Dinamani - சிவகங்கை - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3119492 மதுரை சிவகங்கை மாரநாடு ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா DIN DIN Sunday, March 24, 2019 12:38 AM +0530
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மாரநாடு கிராமத்தில் ஸ்ரீ கருப்பணசுவாமி கோயில் மாசிக்களரி உற்சவ விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.  
கருப்பண சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பக்தர்கள் பொங்கல் வைத்து பீட பூஜை நடத்தினர். இக்கோயிலில் மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வேண்டுதல் செய்வது சிறப்பு என்பதால் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாலைகளை வாங்கி சுவாமிக்கு அணிவித்து காணிக்கை செலுத்தினர். கோயிலுக்கு வெளியே நீண்டவரிசையில் நின்று வந்து பக்தர்கள் கருப்பண சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த களரிப் பொட்டலில் நள்ளிரவு சாமியாட்டம் தொடங்கியது.  அதன்பின் சாமியாடிகள் நடப்பாண்டுக்கான பலன்கள் குறித்து அருள்வாக்கு கூறினர். கோயிலுக்கு வெளியே 20 அடி உயரத்தில் களரிப் பொட்டலில் அமைக்கப்பட்டிருந்த கல்தூணில் கருப்பண சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மாலைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மாலைகளை  எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும் என நம்புவதால் சனிக்கிழமை அதிகாலையில் சாமியாட்டம் முடிந்ததும் அந்த மாலைகளை அங்கிருந்த பக்தர்கள் போட்டிபோட்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பக்தர்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களிலிருந்து மாரநாட்டுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/மாரநாடு-ஸ்ரீகருப்பண-சுவாமி-கோயிலில்-களரி-உற்சவ-விழா-3119492.html
3119491 மதுரை சிவகங்கை வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம் DIN DIN Sunday, March 24, 2019 12:38 AM +0530
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி காலை, மாலை வேளைகளில் சிம்மம், காளை, குதிரை, காமதேனு, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு திருமஞ்சனம்,  மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. விஷேச அலங்காரத்துக்கு பின்னர், அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, தேரடியிலிருந்து காலை 8.10 மணிக்கு தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த பின்னர் 8.50 மணிக்கு நிலைக்கு வந்தது. பூப்பல்லக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது. திங்கள்கிழமை உற்சவ சாந்தி உள்ளிட்ட வைபவங்களுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.கொல்லங்குடி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/வெட்டுடையார்-காளியம்மன்-கோயிலில்-தேரோட்டம்-3119491.html
3119490 மதுரை சிவகங்கை தேர்தல் பணி: கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள் DIN DIN Sunday, March 24, 2019 12:38 AM +0530
கர்ப்பிணி பெண் அலுவலர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 அக்கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ்  அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக  சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பணியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப் பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். 
இவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 
தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தல் பணியிலிருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
மேலும் 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்  என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/தேர்தல்-பணி-கர்ப்பிணிகளுக்கு-விலக்கு-அளிக்க-வேண்டுகோள்-3119490.html
3119489 மதுரை சிவகங்கை தேர்தல் விதிமுறைகள் விளக்க  அனைத்துக் கட்சிக் கூட்டம் DIN DIN Sunday, March 24, 2019 12:37 AM +0530
மானாமதுரையில் வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் திருவாசகம் கலந்து கொண்டு அரசியல் கட்சியினர் தொகுதியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் அரசியல் கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இக்கூட்டத்தில் மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன், வட்டாட்சியர்கள் யாஸ்மின், ராஜா மற்றும் தொகுதியைச் சேர்ந்த அதிமுக, திமுக, அமமுக,  பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/தேர்தல்-விதிமுறைகள்-விளக்க--அனைத்துக்-கட்சிக்-கூட்டம்-3119489.html
3119488 மதுரை சிவகங்கை வேலை உறுதித் திட்டம்: ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டது DIN DIN Sunday, March 24, 2019 12:37 AM +0530
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டதாக சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் தேசிய முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக் கூட்டங்களில் ஹெச்.ராஜா பேசியதாவது: கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. அந்த தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு திட்டப் பணிகள் நடந்துள்ளன. இதுபோல் தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பாஜக அரசு அமைந்தால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைக்கும். 
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது சிவகங்கைத் தொகுதியில் பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் எனக் கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் இத் திட்டத்தின் வேலை நாள்கள் 150 ஆக உயர்த்தப்பட்டதோடு அதற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 224 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ப.சிதம்பரம் கூறியது பொய்யாகியுள்ளது  என்றார். 
அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், அமைச்சர் பாஸ்கரன், அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.குணசேகரன், நகரச் செயலாளர் விஜி.போஸ், மானாமதுரை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தர்ம யுத்தம்: திருப்பத்தூரில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ஹெச் ராஜா பேசுகையில், தற்போது நடைபெற உள்ள தேர்தல் அரசியல் போட்டி அல்ல. ஒரு தர்ம யுத்தம். ஒரு பக்கம் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தரும் பா.ஜ.க, அதிமுக. ஆகிய நல்ல சக்திகளுக்கும் மறுபுறம் ஆட்சியில் தவறாக சாம்பாதித்ததை வெளிநாடுகளில் கொண்டு சேர்க்கும்  திமுக, காங். ஆகிய தீய சக்திகளுக்கும் இடையிலான யுத்தம். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க மோடி பிரதமராக வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செந்தில்நாதன் எம்.பி., முன்னிலை வகித்தார். பா.ஜ.க, தேசிய நிர்வாகி விஸ்வநாத கோபால் வரவேற்றறார்.  கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/வேலை-உறுதித்-திட்டம்-பசிதம்பரத்தின்-பிரசாரம்-பொய்யாகிவிட்டது-3119488.html
3119487 மதுரை சிவகங்கை பள்ளிப் பேருந்தில் கூட்ட நெரிசல்: 3 மாணவிகள் மயக்கம் DIN DIN Sunday, March 24, 2019 12:37 AM +0530
சிவகங்கை அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் சனிக்கிழமை கூட்ட நெரிசலில்  3 மாணவிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர்.  
சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து தினசரி மாணவ, மாணவிகளை பேருந்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை  பேருந்தில் வழக்கத்தை விட கூடுதலாக மாணவ, மாணவிகளை  ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே  வந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கிய மாணவிகள் சிவசங்கரி (13), ஆர்த்தி(11), சுவாதி(13)   ஆகிய 3 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். சக மாணவர்கள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தியுள்ளனர்.  இதையறிந்த ஒக்கூர் கிராம மக்கள் மயக்கமடைந்த மாணவிகளை  மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, சிவகங்கை வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்று மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்த விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/பள்ளிப்-பேருந்தில்-கூட்ட-நெரிசல்-3-மாணவிகள்-மயக்கம்-3119487.html
3119486 மதுரை சிவகங்கை வீட்டை விலைக்குத் தருவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி:  தொழிலதிபர் கைது DIN DIN Sunday, March 24, 2019 12:37 AM +0530
வீட்டை விலைக்குத் தருவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, ரியல் எஸ்டேட் தொழிலதிபரை சனிக்கிழமை கைது செய்தனர்.
 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கருணாநிதி (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தேவகோட்டையில் தனது மனைவி சுசிலா பெயரில் உள்ள வீட்டை மதுரை அண்ணாநகர் கல்லூரி வீதியைச் சேர்ந்த லெட்சுமணன் (78) என்பவருக்கு விற்பனை செய்வதாகக் கூறினாராம். அதற்காக லெட்சுமணனிடம் கடந்த 26.10.2016 இல் ரூ.28 லட்சத்தை 2 தவணையாக முன் பணமாகப் பெற்றாராம். 
வீட்டைக் கிரையம் செய்து கொடுத்து விட்டு மீதித் தொகையை பெற்றுக் கொள்வதாக  கருணாநிதி, சுசிலா மற்றும் அவர்களது உறவினரான விக்னேஷ் தெரிவித்துள்ளனர்.  பல மாதங்கள் கடந்த பின்பும் வீட்டை லெட்சுமணனுக்கு கிரையம் செய்து தரவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பித் தர வில்லையாம். 
இதுகுறித்து லெட்சுமணன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கருணாநிதி, அவரது மனைவி சுசிலா, உறவினாரான விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
விசாரணையில் குற்றம் உறுதியானதால் கருணாநிதியை சனிக்கிழமை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/வீட்டை-விலைக்குத்-தருவதாகக்-கூறி-ரூ28-லட்சம்-மோசடி--தொழிலதிபர்-கைது-3119486.html
3119485 மதுரை சிவகங்கை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் குட்கா, பான் மசாலா சிக்கியது DIN DIN Sunday, March 24, 2019 12:36 AM +0530
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சனிக்கிழமை ரூ. 6 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும்  பான் மசாலாப் பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சுமதி தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து கீழவளவுக்குச் சென்ற லாரியில் அட்டைப் பெட்டிகள் இருப்பதைக் கண்ட குழுவினர் அப்பொருளுக்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். 
அப்போது லாரி ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் லாரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு சோதனையிடப்பட்டது. அதில் 8 மூட்டைகளில் 2500 பான்மசாலா பாக்கெட்டுகளும், 50 பெட்டிகளில் குட்கா பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கம்புணரி உணவுப் பாதுகாப்பு அலுவலர் செந்தில் மதிப்பீடு செய்ததில் அவற்றின் மதிப்பு ரூ. 6 லட்சம் எனக் கணக்கிடப்பட்டது. லாரி ஓட்டுநர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா  பூவரசன்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது.இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/24/தேர்தல்-பறக்கும்-படை-சோதனையில்-ரூ6-லட்சம்-குட்கா-பான்-மசாலா-சிக்கியது-3119485.html
3119006 மதுரை சிவகங்கை கட்டிக்குளம் ராமலிங்க  சுவாமிகள் கோயில் தேரோட்டம் DIN DIN Saturday, March 23, 2019 01:42 AM +0530 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயில் பங்குனி உத்திர விழாவில்  வியாழக்கிழமை மாலை தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி பவனி வருதலும் நடைபெற்றது. 
          இக் கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
   விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தினத்தன்று நடைபெற்ற தேரோட்ட விழாவில் உற்சவர் ராமலிங்க சுவாமிகள் அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.     கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தேர் சுற்றி வந்து இரவு நிலையை அடைந்தது. அதன்பின் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு ராமலிங்க சுவாமிகள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மக்கள் வீடுகளின் முன்பு சுவாமியை வரவேற்று பூஜைகள் நடத்தி வழிபட்டனர். தேரோட்ட விழாவில் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/கட்டிக்குளம்-ராமலிங்க--சுவாமிகள்-கோயில்-தேரோட்டம்-3119006.html
3119005 மதுரை சிவகங்கை திருப்பத்தூர், சாயல்குடி பகுதிகளில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்: அமமுக பிரமுகரிடம் ரூ.40 ஆயிரம் சிக்கியது DIN DIN Saturday, March 23, 2019 01:41 AM +0530 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் அமமுக நிர்வாகியிடம் இருந்து ரூ.40ஆயிரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, கமுதி பகுதிகளில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் வெள்ளிக்கிழமை அமமுக சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அக்கட்சியின் ஒன்றியத் துணைச் செயலாளர் முத்துச்சாமி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. விவசாயப் பணிகளுக்காக அப்பணத்தை வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  
வெள்ளி வியாபாரியிடம் சோதனை: திருப்பத்தூர் தபால் அலுவலகச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெள்ளிப் பொருள்களுடன் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவ்விடுதியில் திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் மலையரசி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு  சோதனை நடத்தினர். இதில் விடுதியில் தங்கியிருந்தவர் வைத்திருந்த பெட்டியில் ரூ .8 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர்  அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வெள்ளிப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரி என்பதும், அவற்றுக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிப் பொருள்களை அவரிடமே மீண்டும் ஒப்படைத்து விட்டு  அதிகாரிகள் சென்றனர்.   
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிஅருகே புல்லந்தை விலக்கு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி  அமர்லால் , காவல் சார்பு- ஆய்வாளர் குமரேசன், தலைமை காவலர்கள் கோபால்,முருகன் ஆகிய குழுவினர் வியாழக்கிழமை இரவில் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த ரத்தினமையா என்பவர் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே போன்று கமுதி கோட்டை மேடு விலக்கு சாலை அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிக்குமார், சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமை காவலர்கள் லெட்சுமி, முருகன்  ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில்  கீழ பெருங்கரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடமிருந்து  ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்த பின் பணம் திரும்ப வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/திருப்பத்தூர்-சாயல்குடி-பகுதிகளில்-சோதனை-ரூ2-லட்சம்-பறிமுதல்-அமமுக-பிரமுகரிடம்-ரூ40-ஆயிரம்-சிக்-3119005.html
3119004 மதுரை சிவகங்கை தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் DIN DIN Saturday, March 23, 2019 01:41 AM +0530 தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக் கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மண்டலப் பொதுமேலாளர் செல்வகோமதிகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருவர். 
 இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, காளையார்கோவில், இளையாங்குடி மற்றும் அருப்புக் கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து தாயமங்கலத்துக்கு ஏப்ரல் 2 முதல் 7 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/தாயமங்கலம்-கோயில்-திருவிழா-சிறப்புப்-பேருந்துகள்-இயக்கம்-3119004.html
3119003 மதுரை சிவகங்கை பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் DIN DIN Saturday, March 23, 2019 01:40 AM +0530 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பாஜக மாநில நிர்வாகிக்கு வெள்ளிக்கிழமை வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 
திருப்புவனம் வெள்ளாளர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சிவா.செல்வராஜ். இவர் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளராக உள்ளார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அக்கட்சியின் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இந் நிலையில் இவரது வீட்டுக்கு தேனியிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அதில் பாஜகவை வளர்ப்பதாக நினைத்து ஒரு தரப்பு சமுதாய மக்களையும் சமுதாயத் தலைவர்களையும் கேவலமாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டோம்.  தேர்தலுக்குள் உன்னை கொலை செய்வோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/பாஜக-நிர்வாகிக்கு-கொலை-மிரட்டல்-3119003.html
3119002 மதுரை சிவகங்கை காரைக்குடி கம்பன் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி DIN DIN Saturday, March 23, 2019 01:40 AM +0530 காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி கம்பன் கவி மண்டலம் என்ற பொருளில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
 விழாவுக்கு, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி முன்னாள் முதல்வர் அழகர் ராமானுஜம் கம்பரின் முதல் பாட லையும், நிறைவுப்பாடலையும் சுட்டிக்காட்டி கம்பரின் வழியில் வாழும் நன்முறை உள்ளன என்றும், அரியணை அனுமன் தாங்க.. என்ற பாடலில் அனுமனின் அடக்கமும், திடமும் வெளிப்பட்டு நிற்கிறது என்றும் குறிப்பிட்டார்.
"கம்பன் கவி ஈர்ப்பு மையம்' என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல்காதர் பேசினார். மேலும் இப்பேச்சின் தலைப்பிலான நூலை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெளியிட, அதனை புதுச்சேரி கம்பன் அறிஞர் ரா. ராமசாமி பெற்றுக் கொண்டார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/காரைக்குடி-கம்பன்-திருவிழா-இரண்டாம்-நாள்-நிகழ்ச்சி-3119002.html
3119000 மதுரை சிவகங்கை மானாமதுரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் DIN DIN Saturday, March 23, 2019 01:40 AM +0530 பெயர் :  எம்.சண்முகபிரியா
வயது :  26 
கல்வித் தகுதி: பி.பி.இ
ஊர்: திருப்புவனம் ஒன்றியம் முனியான்டிபுரம், 
கணவர் :     மணிகண்டன், 
அரசியல் அனுபவம் : கட்சி அடிப்படை உறுப்பினர். இவரது கணவர் மணிகண்டன் நாம் தமிழர் கட்சியின் திருப்புவனம் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/மானாமதுரை-நாம்-தமிழர்-கட்சி-வேட்பாளர்-3119000.html
3118999 மதுரை சிவகங்கை சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 4 பேர் மனு தாக்கல் DIN DIN Saturday, March 23, 2019 01:40 AM +0530 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 4 பேர் சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தனிடம் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) இடைத் தேர்தலுக்கு கடந்த 3 நாள்களாக  யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. இந்நிலையில்,4 ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திப்ரியா(27) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சக்திப் பிரியா. இவரது கணவர் வேங்கை பிரபாகரன். இவர் கட்டட ஒப்பந்ததாரர். மேலும், நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகியாகவும் உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். எம்சிஏ பட்டதாரியான சக்திப்பீரியா அக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது : மதுபான ஆலை மற்றும் காரைக்குடியில் செயல்படும் ரசாயன ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கிராஃபைட் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.
 இதேபோன்று,எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் அ.வெள்ளத்துரை(52)  இத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுரை மாவட்டம் உத்தங்குடியைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இது தவிர, குன்றக்குடியைச் சேர்ந்த சித.சிதம்பரம் (63) சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். டிப்ளமோ இன் பார்மஸி படித்துள்ள இவர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இதேபோன்று, வெற்றியூரைச் சேர்ந்த பிரபாகரன்(29) என்பவர் இளைஞர் எழுச்சி படை சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/சிவகங்கை-மக்களவைத்-தொகுதியில்--நாம்-தமிழர்-கட்சி-வேட்பாளர்-உள்பட-4-பேர்-மனு-தாக்கல்-3118999.html
3118997 மதுரை சிவகங்கை தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை DIN DIN Saturday, March 23, 2019 01:39 AM +0530 தேவகோட்டையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்  இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
  கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய  விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு தொகையைச் செலுத்தியிருந்தனர். இக்கிராம விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்காததைக் கண்டித்து கடந்த 12 ஆம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
  அப்போது ஒரு வாரத்திற்குள் இழப்பீடு தொகை வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால், அன்று போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி வரை இழப்பீட்டு தொகை வழங்காததால் வெள்ளிக்கிழமை கோட்டாச்சியர்அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியரி ஈஸ்வரியிடம் மனு அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/தேவகோட்டை-கோட்டாட்சியர்-அலுவலகத்தை-விவசாயிகள்-முற்றுகை-3118997.html
3118996 மதுரை சிவகங்கை "அதிமுக, பாஜக கூட்டணி இயல்பான கூட்டணி' DIN DIN Saturday, March 23, 2019 01:39 AM +0530 தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி இயல்பான கூட்டணியாக அமைந்திருக்கிறது என பாஜக தேசியச் செயலாளரும், அக்கட்சியின் சிவகங்கை மக்களவைத்  தொகுதி வேட்பாளருமான ஹெச். ராஜா தெரிவித்தார்.  
சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் தேர்தல் அலுவலகம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மேலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் தலைமை வகித்துப் பேசினார். அதிமுக மாவட் டச் செயலாளரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பிஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 
இக் கூட்டத்தில் ஹெச். ராஜா பேசியது: பாஜக, அதிமுக கூட்டணி 1998-லேயே அமைந்த கூட்டணி. இது இயல்பான இயற்கையான கூட்டணி. மத்திய அரசு, மாநில அரசுடன் இணக்கமான அணுகுமுறையுடன் செயல்படுகிறது. மத்திய பாஜ அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காக செயல்படுகின்ற அரசாகும். எனவே கூட்டணிக் கட்சியினர் இணைந்து பணியாற்றி வாக்குகளைச் சேகரித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான கூட்டம் மாலையில் நடைபெறுகிறது. சனிக்கிழமை (மார்ச் 23) மானாமதுரை, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், மார்ச் 27 (புதன்கிழமை) சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதிக்கும் கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும்.
இக்கூட்டணியின் முக்கிய குறிக்கோள் இந்த நாடு பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதற்கு மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும். அதேபோன்று தமிழகத்தில் நிலையான ஆட்சி நடைபெறவேண்டும். அதற்காக சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 18 பேரையும் வெற்றி பெற வைக்க கூட்டணிக் கட்சிகள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. எனவே அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும். இத்தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் என்பது குறித்து தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/அதிமுக-பாஜக-கூட்டணி-இயல்பான-கூட்டணி-3118996.html
3118995 மதுரை சிவகங்கை தேவகோட்டையில் குண்டர்  தடுப்புச் சட்டத்தில் இருவர்  கைது DIN DIN Saturday, March 23, 2019 01:39 AM +0530 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவரை தேவகோட்டை தாலுகா போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
   தேவகோட்டை அருகிலுள்ள கன்னிக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து மகன் சதீஷ்(எ)சந்தோஷ்குமார்(22). சின்னகோடகுடியைச் சேர்ந்த பால்சாமி மகன் விமல்(22). இவர்கள் இருவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஜெ.ஜெயசந்திரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும் தேவகோட்டை தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/23/தேவகோட்டையில்-குண்டர்--தடுப்புச்-சட்டத்தில்-இருவர்--கைது-3118995.html
3118474 மதுரை சிவகங்கை தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் DIN DIN Friday, March 22, 2019 07:56 AM +0530 தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து திமுக கட்சி தலைமையை சந்தித்து விட்டு, சிவகங்கைக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் இலக்கியதாசன், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவைப் பொருத்தவரை ஜனநாயகம் இல்லை. 11 பேர் கொண்ட குழு அமைத்து அதன் தலைமையில் தான் கட்சியை நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதன்படி யாரும் செயல்படவில்லை. 
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய தென்மாவட்டங்களை கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித பிரதிநிதித்துவமின்றி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 
திமுக கூட்டணியை ஆதரித்து மார்ச் 25 முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் தொடங்க உள்ளேன். தற்போதைய அதிமுக அரசை மோடி தான் இயக்கி வருகிறார். இதற்கு தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆகவே இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/தேர்தலுக்குப்-பின்-தமிழகத்தில்-ஆட்சி-மாற்றம்-நிகழும்-முன்னாள்-அமைச்சர்-ராஜகண்ணப்பன்-3118474.html
3118397 மதுரை சிவகங்கை மானாமதுரையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் DIN DIN Friday, March 22, 2019 07:31 AM +0530 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினர்.
        மக்களவைத் தேர்தலுடன், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இங்கு, திமுக வேட்பாளராக இலக்கியதாசன், அதிமுக வேட்பாளராக நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
      திருப்புவனத்துக்கு வந்த வேட்பாளர்கள் இருவருக்கும் அந்தந்த கட்சியினர் சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் கட்சியினரிடம் ஆதரவு திரட்டினர். பின்னர், மானாமதுரை வைகையாற்று மேம்பாலம் அருகேயுள்ளஅண்ணா சிலை, காந்தி சிலை, தேவர் சிலைக்கு திமுக வேட்பாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இளையான்குடிக்குச் சென்று திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
     இந் நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலர் கே.ஆர். பெரியகருப்பன், இளையான்குடி, மானாமதுரை ஒன்றியச் செயலர்கள் சுப. மதியரசன், ராஜாமணி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.     அதேபோல், அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கு அக்கட்சியினர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் அண்ணா, காந்தி, தேவர் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     நிகழ்ச்சியில், அமைச்சர் பாஸ்கரன், ஒன்றியச் செயலர் எம். குணசேகரன், நகரச் செயலர் விஜி.போஸ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாரிமுத்து, கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.     
  இதில், அமமுகவை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகி, மாவட்டச் செயலர் செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுகவில் 
இணைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/மானாமதுரையில்-திமுக-அதிமுக-வேட்பாளர்கள்-பிரசாரம்-3118397.html
3118396 மதுரை சிவகங்கை "மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடே வரும் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தரும்' DIN DIN Friday, March 22, 2019 07:31 AM +0530 மத்திய, மாநில அரசுகளின் துணிச்சலான முடிவு, அதனுடைய செயல்பாடு ஆகியவை வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித் தரும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 
   இதுகுறித்து சிவகங்கையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் வெளியிடுகின்ற எதையும் இதுவரை திமுக செயல்படுத்த வில்லை. ஆகவே திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்றுக் காகிதம் தான். 
   தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது.  தற்போது அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் வெற்றிடம் என்பது எப்போதும் இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. கடந்த கால ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளின் துணிச்சலான முடிவு, அதனுடைய செயல்பாடு ஆகியவை வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித் தரும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/மத்திய-மாநில-அரசுகளின்-செயல்பாடே-வரும்-தேர்தலில்-வெற்றியை-பெற்றுத்-தரும்-3118396.html
3118395 மதுரை சிவகங்கை "தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர கம்பன் அரங்குகளை  நோக்கி இளைஞர்கள் வரவேண்டும்' DIN DIN Friday, March 22, 2019 07:31 AM +0530 தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர வேண்டுமென்றால் கம்பன் அரங்குகளை நோக்கி இளைஞர்கள் வர வேண்டும் என காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறினார்.
காரைக்குடி கம்பன் அறநிலை-கம்பன் கழகத்தார் சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் "கம்பனும் வால்மீகியும்' என்ற தலைப்பில் தமிழருவிமணியன் பேசியது:
வால்மீகியின் ராமாயணத்தை படித்தால் தான் கம்பனின் ராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கம்பன் தனது காவியத்தின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தை செம்மைப்படுத்த முயன்றவன். அதனால்தான் வால்மீகியிடம் இல்லாத கடவுள் வாழ்த்து உலகம் யாவையும்... என்ற பாடலுடன் கம்பனிடத்திலே தொடங்குகிறது. அறத்தையும், வாழ்வையும் செம்மைப்படுத்த கம்பன் ஆதிக்கம் செலுத்தியவன். அதனால் தான் தனது காவியத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட திருக்குறளை எடுத்து கையாண்டுள்ளான்.
மனிதனின் மாண்பு புலனடக்கத்தைக் கொண்டது. ஆசைகளின்றி இந்த மண்ணில் வாழ முடியாது என்றாலும் ஆசைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். அறம் சார்ந்த இன்பங்களை அனுமதிக்க வேண்டும். வடமொழியிலே வால்மீகி வடித்த காப்பியத்தைக் கம்பன் படித்துப் பார்க்கிறான். இதில் அடிநாதமாக விளங்கக்கூடியது ஒழுக்கமும், அறமும் மட்டுமே. ஆனாலும் அதனை தமிழில் கம்பன் அப்படியே தந்துவிடவில்லை. மேலும் செம்மையாக்குகிறான்.
வால்மீகி ராமாயணத்தை படிக்காமல் கம்பனின் ராமாயணத்தை படிக்காதீர்கள். கம்பனின் நோக்கமும், போக்கும், இந்த தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாடுகளைச் சார்ந்தது. வால்மீகி ராமாயணத்தில் ராமனை ஒரு மானுடனாக காட்டுகிறான். ஆனால் சில பாத்திரங்களைப்படைத்து திருமாலின் வடிவமாக்கிக்காட்டுகிறான் கம்பன். புலனடக்கம் பற்றி தான் கம்பன் தனது காப்பியத்தில் பேசுகிறான். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கம்பன் அரங்குகளுக்கு வருவதால் ஆகப்போவது என்ன, இளைஞர்கள்தான் கம்பன் அரங்குகள் நோக்கி வரவேண்டும். இளைஞர்களை செம்மைப்படுத்துவதற்கும், பண்புள்ளவர்களாக செதுக்குவதற்கும் கம்பனிடத்திலே ஏராளமான செய்திகள் உள்ளன என்றார்.
அதைத்தொடர்ந்து "கம்பன் சொல்லும் ராமன் வில்லும்' என்ற தலைப்பில் சென்னை பாரதி திருமகன், யுவ கலா பாரதி பி. கலைமகள் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கம்பன் அறநிலைத் தலைவர் சத்தி அ. திருநாவுக் கரசு வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் அய்க்கண் அறிமுக உரையாற்றினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/தமிழ்ச்-சமுதாயம்-தலைநிமிர-கம்பன்-அரங்குகளை-நோக்கி-இளைஞர்கள்-வரவேண்டும்-3118395.html
3118394 மதுரை சிவகங்கை சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் DIN DIN Friday, March 22, 2019 07:30 AM +0530 காரைக்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த தினமணி முன்னாள் முகவரின் மகன் எம். ராமசாமியின் (63) உடல் உறுப்புகள் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
    காரைக்குடி செக்காலை தியாகராஜன் செட்டியார் தெருவைச் சேர்ந்த தினமணியின் முன்னாள் முகவரான மெய்யப்பச் செட்டியாரின் மகன் எம். ராமசாமி (63). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர். ராமசாமி கடந்த மார்ச் 17-ஆம் தேதி காரைக்குடி முடியரசன் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திங்கள்கிழமை (மார்ச் 19) அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
   இதையடுத்து ராமசாமியின் மனைவி ரேவதி ஆச்சி, மகள் விசாலாட்சி, மருமகன் அருணாசலம் ஆகியோர் விருப்பத்துடன் ராமசாமியின் இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து அதற்குரிய சான்றிதழை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.எம். ராஜாமுத்தையா, ராமசாமி குடும்பத்தினருக்கு புதன்கிழமை வழங்கினார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/சாலை-விபத்தில்-மூளைச்-சாவு-அடைந்தவரின்-உடல்-உறுப்புகள்-தானம்-3118394.html
3118393 மதுரை சிவகங்கை சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் DIN DIN Friday, March 22, 2019 07:30 AM +0530 சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்
பெயர்     :     ஹெச்.ராஜா 
வயது    :     62
கல்வி தகுதி     : பி.காம்.,பி.எல்.,எப்.சி.ஏ.,
தந்தை     : பேராசிரியர் எஸ்.ஹரிஹரன்,
தாய்     : காமாட்சி அம்மாள்,
தொழில்     : ஆடிட்டர்
பிறந்த ஊர்     : தஞ்சை மாவட்டம், மெலட்டூர்.
தற்போது வசிப்பது : காரைக்குடி
மனைவி : லலிதா ராஜா,  இரண்டு மகள்கள்
அரசியல் அனுபவம் : 1964- லிருந்து 1990 வரை ஆர்எஸ்எஸில் நிர்வாகியாக இருந்துள்ளார். 1991 முதல் 1993 வரை பாஜகவின் சிவகங்கை மாவட்டத் தலைவர்,1993 முதல் 1995 வரை பாஜவின் மாநிலச் செயலர்,1995 முதல் 2006 வரை பாஜகவின் மாநிலப் பொதுச் செயலர், 2006 முதல் 2014 வரை மாநிலத் துணைத் தலைவர், 2014 முதல் தற்போது வரை தேசியச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்து வரும் அவர் கேரள பொறுப்பாளராகவும் உள்ளார். இதுதவிர காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினராகவும் (2001-2006) இருந்துள்ளார்.  
கடந்த 1999, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/சிவகங்கை-மக்களவைத்-தொகுதி-பாஜக-வேட்பாளர்-3118393.html
3118392 மதுரை சிவகங்கை மானாமதுரை, திருப்புவனத்தில்  பிரசார பொதுக்கூட்டங்கள்  நடத்த இடங்கள் அறிவிப்பு  DIN DIN Friday, March 22, 2019 07:30 AM +0530 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் வாரச்சந்தை திடல், பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள இடம், பழைய பேருந்து நிலையம் அருகே குறத்தி அம்மன் கோயில் எதிரேயுள்ள திடல் ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.
 திருப்புவனத்தில் வாரச்சந்தை அருகே உள்ள இடத்திலும் இளையான்குடியில் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடலிலும் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்தலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பொதுக்கூட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/மானாமதுரை-திருப்புவனத்தில்--பிரசார-பொதுக்கூட்டங்கள்-நடத்த-இடங்கள்-அறிவிப்பு-3118392.html
3118391 மதுரை சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு என்.சி.சி.யின் கௌரவ கர்னல் பட்டம் DIN DIN Friday, March 22, 2019 07:29 AM +0530 காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நா. ராஜேந்திரனுக்கு, தமிழ்நாடு 9-ஆவது பட்டாலியன் தேசிய மாணவர் படைப் பிரிவு (என்.சி.சி.) சார்பில், கௌரவ கர்னல் பட்டம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
     இதற்கான விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. இதில், தேசிய மாணவர் படையின் திருச்சி மண்டலத் தலைமை அதிகாரி கர்னல் ஆர். சிவநாதன், துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பட்டம் வழங்கினார்.
    விழாவில், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு 9-ஆவது பட்டாலியன் என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கர்னல் அஜய் ஜோஷி, கர்னல் ரத்னா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை அமைப்புகளை நெறிப் படுத்தும் விதமாக, இவ்விருது துணைவேந்தருக்கு வழங்கப்பட்டதாக என்.சி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். 
    பின்னர் சிவநாதன் பேசியது: தேச கட்டமைப்புக்கு இளைஞர்களுடைய பங்கு முக்கியமாகும். மேலும், இளைஞர்களை தேசப் பற்றுள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதே தேசிய மாணவர் படைப் பிரிவின் முக்கிய நோக்கமாகும். தேசிய அளவில் இந்த ஆண்டுக்கு, அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் உள்பட  8 துணைவேந்தர்கள் மட்டுமே என்.சி.சி. கௌரவ கர்னல் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்றார்.
     விழாவில், துணைவேந்தர் நா. ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார். 
 பின்னர், காரைக்குடி என்.சி.சி. 9-ஆவது படைப் பிரிவினரால் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை துணைவேந்தர் ஏற்றுக்கொண்டார்.
    இதில், துணைவேந்தரின் துணைவியார் சாந்தி ராஜேந்திரன், அழகப்பா கல்விக் குழும அறங்காவலர் தேவி அலமேலு வைரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், என்.சி.சி. அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், மாணவ, மாணவியர் என பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/அழகப்பா-பல்கலைக்கழகத்-துணைவேந்தருக்கு-என்சிசியின்-கௌரவ-கர்னல்-பட்டம்-3118391.html
3118390 மதுரை சிவகங்கை காரைக்குடி மின் மயானம் பராமரிப்புப் பணிக்காக மார்ச் 25 முதல் 5 நாள்களுக்கு செயல்பாடு நிறுத்தம் DIN DIN Friday, March 22, 2019 07:29 AM +0530 காரைக்குடி நகராட்சி பழைய சந்தைப் பேட்டைப்பகுதி மின் மயானத்தில் வரும் மார்ச் 25- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அதன் செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து காரைக்குடி நவீன எரிவாயு தகன மேடை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணப்பன், செயலர் சாமி. திராவிடமணி ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:    இந்த மயானத்தில் இயங்கிவரும் மின்சாரக் கருவிகள், மோட்டார், மின்விளக்குகள் போன்றவற்றை பழுதுநீக்கவும், புதிய உதிரிப்பாகங்களை பொருத்தவும் மற்றும் பராமரிப்புப் பணிகளும் நடைபெறவிருப்பதால் தற்காலிகமாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வரை 5 நாள்களுக்கு செயல்பாடு நிறுத்தம் செய்யப்படும். சனிக்கிழமை (மார்ச் 30) முதல் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/22/காரைக்குடி-மின்-மயானம்-பராமரிப்புப்-பணிக்காக-மார்ச்-25-முதல்-5-நாள்களுக்கு-செயல்பாடு-நிறுத்தம்-3118390.html
3117791 மதுரை சிவகங்கை கால்வாய்க்குள் தவறி விழுந்து பாய் வியாபாரி சாவு DIN DIN Thursday, March 21, 2019 07:00 AM +0530 சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கால்வாய்க்குள் தவறி விழுந்த பாய் வியாபாரி உயிரிழந்தார்.
 தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு அருகேயுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய் உள்ளது. இதில் 50 வயது மதிக்கத்தக்கவர் கீழே விழுந்து இறந்து கிடந்தார். போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் திருப்பத்தூர் அருகே கருமிச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் திருப்பதி என்பதும், இவர் பாய் வியாபாரி என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து இளையான்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/கால்வாய்க்குள்-தவறி-விழுந்து-பாய்-வியாபாரி-சாவு-3117791.html
3117790 மதுரை சிவகங்கை காளையார்கோவில் அருகே பெண் மர்மச் சாவு DIN DIN Thursday, March 21, 2019 07:00 AM +0530 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புதன்கிழமை வீட்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே உள்ள நென்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (58). இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது மனைவி பாண்டியம்மாளும் (55) நென்மேனியில் உள்ள காசியின் தாயார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். இதையடுத்து பாண்டியம்மாள் அவரது வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் காளையார்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பாண்டியம்மாளின் கணவர் காசி சம்பவ இடத்தில் இல்லாததால் குடும்பப் பிரச்னை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/காளையார்கோவில்-அருகே-பெண்-மர்மச்-சாவு-3117790.html
3117789 மதுரை சிவகங்கை "மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே பிரசாரம் செய்வோம்' DIN DIN Thursday, March 21, 2019 06:59 AM +0530 மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே பிரசாரம் செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து சிவகங்கையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே வரும் தேர்தல்களுக்கான பிரசாரமாக இருக்கும் என ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவித்துள்ளோம். மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையானது ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தான் இந்து மதம் தவிர்த்து மற்ற மதத்தினரை புண்படுத்துகின்றனர். சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆகவே மக்களுக்கு எதிரான அரசாகவே பாஜக உள்ளது. இதுதவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பாஜக, அதிமுக அரசுகள் சாமானிய மக்களுக்கு எதிரான அரசு என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/மத்திய-மாநில-அரசுகளின்-ஊழல்கள்-குறித்தே-பிரசாரம்-செய்வோம்-3117789.html
3117788 மதுரை சிவகங்கை சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் DIN DIN Thursday, March 21, 2019 06:59 AM +0530 சிவகங்கையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, இவ்விழா கடந்த மார்ச் 12 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.முக்கிய விழாவான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளினர்.தேரடியிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்ட தேர் அரண்மனை வாசல், நேரு பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் இரவு 7.50 மணிக்கு நிலைக்கு வந்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/சிவகங்கை-சுப்பிரமணிய-சுவாமி-கோயிலில்-தேரோட்டம்-3117788.html
3117787 மதுரை சிவகங்கை மண்டல அலுவலர்களுக்கானதேர்தல் விதிமுறைகள் குறித்த பயிற்சி DIN DIN Thursday, March 21, 2019 06:59 AM +0530 திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேர்தல் குறித்த விளக்க விரிவுரையாளர் வட்டாட்சியர் கந்தசாமி பயிற்சியளித்தார். இப்பயிற்சியில் வட்டாட்சியர்கள் பஞ்சவர்ணம், தங்கமணி, எம்.சுப்பிரமணியன், தனலட்சுமி, முருகேஸ்வரி உள்ளிட்ட 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/மண்டல-அலுவலர்களுக்கானதேர்தல்-விதிமுறைகள்-குறித்த-பயிற்சி-3117787.html
3117786 மதுரை சிவகங்கை சிவகங்கையில் இரண்டாவது நாளும் வேட்பு மனு தாக்கல் இல்லை DIN DIN Thursday, March 21, 2019 06:58 AM +0530 சிவகங்கை மக்களவைத் தொகுதி மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இரண்டாவது நாளான புதன்கிழமையும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தொகுதி மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிலையில்,சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
ஆனால் அமமுக சார்பில் தேர்போகி வே. பாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தவிர மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 2 தேர்தல்களுக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் யாரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மனு தாக்கல் செய்யவரவில்லை. அதேநேரம், சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்யவரவில்லை.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/சிவகங்கையில்-இரண்டாவது-நாளும்-வேட்பு-மனு-தாக்கல்-இல்லை-3117786.html
3117785 மதுரை சிவகங்கை "உலகிற்கு அறம் சார்ந்த விஷயங்களை போதித்தவன் கம்பன்' DIN DIN Thursday, March 21, 2019 06:58 AM +0530 உலகிற்கு அறம் சார்ந்த விஷயங்களை போதித்தவன் கம்பன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் புகழாரம் சூட்டிப்பேசினார்.
காரைக்குடி கம்பன் அறநிலை - கம்பன் கழகத்தார் சார்பில் 81-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா கம்பன் மணிமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவுக்கு தலைமை வகித்து நீதிபதி மகாதேவன் பேசியது: கம்பனின் பெயர் உச்சரிக்கப்படுகின்ற இடத்திலெல்லாம் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் பெயரும் இருக்கும். தமிழுக்கு ஓர் அற்புத படைப்பாக கம்பராமாயணத்தை தந்த கம்பனுக்கு 1939-ஆம் ஆண்டில் கம்பன் கழகத்தை நிறுவிய சா. கணேசன் தொடர்ந்து விழா நடத்தினார். தற்போது 81 ஆம் ஆண்டாக இவ்விழா நடைபெறுகிறது. இந்த பெருமையெல்லாம் சா. கணேசனையே சாரும். 
தமிழ் மண்ணின் பெருமையை தனது காப்பியத்தால் தெளிவுபடுத்தியிருப்பவன் கம்பன். அதற்கு ராமகாவியம் பயன்பட்டுள்ளது. வால்மீகி எழுதிய அந்த காவியத்தை அப்படியே ஏற்காமல் தனது கம்பராமாயணப் பாடல்களில் தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு போன்றவை செதுக்கித்தந்தவன் கம்பன். அதனால் தான் கம்பராமாயணம் காலம் கடந்த ஒருகலைப் பொக்கிஷமாக அறியப்படுகிறது. 
கம்பனை விட்டு, விட்டு தமிழிலக்கியத்தை எழுதமுடியுமா? என்ற கேள்வி எழுந்தால் கம்பனைத் தொடாமல் இலக்கிய வரலாறு இல்லை. கம்பனை படிக்காமல் நவீனக் கவிகள் கூட கவிதை வடிக்க முடியாது. உலகத்தில் உன்னதமான கவிஞன் கம்பனை தவிர கம்பனுக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. கம்பனின் கவிதை தமிழ் சார்ந்த கவிதை.
தமிழ் உலகத்தில் சிறந்த மொழி, அறம் சார்ந்த வாழ்க்கையை கொண்டது. அறம் சார்ந்த விஷயங்கள்தான் வாழ்வியலுக்கான விஷயங்கள். அறம் சார்ந்த வாழ்க்கையின் மூலமாக ஒருமனிதன் எதைப்பதிவு செய்கிறானோ அதுதான் அவனுக்கான அடையாளம் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிச் சென்றவர்கள் தமிழர்கள். அறம் சார்ந்தவர்கள் எதை இழந்தாலும் இழப்பு அவர்களுக்கில்லை என்பதை பதிவுசெய்கிறான் கம்பன். அறச்சிந்தனையுடன் வாழ்பவர்களுக்கு நல்ல ஒழுக்கம் என்கிற அழியாத சொத்து வந்து சேரும். அவர்கள் வாழ்கின்றபோதும், வாழ்ந்தபோதும், வாழ்ந்து முடிந்த போதும் என்றும் அது நீடித்து நிற்கும் என்று பதிவு செய்தவன் உலகத்தில் உன்னதக்கவிஞனான கம்பன் என்றார் அவர்.
விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர். லெட்சுமணன் தொடக்க உரையாற்றினார். கருத்தரங்கத்தில் "வள்ளுவன் பாதையில் கம்பன்' என்ற தலைப்பில் கவிஞர் தி. கோவிந்தராசன், "கம்பன் பாதையில் பாரதி' என்ற தலைப் பில் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆகியோர் பேசினர்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்த்தாய் கோயிலில் வழிபாடு நடைபெற்றது. கம்பன் கற்பக மாணவியர்கள் கம்பன் அடிப்பொடிக்கு மலரஞ்சலி செலுத்தினர். கம்பன் அறநிலை தலைவர் சத்தி அ. திருநாவுக்கரசு வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் அய்க்கண் விழாவை தொகுத்து வழங்கினார்.
விழாவில் கம்பன் அறநிலை நிர்வாகிகள் எஸ். பெரியணன், விஆர். சுப்பிரமணியன், பேராசிரியர்கள், கவிஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/உலகிற்கு-அறம்-சார்ந்த-விஷயங்களை-போதித்தவன்-கம்பன்-3117785.html
3117784 மதுரை சிவகங்கை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் DIN DIN Thursday, March 21, 2019 06:58 AM +0530 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பெரிய தேரில் காலை 7 மணிக்கு புஷ்பவனேஸ்வரரும், மற்றொரு தேரில் சௌந்திரநாயகி அம்மனும் அலங்காரத்துடன் தனித்தனியாக எழுந்தருளினர். பின்னர் காலை 9.50 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள் பிற்பகல் 12.20 மணி அளவில் நிலையை வந்தடைந்தன. தொடர்ந்து இரவு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் இரவு நேரங்களில் சுவாமி வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.20 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் தேரோட்டம் தொடங்கியது. தேரோடும் வீதி வழியாக வலம் வந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
சிவகங்கை: சிவகங்கை அருகே உருவாட்டியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பெரியநாயகியம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை 5.30 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து காலை 7 மணிக்கு திரும்ப நிலையை வந்தடைந்தது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளர் போ.சரவண கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/21/திருப்புவனம்-புஷ்பவனேஸ்வரர்-கோயிலில்-தேரோட்டம்-3117784.html
3117149 மதுரை சிவகங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் DIN DIN Wednesday, March 20, 2019 05:05 AM +0530 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நலவழித்துறை மூலம் கோயில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நலவழித்துறை துணை இயக்குநர் (பொ) கே.மோகன்ராஜ் தலைமை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பி.அன்புசெல்வி தொடங்கிவைத்தார்.
சித்த மருத்துவர் பி.சுகந்தி நிகழ்ச்சியில் பேசும்போது, சித்த மருத்துவ முறை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் ஏற்படும் பயன், மக்கள் எவ்வாறு சித்த மருத்துவத்தின் பயனை அடைவது என்பதன் விழிப்புணர்வாகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது என்றார். முகாமில், மருத்துவ மூலிகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. மூலிகைப் பொருள்களின் பயன்பாடுகள், பாரிம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள், மருந்து வகைகளின் தொகுப்பு ஆகியன இடம்பெற்றன. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 
முகாமில் கலந்துகொண்டோரிடையே பக்க விளைவுகள் இல்லாத மருத்துவமாக இயற்கை மருத்துவம் உள்ளதையும், சித்த மருத்துவத்தின் சிறப்பம்சங்களையும் மருத்துவர்கள் விளக்கினர். மேலும், பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/20/அரசு-ஆரம்ப-சுகாதார-நிலையத்தில்-சித்த-மருத்துவ-விழிப்புணர்வு-முகாம்-3117149.html
3117148 மதுரை சிவகங்கை தமிழகத்துக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகள் காருடன் பறிமுதல் DIN DIN Wednesday, March 20, 2019 05:04 AM +0530 தமிழகத்துக்கு காரில் மதுப்புட்டிகள் கடத்த முயற்சித்த நிலையில், போலீஸார் வாகனச் சோதனையில் இருந்தபோது காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தோர்  தப்பியோடிவிட்டனர். இவற்றை போலீஸார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் போலீஸார் திருமலைராஜனாற்றுப் பாலத்தின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து திருப்பட்டினம் நோக்கிச் சென்ற காரை மறித்தனர். ஆனால் கார் நிறுத்தாமல் வேகமாக சென்றது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த காரை விரட்டிச் சென்றனர். கீழவாஞ்சியூர் சோதனைச் சாவடியில் பணியிலிருந்தோருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். வேகமாக சென்ற கார்  கீழவாஞ்சியூரில் உள்ள துறைமுகச் சாலையில் நிறுத்திவிட்டு, காரில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட நபர்கள் தப்பியோடிவிட்டனர். காரை போலீஸார் சோதனை செய்தபோது, கார் சீட் பகுதியிலும், டிக்கியிலும் அட்டைப் பெட்டிகளில்  மதுப்புட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, கலால்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காரைக்கால் கலால்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/20/தமிழகத்துக்கு-கடத்த-முயன்ற-மதுப்புட்டிகள்-காருடன்-பறிமுதல்-3117148.html
3117147 மதுரை சிவகங்கை சிவகங்கையில் இருளில் மூழ்கிய அம்மா பூங்கா-உடற்பயிற்சி கூடம் DIN DIN Wednesday, March 20, 2019 05:04 AM +0530 சிவகங்கையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் செயல்பாடின்றி இருளில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சி நிதி (2016-2017)திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அம்மா உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை தினசரி முறையாக திறப்பதில்லை எனவும், அந்த வளாகத்துக்குள் உயர் கோபுர விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில நாள்கள் மாலை நேரங்களில் பூங்கா மட்டும் திறக்கப்படும் நிலையில் சிறுவர்கள் விளையாடுவதற்கு போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கும் என்றும், அதே சமயம் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்வது மட்டுமின்றி, பல லட்சம் மதிப்புள்ள உடற்பயிற்சி சாதனங்களும் வீணாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/20/சிவகங்கையில்-இருளில்-மூழ்கிய-அம்மா-பூங்கா-உடற்பயிற்சி-கூடம்-3117147.html
3117146 மதுரை சிவகங்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தடுப்பு: அலுவலர்கள், பொதுமக்கள் அவதி DIN DIN Wednesday, March 20, 2019 05:04 AM +0530 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததால், அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
     சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், தேர்தல் பிரிவு, ஊரக வளர்ச்சித் துறை, வனத் துறை, கருவூலத் துறை, பொதுப்பணித் துறை, முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
     இது தவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, ராணி வேலுநாச்சியார் அரசு விருந்தினர் மாளிகை, மாவட்ட நீதிமன்றம் ஆகியனவும் செயல்படுகின்றன.
      மக்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் தொடங்கியுள்ளது. எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நான்கு புறமும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால், நடந்து செல்லும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இரு சக்கர வாகனம், கார் ஆகியவற்றில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி, வேறு பாதையில் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.  
    இதன் காரணமாக, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்பட அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகினர். 
    இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும், தடுப்புகளை அகற்றாமல் போலீஸார் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அலுவலர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/20/சிவகங்கை-மாவட்ட-ஆட்சியர்-அலுவலக-வளாகம்-முழுவதும்-தடுப்பு-அலுவலர்கள்-பொதுமக்கள்-அவதி-3117146.html
3117145 மதுரை சிவகங்கை பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல்: அமமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு DIN DIN Wednesday, March 20, 2019 05:03 AM +0530 காரைக்குடியில் பத்திரிகையாளர் களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிவகங்கை மாவட்டச் செயலாளர் மற்றும் வழக்குரைஞர் மீது திங்கள்கிழமை இரவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சிவகங்கை மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேர்போகி பாண்டி திங்கள்கிழமை பிற்பகல் காரைக்குடி கல்லூரிச் சாலையில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடத்தினார். இவ்விழாவிற்கு பத்திரிகையாளர்கள் சிலர் சென்று செய்தி சேகரிப்பிலும், புகைப்படம் எடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமமுக மாவட்டச் செயலாளர் கே.கே. உமாதேவன் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை என்று கூறி  ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
    மேலும் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி குரு. முருகானந்தம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களும் மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து காரைக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் என். ஜெய்கணேஷ், காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் எம். தினேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/20/பத்திரிகையாளர்களுக்கு-கொலை-மிரட்டல்-அமமுக-மாவட்டச்-செயலாளர்-மீது-வழக்கு-3117145.html
3116870 மதுரை சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் DIN DIN Tuesday, March 19, 2019 09:39 AM +0530 மானாமதுரை (தனி)
தொகுதி
பெயர்: எஸ்.நாகராஜன்
வயது: 48, 
பிறந்த தேதி: 07.05.1969
மனைவி: சிவசங்கரி, 
சொந்த ஊர்: கீழநெட்டூர்,                      இளையான்குடி ஒன்றியம்,
கல்வித் தகுதி: பி.எஸ்.சி, பி.எட், எல்.எல்.பி, 
தொழில்-வழக்குரைஞர் பணி,
 அரசியல் அனுபவம்: அதிமுகவில் 1992 முதல் அடிப்படை உறுப்பினர்,1996 முதல் 2004 வரை கிளைக்கழக செயலாளர், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர், 
2004 முதல் தற்போது வரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர், 
வகித்த பதவிகள்: 1995,1996 இல் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், 2001 முதல் 2006 வரை மாவட்டக் கவுன்சிலர், 2006 முதல் 2011 வரை ஒன்றியக் கவுன்சிலர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/சட்டப்பேரவைத்-தொகுதி-அதிமுக-வேட்பாளர்-3116870.html
3116480 மதுரை சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம் DIN DIN Tuesday, March 19, 2019 02:25 AM +0530 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை சார்பில் "பெண்கள் கடத்தலை தடுத்தல்' பற்றிய தேசிய கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: சமூகத்தில் உள்ள மூட பழக்கவழக்கங்களாலும், தடைகளாலும் பல்வேறு விதமான இன்னல்களுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் இதுபோன்ற இன்னல்கள் தொடராமல் இருப்பதற்கு உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இன்றைய காலச்சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எவற்றைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று அறிந்து நடந்து கொண்டால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்றார்.
இதில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆஷா சுக்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது: பெண்களுக்கு எதிரான இன்னல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்கள் சார்ந்த பிரச்னைகளாகும். இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதனை பெண்கள் அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். பெண்கள் கட்டாயத் திருமணங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கட்டாயத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுகின்றன. இது தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/அழகப்பா-பல்கலைக்கழகத்தில்-தேசிய-கருத்தரங்கம்-3116480.html
3116479 மதுரை சிவகங்கை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர்கள் மீது வழக்கு DIN DIN Tuesday, March 19, 2019 02:24 AM +0530 தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக கட்சியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி, மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாரியப்பன் கென்னடி உள்பட அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராக தேர்போகி வே.பாண்டி,மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக மாரியப்பன் கென்னடி ஆகியோரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரையிலிருந்து காரில் வந்த தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன்கென்னடி, அமமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலர் கே.கே.உமாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் திங்கள்கிழமை திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அப்போது வரும் வழிகளில் அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தது, அதிகமான கார்களில் வந்தது, பட்டாசு வெடித்தது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேட்பாளர்கள் உள்பட அமமுகவினர் மீது அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பவனம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் பீமன் கொடுத்த புகாரின் பேரில் வேட்பாளர்களான தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலர் உமாதேவன் உள்ளிட்ட அமமுகவினர் மீது திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
மேலும்,திருப்புவனம் சந்தை திடலில் அனுமதியின்றி பட்டாசு வெடித்தாக அமமுகவைச் சேர்ந்த சொக்கநாதன், பாண்டிகருப்பு, பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை பறக்கும் படை வட்டாட்சியர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரில் தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, வேலுச்சாமி ஆகியோர் மீதும், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரவர்மன் கொடுத்த புகாரின் பேரின் அனமதியின்றி பட்டாசு வெடித்ததாக விஜயகுமார் என்பவர் மீதும் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோன்று, கிராம நிர்வாக அலுவலர் கெளரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, கே.கே.உமாதேவன், அன்புமணி ஆகியோர் மீது சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோன்று திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/தேர்தல்-நடத்தை-விதிகளை-மீறியதாக-அமமுக-வேட்பாளர்கள்-மீது-வழக்கு-3116479.html
3116478 மதுரை சிவகங்கை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு DIN DIN Tuesday, March 19, 2019 02:24 AM +0530 விபத்தில் உயிரிழந்த உணவக உரிமையாளர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க  தேவகோட்டை நீதிமன்றம்  திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகிலுள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பன் மகன் களஞ்சியம் (44).  இவர்  சென்னையில் உணவகம் நடத்தி வந்தார். இவர், கடந்த 5.9.2016 அன்று  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்குச்சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டிருந்தார். பிராந்தனி விலக்கு அருகில் வந்தபோது சிவா என்பவர்  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் களஞ்சியம் உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் தேவகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம் விபத்தில் உயிரிழந்த களஞ்சியம்  குடும்பத்திற்கு ரூ.24 லட்சத்து 32 ஆயிரத்து 500 ஐ 7.50 சதவீத வட்டியுடன்  வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/விபத்தில்-உயிரிழந்தவர்-குடும்பத்துக்கு-ரூ24-லட்சம்-இழப்பீடு-வழங்க-உத்தரவு-3116478.html
3116477 மதுரை சிவகங்கை மானாமதுரையில் 7 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் DIN DIN Tuesday, March 19, 2019 02:23 AM +0530 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடைகளில் தடை செய்யப்பட்ட 7 கிலோ நெகிழிப் பைகளை பேரூராட்சித்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மானாமதுரையில்  கடைகள், உணவகங்கள், இறைச்சி, மீன் கடைகளில் திங்கள்கிழமை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது அந்தக் கடைகளில் விற்பனைக்காகவும் பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த 7 கிலோ நெகிழிப் பைகள், தம்ளர்களைப் பறிமுதல் செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காணிப்பு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இச்சோதனையில் ஈடுபட்டனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/மானாமதுரையில்-7-கிலோ-நெகிழிப்-பைகள்-பறிமுதல்-3116477.html
3116476 மதுரை சிவகங்கை மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலி: பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் DIN DIN Tuesday, March 19, 2019 02:23 AM +0530 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் பல நாள்களாக காலியாக இருப்பதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. மாவட்டத்தில் அதிக வருவாய் உள்ள பேரூராட்சி பட்டியலில் உள்ளது. இதை நகராட்சியாக தரம் உயர்த்தத் தேவையான அனைத்து ஆவணங்களும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்படாமல், இதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 
இந் நிலையில் இப் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த ஜான்முகமது பதவி உயர்வுபெற்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்கா சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் இங்கு செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளார். திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக மானாமதுரையை கவனித்து வருகிறார். 
இதனால் இவர் வாரத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு வந்து செல்வதால் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்படுவதாக இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வரி வசூல், கட்டட வரைபடங்களுக்கு அனுமதி, வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
இதேபோல் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டதால் இங்கும் அந்த பணியிடம் காலியாக உள்ளது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இளையான்குடியை கூடுதலாக கவனித்து வருகிறார். மேலும் இங்கு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு இடமாறுதலாகிச் சென்றதால் இப் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் இளையான்குடியில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படுகிறது.  செயல் அலுவலர் இல்லாததால் இளையான்குடி பேரூராட்சி  அலுவலகத்திலும் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
மக்களவைத் தேர்தலும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தொகுதியைச் சேர்ந்த மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளுக்கு செயல் அலுவலர்களையும் இளையான்குடி பேரூராட்சிக்கு சுகாதார ஆய்வாளரையும் உடனே நியமிக்க  வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/மானாமதுரை-இளையான்குடி-பேரூராட்சியில்-செயல்-அலுவலர்-பணியிடங்கள்-காலி-பணிகள்-பாதிக்கப்படுவதாக-பொதுமக-3116476.html
3116475 மதுரை சிவகங்கை தேர்தலில் இடம்பெறும் வெற்று வாக்குறுதிகள்: சாக்கோட்டைப் பகுதி வாக்காளர்கள் அதிருப்தி DIN DIN Tuesday, March 19, 2019 02:23 AM +0530 தேர்தலின்போது மட்டும் இடம்பெறும் வாக்குறுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாததால் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியும் அடங்கும். காரைக்குடி வட் டம், சாக்கோட்டை ஒன்றியத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கிராமங்கள் உள்ளன. இவற்றில்   சுமார் 35 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியது: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நெல், காய்கறி சாகுபடி போன்ற வேளாண்மைதான் பிரதான தொழில். மாற்றுத் தொழில் என்றால் புதுவயலில் இயங்கிவரும் அரிசி உற்பத்திஆலைகள் தான். இவற்றில் பெரும்பாலானவை இயந்திரமயமாகிவிட்டதால், இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் என எதுவும் இப்பகுதியில் இல்லை. மக்களவைத்தேர்தல், சட்ட பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தல் நேரங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு அரசியல்வாதிகள் வாக்குறுதிகளுடன் பிரசாரம் செய்வர். அதாவது இப்பகுதியில் வேளாண்மைக் கல்லூரி கொண்டு வரப்படும், இப்பகுதியைச் சேர்ந்த பீர்க்கலைக்காடு, பெரியகோட்டை, மித்திராவயல், மித்திரங்குடி, பெத்தாட்சிக் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடியாகும் காய்கறிகளைப் பதப்படுத்துதல் தொழில் ஏற்படுத்தப்படும், பெரியகோட்டைப் பகுதியில் அதிகம் விளையும் மல்லிகை பூவைக் கொண்டு வாசனைத் திரவியம் (சென்ட்) உற்பத்தி ஆலை ஏற்படுத்தப்படும் என வாக்குறுதிகளை அள்ளி 
வீசுவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இவை மூன்றும் அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். இப்பகுதியும் விரைவாக வளர்ச்சியடையும். தற்போது தேர்தலும் வந்துவிட்டது. வழக்கம் போல் இந்த வாக்குறுதிகளும் பிரசாரத்தில் இடம்பெற்றாலும், நிறைவேற்றப்படுமா?  என இப்பகுதி வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/தேர்தலில்-இடம்பெறும்-வெற்று-வாக்குறுதிகள்-சாக்கோட்டைப்-பகுதி-வாக்காளர்கள்-அதிருப்தி-3116475.html
3116474 மதுரை சிவகங்கை குடிநீர் வசதி கோரி புலவர்சேரி கிராம மக்கள் மனு DIN DIN Tuesday, March 19, 2019 02:22 AM +0530 குடிநீர் வசதி செய்து தரக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபனிடம் புலவர்சேரி 
கிராமப் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனு விவரம்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூர் அருகே உள்ள புலவர்சேரி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 
இங்கு செயல்பட்டு வந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் ஆழ்துளைக் கிணற்று மோட்டார் மற்றும் சிறு மின் விசைப் பம்பு (சின்டெக்ஸ்) ஆகியன கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. 
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புலவர்சேரி கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/குடிநீர்-வசதி-கோரி-புலவர்சேரி-கிராம-மக்கள்-மனு-3116474.html
3116473 மதுரை சிவகங்கை போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ. 36.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது DIN DIN Tuesday, March 19, 2019 02:22 AM +0530 திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் 19 பேரின் பெயரில் போலி நகைகளைஅடகு வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்த அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.  
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களிடமிருந்து அடகு பிடிக்கப்பட்ட நகைகள் அண்மையில் பரிசோதனை செய்யப்பட்டதாம். இதில் கடந்த 18-8-2016 முதல் 9-1-12018 வரை உள்ள காலத்தில் 19 வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் போலியானவை என தெரியவந்தது.
இதுபற்றி மேலும் விசாரித்ததில் அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய லாடனேந்தலைச் சேர்ந்த செந்தில்குமார் (47) என்பவர் மோசடி செய்து போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இதுபோன்று ஏதும் தவறு நடக்கக் கூடாது என்பதற்காக அந்த வங்கியின் வேறொரு கிளையில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வந்து வங்கியில் உள்ள நகைகளை சோதனை செய்வது வழக்கமாம். 
அதனடிப்படையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அதே வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் கதிரேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாடனேந்தல் வங்கியில் உள்ள நகைகளை சோதனை செய்தாராம். ஆனால் அவரும் இதுபற்றி ஏதும் வங்கியில் தகவல் தெரிவிக்கவில்லையாம்.   
இதுகுறித்த தகவலறிந்த அந்த வங்கியின் முதுநிலை மேலாளர் பவுன்ராஜ் (60) சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நகை மதிப்பீட்டாளர்கள் செந்தில்குமார், கதிரேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில்குமாரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர் கதிரேசனை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/19/போலி-நகைகளை-அடகு-வைத்து-வங்கியில்-ரூ-3650-லட்சம்-மோசடி-நகை-மதிப்பீட்டாளர்-கைது-3116473.html
3115739 மதுரை சிவகங்கை காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா DIN DIN Monday, March 18, 2019 01:23 AM +0530 காரைக்குடி மீனாட்சிபுரம்  முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) கொடியேற்றத்துடன் திருவிழா 
தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  
வரும் செவ்வாய் (மார்ச் 19) மற்றும் புதன்கிழமை (மார்ச் 20)களில் கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம், கோயில்காவடி, பூக்குழி, அக்னிச்சட்டி போன்ற அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடைபெறும். 
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பக்தர்கள் கூட்டம் அதிகம் வரத்தொடங்கியதால், அம்மனுக்கு காப்புக் கட்டிய நாள் முதலே பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். 
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முத்தாளம்மன் கோயிலில் திரண்ட ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி போன்றவற்றை சுமந்துகொண்டு ஊர்வலமாக அம்மன் சன்னதி, செக்காலைச்சாலை, முத்துப்பட்டிணம் முதல்வீதி வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் திரண்டதால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதிகளில் பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீஸார் தடை விதித்து, அவற்றை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். 
காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண் டிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/காரைக்குடி-முத்துமாரியம்மன்-கோயிலில்-பங்குனி-விழா-3115739.html
3115737 மதுரை சிவகங்கை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.80 லட்சம் மோசடி  செய்தவர் கைது DIN DIN Monday, March 18, 2019 01:23 AM +0530 வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்தவரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காட்டுவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன்(36) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரும் அறிமுகம் ஆகியுள்ளனர். 
இந்நிலையில் அவர்கள் இருவரும் கதிர்வேலிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 19.7.18 ஆம் தேதி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தைப் பெற்று கொண்டனராம். பல மாதங்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தரவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லையாம். 
இதுகுறித்து கதிர்வேல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட  குற்றப்பிரிவு போலீஸார் நாச்சியப்பன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நாச்சியப்பனை  கைது செய்த போலீஸார், முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/வெளிநாட்டில்-வேலை-வாங்கித்-தருவதாக-ரூ280-லட்சம்-மோசடி-செய்தவர்-கைது-3115737.html
3115736 மதுரை சிவகங்கை மானாமதுரையில் வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம் DIN DIN Monday, March 18, 2019 01:23 AM +0530 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல் விளக்கத்தை செய்து காட்டினர்.  
இதில் தேர்தல் பணியில் உள்ள மானாமதுரை மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜேம்ஸ்,  திலகவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகரன், கிராம உதவியாளர் பெருமாள் ஆகியோர் மானாமதுரை பேருந்து நிலையம் உள்ளிட்ட  இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து செயல் விளக்கம் 
செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதில் பொதுமக்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தனை அழுத்தி தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் திரையில் பார்த்து தங்கள் வாக்கு பதிவாகியுள்ளதை உறுதி செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/மானாமதுரையில்-வாக்குப்-பதிவு-இயந்திர-செயல்-விளக்கம்-3115736.html
3115734 மதுரை சிவகங்கை சிவகங்கையை மீண்டும் கைப்பற்றுமா காங்கிரஸ்! DIN DIN Monday, March 18, 2019 01:22 AM +0530 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 7 முறை வென்ற காங்கிரஸ் கட்சி, அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வருகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு சிவகங்கை  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இத்தொகுதியில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் வர்த்தகம், நிதித் துறை, உள்துறை உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சிதம்பரம் தற்போது அக் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முக்கிய முடிவுகளை எடுக்கும் ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார். ஆகவே தேசிய அளவில் சிவகங்கை மக்களவைத் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியை பொருத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி, திருமயம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியது.
கடந்த 1967 ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதி உருவாக்கத்திற்கு பின் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும், ஜி.கே. மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1980 முதல் 2009 வரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்ட பின்பு அக்கட்சி சார்பிலும் சிவகங்கை மகக்களவைத் தொகுதியில் ப.சிதம்பரம் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்திருந்தார்.
முந்தைய மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற ப.சிதம்பரம் தனது சொந்த தொகுதியில்  வங்கிகளை திறந்து, அதன் மூலம் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களுக்கு கடனுதவி மற்றும் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் கிராமப்புறங்களில் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. மேலும், சிவகங்கையில் தொடங்கப்பட்ட "ஸ்பைசஸ் பார்க்' உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் முடங்கின. இதனால் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி நிலவியது. மேலும், அப் பகுதியில் கட்சியின் மூத்த நிர்வாகிகளை முறையாக சந்தித்து ஆலோசனைகளை பெறுதல் உள்ளிட்டவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டதால் நாளடைவில் இத் தொகுதியில் காங்கிரஸின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
இதையறிந்த சிதம்பரம் கடந்த (2014) மக்களவைத் தேர்தலின் போது தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினார். ஆனால் அவர் குறைந்த வாக்குகள் பெற்று, நான்காமிடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக சிவகங்கை மக்களவைத் தொகுதி, கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக வசம் சென்றது. 
இந்நிலையில், இழந்த சிவகங்கை தொகுதியை வரும் தேர்தலில் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டத்தை சிதம்பரம் நடத்தினார். இதுதவிர, மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக நாட்டிலேயே முதல் கருத்துக் கேட்பு கூட்டத்தை காளையார்கோவிலில் நடத்தினார். அதன்பின்னர், அவரது ஆதரவாளரான கே.எஸ்.அழகரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தேர்தல் முன்னோட்டமாக தேவகோட்டையில் பொதுக் கூட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை மக்களவைத் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும் தனது கூட்டணி கட்சியான பாஜவுக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கியுள்ளது. இதனால் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் சிவகங்கை மக்களவைத் தேர்தலில் நேரடியாக மோதுகின்றன.   
தற்போது ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரத்தை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கட்சியினர் மத்தியில் பேசபட்டது. ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை தொகுதியை கேட்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, நாட்டின் தென் பகுதியான தமிழகத்திலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். 
அதனால் சிவகங்கை தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதால், எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்கிற எதிர்ப்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதுவாயினும் சிவகங்கை மக்களவைத் தொகுதியை  திரும்ப கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/சிவகங்கையை-மீண்டும்-கைப்பற்றுமா-காங்கிரஸ்-3115734.html
3115732 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு DIN DIN Monday, March 18, 2019 01:21 AM +0530 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
 திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் ஜெகன்(14). இவர் பட்டமங்கலத்தில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை  மதியம் ஜெகன், தங்களது மாட்டை குளிக்க வைப்பதற்காக கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து மோட்டரை போட்டுள்ளார். அப்போது மோட்டரில் மின்கசிவு இருந்ததால் ஜெகன் தூக்கி எறியப்பட்டார். 
இதில் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே  உயிரிழந்தார். பின்னர் போலீஸார் ஜெகனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் காவல்நிலைய ஆய்வாளர் மலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/திருப்பத்தூர்-அருகே-மின்சாரம்-பாய்ந்து-மாணவர்-சாவு-3115732.html
3115720 மதுரை சிவகங்கை தேவகோட்டைபறியில்  ஈடுபட்ட 3 பேர் கைது DIN DIN Monday, March 18, 2019 01:04 AM +0530 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் வழப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  கைது செய்தனர்.
தேவகோட்டை பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களை குறிவைத்து நகைகளை திருடுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் பிளவர்சீலா, துணை ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், தவமுனி உள்ளிட்ட போலீஸார்  ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், கென்னடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், உருவாட்டியைச்  சேர்ந்த திரிசங்கு மகன் சங்கர்( 26), அமராவதிபுதுரைச் சேர்ந்த சோலை மகன் அருண்பாண்டியன்( 28), கல்லல் அருகே பாடாத்தான் பட்டியைச்  சேர்ந்த இருதயராஜ் மகன் ஆரோக்கியராஜ்(எ)பிரபு(27 ) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
 விசாரணையில், தனியாகச்செல்லும் பெண்களை குறிவைத்து இவர்கள் வழிபறியில் ஈடுபட்டதாகவும், ஆராவயல் பகுதியில் நான்கு பவுனும், வேலாயுதபட்டினம் பகுதியில் நான்கரைப் பவுன் நகைகளையும் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் ஆராவயல் போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/தேவகோட்டைபறியில்--ஈடுபட்ட-3-பேர்-கைது-3115720.html
3115719 மதுரை சிவகங்கை மானாமதுரை பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார் DIN DIN Monday, March 18, 2019 01:03 AM +0530 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னரே முக்கிய பிரமுகர்களை சந்தித்து சனிக்கிழமை ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்தமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மாரியப்பன் கென்னடி. இவர் தினகரன் ஆதரவாளராக மாறியதையடுத்து, இவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோனது. தற்போது மக்களவைத் தேர்தலுடன் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி(தனி)க்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. 
இந்த தொகுதியில் அமமுக வேட்பாளராக, இக்கட்சியின் மாநில அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மாரியப்பன் கென்னடி போட்டியிடுவார் என அக்கட்சி  வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே மாரியப்பன் கென்னடி முக்கிய பிரமுகர்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். மானாமதுரை பகுதியில் பதவி பறிக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகிகள் 50 பேரை சந்தித்து மாரியப்பன் கென்னடி ஆதரவு திரட்டினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/மானாமதுரை-பேரவைத்-தொகுதி-அமமுக-வேட்பாளர்-ஆதரவு-திரட்டினார்-3115719.html
3115718 மதுரை சிவகங்கை கச்சநத்தம் கொலை வழக்கில் தொடர்புடைய  இளைஞர் வெட்டிக் கொலை DIN DIN Monday, March 18, 2019 01:02 AM +0530 சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் கடந்தாண்டு நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் திருப்பாச்சேத்தி அருகே கடந்த சனிக்கிழமை இரவு  மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை கண்மாயிலிருந்து மீட்கப்பட்டது. 
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்தாண்டு மே மாதம் ஒரு தரப்பைச் சேர்ந்த 3 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இக் கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாமணி மகன் அருண்பாண்டி என்ற பிரசாத் (20)  உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
தற்போது அருண்பாண்டி என்ற பிரசாத் (20), குடும்பத்துடன் சிவகங்கையில் வசித்து வந்தார். இந்நிலையில் பிரசாத் வேம்பத்தூர் அருகே பி.வேலாங்குளம் கிராம கண்மாயில் கருவேல மரங்களுக்கிடையில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/18/கச்சநத்தம்-கொலை-வழக்கில்-தொடர்புடைய-இளைஞர்-வெட்டிக்-கொலை-3115718.html
3115196 மதுரை சிவகங்கை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி DIN DIN Sunday, March 17, 2019 01:06 AM +0530
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இப்பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: 
மக்களவை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய வாக்காளர் பட்டியல் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 
அதேபோல தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை கள ஆய்வு செய்து அனைத்து மையங்களிலும் சாய்வுதள வசதி, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
 அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக் கூடிய இயந்திரங்கள் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து பயிற்சிகள் வழங்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், தளவாட பொருள்கள், கட்டு உரைகள், அழியா மை உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பினை உறுதி 
செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு முறையே பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதோடு மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நீக்கி உறுதி செய்த பின்னரே தேர்தல் வாக்குப்பதிவினை தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார். 
 இப்பயிற்சியில் கூடுதல் தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான சி.முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர், திருவாடானை தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், முதுகுளத்தூர்), மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலரும், உதவி ஆணையருமான (கலால்) சி.ரவிச்சந்திரன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சிக்கான பொறுப்பு அலுவலரும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலருமான சேக் முகையதீன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/மின்னணு-வாக்குப்பதிவு-இயந்திர-செயல்பாடு-மண்டல-அலுவலர்களுக்கு-பயிற்சி-3115196.html
3115194 மதுரை சிவகங்கை கூட்டுறவு வங்கிச் செயலரை அவமதித்து சுவரொட்டிகள் ஒட்டியதாக 6 பேர் மீது புகார் DIN DIN Sunday, March 17, 2019 01:05 AM +0530
கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் மற்றும் தலைமை எழுத்தர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக 6 பேர் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
கமுதியை அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இச்சங்கத்தின் மூலம் காத்தனேந்தல், குமிலாங்குளம், பறையங்குளம், வேடாங்கூட்டம், ஆரைகுடி, மோயங்குளம், தம்பிரான் கூட்டம், புதுகுடியிருப்பு, கம்மாபட்டி, நெறுஞ்சிப்பட்டி உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள் விவசாயக் கடன், நகைக் கடன்களை பெற்று வருகின்றனர். 
மேலும்  மானிய விலையில் உரம், வறட்சி நிவாரணம், பயிர்காப்பீடு போன்ற அரசு திட்டங்களிலும்  பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர்  விவசாய நகைக் கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர். 
சங்கத்தில் ஏற்கெனவே இவர்களுக்கு கடன் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, கூட்டுறவு சங்க நிர்வாகம் மனுக்களை தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கூட்டுறவு  சங்கச் செயலர் முத்துராமலிங்கம், தலைமை எழுத்தர் வேல்முருகன் ஆகியோரை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து தலைமை எழுத்தர் வேல்முருகன் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 
அதில் காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பூமி, குமிலாங்குளத்தைச் சேர்ந்த ராஜாராம், பழனிச்சாமி, முருகேசன், ராமலிங்கம், பறையங்குளம் முனியாண்டி ஆகியோர் மீது  புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கோவிலாங்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/கூட்டுறவு-வங்கிச்-செயலரை-அவமதித்து-சுவரொட்டிகள்-ஒட்டியதாக-6-பேர்-மீது-புகார்-3115194.html
3115192 மதுரை சிவகங்கை திருவாடானை அருகே மணல் கடத்திய 3 பேர் கைது: ராக்டர், மாட்டு வண்டிகள் பறிமுதல் DIN DIN Sunday, March 17, 2019 01:05 AM +0530
திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மணல் கடத்திய  3 பேரை கைது செய்த போலீஸார் டிராக்டர் மற்றும் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். 
திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் கோட்டக்கரை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக சேத்திடல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது  எட்டியதிடலைச் சேர்ந்த தோமையா  (42) டிராக்டரில் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. 
இதனைத்தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தோமையாவை கைது செய்து,  டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம்   பாம்பாற்றில் மணல் கடத்துவதாக சிறுகம்பையூர் கிராம நிர்வாக அலுவலர் யாகப்பன் போலீஸில் புகார் அளித்தார். 
அதன்பேரில் எஸ்.பி.பட்டிணம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய புதுகோட்டை மாவட்டம் ஒட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் (52), ஜெயராஜ் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/திருவாடானை-அருகே-மணல்-கடத்திய-3-பேர்-கைது-ராக்டர்-மாட்டு-வண்டிகள்-பறிமுதல்-3115192.html
3115191 மதுரை சிவகங்கை பரமக்குடியில் முதியவரிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு DIN DIN Sunday, March 17, 2019 01:05 AM +0530
பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் சனிக்கிழமை முதியவரிடம் 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி  மகன் ராசு (66). இவர் வங்கியில் நகையை அடகு வைப்பதற்காக வீட்டிலிருந்து 10 பவுன் நகையை பையில் எடுத்து வந்துள்ளார். ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ராசுவிடம் அறிமுகம் ஆனவர்கள் போல் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர் பையில் நகை வைத்திருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர்கள் திடீரென 10 பவுன் நகையுடன் அந்த பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பரமக்குடி நகர் 
காவல் நிலையத்தில் ராசு அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/பரமக்குடியில்-முதியவரிடம்-10-பவுன்-நகைகள்-பறிப்பு-3115191.html
3115189 மதுரை சிவகங்கை கண்மாயில் மணல் கடத்திய 24 லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் DIN DIN Sunday, March 17, 2019 01:04 AM +0530
திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கண்மாயில்  அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 லாரிகள், 4 பொக்லைன் இயந்திரங்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அரசூரில் பெரிய கீரமங்கலம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தில்  சவுடு மண் எடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் தடையில்லாச் சான்று வழங்கி உள்ளார். இந்த சான்றின் மூலம் அந்த நிலத்தின் அருகே உள்ள பெரிய கீரமங்கலம் கண்மாயில் சுமார் 25 அடிக்கு ஆழமாக தோண்டி மணலை கடத்தி  வந்துள்ளனர்.
இதுகுறித்து திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சனிக்கிழமை மாலை  சம்பவ இடத்துக்கு போலீஸாருடன் சென்று டிஎஸ்பி பார்வையிட்டார். அப்போது கண்மாயில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. 
இதனைத்தொடர்ந்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து  கண்மாயில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 டாரஸ் லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்து  விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/கண்மாயில்-மணல்-கடத்திய-24-லாரிகள்-4-பொக்லைன்-இயந்திரங்கள்-பறிமுதல்-3115189.html
3115187 மதுரை சிவகங்கை ராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பாளர் திமுக.வினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார் DIN DIN Sunday, March 17, 2019 01:04 AM +0530
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி கூட்டணி கட்சிப் பிரமுகர்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை ராமநாதபுரத்தில்  கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர், திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,  திமுக மகளிரணிப் பிரமுகர் பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் 
சுப.தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்டச் செயலர் திவாகரன், நகரச் 
செயலர் கார்மேகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (பரமக்குடி) திசைவீரன், பரமக்குடி நகரச் செயலர் சேதுகருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு 
திரட்டினார். 
அவருடன்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த  கடையநல்லூர்சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கட்சிப் பொறுப்பாளர் ஷாஜகான், மாவட்டத் தலைவர் வருசை முகமது, செயலர் முகமது பைசல் ஆகியோர் உடன் சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/ராமநாதபுரம்-முஸ்லிம்-லீக்-வேட்பாளர்-திமுகவினரைச்-சந்தித்து-ஆதரவு-திரட்டினார்-3115187.html
3115184 மதுரை சிவகங்கை ராமேசுவரத்தில் மின் மாற்றியில் பழுது: பல மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி DIN DIN Sunday, March 17, 2019 01:04 AM +0530
ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின் மாற்றியில் சனிக்கிழமை ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பல மணிநேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மின் துணை நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மாற்றியில் உள்ள ஆயிலை மின்வாரிய ஊழியர்கள் சனிக்கிழமை பிற்பகல் மாற்றினர். இதற்காக அப்போது மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. 
இதனையடுத்து மீண்டும் மின் விநியோகத்தை வழங்க முயன்ற போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 
இதனால் பிற்பகல் 3 மணி முதல் மின் விநியோகம் தடைபட்டது. இந்த பழுதை சீரமைக்க பரமக்குடியில் இருந்து மின்வாரிய தொழில் நுட்பப்பிரிவு ஊழியர்கள் வந்து,  சீரமைப்பு பணியை தொடங்கினர். 
இரவு வரை ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி ராமேசுவரம் வந்த பக்தர்களும் அவதிக்குள்ளாயினர். 
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் மாற்றியில் தொழில் நுட்ப பணி சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/ராமேசுவரத்தில்-மின்-மாற்றியில்-பழுது-பல-மணி-நேரம்-மின்தடையால்-பொதுமக்கள்-அவதி-3115184.html
3115182 மதுரை சிவகங்கை சரக்கு வாகனம்- பைக் மோதல்: இளைஞர் சாவு DIN DIN Sunday, March 17, 2019 01:04 AM +0530
திருவாடானை அருகே சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகே தொண்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகன் மணிகண்டன் (32). இவர் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் எஸ்.பி.பட்டிணம் சென்று விட்டு தொண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அகத்தியன் என்பவர் சரக்கு வாகனத்தில் தொண்டியில் இருந்து எஸ்.பி.பட்டிணம் செல்லும் போது கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனமும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்டன. 
இதில் இருவரும் காயம் அடைந்து தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தார். சரக்கு வாகன ஓட்டுநர் அகத்தியன் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தொண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/சரக்கு-வாகனம்--பைக்-மோதல்-இளைஞர்-சாவு-3115182.html
3115180 மதுரை சிவகங்கை பூவந்தி அருகே வேன்-பைக் மோதல்: பொறியியல் கல்லூரி மாணவர் சாவு DIN DIN Sunday, March 17, 2019 01:03 AM +0530
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே சனிக்கிழமை வேனும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் பொறியியல் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை கலைமகள் தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அருண்கிஷோர் (20). இவர் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அருண்கிஷோர் மதுரையிலிருந்து சிவகங்கைக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை வந்தார். சித்தலாங்குடி விலக்கு அருகே வந்த போது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அருண்கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பூவந்தி போலீஸார் அங்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி பூவந்தி போலீஸார் வழக்குப் பதிந்து பெத்தானேந்தலைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/பூவந்தி-அருகே-வேன்-பைக்-மோதல்-பொறியியல்-கல்லூரி-மாணவர்-சாவு-3115180.html
3115179 மதுரை சிவகங்கை அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி மையங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் DIN DIN Sunday, March 17, 2019 01:03 AM +0530
சிவகங்கை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து களப்பணி அலுவலர்கள் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: 
மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வழங்கிய மனுவை ஆய்வு செய்து சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலிருந்து இறந்தவர்கள் 900 பேரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் படைத்த வாக்காளர்களுக்கு தேர்தல் நேரத்தில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பித்தவர்களை அந்தந்த பகுதி வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறுவதால் கோயில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலம் ஒலி பெருக்கி மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிக்கும் நிலை உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து அதனை மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மேற்கூரைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச் சாவடி மையங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும் அடிப்படை வசதிகளின்றி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அந்தந்தப் பகுதி  களப்பணி அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/அடிப்படை-வசதிகள்-இல்லாத-வாக்குச்சாவடி-மையங்கள்-குறித்து-தகவல்-தெரிவிக்கலாம்-3115179.html
3115177 மதுரை சிவகங்கை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக, அமமுக கட்சியினர் மீது வழக்கு DIN DIN Sunday, March 17, 2019 01:03 AM +0530 சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அமமுக கட்சியினர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவித்துள்ளதை அடுத்து,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் முதன் முதலாக தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக மற்றும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் கொடி கம்பம் அமைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த சரவணன், பூமி மற்றும் விஜயமூர்த்தி ஆகிய 3 பேர் மீது காளையர்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோன்று, கோளந்தி என்னும் கிராமம் அருகே உள்ள அரசு சுவரில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் குறித்த சுவர் விளம்பரம் எழுதி இருந்ததாக அக்கட்சியின் இளைஞரணி இணைச் செயலர் கோதண்டபாணி மீது சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/தேர்தல்-நடத்தை-விதிகளை-மீறியதாக-திமுக-அமமுக-கட்சியினர்-மீது-வழக்கு-3115177.html
3115176 மதுரை சிவகங்கை இறந்தவர் பெயரில் உள்ள நிலத்தைவிற்பனை செய்தவர் கைது DIN DIN Sunday, March 17, 2019 01:03 AM +0530
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவருடைய சகோதரி ஆனந்தவல்லிக்கு சிவகங்கை மாவட்டம் குவளைவேலியில் சொந்தமாக 3 ஏக்கர் 6 சென்ட் புஞ்சை நிலம் இருந்ததாம்.  இந்நிலையில் ஆனந்தவல்லி கடந்த 27-7-1976 இல் இறந்து விட்டாராம்.
இதையடுத்து குவளைவேலி கிராமத்தைச் சேர்ந்த பாரி (51) தன்னுடைய தாயாரான அக்கம்மாள் (76) ஆகிய இருவரும் சேர்ந்து போலியாக பத்திரம், பட்டா தயார் செய்து சிவகங்கை பொற்கைபாண்டியன் தெருவைச் சேர்ந்த மல்லிகா  என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்து விட்டனராம்.
இதுபற்றி தகவலறிந்த ஜெயலெட்சுமி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம்  அண்மையில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து பாரியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/இறந்தவர்-பெயரில்-உள்ள-நிலத்தைவிற்பனை-செய்தவர்-கைது-3115176.html
3115092 மதுரை சிவகங்கை மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம் DIN DIN Sunday, March 17, 2019 12:31 AM +0530
மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் 37 ஆவது ஆண்டு பங்குனித் திருவிழா தொடங்கியதையொட்டி காப்புக்கட்டுதல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர் முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். மூலவருக்கும், காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து 11 நாள்கள் விழா நடைபெறுகிறது.
விழா நாள்களின்போது தினமும் இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் உற்சவம் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் காப்புக்கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள், மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து  அம்மன் சன்னதி எதிரே தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். பலர் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதன் பின் 26 ஆம் தேதியுடன் இந்தாண்டு பங்குனித் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/17/மானாமதுரை-மாரியம்மன்-கோயிலில்-பங்குனித்-திருவிழா-தொடக்கம்-3115092.html
3114727 மதுரை சிவகங்கை திருப்புவனத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேர் கைது DIN DIN Saturday, March 16, 2019 08:04 AM +0530 மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலர் செந்தில் தலைமையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேர் திருப்புவனம் ரயில் நிலையம் அருகே மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் செல்லும் பயணிகள் ரயிலை மறிப்பதற்காக நின்றிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/திருப்புவனத்தில்-ரயில்-மறியலுக்கு-முயன்ற-23-பேர்-கைது-3114727.html
3114726 மதுரை சிவகங்கை திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை DIN DIN Saturday, March 16, 2019 08:04 AM +0530 சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சி  செயலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என, அப்பகுதி பொதுமக்கள் திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், முதுவன்திடல் கிராமத்தில் ஊராட்சி செயலராக பாலகுரு என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், திருப்பாச்சேத்தி கிராம ஊராட்சி செயலர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். சமீபத்தில், திருப்பாச்சேத்தி கிராம ஊராட்சி செயலர் பொறுப்பிலிருந்து பாலகுரு விடுவிக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக, பாப்பாகுடியில் ஊராட்சி செயலராக பணியாற்றி வரும் முத்துராமலிங்கம் என்பவர் திருப்பாச்சேத்தியை கூடுதலாகக் கவனிக்க, அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து தகவலறிந்த திருப்பாச்சேத்தி பொதுமக்கள், பாலகுருவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கோரி, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை மனுவை கார்த்திகாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/திருப்புவனம்-வட்டார-வளர்ச்சி-அலுவலகத்தை-பொதுமக்கள்-முற்றுகை-3114726.html
3114725 மதுரை சிவகங்கை தேவகோட்டையில் சித்தி, தம்பியை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது DIN DIN Saturday, March 16, 2019 08:03 AM +0530 தேவகோட்டையில் தனது சித்தியையும், தம்பியையும் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அம்மச்சி ஊருணி பகுதியைச்   சேர்ந்தவர் சுப்புராமன். தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு, இரண்டு மனைவிகள். இதில், முதல் மனைவி கல்யாணி இறந்துவிட்டார். இவருடைய மகன் மகன் பாலசுந்தர் (28). இவரது இரண்டாவது மனைவி பழனிமுத்து (41). இவருடைய மகன் மனோஜ் (18), தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார்.
 இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சுப்புராமன் தனது மூத்த மகன் பாலசுந்தரத்திடம் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளார். ஆனால், சமீப காலமாக சுப்புராமன் பாலசுந்தரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாராம். இதனால் விரக்தியடைந்த பாலசுந்தரம், இதற்கு தனது சித்தி பழனிமுத்து தான் காரணமாக இருக்கக்கூடும் எனக் கருதியுள்ளார். 
இதனால் பாலசுந்தரம், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த பழனிமுத்தையும், மனோஜையும் வீடு புகுந்து அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். 
இதில், பலத்த காயமடைந்த இருவரும் அலறியசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் பாலசுந்தர் தப்பித்து சென்றுவிட்டாராம். 
அப்பகுதியினர் அளித்த புகாரின்பேரில், தேவகோட்டை நகர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 இது தொடர்பாக புகாரின் பேரில் பாலசுந்தரை போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/தேவகோட்டையில்-சித்தி-தம்பியை-அரிவாளால்-வெட்டிய-இளைஞர்-கைது-3114725.html
3114724 மதுரை சிவகங்கை கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் DIN DIN Saturday, March 16, 2019 08:03 AM +0530 சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் பங்குனி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்துக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.
விழாவில், தினசரி காலை, மாலை வேளைகளில் சிம்மம், காளை, குதிரை, காமதேனு, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 ஆம் தேதியும், பூப்பல்லக்கு மார்ச் 24 ஆம் தேதியும், மார்ச் 25 ஆம் தேதி உற்சவ சாந்தி உள்ளிட்ட வைபவங்களுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.
இதில், கொல்லங்குடி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/கொல்லங்குடி-காளியம்மன்-கோயிலில்-பங்குனி-திருவிழா-கொடியேற்றத்துடன்-தொடக்கம்-3114724.html
3114723 மதுரை சிவகங்கை தேவகோட்டையில் ஆரம்பப் பள்ளி ஆசியர் கூட்டணி செயற்குழு கூட்டம் DIN DIN Saturday, March 16, 2019 08:03 AM +0530 தேவகோட்டை யில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு  கூட்டம்  புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதற்கு அதன் வட்டாரத் தலைவர் ஆர். ஜோசப் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தேவகோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளிகள் அனைத்தும் கிராமப் புறங்களில் அமைந்திருக்கிறது. ஆசிரியர், மாணவர் 
வருகையை ஆன்லைனில் பதிவு செய்யும் போது சர்வரில் கோளாறு ஏற்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் அனைத்து செல்லிடப்பேசி சேவை நிறுவளங்களுக்கும் சிக்னல் கிடைப்பதில்லை.  எனவே, தமிழக  அரசு நவீன செல்லிடப்பேசி வழங்குவதோடு,  போதிய இணையதள வசதி செய்து தரவேண்டும் என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது .

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/தேவகோட்டையில்-ஆரம்பப்-பள்ளி-ஆசியர்-கூட்டணி-செயற்குழு-கூட்டம்-3114723.html
3114722 மதுரை சிவகங்கை எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: காரைக்குடி தொழில் வணிக கழகம் வரவேற்பு DIN DIN Saturday, March 16, 2019 08:02 AM +0530 எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு காரைக்குடி வழியாக புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதற்கு காரைக்குடி தொழில்வணிகக்கழகம் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவர் சாமி.திராவிடமணி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கேரளா மாநிலம் எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணிக்கு புதிய சிறப்பு ரயில் (எண்: 06015) வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் இயக்கப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஒருநாள் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஏப். 6 இல் எர்ணாகுளத்தில் காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். காரைக்குடிக்கு இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு வரும்.
மறுமார்க்கத்தில் ஏப்.7-ஆம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு(வண்டி எண்: 06016) இரவு மணி 11.20-க்கு காரைக்குடிக்கும், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளமும் சென்றடையும்.
இந்த ரயில் வரும் ஜூன் மாதம் 29-ஆம் தேதிவரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பு கிடைக்கப்பெற்றால் நிரந்தரமாக இந்த ரயில் இயக்கப்படலாம் என்று ரயில்வேத்துறை சார்பில் தெரியவருகிறது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/எர்ணாகுளம்---வேளாங்கண்ணி-சிறப்பு-ரயில்-காரைக்குடி-தொழில்-வணிக-கழகம்-வரவேற்பு-3114722.html
3114721 மதுரை சிவகங்கை பொள்ளாச்சி சம்பவம்: சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் DIN DIN Saturday, March 16, 2019 08:02 AM +0530 பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இது குறித்து தகவலறிந்து வந்த கல்லூரி முதல்வர் பா. ஹேமலதா மற்றும் அனைத்துத் துறை தலைவர்களும் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வகுப்புகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவ, மாணவியர் மறுத்ததுடன், முழக்கங்களை எழுப்பியவாறு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். இதில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/பொள்ளாச்சி-சம்பவம்-சிவகங்கையில்-கல்லூரி-மாணவர்கள்-உள்ளிருப்புப்-போராட்டம்-3114721.html
3114720 மதுரை சிவகங்கை கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் DIN DIN Saturday, March 16, 2019 08:01 AM +0530 சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் பங்குனி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்துக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.
விழாவில், தினசரி காலை, மாலை வேளைகளில் சிம்மம், காளை, குதிரை, காமதேனு, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 ஆம் தேதியும், பூப்பல்லக்கு மார்ச் 24 ஆம் தேதியும், மார்ச் 25 ஆம் தேதி உற்சவ சாந்தி உள்ளிட்ட வைபவங்களுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.
இதில், கொல்லங்குடி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/16/கொல்லங்குடி-காளியம்மன்-கோயிலில்-பங்குனி-திருவிழா-கொடியேற்றத்துடன்-தொடக்கம்-3114720.html
3114121 மதுரை சிவகங்கை மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாற்றுத் திறனாளிகள் உதவி கோரி விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, March 15, 2019 08:08 AM +0530 மக்களவைத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்து தரக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆன் லைனில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவைப்படும் உதவி மற்றும் தகவல்களை பெற்று பயன்பெறும் வகையில் p‌e‌r‌s‌o‌n ‌w‌i‌t‌h ‌d‌i‌s​a​b‌i‌l‌i‌t‌y‌s  (பெர்ஷன் வித் டிஷ்அப்ளிட்டிஸ்) எனும் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களது மாற்றுத்திறனின் தன்மை குறித்து மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்து கொள்ளவும், ஏற்கெனவே இடம் பெற்றுள்ள பெயரினை உறுதி செய்யவும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இவை தவிர,சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தேர்தல் நாளன்று சக்கர நாற்காலிகள் மற்றும் தங்களது தேவைகள் குறித்து மேற்கண்ட செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் வசதிகள் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும்,பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார் மற்றும் கருத்துகளை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800-425-7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தும், தெரிந்தும் பயன் பெறலாம். 
இவை தவிர,1950 என்ற கட்டணமில்லா எண்ணையும் பயன்படுத்தி தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/மக்களவைத்-தேர்தலில்-வாக்களிக்க-மாற்றுத்-திறனாளிகள்-உதவி-கோரி-விண்ணப்பிக்கலாம்-3114121.html
3114120 மதுரை சிவகங்கை தேவகோட்டை தொழிலதிபர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகைத் திருட்டு DIN DIN Friday, March 15, 2019 08:08 AM +0530 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் புதன்கிழமை இரவு வீட்டின் ஜன்னலை  உடைத்து நகைகளை திருடிச்  சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒத்தக்கடைப்  பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசின். இவர்  சிங்கப்பூர்  தொழிலதிபர். சிங்கப்பூரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். முகமது யாசின் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது இவரது மகன்கள் காதர்மைதின்(46) காதர்அம்சா (44) ஆகிய 2 பேரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். 
தேவகோட்டையிலுள்ள வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றிருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவர்களது வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிங்கப்பூரில் உள்ள காதர்மைதினுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காதர்மைதின் உடனடியாக தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் தொலைப்பேசி மூலம் புகார் தெரிவித்தார். 
இந்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ  இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
காதர்மைதின்  சிங்கப்பூரிலிருந்து  வந்த பிறகு தான் திருடு போன நகைகளின் மதிப்பு எவ்வளவு  என்பது தெரியவரும்  என போலீஸார்  கூறினர்.   இது குறித்து நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/தேவகோட்டை-தொழிலதிபர்-வீட்டில்-ஜன்னலை-உடைத்து-நகைத்-திருட்டு-3114120.html
3114119 மதுரை சிவகங்கை சிவகங்கை கூடுதல் எஸ்.பி.யை பணியிடமாற்றம்: செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் DIN DIN Friday, March 15, 2019 08:08 AM +0530 சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரை (ஏடிஎஸ்பி) உடனடியாக பணியிட மாற் றம் செய்யவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைச்செயலாளர் சி. திருஞானம் தில்லி தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பினார்.
அந்த புகாரில் அவர் கூறியது: சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரனுக்கு சொந்த ஊர் சிவகங்கையாகும். அவர் சிவகங்கை சட்டபேரவைத்தொகுதியின் வாக்காள ராக இருந்து சுமார் 17 ஆண்டுகளாக வாக்களித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். 
வேறுபகுதிக்கு பணியிடமாற்றம் பெறாதவர். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு உள்ளூரைச் சேர்ந்த அதிகாரிகள் வேறுபகுதிக்கு மாற்றவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் உயரதிகாரியான மங்களேஸ்வரன் பணியிடமாற்றம் பெறாமல் தொடர்ந்து அதே பணியில் தொடர்கிறார். 
மேலும் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதாலும், சொந்த ஊரிலே பணியில் இருப்பதை தவிர்க்கும் வகையிலும் வரும் மக்களவைத் தேர்தலையொட்டி உடனடியாக அவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/சிவகங்கை-கூடுதல்-எஸ்பியை-பணியிடமாற்றம்-செய்யக்-கோரி-தேர்தல்-ஆணையத்தில்-பாமக-புகார்-3114119.html
3114118 மதுரை சிவகங்கை பொள்ளாச்சி சம்பவம்: தேவகோட்டையில்  கல்லூரி மாணவர்கள் போராட்டம் DIN DIN Friday, March 15, 2019 08:07 AM +0530 பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து  தண்டனை வழங்கக் கோரி தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை  கல்லூரி மாணவ, மாணவிகள்500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் போரட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில்  அரசியல்  பேதமின்றி உண்மைக்  குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான  தண்டனை வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/பொள்ளாச்சி-சம்பவம்-தேவகோட்டையில்--கல்லூரி-மாணவர்கள்-போராட்டம்-3114118.html
3114117 மதுரை சிவகங்கை நாச்சியாபுரம் அருகே பைக் மீது பேருந்து  மோதி உணவகத் தொழிலாளி சாவு DIN DIN Friday, March 15, 2019 08:07 AM +0530 சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகே வியாழக்கிழமை  இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் தக்கான் மகன் கணேசன் (59).உணவகத்  தொழிலாளி. இவர் அருகில் உள்ள வயிரவன்பட்டி கிராமத்தில் புதிய உணவகம்  திறப்பதற்காக நாச்சியாபுரத்தில் பொருள்கள் வாங்கிக் கொண்டு  இரு சக்கர வாகனத்தில் வடுகபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். 
அப்போது காரைக்குடியிலிருந்து மதுரைக்குச் செல்லும் அரசுப் பேருந்து இவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 
இந்நிலையில் சிராவயல் விலக்கு என்ற இடத்தில் பின்னால் பேருந்து வருவதைக் கவனிக்காத கணேசன் திடீரென தனது இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். இதில் பேருந்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இவ்விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/நாச்சியாபுரம்-அருகே-பைக்-மீது-பேருந்து-மோதி-உணவகத்-தொழிலாளி-சாவு-3114117.html
3114116 மதுரை சிவகங்கை இலுப்பகுடி வாலகுருநாதன் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி DIN DIN Friday, March 15, 2019 08:07 AM +0530 சிவகங்கை மாவட்டம் , படமாத்தூர் அருகே இலுப்பகுடியில் உள்ள வாலகுருநாதன் சமேத அங்காளபரமேஸ்வரி கோயில் கருவறையில் உள்ள மூலவர் மீது வியாழக்கிழமை காலை சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி விழுந்தது.
படமாத்தூர் அருகே இலுப்பகுடியில் வாலகுருநாதன் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் மீது உத்திராயணம் காலத்தில் சூரிய ஒளி வெளி பிரகாரத்திலிருந்து சுமார் 80 அடி தொலைவு கருவறையில் உள்ள மூலவர் மீது விழுவது வழக்கம். அந்த வகையில், உத்திராயணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை காலை 6.13 மணி முதல் 6.50 மணி வரை சுவாமி மற்றும் அம்மன் மீது சூரிய ஒளி நிலை கொண்டிருந்தது.சூரிய ஒளி மூலவரின் சிலைகளை விட்டு அகன்ற பின் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் இலுப்பகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/இலுப்பகுடி-வாலகுருநாதன்-கோயிலில்-மூலவர்-மீது-சூரிய-ஒளி-3114116.html
3114115 மதுரை சிவகங்கை கிணற்றில் விழுந்த ஆட்டை  மீட்க சென்ற இளைஞர் சாவு DIN DIN Friday, March 15, 2019 08:04 AM +0530 மதகுபட்டி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க சென்ற இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மதகுபட்டி அருகே கண்டுபட்டி மேலக்காட்டைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார்(24). இவர் வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது ஆடு அப் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாம்.
இதையறிந்த வினோத்குமார் ஆட்டை காப்பாற்றுவதற்கு கிணற்றில் இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
 இதுதொடர்பாக மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/கிணற்றில்-விழுந்த-ஆட்டை--மீட்க-சென்ற-இளைஞர்-சாவு-3114115.html
3114114 மதுரை சிவகங்கை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு:  சிவகங்கை மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் பங்கேற்பு DIN DIN Friday, March 15, 2019 08:04 AM +0530 சிவகங்கை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை சுமார் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்கு  அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் 9,131 மாணவர்கள், 9,184 மாணவிகள் ஆக மொத்தம் 18,315 பேர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து,வியாழக்கிழமை தொடங்கிய தேர்வினை 18 ஆயிரத்து 59 மாணவ, மாணவிகள் எழுதினர். 256 பேர் தேர்வில் பங்கு பெறவில்லை. இதே போன்று, தனித் தேர்வர்கள் 324 மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17 மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கு பெறவில்லை. மீதமுள்ள 307 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 91 மையங்களில் நடைபெற்ற தேர்வினை 26 வழித்தட அலுவலர்கள், 21 ஆய்வு அலுவலர்கள், 21 பறக்கும் படை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/10-ஆம்-வகுப்பு-பொதுத்-தேர்வு--சிவகங்கை-மாவட்டத்தில்-18-ஆயிரம்-பேர்-பங்கேற்பு-3114114.html
3114113 மதுரை சிவகங்கை காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, March 15, 2019 08:03 AM +0530 பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சாயல் ராமு தலைமை வகித்தார். இதில் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், மாணவிகளை மிரட்டி ஆபாசப் படம் பிடித்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/காரைக்குடியில்-நாம்-தமிழர்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3114113.html
3114112 மதுரை சிவகங்கை அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலை கல்விக்கான தொடர்பு வகுப்புகள் தொடக்கம் DIN DIN Friday, March 15, 2019 08:03 AM +0530 காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தொடர்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.
பி.லிட்., தமிழ் முதல் பருவத்திற்கு  வரும் ஏப். 8, 9, 10 தேதிகளிலும், எம்.ஏ., தமிழ் முதல் பருவத்திற்கு வரும் ஏப். 17 முதல் 20 மற்றும் 21 தேதிகளிலும், அனைத்து பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ, பி.பி.ஏ (பேங்கிங்), பி.சி.ஏ வகுப்புகளுக்கான தமிழ் முதல் தாள் முதல் பருவத்திற்கு வரும் ஏப். 23 ஆம் தேதியிலும் காரைக்குடியில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு வகுப்புகள் நடை பெறும்.
பி.லிட்., தமிழ் 2 ஆம் பருவத்திற்கு வரும் ஏப். 1 முதல் 5 மற்றும் 8, 9, 10 ஆகிய தேதிகளிலும், எம்.ஏ., தமிழ் 2 ஆம் பருவத்திற்கு வரும் ஏப். 11 முதல் 13, 15, 16, 17, 20, 21 ஆகிய தேதிகளிலும், அனைத்து பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ (பேங்கிங்) பி சி ஏ , பி சி ஏ (எல்.இ ) தமிழ் முதல் தாள் 2 ஆம் பருவத்திற்கு வரும் ஏப். 22 ஆம் தேதியும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் காரைக்குடியில் உள்ள தொலை நிலைக் கல்வி இயக்ககத்தில் தொடர் வகுப்புகள் நடைபெறும்.
எம்.சி.ஏ, எம்.சி.ஏ (எல்.இ), பிஜிடிசிஏ முதல் மற்றும் 2 ஆம் பருவ மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் காரைக்குடியில் உள்ள கணினியியல் துறையில் வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரை தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை தூரக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/15/அழகப்பா-பல்கலைக்-கழக-தொலைநிலை-கல்விக்கான-தொடர்பு-வகுப்புகள்-தொடக்கம்-3114112.html
3113459 மதுரை சிவகங்கை திருக்கோஷ்டியூர் அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு DIN DIN Thursday, March 14, 2019 08:21 AM +0530 சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே நாய்கள் கூட்டத்தில் சிக்கிய புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சையளித்து புதன்கிழமை காட்டில் விட்டனர்.
    திருக்கோஷ்டியூர் அருகே ஜமீன்தார்பட்டியில் மண்மலைக்காட்டிலிருந்து வந்த சுமார் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் கிராமத்திற்குள் புகுந்து நாய்க் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டது. உடனடியாக கிராமத்தினர் வனச்சரக அலுவலர் ஞானப்பழத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அவரது அறிவுறுத்தலின் படி வனவர் என்.சம்பத்குமரன் மற்றும்  வனத்துறையினர் அக்கிராமத்திற்குச் சென்று வயல்வெளிப் பகுதியிலிருந்த மானை 1 மணி நேரம் போராடி மீட்டனர்.  உடனடியாக சரக்கு வாகனத்தின் மூலம் காயமடைந்த மானை அலவாக்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் மானை மண் மலைக்காட்டில் விட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/14/திருக்கோஷ்டியூர்-அருகே-நாய்களிடம்-சிக்கிய-புள்ளிமான்-மீட்பு-3113459.html
3113458 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் அருகே மாடித் தோட்டம், வீட்டுக் காய்கறி தோட்ட விளைச்சலில் அசத்தும் பெண்! DIN DIN Thursday, March 14, 2019 08:21 AM +0530 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செளமிய நாராயணபுரத்தில் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைத்து பெண் ஒருவர் அசத்தி வருகிறார்.
திருப்பத்தூர் அருகே உள்ள செளமியநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மதன்மோகன் மனைவி ஜீவகலா. இவர் தனக்குச் சொந்தமான 20 செண்ட் வீட்டில் மாடித்தோட்டம் மற்றும் காய்கறித் தோட்டம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் தோட்டக்கலைத்துறையை அணுகி காய்கறி விதைப் பொருள்களை 40 சதவிகிதம் மானியத்தில் வாங்கிப் பயிரிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இவர் தோட்டக்கலைத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனையின்படி தற்போது இல்லத்திற்குத் தேவைப்படும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, கீரைகள், முள்ளங்கி போன்ற 15 வகையான காய்கறிகளை எந்த ஒரு ரசாயன உரமும் பயன்படுத்தாமல் விளைவிக்கிறார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்ட தோட்டப் பயிர்களான வீரியஒட்டு பழ மரங்களான மாபசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரா, போன்ற மாமரங்களும் ஓவல் கிரிகெட்பால் போன்ற சப்போட்டா மரங்களும் தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது.  மேலும் அழகுச் செடிகளாக மட்டும் நெக்லஸ் வாழை, ஸ்பைக்கர்ஸ் மரம், செம்பருத்தி, ஹரிக்காபார்ம்ஸ், குரோட்டன்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட செடிகளை 300 ச.மீ.பரப்பளவில் வைத்துள்ளார். மேலும் 20 கண்ணாடித் தொட்டி குடுவையில் தோட்டப்பயிர்ச் செடிகளை நட்டு பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து ஜீவகலா கூறியது: கணவருடன் சேர்ந்து அதிகாலை தோட்ட வேலைகளை ஆர்வமுடன் செய்வது உடற்பயிற்சியாகவும், மனதுக்கு சந்தோஷத்தையும் தருகிறது. நகரத்தில் உள்ள பெண்கள் அனைவரும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/14/திருப்பத்தூர்-அருகே-மாடித்-தோட்டம்-வீட்டுக்-காய்கறி-தோட்ட-விளைச்சலில்-அசத்தும்-பெண்-3113458.html
3113457 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் அரசுப் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி DIN DIN Thursday, March 14, 2019 08:21 AM +0530 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் கராத்தே தற்காப்பு கலைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. 
  திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 26 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மாதம் 8 வகுப்புகள் கராத்தே தற்காப்பு பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அரசால் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாதம் நடைபெறும் இப்பயிற்சியில் 24 வகுப்புகள் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டு 5 கராத்தே பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதன்கிழமையன்று மா.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பழனியப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செல்லக்கண்ணு ஆகியோர் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். 
    இந்நிகழ்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர்ராவ், உதவி ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முனியம்மா, ஜலஜா ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/14/திருப்பத்தூர்-அரசுப்-பள்ளியில்-தற்காப்பு-கலைப்-பயிற்சி-3113457.html
3113456 மதுரை சிவகங்கை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:  சிவகங்கை மாவட்டத்தில் 18,770 பேர் எழுதுகின்றனர் DIN DIN Thursday, March 14, 2019 08:21 AM +0530 சிவகங்கை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கும் (மார்ச் 14) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 18 ஆயிரத்து 770 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 280 பள்ளிகளில் பயிலும் 9 ஆயிரத்து 310 மாணவர்களும், 9 ஆயிரத்து 460 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 770 பேர் 91 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 231 மாணவர்களும், 3 ஆயிரத்து 340 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 571 பேரும்,  தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 74 மாணவர்களும், 3 ஆயிரத்து 902 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 976 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 5 மாணவர்களும், 2 ஆயிரத்து 218 மாணவிகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 223 பேரும் தேர்வு எழுத உள்ளதாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/14/10-ஆம்-வகுப்பு-பொதுத்தேர்வு--சிவகங்கை-மாவட்டத்தில்-18770-பேர்-எழுதுகின்றனர்-3113456.html
3113455 மதுரை சிவகங்கை சிவகங்கை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தில் ஆய்வு DIN DIN Thursday, March 14, 2019 08:20 AM +0530 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையம் அமையவிருக்கும் காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டபேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப். 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசுப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகள், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள், அந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ள  பாதுகாப்பு ஏற்பாடுகள்,  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் பகுதி, முகவர்கள் பகுதி, பத்திரிகையாளர்களுக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் மானாமதுரை சட்டபேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த வாக்குகள் எண்ணும் பணியும் இங்கு நடைபெற உள்ளது. 
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் ஈஸ்வரி, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண், வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/14/சிவகங்கை-தொகுதிக்கான-வாக்குகள்-எண்ணும்-மையத்தில்-ஆய்வு-3113455.html
3112716 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் சிறப்புப் பள்ளி மாணவர்கள் திருச்சிக்கு கல்விச் சுற்றுலா DIN DIN Wednesday, March 13, 2019 07:34 AM +0530 சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் திருப்பத்தூர் வட்டார வளமையத்தைச் சேர்ந்த அரசு  சிறப்புப் பள்ளி மாணவர்கள் 60 பேர் செவ்வாய்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனர்.
திருப்பத்தூர் வட்டார வளமையத்தைச் சேர்ந்த எஸ்.வேலங்குடி, இளையாத்தங்குடி, பூலாங்குறிச்சி ஆகிய அரசு சிறப்புப் பள்ளிகளிலிருந்து 60 மாணவர்கள் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை அரசு சார்பில் ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் கோளரங்கம், விமான நிலையம், கல்லணை, கரிகாலன் மண்டபம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். 
சுற்றுலா ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் சசிகலா ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களுடன் பயிற்றுநர்கள் வினிதா, அய்யலு, ஜெபஸ்தீன், செல்லக்கண்ணு, ஜெயலெட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/திருப்பத்தூர்-சிறப்புப்-பள்ளி-மாணவர்கள்-திருச்சிக்கு-கல்விச்-சுற்றுலா-3112716.html
3112715 மதுரை சிவகங்கை தேவகோட்டையில் நூல் வெளியீடு DIN DIN Wednesday, March 13, 2019 07:33 AM +0530 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நூல் வெளியீடு மற்றும் வாசிப்பு அனுபவம் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
   தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் திண்டுக்கல் வெற்றிமொழி  இலக்கியக்கூடல் அமைப்பு இணைந்து நால்வர் கோயில் அருசோ நீலா நூலகத்தில்  இவ்விழாவை நடத்தின. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ச.ஆறுமுகம் ஊடிவயலார் தலைமை வகித்தார். கவிஞர் சிறுவை அமலன் எழுதிய  மண்டை ஓட்டில் ஒளிரும் தோட்டாக் கண்கள் என்ற நூலை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை பெ.ஆரோக்கியசாமி வெளியிட்டுப் பேசினார். நூல் வாசிப்பு அனுபவம் குறித்து மாணவர் கார்த்தி உரையாற்றினார். கவிஞர் மு.முருகேஷ், ஹைக்கூ கவிதைகளின் தோற்றம் வளர்ச்சிப்போக்கு பற்றியும், ஹைக்கூ கவிதையின் தோற்றுவாய் மற்றும் மகாகவி பாரதி குறித்து சிறப்புரையாற்றினார். நூலாசிரியர் சிறுவை அமலன் ஏற்புரையாற்றினார். 
தமிழ் இலக்கியப் பேரவை செயலாளர் ஈழம் மலர்மன்னன், திண்டுக்கல் வெற்றி மொழி இலக்கியக்கூடல் அமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் பித்தன், சகாய தயாநிதி, ஜெயசீலன், சகாய ஜோசப் சேவியர், ஆசிரியை காசில்டா குணசிலி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/தேவகோட்டையில்-நூல்-வெளியீடு-3112715.html
3112714 மதுரை சிவகங்கை மானாமதுரை தொகுதியில் அரசு விளம்பரப் பதாகைகள் அகற்றம் DIN DIN Wednesday, March 13, 2019 07:33 AM +0530 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதோடு, விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டன. 
மக்களவைத் தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மக்களவைத் தேர்தலுடன் காலியாகவுள்ள மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் உள்ள மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களுக்குள்பட்ட பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள், அரசு சாதனை விளம்பர பாதகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 
மேலும் நகர் மற்றும் கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் சார்பில் வரையப்பட்டிருந்த கட்சி சின்னங்களும் அழிக்கப்பட்டன. தேர்தல் பறக்கும்படையினர், சிறப்பு ரோந்துப் படையினர் அரசியல் கட்சியினரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் வாகனச் சோதனைகளையும் நடத்தி வருகின்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/மானாமதுரை-தொகுதியில்-அரசு-விளம்பரப்-பதாகைகள்-அகற்றம்-3112714.html
3112713 மதுரை சிவகங்கை அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி DIN DIN Wednesday, March 13, 2019 07:33 AM +0530 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு காளையார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் சகாயச் செல்வன் தலைமை வகித்தார். இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் சம்பந்தமான மாணவ, மாணவிகளின் கண்டுப்பிடிப்புகள் மற்றும் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. 
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/அரசுப்-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-3112713.html
3112712 மதுரை சிவகங்கை தேவகோட்டையில்  தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை DIN DIN Wednesday, March 13, 2019 07:32 AM +0530 தேவகோட்டையில்  பயிர்  காப்பீட்டுத்  திட்டத்தில் இழப்பீடுத் தொகை வழங்காததைக் கண்டித்து  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய விவசாயிகள் பூசலாகுடிதொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கியில்  பயிர் காப்பீடு  தொகையைச் செலுத்தியிருந்தனர்.
இக்கிராம விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்காததைக் கண்டித்து அக்கிராமத்தினர் மற்றும் உழவர் விடுதலை முன்னணி இயக்கத்தினர் தேவகோட்டையில் இயங்கி வரும் 
பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
வங்கி அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து  அனைவரும் கலைந்து  சென்றனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/தேவகோட்டையில்--தொடக்க--வேளாண்மை-கூட்டுறவு-சங்கம்-முற்றுகை-3112712.html
3112711 மதுரை சிவகங்கை வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத விவசாயி மீது வழக்கு மீது வழக்கு DIN DIN Wednesday, March 13, 2019 07:30 AM +0530 டிராக்டர் வாங்க வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத விவசாயி மீது சிவகங்கை நகர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம்  சொக்கநாதிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தவசு.விவசாயியான இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனக்குச் சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கடந்த 03.05.2005 ஆம் ஆண்டு ரூ.4 லட்சத்து 73ஆயிரம் பணத்தை பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். பின்னர் அவர் வாங்கிய கடனை கட்டவில்லையாம். மேலும் அவர் வங்கியில் அடமானமாக வைத்த நிலத்தையும் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்த வங்கி நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர்நீதமன்ற மதுரைக் கிளை தவசு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தவசு மீது சிவகங்கை நகர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/வங்கியில்-பெற்ற-கடனை-திரும்ப-செலுத்தாத-விவசாயி-மீது-வழக்கு-மீது-வழக்கு-3112711.html
3112710 மதுரை சிவகங்கை சிவன் கோயில் வார வழிபாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு DIN DIN Wednesday, March 13, 2019 07:29 AM +0530 தேவகோட்டை சிவன் கோயிலில் வாரம் தோறும் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற சேர்மன்  மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழணை நடைபெற்றது. 
தேவகோட்டை நகரச்சிவன் கோயிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக  ஜமீன்தார் சோமநாராயணன் செட்டியார் தலைமையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரவழிபாட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில்  தேவாரம், திருவாசகம், திருவிசைபா, திருபல்லாங்கு, பெரியபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி திருப்புகழ் என  தொடர்ந்து 52 வாரங்கள் நடைபெற்ற வாரவழிபாட்டுக் கூட்டத்தில் சேர்மன் மாணிக்க வாசக நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர்  கலந்து கொண்டனர். இதற்காக அந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/mar/13/சிவன்-கோயில்-வார-வழிபாட்டில்-பங்கேற்ற-மாணவர்களுக்கு-பாராட்டு-3112710.html