Dinamani - நாகப்பட்டினம் - https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 1794 அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் ஷேல் எரிவாயு திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல் kirthika DIN Friday, June 3, 2016 01:37 AM +0530 ஷேல் எரிவாயு திட்டம் எனும் பாறை எரிவாயுத் திட்டத்தை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கவேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற பேராசிரியர் த.ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

ஷேல் எரிவாயு திட்டத்திற்கு தடைகோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஷேல் எரிவாயு திட்டம் குறித்து நிபுணர்களை ஆலோசித்து தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுóப்பதற்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கும், வண்டல் மண் பாறையில் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மத்திய பெட்ரோலியத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு மட்டும் எதிர்ப்பு உருவாகிய நிலையில்

ஷேஸ் எரிவாயு திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் எனக் கூறி வந்த, ஓ.என்.சி.ஜி. நிறுவனம் தற்போது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்குப் பின்னர் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு பல இடங்களில் ஆழ் குழாய்கள் பதிக்கும் பணிகளையும் செய்து வருகின்றது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்க முயற்சித்தபோது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் அனுமதியில்லை என தெரிவித்தார்.

மீத்தேன் எரிவாயு திட்டத்திற்காக தமிழக முதல்வர் பிறப்பித்த இந்த உத்தரவு ஷேல் எரிவாயு திட்டத்திற்கும் பொருந்தும் என்பதால், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் த.ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டம்: முன்னதாக, மயிலாடுதுறை மகாதானத்தெருவில், வியாழக்கிழமை த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/jun/03/ஷேல்-எரிவாயு-திட்டத்தை-தமிழக-அரசு-நிராகரிக்கமீத்தேன்-திட்ட-எதிர்ப்புக்-கூட்டமைப்பு-வலியுறுத்தல்-1794.html
1701 அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மன்னார்குடியில் டிஆர்பி ராஜா நன்றி தெரிவிப்பு kirthika DIN Thursday, June 2, 2016 01:37 AM +0530 நீடாமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு மன்னார்குடி தொகுதி பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.

கோவில்வெண்ணி, ஆதனூர், நகர், சித்தமல்லி, பரப்பனமேடு, காளாஞ்சிமேடு, காளாச்சேரி, ராயபுரம், வடகாரவயல், காணூர், எடகீழையூர், எடமேலையூர், வடுவூர், வடபாதி, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏவுடன், முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், ஒன்றியச் செயலாளர்கள் விசு.அண்ணாதுரை, வி.மாயவநாதன், மகளிரணி மாவட்டச் செயலாளர் ராணிசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்

ஜெயகோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/jun/02/மன்னார்குடியில்-டிஆர்பி-ராஜா-நன்றி-தெரிவிப்பு-1701.html
1436 அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் பல்நோக்கு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா kirthika Express News Service Saturday, May 28, 2016 05:52 AM +0530 நாகூர் கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பல்நோக்கு அரங்குக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ரபியா சிராஜீதீன் தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் குலாம்ஷா முன்னிலை வகித்தார். அரபி மொழி ஆசிரியை துஆ ஓதினார்.

விழாவில் பொறியாளர் அப்துல்காதர், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/may/28/பல்நோக்கு-அரங்கம்-அடிக்கல்-நாட்டு-விழா-1436.html
1434 அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் ஜூன் 1, 2 ல் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி முகாம் kirthika Express News Service Saturday, May 28, 2016 05:49 AM +0530 நாகப்பட்டினத்தில் ஜூன் 1 மற்றும் 2 ல் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நாகப்பட்டினம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் பி. சீனிவாசன் வெளியிட்டிருப்பது:

நாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 1, 2 தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் நாட்டுக்கோழி இனங்கள், இடத்தேர்வு, கொட்டகை அமைக்கும் முறை, தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு, பண்ணை பொருளாதாராம் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

காலை 10 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ அல்லது 04365-247123 என்ற எண்ணிலோ நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம் எனக் கூறியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/may/28/ஜூன்-1-2-ல்-நாட்டுக்கோழி-வளர்ப்பு-தொடர்பான-பயிற்சி-முகாம்-1434.html
662 அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் இன்னும் தீரல... இனியாவது நடைபெறுமா இந்திர விழா? kirthika PTI Friday, May 13, 2016 10:17 AM +0530

பூம்புகார் - கற்புக்கடம் பூண்ட பொற்புடை தெய்வம் கண்ணகி வாழ்ந்த ஊர். தொன்மைத் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் எண்ணற்ற தொல்லியல் எச்சங்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி கடலில் சங்கமிக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது பூம்புகார்.

இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி நாளில் சித்திரை முழு நிலவு நாள் விழா என்ற பெயரில், வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்திர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

காலத்தே மழை பெய்ய வேண்டும், இயற்கை சீற்றங்கள் ஏதுமின்றி பசி, பிணி நீங்கி மக்கள் இன்புற்று வாழ வேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திரக் கடவுளை நோக்கி எடுக்கப்படும் விழாவாக இவ்விழா சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்டது.

அகத்திய முனிவரால் கூறப்பட்டு, தூங்கெயிலெறிந்த தொடித்தோட்ச் செம்பியன் என்ற மன்னனால் தொடங்கப்பட்டது இந்த விழா எனவும், விண்ணவரும் வியந்து ரசித்துச் சென்ற வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது எனவும் சங்க இலக்கியக் குறிப்புகளில் உள்ளன.

இவ்விழாவை, நெடுமுடிக்கிள்ளி என்ற மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் கைவிட்டதால், பூம்புகாரைக் கடல் கொண்டது எனவும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்காலத்தில், இவ்விழா 28 நாள்கள் கொண்டாடப்பட்டதாகவும், சாதி வேறுபாடுகளின்றி ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. பல்வேறு இயற்கை சீற்றங்களால் பொலிவிழந்த பூம்புகார், 1972-ஆம் ஆண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்டது. சிலப்பதிகாரக் கூடம், இளஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி சிலை ஆகியன அமைக்கப்பட்டன.

இதையடுத்து, நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த பூம்புகார் இந்திர விழா கொண்டாட்டங்களும் தொடர்ந்தன. இந்த விழா, சித்திரை முழு நிலவு நாள் விழா என்ற பெயரில் அரசின் சுற்றுலாத் துறை மூலம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின்போது, பூம்புகார் கொற்றைப் பந்தலில் கண்ணகி, சிலப்பதிகாரத்தின் பெருமைகளைப் பகரும் வகையிலான வழக்காடு மன்றம், தமிழறிஞர்களின் சொற்பொழிவுகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகளைக் காண, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டிலிருந்து உணவு வகைகளை எடுத்துக் கொண்டு, பூம்புகாரில் நடைபெறும் விழாக்களை பார்த்து ரசித்து, ரம்மியமான முழு நிலவு வெளிச்சத்தில் கடற்கரையில் அமர்ந்து உணவருந்தி அதிகாலையில் வீடு திரும்புவது வழக்கம். கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறுக்கீடு காரணமாக இவ்விழா தடைபட்டது. 2010-ம் ஆண்டில், சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான கடைகளை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சட்டம் ஒழுங்கு பாதிக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் விழா ரத்து செய்யப்பட்டது.

2011-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் குறுக்கீடு காரணமாக இவ்விழா ரத்தானது. 2012-ம் ஆண்டு முதல் எவ்வித காரணமும், குறுக்கீடும் இல்லாத நிலையிலும், இந்திர விழா கொண்டாட்டங்கள் கைவிடப்பட்டு வருகிறது. ஏன் இந்த அவலம், இதற்கு என்ன தீர்வு? என்பது குறித்த பிரக்ஞை கூட வாக்குக் கேட்கும், அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பதே பெரும் அவலம்.

தற்போது நடைபெறும் தேர்தல் திருவிழாவில் எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றுகூட இந்த விழாவை மீட்டெடுக்க வாக்குறுதி அளிக்கவில்லை.

பூம்புகார் புனரமைக்கப்படும் என்ற ஒற்றைவரி வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், வழக்கொழியும் இந்திரவிழாவை மீட்டெடுக்கும் அறிவிப்பு இல்லை.

ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு புதிய ஊரை அடையாளம் காட்டி, அந்த ஊரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவுள்ளதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், ஏற்கெனவே சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்பட்டதும், பூம்புகாரின் சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்ததுமான இந்திர விழாவை மீட்டெடுக்கும் அறிவிப்பை எந்தக் கட்சியும் வாய்மொழி வாக்குறுதியாகக் கூட அளிக்கவில்லை.

தேர்தல் திருவிழா காலத்திலாவது இந்த விழாவை மீட்டெடுக்க அரசியல் கட்சிகளிடமிருந்து வாக்குறுதி கிடைக்குமா? எதிர்காலத்திலாவது இவ்விழா தடையில்லாமல் நடைபெறுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

 

]]>
https://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2016/may/13/இன்னும்-தீரல-இனியாவது-நடைபெறுமா-இந்திர-விழா-662.html