Dinamani - ராமநாதபுரம் - https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3059413 மதுரை ராமநாதபுரம் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உத்தரவாதம்  அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தகவல் DIN DIN Monday, December 17, 2018 06:30 AM +0530 ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  
ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலை நிறுத்த போராட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விளக்க பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சாமிஅய்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க  மாவட்டத் தலைவர் முருகேசன்  வரவேற்றார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், அரசுப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பின், கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் அரசு புதிய ஊதிய மாற்றத்தை வழங்கியது. ஆனால், மற்ற முக்கிய கோரிக்கையான சிபிஎஸ் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. 
இதற்காக தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கிய நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை வரும் ஜன. 7 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். தமிழக அரசு எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுக்கவில்லை எனில், அன்றைய தினமே ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகள் கூடி  தொடர் போராட்டத்தை நடத்துவது குறித்து அறிவிப்போம் என்றார்.
இக்கூட்டத்தில், வருவாய்த்துறை சங்க மாவட்டத்தலைவர் பழனிக்குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முனியசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் லாரன்ஸ் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/கோரிக்கைகள்-தொடர்பாக-அரசு-உத்தரவாதம்-அளிக்காவிட்டால்-மீண்டும்-போராட்டம்-ஜாக்டோ---ஜியோ-கூட்டமைப்பு-3059413.html
3059412 மதுரை ராமநாதபுரம் கமுதி அருகே பாலம் சேதம்: போக்குவரத்து துண்டிப்பு DIN DIN Monday, December 17, 2018 06:29 AM +0530 கமுதி அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம்  சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கமுதி அருகே ஆனையூர், சின்ன ஆனையூர், மாங்குடி, சிறுமணியேந்தல், மேலக்கன்னிசேரி, புளியங்குளம் வழியாக சோடனேந்தல், சடையனேந்தலுக்கு செல்லும் வகையில், குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. குண்டாற்று நீர்பிடிப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாததால், ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, பாலத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாலத்தின் கான்கிரீட், சிமென்ட் பூச்சுகள் சேதமடைந்தன. மேலும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் இடிந்தன. 
இதில் சிறு வாகனங்கள் சென்றாலே அதிர்வு ஏற்படுவதால், இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  இதனால் மாற்று பாதையாக மாங்குடி பாலத்தின் வழியாக 12 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/கமுதி-அருகே-பாலம்-சேதம்-போக்குவரத்து-துண்டிப்பு-3059412.html
3059411 மதுரை ராமநாதபுரம் "பெய்ட்டி' புயலால் ரூ. 20 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிப்பு DIN DIN Monday, December 17, 2018 06:28 AM +0530 வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயலால் கடந்த 7 நாள்களாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், ரூ. 20 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று "பெய்ட்டி' புயலாக மாறி உள்ளது. இதனால் கடந்த 7 நாள்களாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். இதன் காரணமாக 10 ஆயிரம் மீனவர்கள், சார்பு தொழிலாளர்கள் என  25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மேலும், புயல் கரையை கடந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் தான் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும். 
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ரூ.20 கோடி மதிப்பிலான இறால் மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட கடல் உணவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/பெய்ட்டி-புயலால்-ரூ-20-கோடி-மதிப்பிலான-மீன்-வர்த்தகம்-பாதிப்பு-3059411.html
3059410 மதுரை ராமநாதபுரம் அனுமதியின்றி மது விற்றவர் கைது DIN DIN Monday, December 17, 2018 06:27 AM +0530 திருவாடானை அருகே அனுமதியின்றி மதுபானம் விற்றவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
 திருவாடானை அருகே உள்ள சூச்சனி கண்மாய் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சார்பு ஆய்வாளர் சதீஸ்குமார், போலீ
ஸார் அங்கு சென்று, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மதுபாட்டில்கள், ரூ.9,300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
மேலும், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த கோனேரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராஜாவை (28), கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/அனுமதியின்றி-மது-விற்றவர்-கைது-3059410.html
3059409 மதுரை ராமநாதபுரம் ரூ.19 கோடி செலவில் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் சீரமைக்கும் பணி தீவிரம் DIN DIN Monday, December 17, 2018 06:27 AM +0530 பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை ரூ. 19 கோடி மதிப்பிட்டில் சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றும், இப்பணிகள் நிறைவடைய மேலும் ஒருமாத காலம் ஆகும் எனவும் ரயில்வே அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 
   ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த தூக்கு பாலம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்றது. 
இந்நிலையில், கடந்த டிச. 4 ஆம் தேதி இப்பாலத்தின் இணைப்புப் பகுதியில் பழுது ஏற்பட்டது. இதனால், ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், அனைத்து ரயில்களும் மண்டபம் வரையே இயக்கப்பட்டன.
 இந்நிலையில், சேதமடைந்த பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை இந்திய ரயில்வே தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் தான் ரயில்களை இயக்கமுடியும் என கண்டறிந்தனர். இதனையடுத்து, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மிகுந்த சிரமத்துக்கிடையே சீரமைப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/ரூ19-கோடி-செலவில்-பாம்பன்-ரயில்-தூக்குப்-பாலம்-சீரமைக்கும்-பணி-தீவிரம்-3059409.html
3059408 மதுரை ராமநாதபுரம் பொதுமக்கள் குடிநீர் வரி செலுத்தாததால் ராமநாதபுரம் நகராட்சியில் நிதிப்பற்றாக்குறை DIN DIN Monday, December 17, 2018 06:27 AM +0530 ராமநாதபுரம் நகராட்சியில் 60 சதவிகிதம் பேர் நடப்பாண்டில் (2018) குடிநீர் வரி செலுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ராமநாதபுரம் நகராட்சியில் 25,540 குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வரிவசூல் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மொத்தம் ஆண்டுக்கு ரூ.3.90 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இணைப்புப் பெற்ற 5,436 கட்டடங்கள் மூலம் ரூ.66 லட்சம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 
 காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீருக்கான இணைப்புப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.101 என கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.65.50 லட்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டான 2018 இல் நகரில் குடிநீருக்கான வரி மட்டும் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தத்தில் 40 சதவிகித வரிவசூலே கிடைத்திருக்கிறது. 
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:  குடிநீர் வரியைச் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நிதியின்றி நகரில் மேம்பாட்டு வசதிகள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் முழுமையான குடிநீர் தேவை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதன்படி தினமும் நபருக்கு 60 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. 
கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ராமநாதபுரம் நகராட்சியில் மக்கள் தொகை 64,257 என்ற நிலையில் இருந்துள்ளனர். தற்போது அதில் 10 ஆயிரத்துக்குள் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. நகராட்சியிலிருந்து ஊரகப் பகுதிகளில் மக்கள் குடியேறுவதால் நகராட்சியில் மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
இந்நிலையில், நகராட்சி வார்டுகளை 33க்கும் மேல் உயர்த்தும் வகையில் பட்டிணம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல், ஆர்.எஸ்.மடை உள்ளிட்ட சில பகுதிகளை இணைக்கவும், அதன்படி நகராட்சியை சிறப்பு தேர்வு நிலைப் பேரூராட்சியாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/பொதுமக்கள்-குடிநீர்-வரி-செலுத்தாததால்ராமநாதபுரம்-நகராட்சியில்-நிதிப்பற்றாக்குறை-3059408.html
3059407 மதுரை ராமநாதபுரம் நீதித்துறை வலுவிழந்தால் ஜனநாயகம் வலுவிழந்துவிடும்: நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் DIN DIN Monday, December 17, 2018 06:26 AM +0530 நீதித்துறை வலுவிழந்தால் ஜனநாயகம் வலுவிழந்துவிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசினார். 
ராமேசுவரத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு,நூலக கட்டடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்றம் கட்ட தமிழக அரசு ரூ. 6.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் என்.செல்வராஜ் திட்ட உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணயின் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:
நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் நிர்பந்தம், உரிமை மறுக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளாக வருகின்றனர். அவர்களுக்கு வழக்குரைஞர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். வழக்குரைஞர் தொழில் புனிதமானது. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவது நீதிமன்றம். நீதித்துறை வழுவிழந்தால் ஜனநாயகம் வழுவிழந்து விடும் என்றார். அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியது:
தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சட்டக் கல்லூரி வந்து விட்டது. அதற்கு ரூ. 77 கோடியில் விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும். மேலும், மருத்துவக் கல்லூரி கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து  விமானப்படைதளத்தை விரிவுபடுத்தி பயணிகள் விமான போக்குவரத்தை கொண்டு வர மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துமாரி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் ஜோதிமுருகன், ரவிசந்திர ராமவன்னி, பொதுப்பணித்துறை பொறியாளர் குருதிவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி 
வரவேற்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/நீதித்துறை-வலுவிழந்தால்-ஜனநாயகம்-வலுவிழந்துவிடும்-நீதிபதி-ஆர்சுப்பிரமணியன்-3059407.html
3059406 மதுரை ராமநாதபுரம் அஞ்சுகோட்டை- பாண்டுகுடி சாலையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை DIN DIN Monday, December 17, 2018 06:26 AM +0530 திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் இருந்து பாண்டுகுடி செல்லும் சாலையில் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் உள்ளது அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பகுதிகள். இவ்வழியாகத்தான் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலம், எஸ்.பி.பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லவேண்டும். மேலும் இப்பகுதியில் பள்ளிகள் ஆலயங்கள் அதிகமாக உள்ளன. 
இதில் அஞ்சுகோட்டையில் இருந்து பாண்டுகுடி செல்லும் சாலையில் இருபுறமும் காட்டுகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றில் உள்ள முள் சாலையின் ஓரத்தில் ஒதுங்கும் வாகன ஓட்டிகளை குத்தி காயப்படுத்துகின்றன. 
இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிக்குள்ளாகின்றனர். 
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தனிக்கவனம் செலுத்தி இவற்றை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/அஞ்சுகோட்டை--பாண்டுகுடி-சாலையில்சீமைக்கருவேல-மரங்களை-அகற்றக்-கோரிக்கை-3059406.html
3059405 மதுரை ராமநாதபுரம் டி.எஸ்.பி அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை DIN DIN Monday, December 17, 2018 06:25 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட  சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
 முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சுமார் 10 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது இயங்கி வரும் கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் காவல்துறையினர் அவதிப்படுகின்றனர். இதையடுத்து முதுகுளத்தூர் காவல் நிலையம் அருகே புதிய அலுவலகம் கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. அதே போன்று பேரையூர் கிராமத்தில் பழைய கட்டடத்தில்  இயங்கி வரும் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என டி.எஸ்.பி உதயசூரியன் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/டிஎஸ்பி-அலுவலக-புதிய-கட்டடத்துக்கு-பூமி-பூஜை-3059405.html
3059404 மதுரை ராமநாதபுரம் கமுதி-குண்டுகுளம் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை DIN DIN Monday, December 17, 2018 06:25 AM +0530 கமுதி அருகே குண்டுகுளம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியிலிருந்து அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமானேந்தல், பூமாவிலங்கை, குண்டுகுளம், ஒழுகுபுலி, வண்ணாங்குளம்,  கே.வேப்பங்குளம், பம்மனேந்தல், கீழமாவிலங்கை, கீழ்க்குடி, கள்ளக்கரி, கே.வாகைக்குளம், சோலாங்கி, பாசிகுளம், புரசலூர், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, பாப்பாங்குளம், குடிக்கினியான் வழியாக மீண்டும் கமுதிக்கு வந்தடையும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த அரசுப் பேருந்துகளை நம்பியே நகர்புறங்களுக்கு சென்று வருகின்றனர். 
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலைகள் எதிரெதிரே வாகனங்கள் வந்தால் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு குறுகியதாக உள்ளது. இதனால்  இவ்வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக தேர்வுகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியடைந்தனர். 
சில நேரங்களில் இவ்வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்படுவதால், மாணவர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கமுதிக்கு வருகின்றனர்.  
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குறுகலாக உள்ள கமுதி- குண்டுகுளம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/கமுதி-குண்டுகுளம்-சாலையை-அகலப்படுத்தக்-கோரிக்கை-3059404.html
3059403 மதுரை ராமநாதபுரம் தேசியத் திறனறி தேர்வில் 3,250 மாணவர்கள் பங்கேற்பு DIN DIN Monday, December 17, 2018 06:25 AM +0530 ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த தேசிய திறனறித் தேர்வில் 7 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்  3,250 பேர் பங்கேற்றனர்.
கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவில் 50 சதவிகிதமும்,   இதர வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 
இதில் மனத்திறன், கல்வியறிவு எனும் இரு பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 2 படிக்கும் வரை ஆண்டு தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இத்தேர்வில் 160 பேர் தேர்ச்சி பெற்று உதவித் தொகை பெற்றுவருகின்றனர். 
நடப்பாண்டுக்கான (2018-19) தேசியத் திறனறித் தேர்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த தேர்வுக்கு 3,356 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தேர்வுக்கு 3,250 பேர் மட்டுமே வந்திருந்தனர். 
தேர்வுக்கு 106 பேர் வரவில்லை. ராமநாதபுரத்தில் மட்டும் 2 தேர்வு மையங்களில் 408 பேர் தேர்வை எழுதினர். திருவாடானையில் அதிகபட்சமாக 331 பேரும், குறைந்தபட்சமாக ராமேசுவரத்தில் 189 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்கான தேர்ச்சி பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஓரிரு மாதங்களில் அரசால் அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
தேர்வுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் செய்திருந்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/தேசியத்-திறனறி-தேர்வில்3250-மாணவர்கள்-பங்கேற்பு-3059403.html
3059402 மதுரை ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் பள்ளி மாணவர்கள் மரபு நடை பயணம் DIN DIN Monday, December 17, 2018 06:24 AM +0530 திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடியில் பள்ளி மாணவ - மாணவிகளின் மரபு நடை பயண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் சார்பில் 11 ஆவது மரபுநடை நிகழ்வு திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு தலைமையில், தேவிபட்டிணம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ராஜகுரு பேசியது:
திருப்பாலைக்குடி பேருந்து நிறுத்தம் பகுதி பழங்கோட்டை என அழைக்கப்படுகிறது. இங்கு பழமையான கோட்டை இருந்து அழிந்திருக்கலாம். சிவன் கோயிலின் அருகில் உள்ள அய்யனார் கோயில் பகுதியில் இடைக்காலப் பானைஓடுகள், போர்சலின் வகை சீனப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி. 1281ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டில், மருதூர் என்ற மானாபரணபட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அது, இந்த ஊரின் வேறு பெயர்களாக இருக்கலாம். இவ்வூர் பாலை மரங்கள் நிறைந்த குடியிருப்பு எனும் பொருளில் திருப்பாலைக்குடி என பெயர்பெற்றுள்ளது என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மரபு நடை அமைப்பாளர் பொறியாளர் அரியநாயகம், ஆசிரியர்கள் சுதர்சன், சந்தியா ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக ஆய்வு நிறுவன செயலாளர் ஞானகாளிமுத்து வரவேற்றார். மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ் சங்கர் நன்றி கூறினார். 
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/திருப்பாலைக்குடியில்-பள்ளி-மாணவர்கள்-மரபு-நடை-பயணம்-3059402.html
3059401 மதுரை ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம் DIN DIN Monday, December 17, 2018 06:24 AM +0530 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் மாநில துணைத் தலைவர் அப்துர்ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி திருக்குரான் மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. அதில் சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகளான வரதட்சணை, கந்துவட்டி, மது போதைகள் ஆகியவற்றுக்கான தீர்வு குறித்து விளக்கப்படும். 
வரும் தேர்தல்களில் யார் இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடை அறிவிக்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவளிப்போம் என்றார். பேட்டியின்போது தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலர் பைசல், மாவட்டத்தலைவர் அயூப், துணைச்செயலர் ஜே.எம்.ஆரிப்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/தவ்ஹீத்-ஜமாஅத்-செயல்வீரர்கள்-கூட்டம்-3059401.html
3059400 மதுரை ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் நிரந்தர ஆணையாளரை நியமிக்க வலியுறுத்தல் DIN DIN Monday, December 17, 2018 06:23 AM +0530 பரமக்குடி நகராட்சியில் நிரந்தர ஆணையாளரை நியமிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.பி.ராதா தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.முருகபூபதி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள், துணைத் தலைவர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கே.ராஜன் பேசினார். இதில் பரமக்குடி நகராட்சியில் காலியாக உள்ள ஆணையாளர் பணியிடத்தில் உடனடியாக நிரந்தர ஆணையாளரை நியமிக்க வேண்டும். பரமக்குடி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நூலக கட்டடம் இடிந்து விழுந்ததில் நூலகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் வைப்பதற்கு உடனுக்குடன் இடம் தேர்வு செய்யும் அரசு நூலகக் கட்டடம் கட்ட காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.  
கைத்தறி நலவாரியத்தில் கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை காப்பாற்ற அரசு மானியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜி.லோகநாதன், ஆர்.ரமணி, போக்குவரத்து சங்க செயலாளர் சி.செல்வராஜ், தினகரன், வெங்கடசாமிராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/பரமக்குடி-நகராட்சியில்-நிரந்தர-ஆணையாளரை-நியமிக்க-வலியுறுத்தல்-3059400.html
3059399 மதுரை ராமநாதபுரம் சேதமடைந்த காலனி வீடுகள்: நரிக்குறவர் சமுதாய மக்கள் தவிப்பு DIN DIN Monday, December 17, 2018 06:23 AM +0530 திருவாடானை அருகே வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நரிக்குறவர்கள் காலனி மக்கள் தவித்து வருகின்றனர். 
திருவாடானை ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு சுமார் 185 குடும்பங்கள் உள்ளன. கடந்த 1996 ஆம் ஆண்டு சுமார் 36 வீடுகள் இவர்களுக்கு அரசால் கட்டி கொடுக்கப்பட்டன. இந்நிலையில் வீடுகள் எந்தவித பராமரிப்பும் இன்றி பெரும்பாலானவை இடிந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை  புகார்கள் தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் காலப்போக்கில் இதில் சில வீடுகள் இடிந்து விழுந்தன.தற்போது இங்கு வசிப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக பெருகி 150-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.  மழைக் காலங்களில் பள்ளி, கோயில்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து நரிக்குறவர் சங்கத் தலைவர் செல்வம் கூறியது:  எங்களுக்கென்று ட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் சில ஆண்டுகளில் சேதமடைந்தன. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் காலனி அருகே அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அதில் 152 பேருக்கு பட்டா வழங்கியும் அளந்து கொடுக்காமல் தற்போது ரத்து செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.  எனவே வரும் 29 ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்ய உள்ளோம் என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் கூறுகையில், எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் நாங்களும் வட்டாட்சியரும் நேரில் ஆய்வு செய்தோம். தற்போது நரிக்குறவர்கள் காலனியில் உள்ள 36 வீடுகளும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் அனைவருக்கும் புதிய வீடுகட்டி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த 36 பேருக்கும் தனித்தனியாக விண்ணப்பம், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், பட்டா நகல் ஆகியவற்றுடன் அலுவலகத்துக்கு  வரும்படி தெரிவித்துள்ளோம் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/17/சேதமடைந்த-காலனி-வீடுகள்-நரிக்குறவர்-சமுதாய-மக்கள்-தவிப்பு-3059399.html
3058856 மதுரை ராமநாதபுரம் இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் DIN DIN Sunday, December 16, 2018 01:35 AM +0530
இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கடலோர காவல் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராமேசுவரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பிடிக்கப்பட்டு வருவதாக மண்டபம் கடலோர காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற காவல் படையினர் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் பெரிய பிளாஸ்டிக் கேனில் 60 கிலோ கடல் அட்டை உயிருடன் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மண்டபத்தை சேர்ந்த சகுபர்சாதீக் (20) என்பதும், கடல் அட்டைகளை இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கடல் அட்டைகளையும், அவற்றைக் கடத்த முயன்ற சகுபர்சாதீக்கையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து சகுபர் சாதீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/இலங்கைக்கு-கடத்த-முயன்ற-60-கிலோ-கடல்-அட்டைகள்-பறிமுதல்-3058856.html
3058854 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரம் அருகே குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு DIN DIN Sunday, December 16, 2018 01:35 AM +0530
ராமேசுவரத்தை அருகே உள்ள அக்காள் மடம் கிராமத்தில் உள்ள கிணற்று நீரை 500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை கிணற்றுக்கு அருகே சில பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளன. அதே நேரத்தில் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரிலும் மருந்து கலந்த நெடி அடித்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஊராட்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி அலுவலர்கள் தண்ணீரை ஆய்வு செய்த போது, அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கும் காவல் துறையினருக்கும் ஊராட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மோட்டர் மூலம் கிணற்றில் இருந்த விஷம் கலந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்றினர். மேலும் உரிய நேரத்தில் தெரிய வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/ராமேசுவரம்-அருகே-குடிநீர்-கிணற்றில்-விஷம்-கலப்பு-3058854.html
3058815 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூரில் 15 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் DIN DIN Sunday, December 16, 2018 01:24 AM +0530
முதுகுளத்தூர் பகுதியில் 15 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் முதுகுளத்தூர், காக்கூர், செல்வநாயகபுரம், அலங்கானூர், கீழத்தூவல், திருவரங்கம், தேரிருவேலி ஆகிய 8 பள்ளிகளில் பயிலும் 1,503 மாணவ, மாணவிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எம்.மணிகண்டன் வழங்கி பேசியதாவது:
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் திரையில் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் ஸ்மாட் வகுப்புகள் தொடங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி மூலம் விரைவில் 5ஜி இணைப்பு கொடுக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டே தங்களது படிப்பு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திட்டம் வர உள்ளது. முதுகுளத்தூர் பகுதியில் 15 ஆரோபிளான்ட் (குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்) திட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், வட்டாட்சியர் மீனாட்சி, முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், கடலாடி அதிமுக ஒன்றியச் செயலர் முனியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர் வாழ்த்திப் பேசினார். அதே போன்று கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலாடி, சாயல்குடி, ஏர்வாடி, சிக்கல், மேலக்கிடாரம், மாரியூர், டி.எம்.கோட்டை, உச்சிநத்தம், எஸ்.தரைக்குடி, கன்னிராஜபுரம் உள்ளிட்ட 11 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2,541 விலையில்லா சைக்கிள்களை ரூ.94 லட்சம் மதிப்பில் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/முதுகுளத்தூரில்-15-இடங்களில்-குடிநீர்-சுத்திகரிப்பு-நிலையங்கள்-3058815.html
3058814 மதுரை ராமநாதபுரம் ஊராட்சிகளில் நூறுநாள் வேலைக்கான சம்பளம் வழங்க பயனாளிகள் கோரிக்கை DIN DIN Sunday, December 16, 2018 01:23 AM +0530
கமுதி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்த வேலைக்கான சம்பளம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாததால் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தினமும் காத்திருப்பதாக பயனாளிகள் புகார் தெரித்துள்ளனர்.
கமுதி அருகே கழுவன்பொட்டல், இடைச்சியூரணி, முத்தாலங்குளம், மண்டலமாணிக்கம், பேரையூர் காலனி கிராமங்களைச் சேர்ந்த நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் சிலருக்கு, கடந்த 3 மாதங்களாக செய்த வேலைக்கான சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இதனால் இத்திட்டத்தின்கீழ் வேலை பெற முடியாமல், செய்த வேலைக்கான பணத்தையும் பெற முடியாமல், தினமும் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக நூறு நாள் வேலைத்திட்ட அலுவலகத்துக்கு பயனாளிகள் அலைந்த வண்ணம் உள்ளனர்.
வறட்சியின்பிடியில் சிக்கித் தவித்து வரும் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு வாரந்தோறும் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைப்பதை போன்று, தங்களுக்கும் வரவு வைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/ஊராட்சிகளில்-நூறுநாள்-வேலைக்கான-சம்பளம்-வழங்க-பயனாளிகள்-கோரிக்கை-3058814.html
3058813 மதுரை ராமநாதபுரம் கடலாடியில் விவசாயிகளுக்கு வேளாண்மை பயிற்சி முகாம் DIN DIN Sunday, December 16, 2018 01:23 AM +0530
கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கடுகுசந்தை கிராமத்தில் 2018- 2019 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகள் குறித்த தொழில்நுட்ப வேளாண்மை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முருகேஸ்வரி (பொ) தலைமை வகித்தார். முகாமில் பயிர் பாதுகாப்பு , மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்கும்போது கட்டாயம் பாதுகாப்பான முறையில் தெளிக்க பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் முருகன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதில் ஓய்வுபெற்ற துணை இயக்குநர் பிச்சை கூறியது: பயிர் பாதுகாப்பு மருந்துகளை காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் இருப்பின் வேளாண்மைத்துறை கண்காணிப்பாளர்களை அணுகி பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை தெளிக்க வேண்டும். பச்சை நிற முக்கோணம் வடிவம் கொண்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.
இப்பயிற்சி முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரீஸ்வரன், அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி நாகலிங்கம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/கடலாடியில்-விவசாயிகளுக்கு-வேளாண்மை-பயிற்சி-முகாம்-3058813.html
3058812 மதுரை ராமநாதபுரம் லாரி மீது கார் மோதல் தனியார் விடுதி உரிமையாளர் சாவு DIN DIN Sunday, December 16, 2018 01:23 AM +0530
பரமக்குடி அருகே சனிக்கிழமை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் தனியார் விடுதி உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அல்லாபிச்சை மகன் முத்துநயினார்(68). இவர் பரமக்குடியில் தனியார் விடுதியும், கூரியர் சர்வீஸ் முகவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இவரது மகன் ஹக்கீமுடன் காரில் மதுரை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தார். மேலப்பெருங்கரை பகுதியில் வந்துகொண்டிருந்த போது, சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் முத்துநயினார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ஹக்கீம் காயமடைந்தார். அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/லாரி-மீது-கார்-மோதல்-தனியார்-விடுதி-உரிமையாளர்-சாவு-3058812.html
3058811 மதுரை ராமநாதபுரம் மணல் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்: இருவர் கைது DIN DIN Sunday, December 16, 2018 01:23 AM +0530
திருவாடானை அருகே மணல் கடத்திய 2 வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாடானை அருகே நெடுமரம் மயானப் பகுதியில் அரசு அனுமதியின்றி சேமித்து வைத்திருந்த ஆற்று மணலை கடத்துவதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் பேரில் வெள்ளிக்கிழமை இரவு திருவாடானை காவல்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும், பொக்லைன் ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கோபிநாத் (24), டிப்பர் லாரி ஓட்டுநர் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வீரசேகரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/மணல்-கடத்திய-2-வாகனங்கள்-பறிமுதல்-இருவர்-கைது-3058811.html
3058810 மதுரை ராமநாதபுரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை DIN DIN Sunday, December 16, 2018 01:23 AM +0530
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச வழக்கில் கைதான வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமாலின் பரமக்குடி வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விடிய, விடிய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
ஆர்.எஸ்.மங்களம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீடு கட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமாலிடம் அனுமதி கோரியுள்ளார். இதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய போது வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமால் மற்றும் ஊராட்சி செயலாளர் மாணிக்கம் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆணையாளர் பச்சம்மாலின் பரமக்குடியில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் தலைமையில், ஆய்வாளர்கள் ஜானகி, வானதி மற்றும் போலீஸார் விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள்சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/லஞ்சம்-பெற்ற-வழக்கில்-கைதான-வட்டார-வளர்ச்சி-அலுவலர்-வீட்டில்-லஞ்ச-ஒழிப்புத்துறை-போலீஸார்-சோதனை-3058810.html
3058809 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரம் கடற்கரை காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் போலீஸார் அவதி DIN DIN Sunday, December 16, 2018 01:22 AM +0530
ராமேசுவரத்தில் கடற்கரை காவல்நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் போலீஸார் அவதி அடைந்துள்ளனர்.
ராமேசுவரத்தில் நகர் காவல் நிலையம், கோயில் காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையம் மற்றும் கடற்கரை காவல் நிலையம் என நான்கு காவல் நிலையங்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் கடற்கரை காவல் நிலையம் முதலில் கடற்கரை பகுதியில் செயல்பட்டு வந்தது.
அங்கு கட்டடம் முழுமையாக சேதமடைந்த நிலையில் ரயில்வே நிலையத்துக்கு செல்லும் வழியில் சத்துணவு மையம் செயல்பட்டு வந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த கட்டடத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. பழமையான கட்டடம் என்பதால் மழை காலத்தில் மழைநீர் உள்ளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் ஆவணங்களை பாதுகாப்பாக பரமரிக்க முடியவில்லை. மேலும் கணினி உள்ளிட்டவற்றையும் பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. விசாரணைக்கு அழைத்து வருபவர்களை பாதுகாப்புடன் வைக்க தேவையானவசதிகள் இல்லை.
இதனால் விசாரணை அழைத்து வரப்படுபவர்கள் அடிக்கடி தப்பிச் செல்லும் நிலையில் அவர்களை விரட்டி பிடிக்கும் அவலமும் காணப்படுவதாக காவலர் ஒருவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் புதிய காவல் நிலையம் கட்ட தனுஷ்கோடி செல்லும் வழியில் 19 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/ராமேசுவரம்-கடற்கரை-காவல்-நிலையத்தில்-அடிப்படை-வசதிகள்-இல்லாததால்-போலீஸார்-அவதி-3058809.html
3058808 மதுரை ராமநாதபுரம் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, December 16, 2018 01:22 AM +0530
 சிக்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக தலைவர் எஸ். முகம்மது இக்பால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகம்மது முஹிதுல்லாஹ், தமுமுக மாவட்டச் செயலாளர் ந.தாஜ் முகம்மது, மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதை சீரமைக்க வேண்டும். சாலையோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். பிரதான சாலையின் இருபுறமும் திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்களை மூட வேண்டும். சிக்கலிலிருந்து ஆண்டிச்சிகுளம் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்., பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் எம். ஹூஸைன் கனி, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வட்டார குழு உறுப்பினர் சுப்பிரமணியன், டி.ஓய்.எப்.ஐ அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர் நன்றி தெரிவித்தார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/மனிதநேய-மக்கள்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3058808.html
3058807 மதுரை ராமநாதபுரம் அரசுத் திட்டங்களை எதிர்க்கும் சினிமாக்காரர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் DIN DIN Sunday, December 16, 2018 01:22 AM +0530
: அரசுத் திட்டங்களை எதிர்க்கும் சினிமாக்காரர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கமுதி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 2,203 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அவர் பேசியது: அரசின் இலவச திட்டங்களை தாக்கி வெளியாகும் சினிமாக்களை மாணவர்கள் ஆதரிக்கக் கூடாது. அரசுத் திட்டங்களை எதிர்க்கும் சினிமாக்காரர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும். அரசு மாணவர்களுக்காக விலையில்லா மிதி வண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகம், சீருடை, உள்ளிட்ட 14 வகையான இலவச பொருள்களை வழங்கி வருகிறது. மடிக்கணினி மூலம் மாணவர்களே தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை வரும் காலத்தில் பதிவிறக்கும் செய்து கொள்ளும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 3,000 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் 3,000 மேல்நிலைப் பள்ளிகளுக்கு பொலிவுறு வகுப்புகள் (ஸ்மார்ட் கிளாஸ்) திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். மாவட்ட மக்களின் குறைகளை கணடறிந்து நிறைவேற்றி வருகிறேன் என்றார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/அரசுத்-திட்டங்களை-எதிர்க்கும்-சினிமாக்காரர்கள்-முகத்தில்-கரியை-பூச-வேண்டும்-3058807.html
3058806 மதுரை ராமநாதபுரம் கொடுக்கல் வாங்கல் தகராறு பெண்ணை தாக்கிய 2 பேர் கைது DIN DIN Sunday, December 16, 2018 01:22 AM +0530
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடி அருகே எம்.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி செல்வராணி(60). இவரது மகன் சதிஷ்குமார், சிவகங்கை மாவட்டம் பெரியாணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகேசனிடம் கடன் வாங்கியுள்ளார். அதைத் திருப்பித் தருமாறு பலமுறை முருகேசன் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சனிக்கிழமை முருகேசன் மற்றும் அவருக்கு ஆதரவாக சுப்பிரமணி மகன் பூபாலன், காட்டு எமனேசுவரத்தைச் சேர்ந்த ஆதிக்கம் மகன் பால்பாண்டி(32), விரதக்குளத்தைச் சேர்ந்த பாக்கியசாமி மகன் முருகேசன்(35) ஆகிய 4 பேரும் செல்வராணியின் வீட்டிற்குச் சென்று பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் வீட்டின் ஜன்னல் கண்ணாடி கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வராணி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செல்வராணி அளித்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து, பாக்கியசாமி மகன் முருகேசன், பால்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/கொடுக்கல்-வாங்கல்-தகராறு-பெண்ணை-தாக்கிய-2-பேர்-கைது-3058806.html
3058805 மதுரை ராமநாதபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Sunday, December 16, 2018 01:21 AM +0530
கமுதி அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே கருங்குளம் கிராம காளியம்மன் கோயில் கலசம் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருடப்பட்டது.
இதையடுத்து, கிராமத்தின் சார்பில் கோயிலில் புதிய கலசம் வைத்து, ஆறு கால யாகசாலை வேள்விகளுடன் கிராம தலைவர் நாகரத்தினம் தலைமையிலும், செயலர் மலைச்சாமி, பொருளாளர் முருகன் முன்னிலையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அபிஷேகம், செய்யப்பட்டு பொங்கல் வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/16/காளியம்மன்-கோயில்-கும்பாபிஷேகம்-3058805.html
3058106 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காவல்துறை பாதுகாப்புடன் மகாலட்சுமி தீர்த்தம் மாற்றம் DIN DIN Saturday, December 15, 2018 01:05 AM +0530
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காவல்துறை பாதுகாப்புடன் மகாலட்சுமி தீர்த்தம் வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.
இக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் கூட்ட நேரத்தின் போது பக்தர்களின் பாதுகாப்பு கருதி 6 தீர்த்தங்கள் அடைக்கப்படும். இதனையடுத்து, புக்தர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் பாதுகாப்புடன் நீராட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதனை ஏற்று கூட்ட நேரத்தில் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகும் 6 தீர்த்தங்கள் கண்டறியப்பட்டு அந்த தீர்த்தங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 6 புதிய தீர்த்தங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் 5 தீர்த்தங்கள் மட்டும் திறக்கப்பட்டன. முதல் தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தத்தை மட்டும் திறக்க காலதாமதம் ஆனது.
இதனையடுத்து, மகாலட்சுமி தீர்த்தத்தை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வியாழக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகசாலை முடிந்தவுடன் வடக்கு கோபுரம் முன் அமைக்கப்பட்ட மகாலட்சுமி தீர்த்தத்தில் புனித நீர் ஊற்றி பக்தர்கள் வசதிக்காக திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தலாம் என்பதால் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். இதில் இணைஆணையர் கோ.செ.மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ராமமூர்த்தி, கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன் மற்றும் தலைமை குருக்கள் உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட வரும் பக்தர்கள் வடக்கு ராஜாகோபுர வாசல் பகுதியில் சென்று புனித நீராடி விட்டு மீண்டும் அதே வாசல் பகுதியில் வெளியே வரலாம். இதனால் கோயில் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை. மேலும் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கிழக்கு வாசல் சுவாமி சன்னதி வழியே சென்று விட்டு சுவாமி தரிசனம் செய்த பின்பு அம்பாள் சன்னதி வாசல் வழியே வெளியே வரலாம் என இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி தெரிவித்தார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/ராமேசுவரம்-ராமநாதசுவாமி-கோயிலில்-காவல்துறை-பாதுகாப்புடன்-மகாலட்சுமி-தீர்த்தம்-மாற்றம்-3058106.html
3058105 மதுரை ராமநாதபுரம் அரசுப் பேருந்து நடத்துநர் குடிபோதையில் பயணிகளிடம் தகராறு: துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை DIN DIN Saturday, December 15, 2018 01:05 AM +0530
நாகப்பட்டிணத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த நடத்துநர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டிணத்திலிருந்து வியாழக்கிழமை இரவு திருவனந்தபுரம் நோக்கி அரசு விரைவுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தில் ஓட்டுநர் விக்டர் ஏறிய நிலையில், நடத்துநர் தனபாலைக் காணவில்லையாம். அவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது, ஊருக்கு வெளியே நிற்பதாக கூறியுள்ளார். பின்னர் ஓட்டுநர், நடத்துநர் தனபாலை பேருந்தில் ஏற்றியுள்ளார்.
பேருந்தில் ஏறிய தனபால், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபோது கட்டணத் தொகை போக மீதிப் பணத்தை கொடுக்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்த பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்துமாறு பயணிகள் கூறியதையடுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் கலையரசன் விசாரணை நடத்திய போது பேருந்து நடத்துநர் தனபால் குடிபோதையில் இருந்தாராம். இதனால், அவர் மீது பயணிகள் சார்பில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்கப்பட்டது.
நடத்துநர் தனபால் நடவடிக்கை குறித்து காவல் நிலையம் சார்பில் ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நடத்துநர் தனபாலை பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், அவர் குடிபோதையில் இருந்ததற்கான மருத்துவச் சான்றைப் பெற்று போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட பரிசோதனை முடிவு அடிப்படையில் தனபால் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் வேறு ஒரு நடத்துநர் நியமிக்கப்பட்டு திருவனந்தபுரத்துக்கு பேருந்து செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/அரசுப்-பேருந்து-நடத்துநர்-குடிபோதையில்-பயணிகளிடம்-தகராறு-துறைரீதியாக-நடவடிக்கை-எடுக்க-பரிந்துரை-3058105.html
3058104 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் இன்று மின்தடை DIN DIN Saturday, December 15, 2018 01:05 AM +0530
ஆர்.எஸ்.மடை, ராமநாதபுரம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ராமநாதபுரம் நகர் செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆர்.எஸ்.மடை, ராமநாதபுரம், ரெகுநாதபுரம், தேவிபட்டிணம், ஆர்.காவனூர் ஆகிய உபமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மின்தடைப் பகுதிகள் விவரம்: ராமநாதபுரம் நகராட்சி அரண்மனை, புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டிணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி.
திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன்நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வண்ணிக்குடி.
ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனாமரைக்கான் உள்ளிட்ட கிராமங்கள்.
தேவிபட்டிணம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள்.
மேலும் ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கல், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/ராமநாதபுரத்தில்-இன்று-மின்தடை-3058104.html
3058103 மதுரை ராமநாதபுரம் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு DIN DIN Saturday, December 15, 2018 01:04 AM +0530
திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல் மனைவி லட்சுமி (53). இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இதனை அறிந்து மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடி சென்று விட்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை லட்சுமி திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/வீட்டின்-பூட்டை-உடைத்து-4-பவுன்-நகைகள்-திருட்டு-3058103.html
3058102 மதுரை ராமநாதபுரம் மாநிலப் பேச்சுப் போட்டிக்கு ராமநாதபுரம் மாணவி தேர்வு DIN DIN Saturday, December 15, 2018 01:04 AM +0530
நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்ற சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி தேவிகா முதல்பரிசைப் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நேரு யுவகேந்திரா சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடந்த இப்போட்டியில் தேசப்பற்று மற்றும் தேசிய நிர்மாணம் எனும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர் பேசினர்.
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி தேவிகா முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி மாணவி பவானி இரண்டாமிடம் பெற்றார்.
அவருக்கு ரூ.2 ஆயிரமும், பாராட்டுச்சான்றும் வழங்கப்பட்டது. கமுதி தேவர் நினைவுக் கல்லூரி மாணவி வாசுகி மூன்றாமிடம் பெற்றார். அவருக்கு ரூ. 1000 ரொக்கமும், பாராட்டுசான்றும் வழங்கப்பட்டது.
பரிசு பெற்றவர்களில் முதலிடம் வகித்த மாணவி தேவிகா மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேருயுவகேந்திரா சங்கத்தின் துணைத் தலைவர் மு.சடாசரவேல் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி முதல்வர் டோலரோஸ்மேரி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் நேருயுவகேந்திரா திட்ட அலுவலர் சதீஷ்குமார் விளக்கவுரையாற்றினார். சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி தாளாளர் மனோகரன் மார்டின் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஆனந்த் நன்றி கூறினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/மாநிலப்-பேச்சுப்-போட்டிக்கு-ராமநாதபுரம்-மாணவி-தேர்வு-3058102.html
3058101 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு: எதிர்ப்புத் தெரிவித்து தாய், மகள்கள் தீக்குளிக்க முயற்சி DIN DIN Saturday, December 15, 2018 01:04 AM +0530
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் பரமக்குடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது அதில் வசித்து வந்த தாய் மற்றும் மகள்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் உமாபதி (42). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கீதா (30). அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ரிசிகா (15), காசிகா (10) என்ற இரு மகள்கள் உள்ளனர். உமாபதியின் தந்தை தங்கவேல் அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதற்காக அவரது பெயரில் நகராட்சியில் வீட்டுவரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த வீட்டில் தற்போது உமாபதி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கும், இவர்களது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் விஜய்பாபுவுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அவர்கள் கட்டியுள்ளதை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விஜய்பாபு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பை அகற்றியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து வந்துள்ளனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் அமல்படுத்த வில்லை என மனுதாரர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளை எச்சரித்ததுடன், வரும் டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை அகற்ற வேண்டும் என மறு உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் என்.பரமசிவம் தலைமையில் வருவாய்த்துறையினர், நகராட்சி நகரமைப்பு அலுவலர் கே.சரோஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் போலீஸாருடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அங்கு கீதா அவரது மாமியார் லட்சுமி (70) மற்றும் குழந்தைகள் வீட்டை காலி செய்ய முடியாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் உள்ள பொருள்களை அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்கள் முயன்றபோது, வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு குழந்தைகளுடன் கீதா மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப்பார்த்த அதிகாரிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கீதா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்பு வீட்டுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு முற்றிலும் இடித்துதள்ளப்பட்டது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/பரமக்குடியில்-ஆக்கிரமித்து-கட்டப்பட்ட-வீடு-இடிப்பு-எதிர்ப்புத்-தெரிவித்து-தாய்-மகள்கள்-தீக்குளிக்க-3058101.html
3058100 மதுரை ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, December 15, 2018 01:03 AM +0530
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வசதிகள் வேண்டும் என்பன போன்ற 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாள்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் க.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் எஸ்.அசோக்குமார் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
ராமநாதபுரத்தில் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலகம் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/கிராம-நிர்வாக-அலுவலர்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-3058100.html
3058099 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி அனைத்துக் கட்சியினர் தர்னா போராட்டம் DIN DIN Saturday, December 15, 2018 01:03 AM +0530
முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி மற்றும் கமுதி பகுதியில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை உடனே வழங்கக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு முதுகுளத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். தென் மண்டல ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எம்.மதுரைவீரன் தொடக்கவுரையாற்றினார். விவசாயக் கட்சி வட்டாரத் தலைவர் பெ.சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலர் கண்ணுச்சாமி ,காங்கிரஸ் நகர் தலைவர் என்.சுரேஸ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் பேசியது: காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். முதுகுளத்தூர், கடலாடி ,சாயல்குடி, கமுதி பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் 2017-2018ம் ஆண்டிற்கான பயிர் இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் ரூ.1லட்சம் நிதி அளிக்க வேண்டும். இலவச மின்சாரத்தை கூடுதலாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் நான்காவது இடத்தில் உள்ள முதுகுளத்தூர் பெரிய கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 கண்மாய்களையும் தூர் வார நிதி ஒதுக்கி மராமத்து பணியை செய்யவேண்டும் என்றார். முன்னதாக வட்டார செயலர் சி.குப்புசாமி வரவேற்றார். முதுகுளத்தூர் வட்டார பொருளாளர் கே.ஆர்.கண்ணன் நன்றி கூறினார்.
போராட்டத்தில் விவசாய கட்சியினர், அதிமுகவினர், அ.ம.மு.க, காங்கிரஸ் சட்டப் பேரவை மேம்பாட்டு நலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/முதுகுளத்தூரில்-பயிர்-இழப்பீட்டு-தொகை-வழங்கக்-கோரி-அனைத்துக்-கட்சியினர்-தர்னா-போராட்டம்-3058099.html
3058098 மதுரை ராமநாதபுரம் சாயல்குடி அருகே மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியர் மீது தாக்குதல் DIN DIN Saturday, December 15, 2018 01:03 AM +0530
சாயல்குடி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்ததை தடுத்த துணை வட்டாட்சியரை வெள்ளிக்கிழமை தாக்கி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மண்டல துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் முருகன் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். அப்போது கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணலை அள்ளிக் கொண்டு வந்துள்ளனர். டிராக்டரை வழி மறித்து விசாரணை செய்த போது ஆத்திரமடைந்த அதன் ஓட்டுநர் மற்றும் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மண்டல துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் முருகனை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.
காயமடைந்த மண்டல துணை வட்டாட்சியர் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வட்டாட்சியர் எம்.முத்துலட்சுமி காயமடைந்த துணை வட்டாட்சியரை தன் வாகனத்தில் ஏற்றிச்சென்று கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதையடுத்து மணல் கடத்தல் கும்பலை கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீஸார் தேடி வருகிறார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/சாயல்குடி-அருகே-மணல்-கடத்தலை-தடுத்த-வட்டாட்சியர்-மீது-தாக்குதல்-3058098.html
3058097 மதுரை ராமநாதபுரம் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் DIN DIN Saturday, December 15, 2018 01:03 AM +0530
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது பரமக்குடியைச் சேர்ந்த அங்குச்சாமி மகன் விஜயகுமார் (39), பெரியசாமி மகன் முருகன் (37) ஆகிய இருவரும் டிப்பர் லாரியில் மணல் ஏற்றி வந்துள்ளனர். அந்த லாரியை மறித்து விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக மணல் கடத்தி வருவது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸார் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட விஜயகுமார், முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் முன்பாக ஆஜர்படுத்தினர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/மணல்-கடத்திய-டிப்பர்-லாரி-பறிமுதல்-3058097.html
3058096 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில்24,151 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கத் திட்டம்: அமைச்சர் DIN DIN Saturday, December 15, 2018 01:02 AM +0530
ராமநாதபுரம் மாவட்டத்தில் 24,151 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 14 பள்ளிகளைச் சார்ந்த 2,630 மாணவ, மாணவிகளுக்கு ரூ.97,88,200 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துமாரி தலைமை வகித்தார். இதில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24,151 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 2 கட்டங்களாக 12,498 மாணவர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக இன்று மண்டபம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகளை சார்ந்த 2,630 மாணவர்களுக்கு ரூ.97,88,200 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (ராமநாதபுரம்) டி.பிரேம், (மண்டபம்) பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/ராமநாதபுரம்-மாவட்டத்தில்24151-மாணவ-மாணவிகளுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்-வழங்கத்-திட்டம்-அமைச்சர்-3058096.html
3058095 மதுரை ராமநாதபுரம் பெண் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு DIN DIN Saturday, December 15, 2018 01:02 AM +0530
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே குளத்தூர் கிராமத்தில் சொத்துத் தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி செளந்தரம் (43). இவரது கணவரும் அதே ஊரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகையா என்பவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இரு குடும்பத்தினருக்கிடையே சொத்து குறித்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று செளந்தரம் வீட்டில் இருந்தபோது முருகையாவின் மனைவி காளிமுத்து, அவரது மகன் சிரஞ்சீவ் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் செளந்தரம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் காளிமுத்து, சிரஞ்சீவ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/பெண்-மீது-தாக்குதல்-2-பேர்-மீது-வழக்கு-3058095.html
3058094 மதுரை ராமநாதபுரம் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி தேவகோட்டையில் டிச.26 இல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு DIN DIN Saturday, December 15, 2018 01:02 AM +0530
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தேவகோட்டையில் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பாக டிசம்பர் 26 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து கிராம விவசாயிகள் சங்க பொதுச் செயலர் ஆர். ராஜபாண்டியன் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் விவசாயிகள் பணத்தை செலுத்தி பதிவு செய்து வருகின்றனர். ஆனால், காப்பீட்டுத் தொகையை வழங்காமல் அரசு விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது.
எனவே, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில், அறிவித்தபடி டிசம்பர் 26 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/பயிர்-காப்பீட்டுத்-தொகையை-வழங்கக்-கோரி-தேவகோட்டையில்-டிச26-இல்-போராட்டம்-விவசாயிகள்-சங்கம்-அறிவிப்-3058094.html
3058093 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது DIN DIN Saturday, December 15, 2018 01:02 AM +0530
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 43 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், 4 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடுதல் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2017) தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பாலியல் குற்றச்சாட்டில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பதிவானது. ஆக மொத்தம் 26 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகியுள்ளனர். நடப்பு ஆண்டில் (2018) ஜனவரி முதல் நவம்பர் முடிய 43 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், 4 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், நடப்பு ஆண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/15/ராமநாதபுரம்-மாவட்டத்தில்-47-பேர்-குண்டர்-சட்டத்தில்-கைது-3058093.html
3057405 மதுரை ராமநாதபுரம் வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் கைது DIN DIN Friday, December 14, 2018 01:11 AM +0530
ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்திநகரில் 1,404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் பச்சமால், ஊராட்சி செயலராக பணியாற்றும் மாணிக்கம் ஆகிய இருவரும் வீடு கட்ட அனுமதி வழங்க ஒரு சதுர அடிக்கு நூறு ரூபாய் வீதம் ரூ.1.40 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தன்னிடம் இவ்வளவு பணம் இல்லை எனவும், ரூ. 20 ஆயிரம் தருகிறேன் என சண்முகம் கூறியுள்ளார். அதற்கு ஒத்துக் கொள்ளாமல் ரூ. 50 ஆயிரம் கேட்டுள்ளார்.
இது குறித்து சண்முகம், அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியோர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமாலிடமும், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்திடமும் பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், காவல் துறை ஆய்வாளர்கள் ஜானகி, வானதி ஆகியோர் விரைந்து சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45ஆயிரத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/வீடு-கட்ட-அனுமதி-வழங்க-லஞ்சம்-வட்டார-வளர்ச்சி-அலுவலர்-ஊராட்சி-செயலர்-கைது-3057405.html
3057404 மதுரை ராமநாதபுரம் சட்டம் பயின்றவர்கள் சமூக நலன்களை காக்கும் விதமாகச் செயல்பட வேண்டும்: முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி பேச்சு DIN DIN Friday, December 14, 2018 01:11 AM +0530
வழக்குரைஞர்கள், நீதிபதிகள் சட்டக்கல்லூரி மாணவர்கள் சமூக நலனைக் காக்கும் வகையில் செயல்படவேண்டும் என ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 15 நாள்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயிற்சியைத் தொடங்கி வைத்து முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ.கயல்விழி பேசியது: நமது நாட்டின் ஜனநாயகம், மக்கள் உரிமையை சட்டரீதியாகக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பை நீதித்துறை வகிக்கிறது. உலக அளவில் பெருமைக்குரிய நமது நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பு சட்டக்கல்லூரிகளில் தொடங்குகிறது.
சட்டங்களைப் பயின்றவர்கள் ஏழைகளிடம் இரக்கமுடையவர்களாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சமூக நலன் காக்கும் வகையில் சட்டம் பயின்றவர்கள் திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக மாவட்ட சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான வி.ராமலிங்கம் வரவேற்றார். ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான்ரஞ்சித்சிங், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ஏ.ஆர்.நம்புநாயகம், மூத்த வழக்குரைஞர் கே.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக பணியாளர்கள் எஸ்.லோகநாதன், நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/சட்டம்-பயின்றவர்கள்-சமூக-நலன்களை-காக்கும்-விதமாகச்-செயல்பட-வேண்டும்-முதன்மை-மாவட்ட-நீதிபதி-ஏகயல்வி-3057404.html
3057402 மதுரை ராமநாதபுரம் இல்லாத நகைகளை அடகு வைத்ததாகக் காட்டி போலி ஆவணங்கள் மூலம் ரூ.24.74 லட்சம் மோசடி: நிதிநிறுவன மேலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு DIN DIN Friday, December 14, 2018 01:11 AM +0530 தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்காமலேயே போலி ஆவணங்கள் மூலம் ரூ.24.74 லட்சம் எடுத்ததாக நிறுவன முன்னாள் கிளை மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் நகைகள் அடகு வைத்து பணம் பெறும் வசதி உண்டு. இந்தநிலையில், வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகள் அடகு வைக்கப்பட்டதாக ஆவணங்கள் இருந்தன.
ஆனால், 2018 ஆம் ஆண்டுக்கான தணிக்கையின் போது ஆவணங்களில் குறிப்பிட்டபடி நகைகள் ஏதுமில்லை. அதனடிப்படையில் நிறுவனத்திலிருந்து ரூ.24.74 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் சார்பில் நடந்த விசாரணையில் அங்கு கிளை மேலாளராகப் பணியாற்றியவர் உள்ளிட்ட 5 பேர் வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகளை அடகு வைக்காமலேயே அடகு வைத்தது போல போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.
பணம் எடுத்தவர்களிடம் அதைத் திருப்பித் தருமாறு நிறுவனம் சார்பில் கோரப்பட்டது. அதற்கு அங்கு பணிபுரிந்த கமல்ராஜ் (30) உள்ளிட்டோர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி குறிப்பிட்ட நாள்களுக்குள் கமல்ராஜ் உள்ளிட்டோர் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து நிறுவன மண்டல மேலாளர் ஆர்.சுரேஷ்குமார் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கமல்ராஜிடம் விசாரணை நடந்தது.
அதன்படி தற்போது நிறுவன முன்னாள் மேலாளர் கமல்ராஜ், பணியாளர்கள் சாயல்குடி ராஜேஸ்வரன், கமுதி கண்ணார்பட்டி சரவணகுமார், சாயல்குடி அரவிந்த்ராஜ், ராஜேஸ்வரி
உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/இல்லாத-நகைகளை-அடகு-வைத்ததாகக்-காட்டி-போலி-ஆவணங்கள்-மூலம்-ரூ2474-லட்சம்-மோசடி-நிதிநிறுவன-மேலாளர்-உ-3057402.html
3057401 மதுரை ராமநாதபுரம் சேதமடைந்த அரசு வீடுகளை சீரமைக்க நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை DIN DIN Friday, December 14, 2018 01:10 AM +0530
சேதமடைந்த அரசு வீடுகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரி திருவாடானைப் பகுதி நரிக்குறவ காலனியைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து நரிக்குறவர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.செல்வம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைப் பகுதியில் கடந்த 1994 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 2001 ஆம் ஆண்டு 37 வீடுகள் அரசு சார்பில் கட்டித் தரப்பட்டது. சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் காலனி என்ற பெயரில் கட்டப்பட்ட குடியிருப்புகளை யாரும் பராமரிக்கவில்லை. இதனால், தற்போது அக்குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
போதிய வருவாய் இன்றி கஷ்டப்படுவதால், எங்களாலும் குடியிருப்பை சீரமைக்க முடியவில்லை. குடியிருப்புகளை சீரமைக்கக் கோரி ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் பல முறை மனு அளித்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை. ஆகவே குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு மீண்டும் வந்துள்ளோம். குடியிருப்பைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கி
சமைத்து உண்ணும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
ஆண்கள், பெண்கள் என ஏராளமான நரிக்குறவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ஆட்சியர் இல்லாததால், அதிகாரிகளிடம் மனு கொடுத்துச்சென்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/சேதமடைந்த-அரசு-வீடுகளை-சீரமைக்க-நரிக்குறவர்-இன-மக்கள்-கோரிக்கை-3057401.html
3057400 மதுரை ராமநாதபுரம் விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை DIN DIN Friday, December 14, 2018 01:10 AM +0530
திருவாடானை அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பாலைக்குடி அருகே உப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (45). இவரது மகள் துர்கா (14) உப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் அடிக்கடி தொலைக்காட்சி பார்ப்பதாக அவரது தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த துர்கா புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு துர்கா வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தந்தை குமார் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/விஷம்-குடித்து-பள்ளி-மாணவி-தற்கொலை-3057400.html
3057399 மதுரை ராமநாதபுரம் திருவாடானை அருகே அஞ்சலக பூட்டை உடைத்து பணம், செல்லிடப்பேசி திருட்டு DIN DIN Friday, December 14, 2018 01:10 AM +0530
திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள தபால் அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.40ஆயிரம் பணம், செல்லிடப்பேசியை மர்மநபர்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் கிராமப்புற தபால் நிலையம் உள்ளது. இதை புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் வியாழக்கிழமை காலையில் வழக்கம் போல் தபால் நிலையத்தைத் திறக்க வந்த தலைமை தபால் அதிகாரி புலவேந்திரன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். இது குறித்து புலவேந்திரன் தொண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தொண்டி போலீஸார் அங்கு நடத்திய சோதனையில், அலுவலகத்தில் இருந்து ரூ.40ஆயிரம் பணம், ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/திருவாடானை-அருகே-அஞ்சலக-பூட்டை-உடைத்து-பணம்-செல்லிடப்பேசி-திருட்டு-3057399.html
3057398 மதுரை ராமநாதபுரம் தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டம் DIN DIN Friday, December 14, 2018 01:10 AM +0530
தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க டிசம்பர் மாதக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ராசேந்திரன் தலைமை வகித்தார். கிளையின் மூத்த நிர்வாகி போஸ், கிளை பொறுப்பாளர்கள் புரட்சித்தம்பி, மரிய ஜெயபால் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன் மாவட்டச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன் இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிராமி, முத்தாத்தாள் பள்ளி மாணவி சுஜிதா, சரண்யா ஆகியோர் கிராமியப் பாடல்கள் பாடினர். தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பாலாஜி வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர் ஜோஸ் கஜா புயலின் கோரத் தாண்டவம் குறித்துக் கவிதை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் எழுதிய  பாடிப் படிக்கலாம் வாங்க என்னும் நூலைத் திறனாய்வு செய்து தமிழ்க்கல்லூரி பேராசிரியை ஸ்ரீவித்யா பாரதி மதிப்புரை வழங்கினார். கிளைச் செயலாளர் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். துணைச் செயலாளர் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் நன்றி கூறினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/தேவகோட்டையில்-தமிழ்நாடு-முற்போக்கு-எழுத்தாளர்-சங்கக்-கூட்டம்-3057398.html
3057396 மதுரை ராமநாதபுரம் விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு விரைவுப் பேருந்து ஜப்தி DIN DIN Friday, December 14, 2018 01:09 AM +0530
விபத்தில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இழப்பீடு வழங்காததால், ராமநாதபுரத்தில் அரசு விரைவுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சோனகம்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையா. இவரது மகன் முத்துக்குமார் (21). கார் ஓட்டுநர். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு காரில் சென்னை சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரம் திரும்பினார். அப்போது திருச்சி பாடலூர் அருகே வந்த போது காரும், எதிரே வந்த அரசு விரைவுப் பேருந்தும் மோதிய விபத்தில் முத்துக்குமார் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கருப்பையா வழக்குத் தொடர்ந்தார். அதன்படி ரூ.2 லட்சம் இழப்பீடு கோரியிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ.3.58 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், 2017 ஆம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் கருப்பையா தரப்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. அப்போது பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் சார்பில் இழப்பீடு தரப்படவில்லை. இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
கடந்த 5 ஆம் தேதி அரசு விரைவுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் துணையுடன் கருப்பையா தரப்பினர் ராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று அங்கு நின்ற சென்னை-கீழக்கரை அரசு விரைவுப் பேருந்தில் ஜப்தி நோட்டீஸை ஒட்டினர். பின்னர் பேருந்தை நீதிமன்ற வளாகத்துக்கு ஓட்டிச் சென்று நிறுத்தினர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/விபத்துக்கு-இழப்பீடு-வழங்காததால்-அரசு-விரைவுப்-பேருந்து-ஜப்தி-3057396.html
3057395 மதுரை ராமநாதபுரம் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட புதிய தமிழகம் வலியுறுத்தல்: டாக்டர் கே.கிருஷ்ணசாமி மனு DIN DIN Friday, December 14, 2018 01:09 AM +0530
தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அரசாணை வெளியிடவும், அவர்களை இதர வகுப்பினர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கட்சி நிர்வாகிகளுடன் வந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை தவறாக தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். இதனால், சமூக, பொருளாதார, அரசியலில் பெரும் பின்னடைவை அவர்கள் சந்தித்து வருகின்றனர். ஆகவே தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடவேண்டும். அதுபோல அரசாணை வெளியிடுவதற்கு தடையேதும் இல்லை என சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல்துறை சார்பில் அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட உள் இடஒதுக்கீடு காரணமாக பறிபோய்விட்டது. ஆகவே இனிமேல் அதில் பெறுவதற்கு எதுவுமில்லை. ஆகவே பட்டியலினத்திலிருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவேண்டும் என்றார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்சி நிர்வாகிகள் மத்தியில், தேவேந்திரர் குல வேளாளர் அரசாணையின் முக்கியத்துவம், கட்சியின் வளர்ச்சி குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/தேவேந்திரகுல-வேளாளர்-அரசாணை-வெளியிட-புதிய-தமிழகம்-வலியுறுத்தல்-டாக்டர்-கேகிருஷ்ணசாமி-மனு-3057395.html
3057394 மதுரை ராமநாதபுரம் அறிவியல் சோதனை பயிற்சி முகாம் DIN DIN Friday, December 14, 2018 01:09 AM +0530
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் விளக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் ராஜ்கமல், பெரியசாமி, அறிவியல் உபகரணங்களைக் கொண்டு அறிவியல் சார்ந்த நிலை மின்னியல், மின்னூட்டம், எளிய மின்சுற்று, பக்க இணைப்பு, மின்கடத்தும் பொருள், மின் கடத்தாப் பொருள் போன்ற விளக்கங்களை மாணவர்களுக்கு சோதனை மூலம் செய்து காட்டினர். மாணவி சந்தியா வரவேற்றார். மாணவர் சபரி நன்றி கூறினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/அறிவியல்-சோதனை-பயிற்சி-முகாம்-3057394.html
3057393 மதுரை ராமநாதபுரம் தேவகோட்டையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 14, 2018 01:09 AM +0530
தேவகோட்டைஎல்.ஐ.சி. அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க மாவட்டச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றாத திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய மானியங்களை முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/தேவகோட்டையில்-எல்ஐசி-ஊழியர்கள்-ஆர்ப்பாட்டம்-3057393.html
3057392 மதுரை ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் DIN DIN Friday, December 14, 2018 01:08 AM +0530
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே சித்தனேந்தல் விலக்குச் சாலையில் வியாழக்கிழமை மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நயினார்கோவில் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் புதன்கிழமை 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் 2 ஆவது நாளாக காவல் ஆய்வாளர் ராஜராஜன் தலைமையிலான போலீஸார் சித்தனேந்தல் விலக்குச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த பொக்காரன் மகன் ராமநாதன்(49), அரசரடி வண்டலைச் சேர்ந்த பாக்கியம் மகன் சரவணன் (28) ஆகியோர் முறைகேடாக டிராக்டரில் மணல் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் நயினார்கோவில் காவல் நிலையத்தில் ராமநாதன், சரவணன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் முன்பாக ஆஜர்படுத்தினர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/நயினார்கோவில்-அருகே-மணல்-கடத்திய-டிராக்டர்-பறிமுதல்-3057392.html
3057390 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் பாரதியார் பிறந்த நாள் விழா DIN DIN Friday, December 14, 2018 01:08 AM +0530
பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு மாவட்ட செயலாளர் ந.சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செ.சந்தியாகு, முன்னாள் தலைமையாசிரியர் சந்திரபோஸ், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத் தலைவர் எஸ்.பி.ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் என்.கே.ராஜன், வழக்குரைஞர் சி.பசுமலை, ஜோசப், கே.ஆர்.சுப்பிரமணியன், ஜி.ஆர்.ராமமூர்த்தி, சிவகுமார் ஆகியோர் பேசினர். பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்து பட்டிமன்ற பேச்சாளர் பறம்பை தென்றல் கண்ணன் பேசினார். முன்னதாக கலை இலக்கிய பெருமன்ற நகரச் செயலாளர் கே.ஆர்.ரவீந்திரன் வரவேற்றார். தொலை தொடர்புத் துறை ஊழியர் வே.சேதுராஜன் நன்றி கூறினார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/பரமக்குடியில்-பாரதியார்-பிறந்த-நாள்-விழா-3057390.html
3057389 மதுரை ராமநாதபுரம் புயல் எச்சரிக்கை தென்னை, வாழை பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் DIN DIN Friday, December 14, 2018 01:08 AM +0530
புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தென்னை, வாழை பயிர்களை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துமாரி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் புயல் கரை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகவே வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை குறிப்பிட்ட மாவட்டங்களில் பலத்த மழையுடன் வேகமான காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலின் போது வீசும் பலத்த காற்றிலிருந்து தென்னை, மா, பலா, நெல் பயிர் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.
அதனடிப்படையில் ஏழு ஆண்டு முதல் 40 ஆண்டு வரையிலான தென்னை மரங்களில் தேங்காய், இளநீர் உள்ளிட்ட காய்களையும் அதிக பாரமுடைய ஓலைகளையும் அகற்றிடவேண்டும்.
மரங்களின் கிளைகளை, இலைகளை நீக்கி, அதில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு
கலவையை ஒரு லிட்டர் நீரில் கலந்து 300 கிராம் கலவையாக்கி பூசவேண்டும். தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை புயல் கரையைக் கடக்கும் முன்பிலிருந்து இரு நாள்கள்
தவிர்க்கவேண்டும்.
வாழை மரத்துக்கு அடியில் நீர் தேங்காத வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும். வேம்பு, பூவரசு, புங்கன் உள்ளிட்ட மரக்கிளைகளை வெட்டிவிடவேண்டும். நெல், பயறு வகைகளில் நீர் தேங்காமல் வடிகால் வசதியை ஏற்படுத்துவது அவசியம். வெட்டப்பட்ட மரக்கிளைகளை பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாம்பனில் வியாழக்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுலகம் சார்பில் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை பாதுகாக்கும் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/புயல்-எச்சரிக்கை-தென்னை-வாழை-பயிர்களை-பாதுகாக்க-விவசாயிகளுக்கு-அறிவுறுத்தல்-3057389.html
3057388 மதுரை ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் DIN DIN Friday, December 14, 2018 01:08 AM +0530
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே சித்தனேந்தல் விலக்குச் சாலையில் வியாழக்கிழமை மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நயினார்கோவில் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் புதன்கிழமை 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் 2 ஆவது நாளாக காவல் ஆய்வாளர் ராஜராஜன் தலைமையிலான போலீஸார் சித்தனேந்தல் விலக்குச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த பொக்காரன் மகன் ராமநாதன்(49), அரசரடி வண்டலைச் சேர்ந்த பாக்கியம் மகன் சரவணன் (28) ஆகியோர் முறைகேடாக டிராக்டரில் மணல் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் நயினார்கோவில் காவல் நிலையத்தில் ராமநாதன், சரவணன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் முன்பாக ஆஜர்படுத்தினர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/நயினார்கோவில்-அருகே-மணல்-கடத்திய-டிராக்டர்-பறிமுதல்-3057388.html
3057386 மதுரை ராமநாதபுரம் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கமுதி விவசாயிகள் கவலை DIN DIN Friday, December 14, 2018 01:07 AM +0530
கமுதி அருகே சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கமுதி அருகே என்.கரிசல்குளம், கிளாமரம், கே.நெடுங்குளம், திருசிலுவையாபுரம், எஸ்.புதுப்பட்டி, முஸ்டக்குறிச்சி, முதல்நாடு உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் வெங்காயம் பயிரிடுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி அப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களை பண்படுத்தி 20 ஏக்கருக்கும் மேல் வெங்காயம் பயிரிட்டனர்.
இதனையடுத்து எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் வெங்காயம் பயிர்கள் முழு வளர்ச்சி அடையவில்லை. நோய் தாக்கி, அறுவடை நேரத்தில் பூமிக்குள்ளேயே வெங்காயம் அழுகிய நிலையில் மாறத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து எஸ்.புதுப்பட்டி விவசாயி ராமகிருஷ்ணன் கூறியது: பல ஆண்டுகளாக போதிய பருவ மழை பெய்யாததால் நெல், மிளகாய், மல்லி, சாகுபடியைக் குறைத்துக் கொண்டு வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். கடைகளில் விதை வெங்காயம் 1 கிலோ ரூபாய் 48-க்கு வாங்கி பயிரிட்டு, போதிய மழையில்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயிகளிடம் இருந்து 1 கி. வெங்காயம் ரூ.10 முதல் 20 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் கடன் வாங்கி வெங்காயம் விவசாயம் செய்து கடனிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், விவசாயத்தை விட்டுவிட்டு நகர் ப்புறங்களுக்கு கூலி வேலைக்கு
செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவோம். எனவே நெல், வாழை, கரும்பு விவசாயத்தை போல் பாரபட்சமின்றி அனைத்து விவசாயத்துக்கும் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டிய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிலுவையில் உள்ள இழப்பீடு தொகையை குறிப்பிட்ட காலத்தில் வழங்கி விவசாயிகளை கடனிலிருந்து மீட்க நடடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/சின்ன-வெங்காயம்-விலை-வீழ்ச்சி-கமுதி-விவசாயிகள்-கவலை-3057386.html
3057385 மதுரை ராமநாதபுரம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு 681 மாணவர்கள் விண்ணப்பம் DIN DIN Friday, December 14, 2018 01:06 AM +0530
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் 681 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2017-18 முதல் தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எழுதியவர்களே விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு அதிகமான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 250 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 50 -க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி 11 இடங்களில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகரில் மட்டும் இரு இடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 681 மாணவ, மாணவியர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 544 பேர் அரசின் நீட் தேர்வு இலவசப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 250 பேர் மட்டுமே விண்ணப்பித்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் இருமடங்கிற்கும் அதிகமாக இருப்பதையும் கல்வி அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
விண்ணப்பித்தவர்களில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் 153-க்கும் அதிகமாக உள்ளனர். ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்களில் ஏர்வாடி, சாயல்குடியில் தலா 11 பேர், உத்தரகோசமங்கைப் பள்ளியில் 44 பேர் என மொத்தம் 190 க்கும் அதிகமானோர் உள்ளனர். உதவி பெறும் பள்ளிகளில் 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பரமக்குடி ஆரிய வைசியப் பள்ளியில் 68 பேரும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 94 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் கிராமப்புற மாணவ, மாணவியரே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/அரசு-உதவி-பெறும்-பள்ளிகளில்-நீட்-தேர்வுக்கு-681-மாணவர்கள்-விண்ணப்பம்-3057385.html
3057384 மதுரை ராமநாதபுரம் வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிச் செயலர் கைது DIN DIN Friday, December 14, 2018 01:06 AM +0530
ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்திநகரில் 1,404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் பச்சமால், ஊராட்சி செயலராக பணியாற்றும் மாணிக்கம் ஆகிய இருவரும் வீடு கட்ட அனுமதி வழங்க ஒரு சதுர அடிக்கு நூறு ரூபாய் வீதம் ரூ.1.40 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் இவ்வளவு பணம் இல்லை எனவும், ரூ. 20 ஆயிரம் தருகிறேன் என சண்முகம் கூறியுள்ளார். அதற்கு ஒத்துக் கொள்ளாமல் ரூ. 50 ஆயிரம் கேட்டுள்ளார்.
இது குறித்து சண்முகம், அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியோர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமாலிடமும், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்திடமும் பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், காவல் துறை ஆய்வாளர்கள் ஜானகி, வானதி ஆகியோர் விரைந்து சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45ஆயிரத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/வீடு-கட்ட-அனுமதி-வழங்க-லஞ்சம்-வட்டார-வளர்ச்சி-அலுவலர்-ஊராட்சிச்-செயலர்-கைது-3057384.html
3057382 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் வழி மாற்றம் DIN DIN Friday, December 14, 2018 01:06 AM +0530
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்குள் பக்தர்கள் புனித நீராட செல்லும் வழி மாற்றம் செய்யப்படுவதாக இணை ஆணையர் கோ.செ. மங்கையர்கரசி தெரிவித்தார்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நேரங்களில் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டும். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் முறையாக நீராட முடியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலுக்குள் பக்தர்கள் சென்று புனித நீராடும் தீர்த்தங்கள் என மகாலட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தங்கள் என 6 தீர்த்தங்கள் கண்டறியப்பட்டன. இவற்றை வடக்கு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டு ரூ. 12 லட்சத்தில் புதிய 6 தீர்த்த கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, முதல் கட்டமாக அக்டோபர் 27, 28 ஆம் தேதிகளில் புதிய தீர்த்த கிணறுகளில் மகாலட்சுமி தீர்த்தத்தை தவிர, மற்ற 5 தீர்த்தங்களில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பூஜைகள்
செய்து திறக்கப்பட்டன.
இந்நிலையில், மீதமுள்ள மகாலட்சுமி தீர்த்தம் திறப்பதற்காக அம்பாள் சன்னதி முன்புள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பிள்ளையார்பட்டி மணிகண்டன் குருக்கள் தலைமையில் முதல் கால யாக சாலை பூûஐ கணபதி ஹோமத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கோயில் தலைமை குருக்கள் உதயகுமார், சர்வசாதகம் சிவமணி, உள்ளிட்ட சிவச்சாரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், மேலாளர் முருகேசன், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மகாலட்சுமி தீர்த்தம் மாற்றப்படுகிறது.
இது குறித்து இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி கூறியது: நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தர்களுக்கு சிரமம் இன்றி புனித நீராடும் வகையில் தீர்த்தங்கள் ஆகம விதிகளுக்கு உள்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதனால் புனித நீராட வரும் பக்தர்கள் கிழக்கு ராஜா கோபுர வாசல் வழியாக செல்லாமல் வடக்கு ராஜா கோபுர வழியாக செல்ல வேண்டும். இனிமேல் பக்தர்கள் கூட்ட நேரத்திலும் 22 புனித தீர்த்தங்களிலும் முழுமையாக நீராட முடியும் என்றார்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/ராமேசுவரம்-ராமநாத-சுவாமி-கோயிலில்-பக்தர்கள்-புனித-நீராட-செல்லும்-வழி-மாற்றம்-3057382.html
3057381 மதுரை ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பஜனை DIN DIN Friday, December 14, 2018 01:06 AM +0530  

கமுதி அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பஜனை விழா நடைபெற்றது. குடமுருட்டி சாது சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு குருசாமி ராமதாஸ் தலைமை வகித்தார். இதில் கமுதி, அபிராமம் பகுதிகளிலிருந்து விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, பஜனை செய்தனர். சிறப்பு அபிஷேகம், பிரார்த்தனைகள் நடைபெற்றன. பதினெட்டு படிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/ஐயப்பன்-கோயிலில்-சிறப்பு-பஜனை-3057381.html
3057379 மதுரை ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் 4-ஆவது நாளாக போராட்டம் DIN DIN Friday, December 14, 2018 01:05 AM +0530 காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளதால் பொதுமக்களுக்கான சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், பிறப்பு பதிவு, அடங்கல் வழங்குதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தின் 4-ஆவது நாளான வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி,சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய 9 வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையைச் சேர்ந்த உயர் அலுவலரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இப்போராட்டத்தால் மாவட்டத்தில் பணிகள் பாதிக்காத வகையில் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
கமுதி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் கருப்பணன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வட்டச் செயலர் சரவணக்குமார், பொருளாளர் சுந்தராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கடலாடியில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ.க்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதுகுளத்தூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் சண்முகவேல், செயலர் சுரேஷ், பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் வ கித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முதுகுளத்தூரில் 30-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். தினேஷ்பிரபு நன்றி கூறினார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறியது:
வி.ஏ.ஓ.க்களின் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம். மூன்றாம் கட்ட போராட்டமாக மாவட்ட தலைநகரம் நோக்கி டிச 17 ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வி.ஏ.ஓ. க்களும் கலந்து கொள்கின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும்என்றார்.
அதே போன்று கடலாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/14/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-4-ஆவது-நாளாக-போராட்டம்-3057379.html
3056957 மதுரை ராமநாதபுரம் ராமசுவரம் கோயில் யானை ராமலட்சுமி தேக்கம்பட்டி முகாமிற்கு சென்றது DIN DIN Thursday, December 13, 2018 07:18 AM +0530 கோவை மாவட்டம் தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு முகாமிற்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமி புதன்கிழமை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. 
தமிழக அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி  பகுதியில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தி வருகிறது. நடப்பாண்டு நடைபெற உள்ள முகாமிற்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி, புதன்கிழமை நடை அடைத்த பின்பு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  
இதனையொட்டி யானை ராமலெட்சுமிக்கு கஜ பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்பு யானை அக்னி தீர்த்த கரைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.  இதில் இணைஆணையர் கோ.செ.மங்கையர்கரசி, கோட்ட உதவிப் பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், மற்றும் பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/ராமசுவரம்-கோயில்-யானை-ராமலட்சுமி-தேக்கம்பட்டி-முகாமிற்கு-சென்றது-3056957.html
3056956 மதுரை ராமநாதபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்    மர்மநபர்கள் திருட முயற்சி DIN DIN Thursday, December 13, 2018 07:18 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு  சங்கத்தில் புதன்கிழமை மர்மநபர்கள் திருட முயன்ற போது, அலாரம் ஒலி எழுப்பியதால் தப்பியோடி விட்டனர்.
   முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவில் மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவை மறைத்து விட்டு, திருட முயன்ற போது, வங்கியில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலித்தது.
  இந்த  சத்தம் கேட்டு  அப்பகுதி மக்கள் வங்கிக்கு வந்து பார்த்த போது,  மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து  செயலாளர் (பொறுப்பு) முத்து செல்லபாண்டியன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து பார்த்தார்.  அப்போது பணம், நகை எதுவும் திருடு போகவில்லை என தெரிய வந்தது. 
 இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் முத்துசெல்லபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை  தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/வேளாண்மை-கூட்டுறவு-சங்கத்தில்----மர்மநபர்கள்-திருட-முயற்சி-3056956.html
3056955 மதுரை ராமநாதபுரம் அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரவில்லை: கமுதி அருகே கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள் DIN DIN Thursday, December 13, 2018 07:18 AM +0530 கமுதி அருகே 8 ஆண்டுகளாக அரசின் நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், 90 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்து, நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன.
கமுதி அருகே போக்குவரத்து, சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதியில்லாத என்.புல்லந்தையில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால் குடிநீர், போக்குவரத்து வசதி இல்லாததால், சைக்கிள்களில் 8 கிமீ., தூரமுள்ள அச்சங்குளம், 16 கிமீ., தூரமுள்ள அபிராமத்திற்கு பயணிக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
 சாலை வசதியில்லாததால், டேங்கர் லாரிகளும் இங்கு வருவதில்லை. இங்கு  அனைத்து மின்கம்பங்களும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. தெருக்களிலுள்ள வாய்க்கால்கள், சமுதாயகூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுபோன்று என்.புல்லந்தையில் 8 ஆண்டுகளாக அரசின் நலத்திட்ட பணிகள், அடிப்படை வசதிகள் சென்றடையவில்லை. இதனால் 120 குடும்பங்கள் வசித்த இவ்வூரில், தற்போது 30 குடும்பங்கள் மட்டுமே, வசித்து வருகின்றன. இதுகுறித்து என்.புல்லந்தை கிராம மக்கள் கூறியதாவது: அரசின் இலவச வீடுகள் கோரி மனு செய்தும், ஒதுக்கீடு இல்லாததால், சேதமடைந்த வீடுகளில் அச்சத்துடன் வசிக்கின்றனர். 8 ஆண்டுகளாக அரசின் நலத்திட்டங்கள் ஏதும் இங்கு நிறைவேற்றபடவில்லை. இதுவரையில் காவிரி குடிநீர் திட்டம் இங்கு வந்து சேரவில்லை என்றனர். 
பட்டதாரி ஒருவர் கூறியதாவது: குடிநீர், சாலை வசதியில்லாத போதும், தொடக்க கல்விக்கென இவ்வூரில் உள்ள 18 மாணவர்கள் 12 கி.மீ. தூரமுள்ள அபிராமத்திற்கு பயணிக்கின்றனர். அதிகாரிகளின் பாரபட்சத்தால், என்.புல்லந்தையில் நாளுக்குநாள் மக்கள் வசிக்கும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் தெருவிளக்குகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் மக்கள் வசிக்கின்றனர். குடிக்கதான் தண்ணீர் இல்லையென்றால், குளிப்பதற்குகூட 12 கி.மீ., தூரம் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிநீருக்கென ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு பதில் அரசின் பசுமை, பிரதமரின் இலவச தொகுப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்ய கமுதி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/அரசின்-நலத்திட்டங்கள்-வந்து-சேரவில்லை-கமுதி-அருகே-கிராமத்தை-விட்டு-வெளியேறும்-மக்கள்-3056955.html
3056954 மதுரை ராமநாதபுரம் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா: 108 பெண்கள் பால்குடம் DIN DIN Thursday, December 13, 2018 07:17 AM +0530 ராமேசுவரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி 108 பெண்கள் புதன்கிழமை  பல்குடம் எடுத்து சிறப்புவழிபாடு நடத்தினர். 
 சந்தனமாரியம்மன் கோயிலில் இருந்து 108 பெண்கள் பால்குட ஊர்வலத்தை மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த் தலைமையில் தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் எஸ்.முருகன் முன்னிலை வகித்தார். இதில் இளைஞரணி செயலாளர் மாரிபிச்சை, குணசேகரன், தமோதரன்,மகளிரணி சார்பில் நம்புராணி,ஜார்ச்மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.   இந்த பால் குடம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேலவாசல் முருகன் கோயிலை சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாதாக தனுஷ்கோயில் மீனவர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் காந்திசிலை அருகே நடைபெற்ற ரஜினி பிறந்தநாள் விழாவிற்கு மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட செயற்குழு கோமதி சிவாஜிராவ்,  ஒன்றியச் செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் முத்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். முதுகுளத்தூர் பசும்குடில் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம், மாற்றுத்திறனாளி பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/ரஜினிகாந்த்-பிறந்தநாள்-விழா-108-பெண்கள்-பால்குடம்-3056954.html
3056953 மதுரை ராமநாதபுரம் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் DIN DIN Thursday, December 13, 2018 07:17 AM +0530 ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.சேசுராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: கர்நாடகம் காவிரியில் மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதையும், அதற்கான ஆய்வு அனுமதி வழங்கிய மத்திய நீர்வளத்துறையையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 ராமநாதபுரத்தில் அமையவிருக்கும் விமான நிலையத்துக்கு மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயர் சூட்டவேண்டும். "கஜா' புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புயல் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 கூட்டத்தில் கஜா புயலில் உயிர்நீத்தவர்களுக்கு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அமைப்பின் செயலர் என்.ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பி.ரவீந்திரன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/மூத்த-குடிமக்கள்-கூட்டமைப்பு-சிறப்பு-பொதுக்குழுக்-கூட்டம்-3056953.html
3056952 மதுரை ராமநாதபுரம் டிச.27 இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Thursday, December 13, 2018 07:17 AM +0530 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
      எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்கும் இக்கூட்டம்  மாலை 5 மணிக்கு  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் பொறுப்பு சி.முத்துமாரி தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/டிச27-இல்-சமையல்-எரிவாயு-நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-3056952.html
3056951 மதுரை ராமநாதபுரம் திமுக பொறுப்பாளருக்கு மிரட்டல்: கட்சி நிர்வாகி கைது DIN DIN Thursday, December 13, 2018 07:16 AM +0530 ராமநாதபுரத்தில் திமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை தொடர்பான புகாரில் அக்கட்சியின் விவசாய அணி நிர்வாகி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 
  ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளார். அவரது நியமனத்தை முன்னாள் அமைச்சர் தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், திமுக பொறுப்பாளரை மிரட்டும் வகையில் கட்செவி அஞ்சலில் தகவல் பரப்பப்பட்டது. இதுதொடர்பாக திமுக கமுதி ஒன்றிய இலக்கிய அணி செயலர் பாரதிதாசன் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதனடிப்படையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் தொழிலாளர் அணிச் செயலர் அர்ச்சுணன் (41) கைது செய்யப்பட்டார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/திமுக-பொறுப்பாளருக்கு-மிரட்டல்-கட்சி-நிர்வாகி-கைது-3056951.html
3056950 மதுரை ராமநாதபுரம் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் DIN DIN Thursday, December 13, 2018 07:16 AM +0530 கமுதி பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகேயுள்ள கீழராமநதி, மேலராமநதி, நீராவி, மேலமுடிமன்னார்கோட்டை,  கூடக்குளம், எழுவனூர், பெருநாழி ஆகிய கிராமங்களில் 938 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம், 2,494 ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தற்போது படைப்புழுக்களின் தாக்குதல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழராமநதி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  
இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மீ.பாக்கியராஜ் பேசியது:
 மண்வள அட்டையின் பரிந்துரையின் படி உரம் இடுதல், தழைச்சத்து அதிகமிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊடுபயிர் இடுவதன் மூலம் தாய் அந்துப்பூச்சியினை கவர்ந்து அழித்தல், அடியுரமாக ஏக்கருக்கு 100-150 கிலோ வேப்பம் புண்ணாக்கு  இட வேண்டும். விளக்குப் பொறிகள் வைத்து தாய் அந்துப்பூச்சியினை கவர்ந்து அழித்தல், டிரைக்கோகிரம்மா கைலோநிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை  கொண்டு முட்டைகளை அழித்து படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/மக்காச்சோளத்தில்-படைப்புழு-தாக்குதல்-விவசாயிகளுக்கு-விழிப்புணர்வு-முகாம்-3056950.html
3056949 மதுரை ராமநாதபுரம் நயினார்கோவில் பகுதியில் மணல் கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 8 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, December 13, 2018 07:16 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில்  வைகை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணல் கடத்தி வந்த கும்பலை போலீஸார்  மடக்கி பிடித்தனர். இதில் 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நயினார்கோவில் பகுதியில் ஒரு கும்பல் தொடர்ந்து முறைகேடாக மணல் கடத்தி வருவதாக  அப்பகுதி மக்கள், பரமக்குடி சார்-ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நயினார்கோவில் போலீஸாருக்கு  மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின் பேரில் நயினார்கோவில் காவல்துறை ஆய்வாளர் ராஜராஜன், சார்பு ஆய்வாளர் விக்னேஷ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகத்தரசன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுவாக போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் நகரமங்களம் கால்வாய் பகுதியிலிருந்து அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (51), அரியாங்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் மகன் கமல் (30) ஆகியோர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்ததை சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகத்தரசன் தலைமையிலான போலீஸார் மடக்கிப்பிடித்தனர். 
 வாதவனேரி கால்வாய் பகுதியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்மேகம் மகன் கார்த்திக் (28), நையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் (36) ஆகியோர்  மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை  சார்பு ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையிலான போலீஸார் மடக்கிப்பிடித்தனர். 
 வாதவனேரியிலிருந்து பனிதவயல் செல்லும் கால்வாயில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் முத்துச்செல்வம் (37), வேலு மகன் ஜெகதீஸ்வரன் (35) ஆகியோர் ஒரு டிப்பர் லாரியிலும், அதே ஊரைச் சேர்ந்த குருஸ்வரன் மகன் மகாதேவன் (33), குளத்தூர் சக்தி மகன் பாலமுருகன் (39) ஆகியோர் மற்றொரு டிப்பர் லாரியிலும்  மணல் கடத்தி வந்ததை காவல் ஆய்வாளர் ராஜராஜன் தலைமையிலான போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
 மணல் கடத்தலில் தொடர்புடைய 8 பேர் மீதும் நயினார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் திவு செய்தனர். 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரையும் சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் முன்பாக போலீஸார் ஆஜர்படுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/நயினார்கோவில்-பகுதியில்-மணல்-கடத்திய-4-டிப்பர்-லாரிகள்-பறிமுதல்-8-பேர்-மீது-வழக்கு-3056949.html
3056948 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் தகுதிச்சான்று புதுப்பிக்காத பள்ளிப் பேருந்து, 6 ஆட்டோக்கள் பறிமுதல் DIN DIN Thursday, December 13, 2018 07:16 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் நயினார்கோவிலில்  மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்திய திடீர் சோதனையில்  தகுதிச்சான்று புதுப்பிக்காத தனியார் பள்ளிப் பேருந்து மற்றும் 6 ஆட்டோக்களும் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
 ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கே.மாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள் நயினார்கோவிலில் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
   அப்போது நயினார்கோவில் பகுதியில் குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் மெட்ரிக்பள்ளி பேருந்தின்  ஆவணங்களை சரிபார்த்தனர். அந்த பேருந்தின் தகுதிச்சான்று 5 மாதங்களாகியும் புதுப்பிக்காமல்  இயக்கி வந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
 இதனைத் தொடர்ந்து பரமக்குடி பகுதியில் நடத்திய சோதனையில் தகுதிச்சான்று காலாவதியான 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பள்ளிப் பேருந்து மற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர்  கே.மாணிக்கம் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/பரமக்குடியில்-தகுதிச்சான்று-புதுப்பிக்காத-பள்ளிப்-பேருந்து-6-ஆட்டோக்கள்-பறிமுதல்-3056948.html
3056947 மதுரை ராமநாதபுரம் மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Thursday, December 13, 2018 07:15 AM +0530 சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தில் அமைந்துள்ள மதுரைவீரன்சாமி கோயிலில் மூலவர் மற்றும் பொம்மியம்மன், வெள்ளையம்மன்  ஆகிய தெய்வங்களுக்கு புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
   இந்த விழா அனுக்ஞை, லெட்சுமி ஹோமம், பூர்ணாகுதியுடன் தொடங்கியது. கோபுர விமானக்கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
   நிகழ்ச்சியில் அன்னதானம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/மதுரைவீரன்-கோயில்-கும்பாபிஷேகம்-3056947.html
3056946 மதுரை ராமநாதபுரம் பரமக்குடி வைகை ஆற்றில்   ஆண் சடலம் மீட்பு DIN DIN Thursday, December 13, 2018 07:15 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தற்கொலை செய்து கொண்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.  
   பரமக்குடி சார்-ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீஸார் சென்று பார்த்தபோது 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
 அவர் யார் என்பது குறித்து தெரியவில்லை. 
    போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/பரமக்குடி-வைகை-ஆற்றில்---ஆண்-சடலம்-மீட்பு-3056946.html
3056945 மதுரை ராமநாதபுரம் அரசு அதிகாரிகளை தாக்க முயற்சி: சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரை கண்டித்து கமுதியில் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, December 13, 2018 07:15 AM +0530 சிவகங்கையில் அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரைக் கண்டித்து கமுதியில் ஊரக வளர்ச்சித்துறையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில்  திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலர் செல்வக்குமார் ஆகியோரை  தாக்க முயன்றதாக புகாரின் பேரில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், தற்போதைய அமமுக கட்சி நிர்வாகியுமான உமாதேவனை  சிவகங்கை போலீஸார் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.  
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் அத்துமீறி நடந்த உமாதேவனை கண்டித்து, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வி.தங்கப்பாண்டின் தலைமையில், எம்.வீரராகவன் (கிராம ஊராட்சிகள்) முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/அரசு-அதிகாரிகளை-தாக்க-முயற்சி-சட்டப்பேரவை-முன்னாள்-உறுப்பினரை-கண்டித்து-கமுதியில்-ஆர்ப்பாட்டம்-3056945.html
3056944 மதுரை ராமநாதபுரம் மானாவாரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி முகாம் DIN DIN Thursday, December 13, 2018 07:14 AM +0530 திருவாடானை அருகே கானாட்டாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில்  வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா, நெற்பயிருக்கு பதிலாக சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிர்களையும் சாகுபடி செய்யுமாறு அறிவுறுத்தினார். 
பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் மணவாளன் சிறுதானிய சாகுபடியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து முன்னோடி விவசாயி செல்வராஜ் செயல் விளக்கத் திடல் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டதை அனைவரும் பார்வையிட்டனர். இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். 
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்  மேலாளர் சூர்யா வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/மானாவாரி-சாகுபடி-குறித்து-விவசாயிகளுக்குப்-பயிற்சி-முகாம்-3056944.html
3056943 மதுரை ராமநாதபுரம் தொண்டி அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவரை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Thursday, December 13, 2018 07:14 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சேதமடைந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டியில் அரசு ஆண்கள் செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த சில நாள்கள் முன் பெய்த மழைக்கு, பள்ளியின் சுற்று சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. 
இதனால்  கால்நடைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து மரம், செடி, கொடிகளை சேதப்படுத்துகின்றன. மேலும் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. 
எனவே கல்வித்துறையினர் பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/தொண்டி-அரசுப்-பள்ளியின்-சுற்றுச்சுவரை--சீரமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3056943.html
3056942 மதுரை ராமநாதபுரம் பள்ளி அருகே இடியும் நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி: மாணவர்கள் அச்சம் DIN DIN Thursday, December 13, 2018 07:13 AM +0530 கமுதி அருகே பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் அரசுப் பள்ளி மாணவர்கள்  அச்சத்தில் உள்ளனர்.
கமுதி அருகே நத்தம் ஊராட்சிக்குள்பட்ட முத்தாதிபுரத்தில் 23 மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதனருகே   2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத் தொட்டி பராமரிப்பின்றி கான்கிரீட் தூண்கள், சிமெண்ட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் சேதமடைந்த தொட்டி வழியாக குடிநீர் விநியோகம் செய்யும் போது நீர் கசிந்து வீணாகிறது.  இதனால் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி வருகின்றனர்.
இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றி, புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/பள்ளி-அருகே-இடியும்-நிலையில்-மேல்நிலை-நீர்தேக்கத்-தொட்டி-மாணவர்கள்-அச்சம்-3056942.html
3056941 மதுரை ராமநாதபுரம் ரேஷன் பொருள்கள் திடீர் நிறுத்தம்: கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை DIN DIN Thursday, December 13, 2018 07:13 AM +0530 கமுதி அருகே குடும்ப அட்டைக்கு பொருள்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி அருகே வாழவந்தாள்புரத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. முற்றிலும் விவசாயம், விவசாய கூலியை நம்பி வாழும் வாழவந்தாள்புரத்தை சேர்ந்த 24 நபர்களின், குடும்ப அட்டைக்கு இந்த மாதம் திடீரென ரேஷன் பொருள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள்,  கமுதி வட்ட வழங்கல் அலுவலரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கமுதி வட்ட வழங்கல் அலுவலர் காதர் தெரிவித்தார். 
இருப்பினும் சமாதானமடையாத விவசாயிகள், கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பின்னர் வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, துணை வட்டாட்சியர் தென்னரசு ஆகியோர், உடனே ஆய்வு செய்து, ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/ரேஷன்-பொருள்கள்-திடீர்-நிறுத்தம்-கமுதி-வட்டாட்சியர்-அலுவலகம்-முற்றுகை-3056941.html
3056940 மதுரை ராமநாதபுரம் மாநில விளையாட்டு போட்டிகளில் பரமக்குடி பள்ளி மாணவர்கள் வெற்றி DIN DIN Thursday, December 13, 2018 07:13 AM +0530 பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்து, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 19-வயதுக்குட்பட்ட குண்டு எறிதல் போட்டியில் ஆர்.எஸ்.பரசுராம், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான சிலம்பப் போட்டியில் அபிஷேக், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் முத்தமிழரசி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 
 19 வயதுக்குள்பட்ட ஜூடோ போட்டியில் எஸ்.உமாபாரதி, 14 வயதுக்குள்பட்ட பிரிவில் டி.பாலசேகரன், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் எம்.நிதிஷ் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். 
இதே போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் எஸ்.தீபா இரண்டாம் இடம் பிடித்தார். 
14 வயதுக்குள்பட்ட சிலம்பப் போட்டியில் எஸ்.துர்கா, ஆர்.சாந்தவர்ஷினி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பி.பன்னீர்செல்வம், எஸ்.இனிகோ, ஏ.சேவியர்செல்வி ஆகியோரை தாளாளர் எஸ்.செபஸ்தியான், தலைமையாசிரியை எஸ்.தனமேரி ஆகியோர் பாராட்டி கெளரவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/13/மாநில-விளையாட்டு-போட்டிகளில்-பரமக்குடி-பள்ளி-மாணவர்கள்-வெற்றி-3056940.html
3056270 மதுரை ராமநாதபுரம் தெலங்கானாவில் வெற்றி கமுதியில் கொண்டாட்டம் DIN DIN Wednesday, December 12, 2018 07:08 AM +0530 தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி  2 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கமுதியில் அக்கட்சியினர் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
    30 தொகுதிகளில் சிங்கம் சின்னத்தில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் ராமகுண்டம் தொகுதியில் சந்தர் பட்டேல் 23,616 வாக்கு வித்தியாசத்திலும், விரா பழங்குடியினர் தொகுதியில் லவுடியா ராமலு 42,204 வாக்குகள் வித்தியாத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 
இந்த வெற்றியை அக்கட்சியினர் கமுதி பேருந்து நிலையத்தில் மாணவரணி மத்தியக்குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் தலைமையில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இளைஞரனி நேதாஜி, முனியசாமி, சுப்பிரமணியபாண்டியன், அஜித்குமார் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/தெலங்கானாவில்-வெற்றி-கமுதியில்-கொண்டாட்டம்-3056270.html
3056269 மதுரை ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் DIN DIN Wednesday, December 12, 2018 07:07 AM +0530 தமிழகம் முழுவதும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்த சுமார் 7000 கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். 
இப்போராட்டத்தின் மூன்றாம் கட்டமாக மக்களை தேடி என்ற நிகழ்வானது உள்வட்ட தலை நகரங்களில் நடத்தி வருகின்றனர்.  அந்தவகையில் திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில்  இப்போராட்டம் 3வது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . திருவாடானை அருகே மங்களக்குடியில் சங்கத்தின் வட்ட செயலாளர் நம்புராஜேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் வட்ட துணைத் தலைவர் மேகமலை, பொருளாளர் கார்த்தி, துணை செயலாளர் ராஜேஷ் உள்பட 25 கிராம நிர்வாக அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-போராட்டம்-3056269.html
3056268 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி DIN DIN Wednesday, December 12, 2018 07:07 AM +0530 முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூரில் உள்ள 15 வார்டுகளிலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி  ஊழியர்கள் உள்ளிட்ட  250 -க்கும் மேற்பட்ட களபணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சுடலைமணி கூறுகையில், களப்பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று குளோரின் கலப்பது, பிளீச்சிங் பவுடர் போடுதல், புகை மருந்து அடித்தல், தண்ணீர் சோதனை போன்ற பணிகளைச் செய்தனர். 
தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஒரு சில வீடுகளில் டெங்கு கொசுக்கள்  தங்குவதற்கான இடங்களை கண்டறிந்து அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/முதுகுளத்தூரில்-டெங்கு-கொசு-ஒழிப்பு-பணி-3056268.html
3056267 மதுரை ராமநாதபுரம் மழையின்றி கருகி வரும் உளுந்து பயிர்கள்: விவசாயிகள் கவலை DIN DIN Wednesday, December 12, 2018 07:07 AM +0530 கமுதி பகுதியில் பருவமழை பொய்த்து உளுந்து பயிர்கள் கருகி வருவதால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கமுதி பகுதியில் அதிக செலவு, தண்ணீர் தேவை கொண்ட நெல் விவசாயத்திற்கு மாறாக விவசாயிகள், தண்ணீர் தேவை குறைந்த பருத்தி, சோளம், கம்பு, உளுந்து விவசாயத்தை அதிகமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாதபோதும் தென்மேற்கு பருவமழையால் கிடைத்த மழையை நம்பி கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி, முதல்நாடு, கோவிலாங்குளம், புதுக்கோட்டை, செங்கப்படை பகுதியில் உளுந்து விவசாயம் செய்யபட்டது. வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பொய்த்து விட்டதால், உளுந்து செடிகள் வளர்ச்சியடையாமலே தண்ணீரின்றி கருகத் துவங்கின. இதனால் கடன் வாங்கி உளுந்து விவசாயம் செய்த விவசாயிகள், மேலும் கடனாளிகளாக்கபட்டுள்ளனர். வாங்கிய கடனுக்காக, வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து கூலி வேலை 
செய்து, கடனை திருப்பி செலுத்தும் நிலையால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிடட்டு நெல் விவசாயத்திற்கு வழங்குவது போல் சிறு தானிய பயிர்களுக்கும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/மழையின்றி-கருகி-வரும்-உளுந்து-பயிர்கள்-விவசாயிகள்-கவலை-3056267.html
3056266 மதுரை ராமநாதபுரம் கீழ முதுகுளத்தூர் பகுதியில் முறைகேடாக மணல் குவாரி:  ஆட்சியரிடம் மதிமுக மனு DIN DIN Wednesday, December 12, 2018 07:06 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் கீழ முதுகுளத்தூர் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை அகற்ற வேண்டும் என மதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து  அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கே.ஏ.எம்.குணா   ஆட்சியரிடம் அளித்துள்ள  கோரிக்கை மனு விவரம்:  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் கீழ முதுகுளத்தூர் குரூப் பகுதியில் அரசு அனுமதியின்றி, விதிகளுக்கு மாறாக புறம்போக்கு நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மிகவும் வறட்சியான இப்பகுதியில் மணல் வளம் காணப்படுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் தேவையான அளவு கிடைத்து வருகிறது. 
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை தடுக்கும் வகையில்  முறைகேடாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/கீழ-முதுகுளத்தூர்-பகுதியில்-முறைகேடாக-மணல்-குவாரி--ஆட்சியரிடம்-மதிமுக-மனு-3056266.html
3056265 மதுரை ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே  பொக்லைன் இயந்திரம் மீது கார் மோதல்: 3 பேர் காயம் DIN DIN Wednesday, December 12, 2018 07:06 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது கார் மோதியதில், பொக்லைன் அருகே  நின்றிருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடகருக்கை கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் மகன் மகாலிங்கம் (65). தென்கடுகையைச் சேர்ந்த பெரியசாமி மகன் முத்துச்சாமி(50),  நல்லூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணுச்சாமி (73) ஆகிய மூவரும் இளையான்குடியிலிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் பழுதாகி நின்ற பொக்லைன் இயந்திரத்தின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக போகலூர் ஒன்றியம் பண்டிக்கண்மாய் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் முருகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் பொக்லைன் இயந்திரம் மீது மோதியது. இதில் பொக்லைன் அருகே நின்ற முத்துச்சாமி, கண்ணுச்சாமி, மகாலிங்கம் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து நயினார்கோவில் போலீஸார் காரை ஓட்டி வந்த முருகநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/நயினார்கோவில்-அருகே--பொக்லைன்-இயந்திரம்-மீது-கார்-மோதல்-3-பேர்-காயம்-3056265.html
3056264 மதுரை ராமநாதபுரம் கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு:வலைகள் துண்டிப்பு DIN DIN Wednesday, December 12, 2018 07:06 AM +0530 கச்சத்தீவு அருகே  செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை வெட்டியெறிந்து இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். 
ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை 515 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். 
செவ்வாய்க்கிழமைஅதிகாலையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியத்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை கடலில் வெட்டி எறிந்துள்ளனர். 
இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். விசைப்படகு ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சேதமடைந்துள்ள வலைகளை கரைக்கு கொண்டு வந்து சீரமைப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். ராமேசுவரம் மீனவர்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கோரிக்கை விடுத்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/கச்சத்தீவு-அருகே-ராமேசுவரம்-மீனவர்கள்-விரட்டியடிப்புவலைகள்-துண்டிப்பு-3056264.html
3056263 மதுரை ராமநாதபுரம் கமுதி வேளாண் விற்பனை குழு தலைவர் பதவிக்கு அதிமுகவினர் 3 பேர் போட்டி? DIN DIN Wednesday, December 12, 2018 07:05 AM +0530 கமுதி வேளாண் விற்பனை குழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 3 பேர் போட்டியிடும் நிலை உள்ளதால் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கமுதி வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
இப்பதவிக்கு முன்னாள் விற்பனைக் குழுத் தலைவர் மீனாட்சிசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து, முன்னாள் கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பாலு என ஆளும்  அதிமுகவிலிருந்து 3 பேரும், திமுக சார்பில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசுதேவனும் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியில் 3 நிர்வாகிகள் போட்டியிடுவதால் பிரச்னை ஏற்படும் சூழலால் அக். 8 இல் வேட்புமனு பரிசீலனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கபட்டது. 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 52 
மனுக்கள் ஏற்கப்பட்டன. புதன்கிழமை வேட்பு மனு வாபஸ் பெற கடைசி தேதியாக அறிவிக்கபட்டுள்ளது.
 திமுக வேட்பாளரை எதிர்த்து ஆளும் கட்சியில் 3 பேர்  போட்டியிடுவதால், அப்பதவிக்கு இறுதியாக யாரை சிபாரிசு செய்வது என அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் வென்று, கமுதி வேளாண் விற்பனை குழு தலைவர் பதவியைப் பிடிப்பவர்கள், பலம் மிக்கவர்களாக கருதபடுவார்கள் என்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/கமுதி-வேளாண்-விற்பனை-குழு-தலைவர்-பதவிக்கு-அதிமுகவினர்-3-பேர்-போட்டி-3056263.html
3056262 மதுரை ராமநாதபுரம் பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் மணல் திருட்டு  2  லாரிகள் பறிமுதல்; 3 பேர் மீது வழக்கு DIN DIN Wednesday, December 12, 2018 07:05 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் எமனேசுவரம் பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். அதில் தொடர்புடைய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
பரமக்குடி பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல் முறைகேடாக வைகை ஆற்றுப் பகுதியிலிருந்து அள்ளி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் கமுதக்குடி பகுதியில் சார்பு -ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக கமுதக்குடியைச் சேர்ந்த கதிரேசன் மகன் வடிவேல்முருகன் (41), பழனிச்சாமி மகன் பூப்பாண்டி (42) ஆகியோர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீஸார் வடிவேல் முருகன், பூப்பாண்டி ஆகியோர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்து சார்- ஆட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர். 
இதேபோல் எஸ்.அன்டக்குடி சாலை குலவிப்பட்டி விலக்குச்சாலையில் சார்பு -ஆய்வாளர் மலையரசன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, கமுதக்குடியைச் சேர்ந்த அய்யனார் மகன் செல்வம் (42) டிப்பர் லாரியில் மணல் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸார் எமனேசுவரம் காவல் நிலையத்தில் செல்வம் மீது வழக்குப் பதிந்து சார்- ஆட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/பரமக்குடி-எமனேசுவரம்-பகுதியில்-மணல்-திருட்டு-2--லாரிகள்-பறிமுதல்-3-பேர்-மீது-வழக்கு-3056262.html
3056261 மதுரை ராமநாதபுரம் காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை DIN DIN Wednesday, December 12, 2018 07:05 AM +0530 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் தென் வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனர். 
இதனையடுத்து, புதன்கிழமை ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.  இதனால் அந்தந்த பகுதியில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/காற்றழுத்த-தாழ்வு-நிலை-மீனவர்கள்-மீன்பிடிக்கத்-தடை-3056261.html
3056260 மதுரை ராமநாதபுரம் அச்சங்குளம் நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள் 2 ஆவது நாளாக வேலை நிறுத்தம் DIN DIN Wednesday, December 12, 2018 07:04 AM +0530 அச்சங்குளம்  அரசு நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள்  செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள இந்த நூற்பாலை  12 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது.  2015 இல்,  ரூ. 28 கோடியில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும்  செயல்பட்டு வருகிறது. இதில் தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சம்பள  உயர்வு, விடுமுறை உட்பட இதர சலுகைகளை வழங்க நிர்வாகம் மறுத்து விட்டதாம். 
இதனையடுத்து கடந்த அக். 7 இல், தொழில்நுட்ப பணியாளர்கள் போராட்டம் அறிவித்தனர்.  பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை முதல் (டிச. 10) தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து நூற்பாலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/அச்சங்குளம்-நூற்பாலை-தொழில்நுட்ப-பணியாளர்கள்-2-ஆவது-நாளாக-வேலை-நிறுத்தம்-3056260.html
3056259 மதுரை ராமநாதபுரம் வியாபாரிகளை  மிரட்டி வசூல்  கடலாடியில் அதிகாரி மீது  புகார் DIN DIN Wednesday, December 12, 2018 07:04 AM +0530 கடலாடியில் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வசூலிப்பதாக  தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் மீது வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கடைக்கும் ரூ.5 ஆயிரம் கேட்டதாகவும் பணம் கொடுக்காத கடைகளின் உரிமையாளர்களை கடைக்கு சீல் வைத்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து கடலாடி வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கூறியது: கடையில் தராசு முத்திரை மற்றும் உரிமம் உள்ளிட்டவைகளை புதுப்பிக்க தொழிலாளர் நலத்துறை சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்புவர் அல்லது தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் நேரில் வந்து நினைவூட்டுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக  தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆய்வு என்ற பெயரில் திடீரென்று வந்து பணம் கேட்டு மிரட்டிவருகிறார்.  
பணம் இல்லையென்றால் 
கடைக்கு சீல் வைப்பதாகவும் கூறி வியாபாரிகளை அச்சுறுத்தி வருகிறார். அவர் மீது மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/வியாபாரிகளை--மிரட்டி-வசூல்--கடலாடியில்-அதிகாரி-மீது--புகார்-3056259.html
3056258 மதுரை ராமநாதபுரம் திருவாடானையில் பாழடைந்த பொதுப்பணித்துறை கட்டடம்: இடித்து அகற்ற வலியுறுத்தல் DIN DIN Wednesday, December 12, 2018 07:04 AM +0530 திருவாடானையில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பொதுப்பணித்துறை  கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு உள்ள கட்டடத்தில் திருவாடானை அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த மருத்துவமனைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டதால் அங்கு மருத்துவமனை மாற்றப்பட்டது. 
பின்னர் பல ஆண்டுகளாக எந்த வித பயன்பாடும் இல்லாமல் பொதுப்பணித்துறை கட்டடம் இருந்து வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு  முதல் அதில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி நடைபெற்று வந்தது. பின்னர் அப்பள்ளிக்கு தனியாக பாரதிநகரில் கட்டடம் கட்டப்பட்டு அங்கு மாறுதல் செய்யப்பட்டது. 
  இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டடம் கடந்த மூன்று வருடமாக எவ்வித பராமரிப்பும் இன்றி பயன்பாடுமில்லாமல் பூட்டியே கிடக்கிறது. பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அந்த வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி காடு போல காட்சியளிக்கிறது. 
கழிப்பறையில் மரங்கள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு உள்ளதால் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலை உள்ளது. 
மேலும் அங்கு உள்ள விஷப்பூச்சிகள்  அடிக்கடி பக்கத்து வீடுகளில் புகுந்து விடுகிறதாம். எனவே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடத்தை பராமரிக்க வேண்டும் அல்லது இடித்து அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/திருவாடானையில்-பாழடைந்த-பொதுப்பணித்துறை-கட்டடம்-இடித்து-அகற்ற-வலியுறுத்தல்-3056258.html
3056257 மதுரை ராமநாதபுரம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்ட  கணவர், மாமியார் மீது வழக்கு DIN DIN Wednesday, December 12, 2018 07:03 AM +0530 மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்ட கணவர், மாமியார் மீது மண்டபம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஏ.கே.எஸ் தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் மகள் ரஞ்சிதா(24). இவருக்கும்  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி மகன் வேல்முருகனுக்கும் (30) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர், வேல்முருகன் மாமனாரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் தொழில் செய்ய பெற்றோரிடம் ரூ.10 லட்சம் பணம் வாங்கி வருமாறு கூறி  ரஞ்சிதாவை  அவரது பெற்றோர் வீட்டு வாசலில் விட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா மண்டபம் காவல் நிலையத்தில் கணவர் வேல்முருகன், மாமியார் சண்முகலெட்சுமி ஆகிய 2 பேர் மீதும்  புகார் கொடுத்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/ரூ10-லட்சம்-வரதட்சணை-கேட்ட--கணவர்-மாமியார்-மீது-வழக்கு-3056257.html
3056256 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரத்துக்கு 8 ஆவது நாளாக ரயில் போக்குவரத்து நிறுத்தம்: பயணிகள் தவிப்பு DIN DIN Wednesday, December 12, 2018 07:03 AM +0530 பாம்பன் ரயில் தூக்குப் பாலம் பழுதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு  8  நாள்களாகியும் சீரமைக்கப்படாததால் ராமேசுவரத்துக்கு வரும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
கடந்த 4 ஆம் தேதி பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறந்து மூடியபோது திடீரென பழுது ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதனால் ராமேசுவரத்துக்கு வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.  பாலத்தில் பழுதை நீக்கி சீரமைக்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  
பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேசுவரம் வரும்  பக்தர்கள், ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் இறக்கி விடப்படுகின்றனர்.  அங்கிருந்து பேருந்தில் ராமேசுவரத்துக்கு சென்று மீண்டும் அதே ரயில்நிலையங்களுக்கு வந்து ரயிலில் புறப்படுகின்றனர். 
8 நாள்களைக் கடந்தும் சீரமைப்பு பணி முடியவில்லை. இந்நிலையில், ராமேசுவரத்துக்கு வரும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  ரயில்வே நிர்வாகம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை விரைந்து சீரமைத்து மீண்டும் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/12/ராமேசுவரத்துக்கு-8-ஆவது-நாளாக-ரயில்-போக்குவரத்து-நிறுத்தம்-பயணிகள்-தவிப்பு-3056256.html
3055658 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல் DIN DIN Tuesday, December 11, 2018 07:04 AM +0530 ராமேசுவரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணாபுரம் மீனவ குடும்பங்களுக்கு விவேகாந்த குடில் சுவாமி பிரணவானந்தா நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். 
ராமேசுவரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக ராமகிருஷ்ணாபுரம், நடராஜபுரம் மீனவ கிராமங்களில் 600- க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் தேங்கியது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார். இதனால் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
இதையடுத்து, ராமகிருஷ்ணபுரம் விவேகாந்தா குடில் அலுவலகத்தில்  நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விவேகானந்தா குடில் சுவாமி பிரணவானந்தா 550- க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன், நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராம்கோ வேடராஜன் செய்திருந்தார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/11/ராமேசுவரத்தில்-மழையால்-பாதிக்கப்பட்ட-மீனவக்-குடும்பங்களுக்கு-நிவாரணம்-வழங்கல்-3055658.html
3055657 மதுரை ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் DIN DIN Tuesday, December 11, 2018 07:03 AM +0530 பரமக்குடி, தொண்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, வட்டத் தலைவர் ஜி. சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. ஜெயராமன், தென்மண்டலச் செயலர் எஸ். சதீஸ்குமார், வட்டச் செயலர் கே. சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வட்டப் பொருளாளர் எம்.ஜி. மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.  தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் நகர் முழுவதும் பேரணியாகச் சென்று மக்களைத் தேடி என்ற துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பணிமாறுதல் செய்யவேண்டும், பொதுமக்களுக்குத் தேவையான சான்று வழங்க கணினியுடன் இணையத்தள வசதி செய்து தர வேண்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிப்பதால் ஏற்படும் பணிச்சுமையை தவிர்க்க காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொண்டி: திருவாடானை அருகே  தொண்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில சங்கம் சார்பில் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், சங்கத் தலைவர் மேகமலை தலைமை வகித்தார். சங்க செயலர் நம்புராஜ் முன்னிலை வகித்தார்.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக , சங்க பொருளா ளர் கார்த்தி வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/11/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-வேலைநிறுத்தப்-போராட்டம்-3055657.html
3055656 மதுரை ராமநாதபுரம் அச்சங்குளம் துணை சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர்களை நியமிக்கக் கோரிக்கை DIN DIN Tuesday, December 11, 2018 07:03 AM +0530 கமுதி அருகே கூடுதல் செவிலியர்களை நியமித்து, பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறந்து முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கமுதி அருகே அச்சங்குளத்தில் வாடகை கட்டடத்தில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தால் அச்சங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணியாற்றும் செவிலியர்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே பணிக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
மேலும் செவிலியர்கள் பற்றாக்குறையால், அவசர கால சிகிச்சைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சங்குளத்திலிருந்து 8 கிமீ. தூரமுள்ள அபிராமத்துக்கும், 18 கி.மீ. தூரமுள்ள கமுதிக்கும் பயணித்து, சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
 எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தற்போது பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையத்தில் கூடுதலாக செவிலியர்களை நியமித்து, தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/11/அச்சங்குளம்-துணை-சுகாதார-நிலையத்தில்-கூடுதல்-செவிலியர்களை-நியமிக்கக்-கோரிக்கை-3055656.html
3055655 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு  வேளாண் பயிற்சி முகாம் DIN DIN Tuesday, December 11, 2018 07:03 AM +0530 முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு மானாவரி வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் அருகே மேலக்குளம் கிராமத்தில் விவசாயிகள் நலவாழ்வு இயக்கம் (கிரிஷி கல்யாண் அபியான்)  மாநில விரிவாக்க  சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சொர்ணமாணிக்கம்  தலைமை வகித்தார். முகாமுக்கு முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன், அபிராமம் கால்நடை உதவி மருத்துவர் மணிகண்டன், மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் பாலாஜி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பயிற்சியின் போது கால்நடை வளர்ப்பு, நோய் தாக்குதலின் அறிகுறிகள், காளான், தேனீர் வளர்ப்பு பற்றிய ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகள் மண்வள அட்டை, தரமான பருத்தி விதைகள், தோட்டகலைத்துறை சார்பில் தரமான காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. 
முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.ஹேமலதா விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது பற்றிய விளக்கம் அளித்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/11/முதுகுளத்தூரில்-விவசாயிகளுக்கு--வேளாண்-பயிற்சி-முகாம்-3055655.html