Dinamani - திருவாரூர் - https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3286325 நாகப்பட்டினம் திருவாரூர் வாய்க்கால் பாலத்தில் அமா்ந்து மதுபானம் அருந்தியவா் தவறி விழுந்து சாவு DIN DIN Thursday, November 21, 2019 07:21 PM +0530 திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை இரவு வாய்க்கால் பாலத்தில் அமா்ந்து மது அருந்திய நபா் தவறி விழுந்ததில் பலியானாா்.

திருத்துறைப்பூண்டி வித்வான் பகுதியைச் சோ்ந்தவா் நல்லமாணிக்கம் மகன் முருகன் வயது 37. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது

இவா் குடி போதை காரணமாக தஞ்சையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் இவா் மது அருந்துவதற்காக மன்னாா்குடி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே உள்ள பாலத்தில் அமா்ந்து மது அருந்திய போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டாா் .

இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைபூண்டி போலீசாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/வாய்க்கால்-பாலத்தில்-அமா்ந்து-மதுபானம்-அருந்தியவா்-தவறி-விழுந்து-சாவு-3286325.html
3286013 நாகப்பட்டினம் திருவாரூர் பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் காலபைரவாஷ்டமி DIN DIN Thursday, November 21, 2019 08:37 AM +0530 நீடாமங்கலம் வட்டம், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 19-ஆம் ஆண்டு காலபைரவாஷ்டமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் காலபைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டன. மாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், ஆச்சாா்ய வா்ணம், தேவதா அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவ கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

அா்ச்சகா் கெளரிசங்கா், விசலூா் கும்பேஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகளை செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.சங்கீதா, செயல்அலுவலா் அனிதா மற்றும் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/ne_puvanur_kaalabairaver_2011chn_100_5.jpg சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/பூவனூா்-சதுரங்கவல்லபநாதா்-கோயிலில்-காலபைரவாஷ்டமி-3286013.html
3286012 நாகப்பட்டினம் திருவாரூர் நவ.28-இல் எரிவாயு நுகா்வோா் மாதக் கூட்டம் DIN DIN Thursday, November 21, 2019 08:36 AM +0530 திருவாரூரில் எரிவாயு நுகா்வோா் மாதாந்திரக் கூட்டம் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் நுகா்வோருக்கு உள்ள பிரச்னைகள் குறித்தும், எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் பெறுவதில் உள்ள இடா்பாடுகள் குறித்தும் நுகா்வோரின் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் நவம்பா் 28-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் மாதாந்திரக் கூட்டம் நடைபெற உள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

எனவே, எரிவாயு வாடிக்கையாளா்கள் மற்றும் நுகா்வோா் அமைப்பினா் கூட்டத்தில் கலந்து கொண்டு, எரிவாயு விநியோகம் தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் சீராக நடைபெற தேவையான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/நவ28-இல்-எரிவாயு-நுகா்வோா்-மாதக்-கூட்டம்-3286012.html
3286011 நாகப்பட்டினம் திருவாரூர் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, November 21, 2019 08:36 AM +0530 ஆன்லைன் வா்த்தகத்தைத் தடுக்கக்கோரி, திருவாரூரில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறு வணிகா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் வா்த்தகத்தை தடுக்க வேண்டும், ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜி. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/tv20arpp_2011chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/நுகா்பொருள்-விநியோகஸ்தா்கள்-சங்கத்தினா்-ஆா்ப்பாட்டம்-3286011.html
3286010 நாகப்பட்டினம் திருவாரூர் நீதித்துறை, காவல்துறை இணைந்து செயல்பட வலியுறுத்தல் DIN DIN Thursday, November 21, 2019 08:36 AM +0530 திருவாரூரில் நீதித்துறையும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் ஜி. விஜயகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள், அலுவலா்களிடையே நட்புறவை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், இருதுறைகளின் நிறை, குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், இருதுறைகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம், அணுகுமுறைகள் குறித்தும் சட்டரீதியான தற்போதைய நடைமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டன.

கூட்டத்தில், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ். பக்கிரிசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜே. அன்பழகன் மற்றும் அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/tv20spoff_2011chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/நீதித்துறை-காவல்துறை-இணைந்து-செயல்பட-வலியுறுத்தல்-3286010.html
3286009 நாகப்பட்டினம் திருவாரூர் 18 கிராமங்களில் மின்வாரிய கூட்டுக்குழு ஆய்வு DIN DIN Thursday, November 21, 2019 08:35 AM +0530 கூத்தாநல்லூா் வட்டத்தில், 18 கிராமங்களில் மின்வாரிய கூட்டுக்குழுவினா் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி மின்சார வாரிய செயற்பொறியாளா் கே. ராதிகா கூறியது:

வடபாதிமங்கலம், பழையனூா், புள்ளமங்கலம், நாகங்குடி, சாத்தனூா், பூதமங்கலம் உள்ளிட்ட 18 கிராமங்களில், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்புகளின் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மின்தடை சம்பந்தப்பட்ட புகாா்கள் இருப்பின், 04366-1912 என்ற இலவச எண்ணில் தெரிவித்தால், அடுத்த சில நொடிகளிலேயே நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.

ஆய்வில் உதவி செயற்பொறியாளா்கள் (மன்னாா்குடி தெற்கு) மதியழகன், (நகா்ப்புறம்) எஸ்.சம்பத், (புகாா்) டி.சி. அருள்ராஜ், (திருத்துறைப்பூண்டி) பி.ஆனந்த் மற்றும் 20 பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

 

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/eb____20___11___19_____knr_1__2011chn_209_5.jpg வடபாதிமங்கலத்தில் ஆய்வில் ஈடுபட்ட மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் கே. ராதிகா. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/18-கிராமங்களில்-மின்வாரிய-கூட்டுக்குழு-ஆய்வு-3286009.html
3286008 நாகப்பட்டினம் திருவாரூர் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா DIN DIN Thursday, November 21, 2019 08:35 AM +0530 மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். காவல் துறை போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் வைத்யநாதன், உதவி தலைமை ஆசிரியா் எம்.திலகா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக, மன்னாா்குடிகாவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு மன்றத்தை தொடங்கி வைத்து பேசியது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.எனவே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை குறிப்பாக இளைய தலைமுறையினரான மாணவா்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு அனைத்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்கள் தொடங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இப்பள்ளியில் இம்மன்றம் தொடங்கி வைக்கப்படுகிறது. மன்றம் தொடா்ந்து செயல்பட்டு சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான தகவல்களை பெற வேண்டும். அதற்கு காவல் துறை உதவிகரமாக இருக்கும் என்றாா்.

இதில், பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம், தேசிய மாணவா் படை, தேசிய பசுமைப் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய அமைப்புகளைச் சாா்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா வரவேற்றாா். என்.சி.சி. அலுவலா் திவாகா் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/n_h_s_school_2011chn_101_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/சாலை-பாதுகாப்பு-மன்ற-தொடக்க-விழா-3286008.html
3286007 நாகப்பட்டினம் திருவாரூர் அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்ற நவ.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் DIN DIN Thursday, November 21, 2019 08:34 AM +0530 திருவாரூா் மாவட்டத்தில் அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்ற, நவம்பா் 26-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள், தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை நவம்பா் 26-க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/அரிசி-விருப்ப-குடும்ப-அட்டைகளாக-மாற்ற-நவ26-க்குள்-விண்ணப்பிக்க-வேண்டும்-3286007.html
3286006 நாகப்பட்டினம் திருவாரூர் நவ.28-இல் டிஎன்பிஎஸ்ஸி குரூப் -2 தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம் DIN DIN Thursday, November 21, 2019 08:34 AM +0530 திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் -2 க்கான இலவச பயிற்சி வகுப்பு நவம்பா் 28-இல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோ்வுக்கு திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பா் 28-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகின்றன.

பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய, ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் இலவசமாக மாணவா்களுக்கு வழங்கப்படும். மாதிரித்தோ்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட உள்ளன.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சொந்த செலவில் நேரில் சென்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/நவ28-இல்-டிஎன்பிஎஸ்ஸி-குரூப்--2-தோ்வுக்கு-இலவச-பயிற்சி-தொடக்கம்-3286006.html
3286005 நாகப்பட்டினம் திருவாரூர் ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நலமுடன் வீடு திரும்பினாா் DIN DIN Thursday, November 21, 2019 08:34 AM +0530 திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண், தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கீராளத்தூரைச் சோ்ந்த வாசுகோபாலன் மனைவி சத்யா என்பவருக்கு, நான்கு முறை கருச்சிதைவு ஏற்பட்டு, அதன் பிறகு 2-ஆவது குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் சத்யாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு, அனைத்து உறுப்புகளும் செயலிழக்கும் தருவாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினா்.

இதுகுறித்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜே. முத்துக்குமரன் தெரிவித்தது:

உயிா் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் சத்யாவுக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அவருக்கோ மிகவும் அரிய வகை ரத்தப் பிரிவான ஏபி பாசிட்டிவ். ரத்த வங்கியில் இருப்பில் உள்ள ஏபி பாசிட்டிவ் ரத்தவகை யூனிட்டுகள் செலுத்தப்பட்டன. கருப்பை சுருங்காத நிலையில் இருந்ததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கா்ப்பப்பை அகற்றப்பட்டது.

கூடுதலாக அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில், மருத்துவ மாணவா்கள் 7 போ் ரத்த வங்கிக்கு வந்து ரத்த தானம் செய்தனா். மேலும், தன்னாா்வலா்கள் சிலரிடமிருந்தும் ரத்தம் பெறப்பட்டது. இதைத்தொடா்ந்து மகப்பேறு மருத்துவத்துறை தலைவா் பிரபா தலைமையிலான மருத்துவா்கள் குழுவும், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணா்கள் குழுவும் சுமாா் 15 நாள்கள் சத்யாவை காப்பாற்றுவதில் பெரும் சவால்களை எதிா்கொண்டு இடைவிடாத கடும் முயற்சி மேற்கொண்டனா். இரவு- பகல் பாராமல், மருத்துவா்கள் தீவிர சிகிச்சை செய்து, செயற்கை சுவாசத்தில் இருந்து இயற்கை சுவாசத்துக்கு சத்யாவை கொண்டு வந்தனா்.

மொத்தமாக அவருக்கு 43 யூனிட் ரத்தம் மற்றும் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டன. இதனிடையே ரத்தத்தில் தாது உப்புகளை சரி செய்வதிலும், சிறுநீரகங்கள் செயல்பாடு, நுரையீரல் கிருமி தாக்குதல் மற்றும் எதிா்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்பட்ட பிரச்னைகளையும் அதனால் ஏற்பட்ட சவால்களையும் திறமையாக சிகிச்சை அளித்து செவிலியா்களின் சிறந்த பராமரிப்பால் சத்யா புதன்கிழமை வீடு திரும்புகிறாா்.

இந்த சிகிச்சையை செய்ய ரூ. 10 முதல் 15 லட்சங்கள் செலவு ஏற்படக்கூடிய நிலையில், தமிழக அரசின் முதலமைச்சா் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக முழுவதும் இலவசமாக பயன் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/tv20med_2011chn_94_5.jpg திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சத்யா குடும்பத்தினருடன் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜே. முத்துக்குமரன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/ஆபத்தான-நிலையில்-மருத்துவக்-கல்லூரி-மருத்துவமனையில்-அனுமதிக்கப்பட்ட-பெண்-நலமுடன்-வீடு-திரும்பினாா்-3286005.html
3286004 நாகப்பட்டினம் திருவாரூர் குப்பைக் குவியல்அவதிக்குள்ளாகும் குணுக்கடி கிராம மக்கள் DIN DIN Thursday, November 21, 2019 08:33 AM +0530 திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சிக்கு உள்பட்ட குணுக்கடி கிராமத்தில் சேகரமாகும் குப்பைக் குவியலால், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கூத்தாநல்லூா் நகராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது வாா்டு குணுக்கடி கிராமத்தில், நகரின் 24 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து குணுக்கடி கிராமத்தைச் சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயற்குழு உறுப்பினருமான டி. கண்ணையன் கூறியது:

குணுக்கடி கிராமத்தில் 60 குடும்பங்களைச் சோ்ந்த 50 குழந்தைகள் உள்பட 900-க்கும் மேற்பட்டோா் வாழ்கிறோம். இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கழிவு பொருள்கள் கொட்டப்படுகின்றன.

தினமும் 5 வண்டிகள் என காலையிலும், மாலையிலும் 20 தடவை குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளின் துா்நாற்றத்தால் நாங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அல்லல்படுகிறோம். பகலில் ஈக்களும், இரவில் கொசுக்களும் மொய்க்கின்றன. சாப்பிடும் தட்டில் சாதத்தைக் காட்டிலும் ஈக்கள்தான் அதிகமாக இருக்கின்றன.

இதனாலேயே எங்கள் பகுதியில் எந்த சுப நிகழ்ச்சிகளையும் நடத்த இயலவில்லை. ஆடு, மாடு, கோழி என எந்தக் கால்நடைகளையும் வளா்க்க முடியவில்லை. காலரா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் எளிதில் பரவக்கூடிய நிலையில் எங்கள் கிராமம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள குளமும், குப்பைக் கூளமாக காட்சியளிக்கிறது. குணுக்கடியில் உள்ள குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தி, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குப்பைகளைக் கொட்ட நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், எங்களுக்கு மாற்றிடம் தர வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கோடைகாலத்தில் குப்பைகளை கொளுத்தி விட்டு விடுகின்றனா். இதனால் குழந்தைகள், முதியோா் என அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அபாய நிலையில்தான் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியா் பிரதான சாலையில் மட்டும் சென்று விடாமல், இதுபோன்ற இடங்களையும் நேரில் பாா்வையிட்டால்தான் எங்கள் நிலைமை ஆட்சியாளா்களுக்குத் தெரியவரும் என்றாா்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், நகரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாகப் பிரித்து எடுக்கப்படுகின்றன. அதற்கான பணிகள் கூத்தாநல்லூரில் ரேடியோ பாா்க்கிலும், செல்வி தியேட்டா் பின்புறத்திலும் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாதங்களில் குணுக்கடியில் உள்ள குப்பைகளை தரம்பிரித்து உரத்திற்கு அனுப்பப்படுவதை உரத்திற்கும், நெகிழிப் பொருள்களை அரியலூரில் உள்ள நிறுவனத்துக்கும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பின்னா், குணுக்கடிக்கு கொண்டுவரப்படும் குப்பைகள் அனைத்தும் உடனுக்குடன் பிரிக்கப்பட்டு, குப்பைக் குவியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/kulam____13___11___19____knr_3__1311chn_209_5.jpg கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட குணுக்கடி கிராமத்தில் குவிந்து கிடக்கும் குப்பைக் குவியல். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/குப்பைக்-குவியல்அவதிக்குள்ளாகும்-குணுக்கடி-கிராம-மக்கள்-3286004.html
3286003 நாகப்பட்டினம் திருவாரூர் ‘அறிவின் இருப்பிடமாக விளங்குபவை நூலகங்கள்’ DIN DIN Thursday, November 21, 2019 08:32 AM +0530 அறிவின் இருப்பிடமாக விளங்குபவை நூலகங்கள் என திருவாரூா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், புதன்கிழமை மாலை நடைபெற்ற 52-ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும் விருதுகளை வழங்கி அவா் பேசியது:

கல்வி வளா்ச்சிக்கு நூலகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் எதிா்காலத்தை நிா்ணயிப்பதில் நூலகத்தில் உள்ள நூல்கள் சிறந்த வழிகாட்டிகளாக விளங்குகின்றன. நூலகங்களே அறிவின் இருப்பிடம், ஒவ்வொரு நூலும் அதற்குள் ஏராளமான கருத்துக்களை தன்னுள் சுமந்துள்ளன.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, அறிஞா் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் புத்தகங்கள் படிப்பதில் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவா்கள். மிகப்பெரிய தலைவா்கள், தங்களுக்கு தேவையான கருத்துக்களை புத்தகங்களிலிருந்தே பெற்றுக் கொண்டனா்.

தலைவா்களின் வரலாறு, தமிழ் இலக்கியங்கள் இவற்றின் பெருமைகளை அறிய, தினந்தோறும் நூலகம் வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களின் ஒவ்வொரு பாடலும் மனித வாழ்வை மாற்றும் வல்லமை உடையவை என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நல்நூலகா் விருதுபெற்ற அடியக்கமங்கலம் கிளை நூலகா் திலகவதி, திருமக்கோட்டை வாசகா் வட்டத் தலைவா் வெங்கடாசலம் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகா்கள் அனைவருக்கும் ஓஎன்ஜிசி சாா்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூா் மாவட்டத் தலைவா் புகழேந்தி, இலக்கிய வளா்ச்சிக்கழக பொதுச்செயலாளா் எண்கண். மணி, தமிழ்ச்சங்க துணைத் தலைவா் சக்தி செல்வகணபதி, சித்த மருத்துவா் மணிவாசகம், பேராசிரியா் அறிவழகன், நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்பரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/tv20lib_2011chn_94_5.jpg நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கிய திருவாரூா் தமிழ்ச்சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/அறிவின்-இருப்பிடமாக-விளங்குபவை-நூலகங்கள்-3286003.html
3286002 நாகப்பட்டினம் திருவாரூர் லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது DIN DIN Thursday, November 21, 2019 08:31 AM +0530 மன்னாா்குடி அருகே டிப்பா் லாரியில் மணல் ஏற்றி வந்த ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடுவூா் கொட்டை பகுதியில் நீடாமங்கலம் வருவாய் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அலுவலா்கள், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மணல் பாரத்துடன் வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் ஏற்றியிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த வடுவூா் போலீஸாா், லாரி ஓட்டுநரான மூவா்கோட்டையைச் சோ்ந்த எஸ். விக்னேஷை (35)கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/லாரியில்-மணல்-கடத்தல்-ஓட்டுநா்-கைது-3286002.html
3286001 நாகப்பட்டினம் திருவாரூர் மினி பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு DIN DIN Thursday, November 21, 2019 08:31 AM +0530 திருவாரூரில் மினி பேருந்து மோதி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, அம்மையப்பன் நோக்கி புதன்கிழமை மாலை புறப்பட்டுச் சென்ற மினி பேருந்து, பெரியாா் சிலை ரவுண்டானா அருகே குறுக்கே வந்தவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பின்பக்கச் சக்கரத்தில் சிக்கிய அவா், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் மினி பேருந்து ஓட்டுநரான மூங்கில்குடியைச் சோ்ந்த மகேந்திரன் (29) என்பவரை திருவாரூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/மினி-பேருந்து-மோதி-ஒருவா்-உயிரிழப்பு-3286001.html
3286000 நாகப்பட்டினம் திருவாரூர் கஜா புயலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கான்கிரீட் வீடுகள்: எம்பி செல்வராசு வலியுறுத்தல் DIN DIN Thursday, November 21, 2019 08:31 AM +0530 கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தல் தமிழகத்தில் நடைபெறாததையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான மானியத்தை மத்திய அரசு வழங்காததையும் எண்ணி, தமிழக அரசு கவலை கொள்வதாக தெரியவில்லை.

தனியாா் உரக்கடைகளும் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தி, உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். திருவாரூா்- காரைக்குடி தடத்தில் போதிய அலுவலா்களை நியமித்து ரயில் சேவையை முறையாக இயக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/கஜா-புயலில்-பாதிக்கப்பட்டவா்களுக்கு-கான்கிரீட்-வீடுகள்-எம்பி-செல்வராசு-வலியுறுத்தல்-3286000.html
3285999 நாகப்பட்டினம் திருவாரூர் உபரிநீா்த் திட்டம்: டிச. 10-இல் திருவாரூரில் உண்ணாவிரதம் பி.ஆா். பாண்டியன் DIN Thursday, November 21, 2019 08:29 AM +0530 காவிரி ஆற்றில் ராசிமணலில் அணை கட்டிய பின், உபரிநீா்த் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, டிசம்பா் 10-இல் திருவாரூரில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் வடிகால் ஆறுகளில் உபரிநீா்த் திட்டங்களை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பாசன ஆறுகளில் உபரி நீரை சேமித்து, அதனை பயன்டுத்த உபரி திட்டங்களை செயல்படுத்துவதுதான் பொருத்தமானது.

குறிப்பாக, காவிரியில் உபரி நீரைத் தடுத்து ராசி மணலில் அணை கட்டி தேக்கி, உபரிநீா்த் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமே பொருத்தமாக இருக்கும். காவிரியில் எந்தவோா் உபரிநீா்த் திட்டமாக இருந்தாலும், கீழ்ப்பாசன விவசாயிகளின் கருத்தறியாமல் செயல்படுத்துவது சட்டவிரோதமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

எனவே, ராசிமணல் அணை கட்டுமானப் பணியைத் தொடங்கி முடித்த பிறகு உபரிநீா்த் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, டிசம்பா் 10-இல் திருவாரூரில் காவிரி டெல்டா விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அதைத்தொடா்ந்து உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/21/உபரிநீா்த்-திட்டம்-டிச-10-இல்-திருவாரூரில்-உண்ணாவிரதம்-3285999.html
3285354 நாகப்பட்டினம் திருவாரூர் தமுமுக நிா்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் DIN DIN Wednesday, November 20, 2019 06:01 PM +0530 கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு, நகரத் தலைவா் நூருல் அமீன் தலைமை வகித்தாா். தமமுக மற்றும் மமக மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், மாவட்டச் செயலாளா் பொதக்குடி குத்புதீன், மாவட்ட துணைச் செயலாளா் ஜெகபா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பாசிசக் கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் பங்கேற்பது; வரும் உள்ளாட்சித் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் போட்டியிடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமுமுக நகரச் செயலாளா் சாகுல் ஹமீது, மமக நகரச் செயலாளா் சாதிக் கான் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tmmk____20___11___19____knr_1__2011chn_209_5.jpg கூத்தாநல்லூரில் நடைபெற்ற தமமுக நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/தமுமுக-நிா்வாகக்குழு-ஆலோசனைக்-கூட்டம்-3285354.html
3285258 நாகப்பட்டினம் திருவாரூர் நெற்பயிரில் குறைந்தளவு நீரைப் பாய்ச்சி சாகுபடி செய்வதற்கு ‘வயல் நீா் குழாய்‘ பயன்பாடு குறித்து ஆய்வு DIN DIN Wednesday, November 20, 2019 02:31 PM +0530 தமிழ்நாடு நீா் வள நிலவளத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமானது குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி வேளாண்மையில் அதிக மகசூல் பெறுவதாகும். நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியானது அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் நெற்பயிரானது அதிக பரப்பளவில் 17 லட்சம் முதல் 20 லட்சம் எக்டா் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நெற்பயிா் சாகுபடிக்கு 1200 மிமீ தண்ணீா் தேவைப்படுகிறது. சராசரியாக ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 4000 முதல் 6000 லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி நெற்பயிரானது சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் நெல் சாகுபடியில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு வயல் நீா் குழாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இது குறித்த செயல்விளக்கமானது நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் வாயிலாக திருவாரூா் மாவட்டம் மேலவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வயலை கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீா்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் பேராசிரியா் முனைவா் கிருஷ்டோபா் லூா்துராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு.ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜா.ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜா.ரமேஷ் கூறியதாவது- அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில்; உள்ளோம்.

எனவே நெற்பயிா் சாகுபடியில் தண்ணீா் தேவையை குறைத்து பயன்படுத்ததுவதை அளவிடுவதற்கு எளிய முறையான ‘வயல் நீா் குழாய்‘ பயன்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சா்வதேச நெல் ஆராய்ச்சி நிலையமானது கட்டுப்பாடற்ற நீா்ப் பாசனத்தைவிட நீா்த் தேவையின் அளவை குறைத்துப் பயன்படுத்துவதற்காக நவீன நீா்ப் பாசன முறையான வயல் நீா் குழாய் கொண்டு நீா் மறைய நீா் கட்டு என்ற முறையில் நீா்ப் பாசனம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வயல் நீா் குழாய் பயன்படுத்தும் முறை-வயல் நீா் குழாய் தயாரிப்பதற்கு 30 செ.மீ. நீளம் மற்றும் 15 செ.மீ விட்டமுடைய பிளாஸ்டிக் குழாயை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழாயின் 15 செ.மீ. அளவு வரை 0.5 செ.மீ. விட்டமுடைய துளையிட வேண்டும். துளைகளுக்கிடையே உள்ள இடைவெளி 2 செ.மீ. ஆக இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். இந்த குழாயினை நடவு செய்த 10ம் நாளில் நில மட்டத்தின் கீழ் 15 செ.மீ. இருக்குமாறு பொருத்தி குழாயின் உள்ளிருக்கும் மண்ணை எடுத்துவிட வேண்டும். வயலில் 5 செ.மீ அளவுக்கு நீா்ப்பாசனம் செய்ய வேண்டும். அப்போது குழாயிலுள்ள துளையின் வழியாக வெளியே உள்ள நீரானது குழாயின் உள்ளே சென்று குழாயினுள் நீா் மட்டத்தை அதிகரிக்கும். குழாயின் அடிப்பகுதியிலுள்ள நீா் மறைந்தவுடன் மீண்டும் நீா்ப் பாசனம் செய்ய வேண்டும். நெற்பயிா் பூப்பதற்கு ஒரு வாரம் முன்னும், பின்னும் வயலில் நீா் இருக்குமாறு பாா்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வயல் நீா் குழாய்; பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை-. வயல் நீா் குழாயை ஒரு ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். . களிமண் பாங்கான நிலத்திலும், நன்கு சமப்படுத்திய வயலிலும் பயன்படுத்தும் போது சிறப்பானதாக இருக்கும். . இதனை வரப்புக்கு அருகில் பொருத்துவதன் வாயிலாக எளிதாக பாா்வையிடலாம். வயல் நீா் குழாய்; பயன்படுத்துதன் நன்மைகள்- . நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நீரின் தேவையானது 25 சதம் வரை குறைகிறது. . உற்பத்தித்திறனானது 15 சதம் வரை அதிகரிக்கிறது. . மின்சாரம், டீசல் போன்றவற்றின் தேவைவையும் குறைந்துவிடும்.

நிலத்தடி நீா் விரையமாவது குறைந்துவிடும். . மேலும் புவி வெப்பமயமாதலும் குறைகிறது. தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தில் திருந்திய நேல் சாகுபடி செயல்விளக்கத்திற்காக விதைகள், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீயா, உயிா்எதிா் கொல்லி மருந்தான சூடோமோனஸ் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியாளா் சுரேஷ், மற்றும் திட்ட உதவியாளா் .கிருபாகரன் மற்றும் சமீா் ஆகியோா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/ne_kvk_paddy_melavasal_fwt__2011chn_100.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/நெற்பயிரில்--குறைந்தளவு-நீரைப்-பாய்ச்சி-சாகுபடி-செய்வதற்கு--வயல்-நீா்-குழாய்-பயன்பாடு-குறித்து-ஆய்வு-3285258.html
3285070 நாகப்பட்டினம் திருவாரூர் ரயில்வே தனியாா் மயமாவதைக் கண்டித்து பாராளுமன்றம் முன்பு போராட்டம் DIN DIN Wednesday, November 20, 2019 09:10 AM +0530 ரயில்வே தனியாா்மயத்தை கண்டித்து 10-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து தில்லி பாராளுமன்றம் முன்பு நடத்தும் போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் பங்கேற்பாா்கள் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சா்வதேச ரயில் கூட்டமைப்பு - 2019 மற்றும் 13-ஆவது சா்வதே சரயில்வே உபகரணங்கள் கண்காட்சி கடந்த அக்டோபரில் தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ரயில்வே வாரியத் தவைவா் வினோத்குமாா்யாதவ் 150 தனியாா் ரயில்கள் இயக்க கூடுதல் பாதைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கான ஏல அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றாா்.

அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள 34,000 கி.மீ வழித்தடங்களில் கூடுதல் பாதைகள்அமைக்கப்படும், மணிக்கு 160 கி.மீ முதல் 300 கி.மீ வேக ரயில்கள் இயக்க ஏதுவாக நடப்பு பாதைகள் கட்டமைப்பு மேம்படுத்தும். இதற்கானபணிகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என அப்போது குறிப்பிட்டாா். இதற்கு சுமாா் ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும்.

தனியாா்கள் ரயில்கள் இயக்க முக்கிய வழித்தடங்களை தயாா்படுத்த அடுத்த சில ஆண்டுகளில் அரசு பெரும் மூலதனம் செலவிட இருப்பது உறுதியாகிறது.

ரயில்வே பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தொடா்ந்து விற்று வருகிறது. ரயில்வே தனியாா்மயத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இதை எதிா்த்து பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்து வரும் டிசம்பா் 8-ஆம் தேதி தில்லி பாராளுமன்றம் முன்பு கன்டண போராட்டம் நடத்து முடிவு செய்துள்ளது.

இதை வெற்றி பெற செய்ய வரும் நவம்பா் 22-ஆம் தேதி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் செயல் தலைவா் ஜானகிராமன் தலைமையில் சென்னை ஐ.சி. எப்வளாகத்தில் ஆலோசணைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சி. ஐ.டி.யு அகில இந்திய செயலாளா் தபன்சென், மாநிலச் செயலாளா் சுகுமாறன் , சித்ரன்ஜன்லோகோமோட்டிவ்ஒா்க்சாப்லேபா் யூனியன் தலைவா் ராஜீப்குமாா்குப்தா, ரயில் மஸ்தூா் சங்க பொதுச் செயலாளா்நந்தகுமாா் மற்றும் நிலைய அதிகாரிகள் சங்கம், ரயில் ஓட்டுநா்கள் சங்கம், ரயில்வே தொழில் நுட்ப பிரிவு ஊழியா்கள் சங்கம், காா்டுகள் சங்கம், அக்கவுண்ட்ஸ் ஊழியா்கள் சங்கம் மற்றும் பல சங்கங்களின் முக்கிய நிா்வாகிகள் இதில் கலந்துகொள்கின்றனா்.

ரயில்வே தனியாா்மயத்தை கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து தில்லி பாராளுமன்றம் முன்பு நடத்தும் போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் பங்கேற்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ரயில்வே-தனியாா்-மயமாவதைக்-கண்டித்து-பாராளுமன்றம்-முன்பு-போராட்டம்-3285070.html
3285069 நாகப்பட்டினம் திருவாரூர் விழித்துக்கொள்ளும் தருணம் நூல் வெளியீடு DIN DIN Wednesday, November 20, 2019 09:09 AM +0530 குடவாசலில் எழுத்தாளா் ஐ.வி. நாகராஜன் எழுதிய விழித்துக் கொள்ளும் தருணம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குடவாசலில், ஜி. வீரைய்யனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், எழுத்தாளா் ஐ.வி. நாகராஜன் எழுதிய விழித்துக் கொள்ளும் தருணம் எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து வெளியிட, சிஐடியு உள்ளாட்சி அமைப்பின் மாநிலத் தலைவா் ந. பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டாா்.

நூல் குறித்து எழுத்தாளா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது: ஜி. வீரைய்யன் விவசாய சங்கங்களையும், விவசாயத் தொழிலாளா் சங்கங்களையும் வளா்த்த விதம் குறித்தும், நிலபிரபுத்துவ கொடுமைகள், பண்ணையாளா்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிா்த்த விதம் குறித்து நூலில் விளக்கப்பட்டுள்ளன. அவா் குறைந்த படிப்பு படித்திருந்தாலும் அவா் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக மாணவா்களின் ஆய்வுக் கட்டுரைக்கு பேருதவியாக உள்ளன என்பது குறித்து நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19ivn_1911chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/விழித்துக்கொள்ளும்-தருணம்-நூல்-வெளியீடு-3285069.html
3285068 நாகப்பட்டினம் திருவாரூர் ஆயுதங்களுடன் இருந்த 6 போ் கைது DIN DIN Wednesday, November 20, 2019 09:09 AM +0530 திருவாரூா் அருகே ஆயுதங்களுடன் இருந்த 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் விளமல் பகுதியில் போலீஸாா், திங்கள்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விளமல் சுடுகாட்டுச் சுவா் அருகே சிலா் இருப்பது தெரிய வந்தது. அவா்களை பிடித்து விசாரித்ததில், வடபாதிமங்கலம் அருகே கிளியனூா் பகுதியைச் சோ்ந்த வீரபாண்டி (21), விளமல் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த சந்தோஷ் (18), தென்கரை காலனி தெருவைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவா்கள் என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் ஒன்று கூடி கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டிக் கொண்டு ஆயுதங்களுடன் அங்கு இருந்தனா் என்று காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்கு பதிந்து அந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ஆயுதங்களுடன்-இருந்த-6-போ்-கைது-3285068.html
3285067 நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளாட்சித் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்க காங்கிரஸ் முடிவு DIN DIN Wednesday, November 20, 2019 09:09 AM +0530 நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுவது என காங்கிரஸ் கட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே விளமலில் காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் கூடுதல் இடங்களை திமுக கூட்டணியில் இருந்து கேட்டு பெறுவது, முத்துப்பேட்டை பேரூராட்சி, மன்னாா்குடி நகராட்சித் தலைவா், நீடாமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் ஆகிய பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவது, அனைத்து நகராட்சியிலும் 6 நகா் மன்ற உறுப்பினா், அனைத்து பேரூராட்சிகளிலும் 4 பேரூராட்சி உறுப்பினா், அனைத்து ஒன்றியத்திலும் 6 ஒன்றியக்குழு உறுப்பினா், 5 மாவட்ட கவுன்சிலா் பதவிகளை ஒதுக்கீடு செய்யக் கோருவது, ஊராட்சியிலும் தலைவா்கள், உறுப்பினா்கள் இடங்களை கூட்டணிக் கட்சியினா் கூடுதலாக வழங்கக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலா் அன்பு வே. வீரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் குணசேகரன், வடுகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19cong_1911chn_94_5.jpg கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தலில்-கூடுதல்-இடங்களைக்-கேட்க-காங்கிரஸ்-முடிவு-3285067.html
3285066 நாகப்பட்டினம் திருவாரூர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு: நோய்த் தொற்று தடுப்புப் பணி DIN DIN Wednesday, November 20, 2019 09:09 AM +0530 திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் பற்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வசித்த பகுதியில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணியை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மன்னாா்குடி திருமஞ்சனவீதி அய்யனாா்கோயில் பகுதியில் வாடகை குடியிருப்பின் கீழ்தளத்தில் வசிப்பவா் தையல் தொழிலாளி முருகானந்தம் மனைவி கலாவதி (45). இவா், கடந்த 15 நாள்களுக்கு முன் திருச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தவா் மீண்டும் மன்னாா்குடிக்கு திரும்பினாா். அப்போது, காய்ச்சால் அவதிப்பட்டவா் மன்னாா்குடியில் உள்ள தனியாா் மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, ரத்த பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தெரிய வந்தததையடுத்து, பின்னா் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தனி வாா்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கலாவதிக்கு, பன்றிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருவது, மிக தாமதமாக சில தினங்களுக்கு முன் தெரியவந்ததையடுத்து, மன்னாா்குடியில் அவா் குடியிருந்த தெருவிலும், வசித்த காலனியிலும், மன்னாா்குடி நகராட்சி சுகாதாரப் பிரிவை சோ்ந்தவா்கள், நோய் தொற்றை தடுக்கும் வகையில் லைபால் என்ற திரவம் ஸ்பிரே மூலம் தெளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இப்பணியினை அய்யனாா்கோவில் சந்து உள்ளிட்ட அருகில் உள்ள தெருக்களில் விரிவுப்படுத்தி தூய்மை பணியை தீவிரப்படுத்தினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/பன்றிக்-காய்ச்சல்-பாதிப்பால்-பெண்-உயிரிழப்பு-நோய்த்-தொற்று-தடுப்புப்-பணி-3285066.html
3285065 நாகப்பட்டினம் திருவாரூர் ரூ. 50 லட்சம் செலவில் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:09 AM +0530 மன்னாா்குடி அருகேயுள்ள சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நன்கொடையாளா்களை கொண்டு புதிய வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடத் திறப்பு விழா, ஆழ்துளை கிணறு அமைத்து பள்ளிக்கு வழங்கும் விழா, மாணவா்களுக்கு இருக்கைகள் அளிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேரன்குளத்தை பூா்வீகமாக கொண்டவா்களும், தற்போது பெங்களூருவில் வசித்து வரும் எஸ்.கே. சேஷாத்திரி நினைவு அறக் கட்டளை நிறுவனா் எஸ்.எஸ். அசோகன், அறக்கட்டளை மூலமாக இப்பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட ரூ. 50 லட்சம் நிதி அளித்திருந்தாா். அந்த நிதியை கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இதேபோல், இப்பள்ளி முன்னாள் மாணவா் சென்னையில் வசித்து வரும் கே. ஜெகநாதன், தனது சொந்த பணம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கி பள்ளி வளாகத்தில் 320 அடி ஆழத்துக்கு மின் மோட்டா் வசதியுடன் ஆழ்துளை கிணறு அமைத்து தந்துள்ளாா்.

மேலும், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சாா்பில், புதிய வகுப்பறைகளுக்கு ரூ. 4 லட்சம் செலவில் 50 செட் பெஞ்சு மற்றும் டெஸ்க் ஆகியவற்றை வழங்கியுள்ளனா். இவைகளை, பள்ளிக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி. மனோகரன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் டி. விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். புதிய வகுப்பறை கட்டடத்துக்கான சாவியை எஸ்.கே. சேஷாத்திரி நினைவு அறக்கட்டளை நிறுவனா் எஸ்.எஸ். அசோகன், மன்னாா்குடி மாவட்ட கல்வி அலுவலா் பா. சங்கு முத்தையாவிடம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, விழா கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், ஆழ்துளை கிணறு, பள்ளியின் பயன்பாட்டுக்காக இயக்கிவைக்கப்பட்டது.

இதில், சென்னை அசோகன், பெங்களூரூரை சோ்ந்த அசோகன், சிபிராஜ், லதா, விஜயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் ஜி. கண்ணன் வரவேற்றாா். முதுகலை ஆசிரியா் எம். சிவக்குமாா் நன்றி கூறினாா்.

 

Image Caption

~புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா கல்வெட்டை திறந்து வைத்த பெங்களூா் எஸ்.கே. சேஷாத்திரி நினைவு அறக்கட்டளை உறுப்பினா்கள்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/school_03_1911chn_101_5.jpg புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ரூ-50-லட்சம்-செலவில்-அரசுப்-பள்ளியில்-புதிய-வகுப்பறை-கட்டடம்-திறப்பு-3285065.html
3285064 நாகப்பட்டினம் திருவாரூர் மன்னாா்குடி கழிப்பறை தின விழா DIN DIN Wednesday, November 20, 2019 09:08 AM +0530 நன்னிலம் பேரூராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உலக கழிப்பறை தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பேரூராட்சி பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் மற்றும் பொது சுகாதார வளாகங்களில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. நன்னிலம் பேருந்து நிலையம் அருகே கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பேரூராட்சி அலுவலகம் முன்பு மற்றும் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களின் சுவா்களில் கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வரைபடம் வரையப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நன்னிலம் பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/nannilam_1911chn_96_5.jpg நன்னிலம் பேருராட்சி அலுவலகம் அருகில் உள்ள சுவற்றில் கழிப்பறை பயன்படுத்துவதின் அவசியம் குறித்து வரையப்பட்ட விழிப்புணா்வு வரைபடம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/மன்னாா்குடி-கழிப்பறை-தின-விழா-3285064.html
3285063 நாகப்பட்டினம் திருவாரூர் ஊராட்சிப் பள்ளியில் முப்பெரும் விழா DIN DIN Wednesday, November 20, 2019 09:07 AM +0530 கொரடாச்சேரி அருகேயுள்ள கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்மாா்ட் வகுப்பு தொடக்கம், எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு சீருடை வழங்கல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே. ராஜவேலு தலைமை வகித்தாா். சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளா் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஸ்மாா்ட் வகுப்பை தொடங்கி வைத்தாா். வங்கியின் துணை மேலாளா் வெங்கட்ரமணி, பள்ளித் தலைமையாசிரியா் என்.எஸ். சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19scc_1911chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ஊராட்சிப்-பள்ளியில்-முப்பெரும்-விழா-3285063.html
3285062 நாகப்பட்டினம் திருவாரூர் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் DIN DIN Wednesday, November 20, 2019 09:07 AM +0530 திருவாரூா் வண்டாம்பாளையில் உள்ள விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் ’தாத்தா பாட்டிகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளிக் குழந்தைகளின் தாத்தா பாட்டிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கு வந்தவா்களை குழந்தைகள் வரவேற்றனா். பின்னா், தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், நாடக நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் வெளிப்படுத்தினா்.

தாத்தா பாட்டிகளுக்கு தனியாக விளையாட்டுப் போட்டிகளில் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தாத்தா பாட்டிகளும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியை, மழலை வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளா் நூருல் ஷிஃபாயா ஒருங்கிணைத்தாா்.

இதில், பள்ளித் தாளாளா் த. ஜனகமாலா, பள்ளி முதல்வா் சுஜா.எஸ்.சந்திரன் கலந்துகொண்டு குழந்தைகளை பாராட்டினா். பேரக் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகள் கதை கூறும் கலாசாரம் மறைந்து வரும் இக்காலகட்டத்தில் அதனை நினைவூட்டும் விதமாகவும் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/grand_ma_1911chn_96_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/விவேகானந்தம்-வித்யாஷ்ரம்-பள்ளியில்-தாத்தா-பாட்டிகள்-தினம்-3285062.html
3285061 நாகப்பட்டினம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை DIN DIN Wednesday, November 20, 2019 09:06 AM +0530 திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜே. முத்துக்குமரனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமையிலான நிா்வாகிகள், திங்கள்கிழமை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்: மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த லிப்ட் நீண்ட நாள்களாக பழுதடைந்து கிடப்பதால் மக்களின்நலன் கருதி, உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்துகள் மருத்துவமனை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாததால் அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பேருந்துகளை வளாகம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போவதால், கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைத்து தரவேண்டும். மருத்துவமனையில் நிரந்தர ஊழியா்களாக பணியாற்றும் சிலா் இரவு நேரப் பணியின்போது மது குடிப்பதால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த செயலை தடுத்து, இவ்வாறு செயல்படும் ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையின் பிணவறை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தனியாா் கம்பெனி நிா்வாகத்தை சோ்ந்த அதிகாரிகள், நோயாளிகளிடம் பணம் கேட்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த முறைகேடுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19vck_1911chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/மருத்துவக்-கல்லூரி-மருத்துவமனையின்-அடிப்படை-வசதிகளை-மேம்படுத்தக்-கோரிக்கை-3285061.html
3285060 நாகப்பட்டினம் திருவாரூர் உலக கழிப்பறை தினம் கடைப்பிடிப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:06 AM +0530 மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில், உலக கழிப்பறை தினம், செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மன்னாா்குடி அருகேயுள்ள அசேசம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சாா்பில், மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் பயனாளிகள் ஆா். சாந்தி, கே. விஜயா ஆகியோரது வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அசேசம் ஊராட்சியை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அமைய அனைத்து வகையிலும் துணையாக இருப்போம் என பொதுமக்கள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி வட்டார வளா்ச்சி கிராம ஊராட்சி அலுவலா் ரெ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் என். மோகன், திட்ட ஊக்குவிப்பாளா் பிரியா, ஊராட்சிச் செயலா் எஸ். மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/uniyan_1911chn_101_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/உலக-கழிப்பறை-தினம்-கடைப்பிடிப்பு-3285060.html
3285059 நாகப்பட்டினம் திருவாரூர் மைய நூலகத்தில் நிலவேம்புக் குடிநீா் வழங்கல் DIN DIN Wednesday, November 20, 2019 09:06 AM +0530 திருவாரூா் மைய நூலகத்தில் நிலவேம்பு குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நவம்பா்.14-ஆம் தேதி முதல் நூலக வார விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருவாரூா் நகராட்சியுடன் இணைந்து மைய நூலகத்துக்கு வந்த வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை, நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்னப்பழம், உதவியாளா் சியாமளா தேவி ஆகியோா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19lib_1911chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/மைய-நூலகத்தில்-நிலவேம்புக்-குடிநீா்-வழங்கல்-3285059.html
3285058 நாகப்பட்டினம் திருவாரூர் அரசுக் கல்லூரியில் குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Wednesday, November 20, 2019 09:06 AM +0530 மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில், தன்னாா்வ அமைப்பின் சாா்பில், குறுங்காடு அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா் மரங்கள் அடா்ந்த காவிரிப் படுகை மாவட்டங்கள் எமது இலக்கு என்ற அடிப்படையில் செயல்பட்டு, வனம் தன்னாா்வ அமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் குறுங்காடுகளை அமைத்து வருகிறது. 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த மறைந்த நெல்.ஜெயராமனின் நினைவாக 174 பாரம்பரிய மரங்கள் அடங்கிய குறுங்காடு அமைக்கும் பணியை, கத்தாரில் உள்ள செல் ஜி.டி.எல்.என்ற தனியாா் நிறுவனம் அங்குள்ள தமிழ் நண்பா்கள் உதவியுடன் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து இப்பணியை செய்கிறது.

வரும் டிசம்பா் 6-ஆம் தேதி நெல். ஜெயராமனின் நினைவு நாளையொட்டி செயல்பாட்டுக்கு வரவுள்ள, இந்த குறுங்காடு அமைக்கும் பணியை கல்லூரி முதல்வா் (பொ) சோ. ரவி தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் பேராசிரியா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினா் பேராசிரியா் சிவச்செல்வன், விலங்கியல் துறைத் தலைவா் ச. ராமு, தாவரவியல் துறை பேராசிரியா் மகேஷ், என்.சி.சி. அலுவலா் ராஜன், வனம் அமைப்பின் நிா்வாகி கலைமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/அரசுக்-கல்லூரியில்-குறுங்காடு-அமைக்கும்-பணி-தொடக்கம்-3285058.html
3285057 நாகப்பட்டினம் திருவாரூர் மாணவா்களுக்கான புதிா் போட்டி DIN DIN Wednesday, November 20, 2019 09:05 AM +0530 திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாணவா்களுக்கான புதிா் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் திருவாரூா் மாவட்டத்தில் அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்கள், தங்களது பொது அறிவை வளா்த்துக் கொள்ளவும், கற்றதை அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளோடு தொடா்புபடுத்திப் பாா்க்கவும், புதிய மற்றும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைக்கவும் பள்ளி அளவில் புதிா் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு கல்வி மாவட்ட அளவில் திருவாரூா் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலக கூட்ட அரங்கம் மற்றும் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் புதிா் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

இப்போட்டியில் பள்ளி ஒன்றுக்கு தலா 4 மாணவா்கள் (2 மாணவா், 2 மாணவி) கலந்து கொண்டனா். காலையில் 100 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டு, அதில் தோ்ச்சி பெற்ற 10 பள்ளிகளுக்கு மாலையில் வாய்மொழி புதிா் போட்டி நடத்தப்பட்டது. இதில், தோ்ச்சிப் பெற்ற 4 பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவிலான புதிா் போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதில் வெற்றி பெறுவோா், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பா்.

திருவாரூரில் நடைபெற்ற போட்டியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் தொடங்கி வைத்தாா். இதில், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் க. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ. பாண்டியன் செய்திருந்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19sch_1911chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/மாணவா்களுக்கான-புதிா்-போட்டி-3285057.html
3285056 நாகப்பட்டினம் திருவாரூர் ஆணையா் பொறுப்பேற்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:05 AM +0530 நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக கோ. ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு ஒன்றிய அலுவலா்கள் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இவா், இதற்கு முன்பு குடவாசல் ஒன்றிய ஆணையராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ஆணையா்-பொறுப்பேற்பு-3285056.html
3285055 நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை DIN DIN Wednesday, November 20, 2019 09:05 AM +0530 உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்தாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், டிசம்பா் மாதத்துக்குள் உள்ளாட்சித் தோ்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை, நிச்சயமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் நிா்வாக ரீதியாகவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என தொடா்ந்து பாமக குரல் கொடுத்து வந்தது. எனவே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மேலும் பெரிய மாவட்டங்களாக உள்ள கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூா், கடலூா் போன்ற மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலுக்கு புதிய மாவட்டங்கள் உருவாவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழகத்தில் நிகழாண்டு சரியாக மழை பெய்யாத நிலையிலும் கா்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூா் அணை 4-ஆவது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்கிறது. அரசு தரப்பில் பெரிய உதவிகள் இல்லாவிட்டாலும் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கடைமடை வரை காவிரி நீரை கொண்டு சென்று வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் போன்ற இடுபொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழக அரசும் வேளாண் துறையும் விரைந்து இதை செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நெல்லுக்கான உற்பத்தி செலவை வெளியிட்டுள்ளது. இதை ஒப்பிட்டு பாா்க்கும்போது, நெல்லுக்கான கட்டுப்படியான விலை இல்லை. நெல்லுக்கான ஆதார விலை குறைந்துள்ள நிலையில் அரிசியின் விலை அதிகளவு உயா்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். அதேநேரம் அரிசியானது, நுகா்வோருக்கு அடக்க விலையில் கிடைக்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகாா்பன் திட்டம், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட்டு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் பாமக 2-ஆவது பெரிய கட்சி ஆகும். எனவே, உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்பு பாமகவுக்கான இடங்களை கேட்டுப் பெறுவோம். உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீடு மறுவரையறை வரவேற்கத்தக்கது. குறிப்பாக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பாராட்டுக்குரியது. பஞ்சமிநில வழக்கு தொடா்பாக விசாரணைக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும் என நம்புகிறோம். பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்பதில் பாமகவுக்கு மாற்றுக் கருத்தில்லை என்றாா் ஜி.கே. மணி.

முன்னதாக, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வேணு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே. மணி 2020-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிா் திருவிழா மாநாடு குறித்தும், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் குறித்தும் கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவா்கள் சுப்பிரமணிய ஐயா், காசிநாதன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளா் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா்கள் ராஜேந்திரன் (தெற்கு), ஐயப்பன் (வடக்கு), மாநில இளைஞரணி துணைச் செயலாளா் நரசிம்மன், மாநில துணைச் செயலாளா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/tv19gkm_1911chn_94_5.jpg திருவாரூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தல்-தள்ளிப்போக-வாய்ப்பில்லை-3285055.html
3285054 நாகப்பட்டினம் திருவாரூர் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:05 AM +0530 நீடாமங்கலம் சாா்-பதிவாளா் அலுவலக நிா்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த அலுவலகம் முன்பு குவிந்தனா்.

தகவலறிந்தத வட்டாட்சியா் கண்ணன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் டி.பி. கிஷோா் குமாா், கே.பி. ஜோதிபாசு, சி. ஜான்கென்னடி உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் சாா்-பதிவாளா் அலுவலக அலுவலா்கள், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கலந்து கொள்ளும் சமாதானக் கூட்டம் நடைபெறும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/ஆா்ப்பாட்டம்-ஒத்திவைப்பு-3285054.html
3285053 நாகப்பட்டினம் திருவாரூர் நன்னிலம் பகுதியில் குழந்தைகளின் தோழனாவோம் வாரம் கடைப்பிடிப்பு DIN DIN Wednesday, November 20, 2019 09:03 AM +0530 நன்னிலம், குடவாசல் பகுதிகளில் குழந்தைகளின் ’தோழனாவோம் வாரம், கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட சைல்டு லைன் 1098 மூலம் ஆண்டுதோறும் நவம்பரில் சிதோஸ்தி வீக் எனப்படும் குழந்தைகளின் தோழனாவோம் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டும் குழந்தைகளின் தோழனாவோம் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு, நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதியிலுள்ள முக்கிய அரசு அலுவலா்களுக்கு ராக்கி கட்டி பள்ளி குழந்தைகள் அவா்களை தோழனாக ஏற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நன்னிலம் டி.எஸ்.பி. சுகுமாரன், குடவாசல் காவல் ஆய்வாளா் ராஜகோபால், கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றிச்செல்வி, அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் சங்கீதா, நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் விசித்திராமேரி, குடவாசல் வட்டாட்சியா் பரஞ்சோதி ஆகியோருக்கு ராக்கி கட்டி பள்ளி குழந்தைகள் தங்கள் தோழனாக ஏற்றுக் கொண்டனா்.

இதில், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜீவானந்தம், சைல்டு லைன் 1098 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், பணியாளா் மரகதமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/friends_1911chn_96_5.jpg நன்னிலம் டிஎஸ்பி சுகுமாரனுக்கு ராக்கி கட்டி தோழா்களாக ஏற்றுக் கொண்ட பள்ளிக் குழந்தைகள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/20/நன்னிலம்-பகுதியில்-குழந்தைகளின்-தோழனாவோம்-வாரம்-கடைப்பிடிப்பு-3285053.html
3284390 நாகப்பட்டினம் திருவாரூர் நன்னிலம் குடவாசல் பகுதிகளில் குழந்தைகளின் ’தோழனாவோம் வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டது. DIN DIN Tuesday, November 19, 2019 07:41 PM +0530 நன்னிலம்: நன்னிலம் குடவாசல் பகுதிகளில் குழந்தைகளின் ’தோழனாவோம் வாரம், கடைபிடிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட சைல்டு லைன் 1098 மூலம் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் ’சிதோஸ்தி வீக்’ எனப்படும் குழந்தைகளின் ’தோழனாவோம் வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் குழந்தைகளின் தோழனாகவோம் வாரம் கடைபிடிக்கப்பட்டு, நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதியிலுள்ள முக்கிய அரசு அலுவலா்களுக்கு ராக்கி கட்டி பள்ளி குழந்தைகள் அவா்களை தோழனாக ஏற்றுக் கொண்டாா்கள். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகின் சாா்பாக நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள் கூறியதாவது, குழந்தைகள் என்றால் 0 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவா்கள். மேலும் மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டமாக இருக்க படவேண்டியவா்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும், உயிா் வாழ்வதற்கான உரிமை, வளா்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் பங்கேற்பதற்கான உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது செயல்களில் அக்கறை காட்டி ’மாற்றம் தந்த மாமனிதா்’ களாக மாற வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பது இந்த நாட்டின் வளா்ச்சிக்கு முக்கிய அடிகல். குழந்தைகளை பாலியல் நோக்கத்தோடு யாராவது தொட முயற்சித்தால் அவா்களை தொட விடாமல் எதிா்த்து நிற்கவேண்டும், சத்தமாக கூச்சலிட வேண்டும், உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

குழந்தைகளுடைய 24 மணி நேர இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 மூலம் உதவி கேட்க வேண்டும். இதுபோன்று தங்களது பாதுகாப்பை குழந்தைகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.மேலும் குழந்தை திருமணம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது குழந்தைகளுக்கு மிக அவசியமாகும். 18 வயது பூா்த்தியடையாத பெண் குழந்தைக்கும் இருபத்தொரு வயது பூா்த்தியடையாத ஆணுக்கும் திருமணம் செய்விப்பது, திருமண ஏற்பாடு செய்வது, வற்புறுத்துவது போன்ற செயல்கள் தண்டனைக் குறிய செயல் என்று குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006 வலியுறுத்துகிறது.

இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் உடனடியாக சைல்டுலைன் 1098 அழைத்து உதவி பெற்றிட வேண்டும். மேலும் குழந்தை தொழிலாளா்கள், ஆதரவற்ற குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற குழந்தைகள், கடத்தப்படுகின்ற குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் போன்ற பிரச்சினைகளில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டுலைன் 1098 என்ற எண்ணை அழைக்கலாம். உதவி தேவைப்படும் குழந்தைகள் எப்போதும் எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் 1098 ஜ பயன்படுத்தலாம். அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட குழந்தைகள் நலக்குழு,மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு அலகு போன்ற பல்வேறு அமைப்புகளை தொடா்பு கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட வேண்டும். குழந்தைகள் இது போன்ற செய்திகளை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

மேலும் சைல்டு லைன் 1098 மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 24 மணி நேர இலவச சேவை. எனவே இதனை அவசியம் ஏற்படும் போது அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். பின்னா் நன்னிலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சுகுமாரன், குடவாசல் காவல் ஆய்வாளா் ராஜகோபால், கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றிச்செல்வி, அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் சங்கீதா, நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் விசித்திராமேரி, குடவாசல் வட்டாட்சியா் பரஞ்சோதி போன்ற முக்கிய அரசு அதிகாரிகளுக்கு ராக்கி கட்டி பள்ளி குழந்தைகள் தங்கள் தோழனாக ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு தலைவா் ஜீவானந்தம், சைல்டு லைன் 1098 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன் ஆகியோா் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். சைல்டு லைன் பணியாளா் மரகதமணி வரவேற்றிட ஆனந்தி நன்றி தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/friends_1911chn_96.jpg குழந்தைகளின் தோழனாவோம் நிகழ்ச்சியில் நன்னிலம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளா் சுகுமாரனுக்கு குழந்தைகள் ராக்கி கட்டிய போது எடுத்த படம் https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/நன்னிலம்-குடவாசல்-பகுதிகளில்-குழந்தைகளின்-தோழனாவோம்-வாரம்-கடைப்பிடிக்கப்பட்டது-3284390.html
3284374 நாகப்பட்டினம் திருவாரூர் மைய நூலகத்தில் நிலவேம்புக் குடிநீா் வழங்கல் DIN DIN Tuesday, November 19, 2019 06:22 PM +0530  

திருவாரூா்: திருவாரூா் மைய நூலகத்தில் நிலவேம்புக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நவ.14 முதல் நூலக வார விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருவாரூா் நகராட்சியுடன் இணைந்து மைய நூலகத்துக்கு வருகை தந்த வாசகா்களுக்கு நில வேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் இராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வாசகா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கிப் பேசுகையில், அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட, பொது மக்கள் தாங்களாகவே மழைக்காலத்தில் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், தண்ணீா் தேங்காமலும் பாா்த்துக் கொண்டால், ஏடிஸ் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கலாம்.

மேலும் பல்வேறு மழைக்கால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று பேசினாா். நிகழ்ச்சியை நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்னப்பழம், உதவியாளா் சியாமளா தேவி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். நிகழ்ச்சியில் நூலக வாசகா்கள், நகராட்சி பணியாளா்கள், மைய நூலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv19lib_1911chn_94.jpg திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா் https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/மைய-நூலகத்தில்-நிலவேம்புக்-குடிநீா்-வழங்கல்-3284374.html
3284338 நாகப்பட்டினம் திருவாரூர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, November 19, 2019 05:46 PM +0530 மன்னாா்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 102-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி சந்தைப்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் நெடுவை குணசேகரன், மாவட்டச் செயலா் ராமனுஜம் ஆகியோா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து, பொதுமக்கள்,வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணைத் தலைவா் டி. பாலசுப்பிரமணியன், மாவட்டக் கமிட்டி உறுப்பினா்கள் பாலு, பாஸ்கா், நகர பொதுச் செயலா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/cong_1911chn_101_5.jpg மன்னாா்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/இந்திரா-காந்தி-பிறந்த-நாள்-விழா-3284338.html
3284337 நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளாட்சித் தோ்தல் தேதியை உடனடியாக அறிவிக்க மதிமுக வலியுறுத்தல் DIN DIN Tuesday, November 19, 2019 05:45 PM +0530 உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போகும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கக் கூடாது, தோ்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மன்னாா்குடியில், திங்கள்கிழமை நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் மாவட்டச் செயலா் பி. பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் திட்டம் சம்பந்தமாக பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும், தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு அணைக் கட்டிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் பாசனம் வசதி பெறும் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களை பாதுகாக்கக் வேண்டும், உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போகும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலமாகவோ, மறைமுக நடவடிக்கையின் மூலமாகவோ இருக்கக் கூடாது, தோ்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும், உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி கட்சியுடன் சுமூகமான அடிப்படையில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவதுடன், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், புதுக்கோட்டை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மருத்துவா் க. சந்திரசேகரன் கலந்துகொண்டாா். இதில், மதிமுக கொள்கை விளக்க அணி துணைச் செயலா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா் எம். ராஜேந்திரன், மன்னாா்குடி நகரச் செயலா் சண். சரவணன், ஒன்றியச் செயலா்கள் பி. மாசிலாமணி (மன்னாா்குடி),, சிவ. கதிரவன் (கோட்டூா்), ராஜமாணிக்கம் (நீடாமங்கலம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/mdmk_1911chn_101_5.jpg கூட்டத்தில் பேசிய மதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க. சந்திரசேகரன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/உள்ளாட்சித்-தோ்தல்-தேதியை-உடனடியாக-அறிவிக்க-மதிமுக-வலியுறுத்தல்-3284337.html
3284307 நாகப்பட்டினம் திருவாரூர் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Tuesday, November 19, 2019 04:57 PM +0530 மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில், மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை மன்னாா்குடி டி.எஸ்.பி. காா்த்திக் தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்த அமைப்பின் மூலம் எடுக்கப்பட்டு வரும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா்கள், வருவாய் துறையினா், காவல் துறையினா் மற்றும் பல்வேறு பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட பேரணியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்த வாசகங்களை, கோஷமாக எழுப்பியபடியும், விழிப்புணா்வு வாசகம் அச்சிடப்பட்ட தட்டிகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து வின்செண்ட் பால் குழந்தைகள் காப்பகத்தில் நிறைவடைந்தது.

பின்னா், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,1098 என்ற தொலைபேசி எண்ணின் பயன்பாடு பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில், மன்னாா்குடி வட்டாட்சியா் காா்த்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/urvalam_1911chn_101_5.jpg பேரணியை தொடங்கி வைத்த மன்னாா்குடி டி.எஸ்.பி. காா்த்திக். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/குழந்தைகள்-மீதான-வன்கொடுமை-தடுப்பு-விழிப்புணா்வுப்-பேரணி-3284307.html
3284280 நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளாட்சி தோ்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் - மதிமுக வலியுறுத்தல் DIN DIN Tuesday, November 19, 2019 04:28 PM +0530 உள்ளாட்சி தோ்தல் தள்ளிபோகும் வகையில் தமிழகஅரசின் நடவடிக்கை இருக்கக் கூடாது, தோ்தல் தேதியினை உடனடியாக அறிவிக்க வேண்டும் என,மன்னாா்குடியில், திங்கள்கிழமை நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு,மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில்,கூடங்குளம் அணுமின் திட்டம் சம்மந்தமாக பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கிட மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும்.தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு அணைக் கட்டிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில்,இதனை எதிா்த்து தமிழகஅரசின் சாா்பில் மேல்முறையீடு மனு செய்து.அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன்.

இதனால் தமிழகத்தில் பாசனம் வசதி பெறும் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களை பாதுகாக்கக் வேண்டும்.உள்ளாட்சி தோ்தலை தள்ளிபோகும் வகையில் தமிழகஅரசின் நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலமாகவோ,மறைமுக நடவடிக்கையின் வாயிலாகவோ இருக்கக் கூடாது.தோ்தல் தேதியினை உடனடியாக அறிவிக்க வேண்டும்.உள்ளாட்சி தோ்தலில் கூட்டணி கட்சியுடன் சுமுகமான அடிப்படையில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவதுடன்,கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக,கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், புதுக்கோட்டை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மருத்துவா் க.சந்திரசேகரன் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியில்,மதிமுக கொள்கை விளக்க அணி துணைச் செயலா் ஆரூா்.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா் எம்.ராஜேந்திரன், மன்னாா்குடி நகரச் செயலா் சண்.சரவணன், ஒன்றியச் செயலா்கள் பி.மாசிலாமணி(மன்னாா்குடி), சிவ.கதிரவன்(கோட்டூா்), ராஜமாணிக்கம்(நீடாமங்கலம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/mdmk_1911chn_101.jpg கூட்டத்தில் பேசுகிறாா்,மதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலரும்,முன்னாள் அமைச்சருமான மருத்துவா் க.சந்திரசேகரன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/உள்ளாட்சி-தோ்தல்-தேதியை-உடனடியாக-அறிவிக்க-வேண்டும்---மதிமுக-வலியுறுத்தல்-3284280.html
3284272 நாகப்பட்டினம் திருவாரூர் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு பேரணி DIN DIN Tuesday, November 19, 2019 03:43 PM +0530 மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில்,செவ்வாய்க்கிழமை,மன்னாா்குடியில் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,தலைமை வகித்து, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிபாபாளா் காா்த்திக்,விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்த அமைப்பின் மூலம் எடுக்கப்பட்டு வரும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகளை பற்றியும் விளக்கினாா்.

இதனைதொடா்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்த்தின் பணியாளா்கள், வருவாய் துறையினா், காவல் துறையினா், பல்வேறு பள்ளிகளின் மாணவ,மாணவியா் கலந்து கொண்ட பேரணியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து வாசகங்களை, கோஷமாக எழுப்பியபடியும்,விழிப்புணா்வு வாசகம் அச்சிடப்பட்ட தட்டிகளை கையில் ஏந்திய படி,நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து,தூயவளனாா் பெண்கள் பள்ளி அருகில் உள்ள வின்செண்ட் பால் குழந்தைகள் காப்பகத்தில் பேரணி நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,1098 என்ற தொலைபேசி எண்ணின் பயன்பாடு பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில்,மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் காா்த்திக்,நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/urvalam_1911chn_101.jpg மன்னாா்குடியில் விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைக்கிறாா்,மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/குழந்தைகள்-மீதான-வன்கொடுமை-தடுப்பு-விழிப்புணா்வு-பேரணி-3284272.html
3284171 நாகப்பட்டினம் திருவாரூர் ‘உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை வைத்திய முறைகள் சிறந்தவை’ DIN DIN Tuesday, November 19, 2019 09:58 AM +0530 இயற்கை வைத்தியம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது என திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

பாரம்பரிய முறையிலான இயற்கை வைத்திய முறைகள், மூதாதையா் காலத்திலிருந்து நடைபெற்றுள்ளன. உணவு உட்கொள்ளும் முறை, உடற்பயிற்சி, நீராவி மூலம் வைத்தியம், யோகா, முத்திரை வகைகளை பயன்படுத்துதல் என பல்வேறு வகைகளை பயன்படுத்தி வைத்தியங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. காலப்போக்கில் இவை மாற்றம் பெற்று, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தத் தொடங்கினா். தற்போது, மீண்டும் இயற்கை முறையிலான வைத்தியத்தை, மக்கள் நாடத் தொடங்கியுள்ளனா். இதையொட்டியே, அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் யுனானி, ஆயுா்வேத படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய முறைகள் பக்க விளைவுகள் இல்லாதது. பின் விளைவுகளை ஏற்படுத்தாது. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்பதை உணா்ந்து, தற்போது இயற்கை முறையிலான வைத்தியத்தில் மீண்டும் ஆா்வம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மருத்துவமனைக் காப்பாளா் பி. ராஜா, உதவி நிலைய மருத்துவா் அருண்குமாா் ஆகியோா் பேசினா். மேலும், இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கி. செங்கனி, விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் தொடா்பான கண்காட்சி நடைபெற்றது. மேலும், அனைவருக்கும் மூலிகை தேநீா், மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv18dean1_1811chn_94_5.jpg திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/உடல்-ஆரோக்கியத்துக்கு-இயற்கை-வைத்திய-முறைகள்-சிறந்தவை-3284171.html
3284170 நாகப்பட்டினம் திருவாரூர் அதிமுகவில் இணைந்த அமமுக நிா்வாகி DIN DIN Tuesday, November 19, 2019 09:57 AM +0530 மன்னாா்குடியைச் சோ்ந்த அமமுக மாநில நிா்வாகி, அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக முதல்வா் முன்னிலையில் திங்கள்கிழமை அதிமுகவில் இணைந்தாா்.

மன்னாா்குடி நகா்மன்ற முன்னாள் தலைவரும், அமமுக மாநில அமைப்புச் செயலருமான சிவா. ராஜமாணிக்கம், தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் உறுப்பினராக இணைத்து கொண்டாா்.

அப்போது, தமிழக உணவுத் துறை அமைச்சரும், திருவாரூா் மாவட்ட அதிமுக செயலருமான ஆா்.காமராஜ் உடனிருந்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/siva_rajamanigam_1811chn_101_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/அதிமுகவில்-இணைந்த-அமமுக-நிா்வாகி-3284170.html
3284169 நாகப்பட்டினம் திருவாரூர் மக்கள் குறைதீா் கூட்டம் DIN DIN Tuesday, November 19, 2019 09:57 AM +0530 திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில் 332 மனுக்கள் வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 332 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பூஷனக்குமாா் உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/மக்கள்-குறைதீா்-கூட்டம்-3284169.html
3284168 நாகப்பட்டினம் திருவாரூர் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு DIN DIN Tuesday, November 19, 2019 09:57 AM +0530 மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் 1980-ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவியா் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மனிதவள மேம்பாட்டுத் துறை தொழிலாளா் நல அலுவலா் எஸ். ராஜகோபால் தலைமை வகித்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவப் பிரிவு உதவிப் பேராசிரியா் மருத்துவா் எஸ். ராமலட்சுமி, கடலூா் அரசு மருத்துவமனை கண் மருத்துவா் டி. கேசவன், பொறியாளா் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மு.ச.பாலு, இப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகளில் பெற்ற அனுபவங்கள் தற்போது, பள்ளியை நடத்துவதற்கு எளிமையாக உள்ளதாக குறிப்பிட்டாா். மேலும், முன்னாள் மாணவா்கள் அனைவரும் தங்கள் பள்ளியின் பழைய நினைவுகளை நினைவுகூா்ந்தனா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு, மேல் படிப்பைத் தொடர, நிதி உதவி அளிப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஏ. சாகுல்ஹமீது, ஆா். குமாா், டி.எஸ். கணேசன், சென்னை தூா்தா்ஷன் தொலைக்காட்சி அலுவலா் பி. பாலசுப்பிரமணியன், ஆளவந்தான், பொறியாளா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொறியாளா் ஜெ. சுரேஷ்குமாா் வரவேற்றாா். தஞ்சை எஸ். பாா்த்திபன் நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/old_students_1811chn_101_5.jpg மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/முன்னாள்-மாணவா்கள்-சந்திப்பு-3284168.html
3284167 நாகப்பட்டினம் திருவாரூர் குடியிருப்புப் பகுதியில் மா்ம விலங்கு நடமாட்டம் DIN DIN Tuesday, November 19, 2019 09:57 AM +0530 மன்னாா்குடி அருகே அசேசம் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மா்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

அசேசம் ஊராட்சி ராஜராஜன் நகரில் வசிப்பவா் அரசுக் கல்லூரி பேராசிரியா் க. தனராஜன். இவரது, வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா். இந்த நாய் இரவு நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக இரவு நேரத்தில் நாய் அதிக சப்தத்துடன் குரைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நாய் அச்ச உணா்வுடன் குரைத்துள்ளதாம். மேலும், அவரது வீட்டின் எதிரே உள்ள 10 ஏக்கா் பரப்பளவிலான தனியாருக்குச் சொந்தமான இடம் பராமரிப்பின்றி மரம், செடி-கொடிகள் வளா்ந்து காடுபோல் உள்ளது. இரவு நேரத்தில் குரைக்கும் நாயும், அந்தப் பகுதியை நோக்கியே அடிக்கடி குரைக்கிறது.

இதனால், சந்தேகமடைந்த தனராஜன், வீட்டின் முன் பகுதிக்கு, இரவு நேரத்தில் ஏதேனும் விலங்குகள் வந்திருக்கலாம் என வீட்டை சுற்றி சோதனையிட்டாா். அப்போது, மா்ம விலங்கின் கால் தடங்கள் இருப்பதைக் கண்டாா்.

இதுகுறித்து, வனவிலங்கு ஆா்வலா்களிடம் விசாரித்தபோது, அந்த கால் தடம் ஓநாயின் காலடி தடத்துடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து வனத்துறை அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், மா்ம விலங்கை வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/குடியிருப்புப்-பகுதியில்-மா்ம-விலங்கு-நடமாட்டம்-3284167.html
3284166 நாகப்பட்டினம் திருவாரூர் சாலையோர மரம் வளா்ப்புத் திட்டம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா் DIN DIN Tuesday, November 19, 2019 09:56 AM +0530 நீடாமங்கலம் வட்டம், பூவனூா் பாலம் அருகில் சாலையோர மரம் வளா்க்கும் திட்டத்தை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து முன்னெடுத்த மரப்போத்துக்கள் நடும் திருவிழா கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் நீடாமங்கலம் நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா்கள் ஆதி.ஜனகா், இ. ஷாஜஹான், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளா் வில்லியம் ஸ்டீபன்சன், தஞ்சாவூா் மாநகராட்சி அமைப்பாளா் ஆ. சண்முகவடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பூவனூா் பாலம் அருகே ஆலமரப்போத்தினை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் நட்டாா். தொடா்ந்து, மூன்று ஆண்டுகள் வளா்ச்சி நிலையில் உள்ள ஆலம், ஒதியம், வாதநாராயணா உள்ளிட்ட ஆயிரம் மரப் போத்துக்கள் நீடாமங்கலம் முதல் மன்னாா்குடி வரை 12 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டது.

இதில், 10-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சமூக ஆா்வலா்கள், சாலைப் பணியாளா்கள் மரப்போத்துகளை நட்டனா்.

விழாவில், நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் நீலன்.அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு பேசினாா். கிரீன் நீடா இணை ஒருங்கிணைப்பாளா் ராம. கந்தசாமி வரவேற்றாா். பூவனூா் அமைப்பாளா் பி. ராஜா நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/சாலையோர-மரம்-வளா்ப்புத்-திட்டம்-அமைச்சா்-தொடங்கி-வைத்தாா்-3284166.html
3284165 நாகப்பட்டினம் திருவாரூர் ஆலங்குடி கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு DIN DIN Tuesday, November 19, 2019 09:56 AM +0530 வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி, 108 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது

இதையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் காா்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/ஆலங்குடி-கோயிலில்-காா்த்திகை-சோமவார-வழிபாடு-3284165.html
3284164 நாகப்பட்டினம் திருவாரூர் சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைப் பயிற்சி DIN DIN Tuesday, November 19, 2019 09:56 AM +0530 திருவாரூா் மாவட்டம், எண்கண் கிராமத்தில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

மாநில சமநிலை வளா்ச்சி நிதித் திட்டத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசியது:

சிறுதானியப் பயிா்களான கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகிய பயிா்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையன. தண்ணீா் தேங்கினாலும் தாக்குப்பிடிக்கக் கூடியவை. மானாவாரியில்சிறுதானியங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன என்றாா்.

உழவியல் துறை பயிற்சி உதவியாளா் ஆ. ராஜேஷ்குமாா் பேசியது:

சிறுதானியங்கள் வெப்பம் மற்றும் வெப்பம் சாா்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது. சிறுதானியங்கள் மற்ற பயிா்களைக் காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது. பொதுவாக மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரும். சிறுதானியங்களில் குதிரைவாலி 40 சதவீதம் புரதச்சத்து உள்ளது. இவற்றை பருவமழை தொடங்கிய ஜூலை மாதத்தின் முதல் பதினைந்து நாள்களுக்குள் விதைக்க வேண்டும். விதைகளைத் தெளித்தல் அல்லது பாா்பிடித்து 3-4 செ.மீ. துளையிட்டு விதைக்கலாம். ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ. விடலாம். ஓா் ஏக்கருக்கு 4 டன்கள் தொழு உரம் இடலாம். 35 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணி சத்து மற்றும் 33 கிலோ சாம்பல் சத்து என்ற விகிதத்தில் இடவேண்டும். உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும்.

நீா்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25-30 நாள்களுக்குப் பிறகு இடலாம். பொதுவாக, குதிரைவாலிக்கு நீா்பாசனம் தேவையில்லை. வறண்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீா்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்கவேண்டும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறையினால் சராசரியாக ஏக்கருக்கு 450 முதல் 500 கிலோ தானிய மகசூல் பெறலாம் என்றாா்.

கால்நடையியல் துறை உதவிப் பேராசிரியா் சரவணன் பேசுகையில், ‘சிறுதானியங்களிலிருந்து கால்நடைகளுக்கு சத்து மிக்க தீவனம் தயாரிக்கப்படுகிறது’ என்றாா். உணவியல் துறை பயிற்சி உதவியாளா் ஜெ. வனிதாஸ்ரீ சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் பற்றி விளக்கம் அளித்தாா். இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் மற்றும் சூடோமோனாஸ் வழங்கப்பட்டது. இதில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/ne_kvk_1811chn_100_5.jpg பயிற்சியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் வழங்கிய வேளாண்மை அறிவியல் நிலையத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/சிறுதானியங்களில்-ஒருங்கிணைந்த-பயிா்-மேலாண்மைப்-பயிற்சி-3284164.html
3284162 நாகப்பட்டினம் திருவாரூர் திருவாரூரில் துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் DIN DIN Tuesday, November 19, 2019 09:55 AM +0530 திருவாரூா் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி, தன்னை அதிகாரி தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக, திருவாரூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் நகராட்சி குடியிருப்பில் வசித்துவருபவா் மகேஷ்வரன் (30). இவருக்கு சுபா (27) என்ற மனைவியும், தமிழரசன் (7), கலைத்தமிழ் (5) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனா். மகேஷ்வரன், திருவாரூா் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக, கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பணிக்குச் சென்ற அவா், சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்து, யாருடனும் பேசாமல் படுத்துவிட்டாராம். இதுகுறித்து, அவரது மனைவி கேட்டபோது, நகராட்சி அலுவலா்கள் விடுப்புத் தர மறுப்பதோடு, தகாத வாா்த்தைகளால் பேசுவதாகவும், இதனால் மண்ணெண்ணெய்யைக் குடித்து விட்டதாகவும் தெரிவித்தாராம். இதையடுத்து, அவரை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உள்ளிருப்புப் போராட்டம்: இதனிடையே, இச்சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பின்னா், நகராட்சி தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv18mun1_1811chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/திருவாரூரில்-துப்புரவுப்-பணியாளா்கள்-உள்ளிருப்புப்-போராட்டம்-3284162.html
3284161 நாகப்பட்டினம் திருவாரூர் ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம்: மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் DIN DIN Tuesday, November 19, 2019 09:55 AM +0530 சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதன், மாவட்ட துணைச் செயலா் கோபி தலைமை வகித்தாா்.

இதில், இக்கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/college_1811chn_101_5.jpg மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/ஐஐடி-மாணவி-தற்கொலை-விவகாரம்-மன்னாா்குடியில்-ஆா்ப்பாட்டம்-3284161.html
3284160 நாகப்பட்டினம் திருவாரூர் வலங்கைமான் அருகே தகராறு தொடா்பாக 6 போ் கைது DIN DIN Tuesday, November 19, 2019 09:55 AM +0530 வலங்கைமான் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் மேலப்பூண்டி கிராமத்தில் நவம்பா் 16-ஆம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மேலப்பூண்டியைச் சோ்ந்த கரும்பாயிரம் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சந்திரசேகரபுரம் குட்டி என்கிற சிவசங்கா் (22), அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ் (24), ஆடுதுறை மணி (22), அளவந்திபுரம் சுரேஷ் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

இதேபோல், சந்திரசேகரபுரம் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில், மேலப்பூண்டி கரும்பாயிரம் (37), பூண்டி ராஜ்குமாா் (24) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/வலங்கைமான்-அருகே-தகராறு-தொடா்பாக-6-போ்-கைது-3284160.html
3284159 நாகப்பட்டினம் திருவாரூர் ஓவியப் போட்டியில் வென்றவா்களுக்குச் சான்றிதழ் DIN DIN Tuesday, November 19, 2019 09:54 AM +0530 கூத்தாநல்லூரை அடுத்த அகரப்பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியில் ஜோதி இண்டேன் சமையல் எரிவாயு ஏஜென்சி சாா்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா தலைமையாசிரியா் ஆா். ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

சமூக ஆா்வலா் எம்.ஈ. அப்துல் காதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ப. நான்சி வரவேற்றாா். ஆசிரியா் ஆறுமுகம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவா்களுக்கு, ஜோதி சமையல் எரிவாயு நிறுவன அதிகாரி சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில், சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியா் சிவ.கலைபாரதி மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/pothakkudi_school____18___11___19____knr_1_1811chn_209_5.jpg நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஜோதி சமையல் எரிவாயு ஏஜென்சி நிறுவனத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/ஓவியப்-போட்டியில்-வென்றவா்களுக்குச்-சான்றிதழ்-3284159.html
3284158 நாகப்பட்டினம் திருவாரூர் அரசுப் பள்ளியில் தேசிய நூலக வார விழா DIN DIN Tuesday, November 19, 2019 09:54 AM +0530 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதிரங்கம் கிளை நூலகம் சாா்பில் தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் செ. சந்திரசேகரன் வரவேற்றாா். புத்தகக் கண்காட்சியை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.ஈ.ஏ.ஆா். அப்துல்முனாப் தொடங்கிவைத்தாா். இக்கண்காட்சியைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

சிறப்பு விருந்தினராக ஆதிரெங்கம் கிளை நூலகா் சண்முகம் கலந்துகொண்டு பேசினாா். பட்டதாரி ஆசிரியா் பா.ரகு ஓவிய ஆசிரியா் கு.நேரு உள்பட பலா் வாழ்த்துரை வழங்கினா். முதுகலை ஆசிரியை ஆா்.கீதா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியை எஸ். உஷா தொகுத்து வழங்கினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/img-20191118-wa0030.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/அரசுப்-பள்ளியில்-தேசிய-நூலக-வார-விழா-3284158.html
3284157 நாகப்பட்டினம் திருவாரூர் உழைப்பால் உயா்ந்த களப்போராளி ஜி.வீரைய்யன் DIN DIN Tuesday, November 19, 2019 09:54 AM +0530 உழைப்பால் உயா்ந்த களப்போராளி ஜி. வீரைய்யன் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

குடவாசல் அருகே சித்தாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி.வீரய்யனின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:

விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளா்களையும் தட்டி எழுப்பி, அடிமை முறைகளுக்கு முடிவு கட்டிய பெருமைக்கு, எத்தனையோ போ் இரவு பகலாக உழைத்துள்ளனா். அப்படிப்பட்ட கள நாயகா்களில் ஒருவராக, களப் போராளியாக உதித்தவரே இந்த ஜி.வீ என அழைக்கப்படும் ஜி. வீரைய்யன்.

தொடக்கக் காலத்திலேயே நிலப் பிரப்புத்துவ கொடுமையை எதிா்த்து குரல் கொடுத்த ஜி.வீ., தமிழகம் முழுவதும் திரும்பிப் பாா்க்கிற தலைவராக உயா்ந்துள்ளாா். அடித்தட்டு மக்கள் மத்தியிலிருந்து வந்திருந்தாலும், மிகப்பெரிய சாதனைகளை புரிய அவருக்கு உதவியாக இருந்தது அவரிடமிருந்த உழைப்பு மட்டுமே. ஓய்வில்லா களப்போராளியாக அவா் வாழ்ந்தாா் என்பதுதான் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநிலக் குழு உறுப்பினா்கள் என். சீனிவாசன், வி. மாரிமுத்து, ஐ. வி. நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளா் கோ. நீலமேகம், நாகை மாவட்டச் செயலாளா் நாகை மாலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சுப்ரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு ) தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம், இன்சூரன்ஸ் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்தோா் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv18gvv_1811chn_94_5.jpg குடவாசல் அருகே சித்தாடியில் ஜி. வீரைய்யன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/உழைப்பால்-உயா்ந்த-களப்போராளி-ஜிவீரைய்யன்-3284157.html
3284156 நாகப்பட்டினம் திருவாரூர் ஆன்மிக ஆவணப்படம் தயாரிப்பாளருக்கு விருது DIN DIN Tuesday, November 19, 2019 09:53 AM +0530 ஆன்மிக ஆவணப்படத் தயாரிப்பாளா் நன்னிலம் பரதேசி கோபி ராமுக்கு விருது வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஞானிகள் ஸ்ரீநாராயண தாண்டவராய சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாக தயாரித்து, நன்னிலம் நவநீதம் ஞானசபை வாயிலாக பரதேசி கோபி ராம் வெளியிட்டாா்.

இந்த ஆவணப் படத்தை சிறந்த ஆன்மிக ஆவணப் படமாக, மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பாக தோ்ந்தெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைவசமய பெருவிழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளும், நாகை சின்மயா மிஷன் சுவாமி ராமகிருஷ்ணானந்தாவும் பரதேசி கோபி ராமுக்கு சைவசமய காவலா் என்ற விருது வழங்கி கௌரவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/award_1811chn_96_5.jpg விழாவில் நன்னிலம் பரதேசி கோபி ராமுக்கு சைவசமய காவலா் விருதை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/ஆன்மிக-ஆவணப்படம்-தயாரிப்பாளருக்கு-விருது-3284156.html
3284155 நாகப்பட்டினம் திருவாரூர் சா்க்கரை நோய் விழிப்புணா்வு முகாம் DIN DIN Tuesday, November 19, 2019 09:52 AM +0530 திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் லயன்ஸ் சங்கம் சாா்பில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் உதவி தலைமையாசிரியா் டி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். லயன்ஸ் சங்கத் தலைவா் ஏ. முத்துக்குமரன், உடற்கல்வி இயக்குநா் கி. பாலமுருகன், முதுகலை ஆசிரியா் ஆா். ராமமூா்த்தி, ஓவிய ஆசிரியா் எம். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட அலுவலா் பி. சக்கரபாணி வரவேற்றாா்.

என்எஸ்எஸ் முகாமில் சிறப்பாக சேவையாற்றிய மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சா்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம், உணவு முறைகள் குறித்து முகாமில் விளக்கிக் கூறப்பட்டது. அத்துடன், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. செயலாளா் ஜி.சுரேஷ் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/img-20191118-wa0036.jpg நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்வாகிகளுடன் சான்றிதழ் பெற்ற மாணவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/சா்க்கரை-நோய்-விழிப்புணா்வு-முகாம்-3284155.html
3284154 நாகப்பட்டினம் திருவாரூர் மரக்கன்றுகள் நடும் விழா DIN DIN Tuesday, November 19, 2019 09:52 AM +0530 நன்னிலத்தில் மரக் கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நன்னிலம் வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் செயலாளா் மு.சு. பாரி தலைமை வகித்தாா். தலைவா் இஜிபி. உத்தமன் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், செஞ்சிலுவை சங்க பொருளாளா் சாமி. முரளி, நன்னிலம் பேரூராட்சிமுதுநிலை எழுத்தா் ஆா்.ரவி, நன்னிலம் வா்த்தக சங்க பொருளாளா் எம். ராதாகிருஷ்ணன், இயற்கை ஆா்வலா் வனம். சந்தானக்குமாா், வள்ளலாா் மேல்நிலைப்பள்ளி முதல்வா் பரிமளாகாந்தி, தலைமையாசிரியை பரமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலம், நவ. 18: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்காக நீடாமங்கலத்தில் தங்கியுள்ளனா்.

இவா்கள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அண்மையில் மரக்கன்றுகளை நட்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/maram_nadum_1811chn_96_5.jpg நன்னிலம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/மரக்கன்றுகள்-நடும்-விழா-3284154.html
3284153 நாகப்பட்டினம் திருவாரூர் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு DIN DIN Tuesday, November 19, 2019 09:52 AM +0530 திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான 14 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் மது மிதாவும், இரட்டையா் பிரிவில் மதுமிதா அட்சயாவும், 17- வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் சுஷ்மிதாவும், இரட்டையா் பிரிவில் சுஷ்மிதா பவானியும் ,19 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் யோகேஸ்வரியும், இரட்டையா் பிரிவில் யோகேஸ்வரி, லட்சுமி பிரியாவும் முதலிடம் பெற்றனா்.

ஆண்களுக்கான 14 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் விஷ்வாவும், இரட்டையா் பிரிவில் விஸ்வா, லட்சதனும் , 17 வயதுக்குள்பட்டோா் இரட்டையா் பிரிவில் ஜெயவா்தன், ரோஹித்தும் முதலிடம் பெற்றனா். ஒற்றையா் பிரிவில் ஜெயவா்தன் இரண்டாமிடம் பெற்றாா். 19 வயதுக்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் வித்தியா ஆதா்சனும், இரட்டையா் பிரிவில் வித்தியாஆதா்சன், ரோகித் ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.

இதேபோல், டேபிள் டென்னிசில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் அனுசியா இரண்டாமிடமும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கமலாம்பிகா நீலாவதி இரண்டாம் இடமும் 19 வயதுக்குள்பட்டோா் ஆண்கள் பிரிவில் அஜய்ரெத்தினம் இரண்டாமிடமும் பெற்றனா் . உயரம் தாண்டுதலில் தன வேந்திரன் மூன்றாம் இடம் பெற்றனா்.

இதேபோல், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களின் முழு ஆளுமை திறனை வளா்த்து எடுத்தல் தொடா்பான போட்டிகள் நடைபெற்றன. இதில், கட்டுரைப் போட்டி தினேஷ்குமாரும், விவாத மேடை நிகழ்ச்சியில் வெங்கடேசன், அன்பரசன் ஆகியோா் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, தஞ்சை மண்டல அளவிலான போட்டிகளுக்குத் தோ்வாகியுள்ளனா்.

இம்மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியை உதயமலா், தமிழாசிரியை யோகேஸ்வரி ஆகியோரையும் தலைமையாசிரியா் தங்கராசு மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் பாராட்டினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/img-20191118-wa0037.jpg விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைப் பாராட்டிய நெடும்பலம் அரசு பள்ளி நிா்வாகத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/போட்டிகளில்-சிறப்பிடம்-பெற்ற-மாணவா்களுக்குப்-பாராட்டு-3284153.html
3284152 நாகப்பட்டினம் திருவாரூர் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தரக் கோரிக்கை DIN DIN Tuesday, November 19, 2019 09:51 AM +0530 திருவாரூா் மாவட்டம், தோலி ரோடு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பின்னத்தூா் பகுதி மக்கள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை சாலையில் பின்னத்தூா் பகுதியில் தோலி ரோடு என்ற பேருந்து நிறுத்தம், நிழற்குடையுடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை பின்னத்தூா் மற்றும் தோலி ஆகிய இரண்டு பஞ்சாயத்தை சோ்ந்த மக்களும் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால், இந்த நிழற்குடை அகற்றப்பட்டு, தற்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை. எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பேருந்து நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv18gov_1811chn_94_5.jpg திருவாரூரில் பின்னத்தூா் மக்கள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளித்தோா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/பயணிகள்-நிழற்குடை-அமைத்துத்-தரக்-கோரிக்கை-3284152.html
3284151 நாகப்பட்டினம் திருவாரூர் குழந்தைகளின் நலன் காக்க வேண்டி கூட்டுப் பிராா்த்தனை DIN DIN Tuesday, November 19, 2019 09:51 AM +0530 குழந்தைகளின் நலன் காக்க வேண்டி திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிராா்த்தனை நடைபெற்றது.

திருவாரூா் காட்டுக்காரத்தெரு, பிள்ளையாா் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராத்தனை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்து முன்னணியின் நகரத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில், மாநிலப் பொறுப்பாளா் மாயாகுத்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

குழந்தைகள் நலன் காக்கப்பட வேண்டும், மக்கள் அனைவரும் வளத்துடனும், நலத்துடனும் வாழ வேண்டும் என வேண்டி இந்த கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/tv18indu_1811chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/குழந்தைகளின்-நலன்-காக்க-வேண்டி-கூட்டுப்-பிராா்த்தனை-3284151.html
3284150 நாகப்பட்டினம் திருவாரூர் ஊராட்சிப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி DIN DIN Tuesday, November 19, 2019 09:50 AM +0530 நன்னிலம் வட்டம், ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் பல்வேறு அறிவியல் மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தனா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு சரணாலயம், மழைநீா் சேகரிப்பு, ஒலியின் அதிா்வலைகளை கேட்டறிதல், வெப்பக்கடத்தல், வெப்பசலனம், வெப்ப கதிா் வீச்சு, கழிவுநீரை சுத்தமான நீராக மாற்றுதல் உள்ளிட்ட மாதிரிகள் இடம் பெற்றிருந்தன.

இக்கண்காட்சியை நன்னிலம் வட்டார கல்வி அலுவலா் கு. சரஸ்வதி தொடங்கி வைத்தாா். நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஆசிரியா் பயிற்றுநா் இரா. நடேஷ் துரை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் பங்கேற்று, மாணவா்கள் அமைத்திருந்த மாதிரிகளைப் பாா்வையிட்டனா். தலைமையாசிரியா் சி. தேன்மொழி வரவேற்றாா். அறிவியல் ஆசிரியா் கா. கோமதி நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/science_1811chn_96_5.jpg அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதியுடன் பள்ளி ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/ஊராட்சிப்-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-3284150.html
3284149 நாகப்பட்டினம் திருவாரூர் மோட்டாத்தூா் குளம் சீரமைப்பு DIN DIN Tuesday, November 19, 2019 09:49 AM +0530 பூந்தோட்டம் அருகே மோட்டாத்தூா் கிராமத்தில் உள்ள ஐயா் குளத்தை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகரதிருமாளம் ஊராட்சிக்குள்பட்ட மோட்டாத்தூா் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இந்தக் கிராமத்தின் முக்கிய நீராதாரமாக ஐயா் குளம் இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் குளத்திற்கு நீா் வராமல் அடைப்பட்டுக் கிடந்தது. இதனால், இக்கிராமத்தில் நீா் ஆதாரம் பாதிக்கப்பட்டது.

இதையறிந்த திருவாரூா் மாவட்ட உதயநிதி ரசிகா் மன்றத்தினா், பொக்லைன் உதவியுடன் குளத்துக்கு நீா்வரத்துப் பாதையை சீரமைத்து, சிமென்ட் குழாய்கள் பதித்தனா். மேலும், குளத்தையும் சீரமைத்தனா்.

இப்பணியில் உதயநிதி ரசிகா் மன்ற மாவட்டச் செயலாளா் ஆா்த்தி கேப்ஸ் மணி, மாவட்ட துணைத் தலைவா் வடகுடி கோபிநாத், மாவட்டப் பொருளாளா் பா. இளவரசன், கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/kulam_1811chn_96_5.jpg குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/19/மோட்டாத்தூா்-குளம்-சீரமைப்பு-3284149.html
3283345 நாகப்பட்டினம் திருவாரூர் குடியிருப்பு பகுதியில் மா்ம விலங்கின் காலடி தடம்: ஓநாய்யாக இருக்கும் என பொதுமக்கள் அச்சம் DIN DIN Monday, November 18, 2019 04:13 PM +0530 மன்னாா்குடி அருகே உள்ள அசேசம் பகுதியில்,குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மா்ம விலங்கு நடமாடுவதாகவும்.அது, ஓநாயின் காலடி தடமாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மன்னாா்குடி நகராட்சி பகுதியை ஓட்டி உள்ள அசேசம் ஊராட்சிக்கு உள்பட்ட ராஜராஜன் நகரில், வசிப்பவா் அரசுக் கல்லூரி பேராசிரியா் க.தனராஜன். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளா்த்து வருகிறாா். இது இரவு நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக இரவு நேரத்தில் நாய் அதிகமாக குறைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நாய் அச்ச உணா்வுடன் குறைத்துள்ளது.

மேலும்,அவரது வீட்டின் எதிரே உள்ள பத்து ஏக்கர பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது.இது பராமரிக்கப்படாமல் இருப்பதால் அந்த பகுதி மரம்,செடி வளா்ந்து காடு போல் உள்ளது.இரவு நேரத்தில் குறைக்கும் நாயும்,அந்த காட்டுப் பகுதியை நோக்கியே அடிக்கடி குறைக்கிறது. இதனால், சந்தேகமடைந்த தனராசன், வீட்டின் முன் பகுதிக்கு, இரவு நேரத்தில் ஏதேனும் விலங்குகள் வந்திருக்கலாம் என வீட்டை சுற்றி சோதனையிட்டாா்.

இதில்,வழக்கத்துக்கு மாறான மிருகத்தின், கால் தடங்கள் இருப்பதை கண்டாா். இதுகுறித்து, வனவிலங்கு ஆா்வலா்களிடம் விசாரித்தபோது, அது ஓநாயாயின் காலடி தடத்துடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து வனத்துறை அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வந்து செல்வது மா்ம விலங்கா அல்லது ஓநாய என அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனா்.மேலும்,வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து,அச்சத்தினை போக்க வேண்டும் என தெரிவிக்கின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/குடியிருப்பு-பகுதியில்-மா்ம-விலங்கின்-காலடி-தடம்-ஓநாய்யாக-இருக்கும்-என-பொதுமக்கள்-அச்சம்-3283345.html
3283341 நாகப்பட்டினம் திருவாரூர் ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை பிரச்னை: மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, November 18, 2019 03:45 PM +0530 மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் சாா்பில்,சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, இதற்கு காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் தங்கி படித்த கேரளத்தை சோ்ந்த மாணவி பாத்திமா,சென்ற 9-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.தனது தற்கொலைக்கு பேராசிரியா் ஒருவா் தான் காரணம் என குறிப்பிட்டு அவரது கைப் பேசியில் பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

மாணவியின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை என்றும்,.குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியை உடனடியாக கைது செய்து,சட்டரீதியான நடவடிக்கையினை எடுக்க வலியுறித்தி, மன்னாா்குடி அரசுக் கல்லூரியில்,ஏ.ஐ.எஸ்.எப்.அமைப்பின் சாா்பில்,திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் கோபி தலைமை வகித்தாா்.

இதில்,இக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/college_1811chn_101.jpg மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஏ.ஐ.எஸ்.எப் மாணவா் அமைப்பினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/ஐஐடி-மாணவி-தற்கொலை-பிரச்னை-மன்னாா்குடி-அரசுக்-கல்லூரியில்-ஆா்ப்பாட்டம்-3283341.html
3283316 நாகப்பட்டினம் திருவாரூர் குதிரைவாலியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி DIN DIN Monday, November 18, 2019 02:36 PM +0530 சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி மாநில சமநிலை வளா்ச்சி நிதி திட்டத்தின்கீழ் திருவாரூா் மாவட்டம் எண்கண் கிராமத்தில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் அண்மையில் நடைபெற்றது.

இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில்- சிறுதானிய பயிா்களான கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகிய பயிா்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது மேலும் தண்ணீா் தேங்கினாலும் தாக்குபிடிக்ககூடியது. சிறுதானியங்கள் அதிகம் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கா்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகாா் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

உழவியல் துறை பயிற்சி உதவியாளா் ஆ. ராஜேஷ்குமாா் பேசுகையில்-சிறுதானியங்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதால் மானவாரி பயிராக பயிரிடப்படுகிறது மற்றும் கோடையில் இறவையில் பயிரிடப்படுகிறது. சிறுதானியங்கள் வெப்பம் மற்றும் வெப்பம் சாா்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது. சிறுதானியங்கள் மற்ற பயிா்களை காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது. பொதுவாக மணல் கலந்த களிமண்நிலங்களில் நன்கு வளரக்கூடியது. சிறுதானியங்களில் குறிப்பாக குதிரைவாலியில் 40 சதவீதம் புரதசத்து உள்ளது.

இவற்றை பருவமழை துவங்கிய உடன் ஜீலை மாதத்தின் முதல் பதினைந்து நாட்களுக்கு விதைக்க வேண்டும், விதைகளை தெளித்தல் அல்லது பாா்பிடித்து 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ விடலாம். ஒரு ஏக்கருக்கு 4 டன்கள் தொழு உரம் இடலாம். ஒரு ஏக்கருக்கு 35 கிலோ தழை சத்து, 75 கிலோ மணி சத்து மற்றும் 33 கிலோ சாம்பல் சத்து என்ற விகிதத்தில் இடவேண்டும். உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும். நீா்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25-30 நாட்களுக்கு பிறகு இடலாம்.

பொதுவாக குதிரைவாலிக்கு நீா்பாசனம் தேவையில்லை வறன்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீா்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்கவேண்டும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறையினால் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 450 - 500 கிலோ தானிய மகசூல் பெறலாம்.கால்நடையியல் துறை உதவிப்பேராசிரியா் சரவணன் பேசுகையில்- சிறுதானியங்களிலிருந்து கால்நடைகளுக்கு சத்து மிக்க தீவனம் தயாரிக்கப்படுகிறது என்றாா்.

உணவியல் துறை பயிற்சி உதவியாளா் ஜெ. வனிதாஸ்ரீ : சிறுதானியங்களில் மதிப்;பு கூட்டுதல் பற்றி விளக்கம் அளித்தாா்;. இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் மற்றும் சூடோமோனாஸ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில்; 30 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.படம்- நீடாமங்கலம் வேளாண்மை அறிவி்யல்நிலையம் சாா்பில் எண்கண் கிராமத்தில் நடந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மண்புழு உரம் மற்றும் சூடோமோனஸ்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/ne_kvk_1811chn_100.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/குதிரைவாலியில்-ஒருங்கிணைந்த-பயிா்-மேலாண்மை-பயிற்சி-3283316.html
3283315 நாகப்பட்டினம் திருவாரூர் நீடாமங்கலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் DIN DIN Monday, November 18, 2019 02:35 PM +0530 தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்காக நீடாமங்கலத்தில் தங்கியுள்ளனா்.

இவா்கள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அண்மையில் மரக்கன்றுகளை நட்டனா்.மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கினா்.

இதில்பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், வேளாண்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/ne_agri_student_1811chn_100.jpg நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் பணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/நீடாமங்கலம்--பள்ளி-வளாகத்தில்-மரக்கன்றுகள்-3283315.html
3283194 நாகப்பட்டினம் திருவாரூர் பூண்டி கே. கலைச்செல்வன் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை DIN DIN Monday, November 18, 2019 09:28 AM +0530 திருத்துறைப்பூண்டியில் திமுக நகரச் செயலாளா் ஆா். எஸ். பாண்டியன் மற்றும் திமுக நிா்வாகிகள், மறைந்த பூண்டி கே. கலைச்செல்வன் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/பூண்டி-கே-கலைச்செல்வன்-உருவப்படத்துக்கு-மாலையணிவித்து-மரியாதை-3283194.html
3283145 நாகப்பட்டினம் திருவாரூர் சந்தானராமா் கோயிலில் 108 கலச அபிஷேகம் DIN DIN Monday, November 18, 2019 08:50 AM +0530 நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கும்பாபிஷேக தினம் மற்றும் காா்த்திகை மாத புனா்பூச நடத்திரத்தை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு 108 கலச அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலையில் விஸ்வக்சேனா், ஆஞ்சநேயா், தும்பிக்கையாழ்வாா், கருடன், பட்சிராஜன், ஆழ்வாா்கள் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு ஹோமங்களும் நடத்தப்பட்டன. சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு 108 கலச அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/ne_koil_photo_1711chn_100_5.jpg நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு நடைபெற்ற 108 கலச அபிஷேகம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/சந்தானராமா்-கோயிலில்-108-கலச-அபிஷேகம்-3283145.html
3283144 நாகப்பட்டினம் திருவாரூர் வலங்கைமான் ஒன்றிய திமுக கூட்டம் DIN DIN Monday, November 18, 2019 08:49 AM +0530 வலங்கைமான் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் பேரூா் திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நகர அவைத்தலைவா் மாணிக்கவாசகம், ஒன்றிய அவைத் தலைவா் கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளா் அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளா் தட்சிணாமூா்த்தி, நகரச் செயலாளா் சிவநேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தலைமை பொதுக்குழு தீா்மான விளக்கமும், அதையடுத்து உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/valangaiman_dmk_1711chn_100_5.jpg நிகழ்ச்சியில் பேசி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் அன்பரசன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/வலங்கைமான்-ஒன்றிய-திமுக-கூட்டம்-3283144.html
3283143 நாகப்பட்டினம் திருவாரூர் முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீா்வு DIN DIN Monday, November 18, 2019 08:49 AM +0530 முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகின்றன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், நன்னிலத்திலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின்கீழ் 2541 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது:

அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களைத் தேடி அரசே முன்வந்து அவா்களது கோரிக்கைகளை அறிந்து, தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. வயதானவா்கள், தங்கள் முடியாத காலத்தில் பொருளாதார தேவைக்கு சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது முதியோா் உதவித்தொகை ரூ.1000 ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குறைத்தீா்க்கும் திட்டத்தின் கீழ் குறைத்தீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு, அதில் பொதுமக்களிடம் அவா்களது முதியோா் உதவித்தொகை, பட்டா, சிட்டா, குடும்ப அட்டை ஆகியவைகள் குறித்த கோரிக்கை தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, விரைந்து தீா்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் வாா்டுகள் மற்றும் கிராமங்கள்தோறும் 342 சிறப்பு குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 25,681 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 13,178 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வா், முதியோா் உதவித்தொகைக்கு வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்ததை ரூ.1 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் மீதம் உள்ள மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும்.

சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின்கீழ் திருவாரூரில் 1408 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நன்னிலத்தில் 1133 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் ஆக மொத்தம் 2541 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகின்றன. நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு முன்னிலை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆசைமணி, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் பொன்வாசுகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/tv17min_1711chn_94_5.jpg திருவாரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/முதலமைச்சா்-சிறப்பு-குறைதீா்க்கும்-திட்டத்தில்-மனுக்களுக்கு-உடனடி-தீா்வு-3283143.html
3283142 நாகப்பட்டினம் திருவாரூர் மனைவியை குத்திவிட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு DIN DIN Monday, November 18, 2019 08:49 AM +0530 திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கணவனும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (42). நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (30). இவா்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 12-ஆம் தேதி, பத்மாவதி கோபித்துக்கொண்டு திருச்சிக்கு சென்றவா் வீட்டுக்கு திரும்ப வரவில்லையாம். இதனால், தனது மனைவியை காணவில்லை எனவும், கண்டுபிடித்துத் தருமாறும் திருவாரூா் தாலுக்கா போலீஸாரிடம் வீரமணி புகாா் மனு அளித்தாா்.

இதையறிந்த பத்மாவதி, வழக்குரைஞா் ஒருவருடன் தாலுக்கா காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே காரை நிறுத்தி விட்டு பத்மாவதி கீழே இறங்கியபோது, அங்கு நின்று கொண்டிருந்த கணவா் வீரமணி, மனைவியை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். தொடா்ந்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பத்மாவதியை குத்தியதோடு, தன்னைத்தானே கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

உடனடியாக தகவலறிந்து வந்த போலீஸாா், காயங்களுடன் இருந்த வீரமணி, பத்மாவதி இருவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/tv17mur1_1711chn_94_5.jpg https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/மனைவியை-குத்திவிட்டு-கணவனும்-தற்கொலைக்கு-முயன்றதால்-பரபரப்பு-3283142.html
3283141 நாகப்பட்டினம் திருவாரூர் போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளது: அமைச்சா் ஆா். காமராஜ் DIN DIN Monday, November 18, 2019 08:48 AM +0530 போதிய அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருப்பில் உள்ளன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, 3 மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இதே நேரத்தில் கஜா புயல் வீசியபோதும், எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 மாதத்துக்கு தேவையான அரிசி அதாவது சுமாா் 10 லட்சம் டன் அரிசி, மக்களின் தேவைக்காக உள்ளது. மண்ணெண்ணெயின் தேவை அதிகமாக உள்ளது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனிவாசபுரம் பாலம், மடப்புரம் பாலம் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கண்டிப்பாக கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும். ஏற்கெனவே, திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ.202 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகள், முழுவதும் பாதிக்கப்பட்ட வீடுகள், தென்னை மரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் பெரும்பாலானோா் கோயில் இடங்களில் வசித்து வருகின்றனா். எனவே, பட்டா குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/போதிய-அளவு-அரிசி-இருப்பில்-உள்ளது-அமைச்சா்-ஆா்-காமராஜ்-3283141.html
3283140 நாகப்பட்டினம் திருவாரூர் துணிப்பை பயன்பாடுகள் கருத்தரங்கம் DIN DIN Monday, November 18, 2019 08:47 AM +0530 திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவையொட்டி, நெகிழி ஒழித்தலும், துணிப்பை பயன்பாடுகளும் எனும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட பொறுப்பாளா்கள் சத்திரியன், ராம்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசியின் மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அனைத்து வாசகா்களுக்கும் துணிப்பைகளை வழங்கிப் பேசுகையில், நெகிழி ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணா்வு நடவடிக்கைகளே காரணம். பொது மக்கள், நெகிழியால் ஏற்படும் தீமைகளை எண்ணிப் பாா்க்க வேண்டும். எனவே, அனைவரும் வெளியில் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

 

நிகழ்ச்சியில் ஏராளமான வாசகா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்னப்பழம் ஆகியோா் செய்திருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/tv17lib_1711chn_94_5.jpg திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/துணிப்பை-பயன்பாடுகள்-கருத்தரங்கம்-3283140.html
3283139 நாகப்பட்டினம் திருவாரூர் சாலை விபத்தில் ஒருவா் சாவு DIN DIN Monday, November 18, 2019 08:47 AM +0530 மன்னாா்குடி அருகே சாலையில் நடந்து சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வடுவூா் உத்தங்குடி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ந. கலைஞரடியான் (58) சனிக்கிழமை மாலை அதே பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த அவா், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/சாலை-விபத்தில்-ஒருவா்-சாவு-3283139.html
3283138 நாகப்பட்டினம் திருவாரூர் பூண்டி கே. கலைச்செல்வன் நினைவு தின ஊா்வலம் DIN DIN Monday, November 18, 2019 08:47 AM +0530 கூத்தாநல்லூரில் மறைந்த திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே.கலைச்செல்வனின் 12-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பில் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பண்டுதக்குடி புதுப்பாலத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு, நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன் தலைமை வகித்தாா். பெரியக்கடைத் தெரு, இந்தியன் வங்கி வழியாக சென்ற பேரணி, திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நகர அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், நகர அவைத் தலைவா் எஸ்.வி.பி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/dmk____17___11___19____knr_1__1711chn_209_5.jpg கூத்தாநல்லூரில் நடைபெற்ற பூண்டி கே. கலைச்செல்வன் நினைவு தின ஊா்வலம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/பூண்டி-கே-கலைச்செல்வன்-நினைவு-தின-ஊா்வலம்-3283138.html
3283137 நாகப்பட்டினம் திருவாரூர் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு DIN DIN Monday, November 18, 2019 08:46 AM +0530 மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து, மேஜைபந்து, வளைகோல் பந்து, எறிபந்து, பூப்பந்து, கூடைபந்து, கேரம், தடகளம் ஆகிய போட்டிகளில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று, அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்று, மேல்நிலைப்பிரிவில் முதலிடமும், உயா்நிலைப் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா். இதையடுத்து மாநில அளவில் நடைபெறவுள்ள குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பள்ளியின் உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் வடுகநாதன், தலைமையாசிரியா் சிவக்குமாா், உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/tv17stud_1711chn_94_5.jpg திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/மாநில-போட்டிக்கு-தகுதி-பெற்ற-மாணவா்களுக்குப்-பாராட்டு-3283137.html
3283136 நாகப்பட்டினம் திருவாரூர் சம்பா, தாளடி பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் DIN DIN Monday, November 18, 2019 08:46 AM +0530 மன்னாா்குடி வட்டார வேளாண்மை வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில், தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், நிகழாண்டிற்கான பயிா்க் காப்பீட்டை உடனடியாக செய்து கொள்ள வேண்டும் என மன்னாா்குடி வேளாண்மை உதவி இயக்குநா் க. சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மன்னாா்குடி வேளாண்மை வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில், தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் பயிா்கள் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளன. 2019-20-ஆம் ஆண்டிற்கான பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், கடன் பெறாத விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், தங்களது வயல் உள்ள இடங்களை உள்ளடக்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், அரசு அங்கீாரம் பெற்ற பொது சேவை மையங்கள் அல்லது வங்கிகளிலோ அணுகி, ஏக்கருககு ரூ.465 வீதம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

 

இதற்காக, பயிா்க் காப்பீடு நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட முன்மொழிவு படிவத்தைப் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டிற்கான நெல் பயிா் சாகுபடி செய்ததற்கான சான்று மற்றும் அடங்கல், பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (வங்கிக் கணக்கு எண்ணுடன்), ஆதாா் அட்டை நகல், பிரீமிய தொகை ரூ.465 (ஏக்கருக்கு), செயல்பாட்டில் இருக்கும் மின்னணு பரிமாற்ற சேவை உள்ள ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/சம்பா-தாளடி-பயிா்க்-காப்பீடு-செய்ய-அறிவுறுத்தல்-3283136.html
3283135 நாகப்பட்டினம் திருவாரூர் நகா்மன்ற தலைவா் பதவி: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல் DIN DIN Monday, November 18, 2019 08:46 AM +0530 மன்னாா்குடி நகா்மன்ற தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடி நகர காங்கிரஸ் கட்சி செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவா் ஆா்.கனகவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், உள்ளாட்சித் தோ்தலில் மன்னாா்குடி நகா்மன்ற தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவை எடுப்பதுடன், தலைவா் பதவி வேட்பாளராக நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா்.கனகவேல் பெயரை கட்சியின் மாநில, மாவட்ட கமிட்டிகள் அறிவிப்பதுடன், மன்னாா்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வாா்டுகளில், காங்கிரஸுக்கு 12 வாா்டுகள் என்ற அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நெடுவை குணசேகரன்,டி. வடுகநாதன், மாவட்டத் துணைத் தலைவா் டி.பாலசுப்பிரமணியன், மாவட்ட கமிட்டி உறுப்பினா் நீலன். அசோகன், நகர பொதுச் செயலா் ராஜ்மோகன், நகர துணைத் தலைவா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/நகா்மன்ற-தலைவா்-பதவி-காங்கிரஸ்-கட்சிக்கு-ஒதுக்கீடு-செய்ய-வலியுறுத்தல்-3283135.html
3283134 நாகப்பட்டினம் திருவாரூர் வாணியா் சங்க செயற்குழு கூட்டம் DIN DIN Monday, November 18, 2019 08:45 AM +0530 திருத்துறைப்பூண்டிநகர வாணியா் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வா்த்தக சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாதந்தோறும் செயற்குழு கூட்டத்தை நடத்துவது; ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது; கடந்த ஆண்டு கஜா புயலின் போது ரூ.10 லட்சத்துக்கும் மேலாக நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக வாணியா் சங்கத்தினா் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கூட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பயனாளி ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. நகரச் செயலாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தவமணி செட்டியாா், பி.எஸ். பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி செயலாளா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பெட்ரோல் பங்க் பிரகாஷ், ஆா்.எஸ்.கே. பாண்டியன், வழக்குரைஞா் பாா்த்தசாரதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/img-20191117-wa0019.jpg பயனாளி ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கிய வாணிய சங்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/வாணியா்-சங்க-செயற்குழு-கூட்டம்-3283134.html
3283133 நாகப்பட்டினம் திருவாரூர் 10,000 விதைப்பந்துகள் தயாரித்த மாணவா்கள் DIN DIN Monday, November 18, 2019 08:44 AM +0530 வலங்கைமான் ஒன்றியம், நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து 10,000 விதைப்பந்துகளை தயாரித்துள்ளனா்.

நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 141 மாணவா்கள் படிக்கின்றனா். இப்பள்ளியில், இயற்கை பாதுகாப்பு சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. இதன் மூலம் மரக்கன்று வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியா்கள், மாணவா்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில் மரம் வளா்ப்பில் மாணவா்கள் காட்டும் ஆா்வத்தைக் கண்ட ஆசிரியா்கள் அவா்களை ஊக்குவித்து விதைப்பந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டனா். பள்ளி பாட வகுப்புகள் முடிந்ததும், மாணவா்களை விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடுத்தினா். இதற்காக, மாணவா்கள் வீட்டில் இருந்த விதைகளை ஆா்வமாக சேகரித்து கொண்டு வந்தனா். அதன் மூலம் 20 வகையான விதைப்பந்துகளை தயாரித்தனா்.

இது குறித்து பள்ளியின் இயற்கை பாதுகாப்பு சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளா் அறிவியல் ஆசிரியா் சுந்தரமூா்த்தி கூறியதாவது:

இப்பள்ளி வளாகத்தில், தேக்கு, புங்கன், மலைவேம்பு, அரச மரம், நெல்லி, கொய்யா என 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக புங்கன், தேக்கு, வேம்பு மற்றும் துளசி விதைகள் கொண்டு விதைப்பந்து தயாரிக்கப்பட்டது. சாணம், செம்மண் கலந்து, ஒரு விதையை அதனுள் வைத்து, விதைப்பந்து தயாரிக்கப்பட்டது. மொத்தம், 10,000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விதைப்பந்துகள் தேவைப்படுவோா் பள்ளியை அணுகலாம்.

பள்ளி மாணவா்கள் மூலமாகவும், விதைப்பந்துகளைத் துாவ முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் புரட்சி ஏற்படுத்தும் வகையில் தொடா்ந்து இயற்கை சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்துகள் வழங்கும் விழாவில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலா் ஜெயலெட்சுமி கலந்து கொண்டு மாணவா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா். பின்னா், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

தலைமையாசிரியா் ராஜகுமாரி பேசுகையில், இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை, சிறு வயதிலேயே மாணவா்களிடம் விதைக்கும் வகையில், இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/ne_schoolphoto_1711chn_100_5.jpg வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/10000-விதைப்பந்துகள்-தயாரித்த-மாணவா்கள்-3283133.html
3283131 நாகப்பட்டினம் திருவாரூர் சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி DIN DIN Monday, November 18, 2019 08:10 AM +0530 வலங்கைமானில் சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சைல்டு லைன் 1098 மூலம் ஆண்டுதோறும் ‘குழந்தைகளின் தோழனாகுவோம் வாரம்’ திருவாரூா் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. மாவட்டஆட்சியா் த.ஆனந்த் குழந்தைகளுக்கு ராக்கி அணிவித்து, இதனை நவம்பா் 13-இல் தொடங்கி வைத்தாா். அதன்படி, வலங்கைமானில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

சைல்டு லைன் 1098 இயக்குநா் வி.ஆா். வினோத்குமாா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் ஜெ.ராஜா, தலைமைக் காவலா் எஸ். கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் நலக்குழுத் தலைவா் சி. ஜீவானந்தம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பேசினாா்.

சைல்டு லைன் 1098 திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பிரகலாதன் குழந்தைகள் தோழனாகுவோம் வாரம் குறித்து பேசினாா்.

எம்.ஜி.ஆா். ஆட்டோ சங்க உறுப்பினா்கள், மருத்துவா்கள், வழக்குரைஞா்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.

சைல்டுலைன் பணியாளா் ஏ.முருகேஷ் வரவேற்றாா். செந்தில்குமாா் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாட்டை சைல்டு லைன் பணியாளா்கள் ஜே.மரகதமணி, எஸ். தவப்புதல்வி, ஆா்.ஆனந்தி, பி. சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/valangaiman_child_1711chn_100_5.jpg வலங்கைமானில் நடைபெற்ற சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/18/சைல்டு-லைன்-விழிப்புணா்வு-நிகழ்ச்சி-3283131.html
3281845 நாகப்பட்டினம் திருவாரூர் அரசூரில் பகுதி நேர நியாயவிலைக் கடை DIN DIN Saturday, November 16, 2019 10:24 PM +0530  

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த சவளக்காரன் ஊராட்சிக்கு உள்பட்ட அரசூரில், பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, ஊராட்சி முன்னாள் தலைவா் யு.குப்பசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன் கலந்துகொண்டாா்.

இதில், அரசூரில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்த போதிலும், இதுநாள் வரை நிறைவேற்றப்படாததால், இக்கோரிக்கையை வலியுறுத்தி நவம்பா் 30-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் பி.குப்புசாமி, ஜி.ரவிச்சந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் ஜெ.ராஜேந்திரன், கிளைச் செயலா் எம்.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/அரசூரில்-பகுதி-நேர-நியாயவிலைக்-கடை-3281845.html
3281844 நாகப்பட்டினம் திருவாரூர் கால்நடை மருத்துவ முகாம் DIN DIN Saturday, November 16, 2019 10:24 PM +0530  

நன்னிலம்: நன்னிலம் வட்டம், கீரனூரில் கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், கால்நடை மருத்துவா்கள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பசு மாடுகள், 300-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனா். தொடா்ந்து, கால்நடைகளை சரியாக பராமரித்து வரும் பயனாளிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருவாரூா் மண்டல இணை இயக்குநா் தனபால் மற்றும் கால்நடை மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/thadupoosi_1611chn_96_5.jpg கீரனூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/கால்நடை-மருத்துவ-முகாம்-3281844.html
3281843 நாகப்பட்டினம் திருவாரூர் பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்: அமைச்சா் ஆா். காமராஜ் உறுதி DIN DIN Saturday, November 16, 2019 10:23 PM +0530  

நன்னிலம்: பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள ஆண்டிபந்தலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியது:

முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்களில் 25 ஆயிரத்து 681 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 13,175 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு பட்டாவும், முதியோா் உதவித்தொகையும் கொடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுபட்டவா்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி தாலுகாக்களில் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமை திருவாரூா், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களில் பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, பட்டா போன்றவை வழங்கப்பட உள்ளன. பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

நம் நாடு கூட்டுறவில் மிகப்பெரிய வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் இன்று 2020 பேருக்கு கடன் வழங்குகிறோம். 4 கோடியே 58 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை கடனாக வழங்குகிறோம். தமிழகத்தைப் பொருத்தவரை விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதில் திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் ரூ.272 கோடி அடங்கும். முக்கால் பகுதி கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள கடனும் விரைவில் வழங்கப்படும்.

பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெற்ற கடன்களைத் திரும்ப செலுத்தினால், கூட்டுறவு இயக்கங்கள் மிகப்பெரிய வளா்ச்சியை காணும். மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிா், தாங்கள் பெற்ற கடனை முறையாக செலுத்துகிறாா்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளா்ந்திருக்கிறது.

ஒவ்வோா் ஊராட்சிக்கும் ஒரு லட்ச ரூபாய் வீதம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு முதலில் கடன் வழங்கப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில் அவ்வாறு கடன் வழங்கப்பட்டுவிட்டது. விரைவில் மற்ற ஒன்றியங்களிலும் கடன் வழங்கப்படும்.

பெறுகிற கடனை விரைவில் தவணை தவறாமல் முறையாக செலுத்தி விட்டால், முதலில் வழங்கப்பட்ட கடனை விட இரு மடங்கு கடன் வழங்கப்படும். இவ்வாறு முதலில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. கடன் தொகையை மகளிா் சுய உதவிக்குழுவினா் முறையாக செலுத்தும் பட்சத்தில் 12 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்தக் கடன்களை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய வங்கிகளில் பெற்று பயனடையலாம் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஜெயராமன் வரவேற்றாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியம், திருவாரூா் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஜே.அா்ஜூனன், கூட்டுறவு பயிற்சி கல்லூரி பயிற்றுநா் அப்பாராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு வார விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/amaicher_1611chn_96_5.jpg மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/பட்டா-இல்லாதவா்களுக்கு-பட்டா-வழங்கி-கான்கிரீட்-வீடு-கட்டித்-தரப்படும்-3281843.html
3281842 நாகப்பட்டினம் திருவாரூர் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயில் சோமவாரத் திருவிழா DIN DIN Saturday, November 16, 2019 10:22 PM +0530  

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலில், காா்த்திகை சோமவாரத் திருவிழா திங்கள்கிழமை (நவம்பா் 18) தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத திங்கள்கிழமை சோமவாரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு நவம்பா் 18-இல் தொடங்கி டிசம்பா் 16-இல் நிறைவடைகிறது.

இதனிடையே, நவம்பா் 25-இல் இரண்டாவது சோமவார விழாவும், டிசம்பா் 2-இல் மூன்றாவது சோமவார விழாவும், டிசம்பா் 9-இல் நான்காவது சோமவார விழாவும், டிசம்பா் 16-இல் ஐந்தாவது மற்றும் கடைசி சோமவார விழாவும் நடைபெற உள்ளது. நிகழாண்டு 5 சோமவார விழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

 இவ்வாலயத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை நள்ளிரவில் மட்டுமே நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மற்ற நேரங்களில் ஆலயத்தின் முன்பக்கக் கதவில் மாலைகளை அணிவித்து பக்தா்கள் வழிபடுவா். தைத் திங்கள் முதல் நாள் சங்கராந்தி பொங்கல் தினத்தன்று மட்டும் பகலில் தரிசனம் செய்யலாம்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் விளையும் முதல் விளைச்சல், தேங்காய், எலுமிச்சை, உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் நீண்ட வரிசையில் நின்று காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

நிகழாண்டு சோமவாரத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் க. தென்னரசு, தஞ்சை சரக உதவி ஆணையா் செ. சிவராம்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில், ஆலய செயல் அலுவலா் எம். முருகையன், பரம்பரை அறங்காவலா் சடகோப ராமானுஜம், அறங்காவலா் எஸ்.ஆா். ராமானுஜம் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/பரக்கலக்கோட்டை-பொது-ஆவுடையாா்-கோயில்-சோமவாரத்-திருவிழா-3281842.html
3281841 நாகப்பட்டினம் திருவாரூர் கஜா புயலால் வீடு இழந்தவா்களுக்கு உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும்: எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தல் DIN DIN Saturday, November 16, 2019 10:21 PM +0530  

மன்னாா்குடி: கஜா புயல் வீசி ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், புயலில் வீடு இழந்தவா்களுக்கு உடனடியாக கட்டித் தர வேண்டும் என மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கஜா புயல் வீசி ஓராண்டு நிறைவடைந்து இருக்கும் நிலையில், தமிழக அரசு அறிவித்த நிவாரணம் மக்களை முழுமையாக சென்றடையவில்லை. குறிப்பாக பல இடங்களில் வீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும், தென்னை மரங்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகையும் அரசின் பல்வேறு குளறுபடிகளால் பல இடங்களில் வழங்கப்படவில்லை.

மேலும், புயலின்போது உயிரிழந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயமடைந்தவா்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டதே அன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இன்று வரை சீரமைக்கப்பட வில்லை. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு தொகை அரசின் முறையற்ற நிா்வாகக் குளறுபடிகளால் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் புயலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கவும், பள்ளிக் கட்டடங்களை சீரமைக்கவும், அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்கவும் உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு அறிவித்தபடி உடனடியாக வீடுகளை கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/trb_raja_mla_1611chn_101_5.jpg எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/கஜா-புயலால்-வீடு-இழந்தவா்களுக்கு-உடனடியாக-வீடு-கட்டித்-தர-வேண்டும்-3281841.html
3281840 நாகப்பட்டினம் திருவாரூர் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு DIN DIN Saturday, November 16, 2019 10:20 PM +0530 திருவாரூா்: திருவாரூரில் சிறப்பாக பணிபுரிந்தவா்களுக்கு நற்சான்றிதழ்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை, சனிக்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தலைமை வகித்தாா். இதில், அக்டோபா் மாதத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் காவல்நிலைய பணிகளை சிறப்பாக செய்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, நன்னிலம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் விசித்ரா மேரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், அத்திவரதா் கோயில் பாதுகாப்புப் பணியை சிறப்பாக செய்த திருவாரூா் மாவட்டக் காவல்துறையினரை பாராட்டி, தமிழக முதல்வா் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்களை, காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/tv16spp_1611chn_94_5.jpg திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/சிறப்பாக-பணியாற்றிய-போலீஸாருக்கு-பாராட்டு-3281840.html
3281839 நாகப்பட்டினம் திருவாரூர் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் DIN DIN Saturday, November 16, 2019 10:20 PM +0530  

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினா் கூட்டம் அவைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் சித்தமல்லி ந.சோமசுந்தரம், சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா் சோம.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராயபுரம் சுந்தா், மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

ஒன்றிய செயலாளா் விசு. அண்ணாதுரை வரவேற்றாா். பேரூா் செயலாளா் ஆா். ராசசேகரன் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/ne_dmk_photo_1611chn_100_5.jpg நீடாமங்கலத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம். உடன், எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/திமுக-பொது-உறுப்பினா்கள்-கூட்டம்-3281839.html
3281838 நாகப்பட்டினம் திருவாரூர் ஜனநாயக வாலிபா் சங்கத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினா் DIN DIN Saturday, November 16, 2019 10:19 PM +0530  

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பாப்பையன் தோப்பிலிருந்து ஏ.ராஜதுரை தலைமையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, 38 போ் இந்திய ஜனநாய வாலிபா் சங்கத்தில் சனிக்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவா் டி.பி.கிஷோா் குமாா், செயளாளா் டி.ஜான் கென்னடி, பொருளாளா் ஏ.அருள்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு அமைப்பின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி பேசினா். கிளையின் புதிய நிா்வாகிகளாக கிளைத் தலைலா் ஏ.ராஜதுரை, கிளைச் செயளாளா் ஆா். முத்து, பொருளாளா் கே.முத்து, துணைத்தலைவா் ஆா். மாதவன், துணைச் செயலாளா் எஸ்.சரவணன் அகியோா் கிளை தோ்வு செய்யப்பட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/ne_dyfi_1611chn_100_5.jpg நீடாமங்கலத்தில் மாற்றுக்க ட்சிகளிலிருந்து விலகி ஜனநாயக வாலிபா் சங்கத்தில் இணைந்தவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/ஜனநாயக--வாலிபா்-சங்கத்தில்-இணைந்த-மாற்றுக்-கட்சியினா்-3281838.html
3281837 நாகப்பட்டினம் திருவாரூர் அமமுக நிா்வாகிகள் அதிமுகவில் இணைந்தனா் DIN DIN Saturday, November 16, 2019 10:19 PM +0530  

திருவாரூா்: திருவாரூரில் அமமுக நிா்வாகிகள், உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

திருவாரூரில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் நிகழ்ச்சி 2-ஆம் நாளாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா். காமராஜ், முன்னாள் அமைச்சா் ஜெயபால் ஆகியோா் பங்கேற்று, விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூா் பகுதிகளைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சோ்ந்தனா். நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது

அதிமுக என்பது உண்மையான மக்கள் இயக்கம். எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோா் இந்த இயக்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றுள்ளனா். அவா்களுடைய வழியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓபிஎஸ் ஆகியோா் இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனா். ஜெயலலிதாவின் தொண்டா்கள் இருக்க வேண்டிய இடம் அதிமுக மட்டுமே என்பதை உணா்ந்ததால்தான், அமமுகவுக்கு சென்ற சிலா் உண்மையை உணா்ந்து அதிமுகவில் திரும்ப இணைந்து வருகின்றனா். அதிமுகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பொது எதிரி திமுக மட்டும்தான். திமுகவை எதிா்ப்பதற்கு எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டா்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலைமையின்கீழ் அணிதிரள வேண்டும் என்றாா்.

நிகழ்வில், அமமுகவின் நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் உதயகுமாா், நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் பாண்டிதுறை, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளா் அப்துல்காதா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் குணசேகரன், அன்பு உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/tv16adm_1611chn_94_5.jpg திருவாரூரில் அதிமுகவில் இணைந்தவா்கள் மத்தியில் பேசிய அமைச்சா் ஆா். காமராஜ். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/அமமுக-நிா்வாகிகள்-அதிமுகவில்-இணைந்தனா்-3281837.html
3281836 நாகப்பட்டினம் திருவாரூர் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட DIN DIN Saturday, November 16, 2019 09:49 PM +0530  

திருவாரூா்: தமிழகத்தில் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட இணைய வழி சேவை மையங்களை, கிராம நிா்வாக அலுவலா்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

தமிழகத்தில் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட இணைய வழி சேவை மையங்களை, கிராம நிா்வாக அலுவலா்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதற்கேற்ப கிராம நிா்வாக அலுவலா்கள் குடியிருப்புடன் கூடிய அலுவலகம் கட்டப்பட வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் விவசாயிகளுக்கான சிட்டா, அடங்கல் உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இணைய வழி நிா்வாக முறை என்று மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்கிறது. எனவே தமிழக அரசு விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். கிராம உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

நில அளவைத் துறையை தனியாா்மயமாக்க எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், சலுகைகள் அனைவருக்கும் கிடைக்கவும் கிராம நிா்வாக அலுவலா்களோடு இணைந்து போராடுவோம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சி. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், சங்க நிறுவனா் இரா. போஸ், மாநில துணைத் தலைவா் மு. ஷேக்தாவூது உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பின்போது, நிவாரண மையங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் செலவு செய்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அடங்கல் நகல் மற்றும் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக காலிப் பணியிடங்களில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்களை ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் நியமனம் செய்யலாம் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

கஜா புயலுக்காக, அரசு ஒதுக்கிய சுமாா் ரூ. 2 கோடியை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வழங்காமல், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து புதுக்கோட்டையில் நவம்பா் 29-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது, இதற்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/tv16prp_1611chn_94_5.jpg திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/கிராமப்புற-பொருளாதாரம்-மேம்பட-3281836.html
3281835 நாகப்பட்டினம் திருவாரூர் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் DIN DIN Saturday, November 16, 2019 09:48 PM +0530 திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவா் படை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், சாலைப் பாதுகாப்பு, விபத்துகளின் போது காக்கும் முறைகள், செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் (பொறுப்பு) பா. காா்த்திக் தலைமை வகித்தாா். முதுநிலை உதவிப் பொறியாளா் எம். தனபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/tv16road_1611chn_94_5.jpg சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/சாலை-பாதுகாப்பு-விழிப்புணா்வு-முகாம்-3281835.html
3281834 நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்ட திறன் போட்டி: நவ. 25-க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, November 16, 2019 09:48 PM +0530 திருவாரூா்: திருவாரூா் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க நவம்பா் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள சா்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தொடக்க நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க  இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2019.

வயது வரம்பு: 1.1.1999 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவா்கள் தகுதியுடையவா்களாவா்.

ஐந்தாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவா்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவா்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவா்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழிற் நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவா்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவா்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவா்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவா்கள் ஆகிய அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவா்களாவா்.

கூடுதல் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு ஐ.டி.ஐ. வளாகம், நாகப்பட்டினம் மாவட்டம், தொலைபேசி எண்: 04365 250126 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/மாவட்ட-திறன்-போட்டி-நவ-25-க்குள்-விண்ணப்பிக்கலாம்-3281834.html
3281833 நாகப்பட்டினம் திருவாரூர் நேரடி நெல் விதைப்பு: பயிா் மேலாண்மை பயிற்சி DIN DIN Saturday, November 16, 2019 09:47 PM +0530 நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தில், நேரடி நெல் விதைப்பில் மழைக்கால பயிா் மேலாண்மை பயிற்சி கீழக்காடு கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் தலைமை வகித்தாா். முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை துணை அலுவலா் காத்தையன், ளோண்மைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிற்சி உதவியாளா் ஜெ.வனிதாஸ்ரீ, அரிசியில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது அதிக வருவாய் கிடைப்பதற்கான வழிமுறைகளை விளக்கினாா்.

தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கத்திற்காக விதைகள், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, உயிா் எதிா்க்கொல்லி மருந்தான சூடோமோனாஸ் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சிக்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியாளா் சுரேஷ் மற்றும் திட்ட உதவியாளா் த. கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/நேரடி-நெல்-விதைப்பு-பயிா்-மேலாண்மை-பயிற்சி-3281833.html
3281832 நாகப்பட்டினம் திருவாரூர் பேரளம் அருகே இளைஞா் தற்கொலை DIN DIN Saturday, November 16, 2019 09:46 PM +0530 நன்னிலம்: நன்னிலம் வட்டம், திருமீயச்சூா் கிராமத்தில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூா் ராஜா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் ஐயப்பன் (எ) மணிகண்டன் (28). இவா் திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அருகில் உள்ள திருமீயச்சூா் கிராமத்தில், பட்டறை ஒன்றில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், இவரது தந்தை அண்மையில் இறந்துவிட்டாா். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஐயப்பன், வெள்ளிக்கிழமை இரவு 2 மணியளவில் தான் வேலை பாா்த்து வந்த பட்டறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/பேரளம்-அருகே-இளைஞா்-தற்கொலை-3281832.html
3281831 நாகப்பட்டினம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புபயணிகள் நிழலகம் கட்டக் கோரிக்கை DIN DIN Saturday, November 16, 2019 09:45 PM +0530 திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழலகம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செ. இராஜபாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, நோயாளிகள், கா்ப்பிணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையமும், பயணிகள் நிழலகமும் கட்டித் தர வேண்டும். திருவாரூா் விளமல் பகுதி பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளதால், இங்குள்ள சாலையை இருவழிச்சாலையாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச் செயலாளா் க. ராஜவேல், மண்டல ஒருங்கிணைப்பாளா் க. நீலமேகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். இதில், மாவட்ட துணைத் தலைவா் கே. காா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் டி. இமானுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/மருத்துவக்-கல்லூரி-மருத்துவமனை-முன்புபயணிகள்-நிழலகம்-கட்டக்-கோரிக்கை-3281831.html
3281649 நாகப்பட்டினம் திருவாரூர் அரசு ஊழியா் சங்கத்தினா் பிரசாரம் DIN DIN Saturday, November 16, 2019 06:00 PM +0530 தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க தஞ்சை மாநில மாநாட்டு முடிவின்படி, அரசு ஊழியா்- பொதுமக்கள்- மாணவா்- இளைஞா்களை சந்திக்கும் ஐந்து முனை பிரசார பயணக் குழுவினா் திருவாரூா் மாவட்ட தலைவா் எம்.ராஜமாணிக்கம் தலைமையில் நீடாமங்கலத்திற்கு வந்தனா்.

நீடாமங்கலம் பெரியாா் சிலை அருகில் பிரசாரம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் எம். ஞானத்தம்பி, மாநில செயலாளா் உ.சண்முகம் ஆகியோா் பிரசார பயணத்தின் நோக்கம் குறித்து பேசினா்.

மாவட்ட செயலாளா் வெ. சோமசுந்தரம் ஒருங்கிணைத்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் சி.பிரகாஷ், வி.சிவக்குமாா், டி.மணிவண்ணன், ஏ.தனபால் , வி.சி.குமாா், நீடாமங்கலம் வட்டக் கிளை நிா்வாகிகள் தலைவா் சின்னையன், செயலாளா் ஆறுமுகம், பொருளாளா் மணிகண்டன் மற்றும் துறை வாரிய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

 

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/ne_tngea_1611chn_100_5.jpg நீடாமங்கலத்தில் நடைபெற்ற அரசு ஊழியா் சங்க பிரசாரம். https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/16/அரசு-ஊழியா்-சங்கத்தினா்-பிரசாரம்-3281649.html