Dinamani - மதுரை - https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3099224 மதுரை மதுரை ஆரப்பாளையத்தில் பிப்ரவரி 20 மின்தடை DIN DIN Wednesday, February 20, 2019 06:15 AM +0530 மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (பிப். 20) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் தெற்கு மெட்ரோ செயற்பொறியாளர் (பொறுப்பு) எம்.ராஜாகாந்தி தெரிவித்துள்ளார். 
மின் தடைபடும் பகுதிகள்: கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, வெங்கலக்கடைத் தெரு, நேதாஜி சாலை, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறைப் பகுதி, வடக்கு வெளிவீதி தெற்குப் பகுதி, புட்டுத் தோப்புச் சாலை, சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் சாலை 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் சாலை, மேலப்பொன்னகரம் மெயின் சாலை, பொன்னகரம் ஒர்க்ஸ் ஷாப் சாலை, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்து, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் சாலை, ஸ்காட் சாலை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ் வரை, எல்ஐசி அலுவலகச் சாலை, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் சாலை, அய்யனார் கோயில் மெயின், அய்யனார் கோயில் 1, 2 மற்றும் 5 ஆவது தெரு, அய்யனார் கோயில் விசாலம், தாகூர் நகர் பகுதி, மகான் காந்திச் சாலை மேற்குப் பகுதி, அகிம்சாபுரம் மேலத்தெரு மற்றும் முதல் தெரு, அகிம்சாபுரம்  1 முதல் 8 தெரு விசாலம், முத்துராமலிங்கபுரம் 1, 2 தெருக்கள், இருதயராஜபுரம் தெரு.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/ஆரப்பாளையத்தில்-பிப்ரவரி-20-மின்தடை-3099224.html
3099223 மதுரை மதுரை கல்லூரியில் கணிதவியல் திறன் போட்டி DIN DIN Wednesday, February 20, 2019 06:14 AM +0530 உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதை கல்லூரி செயலர் மணிவளன் தொடக்கி வைத்தார். கல்லூரி இணை முதல்வர் மைக்கல் ஜான்பீட்டர் வாழ்த்துரை வழங்கினார். இதில் 13 கல்லூரிகளிலிருந்து 225 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
கணித விநாடி வினா உள்ளிட்ட 9 போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் திண்டுக்கல் ஜி.டி.என்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் பரிக்கான சுழற்கேடயத்தை பெற்றனர்.
2 ஆம் இடத்தை சிவகாசி  அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் பூவந்தி மீனாட்சி மகளிர் கல்லூரியும் பெற்றன. பரிசுகளை கல்லூரி முதல்வர் பேசில்சேவியர் வழங்கினார். 
போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதிபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/கல்லூரியில்-கணிதவியல்-திறன்-போட்டி-3099223.html
3099222 மதுரை மதுரை டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் இறுதி முடிவெடுக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் DIN DIN Wednesday, February 20, 2019 06:14 AM +0530 டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் விண்ணப்பங்கள் பெறலாம். ஆனால் இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ஜி.அசோகன், திண்டுக்கல்லைச் சேர்ந்த எம். மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னல்கள், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்ணாடி இழை கேபிள்கள் வழியாக கொண்டு  செல்லப்படுகின்றன. 
மாநிலம் முழுவதும் இதுவரை 32.37 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. தென்மாவட்டங்களில் மட்டும் 20 லட்சம் இணைப்புகள் உள்ளன. மாநிலம் முழுவதும் 16,359 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். 
நாங்கள் பல லட்சம் முதலீடு செய்து கேபிள் கட்டுப்பாட்டு அறை அமைத்து இணைப்புகள் வழங்கி வருகிறோம். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு முறையாக கட்டணமும் செலுத்தி வருகிறோம். 
இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்கனல் விநியோகம் செய்வதற்கான விநியோகஸ்தர்களை தேர்வு செய்ய முடிவு செய்து அதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில், இந்த டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலை, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கு டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 20-க்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் கேபிள் டிவி தொழிலில் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனால் பல லட்சம் முதலீடு செய்து கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் கேபிள் ஆபரேட்டர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.  டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் தேர்வுப் பணியில் விண்ணப்பங்கள் பெறலாம். ஆனால் இறுதி முடிவெடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக கேபிள் டிவி கார்ப்பொரேஷனின் நிர்வாக இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/டிஜிட்டல்-சிக்னல்-விநியோகஸ்தர்-தேர்வுப்-பணியில்-இறுதி-முடிவெடுக்கக்-கூடாது-உயர்நீதிமன்றம்-3099222.html
3099221 மதுரை மதுரை மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: விடுவிக்கக் கோரி முருகன் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு DIN DIN Wednesday, February 20, 2019 06:14 AM +0530 மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி  உதவிப் பேராசிரியர் முருகன் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய வழக்கில் நிர்மலா தேவி மீது வழக்கு தொடரப்பட்டு, அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், என் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட  நிர்மலா தேவி, என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதேபோல பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் வழக்கில் தொடர்புடைய யாரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. 
எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடன் சுமையால் தவித்து வருகிறோம்.
இந்நிலையில்,  என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, நான் தொடர்ந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 எனவே, மகிளா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மாணவிகளிடம்-பாலியல்-பேர-வழக்கு-விடுவிக்கக்-கோரி-முருகன்-தொடர்ந்த-வழக்கில்-சிபிசிஐடி-எஸ்பி-பதிலளிக-3099221.html
3099220 மதுரை மதுரை கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா: மண்டூக தீர்த்தத்தில் பெருமாள் எழுந்தருளல் DIN DIN Wednesday, February 20, 2019 06:13 AM +0530 அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் மாசி பெளர்ணமியையொட்டி தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அழகர்கோவில் அருகிலுள்ள பொய்கைக் கரைப்பட்டியில் மண்டூகதீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி பெளர்ணமியில் இங்கு தெப்பத் திருவிழா  நடைபெறும். 
இதையொட்டி இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சுந்தரராஜப்பெருமாள் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து காலையில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்கள் அமைத்து பக்தர்கள் வரவேற்றனர். 
பொய்கைக்கரைப்பட்டி கிராமத்துக்கு விஜயம் செய்த பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். 
 பின்னர் குளக்கரையில் வலம் வந்து கிழக்கு கரையில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபத்தில் காட்சியளித்தார். அங்கு பிற்பகல் வரை பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
   இதில் கள்ளழகர் கோவில் அலுவலர்கள் மற்றும் வெளியங்குன்றம் ஜமீன்தார் புலிக்கேசிபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் மீண்டும் குளக்கரையில் வலம் வந்து இரவு அழகர்கோவிலை வந்தடைந்தார். 
 அதிர்வெடிகள் முழக்க பொய்கைக்கரைப்பட்டியில் இருந்து பக்தர்கள் கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/கள்ளழகர்-கோயிலில்-தெப்பத்-திருவிழா-மண்டூக-தீர்த்தத்தில்-பெருமாள்-எழுந்தருளல்-3099220.html
3099219 மதுரை மதுரை இலவசமாக இசைக் கருவிகள் பெற நாட்டுப்புறக் கலைஞர்கள்  விண்ணப்பிக்கலாம் DIN DIN Wednesday, February 20, 2019 06:13 AM +0530 நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் இசைக் கருவிகள், ஆடை, ஆபரணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2017-2018 ஆம் ஆண்டுக்கான இலவச இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கப்பட உள்ளன. 
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள், இசைக் கருவிகள், ஆடை, ஆபரணங்களைப் பெற உதவி இயக்குநர், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/இலவசமாக-இசைக்-கருவிகள்-பெற-நாட்டுப்புறக்-கலைஞர்கள்-விண்ணப்பிக்கலாம்-3099219.html
3099218 மதுரை மதுரை  ரூ.4.5 லட்சம் தங்க நகைகள் திருட்டு DIN DIN Wednesday, February 20, 2019 06:13 AM +0530 மதுரையில் மெருகுப் போடும் கடையின் ஊழியர், மெருகுப் போடுவதற்காக கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை திங்கள்கிழமை திருடிச் சென்றார். 
மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டம் துர்காபூரை சேர்ந்தவர் சபிக்குல் (30). இவர் மதுரை தெற்கு மாசி வீதி பச்சரிக்காரத் தெருவில் தங்க நகைகளுக்கு மெருகுபோடும் கடை  நடத்தி வருகிறார். 
இவரிடம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது அஹத் ஹாசி(19)  என்பவர் அண்மையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில்,  கடையில் வேலை செய்யும் மற்றொருவரான இதீரீஸ் சர்தார் என்பவரைக் காபி வாங்கி வரச் சொல்லி வெளியில் அனுப்பிவிட்டு, மெருகுப் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த  ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 400 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டார்.  
இதுகுறித்து சபிக்குல் கொடுத்த புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸார் முகமது அஹத் ஹாசி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/ரூ45-லட்சம்-தங்க-நகைகள்-திருட்டு-3099218.html
3099217 மதுரை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு DIN DIN Wednesday, February 20, 2019 06:12 AM +0530 மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கணிதம் மற்றும் கணித அறிவியல் துறைகள் சார்பில் கணிதம் மற்றும் கணித்தலின் நவீன வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. 
இதில் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்து பேசியது: தமிழ், ஆங்கிலம் போலவே கணிதமும் ஒரு மொழி, அது தர்க்கவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் சக்தி வாய்ந்தது. 
பல்வேறு துறைகளின்  கூட்டு ஆராய்ச்சி மூலம் துறைகளுக்கு இடையே உள்ள எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்த இயலும் என்றார்.
பிரிட்டனில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக் கழக கணிதத் துறை பேராசிரியர் கே.ஜி.சுப்ரமணியன் சிறப்புரையில் பேசும் போது, கணிதம் மற்றும் கணினிஅறிவியலின் தொடர்புபடுத்துவதற்கான முதுகெலும்பாக கோட்பாட்டு கணினி அறிவியல் திகழ்கிறது. கணினி அறிவியலின் ஒரு பிரிவாகிய கிரிப்டோகிராபியில் கணிதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வில் கொழும்பு கணிதம் மற்றும் மேலாண்மை கல்லூரியைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டபிள்யூ.ஜி.எஸ்.கொனரசிங்கே மூலதன சந்தை முதலீட்டுக்கான சமா வட்ட மாதிரி குறித்து விரிவுரையாற்றினார்.
தாய்லாந்து பயாப் பல்கலைக் கழக பேராசிரியர் ராபர்ட் பாட்சிங்கர் தரவுப் பகுப்பாய்வில் நவீன போக்குகள் குறித்து பேசினார். 
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் சோனாஜாரியா மின்ஸ் ஸ்பேஷில் கம்யூட்டிங் மற்றும் சவால்கள் குறித்து பேசினார்.
இதில் சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்பட வெளிநாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக கல்லூரியின் கணிதவியல் துறைத் தலைவர் நிர்மலா ரெபெக்கா பால் வரவேற்றார்.  கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜெயச்சந்திரா நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/டோக்-பெருமாட்டி-கல்லூரியில்-சர்வதேச-கருத்தரங்கு-3099217.html
3099216 மதுரை மதுரை உசிலம்பட்டி அருகே பைக் மீது கார் மோதி முதியவர் சாவு DIN DIN Wednesday, February 20, 2019 06:12 AM +0530 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
 உசிலம்பட்டி அருகே ஆரியப்பட்டியை சேர்ந்த வீரணத்தேவர் மகன் பெருமாள் தேவர் (65). இவர் உசிலம்பட்டியிருந்து இரு சக்கர வாகனத்தில்  ஆரியப்பட்டிக்கு மதுரை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
 அப்போது, ஆரியப்பட்டி விலக்கு அருகே தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த பெருமாள்தேவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/உசிலம்பட்டி-அருகே-பைக்-மீது-கார்-மோதி-முதியவர்-சாவு-3099216.html
3099215 மதுரை மதுரை அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் DIN DIN Wednesday, February 20, 2019 06:12 AM +0530 பாஜக, பாமகவைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 71ஆவது பிறந்த நாள் விழா குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் மேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: சில நாள்களில் இந்த ஆட்சி போய்விடும் எனக்கூறி 18 எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்றவர்கள் இன்று கரைந்து கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அதிமுக அரசு எப்படி உருவாக்கி வழிநடத்திச் செல்லப்பட்டதோ அதே வழியில் இரண்டரை ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. அதிமுகவின் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டுள்ளனர். 
கட்சியும், ஆட்சியும் மக்கள் நம்பிக்கையையும் சக்தியையும் பெற்றுள்ளதால் பாஜகவும், பாமகவும் அதிமுக கூட்டணியை முடிவு செய்துள்ளனர். மேலும் பலர் கூட்டணிக்கான பேச்சுவார்தையில் உள்ளனர். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக உள்ளதால் மக்களுக்கு ரூ.6,000 உடன் தற்போது மேலும் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் பல நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.
திமுக மீது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இப்போதும் அப்படியே மக்கள் மனதில் உள்ளது. கமலஹாசனை பார்த்து கிராம சபைக் கூட்டம் நடத்தும் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றத்தில் பழங்குடியினர் ஒதுக்கீட்டின்பேரில் தடைபெற்றதே தேர்தலுக்கு தடையாக உள்ளது. அதிமுக கூட்டணி நூறு சதம் வெற்றிப் பெறும் என்றார்.
வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது: தமிழக அரசு மீதான ஊழல் புகார்களை மக்கள் நம்பவில்லை. திமுகவினர் மீது கூறப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் மக்கள் மறக்கவே இல்லை என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/அதிமுக-கூட்டணியில்-மேலும்-சில-கட்சிகள்-இணையும்--அமைச்சர்-கேஏசெங்கோட்டையன்-3099215.html
3099214 மதுரை மதுரை ஜெயலலிதா பிறந்த நாள் விழா: மேலூரில் அதிமுக ஆலோசனை DIN DIN Wednesday, February 20, 2019 06:11 AM +0530 மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் மேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், சி. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
,இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த, மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா பேசியது: ஜெயலலிதா பிறந்த நாளில் அனைத்து கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் அதிமுக கொடிகளை புதுப்பித்து அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஏற்றவேண்டும். அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி, இயன்ற அளவில் ஏழை, எளிவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  மதுரை தொகுதி அதிமுக கோட்டை என்பதை நிரூபித்து, மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகளை மேலூர் பெற்றுத் தரவேண்டும் என்றார். 
முன்னதாக மேலூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் வரவேற்றார். மதுரை கிழக்கு முன்னாள் எம்.எல்.ஏ. க.தமிழரசன் முன்னிலை வகித்தார். இதில் மேலூர் ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி, நகரச் செயலர் பாஸ்கரன், கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலர் வெற்றிச் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/ஜெயலலிதா-பிறந்த-நாள்-விழா-மேலூரில்-அதிமுக-ஆலோசனை-3099214.html
3099213 மதுரை மதுரை மறியல்: தேவர் பேரவையினர் 186 பேர் கைது DIN DIN Wednesday, February 20, 2019 06:11 AM +0530 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினர் 186 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவது,  திருச்சி விமான நிலையத்துக்கு மருதுபாண்டியர்கள் பெயரைச் சூட்டுவது, கள்ளர், மறவர், அகமுடையர் உள்ளிட்ட சமூகங்களை ஒருங்கிணைத்து 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் மாநிலத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார்.  அண்ணா  பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த பேரவையினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 186 பேரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மறியல்-தேவர்-பேரவையினர்-186-பேர்-கைது-3099213.html
3099212 மதுரை மதுரை மதுரையில் அடகுக் கடையில்  1,500 பவுன் நகைகள் திருட்டு DIN DIN Wednesday, February 20, 2019 06:11 AM +0530 மதுரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடகுக் கடையின் பூட்டை உடைத்து இரும்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 1,500 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
  மதுரை நரிமேடு கட்டபொம்மன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருபவர் கோபிநாத் (61).  கட்டடத்தின் முன்பகுதியை  அடகுக் கடையாகவும், பின்பகுதியைக் வசிப்பிடமாகவும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த அடகுக் கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்பேர் வருவது வழக்கம்.
  இந்நிலையில், அண்மையில் அடகுக் கடையின் பின்பகுதியில் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு அடுத்த தெருவுக்கு கோபிநாத் குடியேறியுள்ளார். அதையடுத்து  அடகுக் கடை மட்டும் அங்கு செயல்பட்டு வந்தது.  தினமும் காலை 10 மணிக்கு கோபிநாத் அடகுக் கடையைத் திறப்பது வழக்கம். இரவு 8 மணி வரை கடை செயல்பட்டு வந்தது. இந்த அடகுக் கடையில் இரு பெண்கள் வேலைக்கு உள்ளனர்.
 இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை  கோபிநாத் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதனால் காலை 11 மணியளவில் கோபிநாத்தின் மகன் கதிரேசன் அடகுக் கடையை திறக்கச் சென்றுள்ளார். அப்போது முன்பகுதி இரும்பு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது அடுத்தடுத்த கதவுகளில் இருந்த பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன.
 அதேபோல, அடகு பிடிக்கப்பட்ட நகைகள் தனி அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் கதவுகளையும் உடைத்த திருடர்கள், உள்ளே பெட்டகத்தில் இருந்த நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். தல்லாகுளம் உதவி ஆணையர் கே.அசோகன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.    திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு மேல் அடகுக் கடைக்கு வந்த திருடர்கள், எதிரே உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து,  காட்சிகள் பதிவாகாத வகையில் அதை கீழ்நோக்கி திருப்பியுள்ளனர்.  பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலமாக அடகுக் கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
 இந்த கடையில் முன்பக்க இரும்பு கிரில் கதவு முதல், நகைகள் பாதுகாக்கப்பட்ட பெட்டகம் இருந்த அறை வரை 15 பூட்டுகள் வெல்டிங் இயந்திரத்தின் மூலம் வெட்டி உடைக்கப்பட்டுள்ளன. 
 அடகுக் கடை செயல்பட்டு வந்த கட்டபொம்மன் வீதியில் ஏராளமான வீடுகள் இருந்தபோதும்,  நள்ளிரவு நேரம் என்பதால் திருட்டு நடந்தது அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவில்லை. அதோடு, அடகுக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  இச்சம்பவம் குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
  அடகுக் கடை திருட்டு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, ஆரம்பத்தில் 1,500 பவுன் நகைகள் திருட்டு போனது எனக் கூறியதை போலீஸார் நம்பவில்லையாம். பின்னர் அடகுக் கடையில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்று காண்பித்த பிறகே போலீஸார் விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர்.
 தனிப்படை அமைப்பு...சம்பவம் நடந்த இடத்தை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் இத் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைத்து, மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மதுரையில்-அடகுக்-கடையில்--1500-பவுன்-நகைகள்-திருட்டு-3099212.html
3099210 மதுரை மதுரை மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்: காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு DIN DIN Wednesday, February 20, 2019 06:10 AM +0530 மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திங்கள்கிழமை பேசினார்.
மதுரை குயின் மிரா சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி இயக்குநர் அபிநாத் சந்திரன் தலைமை வகித்தார். 
பள்ளி முதல்வர் சுஜாதா குப்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசியது: மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வாழ்க்கைக்கு அவசியம். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். மாணவர்கள் தங்களை தாங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். கல்விக்கு அப்பாற்பட்டு நூல் வாசித்தலையும்  மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.  
நேர மேலாண்மையே மனித வாழ்வின் வெற்றிக்கு அடிகோல். எனவே காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் உணரவேண்டும். 
நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதையும் மாணவர்கள் உணர்ந்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றார். 
தொடர்ந்து மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மாணவர்கள்-நேர-மேலாண்மையை-கடைப்பிடிக்க-வேண்டும்-காவல்-துணை-ஆணையர்-திருநாவுக்கரசு-3099210.html
3099209 மதுரை மதுரை பராமரிப்புப் பணிகள்: மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த முடியாது DIN DIN Wednesday, February 20, 2019 06:09 AM +0530 மதுரை மண்டல மின்வாரியத்தில் கணினி சர்வர் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் பிப்ரவரி 23 முதல் 25 ஆம் தேதி வரை மின்கட்டணத்தை இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி மூலமாக செலுத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மதுரை பெருநகர் மின்பகிர்பான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.வெண்ணிலா செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு மின்வாரிய மதுரை மண்டலத்தில் கணினி சர்வர் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் பிப்ரவரி 23 முதல் 25 ஆம் தேதி வரை மின்கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசி மூலமாகவோ செலுத்த இயலாது. பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னர் வழக்கம்போல கணினி இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி மூலமாக செலுத்தலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/பராமரிப்புப்-பணிகள்-மின்-கட்டணத்தை-இணையதளம்-மூலம்-செலுத்த-முடியாது-3099209.html
3099208 மதுரை மதுரை சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட  200 கிராம் தங்க வளையல்கள் பறிமுதல் DIN DIN Wednesday, February 20, 2019 06:09 AM +0530 சிங்கப்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 .70 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க வளையல்களை சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனையிட்டனர். 
அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மீனாட்சி சுந்தரம்(45) கைப்பையில் மறைத்து வைத்திருந்த தலா 50 கிராம் எடையுள்ள 4 வளையல்களை(200 கிராம்) பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து, 69 ஆயிரத்து 400. இது குறித்து சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/சிங்கப்பூரிலிருந்து-கடத்திவரப்பட்ட--200-கிராம்-தங்க-வளையல்கள்-பறிமுதல்-3099208.html
3099207 மதுரை மதுரை மாநில அளவிலான கலைப் போட்டிகள்: தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி சாம்பியன் DIN DIN Wednesday, February 20, 2019 06:09 AM +0530 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில்  நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கலை நூரூல் இஸ்லாம் கல்லூரி வென்றது. 
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் மாநில அளவிலான கலை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து பேசினார். காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர் நாகேந்திரன்  வரவேற்றார்.
காட்சி தொடர்பியல் துறை தலைவர் டி. சைலஜா, பேராசிரியர் சங்கரி,  பேராசிரியர் மோசஸ், பேராசிரியர் இதியோன், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திரைப்பட இயக்குநர் அமீர் கலைவிழாவை தொடக்கி வைத்து  பேசியது:  திரைத்துறையில் சுலபமாக சாதிக்க முடியாது.  நிறைய கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். நான் இயக்கிய ராம் திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் விருது கிடைத்தும் ஊக்குவிக்க யாரும் முன் வரவில்லை. எனவே மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்றால் தொடர் முயற்சி வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. அவ்வாறு முயன்றால் நீங்கள் வெற்றி பெறலாம் என்றார். 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலைவிழாவில், குறும்படம், புகைப்பட போட்டி, மைம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கலைவிழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை நாகர்கோவில் தக்கலை நூரூல் இஸ்லாம் கல்லூரியும்,  திருச்சி தந்தை பெரியார் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன. கலை விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து  22 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மாநில-அளவிலான-கலைப்-போட்டிகள்-தக்கலை-நூருல்-இஸ்லாம்-கல்லூரி-சாம்பியன்-3099207.html
3099206 மதுரை மதுரை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு கல்லூரியில் அஞ்சலி DIN DIN Wednesday, February 20, 2019 06:08 AM +0530 காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  பசுமலை செளராஷ்டிரா கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினர். 
இந் நிகழ்ச்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் வி.ஜி.ராமதாஸ் தலைமை வகித்தார். இதில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என 2,500 -க்கும் மேற்பட்டோர் கல்லூரி மைதானத்தில் ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மெளன அஞ்சலி  செலுத்தினர். நிகழ்வில் செயலர் குமரேஷ், பொருளாளர் எஸ்.ஜெ.குமரேஷ், முதல்வர் ராமலிங்கம், உடற்கல்வி இயக்குநர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/தீவிரவாத-தாக்குதலில்-உயிரிழந்த-வீரர்களுக்கு-கல்லூரியில்-அஞ்சலி-3099206.html
3099205 மதுரை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி DIN DIN Wednesday, February 20, 2019 06:08 AM +0530 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் உபகோயில்  பணியாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
இதற்கு கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர்.வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர்.  இதில் தீயின் வகைகள், அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது, ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீயின் தன்மைக்கேற்ப கார்பன் டை ஆக்சைடு, நுரை, பவுடர் கொண்டு இயங்கும் தீயணைப்பான்கள் ஈர சாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. 
பயிற்சியில் கோயில், உபகோயில் பணியாளர்கள், மதனகோபால சுவாமி கோயில், தண்டாயுதபாணி சுவாமி கோயில், தென்கரை மூலநாதசுவாமி கோயில், தாடிக்கொம்பு சௌந்தர பெருமாள் கோயில், திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/மீனாட்சி-சுந்தரேசுவரர்-கோயிலில்-பணியாளர்களுக்கு-தீத்தடுப்பு-பயிற்சி-3099205.html
3099204 மதுரை மதுரை அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்: பிஎப் அலுவலகங்களில் உதவி மையம் திறப்பு DIN DIN Wednesday, February 20, 2019 06:08 AM +0530 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்ய வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து மதுரை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் என்.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி:
வீட்டுவேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தெருவியாபாரிகள், செங்கல் சூளை தொழிலாளர்கள்,  காலணி தைக்கும் தொழிலாளர்கள், கட்டட வேலை செய்வோர், பீடி தொழிலாளர் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் இத் திட்டத்தில் சேரலாம். மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்கும் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இத் திட்டத்தில் சேரலாம். திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் அவரவர் வயதுக்கு ஏற்ப சிறு தொகையை மாதாந்திரச் சந்தாவாக செலுத்தி, 60 வயதுக்குப் பிறகு நிலையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் பெற முடியும்.
  உறுப்பினர் செலுத்தும் சந்தாவுக்கு இணையான தொகையை மத்திய அரசும் தனது பங்களிப்பாகச் செலுத்தும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படும்.
  இத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் இறப்புக்குப் பிறகு, அவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். முறையாகச் சந்தா செலுத்தும் உறுப்பினர் 60 வயதுக்கு முன்பு இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினர்  இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்தலாம். 
 அமைப்புசாரா தொழிலாளர்களை இத் திட்டத்தில் சேர்க்க மதுரை மண்ட வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, திண்டுக்கல், சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள வருங்கால வைப்புநிதி மாவட்ட அலுவலகங்களில் சேவை மையம் செயல்படுகிறது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/அமைப்புசாரா-தொழிலாளர்-ஓய்வூதியத்-திட்டம்-பிஎப்-அலுவலகங்களில்-உதவி-மையம்-திறப்பு-3099204.html
3099203 மதுரை மதுரை யானைமலையில் கஜேந்திர மோட்ச திருவிழா DIN DIN Wednesday, February 20, 2019 06:07 AM +0530 மதுரை அருகிலுள்ள ஒத்தக்கடை யானைமலையடிவாரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயிலில் கஜேந்திர மோட்சம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் காளமேகப் பெருமாள் செவ்வாய்க்கிழமை காலை பல்லக்கில் புறப்பட்டார். ஒத்தக்கடையில் திருக்கண் மண்டபங்கள் அமைத்து பெருமாளுக்கு பக்தர்கள்   வரவேற்பளித்தனர். 
இரவு நரசிங்கத்திலுள்ள யோகநரசிம்மர் கோயிலில் காளமேகப் பெருமாள் எழுந்தருளி, மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். 
இதையடுத்து, தைலக் காப்பு உற்சவம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், நள்ளிரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம் நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையில் கருடவாகனத்தில் புறப்பாடாகி திருமோகூரிலுள்ள கோயிலுக்கு பெருமாள் திரும்புகிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/யானைமலையில்-கஜேந்திர-மோட்ச-திருவிழா-3099203.html
3099202 மதுரை மதுரை வருங்கால வைப்பு நிதியில் கையாடல்: கோயில் கணக்கர் கைது DIN DIN Wednesday, February 20, 2019 06:07 AM +0530 மதுரை கூடலழகர் கோயில் பணியாளர்களின்,  வருங்கால வைப்பு நிதியில் ரூ.2.89 லட்சம் கையாடல் செய்த கோயில் கணக்கரை போலீஸார்  திங்கள்கிழமை  கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள பரவை சரவணன் நகரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சபரிநாதன்(32). இவர் கூடலழகர் கோயிலில் கணக்கராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  சபரிநாதன் கோயில் பணியாளர்களின்  வருங்கால  வைப்பு நிதியில் வரவு வைப்பதற்காகப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பங்குத் தொகை மற்றும் கோயில் நிர்வாகப் பங்குத் தொகையை முறையாக வரவு வைக்காதது தெரியவந்தது.  
இதுகுறித்து பணியாளர்கள் கோயிலின் செயல் அலுவலர் அனிதாவிடம் புகார் தெரிவித்தனர்.  அவர் நடத்திய விசாரணையில், சபரிநாதன் கோயில் பணியாளர்களின் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து சபரிநாதனிடம் இருந்து கையாடல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 813 வசூலிக்கப்பட்டு கோயில் பெயரில் வரவு வைக்கப்பட்டது. 
காசோலையை தவறாக பயன்படுத்தியும், போலியான கடிதம் தயார் செய்தும் மோசடி செய்த சபரிநாதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி செயல் அலுவலர்அனிதா, போலீஸாரிடம் திங்கள்கிழமை  புகார் அளித்தார். இதன் பேரில், திடீர்நகர் போலீஸார் சபரிநாதன் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/20/வருங்கால-வைப்பு-நிதியில்-கையாடல்-கோயில்-கணக்கர்-கைது-3099202.html
3098711 மதுரை மதுரை போலியோ சொட்டு மருந்து முகாம்களை முறையாக நடத்தக்கோரி வழக்கு DIN DIN Tuesday, February 19, 2019 08:16 AM +0530 நாடு முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை நடத்தக் கோரும் வழக்கில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ஜானசிராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் 2009ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த மக்கள்தொகை,  தற்போது 130 கோடியாக அதிகரித்துள்ளது. இதில்,  18 வயதுக்குகீழ் 32 கோடி இளைஞர்கள் உள்ளனர்.
இந்தியாவில் போலியோவால் குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்படைந்து வந்தனர். ஒருமுறை இந்நோயால் பாதிக்கப்பட்டால் ஆயுள் முழுமைக்கும் மாற்றுத்திறனாளியாக வாழும் கொடும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இது.  அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போலியோ இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
இந்தியாவில் 1995ஆம் ஆண்டில் இருந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு குறைந்தது 3 முறை போலியோ சொட்டு மருந்து, 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இன்னும் போலியோ பாதிப்பு இல்லாத நாடாக  இந்தியா அறிவிக்கப்படவில்லை. எனவே, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை முறையாக நடத்த வேண்டும். மேலும் வருங்காலங்களில் நாடு முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப். 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/போலியோ-சொட்டு-மருந்து-முகாம்களை-முறையாக-நடத்தக்கோரி-வழக்கு-3098711.html
3098717 மதுரை மதுரை தம்பதி மீது  கார் மோதல்: கணவர் சாவு DIN DIN Tuesday, February 19, 2019 08:14 AM +0530 மதுரை அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த தம்பதி மீது கார் ஏறியதில் கணவர் உயிரிழந்தார்.
மதுரை அருகே உள்ள திருநகர் ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் பாபு (42). இவரும் இவரது மனைவி சுந்தரியும், மதுரையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைப் பார்த்து வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு வேலை முடிந்தபின்பு, பாபு தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹார்விபட்டி நோக்கிச் சென்றார். பழங்காநத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பைக்காராவைச் சேர்ந்த அமீர் ஜகான் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், தம்பதி இருவரும் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். 
அப்போது திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த இமானுவேல் ஓட்டிவந்த கார் அவர்கள் மீது ஏறியது. இதில் பலத்த 
காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபு திங்கள்கிழமை உயிரிழந்தார். போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/தம்பதி-மீது--கார்-மோதல்-கணவர்-சாவு-3098717.html
3098716 மதுரை மதுரை போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது DIN DIN Tuesday, February 19, 2019 08:14 AM +0530 திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர். 
திருமங்கலத்தை அடுத்த மைக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் முத்துக்குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/போக்சோ-சட்டத்தில்-இளைஞர்-கைது-3098716.html
3098715 மதுரை மதுரை மதிமுகவினர் இனிப்பு வழங்கல் DIN DIN Tuesday, February 19, 2019 08:14 AM +0530 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை  விதித்ததையடுத்து திருப்பரங்குன்றத்தில் மதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
திருப்பரங்குன்றம் 16 கால்  மண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்புச் செயலர் அழகுசுந்தரம், பகுதிச் செயலர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச் செயலர்கள் பாண்டி, அழகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மதிமுகவினர்-இனிப்பு-வழங்கல்-3098715.html
3098714 மதுரை மதுரை நான்கு வழிச்சாலையில் விபத்து: ஓய்வு பெற்ற அதிகாரி சாவு DIN DIN Tuesday, February 19, 2019 08:14 AM +0530 மேலூர்-மதுரை இடையே திங்கள்கிழமை நான்கு வழிச் சாலையில் சாலைத் தடுப்பைக் கடந்து மறுபக்கம் சென்ற கார் மீது  லாரி மோதியதில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வைரப்பன் (60), இவரது நண்பர்களான, குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற விஜயகுமார் (59), சண்முகம் (60) ஆகியோர் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் திங்கள்கிழமை மாலை வந்துகொண்டிருந்தனர். 
மேலூர்- மதுரை இடையே உள்ள நரசிங்கம்பட்டி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பைக் கடந்து மறுபக்கம் பாய்ந்தது. அப்போது மதுரையிலிருந்து மேலூர் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது. இதில், வைரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயகுமார், சண்முகம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். 
இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக் குறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/நான்கு-வழிச்சாலையில்-விபத்து-ஓய்வு-பெற்ற-அதிகாரி-சாவு-3098714.html
3098712 மதுரை மதுரை சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலி: காமராஜர் பல்கலை.யில் அஞ்சலி DIN DIN Tuesday, February 19, 2019 08:13 AM +0530 காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்து வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் கே.சின்னையா, டீன் நல்லகாமன், தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ரவி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
பல்கலைக்கழக கல்லூரி: மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.ஜார்ஜ் தலைமை வகித்து வீரர்களின் படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரைக்கல்லூரியில்...: மதுரைக்கல்லூரியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்து அஞ்சலி செலுத்தினார். கல்லூரி வாரிய உறுப்பினர் இல.அமுதன் மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/சிஆர்பிஎஃப்-வீரர்கள்-40-பேர்-பலி-காமராஜர்-பல்கலையில்-அஞ்சலி-3098712.html
3098710 மதுரை மதுரை கடைகளில் பெயரளவில் கண்காணிப்பு கேமராக்கள்: ஆய்வு செய்ய காவல்துறை குழு அமைக்க முடிவு DIN DIN Tuesday, February 19, 2019 08:12 AM +0530 மதுரையில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநகர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் அவசியம்  குறித்த விழிப்புணர்வு  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய வளாகத்தில்  நடைபெற்றது. இதில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 
அவர்களிடம் வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) பொருத்துவதன் அவசியம் குறித்து, மதுரை மாநகரக் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் த.செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அறிவுறுத்தினர்.  
மேலும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிச்செல்லும் சம்பவங்களை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும், காவலன் செயலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.  
இதுகுறித்து மாநகரக் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் த.செந்தில்குமார் கூறியது: பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பெயரளவிற்கு மட்டுமே வைக்கப்படுகின்றன. தரமான கேமராக்கள் பொருத்தப்படுவது இல்லை. 
கேமராக்கள் கடையை மட்டுமே படம்பிடிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. கடையின் வெளிப்புறம் மற்றும் சாலை தெரியும்படியாக கேமராக்களை அமைக்கவேண்டும். 4 ஜி.பி. அளவுக்கு பதிவுகளை சேமிக்கும் கருவியை அமைக்க வேண்டும். முறையாக, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டால், குற்றச்சம்பங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும். குற்றச்சம்பவங்கள் நடப்பதும் அறவே குறைந்துவிடும். 
போலீஸ் குழுக்கள் அமைத்து மாநகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்படும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/கடைகளில்-பெயரளவில்-கண்காணிப்பு-கேமராக்கள்-ஆய்வு-செய்ய-காவல்துறை-குழு-அமைக்க-முடிவு-3098710.html
3098708 மதுரை மதுரை ரூ. 2 ஆயிரம் பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை 5 கிராம மக்கள் முற்றுகை DIN DIN Tuesday, February 19, 2019 08:12 AM +0530 தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின்படி,  பயனாளிகள் பெயர், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மகளிர் திட்டத்தைச் சேர்ந்த களப் பணியாளர்கள்,  அனைத்துக் கிராமங்களிலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று பயனாளிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்,  ஆதார் எண்,  வங்கி சேமிப்புக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதற்கிடையே,  பயனாளிகள் பட்டியலில் தகுதியானவர்களின் பலரும் விடுபட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
 இந்நிலையில்,  யா.ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம், உசிலம்பட்டி அருகே உள்ள புல்லுக்குட்டிநாயக்கன்பட்டி, டி.கிருஷ்ணாபுரம்,  வாடிப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம், காஞ்சரம்பேட்டை அருகே உள்ள சில்லுப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தாங்கள் கூலிவேலை செய்து வருவதாகவும்,  குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்தபோதும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/ரூ-2-ஆயிரம்-பெறும்-பயனாளிகள்-பட்டியலில்-சேர்க்கக்கோரி-ஆட்சியர்-அலுவலகத்தை-5-கிராம-மக்கள்-முற்றுகை-3098708.html
3098707 மதுரை மதுரை மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் 38,541 மாணவ, மாணவிகள் DIN DIN Tuesday, February 19, 2019 08:12 AM +0530 தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 309 பள்ளிகளைச் சேர்ந்த 38,541 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர், மதுரை, திருமங்கலம் ஆகிய  நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 42 பள்ளிகளில் இருந்து  2,504 மாணவர்கள், 2,329 மாணவிகள் என 4,833 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளைச் சேர்ந்த 5,581 மாணவர்கள், 6,455 மாணவிகள் என மொத்தம் 12,036 பேர் தேர்வு எழுதுகின்றனர். 
மதுரை கல்வி மாவட்டத்தில் 80 பள்ளிகளில் இருந்து 5,868 மாணவர்களும், 6,798 மாணவிகள் என மொத்தம் 12,666 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 77 பள்ளிகளில் 4,508 மாணவர்கள், 4,498 மாணவிகள் என மொத்தம் 9,006 பேர் தேர்வு எழுதுகின்றனர். 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 38,541 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு: பிளஸ் 1 பொதுத்தேர்வில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 43 பள்ளிகளில் இருந்து  2,247 மாணவர்கள், 2,201 மாணவிகள் என 4,448 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலூர் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளைச் சேர்ந்த 5,117 மாணவர்கள், 6,127 மாணவிகள் என மொத்தம் 11,244 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மதுரை கல்வி மாவட்டத்தில் 81 பள்ளிகளில் இருந்து 5,474 மாணவர்களும், 6,604 மாணவிகள் என மொத்தம் 12,078 பேர் தேர்வு எழுதுகின்றனர். 
திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 79 பள்ளிகளில் 4,251 மாணவர்கள், 6,604 மாணவிகள் என மொத்தம் 8,523 பேர் தேர்வு எழுதுகின்றனர். 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 316 பள்ளிகளில் இருந்து 17,089 மாணவர்கள், 19,204 மாணவியர் என மொத்தம் 36,293 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மதுரை-மாவட்டத்தில்-பிளஸ்-2-பொதுத்தேர்வுக்கு-தயாராகும்-38541-மாணவ-மாணவிகள்-3098707.html
3098706 மதுரை மதுரை மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் ஊதிய விவகாரம்:  ஆட்சியர் அலுவலகத்தை வி.சி.க. முற்றுகை DIN DIN Tuesday, February 19, 2019 08:11 AM +0530 மதுரை மாநகராட்சி துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணி, டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி அளிக்கும் ஊதியம், ஒப்பந்த நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்நிறுவனம் ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை என்று ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், மாநகராட்சி வழங்கும் ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்துவது, ஒப்பந்தாரர் மூலம் வழங்கும் நடைமுறையை நீக்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என எச்சரித்தனர். 
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை அமைதிப்படுத்திய போலீஸார், குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மாநகராட்சி-ஒப்பந்தப்-பணியாளர்-ஊதிய-விவகாரம்-ஆட்சியர்-அலுவலகத்தை-விசிக-முற்றுகை-3098706.html
3098704 மதுரை மதுரை பிஎஸ்என்எல் ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம் DIN DIN Tuesday, February 19, 2019 08:11 AM +0530 பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு கோபுரங்கள் பராமரிப்பை அயல் ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கக்கூடாது. பிஎஸ்என்எல்  நிறுவனம் வங்கிக் கடன் பெறுவதற்கு தேவையான உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும். நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும். இரண்டாவது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரையை அமலாக்க வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியப் பங்களிப்பை பெறவேண்டும். 
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு  4 ஜி அலைக்கற்றையை உடனடியாக  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர் சங்கங்கள் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. 
 அதன்படி திங்கள்கிழமை வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 1, 200 பேர் பங்கேற்றனர்.
 வேலை நிறுத்தத்தையொட்டி தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஜி.ராஜேந்திரன் (என்எப்டிஇ) தலைமை வகித்தார். ஜி.செல்வின் சத்தியராஜ் (பிஎஸ்என்எல்இயு),  நாகராஜன் (எஎன்இஏ ), சந்திரசேகரன் (ஏஐபிஎஸ்என்எல்இஏ), ஜி.அன்பழகன் (டிஇபியு) ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். வேலை நிறுத்தம் அடுத்த இரண்டு நாள்களுக்கு தொடரும் என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 44 வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/பிஎஸ்என்எல்-ஊழியர்களின்-3-நாள்-வேலைநிறுத்தம்-தொடக்கம்-3098704.html
3098703 மதுரை மதுரை ஆஸ்டின்பட்டி அருகே மயங்கி விழுந்த மயில்: விஷம் வைப்பா? DIN DIN Tuesday, February 19, 2019 08:11 AM +0530 திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்த மயிலை போலீஸார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  
 ஆஸ்டின்பட்டியை அடுத்த கரடிக்கல் பகுதியில் பாண்டி என்பவரது தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை மயில் ஒன்று மயங்கிக் கிடந்தது. 
இதனைக் கண்ட அப்பகுதியினர் மயிலை மீட்டு ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி, தனிப்பிரிவு தலைமை காவலர் லிங்கம் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினர் வழிகாட்டுதலின்படி விஷ் டு ஹெல்ப் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஷ்வா மற்றும் சகாதேவன் ஆகியோரிடம் மயிலை ஒப்படைத்தனர். மேலும் கரடிக்கல் , ஆஸ்டின்பட்டி பகுதியில் வயல்வெளிகளில் யாரேனும் மயில்களுக்கு விஷம் வைத்துள்ளனரா என்பது குறித்து  போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/ஆஸ்டின்பட்டி-அருகே-மயங்கி-விழுந்த-மயில்-விஷம்-வைப்பா-3098703.html
3098702 மதுரை மதுரை அழகர்கோவிலில் கஜேந்திர மோட்சம் DIN DIN Tuesday, February 19, 2019 08:10 AM +0530 அழகர்கோவிலில் உள்ள வாவி தீர்த்தக்குளத்தில் கஜேந்திர மோட்சம் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாசி பெளர்ணமியையொட்டி திங்கள்கிழமை மாலையில் வாவி தீர்த்தக்குளத்துக்கு பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, கஜேந்திர மோட்சம் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து பெருமாள் கோயிலுக்குத் திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை காலை பொய்கைக் கரைப்பட்டியிலுள்ள தெப்பக்குளத்துக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சமேதரராக பல்லக்கில் புறப்படுகிறார். அப்போது வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களுக்கும் எழுந்தருள்கிறார். தெப்பக்குளக் கரையில் வலம் வந்து குளக்கரையில் உள்ள திருக்கண் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/அழகர்கோவிலில்-கஜேந்திர-மோட்சம்-3098702.html
3098701 மதுரை மதுரை மனிதர்கள் அறநெறியோடு வாழ வேண்டும்: நீதிபதி DIN DIN Tuesday, February 19, 2019 08:10 AM +0530 மனிதர்கள் அறநெறி  மற்றும் இயற்கையோடு வாழ பழகவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தத்துவம் மற்றும் சமூகவியல் துறை சார்பில் திங்கள்கிழமை சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் அருண் அரசு இஸ்ரேல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது: 
அறநெறி என்பது ஒவ்வொருவருடைய அனுதின வாழ்விலும்  ஒருங்கிணைந்த ஒன்று. எனவே அதை கடைபிடிப்பது மிக முக்கியம். மத நம்பிக்கை இல்லாமல் வாழலாம். ஆனால், மதங்களே ஒருவர் ஏன் நல்லவராக இருக்கவேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றன. 
மனித உரிமைகள் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்றதுதான் விலங்குகளின் உரிமையும்.விலங்கு மற்றும் இயற்கையுடன் மனிதன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இணைப்புச் சங்கிலியே அறநெறியாகும். நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறநெறி தீர்மானிக்கிறது. எனவே அறநெறி மற்றும் இயற்கையோடு வாழப் பழகவேண்டும் என்றார். கருத்தரங்கில் அமெரிக்காவின் மேரி பால்ட்வின் பல்கலைக்கழக தத்துவத்துறை பேராசிரியர் ரோட்ரிக் ஓவன், ஹங்கேரியைச் சேர்ந்த சமயத்துறை ஆண்ட்ரஸ் ஜோ மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மனிதர்கள்-அறநெறியோடு-வாழ-வேண்டும்-நீதிபதி-3098701.html
3098700 மதுரை மதுரை மதுரையில் நீர்நிலை, சாலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் 1 மாதம் அவகாசம் DIN DIN Tuesday, February 19, 2019 08:10 AM +0530 மதுரையில் நீர்நிலைகள், சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  4 வாரங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 
 மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  மதுரையில் அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம் போன்ற பகுதிகளில் சிலர் நீர் நிலைகள், சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டியுள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் 10 அடி சாலை, 5 அடி சாலையாக சுருங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்லக் கூட  சிரமம் ஏற்படுகிறது. 
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் குறித்து வழக்குரைஞர் ஆணையம் அமைத்து ஆய்வு செய்ததில், ஆக்கிரமிப்புகள் உறுதி செய்யபட்டன. 
இதைத் தொடர்ந்து 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற  அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், தாரணி அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை  அகற்ற 4 வார கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மதுரையில்-நீர்நிலை-சாலைகள்-ஆக்கிரமிப்புகளைஅகற்ற-உயர்நீதிமன்றம்-1-மாதம்-அவகாசம்-3098700.html
3098699 மதுரை மதுரை "மனிதநேயம் காப்பதே மதங்களின் நோக்கம்' DIN DIN Tuesday, February 19, 2019 08:09 AM +0530 மதங்களின் நோக்கமே மனிதநேயம் காப்பது தான் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் எழுத்தாளர் கர்ணன் எழுதிய "கடவுளின் நரகம்' நூல் அறிமுக விழா மணியம்மை மழலையர் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசியது:
உலகம் என்னதான் வளர்ச்சியடைந்தாலும், ஒருபுறத்தில் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். அதை "கடவுளின் நரகம்' நூல் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எழுத்தாளர் கர்ணன் அரை நூற்றாண்டு காலமாக எழுத்துப் பணியில் இருப்பவர். மூத்த எழுத்தாளர்களால் மதிக்கப்படக் கூடியவர். அவர் வறுமையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 
உலகின் சிறந்த எழுத்தாளர்களான டால்ஸ்டாய்,  தமிழகத்தின் புதுமைப்பித்தன் உள்ளிட்டோர் வறுமையில் தான் இருந்தார்கள். ஆனால், தங்களது எழுத்துக்கள் மூலமாக இன்றும் மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர்.
இன்றைய சூழலில் மதவெறி பரவி வருகிறது. அது தடுக்கப்பட வேண்டும். மதம் என்பதை கடவுள் படைக்கவில்லை. மனிதர்கள் தான் உருவாக்கினர். ஆட்சியையும், மக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக பேரரசர்கள் மதங்களைப் பரப்பினர். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இறந்தனர். அதற்கு காரணம் மதம் தான். ஏசு கிறிஸ்து, நபிகள் நாயகம்,  திருஞானசம்பந்தர் உள்ளிட்டோர் நல்வழி கருத்துக்களைத் தான் பரப்பினர். மதத்தை பிரதானப்படுத்தவில்லை. மதங்களின் நோக்கம் மனிதநேயம் காப்பது தான். சுதந்திரப் போராட்டத்தின்போது ஜாதி, மதம் கடந்து விடுதலை என்ற ஒற்றைப் புள்ளியில் மக்கள் இணைந்து இருந்தனர். அதன் காரணமாகவே இப்போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது. அத்தகைய நிலை உருவாக வேண்டும் என்றார்.
எழுத்தாளர் கர்ணன் பேசுகையில்,  வறுமையை பெரிதாக நினைக்கவில்லை. இந்த சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்லிவிட்டேன். மக்களுக்கும் சமூக அக்கறை அவசியம். 
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு இருக்க வேண்டும். தேர்தலின்போது வாக்களிப்பதும் நமது சமூகக் கடமை. அதற்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்றார்.
மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் பி.வரதராஜன், கவிஞர்கள் திருச்சி சந்தர், க.பாலகுரு, ஏ.நூர்ஜஹான் உள்ளிட்டோர் பேசினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மனிதநேயம்-காப்பதே-மதங்களின்-நோக்கம்-3098699.html
3098698 மதுரை மதுரை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை  புளோரிடா, தில்லிக்கு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு DIN DIN Tuesday, February 19, 2019 08:09 AM +0530 ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை புளோரிடா மற்றும் தில்லிக்கு கார்பன் பரிசோதனைக்கு வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற 
மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் காமராஜ்  தனி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை புளோரிடா மற்றும் தில்லிக்கு கார்பன் சோதனைக்கு வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பவேண்டும் என தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். 
தொடர்ந்து, தமிழகத்தில் எத்தனை இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வு நடைபெறுகிறது? தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் குறித்து எத்தனை அறிக்கைகள் தாக்கல் செய்யபட்டுள்ளன? தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டதில் எத்தனை அகழ்வாய்வுப் பொருள்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது? இந்தியாவில் அகழ்வாய்வு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்குகிறது? பட்ஜெட்டில் மாநில வாரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கிய நிதி எவ்வளவு? மத்திய, மாநில தொல்லியல் துறையில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து மத்திய தொல்லியல்துறை இயக்குநர் பிப். 25இல் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், தொல்லியல்துறை அதிகாரிகள் சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகியோர்  பிப். 25இல் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை பிப். 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/ஆதிச்சநல்லூர்-அகழ்வாய்வுப்-பொருள்களை-புளோரிடா-தில்லிக்கு-பரிசோதனைக்கு-அனுப்ப-உத்தரவு-3098698.html
3098697 மதுரை மதுரை மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு அதிமுக ஆலோசனைக் கூட்டம் DIN DIN Tuesday, February 19, 2019 08:09 AM +0530 மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, மக்களவைத் தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஐராவதநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது: 
விரைவில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என ஸ்டாலின் கூறி வருகிறார். அவருக்குத் தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிடலாம்.  அவ்வாறு தனித்துப் போட்டியிட்டால், திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.  ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி இவை அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு தான்.  அதோடு, ஜல்லிக்கட்டுக்குத் தடை கொண்டு வந்தது. 
விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் பறிகொடுக்க காரணமாக இருந்தது திமுக தான். இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்று குவிக்கும்போது,  திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் அதற்கு உறுதுணையாக இருந்தது.
காங்கிரஸும், திமுகவும் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வரக்கூடிய கட்சிகள் என்பதை மக்கள் மறக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் மட்டுமின்றி எந்த தேர்தல் வந்தாலும், திமுக வெற்றி பெற முடியாது என்றார்.
மதுரை புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா, விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பா.நீதிபதி, பி.பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன்,  அதிமுக புறநகர் மாவட்ட  இளைஞர் அணிச் செயலர் வழக்குரைஞர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/மக்களவைத்-தேர்தல்-முன்னேற்பாடு-அதிமுக-ஆலோசனைக்-கூட்டம்-3098697.html
3098696 மதுரை மதுரை ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் லட்சார்ச்சனை DIN DIN Tuesday, February 19, 2019 08:08 AM +0530 மதுரை நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியில் ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது.
இக்கோயிலில் 10-ஆம் ஆண்டு ஹயக்கிரீவ ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ சுதர்ஸனர் ஹோமங்கள் நடைபெற்றன. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதைத்தொடர்ந்து ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. நாகமலைபுதுக்கோட்டை, என்ஜிஓ காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/ஸ்ரீ-வேங்கடாசலபதி-கோயிலில்-லட்சார்ச்சனை-3098696.html
3098695 மதுரை மதுரை பிப்.26-இல் சமையல் எரிவாயு நுகர்வோர்  குறைதீர் கூட்டம் DIN DIN Tuesday, February 19, 2019 08:08 AM +0530 மதுரை மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
 மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே,  சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் குறைகள் இருப்பின் இக் கூட்டத்தில் பங்கேற்று தெரிவித்து நிவர்த்தி  செய்து கொள்ளலாம்.  மாவட்ட வழங்கல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/பிப்26-இல்-சமையல்-எரிவாயு-நுகர்வோர்--குறைதீர்-கூட்டம்-3098695.html
3098694 மதுரை மதுரை முதியவரை தாக்கியவர் கைது DIN DIN Tuesday, February 19, 2019 08:08 AM +0530 ஆஸ்டின்பட்டி அருகே புறம்போக்கு நிலத்திற்காக முதியவரை தாக்கியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி அண்ணா தெருப்பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்(40). இவர்  இரும்புக் கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் (60) என்பவருக்கும் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். 
இந்நிலையில் இதுதொடர்பாக திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சுந்தர் கருப்பண்ணணை தாக்கினாராம். பலத்த காயமடைந்த கருப்பண்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/முதியவரை-தாக்கியவர்-கைது-3098694.html
3098693 மதுரை மதுரை அரசு பொதுத்தேர்வு மையங்களில் பரவலாக பணியாளர் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை DIN DIN Tuesday, February 19, 2019 08:07 AM +0530 அரசு பொதுத்தேர்வுகளில் அறை கண்காணிப்பாளர் பணிக்கு நகர், புறநகர் என்று பிரிக்காமல் அனைத்து மையங்களிலும் பரவலாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரையில்  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில சட்டச் செயலர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலர் கந்தசாமி, துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காஷ்மீரில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்த பின்னர் அவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணைகளை வெளியிட வேண்டும். அரசு பொதுத் தேர்வுகளில் அறை கண்காணிப்பாளர் பணிக்கு நகர்ப்புறம், புறநகர் என்று பிரிக்காமல் எல்லா மையங்களிலும் கலந்து பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/19/அரசு-பொதுத்தேர்வு-மையங்களில்-பரவலாக-பணியாளர்-நியமிக்க-ஆசிரியர்கள்-கோரிக்கை-3098693.html
3098015 மதுரை மதுரை மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்று வேலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல் DIN DIN Monday, February 18, 2019 07:15 AM +0530 மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். 
    மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:
"இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம்' என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு துவங்கியுள்ளது. இது முஸ்லிம் லீக் கட்சியின் முழக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் முழக்கமாகவும் இருக்கிறது. 
நாட்டை மீட்க வேண்டும் என்றால் ஆட்சி அதிகாரம், குறிப்பாக பிரதமர் பதவியையும் மீட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வரும்போது தனக்கு புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றார். ஆனால், அவர் அதற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். 
உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் மத்திய ஆட்சியாளர்களால் சரியாகச் செயல்படாமல் உள்ளன. நாட்டின் பிரதமரானவர் பத்திரிகையாளர்களைக் கூட சந்திப்பதில்லை. 
இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது எனத் தெரியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய விழா, நாடக விழா  என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாத மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவையெல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்று அறிவிப்பு. 
மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. மத்தியில் பாஜகவும்,  தமிழகத்தில் அதிமுகவையும் ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்: திருப்பூருக்கு அண்மையில் வந்த பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகிறார்.  ஆனால், திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. தமிழக வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவில்லை என துணை முதல்வர் கூறுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: பாஜக ஆட்சியில் 2,920 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிந்தனையாளர்களையும், நல்ல விஷயங்களுக்காகப் போராடுபவர்களையும் தேசத் துரோகிகள் எனக் கூறி, பாஜக அரசு சிறையில் அடைத்து வருகிறது. இத்தகைய அரசை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற ஜனநாயக சக்திகள் கைகோர்ப்பது அவசியம். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு முழுவிசாரணை அமைக்கப்பட வேண்டும். உண்மையான தேசப் பக்தர்கள் என கூறிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பூமாலையை கொடுத்தது போல நாட்டை கொடுத்துவிட்டோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:  நாட்டில் ஜனநாயகம் இல்லை. 5 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள பிரதமர் மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப் படத்தை துப்பாக்கியால் சுடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்க ஆள் இல்லை.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா:ஜவாஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி,  மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்களின் சாதனைகளை பட்டியலிடலாம். ஆனால், விதவிதமாக உடையணிந்து படம் எடுப்பதுதான் பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது என்றார்.

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக அரசு: கே.எம்.காதர் மொகிதீன்
மத்திய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே, இந்த அரசை அகற்ற வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுகதான்  எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானதாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிப் பொறுப்புக்கு வர முழுமூச்சுடன் பணிகளைத் தொடங்க தயாராக வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/மத்திய-மாநில-அரசுகளின்-உதவித்-தொகை-அறிவிப்பு-ஏமாற்று-வேலை-திமுக-தலைவர்-முகஸ்டாலின்-சாடல்-3098015.html
3097980 மதுரை மதுரை திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Monday, February 18, 2019 07:02 AM +0530 திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா. பிரீடா பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமங்கலம் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், திருமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/திருமங்கலத்தில்-நாளை-மின்நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-3097980.html
3097979 மதுரை மதுரை 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது DIN DIN Monday, February 18, 2019 07:02 AM +0530 மதுரை காளவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த கரிமேடு போலீஸார் 3.5 கிலோ கஞ்சாவை சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கரிமேடு சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதில் ஆரப்பாளையம் கோபாலன் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன்(38), பைக்காராவை சேர்ந்த சின்னன் மகன் மகாலிங்கம்(47) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். 
அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/35-கிலோ-கஞ்சா-பறிமுதல்-இருவர்-கைது-3097979.html
3097978 மதுரை மதுரை திருநகரில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடக்கம்: 28 அணிகள் பங்கேற்பு DIN DIN Monday, February 18, 2019 07:01 AM +0530 திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும்  இருந்து 28 அணிகள் பங்கேற்றுள்ளன. 
மறைந்த ஹாக்கி வீரர்கள் பாலசுப்பிரமணி, ஜெய்சிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோர் நினைவாக திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் 20 ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி  திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தில் தொடங்கியது. போட்டியை போதை தடுப்புப்பிரிவு துணை 
கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், திருநகர் காலல் ஆய்வாளர் முத்துப்பாண்டி  ஆகியோர் தொடங்கி  
வைத்தனர்.  சென்னை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்றன. 
நாக் அவுட் முறையில் நடைபெறும், இப்போட்டி  பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் பாளை பிரண்ட்ஸ் அணியும், வாடிப்பட்டி ஹாக்கி டேலண்ட் அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல் கணக்கில் பாளை பிரண்ட்ஸ் அணி வென்றது. 
இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை ஆயுதப்படை போலீஸ் அணி, சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ்.  அணியுடன் மோதியது. இதில் 3 -1 என்ற கோல் கணக்கில் சென்னை ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து வரும் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் 
பரிசுகள் வழங்கப்பட  உள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/திருநகரில்-மாநில-அளவிலான-ஹாக்கிப்-போட்டி-தொடக்கம்-28-அணிகள்-பங்கேற்பு-3097978.html
3097977 மதுரை மதுரை "கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்' DIN DIN Monday, February 18, 2019 07:01 AM +0530 கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் மு.க.  ஸ்டாலின் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
மதுரை ஒத்தக்கடையில் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி 2019" பாஜக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது: நாம் வரும் போது சூரியன் மறைந்து விடுகிறது. பாஜக வரும்போது தென்றல் வீசுகிறது. தற்போது பாஜக காற்று வீசுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றபின் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 
ராகுல் காந்தியும், ஸ்டாலிலும் நாங்கள் வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு அந்த கவலை வேண்டாம், அவர்கள் வரப் போவதில்லை. வைகோ உள்ளிட்டவர்களின் கருப்புக் கொடி போராட்டம் வெற்றுப் போராட்டம். ஆனால், நமது போராட்டம், வெற்றிப் போராட்டம். காங்கிரஸ் கட்சித் தலைவராக கே. எஸ். அழகிரி பொறுப்பேற்றவுடன், கமல் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கூறியவர். திமுகவின் மிரட்டல் காரணமாக கமலை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், பாஜக அப்படி யாரையும் மிரட்டுவது கிடையாது.  
காமராஜர் ஆட்சியைப் போல  ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம் என திருப்பூர் கூட்டத்தில் மோடி எடுத்துரைத்ததையடுத்து காங்கிரஸ் கட்சியினர், காமராஜரை பற்றி மோடி பேச என்ன தகுதி உள்ளது எனக் கேட்கின்றனர். காமராஜரைப் பற்றி பேச, மோடியைத் தவிர வேறு யாருக்கு தகுதி உள்ளது. தமிழகத்துக்கு பாஜக அரசைப் போல யாரும் திட்டங்களை கொண்டு வரவில்லை. அதனால் பாஜக கூட்டணி  தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றிப் பெறும்.
பாஜக ஆட்சியில் பெண்களுக்கான பல்வேறு நல்ல  திட்டங்களை கொடுத்து வருகிறோம். பெண் குழந்தை என்றால் பயந்து வாழ்ந்தது போய், தற்போது மத்திய அரசின் திட்டத்தால் பாய்ந்து வளர்த்து வருகின்றனர். தற்போது நாட்டில் 70 சதவீதம் மக்கள் மீண்டும் மோடி தான் பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர் என்றார். கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலர் பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்டாலின் நாடகம்: பொதுக்கூட்டத்துக்கு பின்னர் அவர் அளித்தப் பேட்டி:
  ரஜினி தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். பாஜக பற்றி அவர் எந்த கருத்தும் கூறவில்லை.  தற்போது தண்ணீர் பிரச்னையை தீர்க்க பாஜக தலைமையிலான அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஜினி ஏற்கெனவே கூறியதுபோல் பல பேர் எதிர்ப்பதால் மோடி தான் பலசாலி.  ரஜினி ரசிகர்கள், அரசியல் தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று. 
   திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி தமிழர்கள் பெருமைப்படும் வகையில் இருக்கும்.  பிப்ரவரி 22ஆம் தேதி அமித் ஷா மதுரை வருகிறார். பின்பு ராமநாதபுரம் செல்கிறார். ஸ்டாலின் தற்போது கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த நாடகம் மக்களிடம் எடுபடாது என்று அவர் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/கிராமசபை-என்ற-பெயரில்-நாடகம்-நடத்தி-வருகிறார்-ஸ்டாலின்-3097977.html
3097976 மதுரை மதுரை சுகந்தவனப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா DIN DIN Monday, February 18, 2019 07:01 AM +0530 மதுரை மாவட்டம் எழுமலை அருகே மள்ளப்புரத்தில் சுகந்தவனப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   இவ்விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முதல்  யாகசால பூஜைகள் தொடங்கின.  ஞாயிற்றுக்கிழமை காலையில்  கோ பூஜை, துவார பூஜை, பாலிகை பூஜை, சக்ரபதி மண்டல பூஜை, கும்ப திருவாராதனம், பூர்ணாகுதி உள்ளிட்ட நான்காம் கால யாகசாலை   பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருமாள் விமானம், ஸ்ரீ ஆண்டாள், பத்மாவதி தாயார், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்தி ஆகிய விமானங்களின் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  
      இந்த விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத்தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில், 24 மனை தெலுங்கு செட்டியார் மும்முடியார்குலம் ராமன் அழகிரி பங்காளிகள் செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/சுகந்தவனப்-பெருமாள்-கோயில்-கும்பாபிஷேக-விழா-3097976.html
3097975 மதுரை மதுரை கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சாவு DIN DIN Monday, February 18, 2019 07:01 AM +0530 மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
  மதுரை கொன்னவாயன் காலனியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஆகாஷ் (19). இவர் திருவேடகத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2 -ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அவருடைய நண்பர்கள் சந்தோஷ், ஷியாம் ஆகியோருடன் வடக்கம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். எதிர்பாராதவிதமாக ஆகாஷ் கிணற்றில் மூழ்கினார். அவரை சந்தோஷ், ஷியாம் ஆகிய இருவரும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் ஆகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீஸார் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இது தொடர்பாக ஆகாஷின் தாயார் அம்பிகாபதி கொடுத்தப் புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 
விசாரிக்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/கிணற்றில்-குளிக்கச்-சென்ற-கல்லூரி-மாணவர்-சாவு-3097975.html
3097974 மதுரை மதுரை எழுமலை அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Monday, February 18, 2019 07:00 AM +0530 மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள செல்லாயிபுரம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கக்கோரி சனிக்கிழமை  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    எழுமலை அருகேயுள்ள செல்லாயிபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இரண்டு முறை சாலை மறியலில் ஈடுபட்டும்  இதுவரை குடிநீர் பிரச்னை தீர அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை. 
    இதனால்  செல்லாயிபுரம் கிராம மக்கள் சூலப்புரம்-டி.ராமநாதபுரம் சாலையில்  மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய  ஆணையாளர் ஆசிக்,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர், டி.ராமநாதபுரம் காவல் சார்பு-ஆய்வாளர்கள்  முத்து, ராணி தலைமையிலான போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 வாரங்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்படும். இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரவு கிடைத்த பிறகு  ஆழ்துளை கிணறு அமைத்து முறையாக குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/எழுமலை-அருகே-குடிநீர்-கோரி-பொதுமக்கள்-சாலை-மறியல்-3097974.html
3097973 மதுரை மதுரை ரஜினிகாந்தின் கருத்து: அமைச்சர் வரவேற்பு DIN DIN Monday, February 18, 2019 07:00 AM +0530 தமிழகத்தில்  தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று யோகா மற்றும்  இயற்கை மருத்துவப் பிரிவினை தொடங்கி வைத்துப் பேசினார்.  புதிதாக தொடங்கப்பட்ட இந்த பிரிவில் யோகா சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, உணவு முறைகள், காந்த, நிற சிகிச்சைகள், மசாஜ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. 
தொடர்ந்து திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார இணை இயக்குனர் லதா, திருமங்கலம் அரசு மருத்துவர் பூமிநாதன், திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:  நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் பார்த்தால், தற்போது நாங்கள் (அதிமுக) தான் குடிநீர் பிரச்னையை தீர்த்து வருகிறோம் என்பதால், தங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிவித்தது போல் உள்ளது. அவர் நல்லவர். மக்களின் பிரச்னைகளை அறிந்தவர். ஆதலால் நல்ல விஷயங்களையே கூறியுள்ளார். அதனை வரவேற்கிறேன். ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு கொடுப்பதும், ஆதரவைப் பெறுவதும் தலைமை எடுக்கும் முடிவாகும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/ரஜினிகாந்தின்-கருத்து-அமைச்சர்-வரவேற்பு-3097973.html
3097972 மதுரை மதுரை டிஎன்பிஎஸ்சி தேர்வு: 25 மையங்களில் 3,745 பேர் எழுதினர் DIN DIN Monday, February 18, 2019 07:00 AM +0530 மதுரை மாவட்டத்தில் 25 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசுப்பணிக்கான தேர்வில் 3,745 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அனைத்து அரசுத்துறைகளுக்கான நிர்வாக அலுவலர் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்குக்கான தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மதுரையில் சௌராஷ்டிரா பள்ளி, தியாகராஜர் நன்முறை பள்ளி, ஜோதி மேல்நிலைப்பள்ளி,  எஸ்இவி பள்ளி, சிஇஓஏ பள்ளி, யாதவா கல்லூரி, சிஎஸ்ஐ கல்லூரி, அல் அமீன் பள்ளி, டான்போஸ்கோ ஐடிஐ, இபிஜி பள்ளி, நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, மாநகராட்சி பொன்முடி மேல்நிலைப்பள்ளி உள்பட 17 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. 
காலை மற்றும் பிற்பகல் இரு நேரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் 25 மையங்களில் நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 6,937 பேருக்கு  தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது. இதில் 3,745 பேர் தேர்வு எழுதினர். 3,197 பேர் தேர்வுக்கு வரவில்லை.  தேர்வு மையங்களில் தேர்வுகள் அனைத்தும் விடியோக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/டிஎன்பிஎஸ்சி-தேர்வு-25-மையங்களில்-3745-பேர்-எழுதினர்-3097972.html
3097971 மதுரை மதுரை வாழ்க்கைக்கு அடிப்படை அறம்: இரா.இளங்குமரனார் DIN DIN Monday, February 18, 2019 06:59 AM +0530 வாழ்க்கைக்கு அடிப்படை அறம் என்று முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தொல்காப்பிய பயிற்சி பயிலரங்கில் சனிக்கிழமை பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியற்புலம் மற்றும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியும் இணைந்து மூன்று நாள்கள் தொல்காப்பிய பயிலரங்கை நடத்தின. மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கின் நிறைவு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
நிறைவு விழாவுக்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலர் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் புலத்தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முதுமுனைவர் இரா.இளங்குமரனார் விழா நிறைவுப் பேரூரையில் பேசியது: வாழ்க்கைக்கு அடிப்படை அறம். அதனால்தான் அறத்தோடு நிற்றல் மிக முக்கியமாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் மூன்றும் சிறப்பானவை. கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவை கடவுள் வாழ்த்தாக அமையும். இல்லறத்துக்கு அன்பின் வழியது உயிர்நிலை என்பதுதான் தொடக்கம். துறவுக்கு அருள் வேண்டும். ஊழ் என்பது உலக இயற்கை. தொல்காப்பியம் தொட்ட இடமெல்லாம் தொடங்கும். அதுவே அனைத்துக்கும் மூலம். அகத்திணை அனைத்து நூலுக்கும் மூலம். தொல்காப்பியத்தை மாணவர்கள் ஆழ்ந்து படித்தல் நலம் தரும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் முன்னதாக உதவிப்பேராசிரியர் செல்வத்தரசி வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஜெ.போ. சாந்திதேவி நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜெ.கோகிலா தொகுத்து வழங்கினார். 
பயிலரங்கில் பங்கேற்ற ஆய்வாளர்கள், பேராசிரியர்களுக்கு சான்றிதழ்களும், இளங்குமரனார் எழுதிய தொல்காப்பிய எழுத்துச் சொல், பொருள் அடங்கிய நூல் தொகுதியும் வழங்கப்பட்டன. பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/வாழ்க்கைக்கு-அடிப்படை-அறம்-இராஇளங்குமரனார்-3097971.html
3097970 மதுரை மதுரை தவறி விழுந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு DIN DIN Monday, February 18, 2019 06:59 AM +0530 மதுரை அருகே சுவரில் அமர முயன்று தவறி விழுந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
மதுரை அண்ணாநகர் ஆண்டார்கொட்டாரம் டாக்டர் கபீர் நகரைச் சேந்தவர் ராமசாமி (55). பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் தினமும் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சிக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சிறிய சுவரில் ஓய்விற்காக அமர முயன்ற போது தவறி விழுந்தார். இதில் தலையில் அடிப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மனைவி வேலம்மாள் அளித்தப் புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/18/தவறி-விழுந்த-பிஎஸ்என்எல்-ஊழியர்-சாவு-3097970.html
3097641 மதுரை மதுரை காலியாகவுள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்  மக்களவைத் தேர்தலோடு தேர்தல் நடத்த வேண்டும் DIN DIN Sunday, February 17, 2019 05:44 AM +0530
 தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்தவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் வலியுறுத்தினார்.
 தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. தொகுதி காலியான 6 மாத காலத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி.
மத்திய அரசின் நெருக்குதலுக்கு தேர்தல் ஆணையம் பலியானால் அதன் மீதுள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, மக்களவைத் தேர்தலோடு இந்த 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்த ஆணையம் முன் வரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். 
 வரும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசை அகற்ற  எங்கள் அணி அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 
அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளாலும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது.      காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய படுகொலையை நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பலியான வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  பயங்கரவாதிகளுக்கு தக்க பாடத்தை நாடும், நாட்டு மக்களும் அளிப்பார்கள் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/காலியாகவுள்ள-20-சட்டப்பேரவைத்-தொகுதிகளுக்கும்--மக்களவைத்-தேர்தலோடு-தேர்தல்-நடத்த-வேண்டும்-3097641.html
3097432 மதுரை மதுரை திருவாதவூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா DIN DIN Sunday, February 17, 2019 03:09 AM +0530
மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் கோயிலை ஒட்டியுள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், இந்த ஆண்டு பெரிய கண்ôயில் நீர் நிரம்பி இருந்தது. இதனால், அதிக அளவில் மீன்கள் வளர்ந்திருந்தன. 
தற்போது, நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாலும், கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதாலும், கண்மாய் சனிக்கிழமை அழியவிடப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், கோவில்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்மாய்க்குள் வலைகளுடன் இறங்கி மீன் பிடிக்க குவிந்தனர். அதில், கட்லா, ரோகு, நாட்டுக் கெண்டை, விறால் வகை மீன்கள் அதிகம் பிடிபட்டன. சிலரது வலையில் பெரிய மீன்களும் சிக்கின.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/திருவாதவூர்-பெரிய-கண்மாயில்-மீன்பிடித்-திருவிழா-3097432.html
3097431 மதுரை மதுரை 124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் DIN DIN Sunday, February 17, 2019 03:09 AM +0530 மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 124 பயனாளிகளுக்கு ரூ.14.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.  
மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமை வகித்தார். வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார்.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் என 124 பயனாளிகளுக்கு ரூ.14.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கிப் பேசியதாவது:
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டுகளுக்கும் இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில், முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய் மூலம்  குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,600 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. 
அதேபோல், வடக்குத் தொகுதிக்குள்பட்ட வண்டியூர் கண்மாய் ரூ. 64 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/124-பயனாளிகளுக்கு-நலத்திட்ட-உதவிகள்-வழங்கல்-3097431.html
3097430 மதுரை மதுரை உசிலை அருகே விவசாயி இறப்பில் சந்தேகம்: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல் DIN DIN Sunday, February 17, 2019 03:09 AM +0530
உசிலம்பட்டி அருகே விவசாயி இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பவுன்ராஜ் (48).  இவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். 
இதனால், அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலையில் தோட்டத்துக்குச் சென்று தேடியபோது, பவுன்ராஜ் உடம்பில் 
தீக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, குடும்பத்தினர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் பவுன்ராஜின் சடலத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 சனிக்கிழமை மதியம், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த பவுன்ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது, பவுன்ராஜின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/உசிலை-அருகே-விவசாயி-இறப்பில்-சந்தேகம்-குற்றவாளிகளை-கைது-செய்யக்-கோரி-சாலை-மறியல்-3097430.html
3097429 மதுரை மதுரை பிரதமரின் உதவித் தொகை திட்டம்: வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பம் அளிக்கலாம் DIN DIN Sunday, February 17, 2019 03:08 AM +0530
பிரதமரின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, சிறு, குறு விவசாயிகள் 
வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பம் அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: 
பிரதமரின் கெளரவ ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு, அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. 
எனவே, சிறு, குறு விவசாயிகள் தங்களது பட்டா எண், குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அல்லது அவர்களுக்குரிய வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர்,  வட்டாட்சியர்களிடம் சமர்ப்பிக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/பிரதமரின்-உதவித்-தொகை-திட்டம்-வட்டாட்சியர்-அலுவலகங்களிலும்-விண்ணப்பம்-அளிக்கலாம்-3097429.html
3097427 மதுரை மதுரை பெண்ணிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி: ஒருவர் கைது DIN DIN Sunday, February 17, 2019 03:08 AM +0530
திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்தவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த  பாண்டி மனைவி  அறிவுச்செல்வி. இவர், கடந்த 12 ஆம் தேதி வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
 அப்போது, பின்பக்கமாக வந்த மர்மநபர் அறிவுச்செல்வி கையில் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். அந்த பையில் ரூ. 1 லட்சம் இருந்துள்ளது.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதில், மேலூரைச் சேர்ந்த ஜீவா (45) என்பவர் அறிவுச்செல்வியிடம் பணத்தை வழிப்பறி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதையடுத்து, திருமங்கலம் நகர் போலீஸார் ஜீவாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/பெண்ணிடம்-ரூ1-லட்சம்-வழிப்பறி-ஒருவர்-கைது-3097427.html
3097426 மதுரை மதுரை பொறுப்பேற்பு DIN DIN Sunday, February 17, 2019 03:08 AM +0530
மதுரை மாநகராட்சி புதிய கல்வி அலுவலராக பொ. விஜயா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். 
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய இவர், தற்போது மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/பொறுப்பேற்பு-3097426.html
3097425 மதுரை மதுரை கொட்டாம்பட்டி, நாட்டார்மங்கலத்தில் நாளை மின்தடை DIN DIN Sunday, February 17, 2019 03:08 AM +0530
கொட்டாம்பட்டி, நாட்டார்மங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் பிப்ரவரி 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை, கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, சின்னகொட்டாம்பட்டி, முடுக்கன்காடு, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளிப்பட்டி, வெள்ளாளபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, காடம்பட்டி, கருங்காலக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.
நாட்டார்மங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நாட்டார்மங்கலம், செங்கோட்டை, சுப்பிரமணியபுரம், தச்சனேந்தல், மீனாட்சிபுரம், செவல்பட்டி, இடையபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என, மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/கொட்டாம்பட்டி-நாட்டார்மங்கலத்தில்-நாளை-மின்தடை-3097425.html
3097424 மதுரை மதுரை மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்று வேலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல் DIN DIN Sunday, February 17, 2019 03:07 AM +0530
மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். 
    மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:
இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம் என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு துவங்கியுள்ளது. இது முஸ்லிம் லீக் கட்சியின் முழக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் முழக்கமாகவும் இருக்கிறது. 
நாட்டை மீட்க வேண்டும் என்றால் ஆட்சி அதிகாரம், குறிப்பாக பிரதமர் பதவியையும் மீட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வரும்போது தனக்கு புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றார். ஆனால், அவர் அதற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். 
உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் மத்திய ஆட்சியாளர்களால் சரியாகச் செயல்படாமல் உள்ளன. நாட்டின் பிரதமரானவர் பத்திரிகையாளர்களைக் கூட சந்திப்பதில்லை. 
இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது எனத் தெரியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய விழா, நாடக விழா  என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாத மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவையெல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்று அறிவிப்பு. 
மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. மத்தியில் பாஜகவும்,  தமிழகத்தில் அதிமுகவையும் ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்: திருப்பூருக்கு அண்மையில் வந்த பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகிறார்.  ஆனால், திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. தமிழக வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவில்லை என துணை முதல்வர் கூறுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: பாஜக ஆட்சியில் 2,920 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிந்தனையாளர்களையும், நல்ல விஷயங்களுக்காகப் போராடுபவர்களையும் தேசத் துரோகிகள் எனக் கூறி, பாஜக அரசு சிறையில் அடைத்து வருகிறது. இத்தகைய அரசை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற ஜனநாயக சக்திகள் கைகோர்ப்பது அவசியம். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு முழுவிசாரணை அமைக்கப்பட வேண்டும். உண்மையான தேசப் பக்தர்கள் என கூறிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பூமாலையை கொடுத்தது போல நாட்டை கொடுத்துவிட்டோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:  நாட்டில் ஜனநாயகம் இல்லை. 5 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள பிரதமர் மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப் படத்தை துப்பாக்கியால் சுடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்க ஆள் இல்லை.
மனிதநேய மக்கள்  கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா:
ஜவாஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி,  மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்களின் சாதனைகளை பட்டியலிடலாம். ஆனால், விதவிதமாக உடையணிந்து படம் எடுப்பதுதான் பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது என்றார்.
சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக அரசு:கே.எம்.காதர் மொகைதீன்
மத்திய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே, இந்த அரசை அகற்ற வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுகதான்  எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானதாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிப் பொறுப்புக்கு வர முழுமூச்சுடன் பணிகளைத் தொடங்க தயாராக வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் பேசினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/17/மத்திய-மாநில-அரசுகளின்-உதவித்-தொகை-அறிவிப்பு-ஏமாற்று-வேலை-திமுக-தலைவர்-முகஸ்டாலின்-சாடல்-3097424.html
3096779 மதுரை மதுரை ரூ.15 லட்சம் கடன் தருவதாகக்கூறி ரூ.2.60 லட்சம் மோசடி DIN DIN Saturday, February 16, 2019 08:21 AM +0530 மதுரையில் பொதும்பு அருகே  ரூ.15 லட்சம் கடன் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.2. 60 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
பொதும்பு அருகே  உள்ள கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்த சுரேஷ் மகன் அரவிந்த் (28). இவர் லாரியில் சரக்கு அனுப்பும் முகவர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரிடம் டெரிடீ அசுசியலிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய நபர்,  ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தால் ரூ.15 லட்சத்துக்கு கடன் தருகிறோம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அரவிந்த், கடந்த ஜனவரி 22 இல் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதனையடுத்து,  அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனபிறகு தான், ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்தார். 
இதையடுத்து தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில், அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/ரூ15-லட்சம்-கடன்-தருவதாகக்கூறி-ரூ260-லட்சம்-மோசடி-3096779.html
3096778 மதுரை மதுரை மதுரை மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பொறுப்பேற்பு DIN DIN Saturday, February 16, 2019 08:20 AM +0530 மதுரை மாநகரக் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையராக டி.செந்தில்குமார்  வெள்ளிக்கிழமை இரவு பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை மாநகரக்காவல்துறையில் குற்றப்பிரிவு துணை ஆணையராக ஜெயந்தி பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 
இதில் மதுரை மாநகரக்காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி தமிழ்நாடு 11-ஆவது சிறப்புக்காவல் படை அணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். 
இதையடுத்து மாநகரக்குற்றப்பிரிவு ஆணையராக டி.செந்தில்குமார், மாநகரக்காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் முன்னிலையில்  வெள்ளிக்கிழமை இரவு பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய துணை ஆணையருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/மதுரை-மாநகர்-குற்றப்பிரிவு-துணை-ஆணையர்-பொறுப்பேற்பு-3096778.html
3096777 மதுரை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில்  தேசிய நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் அமைக்கக் கோரி வழக்கு DIN DIN Saturday, February 16, 2019 08:20 AM +0530 தேசிய நெடுஞ்சாலைகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் உணவகங்கள் அமைக்கக் கோரும் வழக்கில் போக்குவரத்துக் கழக கூடுதல் தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொது நல மனு விவரம்: 
தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம், கோவை உள்ளிட்ட ஆறு கோட்டங்களாக உள்ளன. இந்தக் கோட்டங்களின் கீழ் தினசரி சுமார் 15 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். 
நெடுந்தூர பேருந்துகளில் தினசரி சுமார் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் புத்துணர்ச்சி பெற தமிழகத்தில் 31 உணவகங்களை அரசுப் போக்குவரத்து கழகம் 2017 இல் அங்கீகரித்துள்ளது. 
இந்த உணவகங்களில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு உணவு, குளிர்பானம் உள்ளிட்டவை  இலவசமாக வழங்கப்படுகிறது. 
ஆனால், இந்த உணவகங்களில் உணவு வகைகள் தரமின்றி கூடுதல் விலைக்கு விற்கப்படுவதுடன் எவ்வித ரசீதும் கொடுக்கப்படுவதில்லை. இந்திய ரயில்வேயில் ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 
அதேபோல் பேருந்து பயணிகளுக்கும் நியாயமான  விலையில் தரமான உணவு , ஆவின் பாலகம், தொலைபேசி, முதலுதவி மையம், சிசிடிவி கேமரா, சுத்தமான 
கழிப்பறை வசதிகள் கிடைக்க வேண்டும். 
எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ., தொலைவுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக போக்குவரத்துக் கழக கூடுதல் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட  நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/அரசுப்-போக்குவரத்துக்-கழகம்-சார்பில்--தேசிய-நெடுஞ்சாலைகளில்-உணவகங்கள்-அமைக்கக்-கோரி-வழக்கு-3096777.html
3096776 மதுரை மதுரை கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது DIN DIN Saturday, February 16, 2019 08:20 AM +0530 உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
 உசிலம்பட்டி அருகே உள்ள எ.ராமநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக வேதாரண்யம்  மேலவெளிவீதியைச்சேர்ந்த காளிமுத்து மகன் குணசேகரன், இலங்கை மருதங்கேணியைச்சேர்ந்த ஸ்ரீகண்டரச மகன் ராஜிகாந்த், இலங்கை ஜப்னா, வடக்குதலையாடி ஊடுதுறையைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் செல்வகரன், உசிலம்பட்டி எ.ராமநாதபுரத்தைச்சேர்ந்த கண்ணாடிச்சாமி மகன் கல்யாணி மற்றும்  கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த ராமு மகன் மலைச்சாமி(26) ஆகியோரை உசிலம்பட்டி போலீஸார் கடந்த டிசம்பரில் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து   30 கிலோ கஞ்சா, ரொக்கப்பணம், செல்லிடப்பேசிகள், கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனர்.  
இந்நிலையில், கைதானவர்களில் வேதாரண்யம் குணசேகரன்  மற்றும்  எ.ராமநாதபுரம் கல்யாணி  ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்  உத்தரவிட்டார். அதன்படி உசிலம்பட்டி போலீஸார்  இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/கஞ்சா-கடத்திய-2-பேர்-குண்டர்-சட்டத்தில்-கைது-3096776.html
3096775 மதுரை மதுரை மணல் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு DIN DIN Saturday, February 16, 2019 08:19 AM +0530 திருமங்கலம் அருகே ஆற்றில் மணல் திருடுவோர் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கிராமத்தினர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
  திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியது: ராயபாளையம் கிராமத்துக்கு உள்பட்ட  பிள்ளையார்நத்தம் கவுண்டமா நதியில்,  சிலர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு சிலர் டிராக்டரில் மணல் திருடிக் கொண்டிருந்தபோது, கிராம நிர்வாக அலுவலர், காவல் துறையினருடன் சென்றபோது தப்பிவிட்டனர். ஆனால், பறிமுதல் செய்த டிராக்டரை வருவாய்த் துறையினர் அடுத்த நாளே விடுவித்துவிட்டனர்.
அதன் பிறகு மணல் திருட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபடுவோர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகவே,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/மணல்-திருடும்-கும்பல்-மீது-நடவடிக்கை-எடுக்கக்-கோரி-ஆட்சியரிடம்-மனு-3096775.html
3096774 மதுரை மதுரை அஞ்சல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: பிப்.25-க்குள் மனுக்கள் அனுப்பலாம் DIN DIN Saturday, February 16, 2019 08:19 AM +0530 அஞ்சல் துறையின் தென் மண்டல அளவிலான அஞ்சல்  ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் மதுரையில் உள்ள அஞ்சல் துறை தென் மண்டலத் தலைவர் அலுவலகத்தில் மார்ச் 12 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 
அஞ்சல் துறை ஓய்வூதியதாரர்கள் தங்களது பணி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும்  குறைகளை எழுத்து மூலமாக இரண்டு நகல் எடுத்து ஓய்வூதிய ஆணை எண் இருப்பின் அதை குறிப்பிட்டு, அஞ்சல் துறை தலைவர், தென் மண்டலம் , மதுரை-625002 என்ற முகவரிக்கு வரும் 25 -ஆம் தேதிக்குள் அனுப்பலாம். தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/அஞ்சல்-ஓய்வூதியர்-குறைதீர்-கூட்டம்-பிப்25-க்குள்-மனுக்கள்-அனுப்பலாம்-3096774.html
3096773 மதுரை மதுரை "அதிமுக தலைமையில் "மெகா' கூட்டணி அமையும்' DIN DIN Saturday, February 16, 2019 08:19 AM +0530 மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக, மெகா கூட்டணியை அமைக்கப் போகிறது என்று தமிழக வருவாய்த்  துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும்  மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகர், புறநகர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,  செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ,  மதுரை புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா, அதிமுக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியது: மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கப் போகிறது. தேர்தல் வெற்றிக்காக அனைவரும் முழுமூச்சுடன் தீவிரப் பணியாற்ற வேண்டும்.
அதிமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சென்று, திமுகவின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். திமுக அணியில் எத்தனை கட்சிகள் இணைந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றார்.
  சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான்,  பா.நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ கே.தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/அதிமுக-தலைமையில்-மெகா-கூட்டணி-அமையும்-3096773.html
3096772 மதுரை மதுரை திருப்பரங்குன்றம்-திருமங்கலம் இடையே தரைப்பாலங்கள் விரிவாக்கம் DIN DIN Saturday, February 16, 2019 08:19 AM +0530 திருப்பரங்குன்றம் - திருமங்கலம் சாலைப் பகுதியில் 3 தரைப்பாலங்கள் விரிவாக்கும் பணி ரூ.60 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம்  தேவி நகர்,  ஹார்விபட்டி அருகே 3 தரைப்பாலங்கள் உள்ளன. இதன்மூலம் திருப்பரங்குன்றம் பகுதிக்கு வைகையிலிருந்து பானாங்குளம், சேமட்டான்குளம், நிலையூர் பெரிய கண்மாய், ஆரியங்குளம் ஆகிய  கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கின்றது. 
இந்நிலையில் கடந்த 2017 இல் பசுமலைலிருந்து திருநகர் 3 ஆவது பேருந்து நிறுத்தம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் சாலையில் உள்ள பாலங்கள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. 
இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டன.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 60 லட்சத்தில் 3 தரைப்பாலங்கள் இருபுறமும் தலா 3 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
இப்பணிகள்  ஓரிரு வாரத்தில் நிறைவுபெற்று, அதற்கேற்றார்போல விரைவில் சாலை விரிவாக்கப்பணியும் நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/திருப்பரங்குன்றம்-திருமங்கலம்-இடையே-தரைப்பாலங்கள்-விரிவாக்கம்-3096772.html
3096771 மதுரை மதுரை பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு DIN DIN Saturday, February 16, 2019 08:17 AM +0530 கொட்டாம்பட்டி அருகே  வெள்ளிக்கிழமை கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியகற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அமுதா (25). இவர்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.  9 மாத குழந்தை உள்ளது. இவர்கள் வெள்ளிக்கிழமை கற்பூரம்பட்டியில் உள்ள தோட்டத்துக்குச் சென்றுவிட்டு திரும்பினர். அப்போது சாலையிலுள்ள வேகத்தடையைக் கடந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து அமுதா குழந்தையுடன் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. 
இதில் பலத்த காயமடைந்த அவரை கருங்காலக்குடியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் கூறினர்.  இதையடுத்து கொட்டாம்பட்டி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/பைக்கில்-இருந்து-தவறி-விழுந்து-பெண்-சாவு-3096771.html
3096770 மதுரை மதுரை கப்பலூரில் பிப்ரவரி 16 மின்தடை DIN DIN Saturday, February 16, 2019 08:17 AM +0530 கப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்  சனிக்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் திருமங்கலம் செயற்பொறியாளர் ஏ.ரமணி தெரிவித்துள்ளார்.
மின்தடைபடும் பகுதிகள்: கப்பலூர்,  தியாகராஜர் ஆலை,  உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/கப்பலூரில்-பிப்ரவரி-16-மின்தடை-3096770.html
3096769 மதுரை மதுரை திருநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நாளை தொடக்கம் DIN DIN Saturday, February 16, 2019 08:17 AM +0530 திருநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) திருநகர் அண்ணா மைதானத்தில் தொடங்குகிறது.  
மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர்களான பழனியாண்டவர், ஜெய்சிங், பாலசுப்பிரமணியன், மெய்யப்பன் நினைவாக 20 ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில்  சென்னை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30 அணிகள் பங்கேற்கின்றன. நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சுழற்கோப்பையும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும். போட்டிக்கான ஏற்பாடுகளை திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷ் உள்ளிட்ட ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/திருநகரில்-மாநில-அளவிலான-ஹாக்கி-போட்டிகள்-நாளை-தொடக்கம்-3096769.html
3096768 மதுரை மதுரை மாநில அளவிலான கலைப்போட்டி:  அமெரிக்கன் கல்லூரி முதலிடம் DIN DIN Saturday, February 16, 2019 08:16 AM +0530 மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான கலைப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
கவிகை 2019 என்ற தலைப்பில் நடைபெற்ற கலைப் போட்டிகளை மதுரை விமான நிலைய நிதி  அதிகாரி எம்.மீனலோசனி, பயிற்சியாளர் சர்மிளா தேவி ஆகியோர் தொடக்கி வைத்தனர். விழாவில், ரங்கோலி, ஓவியம், நடனம், மைம் பிரிவு நாடகங்கள் உள்பட 21 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 14 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் பிரியா பாபு பரிசுகளை வழங்கினார். 
விழாவையொட்டி, கல்லூரியில் தமிழக அரசு உணவு மேம்பாட்டுத்துறையினர் மாணவிகளிடையே ஆரோக்கிய உணவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்குகள் அமைத்து சத்தான உணவுகளை மாணவிகளுக்கு விநியோகித்தனர். மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு வகையான செடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் வரவேற்றார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி மாணவர் பேரவை தலைவி கார்மல் பிரனிலா, துணைத்தலைவி பாத்திமா சுமானா, மாணவர் கலைச்செயலர் பி.பி.சௌபர்ணிகா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/மாநில-அளவிலான-கலைப்போட்டி--அமெரிக்கன்-கல்லூரி-முதலிடம்-3096768.html
3096767 மதுரை மதுரை திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வரவு ரூ.30 லட்சம் DIN DIN Saturday, February 16, 2019 08:16 AM +0530 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.30 லட்சத்து 3 ஆயிரத்து 895 ஆக இருந்தது.
மாதம் ஒரு முறை இக்கோயிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள்  எண்ணப்பட்டன. கோயில் துணை ஆணையர் (பொறுப்பு)மாரிமுத்து,  உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம், பேஸ்கர் நெடுஞ்செழியன், மணியம் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் ஐயப்ப சேவா சங்கத்தினர், ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க காணிக்கை ரூ.30 லட்சத்து 3 ஆயிரத்து 895 இருந்தன. மேலும் 221 கிராம் தங்கம்,  2 கிலோ 112 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/திருப்பரங்குன்றம்-கோயில்-உண்டியல்-வரவு-ரூ30-லட்சம்-3096767.html
3096766 மதுரை மதுரை கடைமடைப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் புகார் DIN DIN Saturday, February 16, 2019 08:16 AM +0530 பெரியாறு பாசனத் திட்டத்தின் கடைமடைப் பகுதியில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் இருப்பதாகவும்  தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
 மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், வேளாண் இணை இயக்குநர் குமாரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை, பொதுப்பணித் துறை, கூட்டுறவு  உள்ளிட்ட விவசாயம் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கடைமடை பகுதிகளுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காததால் நெற் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பெரியாறு பாசனத் திட்டத்தில் ஒரு போக சாகுபடி கடைமடை பகுதிகளான மேலூர் அருகே உள்ள கொட்டகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அப் பகுதியில் நெற் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. 
அதேபோல, இருபோக பகுதியின் 2-போக பாசனத்துக்கும் தண்ணீர் முழுமையாகக் கிடைக்கவில்லை. அணைகளில் நீர் இருப்பு போதிய அளவில் இருந்தபோதும் பாசனத்துக்குத் திறக்க பொதுப்பணித் துறையினர் மறுத்து வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டினர். இதற்குப் பதில் அளித்த பொதுப்பணித் துறை அலுவலர்கள்,   பெரியாறு-வைகை நீர்பிடிப்புப் பகுதிகளிலும், மதுரை மாவட்டத்திலும் நவம்பருக்குப் பிறகு போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 
பெரியாறு அணையின் நீர்வரத்தைப் பொருத்து, அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வைகை அணை வழியாக பாசனத்துக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. அணையில் இருக்கும் நீரைப் பொருத்து அனைத்து பகுதிகளுக்கும் நீர்ப்பங்கீடு செய்யப்படுகிறது என்றனர்.இருப்பினும் பொதுப்பணித் துறையினரின் பதிலில் திருப்தி அடையாத விவசாயிகள்,  நீர்ப்பங்கீட்டை முறையாகச் செய்வதில் என்று புகார் தெரிவித்தனர். கருகும் பயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் வரை அரைவை செய்ய முடியும். இருப்பினும் தற்போது 400 முதல் 500 டன் வரை தான் அரைவை செய்கின்றனர். இந்த சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளைச் சந்தித்து, அரைவைக்கு பதிவு செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் தான் ஆலை நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமி கூறினார். இதற்கு ஆலைத் தரப்பில் பதில் அளித்த அலுவலர்,  பதிவு செய்த கரும்பு முழுமையாக அரைவைக்கு எடுக்கப்படும் என்றார். 
 கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தருவதில்லை. நகை அடமானம் பெற்றுக் கொண்டு வழங்கும் கடனையே பயிர்க் கடனாக வழங்கி வருகின்றனர். ஆகவே, பட்டா, அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள் அடிப்படையில் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 


ரூ.6ஆயிரம் உதவித்தொகை பெறுவது எப்படி?

கூட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை விடுபடாமல் அனைவரையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த ஆட்சியர் ச.நடராஜன் மற்றும் வருவாய் அலுவலர் ரெ.குணாளன்,  இத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
வருவாய், நிலஅளவைத் துறையை ஒருங்கிணைந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, சிறு, குறு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் (பிப்ரவரி 16,17) கிராம நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பங்களைப் பெறுவர். பட்டா வேறொருவர் பெயரில் இருந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்யக் கூடியவராக இருப்பின் விண்ணப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் இணைக்க வேண்டும் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/கடைமடைப்-பாசனத்துக்கு-தண்ணீர்-திறக்க-பொதுப்பணித்துறை-அதிகாரிகள்-மறுப்பு-விவசாயிகள்-புகார்-3096766.html
3096764 மதுரை மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை: ஆக்கிரமிப்பு: உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Saturday, February 16, 2019 08:15 AM +0530 மதுரை, மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொது நல மனு: 
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் சுமார் 300 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை நடத்துபவர்கள் நடை பாதை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்துவதாலும் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் கடைகள் மற்றும் ஆட்டோக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகேயுள்ள மனமகிழ் மன்றத்தை ஆய்வு செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பேருந்து நிலையத்தில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன?  ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப். 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/16/எம்ஜிஆர்-பேருந்து-நிலையத்தில்-பாலூட்டும்-அறை-ஆக்கிரமிப்பு-உடனே-அகற்ற-உயர்நீதிமன்றம்-உத்தரவு-3096764.html
3096059 மதுரை மதுரை உசிலம்பட்டி பகுதிகளில் பிப்ரவரி 15  மின்தடை DIN DIN Friday, February 15, 2019 07:24 AM +0530 உசிலம்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப். 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயற்பொறியாளர் ந.மோகன் தெரிவித்திருப்பதாவது: உசிலம்பட்டி, இடையப்பட்டி, தும்மக்குண்டு மற்றும் மொண்டிக்கொண்டு ஆகிய 4 துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை உசிலம்பட்டி நகர், தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, மேக்கிலார்பட்டி , கீரிப்பட்டி, பாப்பாபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்கொண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனுர், புதுக்கோட்டை, சீமானுத்து மற்றும் துரைசாமிபுரம்புதூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும்  மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/உசிலம்பட்டி-பகுதிகளில்-பிப்ரவரி-15--மின்தடை-3096059.html
3096058 மதுரை மதுரை தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு DIN DIN Friday, February 15, 2019 07:24 AM +0530 உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை  பள்ளித் தலைமை ஆசிரியையிடம்  7பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
   உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம், வைத்தான் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மதுரை தீக்கதிர் நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி (50) தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசல் முன் இவர் வந்த போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மூன்று பேர் விலாசம் கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 7பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
   இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/தலைமை-ஆசிரியையிடம்-7-பவுன்-சங்கிலி-பறிப்பு-3096058.html
3096057 மதுரை மதுரை மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் தலைமைக் காவலர் தற்கொலை DIN DIN Friday, February 15, 2019 07:23 AM +0530 மதுரை மாநகர் சிறப்பு காவல்படையில் பணியாற்றும் தலைமைக் காவலர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரைச் சேர்ந்தவர் ராமர் (32) .  மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி, மாநகர் சிறப்பு காவல்படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை ராமர் பணிக்கு வராததால், சக போலீஸார்அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ராமருக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்னையா அல்லது பணிச்சுமையா என  தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/மதுரை-ஆயுதப்படை-குடியிருப்பில்-தலைமைக்-காவலர்-தற்கொலை-3096057.html
3096056 மதுரை மதுரை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆட்சியர் உத்தரவு DIN DIN Friday, February 15, 2019 07:23 AM +0530 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மதுரை மக்களவைத் தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன. மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்படுகிறது.
  திருப்பரங்குன்றம், திருமங்கலம் பேரவைத் தொகுதிகள் விருதுநகர் மக்களவைத் தொகுதியிலும்,  சோழவந்தான், உசிலம்பட்டி பேரவைத் தொகுதிகள் தேனி மக்களவைத் தொகுதியிலும் இடம் பெறுகின்றன. மேற்குறிப்பிட்ட பேரவைத் தொகுதிகளுக்குரிய மின்னணு இயந்திரங்கள் அந்தந்த மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
 மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இம்மையத்தில் 6  பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே வாக்குகள் எண்ணும் அறை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் அறைக்கு அருகிலேயே,  அந்தந்த தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையும் அமைக்கப்படுகிறது.
 வாக்கு எண்ணும் அறைகள்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர்,  மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆய்வின் போது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்,  வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் அலுவலர்கள் வரும் பகுதி, வேட்பாளர்களின் முகவர்கள் வரும் பகுதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்குமாறு ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/மக்களவைத்-தேர்தல்-வாக்கு-எண்ணும்-மையத்தில்-கண்காணிப்பு-கேமராக்கள்-பொருத்த-ஆட்சியர்-உத்தரவு-3096056.html
3096055 மதுரை மதுரை இருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு DIN DIN Friday, February 15, 2019 07:22 AM +0530 பேரணை முதல் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோகச் சாகுபடிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள இரண்டாம்போக நெல் பயிருக்கு வெள்ளிக்கிழமை முதல் 4  நாள்களுக்கு மட்டும் மேலும் ஒருமுறை தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளர்.
கள்ளந்திரி மதகு வரையிலான இருபோகச்சாகுபடிப் பகுதிகளில் இரண்டாம்போக நெல் சாகுபடி செய்யப்பட்டு கதிர் பால்பிடிக்கும் நிலையிலும், சில இடங்களில் கதிர் விளையும் தருணத்திலும் உள்ளன. வாடிப்பட்டி பகுதியில் மேலும் இருமுறை தண்ணீர் திறக்கப்பட்டாலே ஓரளவுக்கு கதிர்விளையும் நிலையை அடையும். சிட்டம்பட்டி, சக்கிமங்களம், கள்ளந்திரி 8-ஆவது பிரிவு கால்வாய் பகுதிகளில் தற்போது திறந்துவிடப்படும் நீரில் முன்னதாக நடவுசெய்த நெற்பயிர்கள் மட்டும் கதிர் விளைச்சல் அடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுப்பணித்துறையினர் இரண்டாம் போக நெற்பயிர் சாகுபடி குறித்த வழிகாட்டுதலையோ, தண்ணீர் இறுதிவரை விநியோகிக்கப்படும் என்ற எந்த முன்னறிப்பையோ தரவில்லை. இதனால், பல விவசாயிகள் தாமதமாக நாற்றுவிடும் பணியை மேற்கொண்டனர். இறுதிக் கட்டத்தில் நெல் விளைச்சலை அடைய வைப்பதில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாசனக்குழுத் தலைவர் அருள்பிரகாசம் கூறியது: சாகுபடிப்பயிரின்  தற்போதைய நிலைகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினோம். பெரியாறு- வைகை தலைமை பொறியாளர் சுப்பிரமணியத்திடம் வலியுறுத்தியதன் பேரில், வெள்ளிக்கிழமையிலிருந்து 4 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவதாக தெரிவித்துள்ளார் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/இருபோக-சாகுபடிப்-பகுதிகளுக்கு-இன்று-முதல்-4-நாள்களுக்கு-தண்ணீர்-திறப்பு-3096055.html
3096054 மதுரை மதுரை வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக பெண்களிடம் பணம் மோசடி DIN DIN Friday, February 15, 2019 07:22 AM +0530 திருப்பரங்குன்றம், பெருங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பிரதமரின் திட்டத்தில் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மர்ம கும்பல், பெண்களிடம் பண மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.  
    திருப்பரங்குன்றம், பெருங்குடி, குசவன்குண்டு, சோளங்குருணி  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மர்ம கும்பல், பிரதமரின் திட்டத்தின் கீழ் ரூ. 1.5 லட்சம் கடன் வங்கியில் பெற்றுத்தருவதாகக் கூறி அவர்களின் ஆதார் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகளோடு ரூ.500 முதல் ரூ.1000 வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றுகின்றனர். பணம் வாங்கிக் கொண்டு சென்றகும்பல் அடுத்தடுத்த  கிராமங்களில் இதுபோல மோடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
  இதுகுறித்து திருப்பரங்குன்றம் பாஜக மண்டல் தலைவர் கே.பி.வேல்முருகன் கூறியது: திருப்பரங்குன்றம் படப்பிடி தெரு, கீழத்தெரு மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களிடம் பிரதமர் திட்டத்தின் கீழ் மர்மக் கும்பல் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர். இது வரும் மக்களவை தேர்தலில் பாஜக பெயரை கெடுக்கும் செயலாக உள்ளது. மேலும் பல கிராமப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளோம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/வங்கியில்-கடன்-பெற்றுத்-தருவதாக-பெண்களிடம்-பணம்-மோசடி-3096054.html
3096053 மதுரை மதுரை ஆதித்தமிழர் கட்சியினர் 75 பேர் கைது DIN DIN Friday, February 15, 2019 07:22 AM +0530 மதுரையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 75 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
மதுரை வீரனுக்கு மணிமண்டபத்துடன் சிலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே வியாழக்கிழமை ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கு ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது தடுத்து போலீஸார்  75 பேரை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/ஆதித்தமிழர்-கட்சியினர்-75-பேர்-கைது-3096053.html
3096052 மதுரை மதுரை காதலர் தினத்துக்கு ஆதரவாகஅனுமதியின்றி கூடிய 12 பேர் கைது DIN DIN Friday, February 15, 2019 07:21 AM +0530 மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர் தினத்துக்கு ஆதரவாக அனுமதியின்றி கூடிய தமிழ்ப் புலிகள் கட்சியினர் 12 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
   காதலர் தினத்தையொட்டி, மதுரையில் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை ராஜாஜி பூங்காவில், தமிழ்ப் புலிகள் கட்சியினர் காதலர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் செல்வோருக்கு இனிப்புகள் வழங்கினர்.
 அவர்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு போலீஸார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். காதலர்களை எதிர்க்கும் வகையில் செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் பேரறிவாளன் தலைமையில் 12 பேரை தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர். 
  மேலும்,  சாதி மறுப்பு திருமணம் செய்த 15 ஜோடிகள், பூங்காவில் கேக் வெட்ட முயன்றனர். போலீஸார் அவர்களை பூங்காவில் இருந்து வெளியேற்றினர். 
    இதற்கிடையே இந்து இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் பார்த்தசாரதி தலைமையில் 7 பேர், தமிழன்னை சிலை அருகே காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் அருகே பாரத மாதா படத்திற்கு மாலை அணிவித்து, காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/காதலர்-தினத்துக்கு-ஆதரவாகஅனுமதியின்றி-கூடிய-12-பேர்-கைது-3096052.html
3096051 மதுரை மதுரை துவரிமானில் நாளை இலவச மருத்துவ முகாம் DIN DIN Friday, February 15, 2019 07:21 AM +0530 திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துவரிமானில் மக்களவை உறுப்பினர் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 16) நடைபெறவுள்ளது.  
இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவரிமான் அரசுப் பள்ளியில் மக்களவை உறுப்பினர் திட்டத்தின்கீழ் சுகாதார துணை இயக்குநர் அர்ஜூன்குமார் தலைமையில் இலவச  மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை, எலும்பு, தோல், கண் மருத்துவம், ரத்தப் பரிசோதனை, பல் உள்ளிட்டவைகளுக்கு  சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்டவைகளும் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/துவரிமானில்-நாளை-இலவச-மருத்துவ-முகாம்-3096051.html
3096050 மதுரை மதுரை ஊர்க்காவல் படையில் சேர இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, February 15, 2019 07:21 AM +0530 மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என   அறிவிக்கப்பட்டுள்ளது. 
மதுரை மாநகர் ஊர்க்காவல் படைக்கு பிப்ரவரி 22 - ஆம் தேதி ஆள்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு.  20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  உயரம் (ஆண்) 165 செ.மீ, (பெண்) 155 செ.மீ. இருக்க வேண்டும்.  
என்.சி.சி.  மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளவர்கள்
தல்லாகுளம் கோகலே  சாலையில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். தேர்விற்கு வரும் போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், முகவரியுடன் 2 அஞ்சல் அட்டை, 2  கடவுச் சீட்டு அளவு புகைப்படங்கள் 2 ,   குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என மதுரை மாநகர் ஊர்க்காவல்படை வட்டாரதளபதி எஸ்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/ஊர்க்காவல்-படையில்-சேர-இன்று-முதல்--விண்ணப்பிக்கலாம்-3096050.html
3096049 மதுரை மதுரை "மாணவர்கள் பெற்ற கல்வியை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்' DIN DIN Friday, February 15, 2019 07:20 AM +0530 மாணவர்கள் பெற்ற கல்வியை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்தும்போது மட்டுமே கற்பித்தல் முழுமையடைகிறது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார். 
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் தமிழியற்புலம், நான்காம் தமிழ்ச்சங்கம்- செந்தமிழ்க்கல்லூரியும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான தொல்காப்பிய மூன்று நாள் பயிலரங்கின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. செந்தமிழ்க் கல்லூரியின் வைர விழா அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு செந்தமிழ்க் கல்லூரியின் செயலர் ராணி ந.லட்சுமி குமரன் சேதுபதி தலைமை வகித்தார். இதில்  துணைவேந்தர் பங்கேற்று பேசியதாவது: 
 தொல்காப்பியம் குறித்து தமிழறிஞர்கள், புலவர்கள் ஏராளமான ஆய்வுகளை செய்திருந்தாலும், ஒவ்வொரு காலத்திலும்  தொல்காப்பியம் குறித்து புதிது புதிதாக தகவல்கள் கிடைத்துக்கொண்டே உள்ளன. எனவே தமிழின் மேன்மையை உணர்த்தும் தொல்காப்பியத்தை மாணவர்கள் தொடர் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் முழுச்சிறப்பையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ் மொழியைப்பற்றி தெரியாதவர்கள் கூட குற்றால குறவஞ்சியை படித்தால் தமிழை நன்கு கற்றுக் கொள்ளமுடியும். குற்றால குறவஞ்சியை ஆழ்ந்து கற்பவர்களின் கற்பனை வளம் அதிகரிக்கும், மொழி நடை சிறக்கும். இதுதான் தமிழின் சிறப்பு.
 தொல் காப்பியம் உள்ளிட்ட காப்பியங்களை கற்பதோடு மாணவர்கள் நிறுத்திவிடக்கூடாது. பழங்கால காப்பியங்கள் கூறும் வாழ்வியல் அறம், ஒழுக்கம், நேர்மை, தமிழர் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றையும் அறிந்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைச்சுற்றி வரலாற்று சிறப்பு மிக்க சமணமலை, நாகமலை ஆகியவை உள்ளன. இவை பழங்கால சமய சின்னங்களாக உள்ளன. மேலும் நமது கிராமப்புறங்களில் பழங்கால ஓலைச்சுவடிகள் ஏராளமாக உள்ளன. இதையெல்லாம் பாதுகாக்கவும், தமிழார்வலர்கள் பயன்படுத்தவும் ஏதுவாக காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாரம்பரிய முனையம் (ஹெரிடேஜ் கன்சார்டியம்) ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், தமிழ்மீது ஆர்வம் உள்ளவர்கள் பல்கலைக் கழத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், அரிய நூல்களை கட்டணமின்றி பயன்படுத்த முடியும். உயர் கல்வி என்பது நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வதற்காக அல்ல. நாம் கற்ற கல்வியை  சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும்போதுதான் கல்வி கற்பித்ததன் நோக்கம் முழுமையாக நிறைவேறுகிறது என்றார்.
முன்னதாக செந்தமிழ்க்கல்லூரியின் முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். விழாவில் நான்காம் தமிழ்ச்சங்கச்செயலர் ச.மாரியப்ப முரளி, காமராஜர் பல்கலைக்கழக தமிழியற்புலத் தலைவர் 
வை.ராமராஜபாண்டியன், பல்கலைக்கழக ஒப்பிலக்கியத்துறை தலைவர் உ.கருப்பத்தேவன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் துணை முதல்வர் கோ.சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பயிலரங்கில் நாடு முழுவதும் இருந்து மாணவ, மாணவியர், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/மாணவர்கள்-பெற்ற-கல்வியை-சமுதாய-வளர்ச்சிக்குப்-பயன்படுத்த-வேண்டும்-3096049.html
3096048 மதுரை மதுரை கலைமகள் கல்வி மையத்தில் வீட்டா ஆங்கிலப் பேச்சு பயிற்சி மையக் கிளை திறப்பு DIN DIN Friday, February 15, 2019 07:20 AM +0530 மதுரை ஆண்டாள்புரம் கலைமகள் கல்வி மையத்தில் வீட்டா ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மையத்தின் புதிய கிளை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
 கலைமகள் கல்வி மைய நிறுவனர் செல்வி சந்திரமோகன்,  இம்மையத்தைத் திறந்து வைத்தார். மதுரைக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.நடேசன், செளராஷ்டிரா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜே.பிரபாகரன், பேராசிரியர் தெய்வம்,  வீட்டா மண்டல மேலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
புதிய வகுப்புகள் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என கலைமகள் கல்வி மைய நிர்வாக இயக்குநர் சி.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/கலைமகள்-கல்வி-மையத்தில்-வீட்டா-ஆங்கிலப்-பேச்சு-பயிற்சி-மையக்-கிளை-திறப்பு-3096048.html
3096047 மதுரை மதுரை மதுரையில் மதுபானக் கூடத்தில் ஓட்டுநர் கொலை: முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் இளைஞர் சரண் DIN DIN Friday, February 15, 2019 07:19 AM +0530 மதுரை மதுபானக் கூடத்தில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த இளைஞர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
மதுரை கோ. புதூர் அருகே அரசு மதுக்கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் சிவா (23) என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. 
இது குறித்து கோ. புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுக்கூட ஊழியர்கள் இதய ராஜா , காசாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் இக்கொலையில்  தொடர்புடைய  மதுரை கீரைத்துறையை சேர்ந்த நல்லுச்சாமி மகன் வெற்றிச்செல்வம் (22) என்ற இளைஞர், முதுகுளத்தூரில் நீதித்துறை நடுவர் ராமசங்கரன் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தார். இதையடுத்து நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில் வெற்றிசெல்வம் மதுரை மத்திய சிறைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/மதுரையில்-மதுபானக்-கூடத்தில்-ஓட்டுநர்-கொலை-முதுகுளத்தூர்-நீதிமன்றத்தில்-இளைஞர்-சரண்-3096047.html
3096046 மதுரை மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சி மருத்துவமனையில் போதை மாற்று சிகிச்சைப் பிரிவு தொடக்கம் DIN DIN Friday, February 15, 2019 07:19 AM +0530 மதுரை ஆரப்பாளையம் கலைவாணர் மகப்பேறு மருத்துவமனையில் மது மற்றும் போதை மாற்று சிகிச்சைப் பிரிவை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சியுடன், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையும் இணைந்து இந்த சிகிச்சைப் பிரிவு நடத்த உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் கூறியது: 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்கும் வகையில் இந்த சிகிச்சைப் பிரிவு செயல்படும். மனநல ஆலோசனை, சிகிச்சை அளித்தல், மருந்து, மாத்திரைகள் ஆகியன இலவசமாக வழங்கப்படும்.  மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற 10 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது. ஒரு மனநல மருத்துவர்,  மனநல ஆலோசகர்கள் மற்றும் செவிலியர்கள் தலா இருவர் செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் நியமிக்கப்பட்டு தினமும் சிகிச்சை அளிப்பர். 
மது மற்றும் போதை மாற்று சிகிச்சைப் பிரிவைக் கண்காணிக்கவும் மற்றும் சிறப்பாக செயல்படுத்தவும் எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன், மாநகராட்சி நகர்நல அலுவலர், உதவி நகர்நல அலுவலர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றார்.
அப்போது மருத்துவர் ராமசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையர் முருகேசபாண்டியன்,  உதவி நகர்நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/ஆரப்பாளையம்-மாநகராட்சி-மருத்துவமனையில்-போதை-மாற்று-சிகிச்சைப்-பிரிவு-தொடக்கம்-3096046.html
3096045 மதுரை மதுரை பிஎஸ்என்எல்-க்கு எதிரான மத்திய அரசின் பிரசாரத்தை முறியடிக்கவே வேலைநிறுத்தம்: ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு DIN DIN Friday, February 15, 2019 07:18 AM +0530 பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருவதாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள  பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கவே பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஜி.செல்வின் சத்தியராஜ் (பிஎஸ்என்எல்யு), ஜி.ராஜேந்திரன் (என்எப்டிஇ). ஏ.அகமதுயூனுஸ் (எஸ்என்இஏ), ஏ.அருணாச்சலம் (ஏஐபிஎஸ்என்எல்இஏ), ஜி.அன்பழகன் (டிஇபியு) ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருவது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை  மத்திய அரசு உருவாக்கி மக்கள்  மத்தியில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைத்து சங்கங்கள் ஓரணியில் திரண்டுள்ளோம். அரசுத்துறை, தனியார்துறைகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி, இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல் நிறுவன சேவைகளையே பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் சூழலில், பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான தொலைத் தொடர்பு கோபுரங்களை பராமரிக்க அயல் ஒப்பந்த முறையை மத்திய அரசு கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான உத்தரவாதத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். இரண்டாவது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பரிந்துரையை அமலாக்க வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியப் பங்களிப்பைப் பெறவேண்டும். 
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதன் மூலம் தான் ஊழியர்களின் எதிர்காலமும், பிஎஸ்என்எல்-இன் எதிர்காலமும் உள்ளது என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/பிஎஸ்என்எல்-க்கு-எதிரான-மத்திய-அரசின்-பிரசாரத்தை-முறியடிக்கவே-வேலைநிறுத்தம்-ஊழியர்-சங்கங்கள்-அறிவிப-3096045.html
3096044 மதுரை மதுரை சுங்கச் சாவடிகளில் குண்டர்களை வைத்து வசூல்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை  DIN DIN Friday, February 15, 2019 07:18 AM +0530 தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஒழுங்காக பராமரிப்பு செய்யாத சுங்கச்சாவடி நிறுவனங்கள் குண்டர்களை வைத்து வசூல் வேட்டை நடத்துவதாகவும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதைக் கண்டுகொள்வதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை உள்ளது. இந்த சாலை 2011 முதல் நான்கு வழிச்சாலையாக உள்ளது. எலியார்பத்தி என்னும் இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது.  2011 முதல் எந்த பராமரிப்பு பணிகளும்  நடைபெறாததால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி  சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 
மேலும் பேருந்துகளிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை முதல் அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தேசிய நெடுஞ்சாலையை முறையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சாலை  இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 50 சதவீதம் கட்டண விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றனர். 
 இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மதுரை-அருப்புகோட்டை சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சாலையை சீரமைக்காத சுங்கச்சாவடி நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் ஏன் இழப்பீடு வழங்கவேண்டும்?  சாலைகளை ஒழுங்காக சீரமைக்காத சுங்கச்சாவடி நிறுவனமே வழங்கலாமே? என்ற நீதிபதிகள், சாலையை சீரமைக்கத் தவறும் பட்சத்தில், இழப்பீட்டை சுங்கச்சாவடி நிறுவனமே வழங்க உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும் இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எதையும் கண்டு கொள்வதில்லை என்பது நன்றாக தெரிகிறது. அதனால் சுங்கச்சாவடி நிறுவனங்கள் குண்டர்களை வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன என்று கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த வழக்கை, இது போன்று  நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளோடு சேர்த்து சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/சுங்கச்-சாவடிகளில்-குண்டர்களை-வைத்து-வசூல்-உயர்நீதிமன்றம்-எச்சரிக்கை-3096044.html
3096043 மதுரை மதுரை வேட்புமனுவுடன் வாக்குறுதிகளை தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யக் கோரி மனு: அனைத்துக் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு DIN DIN Friday, February 15, 2019 07:17 AM +0530 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குரிய தேர்தல் வாக்குறுதியை வேட்புமனுவுடன் பிரமாணப் பத்திரமாக அளிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் எதிர்மனுதாரராகச் சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:  
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான பல வழக்குகளின் விசாரணையின் போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் மீதான குற்ற வழக்குகள், கல்வித் தகுதி, சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை படிவம் 26-இல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முறையாக நிரப்பப்படாத வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது உறுப்பினராக இருப்பவர்கள் 34 பேரின் வேட்புமனுக்கள் குறைபாடானவை. அவற்றை தேர்தல் அதிகாரிகள் முறையாக பரிசீலிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதாக கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 
ஆனால் மக்களவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஐந்தாண்டுகளுக்கு ரூ.25 கோடியும், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் தொகுதிகள் எதுவும் பெரிய அளவில் மேம்பாடு அடையவில்லை. எனவே ஒவ்வொரு வேட்பாளரும்  தொகுதிக்கு செய்ய விரும்புவதை தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்புமனுவை பரிசீலிக்க உரிய பயிற்சி அளிக்கவும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தான் போட்டியிடும் தொகுதிக்கு, பிரத்யேகமாக தேர்தல் வாக்குறுதியை தனியாக அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை முக்கியமான ஒன்று. எனவே இந்த வழக்கில், பாஜக,  காங்கிரஸ், திமுக , அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்,  பாமக, மதிமுக, தேமுதிக, விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின்  தலைவர்களையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து அவர்களும்,  தலைமை தேர்தல் ஆணையரும்  பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை  பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/வேட்புமனுவுடன்-வாக்குறுதிகளை-தனி-பிரமாணப்-பத்திரமாக-தாக்கல்-செய்யக்-கோரி-மனு-அனைத்துக்-கட்சிகளையும்-3096043.html
3096042 மதுரை மதுரை நெகிழி ஒழிப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு DIN DIN Friday, February 15, 2019 07:17 AM +0530 நெகிழியை தடை செய்ய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் 2018-இல் பிறப்பித்த அரசாணையின்படி தமிழகத்தில் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதமான நெகிழியைப் பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற வரைமுறைகள் தெளிவாக இல்லை. வனத்துறை பயன்படுத்தும் நெகிழியை தனியார் வேளாண்துறையினர் பயன்படுத்த அனுமதி இல்லை. அதே போல பால் பாக்கெட்டுகளாக பயன்படுத்த நெகிழியை அனுமதிக்கும் நிலையில் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு அனுமதி இல்லை. நெகிழி என்பது ஒரே மாதிரியான பொருளே.
மிகக்குறைவான தடிமன் கொண்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தலாமா? என்பது குறித்தும், அவை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி குறித்தும் எவ்வித தகவலும் அரசாணையில் இல்லை. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக விதியின் முக்கிய அம்சங்கள் இந்த அரசாணையில் சேர்க்கப்படவில்லை. அவை சேர்க்கப்பட்டால் மட்டுமே நெகிழிப் பயன்பாடு முழுமையாக ஒழியும். பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து சீல் வைக்கப்பட்டு வரும் நெகிழிப் பொருள்கள் குறித்து அரசாணை 84-இல் எதுவும் குறிப்பிடவில்லை.  இதனால் தமிழக மக்கள் எந்த நெகிழிப் பொருள்களை பயன்படுத்தலாம்? எவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். ஆகவே, நிபுணர் குழுவை அமைத்து முழுமையாக நெகிழியை தடை செய்வதற்கான வழிமுறைகளை கேரளாவில் கையாள்வது போல கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தொடர்பாக நடவடிக்கை கோரியும் எவ்வித பயனுமில்லை. எனவே, நெகிழியை முழுமையாக தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை பெறுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் 
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  மனுதாரர் தரப்பில் ஒருமுறை 
பயன்படுத்தும் நெகிழித் தொடர்பாக எவ்வித வரைமுறையும் 
அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, அனைத்து நெகிழிகளையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், நெகிழியை தடை செய்ய தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. 
 இது போல ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்தால் அது நெகிழி தடையை தாமதப்படுத்தும். இந்த வழக்கில் தமிழக தலைமை செயலரை சேர்த்திருப்பது தேவையற்றது. எனவே அவரை இந்த வழக்கிலிருந்து நீக்கிய நீதிபதிகள்,  மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/15/நெகிழி-ஒழிப்பு-நடவடிக்கைகள்-தமிழக-அரசுக்கு-உயர்நீதிமன்றம்-பாராட்டு-3096042.html
3095657 மதுரை மதுரை உசிலம்பட்டி அருகே நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் DIN DIN Thursday, February 14, 2019 09:22 AM +0530 உசிலம்பட்டி அருகே நூறுநாள் வேலை வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அல்லிகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் நூறு நாள் வேலை கேட்டு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் கிராமசபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, மனு அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, அப்படி ஒருமனு தன்னிடம் வரவில்லை என பதிலளித்தாராம். இதனைக் கண்டித்தும், நூறு நாள் வேலை வழங்கக் கோரியும் மாற்றுத்திறனாளிகள் பெருமாள்கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே  உசிலம்பட்டி-பேரையூர் பிரதான சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காட்டுராஜா, அல்லிகுண்டம் கிளை தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதுகுறித்து தகவலறிந்த பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர்  சூரக்குமாரன், ஆய்வாளர் செல்வகுமாரி உள்ளிட்ட போலீஸார் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நூறு நாள் வேலை மற்றும் வேலை செய்வதற்கான புதிய அட்டையும் வழங்குவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/14/உசிலம்பட்டி-அருகே-நூறு-நாள்-வேலை-கேட்டு-மாற்றுத்திறனாளிகள்-சாலை-மறியல்-3095657.html
3095656 மதுரை மதுரை நாளை "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் DIN DIN Thursday, February 14, 2019 09:21 AM +0530 மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 15) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி வட்டம் - கூடக்கோவில் குரூப், மேலூர் - வஞ்சிநகரம், உசிலம்பட்டி - அல்லிகுண்டம் குரூப்,  மதுரை கிழக்கு - நரசிங்கம் பிட் 1, வாடிப்பட்டி - கல்லாணை, திருமங்கலம் - மேலக்கோட்டை, மதுரை வடக்கு - கள்ளிக்குடி குரூப், பேரையூர் - சின்னபூலாம்பட்டி, மதுரை தெற்கு - விரகனூர் குரூப், மதுரை மேற்கு - கீழமாத்தூர், திருப்பரங்குன்றம் - ஒ.ஆலங்குளம்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/14/நாளை-அம்மா-திட்ட-முகாம்-நடைபெறும்-கிராமங்கள்-3095656.html