Dinamani - பெங்களூரு - https://www.dinamani.com/all-editions/edition-bangalore/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3117925 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பேருந்து பயண அட்டையின் செல்லுபடி காலம் நீட்டிப்பு DIN DIN Thursday, March 21, 2019 08:58 AM +0530 கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களின் பேருந்து பயண அட்டையின் செல்லுபடி காலம் தேர்வு முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான பேருந்து பயண அட்டை(பஸ்பாஸ்)மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 21 முதல் ஏப்.4-ஆம்தேதிவரை நடைபெறவிருக்கிறது. 
எனவே, எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களின் பேருந்து அட்டையின் செல்லுபடிகாலம் ஏப்.4-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்தின் நுழைவுச்சீட்டுகளைக்காட்டி பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்யலாம். 
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடத்துநர்கள் அல்லது ஓட்டுநர்கள் எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கர்நாடக மாநிலசாலை போக்குவரத்துக் கழகமும் தனது பேருந்துகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேர்வு காலத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/எஸ்எஸ்எல்சி-தேர்வு-பேருந்து-பயண-அட்டையின்-செல்லுபடி-காலம்-நீட்டிப்பு-3117925.html
3117924 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தும்கூரு தொகுதியில் தேவெ கெளடா போட்டி: அமைச்சர் சீனிவாஸ் DIN DIN Thursday, March 21, 2019 08:58 AM +0530 தும்கூரு மக்களவைத் தொகுதியில் மஜத சார்பில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா போட்டியிடுவதாக கர்நாடக சிறிய தொழில் துறை அமைச்சர் எஸ்.ஆர்.சீனிவாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முன்னாள் பிரதமர் தேவெ கெளடா போட்டியிடுவதற்காக வடக்கு பெங்களூரு, தும்கூரு ஆகிய தொகுதிகள் தயாராக உள்ளன. என்றாலும் அவர் தும்கூரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தும்கூரு தொகுதியை விட்டு கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவது முறையல்ல. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியின் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்கு வித்திட வேண்டும். 
தும்கூரில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், நேரத்தை அவரது மூத்த மகனும், அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா விரைவில் அறிவிப்பார் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/தும்கூரு-தொகுதியில்-தேவெ-கெளடா-போட்டி-அமைச்சர்-சீனிவாஸ்-3117924.html
3117923 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தென் பெங்களூரு தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல் தவிக்கும் காங்கிரஸ்? DIN DIN Thursday, March 21, 2019 08:57 AM +0530 தகுதியான வேட்பாளர் கிடைக்காததால் தென் பெங்களூரு தொகுதியில் வேட்பாளரை நிறுத்த முடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது.
பாஜகவின் செல்வாக்கு மிகுந்த தென் பெங்களூரு தொகுதியில் 6 முறை தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிய அனந்த்குமார் காலமானதையடுத்து, அத் தொகுதியில் மக்களிடம் அதிக செல்வாக்குடன் வலம் வந்த அனந்த்குமார் மனைவி தேஜஸ்வினி பாஜக சார்பில் இம்முறை களம் இறக்கப்படுகிறார். இதனால், அத் தொகுதியை வசமாக்க தகுதியான வேட்பாளர்களை காங்கிரஸ் தேடி வருகிறது.
இதனிடையே பிரசாரத்தை தொடங்கியுள்ள தேஜஸ்வினி, 1993 முதல் 1997-ஆம் ஆண்டுவரை விமானவியல் வளர்ச்சி முகமை (ஏடிஏ) என்ற மத்திய அரசு நிறுவனத்தில் அறிவியலறிஞராகப் பங்காற்றியவர். அப்போது, தேஜஸ் இலகுரக போர்விமான திட்டத்திலும் தேஜஸ்வினி பணிபுரிந்துள்ளார். 
8 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட தென் பெங்களூரு தொகுதியில் 5 தொகுதிகள் பாஜக வசமும், 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன. பிராமணர்கள், ஒக்கலிகர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் பிராமணரான தேஜஸ்வினியை களமிறக்க பாஜக முடிவுசெய்துள்ளது.
இத்தொகுதியில் 30 சதவீதம் ஒக்கலிகர்கள் வசித்து வருவதால், அச்சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அப்போதுதான் மஜதவுக்கு ஆதரவான ஒக்கலிகர்கள் வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என்று அக்கட்சி கருதுகிறது.
1980-ஆம் ஆண்டுக்கு பிறகு சில காலம் ஜனதாகட்சியின் ஆளுமையில் இருந்த தென் பெங்களூரு, 1989-ஆம் ஆண்டில் காங்கிரஸ் வசம் இருந்தது. 1991- முதல் 2014-ஆம் ஆண்டுவரை நடந்த 6 தேர்தல்களில் பாஜகவே வென்றுள்ளது. அதன் வேட்பாளராக அனந்த்குமார் தொடர்ச்சியாக வெற்றிவாகைசூட்டிவந்துள்ளார்.
பாஜக வேட்பாளராகவுள்ள தேஜஸ்வினிக்கு எதிராக போட்டியிட முன்வராததால் காங்கிரஸ் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்ராமலிங்கரெட்டி, அவரது மகள் செளம்யா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ பிரியாகிருஷ்ணா, மாநிலங்களவை எம்பி ராஜீவ்கெளடா ஆகியோரை வேட்பாளராக்க மேற்கொண்ட முயற்சியில் காங்கிரஸ் வெற்றிபெற முடியவில்லை. 
இதுகுறித்து ராமலிங்கரெட்டி கூறுகையில்,"ஆரம்பத்தில் நான் மாமன்ற உறுப்பினராகி, மேயராகும் விருப்பம் வைத்திருந்தேன். ஆனால், முதல்முறை நான் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி பின்னர் அமைச்சராக்கப்பட்டேன். ஆனால், நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டுமென்ற கனவு எனக்கு இருந்ததில்லை. இதனால் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. 
எம்எல்சி கோவிந்தராஜூ, கிருஷ்ணப்பா போன்ற தகுதியானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒருசில இடங்களில் போட்டியிட அதிகம் பேர் போட்டியிடுவார்கள். ஒருசில இடங்களில் அதிகம் பேர் ஆர்வம்காட்ட மாட்டார்கள். ஆனாலும், தென் பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸில் 3 பேர் ஆர்வமாக உள்ளனர். அவர்களில் ஒருவரை வேட்பாளராக கட்சி அறிவிக்கும்' என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/தென்-பெங்களூரு-தொகுதிக்கு-வேட்பாளர்-கிடைக்காமல்-தவிக்கும்-காங்கிரஸ்-3117923.html
3117922 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நடிகர்கள் யெஷ், தர்ஷனுக்கு மஜத எம்எல்ஏ எச்சரிக்கை DIN DIN Thursday, March 21, 2019 08:57 AM +0530 நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவரும் நடிகர்கள் யெஷ், தர்ஷனை மஜத எம்எல்ஏ நாராயண கெளடா எச்சரித்துள்ளார்.
மண்டியா மாவட்டத்தின் கே.ஏ.பேட் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஜத தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அத்தொகுதி எம்எல்ஏ நாராயணகெளடா பேசியது: மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் யெஷ், தர்ஷன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துவருகிறார்கள். சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் நடிகர்கள் யெஷ், தர்ஷன் ஆகியோரின் சட்ட விதிமீறல்களை விசாரிக்க நேரிடும். கர்நாடகத்தில் மஜத ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை நடிகர்கள் மறக்கக் கூடாது. மக்களால்தான் நடிகர்களே தவிர, நடிகர்களால் மக்கள் அல்ல.  எனவே, நடிகர்கள் கெளரவமாக வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மஜத மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திரைப்பட நடிகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எதற்காக இவர்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள் என்றார். இது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள நடிகை சுமலதா,"தாயாக என்னை கருதும் என் பிள்ளைகள் யெஷ், தர்ஷன் எனக்கு ஆதரவாக செயல்படுவதில் என்ன தவறு? மண்டியா ஒன்றும் மஜதவின் கோட்டை அல்ல. எந்த கோட்டையும் தகர்க்கப்படும்' என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/நடிகர்கள்-யெஷ்-தர்ஷனுக்கு-மஜத-எம்எல்ஏ-எச்சரிக்கை-3117922.html
3117921 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க இயலாது: தேர்தல் அதிகாரி விளக்கம் DIN DIN Thursday, March 21, 2019 08:55 AM +0530 தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் அந்த நடிகர்களின் திரைப்படங்களை தொலைக்காட்சி, திரையங்கங்களில் திரையிடுவதற்கு தடைவிதிக்க இயலாது என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்து, அல்லது கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்யும் காரணத்தினாலேயே, திரைப்படக் கலைஞர்களின் திரைப்படங்களை திரையரங்கங்கள், தொலைக்காட்சிகளில் திரையிட தடை விதிக்க இயலாது. 
மண்டியா தொகுதியில் பிரசாரம் செய்வதால் நடிகர்கள் யெஷ், தர்ஷன் ஆகியோரின் திரைப்படங்களுக்கு தடை விதிக்க சிலர் மனு அளித்திருக்கிறார்கள். இது தவறானதாகும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்பாளர்களின் புகைப்படங்கள், பெயர்கள் பொது இடங்களில் தென்படக் கூடாது. ஆனால் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோரின் புகைப்படங்கள், திரைப்படங்களைத் தடுக்க வழியில்லை. வேட்பாளராகப் போட்டியிடுவோரின் திரைப்படங்களை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடைவிதிக்கப்படுகிறது. ஆனால், தனியார் தொலைக்காட்சிகள், வானொலிகளில் ஒளி/ஒலிபரப்பினால் அதை தடுக்க இயலாது. பொதுமக்களின் பணத்தை கையாளும் நிறுவனங்கள், வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/தேர்தல்-பிரசாரத்தில்-ஈடுபடும்-நடிகர்களின்-படங்களுக்கு-தடை-விதிக்க-இயலாது-தேர்தல்-அதிகாரி-விளக்கம்-3117921.html
3117920 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு 28 தொகுதிகளிலும் மஜத-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்: கே.எஸ்.ஈஸ்வரப்பா DIN DIN Thursday, March 21, 2019 08:55 AM +0530 மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் மஜத-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை. மக்களவைத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுடன் கர்நாடக பாஜக தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். 
தேர்தல் வியூகத்தின் அடிப்படையிலே வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறோம். கட்சியின் மத்திய தேர்தல் குழு, வேட்பாளர் பட்டியலை ஒன்றிரண்டு நாட்களில் வெளியிடும்.
பெங்களூரில் உள்ள மான்யதா நுட்பப் பூங்காவில் ராகுல்காந்தி கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்கள் பாஜகவினர் அல்ல, மாறாக தகவல்தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பாஜக ஆதரவாளர்கள். இவர்களை அடக்கி ஒடுக்க காங்கிரஸ்-மஜத அரசு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புவது தவறா? நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. குறிப்பாக இளைஞர்கள், பிரதமர் மோடிக்காக தேர்தலில் போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகத்தில் 28-இல் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஏ.மஞ்சுவை பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளோம். மேலும் அவரை ஹாசன் மக்களவைத் தொகுதியில் இருந்து வேட்பாளராக களமிறக்குவோம். தங்களது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே மஜதவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை 28 தொகுதிகளிலும் பாஜக தோற்கடிக்கும்.பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாட்டு மக்கள் இருக்கும்போது, மீண்டும் அவர் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். 
பேட்டியின் போது, கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் லேஹர்சிங், ஏ.எச்.ஆனந்த், அன்வர் மானப்பாடி உளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/28-தொகுதிகளிலும்-மஜத-காங்கிரஸ்-கூட்டணியை-தோற்கடிப்போம்-கேஎஸ்ஈஸ்வரப்பா-3117920.html
3117919 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அம்பரீஷின் கனவுகளை நனவாக்குவேன்: நடிகை சுமலதா DIN DIN Thursday, March 21, 2019 08:54 AM +0530 அம்பரீஷின் அரசியல் கனவுகளை நனவாக்குவதற்காகவே மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா தெரிவித்தார். 
புதன்கிழமை காலை மைசூரு சாமூண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்த பிறகு மண்டியா ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த சுமலதா, மண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியது: 
40 ஆண்டுகள் திரைப்படத் துறையிலும், 27 ஆண்டுகள் நடிகர் அம்பரீஷின் துணைவியராக இருந்த என்னை, தற்போது மண்டியாவில் போட்டியிட என்ன தகுதி உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மளவள்ளி உச்சே கெளடரின் மருமகளும், அபிஷேக் கெளடரின் தாயும், அம்பரீஷின் மனைவியுமான எனக்கு வேறென்ன தகுதி வேண்டும். 
இந்த மண்ணின் மகள் நான். நான் இங்கு போட்டியிட அனைத்து தகுதியும் உள்ளது. என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. மண்டியாவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த நடிகர் அம்பரீஷ், 3 முறை மக்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 
மண்டியா விவசாயிகளுக்கு பிரச்னை என்று வந்த போது, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவர் அம்பரீஷ். மண்டியா மக்களின் மீது அவர் வைத்திருந்த அன்பு, பாசத்தை யாராலும் மறக்க முடியாது. அவர் நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால், இந்த மண்ணின் மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியிருப்பார். அவர் மறைந்த காரணத்தால், அவர் விட்டுச் சென்ற பணிகள், கனவுகளை நிறைவேற்றும் வகையில் தேர்தலில் போட்டியிட நேர்ந்துள்ளது. அரசியல் ஆசை எனக்கில்லை. அரசியலில் சம்பாதிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. 
அம்பரீஷ் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்ற நோக்கில் மண்டியாவை தேர்வு செய்தேன். எனக்கு எம்.எல்.சி, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை தருவதாக ஆசை காண்பிக்கப்பட்டது. பதவி ஆசை இருந்திருந்தால், அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், மண்டியா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். 
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். அவர்கள் அதற்கு உடன்படாததால், வேறு வழியின்றி சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். யாருக்கும் எதிராகவோ, சவாலாகவோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த மண்ணின் மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேர்தலில் போட்டியிடுகிறேன். திரைத் துறையினர் எனக்கு ஆதரவாக உள்ளதால் அவர்கள் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது. 
தர்ஷன், யெஷ் ஆகியோர்கள் நடிகர்கள் மட்டுமல்ல, எனது குடும்பத்தினர். ஒரு தாயிக்கு, மகன்கள் உதவி புரியவதை தவறு என்று கூறுவதை ஏற்கமுடியாது. அம்பரீஷ் எந்த ஒரு தருணத்திலும் யாரிடமும் கையேந்தியதில்லை. அவரது துணைவியாராக முதல்முறையாக உங்கள் முன்பு கையேந்தி ஆதரவு கேட்கிறேன். உங்கள் கரகோஷத்தை எனக்கு ஆதரவு தருவதாக நம்பி, வணங்குகிறேன் என்றார். 
நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா, அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/அம்பரீஷின்-கனவுகளை-நனவாக்குவேன்-நடிகை-சுமலதா-3117919.html
3117918 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறை அட்டவணை DIN DIN Thursday, March 21, 2019 08:53 AM +0530 ஆரம்பம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்வியாண்டின் விடுமுறை அட்டவணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக மாநில ஆரம்பம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்வியாண்டின் விடுமுறை அட்டவணை வெளியிடப்படுகிறது. 2019-20-ஆம் கல்வியாண்டு மே 29-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் அக்.5-ஆம் தேதி வரையும், அக்.21 முதல் ஏப்.11-ஆம் தேதிவரையும் பள்ளிகள் செயல்படும். 
இதனிடையே, அக்.6 முதல் அக்.20-ஆம் தேதி வரை தசரா விடுமுறை, ஏப்.12 முதல் மே 24-ஆம் தேதிவரை கோடை விடுமுறை விடப்படுகிறது. கல்வியாண்டின் மொத்த நாள்கள் 318. இதில் 65 நாள்கள் விடுமுறை. 254 நாள்கள் வேலை நாள்கள். ஜூனில் 6, ஜூலையில் 4, ஆகஸ்டில் 5, செப்டம்பரில் 8, அக்டோபரில் 15, நவம்பரில் 5, டிசம்பரில் 6, ஜனவரியில் 5, பிப்ரவரியில் 4, மார்ச்சில் 6, ஏப்ரலில் 1 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/ஆரம்ப-உயர்நிலைப்-பள்ளிகளுக்கான-விடுமுறை-அட்டவணை-3117918.html
3117916 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நூதன முறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவர் கைது DIN DIN Thursday, March 21, 2019 08:53 AM +0530 காவலர் வேடமணிந்து பெண்களிடம் நூதனமாக தங்கச் சங்கிலியைப் பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு சந்திராலேஅவுட் பகுதியைச் சேர்ந்த சையத் அபுபக்கர். இவர் காவலர் சீருடை அணிந்து சென்று, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கவனத்தை திசைதிருப்பி,  தங்கச் சங்கிலிகளை பறித்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்த சந்திராலேஅவுட் போலீஸார், சையத் அபுபக்கரைக் கைது செய்து, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 40 தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். இதன்மூலம் சுமார் 40 தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/நூதன-முறையில்-தங்கச்-சங்கிலி-பறிப்பு-ஒருவர்-கைது-3117916.html
3117915 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெண்ணிடம் வழிப்பறி DIN DIN Thursday, March 21, 2019 08:53 AM +0530 பெங்களூரில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஹனுமந்தநகர் சீனிவாஸ்நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 25 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரிக்கின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/பெண்ணிடம்-வழிப்பறி-3117915.html
3117914 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு போதைப்பொருள் விற்றவர் கைது DIN DIN Thursday, March 21, 2019 08:53 AM +0530 பெங்களூரில் போதைப்பொருள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஆஸ்டின்டவுன் விக்டோரியா லேஅவுட் 6-வது குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் (40). இவர் பி.டி.எம் லேஅவுட் 13-ஆவது மெயினின் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று ஓம்பிரகாஷைக் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுத்தகுன்டேபாளையா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/போதைப்பொருள்-விற்றவர்-கைது-3117914.html
3117912 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மண்டியா தொகுதி: மஜத நிர்வாகிகளுடன் முதல்வர் குமாரசாமி தீவிர ஆலோசனை DIN DIN Thursday, March 21, 2019 08:52 AM +0530 மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் தனது மகன் நிகிலை வெற்றிபெற செய்வது குறித்து மஜத நிர்வாகிகளுடன் முதல்வர் குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.
மறைந்த நடிகரும், முன்னாள் எம்பியுமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை மண்டியாவில் புதன்கிழமை தாக்கல் செய்தார். மேலும் மண்டியாவில் உள்ள வெள்ளிவிழா விளையாட்டுத் திடலில் அம்பரீஷ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சுமலதா, உணர்ச்சிப்பொங்க பேசி மக்களின் ஆதரவை திரட்டினார். 
வேட்புமனு தாக்கலின்போதும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்ததை கண்டு மஜத, காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் மிரண்டுள்ளனர். மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களமிறங்கியுள்ளார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் நிகிலை வெற்றிபெற வைப்பதற்கு முதல்வர் குமாரசாமி தீவிரமுயற்சியில் இறங்கியுள்ளார். 
மண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அருகேயுள்ள கேளிக்கைவிடுதி ஒன்றில் புதன்கிழமை மண்டியா மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் குறித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 41 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்தகூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, மண்டியா மாவட்டத்துக்கு தனது அரசு வழங்கியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் அடுத்தக்கட்டமாக செயல்படுத்தவுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விளக்கினார். 
எனவே, சுமலதாவின் உணர்ச்சிகரமான பேச்சை நம்பி யாரும்மோசம் போய்விடக்கூடாது என்றும், தன்னாலும் அப்படி பேசமுடியும் என்றும் தெரிவித்தார். மேலும், சுமலதாவை விமர்சித்து எதுவும் கூறவேண்டாம் என்றும் கட்சியினரை கேட்டுக் கொண்டார். சுமலதாவின் பிரசாரத்தை முறியடிக்க மார்ச் 25-ஆம் தேதி மண்டியாவில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தப் போவதாகவும் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். 
இந்த கூட்டத்தில் சுமலதாவுக்கு எதிராக தேர்தல் வியூகத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் குமாரசாமி கூறியது: ஒருசிலர் உணர்ச்சிபொங்க பேசி மக்களின் ஆதரவை பெறமுயற்சிக்கிறார்கள். யார் நல்லது செய்திருக்கிறார்கள் என்பது மண்டியா மக்களுக்கு தெரியும். ஓராண்டுக்கு முன்பே இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு சென்று நிகில் துக்கம் விசாரித்திருக்கிறார். 
மேலும் விவசாயிகளின் குழந்தைகளையும் நிகில் தத்தெடுத்துக் கொண்டுள்ளார். நிகில், மண்டியா மக்களோடு நீண்டகாலமாக பணியாற்றி வந்துள்ளார். அதனால் சுமலதாவின் கண்ணீரை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். நான் யாரை கண்டும் அஞ்சவில்லை. ரகசிய கூட்டமும் நடத்தவில்லை.
மண்டியா தொகுதியை ஊடகங்கள்தான் பெரிதாக காட்டிவருகின்றன. சுமலதாவுக்கு ஆதரவாக செயல்படும் நடிகர்கள் யெஷ், தர்ஷன் மீது எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. எனது அதிகாரத்தை என்றைக்கும் தவறாக பயன்படுத்தமாட்டேன். 
கே.ஆர்.பேட் எம்எல்ஏ நாராயணகெளடா நடிகர்களை குறிவைத்து தாக்கி பேசியுள்ளதை ஏற்க முடியாது. அதுபோல பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். சுமலதாவுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸார், மண்டியா மக்களுக்கு நன்மை செய்தது யார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.
நிகில், தனது வேட்புமனுவை மண்டியாவில் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார். 
மற்றொரு வேட்புமனுவை மார்ச் 25-ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய நிகில் திட்டமிட்டுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/மண்டியா-தொகுதி-மஜத-நிர்வாகிகளுடன்-முதல்வர்-குமாரசாமி-தீவிர-ஆலோசனை-3117912.html
3117911 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: அமைச்சர் எச்.டி.ரேவண்ணா DIN DIN Thursday, March 21, 2019 08:52 AM +0530 பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சரும், மஜத முன்னணித் தலைவருமான எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற மஜத தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: விவசாயிகளின் நலனை பாஜக முழுமையாக புறக்கணித்துள்ளது. பிரதமர் மோடி, விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தவறிவிட்டார். மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால்,
தோல்வி பயத்தில் முதல்வர்
குமாரசாமியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் ஹாசன் தொகுதி மஜத வேட்பாளர் பிரஜ்வல் பேசியது: எனது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா முன்னெடுத்து செயல்படுத்திய வளர்ச்சிப் பணியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லவே ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறேன். ஹாசன் மாவட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டை முதல்வர் குமாரசாமி செய்துள்ளார். 
ஹாசன் மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து மக்களிடம் பிரசாரம் செய்வோம். என்னை எம்பியாக தேர்ந்தெடுத்தால் மக்களின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவைக்க தீவிரமாக உழைப்பேன் என்றார். இக்கூட்டத்தில் பிரஜ்வலின் தாய் பவானி, முன்னாள் எம்எல்ஏ பட்டேல் சிவராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/பாஜகவை-மக்கள்-புறக்கணிக்க-வேண்டும்-அமைச்சர்-எச்டிரேவண்ணா-3117911.html
3117910 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "நிதி மேலாண்மை விழிப்புணர்வு அவசியம்' DIN DIN Thursday, March 21, 2019 08:51 AM +0530 பொதுமக்களுக்கு நிதி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என மேராயி அசெர்ட் குளோபல் இன்வெஸ்மெண்டின் மூத்த செயல் அதிகாரி ஸ்வரூப் மொஹந்தி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை மேராயி அசெர்ட் குளோபல் இன்வெஸ்மென்டின் 10-வது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியது: தேசிய அளவில் மக்கள் அதிக வரி செலுத்தி வருகின்றனர். வரிக்கு செலுத்தும் நிதியை சம பங்குகள் மூலம் முதலீடு செய்தால், அவர்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும். ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு பெரும்பாலனவர்களிடம் இல்லாததால், அவர்கள் வரி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். 
தென்கொரியாவில் தொடங்கிய எங்கள் மேராயி அசெர்ட் குளோபல் இன்வெஸ்மெண்ட், இந்தியாவில் தனது 10 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது. சமபங்கு, நிதிச் சேவையில் சிறந்து விளங்கும் எங்கள் குழுமம், நிதி மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நிதியை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யவும், ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/நிதி-மேலாண்மை-விழிப்புணர்வு-அவசியம்-3117910.html
3117909 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பியூசி கல்லூரிகளுக்கு மே 19 வரை கோடை விடுமுறை DIN DIN Thursday, March 21, 2019 08:51 AM +0530 பியூசி கல்லூரிகளுக்கு மார்ச் 20 முதல் மே 19-ஆம் தேதி வரை கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, கல்வி நடவடிக்கைகள் வழிகாட்டுதலின்படி நிகழ் கல்வியாண்டு மார்ச் 19-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு, மார்ச் 20 முதல் மே 19-ஆம் தேதிவரை கோடைவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. 
கோடை விடுமுறைக்கு பிறகு பியூ கல்லூரிகள் 2-ஆம் ஆண்டு பியூசி வகுப்புகளுடன் மே 20-ஆம் தேதி மீண்டும் செயல்பட தொடங்குகிறது. முதலாமாண்டு பியூசி துணைத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான கல்வி அட்டவணை வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/பியூசி-கல்லூரிகளுக்கு-மே-19-வரை-கோடை-விடுமுறை-3117909.html
3117908 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது DIN DIN Thursday, March 21, 2019 08:51 AM +0530 கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 21) தொடங்குகிறது.
கர்நாடகம் முழுவதும் 4,47,864 மாணவர்கள், 3,93,802 மாணவிகள் இத் தேர்வை எழுதுகின்றனர்.  ஏப்.4-ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்க மொத்தம் 14,450 பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.  இவற்றில் அரசுப் பள்ளிகள் 5202, அரசு மானியம் பெறும் பள்ளிகள் 3244,  சுய நிதிப் பள்ளிகள் 6004 ஆகும்.  34 கல்வி மாவட்டங்களில் 2,847 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் பதற்றமானவை 46,  மிகவும் பதற்றமானவை 7 மையங்களாகும். 
வருகைப் பதிவு குறைவாக இருந்த காரணத்தால், 10,572 மாணவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.  4651 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர்.  இவர்களில் 1451 பேருக்கு மொழிப் பாடங்களில் இருந்தும்,  480 பேருக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் நாள்களில் தேர்வு மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.  தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆள்நடமாட்டம் முழுமையாக தடை  செய்யப்படுகிறது.  இதேபோல,  தேர்வு மையங்களுக்கு அருகே அமைந்துள்ள நகலகங்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவரின் கண்காணிப்பில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்,  இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் தவிர,  அரசுத் துறைகளின் அதிகாரிகள் என 3,562 பேர் தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தேர்வு முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உயர் நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி)  தெரிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை
மார்ச் 21-முதல் மொழிப் பாடம்-கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சம்ஸ்கிருதம்.
மார்ச் 25-கணிதம்.
மார்ச் 27-இரண்டாம் மொழிப்பாடம்-ஆங்கிலம், கன்னடம்.
மார்ச் 29- சமூக அறிவியல்
ஏப்.2- அறிவியல்
ஏப்.4-மூன்றாம் மொழிப் பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பெர்ஷியன், உருது, சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு.
முதல் மொழிப் பாடம் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் மொழிப் பாடம், மூன்றாம் மொழிப் பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.  வினாத்தாள்களை மாணவர்கள் படிப்பதற்காக தேர்வுக்கு முன்பாக 15 நிமிடங்கள் தரப்படும். 
இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப் பாடங்கள் இரண்டே முக்கால் மணி நேரமும்,  இதர பாடங்கள் மூன்று மணி நேரமும் தேர்வு நடைபெறும்.  தேர்வு தினமும் காலை 9.30 மணிக்கு
தொடங்குகின்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/கர்நாடகத்தில்-எஸ்எஸ்எல்சி-பொதுத்-தேர்வு-இன்று-தொடங்குகிறது-3117908.html
3117907 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள் தீவிரம் DIN DIN Thursday, March 21, 2019 08:50 AM +0530 தார்வாட்டில் இடிந்து விழுந்த கட்டடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 65-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தார்வாட் குமரேஸ்வரநகரில் அடுக்குமாடிக் கட்டடப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புபணியில் ஈடுபட்டனர். அதில் இறந்த நிலையில் சலீம் மகந்தர் (28) என்பவரின் சடலத்தை மீட்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப்பணியில் மேலும் 4 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
காயமடைந்தவர்களை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, மக்களவை உறுப்பினர் பிரஹலாத்ஜோதி, எம்.எல்.சி பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக, கட்டடத்தின் உரிமையாளர்கள் கங்கண்ணாஷிந்திரி, ரவி சோபாராதா, ராஜுகாட்டீன், பசவராஜ் நிகதி, மகதேஷ்வரா, பொறியாளர் விவேக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் எனக் கருதுவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/mar/21/இடிந்து-விழுந்த-கட்டடத்தில்-மீட்புப்-பணிகள்-தீவிரம்-3117907.html
3104101 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு திருப்பத்தூர் சினேகா - தமிழ்நாட்டில் ‘ஜாதியற்றவர்’ எனும் அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண்! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, February 27, 2019 12:05 PM +0530  


சினேகாவுக்கு 35 வயதாகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர். பிறந்தது முதல் இன்று வரையிலும் ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் தான் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பப் பள்ளிச் சேர்க்கை முதற்கொண்டு இன்று வரை அவர் பூர்த்தி செய்து வரும் விண்ணப்பங்கள் அனைத்திலும் ஜாதி, மதம் குறித்த தகவல்களை நிரப்பும் இடங்களனைத்தும் வெற்றிடங்களாகவே நீடிக்கின்றன.
சமீபத்தில் தமிழக அரசு சினேகாவுக்கு கேஸ்ட்லெஸ் அதாவது ஜாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக ஜாதியற்றவர் என்ற சான்றிதழ் அளித்து அரசு அங்கீகரித்தவர்களில் சினேகா தான் முதல் நபர். அரசு ஜாதிச் சான்றிதழ்களை விநியோகிக்கும் ஒவ்வொருமுறையும் ஜாதியற்ற சான்றிதழ் ஒன்றை ஏன் வாங்கக் கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு சான்றிதழை வழங்கச் சொல்லி நான் அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன். அந்த எதிர்பார்ப்பும், ஜாதியற்றவர் என்ற சான்றிதழ் பெற்றே தீர்வது எனும் ஏக்கமும் சினேகாவுக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் ஈடேறியது. ஆம் இந்திய அரசு அப்படி ஒரு சான்றிதழை சினேகாவுக்கு அவர் எதிர்பார்த்தபடியே வழங்கி விட்டது.

என் குடும்பத்தில் நானும், என் பெற்றோரு உட்பட, தங்கை, கணவர் மற்றும் எனது மகள்கள் என அனைவருமே ஜாதியற்றவர்கள் என்ற அடையாளத்துடன் தான் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, இப்போது வழங்கி இருப்பது அதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமே. அந்த அங்கீகாரம் இல்லாத போதும் நாங்கள் ஜாதி, மத அடையாளமற்றவர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஏனெனில் எங்கள் குடும்பத்தில் நாங்கள் அனைவருமே நாத்திகர்கள். என்கிறார் சினேகா.

இந்தியாவில் ஒருவரது பெயரைச் சொன்னாலே போதும் அவரது ஜாதி, மத அடையாளங்களைக் கண்டுபிடித்து விட முடியும் என்பதால் சினேகாவும் அவரது கணவரும் தங்களது மூன்று மகள்களுக்கும் அனைத்து மதங்களில் இருந்தும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை புத்த மதப் பெயர்களுடன் இணைத்து ஆதிரை நஸ்ரீன், அதிலா ஐரீன், ஆரிஃபா ஜெஸ்ஸி எனச் சூட்டியிருக்கிறார்கள்.

நாங்களாவது இப்போது தான் இப்படிப் பெயர் வைத்தோம் எங்கள் மகள்களுக்கு. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே என் மாமனார் தன் மகள்களுக்குத் தேர்வு செய்து வைத்த பெயர்களைப் பாருங்கள்... சினேகாவின் சகோதரிகளுக்கு மும்தாஜ் சூர்யா என்றும் ஜெனிஃபர் என்றும் பெயர் வைத்து மத அடையாளங்களை மறைக்க நினைத்தவர்கள் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் இது ஆச்சர்யம் தான் என்கிறார் சினேகாவின் கணவர் பார்த்திபராஜா.

மேலும் அவர் பேசியதிலிருந்து,  என் மாமனார்பி வி அனந்த கிருஷ்ணனும் மாமியார் மணிமொழியும் வழக்கறிஞர்கள். இருவருமே வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு பகுத்தறிவுக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்ததோடு இடதுசாரிகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களால் அந்தக் காலத்திலும் இது சாத்தியமானது. என் மனைவி சினேகாவுக்கு தெலுங்கானாவில் போலீஸ் கஸ்டடியில் இறந்த சினேகலதா எனும் சமூகப் போராளியின் பெயரை அவர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சினேகாவின் பெயருக்கு முன்புள்ள எம் ஏ எனும் எழுத்துக்கள் அவரது பெற்றோரின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களே! என்கிறார் பார்த்திபராஜா.

என் தாத்தா மதப் பற்றும் கடவுள் நம்பிக்கையும் கொண்டவராக இருந்த போதும் அவரது மூத்த மகனான பி வி பக்தவத்சலம் ஒரு வழக்கறிஞராக இருந்ததோடு கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் ஆகவும் இருந்தார். அதனால் தான் என் தந்தையும் தனது மூத்த சகோதரரைப் பின்பற்றி ஜாதி, மத அடையாளங்களை விரும்பாதவராக வாழத் தொடங்கினார் என்கிறார் சினேகா.

அத்துடன் தனது குழந்தைப் பருவ நாட்களை நினைவு கூரும் போது... ‘முற்றிலும் வேறு ஒரு சூழலில் நாங்கள் வளர்ந்தோம். என்கிறார்.  என் பெரிய தாத்தா, தாத்தா மற்றும்  தந்தையைப் பார்க்க வரும் கம்யூனிஸ நண்பர்களால் வீடு எந்நேரமும் நிறைந்திருக்கும். அவர்களது கம்யூனிஸம், பகுத்தறிவு மற்றும் நாத்திக சிந்தனைகள் குழந்தைகளான எங்கள் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அப்படியே வளர்ந்ததில் அதன் மீதான ஈடுபாடு வலுத்ததே தவிர எப்போதும் குறைந்ததே இல்லை’ என்கிறார்.

அத்துடன் , பள்ளியில் படிக்கையில் நண்பர்களோ அல்லது பிற வகுப்புத் தோழிகளோ கூட ஜாதி, மதம் குறித்துப் பேசினால் அல்லது கேள்வி எழுப்பினால் அவர்களிடம் தயங்காமல் ‘நாங்கள் ஜாதியற்றவர்கள்’ எனும் பதிலை அழுத்தமாகக் கூற பெரியாரிய சிந்தனை தங்களுக்கு மிகவும் உதவிற்று என்கிறார் சினேகா, சிலர் சொல்வார்கள்... சரி நீங்கள் வேண்டுமானால் ஜாதியற்றவர்களாக இருக்க முடியும், ஆனால் உங்களை மணப்பவர்கள் அப்படி இருக்க வேண்டுமே?! அவர்கள் இதையெல்லாம் நம்பக் கூடியவர்களாக அவற்றின் மீதெல்லாம் ஆர்வமுடையவர்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என; அத்தகைய சூழலில் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்வது. நாம் நமது சித்தாந்தங்களின் மீதும் பகுத்தறிவு நம்பிக்கையின் பேரிலும் மிகுந்த பற்றுடையவர்களாகவும் அவற்றை வரும் தலைமுறையிலும் நிலைநாட்டக் கூடியவர்களாகவும் இருக்க நினைத்தால் அதற்கேற்றாற் போலவே நமது வாழ்க்கைத் துணைகளும் தாமே வந்தமையும். அப்படித்தான் பார்த்திபராஜா சினேகாவின் கணவரானார். என்கிறார்கள் சினேகா தம்பதியினர்.

எதிர்காலத்தில் தங்கள் மகள்களுக்கும் தங்களைப் போன்றே ஜாதி, மதங்களில் அக்கறையற்றவர்கள் வாழ்க்கைத் துணைவர்களாக அமைவார்கள் எனும் நம்பிக்கை இந்தத் தம்பதியினரிடையே மிகுந்திருக்கிறது. நம்பிக்கை மட்டும் போதாதில்லையா... அதனால் தனது மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் தன்னைப் போலவே ஜாதியற்றவர்கள் என்று அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்திருக்கிறாராம் சினேகா. கூடிய விரைவில் அவர்களுக்கும் அத்தகைய சான்றிதழ் கிடைத்தே தீரும். 

பிறகென்ன? 

ஜாதிச் சான்றிதழ் பெறுவது போலவே ஜாதியற்றோர் எனும் சான்றிதழ் பெற விரும்பும் பிரிவினரும் கூட இனி வருங்காலங்களில் அதிகரிப்பார்கள். 

நிச்சயம் இதுவும் ஒருவகையான சமூக சீர்த்திருத்தம் தான். பெரியார் கனவு கண்ட சமூக சீர்த்திருத்தம்!

]]>
Legally , casteless, religionless, MA Sneha, advocate, ஜாதி மதமற்ற முதல் பெண், ஜாதி, மதம், சினேகா, திருப்பத்தூர் சினேகா, https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/countrys-first-woman-to-be-legally-caste-religion-less-citizen-3104101.html
3104055 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஹோம்பேக்கிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் DIN DIN Wednesday, February 27, 2019 09:53 AM +0530 பெங்களூரில்  மார்ச் 4-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் சார்பில் மார்ச் 4-ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்குக்கான ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. 
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும்   மற்றும்   w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t  என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/ஹோம்பேக்கிங்-பயிற்சி-பெற-விண்ணப்பிக்கலாம்-3104055.html
3104059 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "இந்தியாவில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டம்' DIN DIN Wednesday, February 27, 2019 09:36 AM +0530 இந்தியாவில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரிகோ குழுமத்  தலைவர் சலீம் அல் ராவஹை தெரிவித்தார்.
பெங்களூரில்  ஆசியான் தொழில் மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
மஸ்கட்,  ஓமனில் இயற்கை முறையிலான அழகு சாதனங்களுக்கு புகழ்பெற்ற ஒரிகோ குழுமம் பெங்களூரில் தனது உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. இதனை மேம்படுத்த மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். 
மஸ்கட், ஓமன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற எங்களின் உற்பத்தி பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பெருமை அடைகிறோம். இயற்கையிலான தரமான பொருள்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றார் அவர்.  


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/இந்தியாவில்-5-மில்லியன்-டாலர்-முதலீடு-செய்ய-திட்டம்-3104059.html
3104058 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "எண்மத் திட்டத்தில் திறமையானவர்களை கண்டறிய வேண்டும்' DIN DIN Wednesday, February 27, 2019 09:35 AM +0530 எண்மத் திட்டத்தின் மூலம் திறமையானவர்களை கண்டறிய வேண்டும் என்று காபிடே குழுமத்தின் மனித வளத்துறை இயக்குநர் என்.பாலசந்தர் தெரிவித்தார்.
பெங்களூரில்  கிர்லோஸ்கரின் மேம்பட்ட மேலாண்மை மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எண்மத் திட்டத்தில் திறமையானவர்களைக் கண்டறிவது குறித்த கருத்தரங்கில்,  அவர் பேசியது:-
நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் எண்மத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. 
இந்தத் திட்டத்தில் இந்தியா பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. 
எனவே எண்மத் திட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதனை மேம்படுத்துவதற்கு உகந்தத் திறமையானவர்களைக் கண்டறிய வேண்டும். எண்மத் திட்டத்துக்கு இந்தியாவில் சிறந்த எதிர்காலம் உள்ளது. இதனால்  வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் ரிலேஷன் அண்ட் பிஸ்னஸ் அனாலிட்டிக்ஸ் இயக்குநர் பங்கஜ்ராய்குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/எண்மத்-திட்டத்தில்-திறமையானவர்களை-கண்டறிய-வேண்டும்-3104058.html
3104057 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாக பாஜக சிறப்பாகச் செயல்படுகிறது: மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலஜே DIN DIN Wednesday, February 27, 2019 09:35 AM +0530 கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாக பாஜக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.
சிக்மகளூரில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடக மாநிலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் அதன் பணிகளை செய்வதில் அது தவறியுள்ளது என்று அமைச்சர் யு.டி.காதர் குற்றம் சாட்டியுள்ளார். 
பாஜக எதிர்க்கட்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால்,  தங்களது உள்கட்சிப் பூசலை மறைக்க அவர்,  எதிர்க்கட்சியான பாஜக மீது குற்றம் சாட்டுகிறார். அதே போல காங்கிரஸைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தனக்கு 3 முறை முதல்வர் பதவி கைநழுவியுள்ளது என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். இதனால், காங்கிரஸில் நடைபெறும் உள்கட்சிப் பூசலை மக்களிடத்தில் கொண்டு சென்றுள்ளார். 
காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசில் தோல்வியை மறைக்க மத்திய அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸார் கூறி வருகின்றனர். 
கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணநிதியாக ரூ. 949 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கித்தந்துள்ளது. ஆனால் மத்திய அரசு  நிதியை ஒதுக்கவில்லை என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. 
கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்று 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. 
வரும் மக்களவைத் தேர்தலில்,  கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றார், ஷோபா கரந்தலஜே.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/கர்நாடகத்தில்-எதிர்க்கட்சியாக-பாஜக-சிறப்பாகச்-செயல்படுகிறது-மக்களவை-உறுப்பினர்-ஷோபா-கரந்தலஜே-3104057.html
3104056 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு லஞ்சம்: நில அளவையர் கைது DIN DIN Wednesday, February 27, 2019 09:34 AM +0530 வீட்டுமனையை மறு ஒதுக்கீடு செய்ய லஞ்சம் பெற்றதாக,  நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவைச் சேர்ந்த  ஒருவர் தனக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனது பெயருக்கு பதிவு செய்யப்படாத நிலையில்,  அதனை மீண்டும் மறு ஒதுக்கீடு செய்யுமாறு பெங்களூரு வளர்ச்சி ஆணைத்தில் மனு அளித்துள்ளார். 
இதற்கு நில அளவையர் பசவராஜ் ரூ. 10 லட்சம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டாராம். முதல் தவணையாக ரூ. 5 லட்சத்தை பசவராஜிடம், அந்த நபர் வழங்கினாராம். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர், பசவராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பாக பசவராஜிடம் பெங்களூரு லஞ்ச ஒழிப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/லஞ்சம்-நில-அளவையர்-கைது-3104056.html
3104054 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு வீடு புகுந்து நகை திருட்டு DIN DIN Wednesday, February 27, 2019 09:34 AM +0530 பூட்டை  உடைத்து வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு மத்திக்கெரேவைச் சேர்ந்தவர் பீமப்பா.  இவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றிருந்தார்.  பணிமுடிந்து மாலை வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கநகை, 600 கிராம் வெள்ளிப்பொருள்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
புகாரின்பேரில்  யஸ்வந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/வீடு-புகுந்து-நகை-திருட்டு-3104054.html
3104053 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ராணுவத்தின் செயல் பாராட்டுக்குரியது: அமைச்சர் சி.எஸ்.புட்டராஜ் DIN DIN Wednesday, February 27, 2019 09:34 AM +0530 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் செயலை பாராட்டுகிறேன் என்று கர்நாடக மாநில சிறிய நீர்பாசனத்துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜ் தெரிவித்தார்.
மண்டியாவில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த குரு என்பவர் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை குருவின் 11-வது நாள் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். 
இந்த நேரத்தில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களின் செயலை மனமாரப் பாராட்டுகிறேன். இந்திய ராணுவம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் உறுதியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி ஆறுதலை தந்துள்ளது என்றார் அவர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/ராணுவத்தின்-செயல்-பாராட்டுக்குரியது-அமைச்சர்-சிஎஸ்புட்டராஜ்-3104053.html
3104052 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே இன்று வாகனம் நிறுத்தத் தடை DIN DIN Wednesday, February 27, 2019 09:33 AM +0530 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி,  சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே புதன்கிழமை (பிப்ரவரி  27) வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்  20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 27-இல் நடைபெற உள்ளது.  இதையொட்டி, மைதானத்தின் அருகே புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11.30 மணிவரை வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள குயின்ஸ் சாலை, எம்.ஜி.சாலை, கும்பளே சதுக்கம், கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை, செளடய்யா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, மியூசியம் சாலை, கஸ்தூரிபா சாலை, ஹட்சன் சதுக்கம், கப்பன்பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் கிரிக்கெட்டை காண வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் பாதுகாப்பு கருதி சிகரெட், தீப்பெட்டி, தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில், பட்டாசு, டார்ச், கேமரா, மடிக்கணினி, கைப்பைகள், ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மைதானத்தின் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் தங்கள் வீடுகளுக்கு செல்லும் வகையில்,  மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பேருந்து வசதிகள் உள்ளன.  மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/சின்னசாமி-கிரிக்கெட்-மைதானம்-அருகே-இன்று-வாகனம்-நிறுத்தத்-தடை-3104052.html
3104051 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மைசூரில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம் DIN DIN Wednesday, February 27, 2019 09:33 AM +0530 மைசூரில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்  மார்ச் 9-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்)  வாயிலாக  விரைவான,  செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 
மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தேசிய மக்கள் நீதிமன்றங்களை மாதம்தோறும் நடத்தி வழக்குகளைத் தீர்த்துவைக்க முடிவுசெய்யப்பட்டது. 
நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படாத மனுக்கள் போன்றவை மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
கர்நாடக மாநில சட்டசேவை ஆணையத்தின் சார்பில் மைசூரு மாவட்டம், வட்டங்களில்  மார்ச் 9-ஆம் தேதி சட்டசேவை மையங்கள் அல்லது தற்காலிக மக்கள் நீதிமன்றங்களை அணுகி வழக்குகள் மீது தீர்வுகளை பெற்றுகொள்ளலாம். 
மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகள், காப்பீடுகள், வருவாய் வழக்குகள், மின்சாரம்,  குடிநீர் பிரச்னைகள்,  சிறுகுற்றங்கள், வங்கிக் கடன் நிலுவைகள், கடன் வசூல் உள்ளிட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/மைசூரில்-மார்ச்-9-இல்-தேசிய-மக்கள்-நீதிமன்றம்-3104051.html
3104050 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மைசூரு மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் DIN DIN Wednesday, February 27, 2019 09:33 AM +0530 மைசூரு மாநகராட்சியில் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மைசூரு மாநகராட்சி மாமன்றத்தில் மேயர் புஷ்பலதா, துணை மேயர் ஷபிஅகமது, ஆணையர் ஷில்பாநாக் உள்ளிட்டோர் முன்னிலையில் நிதி- வரி நிலைக் குழுத் தலைவர் ஷோபா செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.
ரூ. 775.05 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
பட்ஜெட்டில் குடிநீர் விநியோகம்,  மழை நீர் சேகரிப்பு, தேவராஜ் அரஸ் சாலை மேம்பாடு, பூங்காக்கள் அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 
மைசூரில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளில் மகளிருக்கு பிங்க் கழிவறைகள் அமைக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்ந்துள்ளதால், அரசு பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், டவுன் ஹால் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கழிவறைகள் அமைத்தல், தூய மைசூரை உருவாக்க ரூ. 25 லட்சம் ஒதுக்குதல்,  வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  பசுமை கடை திட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத மைசூரை உருவாக்குதல்,  துணி- காகிதப் பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  கேபிள்கள் இல்லாத சாலைகளை உருவாக்குதல்,  ரூ. 3 கோடியில் மைசூரின் முக்கிய சதுக்கங்களில் அழகை மேம்படுத்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/மைசூரு-மாநகராட்சியில்-பட்ஜெட்-தாக்கல்-3104050.html
3104049 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு விபத்தில் 3 பேர் சாவு DIN DIN Wednesday, February 27, 2019 09:32 AM +0530 ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலைத் தடுப்புச்சுவரில் மோதியதில்,  3 பேர் இறந்தனர்.
பெங்களூரு மாரத்தள்ளியைச் சேர்ந்தவர்கள் சேதன் (24), வினய் (25), லிகித் (25), ஹேமந்த், லோஹித். இவர்கள் 5 பேரும் திங்கள்கிழமை நள்ளிரவு காரில் கோவாவுக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தும்கூரு மாவட்டம் சிரா-ஹிரியூர் தேசிய நெடுஞ்சாலை 48-இல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புச்சுவரில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சேதன், வினய் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் லிகித் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஹேமந்த், லோஹித் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து தாவரகெரே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/விபத்தில்-3-பேர்-சாவு-3104049.html
3104048 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அடுத்த 4 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் DIN DIN Wednesday, February 27, 2019 09:32 AM +0530 அடுத்த 4 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில்  2-வது நாளாக நடைபெற்ற ஆசியான் தொழில் மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசியது:-
கர்நாடகத் தொழில் வர்த்தகச் சபை கூட்டமைப்பின் ஆதரவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு  ஆசியாவில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.  சர்வதேச அளவிலான இளம் தொழில் முனைவோரும் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தொழில்துறையின் வளர்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் உயரும். 2018-19 ஆண்டில் கர்நாடகத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தேசிய அளவில் முதலீட்டில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சியால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அடுத்த 4 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கப்படும். புத்தாக்கம், தகவல், உயிரி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் பெங்களூரு தலைநகரமாக உருவாகியுள்ளது.  தேசிய அளவில் தொழில்துறை வளர்ச்சியில் 25 நகரங்களில் 19 நகரமாக பெங்களூரு உள்ளது.  மாநிலத்தில் பெங்களூரு மட்டுமின்றி 2-ஆம் நிலை நகரங்களிலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில் கொள்கையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் அமைச்சர் சா.ரா.மகேஷ், கர்நாடக தொழில் வர்த்தகசபை கூட்டமைப்பின் தலைவர் சுதாகர்ஷெட்டி, துணைத் தலைவர் ஜனார்தன், மாநாட்டு ஒங்கிணைப்பாளர் சிவசண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/அடுத்த-4-ஆண்டுகளில்-9-லட்சம்-பேருக்கு-வேலைவாய்ப்பு-அமைச்சர்-கேஜேஜார்ஜ்-3104048.html
3104047 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பதவியை ராஜிநாமா செய்வதால் பிரச்னை தீராது:  செளம்யா சிவக்குமார் DIN DIN Wednesday, February 27, 2019 09:32 AM +0530 பதவியை ராஜிநாமா செய்வதால்,  பிரச்னை தீராது என்று பெங்களூரு மாநகராட்சியின் சமூக நல நிலைக் குழுத் தலைவர் செளம்யா சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமூக நல நிலைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர்,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: -
பெங்களூரு மாநகராட்சியில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,  வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான நிதி நேரடியாக வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனால் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நிலைக் குழுக்களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது.  இதனால் நிலைக்குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பதவியை ராஜிநாமா செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களிடன் ஆலோசனை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  பட்ஜெட்டில் நிலைக்குழுக்குகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றார். மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கங்காம்பிகே பதவி வகித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக அதே கட்சியின் நிலைக் குழுத் தலைவர் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/பதவியை-ராஜிநாமா-செய்வதால்-பிரச்னை-தீராது--செளம்யா-சிவக்குமார்-3104047.html
3104046 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பயங்கரவாதிகளுக்குத் தக்க பாடம்: மல்லிகார்ஜுன கார்கே DIN DIN Wednesday, February 27, 2019 09:32 AM +0530 பயங்கரவாதிகளுக்குத் தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கலபுர்கியில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளை கொன்றுள்ளது.   பயங்கரவாதிகளுக்கு தக்கப் பாடம் புகட்டப்பட்டுள்ளது. 
பயங்கரவாதத்தை ஒடுக்க பாஜக ஆட்சியில் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட ஆட்சிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.  பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமான ஒன்று. 
காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நமது கடமை. எனவே இதனை பிரசாரம் செய்வது தேவையில்லாதது. 
பயங்கரவாதத்தைத் தடுக்க ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. பாகிஸ்தானிலிருந்து பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியுள்ளோம். 
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1 லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2019/feb/27/பயங்கரவாதிகளுக்குத்-தக்க-பாடம்-மல்லிகார்ஜுன-கார்கே-3104046.html
3011661 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "மார்பக புற்றுநோயை ஒழிக்க வேண்டும்' DIN DIN Monday, October 1, 2018 11:20 AM +0530
பெங்களூரு:  மார்பக புற்றுநோயை ஒழிக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று ரோட்டரி பாம்வெல்லே தலைவர் ரிதீஷ்கோயல் தெரிவித்தார்.
மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக சக்ரா மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட  நிகழ்ச்சி ,  பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் பேசியது:-
மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.  இதற்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால், நோயை முழுமையாகக் குணமாக்க முடியும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 
முதல்கட்டமாக,  பெங்களூரு மாநகரிலும்,  கர்நாடக-தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும். 
பரிசோதனையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறிந்தால், அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.  இந்த நோயை ஒழிக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் சக்ரா மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் தகாஷிமாகி உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/மார்பக-புற்றுநோயை-ஒழிக்க-வேண்டும்-3011661.html
3011660 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு தேவை' DIN DIN Monday, October 1, 2018 11:19 AM +0530
பெங்களூரு:  இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இதய நோய் வல்லுநர் பி.ரமேஷ்
தெரிவித்தார்.
பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: -
அண்மைக்காலமாக இந்தியாவில் இதய நோய்களால் பலர் இறப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக,  வாழ்க்கை முறை,  மது, புகைப் பழக்கங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதய நோய்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால்,  எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 
மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் அதனை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும். 
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதோடு, நோயாளிகளை பராமரிப்பது குறித்து விளக்க வேண்டும். 
சீரான உடல் பயிற்சி, உணவுப்பழங்கங்களால் இதய நோய்களை தடுக்க முடியும் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/இதய-நோய்கள்-குறித்து-விழிப்புணர்வு-தேவை-3011660.html
3011659 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு முன்னாள் மேயர் வெட்டிக் கொலை DIN DIN Monday, October 1, 2018 11:19 AM +0530
தும்கூரு:  தும்கூரு முன்னாள் மேயரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தும்கூரு படவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (45).  மஜதவைச் சேர்ந்த இவர்,  மாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.  மேயருமாகவும் முன்பு பதவி வகித்துள்ளார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபயிற்சியை முடித்துகொண்டு,  தனது வார்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிய  படவாடி அருகே உள்ள தனது உறவினரின் தேநீர் கடையில் அமர்ந்திருந்துள்ளார்.  அப்போது மினிவேனில் வந்த மர்ம நபர்கள், ரவிக்குமாரின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி  தாக்க முயன்றுள்ளனர்.  அவர் தப்பியோடியபோதும்,  விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் மடக்கி பிடித்து,  அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில், ரவிக்குமார் இறந்தார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தும்கூரு போலீஸார் வழக்குப் பதிந்து,  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/முன்னாள்-மேயர்-வெட்டிக்-கொலை-3011659.html
3011658 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்: இளைஞர்களுக்கு சித்தராமையா அறிவுரை DIN DIN Monday, October 1, 2018 11:18 AM +0530
மைசூரு:  புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் சோதனை முகாமை தொடக்கிவைத்து,  அவர் பேசியது:-

இளமைக்காலத்தில் வழக்குரைஞராக பணியாற்றியபோது,  தொடர் புகைப்பழக்கத்துக்கு ஆள்பட்டிருந்தேன்.  ஒருநாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பேன். 

ஒருமுறை வெளிநாடு சென்ற நண்பர்கள் வகை, வகையான சிகரெட்டுகளை பெரிய பெட்டியில் கொண்டுவந்து பரிசாக அளித்தனர். இந்த சிகரெட்களை தினமும் புகைத்து காலி செய்தேன். ஒருநாள் இரவு புகைப்பழக்கம் குறித்து யோசித்தேன். அப்போது, இனிமேல் புகைப்பிடிக்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். 

இதன்படி, 31 ஆண்டுகளுக்கு முன்பாக 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி புகைப்பழக்கத்தை முழுமையாக விட்டுவிட்டேன். அதன்பிறகு புகைப்பிடித்ததே கிடைத்தது.  மேலும் புகைவாசனையை சகித்துகொள்ள தற்போது முடியவில்லை. 

புகைப்பழக்கம் போன்ற தீயபழக்கங்களுக்கு இளம் வயதில் எளிதில் ஆள்படுவது இயல்பு. சிகரெட் பெட்டியின்மீது புகைப்பது உடல்நலனுக்கு கேடு என்று எழுதியிருந்தாலும் அதை பார்த்துக்கொண்டே புகைப்போம். எனவே, புகைப்பழக்கத்துக்கு ஆள்பட்டிருந்தால், அதில் இருந்து உடனடியாக விடுபட வேண்டும்.

இல்லையென்றால் பின்னொருநாளில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வேண்டியநிலைக்கு ஆள்படுவோம். புற்றுநோய்கள் எப்போதும் கடைசிக்கட்டத்தில் தான் கண்டறியப்படுகின்றன. எனவே, உயிர்பிழைப்பது கடினமாகிவிடுகிறது. 

வெளிநாடுகளில் சிகிச்சை இருந்தாலும், அது உயிர்பிழைக்க உதவுமா? என்பதை உறுதியாக கூறமுடியாது. எனவே, இளைஞர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் புகைப்பழக்கத்தில் இருந்து உடனடியாக விடுபடவேண்டும் என்றார் சித்தராமையா.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/புகைப்பழக்கத்தில்-இருந்து-விடுபட-வேண்டும்-இளைஞர்களுக்கு-சித்தராமையா-அறிவுரை-3011658.html
3011657 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் தூய்மைக்கு முக்கியத்துவம்: மேயர் கங்காம்பிகே DIN DIN Monday, October 1, 2018 11:17 AM +0530
மைசூரு:  பெங்களூரு மாநகரில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.

மைசூரு சுத்தூர் மடத்துக்கு தனது கணவர் மல்லிகார்ஜுனுடன் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த கங்காம்பிகே மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரா சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.

பின்னர்,  மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:-
சர்வதேச நகரமான பெங்களூரில்  மழை வந்தால்,  வெள்ளம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் தூர்ந்து போயுள்ள கால்வாய்கள் காரணம். 

எனவே வரும் நாள்களில் ராஜ கால்வாய் உள்ளிட்ட அனைத்து கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.   ஒராண்டில் பெங்களூரில் அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். தூய்மைக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/பெங்களூரில்-தூய்மைக்கு-முக்கியத்துவம்-மேயர்-கங்காம்பிகே-3011657.html
3011656 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மைசூரு-சாந்த்ராகட்சி தட்கல் சிறப்பு ரயில் சேவை DIN DIN Monday, October 1, 2018 11:16 AM +0530
பெங்களூரு:  மைசூரில் இருந்து சாந்த்ராகட்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக மைசூரில் இருந்து சாந்த்ராகட்சி ரயில்நிலையத்திற்கு ஒருவழி தட்கல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண்-06219-மைசூரு-சாந்த்ராகட்சி தட்கல் சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 2-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 3 மணிக்கு சாந்த்ராகட்சி ரயில்நிலையத்துக்குச் சென்றடைகிறது. 
இந்த ரயில் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம்,பங்கார்பேட், ஜோலார்பேட், கட்பாடி, ரேனிகுண்டா, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டணம், விசியநகரம், பலசா, பெர்ஹாம்பூர், குர்தாசாலை, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலசோர், காராக்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். 
ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 6 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைபெட்டிகள் 11, 2-ஆம் வகுப்பு பொதுபெட்டிகள் 3, சரக்கு மற்றும் ஓய்வறை கொண்ட 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று  கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/மைசூரு-சாந்த்ராகட்சி-தட்கல்-சிறப்பு-ரயில்-சேவை-3011656.html
3011655 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: அமைச்சர் என்.மகேஷ் DIN DIN Monday, October 1, 2018 11:16 AM +0530
பெங்களூரு:  அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆரம்பப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து,  பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் கல்வி பயில்வதை, கௌரவ குறைச்சலாக பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதனால், அவர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை.  எனவே பெற்றோர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பை வாங்க வேண்டும்.  அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அரசுடன், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். 
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் ஆதரவை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்று, முக்கிய பதவிகள் வகிக்கும் முன்னாள் மாணவர்களும் தங்கள் பயின்ற பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார் மகேஷ்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/அரசுப்-பள்ளிகளின்-வளர்ச்சிக்கு-ஆதரவு-அளிக்க-வேண்டும்-அமைச்சர்-என்மகேஷ்-3011655.html
3011653 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தேர்தல் தோல்வி: சித்தராமையாவுக்கு பதிலளிக்க குமாரசாமி மறுப்பு DIN DIN Monday, October 1, 2018 11:15 AM +0530
பெங்களூரு:  சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு பதிலளிக்க முதல்வர் குமாரசாமி மறுத்துவிட்டார்.

மைசூரு மாவட்டத்தின் வருணா தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, "வருணா அதிருஷ்டமான தொகுதியாகும். ஆனாலும் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதிப்படி அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டேன்.  ஆனால் எனக்கு எதிராக ராகு-கேதுகள் ஒன்றிணைந்ததால்,  தோல்வியை சந்தித்தேன்" என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூரில் குமாரசாமியிடம் ஞாயிற்றுக்கிழமை  கேட்டபோது,  பதிலளிக்க மறுத்துவிட்டார்.  அவர் மேலும் கூறியது:-

தேர்தல் குறித்து தனது மனதாழத்தின் எண்ணங்களை சித்தராமையா வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், எந்த காரணத்துக்காக,  சூழலில் எதற்காக அவ்வாறு குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை.  அவர் யாரை குறிப்பிட்டு பேசினார் என்பதும் தெரியவில்லை. எனவே, சித்தராமையாவின் கருத்துக்கு எந்த பதிலும் அளிக்க விரும்பவில்லை. 

கடந்த சில மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்தவண்ணம் உள்ளது.  எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல ஏதாவது விவகாரங்கள் சிக்கி, அதையும் ஊடகங்கள்பெரிதாகப் பேசிவருகின்றன. தற்போது புதியதாய் கேட்கிறீர்கள்.  இதுகுறித்து எதையும் கூற விரும்பவில்லை என்றார் குமாரசாமி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/தேர்தல்-தோல்வி-சித்தராமையாவுக்கு-பதிலளிக்க-குமாரசாமி-மறுப்பு-3011653.html
3011652 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மூத்த குடிமக்களுக்கான சாதனையாளர் விருது அறிவிப்பு DIN DIN Monday, October 1, 2018 11:15 AM +0530
பெங்களூரு:  கர்நாடக அரசு வழங்கும் மூத்தகுடிமக்கள் சாதனையாளர் விருது பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள்,  மூத்த குடிமக்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள்,  மூத்தகுடிமக்கள் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 1-இல் பன்னாட்டு மூத்தக்குடிமக்கள் தினவிழாவை கொண்டாடிவருகிறது. 
இந்த விழாவில் கல்வி,  இலக்கியம், கலை,  சட்டம்,  விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்துள்ள 6 மூத்தக் குடிமக்களுக்கு சாதனையாளர் விருதை வழங்கி கர்நாடக அரசு கெளரவித்துவருகிறது. 
சாதனையாளர்கள் தவிர, மூத்தகுடிமக்கள் நலனுக்காக நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்
படுகின்றன. 
இதன்படி,  2018-ஆம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் வருமாறு:-
இலக்கியம்-பி.எஸ்.சங்கர் (கலபுர்கி),  சமூக சேவை-விஜயலட்சுமி தேசமனே,  மகாதேவா ஹல்லூர், ஜகதாம்பா,  கல்வி-பி.வி. கெரே மார்த்தாண்டே (உடுப்பி),  கலை-சிந்தோதி பங்காரேஷ் (மண்டியா),  சட்டம்-சதாசிவா சித்தப்பா பெலகலி(பாகல்கோட்),  நிறுவனம்-எனோபோய் மருத்துவக் கல்லூரி. 
இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பட்டயம் வழங்கப்படும். அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெங்களூரில் நடக்கும் விழாவில் விருதுகளை முதல்வர் குமாரசாமி வழங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/மூத்த-குடிமக்களுக்கான-சாதனையாளர்-விருது-அறிவிப்பு-3011652.html
3011651 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும்: சித்தராமையா DIN DIN Monday, October 1, 2018 11:14 AM +0530
மைசூரு:  கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு 5 ஆண்டு  ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில்  உள்ள தனது இல்லத்தில் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். 
காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தி, ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.   இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. 
விவசாயிகளின் கடனை முதல்வர் குமாரசாமி தள்ளுபடி செய்துள்ளார்.  இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.  கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தை அக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.  கூட்டணி அரசின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில்தான்  ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.   இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
 மைசூரு மாநகராட்சியில் மேயர்,  துணை மேயர் தேர்வு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.  வழக்கு விசாரணை முடிந்த பின்னர்  தேர்தல் நடைபெறும்.  இந்தப் பதவிகளுக்கு உரிய நபர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சித்தராமையா.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/oct/01/காங்கிரஸ்-மஜத-கூட்டணி-அரசு-ஆட்சியை-முழுமையாக-நிறைவு-செய்யும்-சித்தராமையா-3011651.html
2784838 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "வடிவமைப்புத் தொழிலில் இந்தியா முன்னணி'  பெங்களூரு, DIN Thursday, October 5, 2017 09:00 AM +0530 சர்வதேச அளவில் வடிவமைப்புத் தொழிலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக டிசால்ஸ் சிஸ்டம்ஸ் மூத்த இயக்குநர் பி.எம்.ரவிகுமார் தெரிவித்தார்.
 பெங்களூரில் புதன்கிழமை சாலிட் ஒர்க்ஸ்-2018 என்ற வடிவமைப்பு மற்றும் பொறியியல் பயன்பாட்டிற்கான செயலியை அறிமுகம் செய்து அவர் பேசியது: சர்வதேச அளவில் வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதன் மூலம் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
 வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறையில் மேலைநாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் அஸ்டேரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீல் மெஹதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/05/வடிவமைப்புத்-தொழிலில்-இந்தியா-முன்னணி-2784838.html
2781143 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு காங்கிரஸ் மூத்த உறுப்பினர்களுக்கு அவமரியாதை?  பெங்களூரு, DIN Thursday, September 28, 2017 09:00 AM +0530 காங்கிரஸ் கட்சியில் மூத்த உறுப்பினர்களை அவமரியாதையாக நடத்துவதாக அக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.எல்.நரேந்திரபாபு குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் உழைத்துள்ளேன். அதன் காரணமாக 3 முறை மாமன்ற உறுப்பினராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், அண்மைக்காலமாக என்னை போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்களை அவமரியாதையாக நடத்துவதே வாடிக்கையாகியுள்ளது.
 எனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மீது என் போன்ற மூத்த உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களுடன் விரைவில் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர். எனவே, காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதை சரிசெய்ய முன்வர வேண்டும் என்றார்.
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/sep/28/காங்கிரஸ்-மூத்த-உறுப்பினர்களுக்கு-அவமரியாதை-2781143.html
2774522 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் இருந்து ஆலப்புழைக்கு புதிய பேருந்து சேவை DIN DIN Sunday, September 17, 2017 03:00 AM +0530 பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்கு புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரில் இருந்து ஆலப்புழைக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட (மல்ட்டி ஆக்சியல்) சொகுசுப் பேருந்து சேவை அக்.9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பெங்களூரு-ஆலப்புழை இடையிலான பேருந்து பெங்களூரு-கெம்பேகெளடா பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு ஆலப்புழைக்கு சென்றடையும். அதேபோல, ஆலப்புழையிலிருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு பெங்களூரு வந்தடையும். இதன் கட்டணம் ரூ.1205 ஆகும். கர்நாடகம், கோவா, தமிழகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, புதுச்சேரி, கேரள மாநிலங்களிலுள்ள முன்பதிவு மையங்களில் 30 நாள்களுக்கு முன் முன்பதிவுசெய்யும் வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசியை அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு இணையதளத்தை பார்வையிடலாம் என அதில் தெரிவக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/sep/17/பெங்களூரில்-இருந்து-ஆலப்புழைக்கு-புதிய-பேருந்து-சேவை-2774522.html
2768305 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? பா.ஜ.க.வுக்கு சித்தராமையா கேள்வி  பெங்களூரு, DIN Wednesday, September 6, 2017 09:00 AM +0530 விவசாயிகளின் கடனை ரத்து செய்ய கர்நாடக பாஜகவினர் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 பாஜக இளைஞர் அணியினர் மாநில அளவில் "மங்களூரு செல்வோம்' என்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.
 ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால், சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக ஊர்வலத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
 பாஜகவினர் மங்களூருக்கு ஊர்வலம் செல்வதை விட, மாநிலத்தில் விவசாயிகளின் ரூ. 42 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தில்லிக்கு ஊர்வலம் செல்ல வேண்டும். அப்படி ஊர்வலம் சென்றால், அதற்கு அரசும் உறுதுணையாக இருக்கும்.
 மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தால் கடலோர மாவட்டங்களில் பிரச்னைகள்தான் அதிகரிக்கும். அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் மத வாதத்திற்கு ஒருபோதும் துணை போக்கக் கூடாது.
 பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா மாநிலத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/sep/06/விவசாயிகளின்-கடனை-ரத்து-செய்ய-மத்திய-அரசை-வலியுறுத்தாதது-ஏன்-பாஜகவுக்கு-சித்தராமையா-கேள்வி-2768305.html
2764219 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனம் வாங்கியதில் முறைகேடு: பாஜக  பெங்களூரு, DIN Wednesday, August 30, 2017 09:00 AM +0530 பெங்களூரு மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக வாங்கிய உபகரணங்கள், வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த உறுப்பினரும், மாநகராட்சி ஆளும் கட்சியின் முன்னாள் தலைவருமான என்.ஆர்.ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 பெங்களூரு மாநகராட்சியில் குப்பையை அள்ள உபகரணங்களும், வாகனங்களும் வாங்கப்பட்டன. இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேட்டிற்கு முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும் துணை புரிந்துள்ளனர். 15 காம்பேக்டர் வாகனங்கள் வாங்கியதில் மட்டும் ரூ. 14.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது.
 மேலும் 6 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கவும், அதற்கான உபகரணங்கள் வாங்கவும் ரூ. 604 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ. 100 கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குப்பை அள்ளுவதற்கு வாகனங்கள், உபகரணங்களை வழங்கிய டிபிஎஸ் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்.
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/aug/30/பெங்களூரு-மாநகராட்சியில்-குப்பை-அள்ளும்-வாகனம்-வாங்கியதில்-முறைகேடு-பாஜக-2764219.html
2732187 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடக தமிழர்களின் உயிர்த் தியாகம்: வரலாறு போற்றும் தியாகக் காவியம்! நமது நிருபர், கோலார் தங்கவயல் DIN Wednesday, July 5, 2017 09:33 AM +0530 தமிழை பாதுகாக்க கர்நாடகத்தில் நடைபெற்ற மொழிப் போரில் தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகம் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று காவியமாகும் என்று கர்நாடகத் தமிழர்களால் நெகிழ்ச்சியுடன் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயலில் 1982, ஜூலை 5,6,7 ஆகிய தேதிகளில் தமிழ் மொழிக் காக்கும் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் நான்கு பேர் உயிர்த் தியாகம் செய்த வரலாற்று நிகழ்வு கர்நாடக தமிழர்களால் மறக்க முடியாத, காலத்தால் அழிக்கமுடியாத துக்கம் தோய்ந்த நிகழ்வாகும்.

1956-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் காலாகாலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரத்தை, பேச்சுரிமையை, அரசியல் அங்கீகாரத்தை, தாய்மொழி உரிமையை, குடிமை உரிமையை தற்காத்து கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. அந்தகாலத்தில் அதிக மதிப்பெண்களை பெறும்நோக்கில், பள்ளிகளில் முதல்பாடமாக சம்ஸ்கிருதத்தை படிக்கும்போக்கு கன்னடர்களிடம் அதிகரித்தவண்ணம் இருந்தது. இதுதவிர, ஹிந்தி மொழி மீதான மோகமும் கன்னடர்களிடையே அதிகளவில் காணப்பட்டது.

சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கன்னடத்தை கபளீகரம் செய்வதை கவனித்த கன்னட ஆர்வலர்கள், கன்னடமொழிக்கு முக்கியத்துவம் அளிக்க போராட்டம் நடத்தினர். அதன்விளைவாக, கன்னட மொழி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கு கல்வி அறிஞர் முன்னாள் துணைவேந்தர் வி.சி.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்து அரசு பள்ளிகளிலும் கன்னட மொழியை முதல்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை போன்ற பரிந்துரைகளை அக்குழு அளித்திருந்தது.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட அப்போதைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான பணியைத் தொடங்கியது. இதனால், தமிழ் மொழியை முதல்பாடமாக எடுத்துப்படித்து வந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், உருது, மராத்தி மொழியைப் படித்து வந்த மாணவர்களுக்கும் தாய்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது. இதனால், கிளர்ந்தெழுந்த தமிழர்கள் தமிழ் இலக்கியப் பேரவையின் கோலார் தங்கவயலில் ஜிம்கானா திடலில் கோகாக் அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்கக் கோரியும், கோகாக் அறிக்கையை திரும்பபெறக்கோரியும் வலியுறுத்தி 1982-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பெங்களூரில் பிரமாண்டமானபேரணி நடத்தி, அன்றைய ஆளுநர் கோவிந்த்நாராயண், முதல்வர் குண்டுராவிடமும் மனு அளிக்கப்பட்டது.

பின்னர், கப்பன்பூங்காவில் தமிழர்களின் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கோலார் தங்கவயலில் ஜூலை 1-ஆம் தேதி திமுக சார்பில் கோகாக் அறிக்கையை திரும்பபெறக் கோரி கூட்டம் நடத்தப்பட்டது. இது கோலார்தங்கவயல் இளைஞர்கள், மாணவர்களிடையே பெரும் எழுச்சிக்கு வித்திட்டது. இதனிடையே, கோலார்தங்கவயல், இராபர்ட்சன்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய கோலார் தங்கவயல் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சி.எம்.ஆறுமுகம்,"கர்நாடகத்தில் தமிழில் படிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவோர், ஜோலார்பேட்டைக்கு ஓடிவிடுங்கள்" என்று தமிழ்மொழிக்கு எதிராகப் பேசினார்.

இதற்கு கோலார்தங்கவயலில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி கோலார் தங்கவயலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழிக் கல்வி பாதுகாக்கக் கோரி ஊர்வலம் நடத்தினர். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலம் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்திசிலை அருகே ஊர்வலம் வந்தபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில், கூட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதில் சின்னாபின்னமாக சிதறி ஓடிய மாணவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த போலீஸார், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தங்கம் விளைந்த கோலார் தங்கவயல் நகரமே கலவரக்காடானது.

மாணவர் போராட்டங்களை நசுக்க போலீஸார் வன்முறை வெறியாட்டத்தை அவிழ்த்து விட்டனர். என்.டி.பிளாக் பகுதியைச் சேர்ந்த மாணவர் பரமேஷ், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு முதல் பலியானார். கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சாம்பியன்ரீஃப் பகுதியில் மோகன் என்பவர் மார்பை திறந்துகாட்டு சுடு என்று வீராவேசமாக கூறிய வேகத்தில், அவரது மார்பை போலீஸாரின் குண்டு துளைத்ததில் மாண்டுபோனார்.அவரைத் தொடர்ந்து, பால்ராஜ், உதயகுமார் போன்ற இளைஞர்களும் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தனர். இந்தபோராட்டத்தில் போலீஸாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 300-க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜூலை 7-ஆம் தேதி கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், தமிழ் மொழிக்காக நான்கு தமிழ் இளைஞர்கள் செய்த உயிர்த்தியாகம் இன்னமும் கோலார் தங்கவயல் மக்களின் மனங்களை வேதனையால் நிலைத்திருக்கின்றன.

உயிர்த் தியாகம் செய்தும் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் தங்களின் மொழி உரிமையை பெற முடியாத நிலை 35 ஆண்டுகளாக நீடித்துவருவது வேதனை தருவதாக மொழி ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோலார் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 5,6,7 ஆகிய 3 நாள்களிலும் தமிழ் அமைப்புகளால் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தாய்மொழி உரிமையைப் பெறுவதில் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நான்கு தியாகிகளின் வீரவணக்க நாள், கர்நாடக தமிழர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/jul/05/கர்நாடக-தமிழர்களின்-உயிர்த்-தியாகம்-வரலாறு-போற்றும்-தியாகக்-காவியம்-2732187.html
2678447 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு புதிய தொழில்நுட்பங்களுடன் கார் அறிமுகம் பெங்களூரு, DIN Tuesday, April 4, 2017 08:45 AM +0530 புதிய தொழில்நுட்பங்களுடன் டாடா டிகோர் ஸ்டைல்பேக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

புதிய காரை அறிமுகப்படுத்தி அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிகப் பிரிவு சந்தைப்படுத்தல் தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறியது:
3 மாதங்களுக்கு முன்பு ஹெக்ஸô, டியாகோ கார்களை அறிமுகம் செய்திருந்தோம். இதைத் தொடர்ந்து தற்போது டாடா டிகோர் ஸ்டைல்பேக் என்ற காரை அறிமுகம் செய்திருக்கிறோம். தற்கால வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு தகுந்தபடி புதிய வகையான கார்களை அறிமுகம் செய்து வருகிறோம்.

இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு வடிவமைப்பு, என்ஜின், இடவசதி, உட்புற வசதிகள், செயல்திறன் ஆகியவற்றில் புதுமையை புகுத்தியுள்ளோம். டீசல், பெட்ரோல் எரிபொருளை பயன்படுத்தும் 8 வகையான கார்களை அறிமுகம் செய்துள்ளோம். பெட்ரோல் கார் ரூ.4.85 லட்சம், டீசல் கார் ரூ.5.77 லட்சத்தில் விலை தொடங்குகிறது. 650 விற்பனை மையங்களில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/apr/04/புதிய-தொழில்நுட்பங்களுடன்-கார்-அறிமுகம்-2678447.html
2669822 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு புதிய ஹோண்டா கார் அறிமுகம் பெங்களூரு, DIN Tuesday, March 21, 2017 08:30 AM +0530 புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

பெங்களூரில் திங்கள்கிழமை டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்த ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர்சென் பேசியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்ப கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இந்த கார் இளைஞர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் 65 சதவீதம் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் இந்த கார், எரிபொருள் சிக்கனம் கொண்டதாகும். டபுள்யூஆர்-வி கார் 6 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இதன் விலை ரூ.7.90 லட்சத்தில் தொடங்குகிறது என்றார் அவர்.
 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/mar/21/புதிய-ஹோண்டா-கார்-அறிமுகம்-2669822.html
2620444 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அரசு அதிகாரிகள், ஆசிரியர் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினர் சோதனை: பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் பெங்களூரு DIN Friday, December 23, 2016 09:00 AM +0530 வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு, பல்லாரி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்களின் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 பெங்களூரு மாநகராட்சி திட்டப் பிரிவு உதவி இயக்குநர் பசவராஜ், வரி வசூல் அதிகாரி வினய்குமார், சித்தரதுர்கா மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளர் எச்.எல்.புட்டலிங்கய்யா, தாவணகெரேயில் ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் உமேஷ்பட்டேல், தென்கன்னட மாவட்டம், பெலதங்கடி வட்டாட்சியர் அலுவலகக் கண்காணிப்பாளர் கோவிந்த்நாயக், பல்லாரி மாவட்ட மருத்துவமனை பயிற்சி மைய அதிகாரி பம்பாவதி, சாம்ராஜ்நகர் உப்பரா லேஅவுட் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரேசண்ணா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை
 நடத்தப்பட்டது.
 இதில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/dec/23/அரசு-அதிகாரிகள்-ஆசிரியர்-வீடுகளில்-ஊழல்-தடுப்புப்-படையினர்-சோதனை-பல-கோடி-மதிப்பிலான-சொத்து-ஆவணங்கள-2620444.html
2554012 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம்: முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூரு Sunday, August 7, 2016 04:09 AM +0530 மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறுகிறது.

கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் பாய்ந்தோடும் மகதாயி நதியில் இருந்து வடகர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக 7.56 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தின் மலபிரபா நதிக்கு மடைமாற்றிவிட கர்நாடகம் நீண்டகாலமாக கோரி வருகிறது. மகதாயி நதியில் இருந்து மலபிரபா நதிக்கு தண்ணீர் கொண்டுசெல்ல கலசா-பண்டூரி கால்வாயும் கட்டப்பட்டு, அதன் பணிகள் பாதியில் நிற்கின்றன. இந்த விவகாரம் மகதாயி நடுவர் மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், வடகர்நாடக மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதால், இடைக்காலத் தீர்ப்பு வழங்குமாறு கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை நடுவர் மன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதனால், இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, பெலகாவி, தார்வாட், கதக், பாகல்கோட் மாவட்டங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக உள்ள மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரு, விதானசெளதாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு சட்டப்பேரவை, சட்டமேலவையின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாநிலத்தின் மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்கள், கதக், பாகல்கோட், பெலகாவி, தார்வாட் மாவட்ட சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பால் ஏற்படும் விளைவுகள், அடுத்தக்கட்டமாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மகதாயி நதிநீர் கோரி கடந்த ஓராண்டாக வடகர்நாடக விவசாயிகள் தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமைச்சர் சந்திப்பு:

புதுதில்லியில் சனிக்கிழமை மகதாயி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வாதாடி வரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஃபாலிநாரிமனை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், மகதாயி நதிநீர் விவகாரத்தில் மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இருவரும் விவாதித்தனர். மகதாயி நடுவர் மன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதால் எந்த சாதகமான விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்றும், அதைவிட, கோவா, மகாராஷ்டிரம், கர்நாடக மாநில முதல்வர்களை அழைத்து அரசியல்ரீதியாக இப்பிரச்னைக்குத் தீர்வுகாணவும், இந்த விவகாரத்தில் முனைப்புக்காட்ட பிரதமர் நரேந்திரமோடியின் தலையீட்டை வலியுறுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு ஃபாலிநாரிமன் ஆலோசனை கூறியதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/மகதாயி-நதிநீர்ப்-பங்கீடு-வி-2554012.html
2554011 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மாநில அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசலே காரணம்: சதானந்த கெளடா பெங்களூரு Sunday, August 7, 2016 04:09 AM +0530 மாநில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசலே காரணமாகும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர் அணி கலந்தாய்வை தொடக்கி வைத்து அவர் கூறியது: கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு சாபமாக அமைந்துள்ளது. மாநில அரசின் ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசலே காரணமாகும். முதல்வர் சித்தராமையாவை சுற்றியிருப்பவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்கள். மாநில காங்கிரஸ் கட்சி இரண்டு கோஷ்டிகளாக பிரிந்துள்ளது. இது ஆட்சி நிர்வாகத்தின் மீதும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுக்கு அக்கறையில்லை. முதல்வர் சித்தராமையா, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். மாநில அரசு முழுமையாக முடங்கியுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை இன்றும் மக்கள் நினைத்து பார்க்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற பாஜகவின் இளைஞர் அணி தீவிரமாக உழைக்க வேண்டும். நமதுநாட்டின் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் பிரதமர் நரேந்திரமோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இளைஞர் அணியில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும். மேலும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அரவிந்த்லிம்பாவளி, இளைஞர் அணி மாநிலத் தலைவர் பிரதாப்சிம்ஹா, முன்னாள் தலைவர் முனிராஜே கெளடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/மாநில-அரசின்-நிர்வாக-சீர்கே-2554011.html
2554010 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு உள்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக விவசாயிகள் கைது பெங்களூரு Sunday, August 7, 2016 04:08 AM +0530 விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உள்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்பைக் கண்டித்து, வடகர்நாடகத்தின் தார்வாட், கதக், பாகல்கோட், பெலகாவி மாவட்டங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இதைக் கண்டித்து, அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தி பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் இல்லத்தை சனிக்கிழமை முற்றுகையிட

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக பெங்களூரு, காந்தி நகரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், முக்கிய நிர்வாகிகளான கடிதாள் சாமண்ணா, சிக்கசாமி, எச்.ஆர்.பசவராஜப்பா, அனுசுயம்மா, பசவராஜுமலலி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் சனிக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடியதால், அங்கு விவசாயிகளின் போராட்டத்தை தவிர்க்கவே போலீஸார் அவர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியது: உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால், போராட்டம் நடத்த முற்பட்ட விவசாயிகளை சங்க அலுவலகத்தில் கைது செய்துள்ளது எந்தவகையான ஜனநாயகம் என்பது புரியவில்லை. மகதாயி நதிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கைது செய்துள்ள விவசாயிகளை விடுதலை செய்யக் கோரினால் அது குற்றமா? மாநில அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/உள்துறை-அமைச்சர்-வீட்டை-முற-2554010.html
2554009 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மைசூரு குண்டுவெடிப்பு சம்பவம்: தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கு ஒப்படைப்பு பெங்களூரு Sunday, August 7, 2016 04:08 AM +0530 மைசூரு மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மைசூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆக.1-ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதற்கும், ஆந்திரம், கேரள மாநிலங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுவதாகத் தெரியவந்ததாலும், குண்டுவெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படுவதாலும், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) மாநில அரசு ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. என்ஐஏ-வின் மூத்த அதிகாரி சரத்குமார், கர்நாடக உள்மாநில பாதுகாப்புப் பிரிவு டிஜிபி நீலமணி ராஜுவுடன் ஆலோசனை நடத்தி, வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்திருக்கிறார்.

கடந்த ஏப். 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர், ஜூன் 15-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்திலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதேபோல, ஆக.1-ஆம் தேதி மைசூரில் குண்டுவெடித்தது. இந்த 3 சம்பவங்களிலும் நீதிமன்ற வளாகங்களில் குண்டுகள் வைக்கப்பட்டு, குண்டுகளை வெடிக்க வைக்க பிரஷர் குக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மைசூரில் குண்டுவெடித்த இடத்தில் அதிக வோல்ட் கொண்ட பேட்டரிகள் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குண்டுவெடிப்புக்கு பொட்டாஷியம் குளோரேட் மற்றும் கன்பவுடர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த சம்பவத்துக்குப் பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த பின்னணியில் என்ஐஏ தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/மைசூரு-குண்டுவெடிப்பு-சம்ப-2554009.html
2554008 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு கவிதை திருவிழா தொடக்கம் பெங்களூரு Sunday, August 7, 2016 04:08 AM +0530 பெங்களூரில் சனிக்கிழமை பெங்களூரு கவிதைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

அட்ட கலாட்டா அமைப்பு சார்பில், பெங்களூரு, லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் சனிக்கிழமை பெங்களூரு கவிதைத் திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் இந்தி திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ஜாவித் அக்தர் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் கலந்துகொண்டனர்.

கவிதைகளை வாசிப்பது, கேட்பது தவிர கவிதையின் கட்டமைப்பு, எழுதுவதற்கான வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம், கலந்தாய்வுகள் நடைபெற்றன. ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளில் கவிதைகள் குறித்தும் திருவிழாவில் விவாதிக்கப்பட்டது. மேலும் இம்மொழிகளில் கவிதைகளும் வாசிக்கப்பட்டன. விழாவில் ஜாவித் அக்தர் தவிர, கமாலினிமுகர்ஜி, விக்ரம் சம்பத், அஞ்சும் ஹாசன், வசுந்தராதாஸ், வாசு தீக்ஷித், கே.சச்சிதானந்தன் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருவிழாவில் கவிதையை மொழிபெயர்ப்பது, கவிதை எழுதுவது, இசைக்காக கவிதை எழுதுவது குறித்து உரைவீச்சு வழங்கப்படும். மேலும் கவிதை நூல்களை வெளியிடுவது குறித்து பதிப்பகங்களுடன் கலந்தாய்வு நடைபெறுகின்றன. 155 கவிதைகளின் தொகுப்பு நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.

"கர்நாடகத்தின் பெருமைமிகு வரலாற்றை இளைஞர்கள் அறிய வேண்டும்'

கர்நாடகத்தின் பெருமைமிகு வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, எடியூர் வார்டில் உள்ள சவுத்என்ட் சதுக்கத்தில் சனிக்கிழமை ரணதீரா கண்டீரவா பூங்காவை திறந்து வைத்து அவர் பேசியது: இந்தியாவின் கலாசார இதயமாக கர்நாடகம் விளங்கி வருகிறது. கர்நாடகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் கன்னட மக்களின் கலாசாரம், மொழியைப் பாதுகாத்து வந்துள்ளனர். கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆண்ட ரணதீரா கண்டீரவ நரசிம்மராஜ உடையார், தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். மேலும், கன்னடம் பேசும் பெரும்பாலான பகுதிகளை வென்று ஆட்சி செய்ததால், கர்நாடக சக்ரவர்த்தி என்றும் போற்றப்பட்டார்.

வீரத்தில் யாருக்கும் சளைக்காத நரசிம்மராஜ உடையார், எதிரிகளை வீரதீரத்துடன் எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார். விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்த நரசிம்மராஜ உடையார், வருவாயைப் பெருக்க நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்தியுள்ளார். நரசிம்மராஜ உடையாரை போல கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட கிருஷ்ணதேவராயா, மைசூரு உடையார் மன்னர்கள், மயூரவர்மன், இரண்டாம் புலிகேசி, அமோகவர்ஷா, நிருபதுங்கா ஹர்ஷாவர்தனா உள்ளிட்டோரின் சிலைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம், அவர்களைப் பற்றி இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான்.

கர்நாடகத்தின் உயிர்நாடியாக உள்ள காவிரித் தாயின் சிலையும் பூங்காவில் உள்ளது. கர்நாடகத்தை வளப்படுத்திய, வலுப்படுத்திய பேரரசர்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே இந்த பூங்காவின் நோக்கமாகும். 4.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.75 கோடியில் இந்த பூங்காவை உருவாக்கிய பெங்களூரு மாநகராட்சியை பாராட்ட வேண்டும் என்றார். விழாவில், மாநகராட்சி மேயர் மஞ்சுநாத் ரெட்டி, நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/பெங்களூரு-கவிதை-திருவிழா-தொ-2554008.html
2553990 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சுதந்திர தின மலர்க் கண்காட்சி வண்ணமயமாக தொடக்கம் பெங்களூரு, Sunday, August 7, 2016 04:02 AM +0530 சுதந்திர தின மலர்க் கண்காட்சி பெங்களூரில் வண்ணமயமாக தொடங்கியது.

1912-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைசூரு தோட்டக்கலை சங்கத்தின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரு, லால்பாக் பூங்காவில் சனிக்கிழமை 204-ஆவது மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டது. கண்காட்சியை தோட்டக்கலைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தொடக்கி வைத்தார்.

கண்காட்சியில் தொட்டிகளில் வைக்கப்பட்ட மலர்கள், கொய்த மலர்கள், தாய்லாந்து மலர் கலை, இகேபானா மலர் கலை, இந்திய மலர் கலை, குள்ளமலர்ச் செடிகள் (போன்சாய்), காய்கனி கலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. கண்ணாடி மாளிகையில் கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என போற்றப்படும் எம்.எச்.மரிகெளடாவின் சிலை மலர்களால் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளின் வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த துலிப் மலர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டியின் ஃபெர்ன்ஹில்ஸ் தோட்டத்தின் சார்பில் பசுமை எரிசக்தியை பறைசாற்றும் மிதவெப்ப தோட்ட மலர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய-அமெரிக்க ரகங்களின் மலர்கள், தொங்கு தோட்ட மலர்கள், ஹவாய் நாட்டின் மலர்கள், அரியவகை மலர்ச்செடிகள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

4 லட்சம் ரோஜா மலர்களால் ஆன 38 அடி சுற்றறளவு, 28 அடி உயரம் கொண்ட இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் மாதிரி வடிவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அழகு மிளிரும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ரோஜா மலர்களால் நாடாளுமன்றத்துக்கு உயிரூட்டப்பட்டுள்ளது. அதேபோல, லால்பாக் பூங்காவின் 3 இடங்களில் மலர்களால் ஆன பிரமீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தேசியப் பறவையான மயில், நடனமாடும் வடிவில் காய்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகவும் உயரமான மூங்கில் மரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, செங்குத்தான தோட்டம் மற்றும் போன்சாய் செடிகளும் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்தன.

முன்னதாக, கண்காட்சியை தொடக்கிவைத்த தோட்டக்கலைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாநகரின் மகுடங்களாக திகழும் லால்பாக் மற்றும் கப்பன் பூங்காக்களை மேலும் அழகூட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு பூங்காக்களையும் அழகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதேபோல, கர்நாடகத்தின் 4 நகரங்களில் மிக பிரம்மாண்டமான பூங்காக்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். அப்போது தோட்டக்கலைத் துறை இயக்குநர் சிவக்குமார், சங்க துணைத் தலைவர் ஸ்ரீகண்டையா, இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆக.11,15-இல் மாணவர்களுக்கு இலவசம்

ஆக.15-ஆம் தேதி வரை நடைபெறும் மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். ஆக.11, 15-ஆம் தேதிகளில் மட்டும் காலை 9 மணி முதல் 5 மணி வரை கண்காட்சியை காண ஒன்று முதல் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. கண்காட்சியை காண சாதாரண நாள்களில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, விடுமுறை நாள்களில் பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/சுதந்திர-தின-மலர்க்-கண்காட்-2553990.html
2553989 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெங்களூரு Sunday, August 7, 2016 04:02 AM +0530 பெங்களூரின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை அகற்றினர்.

பெங்களூரில் ஜூலை 28-ஆம் தேதி நள்ளிரவு பெய்த பலத்த மழையில் சிக்கபேகூர், கோடி சிக்கனஹள்ளி, மடிவாளா, பெலந்தூர் உள்ளிட்ட பல ஏரிகளில் நீர் நிரம்பி, வடிகால்கள் மூலம் மழைநீர் சாலையில் புகுந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆக.3-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பெங்களூரில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சனிக்கிழமை எலஹங்கா, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 32 இடங்களில் 300 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டடங்களையும் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் கிரேன்கள், கட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அகற்றினர்.

இதற்கு கட்டடங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

எலஹங்கா சட்டப்பேரவைத் தொகுதியில் சிவனஹள்ளி, புட்டேனஹள்ளி உள்ளிட்ட பல இடங்களிலும், மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் கசவனஹள்ளி முதல் கைகொண்டனஹள்ளி வரையில் 10 இடங்களிலும், பொம்மனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் சிருங்கேரி நகர் பகுதியிலும், அவலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவிலான மழைநீர் வடிகால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப் பணியில் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கும் என்றும், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை எளிதில் விடமுடியாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/aug/07/மழைநீர்-வடிகால்-ஆக்கிரமிப்-2553989.html
1817 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் உலக மகா காவியங்கள் தேசிய மாநாடு kirthika DIN Friday, June 3, 2016 05:26 AM +0530 பெங்களூரில் ஜூன் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை உலக மகா காவியங்கள் தேசிய மாநாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து வியாழக்கிழமை பேராசிரியர் எஸ்.ரங்கநாத் செய்தியாளர்களிடம் கூறியது:

உலக அளவில் பல்வேறு மொழிகளில் மகா காவியங்கள் படைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்திய மொழிகளில் பல மகா காவியங்கள் இடம் பெற்றுள்ளன. புராதன காலத்திலிருந்தே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட மகா காவியங்கள் உலக அளவில் பிரபலமாகியுள்ளன.

முதல்முறையாக தேசிய அளவில் உலக மகா காவியங்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட உலக மகா காவியங்கள் இடம் பெற உள்ளன. அவை கன்னடம், துளு, கொடவா, தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, காஷ்மீரி, உருது, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளில் உள்ள மகா காவியங்களாகும்.

பெங்களூரில் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தொடக்கிவைக்கிறார். மாநாட்டில் ஞானபீட விருது பெற்ற இலக்கியவாதி சந்திரசேகரகம்பாரா, கர்நாடக கலாசார பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மல்லாப்புரா வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

உலக மகா காவியங்கள் தேசிய மாநாட்டிற்கு இஸ்கான் தலைவர் மது பண்டிட்தாஸ் தலைமை ஏற்க உள்ளார் என்றார்.

 

]]>
https://www.dinamani.com/edition_bangalore/2016/jun/03/பெங்களூரில்-உலக-மகா-காவியங்கள்-தேசிய-மாநாடு-1817.html
1475 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மாநிலங்களவைத் தேர்தல்: மஜத வேட்பாளர் தேர்வில் குழப்பம் kirthika Express News Service Saturday, May 28, 2016 06:45 AM +0530 கர்நாடகத்திலிருந்து தேர்வு செய்யும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களில் காங்கிரஸýக்கு 2 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் உறுதியாகியுள்ளது. எஞ்சியுள்ள ஓர் உறுப்பினரைத் தேர்வு செய்ய சுயேச்சை, உதிரிக் கட்சிகளை இணைத்து மஜத முயன்று வருகிறது.

ஆனால், அந்த இடத்தை மஜதவிடமிருந்து பறிக்க காங்கிரஸ், பாஜக வியூகம் அமைத்து செயல்படுகின்றன. இதனிடையே, மஜதவில் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. உறுதியான முடிவெடுப்பதில் சுணக்கம் இருப்பதால், இந்த வாய்ப்பை காங்கிரஸ், பாஜகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளில் கடும் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 124, பாஜகவுக்கு 44, மஜதவுக்கு 40 இடங்கள் உள்ளன. உதிரிக் கட்சிகளுக்கு 7, சுயேச்சைகளுக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 2, பாஜக ஓர் இடத்திலும் போட்டியின்றி வெற்றி பெற முடியும். எஞ்சியுள்ள ஓர் இடத்தில் போட்டியிடுவதற்கு மஜத திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷை களமிறக்க கட்சிமேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதேபோல, பாஜகவும் தன்னுடைய வேட்பாளராக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் 3-ஆவது வேட்பாளராக தனக்கு நெருக்கமான தொழிலதிபர் பி.ஆர்.சென்னாரெட்டி அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தொழிலதிபருமான கே.சி.ராமமூர்த்தியைக் களமிறக்க அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் முதல்வர் சித்தராமையா பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

மஜத வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.ஃபரூக் ஆர்வம் காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. வேட்பாளரை முடிவுசெய்வதில் மஜதவில் குழப்பம் நீடிக்கிறது. மஜதவின் 40 எம்எல்ஏக்களில் ஜமீர் அகமதுகான், என்.செலுவராயசாமி, எச்.சி.பாலகிருஷ்ணன், அகண்ட சீனிவாஸ்மூர்த்தி, இக்பால் அன்சாரி ஆகிய 5 பேரை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி ரகசியமாக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மஜதவிலிருந்து அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ் அலியை களமிறக்கவும் தேவெ கெüடா யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் கன்னடர்களையே வேட்பாளர்களாக முடிவு செய்ய வேண்டும் என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருவதால், இதுகுறித்து இன்னும் முடிவெடுக்க முடியாமல் மஜத திணறிவருகிறது.

]]>
https://www.dinamani.com/edition_bangalore/2016/may/28/மாநிலங்களவைத்-தேர்தல்-மஜத-வேட்பாளர்-தேர்வில்-குழப்பம்-1475.html
1474 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தொழில் கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு kirthika Express News Service Saturday, May 28, 2016 06:44 AM +0530 கர்நாடக தொழில் கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (மே 28) வெளியிடப்படுகிறது.

கர்நாடகத்தில் மருத்துவம், பல்மருத்துவம், ஆயுர்வேதம்,ஹோமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, யோகா, பொறியியல், பி.எஸ்.சி., விவசாயம், கால்நடை, பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை, பி.ஃபார்ம், டி.ஃபார்ம் ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டில் சேருவதற்காக மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் கர்நாடக பொதுநுழைவுத் தேர்வுகளை மே 4,5 ஆகிய தேதிகளில் கர்நாடகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 391 தேர்வு மையங்களில் நடத்தியது.

பொது நுழைவுத் தேர்வை எழுத 1,78,377 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில், மே 4-ஆம் தேதி நடைபெற்ற உயிரியல் தேர்வில் 1,34,635 (75.48) மாணவர்களும், கணிதத் தேர்வில் 1,67,177(93.72) மாணவர்களும், மே 5-ஆம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 1,71,983(96.42) மாணவர்களும், வேதியியல் தேர்வில் 1,71,984 (96.42) மாணவர்களும் தேர்வெழுதினர்.

வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக வெள்ளிக்கிழமை(மே 6)நடந்த கன்னட மொழித் தேர்வில் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு முடிவுகள்

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக தேர்வு ஆணைய அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். என்இஇடி தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கையை கட்டாயம் நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிகழாண்டுக்கு மட்டும் தளர்த்தி மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளதால், கர்நாடக தேர்வு ஆணையம் நடத்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான முடிவுகளை அறிவிப்பதில் எவ்வித தொந்தரவும் கர்நாடக அரசுக்கு இருக்காது.

]]>
https://www.dinamani.com/edition_bangalore/2016/may/28/தொழில்-கல்வி-நுழைவுத்-தேர்வு-முடிவுகள்-இன்று-வெளியீடு-1474.html
1473 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நேருவின் சிந்தனைகள் எந்த காலத்திற்கும் பொருந்தும் kirthika Express News Service Saturday, May 28, 2016 06:43 AM +0530 ஜவாஹர்லால் நேருவின் சிந்தனைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, பெங்களூரு விதான செüதாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, தொலைநோக்குச் சிந்தனையாளர். மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியவர். சுதந்திர இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு, இந்தியாவை அனைத்து முனைகளிலும் மேம்படுத்த அயராது உழைத்தவர்.

விவசாய நாடாக இருந்தாலும், அத்துடன் தொழில் துறையையும் வளர்க்க பல்வேறு தொழில்சாலைகளைத் தொடங்கினார். நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்திய நேரு,அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

நேருவின் சிந்தனைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு அன்றே அடித்தளம் அமைத்தவர் நேரு என்பதை இந்தியமக்கள் மறக்கக் கூடாது.

பிரதமர் மோடி பதவியேற்று 2 ஆண்டுகள் கழிந்துள்ளன. ஆனால் மக்களவைத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார். இந்த 2 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு ஆட்சி எந்த சாதனையையும் செய்யவில்லை என்றார்.

]]>
https://www.dinamani.com/edition_bangalore/2016/may/28/நேருவின்-சிந்தனைகள்-எந்த-காலத்திற்கும்-பொருந்தும்-1473.html
714 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு வாகன திருட்டு வழக்கில் ஒருவர் கைது பெங்களூரு PTI Friday, May 13, 2016 12:32 PM +0530

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், துத்தா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). இவர் பெங்களூரில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவி உபயோகித்து திருடி வந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், வெங்கடேஷை கைது செய்து, ரூ. 1.10 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தியாகராஜநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வீட்டில் புகுந்து தங்கச் சங்கிலி திருட்டு

வெப்ப சலனத்தால் வீட்டின் கதவு, ஜன்னலை திறந்துவைத்து தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தங்கச் சங்கலியை திருடிச் சென்றனர்.

பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் புவனேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் புதன்கிழமை இரவு வெப்ப சலனத்தால், வீட்டின் கதவு, ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், மேஜை மீது கழற்றி வைத்திருந்த ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனர். இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

பெங்களூரில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

பெங்களூரு திவானரபாளையத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (25). தனியார் நிறுவன ஊழியரான இவர், புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஹெப்பாள் வெளிவட்டச் சாலையில் வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உமேஷ் நிகழ்விடைத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து ஹெப்பாள் போக்குவரத்து போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மரத்தின் மீது மின் லாரி மோதியதில் 2 பேர் சாவு

பெங்களூரில் மரத்தின் மீது மினி லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சித்து (24), மோகன் (32). இவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் மினி சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தனராம். விமானநிலையச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்புச்சுவரில் மோதி, பின்னர் சாலையோரமிருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் சித்து, மோகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.

காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அல்சூர் போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கிரிக்கெட் சூதாட்டம்: 3 பேர் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு நாகதேவனஹள்ளி சிக்ககொள்ளரட்டி உள்ள கட்டடத்தில் புதன்கிழமை சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட ரோஹித் (34), ஹரீஷ் நாக்பால் (34), ராஜு (46) ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2,300 ரொக்கப் பணம், 7 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கும்பளகூடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/edition_bangalore/2016/may/13/வாகன-திருட்டு-வழக்கில்-ஒருவர்-கைது-714.html