடுடன் சிலையாக செய்து வைக்கப்பட்டுள்ளது. தாயார் சன்னிதி பிராகாரப் பக்க சுவரில் அஷ்ட லட்சுமிகள் சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.
வர்ணம் பூசும் பணிகள் உள்ளிட்ட சில பணிகள் செய்து முடித்தால் குடமுழுக்குக்குத் தயாராகிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கோயிலில் தாயார் சன்னிதி எதிரே கான்கிரீட்டில் மண்டபம் அமைக்க கோயில் நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும், இதனாலேயே பணிகள் தாமதப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பழைமையான கோயில் என்பதால் புதிய கட்டுமானங்களை செய்யாமல், திருப்பணியை நிறைவு செய்து குடமுழுக்குக்கு தேதியை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக உத்ஸவங்கள் நின்றுபோய் உள்ளன. எனவே தாமதிக்காமல் குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை செய்ய தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், கோயில் தனி அதிகாரியும் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/வெங்கடேச-பெருமாள்-கோயில்-திருப்பணியை-விரைந்து-நிறைவேற்ற-வலியுறுத்தல்-3155083.html
3155082 நாகப்பட்டினம் காரைக்கால் திரௌபதி அம்மன் கோயில் உத்ஸவத்தில் காளியாட்டம் DIN DIN Monday, May 20, 2019 08:39 AM +0530 காரைக்கால் திரௌபதியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு காளியாட்ட வழிபாடு நடைபெற்றது. 
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்திப் பெற்ற திரௌபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்தத் திருவிழா கடந்த திங்கள்கிழமை (மே 13) கொடியேற்றம், பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அம்பாள் பிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை இரவு அர்ச்சுணன், திரௌபதி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.  முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சனிக்கிழமை இரவு காளியாட்ட வழிபாடு நடைபெற்றது. ராஜயோக பத்ரகாளியாகவும், பச்சைக்காளியாகவும் வேஷம் தரித்த பக்தர்கள், சிறப்பு மேள வாத்தியத்தில் நடனம் ஆடியவாறு வீதியுலா வந்தனர். இரவு 10 மணியளவில் மீண்டும் கோயிலைச் சென்றடைந்தனர். வீதியெங்கும் பக்தர்கள் அம்பாள்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். திங்கள்கிழமை (மே 20) சக்தி கரகம் எடுத்தல், இரவு அம்பாள் வீதியுலாவும், 21-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு, 22-ஆம் தேதி தர்மராஜா பட்டாபிஷேகம், விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/திரௌபதி-அம்மன்-கோயில்-உத்ஸவத்தில்-காளியாட்டம்-3155082.html
3155081 நாகப்பட்டினம் காரைக்கால் ஐயனார் கோயில் வைகாசி பருவத் திருவிழா DIN DIN Monday, May 20, 2019 08:39 AM +0530 வைகாசி பருவத் திருவிழாவையொட்டி, காரைக்கால் ஐயனார் கோயிலில் சந்தனக் காப்பு அலங்காரம், வாகனத்தில் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறாவைச் சார்ந்த டிராமா கொட்டகைத் தெரு பூர்ண புஷ்கலா சமேத ஐயனார் கோயில் வைகாசி பருவத் திருவிழா 23-ஆம் ஆண்டாக  கடந்த 17-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஐயனார், பிடாரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, யானை வாகனத்தில் ஐயனாரும், சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மனும் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மே 19 முதல் 25-ஆம் தேதி வரை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, 26-ஆம் தேதி விடையாற்றியுடன்  திருவிழா நிறைவடைகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/ஐயனார்-கோயில்-வைகாசி-பருவத்-திருவிழா-3155081.html
3155080 நாகப்பட்டினம் காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் DIN DIN Monday, May 20, 2019 08:39 AM +0530 சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தி பணி ஆணை வழங்கியது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், தனியார் நிறுவனத்தை அழைத்து நேர்காணல்  நடத்தியது.
இதில் மகளிர் தொழிநுட்பக் கல்லூரி, கொற்கை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தொன் போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சென்னையில் செயல்பட்டுவரும் ஜப்பான் நாட்டு நிறுவனமான ஜாய்சன் சேஃப்டி சிஸ்டம் என்கிற நிறுவனத்தினர் நேர்காணலை நடத்தினர்.  இந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் (உற்பத்தி) கார்த்திகேயன், மனிதவளப் பிரிவு முதுநிலை பிரதிநிதி சுந்தர்ராமன் ஆகியோர் பங்கேற்று பணியின் தன்மை, ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கினர்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிறுவனத்தின் சார்பில் காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.பாபு அசோக் பணி நியமன ஆணையை வழங்கினார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை முதல்வர் பாபு அசோக், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி எஸ்.எல்.டெல்காஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/20/மகளிர்-பாலிடெக்னிக்-கல்லூரியில்-வளாக-நேர்காணல்-3155080.html
3154525 நாகப்பட்டினம் காரைக்கால் வீரமாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு DIN DIN Sunday, May 19, 2019 09:09 AM +0530 காரைக்கால் பாரதியார் சாலையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் 44-ஆம் ஆண்டு மகோத்ஸவத்தில் திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில்வருடாந்திர மகோத்ஸவம் கடந்த 8-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி பால்குட அபிஷேகமும், 17-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றன.
கோயில் சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர் நிகழ்வாக சந்தனக் காப்பு, அம்பாள் வீதியுலா,  புஷ்பாஞ்சலி, கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் வரும் 26-ஆம் தேதி உத்ஸவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/வீரமாகாளியம்மன்-கோயிலில்-திருவிளக்கு-வழிபாடு-3154525.html
3154524 நாகப்பட்டினம் காரைக்கால் இஃப்தார் நோன்பு துறப்பு DIN DIN Sunday, May 19, 2019 09:08 AM +0530 காரைக்காலில் அஞ்சுமன் இஸ்லாமிய சங்கம் சார்பில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் இயங்கிவரும் இந்த சங்கத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ரமலானையொட்டி, இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த நிகழ்ச்சி காமராஜர் சாலை எச்.எம்.டி.எஸ். பங்களாவில் நடைபெற்றது. சங்க நிர்வாக சபைத் தலைவர் எஸ்.ஹாஜா பாரூக் மரைக்காயர் தலைமை வகித்தார். காரைக்கால் டவுன் காஜியார் எஸ்.கே.டி. முகம்மது சுல்தான் ஆரீப் மரைக்காயர், சமாதானக் குழு உறுப்பினர்கள் கே.தண்டாயுதபாணிபத்தர், ஜி.ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலவி கே.ஜபார் சாதிக் ரஷாதி, வழக்குரைஞர் ஏ.அபூதல்ஹா, மௌலவி ஏ.ரஹ்மத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு ரமலான் நோன்பின் மகத்துவம், சகோதரத்துவத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினர். முன்னதாக சங்க நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஐ.லியாக்கத் அலி வரவேற்றார். நிறைவாக சங்கச் செயலர் எஸ்.முகம்மது கௌஸ் நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை 6.32 மணிக்கு நோன்பு துறப்பில் ஈடுபட்டனர். தொழுகையும் நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/இஃப்தார்-நோன்பு-துறப்பு-3154524.html
3154523 நாகப்பட்டினம் காரைக்கால் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் DIN DIN Sunday, May 19, 2019 09:08 AM +0530 காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆர்.காளிதாசன் புதுச்சேரி அரசின் கல்வித்துறை செயலருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பினார். அதன் விவரம் :
காரைக்கால் மாவட்டத்தில் முன் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் பணியிடம் 93, பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 62, விரிவுரையாளர் 17, தலைமையாசிரியர் நிலை 1, நிலை 2 உள்ளிட்ட 44 பணியிடங்களும், முதல்வர் 6, உடற்கல்வி ஆசிரியர், பள்ளி நூலகர், தொழில்நுட்ப ஆசிரியர்கள் என 28 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியிடங்கள் காலியாக இருப்பதால் பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையும், பள்ளி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பும், சில இடங்களில் முறையாக நிர்வாகத்தைக் கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.  எனவே இந்த காலிப் பணியிடங்களை புதுச்சேரி அரசு வெகு விரைவாக நிரப்புவதற்குரிய பணிகளை செய்ய வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மேல்நிலைக் கல்வி நிர்வாகத்தை மேல்நிலைப் பள்ளி முதல்வர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பதவியை துணை முதல்வர் கவனித்துவருகிறார். 
எனவே தலைமையாசிரியர் (நிலை -1) ஒருவருக்கு முதன்மைக் கல்வி அதிகாரி பதவியைத் தரவேண்டும் என்பதில் கூட்டமைப்பு ஒருமித்து வலியுறுத்துகிறது.  கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே கலந்தாய்வு முறைக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/பள்ளிகளில்-காலிப்-பணியிடங்களை-நிரப்ப-வலியுறுத்தல்-3154523.html
3154522 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் மருத்துவமனையில் முதல்வருடன் புகுந்த கட்சியினர்: போலீஸ் திணறல் DIN DIN Sunday, May 19, 2019 09:08 AM +0530 காரைக்கால் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வருடன் கட்சியினர் பலர் புகுந்ததால், தடுக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, அவரது கட்சி பிரமுகர் ஒருவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவரை  சந்தித்து நலம் விசாரிக்க வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு வந்தார். முதல்வர் காரைக்கால் வருகை குறித்து புதுச்சேரியிலிருந்து காரைக்காலில் உள்ள கட்சியினருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டதாம். பொதுவாகவே முதல்வர் காரைக்கால் வருகிறார் என்றால் அவரை வரவேற்பது முதல் எல்லையில் அனுப்பிவைப்பது வரையிலும், அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் (உள் அரங்கு நிகழ்ச்சியானாலும்) கட்சியினர் பங்கேற்கின்றனர். மேடைகளில் நிகழ்ச்சி நடந்தால்கூட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மட்டுமே என்ற மரபுகள் பின்பற்றப்படுவதில்லை. முதல்வர், அமைச்சர்கள் மேடை ஏறும்போதே கட்சியினரும் மேடையேறி பின் இருக்கையில் உட்கார்ந்துகொள்வதும், நின்றுகொண்டிருப்பதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு  இதனை காவல்துறையினர் தடுக்கவேண்டிய நிலையில் அவர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையே நீடிக்கிறது.
இதுவொருபுறமிருக்க, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் முதல்வர், அமைச்சர் சென்று சம்பந்தப்பட்டவரை பார்த்து நலம் விசாரிக்கவேண்டிய நிலையில், மிகவும் கட்டுப்பாடான ஐ.சி.  யூனிட்டில் முதல்வர், அமைச்சருடன் கட்சியினர் பலரும் உள்ளே புகுந்துவிட்டனர். ஐ.சி. யூனிட் என்பது மாரடைப்பு ஏற்பட்டோர் மற்றும் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளோரை உரிய மருத்துவ முறையில் கண்காணித்தல், பராமரித்தல் தொடர்பான பிரிவாகும். மிகவும் அமைதியான, மென்மையான குளிர் வசதி கொண்ட, மிகவும் தூய்மை பராமரிக்கக்கூடிய, மருத்துவர், செவிலியரின் நேரடி பார்வையில் இயங்கும் பிரிவாகும். இதில் முதல்வர், அமைச்சர் செல்லும்போது மருத்துவ அதிகாரிகள் உடனிருந்து விளக்கம் அளிக்கலாம். 
ஆனால் வெள்ளிக்கிழமை இரவு முதல்வர், அமைச்சருடன் கட்சியினர் ஏராளமானோர் உள்ளே புகுந்ததாலும், கதவுகள் திறந்த நிலையில் இருந்ததாலும் குளிர்ச்சி குறைய நேரிட்டது. கட்சியினர் உள்ளிட்டோரின் சப்தம் உள்ளிட்டவை ஐ.சி. யூனிட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அவதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.ஐ.சி. யூனிட்டில் கட்சியினரை அனுமதிக்கப்படுவதை போலீஸார் தடுத்திருக்கவேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து தலைமையில் போலீஸார் அங்கு இருந்தும் இதைத் தடுக்க முடியவில்லை.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கட்சிக்காரரை வெள்ளிக்கிழமை காலையிலேயே மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாம். எனினும், முதல்வர் வருவதால் அவர் மருத்துவமனையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வீட்டுக்குச் சென்றிருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏ.சி. சாதனம் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்துகொண்ட முதல்வர் வி.நாராயணசாமி மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.சித்ராவிடம் இவற்றை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/காரைக்கால்-மருத்துவமனையில்-முதல்வருடன்-புகுந்த-கட்சியினர்-போலீஸ்-திணறல்-3154522.html
3154521 நாகப்பட்டினம் காரைக்கால் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வலியுறுத்தல் DIN DIN Sunday, May 19, 2019 09:07 AM +0530 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர்வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது பல இடங்களில் இருப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை விடுவிக்கவும், புதிதாக சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைக் காலத்தோடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கொரு முறை கவுன்சலிங் முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவதுபோல, ஆசிரியர்களுக்கும் பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். பள்ளிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் மையங்கள் பெருகிவருகிறது. இதுபோன்ற  இடங்களை ஆய்வு செய்து, உரியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவேட்டைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கல்விச் சுற்றுலா அனுப்பவும், பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/மாணவர்களுக்கு-இலவச-சைக்கிள்-வழங்க-வலியுறுத்தல்-3154521.html
3154520 நாகப்பட்டினம் காரைக்கால் "இலவச அரிசி வழங்குவதில் பாரபட்சம் கூடாது' DIN DIN Sunday, May 19, 2019 09:07 AM +0530 இலவச அரிசி வழங்கலில் தொகுதி பாரபட்சம் காட்டாமல், அனைத்து தொகுதி பயனாளிகளுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசிக்கான பணமும் வழங்க வேண்டும்.   காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 91 நியாய விலைக்கடைகள் உள்ளன. தற்போது காரைக்காலில் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்க அரிசி வரவழைக்கப்பட்டு ஒருசில தொகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது.  ஒதுக்கீடு செய்த அரிசியை காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் பிரித்து வழங்காமல் குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டும் வழங்கி, பாரபட்சம் காட்டுவது வேதனையளிக்கிறது. மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கான அரிசிக்கான பணமும் அவர்களுக்கு சென்றடையவில்லை.  சிவப்பு நிற அட்டைக்கு நிகராக மஞ்சள் நிற அட்டையும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
எனவே ஒரு பிரிவினருக்கு அரிசிக்கான ரொக்கம் கிடைக்கச் செய்யாமல் உள்ளது தவறான செயலாகும். எனவே உடனடியாக அரிசி வழங்கலையும், அரிசிக்கான பணம் வழங்கலையும் ஏற்றத்தாழ்வு காட்டாமல் வழங்க புதுச்சேரி ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்துக்கான அரிசி தற்போது வழங்கப்படும் நிலையில், அடுத்தடுத்த மாதத்துக்கான அரிசியும் தங்கு  தடையின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/இலவச-அரிசி-வழங்குவதில்-பாரபட்சம்-கூடாது-3154520.html
3154519 நாகப்பட்டினம் காரைக்கால் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புப் பயிற்சி DIN DIN Sunday, May 19, 2019 09:07 AM +0530 காரைக்காலில் பருத்தி சாகுபடி பரவலாக நடைபெறும் நிலையில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி, தென்னங்குடி, மேலகாசாக்குடி, நெடுங்காடு, திருநள்ளாறு, விழிதியூர், அம்பகரத்தூர் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வேளாண் துறை மூலம் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
பயற்சியைக் கூடுதல் வேளாண் இயக்குநர் (பொறுப்பு) பி.முகம்மது தாசிர் தொடங்கிவைத்தார். 
வேளாண் துறை துணை இயக்குநர் (இடுபொருள்) ஆர்.கணேசன் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் பருத்தியில் பயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.  வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்ட இயக்குநர் (பொ) ஆர்.ஜெயந்தி, ஆத்மாவின் விவசாயப் பயிற்சிகள் குறித்தும், குழுவாக இணைந்து விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை தலைவர் குமார், உதவி பேராசிரியர்கள் எம்.காண்டீபன், கே.தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு பருத்திப் பயிர் எந்தெந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும், இதைக் காக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினர். வரும் 21-ஆம் தேதி அம்பகரத்தூரில் இந்த பயிற்சி நடத்தப்படவுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/19/பருத்தியில்-ஒருங்கிணைந்த-பயிர்-பாதுகாப்புப்-பயிற்சி-3154519.html
3153761 நாகப்பட்டினம் காரைக்கால் துணை நிலை ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்ப்; நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டது: புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி  DIN DIN Saturday, May 18, 2019 07:15 AM +0530 துணை நிலை ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் தான் என நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டதாக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார். 
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு ஆறுதல் கூறுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை காரைக்கால் வந்தவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைக்கு இதுவரை நடைபெற்ற 6 கட்டத் தேர்தலில் மதச்சார்பற்றக் கூட்டணி அமோக வெற்றிபெறும். கடந்த முறை பாஜக 272 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 160 இடங்கள் கூட வெற்றி பெற முடியாது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளையெல்லாம் சேர்த்தால்கூட பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது. தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை, மக்கள் நலத் திட்டங்களைக் கூறி ஏன் வாக்கு கேட்கவில்லை. புல்வாமா தாக்குதல், எல்லையில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல் குறித்து மட்டுமே பேசினார். எனவே, திட்டங்களைக் கூறி வாக்குக் கேட்காததே பாஜகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
மதத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தலில் ஆதாயம் தேட முனைந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதை முறியடித்து விட்டார். பாஜகவின் மதம் சார்ந்த பிரசாரம் நாட்டில் எடுபடவில்லை. மதக்கலவரத்தை உருவாக்கி இந்துத்துவா கொள்கையை கொண்டுவரவும், மதவெறியிலும் ஈடுபடவே பாஜக முயன்று வருகிறது.
எனவே, இதுபோன்ற சூழலில் தென்னிந்தியாவில் 135 இடங்களில் 15 இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று கூறியவுடன் அதற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர் ஒரு நாள் கழித்தே எதிர்ப்பு தெரிவிக்கிறார். இக்கருத்தைக் கூறிய பாஜக வேட்பாளரை கட்சியை விட்டு நீக்கம் செய்யாதது ஏன் ?
தீவிரவாதம் என்பது ஒரு மதத்துக்குச் சொந்தமானது அல்ல. உலகம் தழுவிய அளவில் தீவிரவாதம் உள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற பல மதங்களில் தீவிரவாதம் உள்ளது. எனவே, நரேந்திர மோடி இந்து தீவிரவாதம் இல்லை என்பதுபோல கூறுவது அப்பட்டமான பொய். உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
ரவுடிகள் ஒடுக்கப்படுவர்: புதுச்சேரி வில்லியனூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரௌடி, போலீஸை தாக்கிவிட்டுத் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள் எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடியது அல்ல. துணை நிலை ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று அவர் கூறினார். ஆனால், நீதிமன்றமே அப்பதவி ரப்பர் ஸ்டாம்ப் என்பதை உறுதிப்படுத்திவிட்டது. புதுச்சேரியில் எங்கள் அரசு பொறுப்பேற்றவுடன், புதுச்சேரியில் ரௌடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கினோம். அது தற்போது மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தை இந்த அரசு ஒடுக்கும் என்றார் முதல்வர் வி. நாராயணசாமி. 
பேட்டியின்போது, வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உடனிருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/துணை-நிலை-ஆளுநர்-பதவி-ரப்பர்-ஸ்டாம்ப்-நீதிமன்றமே-உறுதிப்படுத்திவிட்டது-புதுச்சேரி-முதல்வர்-வி-நார-3153761.html
3153760 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயில் தேரோட்டத்துக்கான தேர்க்கால் முகூர்த்தம் DIN DIN Saturday, May 18, 2019 07:15 AM +0530 திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவ தேரோட்டத்தையொட்டி, தேர்க் கட்டுமானத்தின் தொடக்கமாக தேர்க் கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக சார்புக் கோயில்களான ஐயனார், பிடாரி, மாரியம்மன் கோயில் உத்ஸவங்கள் நடைபெறும். கடந்த மே 10-ஆம் தேதி ஐயனார் கோயில் கொடியேற்றம் செய்யப்பட்டு 5 நாள் உத்ஸவம் நடைபெற்றது. அடுத்து, 16-ஆம் தேதி பிடாரியம்மன் கோயில் உத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்துக்கு முன்பாக இக்கோயில்களில் உத்ஸவம் நடந்து முடிந்துவிடும். பிரமோத்ஸவத்தில் தேரோட்டம் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும். தேரோட்டம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுவாமிக்கு பெரியத் தேரும், அம்பாளுக்கு அடுத்த அளவில் சிறிய தேரும், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் தனித்தனியே வீற்றிருக்கும் 5 தேர்கள், தேரோட்டத்தில் ஈடுபடுத்தப்படும். இவ்விழாவையொட்டி, தேர்க் கட்டுமானத்துக்காக தேர்க்கால் முகூர்த்தம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்க் காலுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டு சன்னிதி வழியே தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி ஜே. சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்புடன் தேர்க் கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், திருநள்ளாறு கோயிலுக்கு வந்த பக்தர்கள், உள்ளூர்மக்கள் பலர் கலந்துகொண்டனர். 5 தேர்களின் அலங்காரப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
தியாகராஜர் உன்மத்த நடனமாடும் இக்கோயில் தேரோட்டம் புகழ்பெற்றது. தேரில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளை தரிசிப்பது பக்தர்களுக்கு சிறந்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளதால், திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துத்தர கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/திருநள்ளாறு-கோயில்-தேரோட்டத்துக்கான-தேர்க்கால்-முகூர்த்தம்-3153760.html
3153759 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்குப் பயிற்சி DIN DIN Saturday, May 18, 2019 07:14 AM +0530 காரைக்காலில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்களுக்கான பயிற்சி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள், உதவியாளர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அரசு சார்பு செயலர் (ஓய்வு) முரளிதரன், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள், வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளும் முறை, வேட்பாளரின் முகவர்களிடம் இயந்திரத்தை காட்டும் முறை, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவற்றை எண்ணும் முறை குறித்து விளக்கிப் பேசினர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அதிகாரிகள், உதவியாளர்கள் யாரும் செல்லிடப்பேசியை எடுத்து வரக்கூடாது என்றும், தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் விளக்கிப் பேசினர். அதிகாரிகள், ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/வாக்கு-எண்ணும்-பணியில்-ஈடுபடும்-அதிகாரிகளுக்குப்-பயிற்சி-3153759.html
3153758 நாகப்பட்டினம் காரைக்கால் வாக்குகள் எண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அதிகாரி DIN DIN Saturday, May 18, 2019 07:14 AM +0530 காரைக்கால் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: மக்களவைத் தேர்தல் புதுச்சேரி தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவுபடி வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. வேட்பாளர்களின் முகவர்களை அழைத்து வாக்குகள் எண்ணும் மையத்தில் முகவர்களின் பணிகள் குறித்து விளக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ள விதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
பட்டமேற்படிப்பு மையத்தில் 2 இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காரைக்காலில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரு இடத்திலும், 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றொரு இடத்திலும் நடைபெறும்.  வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 விவிபாட் இயந்திரத்திலும் பதிவானவை எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைய 24 மணி நேரமாகும். காரைக்காலைப் பொருத்தவரை வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளோம் என்றார் ஏ. விக்ரந்த் ராஜா. முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்ட தேர்தல் துறையினர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/வாக்குகள்-எண்ணுவதற்கு-அனைத்து-ஏற்பாடுகளும்-தயார்-மாவட்ட-தேர்தல்-அதிகாரி-3153758.html
3153757 நாகப்பட்டினம் காரைக்கால் தாய்லாந்தில் பாக்ஸிங் பயிற்சி பெற்ற காரைக்கால் வீரருக்குப் பாராட்டு DIN DIN Saturday, May 18, 2019 07:14 AM +0530 தாய்லாந்து நாட்டில் தாய் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய காரைக்கால் கராத்தே நிறுவன இயக்குநருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
காரைக்காலில் வி.ஆர்.எஸ். அகாதெமி என்கிற அமைப்பை நடத்தி வரும் வி.ஆர்.எஸ். குமார் என்பவர், கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். தாய்லாந்து நாட்டில் டிவின் டைகர் மௌ தாய் என்ற அமைப்பு சார்பில் தாய் பாக்ஸிங் பயிற்சி கடந்த மே 4 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா, ரஷ்யா, ஹாலந்து நாட்டிலிருந்து வீரர்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். காரைக்காலில் இருந்து வி.ஆர்.எஸ். குமார் இந்த பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்று அண்மையில் தாயகம் திரும்பினார். இதுகுறித்து, அவர் கூறியது: தாய் பாக்ஸிங் என்பது குத்துச்சண்டையில் ஒருவிதம். முழங்கை, முழங்காலால் தாக்கும் முறையாகும். ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி நிறையில் சோதனைகள் நடத்தப்பட்டு கலையை நிறைவாக கற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தீர்மானித்துள்ளேன் என்ற அவர், காரைக்காலில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், சந்திர பிரியங்கா ஆகியோர் தமக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/தாய்லாந்தில்-பாக்ஸிங்-பயிற்சி-பெற்ற-காரைக்கால்-வீரருக்குப்-பாராட்டு-3153757.html
3153756 நாகப்பட்டினம் காரைக்கால் நரசிம்ம ஜயந்தி வழிபாடு DIN DIN Saturday, May 18, 2019 07:13 AM +0530 நரசிம்ம ஜயந்தி தினத்தையொட்டி காரைக்கால் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விஷ்ணு அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் முக்கியத்துவம் மிக்கதாகும். பிரகலாதனை நரசிம்ம அவதாரத்தில் பாதுகாத்தது வைணவத் தலங்களில் குறிப்பாக நரசிம்மருக்கென்றே உள்ள கோயில்களில் நாடகம் போன்றவை மூலம் ஜயந்தி நாளில் பக்தர்களுக்கு அவதாரப் பெருமைகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்ம ஜயந்தி வழிபாடு நடைபெறுகிறது. 
இந்நாளில், காரைக்காலில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சுதர்ஸன நரசிம்மருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு பட்டாச்சாரியார்களால் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. தொழிலதிபர்கள் பலரும் அர்ச்சனை செய்து நரசிம்மரை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
காரைக்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன்சிங் என்பவர் மாவட்ட நிர்வாகியாக பணியிலிருந்தபோது, ஆய்வுப் பணிக்குச் சென்றிந்த சூழலில், ஆற்றோரத்தில் உள்ள நரசிம்மர் சிலை உள்ளிட்ட சில சிலைகளை கொண்டுவந்து, ஆட்சியரக வளாகத்தில் விஐபி சூட் அருகே மண்டபம் எழுப்பி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது, முதல் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஆராதனைகள் இங்கு நடைபெறுகின்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/நரசிம்ம-ஜயந்தி-வழிபாடு-3153756.html
3153755 நாகப்பட்டினம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பொது ஏலம் விடும் முறையை அமல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்  DIN DIN Saturday, May 18, 2019 07:13 AM +0530 காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தியை பொது ஏலம் விடும் பழைய முறையை அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து, அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி, செயலர் எஸ்.எம். தமீம் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது: காரைக்காலில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் 3 கட்டமாக அறுவடை செய்வார்கள். அடுத்த 20 நாள்களில் முதல் கட்டமாக அறுவடை செய்யக் கூடிய வகையில் பருத்தி பயிர் பல இடங்களில் தயாராகி வருகிறது. தனியார் கொள்முதலாளர்கள் குறைந்த விலையை நிர்ணயித்துக்கொண்டு விவசாயியின் உற்பத்தியை அந்தந்த இடத்திலேயே வாங்கிச் செல்கின்றனர். இது பயிரிட்ட விவசாயிக்கு உரிய லாபத்தை தருவதாக இருப்பதில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட கிடங்கில், விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்தி (பஞ்சு) சேமிக்கச் செய்து, தமிழகப் பகுதியிலிருந்து வேளாண் துறை மூலம் கொள்முதலாளர்கள் வரவழைக்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது. இது, பருத்தி பயிர் செய்த விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தந்தது. இதுபோன்ற சூழலை புதுச்சேரி அரசின் வேளாண் துறை நிர்வாகம் நிகழாண்டு செய்ய வேண்டும். குறைந்த விலைக்கு விற்றுவரும் போக்கு தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அடுத்து வருமாண்டுகளில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகளிடையே குறையும் வாய்ப்புள்ளது. எனவே, ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் பொது ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யும் சூழலை புதுச்சேரி அரசின் வேளாண் துறை நிர்வாகம் உடனடியாக செய்யவேண்டும். இதுகுறித்த அறிவிப்பை பருத்தி விவசாயிகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/18/ஒழுங்குமுறை-விற்பனைக்-கூடத்தில்-பொது-ஏலம்-விடும்-முறையை-அமல்படுத்த-வேண்டும்-விவசாயிகள்-சங்கம்-வலியு-3153755.html
3153224 நாகப்பட்டினம் காரைக்கால் திரௌபதி அம்மன் கோயில் திருக்கல்யாண உத்ஸவம் DIN DIN Friday, May 17, 2019 08:29 AM +0530 காரைக்கால் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்திப்பெற்ற திரௌபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்தத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக  பூச்சொரிதல் நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அம்பாள் பிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை இரவு   திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக வரிசை எடுத்துவந்து திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில்  அர்சுனன், திரௌபதி அம்மன் எழுந்தருளினர்.
பின்னர், மாலை மாற்றும் சடங்கு நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்களுடன் திரௌபதி அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து, மகா தீபாராதனைக் காட்டினர். இறைவனுக்கு திருக்கல்யாணம் நடத்துவதன் சிறப்பு, மகிமைகள் குறித்து சிவாச்சாரியார் சொற்பொழிவாற்றினர். காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் உள்ளிட்ட  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இவ்விழாவில், தொடர் நிகழ்வாக மே 20-ஆம் தேதி  சக்தி கரகம் எடுத்தல், இரவு அம்பாள் வீதியுலா, 21-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு, 22-ஆம் தேதி தர்மராஜா பட்டாபிஷேகம், விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகி வி.என்.செங்குட்டுவன் உள்ளிட்ட விழா 
குழுவினர்  செய்துள்ளனர்
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/திரௌபதி-அம்மன்-கோயில்-திருக்கல்யாண-உத்ஸவம்-3153224.html
3153222 நாகப்பட்டினம் காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அறிவிப்பு DIN DIN Friday, May 17, 2019 08:29 AM +0530 அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் 17.5.2019 மாலை 4 மணிக்குள் அளிக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் மே 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். கலந்தாய்வு மே 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் மே 27-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். இதற்கான கலந்தாய்வு மே 28-ஆம் தேதி நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தகுதிப் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் மே 29-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் இதற்கான கலந்தாய்வு 30-ஆம் தேதி நடத்தப்படும். 11-ஆம் வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது.  கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர்களை தொடர்புகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/அரசுப்-பள்ளிகளில்-11-ஆம்-வகுப்புக்கு-மாணவர்-சேர்க்கை-கல்வித்துறை-அறிவிப்பு-3153222.html
3153220 நாகப்பட்டினம் காரைக்கால் கோடை கால விளையாட்டு பயிற்சி பெற்ற சிறார்களுக்கு சான்றிதழ் DIN DIN Friday, May 17, 2019 08:28 AM +0530 காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி நிறைவில் மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. 
 காரைக்கால் அரசு விளையாட்டு அரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டுப் பயிற்சியளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, 15 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில்  இறகுப் பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், பளு தூக்குதல், கபடி மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் பயிற்சியளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுக்கேற்ப கட்டண முறையிலும் இந்த பயிற்சி தரப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சியை அளித்தனர். பயிற்சிக் காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததையொட்டி, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பயிற்சியில் பங்கேற்றோருக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். கோடை விடுமுறை காலத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க ஏதுவாக விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆர்வமாக மாணவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சரியான பயிற்றுநர்களைக்கொண்டு தரப்பட்ட பயிற்சியின் மூலம் மாணவர்கள் இனிவரும் நாள்களிலும் கூடுதல் பயிற்சியை மேற்கொண்டு, தமது விருப்பமான விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டும் என கல்வித்துறையினர் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்ட துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், கண்மணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.  விளையாட்டுப் பயிற்சியில் சுமார் 300 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்ததாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/கோடை-கால-விளையாட்டு-பயிற்சி-பெற்ற-சிறார்களுக்கு-சான்றிதழ்-3153220.html
3153218 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் அரசு மருத்துவமனை மைதானத்தில் தீ விபத்து DIN DIN Friday, May 17, 2019 08:28 AM +0530 காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு அருகே குப்பைகள், கருவேல மரங்கள் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தன.
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ரயில் நிலையம் செல்லும் வழியில் கண் மருத்துவப் பிரிவு உள்ளது. இந்த பிரிவு அருகே திறந்தவெளி மைதானம் உள்ளது. இதில் மருத்துவமனை நிர்வாகத்தில் பயனற்றுப் போன வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கருவேல மரங்களும் மண்டியுள்ளன.
இந்த மைதானத்தின் ஒருபுறத்தில் வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் தீப்பிடித்து, கருவேல மரங்கள் மற்றும் காய்ந்த தழைகள், குப்பைகளில் பரவியது.  
இதுகுறித்து, தகவலறிந்த காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து, தீயை கட்டுப்படுத்தினர். மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி. உதயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். கண் மருத்துவப் பிரிவுக்கு வந்தோர் யாரேனும் 
குப்பையில் தீவைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
காரைக்கால் நகரக் காவல்நிலைய ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, மருத்துவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். 
கருவேல மரங்களால் ஆபத்து : ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போதெல்லாம் கருவேல மரங்களும், குப்பைகளும் தீப்பிடிப்பது தொடர்கிறது. எனவே, பொது இடங்களில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற அரசு நிர்வாகமும், தனியார் குடிமனைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நிலத்தின் உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தீ விபத்துகளை கட்டுக்குள் கொண்டுவருவதுடன், கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பும் குறையும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/காரைக்கால்-அரசு-மருத்துவமனை-மைதானத்தில்-தீ-விபத்து-3153218.html
3153217 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் DIN DIN Friday, May 17, 2019 08:28 AM +0530 மழை வேண்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருண ஜெபம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு  தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மழை வேண்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வருண ஜெபம் செய்வது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாவட்ட ஆட்சியரும், தர்பாரண்யேசுவரர் கோயிலின் தனி அதிகாரியுமான ஏ. விக்ரந்த்ராஜா அறிவுறுத்தலின்பேரில், திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருண ஜெபம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் கொடி மரம் அருகே உள்ள நந்தியை சுற்றி தொட்டி அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 
பின்னர், நந்திக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு,  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களும், ஓதுவார்கள் மழை வேண்டி பதிகமும் பாடினர்.  மேலும், மழை பெய்வதற்குரிய ராகத்தில் நாகசுரம் இசைக்கப்பட்டது. 
பின்னர், தொட்டியில் நந்தியின் வாய் பகுதி வரை நீர் நிரப்பி மகா தீபாராதனை காட்டப்பட்டது.  தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி ஜே.சுந்தரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/திருநள்ளாறு-கோயிலில்-மழை-வேண்டி-வருண-ஜெபம்-3153217.html
3153216 நாகப்பட்டினம் காரைக்கால் கைலாசநாதர் கோயிலில்  ஏகாதச ருத்ர ஹோமம் DIN DIN Friday, May 17, 2019 08:28 AM +0530 காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நலன், மழை வளம் உள்ளிட்ட பிரார்த்தனையுடன் ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு 22-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சன்னிதியில் உள்ள யாக குண்டத்தில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதற்காக காலை மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜைகள் நடத்தப்பட்டன. ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. 
தொடர்ந்து 11 சிவாச்சாரியார்கள் ருத்ர ஹோமம் நடத்தினர். அப்போது ஏராளமான பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், 
பட்டுச் சேலை, பால், தயிர், பழங்கள், நெய் உள்ளிட்டவை யாக குண்டத்தில் போட்டு ஹோமத்தை நடத்தி மகா பூர்ணாஹுதி நடத்தினர். மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு பகல் 12 மணியளவில் மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  மாலையில் பிரதோஷ வழிபாடு, கைலாசநாதர் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை நடைபெற்றது.  இதற்கான ஏற்பாடுகளை சுந்தராம்பாள் உடனமர்  கைலாசநாதர் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.             
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/கைலாசநாதர்-கோயிலில்--ஏகாதச-ருத்ர-ஹோமம்-3153216.html
3153215 நாகப்பட்டினம் காரைக்கால் சாலையோர வாய்க்காலுக்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, May 17, 2019 08:28 AM +0530 காரைக்கால் - திருநள்ளாறு இடையே 6 கி.மீ.  தூரத்தில் சாலைக்கும்  வாய்க்காலுக்கும் இடையே தடுப்பு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் சந்தைத் திடல் அருகே வாஞ்சியாற்றில் கலக்கும் வகையில் காரைக்கால் - திருநள்ளாறு இடையே 6 கி.மீ. நீளத்தில் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. காவிரி நீர் வரும் காலம், மழைக் காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும். பிற காலங்களில் திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்திலிருந்து அவ்வப்போது மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் இதன் வழியே வாஞ்சியாற்றில் கலக்கும் வகையில் செல்லும்.
இந்த தண்ணீரை பச்சூர், பூமங்கலம் உள்ளிட்ட வாய்க்காலையொட்டி வேளாண் நிலங்களுக்கு, விவசாயிகள் மோட்டார் மூலம் பயன்படுத்திக்கொள்வர். சாலையிலிருந்து இந்த வாய்க்கால் சற்று ஆழமான பகுதியாகவே உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி சாலைக்கும் - வாய்க்காலுக்கும் இடையே தடுப்புச் சுவர் அல்லது இரும்புத் தடுப்பு அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். காரைக்காலில் இருந்து திருநள்ளாறு மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து இந்த மார்க்கத்தில் அதிகம்.  6 கி.மீ.  தூரத்துக்கிடையே 2 மதுக்கடைகள் உள்ளன. போக்குவரத்து வாகனங்கள் பலவும் மிகுதியான வேகத்தில் பயணிப்பதால், ஒன்றுக்கொன்று மோதி வாய்க்காலில் கவிழும் ஆபத்து உள்ளது. இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்டதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், இரவில் போதிய மின் வெளிச்சமின்மை, அதிவேக வாகனப் பயணம் போன்றவற்றாலும், மதுக்கடைக்கு சென்றுவிட்டு செல்வோராலும் இந்த பகுதியில் தினமும் விபத்து ஏற்படுகிறது.இந்த சாலையில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது.  எனவே, இந்த பகுதியிலும் உரிய தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/சாலையோர-வாய்க்காலுக்கு-தடுப்பு-அமைக்க-வலியுறுத்தல்-3153215.html
3153214 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன்  பஞ்சாயத்துக்கு கணினிகள் அளிப்பு DIN DIN Friday, May 17, 2019 08:27 AM +0530 கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு இந்தியன் வங்கி நிர்வாகம் மூலம் 2 கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருநள்ளாறு பகுதியில் இயங்கும் இந்தியன் வங்கி நிர்வாகம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் பயன்பாட்டுக்கு தமது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் 2 கணினிகள் வழங்க முடிவு செய்தது.
அதன்படி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 கணினிகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரனிடம் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வழங்கினார். 
நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், காரைக்கால், திருநள்ளாறு வங்கி மேலாளர்கள் வீரராகவன், அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வங்கி நிர்வாகத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட சேவைக்கு மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/திருநள்ளாறு-கொம்யூன்--பஞ்சாயத்துக்கு-கணினிகள்-அளிப்பு-3153214.html
3152465 நாகப்பட்டினம் காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் இன்று ருத்ர ஹோமம் DIN DIN Thursday, May 16, 2019 07:32 AM +0530 அக்னி நட்சத்திர காலத்தில் நடத்தப்படக்கூடிய ஏகாதச ருத்ர ஹோமம்  காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. 
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர  காலத்தில் உலக நலன் வேண்டியும், மழை வளம் பெருகவும், விவசாயம் மேம்படவும், கோடை வெயிலின் தாக்கம் குறைய வேண்டிய பிரார்த்தனையாக, ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது. சுந்தராம்பாள்  உடனமர் கைலாசநாதர் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினர் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த ஹோம நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 8 மணிக்கு ஏகாதச ருத்ர கலச பூஜைகள் வைத்து ஹோமம் தொடங்கப்படுகிறது. பகல் 11 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.
பிறகு 12 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டு மகா ஸ்தபன அபிஷேகம் சுவாமிகளுக்கு நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாடும், 5.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு திரிசதி அர்ச்சனையும், 6.30 மணிக்கு கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாணம், இரவு 8.30 மணிக்கு அர்த்த ஜாம பள்ளியறை வழிபாடு நடத்தப்படுகிறது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/கைலாசநாதர்-கோயிலில்-இன்று-ருத்ர-ஹோமம்-3152465.html
3152434 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு கோயிலை சுற்றியுள்ள 4 சாலைகளும் சரி செய்யப்படுமா? DIN DIN Thursday, May 16, 2019 07:22 AM +0530 திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலை சுற்றி நான்கு வீதிகளும் சிதிலமடைந்துக் காணப்படுவதால், பிரமோத்ஸவத்துக்குள் தற்காலிக சீரமைப்பை பொதுப்பணித்துறையினர் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தில் இந்த சாலைகள் உள்ளதால் நிரந்தர மேம்பாடு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்தது.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகும். தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை தருவதும், சனிக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருவதால், திருநள்ளாறை கோயில் நகரமாக புதுச்சேரி அரசு அறிவித்து, ஹட்கோ நிதியகத்திலிருந்து கடனாக நிதி பெற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுகிறது.
இதற்கிடையே, மத்திய அரசின் ரூர்பன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமப்புறத்தை மேம்படுத்தும் திட்டத்தில் புதுச்சேரியில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியும், காரைக்காலில் திருநள்ளாறு பேரவைத் தொகுதியும் தேர்வு செய்யப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சாலை, மருத்துவ வசதி, பள்ளிக் கட்டடம், குடிநீர், மின்சாரம், கழிவுநீர் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் அடங்கியுள்ளன.
இந்த திட்டப்பணியில் அண்மையில் கால்நடை வளர்ப்போருக்கு ஏதுவாக கூட்டுறவுத் துறை மூலம் பால் பதனிடும் மையம் அமைத்தலுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பிற பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையே திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், வாகனங்கள் போக்குவரத்து அதிகரிப்பால் சாலை மேலும் மோசமடைந்து வருவதாகவும், பக்தர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் சிரமத்தை இச்சாலை ஏற்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.
தர்பாரண்யேசுவரர் கோயில் வருடாந்திர பிரமோத்ஸவம் வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்த உத்ஸவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரப் படல் வீதியுலா, தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெறும். தினமும் சுவாமிகள் வீதியுலா நடைபெறும். பக்தர்களும் திரளாக பங்கேற்பர். எனவே இந்த சாலைகளை செப்பனிடும் பணியை பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி கூறும்போது, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் மேம்படுத்துவதோடு, சாக்கடை வசதி, நடைமேடை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த ரூர்பன் திட்டத்தில் ரூ.4 கோடி கோரி மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. நிதியாதாரம் கிடைத்தவுடன் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும்.
இதற்கிடையே பிரமோத்ஸவ காலத்தை கருத்தில்கொண்டு அடுத்த ஓரிரு நாள்களில் இச்சாலைகளை ஆய்வு செய்து, தற்காலிகமாக செப்பனிடும் பணியைச்செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
திருநள்ளாறு வடக்கு வீதி மட்டுமே நளன் குளத்திலிருந்து கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் சாலையாகவும், பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்துள்ள சாலையாகவும், கடைகள் அதிகம் கொண்டதாக விளங்குவதால் நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. இந்த சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் திட்டத்தையும் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/திருநள்ளாறு-கோயிலை-சுற்றியுள்ள-4-சாலைகளும்-சரி-செய்யப்படுமா-3152434.html
3152433 நாகப்பட்டினம் காரைக்கால் திறனற்ற காரைக்கால் சிறப்புக் காவல் பிரிவு: புதுச்சேரி காவல்துறை தலைவரிடம் பாமக புகார் DIN DIN Thursday, May 16, 2019 07:21 AM +0530 காரைக்கால் மாவட்ட காவல்துறையில் திறனற்ற நிலையில் சிறப்புக் காவல் பிரிவு இருப்பதாகவும், திறமையான அதிகாரிகளை நியமித்து வலிமை பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க.தேவமணி புதுச்சேரி காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) செவ்வாய்க்கிழமை  அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது:
காரைக்கால் பிராந்தியத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருள், கள்ள லாட்டரி, விபசாரம் போன்ற சட்ட விரோத, சமூகக் கேடான செயல்கள் அதிகரித்துள்ளன. காரைக்காலில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா பொட்டலங்கள் கடற்கரையருகே கிடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாலையில்  பேரணியாக  சென்ற ஓர் அரசியல் கட்சியினர் திடீரென புகுந்து இருக்கைகளை வீசியெறிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டது.
கும்பகோணம் பகுதி திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடையவர் காரைக்காலில் தங்கியிருந்து தமிழக காவல்துறையினர் வந்து அதற்கு தொடர்புடையவரை கைது செய்ததும், தேசிய புலனாய்வு அதிகாரிகள் காரைக்காலில் சோதனை மேற்கொண்ட செயலும் அண்மையில் நடந்தன.
இதுபோன்ற செயல்களை முன்கூட்டியே ரகசியமாக அறிந்து காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிவித்து காரைக்காலை அமைதியான பிராந்தியமாக கொண்டு செல்லும் நிலை காரைக்கால் துறையில் உள்ள சிறப்புக் காவல் பிரிவுக்கு உண்டு. ஆனால் இந்த அமைப்பு காரைக்கால் காவல்துறையில் வலுவிழந்து காணப்படுகிறது.
இந்த பிரிவுக்கு நிரந்தரமாக காவல் ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை. கடலோரக் காவல்படையின் காவல் ஆய்வாளரே கூடுதல் பொறுப்பாக சிறப்புப் பிரிவையும் கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பிரிவுக்கு, கடலோரக் காவல்படை ஆய்வாளரை கூடுதல் பொறுப்பாக கவனிக்கச் செய்திருப்பதன் மூலம் காரைக்கால் சிறப்புப் பிரிவு பல நிலைகளில் பின்னடைவில் உள்ளது. எனவே நீண்ட காலமாக சிறப்பிப் பிரிவு ஆய்வாளர் பணியை செய்துவருபவரை அதிலிருந்து விடுவித்து, சிறப்புப் பிரிவுக்கு புதிதாக ஓர் ஆய்வாளரை நியமிப்பதோடு, திறமைமிக்க பிற அலுவலர்களை அங்கு நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/திறனற்ற-காரைக்கால்-சிறப்புக்-காவல்-பிரிவு-புதுச்சேரி-காவல்துறை-தலைவரிடம்-பாமக-புகார்-3152433.html
3152432 நாகப்பட்டினம் காரைக்கால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம் DIN DIN Thursday, May 16, 2019 07:21 AM +0530 காரைக்காலில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசி விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. 
புதுச்சேரி மாநில ரேஷன் கடைகளின் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கான தொகை வங்கியில் செலுத்தும் வகையில் துணை நிலை ஆளுநர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி அளித்தார்.
தேர்தல் நடத்தை விதியால் அரிசி வழங்கல் தடைபட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தலுக்குப் பின் இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி கூறியிருந்தார். தேர்தல் ஆணையமும் அரிசி வழங்குவதற்கு தடையில்லை எனக் கூறியதையடுத்து, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான இலவச அரிசியை வரவழைக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் சுமார் 30 ஆயிரம்  சிவப்பு நிற அட்டை உள்ள நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான 20 கிலோ அரிசி வழங்கும் வகையில் முதல்கட்டமாக 50 டன் அரிசி காரைக்காலுக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது. மேலும் படிப்படியாக அரிசி வரவழைக்கப்படுமென குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்தது.
ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 25 மாத ஊதியத்தைக் கேட்டு கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரிசி வழங்க வேண்டியிருப்பதையொட்டி ஊழியர்களுடன் அரசு பேச்சு நடத்தி, 3 மாத ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்தது.
இதைத் தொடர்ந்து அரிசி வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடத் தொடங்கினர். முதல்கட்டமாக திருநள்ளாறு பேரவைத் தொகுதிக்குள்பட்ட அம்பகரத்தூர், நல்லம்பல், செல்லூர், தேனூர், பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சிவப்பு அட்டைக்கு 20 கிலோ வீதம் வழங்கப்பட்டது. மற்ற பகுதியினருக்கு படிப்படியாக அரிசி வருவதைக் கொண்டு வழங்கப்படும் என துறை நிர்வாகம் தெரிவித்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/சிவப்பு-அட்டைதாரர்களுக்கு-இலவச-அரிசி-விநியோகம்-3152432.html
3152431 நாகப்பட்டினம் காரைக்கால் இலவச மனைப் பட்டா: புதுச்சேரியில் போராட்டம் நடத்த முடிவு DIN DIN Thursday, May 16, 2019 07:21 AM +0530 இலவச குடிமனைப் பட்டா வழங்கக்கோரி கல்லறைப் பேட் கிராமத்தினர் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள கல்லறைப்பேட் கிராமத்தில் வசிப்போர், ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்க வேண்டியுள்ளதாகவும், தங்களுக்கு அரசு இலவச குடிமனைப்பட்டா வழங்க வேண்டியும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். மனைப்பட்டா வழங்க நிலம் தேர்வு செய்தும், ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு நிதியில் ரூ.2.85 கோடி ஒதுக்கீடு செய்தும், நிலத்துக்குரியவர்களிடம் நிதி போய்ச் சேராத வகையில் அரசுத் துறையினர் அலட்சியம் காட்டப்பட்டதால், நிலம் கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக பட்டா கோரி போராட்டம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மனைப் பட்டா கோரி கல்லறைப்பேட் கிராமத்தினர், புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் வரும் 29-ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருப்பதாக, காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலரும், கல்லறைப்பேட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான என்.காமராஜ் தெரிவித்துள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/இலவச-மனைப்-பட்டா-புதுச்சேரியில்-போராட்டம்-நடத்த-முடிவு-3152431.html
3152430 நாகப்பட்டினம் காரைக்கால் பருத்தியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சி: வேளாண் அதிகாரி தகவல் DIN DIN Thursday, May 16, 2019 07:20 AM +0530 காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுவரும் பருத்திச் செடியை சப்பாத்திப் பூச்சித் தாக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில், இதைத் தடுக்க விரிவான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுவதாகவும், பயிர்க் காப்பீடும் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுவருகிறது.  குறிப்பாக மாவட்டத்தில் விழுதியூர், பேட்டை, அகலங்கண்ணு, இளையான்குடி, சேத்தூர், புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி , திருநள்ளாறு, அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
பருத்தி 5 மாத பயிர் என்ற நிலையில், நிகழாண்டு நெல் அறுவடைக்குப் பின்னர் பருத்தி விதைப்பு செய்யப்பட்டது.  தற்போது பூக்கள் பூத்துக் காய்க்கும் பருவத்தில் பருத்தி உள்ளன.  கடுமையான வெயில் ஏற்பட்டுள்ளதால், இதை சாதகமாகப் பயன்படுத்தி சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், இது மகசூலை வெகுவாக பாதிக்கச் செய்யும் என விவசாயிகள் வேதனை
தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியது :  தை, மாசி மாத நெல் அறுவடைக்குப் பின்பு பருத்தி சாகுபடி மேற்கொள்வது வழக்கம்.  தற்போது செடியில் பூப்பூத்துள்ளது. அடுத்து காய்க்கும் பருவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொதுவாக கடும் வெயில் இருந்தாலும், கோடை மழை தீவிரமாக பெய்தாலும் பருத்தி பாதிப்பு ஏற்படும். மிகுந்த கவனத்துடன் பணியாற்றினால் மட்டுமே  பயிர் மூலம் லாபத்தை ஈட்டமுடியும். லேசான கோடை மழை இருந்தால் மாவு பூச்சி என்கிற சப்பாத்திப் பூச்சித் தாக்குதலில் இருந்து பருத்தியைக் காப்பாற்ற முடியும்.
 ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. பூச்சித் தாக்குதல் இல்லையென்றால் லாபத்தை ஈட்டும் வகையில் மகசூல் கிடைக்கும். தற்போது மழையில்லாததால் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்றனர்.
 இதுகுறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குநர் (பொறுப்பு) முகம்மது தாசீர் புதன்கிழமை கூறியது :  கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு பரவலாக பருத்திப் பயிர் அதிகமான நிலப்பரப்பில் விவசாயிகள் செய்கின்றனர். மழையில்லாததால் மாவுப் பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. இது எறும்பு மூலம் செடிக்கு பரவக்கூடியது. இதைக் கட்டுப்படுத்த தேவையான பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விவசாயிகளுக்கு பகுதி பகுதியாக பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
கொன்னக்காவலி, மேலகாசாக்குடி, தென்னங்குடி, நெடுங்காடு பகுதியில் பயிற்சி தரப்பட்டுள்ளது. பிற இடங்களில் தினமும் இந்த பயிற்சியை வேளாண் துறை அளிக்கிறது. 
இதை அறிந்துகொள்ளும் விவசாயிகள் மாவுப் பூச்சித் தாக்குதலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர். தவிர, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு ஹெக்டேருக்கு மாநில அரசு ரூ.15 ஆயிரம், மத்திய அரசு ரூ.15 ஆயிரம் வீதம் பிரீமியம் செலுத்தி, காரைக்கால் பருத்தி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி 10 கிலோ மகசூலில் இழப்பு ஏற்பட்டால்கூட காப்பீடு மூலம் இழப்பீட்டைப் பெறமுடியும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/பருத்தியில்-சப்பாத்திப்-பூச்சித்-தாக்குதலைத்-தடுக்க-விவசாயிகளுக்கு-பயிற்சி-வேளாண்-அதிகாரி-தகவல்-3152430.html
3152429 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் இன்று நந்தியிடம் வருண ஜெபம் DIN DIN Thursday, May 16, 2019 07:20 AM +0530 மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் விதமாக  திருநள்ளாறு கோயில் நந்தியை தண்ணீரில் மூழ்கச் செய்து ஆராதனை வழிபாடு வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. 
திருநள்ளாறு  தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர காலத்தில்  மழை வேண்டி நந்தியிடம் பிரார்த்தனை செய்யும் வருண ஜெபம் செய்வது வழக்கம். அதன்படி, நிகழாண்டு வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வருண ஜெபம் நடைபெறவுள்ளது.  நந்தியை சுற்றி தொட்டி வடிவில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நந்தியை தண்ணீரில் மூழ்கச் செய்து வழிபாடு நடைபெறவுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
தேர்க் கால் முகூர்த்தம்: தர்பாரண்யேசுவரர் கோயிலில் வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் தொடங்குகிறது. முன்னதாக சார்புக் கோயில்களான ஐயனார்,  பிடாரி,  மாரியம்மன் கோயில்களில் வழிபாடுகளாக முதலில் ஐயனார் கோயில் உத்ஸவம் கொடியேற்றத்துடன் வழிபாடு தொடங்கியுள்ளது.
பிரமோத்ஸவத்தில் தேரோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகள் வீற்றிருக்கக்கூடிய 5 தேர்கள்  இதில் பங்கேற்கும். இதையொட்டி, தேர் கட்டுமானத்துக்காக தேர்க் கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/16/திருநள்ளாறு-தர்பாரண்யேசுவரர்-கோயிலில்-இன்று-நந்தியிடம்-வருண-ஜெபம்-3152429.html
3152082 நாகப்பட்டினம் காரைக்கால் இன்று முதல் இலவச அரிசி விநியோகம் DIN DIN Wednesday, May 15, 2019 08:59 AM +0530 காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி புதன்கிழமை முதல் (மே 15) வழங்க குடிமைப் பொருள் வழங்கல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
 புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர்) மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக ஏற்கெனவே வரவழைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் காரைக்கால் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளன.
 இதில், முதல்கட்டமாக காரைக்கால் மாவட்டத்தில், அம்பகரத்தூர், நல்லம்பல், செல்லூர், தேனூர், பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு புதன்கிழமை முதல் இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.
 இதைத் தொடர்ந்து, பிற இடங்களிலும் வழங்கப்படும். அரிசி மேலும் வரவேண்டியுள்ளதால், வருகைக்கேற்ப படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/இன்று-முதல்-இலவச-அரிசி-விநியோகம்-3152082.html
3152081 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் துறைமுகத்தில் மலேசிய மணல்: ஆட்சியர் ஆய்வு DIN DIN Wednesday, May 15, 2019 08:59 AM +0530 மலேசியாவிலிருந்து காரைக்காலுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
 புதுச்சேரி, காரைக்கால் பகுதி கட்டுமானத்துக்கு மணல் தேவையை கருத்தில்கொண்டு, புதுச்சேரி அரசு வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுப்பணித்துறை நிர்வாகம் உருவாக்கியது.
 அதன்படி, முதல் முறையாக அபான் மார்கெட்டிங் என்ற தனியார் நிறுவனம் மலேசியா நாட்டிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை கொள்முதல் செய்து, கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகத்துக்கு சனிக்கிழமை கொண்டுவந்தது.
 இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி ஆகியோரும் ஆய்வில் பங்கேற்றனர்.
 துறைமுகத்தின் விதிகளுக்குள்பட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்ட விதம் குறித்து, ஆட்சியருக்கு துறைமுக அதிகாரிகள் விளக்கிக் கூறினர். பொதுப்பணித் துறை தலைமை அதிகாரிகள் ஏற்கெனவே ஆய்வு செய்து, இந்த மணல் கட்டுமானத்துக்கு உகந்ததுதானா என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த அறிக்கை சாதகமாகவும், இறக்குமதியாளர் புதுச்சேரி அரசின் விதிகளின்படி செயல்படும்பட்சத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு வெளிநாட்டு மணல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே கூறியுள்ளது.
 காரைக்கால் துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது கட்டடத்துறையைச் சேர்ந்த பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/காரைக்கால்-துறைமுகத்தில்-மலேசிய-மணல்-ஆட்சியர்-ஆய்வு-3152081.html
3152080 நாகப்பட்டினம் காரைக்கால் ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உத்ஸவம் தொடக்கம் DIN DIN Wednesday, May 15, 2019 08:59 AM +0530 காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர உத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ திரௌபதியம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 18-ஆம் ஆண்டாக அக்னி சட்டி வசந்தத் திருவிழா நடைபெறுகிறது. கடந்த 12-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா முறைப்படி தொடங்கும் விதமாக திங்கள்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.
 தொடர் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு அம்பாள் பிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், வரிசை எடுத்தல், அர்ச்சுனன், திரௌபதியம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் புதன்கிழமை (மே 15) நடைபெறுகின்றன. வியாழக்கிழமை இரவு துகில் தரிதல் நிகழ்ச்சியும், மே 17-ஆம் தேதி மாலை காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து தவசுமர ஊர்வலமும், இரவு தவசுமரம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 18-ஆம் தேதி மாலை காளியம்மன் புறப்பாடும், இரவு அரவான் கடப்பலியும் நடைபெறவுள்ளது. 19-ஆம் தேதி கர்ண மோட்சம் நடைபெறுகிறது. பின்னர், 20-ஆம் தேதி மாலை சக்தி கரகம் எடுத்தல், இரவு அம்பாள் வீதியுலா, 21-ஆம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு, 22-ஆம் தேதி விடையாற்றியாக தர்மராஜ பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. காரைக்கால் நகரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலில் கிராமப்புற கோயிலில் நடத்தப்படுவதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/ராஜயோக-பத்ரகாளியம்மன்-கோயில்-உத்ஸவம்-தொடக்கம்-3152080.html
3152079 நாகப்பட்டினம் காரைக்கால் ஒப்பில்லாமணியர் கோயிலில் உத்ஸவம் நிறைவு DIN DIN Wednesday, May 15, 2019 08:59 AM +0530 காரைக்கால் ஒப்பில்லாமணியர் கோயில் உத்ஸவம் செவ்வாய்க்கிழமை விடையாற்றி நிகழ்வுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
 காரைக்காலில் உள்ள ஸ்ரீ சௌந்தராம்பாள் சமேத ஒப்பில்லாமணியர் கோயில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்துக்குள்பட்டதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் இறைவன் தமது திருமணக்கோலத்தை அகத்தியருக்கு காட்டும் நிகழ்வாக, திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது.
 நிகழாண்டுக்கான இத்திருவிழா மே 10-ஆம் தேதி ஸ்ரீ விநாயகர் புறப்பாட்டுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, இரவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. பின்னர், திங்கள்கிழமை இரவு ஒப்பில்லாமணியர், சௌந்தராம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 108 கலச யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. திருவிழா நிறைவாக செவ்வாய்க்கிழமை காலை கலச யாகம் 2-ஆம் கால பூஜைகள் நடத்தி, சுவாமி அம்பாளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பகல் 12 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் விடையாற்றி வழிபாடு நடத்தப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. சந்தனக் காப்பு மற்றும் கலசாபிஷேகம், சங்காபிஷேக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/ஒப்பில்லாமணியர்-கோயிலில்-உத்ஸவம்-நிறைவு-3152079.html
3152078 நாகப்பட்டினம் காரைக்கால் ரூ. 21 கோடியில் 10 படகு பணிமனைகள் கட்டும் பணி: 4 பணிமனைகளை நிகழ்மாதம் ஒப்படைக்கத் திட்டம் DIN DIN Wednesday, May 15, 2019 08:58 AM +0530 காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களில் ரூ.21 கோடியில் 10 படகு பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நிகழ்மாத இறுதிக்குள் 4 பணிமனைகளை மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கும் வகையில், பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
 காரைக்கால் மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சிறிய படகுகளை பழுது நீக்க லாரிகளில் ஏற்றி வெளியூருக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அல்லது படகு பழுது நீக்கும் வல்லுநர்களை கிராமங்களுக்கு வரவழைத்து சரி செய்யப்படுகின்றன. வலை பின்னும் பணியை கடலோர மணல் பரப்பில் மீனவர்கள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வலை, படகுக்கான மோட்டார் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க வசதிகள் இல்லாத நிலையை போக்கும் வகையில், மீனவ கிராமங்களில் கடலோரத்தில் மீனவர்கள் படகுக்கான பணிமனையை கட்டித்தர புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்காக உலக வங்கியின் கடலோர பேரிடர் இடர் குறைப்புத் திட்டம் மூலம் ரூ.21 கோடி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணிகளை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
 இதில் மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை, கோட்டுச்சேரிமேடு, கீழகாசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு ஆகிய கிராமங்களில் 6 பணிமனைகள் ரூ.11 கோடியிலும், காரைக்கால்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 4 பணிமனைகள் ரூ.10 கோடியிலும் பணிகள் தொடங்கப்பட்டன.
 இந்த பணிமனையில் வலை பின்னும் கூடம், இயந்திரம் பழுது நீக்குதல், பொருள்களை பாதுகாக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், குறித்த காலத்தில் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் காளிக்குப்பம், மண்டபத்தூர், கோட்டுச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பணிமனைகளை இம்மாத இறுதியில் மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என ஒப்பந்த நிறுவனத்துக்கு அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 4 கட்டடங்களிலும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுகுறித்து, ஒப்பந்த நிறுவனத்தினர் தரப்பில் கூறியது:
 4 கட்டடங்கள் நிகழ்மாதம் மீன்வளத்துறையிடம் ஒப்படைக்க ஏதுவாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற கிராமங்களில் உள்ள கட்டடங்கள் 60 சதவீத அளவிலேயே பணிகள் நடைபெற்றுள்ளன. இவை அடுத்தக்கட்டமாக துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.
 கோரிக்கை: இப்பணிகளை விரைவாக நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு அமைத்து கட்டுமானங்களையும், கட்டுமானத் தரத்தையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலோரத்தில் கட்டப்படுவதால், கட்டடத்தின் உறுதிப்பாடு மிக முக்கியம். கட்டுமானத்தினர் இதில் அலட்சியம் காட்டினால், அடுத்த சில ஆண்டுகளில் கட்டடடம் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே, இதன் மீது மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என மீனவ கிராமத்தினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதற்கிடையில், திறப்பு விழா வரை காத்திருக்காமல், கட்டுமானம் முடித்துள்ள கட்டத்தில் மீனவர்கள் வலைப் பின்னும் பணியை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/ரூ-21-கோடியில்-10-படகு-பணிமனைகள்-கட்டும்-பணி-4-பணிமனைகளை-நிகழ்மாதம்-ஒப்படைக்கத்-திட்டம்-3152078.html
3152077 நாகப்பட்டினம் காரைக்கால் வணிக நிறுவனங்கள் தொழிலாளர் துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தல் DIN DIN Wednesday, May 15, 2019 08:58 AM +0530 காரைக்காலில் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தொழிலாளர் துறையிடம் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் அவற்றை சார்ந்த அலுவலகங்கள், பண்டக அறைகள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், எரிவாயு உருளைகள், வாகன எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மருந்து நிலையங்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், வர்த்தக சபை, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை மையங்கள், வேளாண் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் இறால் பொரிப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள், இறைச்சிக் கூடங்கள், பாதுகாப்பு முகமைகள், கூரியர் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை, புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ளுமாறு புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன்
 ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
 காரைக்காலில் இதுவரை பதிவு செய்யாதவர்கள், காரைக்கால் மதகடி பகுதி காமராஜர் வளாகம், 2-ஆவது தளம், தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்துள்ளோர் உரிய தொகை செலுத்தி புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்குவதை பணியமர்த்துவோர் உறுதி செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/வணிக-நிறுவனங்கள்-தொழிலாளர்-துறையில்-பதிவு-செய்ய-அறிவுறுத்தல்-3152077.html
3152076 நாகப்பட்டினம் காரைக்கால் உயர் மின்கம்பங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, May 15, 2019 08:58 AM +0530 மேலகாசாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் மின்கம்பங்களுக்கு, மின் இணைப்புக் கொடுக்க சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் காரைக்கால் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
 காரைக்கால் நகரப் பகுதியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாகம் மூலம் உயர்மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுக்கு, மின் இணைப்பு தரப்படுவதிலும், பராமரிப்பு செய்வதிலும் பிரச்னை நீடிப்பதால், பல மின் கம்பங்கள் இணைப்பு இல்லாமலும், இணைப்பு பெற்ற பின்னர் பராமரிப்பின்றி பழுதாகியும், சில இடங்களில் பகல் நேரத்தில் மின் விளக்குகள் ஒளிருவதும் எனஅலட்சியப் போக்கும் நீடிக்கிறது.
 ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நிறுவப்பட்ட கம்பத்துக்கு இணைப்புப் பெறவேண்டுமெனில், மின்துறையிடம் உரிய தொகை நிலுவையாக செலுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செலுத்தாத மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 அந்த வகையில், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாகுடி கிராமம், அகரம் பேட் சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட உயர் மின்கம்பம் (ஹைமாஸ் மின்விளக்கு) இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மின்கம்பம் அருகே பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீமிதித் திருவிழாவின்போது, தற்காலிகமாக மின் இணைப்பு கொடுத்துவிட்டு, பின்னர் துண்டித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோல், பல இடங்களில் மின்கம்பங்கள் மின் இணைப்பு பெறாமல் உள்ளன.
 இத்தகைய மின் கம்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/உயர்-மின்கம்பங்களுக்கு-மின்-இணைப்புக்-கொடுக்க-வலியுறுத்தல்-3152076.html
3152075 நாகப்பட்டினம் காரைக்கால் இலவச பாடப்புத்தகங்கள் 25-க்குள் வரவழைக்க ஏற்பாடு DIN DIN Wednesday, May 15, 2019 08:57 AM +0530 காரைக்காலில் 1முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் வருகிற 25-ஆம் தேதிக்குள் வரவழைக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
 காரைக்காலில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலமாக இருப்பது, தொடர்ந்து வெயிலின் தாக்கம் இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு சில நாள்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாவும் கூறப்படுகிறது.
 கடந்த சில ஆண்டுகளாகவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே கல்வித் துறை சார்பில் இலவசப் பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
 இதேபோல், வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்க, புதுச்சேரி அரசின் கல்வித்துறை தயார் நிலையில் இருக்கவேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அறிவிப்பின்படி பள்ளிகள் திறக்கப்பட இன்னும் 18 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அடுத்த வார வாக்கில் புத்தகங்களை வரவழைப்பதும், அவற்றை வகைப்படுத்தும் பணியும், பள்ளிகளுக்குத் தேவையானவற்றை பிரிக்கும் பணியும் மேற்கொள்ளவேண்டும். வழக்கமாக, கடலூர் புத்தகக் கிடங்கிலிருந்து காரைக்காலுக்குரிய புத்தகங்கள் வரவழைக்கப்படும்.
 இதுகுறித்து, காரைக்கால் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறியது:
 கடந்த ஆண்டுகளைப் போலவே, வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காரைக்காலுக்குரிய பாடப் புத்தகங்கள் இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நோட்டுகளும் குறித்த காலத்துக்குள் வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/இலவச-பாடப்புத்தகங்கள்-25-க்குள்-வரவழைக்க-ஏற்பாடு-3152075.html
3152074 நாகப்பட்டினம் காரைக்கால் தீர்த்தக் குளத்தில் நீராடும் கோயில் யானை DIN DIN Wednesday, May 15, 2019 08:57 AM +0530 திருநள்ளாறு கோயில் யானை பிரக்ருதி, கத்திரி வெயிலின் தாக்கத்தை தணிக்க தீர்த்தக் குளத்தில் தினமும் நீண்ட நேரம் நீராடிவருகிறது.
 திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் யானை பிரக்ருதி, தினமும் காலை சுவாமிக்கு தீர்த்தம் கொண்டு செல்வற்காக அதிகாலை 4.30 மணியளவில் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் நீராடுவது வழக்கம். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கும். பிற்பகலில் சிறிது நேரம் குழாய் வழியே (ஷவர்) குளியலில் ஈடுபடும்.
 தற்போது கத்திரி வெயில் காலமாக இருப்பதால், சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் ஆனந்தமாக நீராடியது யானை பிரக்ருதி. இதேபோல், தினமும் நீராடி வருகிறது.
 கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பிற்பகலில் குழாய் வழி குளியலுக்குப் பதில் குளத்தில் குளிக்க யானைக்கு ஆர்வம் ஏற்படுவதாகவும், குளத்தில் இறங்கினால் நீண்ட நேரம் மூழ்கி இருப்பதும், பின்னர் எழுந்து நிற்பதுமாக ஆனந்தமாக குளிப்பதாக பாகன் தரப்பில் தெரிவித்தனர்.
 
 
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/15/தீர்த்தக்-குளத்தில்-நீராடும்-கோயில்-யானை-3152074.html
3151070 நாகப்பட்டினம் காரைக்கால் மே 28-இல் பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு DIN DIN Tuesday, May 14, 2019 06:44 AM +0530 அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்பரனை அழித்த மகிஷ சம்ஹார நினைவு பெருவிழாவையொட்டி, சம்ஹார நினைவு வழிபாடு மே 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ளி பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை மாதம் வருடாந்திர விழாவாக, மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் உத்ஸவம் மே 6-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் தொடங்கும் விதமாக பத்ரகாளியம்மனுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி மே 8-ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து, மே 15 முதல் 20-ஆம் தேதி வரை மகா மாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மே 20-ஆம் தேதி மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு நடைபெறவுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மே 27-ஆம் தேதி இரவு 12 மணிக்கு பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. மே 28-ஆம் தேதி அம்பரனை அழித்த  மகிஷ சம்ஹாரத்தின் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவார்கள். மே 29-ஆம் தேதி எல்லை ஓடுதல் வழிபாடும், மே 30-ஆம் தேதி தேர் வீதியுலாவும், மே 31-ஆம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, பத்ரகாளியம்மன் கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஆகியோர் செய்து வருகின்றனர். தீமிதி, புஷ்ப பல்லக்கு, மகிஷ சம்ஹார நினைவு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் திருநள்ளாறு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/மே-28-இல்-பத்ரகாளியம்மன்-கோயிலில்-மகிஷ-சம்ஹார-நினைவு-வழிபாடு-3151070.html
3151069 நாகப்பட்டினம் காரைக்கால் என்ஐடியில் இயந்திரவியல் துறை  தேசியக் கருத்தரங்கம் நிறைவு DIN DIN Tuesday, May 14, 2019 06:44 AM +0530 காரைக்கால் என்ஐடியில் 2 நாள்கள் நடைபெற்ற இயந்திரவியல் துறை தேசியக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்து, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
காரைக்காலில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள் தேசிய அளவிலான இயந்திரவியல் துறை சார்பிலான சோலார் எனர்ஜி மற்றும் அதன் சேமிப்பு குறித்த கருத்தரங்கம்  சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. என்ஐடி இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக லண்டன் லாஃப்போர் பல்கலைக்கழக ஏரோனாடிக்கல் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையின் பேராசிரியர் ரூயி சென் கலந்துகொண்டு, சூரிய ஆற்றலை சேமித்து வைக்கும் வகையிலான ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும், இந்தியா சூரியக் கதிர் வீசும் தேசமாக இருப்பதால், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பெரும் வளர்ச்சியை கொண்டுவரமுடியும். இதற்கு மாணவர்களின் ஆய்வுகள் முக்கியமானது என வலியுறுத்தினார். கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 41 மாணவர்கள் கலந்துகொண்டு, திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து இதுதொடர்பாக பேசினர்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை புதுதில்லி ஐஐடியை சேர்ந்த கே. ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவர்களின் திட்ட அறிக்கைகளின் கருத்துகளைப் பாராட்டி, கருத்தரங்கின் நோக்கம் வெற்றிபெற மாணவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டு, கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் என்ஐடி சார்பில் சான்றிதழை வழங்கினார். மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, காரைக்கால் என்ஐடியில் நடைபெற்ற கருத்தரங்கம் பயனுள்ளதாக அமைந்தது. இதுபோன்ற கருத்தரங்கத்தை என்ஐடி தொடர்ந்து நடத்தவேண்டும்.
அப்போதுதான் மாணவர்களின் ஆக்கத்தை சபையில் சமர்ப்பித்து, அதன் மேன்மைக்கான ஆலோசனைகளை மாணவர்கள் பெறமுடியும் என கேட்டுக்கொண்டனர். நிறைவாக என்ஐடி உதவிப் பேராசிரியர் சிவராம் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/என்ஐடியில்-இயந்திரவியல்-துறை--தேசியக்-கருத்தரங்கம்-நிறைவு-3151069.html
3151068 நாகப்பட்டினம் காரைக்கால் ஆற்றின் நீர்த் தேக்கத்தில் உள்ள  ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 14, 2019 06:43 AM +0530 ஆறுகளின் கடைமடை நீர்த் தேக்கத்தில் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுமாறு பொதுப்பணித் துறை நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியில் பெரும்பான்மையான ஆறுகளில் கடைமடைப் பகுதியில் கடல் நீர் உள்புகாத வகையில் தடுப்பு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் காவிரி நீர், மழை நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் பெருக்கம், தோட்டப் பயிர் சாகுபடி செய்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆறுகளின் கடைமடைப் பகுதியில் காரைக்கால் பகுதியில் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. தேங்கியிருக்கும் தண்ணீர் பகுதியில் வெகுவாக ஆகாயத் தாமரைச் செடிகள் படர்ந்திருக்கின்றன. இந்த செடிகள் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் சிறிது சிறிதாக இந்த செடிகளால் உறியப்பட்டு ஆவியாகும்பட்சத்தில், தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்துவிடும். எந்த நோக்கத்துக்காக நீர் சேமிப்பு செய்யப்படுகிறதோ அது வீணாகிவிடும் எனவும், இதை பொதுப்பணித் துறை நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/ஆற்றின்-நீர்த்-தேக்கத்தில்-உள்ள--ஆகாயத்-தாமரைச்-செடிகளை-அகற்ற-வலியுறுத்தல்-3151068.html
3151067 நாகப்பட்டினம் காரைக்கால் முதியவரிடம் செல்லிடப்பேசியை பறித்த இருவர் கைது DIN DIN Tuesday, May 14, 2019 06:43 AM +0530 சாலையில் நின்றுகொண்டிருந்த முதியவரிடம்  செல்லிடப்பேசியைப் பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்னுல்லா (60). இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பாரதியார் சாலையில் நின்றுகொண்டு செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் உட்கார்ந்துவந்தவர் ஜெய்னுல்லா பேசிக்கொண்டிருந்த செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் ஜெய்னுல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஜெய்னுல்லாவிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றது, அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20),  அம்மன்கோயில்பத்து கிராமத்தைச் சேர்ந்த பரத் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் திங்கள்கிழமை கைது  செய்து, அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி மற்றும்  இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/முதியவரிடம்-செல்லிடப்பேசியை-பறித்த-இருவர்-கைது-3151067.html
3151066 நாகப்பட்டினம் காரைக்கால் பிரமோத்ஸவத்துக்குள் பிரம்ம தீர்த்தக் குளம் மேம்படுத்தும் பணி நிறைவடையுமா ? DIN DIN Tuesday, May 14, 2019 06:43 AM +0530 திருநள்ளாறில் பிரசித்திப் பெற்ற தீர்த்தக் குளங்களில் ஒன்றான பிரம்ம தீர்த்தக் குளத்தில் கரை எழுப்புதல், தீர்த்த மண்டபம் கட்டும் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளன. தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் நிறைவில் சுவாமிகள் தீர்த்தவாரி செய்வதற்கேற்ப பணிகள் நிறைவு செய்து ஒப்படைக்கப்படவேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
திருநள்ளாறில் பெரும்பான்மையான பக்தர்கள் புனித நீராடும் வகையில் உள்ளது நளன் தீர்த்தக் குளம். இதுதவிர, சரஸ்வதி தீர்த்தக் குளம், பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. கூடுதலாக அண்மையில் கோயில் நிர்வாகத்தால் எமன் தீர்த்தக் குளம் புனரமைக்கப்பட்டது. மேலும், அகத்தீசுவரர் தீர்த்தக் குளம் கோயிலுக்கு வடக்குப்புறமாக திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தினரால் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடங்கியுள்ளன. 
இந்நிலையில், கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இக்குளத்தில் தான் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய உத்ஸவங்களில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகின்றன. இக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் சில திசைகளில் கரைகள் பலமிழந்திருந்ததால், திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தினால் சுமார் ரூ. 2 கோடி திட்ட மதிப்பில் கரை கட்டுதல், தீர்த்த மண்டபம் கட்டுதல் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. 
இந்த பணிகளோடு சேர்ந்து தொடங்கப்பட்ட எமன் தீர்த்தக் குளம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், கோயில் நகரத் திட்டத்தினரால் தொடங்கப்பட்ட அகத்தீசுவரர் தீர்த்தக் குளமும், பிரம்ம தீர்த்தக் குளமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பிரம்ம தீர்த்தக் குளத்தின் பணிகள் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பிலும் புகார் கூறப்படுகிறது.
எனினும், தற்போது பிரம்ம தீர்த்தக் குளத்தின் 4 திசைகளிலும் கரைகள் பலப்படுத்தி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வரும்போது குளக்கரையில் நிற்கும் தீர்த்த மண்டபம் கட்டுமானமும் முடிக்கப்பட்டு கான்கிரீட்டுக்கான சாரம் பிரிக்கவேண்டிய பணிகள் எஞ்சியுள்ளது. தற்போது, தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. வருகிற மே 29-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. விசாக தீர்த்தம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகல் ஜூன் 15-ஆம் தேதி வாக்கில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்ம தீர்த்தத்தில்தான் தெப்ப நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், ஜூன் மாத முற்பகுதியில் தீர்த்தக் குளத்தின் பணிகள் நிறைவடைந்து, குளத்தில் தண்ணீர் நிரப்பவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தப் பணிகளையும் விரைந்து முடித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க பொதுப்பணித் துறையினர் தீவிரம் காட்டவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 
இதுகுறித்து, தர்பாரண்யேசுவரர் கோயில் நிர்வாகத்தினர் கூறியது: மாவட்ட ஆட்சியர் அண்மையில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறும் பணியை ஆய்வு செய்து, மே மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கூறியுள்ளார். அதன்படி, விரைவாக பணிகள் நிறைவடைந்துவிடும் என நம்புகிறோம் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/பிரமோத்ஸவத்துக்குள்-பிரம்ம-தீர்த்தக்-குளம்-மேம்படுத்தும்-பணி-நிறைவடையுமா--3151066.html
3151065 நாகப்பட்டினம் காரைக்கால் சப்தஸ்வரம் இசை நிகழ்ச்சி நடத்தியவர்களுக்குப் பாராட்டு DIN DIN Tuesday, May 14, 2019 06:43 AM +0530 காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி பாடல், பொருள் விளக்கவுரையாற்றியவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் சப்தஸ்வரம் இசைப் பேரவையின் 374-ஆவது சிறப்பு இசை நிகழ்ச்சி காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி பாடலை திருவேட்டக்குடியைச் சேர்ந்த பாடகர் எம். ராமலிங்கம் பாடினார். இதன், பொருளை புலவர் திருமேனி நாகராசன் விளக்கிப் பேசினார். இசை நிகழ்ச்சிக்கு காரை சுப்பையா தலைமை வகித்தார். இசைப் பேரவை பொதுச் செயலர் கே. கேசவசாமி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிறைவாக, பாடல் பாடியவர் மற்றும் பொருள் விளக்கவுரையாற்றியவர்களுக்கு காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். இதில், வி. பாலகிருஷ்ணன், கோவி. ஆசைத்தம்பி, கபூர்தாசன், மாமன்ற நிர்வாகிகள் நடேச. வைத்தியநாதன், த. தங்கவேலு, செல்லூர் மணியன், டி. மோகன், ஸ்ரீராம், கே. தண்டாயுதபாணிபத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/சப்தஸ்வரம்-இசை-நிகழ்ச்சி-நடத்தியவர்களுக்குப்-பாராட்டு-3151065.html
3151064 நாகப்பட்டினம் காரைக்கால் யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு DIN DIN Tuesday, May 14, 2019 06:42 AM +0530 மாநில அளவிலான யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் பள்ளி மாணவ மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
காரைக்கால் பகுதியில் செயல்படும் முகுந்தன் யோகாலயாவில் கேந்திரிய வித்யாலயத்தில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவர் எம். ரூபன், மாணவி டி. யோகேஷ்வரி ஆகியோர் யோகா பயிற்சி பெறுகின்றனர். கேந்திரிய வித்யாலயத்தின் பிராந்திய அளவிலான யோகா போட்டியில் தங்கப் பதக்கத்தை இவர்கள் பெற்றனர். மேலும், கேந்திரிய பள்ளி தலைமை நிர்வாகத்தின் மூலம் மாநில அளவில் கடந்த ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற இவர்கள் முதல் பரிசை பெற்றனர். இதன் மூலம் இவர்கள் ஜூன் மாதம் கேந்திரிய வித்யாலயத்தின் தேசிய அளவில் நடைபெறக்கூடிய யோகா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். மாணவர்களின் சாதனையை பயிற்சி மையத்தினரும், கேந்திரிய பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டினர். பரிசு பெற்ற மாணவ மாணவி இருவரும் பயிற்சி மைய இயக்குநர் மு. முனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜாவை சனிக்கிழமை சந்தித்தனர். மாணவர்களின் சாதனைகளை கேட்டறிந்த ஆட்சியர், தேசிய அளவில் சிறப்பிடம் பெற அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/யோகா-போட்டியில்-சிறப்பிடம்-பெற்ற-மாணவர்களுக்கு-ஆட்சியர்-பாராட்டு-3151064.html
3151063 நாகப்பட்டினம் காரைக்கால் திருநள்ளாறு, அம்பகரத்தூர் கோயிலில் பக்தர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க முடிவு DIN DIN Tuesday, May 14, 2019 06:42 AM +0530 திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில்களில் பக்தர்களுக்கான  பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக காவல் துறையினர் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் வளாகத்தில் கோயில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை, செய்து வரும் பாதுகாப்பு தொடர்பான தணிக்கைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் நிர்வாக அதிகாரி ஜே. சுந்தர், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் டி. மாரிமுத்து, வீரவல்லவன், தீயணைப்புத் துறை, வருவாய், போக்குவரத்து, பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
கூட்ட நிறைவில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன் கூறியது:  திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கோயிலையும், கோயிலுக்கு வரும் பக்தர்களையும் பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து வருகிறோம். இதை தணிக்கை செய்யும் வகையிலும், மேலும் எந்தெந்த வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
திருநள்ளாறு கோயிலில் ராஜகோபுரம் பகுதியில் மெட்டல் டிடெக்டர் சோதனை அமைப்பு உள்ளது. வி.ஐ.பி. வரிசை, கட்டணமில்லா வரிசை போன்றவற்றில் இதுபோன்ற சோதனை அமைப்பை பலப்படுத்த ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோயில் மற்றும் நளன்குளம் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் 130-க்கும் மேற்பட்டவை வைக்கப்பட்டுள்ளன. கேமராக்கள் மேலும் சில இடங்களில் பொருத்துவது குறித்தும், கேமரா பதிவு கட்டுப்பாட்டு அறை கோயில் நிர்வாகத்திடம் மட்டுமல்லாது, காவல் துறை வசமும் இருக்க கோயில் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவசர நிலையின்போது வெளியேறுவதற்குரிய வசதிகளை செய்வது, தீ விபத்து ஏற்படும்போது அதை அணைக்க நிரந்தர வசதிகளை செய்வது, முதியோர்கள் கோயிலுக்குள் சென்று திரும்பும் வரை அவர்களுக்கு உதவுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வெடிகுண்டு கண்டறியும் திறன் கொண்ட மோப்ப நாய் காரைக்காலில் உள்ளது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் உள்ளனர். இந்த அமைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக விபத்துகள், வழிப்பறி, திருட்டு போன்றவற்றை தடுக்கும் விதத்தில் கண்காணிப்பை பலப்படுத்துவது, ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது, சாலையில் விளக்குகள் அனைத்தையும் பராமரிப்பு செய்து எரியச் செய்வது போன்றவை குறித்தும் பேசப்பட்டது. இதுவரை திருநள்ளாறு, அம்பகரத்தூரில் பக்தர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகள் தணிக்கை செய்யும்போது, மேலும் கூடுதல் பாதுகாப்பு அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றார் வீரவல்லவன். 
இலங்கையில் அண்மையில் நடந்த குண்டு வெடிப்பு விபத்து மற்றும் பிற பயங்கரவாத செயல்களையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அதிகமாக பக்தர்களை ஈர்க்கும் திருநள்ளாறில் பாதுகாப்பை பலப்படுத்தவே, இந்த கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/திருநள்ளாறு-அம்பகரத்தூர்-கோயிலில்-பக்தர்களுக்கான-பாதுகாப்பை-அதிகரிக்க-முடிவு-3151063.html
3151062 நாகப்பட்டினம் காரைக்கால் கடற்கரைச் சாலை நடைமேடையை ஆக்கிரமிக்கும் மீனவர்களின் சாதனங்கள் DIN DIN Tuesday, May 14, 2019 06:41 AM +0530 கடற்கரைச் சாலை நடைமேடையை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மீனவர்கள் வலை, ஐஸ் பெட்டி, வாகனங்களை வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்காலில் பிரதான கடற்கரை சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது படகுகளை தடையை மீறி அரசலாற்றங்கரையில் நிறுத்திவைத்துள்ளனர். மீனவர்கள் மீன் இறக்க, பொருள்களை ஏற்றப் பயன்படுத்தும் சாலையாக இச்சாலை மாறிவருவதாகவும், இதனால் மக்கள் பல்வேறு நிலையில் சிரமத்தை சந்திப்பதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இதுவொருபுறமிருக்க, கடற்கரைச் சாலை நடைமேடையில் மீனவர்கள் தங்களது ஐஸ் பெட்டிகள், வலைகள், இருசக்கர வாகனங்களை நிறுத்திவைத்திருப்பதாகவும், நடைமேடையில் நடந்து செல்வோருக்கு இது சிரமத்தைத் தருவதாக புகார் கூறப்படுகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இரவு நேரத்தில் கரைக்கு வரும்போது, மீன்களை நடைமேடையில் வைத்திருக்கும் ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்களாம். காலையில் வந்து அதை விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். கடலுக்குச் செல்லாத நாள்களிலும் இவை நடைமேடை, சாலையோரத்திலேயே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், வலைகளையும், வாகனங்களையும் நடைமேடையில் வைத்திருக்கின்றனர். நடைமேடை பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், நடந்து செல்வோர் இதை கண்காணித்தப்படி செல்கிறார்கள். இவற்றோடு, மீனவர்களின் சாதனங்களாலும் இடர்பாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மீனவர்கள், மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்தவேண்டும். கடற்கரை சாலையையும், நடைமேடையையும் பயன்படுத்தும் போக்கு கைவிடப்படவேண்டும். இதன் மீது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/14/கடற்கரைச்-சாலை-நடைமேடையை-ஆக்கிரமிக்கும்-மீனவர்களின்-சாதனங்கள்-3151062.html
3150619 நாகப்பட்டினம் காரைக்கால் ஒப்பில்லாமணியர் கோயிலில்  திருக்கல்யாண உத்ஸவம் DIN DIN Monday, May 13, 2019 07:41 AM +0530 காரைக்காலில் அகத்தியருக்கு சிவபெருமான் தமது திருமணக் கோலத்தைக் காட்டிய உத்ஸவமாக  ஒப்பில்லாமணியர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் முன்னொரு காலத்தில் வடமறைக்காடு என்றழைக்கப்பட்டது. ஈசனின் ஆணைப்படி அகத்திய முனிவர் வடமறைக்காடு பகுதிக்கு வந்ததாகவும், அந்த தருணத்தில் கைலாயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்தததாகவும் ஐதீகம். திருமணத்தை நேரில் காணமுடியாமல், இறைவன் தம்மை வடமறைக்காடுக்கு அனுப்பிவிட்டாரே என்று எண்ணிய அகத்திய மாமுனிவருக்கு, வடமறைக்காடு பகுதியில் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததாகவும், அவ்வாறு காட்சி தந்த இடத்தில் ஒப்பில்லாமணியர் கோயில் கட்டப்பட்டது என்று கோயிலின் தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 
இக்கோயிலின் அம்பிகை சௌந்தராம்பாள் என்ற பெயரிலும், இறைவன் ஒப்பில்லாமணியர் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததை நினைவுகூரும் வகையில்,  ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு இத்திருவிழா மே 10-ஆம் தேதி விநாயகர் புறப்பாட்டுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அகத்திய முனிவர்  தென்புலம் செல்லும் நிகழ்ச்சியும், உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டு வருதலும் நடைபெற்றது. 
பார்வதி - பரமசிவன் ஊஞ்சலில் வீற்றிருக்கச் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கல்யாணம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்குப்பின் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். 
திருவிளக்கு வழிபாடு, சங்காபிஷேகம், சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்கார ஆராதனை உள்ளிட்டவை தொடர் நிகழ்வாக நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை விடையாற்றியுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/13/ஒப்பில்லாமணியர்-கோயிலில்--திருக்கல்யாண-உத்ஸவம்-3150619.html
3150618 நாகப்பட்டினம் காரைக்கால் சூரிய ஆற்றல் மூலம் நவீன முறையில் கருவாடு தயாரிப்பு திட்டம்: என்ஐடி இயக்குநர் தகவல் DIN DIN Monday, May 13, 2019 07:40 AM +0530 சூரிய ஆற்றல் மூலம் நவீன முறையில் கருவாடு தயாரிப்புக்கான திட்டம் என்ஐடியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவன இயக்குநர் தெரிவித்தார்.
காரைக்காலில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள் நடைபெறக் கூடிய தேசிய அளவிலான இயந்திரவியல் துறை சார்பிலான சோலார் எனர்ஜி மற்றும் அதன் சேமிப்பு குறித்த கருத்தரங்கம்  சனிக்கிழமை தொடங்கியது. சிறப்பு அழைப்பாளராக லண்டன் லாஃப்போர் பல்கலைக்கழக  ஏரோனாடிக்கல் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையின் பேராசிரியர் ரூயி சென் கலந்துகொண்டார். முதல் நாள் நிகழ்ச்சியின்போது என்.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு இடங்களில்  கருத்தரங்கம் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
அப்போது, செய்தியாளர்களிடம் என்ஐடி இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி கூறியது: என்ஐடியில் இயந்திரவியல் துறை சார்பில் நடத்தப்படும் முதல் கருத்தரங்கமாகும். சூரிய சக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்கக் கூடிய கருத்தரங்கமாக இது அமைந்துள்ளது.  என்.ஐ.டி. யில் நவீன முறையில் கடல் நீரை குடிநீராக மாற்றக் கூடிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, சூரிய ஆற்றல் மூலம் மீனை கருவாடாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் செய்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, சாலையோரத்தில் மீனை சூரிய வெப்பத்தில் காயவைக்கும் வழக்கம் உள்ளது. இது சுகாதாரக் குறைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சூரிய சக்தி மூலம் நவீன முறையில் கருவாடு தயாரிக்கும் திட்டத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், விரைவாகவும், நவீன முறையிலும், சுத்தமாகவும் கருவாடு தயாரிக்க முடியும். இதுகுறித்து, விரைவில் மீனவர்களை அழைத்து பெரும் விழாவாக நடத்தி  விளக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/13/சூரிய-ஆற்றல்-மூலம்-நவீன-முறையில்-கருவாடு-தயாரிப்பு-திட்டம்-என்ஐடி-இயக்குநர்-தகவல்-3150618.html
3150617 நாகப்பட்டினம் காரைக்கால் புதுச்சேரி அரசுக்குச் செல்லும் வருவாயில் 50 சதவீதத்தை காரைக்காலுக்கு ஒதுக்க வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல் DIN DIN Monday, May 13, 2019 07:40 AM +0530 காரைக்கால் துறைமுகத்திலிருந்து புதுச்சேரி அரசுக்குச் செல்லும் வருவாயில் 50 சதவீதத்தை காரைக்கால் வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:  காரைக்கால் வளர்ச்சிக்கு இங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டது. இந்த நிதி சரியான முறையில் தரப்படுவதில்லை. காரைக்காலில் எந்தவொரு பணி செய்வதற்கும் அறவே நிதி இல்லை என்று
கூறப்படுகிறது.
காரைக்காலில் இயங்கும் தனியார் துறைமுகம், புதுச்சேரி அரசுக்கு தமது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை காலாண்டு முறையில் அளித்து வருகிறது. துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.10 முதல் 12 கோடியை முழுவதும் காரைக்கால் வளர்ச்சிக்காக கொடுக்க வேண்டும் என நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது அரசை வலியுறுத்தினேன். அப்போது, முழு நிதியையும் தர இயலாது, குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குவதாக அரசு வாக்குறுதியளித்தது. ஆனால், அந்த நிதியில் 1 சதவீதம் கூட இதுவரை கொடுக்கவில்லை. புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு ஏதேனும் நிவாரணம் தருவதாக அறிவிப்பு செய்து அது அரசாணையாக வெளியிட்டாலும், காரைக்காலில் வளர்ச்சிக்கான ஒரு நிதி இருக்கும்பட்சத்தில், இந்த நிலையைக் கொண்டு நிவாரணத்தை உடனடியாக தந்து விட்டு, அரசின் நிவாரண நிதியை மாவட்டம் ரீஇம்பெர்ஸ்மென்ட் முறையில் பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற சூழல் காரைக்காலில் இதுவரை ஏற்படுத்தாதது வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகவே உணரமுடிகிறது.
எனவே, காரைக்கால் துறைமுகம் ரூ.10 முதல் 12 கோடி வரை அரசுக்கு லாபத் தொகையில் பங்காக தருவதில் 50 சதவீதத்தை காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு ஒதுக்க வேண்டும். இதற்கான நிலைப்பாட்டை புதுச்சேரி அரசு உடனடியாக எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதவேண்டும். காரைக்கால் திமுக சார்பில் புதுச்சேரி முதல்வருக்கு இந்த வலியுறுத்தலை செய்வதாக அவர் கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/13/புதுச்சேரி-அரசுக்குச்-செல்லும்-வருவாயில்-50-சதவீதத்தை-காரைக்காலுக்கு-ஒதுக்க-வேண்டும்-ஏஎம்எச்-நாஜ-3150617.html
3150616 நாகப்பட்டினம் காரைக்கால் காரைக்கால் நகர சாலைகளில் சிக்னல் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி DIN DIN Monday, May 13, 2019 07:40 AM +0530 காரைக்கால் நகர சாலை சந்திப்புகளில் அடிக்கடி சிக்னல் பழுதாவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
காரைக்கால் நகரில் திருநள்ளாறு சாலை - பாரதியார் சாலை சந்திப்பு மற்றும் பாரதியார் சாலை - புளியங்கொட்டை சாலை சந்திப்பில் போக்குவரத்தை முறைப்படுத்தி அனுப்பும் தானியங்கி சிக்னல் பயன்பாட்டில் உள்ளது. இந்த சந்திப்புகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பு, வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.  சிக்னல் பயன்பாட்டில் இருந்தாலும், இந்த சந்திப்புகளில் போக்குவரத்துக் காவலர்களும் பணியில் உள்ளார்கள்.
காவலர்களைக் காட்டிலும், தானியங்கி சிக்னல் குறித்த நேரத்தில் வாகனங்களை நிறுத்தவும், பயணிக்கவும் செய்கிறது. இந்த சந்திப்புகளில் உள்ள சிக்னல் அடிக்கடி  பழுதாகிவிடுவதாகவும், இதை சீரமைக்க பல வாரங்களாகிவிடுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஒரு வாரமாக திருநள்ளாறு சாலை - பாரதியார் சாலையில் உள்ள ஒரு கம்பத்தில் உள்ள சிக்னல் பழுதாகியுள்ளது. இதனால் காவலர் பணியிலிருந்தால் மட்டுமே போக்குவரத்து சீர் செய்ய முடிகிறது. காவலர் பணியில் இல்லாத நேரத்தில் போக்குவரத்து அதிகரிக்கும்பட்சத்தில், நான்கு திசைகளிலும் இருந்து வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. காவல் துறை நிர்வாகம் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். அனைத்து சிக்னல்களையும் தொடர்ந்து  பராமரிப்பு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும். பழுதாகியுள்ள சிக்னலை உடனடியாக சீர் செய்யவேண்டும். பெரும் விபத்துகள் ஏற்பட்டுவிடும் முன்பாக இவற்றை முறைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/13/காரைக்கால்-நகர-சாலைகளில்-சிக்னல்-பழுதால்-வாகன-ஓட்டிகள்-அவதி-3150616.html
3150615 நாகப்பட்டினம் காரைக்கால் கோடை கால நுண்கலை பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள் DIN DIN Monday, May 13, 2019 07:39 AM +0530 காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் கல்வித் துறையின் ஏற்பாட்டில் கோடை கால நுண்கலை பயிற்சி நடைபெற்று வருகிறது. யோகா, வீணை, வாய்ப்பாட்டு, நடனம், கராத்தே, ஓவியம் போன்ற பல்வேறு கலைகளை தகுதியான பயிற்சியாளர்களைக்கொண்டு நடத்தப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.
புதுச்சேரி அரசின் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு கோடை காலத்தில் நுண்கலை பயிற்சி கடந்த 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. இடைக்காலத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படவில்லை. வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மாணவர்கள் கோடைக் காலத்தில் கோடை வெயிலாலும் மற்றும் பிற செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, பாதிப்படைந்துவிடக்கூடாது என்றும் மீண்டும் நுண்கலை பயிற்சியை நடத்த வேண்டும் என கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு
உத்தரவிட்டார்.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளை மையமாகக் கொண்டு இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.  காரைக்கால் மாவட்ட கல்வித் துறையின் ஜவாஹர் சிறுவர் இல்லம் சார்பில் பால்பவன் கட்டடத்திலும், திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியில் கோடை கால நுண்கலை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி இரு மையத்திலும் தொடங்கப்பட்டது.
இப்பயிற்சியில்  6 முதல் 16 வயதுள்ள மாணவ மாணவியர் கலந்துகொள்ளவும், பரதம் உள்ளிட்ட நடனம், ஓவியம், யோகா, வீணை, வாய்ப்பாட்டு, தையல், ஒயர்கூடை பின்னுதல், ஆகியவையும், பல்வேறு விளையாட்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய கல்வித்துறை அழைப்புவிடுத்திருந்தது. இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 மையங்களிலும் சுமார் 400 மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயிற்சிப் பெறுகின்றனர்.
இந்த பயிற்சி முகாம் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜவாஹர் சிறுவர் இல்லத்தில் பணியாற்றிய பல்வேறு கலை பயிற்சியாளர்களும், வெளியிலிருந்தும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 12.30  மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள் ஆர்வமாக இப்பயிற்சியில் கலந்துகொண்டு வருகின்றனர் என மைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
காரைக்கால் மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர் இதுகுறித்து கூறியது: நாங்கள் விரும்பும் பயிற்சியை தேர்வு செய்து கலந்துகொண்டுள்ளோம். ஒரு மாத கால பயிற்சி என்பது ஓரளவு அந்த கலையின் அடிப்படையை தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. கலையின் மீதான ஆர்வத்தையும் இந்த பயிற்சி ஏற்படுத்துகிறது. பயிற்சி காலம் நிறைவடைந்ததும், இந்த பயிற்சியை வேறு நிலையில் திறம்பட கற்றுக்கொள்ள விரும்புகிறோம். கல்வித் துறையின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/13/கோடை-கால-நுண்கலை-பயிற்சியில்-உற்சாகமாக-பங்கேற்ற-மாணவர்கள்-3150615.html