Dinamani - நாகப்பட்டினம் - https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3155379 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: இயற்கை உழவர்கள் அமைப்பு வலியுறுத்தல்  DIN DIN Tuesday, May 21, 2019 12:23 AM +0530
காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதுடன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இயற்கை உழவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் ஞாயிற்றுக்கிழமை முன்னத்தி இயற்கை உழவர்கள் அமைப்பு சார்பில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் காப்பாளர் நெல். ஜெயராமன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
சமூக ஆர்வலர் சோமு.இளங்கோ தலைமையில் 
நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர். அய்யப்பன், முன்னோடி விவசாயிகள் சி. சுப்பிரமணியன், ஆர்.எஸ். பிரகாஷ், சுந்தர. பிரபாகரன் ஆகியோர் 
முன்னிலை வகித்தனர். 
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், கல்வியாளர் டாக்டர் சுர்ஜித்சங்கர், சமூக ஆர்வலர்கள் கே. அலெக்சாண்டர், நாகை தமிழ்அமுதன், முன்னோடி விவசாயிகள் ஜெ. சுந்தரம்மாள், எம். கீதாராணி, ஏ. சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில், நெல் விதைகளை பாதுகாக்க மாட்டுச் சாணம், வைக்கோலைக் கொண்டு உருவாக்கப்பட்ட நெல் கோட்டையை அரங்கில் வைத்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், பாரம்பரிய நெல் காப்பாளர் நெல். ஜெயராமன் ஆகியோருக்கு மரியாதைச் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் பெயரை சூட்ட வேண்டும், திருவாரூரில் நெல். ஜெயராமன் பெயரில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், நம்மாழ்வார் படத்துடன் சிறப்பு தபால்தலையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/21/டெல்டா-பகுதியில்-ஹைட்ரோ-கார்பன்-திட்டத்தை-ரத்து-செய்ய-வேண்டும்-இயற்கை-உழவர்கள்-அமைப்பு-வலியுறுத்தல்-3155379.html
3155198 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மே.26-இல் சீர்காழியில் கலைச் சங்கம விழா DIN DIN Monday, May 20, 2019 09:51 AM +0530 நாகை மாவட்டம், சீர்காழியில் மே 26-ஆம் தேதி பழந்தமிழரின் வீரக் கலைகளான சிலம்பம், கர்லாகட்டை உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகள் கலைச் சங்கம விழாவாக நடைபெறவுள்ளது. 
வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில், சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள விழாவில் .  திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஓசூர், சென்னை, புதுச்சேரி, நெய்வேலி, பேங்களுர் , திருக்கோவிலூர், மதுரை, ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் ஆசான்கள் மற்றும் மாணவர்கள் 300 பேர் வீரக் கலையை வளர்க்கும் வகையில் 10 விதமான ஆயுதங்களை கொண்டு சுமார் 8.30 மணி நேரம் தொடர்ந்து வீரக்கலைகளை நிகழ்ந்த்தவுள்ளார்கள். இங்கு, நிகழ்த்தப்படும் சாதனைகள் ஜேட்லி புக் ஆஃப் ரிக்கார்டு சாதனைப் புத்தகத்தில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/மே26-இல்-சீர்காழியில்-கலைச்-சங்கம-விழா-3155198.html
3155197 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆற்றைக் கடக்க முயன்ற முதியவர் நீரில் மூழ்கி சாவு DIN DIN Monday, May 20, 2019 09:51 AM +0530 கொள்ளிடம் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
கொள்ளிடம் அருகேயுள்ள காட்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர், சனிக்கிழமை இரவு பழையார் கிராமம் கோட்டையா கோயிலில் நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நள்ளிரவு தற்காஸ் கிராமம் தோணித்துறையிலிருந்து அக்கறையில் உள்ள காட்டூருக்குச் செல்ல உப்பனாற்றில் இறங்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது, தண்ணீர் ஆழம் உள்ள பகுதிக்குச் சென்றதால், நீச்சல் தெரியாத குணசேகரன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, தற்காஸ் தோணித்துறை அருகே குணசேகரனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை கரை ஒதுங்கியது தெரியவந்தது. 
தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/ஆற்றைக்-கடக்க-முயன்ற-முதியவர்-நீரில்-மூழ்கி-சாவு-3155197.html
3155196 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை-ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை: பாஜக கோரிக்கை  DIN DIN Monday, May 20, 2019 09:51 AM +0530 மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்துக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு வழக்குரைஞரும், பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான கே. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
185 கி.மீ., தூர மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி- காரைக்குடி தண்டவாளப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, முற்றிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் பெற்று, பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது. ரூ.800 கோடி செலவில் அகல ரயில் பாதையாக அமைக்கப்பட்ட மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடம், நாட்டின் தொன்மையான தடங்களில் ஒன்றாகும்.
மத்திய அரசின் ரூ.800 கோடி முதலீட்டுக்கு வருவாய் ஈட்டும் வண்ணம், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை வழியாக ராமேஸ்வரத்துக்கு இரு வழித்தடத்திலும் இரவு நேர விரைவு ரயில் சேவை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். மேலும் திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களையும், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பரமக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் டெல்டா மக்கள் எளிதில் சென்று வரும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு இருவழித்தடத்திலும் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/மயிலாடுதுறை-ராமேஸ்வரம்-விரைவு-ரயில்-சேவை-பாஜக-கோரிக்கை-3155196.html
3155195 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, May 20, 2019 09:50 AM +0530 நாகை மாவட்டம், புதுப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆற்றுப்பாலத்தை சீரமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்கு கிராமத்தில் சக்கிலியன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் கஜா புயலின்போது சேதமடைந்தது. புதுப்பள்ளி மற்றும் விழுந்தமாவடி கிராமமக்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும் இந்த பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்துள்ளது. இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் கிராமமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள்அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். குறுகிய இப்பாலத்தில் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆபத்தான நிலையில் கடந்து சென்று வருகின்றன.
இன்னும் 15 நாளில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பாலத்தின் வழியே ஆபத்தான பயணம் மேற்கொள்ளாத வகையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/பழுதடைந்த-பாலத்தை-சீரமைக்க-வலியுறுத்தல்-3155195.html
3155194 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வாகன ஓட்டிகளின் வேகத்தால் பொதுமக்கள் அச்சம் DIN DIN Monday, May 20, 2019 09:50 AM +0530 திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் நடமாடும் பொதுமக்களிடையே விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. 
கோடை வெயிலுடன் கத்திரி வெயில் வீசிவருவதால் காற்றின் ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சப்பட்டு அனல் காற்றாக வீசி வருவதால் முற்பகல் 11 முதல் மாலை 3 மணி வரை பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளி வரவே அச்சப்படுகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பல்வேறு பணிக்கு செல்வோர் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட , விரைவு பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால், திடீரென சாலையை கடக்க முற்படுவோர் சிறு அளவிலான விபத்துக்களில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், மக்கள் நடமாட்டம்  குறைவாக உள்ளதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலர் அதிவேகத்தில் வாகனத்தை இயங்கி செல்கின்றனர். இதனால், சாலையை கடக்க முயல்வோர் விபத்தில் சிக்கி விடுவோமா எனும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபடும் காவல் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/வாகன-ஓட்டிகளின்-வேகத்தால்-பொதுமக்கள்-அச்சம்-3155194.html
3155193 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாங்காய்களுக்கு உரிய விலை  கிடைக்காததால் விவசாயிகள் வேதனை DIN DIN Monday, May 20, 2019 09:50 AM +0530 மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என நாகை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 
2018-ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயல் சீற்றத்தில் நாகை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன. விவசாயப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியின. கஜா புயல் சீற்றத்தில் தப்பித்த  நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூர், வடக்குப் பொய்கைநல்லூர், விழுந்தமாவடி மற்றும் புதுப்பள்ளி பகுதிகளில் மாமரங்கள் தற்போது காய்த்துள்ளன. இக்கிராமங்களில் மாங்காய் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
இந்நிலையில், விவசாயிகளிடம் மாங்காய் வாங்குவதற்கு வரும் விவசாயிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று தெற்குப் பொய்கைநல்லூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 
இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியது: கஜா புயலில் தப்பித்த மாமரங்களில் காய்த்துள்ள மாங்காய்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. செந்தூரா, பங்கனப்பள்ளி, ருமேனீயா, ஒட்டு ஆகிய  மாங்காய் வகைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 20 க்கும் குறைவாகவே விலை போவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/மாங்காய்களுக்கு-உரிய-விலை-கிடைக்காததால்-விவசாயிகள்-வேதனை-3155193.html
3155192 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம் DIN DIN Monday, May 20, 2019 09:50 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னம்புலம் மழைமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
இக்கோயிலில், வைகாசி வைகாசி விசாகப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, 10-ஆவது நாள் நடைபெறும் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாலை கோயிலை அடைந்தது.  தேரோட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று சுவாமி  தரிசனம் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/மழைமாரியம்மன்-கோயில்-தேரோட்டம்-3155192.html
3155191 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் DIN DIN Monday, May 20, 2019 09:49 AM +0530 நாகை அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து  கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நாகை அருகேயுள்ள புத்தூர் ரயில்வே கேட் அருகே ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, அந்தணப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்வம் நாகை நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரித்தார். இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு உயிரிழந்து கிடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்கவரின் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.  இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/அடையாளம்-தெரியாத-ஆண்-சடலம்-3155191.html
3155190 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாநில அளவிலான கபடிப் போட்டி DIN DIN Monday, May 20, 2019 09:49 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையில் மாநில அளவிலான கபடிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. 
போட்டியில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடிக் குழுவினர் பங்கேற்றனர். இறுதியில், ஆறுகாட்டுத்துறை கபடிக் கழகத்தினர் முதல் பரிசை பெற்றனர். இந்த குழுவினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு, சுழல் கோப்பை அளிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/மாநில-அளவிலான-கபடிப்-போட்டி-3155190.html
3155189 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேதாரண்யம் அருகே ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு DIN DIN Monday, May 20, 2019 09:49 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்ட அம்மன் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கள்ளிமேடு கிராமத்தின் வழியே செல்லும் அடப்பாறு கடலில் இணைகிறது. ஆற்றின் குறுக்கே செல்லும் பிரதான பாலம் பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணியின்போது சேற்றுக்குள் புதையுண்ட நிலையில் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த சிலை சிமென்ட் கலவையால் செய்யப்பட்ட 3 அடி உயரத்தில் இருந்தது. 4 கைகளுடன் காணப்பட்ட இந்த சிலையின் இடது பக்க மேல் கை சேதமடைந்திருந்தது. சிலை தற்போது வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கள்ளிமேடு பகுதியில் சிறப்புப் பெற்ற பத்தரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளதால் அந்த சிலை பத்தரகாளியம்மனாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/வேதாரண்யம்-அருகேஆற்றில்-அம்மன்-சிலை-கண்டெடுப்பு-3155189.html
3155188 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி DIN DIN Monday, May 20, 2019 09:48 AM +0530 சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை மீண்டும் தொடர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்திலிருந்து முதலைமேடு செல்லும் 2 கி.மீ. தூர தார்ச்சாலை குண்டும், குழியுமாகக் காணப்பட்டது. எனவே, நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் ஆச்சாள்புரத்திலிருந்து முதலைமேடு வரை தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 
அதன்படி, முதலில் சாலையில் கருங்கல் ஜல்லி போடப்பட்டது. பின்னர், சாலைப் பணி திடீரென தடைப்பட்டது. இந்நிலையில், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அடுத்தகட்டமாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, ஆச்சாள்புரம் கடைவீதியிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு தார் போடும் பணி நடைபெற்றது. இதனிடையே, தார்ச்சாலை அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் தொடர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/பாதியில்-நிறுத்தப்பட்ட-சாலைப்-பணி-3155188.html
3155187 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கோடையில் தாகம் தணிக்காத குடிநீர்த் தொட்டி DIN DIN Monday, May 20, 2019 09:48 AM +0530 சீர்காழி நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் கோடை காலத்திலும் தாகம் தணிக்க முடியாமல் பயனற்று கிடக்கும் குடிநீர்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை  ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. மேலும், இ-சேவை மையமும் தனி அறையில் இயங்கி வருகிறது.
மேற்கண்ட அலுவலகங்களுக்கு பல்வேறு அலுவல் பணியின் காரணமாகவும், நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு சான்றிதழ்கள் பெருவதற்கும் பதிவு செய்யவும் இ-சேவை மையத்துக்கு பொதுமக்கள் வருகின்றனர். இவ்வாறு எந்நேரமும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் அங்கு சீர்காழி நகராட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1லட்சம் செலவில் சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் திருகுகுழாய் அமைக்கப்பட்டிருந்தது. 
இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நீர்நிரப்ப தொட்டிக்கு கீழ் உள்ள அறையில் மோட்டார் அமைத்து மின்வசதி  செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் பொதுமக்கள் தண்ணீர் குடித்து பயனடைந்தனர். நாளடைவில் இந்த மோட்டார்  பழுது ஏற்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதன் பின்னர் நகராட்சி நிர்வாகம்  சார்பில் மினிபவர் பம்ப் பராமரிப்பு பணி (2018-19) கீழ் மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து மோட்டார் பழுது நீக்கி குடிநீர்த் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், நாளடைவில் மோட்டார் மீண்டும் பழுதாகி கடந்த பல மாதங்களால் குடிநீர்த் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாகி போனது.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், நீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் மற்றும் பிற அலுவலகங்களுக்கு வருகிறவர்கள் குடிநீருக்காக மாற்று  இடங்களில் அலுவலகங்களில்  உள்ள கேன் வாட்டர்களை தேடி செல்கின்றனர். 
ஆனால், அனைத்து  பொதுமக்களுக்கும் கேன் வாட்டரை பிடித்து குடிக்க  அனுமதியில்லாததால் பொதுமக்கள் தாகத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது பணிகளை முடித்துவிட்டு வெளியில் சென்று தண்ணீர் தேடி குடித்து தாகம் தீர்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக மோட்டார் பழுதை சரிசெய்து கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/கோடையில்-தாகம்-தணிக்காத-குடிநீர்த்-தொட்டி-3155187.html
3155186 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குளத்தின் கரையை பலப்படுத்த கோரிக்கை DIN DIN Monday, May 20, 2019 09:48 AM +0530 சீர்காழி அருகேயுள்ள திருநகரி செல்லும் சாலையோரம் உள்ள குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே புதுத்துறை திருநகரி செல்லும் பிரதான சாலையில் தாமரைக்குளம் உள்ளது. திருமங்கையாழ்வார் கோயிலுக்குச் சொந்தமான இந்த தாமரைக் குளத்தின் பக்கவாட்டில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தடுப்புச் சுவரை ஓட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த படித்துறை, மண் அரிப்பால் வலுவிழந்து விழுந்துவிட்டது. 
இதனால், சுமார் 15 அடி நீளம் உள்ள குளத்தின் கரை மிகவும் சேதமடைந்து பெரும் பள்ளமாக மாறியுள்ளது. பிரதான பேருந்துகள் செல்லும் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள இக்குளத்தின் கரை பள்ளத்தை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/குளத்தின்-கரையை-பலப்படுத்த-கோரிக்கை-3155186.html
3155185 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்ய முடிவு DIN DIN Monday, May 20, 2019 09:47 AM +0530 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்களிடையே பிரசாரம் செய்ய வேட்டைக்காரனிருப்பு கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். 
புதுச்சேரியில் தொடங்கி வேதாரண்யம் வரையிலான கடலோரக் கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு மக்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கிராமமக்கள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், துண்டுப் பிரசுரங்கள் மூலம் கடலோரக் கிராமமக்களிடம் பிரசாரம் செய்வது, சுற்றுப் பகுதி கிராமமக்களை ஒருங்கிணைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/ஹைட்ரோ-கார்பன்-திட்டத்தைஎதிர்த்து-பிரசாரம்-செய்ய-முடிவு-3155185.html
3155184 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 2 ஆண்டுகளாக செயல்படாத மின்மாற்றி DIN DIN Monday, May 20, 2019 09:47 AM +0530 சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவில் 2 ஆண்டுகளாக செயல்படாத மின்மாற்றியை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெரு மற்றும் சுற்றுபுறத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் குறைந்த ஓளியுடன்  இருந்து வந்ததுடன் மின்சாதனப் பொருள்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆகையால், சீரான அழுத்தமுள்ள மின்சாரம் வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. மின்மாற்றியில் பொருத்தப்பட வேண்டிய சில பொருள்கள் மட்டுமே பொருத்தப்பட்டன. மின்மாற்றி அமைக்கும் பணி முழுமை பெறாமலேயே நின்றுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மின்மாற்றியை முறைப்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மின்மாற்றியை அமைக்காமல் ஆற்றங்கரைத் தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று முழுமையடையாமல் உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
அதிக மின் அழுத்தம் கொண்ட மின்விநியோகத்துக்காக நடந்த மின்மாற்றி அமைக்கும் பணி அரை குறையாக நின்றுவிட்டது. இதுவரை குறைந்த அழுத்த மின்சாரமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மின்மாற்றியை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையெனில், தெருவில் உள்ளவர்களுக்கு இடையூறாகவும், எந்த பயனுமின்றியும் உள்ள மின்மாற்றியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/2-ஆண்டுகளாக-செயல்படாத-மின்மாற்றி-3155184.html
3155183 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தாராளமாக கிடைக்கும் நெகிழிப் பொருள்கள் DIN DIN Monday, May 20, 2019 09:47 AM +0530 தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்  சீர்காழி பகுதியில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழக அரசு 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்து, நெகிழிகள் பயன்பாட்டை தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இதை, அமல்படுத்தும் வகையில் சீர்காழி பகுதிகளில்  வர்த்தர்கள், திருமண மண்டபம், ஜவுளிக் கடை, உணவகங்கள் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தி நெகிழி விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும் நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகள், சமூக வலைதளங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பெற்ற பொதுமக்களும் பொருள்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்தே துணிப் பைகளை எடுத்து செல்ல தொடங்கினர். அதேபோல் உணவகங்களிலும் சட்னி, சாம்பார் ஆகியவற்றை பிளாஸ்டிக் டப்பாக்கள், சில்வர் பொருல்களில் வாங்கி செல்லுமாறு பார்சல் வாங்க வரும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். இதனால், நெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறைந்தது. சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளிலும் நெகிழிபைகளை பார்ப்பது அரிதாக போனது. 
இந்நிலையில், அரசு அலுவலர்களின் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது. சீர்காழி பகுதியில் நெகிழிப் பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் குடோன்களில் பதுக்கி வைத்து மிக நன்கு அறிமுகமான தொடர் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. மீன் சந்தையில் எப்போதும் போல் நெகிழிப் பைகளில் வைத்து கொடுக்கின்றனர். இதேபோல், உணவகங்களிலும் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு தொடங்கிவிட்டது. தாமரை இலை, வாழை இலைகளில் உணவுப் பொருள்கள் கட்டி விற்பனை செய்யப்பட்டவைகள் சில வாரங்களிலேயே மறைந்துவிட்டன. 
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணிக்காமல் பெயரளவிற்கு சில கடைகளில் ஆய்வு செய்து ஒரு சில கடைகளுக்கு அபராதம் விதித்துவிட்டு மேல் அதிகாரிகளிடம் போலியான நடவடிக்கை எடுக்கப்பட்டதை தெளிவாக விவரித்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கின்றனர். சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில்,திருவெண்காடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தால் பல டன் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்ய முடியும். எனவே, தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் கொண்டுவந்த இந்த திட்டத்தை அதிகாரிகள், பொதுமக்கள் மனது வைத்தால் மட்டுமே தீவிரமாக நடைமுறைப்படுத்த முடியும் மக்கள் ஒத்துழைக்க தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/தாராளமாக-கிடைக்கும்-நெகிழிப்-பொருள்கள்-3155183.html
3155070 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஆக.17-இல் காவிரிப் படுகை பாதுகாப்பு மாநாடு: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு DIN DIN Monday, May 20, 2019 08:34 AM +0530 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் காவிரிப் படுகை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது என்று அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் த. ஜெயராமன் தெரிவித்தார். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மே 28-ஆம் தேதி முதல் கிராமங்கள் உழவுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளோம். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பனை எதிர்க்கக் கூடிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் பேரழிவுத் திட்டங்களுக்கு நிலம் தரக்கூடாது என்று வலியுறுத்தி, விவசாயிகள் நிலம் தர மறுக்கும் இயக்கத்தை தொடங்க உள்ளோம். இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களவை மற்றும் சட்டப் பேரவையில் குரல் எழுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். உயர்நீதிமன்ற அனுமதியுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், ஆகஸ்டு 17-ஆம் தேதி நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரிப் படுகை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. வருங்கால தமிழகம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல. தமிழக மக்களுக்கானது என்று நாங்கள் ஒருமித்த குரலில் மாவட்ட தலை நகரங்கள், கோட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு தொடர்ந்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் ஜெயராமன். 
முன்னதாக நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில், கூட்டமைப்பின் ஆலோசகர் பாரதிசெல்வன், சட்ட ஆலோசகர்கள் நல்லதுரை, வேலு. குபேந்திரன், ராஜ்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மாரி. பன்னீர்செல்வம், விஜயராகவன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு மகேஷ், சரவணமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தை அழிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது, தமிழக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆய்வு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும், நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாங்கூர், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/ஹைட்ரோ-கார்பன்-திட்டம்-ஆக17-இல்-காவிரிப்-படுகை-பாதுகாப்பு-மாநாடு-மீத்தேன்-திட்ட-எதிர்ப்புக்-கூட்ட-3155070.html
3155069 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: பி.ஆர். பாண்டியன்  DIN DIN Monday, May 20, 2019 08:34 AM +0530 விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள முடிகண்டநல்லூர் பகுதி விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதித்து வருவது குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்கள் கூறியது: நாகை மாவட்டம்,  முடிகண்டநல்லூர், காளகஸ்திநாதபும், உமையாள்புரம் மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய்களை பதித்து வருவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் அனுமதியின்றி விவசாயப் பயிர்களை அழித்துவிட்டு அரசிடம் பெற்ற ஒப்புதல் வழிமுறைகளை பின்பற்றாமல் கெயில் நிறுவனம் காவல்துறை மூலம் விவசாயிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சாகுபடி நிலங்களை அபகரித்து பயிர்களை அழித்திருப்பது சட்ட விதிமீறலாகும்.  விவசாயிகளுக்காக போராட வந்த நிலம் நீர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபட்ட விதிமுறைகளை சட்டத்துக்குப் புறம்பாக கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில், தவறு செய்த கெயில் நிறுவன அலுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் அலுவலர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் பெற்று குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். 8 வழிச்சாலை, மின்கோபுரம் அமைக்க விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை வழிமுறையாகப் பின்பற்றி காவல் துறை, மாவட்ட நிர்வாகம் செயல்பட முன்வர வேண்டும். மறுக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளோம் என்றார் பி.ஆர். பாண்டியன். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/20/விளைநிலங்களில்-குழாய்-பதிக்கும்-பணியை-தமிழக-அரசு-தடுத்து-நிறுத்த-வேண்டும்-பிஆர்-பாண்டியன்-3155069.html
3154518 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் புத்த பூர்ணிமா வழிபாடு DIN DIN Sunday, May 19, 2019 09:07 AM +0530 குத்தாலம் அருகே பெருஞ்சேரியில் புத்த பூர்ணிமா வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும், புத்த பூர்ணிமா விழா மே மாத பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புத்தர் பிறந்ததாகவும், புத்தகயாவில்  ஞானம் அடைந்ததாகவும், புத்தர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, பிறவா நிலையை  அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இம்மூன்று நிகழ்வுகளும் மே மாத பெளர்ணமி நாளில் நடந்ததை புத்த பூர்ணிமா திருவிழாவாக உலகம் முழுவதும் பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி கிராமத்தில் புகழ்பெற்ற புத்த விகாரில் (கோயில்) புத்த பூர்ணிமா திருநாள் வழிபாடு நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கல்யாணசுந்தரம், பௌத்த மக்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சாக்கியராஜா, செயலாளர் பால்ராஜ், மயிலாடுதுறை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி அமைப்பாளர் சோந்தை.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/புத்த-பூர்ணிமா-வழிபாடு-3154518.html
3154517 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பெளர்ணமி யாக பூஜை DIN DIN Sunday, May 19, 2019 09:06 AM +0530 கீழ்வேளூர் வட்டம், தேவூர் தேவதுர்கை அம்மன் சக்தி பீடத்தில்  பெளர்ணமி யாக பூஜைகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.
இதையொட்டி, தேவதுர்கை அம்மனுக்கு  பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சக்தி பீட நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/பெளர்ணமி-யாக-பூஜை-3154517.html
3154516 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் மழை வேண்டி வழிபாடு DIN DIN Sunday, May 19, 2019 09:06 AM +0530 மயிலாடுதுறை குதம்பைச் சித்தர் ஜீவ சமாதியில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் விசாக நட்சத்திர வழிபாடு நடைபெற்றது.
ஓதுவார் சிவக்குமார் தலைமையில் தேவாரத்தில் உள்ள மேகராகக்குறிச்சி பண்ணில் உள்ள திருக்கழுமலம், திருவையாறு, திருமுதுகுன்றம், திருவீழிமிழலை, திருவேகம்பம், திருப்பறியலூர் திருவீரட்டம், திருப்பராய்த்துறை மற்றும் திருப்பங்கூர் கோயில்களில் சுந்தரர் பாடிய மழை வேண்டல் பதிகங்களை ஓதி மழை பெய்ய வேண்டி, கூட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து, குதம்பைச் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன், மத்திய அரசு வழக்குரைஞரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. ராஜேந்திரன், பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராம.சேயோன் செய்திருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/குதம்பைச்-சித்தர்-ஜீவசமாதியில்-மழை-வேண்டி-வழிபாடு-3154516.html
3154515 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் இணைந்து போராட முடிவு DIN DIN Sunday, May 19, 2019 09:06 AM +0530 ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து விவசாயிகள், மீனவர்கள் இணைந்து போராடுவது என நாகை மாவட்டம், செருதூரில் நடைபெற்ற மீனவர்கள் - விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை மாவட்டம், செருதூர் எல்லையம்மன் சமுதாயக் கூடத்தில், கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், விவசாய அமைப்புகள், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் தேசிய மீனவப் பேரவை பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை 
நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 
பின்னர், விவசாயிகள், மீனவர்கள் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியும், சட்ட ரீதியாகவும் போராடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/ஹைட்ரோ-கார்பன்-திட்டத்தை-எதிர்த்து-விவசாயிகள்-மீனவர்கள்-இணைந்து-போராட-முடிவு-3154515.html
3154514 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சுற்றுலா வேன்களை சேதப்படுத்திய 3 பேர் கைது DIN DIN Sunday, May 19, 2019 09:06 AM +0530 நாகையில் சுற்றுலா வேன்களை சேதப்படுத்திய 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, நாகை நகர போலீஸார் தெரிவித்ததாவது:
நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்தவர் வ. பாலகிருஷ்ணன். இவர், நாகை  பழைய பேருந்து நிலையப் பகுதி வேன் ஓட்டுநர்கள் சங்கத் தலைவராக உள்ளார். இச்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத, நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி கீழத்தெருவைச்  சேர்ந்த கெ. கார்த்திகேயன், கீரைக்கொல்லைத் தெருவைச் சேர்ந்த கா. பாலு மகேந்திரன், சிக்கல் கோரை கோட்டகம் க. கார்த்திக்  உள்ளிட்டோர் வேன் நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து  பொதுமக்களுக்கு  நீர்மோர் விநியோகம் செய்து வந்துள்ளனர். வேன் ஓட்டுநர்கள் சங்கத் தலைவரான பாலகிருஷ்ணன் நீர்மோர் பந்தலை அப்புறப்படுத்த வலியுறுத்தியுள்ளார். இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் 3 சுற்றுலா வேன்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக,  வேன் ஓட்டுநர் சங்கத் தலைவர் வ. பாலகிருஷ்ணன் அளித்தப்  புகாரின் பேரில் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கெ. கார்த்திகேயன் (33), கா. பாலு மகேந்திரன் (36), க. கார்த்தி (34) ஆகிய 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/சுற்றுலா-வேன்களை-சேதப்படுத்திய-3-பேர்-கைது-3154514.html
3154513 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா DIN DIN Sunday, May 19, 2019 09:05 AM +0530 மயிலாடுதுறை திம்மநாயக்கன் படித்துறை பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயிலில் 60-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா சனிக்கிழமை  நடைபெற்றது. 
இதையொட்டி, சக்தி கரகம் மற்றும் காப்பு கட்டி பக்தர்கள், காவிரிக்கரையில் இருந்து புறப்பட்டு, வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர். அப்போது, வழிநெடுங்கிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, சக்தி கரகத்துக்கு தீபாராதனைக் காட்டி வழிபட்டனர். தொடர்ந்து, சக்தி கரகம், காப்பு கட்டிய பக்தர்கள், அலகு காவடி எடுத்த பக்தர்கள், கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/பிரசன்ன-சின்ன-மாரியம்மன்-கோயில்-தீமிதித்-திருவிழா-3154513.html
3154512 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சுவர்ணபுரீசுவரர் கோயில் தீமிதி திருவிழா DIN DIN Sunday, May 19, 2019 09:05 AM +0530 நாகை, தெற்குப் பொய்கைநல்லூர் சுவர்ணபுரீசுவரர் கோயிலில் தீ மிதி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.  
நாகை அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் பிரஹன் நாயகி உடனுறை சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்  உள்ளது.இக்கோயில் குபேர பகவானும், பஞ்ச பாண்டவர்களும் வழிபட்டத் தலமாகவும், சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் மூலிகைகளால் தங்கம் செய்து அம்பாள் மற்றும் ஈசனிடம் இறையருள் பெற்ற தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், தீ மிதி திருவிழா நடைபெறும் ஒரே சிவாலயமாகவும் விளங்குகிறது  இக்கோயில்.
 இத்தகைய சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி  விசாகப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழா மே 10-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து,  தினமும்  காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு  சிறப்பு  வழிபாடுகளும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும்  நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக, தீர்த்தவாரி மற்றும் தீக்குழி இறங்குதல் சனிக்கிழமை  நடைபெற்றன. காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும்,  இரவு  தீமிதித் திருவிழாவும்  நடைபெற்றன.  இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/சுவர்ணபுரீசுவரர்-கோயில்-தீமிதி-திருவிழா-3154512.html
3154511 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 10 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து DIN DIN Sunday, May 19, 2019 09:05 AM +0530 நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி வாகனங்களின் ஆய்வில், 10 வாகனங்களின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் ஆகியோர் வாகனங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பான்கள், இருக்கைகள், மாணவர்களின் புத்தகப்பைகள் வைக்கும் இடங்கள், வாகனத் தளம், படிக்கட்டுகள், கதவுகள், அவசர வழிக் கதவுகள், ஓட்டுநரின் தகுதி, உரிமம் மற்றும் அவரது அனுபவம், உதவியாளரின் தகுதி, வாகனத்தின் அனுமதிச் சான்று, நடப்பிலுள்ள காப்பீட்டுச் சான்று, மாசுக்கட்டுப்பாட்டு தரச்சான்று உள்பட 20 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தது:  நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சொந்தமான 444 வாகனங்களில் 380 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 345 வாகனங்களுக்குத் தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 25 வாகனங்களில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, குறைகளைக் களைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 வாகனங்களின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  64 வாகனங்கள் தற்போது பணிமனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களும், குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களும் பழுது நீக்கம் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தகுதிச் சான்று பெற்ற பின்னரே, இயக்குவதற்கு அனுமதிக்கப்படும்.
பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், மது அருந்து பழக்கம் கொண்டவர்களை பள்ளி வாகன ஓட்டுநர்களாக நியமிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். 
நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், மாவட்டக் காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) எஸ். அழகிரிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/பள்ளி-வாகனங்கள்-ஆய்வு-10-வாகனங்களின்-தகுதிச்-சான்று-ரத்து-3154511.html
3154510 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வைகாசி விசாகம் அழுகணி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, May 19, 2019 09:05 AM +0530 வைகாசி விசாகப் பெளர்ணமியையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் உள்ள அழுகணி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழக சித்தர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவராக விளங்குபவர் அழுகணி சித்தர்.  இவர் இயற்றிய பாடல்களில் அணி அழகாக அமைந்ததன் காரணமாக, அழகு அணிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் அழுகணியாக மருவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவரது பாடல்கள் பெரும்பாலும் ஒப்பாரி ராகத்தை ஒத்ததாக இருப்பதாலும்,  நாகையில் அன்னை நீலாயதாட்சியம்மனை நோக்கி அழுதபடியே பாடல்களைப் பாடி முக்தி கிடைக்கப் பெற்றவர் என்பதாலும் அழுகணி சித்தர் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 
நாகையில் ஜீவசமாதி அடைந்தவராகக் குறிப்பிடப்படும் அழுகணி சித்தரின் ஜீவசமாதி பீடம், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ளது. இங்கு, வைகாசி விசாக பெளர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி, வைகாசி விசாக பெளர்ணமி நாளான சனிக்கிழமை அழுகணி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
யாக பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 11.30 மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சித்தர் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக, ஜோதிர்லிங்க பெளர்ணமி விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.  அழுகணி சித்தர் பெளர்ணமி வழிபாட்டு மன்றத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சட்டைநாதர் கோயிலில்...
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில்  வைகாசி விசாகத்தையொட்டி சம்ஹார வேலவருக்கு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலின் தெற்கு கோபுரவாசல் அருகில் தனி சன்னிதியில் சம்ஹார வேலவர் அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தையொட்டி, காலையில் வள்ளி, தெய்வானை உடனாகிய சம்ஹார வேலருக்கு மஞ்சள், திரவியப்பொடி, இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை  நடைபெற்றது.
பின்னர்,  மாலையில் சத்குரு சம்ஹார அர்ச்சனையும், 309 நாமாவளிகள் பாராயணமும் நடத்தப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை  காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் குருக்கள் செய்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/வைகாசி-விசாகம்அழுகணி-சித்தர்-பீடத்தில்-சிறப்பு-வழிபாடு-3154510.html
3154509 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தேரோட்டம் DIN DIN Sunday, May 19, 2019 09:03 AM +0530 மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. தொன்மையும், பிரசித்தியும் பெற்ற இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் பஞ்சமூர்த்திகளின் திருவீதிஉலா நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணி அளவில் மாயூரநாதர், அபயாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். பின்னர், மாலை 5 மணி அளவில், தேர் வடம் பிடிக்கப்பட்டது.
கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலின் வடக்கு வீதியில் புதைச்சாக்கடை உடைப்பு காரணமாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால், நிகழாண்டு தேரின் சுற்றளவு குறைக்கப்பட்டிருந்தது.
இவ்விழாவில் தெப்ப உத்ஸவம் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 22-ஆம் தேதி யதாஸ்தானம் எனப்படும் பஞ்சமூர்த்திகள் இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/மயிலாடுதுறை-மாயூரநாதர்-கோயில்-தேரோட்டம்-3154509.html
3154508 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் DIN DIN Sunday, May 19, 2019 09:03 AM +0530 திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரமோத்ஸவ விழாவையோட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா மே 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தொடர்ந்து, தினமும் காலை தங்கப் பல்லக்கில் திருமேனி சேவையும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை 13-ஆம் தேதியும், தங்கப் பல்லக்கில் வெண்ணைத் தாழி உத்ஸவம் 17-ஆம் தேதியும் நடைபெற்றது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை  நடைபெற்றது. முன்னதாக, சௌரிராஜப் பெருமாள் மற்றும்  உபநாச்சியார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  பின்னர் காலை 9 மணியளவில் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டது. 
கோயிலின் செயல் அலுவலர் கா. பரமானந்தம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர், நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/திருக்கண்ணபுரம்-சௌரிராஜப்-பெருமாள்-கோயில்-தேரோட்டம்-3154508.html
3154507 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, May 19, 2019 09:03 AM +0530 நாகை மாவட்டம், சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில்  வைகாசி விசாகத்தையொட்டி, சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
சிக்கல், நவநீதேசுவரசுவாமி கோயிலில் தனி சன்னிதி கொண்டு சிக்கல் சிங்காரவேலவர் அருள்பாலிக்கிறார். சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில் தாய் வேல்நெடுங்கண்ணியிடம் முருகப் பெருமான் சக்திவேல் பெற்றார் என்பது ஐதீகம்.  கந்தசஷ்டி விழாவில் சக்திவேல் வாங்கும் நிகழ்வின்போது சிக்கல் சிங்காரவேலவரின் திருமேனியில் வியர்வைத் ததும்பும் ஆன்மிக அதிசயம் நிகழும் தலம் இது.
அறுபடை வீடுகளுக்கு இணையாக முருகப் பெருமானின் அருள் விளங்கும் முக்கிய திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், வைகாசி விசாகத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 
இதன்படி, வைகாசி விசாக நட்சத்திர நாளான சனிக்கிழமை சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்தபனம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. பின்னர், பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வசேனா சமேத சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.  பின்னர்,  இக்கோயிலின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றான சண்முகார்ச்சனை பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. 
முருகப் பெருமானின் அவதார நட்சத்திர நாளான வைகாசி விசாக நட்சத்திர நாளில் முருகனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற ஐதீக அடிப்படையில், திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.  


எட்டுக்குடி முருகன் கோயிலில்...
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
காலை 11மணியளவில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,  சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் சென்று, சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.  
மேலும், காவடிகள் எடுத்து வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். சுவாமிக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெற்றது. 
இரவில், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் 
கா. ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/வைகாசி-விசாகம்-சிக்கல்-சிங்காரவேலவர்-கோயிலில்-சிறப்பு-வழிபாடு-3154507.html
3154506 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பருத்தியில் எலி கட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் செயல்விளக்கம் DIN DIN Sunday, May 19, 2019 09:02 AM +0530 பருத்தியில் எலிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து, தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில்,  திருமருகல் ஒன்றியம், மேலப்பூதனூர் கிராமத்தில் பருத்திச் செடிகளில் எலி கட்டுப்பாடு மற்றும் மண் மாதிரி எடுத்தல் செயல் விளக்க முகாம் வேளாண் துறை சார்பில் அண்மையில் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குநர் எம். நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணப்பிள்ளை முன்னிலை வகித்தார். திருமருகல் வேளாண்மை உதவி இயக்குநர் கே. சிவக்குமார் வரவேற்றார்.
முகாமில், சிக்கல் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி சந்திரசேகரன்  கலந்துகொண்டு, பருத்திச் செடிகளில் எலிகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். குறிப்பாக எலிகளுக்கு விஷ உணவு வைக்கும் போது கவனிக்க வேண்டியவைகள் குறித்து எடுத்துரைத்தார். எலிகளைக் கட்டுப்படுத்தும் விஷ உணவுவை தயாரிப்பது குறித்த செயல் விளக்கத்தை வட்டார தொழில் நுட்ப மேலாளர் செந்தில்குமார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திகேசன் ஆகியோர் மேற்கொண்டனர். 
பின்னர், பருத்தி வயலை நேரடியாக ஆய்வு செய்து, சாறு உறிஞ்சும் பூச்சியான மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். மேலும், மேலப்பூதனூர் கிராமத்தில் மண் மாதிரி அட்டை மதிப்பிடுதல் திட்டத்தில் மண் மாதிரி எடுத்தல் பணியை நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குநர் எம். நாராயணசாமி தொடங்கிவைத்தார்.  தொடர்ந்து, முன்னோடி விவசாயி ராமகிருஷ்ணன் வயலில் அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.
இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை திருப்பயத்தங்குடி உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன் செய்திருந்தார். திருமருகல் வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/பருத்தியில்-எலி-கட்டுப்பாடு-குறித்து-வேளாண்-அதிகாரிகள்-செயல்விளக்கம்-3154506.html
3154505 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நாகையில் சமுத்திர தீர்த்தவாரி DIN DIN Sunday, May 19, 2019 09:02 AM +0530 நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நிகழ்ச்சியாக சமுத்திர தீர்த்தவாரி சனிக்கிழமை 
நடைபெற்றது.
நாகை நீலாயதாட்சியம்மன் சமேத காயாரோகணசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மே 1-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெற்றது.
வைகாசி விசாகப் பெருந்திருவிழா நிகழ்ச்சியாக சமுத்திர தீர்த்தவாரி சனிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர்,  கோயிலிலிருந்து சந்திரசேகரர் - அம்பாள் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடு நடைபெற்றது. நாகை புதிய கடற்கரையில் சுவாமி - அம்பாள் எழுந்தருளிய பின்னர், அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அஸ்திர தேவருக்கு பலவகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, சுவாமி - அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மாலை நிகழ்வாக சுந்தரவிடங்க தியாகராஜசுவாமி பக்த காட்சி மண்டபத்துக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/நாகையில்-சமுத்திர-தீர்த்தவாரி-3154505.html
3154504 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 21-இல் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா DIN DIN Sunday, May 19, 2019 09:01 AM +0530 கொள்ளிடம்  அருகே உள்ள ஆச்சாள்புரம் திருவெண்ணீற்று அம்பாள்  உடனாகிய சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண திருவிழா மே 21- ஆம் தேதி நடைபெறுகிறது.  
தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில்தான் திருஞானசம்பந்தருக்கும், தோத்திரபூர்ணாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றதாக ஐதீகம். இதையொட்டி, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 21) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று  காலை 10.30 மணியளவில் திருஞானசம்பந்தர் உபநயனமும், தொடர்ந்து, திருவீதிவலம் வருதலும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருமுறைகள் திருவீதி வலம் வருதலும், இரவு 9 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பும்  நடைபெற்று,  இரவு 10 மணியளவில்  திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. பின்னர், தோத்திரபூர்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தர் வெள்ளிப் பல்லக்கில் திருவீதி வருதல் நடைபெறும். மாலை ஆறுமணி முதல் சிறப்புச்சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து மே 22- ஆம் தேதி காலை மூலநட்சத்திரத்தில் பேரின்ப பேரளிக்கும் திருப்பதிகம் ஓதுதல் நிகழ்ச்சி மற்றும் சிவஜோதி தரிசனம் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்தோடு திருவீதி வலம்வந்து, சிவலோக தியாகேசரோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சியைக் காண நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் திரளுவார்கள்.  அன்றைய தினம் தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர்  பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை  கோயில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் தருமை ஆதீன ஊழியர்கள் செய்துவருகின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/21-இல்-திருஞானசம்பந்தர்-திருக்கல்யாண-விழா-3154504.html
3154503 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம் DIN DIN Sunday, May 19, 2019 09:01 AM +0530 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, சீர்காழி உப்பனாற்றாங்கரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம்  கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது. அதன்படி,  நிகழாண்டு, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, சீர்காழி உப்பனாற்றங்கரையில் தர்ப்பணம் (திதி) கொடுக்கும் சடங்குகள் செய்யப்பட்டன.
கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் சடங்குகளை செய்து வைத்தார். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி மற்றும் சொக்கலிங்கம், நாராயணசாமி, ஜெயப்பிரகாஷ், மோகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/முள்ளிவாய்க்கால்-நினைவு-தினம்-இந்து-மக்கள்-கட்சி-சார்பில்-தர்ப்பணம்-3154503.html
3154502 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவு: நுகர்வோர் பாதுகாப்புக்குழு வேண்டுகோள் DIN DIN Sunday, May 19, 2019 09:01 AM +0530 மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவு தொடங்க வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக்குழு செயற்குழு கூட்டம் நீதிமன்ற சாலையில் உள்ள சாய் சட்டக் குழும வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
இதில், மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரியில், வேலைவாய்ப்பு மிக்க வணிகவியல் (பி.காம்) பாடப் பிரிவைத் தொடங்க வேண்டும். மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதற்கு ஏதுவாக வாரந்தோறும் புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் ராம.சேயோன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சுரேஷ், அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் தேரிழந்தூர் பிரபாகரன் வரவேற்றார். பொருளாளர் ராஜ்குமார் நன்றி தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/அரசு-பெண்கள்-கலைக்-கல்லூரியில்-வணிகவியல்-பாடப்பிரிவு-நுகர்வோர்-பாதுகாப்புக்குழு-வேண்டுகோள்-3154502.html
3154501 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் செங்கல் சூளை சரிந்து 3 பேர் காயம் DIN DIN Sunday, May 19, 2019 09:01 AM +0530 வேதாரண்யம் அருகே செங்கல் சூளை சரிந்து 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் க. சண்முகராஜன். இவர், செங்கல் சூளை நடத்திவருகிறார். இந்த சூளையில், களி மண்ணில் செய்யப்பட்ட செங்கற்களை சூடுபடுத்துவதற்காக, சூளையில் அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக செங்கற்கள் சரிந்து விழுந்தன.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த க. சுப்பிரமணியன் (40), நல்லாங்குத்தகை வீ. சந்திரா (36), காந்திநகர் ர. விஜயா(28) ஆகியோர் செங்கற்களின் அடியில் சிக்கி, காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு, வேதாரண்யம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சுப்பிரமணியன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து, வாய்மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/செங்கல்-சூளை-சரிந்து-3-பேர்-காயம்-3154501.html
3154500 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மின்பாதைகள் சீரமைப்புப் பணி DIN DIN Sunday, May 19, 2019 09:00 AM +0530 மின் பாதை சீரமைப்புப் பணிகள் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றன.
 மின்வாரிய, மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், நாகை நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் பாதைகள் மற்றும் மின்சார வயர்களில் உரசி, பாதிப்பை ஏற்படுத்திய சாலையோர மரங்களில் உள்ள கிளைகளை மின்  ஊழியர்கள் வெட்டி அகற்றி மின்பாதைகளை சீரமைத்தனர்.
 தமிழ்நாடு மின்வாரியம், நாகை  செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்அருண் ஆகியோரது மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட  மின் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
திருக்குவளையில்...
திருக்குவளை, மே 18: திருக்குளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருக்குவளை துணை மின்நிலையம் மற்றும் அதனைச் சேர்ந்த மின்பாதைகளான தேவூர், மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி  உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி அளவில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு  மற்றும் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நாகை மின்வாரிய செயற்பொறியாளர்  (இயக்குதலும், பராமரித்தலும்) பி. லதாமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் எஸ். பாலாஜி தலைமையிலும், திருக்குவளை மின்பொறியாளர் கே. ராஜ்குமார் மேற்பார்வையிலும் நடைபெற்றது. இப்பணி நிறைவுபெற்றதும் மாலை 5 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/மின்பாதைகள்-சீரமைப்புப்-பணி-3154500.html
3154499 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வங்கியில் சீரமைக்கப்படாத மேற்கூரையால் வாடிக்கையாளர்கள் அவதி DIN DIN Sunday, May 19, 2019 09:00 AM +0530 வேதாரண்யத்தில் கஜா புயலால் சேதம டைந்த இந்தியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர்கள் காத்திருப்புப் பகுதியின் மேற்கூரை சீரமைக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் கோடை வெயிலில் அவதிப்படும் நிலையுள்ளது.
வேதாரண்யத்தில் கோடியக்கரை சாலை பகுதியில் இந்தியன் வங்கி கிளை செயல்படுகிறது. இந்த வங்கியின் நுழைவு பகுதியில் சுமார் 400 சதுர அடி பரப்பில் வாடிக்கையாளர்கள் காத்திருப்புப் பகுதி உள்ளது. இதன் மேற்கூரை கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சேதமடைந்தது. தற்போது, 6 மாதங்களாகியும் இந்த மேற்கூரை சீரமைக்கப்படவில்லை. இதனால், வடிக்கையாளர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இதன்காரணமாக, முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/வங்கியில்-சீரமைக்கப்படாத-மேற்கூரையால்-வாடிக்கையாளர்கள்-அவதி-3154499.html
3154498 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் இயற்கை உரங்கள்  தயாரிப்புப் பயிற்சி DIN DIN Sunday, May 19, 2019 09:00 AM +0530 திருப்பூண்டி அருகேயுள்ள வெண்மணிச்சேரி கிராமத்தில் நபார்டு வங்கி மூலம் இயற்கையான முறையில் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது. 
பயிற்சியில் விவசாயத்தை தாக்கும் நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த பூச்சி விரட்டிகளான பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன்அமிலம், ஊட்டச்சத்து உரங்கள், தொழுவுரம் , புளித்த மோர் கரைசல் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலக மேலாளர் பிரபாகரன், நாகை ஐஓபி முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், சமூகநல கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறங்காவல் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பூச்சி விரட்டிகள் தயாரிப்பது குறித்தும் அதை பயன்படுத்துவதன் மூலம்  கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கினர். மேலும் இயற்கை உரங்களை பயன்டுத்துவதன் மூலம் குறைந்த நீரில் விவசாயம் செய்யலாம், சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம், வருவாயை அதிகப்படுத்தலாம், நோய்கள் மற்றும் பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் ஏராளமான  விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/இயற்கை-உரங்கள்--தயாரிப்புப்-பயிற்சி-3154498.html
3154497 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலம்-நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது DIN DIN Sunday, May 19, 2019 09:00 AM +0530 செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களின் வழியே குழாய் பதிக்கும் பணி சனிக்கிழமை 3-ஆவது நாளாக தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகள், செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர்,  காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வழியாக கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில்,  விவசாயிகளிடம் அனுமதி பெறாமலேயே விளை நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதாகவும், இப்பணியை நிறுத்த வலியுறுத்தியும் நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் 3-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், இரணியனை கைது செய்தனர். மேலும், விவசாயிகள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான  சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், குழாய் பதிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தலைவர்கள் கண்டனம்
காவிரி டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ: நாகப்பட்டினம் மாவட்டம் - சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்  அமைத்துள்ளது. 
இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டுசென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கி.மீ. தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது.
விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
ராமதாஸ்: மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம்  விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பர். 
எனவே, உடனடியாக இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும். 
 தினகரன்:  சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார்கோவில் அருகிலுள்ள பகுதிகள் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டுமென கெயில் நிறுவனம் பிடிவாதமாக உள்ளது. ஆனால், அதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையும் மீறி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசின் துணையோடு கெயில் மேற்கொண்டு வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அந்தப் பணியை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/19/விவசாய-நிலங்களில்-எரிவாயு-குழாய்-பதிப்பு-போராட்டத்தில்-ஈடுபட-முயன்ற-நிலம்-நீர்-பாதுகாப்பு-இயக்க-ஒரு-3154497.html
3153782 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியீடு: துணைவேந்தர் பேட்டி DIN DIN Saturday, May 18, 2019 07:23 AM +0530 நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு, கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : 
2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளால் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் 3 கல்லூரிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 10 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. 
இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை தொழிற்கல்வி உள்ளிட்ட பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இளநிலை மீன்வள அறிவியலில் இந்தியா அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் விளங்குகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இதையொட்டி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சுமார் 500 முதல் 600 மீன்பிடி படகுகள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 5 முதல் 10 ஆண்டுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பைத் தரும் திட்டமாக இருக்கும். 
புதிய பட்டப்படிப்புகள்...
இருப்பினும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல் பி.டெக் பட்டப்படிப்பு நிகழாண்டில் தூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது. 4 ஆண்டு கால இந்தப் பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதே போல, நாகையில் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பும், சென்னையில் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) பட்டப்படிப்பும் நிகழாண்டில் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. 4 ஆண்டு கால பி.டெக் பட்டப்படிப்புகளாக இக்கல்வி பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 
இப்பல்கலைக்கழகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் ‌w‌w‌w.‌t‌n‌j‌f‌u.​a​c.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை, ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு இப்பல்கலைக்கழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம் இலவசம்.
கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியல் ஜூன் 2-ஆவது வாரம் வெளியிடப்படும். ஜூலை 2-ஆம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் சுக. பெலிக்ஸ். 
தேர்வு நெறியாளர் சண்முகம், மீன்வளப் பொறியியல் கல்லூரி டீன் (பொறுப்பு) கு. ரத்னகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/மீன்வளப்-பல்கலைக்கழக-தரவரிசைப்-பட்டியல்-ஜூன்-2-ஆவது-வாரத்தில்-வெளியீடு-துணைவேந்தர்-பேட்டி-3153782.html
3153781 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு பயிர்  காப்பீட்டுத் தொகை வழங்கல் DIN DIN Saturday, May 18, 2019 07:22 AM +0530 வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1,966 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1. 65 கோடி வழங்கும் பணி  அண்மையில் தொடங்கியது.
ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் 2017-18-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த 1,966 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பணியைத் தொடங்கி வைத்தார். வங்கியின் நிர்வாகக்குழு இயக்குநர்கள் செந்தில்குமார், கலியமூர்த்தி, அலுவலர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/விவசாயிகளுக்கு-பயிர்--காப்பீட்டுத்-தொகை-வழங்கல்-3153781.html
3153780 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு DIN DIN Saturday, May 18, 2019 07:21 AM +0530 சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்  சேர்க்கைக்கு பாடவாரியாக பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருமுல்லைவாசலில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக் கூடமாக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில்  திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், ராதாநல்லூர், தாழந்தொண்டி, வேட்டங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் சுமார் 1,500 பேர் படித்து வருகின்றனர். 
இந்நிலையில், இப்பள்ளியில் மே 10-ஆம் தேதியிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை  நடைபெறுகிறது. அதில் கணினி அறிவியல், அறிவியல், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவு வாரியாக ரூ.1000 க்கும் மேல் ரூ.1500 வரை என பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல் இப்பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், ரூ.100 பெறப்படுவதாகவும், மாற்றுச் சான்றிதழை சக பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்காமல் ஆய்வக உதவியாளர், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் ஆகியோர் மூலம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தவிர, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்விக்கு ரூ. 1500 வரை பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இதுபோன்ற நிதி வசூலிப்பு பள்ளி வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்த பெறப்படுவதாக பள்ளி தரப்பில் பெற்றோர்களிடம் கூறி வசூல் செய்கின்றனர். அரசுப் பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து கொடுக்கிறது. அதுமட்டுமன்றி திருமுல்லைவாசல் பள்ளிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இருந்தபோதும், அரசு விதிமுறைகளை மீறி எதற்காக மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என பெற்றோர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த ஆண்டே இப்பள்ளியில் இதுபோன்று மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூல் செய்வதாக குற்றசாட்டு எழுந்து கல்வித் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டும் உயர் அலுவலர்களின்  உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கோடை விடுமுறையில் இப்பள்ளியில் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட இரும்பு இருக்கைகள் பல பழைய இரும்பு கடையில் திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரி மூலம் விற்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியை தமிழரசியிடம் கேட்டபோது அவர் கூறியது: பிளஸ் 2 மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சேர்க்கை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சந்தா உள்ளிட்டவைகளுக்காக மாணவர் சேர்க்கையின்போது வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை, சேர்க்கைக்கு வந்திருந்த பெற்றோர்களிடம் கூறியிருந்தோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் தீர்மானத்தின்படி தற்காலிக ஆங்கிலக் கல்வி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கணினிக்கு மாணவர் ஒருவருக்கு ரூ. 500 வீதம் அரசுக்குச் செலுத்த வசூல் செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை வரை (மே 16) கணினி அறிவியல் பாடப் பிரிவில் சேர்க்கை நடைபெறவில்லை. வணிகவியல் பிரிவில் மட்டும் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இப்பிரிவுக்கு ரூ.1,000 மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் சேர்ந்துள்ளனர். அனைவரும் ரூ. 1000 கொடுக்கவில்லை. ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூல்ஆகியுள்ளது. அவை பள்ளி வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுளள்ளது. நிகழாண்டு முதல் பிளஸ் 1 ஆங்கில வழிக்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் ஒருவருக்கு ரூ. 500 வீதம் அரசுக்குச் செலுத்த 
வேண்டும். 
தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்க இந்த தொகை பயன்படுத்தபடுகிறது. பள்ளி இரும்பு இருக்கைகள் எதையும் விற்பனை செய்யவில்லை. அனைத்தும் பள்ளியில் உள்ளது என்றார் தமிழரசி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/அரசுப்-பள்ளியில்-மாணவர்-சேர்க்கைக்கு-பணம்-வசூலிப்பதாகக்-குற்றச்சாட்டு-3153780.html
3153778 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சிறுமியை தரக்குறைவாக பேசிய மூவர் கைது DIN DIN Saturday, May 18, 2019 07:21 AM +0530 மயிலாடுதுறை அருகே சிறுமியை தரக்குறைவாக பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (31), சக்திவேல் (20), சரவணன் (23) ஆகியோர் தரக்குறைவாகவும், காமகுரோதமாகவும் பேசியுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸில் அளித்த புகாரின்பேரில், மேற்கண்ட மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/சிறுமியை-தரக்குறைவாக-பேசிய-மூவர்-கைது-3153778.html
3153777 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேதாரண்யேசுவரர் கோயில் காளை சாவு DIN DIN Saturday, May 18, 2019 07:21 AM +0530 வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலின் கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த காளை மாடு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.
பிரதோஷத்தையொட்டி, காளை மாடு உயிரிழந்ததால் அந்த நேரத்தில் நடைபெறவிருந்த சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து, கோயில் நந்தவனப் பகுதியில் உரிய பரிகாரங்கள் செய்யப்பட்டு, காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரம் கழித்து பூஜை நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/வேதாரண்யேசுவரர்-கோயில்-காளை-சாவு-3153777.html
3153776 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே கார் மோதி இருவர் சாவு DIN DIN Saturday, May 18, 2019 07:20 AM +0530 நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர், கார் மோதி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம், அங்கமுத்துத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். விஜயகுமார்(33). நாமக்கல் மாவட்டம், மோகனூர், சின்னத்தம்பிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வி. பூபதி(32). இருவரும் ஜேசிபி ஓட்டுநர்கள். இவர்களது ஜேசிபி வாகனம் வேளாங்கண்ணி அருகே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை இரவு வேளாங்கண்ணியிலிருந்து திருப்பூண்டி நோக்கி கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். கீழையூர் காவல் சரகம்,  காரைநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த விஜயகுமார், பூபதி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  இதுகுறித்து கீழையூர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநர் திருக்குவளை மேலவாழக்கரையைச் சேர்ந்த ஜெ. பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/வேளாங்கண்ணி-அருகே-கார்-மோதி-இருவர்-சாவு-3153776.html
3153775 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு DIN DIN Saturday, May 18, 2019 07:20 AM +0530 வேதாரண்யம் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (மே 18) நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் கோட்டப் பொறியாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வாய்மேடு 110 துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 18) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இதன்மூலம் மின் விநியோகம் பெறும் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/அரசுப்-பள்ளியில்-மாணவர்-சேர்க்கைக்கு-பணம்-வசூலிப்பதாகக்-குற்றச்சாட்டு-3153775.html
3153774 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் குளறுபடி: கூட்டுறவு வங்கி முற்றுகை DIN DIN Saturday, May 18, 2019 07:19 AM +0530 திருக்குவளை அருகே வடக்குப் பனையூர் கூட்டுறவு வங்கியில் பயர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை வங்கியை முற்றுகையிட்டனர்.  
திருக்குவளை வட்டத்துக்கு உள்பட்ட வடக்குப் பனையூர், தெற்குப் பனையூர், அனக்குடி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வடக்குப் பனையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியத்தை 920 விவசாயிகள் செலுத்திய நிலையில், 651 விவசாயிகளுக்கு மட்டும் காப்பீடு நிறுவனத்திலிருந்து ரூ.2.24 கோடி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தொகையை வங்கி சார்பில் விவசாயிகளுக்கு விநியோகிப்பதில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டுறவு வங்கியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், இந்தக் குளறுபடிக்கு காரணமான வங்கிச் செயலாளரை பணி நீக்கம் செய்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கமிட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் சரவண பெருமாள் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/பயிர்க்-காப்பீட்டுத்-தொகை-வழங்குவதில்-குளறுபடி-கூட்டுறவு-வங்கி-முற்றுகை-3153774.html
3153773 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Saturday, May 18, 2019 07:19 AM +0530 மயிலாடுதுறை வாக்கு எண்ணிக்கை மையத்தில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள  ஏ.வி.சி. கல்லூரியில் 4 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஆகியோர்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குச்  சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். மேலும் கட்டுப்பாட்டு அறையைக் கண்காணிக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை(மயிலாடுதுறை), ஸ்ரீகாந்த் (வேதாரண்யம்) ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/வாக்கு-எண்ணிக்கை-மையத்தில்-ஆட்சியர்-ஆய்வு-3153773.html
3153772 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குழகர் கோயில் தேரோட்டம் DIN DIN Saturday, May 18, 2019 07:19 AM +0530 வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் (குழகேசுவரர்) கோயில் என்றழைக்கப்படும் அமிர்தகடேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழாண்டுக்கான விசாகப் பெருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் ரிஷபம், ஆட்டுக் கிடா, யானை, மயில் ஆகிய வாகனங்களில் எழுந்தருளினார். திருவிழா நாள்களில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 
வடம்பிடித்தனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/குழகர்-கோயில்-தேரோட்டம்-3153772.html
3153771 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குறுவை நடவு வயலில் குழாய் பதிப்பு: 2-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் DIN DIN Saturday, May 18, 2019 07:19 AM +0530 செம்பனார்கோவில் அருகே குறுவை நடவு செய்த வயலில், எரிவாயு குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது நாளாக விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே காலகஸ்தி நாதபுரம், முடிகண்டநல்லூர், உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி செய்த வயலில் முன் அனுமதியின்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் பணியை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த கெயில் நிறுவன ஊழியர்கள் மற்றும் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழ் தேசம் மக்கள் முன்னணி தலைவர் பாலன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முடிகண்டநல்லூரில் போராட்டம் நடத்தினர். இதில் நிலம்- நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/குறுவை-நடவு-வயலில்-குழாய்-பதிப்பு-2-ஆவது-நாளாக-விவசாயிகள்-போராட்டம்-3153771.html
3153770 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் போலி பணி நியமன ஆணை விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் புகார் DIN DIN Saturday, May 18, 2019 07:18 AM +0530 சீர்காழி அருகே உள்ள கற்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணை அனுப்பப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே உள்ள கற்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி கயல்விழி (30). இவருக்கு கடந்த 11-ஆம் தேதி அஞ்சலில் ஒரு பணி நியமன ஆணை வந்தது. அதில், கயல்விழிக்கு கிராம உதவியாளர் பணி கிடைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நகலை எடுத்துக்கொண்டு  சீர்காழி வட்டாட்சியரிடம் அவர் கேட்டபோது,  அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கயல்விழி அளித்த புகாரின்பேரில், கொள்ளிடம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ஆட்சியரிடம் மனு...
இதனிடையே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கத் தலைவர் என்.பி. பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 
 போலி பணி நியமன ஆணை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, போலியான பணி நியமன ஆணையைத் தயாரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே கொள்ளிடம், சீர்காழி ஆகிய பகுதிகளில் 21 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து விளம்பரம் வெளியாகியிருந்தது. அதன்படி, 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. பிப்ரவரி 24-ஆம் தேதி 19 பணியிடங்களுக்கு நியமன ஆணை பிறப்பிக்கப்பட்டு, 19 பேரும் கிராம உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக, கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக பட்டதாரிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம்  கொள்ளிடம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ஜானகி ராஜதுரை புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பெண் ஒருவருக்கு போலி பணி நியமன ஆணை அனுப்பப்பட்டிருப்பது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/போலி-பணி-நியமன-ஆணை-விவகாரம்-மாவட்ட-ஆட்சியரிடம்-புகார்-3153770.html
3153769 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மன்மதீசுவரர் கோயில் குடமுழுக்கு DIN DIN Saturday, May 18, 2019 07:18 AM +0530 குத்தாலம் ரயிலடி தெருவில் அமைந்துள்ள மன்மதீசுவரர் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை விநாயகர் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் உத்ஸவம் தொடங்கி, முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களைச் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் வெடிக்க குடமுழுக்கு  நடைபெற்றது.
பின்னர் மன்மதீசுவரருக்கு மூலஸ்தான குடமுழுக்கு  மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.  திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார், நடனசுந்தரம் குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் சர்வ சாதகம் செய்து வைத்தனர்.  ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் இளங்கோவன், ஜெயராஜ், தம்பி. சேகர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/மன்மதீசுவரர்-கோயில்-குடமுழுக்கு-3153769.html
3153768 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் செம்பொன்னரங்கர் கோயிலில் சிறப்பு வழிபாடு DIN DIN Saturday, May 18, 2019 07:17 AM +0530 சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் செம்பொன்னரங்கர் பெருமாள் கோயிலில், சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான செம்பொன்னரங்கர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அல்லிமாமலராள் தாயார் சமேத செம்பொன்னரங்கர் பெருமாள் காட்சி தருகிறார். இங்கு  சுவாதி நட்சத்திரத்தையொட்டி, செம்பொன்னரங்கருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீப வழிபாடு ஆகியன நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தலத்தார் ரகுநாதன், நரசிம்மன், அர்ச்சகர் ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/செம்பொன்னரங்கர்-கோயிலில்-சிறப்பு-வழிபாடு-3153768.html
3153767 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம் DIN DIN Saturday, May 18, 2019 07:17 AM +0530 வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 8-ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது. 
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வெள்ளிக்கிழமை (மே 17) நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் கா.ஆறுமுகம், திருக்குவளை துணை வட்டாட்சியர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஜி.முருகேசன், சிறப்பு தனிப் பிரிவுக் காவலர் ராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தனர். மேளதாள முழக்கங்களுடன் புறப்பட்ட தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மதியம் ஒரு மணியளவில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையொட்டி, வீதிகளில் ஆங்காங்கே நிழற்பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி, திருக்குவளை காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் முருகப்பா, சுகுமார் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/தியாகராஜ-சுவாமி-கோயில்-தேரோட்டம்-3153767.html
3153766 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சந்தன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளானோர் பங்கேற்பு DIN DIN Saturday, May 18, 2019 07:17 AM +0530 நாகை, காடம்பாடியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நாகை காடம்பாடியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் மற்றும் இக்கோயிலின் பெரியநாயகி அம்மன், காத்தவராயசுவாமி உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ள திட்டமிட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. 
திருப்பணிகளின் நிறைவில், கோயிலின் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையின் நிறைவில், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை சுமார் 10 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான மகா குடமுழுக்கும் நடைபெற்றன. 
இந்த நிகழ்ச்சிகளில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/சந்தன-மாரியம்மன்-கோயில்-குடமுழுக்கு-திரளானோர்-பங்கேற்பு-3153766.html
3153765 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு DIN DIN Saturday, May 18, 2019 07:17 AM +0530 நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ நிகழ்ச்சியாக புஷ்ப பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலின் பிரமோத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான செடில் உத்ஸவம் மற்றும் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  பிரமோத்ஸவ நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றான புஷ்ப பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் புஷ்ப பல்லக்குக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு நடைபெற்றது.  
அதைத் தொடர்ந்து, ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.  திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு 
மேற்கொண்டனர்.  பிரமோத்ஸவ நிறைவு நிகழ்ச்சியாக உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/நெல்லுக்கடை-மாரியம்மன்-கோயில்-புஷ்ப-பல்லக்கு-3153765.html
3153764 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பேருந்து மோதி மாடு பலி: கிராம மக்கள் போராட்டம் DIN DIN Saturday, May 18, 2019 07:16 AM +0530 நாகை அருகே தனியார் பேருந்து மோதியதில் மாடு ஒன்று பலியானது. 2 மாடுகள் காயமடைந்தன. இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாகை தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட பரவை அருகே மாடுகள் சில சாலையைக் கடக்க  முற்பட்டுள்ளன. அப்போது, நாகையிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற  தனியார் பேருந்து ஒன்று அந்த மாடுகள் மீது மோதியது. இச்சம்பவத்தில் ஓர் எருமை மாடு அவ்விடத்திலேயே பலியானது. 2 மாடுகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 
போராட்டம்...
 இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் அந்தப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை- வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/பேருந்து-மோதி-மாடு-பலி-கிராம-மக்கள்-போராட்டம்-3153764.html
3153763 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவருக்கு இன்று மகா அபிஷேகம் DIN DIN Saturday, May 18, 2019 07:16 AM +0530 வைகாசி விசாகத்தையொட்டி, சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகம் சனிக்கிழமை காலை (மே 18) நடைபெறுகிறது.
சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் தனிச் சன்னிதி கொண்டு காட்சியளிக்கிறார் சிக்கல் சிங்காரவேலவர். சூரனை அழிக்க இத்தலத்தில் அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப் பெருமான் சக்திவேல் பெற்றார் என்பது இத்தலத்து ஐதீகம்.
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் குறிப்பிடப்படும், வைகாசி விசாகம் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, வைகாசி விசாக நட்சத்திர நாளான சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சண்முகார்ச்சனையும் நடைபெறுகின்றன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/வைகாசி-விசாகம்-சிக்கல்-சிங்காரவேலவருக்கு-இன்று-மகா-அபிஷேகம்-3153763.html
3153762 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பிடாரி அம்மன் கோயிலில் மகோத்ஸவம் DIN DIN Saturday, May 18, 2019 07:15 AM +0530 நாகூர் பிடாரி அம்மன் கோயில் மகோத்ஸவ பெருவிழா நிகழ்வுகளில் ஒன்றான  தேர் வீதியுலா, மகாபிஷேகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நாகூர் பிடாரி அம்மன் கோயில் மகோத்ஸவ பெருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இவ்விழா மே 8-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி,  நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மகோத்ஸவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பிடாரி அம்மன் தேர் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், வீதியுலாவும் நடைபெற்றன. கோயில் முன் தொடங்கிய தேர் வீதியுலா, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், பெரியாச்சி, வீரனார் படையல் மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/18/பிடாரி-அம்மன்-கோயிலில்-மகோத்ஸவம்-3153762.html
3153212 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஜாக்டோ - ஜியோ போராட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: அரசு ஊழியர் சங்க வட்ட மாநாட்டில் கோரிக்கை DIN DIN Friday, May 17, 2019 08:27 AM +0530 ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என அரசு ஊழியர் சங்க நாகை வட்ட மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்க நாகை வட்ட மாநாடு நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம். செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். செயலாளர் மு. தமிழ்வாணன், பொருளாளர் எம். மேகநாதன் ஆகியோர் வேலை அறிக்கை மற்றும் வரவு- செலவு அறிக்கைப் படித்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், பொருளாளர் பா. ராணி, துணைத் தலைவர் எஸ். ஜோதிமணி, இணைச் செயலாளர்கள் கே. ராஜூ, து. இளவரசன் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர்.
அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் நிறைவுரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் என். அமுதா வரவேற்றார். வட்ட நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும், மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.  நாகை தாமரைக்குளத்தை செப்பனிட்டு உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.  நாகை நகர சாலைகளை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும், நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மேம்படுத்த வேண்டும். நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் கேடுகளைக் கருத்தில் கொண்டு நிலக்கரி இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/ஜாக்டோ---ஜியோ-போராட்ட-வழக்குகளை-அரசு-திரும்பப்-பெற-வேண்டும்-அரசு-ஊழியர்-சங்க-வட்ட-மாநாட்டில்-கோரிக்-3153212.html
3153210 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பொதுமக்கள் பாரட்டு DIN DIN Friday, May 17, 2019 08:27 AM +0530 மணிக்கிராமம் அரசுப் பள்ளி ஆசிரியர் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததால் பொதுமக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். 
திருவெண்காடு அருகே மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் திருமுருகன். இவர், சீர்காழியில் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகன் பிரித்வித்யாவை புதன்கிழமை அப்பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு தாம் பணியாற்றும் மணிக்கிராமம் அரசுப் பள்ளியில் சேர்த்தார். இதற்காக, பொதுமக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/அரசுப்-பள்ளி-ஆசிரியருக்கு-பொதுமக்கள்-பாரட்டு-3153210.html
3153208 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குறுவை நடவு வயலில் குழாய் பதிப்பு: உடலில் சேற்றை பூசிக்கொண்டு விவசாயிகள் போராட்டம் DIN DIN Friday, May 17, 2019 08:26 AM +0530 பொறையாறு அருகே குறுவை நடவு செய்த வயலில் எரிவாயு குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு சென்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடலில் சேற்றை பூசிக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்து செல்வதற்காக குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் உழவு செய்த வயல்களில் குழாய் பதிப்பதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்நிலையில், முடிகண்டநல்லூர் கிராமத்தில் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகிய விவசாயிகள் தங்களது வயல்களில் குறுவை நடவு பணி செய்துள்ளனர். பயிர்கள் வளரவேண்டிய நிலையில் திடீரென்று கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சென்றுள்ளது. இதையறிந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை அப்பணியைத் தடுத்து நிறுத்தினர். 
இதையடுத்து, நடவு செய்த வயலில் பள்ளம் தோண்டாமல் இயந்திரம் அங்கிருந்து எடுத்துக்கொண்டு செல்லப்பட்டது. பின்னர், நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, உடலில் சேற்றை பூசிக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயத்தை அழித்து, கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்வதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை 
விடுத்துள்ளனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/குறுவை-நடவு-வயலில்-குழாய்-பதிப்பு-உடலில்-சேற்றை-பூசிக்கொண்டு-விவசாயிகள்-போராட்டம்-3153208.html
3153206 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சேதமடைந்த கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை DIN DIN Friday, May 17, 2019 08:26 AM +0530 சேதமடைந்த நிலையில் உள்ள கோயில்களைப் புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்த அறநிலையத் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை, வடக்குப்பொய்கைநல்லூர், நந்திநாதேசுவரசுவாமி திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பொ. முத்தையன், தமிழக அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: 
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சுமார் 38,491 கோயில்கள் உள்ளன. கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளன. 
இதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோயில்களும் சேதமடைந்த நிலையில், பல ஆண்டுகளாக குடமுழுக்கு விழா காணாமல் உள்ளது. கோயில்கள் நமது நாட்டின் பெருமையையும், சிறப்பையும் வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்ற வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை உரிய வகையில் பராமரித்து, அவற்றுக்கு உரிய காலத்தில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும்.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை கணக்கெடுப்பு மேற்கொண்டு, குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு 12 ஆண்டுகளைக் கடந்த கோயில்களைப் பட்டியலிட்டு, அந்தக் கோயில்களுக்கு ஊர் மக்களின் உதவியுடன் குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் கோபுரங்களிலும், மதில் சுவர்களிலும், பிராகாரங்களிலும் மண்டியுள்ள செடிகளை அகற்றிடவும்,  நிர்வாக நலன்கருதி அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களையும் நியமிக்கவும் இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/சேதமடைந்த-கோயில்களை-புனரமைத்து-குடமுழுக்கு-நடத்தக்-கோரிக்கை-3153206.html
3153204 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூலிகை கஞ்சி DIN DIN Friday, May 17, 2019 08:26 AM +0530 மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு புதன்கிழமை மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ஜெயின் சங்கம் மற்றும் திருவடி அறக்கட்டளை இணைந்து மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை இலவசமாக மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயின் துறவி சுமித்ரா குரு மகராஜ் கலந்து கொண்டு, மூலிகை கஞ்சியை வழங்கி, நோயாளிகளுக்கு அருளாசி கூறினார். 
இந்த மூலிகை கஞ்சி, பச்சரிசி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, அரிசி திப்பிலி, பச்சை மிளகாய், தேங்காய், புதினா, மல்லி ஆகியவற்றை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதாகவும், மூலிகைக் கஞ்சி எளிதில் செரிமானம் ஆகும் வகையில் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் விரும்பி உட்கொள்வதாகவும், இதன்மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் வரை தினசரி பயன்பெறுவதாகவும், இதை உட்கொள்பவர்கள் உடல் உபாதைகள் பல நீங்குவதாக கூறியதாகவும் ஜெயின் சங்கம் மற்றும் திருவடி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், இந்த அறக்கட்டளை சார்பில், நாள்தோரும் 200 லிட்டர் சுடு தண்ணீரும் நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/அரசு-மருத்துவமனையில்-நோயாளிகளுக்கு-மூலிகை-கஞ்சி-3153204.html
3153202 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் துணை சுகாதார நிலையம் அமைக்க ஆய்வு DIN DIN Friday, May 17, 2019 08:26 AM +0530 சீர்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் அண்மையில் இடம் ஆய்வு செய்தார். 
சட்டநாதபுரம் ஊராட்சி கேவிஎஸ். நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும்  செயல்படும் செவிலியரை  கொண்டு இயங்கக்கூடிய துணை சுகாதாரநிலையம் அமையவுள்ளது. இதற்கான இடத்தை நாகை மாவட்ட  வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் இப்பகுதியில் ஏற்கெனவே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சேவை மைய கட்டடம் இருப்பதால் மாற்று இடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தினர். ஆய்வின்போது, மயிலாடுதுறை கோட்ட அலுவலர் கண்மணி, சீர்காழி வட்டாசியர் சபிதாதேவி, மண்டல துணை வட்டாசியர் பாபு, நில அளவை பிரிவு துணை ஆய்வாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/துணை-சுகாதார-நிலையம்-அமைக்க-ஆய்வு-3153202.html
3153200 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: கூட்டுப் பிரார்த்தனை DIN DIN Friday, May 17, 2019 08:25 AM +0530 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளது என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன்
 தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கு, வெள்ளிக்கிழமை (மே 17) வாராணசி மற்றும் காசியில் தமிழீழம் மலர்ந்திட கூட்டுப் பிரார்த்தனையும், மே 18-இல் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகள்,  தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் கங்கைக்கரையில் நடைபெறஉள்ளது. காசியில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொள்கிறார். அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நதிக்கரைகளிலும் தர்ப்பண நிகழ்வும் கோயில்களில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. அந்த வகையில், சனிக்கிழமை (மே 18) சீர்காழி உப்பனாற்றங்கரையில் தர்ப்பணமும், சட்டைநாதர் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/முள்ளிவாய்க்கால்-நினைவு-தினம்-கூட்டுப்-பிரார்த்தனை-3153200.html
3153199 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் உலக நன்மைக்காக முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வேள்வி DIN DIN Friday, May 17, 2019 08:25 AM +0530 நாகை மாவட்டம், மகிழி முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூண்டி அருகே மகிழியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், பழைமையான கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வருடாபிஷேகத்தையொட்டியும், உலக நன்மைக்காக பிரார்த்தித்தும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது.  108 வகையான மூலிகைப் பொருள்கள் மற்றும் காய், கனிகள் யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்டன. யாகத்தின் நிறைவில்,  மகா பூர்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் கோயில் பிராகாரம் சுற்றி கோயிலுக்கு கொண்டுச் செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், கடங்களிலிருந்த புனித நீரைக் கொண்டும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/உலக-நன்மைக்காக-முத்துமாரியம்மன்-கோயிலில்-சிறப்பு-வேள்வி-3153199.html
3153196 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மே 18 மின் நிறுத்தம் DIN DIN Friday, May 17, 2019 08:25 AM +0530
நாகை, திருமருகலில்... 

நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (மே 18) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வைர. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி,  நாகை, திருமருகல், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது. துணை மின் நிலையம் வாரியாக மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : 
நாகப்பட்டினம்: நாகை,  வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி நகரம், செருதூர், பரவை. 
திருமருகல்: திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு : திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.


சீர்காழி பகுதியில்...
சீர்காழி பகுதியில் சனிக்கிழமை (மே 18) மின்விநியோகம் இருக்காது என சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) சு. சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயில் துணை மின்நிலையத்தில் மே 18-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி,திருப்புங்கூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/மே-18-மின்-நிறுத்தம்-3153196.html
3153193 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு DIN DIN Friday, May 17, 2019 08:24 AM +0530 சீர்காழி, திருக்கோலக்கா, திருப்புன்கூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு, பிரதோஷத்தையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரதோஷ நாயகர் - பிரதோஷ நாயகிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 
இதேபோல், சீர்காழி பொன்னாகவல்லி உடனாகிய  நாகேஸ்வரமுடையார்  கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருக்கோலக்கா ஓசைநாயகிஅம்பாள் உடனாகிய திருத்தாளமுடையார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில், திருப்புன்கூர் சௌந்தரவல்லி அம்மன் உடனாகிய சிவலோகநாதர் சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/சிவன்-கோயில்களில்-பிரதோஷ-வழிபாடு-3153193.html
3153192 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கதண்டு கடித்து 8 பேர் காயம் DIN DIN Friday, May 17, 2019 08:24 AM +0530 சீர்காழி அருகே கதண்டு கடித்து 8 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.
சீர்காழி அருகேயுள்ள கூத்தியம்பேட்டையில் ஒதியன் மரத்தில் கதண்டு கூடுகட்டியிருந்தது. இந்நிலையில், ஒதியன் மரத்தில் மீது தென்னைமட்டை விழுந்ததில் அதில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து சென்று அப்பகுதியில் இருந்த ராஜேஸ்வரி (30), வளர்மதி (35), ராமு (54), பிச்சையம்மாள் (80), வினோதினி (16) உள்ளிட்ட 8 பேரை கதண்டு கடித்தது. இதில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/கதண்டு-கடித்து-8-பேர்-காயம்-3153192.html
3153190 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சுவர்ணபுரீசுவரர் கோயிலில் திருக்கல்யாணம் DIN DIN Friday, May 17, 2019 08:24 AM +0530 தெற்குப் பொய்கைநல்லூர் பிருகன் நாயகி சமேத சுவர்ணபுரீசுவரர் மற்றும் செல்லியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 
நாகை அருகே தெற்குப் பொய்கைநல்லூரில் உள்ள பிருகன்நாயகி சமேத சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில் குபேர பகவானும், பஞ்சபாண்டவர்களும் வழிபட்டத் தலமாகவும், கோரக்கச் சித்தர் மூலிகைகளால் தங்கம் செய்து இத்தலத்தில் இறையருள் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், தீமிதி திருவிழா நடைபெறும் ஒரே சிவாலயமாக விளங்குகிறது இக்கோயில். 
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கடந்த மே 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 
இதையொட்டி, சுவாமி - அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வசந்த மண்டபம் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து, மேளதாள முழக்கங்களுடன் ஊர்மக்கள் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மேளதாளங்களும், வேதமந்திரங்களும் முழங்க, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தீர்த்தவாரி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (மே 18) நடைபெறுகின்றன.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/சுவர்ணபுரீசுவரர்-கோயிலில்-திருக்கல்யாணம்-3153190.html
3153188 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாயூரநாதர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் DIN DIN Friday, May 17, 2019 08:24 AM +0530 மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் புதன்கிழமை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. 
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில், வைகாசி விசாக பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாளான புதன்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. விழாவையொட்டி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருமணக் கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். 
அங்கு, திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதில், சிவபுரம் வேத ஆகம பாடசலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். 
விழாவின் முக்கிய உத்ஸவங்களான திருத்தேர் உத்ஸவம் வெள்ளிக்கிழமையும் (மே 17) , வைகாசி விசாகத் தீர்த்தவாரி மே 18-ஆம் தேதியும், தெப்பத் திருவிழா மே 21-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/மாயூரநாதர்-கோயிலில்-சுப்ரமணிய-சுவாமி-திருக்கல்யாண-உத்ஸவம்-3153188.html
3153187 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மீது தாக்குதல்: 6 பேர் கைது  DIN DIN Friday, May 17, 2019 08:24 AM +0530 மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக 6 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:   மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக். பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில், பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் துரை சண்முகம் (70) திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்கியதாகத் தெரிகிறது.  இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து, வடகரை பகுதியைச் சேர்ந்த ஜாசிக் (19), முகமது சபிக் (19), முகமது அல்சபா (18), இஜாஸ் அகமது (18), முகமது இர்பான் (18), அப்துல் பாசிக் ரஹ்மான் (19) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/ஆர்எஸ்எஸ்-பொறுப்பாளர்-மீது-தாக்குதல்-6-பேர்-கைது-3153187.html
3153185 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கோடை வெப்பம்: கால்நடைகளை பாதுகாக்க மருத்துவர்கள் அறிவுரை DIN DIN Friday, May 17, 2019 08:23 AM +0530 கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாக்க, வலிவலம் கால்நடை மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளது. 
இதுகுறித்து, வலிவலம் கால்நடை மருத்துவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை காலத்தில் வெப்ப அயர்ச்சியிலிருந்து கால்நடைகளை பராமரிப்பது குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோடை காலத்தில் வெப்ப அயர்ச்சியிலிருந்து கால்நடைகளை பராமரிக்க பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்களை அமைக்க வேண்டும், கால்நடைகளுகு போதுமான குடிநீர் கொடுக்க வேண்டும், வெப்பம் மிகுதியான காலங்களில் கால்நடைகளை நாள்தோறும் குளிப்பாட்ட வேண்டும், வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த போதுமான இடவசதி கொடுக்க வேண்டும், நல்ல காற்றோட்டமான முறையில் கால்நடை பண்ணைகளை அமைக்க வேண்டும். கால்நடைகளுக்கு அதிகளவு தண்ணீர் வைப்பது நல்லது. இதன்மூலமாக வெப்ப அயர்ச்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். 
கால்நடைகளின் வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளான நிழலில் தஞ்சம் புகுதல், அதிகளவு உமிழ்நீர் வடிதல், பசியின்மை, வேகமாய் மூச்சு விடுதல், உயர் உடல் வெப்பநிலை, திறந்த நிலையில் சுவாசித்தல், நடுக்கம், கீழே விழுதல் உள்ளிட்டவைகள் தென்படும்பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்று வெப்ப அயர்ச்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கால்நடை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/கோடை-வெப்பம்-கால்நடைகளை-பாதுகாக்க-மருத்துவர்கள்-அறிவுரை-3153185.html
3153183 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல் DIN DIN Friday, May 17, 2019 08:23 AM +0530 திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) வரையிலான அகல ரயில் பாதையாக்கும் திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழநாடு அரசு அலுவலர் ஒன்றியம் அமைப்பின் வட்டக் கிளைக் கூட்டம் அதன் தலைவர் வ. சிவப்பிரகாசம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் நாகை சு. மோகன், மாவட்டத் துணைத் தலைவர் க. ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்தில், வேதாரண்யம் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவிலும், செப் 21-இல் தஞ்சையில் நடைபெறும் மண்டல நூற்றாண்டு விழாவிலும் சிறப்பாக பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி-அகல-ரயில்-பாதை-பணியை-விரைவுபடுத்த-வலியுறுத்தல்-3153183.html
3153180 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு DIN DIN Friday, May 17, 2019 08:22 AM +0530 நாகை நகராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், செல்லதுரை, நகர்நல அலுவலர் பிரபு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். வீதிகளின் தூய்மைப் பராமரிப்பு, ஏடிஎஸ் கொசு ஒழிப்பு, மக்களிடையே டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியன குறித்து உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/டெங்கு-ஒழிப்பு-விழிப்புணர்வு-உறுதிமொழி-ஏற்பு-3153180.html
3153178 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு DIN DIN Friday, May 17, 2019 08:22 AM +0530 வேதாரண்யத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள ஜே.பி. காம்ப்ளக்ஸ் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகம் ஞாயிறுக்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 9 முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும். 
மற்ற கடைகளுடன் ஒப்பிடும் நிலையில் அனைத்து மருந்துகளின் விலை சுமார் 60 முதல் 90 சதவீதம் வரை குறைவில் கிடைக்கும். மருத்துவர் பரிந்துரை சீட்டின்கீழ் மருந்துகள், மருத்துவம் சார்ந்த இதரப் பொருள்கள் கிடைக்கும்.
வேலை நாள்களில் உடல் எடை, ரத்த அழுத்தம் இலவசமாக பார்த்துக் கொள்ளவும், குறைந்த கட்டணத்தில் சர்க்கரை பரிசோதனையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன. 
மருந்தக திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். தஞ்சை கோட்டச் செயலாளர் தங்க. வரதராஜன், மாவட்டச் செயலாளர்கள் பேட்டை சிவா (திருவாரூர்), நேதாஜி (நாகை), தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, அதிமுக பிரமுகர் பி.வி.கே. பிரபு, திமுக நகரச் செயலாளர் மா.மீ. புகழேந்தி, கல்வியாளர் பி.வி.ஆர். விவேக், வர்த்தகர் சங்க மாவட்டத் தலைவர் வேதநாயகம் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/வேதாரண்யத்தில்-பாரத-மக்கள்-மருந்தகம்-திறப்பு-3153178.html
3153176 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க பண்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா DIN DIN Friday, May 17, 2019 08:22 AM +0530 தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்புப் பயிற்சி முகாமின், நிறைவு விழா மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் என். குடியரசு தலைமை வகித்தார். தணிக்கையாளர் கே. பிரசன்னா முன்னிலை வகித்தார். முகாம் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க தென் தமிழக அமைப்பாளர் ஏ. செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
இதில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். முடிவில், முகாம் செயலாளர் கல்யாண்சிங் நன்றி தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 26}ஆம் தேதி தொடங்கிய முகாம் வியாழக்கிழமை (மே 16) நிறைவடைகிறது. கடந்த 20 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில் 74 பேர் கலந்துகொண்டு, யோக கலை பயிற்சி, மரம் நடுதல், கோ பூஜை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல், பிரசாரம் செய்தல், பாரத நாட்டின் தலைவர்கள் குறித்த அறிமுகம் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றனர்.
முகாமில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் கோவி. சேதுராமன், மாவட்ட த்தலைவர் நாஞ்சில் பாலு, நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/ராஷ்ட்ரீய-ஸ்வயம்சேவக-சங்க-பண்புப்-பயிற்சி-முகாம்-நிறைவு-விழா-3153176.html
3153174 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி புகார் DIN DIN Friday, May 17, 2019 08:22 AM +0530 மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் எஸ். வாஞ்சிநாதன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியுள்ளார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், அவரது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/கமல்ஹாசனை-கைது-செய்யக்-கோரி-புகார்-3153174.html
3153173 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: நாளை நடைபெறுகிறது DIN DIN Friday, May 17, 2019 08:22 AM +0530 நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரமோத்ஸவ திருத்தேரோட்டம் சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
5 ஆழ்வார்களால் அதிக பாசுரங்களில் (129) மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்யதேசமாக உள்ளது திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில். இத்தலம், பெருமாளின் கீழை வீடாகவும், பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அளப்பரிய ஆன்மிகப் புகழ்ப் பெற்ற இக்கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான விழா மே 10}ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவையும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன. பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 8 முதல் 8. 45 மணிக்குள் பெருமாள், உபயநாச்சியார் நால்வருடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/திருக்கண்ணபுரம்-செளரிராஜ-பெருமாள்-கோயில்-தேரோட்டம்-நாளை-நடைபெறுகிறது-3153173.html
3153171 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சின்ன ஆலாலசுந்தரம் கிராமமக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தல் DIN DIN Friday, May 17, 2019 08:21 AM +0530 சீர்காழி அருகே சின்னஆலாலசுந்தரம் கிராமத்தில் உள்ள 60 குடும்பங்களுக்குப் போதிய குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகேயுள்ள சின்னஆலாலசுந்தரம் கிராமத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நிலத்தடி நீர் உவர்நீராகவும் காவி நீராகவும் மாறிவிட்டதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியவில்லை. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இங்கு வரும் குடிநீர் உரிய அளவு வந்து சேராததால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்குள்ளவர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இங்குள்ள ஒரே ஒரு பம்பின் மூலம் வரும் காவி நீரை குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காவி நீரைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆரம்ப சுகாதார செவிலியர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே, சின்ன ஆலாலசுந்தரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, நிலத்தடி நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்க ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/சின்ன-ஆலாலசுந்தரம்-கிராமமக்களுக்கு-குடிநீர்-வழங்க-வலியுறுத்தல்-3153171.html
3153169 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் எலித் தொல்லையால் 600 ஏக்கர் பருத்தி சேதம்: விவசாயிகள் கவலை DIN DIN Friday, May 17, 2019 08:21 AM +0530 திருமருகல் பகுதியில் எலித் தொல்லையால் 600 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள பருத்தி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், பெருநாட்டான்தோப்பு, தென்னமரக்குடி, ஆலத்தூர், இடையாத்தங்குடி, கணபதிபுரம், பெரறக்குடி, அம்பல் மற்றும் அகரக்கொந்தகை, விற்குடி, வாழ்குடி உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 600 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
சம்பா சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் குறைந்த அளவு மகசூல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பருத்தி சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் பருத்தி செடிகள் எலித் தொல்லையால் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும், ஏக்கருக்கு ரூ. 45 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாகவும், கோடை வெயிலில் சப்பாத்தி பூச்சித் தொல்லை அதிகம் இருப்பதாலும் மகசூல் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு ஏக்கரில் 25 குவிண்டால் பருத்தி பஞ்சு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக ஏக்கருக்கு 10 குவிண்டால் கிடைப்பதே சந்தேகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல் சாகுபடியைத் தொடர்ந்து பருத்தி சாகுபடியிலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/17/எலித்-தொல்லையால்-600-ஏக்கர்-பருத்தி-சேதம்-விவசாயிகள்-கவலை-3153169.html
3152451 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள் DIN DIN Thursday, May 16, 2019 07:28 AM +0530 மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 16) மதியம் 1 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லூரி பருவத் தேர்வு முடிவுகளை w‌w‌w.​a‌v​c​c‌o‌l‌l‌e‌g‌e.‌n‌e‌t என்ற இணையதள முகவரியிலும் காணலாம். மேலும், பருவத் துணைத் தேர்வுகளுக்கு (ஜூன்-2019) விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 13-ஆம் தேதியாகும் என தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/ஏவிசி-கல்லூரி-தேர்வு-முடிவுகள்-3152451.html
3152449 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தீர்த்தவாரி DIN DIN Thursday, May 16, 2019 07:27 AM +0530 திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை வைகாசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 
திருவெண்காட்டு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவான் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு சிவனின் முக்கண்ணிலிருந்து தோன்றிய மூன்று பொறிகளால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய முக்குளங்கள் தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. புதன்கிழமை வைகாசி மாத பிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர். கோயில் நிர்வாக அலுவலர் முருகன், கோயில் மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/சுவேதாரண்யேசுவரர்-கோயிலில்-தீர்த்தவாரி-3152449.html
3152448 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சட்டைநாதர் கோயிலில் கோ பூஜை வழிபாடு DIN DIN Thursday, May 16, 2019 07:27 AM +0530 சீர்காழி சட்டைநாதர் கோயிலில் புதன்கிழமை வைகாசி மாதபிறப்பையொட்டி நடைபெற்ற சிறப்பு கோ பூஜை வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு, வைகாசி மாதபிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, மலர்கள் தூவி வலம் வந்து  வணங்கினர். இதில், கோ பூஜை வழிபாட்டுக் குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். 
அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு: இதேபோல் வைகாசி மாதபிறப்பையொட்டி, அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக் குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/சட்டைநாதர்-கோயிலில்-கோ-பூஜை-வழிபாடு-3152448.html
3152447 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு DIN DIN Thursday, May 16, 2019 07:26 AM +0530 மயிலாடுதுறை அருகே புதன்கிழமை பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து வட்டாரப் போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.  
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளிகளின் பேருந்து, வேன் ஆகிய வாகனங்களின் பாதுகாப்பு குறித்து  கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இதில், மயிலாடுதுறை கோட்டத்தில் இயக்கப்படும் 314 பள்ளி வாகனங்களில் 284 வாகனங்கள் சோதனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 26 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு, இம்மாத இறுதிக்குள் குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. 
ஆய்வில் வாகனங்களை இயக்கிப் பார்த்தும், வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், முதலுதவி வசதிகள், அவசர கால வழி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
ஆய்வின்போது, மயிலாடுதுறை கோட்டாட்சியர் இ. கண்மணி, வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல் (மயிலாடுதுறை), ராம்குமார் (சீர்காழி) உள்ளிட்ட போக்குவரத்து அலுவலர்கள் 
உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/பள்ளி-வாகனங்களின்-பாதுகாப்பு-குறித்து-ஆய்வு-3152447.html
3152446 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அன்னையர் தின விழா: வேளாக்குறிச்சி ஆதீனம் பங்கேற்பு DIN DIN Thursday, May 16, 2019 07:26 AM +0530 குத்தாலம் ஆதிசங்கரர் பேரவையின் அன்னையர் தின விருதுகள் வழங்கும் விழா குத்தாலம் ராஜ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு பேரவைத் தலைவர் ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் கே. செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேளாக்குறிச்சி  ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசார்ய சுவாமிகள் கலந்து கொண்டு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பழைய கூடலூர் இரெ. ராஜமாணிக்கத்தின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட 8 பேருக்கு அன்னையர் தின விழா விருதுகள் வழங்கி அருளாசி கூறினார். 
விருதுபெற்ற அனைவருக்கும் உத்திராட்ச மாலை, தங்க மோதிரம், தலைகிரீடம்,பொன்னாடை அணிவித்து, பொற்கிழி தலா ரூ. 5ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் சாமிநாதன், அமைப்பாளர் மணிகண்டன், ஆலோசகர் ஏஆர்சி விஸ்வநாதன  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/அன்னையர்-தின-விழா-வேளாக்குறிச்சி-ஆதீனம்-பங்கேற்பு-3152446.html
3152445 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, May 16, 2019 07:26 AM +0530 நாகை மாவட்டம், சீர்காழியில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி சின்னதம்பி நகரை சேர்ந்தவர் விவசாயி க. நாகராஜன் (58) தனது மகனுக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அரசு பணி வாங்குவதற்காக 2016-ஆம் ஆண்டில் சிலரிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
பணம் பெற்றுக்கொண்டவர்கள் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணி பெற்றுத்தராமல் இருந்ததாகவும், இதில் ஏமாற்றமடைந்த நாகராஜன் சம்பந்தப்பட்டவர்களிடம் தாம் கொடுத்த ரூ. 30 லட்சத்தை  திருப்பிக்கேட்டதாக கூறப்படுகிறது. 
இருப்பினும், அரசுப்பணி பெற்றுத்தருவதாக கூறி நாகராஜனிடம் பணம் பெற்றவர்கள் திருப்பிக்கொடுக்கவில்லையாம். இதுகுறித்து, சீர்காழி காவல் நிலையத்தில் நாகராஜன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார் சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளையநாதன், விருத்தாச்சலம் ஆழியூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், இராமநாதபுரம் கமூதி பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/அரசு-வேலை-வாங்கித்-தருவதாகக்-கூறி-ரூ30-லட்சம்-மோசடி-4-பேர்-மீது-வழக்கு-3152445.html
3152444 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம் DIN DIN Thursday, May 16, 2019 07:26 AM +0530 நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலின் பிரமோத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. பிரமோத்ஸவ நிகழ்ச்சியாக தினமும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 
பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான செடில் மற்றும் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய செடில் உத்ஸவம் திங்கள்கிழமை காலை நிறைவடைந்தது. சுமார் 24 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு செடில் சுற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றப்பட்டது. பிரமோத்ஸவ நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து, இரவு சுமார் 8 மணிக்கு இந்த உத்ஸவம் நடைபெற்றது. பிரமோத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சிகளாக விடையாற்றி மற்றும் புஷ்ப பல்லக்கு வெள்ளிக்கிழமையும், உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும்  நடைபெறுகின்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/நெல்லுக்கடை-மாரியம்மன்-கோயிலில்-ஊஞ்சல்-உத்ஸவம்-3152444.html
3152443 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: குருமகா சந்நிதானம் பங்கேற்பு DIN DIN Thursday, May 16, 2019 07:25 AM +0530 நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஞானபுரீசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தில் குருமகா சந்நிதானம் பங்கேற்றார். 
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை உடனாகிய ஞானபுரீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு பெருவிழா புதன்கிழமை தொடங்கி மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த 11 நாள்களும் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடும் நடைபெறுகிறது. அதன்படி, ஞானபுரீசுவரர் சுவாமி கோயில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரர், விநாயகர், முருகன் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் ஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடு நடத்தி, கொடிமரம் முன்பு வந்தனர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குருமகா சந்நிதானம் முன்னிலையில், காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
11 நாட்கள் நடைபெறும் பெருவிழா மற்றும் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டில் நாள்தோறும் சமயச் சொற்பொழிவு, கருத்தரங்கம், சமய பயிற்சி வகுப்பு, திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், முக்கிய நிகழ்ச்சியாக மே 21-ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவமும், மே 23-ஆம் தேதி திருத்தேரோட்டமும், மே 25-ஆம் தேதி ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவும், அன்றிரவு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும், 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஞானகொலுக் காட்சியும் நடைபெறவுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/தருமபுரம்-ஞானபுரீசுவரர்-கோயில்-ஆண்டுப்-பெருவிழா-கொடியேற்றம்-குருமகா-சந்நிதானம்-பங்கேற்பு-3152443.html
3152442 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா தேரோட்டம்: திரளானோர்  பங்கேற்பு DIN DIN Thursday, May 16, 2019 07:25 AM +0530 நாகை நீலாயதாட்சியம்மன் சமேத காயாரோகணசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
நாகை, நீலாயதாட்சியம்மன் சமேத காயாரோகணசுவாமி கோயில், தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற தலம். புண்டரீக முனிவரை இறைவன் தன் உடலுடன் ஆரோகணம் செய்து ஏற்றுக் கொண்ட இத்தலம், சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாகவும், அம்பாளின் ஆட்சி பீடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தில், தியாகராஜப் பெருமானுக்கு ரத்னசிம்மாசன சுந்தரவிடங்கர் என்ற திருப்பெயர் விளங்குகிறது. 
இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மே 1-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுந்தரவிடங்க தியாகராஜப் பெருமான் ஐதீக முறைப்படி, பாரவார தரங்க (கடல் அலைகளைப் போன்ற அசைவு) நடனத்துடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு
நடைபெற்றது.  
புதன்கிழமை காலை திருத்தேரில் தியாகராஜப் பெருமான், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், காலை 9.55 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டது. மேளதாள வாத்திய முழக்கங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, திரளான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் திருத்தேருக்கு
வடம்பிடித்தனர். 
செண்டை மேளம், டிரம்ஸ், கொம்பு என பல்வேறு வாத்திய முழக்கங்களுடன் இந்தத் தேரோட்டம் நடைபெற்றது.  நீலா கீழ வீதியிலிருந்து, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் வடக்கு வீதி வழியே வலம் வந்த இந்தத் தேர், புதன்கிழமை மாலை நிலையை அடைந்தது. தேரோடும் வீதிகளில் பல இடங்களில் குளிர் பானங்கள், நீர் மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
ஒரு திருமணக் கூடத்தில் ஓர் ஆன்மிக அமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
சீரமைக்கப்படாத வீதிகள்
தேரோட்டத்தையொட்டி, தேரோடும் வீதிகளை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தாததால், பல இடங்களில் சாலையின் குறுக்கே நீண்டிருந்த மரக்கிளைகள், தேரோட்டத்துக்குத் தடையாக இருந்தன. ஒரு சில பகுதிகளில் மின்கம்பிகளும் இடையூறாக இருந்தன. இதனால், தேருக்கு அழகூட்டும் வகையில் தொங்கவிடப்பட்டிருந்த தேர்ச்சீலை தோரணங்கள், தேருடன் இணைத்துக் கட்டப்பட  வேண்டிய சூழல் ஏற்பட்டது. 
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே சிறிய அளவிலான தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தண்ணீரைக் குடித்த பக்தர்கள், பாட்டில்களை சாலையிலே விட்டுச் சென்றது, வடம்பிடித்த பக்தளுக்கு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளுக்கும்  அசெளகரியங்களை  ஏற்படுத்தியது. 
தேரோட்டத்தையொட்டி, அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்களை போலீஸார் நடைமுறைப்படுத்தி, தேரோடும் வீதிகளில் போக்குவரத்தை சீரமைத்தனர். அந்த நேரங்களில் கார்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் கடைவீதிகள் வழியே பயணிக்கத் தொடங்கியதால், நாகை கடைவீதி, நாணயக்காரத் தெரு, எருத்துக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/நீலாயதாட்சியம்மன்-கோயில்-வைகாசி-விசாகப்-பெருந்திருவிழா-தேரோட்டம்-திரளானோர்-பங்கேற்பு-3152442.html
3152441 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் செம்பனார்கோவில் அருகே மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள்  எதிர்ப்பு DIN DIN Thursday, May 16, 2019 07:24 AM +0530 நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் கிணற்றை அமைத்துள்ளது. இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள எரிவாயு கிடங்குக்கு கொண்டு சென்று சேமிக்கும் வகையில் பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் விளைநிலங்களிடையே ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த குழாய்களை நிலஉரிமையாளர்களின் ஒப்புதலின்றி பதிக்கப்படுவதாலும், இந்த குழாய் மூலம் செல்லும் எரிவாயு கசிந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் நாங்கூர்,  வேட்டங்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தியதால் குழாய் பதிக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. 
இதையடுத்து, காவல் துறையினரின் பாதுகாப்புடன் தற்போது மீண்டும் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதற்கிடையே  செவ்வாய்க்கிழமை செம்பனார்கோவில், காளகஸ்தினாநாதபுரம் பகுதியில் விளைநிலங்களுக்கு இடையே குழாய் பதிக்கும் பணி தொடங்கின. இப்பணிகளை விவசாயிகள் மற்றும் நிலநீர்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. இந்நிலையில், புதன்கிழமை காலை கெயில் நிறுவன ஊழியர்கள் மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கினர். 
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: வருவாய் மற்றும் காவல் துறை மூலம் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறியும் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குழாய் பதிக்கும் பணி தொடர்ந்தால், பொதுமக்களை கிராமங்கள்தோறும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/செம்பனார்கோவில்-அருகே-மீண்டும்-எரிவாயு-குழாய்-பதிக்கும்-பணி-விவசாயிகள்--எதிர்ப்பு-3152441.html
3152440 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தியாகராஜ சுவாமி கோயில் வைகாசி விசாக பெருவிழா DIN DIN Thursday, May 16, 2019 07:24 AM +0530 திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து காட்சியளித்தார். 
இக்கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி நாள்தோறும் ஒரு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வழக்கம்போல், புதன்கிழமை சிறப்பு மலர் அலங்காரத்தில் ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து சந்திரசேகரும் அம்பாளும்  வீதியுலா வந்து காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வெள்ளிக்கிழமை (மே 17) நடைபெறவுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/தியாகராஜ-சுவாமி-கோயில்-வைகாசி-விசாக-பெருவிழா-3152440.html
3152439 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தேரோட்டம் DIN DIN Thursday, May 16, 2019 07:24 AM +0530 தியாகராஜ சுவாமி கோயில்...
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி, புதன்கிழமை  தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான கதகாரண்யமாகிய திருக்குவளை என்னும் திருக்கோளிலி  தியாகராஜ சுவாமி தேவஸ்தான வைகாசி பெருந்திருவிழா ஏப்ரல் 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மே 1-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 5 மணி அளவில் ரிஷப வாகனத்தில் தியாகராஜ சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து, காலை 10.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேர் கீழவீதி,தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மதியம் 1.30 மணியளவில் நிலையடியை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின்போது, ஆங்காங்கே நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வரதராஜப் பெருமாள் கோயில்...
சீர்காழி அருகேயுள்ள கூத்தியம்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூத்தியம்பேட்டையில் பெருந்தேவி தாயார் உடனாகிய வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மே 11-ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவைத் தொடர்ந்து, நாள்தோறும் சேஷவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினார். 
பின்னர், தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/தேரோட்டம்-3152439.html
3152438 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு DIN DIN Thursday, May 16, 2019 07:23 AM +0530 இந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட பாஜக சார்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட பாஜக தலைவர் கே. நேதாஜி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை அளித்த மனு: அரவக்குறிச்சியில் மே 12-ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என, இந்து மதத்தைத் திட்டமிட்டுக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில், இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. அவரது இந்தக் கருத்து இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. கோட்சேவை இந்து தீவிரவாதி என மதத்தின் பெயரால் குறிப்பிடுவது தவறானது. தேர்தல் வாக்குக்காக இந்து மதத்தை இழிவுப்படுத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தூண்ட முயற்சி செய்த கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தப் புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/கமல்ஹாசன்-மீது-நடவடிக்கை-கோரி-பாஜக-மனு-3152438.html
3152437 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கடத்தல் முயற்சியில் உயிரிழந்த பெண் உடல் அடக்கம் DIN DIN Thursday, May 16, 2019 07:23 AM +0530 நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கேசவன்பாளையத்தில் கடத்தல் முயற்சியில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் 4 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கேசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகள்கள் கவியரசி (22), கலையரசி (20). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் அனுஷ்யா (20) , மனோகரன் மகள் சரிதா (24) மற்றும் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அபிநயா (21) ஆகிய ஐந்து பேரும் பொள்ளாச்சியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். 
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த இவர்கள் மே 6-ஆம் தேதி இரவு பொள்ளாச்சி செல்வதற்காக கேசவன்பாளையத்திலிருந்து தரங்கம்பாடி பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த கார் கவியரசி, கலையரசி, அனுசியா, அபிநயா ஆகியோரை மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதற்கிடையில், பலத்த காயமடைந்த கவியரசி தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, மேற்குறிப்பிட்ட 5 பேரில் ஒருவரான சரிதா அளித்த புகாரின்பேரில் பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவியரசி மே 11-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் கேசவன்பாளையத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரில் வந்தவர்கள் இளம் பெண்களை கடத்த முயன்றதால் படுகாயமடைந்த கவியரசி உயிரிழந்ததாகக் கூறி பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய் மற்றும் காவல் துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காரில் வந்த மர்ம நபர்கள் பிடித்து விசாரணை செய்யப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
 இருப்பினும் சம்பவம் நிகந்து 4 நாள்களை கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் மீண்டும் பொதுமக்கள் பேச்சுவார்த்ததை நடத்தினர். இதில், சுமுக நிலை நிலை ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை கவியரசியின் சடலத்தை சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/கடத்தல்-முயற்சியில்-உயிரிழந்த-பெண்-உடல்-அடக்கம்-3152437.html
3152436 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீது சிவசேனா புகார் DIN DIN Thursday, May 16, 2019 07:22 AM +0530 மத வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா கட்சி சார்பில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிவசேனா கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் சுந்தரவடிவேலவன், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகார் மனுவின் விவரம் : கடந்த 13-ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் ஒரே கொள்கை கொண்டதுதான் எனப் பொருள்படும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/காங்கிரஸ்-தலைவர்-கேஎஸ்-அழகிரி-மீது-சிவசேனா-புகார்-3152436.html
3152435 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விவசாயிடமிருந்து ரூ. 75 ஆயிரம் வழிபறி DIN DIN Thursday, May 16, 2019 07:22 AM +0530 சீர்காழியில்  விவசாயி ஒருவரிடமிருந்து ரூ. 75 ஆயிரத்தை வழிபறி செய்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி அருகேயுள்ள கீழமாத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரவேல் (50)  புதன்கிழமை சீர்காழியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 75 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளார். அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்திரவேலுவை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து முகவரி விசாரித்துள்ளனர். திடீரென வழி மறித்ததால் நிலை தடுமாறி கையிலிருந்த செல்லிடப்பேசியை தவறவிட்ட சந்திரவேல் கீழே குனிந்து அதை எடுத்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சந்திரவேலு தன்னுடை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்த, புகாரின்பேரில் சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/may/16/விவசாயிடமிருந்து-ரூ-75-ஆயிரம்-வழிபறி-3152435.html